முற்றிலும் மாறுபட்ட வார இதழ்

21 views
Skip to first unread message

devoo

unread,
Jan 18, 2010, 11:14:12 PM1/18/10
to மின்தமிழ்

• வங்கிகளுடன் இணைந்து இளைஞர்களுக்கான ‘சுயதொழில் முனைவோர் திட்டம்’
• அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் அமைத்துக் கொடுத்த
மின்னணு நூலகம் – ஒரு கோடி ரூபாய் செலவில்
• பழனியில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு – ஒரு தன்னார்வ
நிறுவனத்தின் சாதனை
• கைவிரல்கள் இல்லாமல் பிறந்த ஒரு கிராமத்து மாணவியை ஒலிம்பிக்
போட்டிக்குத் தயார்படுத்தும் பள்ளி
• லட்சக்கணக்கில் பணத்தையும், உழைப்பையும் கொட்டிக் காடு வளர்க்கும் ஓர்
அதிசய கிராமம்
• கிராமியக் கலைகளை உலக அரங்கிற்கு உயர்த்துவதில் முனைந்துள்ள பட்டதாரி
இளைஞர் குழு
• ப்ளாண்ட் பேதாலஜி பற்றிய தகவல்கள்
• ஏற்றுமதிக்கான தகவல்கள்
• 15 புதிய கருவிகளைக் கண்டுபிடித்த 14 வயதுச் சிறுவன் (அவனைச் சிறுவன்
என்று கூறலாமா ?)
• இயற்கை வேளாண்முறையில் விளைந்த பொருளுக்கு ஆதரவு
தரும் பொறியியலாளர்கள்
• மைய அரசின் ஆதரவோடு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள
பெண்கள் கல்லூரி
• ஆண்டுக்கு இரண்டு லக்ஷம் கன்றுகளை (திசு வளர்ப்பு) வேளாண்மைக்கு
வழங்கும் தேசிய வேளாண் நிறுவனம்

முன்னேற்றத்திற்கான நம்பிக்கையூட்டும் இச்செய்திகள் எங்கிருந்து ?
‘புதிய தலைமுறை’ என்னும் வார இதழிலிருந்துதான்.

சினிமாக் கவர்ச்சியும், அரசியல் ஹேஷ்யமும், சோதிடத்தை மலினப்படுத்தும்
வாரப்பலன் பம்மாத்தும் இல்லாமல் தரமான காகிதத்தில் வெறும் ஐந்து
ரூபாய்க்கா என வியக்க வைக்கிறது இந்த இதழ். இதழ் தொடங்கிப் பதினேழு வாரம்
கடந்து விட்டதையும் அறிகிறோம். அதிக விளம்பரமும் இல்லை

ஆசிரியர் : மாலன்
www.puthiyathalaimurai.com

தேவ்


kavi senguttuvan

unread,
Jan 18, 2010, 11:36:58 PM1/18/10
to mint...@googlegroups.com
இன்றைய இளைஞர்களின் நாடித் துடிப்பை மட்டுமல்லாது, நாளைய பாரதத்தின்
தேவையையும் கருத்தில் கொண்டு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று
சாதனையாளர்களைச் சந்தித்து தரமான விழிப்புணர்வுக் கட்டுரைகளை வெளியிடும்
ஒரே தமிழ் வார இதழ் புதிய தலைமுறை தான் என்றால் அது மிகையாகா. அதன்
ஆசிரியர் திரு மாலன் அவர்கள் போற்றுதலுக்கு உரியவர். கவி.
செங்குட்டுவன், ஊத்தங்கரை. 9842712109

devoo

unread,
Jan 19, 2010, 12:04:39 AM1/19/10
to மின்தமிழ்
ஆம், மாலன் அவர்களின் உழைப்பும் அனுபவமும் நன்றாகவே
தெரிகிறது; நஷ்டத்தை எப்படி ஈடு செய்வார்களோ ?
உதயமூர்த்தி அவர்கள் நடத்தும் பத்திரிகையும் நன்றாக இருக்கிறது;
அதன் பொருளாதாரத் தேவையை உணர முடிகிறது.
ஆனால் இத்தகைய இதழ்களுக்கு யார் விளம்பரம் தருவர் ?

தேவ்

On Jan 18, 10:36 pm, kavi senguttuvan <kavi.senguttu...@gmail.com>
wrote:

V, Dhivakar

unread,
Jan 19, 2010, 12:22:42 AM1/19/10
to mint...@googlegroups.com
தேவ்!
 
