பூண்டி மகான் - 2
அன்றிலிருந்து கலசபாக்கம் கிராமத்தில் பகல் முழுவதும்
மனம் போக்கில் திரிந்தார்.
ஜுரம்,மனச்சோர்வு,உடல் நலமின்மை, குழந்தைகளின் நோய் என தன்னை நாடி
வருபவர்களுக்கு திருநீற்றையும், துளசி இலையையும் கொடுத்து
குணப்படுத்துவார்.
‘’இரவில் அவர் தூங்கும்
போது தனது அங்கங்களை எல்லாம் தனித்தனியாக பிரித்துப்
போட்டு சித்து விளையாட்டு
விளையாடுவார். நாங்கள் அதைக் கண்கூடாகக்
கண்டுள்ளோம்...’’ என்று கிராமத்து பெரியவர்கள்
கூறுவார்கள்.
வறுமை சூழலிருந்த
கிராமம், மழையை
பெய்வித்து, நோய் நீக்கி, சுபிட்ச்சைத்தை
கொணர்ந்த சித்தர் ஒரு நாள் இரவு அந்த கிராமத்தை விட்டு நீங்கி பூண்டி வந்தார்,
சித்தர் யார்? அவருடைய சொந்த ஊர், பூர்வீகம் எது?, என்ன பெயர்?, என்ன வயது?,
என்று எதையுமே அறியவியலாத சித்தர்...., பூண்டி பிரதான சாலையில் உள்ள ஒரு
வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து விட்டார். அன்று அமர்ந்தவர்....
பல ஆண்டுகள்
அதே இடத்தில் அமர்ந்துவிட்டார்.
திண்ணையின் முகப்பில் அவர் கால்கள்
பதிந்திருந்ததால் கால் விரல்களிலிருந்த நகம் தரையைத் தொடும் அளவிற்கு
வளர்ந்து
விட்டது.
எப்போதும் சித்தர்
சாந்தமான முகத்துடன் இருப்பார். கண்களின் ஒளி நம்மைப்
பரவசப்படுத்தும். அவரை காண வருபவர்கள்
தன்னையறியாது கைகூப்பி வணங்குவர்.
பில்லி, சூன்யம்,பேய், பிசாசு என்று எந்த கெட்ட ஆவிகள் இருந்தாலும்
அவர்கள்
சித்தரை வணங்கி அவர் விரல் நகங்களைத் தொட்ட நொடியில் சிலிர்த்து
குணமடைவார்கள்.
தன்னை நாடி, தேடிவரும் பக்தர்கள் மனமுவந்து எதைக்
கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவார்.
அதே சமயம் மனதில் வஞ்சம்,களவு பேராசை போன்றவர்கள் கொடுக்கும்
திண்பண்டங்களை
வாங்கிய நொடியில் சட்டென தூக்கி எறிவார். எப்போது மெளனமாக
இருக்கும் சித்தர்
தன்னை தேடிவரும் யாரவது
ஒருவரிடம் ஒரே
ஒரு வார்த்தையை மட்டும் பேசினால் அது
எச்சரிக்கை அல்லது மறைமுக அறிவுரையாக
இருக்குமாம்.
அவர்
வாய் திறந்து பேசவில்லை என்றாலும் அவரின் பார்வை பட்டலே போதும்,
தங்களுக்குள்ள பிரச்சனை எல்லாம் தீர்ந்து விட்டதைப் போன்ற மனநிம்மதி
கிடைக்குமாம்.
பூண்டிச் சித்தரின் அபார சக்தியை அறிந்த பெரும்
செல்வர் ஒருவர் தன் காரில் மிகவும்
பந்தாவாக எல்லாவிதமான பழவகைகளையும்,கூடைகூடையாக வாங்கி கொண்டு
சித்தரை பார்க்க வந்தார். அவர் கார் தன்முன்னே வந்து நின்றவுடன்
சித்தரின் கண்களில்
கோபம் கொப்புளிக்க ஆரம்பித்தது.
அந்தச் செல்வர் காரிலிருந்து இறங்கி வதற்குள்...
சித்தர் கோபமாக “சண்டாளா...
இங்கே ஏன் வந்தாய்.. ....,போய்டு... இங்கே வராம போய்டு..” என்று கோபமாக
குரல் கொடுக்க சுற்றியிருந்தோர் திகைப்பான முகத்தோடு வந்த செல்வைரை
பார்த்தனர்.
சட்டென்று முகம் இருளடைந்த செல்வர் காரிலேறி
சென்று விட்டார். அடுத்த ஒரு
மாதம் கழித்து அந்த
செல்வர் மிக எளிமையாக நடந்து வர..., இப்போது சித்தர்
கண் திறந்து
அவரைப் பார்த்து சொன்னார்.
“உன் வேலைக்காஅரன் இரண்டு பேருக்கு காசநோய்
முற்றி விட்டது என தெரிஞ்சும்
குணமாக்க நீ தவறிட்டே. அதுக்காக்த்தான் உன்னை விரட்டினேன்.
இப்ப அவர்களை
மருத்துவமனையில் சேர்த்திட்டு வந்திருக்கிறாய் என தெரிந்து உன்னோடு
பேசுகிறேன்.
இந்தா “ என்று அகத்தி இலைகளை சிலவற்றை அந்த செல்வந்தரிடம் கொடுத்தார்.
செல்வந்தர் புரியாமல் விழித்து அந்த இலைகளை
வாங்கிக்கொள்ள... சிரித்தபடியே சித்தர்,
“ நீ செய்த தப்பு. அதனாலத்தான் உன் வேலைக்காரங்க அவதிப்படற வியாதி மாதிரியே உனக்கும்
காசநோயைக் கொடுத்தேன். அதனால் அவர்கள் படும் கஷ்டம் உனக்கும் தெரியவேண்டும்,அதன்
வேதனையை நீயும் உணர வேண்டும் என்று காசநோயை கொடுத்தேன். நான் கொடுத்த அகத்திக்
கீரையை தினம் ஒண்ணு சாப்பிடு. உன் காசநோய் குணமாகிடும்”என்று சித்தர் சொல்ல...
செல்வர்
வியப்புடன் நகர்ந்தார்.
பக்தர்கள் மனசுத்தியோடு,அன்போடு
கொடுக்கும் வாழைப்பழம்,தேங்காய்,தக்காளி, கீரைகள் போன்றவற்றை
பலவிதமான நோயாளிகளுக்குக் கொடுத்து
ஆச்சரியமூட்டும் விதமாக தனது சக்தினால் குணப்படுத்தி
இருக்கிறார் பூண்டி மகான்.
நிறைவு
[நன்றி: சித்தர் பூமி]