ஒரு நல்ல இதழ் என்றால் நிறைய பேர் வாங்கிப் படிக்கும் வகை செய்யவேண்டும். வார இதழ் எனும்போது முதலில் கஷ்டம்தான். இதழ் நன்றாக விற்பனையானாலே போதும்.  நஷ்டம் வராது. விளம்ப்ரங்கள் வருவது எளிது. கல்கி இப்படித்தானே ஆரம்பித்ததாக சரித்திரம்..
 
அதே சமயம் விளம்பரங்கள் மூலம் வரவு என்பது குறையத் தொடங்கிவிட்ட காலம் இது. மூலைக்கு மூலை கிளம்பி விட்ட டி.வீக்கள் அச்சு மீடியாவின் வரவுகளைத் தட்டிச் சென்று விடுகின்றது. காலப்போக்கில் நிறைய மாறுதல்கள் இதனால் அச்சு மீடியாவில் வரலாம். வேறு வழியில்லை. இதழுக்கு இத்தனை பணம் கட்டாயம் கொடுத்து வாங்கினால்தான் நடத்தமுடியும் என்ற நிலை கூட பெரிய கமர்ஷியல் பத்திரிகககளுக்கு வரலாம்.
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் படித்தோர் பெருக்கம் என்ற விவரங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.. குமுதம் விகடன் போன்றவைகள் எல்லாம் வியாபாரத்தில் என்று இல்லாமல், வாசகர் அளவிலும் குறைந்துகொண்டே வருகின்றன..
 
மாலனுக்கு வாழ்த்துகள். அவர் பத்திரிகை விலை ரூ.5 என்பதை கட்டாயம் உயர்த்தவேண்டும்..
 
திவாகர்

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

karthi

unread,
Jan 19, 2010, 1:03:13 AM1/19/10
to mint...@googlegroups.com
திவாகர்,
 
"குமுதம் விகடன் போன்றவைகள் எல்லாம் வியாபாரத்தில் என்று இல்லாமல், 
வாசகர் அளவிலும் குறைந்துகொண்டே வருகின்றன"
 
இது உண்மையா? ஏதாகிலும் மீடியா சர்வே இதனைக் காண்பித்திருக்கிறதா?
பொதுவாக இரண்டுமே உயர்ந்திருக்கின்றன என்பதே எனக்கேற்படும் தோற்றம்.
தமிழ்நாட்டில் மூலைக்கு மூலை தொங்கும் இந்த இதழ்களைக் காணும் போதும்
அவை தயாரிப்பில் இத்தனை பளபளப்பாக இருப்பதைக் காணும் போதும் கிடைக்கும்
தோற்றம் அது. (விகடன் தொலைக்காட்சித் தயாரிப்பு, நூல் வெளியீட்டிலும் பரவியிருக்கிறதே!)
 
தனிப்பட்ட இதழ்கள் பிரதிகளில், வாசகர்களில் குறைந்திருந்தாலும் பொதுவாக
இதழ்களின் (வெவ்வேறு தலைப்புகளில்)  எண்ணிக்கை அமோகமாக உயர்ந்திருக்கிறது. ஆகவே இதழ்களை
ஒட்டு மொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் வாசகர் எண்ணிக்கையும் பிரதிகள்
எண்ணிக்கையும் கூடியிருக்கத்தான் வேண்டும்.
 
ஆனால் சஞ்சிகைகள் சந்தாவினால், மற்றும் தெரு விற்பனைகளால் பிழைக்கும் காலம்
போய்விட்டது போலத்தான் இருக்கிறது. அவற்றை இப்போது காப்பாற்றுவது விளம்பர வருமானம்தான்.
இது உயர்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். (மீண்டும் அனுமானம்தான்.)
 
 
"மூலைக்கு மூலை கிளம்பி விட்ட டி.வீ.க்கள் அச்சு மீடியாவின் வரவுகளைத் தட்டிச் சென்று விடுகின்றது."
 
விளம்பர வருமானத்தின் பெரும் பங்கு தொலைக்காட்சி ஊடகத்துக்குப் போகக்கூடும்.
ஏனெனில் reach அதற்குத்தான் அதிகம். விளம்பர உலகம் இரக்கமில்லாதது.
எங்கே கூட்டம் கூடுகிறதோ அங்கே பெயர்ந்து விடும். (நல்லிச் செட்டியார்
சிற்றிதழ்களில் விளம்பரம் செய்வது ஒரு தரும காரியம்தான்.)
 
ஆனால் வாசகர்கள் எண்ணிக்கை இதனால் குறைவதில்லை. வேறு காரணங்களினால்
குறையலாம். ஆனால் தொலைக்காட்சியின் போட்டியால் குறைவதில்லை. டிவி ஆடியன்சின்
தன்மைகளே வேறு. அவர்கள் இதழ் வாசகர்கள் போன்றவர்கள் அல்லர்.
 
டிவி என்ன செய்திருக்கிறது என்றால் இதற்கு முன் கலை, இலக்கியம் பக்கம் தலைவைத்துப்
படுத்திராத பெரும் பாமரக் கூட்டம் ஒன்றை ஆடியன்ஸ் ஆக்கியிருக்கிறது. ஆகவே புதிய
மார்க்கெட்.  புதிய வருமானம். சஞ்சிகைகள், நாளிதழ்கள் ஆகியவற்றின் வாசக எண்ணிக்கையை
இவை பாதிப்பதில்லை.
 
ஆனால் இணையம், சஞ்சிகை மற்றும் நாளிதழ்கள் சந்தையை நிச்சயமாகப் பாதிக்கிறது.
International Herald Tribune வீழ்ந்தது இதனால். மேலும் Readers' Digest கூட பெருத்த
நெருக்கடியில் இருப்பதாகவே கேள்விப்படுகிறேன்.
 
தமிழ்நாட்டில்/இந்தியாவில் இணையத்தின் பரவல் அதிகமாகும்போது இந்தப் பாதிப்பு
நிச்சயமாக உணரப்படும்.
 
(யுகமாயினி சித்தனுக்கு இதில் அறிவும் அனுபவமும் உண்டு. "புதிய தலைமுறை" யாரால்
நடத்தப்படுகிறது என அவருக்குத் தெரியும். திரிசக்தி நூல் பதிப்பகத்துக்கும் இதற்கும்
தொடர்பு உள்ளதாக அவர் சொன்னதாக நினைவு. தவெறன்றால் சித்தன் மன்னிக்க.)
 
ரெ.கா.
 

Tthamizth Tthenee

unread,
Jan 19, 2010, 1:09:30 AM1/19/10
to mint...@googlegroups.com
புதிய தலைமுறை  வெளியான  நாலிலிருந்து படித்து வருகிறேன்
 
 இப்போதைய   சூழலில் நாட்டுக்குத் தேவையான 
   இளைஞர்களுக்கு  விழிப்புனர்வு ஊட்டவல்ல  தரமான  
பத்திரிகை   புதிய தலை முறை
 
முதல் பத்திரிகை வெளியிட்டு  இந்தக் குறுகிய  காலத்துக்குள் 
ஆசிரியர் மாலன் அவர்கள் புதிய தலைமுறை      பத்திரிகையை
அதிக அளவில்  மக்கள் விரும்பி வாங்கிப் படிக்கும்  பத்திரிகையாக
வெகுஜன விருப்ப பத்திரிகையாக மலரச்செய்துகொண்டு  வருகிறார்
 
வளர்க   புதிய தலைமுறை  இன்னும் எழுச்சியுடன்
 
தரமில்லாத   பல பத்திரிகைகளை  வாங்குவதை  நிறுத்தி
 
புதிய தலைமுறை போன்று தரம்வாய்ந்த  பத்திரிகைகளை வாங்கி
 
உற்சாகப்படுத்துவோம்
 
நாமும்   விழிப்புறுவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 
 
9-1-10 அன்று, V, Dhivakar <venkdh...@gmail.com> எழுதினார்:
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

V, Dhivakar

unread,
Jan 19, 2010, 1:18:40 AM1/19/10
to mint...@googlegroups.com
>>>மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் படித்தோர் பெருக்கம் என்ற விவரங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.. குமுதம் விகடன் போன்றவைகள் எல்லாம் வியாபாரத்தில் என்று இல்லாமல், வாசகர் அளவிலும் குறைந்துகொண்டே வருகின்றன<<<
 
ரெ.கா..
முதல் வரியை விட்டு விட்டீர்கள்.
 
இப்படி எடுத்துக்கொண்டு பார்த்தீர்களேயானால் உண்மைதான். ஸர்வே வந்துள்ளதா என்றால் அது அவ்வப்போது நடந்துகொண்டே இருக்கின்றது. அந்த ஸர்வே படிதான் குழுமத்துக்கு ஒரு இதழ் போதும் என்ற நிலை மாறி, ஒரு குழுமம் ஒவ்வொரு வகைக்கு ஒன்றாக பத்திரிகைகள் அச்சடித்து வெளியிடுகின்றார்கள். அதனால் ஏகப்பட்ட பத்திரிகைகளை கடைகளில் தொங்கப் பார்க்கலாம்.
 
அரசியல், சினிமா, பக்தி போன்றவைக்கே இப்போது வியாபாரம். இது போக, விவசாயம், வணிகம், இத்தியாதி இவைகளுக்கும் பத்திரிகைகள் வருகின்றன.. ஆனால் அதிகம் விற்பனை கிடையாது..
 
சார். நாற்பது வருடங்களுக்கு முன்பு தமிழர் ஜனத்தொகை மூன்று கோடி.. படித்தவர்கள் ஏறத்தாழ 50% அல்லது இதற்கும் கீழேதான். ஆனால் இப்போது தமிழ் தெரிந்தோர் 6 கோடி (நான் இங்கே தமிழ் மொழியைத் தெரிந்தோர் என்று குறிப்பிடுகிறேன்) படித்தவர்களோ 70% மேலே.. இந்த விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இப்போது ஒப்பிட்டுப் பாருங்கள். கமர்ஷியல் பத்திரிகை வியாபாரம் குறந்துள்ளதா.. இல்லை அதிகமாகிவிட்டதா..
 
திவாகர்.

 

karuannam annam

unread,
Jan 19, 2010, 1:27:29 AM1/19/10
to mint...@googlegroups.com
தரமில்லாத   பல பத்திரிகைகளை  வாங்குவதை  நிறுத்தி
 
 
ஆம்
.

கல்வி

கரையில கற்பவர் நாள் சில

தெளிந்து

தெரிந்து கற்பவை கற்பவனே அறிவாளி.

மூளையும்

வயிறும் குப்பைக் கூடையில்லை. GIGO

நன்றி

சொ

.வினைதீர்த்த்தான்

2010/1/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

V, Dhivakar

unread,
Jan 19, 2010, 1:40:20 AM1/19/10
to mint...@googlegroups.com
ரெ.கா
 
சமீபத்தில் ஒருமுறை புவனேஸ்வர் சென்றபோது தமிழக இளைஞர்கள் விளையாட்டுக் குழு மற்றும் கலைக் குழு என கல்லூரி மாணவர்கள் ஏறத்தாழ 60 க்கும் மேலே வந்திருந்தனர். அவர்களோடு கலந்து உரையாடும் வாய்ப்பினையும் பெற்றவன். அவர்களிடம் நான் கேட்டது வெகுஜனப் பத்திரிகையை (குமுதம், விகடன், குங்குமம், கல்கி) எத்தனை பேர் வாரம் தவறாமல் படிக்கிறீர்கள்?-  இது நிஜம்.. யாருமே ஆவலாக படிப்பதில்லை என்றார்கள். ஏன் என்று கேட்டேன்.. எப்போவாவது ட்ரயின் பயணம் போது மேலோட்டமாக துணுக்குகள், சினிமா விஷயங்கள் பார்ப்பதாக ஓரிரண்டு பேர்..சென்னையில் எங்கள் சொந்தங்கள் இல்லங்களில் பழைய மாதிரி இந்த கமர்ஷியல் இதழ்கள் யாரும் வாங்குவதில்லை.. சிலரிடம் கேட்டபோது, தான் ஒருவர்/ஒருத்தி படிக்க எதற்கு வீண்.. என்கிறார்கள். விசாகப்பட்டினத்தில் முன்பெல்லாம் நூறு புத்தகங்களாவது குமுதம் விகடன் போகும். இப்போது அது கூட இல்லை.. எங்கள் சங்கத்துக்கு புதிய மெம்பர்கள் சேர்க்கும் திட்டம் வரும்போதெல்லாம் இந்த இதழ்களில் நோட்டீஸ் வைத்து முன்பெல்லாம் அனுப்புவோம். இப்போது அப்படி செய்ய அத்தனை புத்தகங்கள் விற்பனை செல்வது இல்லை என்பது கண்கூடு.
 
இவையெல்லாம் எனக்குக் கிடைத்த அனுபவ சாம்பிள்..
 
இன்னொன்று, நகரங்களில் மாணவர்கள் தமிழ் படிப்பது வெகுவாகக் குறைந்து வருகிறது.. இது எதிர்காலத்தில் வெகுஜனப் பத்திரிகைகள் மட்டுமல்ல, தமிழ்ப் புத்தகப் படிப்பையே பாதிக்கும். கிராமங்கள் எல்லாம் நகரங்களாக மாறும் இந்த நவநாகரீக உலகத்தில் தமிழுக்கு எதிர்காலத்தில் என்ன உத்தரவாதம் என்று தெரியவில்லை.
 
பேசும் பாஷையாக மட்டுமே தமிழ் இருக்குமோ.. என்று கூட 'அதீத' கவலை எழுவதை தவிர்க்கமுடியவில்லை.
 
திவாகர்

 

devoo

unread,
Jan 19, 2010, 1:48:51 AM1/19/10
to மின்தமிழ்
Jan 18, 10:36 pm, kavi senguttuvan
//நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சாதனையாளர்களைச் சந்தித்து தரமான

விழிப்புணர்வுக் கட்டுரைகளை வெளியிடும் ஒரே தமிழ் வார இதழ் புதிய தலைமுறை
தான் என்றால் அது மிகையாகா//

ஓகோ, அந்த அரசினர் பள்ளிக்கூடம் இருப்பது உங்கள் ஊரிலா ? செங்குட்டுவன்
ஐயா, அதன் வளர்ச்சி பற்றி இங்கு விரிவாக எழுதலாமே.

தேவ்


On Jan 18, 10:36 pm, kavi senguttuvan <kavi.senguttu...@gmail.com>
wrote:

Tthamizth Tthenee

unread,
Jan 19, 2010, 1:57:58 AM1/19/10
to mint...@googlegroups.com
வீடுகளில்   தினமும்   மேசையில்  கிடக்கும் புத்தகங்களைப் பார்த்தால்

பாதிக்குமேல்  தேவையில்லாத புத்தகங்கள்

நாம் எப்போதோ எழுதிக்கொடுத்த பட்டியல் படி  பத்திரிகைகள் போடுபவர்  வழக்கமாக போட்டுக்கொண்டே இருக்கிறார்

அந்தப்  பட்டியலை  மீண்டும் ஒரு முறை பரிசோதித்து

உண்மையிலேயே  நமக்குத் தேவையான  நல்ல தரமுள்ள  புத்தகங்களை மீண்டும் ஒரு முறை  பட்டியலிட்டு
புத்தகங்கள் போடுபவரிடம்       இந்தப் புத்தகங்கள்தான் வேண்டும்,மற்ற புத்தகங்கள்  வேண்டாம்  என்று
திட்டவட்டமாக    கூறவேண்டும்

நாம் சற்றே  சிந்தித்தால்  நம் வருங்கால  தலைமுறைகள் எப்படி வளரவேண்டும் என்று திட்டமிட்டு

அதற்கேற்ப  புத்தகங்கள்  வாங்கும் பட்டியலை  மாற்றவேண்டும்

கவர்ச்சியான  அட்டைப்படங்கள்  நம் வாழ்க்கையைக் காப்பாற்றாது
எந்த  வகையிலும்  நம் வாழக்கைக்கு  உதவாது  என்பதைப் புரிந்துகொண்டு

  நாம் வாங்கும் புத்தகப்  பட்டியலின்    தரத்தையும்  உயர்த்தி
நம்  தரத்தையும்   உயர்த்திக்கொள்வோம்

நிச்சயமாக  புதிய  தலைமுறை  பத்திரிகை  நம் தரம்  உயர்த்தும்  என்பதில் சந்தேகமில்லை


அன்புடன்
தமிழ்த்தேனீ




19-1-10 அன்று, karuannam annam <karu...@gmail.com> எழுதினார்:

devoo

unread,
Jan 19, 2010, 2:13:24 AM1/19/10
to மின்தமிழ்
Jan 18, 11:22 pm, "V, Dhivakar"
//மாலனுக்கு வாழ்த்துகள். அவர் பத்திரிகை விலை ரூ.5 என்பதை கட்டாயம்
உயர்த்தவேண்டும்..//

திவாகர் சார்,
பத்திரிகைகள் குறித்த உங்கள் கணிப்பு தவறாக வாய்ப்பில்லை; அனுபவத்தை முன்
நிறுத்தியே பேசுகிறீர்கள். ஆனால் மாலனைப் போன்ற ஊடகத்துறை அனுபவம் பெற்ற
ஒருவர், ஒரு முடிவோடுதான் இந்த இதழைத் தொடங்கி இருக்க வேண்டும் என்று
ஊகிக்கிறேன்; கையைச் சுட்டுக்கொள்ளாத வகையில் ஒரு வலிமையான பொருளாதாரப்
பின்புலம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பலருக்கும் வழிகாட்டும்
இது மாதிரியான இதழ்களே இன்றையத் தேவை

தேவ்

kavi senguttuvan

unread,
Jan 19, 2010, 2:00:27 AM1/19/10
to mint...@googlegroups.com
அய்யா தேவ் அவர்களுக்கு, வணக்கம். இனிக்கும் செங்கரும்பை
இன்முகத்தோடே நானுண்ண இன்று கசக்குமா என்ன? ஆம் விரைவில்
வடிக்கிறேன் எம் பள்ளி காவியத்தை. கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை.

karthi

unread,
Jan 19, 2010, 3:18:15 AM1/19/10
to mint...@googlegroups.com
திவாகர்,
 
இதற்கு முந்தைய உரையாடலில் கூட தமிழ்நாட்டில் பாலர் பள்ளிக்குச்
செல்லும் குழந்தைகளில் ஆங்கிலப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளே
தமிழ்ப்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை விட அதிகம் என்று
சொன்னார்கள். அதுவும் பெரும் அதிர்ச்சிதான்.
 
நீங்கள் சொல்லும் உங்கள் சொந்த அனுபவமும் தமிழ் வாசிப்போர் என்ணிக்கை
மொத்த எண்களில் (absolute numbers) குறைகிறது என்பதையே காட்டுகிறது.
என்னால் நம்ப முடியாத ஆச்சரியமாக இது உள்ளது. ஆனால் நிதர்சனம்!
நான் என்ன சொல்ல்விருக்கிறது.
 
"கிராமங்கள் எல்லாம் நகரங்களாக மாறும் இந்த நவநாகரீக உலகத்தில் தமிழுக்கு
எதிர்காலத்தில் என்ன உத்தரவாதம் என்று தெரியவில்லை."
 
"தமிழின் காவலர்கள்" ஆளும் தமிழ்நாட்டில் இந்த நிலை என்பது பெரும் அவலம்தான்.
ஆனால் புள்ளிவிரங்கள் ஒருவேளை இந்த நிலை இப்படியில்லை என்று கூறக்கூடும்.
 
என் கடைசி நம்பிக்கை.

karuannam annam

unread,
Jan 19, 2010, 4:26:17 AM1/19/10
to mint...@googlegroups.com

அன்புள்ள

ரெ.கா

தமிழ்வழிக்

கல்வி கற்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பது வெளிப்படை. 300 பேர் படித்த எங்களூர் பள்ளியில் 120 பேர் பதிவில் உள்ளதாகவும் 90 பேர் வருகையுள்ளதாகவும் நான் அண்மையில் போயிருந்தபோது சொன்னார்கள். பக்கத்தில் மானகிரியுலும் இதே நிலை. 15 ஆசிரியர் வேலைபார்த்த இடத்தில் அறுவர் பணியாற்றுகின்றனர்.

புதிய

தமிழ் பள்ளிகள் திறப்பதில்லை.

தமிழ்வழியில்

படித்த என்னுடைய எனது மனைவியுடையவழி உறவுப் பிள்ளைகள் எவரும் தமிழ்ப் பள்ளியில் படிக்கவில்லை.

த்மிழும்

போச்சு. பணமும் போச்சு. ஆங்கிலமும் வல்லை.

அனைத்து நடுத்தரக் குடும்பங்களின் நிலை இதுதான்.

திவாகர்

சார் எழுதியபடி தமிழ் பேச்சில் தான் உள்ளது.

நாம்

பாலர் பள்ளிகளுடன் இணைந்துதான் தீர்வு காண வேண்டும்.

தங்களைப்

போன்ற சிந்தனையாளர்களும் மற்ற சான்றோர்களான நண்பர்களும் வழி காண வேணும். சிறுதுளி பெரு வெள்ளம்

அன்புடன்

சொ

.வினைதீர்த்தான்

2010/1/19 karthi <karth...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages