திருமங்கை ஆழ்வார்!

407 views
Skip to first unread message

shylaja

unread,
Dec 1, 2009, 2:56:01 AM12/1/09
to minT...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai

 
 இன்றக்கு ஒரு ஆழ்வாருக்குப்பிறந்தநாள்! அவரைப்பற்றி சின்னகுறிப்பு!
 
 திருவரங்கத்தில திருமதில் கைங்கர்யம் செய்தவர்(திருமங்கை மன்னன் திருச்சுற்று)
நீலன் என்கிற பேர்ல கள்ளனாய்
நீலவண்ணக்கண்ணனின்  திருவடியைத்தொட்டு
மகிழ்ந்த பேறு பெற்றவர்
குமுதவல்லி என்னும் அரங்கபக்தையின்
ஆருயிர்க்கணவன்!
அரங்கனிடம் தன் சிந்தையைப்பறிகொடுத்த ஆழ்வார்!
 
பிறந்த காலம் - 8 ம் நூற்றாண்டு
பிறந்த ஆண்டு - நள ஆண்டு

பிறந்த மாதம் - கார்த்திகை

திருநட்சத்திரம் - கார்த்திகை
திதி - பௌர்ணமி (வியாழக்கிழமை)

அம்சம் - சாரங்கம் (வில்)
 
பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி! அதிகபிரபந்தங்களை-பெரிய திருமொழி திருநெடுந்தாண்டகம் திருக்குறுந்தாண்டகம் திருவெழுக்கூற்றிருக்கை  சிறிய திருமடல் பெரியதிருமடல்  ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்த ஆழ்வாரும் இவரே!
 
 
 
திருமங்கை ஆழ்வார் என்று  எல்லோருக்கும் தெரிந்திருக்குமே!



 கடவுளுடனே இவர்  சண்டைக்குப் போனவர். 'நகையைக் கழற்று' என்று மிரட்டியவர். அவர் ஸ்ரீரங்க நகரில்கோயில். மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லே மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம் என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு!  உண்மையா பொய்யா தெரியவில்லை.
 
இங்கே....
 
///கொள்ளிடம் நதி; சிறுகுறிப்பு...
 
கிழக்கிருந்து   தெற்குவழியாக அகண்டகாவிரியாய் ஆர்ப்பாட்டமாய் அரங்கநகரில் நுழையும் காவிரி தன் திரைக்கையால் அரங்கநகரைத் தொட்டுவிட்டதும் மேற்கில் திரும்பி ,வடக்கில் அமைதியாய் அடங்கி   தூய்மையாய் கலக்கலே இன்றி  வருவதை  இங்கே பார்க்கலாம்!  ஸ்ரீரங்கத்தில் வடக்குவாசல்பகுதியில் இருப்பவர்கள் கொள்ளிடத்தில்  குளிக்காமல் இருந்தால் அவர்களை நாங்கள்  நட்பென்றோ உறவென்றோ கொள்ளவேமாட்டோம்!


கொள்ளிடம் அப்போதும்இப்போதும் எப்போதும் ஸ்படிகமான நீர். குளிக்க பரம சுகம். நீரில் அமிழ்ந்தால் எழுந்து வர மனசே இராது. ஆனால் போகும் பாதை அத்தனை சுத்தம் இல்லை. மனிதக் கழிவுகள். செத்துப் போனவர்களின் வாரிசுகளுக்கு மொட்டை போட்டதில் குவியும் முடிக் கற்றை. எலும்புத் துகள்கள். உடைந்த சட்டிகள். சோற்று பிண்டங்கள். மனசுள் லேசாய் பீதி கிளப்பும். அல்லது அசூயை. இவை எல்லாம் தாண்டி தண்ணீருக்குள் இறங்கி விட்டால் ஆஹா!அந்த நீர்செய்த  தவம் தான் என்னே!  பெருமானின்  திருமஞ்சனத்திற்குக்கொள்ளிடம் நீர்தானே  வெள்ளிக்குடத்தில் தினமும் யானைமீது போகிறதாம்?(ஐப்பசிமாதம் மட்டும் அகண்டகாவிரியாம்) ////
 
சரி இனி ஆழ்வாரிடம் ஆழ்வோம்!

 நீலன   ஒரு வழிப்பறித்திருடன்.

வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! தொட்டது தான் தாமதம்!
இனி வேறு என்ன!!! கலியன் (வலிமை மிக்கவன்) என்று எம்பெருமானே இவரை வாய் விட்டு அழைத்தான்! இவர் காதில் “நாராயண” எட்டெழுத்து மந்திரம் உபதேசித்து அருளினான்.
 
இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா?
 
மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!
வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!
 

 
குலம்தரும் செல்வம் தந்திடும்
–அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
–அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
–பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
 
 
எட்டெழுத்து  மந்திரப்பெருமைதனை உரைக்கும் இந்த ஒருபாடல்   ஒன்றுபோதும் மாலின் மேல்ஆழ்வார் கொண்ட ஆழ்ந்த பக்தியினை நமக்கு எடுத்துச்சொல்ல.!
 
‘கவி கற்கணுமா வா என்கிட்டே” என்று  பெருமாளிடமே  உத்தரவு போட்ட  ஆழ்வாரும் இவரே! கடைக்குட்டி இளம்கன்று பயம் அறியுமா என்ன?!
 
பெரியதிருமொழியில் இவர்,
 
 
“மெய்ம்மை சொல்லில் வெண்சங்கமொன்றேந்திய
கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில்
கற்கலாம்  கவியின் பொருள்தானே”
 
என்று திருக்கண்ணமங்கை பெருமான் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவதை அவன் திருமுகக் குறிப்பிலிருந்து கண்டு,”நீ என்னிடமிருந்து கவியின் பொருளைக் கற்றுக்கொள்ளலாம்” என்று நியமித்தார்
 
அதற்கு பரம ரசிகனான கண்ணனும்.” அவசியம் உம்மிடமிருந்து கற்கிறேன் ஆனால் இப்போது அர்ச்சாவதாரமாகையாலே அது கூடாது.பின்னொருசமயத்திலே நீர் உமது  அவதார நட்சத்திரமான கார்த்திகையில் கார்த்திகைநாளிலே உமது திருநாமமான’திருக்கலிகன்றிதாசர்’ எனும் திருநாமத்துடன் இந்தச் சோழ நாட்டிலே அவதரிக்கபோகிறீர் அப்போது நான் ஆவணி ரோஹிணியில்(கண்ணன்) கிருஷ்ணன்  என்னும் பெயரோடு அவதரித்து  உம்மை ஆசார்யனாகக்  கொண்டு ஆழ்வார்கள் அனைவருடையவும்  ஆண்டாளுடையவும் அருளிச் செயல்களின்  பொருள்களையும்  மற்றும் ரஹஸ்யார்த்தங்களையும்  ஸ்ரீ ராமாயணார்த்தங்களையும் உம்மிடம் இருந்தே கற்றறிந்து  உலகுய்ய  வெளிப்படுத்துவேன்” என்று  அருளிச்செய்தான்.அதன்படியே கலிகன்றாகிய  திருமங்கையழ்வார்  திருக்கலிகன்ற தாசராகிய நம்பிள்ளையாகவும்  கண்ணன் ஸ்ரீமத் கிருஷ்ணமாஹ்வரான(கிருஷ்ண சூரி என்னும்) பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியோர் பணிப்பர்.
 
 
 
  அந்தக் காலத்து தூய தமிழ்ச் சொற்களில் இவருடைய வழிநடைச் சிந்தில்   இப்படியும் பாடல் எழுதி இருக்கிறார்.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள "நந்திபுர விண்ணகரம்" என்ற திவ்ய தேசத்துக்கு போகும் வழியில் களைப்பு தெரியாமல்இருக்க, இப்படிப் பாடிக்கொண்டே போகிறாராம்!  ஒரே ஒருபாடல் மட்டும் இங்கே.....
 
 

 


தந்தை மனம் உந்த, துயர் நந்த - இருள்
வந்த விறல், நந்தன் மதலை!
எந்தையிவன் என்று, அமரர் கந்த - மலர்
கொண்டு தொழ நின்ற நகர்தான்!

(வசுதேவன் சிறையில் பயப்பட, துயர் படர, இருட்டில் கோகுலம் வந்து சேர்ந்த நந்தகோபனின் குழந்தை!
எங்கள் பெருமான் என்று எல்லாரும் கந்த மலர் தூவித் தொழுபவன் இவன்! இவன் ஊரு இது!)
 
 
(திருமங்கைமன்னனுக்காக நடக்கும் வேடுபறி  உற்சவம் பற்றி  தெரிந்தவர்கள் விவரமாக எழுதும்படி கேட்டுக்கறேன்!)
 
தன் குலதெய்வம் என்று  திருமங்கைஆழ்வார் யாரைச்சொல்கிறார் தெரியுமா?
 
 
தான் அவதரித்த அருகில் உள்ள  திவய்தேசமாகிய திருவாலிதிருநகரப்பெருமானையா?
திருக்குடந்தை ஆராவமுதனையா?
நரையூர் நின்ற நம்பியையா?
திருக்கண்ணபுரம் பெருமாளையா?
கலியுகத்தெய்வம் வேங்கடவனையா
தனக்கு நிதிகாட்டிக்கொடுத்த பேரருளாளனையா
பூலோக வைகுந்தம் ஆளும் அரங்கனையா?
 
இவர்களில்  யாரையுமே  இல்லை!
 
 
பிறகு,
 
 
யாரைத்  தன் குலதெய்வம் என்கிறார்?
 
///
 
எதிரிகளை அழித்து அவர்களுடைய சரீரங்களை  நாய் நரி விலங்குகள்:  விரும்பிஉண்ணும்படியாகவும் மெல்லிய சுவாபமுடைய பெண்கள்  தங்களே விரும்பி அணைக்க மிடுக்குடைய  இலங்கேஸ்வரனான  ராவணனுடைய மார்பகத்தை அக்கினியானது  ஏறி  வதம் செய்துகொடுமையான யுத்தத்தைப்பலரும்  காணும்படிசெயதவராய் அந்த சிரமம் தீரும்படி திருக்கடல் மல்லையில் ஸ்தல சயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமானை மனதாரக்கொண்டாடும் அடியவர்கள்     எவர்களோ அவர்கள் எங்கள் குலத்துக்கு தெய்வர்கள் ஆவார்கள்.
 
 
விண்டாரை வென்றாவி விலங்குண்ண . மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம் அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத் தலசயனத்துறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையாரவர்கள் எங்கள் குலதெய்வமே
 
(பெரிய திருமொழி2.6.4)
 
 
 
 
 
 ஆண்டவனின் அடியார்களை  இவர் தெய்வமாய் போற்றுவது தெள்ளத்தெளிவாகிறது அல்லவா?
**********************************************************************************************************************
 
திருமங்கையாழ்வார்திருவடிகளேசரணம்.
 
 
 
 
 

 



--



--
ஷைலஜா
//
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால்,
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி,
இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. //
திருமங்கை ஆழ்வார்.


Subashini Tremmel

unread,
Dec 1, 2009, 3:18:09 AM12/1/09
to mint...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai
அருமயான பதிவு.
இதனை மரபு விக்கியில் நீங்கள் இணைக்கலாமே.
 
அன்புடன்
சுபா

2009/12/1 shylaja <shyl...@gmail.com>

V, Dhivakar

unread,
Dec 1, 2009, 3:50:52 AM12/1/09
to namb...@googlegroups.com, minT...@googlegroups.com
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
 
ஷைலஜா!
 
இந்த செய்தி எத்தனையோ முறை எத்தனையோ பெரியவர்களால் மறுக்கப்பட்டாகி விட்டதம்மா. திருமங்கைக்கும் திருஞானசம்பந்தருக்கும், ஒரே தாலுகா என்ற அளவில் மட்டுமே சம்பந்தம் உள்ளது. ஞானக் குழந்தை காலத்தால் மூத்தவர். நாராயணனிடமே மந்திரம் கேட்ட மன்னனோ நூறு வருடங்கள் கழித்து வந்ததாக கூறுவர். திருமங்கைக்கும் தந்திவர்மனுக்கும் தோழமை உண்டு. தந்திவர்மனின் கொள்ளுதாத்தா மகேந்திரவர்மன்/ காலத்தவர் ஞானசம்பந்தர்.
 
ஆனால் எங்களூர் மன்னரைப் பற்றிய செய்தி, எங்களை கொள்ளைகொண்ட கலியனைப் பற்றிய வரலாறு அதுவும் இன்று குறிப்பிட்டதற்கு கோடி கோடி நன்றி.
 
திருநகரியில் ஆழ்வார்க்கு இப்போது பத்துநாள் பிரம்மோத்ஸவம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த நாள் ஞாபகத்தைக் கொண்டுவந்துவிட்டீர்கள்.
 
அன்புடன்
திவாகர்

 
--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

shylaja

unread,
Dec 1, 2009, 4:02:08 AM12/1/09
to mint...@googlegroups.com, நம்பிக்கை - Nambikkai
அப்படியா  நன்றி சுபா.

2009/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

shylaja

unread,
Dec 1, 2009, 4:04:29 AM12/1/09
to namb...@googlegroups.com, minT...@googlegroups.com


2009/12/1 V, Dhivakar <venkdh...@gmail.com>

சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
 
ஷைலஜா!
 
இந்த செய்தி எத்தனையோ முறை எத்தனையோ பெரியவர்களால் மறுக்கப்பட்டாகி விட்டதம்மா. திருமங்கைக்கும் திருஞானசம்பந்தருக்கும், ஒரே தாலுகா என்ற அளவில் மட்டுமே சம்பந்தம் உள்ளது. ஞானக் குழந்தை காலத்தால் மூத்தவர். நாராயணனிடமே மந்திரம் கேட்ட மன்னனோ நூறு வருடங்கள் கழித்து வந்ததாக கூறுவர். திருமங்கைக்கும் தந்திவர்மனுக்கும் தோழமை உண்டு. தந்திவர்மனின் கொள்ளுதாத்தா மகேந்திரவர்மன்/ காலத்தவர் ஞானசம்பந்தர்.>>>>>
 
நீங்க சொன்னாசரி, எனக்கும்  முன்னே கே ஆர் எஸ்  வேற  இதை அவர் பதிவில் முன்னே திரும்பச்சொல்லவும் சரியென்று தோன்றி எழுதிட்டேன்,, மன்னிக்கவும்.
 
ஆனால் எங்களூர் மன்னரைப் பற்றிய செய்தி, எங்களை கொள்ளைகொண்ட கலியனைப் பற்றிய வரலாறு அதுவும் இன்று குறிப்பிட்டதற்கு கோடி கோடி நன்றி.
 
திருநகரியில் ஆழ்வார்க்கு இப்போது பத்துநாள் பிரம்மோத்ஸவம் நடந்துகொண்டிருக்கிறது. அந்த நாள் ஞாபகத்தைக் கொண்டுவந்துவிட்டீர்கள்.>>>>>>>
 
எங்க ஊர்ல வேடுபறி  மணல்வெளில  ஜோரா நடக்கும் !எங்க மோ.ர?  வந்து அதுபத்தி எழுதுங்க ப்ளீஸ்! கோ.கு, ஆர்டர்!”:)

Innamburan Innamburan

unread,
Dec 1, 2009, 4:17:15 AM12/1/09
to mint...@googlegroups.com
மிக்க மகிழ்வுடனும், பக்தியுடனும் படித்தேன், ஷைலஜா.
இன்னம்பூரான்

2009/12/1 shylaja <shyl...@gmail.com>



--
இன்னம்பூரான்

N. Kannan

unread,
Dec 1, 2009, 4:37:49 AM12/1/09
to mint...@googlegroups.com
2009/12/1 shylaja <shyl...@gmail.com>:

> பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி!

பன்னிருவரில் கடைக்குட்டி ஆண்டாள் இல்லையோ?

க.>

V, Dhivakar

unread,
Dec 1, 2009, 5:20:27 AM12/1/09
to namb...@googlegroups.com, minT...@googlegroups.com
குலம்தரும் செல்வம் தந்திடும்
–அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
–அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
–பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
 
 
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே
 
தி
 


 

shylaja

unread,
Dec 1, 2009, 9:33:24 AM12/1/09
to mint...@googlegroups.com


2009/12/1 N. Kannan <navan...@gmail.com>
2009/12/1 shylaja <shyl...@gmail.com>:
> பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி!

பன்னிருவரில் கடைக்குட்டி ஆண்டாள் இல்லையோ?

க.><<<>.
உங்க ஆண்டாள்   அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி! அஷ்டே  க!

shylaja

unread,
Dec 1, 2009, 9:34:10 AM12/1/09
to mint...@googlegroups.com


2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

மிக்க மகிழ்வுடனும், பக்தியுடனும் படித்தேன், ஷைலஜா.
இன்னம்பூரான்>>
 
 
 
நன்றி(என்ன  இ  போடாமல் முழுப்பேரை அளிச்சிட்டீங்க?:))

shylaja

unread,
Dec 1, 2009, 9:35:18 AM12/1/09
to namb...@googlegroups.com, minT...@googlegroups.com


2009/12/1 V, Dhivakar <venkdh...@gmail.com>

குலம்தரும் செல்வம் தந்திடும்
–அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
–அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
–பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
 
 
காதலேமிகுத்தகலியன்வாயொலிசெய் மாலைதாம்கற்றுவல்லார்கள்,
ஓதநீர்வையகமாண்டுவெண்குடைக்கீழ் உம்பருமாகுவர்த்தாமே
 
 <<<இது உங்க பாடலா திவாகர்?

shylaja

unread,
Dec 1, 2009, 9:39:36 AM12/1/09
to mint...@googlegroups.com
வேடுபறி மற்றும் கலியனைப்பற்றிய  சீரார்ந்த தகவல்களை மோகனரங்கன்  வந்து கூறும்படி  கேட்டுக்கொள்கிறேன்!

2009/12/1 shylaja <shyl...@gmail.com>


2009/12/1 N. Kannan <navan...@gmail.com>
2009/12/1 shylaja <shyl...@gmail.com>:
> பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி!

பன்னிருவரில் கடைக்குட்டி ஆண்டாள் இல்லையோ?

க.><<<>.
உங்க ஆண்டாள்   அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி! அஷ்டே  க!
--
ஷைலஜா
//
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால்,
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி,
இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. //
திருமங்கை ஆழ்வார்.


--
ஷைலஜா
//
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால்,

Kumaran Malli

unread,
Dec 1, 2009, 10:02:40 AM12/1/09
to mint...@googlegroups.com


எம்பெருமானார் முதற்கொண்டு நிறைய ஆசாரியர்கள் தினமும் வடகாவிரியான கொள்ளிடத்தில் தான் நீராடுவார்கள் என்று எங்கேயோ படித்த நினைவு. சாஸ்த்ரப்படியும் ஊரில் நதி இருந்தால் அதன் தென்கரையில் இருந்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்று இருப்பதாகப் படித்த நினைவு. சரி தானா?

 

shylaja

unread,
Dec 1, 2009, 10:18:26 AM12/1/09
to mint...@googlegroups.com


2009/12/1 Kumaran Malli <kumara...@gmail.com>


எம்பெருமானார் முதற்கொண்டு நிறைய ஆசாரியர்கள் தினமும் வடகாவிரியான கொள்ளிடத்தில் தான் நீராடுவார்கள் என்று எங்கேயோ படித்த நினைவு. சாஸ்த்ரப்படியும் ஊரில் நதி இருந்தால் அதன் தென்கரையில் இருந்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்று இருப்பதாகப் படித்த நினைவு. சரி தானா? >>

 
தெரியலை குமரன்.. க  அல்லது  இ  அல்லது தி அல்லது பெ(ன்னேஸ்வரன்)அல்லது  த.தே  அல்லது மோகனரங்கன்(இவருக்கு யார்பேரைச்சுருக்கினாலும் பிடிக்காது!!:) வந்து சொல்லட்டும்!
Message has been deleted
Message has been deleted

Kumaran Malli

unread,
Dec 1, 2009, 12:02:37 PM12/1/09
to mint...@googlegroups.com

ஹிஹி... கோதையக்கா உங்களை நிறைய வேலை வாங்கறார்ன்னு தெரியுது. ஆனா இப்படி அமுத மழை பொழியும்ன்னு தெரியறதால ஒன்னும் கேக்கறதில்லை. :-)

அஞ்சுகுடிக்கு பொருள் சொன்னதற்கு நன்றி மாலரங்கரே (மோஹன = மால்)! அஞ்சுகுடி என்றால் ஐந்து லட்சம் ஆய்ச்சிமாரையும், தேவையில்லாத இடத்தில் அச்சம் கொண்டு சேவடித் திருக்காப்பிடும் பெரியாழ்வாரையும் குறிப்பது போல் ஆழ்வார் பதின்மரையும் குறிப்பதாகவும் கொள்ளலாமோ? அப்படித் தானே தொடக்கத்தில் கூறியிருக்கிறீர்கள்?!
 

devoo

unread,
Dec 1, 2009, 12:28:18 PM12/1/09
to மின்தமிழ்
Dec 1, 9:44 pm, srirangammohanarangan v
//பய சங்க்யை? ...
ஸ்தானம் என்றால் இடம். ஸ்தானே -- ஏழாம் வேற்றுமை உருபு ஏறி
‘இடத்தில்’ என்று பொருள். அஸ்தானே என்றால் இடமல்லாத இடத்தில்.
பய ஸங்க்யை என்றால்....//

பய சங்கா - भय शङ्का என்பது சரி; சங்கா என்பதற்கு அபாய சங்கா, அரிஷ்ட
சங்கா என்றும் நிகண்டு பொருள் தருகிறது; ஸங்க்யை எண்ணிக்கையைக்
குறிப்பது.

’அஸ்தாநே பய சங்கை’ என்பது அஞ்சுவதற்கு இடமில்லாத பரம பதத்தில்
அழலுமிழும் அரவுக்கு ஏற்படும் அச்சத்தைக் குறிப்பது என்று படித்த நினைவு.

தேவ்

srirangammohanarangan v

unread,
Dec 1, 2009, 1:12:34 PM12/1/09
to mint...@googlegroups.com
நன்றி  தேவ்ஜி.    ஸங்க்யை   தவறு.  சங்கை   என்பது  சரி.    திருத்தி  எம்மையாண்ட    தவராசா1
Message has been deleted

Kumaran Malli

unread,
Dec 1, 2009, 1:27:14 PM12/1/09
to mint...@googlegroups.com
தொடரும்ன்னு போட்டதற்கு நன்றி. மணிப்ரவாளம் சில இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் எனக்கு புரிகிறது. அதனால் இந்தக் குழுமத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்களுக்கும் புரியும் என்றே நினைக்கிறேன். ஆனாலும் இன்னும் எளிமைப்படுத்த வேண்டும் என்று விரும்பி மணிப்பவளம் குறைவாகச் சேர்த்து எழுதியதற்கு நன்றி மாலரங்கரே.

2009/12/1 srirangammohanarangan v <ranga...@gmail.com>

    இதுவே   கலியன்  ஒலிமாலை   அனைத்தாலும்  நாம்  அறிந்து கொள்ளும்     செய்தி.  (குணானுபவம்  தொடரும்)
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
 

srirangammohanarangan v

unread,
Dec 1, 2009, 1:50:40 PM12/1/09
to mint...@googlegroups.com
On 12/1/09, shylaja <shyl...@gmail.com> wrote:


2009/12/1 Kumaran Malli <kumara...@gmail.com>


எம்பெருமானார் முதற்கொண்டு நிறைய ஆசாரியர்கள் தினமும் வடகாவிரியான கொள்ளிடத்தில் தான் நீராடுவார்கள் என்று எங்கேயோ படித்த நினைவு. சாஸ்த்ரப்படியும் ஊரில் நதி இருந்தால் அதன் தென்கரையில் இருந்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்று இருப்பதாகப் படித்த நினைவு. சரி தானா? >>

 
தெரியலை குமரன்.. க  அல்லது  இ  அல்லது தி அல்லது பெ(ன்னேஸ்வரன்)அல்லது  த.தே  அல்லது மோகனரங்கன்(இவருக்கு யார்பேரைச்சுருக்கினாலும் பிடிக்காது!!:)
 
ஆமாம்.     பெற்றோர்   வைத்த  பெயரை   மற்றவர்கள்   மாற்றுவது    பெருத்த  அநாகரிகம்    என்று  நினைப்பவன்  நான்.

Kumaran Malli

unread,
Dec 1, 2009, 2:04:03 PM12/1/09
to mint...@googlegroups.com
அடடா. அப்படியென்றால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா. மோகனரங்கன் என்ற வடமொழிப்பெயரை வைணவத் தமிழில் சொல்வதாக நினைத்துக் கொண்டு மாலரங்கர் என்று சொல்லிவிட்டேன். இனி திருத்திக் கொள்கிறேன்.

2009/12/1 srirangammohanarangan v <ranga...@gmail.com>


Suresh sundaresan

unread,
Dec 1, 2009, 8:02:48 PM12/1/09
to mint...@googlegroups.com
வாழ்க தமிழ்
 
ஷ்ய்லஜா அம்மா நாராயணன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு
 
சுந்தரேசன்

2009/12/1 shylaja <shyl...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 1, 2009, 8:25:54 PM12/1/09
to mint...@googlegroups.com
சுரேஷ்,
பெங்களுரு போகச்ச சொல்லவும்.

இன்னம்பூரான்

2009/12/2 Suresh sundaresan <sunds...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Dec 1, 2009, 8:35:05 PM12/1/09
to mint...@googlegroups.com
On 12/1/09, Kumaran Malli <kumara...@gmail.com> wrote:

ஹிஹி... கோதையக்கா உங்களை நிறைய வேலை வாங்கறார்ன்னு தெரியுது. ஆனா இப்படி அமுத மழை பொழியும்ன்னு தெரியறதால ஒன்னும் கேக்கறதில்லை.

 
திரு   குமரன் மல்லியாரும்,   ஷைலஜா   நங்கையாரும்    நம்மை  ஒரு  வழி  பண்ணாமல்   விடமாட்டார்கள்  போலிருக்கிறதே!     ஸ்ரீவைஷ்ணவத்தில்    இவர்கள்   காட்டும்  ஆர்வத்துக்கு    நாம்   எம்  மூலை?    என்று  நினைக்க  வேண்டியுள்ளது. 
 
எந்தரோ  மஹானுபாவுலு !!!


 

shylaja

unread,
Dec 1, 2009, 8:41:20 PM12/1/09
to mint...@googlegroups.com


2009/12/2 srirangammohanarangan v <ranga...@gmail.com>



On 12/1/09, Kumaran Malli <kumara...@gmail.com> wrote:

ஹிஹி... கோதையக்கா உங்களை நிறைய வேலை வாங்கறார்ன்னு தெரியுது. ஆனா இப்படி அமுத மழை பொழியும்ன்னு தெரியறதால ஒன்னும் கேக்கறதில்லை. <<>>

 
கீ  கொடுத்தாதான்  கீதமே  இசைக்கும்!
 
திரு   குமரன் மல்லியாரும்,   ஷைலஜா   நங்கையாரும்    நம்மை  ஒரு  வழி  பண்ணாமல்   விடமாட்டார்கள்  போலிருக்கிறதே!  <<<<>>
 
ஆமா  இல்லேன்னா தாங்கள் திருவாயைத்திறக்கமாட்டீங்களே அதான் பண்றொம் வம்பு!!!!
 
   ஸ்ரீவைஷ்ணவத்தில்    இவர்கள்   காட்டும்  ஆர்வத்துக்கு    நாம்   எம்  மூலை?    என்று  நினைக்க  வேண்டியுள்ளது. 
 
எந்தரோ  மஹானுபாவுலு !!!>>>
 
அதே அதே!

shylaja

unread,
Dec 1, 2009, 8:42:03 PM12/1/09
to mint...@googlegroups.com


2009/12/2 Innamburan Innamburan <innam...@googlemail.com>

சுரேஷ்,
பெங்களுரு போகச்ச சொல்லவும்.

இன்னம்பூரான்<<
 
இ   ஸார்!  இது குறும்புதானே?:)

shylaja

unread,
Dec 1, 2009, 8:51:52 PM12/1/09
to mint...@googlegroups.com


2009/12/1 srirangammohanarangan v <ranga...@gmail.com>
என்ன  இது  இந்த   ஷைலஜா   இப்படி  நம்மை  வேலை  வாங்குகிறார் !!      இந்த  நியாயத்தைக்  கேட்கறத்துக்கு   யாருமே  இல்லையா?  >>
 
நானே கொஞ்சம் காலைடிபன் பண்ணிட்டு திருப்பாணாழ்வாருக்கு ஹாப்பி பெர்த்டே ்இன்னிக்கு சொல்லிட்டு வரேன் வரேன்  !!!
 
அது    மதுர  கவி  ஆழ்வாரையும்,   ஆண்டாளையும்   விசேஷமாக   ஆக்கி   மற்ற  பதின்மர்   என்பது   ஒரு  கணக்கு.    கடைக்குட்டி  என்று   கலியனும்,     ஒரு  மகள்  தன்னை  உடையோம்  என்று   ஆழ்வார்களுக்குச்  சந்ததி    என்று  அக்காவும்    சொல்லப்படுவதுண்டு. 
 
‘அஞ்சு  குடிக்கு  ஒரு  சந்ததியாய்’   என்பது     ஸ்ரீஸ்ரீமணவாள  மாமுனிகள்   அவர்தம்   உபதேச   ரத்தின  மாலை   வாக்கு. 
 
அது  என்ன  அஞ்சு  குடி?      கோபஸ்த்ரீகளுக்கு  பஞ்ச  லக்ஷம்   ஸ்த்ரீ  ஜனங்கள்   என்று  வ்யபதேசம்   என்று   திருப்பாவை  வ்யாக்யானத்தில்  காண்கிறது.   பஞ்ச  லக்ஷம்  ஸ்த்ரீகளான    கோப  ஸ்த்ரீகளுக்கு    ஸந்ததி  போன்று  அவர்களின்   பாவ  ப்ரகர்ஷத்தை    ஆண்டாள்    தான்   ஏறிட்டுக்கொண்டாள்    என்பது  பற்றி    அஞ்சு  குடிக்கு  ஒரு  சந்ததியாய்  -   அஞ்சு  குடி  அஞ்சு   லக்ஷம்  குடி   என்பதற்கு   செய்யுள்  பிரயோகம்.      நாம்   வியவகாரத்தில்    5  ரூபாய்   என்று   5  லக்ஷத்தையும்,   5l  5k     என்றும்    சொல்லாடுவதில்லையா?     எதுதான்  எப்ப  இல்லாம  இருந்திருக்கிறது?    எல்லாம்  புனரபி  புனரபி.  
 
அது  மட்டுமில்லை.   அஞ்சு  குடி  என்பதில்   ஒரு  விசேஷம்.     அஞ்சு  குடி  என்றால்   அஞ்சிய  குடி,  அஞ்சும்  குடி,   அஞ்சப்போகும்  குடி   என்று    வினைத்தொகையாய்     முக்காலத்திலும்   அஞ்சுகின்ற  குடி  என்று    பெரியாழ்வாரைக்   குறிக்கும்.    அஞ்சுதல்   என்பது  அஸ்தானே  பய  சங்க்யையாய்    மங்களாசாசனத்தைக்  குறிக்கும்.    
 
என்ன  அது?     அஸ்தானே  பய  சங்க்யை?     மங்களா  சாசனம்?     சொல்கிறேன்.   
 
ஸ்தானம்   என்றால்  இடம்.   ஸ்தானே  --   ஏழாம்  வேற்றுமை   உருபு  ஏறி    ‘இடத்தில்’  என்று  பொருள்.    அஸ்தானே   என்றால்  இடமல்லாத    இடத்தில்.  
பய  ஸங்க்யை  என்றால்     அச்சத்திற்கு  இடம்  இருப்பதாக  எண்ணுவது.     எதைக்  குறித்து   நாம்   அதற்கு  ஏதாவது   உற்பாதம்  ஏற்பட்டு  விடுமோ  என்று  அஞ்சத்   தேவையே  இல்லையோ    அதைக்குறித்து    அத்தகைய  அச்சம்  ஏற்பட்டால்    அப்பொழுது    அங்கு    பயம்  தேவையில்லாத  இடத்தில்    ஏற்பட்ட   பய  உணர்ச்சி   என்று  சொல்லலாம்.     நடுக்கடலில்    கப்பலுக்கு  ஏதாவது  ஆகிவிடுமோ   அலைகளில்   என்ற   அச்சம்    இடம்  இருக்கும்   அச்சம்.    ஆனால்   அங்கு    எழுந்து  நிற்கும்  மலை   ஒன்றிற்கு    ஏதாவது  ஆகிவிடுமோ  என்று  அஞ்சினால்   அது     இடமற்ற  இடத்தில்  அச்சம்.     
 
அதைப்போல    அஞ்சத்  தேவையில்லாத   இடமான    பரம்பொருளுக்கு   என்  வருகிறதோ  என்று     மடிபிடிக்கும்    ஸ்வபாவர்    பெரியாழ்வார்.   அவனுக்கு  எதுவும்      நேர்ந்துவிடக்கூடாது,  எந்தக்  கண்ணேறும்  பட்டுவிடக்  கூடாது    என்று  அவனுக்கு  மங்களத்தை     ஆசாஸிப்பவர்(பிரார்த்திப்பவர்)    பட்டர்  பிரான்.      அத்தகைய  மங்களா  சாஸனக்  குடிக்குச்   சந்ததியானவள்     என்று  அஞ்சு  குடிக்கு   ஓர்  சந்ததியாய்     என்பதற்கு  அர்த்தம். 
 
(வர  வர  ரொம்ப  வாயாடுகிறேனோ)      

 
On 12/1/09, shylaja <shyl...@gmail.com> wrote:
வேடுபறி மற்றும் கலியனைப்பற்றிய  சீரார்ந்த தகவல்களை மோகனரங்கன்  வந்து கூறும்படி  கேட்டுக்கொள்கிறேன்!

2009/12/1 shylaja <shyl...@gmail.com>


2009/12/1 N. Kannan <navan...@gmail.com>
2009/12/1 shylaja <shyl...@gmail.com>:
> பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி!

 
பன்னிருவரில் கடைக்குட்டி ஆண்டாள் இல்லையோ?

 
க.><<<>.
உங்க ஆண்டாள்   அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி! அஷ்டே  க!


--
ஷைலஜா

கோலமாமணியாரமும் முத்துதாமும் முடிவில்லதோரெழில்
நீலமேனி ஐயோ! நிறைகொண்டது என் நெஞ்சினையே//

திருப்பாணாழ்வார்

Jana Iyengar

unread,
Dec 2, 2009, 3:13:25 AM12/2/09
to mint...@googlegroups.com, iyenga...@gmail.com
Adiyen would like to add the following information, when we are in the
subject of Tirumangai Azhwar. A being is considered true vaishnavan
only when he has the panchasamskaram done. Chief among the ritual is
'branding'. Yes, branding one self with Tiruvazhi (discuss in the
right hand of Lord Vishna) on the right shoulder and Shankh (conch
shell in the left hand of the Lord) on the left. This is always done
by one's acharyan.
As history has it, the Lord Himself came as the acharyan of Tirumangai
Azhwar. You can see the Moolavar at Nachiyar Koil temple (near
Kumbakonam) bringing forward both his hands as if to do the branding
ceremony on Tirumangai Azhwar. Another interesting thing is, this
moolavar, unlike others in other temples has only two hands and not
four.
Jana Iyengar

> அதற்கு பரம ரசிகனான கண்ணனும்.” அவசியம் உம்மிடமிருந்து கற்கிறேன் ஆனால் இப்போது


> அர்ச்சாவதாரமாகையாலே அது கூடாது.பின்னொருசமயத்திலே நீர் உமது  அவதார
> நட்சத்திரமான கார்த்திகையில் கார்த்திகைநாளிலே உமது
> திருநாமமான’திருக்கலிகன்றிதாசர்’ எனும் திருநாமத்துடன் இந்தச் சோழ நாட்டிலே
> அவதரிக்கபோகிறீர் அப்போது நான் ஆவணி ரோஹிணியில்(கண்ணன்) கிருஷ்ணன்  என்னும்
> பெயரோடு அவதரித்து  உம்மை ஆசார்யனாகக்  கொண்டு ஆழ்வார்கள் அனைவருடையவும்
> ஆண்டாளுடையவும் அருளிச் செயல்களின்  பொருள்களையும்  மற்றும்
> ரஹஸ்யார்த்தங்களையும்  ஸ்ரீ ராமாயணார்த்தங்களையும் உம்மிடம் இருந்தே
> கற்றறிந்து  உலகுய்ய  வெளிப்படுத்துவேன்” என்று  அருளிச்செய்தான்.அதன்படியே
> கலிகன்றாகிய  திருமங்கையழ்வார்  திருக்கலிகன்ற தாசராகிய நம்பிள்ளையாகவும்
> கண்ணன் ஸ்ரீமத் கிருஷ்ணமாஹ்வரான(கிருஷ்ண சூரி என்னும்) பெரியவாச்சான்
> பிள்ளையாகவும் அவதரித்தனர் என்று பெரியோர் பணிப்பர்.
>
>
>
>   அந்தக் காலத்து தூய தமிழ்ச் சொற்களில் இவருடைய வழிநடைச் சிந்தில்
> இப்படியும் பாடல் எழுதி இருக்கிறார்.
> கும்பகோணத்துக்கு அருகில் உள்ள "நந்திபுர விண்ணகரம்" என்ற திவ்ய
> தேசத்துக்கு போகும் வழியில் களைப்பு தெரியாமல்இருக்க, இப்படிப் பாடிக்கொண்டே
> போகிறாராம்!  ஒரே ஒருபாடல் மட்டும் இங்கே.....
>
>
>
>
> தந்தை மனம் உந்த, துயர் நந்த - இருள்
> வந்த விறல், நந்தன் மதலை!
> எந்தையிவன் என்று, அமரர் கந்த - மலர்
> கொண்டு தொழ நின்ற நகர்தான்!
>
> (வசுதேவன் சிறையில் பயப்பட, துயர் படர, இருட்டில் கோகுலம் வந்து சேர்ந்த
> நந்தகோபனின் குழந்தை!
> எங்கள் பெருமான் என்று எல்லாரும் கந்த மலர் தூவித் தொழுபவன் இவன்! இவன் ஊரு
> இது!)
>
>

> (திருமங்கைமன்னனுக்காக நடக்கும் வேடுபறி  உற்சவம் பற்றி  தெரிந்தவர்கள் விவரமாக

--
Jana

N. Kannan

unread,
Dec 2, 2009, 3:15:03 AM12/2/09
to mint...@googlegroups.com
2009/12/2 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

>
> அது    மதுர  கவி  ஆழ்வாரையும்,   ஆண்டாளையும்   விசேஷமாக   ஆக்கி   மற்ற
> பதின்மர்   என்பது   ஒரு  கணக்கு.    கடைக்குட்டி  என்று   கலியனும்,     ஒரு
> மகள்  தன்னை  உடையோம்  என்று   ஆழ்வார்களுக்குச்  சந்ததி    என்று
> அக்காவும்    சொல்லப்படுவதுண்டு.

இதைக் கொண்டுதான் நான் சொன்னேன். திருப்பாவையில் ஆண்டாள் ஒவ்வொரு
ஆழ்வாராக பள்ளியெழுச்சி செய்வதாக ஒரு வியாக்யானமுண்டு. பெரும்பூதூர்
மாமுனிக்கு மட்டும் பின்னால் அல்ல (இது ஜோக்), எல்லா ஆழ்வார்களுக்கும்
ஆண்டாள் பின் என்றுதானே பொருள் வருகிறது?

க.>

N. Kannan

unread,
Dec 2, 2009, 3:22:24 AM12/2/09
to mint...@googlegroups.com
அழகான ஐதீகம்!

எம்பெருமானார் எல்லோரையும் ஸ்ரீவைஷ்ணவராக்கும் தீவிரத்தில் திருச்சுற்று
செய்த காலத்தில், கேரள பத்தர்களை மாற்றமுடியவில்லை. பத்மநாபனும் அதற்கு
இடம் கொடுக்கவில்லை. சோர்வுற்றுத் திரும்பிய எம்பெருமானாரிடம்
'பஞ்சசம்ஸ்காரம்" செய்து கொள்ள வேண்டுமென்று ஒரு முதிய தம்பதியர்
வருகின்றனர் (ஆழ்வார் திருநகரி சமீபம்). ஜீயரும் மிக்க உவப்புடன் அவர்களை
ஸ்ரீவைஷ்ணவராக்குகிறார். பின்னால்தான் தெரியவருகிறது, இவரிடம் தீக்ஷை
பெற்றது வேறு யாருமில்லை, 'திவ்ய தம்பதிகளே' என்று! அந்த ஊர்
பெருமாளுக்கு 'வைஷ்ணவ நம்பி' என்ற பெயர் பின்னால் வழங்கலாயிற்று!

க.>

2009/12/2 Jana Iyengar <iyenga...@gmail.com>:

V, Dhivakar

unread,
Dec 2, 2009, 4:16:53 AM12/2/09
to mint...@googlegroups.com
திருக்குறையலூர் நம்பி எனும் வைணவப் பெரியார் திருமங்கை மன்னருக்கு தீக்ஷை கொடுத்தவராகும். (குமுதவல்லியாரை மணப்பதற்கு  நாச்சியாரின் கண்டிஷன்). திருக்குறையலூர் திருநகரியிலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது. திருமங்கை மன்னர் பிறந்த மண் திருக்குறையலூர் என்றும் சொல்வர்.
 
தி

 

devoo

unread,
Dec 2, 2009, 4:54:47 AM12/2/09
to மின்தமிழ்
Dec 2, 1:22 pm, "N. Kannan"
//அந்த ஊர் பெருமாளுக்கு 'வைஷ்ணவ நம்பி' என்ற பெயர் பின்னால்
வழங்கலாயிற்று!//

அந்த திவ்ய தேசத்தின் பெயர் ‘திருக்குறுங்குடி’; எம்பெருமான் ப்ரம்மசாரி
வடிவில் வந்து
பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றதாக வரலாறு. சீடனாக வந்த நம்பி எம்பெருமானாரின்
துவராடையைத்
துவைத்து உலர்த்திய பாறை திருப்பரிவட்டப் பாறை என்று பெயர் பெற்றது.

தேவ்

devoo

unread,
Dec 2, 2009, 5:07:30 AM12/2/09
to மின்தமிழ்
அரங்கனாரிடம் ஒரு விஜ்ஞாபநம் -
எம்பெருமானால் வலிந்து ஆட்கொள்ளப் பட்டவர் மங்கை மன்னர்;
எம்பெருமானாரால் வலிந்து ஆட்கொள்ளப் பட்டவர் உறங்காவில்லி தாஸர்.
இருவருக்கும் ராஸிக்யம் பொதுத் தனமை;இவ்விருவரையும்
ஒப்பீடு செய்யலாம்.பிறரும் பங்கு கொள்வோம்.

தேவ்

On Dec 1, 11:20 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> On 12/1/09, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
>
>
> > வேடுபறி மற்றும் கலியனைப்பற்றிய  சீரார்ந்த தகவல்களை மோகனரங்கன்  வந்து
> > கூறும்படி  கேட்டுக்கொள்கிறேன்!
>

> வேடுபறிக்கு   நாள்  இருக்கிறதே.  இப்பொழுதே  கம்பு  கழியைத்  தூக்கிண்டு
> என்ன  பண்ண?
>
> இன்று  கலியன்   நக்ஷத்திரமா.     நாம்  சொல்வதைவிட    ஸ்ரீபெரியவாச்சான்
> பிள்ளை     சொல்லிக் கேட்பது  விசேஷமல்லவா?   அவர்    அந்தக்  காலத்து
> மணிப்ரவாளத்  தமிழில்   பேசுகிறார்.     அதுவே  புரியும்.  இருந்தாலும்   அது
> நமக்குப்  புரியாதுன்னு  ஒரு  பிரமையை    ஏற்படுத்தி  வைத்துக்கொண்டு
> இருக்கிறோமே!  அதனால்     என்  அரைகுறைத்   தமிழில்  தரப்பார்க்கிறேன்.----
>
> உலகத்தில்   நிழலும் வெயிலும்   இருப்பதைப்  போல்   ஆத்மாவிற்கும்  நிழலும்
> வெய்யிலும்  உண்டு.     ஆத்மாவிற்கான    வெய்யில்     ஐம்புலன்   இன்பங்களான
> உலக  விஷயங்கள்.   உலக  விஷயஙக்ளில்    ஒருவன்  நாட்டம் கொண்டு அலையும் வரை
> அவன்   ஆத்மாவை   வெய்யிலிலே   போட்டவன் ஆகிறான்.    ஆத்மாவிற்கு    எது
> வெய்யிலோ    அது    உடலுக்கு    நிழல் போல்    சுகமாகத்  தோற்றுகிறது.
> ஆத்மாவோ    வெய்யிலில்  கிடந்து   துடிக்கிறது.    ஸம்ஸாரமாகிய
> வெய்யிலில்.    ஒண்ட  நிழல்  இன்றி அலையும்    ஆத்மா.     அப்பொழுது
> அதற்கு     விரிந்த  கிளையும்,   படர்ந்து   அட்ர்ந்த    இலைக்  கூட்டமும்,
> கதிர்    நுழையா     தண்ணிழலுமாக,   கனி  குலுங்க நிற்கிறது    ஒரு     தரு.
> அதுதான்     வாசுதேவ    தரு..  அதன்   நிழல்  பகவத் விஷ்யமாகிற
> வாசுதேவ  தருச்  சாயா
>
> திருமங்கையாழ்வார்     நெடுங்காலம்     உடம்பை நிழலிலே  வைத்து    ஆத்மாவை
> வெய்யிலிலே    போட்டவர்..     ஆத்மாவை   வெய்யிலிலே   போடுதல்  என்றால்
> முதலிலேயே   பகவத்  விஷயத்தில்     இழியாமை.     பகவத்  விஷயமே  நிழல்.
> இந்த   வாஸுதேவனாகிய    தரு நிழல்    பார்த்த  பார்த்த  இடத்தில் எல்லாம்
> நிழலாய்  இருக்கும்.     எங்கும்  ஒக்க   வியாபித்துத்  தானே  ஏக  நிழலாய்
> இருக்கும்.    வேறு  நிழல்   காண  ஒண்ணாது.  (ஸர்வத்ராஸௌ    வஸதி,   ஸமஸ்தஞ்ச
> அத்ர  வஸதி).  அதி    குளிர்த்தியும் இன்றி  அதி    வெப்பமும் இன்றி
> இருக்கும்.    தானே  ஏறிட்டுக் கொண்ட  நரகமொத்த  நெருப்பையும்   அவிக்க  வல்ல
> நிழல்.    ஜீவன்   ஒதுங்க  வேண்டிய   தனக்கு  ப்ராப்தமான  நிழல்   அன்று
> என்று  இந்த  நிழலைச்  சொல்ல  ஒண்ணாது.    அல்லது   இந்த   நிழல்  துக்கத்தை
> நிவர்த்திக்க   ஒண்ணாது  என்றும்   சொல்ல  முடியாது.    பின் ஏன்    ஜீவன்
> இந்த   நிழலில்    ஒதுங்குவதில்லை?       விளையாட்டில்    மும்முரமாக
> இருக்கும்  குழந்தையைத்  தாய்    உண்ண  வா என்று  அழைத்தால்     குழந்தை
> விளையாட்டுத்  தீவிரத்தில்,   தனக்கு   நன்றாகப் பசித்தாலும்,   ‘எனக்குப்
> பசியே  இல்லை.  வயிறு  ஏதோ வலிக்கிறது.  அவ்வளவுதான்’  என்று
> சொல்லி   ஓடிப்போவதைப்  போல,    எப்பொழுதும்  இந்த  நிழல்   நீக்கமற
> எங்கும்    நிறைந்து   அனைவருக்குமாகப்  படர்ந்து   இருந்தாலும்       ‘நான்
> நிழலில்  ஒதுங்க  மாட்டேன்’  என்பாரை     எதுவுமே  செய்ய முடியாதே!
>
> அதுபோல   நெடுங்காலம்    விஷயங்களில்   ஈடுபாடு   என்ற    வெய்யிலில்
> திரிந்த    ஆழ்வாரிடம்    பகாவனின்   தண்ணருள்   பாய்ந்தது.
>
>   ‘இவர்     கண்ணால்    காணுகின்ற  விஷயங்களுக்கு    அவ்வருகு    அறியாதவராய்
> இருக்கிறார்.  எனவே  இவருக்கு    நம்மை    மற்ற  விஷயங்களைப்  போலே    இவர்
> கண்ணுக்கு விஷயம்  ஆக்கினால்    விரும்பேன்  என்று  சொல்லமாட்டாதவர்  இவர்.’
>
>  என்று  பகவான்  நினைத்து    உகந்தருளின   நிலங்களாகிற   திவ்ய   தேசங்களில்
>     வந்து     சாந்நித்யமாக இருந்தார்.   இந்த  ஆழ்வாராகிய     கலியனை
> ஆட்கொண்டார்.    தம்முடைய     அருமை  பெருமைகளைக்  காட்டிக்கொடுத்தார்.
> நிழலில்  ஒதுங்காமல்  இருந்தவரை    பகவானாகிய   தம்மை விட்டுப்
> பிரிந்திருக்கவொண்ணாத  படி   இவரைப்  பண்ணித்     தம்மை  நன்கு  அனுபவிக்கச்
> செய்தார்.    அது  மட்டுமா?     இங்கே    இருந்தாலும்    ஆழ்வாரின்    தனமை
> பரமபதத்தில்   உள்ளவர்களின்   தன்மையைப் போன்று  ஆக்கினார்.     அந்த
> பரமபதத்தையும்   இவர் பெறும்படி  செய்தார்.    இதுவே   கலியன்  ஒலிமாலை
> அனைத்தாலும்  நாம்  அறிந்து கொள்ளும்     செய்தி.  (குணானுபவம்  தொடரும்)

N. Kannan

unread,
Dec 2, 2009, 5:18:34 AM12/2/09
to mint...@googlegroups.com
ஆகா!

அருமையான யோசனை!

சட்டெனத்தோன்றும் ஒற்றுமைகள்!

இருவரும் மல்லர்கள்.
இருவருக்கும் பூப்போன்ற மனைவிமார்கள்.
கலியனின் மனைவியால் வைஷ்ணத்துவம் அறியப்பெற்றவர் கலியன்.
உறங்காவில்லிதாசரைத் தம்பதி சமேதராய் அனுகிரகித்த பின்னர்
அப்பழுக்கில்லாத வைணவப்பெண்ணாக வாழ்ந்தவர் உறங்காவல்லியின் மனைவியார்.

எம்பெருமானுக்கும், எம்பெருமானார்க்கும் ஜாதி வித்தியாசம் தெரியாது.
உள்ளம் பக்குவப்பட்டிருக்கிறதா என்பதே முக்கியம்.

எனவே ஆதிப்பிரானும், ஆதிசேஷனும் இவ்விருவரையும் தடுத்தாட்கொள்கின்றனர்.

நயமான உரைகள் திருவரங்கத்து அமுதனாரிடமிருந்து.....;-)

க.>

2009/12/2 devoo <rde...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Dec 2, 2009, 9:02:58 AM12/2/09
to mint...@googlegroups.com
இதுக்குப்  பேர்தான்    letting  the  cat  out  of  the  bag  என்பது:--))) 
 
அடுத்தது   அதைத்தான்  எடுக்கப்  போறேன்.     இப்படி  முன்னாடியே  போட்டு  உடைச்சா     என்ன  பண்றது  ஸ்வாமி!!  )))

 
Message has been deleted

devoo

unread,
Dec 2, 2009, 11:06:49 AM12/2/09
to மின்தமிழ்
Dec 2, 7:52 pm, srirangammohanarangan v

* புழுக்குறித்தது எழுத்தாமாப் போலே ..... *

எக்காலத்திலோ, எதையோ ஆநுஷங்கிகமாக நாம் செய்யப்போக அதையே
ஒரு ஸுக்ருத விசேஷமாகக் கணக்கிட்டுப் பேரருள் புரிகிறான்;
இல்லையென்றால் இது போன்ற சேம நல்வார்த்தைகளைக் கேட்கும் பேறு
வாய்க்குமா ! மனம் நெகிழ எழுதுகிறேன் ஐயா.

தேவ்

Tthamizth Tthenee

unread,
Dec 2, 2009, 11:13:21 AM12/2/09
to mint...@googlegroups.com
பகவத்  விஷயமே    அத்தகையது.     அது  நமக்குச்  செய்யும்    நன்மைக்கு    நாம்   நேர்   கொடு  நேர்     செய்யலாவதும் ஒன்றும் இல்லை.    செய்ய   வேண்டுவதும்    ஒன்றும்  இல்லை.     பண்ணின    உபகாரத்திற்கு    நன்றியில் நிறைந்தோராய்    இருக்கவேண்டிய    இத்தனையே    வேண்டுவது.     அதுவும் எதற்காக?      நாம்    அசித்   என்பதைவிட    வேறுபட்ட     ஒன்று    என்பதை   நிலை  நிறுத்திக்கொள்வதற்காக.  
 
வேதாந்த சாரத்தை பிழிந்து அளித்துவிட்டீர்
 
இந்த வரிகளில்
 
வேறென்ன சொல்ல
நாம் அசித் என்பதை விட வேறு ஒன்று என்பதை நிலைநிறுத்திக்கொள்ள யத்தனம் செய்வோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2-12-09 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:
ஒருவரைத்  திருத்த வேண்டும் என்றால்    அவரிடம்  அதற்கான   வாய்ப்புகள்  சில இருக்க வேண்டும்.    சிலவற்றுக்காவது    அவர்    ஈடுபட்டுத்  தன்னை  அவர் தர வேண்டும்.    அவருக்குத்  தெரிந்தோ  தெரியாமலோ      அவரிடம்  சில    தன்மைகள்   அமைந்திருக்கவேண்டும்.     திருமங்கையாழ்வாரிடம்     அவ்வாறு  சில   பரிகரங்கள்   இருந்தன.    என்ன  அவை.?    உயர்ந்த   விஷயங்கள் சொன்னால்   அவற்றை     உள்வாங்குவாரே அன்றி   அவற்றைக்  கணடு  வெறுத்து    ஒதுங்கமாட்டார்.     அடுத்து    உலக விஷயங்கள்     நிலைப்  பேறு  உடையன  அல்ல.     பெரிய    மதிப்புடைய   பெருமையும்   அவற்றிடம்    கிடையா.     விஷய சுகத்தை    விரும்பும்    கலியன்    பெரு  மிடுக்கர்.     ஏதோ  கிடைத்ததைக் கொண்டு     இன்புறும் இயல்பினர்   அல்லர்.     தாம் அனுபவிக்கும்  விஷயங்கள்    நிலைப்பேறு  உடையனவாக   இருக்க வேண்டும் என்று  அவாவுபவர்.     அவை    சிறுமையோடு    சேராமல்    பெருமதிப்பனாக    இருக்க    விழைபவர்.   (அதனால்தானே      எத்துணையோ   அழகிகள் இருக்க     ஸ்ரீவைஷ்ணவ     ஞானம்,    சிறந்த   பக்தியுள்ள  மதி   இவற்றைக்கொண்ட   குமுதவல்லியாகப்  பார்த்து     அவர் மயங்கியது?)      எனவே   அவரிடம்  உள்ள    இந்த    அத்வேஷம்,    விஷயங்களில்    உள்ள    குறைகளான   அலபத்வம்,   அஸ்திரத்வம்    ஆகிய    லாகவம்   இவையிரண்டும்    பரிகரங்களாய்    பகவானுக்கு   இவரைத் திருத்திப் பணிகொள்ள   வாய்ப்பாக  இருந்தன.     
 
சரி  இவை  இவரிடம்  இருந்த    எதிர்மறையான    அனுகூலங்கள்.     ஆனால்    எந்த    விஷயத்திலாவது   ஒருவன்  தன்னை  மறந்து,   தன்னை  இழந்து,   தன்னைக்  கொடுத்து  ஈடுபாடு    கொண்டால்தான்     அவன்    எந்த    உயர்ந்த    ஆர்ஜவத்திற்கும்    தகுதியானவன் ஆவான்.      இவரிடம்  இருந்த  இத்தகைய    நேர்முறை     அனுகூலம்     என்பது ராஸிக்யம்.     நல்ல   ரஸிகர்.     தேர்ந்த   ரஸிகர்.     அதுமட்டுமன்று.     ரஸனை இவரை  அப்படியே  ஆட்கொண்டு      முழுக்கடித்திவிடும் அளவிற்கு     ரஸிக  சிகாமணி.    இந்த    ரஸிகத்தன்மை     பகவானுக்கு   இவரிடம்  அகப்பட்ட   நல்ல  பற்றாசு.     ஏதோ    புழுக்குறித்தது  எழுத்தாமாப்  போலே     ஜீவன்    எதேச்சையாக     நினைவில்லாமல்   செய்தது  நன்மையாக முடிய    அதை முதற்கொண்டு     இவனுக்கு  அருள் செய்வதற்கான   ஹேதுக்களாய்க்  கணக்கில் எழுதிக்கொள்ளும்   பிரானுக்கு    இது     போதாதா?   பெரும்   வாய்ப்பாயிற்றே!   
 
சரி  அநாதிகாலம்    இந்த  ஜீவன்   செய்த   பாபத்தை    எந்தக் கணக்கில் கொண்டு  போட?     பார்த்தான்  பகவான்.   அந்த  பாபாம்சத்தை      நமது   கருணைக்கு    விஷயம் ஆக்கிவிடுவோம்.   என்று  முடிவு  செய்து  இவருக்கு     பரம   கிருபை செய்தார்.    தனத்தை    அள்ளி அள்ளி   தனித்தனியாகத்  தருவதற்குப்  பதில்    கிழிச்சீரையோடே   தருவார்களே,   கட்டிவைத்த    பட்டுறையோடே   தருவதைப்  போல்,   திருமந்திரம்  ஆகிய     உயர்ந்த   உறையிட்ட    அர்த்தவிசேஷங்களை     எல்லாம்   பொதிந்து   திருமந்திரத்தை     முன்னாக  உபதேசித்துவிட்டார்.    அறியும் பொருளின்  தன்மை  தராதரம்  எல்லாம் அறிந்து  அனுபவிக்கும்  பெற்றி    உடையவர் ஆயிற்றே    கலியன்.      திருமந்திரத்தைக்  கற்றுக் கற்று   அதற்குள்ளேயே    பொதிந்திருக்கும்  எம்பெருமானின்  ஸ்வரூபம், ரூபம், குணம்,   விபூதி  ஆகியவற்றை     அடங்கக் காட்டிக் கொடுக்கக்    கண்டு   அனுபவித்து  செய்நன்றியில்    நெகிழ்ந்தார். 
‘அயோகயனான   என்னை    அது  தானே    ஹேதுவாக    விஷயீகரித்தான்’   என்று   நன்றியில்  மிக்கார்    ஆகையாலே     ஒரு  தடவை  சொன்னால்  போதாதென்று     மீண்டும்  மீண்டும்     சொல்லிக்  கூப்பிடுகிறார்.
 
பகவத்  விஷயமே    அத்தகையது.     அது  நமக்குச்  செய்யும்    நன்மைக்கு    நாம்   நேர்   கொடு  நேர்     செய்யலாவதும் ஒன்றும் இல்லை.    செய்ய   வேண்டுவதும்    ஒன்றும்  இல்லை.     பண்ணின    உபகாரத்திற்கு    நன்றியில் நிறைந்தோராய்    இருக்கவேண்டிய    இத்தனையே    வேண்டுவது.     அதுவும் எதற்காக?      நாம்    அசித்   என்பதைவிட    வேறுபட்ட     ஒன்று    என்பதை   நிலை  நிறுத்திக்கொள்வதற்காக.  
 
எங்கள் கதியே 
இராமானுச  முனியே  
சங்கை கெடுத்தாண்ட  தவ  ராசா  
பொங்கு  புகழ்   
மங்கையர் கோன்  
ஈந்த 
மறையாயிரம்  அனைத்தும் 
தங்குமனம் 
நீ   
எனக்குத் 
தா. 
(எம்பார்   அருளிய    தனியன்) 
***

 
On 12/1/09, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:


On 12/1/09, shylaja <shyl...@gmail.com> wrote:
வேடுபறி மற்றும் கலியனைப்பற்றிய  சீரார்ந்த தகவல்களை மோகனரங்கன்  வந்து கூறும்படி  கேட்டுக்கொள்கிறேன்!
 
 
வேடுபறிக்கு   நாள்  இருக்கிறதே.  இப்பொழுதே  கம்பு  கழியைத்  தூக்கிண்டு  என்ன  பண்ண?  
 
இன்று  கலியன்   நக்ஷத்திரமா.     நாம்  சொல்வதைவிட    ஸ்ரீபெரியவாச்சான்   பிள்ளை     சொல்லிக் கேட்பது  விசேஷமல்லவா?   அவர்    அந்தக்  காலத்து   மணிப்ரவாளத்  தமிழில்   பேசுகிறார்.     அதுவே  புரியும்.  இருந்தாலும்   அது  நமக்குப்  புரியாதுன்னு  ஒரு  பிரமையை    ஏற்படுத்தி  வைத்துக்கொண்டு  இருக்கிறோமே!  அதனால்     என்  அரைகுறைத்   தமிழில்  தரப்பார்க்கிறேன்.---- 
 
உலகத்தில்   நிழலும் வெயிலும்   இருப்பதைப்  போல்   ஆத்மாவிற்கும்  நிழலும்  வெய்யிலும்  உண்டு.     ஆத்மாவிற்கான    வெய்யில்     ஐம்புலன்   இன்பங்களான   உலக  விஷயங்கள்.   உலக  விஷயஙக்ளில்    ஒருவன்  நாட்டம் கொண்டு அலையும் வரை  அவன்   ஆத்மாவை   வெய்யிலிலே   போட்டவன் ஆகிறான்.    ஆத்மாவிற்கு    எது  வெய்யிலோ    அது    உடலுக்கு    நிழல் போல்    சுகமாகத்  தோற்றுகிறது.     ஆத்மாவோ    வெய்யிலில்  கிடந்து   துடிக்கிறது.    ஸம்ஸாரமாகிய   வெய்யிலில்.    ஒண்ட  நிழல்  இன்றி அலையும்    ஆத்மா.     அப்பொழுது   அதற்கு     விரிந்த  கிளையும்,   படர்ந்து   அட்ர்ந்த    இலைக்  கூட்டமும்,     கதிர்    நுழையா     தண்ணிழலுமாக,   கனி  குலுங்க நிற்கிறது    ஒரு     தரு.    அதுதான்     வாசுதேவ    தரு..  அதன்   நிழல்  பகவத் விஷ்யமாகிற     வாசுதேவ  தருச்  சாயா 
 
திருமங்கையாழ்வார்     நெடுங்காலம்     உடம்பை நிழலிலே  வைத்து    ஆத்மாவை  வெய்யிலிலே    போட்டவர்..     ஆத்மாவை   வெய்யிலிலே   போடுதல்  என்றால்  முதலிலேயே   பகவத்  விஷயத்தில்     இழியாமை.     பகவத்  விஷயமே  நிழல்.     இந்த   வாஸுதேவனாகிய    தரு நிழல்    பார்த்த  பார்த்த  இடத்தில் எல்லாம்     நிழலாய்  இருக்கும்.     எங்கும்  ஒக்க   வியாபித்துத்  தானே  ஏக  நிழலாய்  இருக்கும்.    வேறு  நிழல்   காண  ஒண்ணாது.  (ஸர்வத்ராஸௌ    வஸதி,   ஸமஸ்தஞ்ச   அத்ர  வஸதி).  அதி    குளிர்த்தியும் இன்றி  அதி    வெப்பமும் இன்றி    இருக்கும்.    தானே  ஏறிட்டுக் கொண்ட  நரகமொத்த  நெருப்பையும்   அவிக்க  வல்ல நிழல்.    ஜீவன்   ஒதுங்க  வேண்டிய   தனக்கு  ப்ராப்தமான  நிழல்   அன்று  என்று  இந்த  நிழலைச்  சொல்ல  ஒண்ணாது.    அல்லது   இந்த   நிழல்  துக்கத்தை  நிவர்த்திக்க   ஒண்ணாது  என்றும்   சொல்ல  முடியாது.    பின் ஏன்    ஜீவன்  இந்த   நிழலில்    ஒதுங்குவதில்லை?       விளையாட்டில்    மும்முரமாக    இருக்கும்  குழந்தையைத்  தாய்    உண்ண  வா என்று  அழைத்தால்     குழந்தை  விளையாட்டுத்  தீவிரத்தில்,   தனக்கு   நன்றாகப் பசித்தாலும்,   ‘எனக்குப் பசியே  இல்லை.  வயிறு  ஏதோ வலிக்கிறது.  அவ்வளவுதான்’  என்று  சொல்லி   ஓடிப்போவதைப்  போல,    எப்பொழுதும்  இந்த  நிழல்   நீக்கமற  எங்கும்    நிறைந்து   அனைவருக்குமாகப்  படர்ந்து   இருந்தாலும்       ‘நான்  நிழலில்  ஒதுங்க  மாட்டேன்’  என்பாரை     எதுவுமே  செய்ய முடியாதே!  
 
அதுபோல   நெடுங்காலம்    விஷயங்களில்   ஈடுபாடு   என்ற    வெய்யிலில்    திரிந்த    ஆழ்வாரிடம்    பகாவனின்   தண்ணருள்   பாய்ந்தது.   
 
  ‘இவர்     கண்ணால்    காணுகின்ற  விஷயங்களுக்கு    அவ்வருகு    அறியாதவராய்   இருக்கிறார்.  எனவே  இவருக்கு    நம்மை    மற்ற  விஷயங்களைப்  போலே    இவர்  கண்ணுக்கு விஷயம்  ஆக்கினால்    விரும்பேன்  என்று  சொல்லமாட்டாதவர்  இவர்.’  
 
 என்று  பகவான்  நினைத்து    உகந்தருளின   நிலங்களாகிற   திவ்ய   தேசங்களில்     வந்து     சாந்நித்யமாக இருந்தார்.   இந்த  ஆழ்வாராகிய     கலியனை   ஆட்கொண்டார்.    தம்முடைய     அருமை  பெருமைகளைக்  காட்டிக்கொடுத்தார்.     நிழலில்  ஒதுங்காமல்  இருந்தவரை    பகவானாகிய   தம்மை விட்டுப்    பிரிந்திருக்கவொண்ணாத  படி   இவரைப்  பண்ணித்     தம்மை  நன்கு  அனுபவிக்கச் செய்தார்.    அது  மட்டுமா?     இங்கே    இருந்தாலும்    ஆழ்வாரின்    தனமை    பரமபதத்தில்   உள்ளவர்களின்   தன்மையைப் போன்று  ஆக்கினார்.     அந்த  பரமபதத்தையும்   இவர் பெறும்படி  செய்தார்.    இதுவே   கலியன்  ஒலிமாலை   அனைத்தாலும்  நாம்  அறிந்து கொள்ளும்     செய்தி.  (குணானுபவம்  தொடரும்)
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
 
 

 

srirangammohanarangan v

unread,
Dec 2, 2009, 11:30:08 AM12/2/09
to mint...@googlegroups.com
ஸ்வாமி!     என்னைப்  போய்  எதற்குப்  புகழ்கிறீர்.?      எல்லாப்  பெருமையும்     ஸ்ரீமத்  பெரியவாச்சான்  பிள்ளை    அவர்களுடையது    அன்றோ!    அவர்   சொன்ன   தாத்பர்யங்களை      ஆழமாகப்  புரிந்துகொண்டு     ஏதோ  என்னால்  ஆன     அரைகுறைத்  தமிழில்    தந்தேன்.     அவ்வளவே.      அவருக்கே     பரமகாருண்ய  ஸ்வபாவர்    என்று  பெயர்.     அபாரமான  அர்த்த    விசேஷங்களை    எங்கெங்கோ     ஆழங்களிலிருந்து     கொண்டு  வந்து  தருபவர்.   
 
’வேட்டிருந்த   ரசிகர்  குழாம்  விரதம்   வெல்லும்’ -- ))))

 

N. Kannan

unread,
Dec 2, 2009, 6:07:35 PM12/2/09
to mint...@googlegroups.com
2009/12/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

>
> ’வேட்டிருந்த   ரசிகர்  குழாம்  விரதம்   வெல்லும்’ -- ))))
>

அது என்ன? இது 13ம் நூற்றாண்டுப் பயன்பாடா? 21ம் நூற்றாண்டா ;-))?

க.>

N. Kannan

unread,
Dec 2, 2009, 6:13:31 PM12/2/09
to mint...@googlegroups.com
ஆக, அடிக்கோடு ரசிகத்தன்மை!

வாழ்வில் ரசிக்கத்தன்மை வந்துவிட்டால் இறைவன் அருகில் என்கிறீர்கள்.

மின்தமிழ் அன்பர்களே இன்றிலிருந்து வாழ்வை ரசிப்போம்.
போன காலங்கள் போயின என்று கூறி இன்றிலிருந்து அணு, அணுவாய் ரசிப்போம்.
இறைவன் ஒருவனுடைய குறைகளைக் கூடக் காரணமாகக் கொண்டு அருளுகிறான் என்னும்
போது நாமும் ஏன் பிறருடைய குறைகளைக் காரணமாகக் கொண்டு வெறுப்பதற்குப்
பதில் அன்பு செய்தல் கூடாது? முயன்று பார்ப்போம்.

நன்றி ரங்கன்.

க.>

2009/12/2 srirangammohanarangan v <ranga...@gmail.com>:


>உயர்ந்த   விஷயங்கள்
> சொன்னால்   அவற்றை     உள்வாங்குவாரே அன்றி   அவற்றைக்  கணடு  வெறுத்து

> ஒதுங்கமாட்டார்.        எனவே   அவரிடம்  உள்ள    இந்த    அத்வேஷம்,


> விஷயங்களில்    உள்ள    குறைகளான   அலபத்வம்,   அஸ்திரத்வம்    ஆகிய
> லாகவம்   இவையிரண்டும்    பரிகரங்களாய்    பகவானுக்கு   இவரைத் திருத்திப்
> பணிகொள்ள   வாய்ப்பாக  இருந்தன.

N. Ganesan

unread,
Dec 2, 2009, 6:14:27 PM12/2/09
to மின்தமிழ்

On Dec 2, 8:52 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

>
> எங்கள் கதியே
> இராமானுச  முனியே
> சங்கை கெடுத்தாண்ட  தவ  ராசா
> பொங்கு  புகழ்
> மங்கையர் கோன்
> ஈந்த
> மறையாயிரம்  அனைத்தும்
> தங்குமனம்
> நீ
> எனக்குத்
> தா.
> (எம்பார்   அருளிய    தனியன்)
> ***
>

அதி அற்புதமான வெண்பா!

> எங்கள் கதியே இராமா னுசமுனியே
> சங்கை கெடுத்தாண்ட தவராசா - பொங்குபுகழ்


> மங்கையர் கோன்ஈந்த மறையாயிரம் அனைத்தும்
> தங்குமனம் நீஎனக்குத் தா.
>
> (எம்பார் அருளிய தனியன்)

ஔவைப் பிராட்டியின் சங்கத் தமிழ் மூன்றும் தா - வெண்பாவின்
தாக்கம் தெரிகிறது.

எம்பார் வரலாற்றை உங்கள் சொற்களால் கேட்க மிக ஆசை.

தமிழின் அடியவன்,
கணேசன்

srirangammohanarangan v

unread,
Dec 2, 2009, 9:36:46 PM12/2/09
to mint...@googlegroups.com
சொன்னால்    ஆச்சரியப்  படுவீர்கள்!!.     சிதம்பரம்   ரகுநாதன்    அவர்களுடைய    கவிதை   வரி     இந்த    ‘வேட்டிருந்த   ரசிகர்   குழாம்  விரதம்  வெல்லும்’   என்ற   வரி.      கவிஞர்  பெருமான்    திருலோக   சீதாராம்    அவர்களை   மிகவும்  கவர்ந்த    வரி  இஃது.     ஒரு  மேடையில்    கவிஞர்   பேச்சு   முடிந்தவுடன்     நண்பர்கள்    ‘என்ன    இன்றைக்கு     வழக்கமான     ஒரு     பொங்கு  பெருக்கம்    உங்கள்  பேச்சில்    காணவில்லையே!’   என்றதற்கு     கவிஞரின்  பதில்    ‘பேச்சு    பேசுவோனிடமிருந்து  மட்டும்   வருவதில்லை.   கேட்பவருக்கு    தீவிர   ஆர்த்தி    இல்லையேல்     கொடுத்தாலும்     பற்றிக்கொள்ளாது.     ‘வேட்டிருந்த   ரசிகர்  குழாம்    விரதம்  வெல்லும்’  ‘   என்றாரே   பார்க்கணும். :---)))))

 

srirangammohanarangan v

unread,
Dec 2, 2009, 9:38:34 PM12/2/09
to mint...@googlegroups.com
அடடா!    கணேசருக்கு     இப்படி   ஒரு  ரசனையா!   நலமே  விளைக. :--)))

N. Ganesan

unread,
Dec 2, 2009, 9:44:05 PM12/2/09
to மின்தமிழ்

On Dec 2, 8:36 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> On 12/3/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
>
>
> > 2009/12/3 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:


>
> > > ’வேட்டிருந்த   ரசிகர்  குழாம்  விரதம்   வெல்லும்’ -- ))))
>
> > அது என்ன? இது 13ம் நூற்றாண்டுப் பயன்பாடா? 21ம் நூற்றாண்டா ;-))?
>
> > க.>
>
> சொன்னால்    ஆச்சரியப்  படுவீர்கள்!!.     சிதம்பரம்   ரகுநாதன்

தொ. மு. சிதம்பர ரகுநாதனா?

shylaja

unread,
Dec 2, 2009, 10:14:35 PM12/2/09
to mint...@googlegroups.com


2009/12/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ஆஹா! அருமை!  இதெல்லாம்  திருலோகம்  மாமா  வாய்லதான் வரும். அப்பாவின் அருமை நண்பரும் குருவும் ஆனவர்!
எல்லாம் நினைவில் வைத்திருந்து  இங்க  அளிக்கும் மோகனரங்கனுக்கு நன்றி!
 
மேலும் வாசிக்கக்காத்திருக்கும்
  உங்கள் ரசிகை!
ஷை!

 

கோலமாமணியாரமும் முத்துதாமும் முடிவில்லதோரெழில்
நீலமேனி ஐயோ! நிறைகொண்டது என் நெஞ்சினையே//

திருப்பாணாழ்வார்

vj kumar

unread,
Dec 2, 2009, 10:17:20 PM12/2/09
to mint...@googlegroups.com
hi

Are there sculptural depictions of the lives / stories of alwars in temples. I have been trying to check but get mostly only processional idols ( utsavars). If any can guide to good stone sculptures, panels, relief sculptures of alwars and their lives, would be eager to go after.

rgds
vj
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/3 shylaja <shyl...@gmail.com>

devoo

unread,
Dec 2, 2009, 10:48:13 PM12/2/09
to மின்தமிழ்
Dec 3, 8:17 am, vj kumar

> Are there sculptural depictions of the lives / stories of alwars in temples.<

நல்ல கேள்வி,
நீங்கள் தாராசுர ஆலயச் சிற்பங்களை மனத்தில் கொண்டு
கேட்பதாகத் தெரிகிறது.வைணவ ஆலயங்களில் ஆழ்வார்களின்
வரலாற்றைத் தொடர் சிற்பமாக வடித்திருப்பதாகத் தெரியவில்லை.
நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த திருக்குறுங்குடி ஆலயத்திலோ,
திருவரங்கத்திலோ பார்த்ததாக நினைவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூரின் மரச்சிற்பங்களில் கண்ணனின் லீலைகளையே
மிகுதியாகக் காண்கிறோம்;தேர்களின் சிற்பங்களில் இவை இடம்
பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

தேவ்

srirangammohanarangan v

unread,
Dec 3, 2009, 11:47:52 AM12/3/09
to mint...@googlegroups.com
On 12/3/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Dec 2, 8:36 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> On 12/3/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
>
>
> > 2009/12/3 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>:
>
> > > ’வேட்டிருந்த   ரசிகர்  குழாம்  விரதம்   வெல்லும்’ -- ))))
>
> > அது என்ன? இது 13ம் நூற்றாண்டுப் பயன்பாடா? 21ம் நூற்றாண்டா ;-))?
>
> > க.>
>
> சொன்னால்    ஆச்சரியப்  படுவீர்கள்!!.     சிதம்பரம்   ரகுநாதன்

தொ. மு. சிதம்பர ரகுநாதனா?
 
அப்படித்தான்    கேள்விப்பட்ட  நினைவு.    முழுப்பாடலையும்  படித்ததும்  உண்டு.   முழுப்பாடலை  இங்கே   இடலாமே  என்று  தேடுகிறேன்.    எங்கு  வைத்தேனோ    தெரியவில்லை    கிடைக்கமாட்டேன்   என்கிறது.   அதற்குள்  உமக்குக்  கிட்டினால்    தயவு  செய்யுங்கள். :--)))

manohar

unread,
Dec 14, 2009, 11:08:09 PM12/14/09
to மின்தமிழ்
ஷைலஜா! அருமயான பதிவு.

"சரி இனி ஆழ்வாரிடம் ஆழ்வோம்"

The following paper published by Mr. S. Palaniappan gives a very
different interpretation on the word ஆழ்வார்.

http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/FestSchrift/supa_9d.pdf

In fact according to the article this interpretation is supported by
Tirumangai Azhvar's own verses.

katalmallait talacayanam
ar ennum nencu utaiyar
avar emmai alvare (periyatirumoli 2.6.2.5-8)

“…Those who have the hearts that think of One’s sleeping on the
ground at
Mallai by the sea, are indeed our lords (the ones who rule us)”.

Some more excerpts from the above paper –

For over eight centuries, the Tamil Vaisnava tradition has called each
of its
saints as ஆழ்வார் “one who is immersed”. This is to be contrasted
with the Tamil
saiva tradition which called each of its saints as nayanar “lord”.
At first look,
this difference may suggest that the Vaisnava view of its saints was
different
from that of the Saivas. However, this difference disappears when the
history of
the term alvar is investigated with a multi-faceted approach using
philology,
linguistics, epigraphy, and religion.
ஆழ்வார் is but a corrupt form of ஆள்வார் which has been used
interchangeably
with nayanar in secular and religious contexts in the Tamil land.
Naturally, the
female Vaisnava saint, Kotai, the author of the Tiruppàvai, is called
Nacciyar which is the feminine equivalent of nayanar.
Any explanation of ஆழ்வார் as “one who is immersed” is based on folk
etymology that has not taken
into account the real history of the word. What is really interesting
is the fact
that the sound variation and semantic change of ஆள்வார் of Natamuni
into ஆழ்வார் of
Tirukkurukaippiran Pillan has occurred in the Srirangam area, the
primary
locus of Tamil Vaisnava scholarship and transmission of tradition, in
about two
centuries in spite of the unbroken teacher-student chain claimed by
the
tradition. Not only did the tradition forget the connection of the
name ஆழ்வார் to
many occurrences of alvan/alvay in the Tivviyappirapantam but it also
has
developed a folk etymology explaining the nature of the ஆழ்வார் ,
which has been
accepted by leading scholars.

Any thoughts???

Manohar


On Dec 1, 1:56 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
>  இன்றக்கு ஒரு ஆழ்வாருக்குப்பிறந்தநாள்! அவரைப்பற்றி சின்னகுறிப்பு!
>
>  திருவரங்கத்தில திருமதில் கைங்கர்யம் செய்தவர்(திருமங்கை மன்னன் திருச்சுற்று)
> நீலன் என்கிற பேர்ல கள்ளனாய்
> நீலவண்ணக்கண்ணனின்  திருவடியைத்தொட்டு
> மகிழ்ந்த பேறு பெற்றவர்
> குமுதவல்லி என்னும் அரங்கபக்தையின்
> ஆருயிர்க்கணவன்!
> அரங்கனிடம் தன் சிந்தையைப்பறிகொடுத்த ஆழ்வார்!
>
> பிறந்த காலம் - 8 ம் நூற்றாண்டு
> பிறந்த ஆண்டு - நள ஆண்டு
> பிறந்த மாதம் - கார்த்திகை
> திருநட்சத்திரம் - கார்த்திகை
> திதி - பௌர்ணமி (வியாழக்கிழமை)
> அம்சம் - சாரங்கம் (வில்)
>
> பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி! அதிகபிரபந்தங்களை-பெரிய திருமொழி

> திருநெடுந்தாண்டகம் திருக்குறுந்தாண்டகம் திருவெழுக்கூற்றிருக்கை  சிறிய


> திருமடல் பெரியதிருமடல்  ஆறு பிரபந்தங்களை அருளிச்செய்த ஆழ்வாரும் இவரே!
>

> திருமங்கை ஆழ்வார் என்று  எல்லோருக்கும் தெரிந்திருக்குமே!


>
>  கடவுளுடனே இவர்  சண்டைக்குப் போனவர். 'நகையைக் கழற்று' என்று மிரட்டியவர்.
> அவர் ஸ்ரீரங்க நகரில்கோயில். மதில் கட்டியவர். கூலி கொடுக்க பணமின்றி
> ஆட்களிடம் 'பணம் வேணுமா.. இல்லே மோட்சம் வேணுமா' என்று கேட்டதாகவும் மோட்சம்
> என்று அவர்கள் சொல்ல பரிசலோடு கொள்ளிடத்தில் கவிழ்த்து விட்டதாகவும் ஒரு கதை

> உண்டு!  உண்மையா பொய்யா தெரியவில்லை.


>
> இங்கே....
>
> ///கொள்ளிடம் நதி; சிறுகுறிப்பு...
>

> கிழக்கிருந்து   தெற்குவழியாக அகண்டகாவிரியாய் ஆர்ப்பாட்டமாய் அரங்கநகரில்


> நுழையும் காவிரி தன் திரைக்கையால் அரங்கநகரைத் தொட்டுவிட்டதும் மேற்கில்

> திரும்பி ,வடக்கில் அமைதியாய் அடங்கி   தூய்மையாய் கலக்கலே இன்றி  வருவதை


> இங்கே பார்க்கலாம்!  ஸ்ரீரங்கத்தில் வடக்குவாசல்பகுதியில் இருப்பவர்கள்

> கொள்ளிடத்தில்  குளிக்காமல் இருந்தால் அவர்களை நாங்கள்  நட்பென்றோ உறவென்றோ


> கொள்ளவேமாட்டோம்!
>

> கொள்ளிடம் அப்போதும்இப்போதும் எப்போதும் ஸ்படிகமான நீர். குளிக்க பரம சுகம்.


> நீரில் அமிழ்ந்தால் எழுந்து வர மனசே இராது. ஆனால் போகும் பாதை அத்தனை சுத்தம்
> இல்லை. மனிதக் கழிவுகள். செத்துப் போனவர்களின் வாரிசுகளுக்கு மொட்டை
> போட்டதில் குவியும் முடிக் கற்றை. எலும்புத் துகள்கள். உடைந்த சட்டிகள்.

> சோற்று பிண்டங்கள். மனசுள் லேசாய் பீதி கிளப்பும். அல்லது அசூயை. இவை எல்லாம்


> தாண்டி தண்ணீருக்குள் இறங்கி விட்டால் ஆஹா!அந்த நீர்செய்த  தவம் தான் என்னே!

> பெருமானின்  திருமஞ்சனத்திற்குக்கொள்ளிடம் நீர்தானே  வெள்ளிக்குடத்தில் தினமும்


> யானைமீது போகிறதாம்?(ஐப்பசிமாதம் மட்டும் அகண்டகாவிரியாம்) ////
>
> சரி இனி ஆழ்வாரிடம் ஆழ்வோம்!
>
>  நீலன   ஒரு வழிப்பறித்திருடன்.
>
> வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்!
> தொட்டது தான் தாமதம்!

> இனி வேறு என்ன!!! *கலியன்* (வலிமை மிக்கவன்) என்று எம்பெருமானே இவரை வாய்
> விட்டு அழைத்தான்! இவர் காதில் “*நாராயண*” எட்டெழுத்து மந்திரம் உபதேசித்து


> அருளினான்.
>
> இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா?
>

> *மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!
> *வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.


> சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
> இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு

> முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் *குமுதவல்லி நாச்சியார்*, இவருக்கு உற்ற


> துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு
> தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும்
> தான்!
>
> குலம்தரும் செல்வம் தந்திடும்
> –அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
> நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
> –அருளோடு பெருநிலம் அளிக்கும்
> வலந்தரும் மற்றும் தந்திடும்
> –பெற்றதாயினும் ஆயின செய்யும்
> நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்

> –*நாராயணா* என்னும் நாமம்
> **
>
> எட்டெழுத்து  மந்திரப்பெருமைதனை உரைக்கும் இந்த ஒருபாடல்   ஒன்றுபோதும் மாலின்
> மேல்ஆழ்வார் கொண்ட ஆழ்ந்த பக்தியினை நமக்கு எடுத்துச்சொல்ல.!
>
> ‘கவி கற்கணுமா வா என்கிட்டே” என்று  பெருமாளிடமே  உத்தரவு போட்ட  ஆழ்வாரும்


> இவரே! கடைக்குட்டி இளம்கன்று பயம் அறியுமா என்ன?!
>
> பெரியதிருமொழியில் இவர்,
>
> “மெய்ம்மை சொல்லில் வெண்சங்கமொன்றேந்திய
> கண்ண! நின்தனக்கும் குறிப்பாகில்

> கற்கலாம்  கவியின் பொருள்தானே”
>
> என்று திருக்கண்ணமங்கை பெருமான் கண்ணன் தம் திருமொழியின் அர்த்தங்களை அறிந்து
> கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவதை அவன் திருமுகக் குறிப்பிலிருந்து கண்டு,”நீ ...
>
> read more »

Message has been deleted

devoo

unread,
Dec 15, 2009, 5:12:36 AM12/15/09
to மின்தமிழ்
மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
கண்ணிணையும் மரவிந்த மடியு மஃதே
அவ்வன்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ!
அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே

ஸ்வாமிந் , இதன் அர்த்த விசேஷங்கள் உமக்குப் போறும்;
அது போதும் என்றிருந்து விட்டால் எம்மனோர்
அறிந்து கொள்வது எப்படி ?
ஆசையுடையோர்க்குக் கூறும் அதிகாரம்தான் வழங்கப்பட்டு விட்டதே

தேவ்

On Dec 15, 1:32 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> திருநெடுந்தாண்டகம்

> =====================
> ***********************************
> )))))))))))))))))))))))))))))))))))}}}}}}}}}}}}}}}
>
> ]]]]]]]]]]]
>
> தீர்க்கமான     ஆயுஸ்.      தொண்டுக்  கிழமன்று.   தொண்டில்    பழுத்த
> கிழமையின்   அழகு.     காவி   உடை     உலகை  வெறுத்த    நிறமாக  இல்லாமல்
> உலகை   உத்தமனின்    வடிவாகக்  கண்ட   தர்சனத்தால்    மஹா கல்யாண  நிறமாகக்
> காட்சியளிக்கும்     தேஜஸ்.     வயோதிகம்    தன்னை  அறிவித்துக்கொள்ளும்
> கைகளோடு     அந்திப்பொழுதில்     இருவர்   தாங்கி  நிற்க      இருள்  கடியும்
> யதிராசர்     அந்தி  வேட்டு    அர்க்கியம்  விடுகிறார்.   எவ்வுயிர்க்கும்
> செந்தண்மை  பூண்ட    எம்பெருமானார்      அந்தி  முடித்து     அணுக்க
> முதலிகளை   அழைத்து      கூரத்தாழ்வான்  மகனாரை    அழைத்துவரும்படிக்
> கூறுகிறார்.     பராசர  பட்டர்   வந்ததும்,    வாஞ்சையோடு    அவரிடம்
> வார்த்தையாடி,   அவர்  கையில்    கிரந்தம்   ஒன்றைத்  தந்து     படிக்கச்
> சொல்லி     அருகில்  உள்ளாரை    நோக்கி,    ‘இவனை   நம்மை    நோக்குவதுபோல்
> நோக்கிக்  கொள்ளுங்கோள்’    என்று  ஆணையிடுகிறார்.      பராசர  பட்டரிடம்,
> ‘குழந்தாய்!      என்   தள்ளாத    வயது.    ஒரு  பணி  இன்னும்
> முடியவில்லை.     நீதான்    அதை  முடிக்க  வேண்டும்.     மேல்நாடு
> எனப்படும்    மைசூர்  பிராந்தியத்தில்,     மாதவ  வேதாந்தி    என்று  ஒரு
> வித்வான்.     ஆறு  தர்சனங்களும்  அவருக்கு     கையிலங்கு    நெல்லிக்கனி.
> மாயாவாதத்தில்    மிகுந்த  ஊற்றம்  உடையவர்.     அவரை   எப்படியாவது    நம்
> தர்சனத்திற்கு    அழைத்துவர  வேண்டும்.     உனக்கு    இது  நான்  விட்டுச்
> செல்வது.’
>
> நாட்கள்   நகர்ந்தன.     நாரணன்   தன்  தனிமையைப்  போக்கிய    நல்லவர்
> இட்ட  கட்டளையை   சுமந்தபடி  பட்டர்    தகுந்த  காலம்   வாய்க்கக்  கருதிக்
> காத்திருந்தார்.      ஒரு  நாள்,      ஒரு  தேசாந்திரி    பிராம்மணன்
> ஒருவர்    பட்டரிடம்   வந்து    தாம்    மைசூர்  பிராந்தியமெல்லாம்    போய்
> வந்திருப்பதாகவும்,   அங்கு   மாதவ  வேதாந்தி    என்னும்    மஹா  வித்வானைக்
> கண்டதாகவும்,   அவரிடம்   பராசர  பட்டரைப் பற்றி   பிரஸ்தாபித்ததாகவும்
> கூறினார்.     பெயரைக்  கேட்டதும்   பட்டர்    கூர்ந்து
> கேட்கத்  தொடங்கினார்.    தேசாந்திரி   கூறினார்,
> ‘வித்வானிடம்      ஸ்ரீரங்கத்தில்    பராசர  பட்டர்   என்னும்    மிகப்பெரிய
> வித்வான்  வசிப்பதாகக்  கூறினேன்.    அதற்கு  மாதவ  வேதாந்தி    ‘அப்படியா?
> அவர்க்கு  என்னென்ன   சாஸ்திரங்கள்   போறும்  ?’  என்று கேட்டார்.   நானோ
> நியாயம்,  மீமாம்ஸை,    காவ்யம்,  ஸகல  வேத  வேதாந்தங்கள்   என்று
> சொன்னேன். ’   என்றார்  தேசாந்திரி.      அதற்கு   பட்டர்,   ‘அதெல்லாம்
> இருக்கட்டும்    ஸ்வாமி.   நீர்    பல  நகரங்களைக்  கண்டு     பல
> ஸ்தலங்களில்    இருக்கும்  விசேஷங்கள்  எல்லாம்    அறிந்தவராய்  இருக்கும்
> நாகரிகராய்  இருக்கிறீர்.   ஒருவரைப்  பற்றிச்  சொல்லுமிடத்தே
> அவருக்குத்  தெரிந்த   சாதாரண   சாஸ்திரங்களைச்   சொல்லியா     அறிமுகப்
> படுத்துவது?    அவருக்குத்   தெரிந்த  விசேஷ   சாஸ்திரம்   பற்றிச்  சொன்னால்
> அன்றோ   கேட்பவருக்கு    விசதமாகத்  தெரியவரும்.    அதைவிடுத்து
> ஸாமாந்ய     க்ரந்தங்களை  நமக்குத்   தெரிந்ததாகச்  சொல்லிவந்தீரே!’   என்று
> கூறினார்.     தேசாந்திரிக்கோ    ஆச்சரியம்.     கற்போர்   கற்கும்  உயர்ந்த
> பட்ச    சாஸ்திரங்களை   எல்லாம்   தாம்  சொல்லாநிற்க,
> பட்டர்   தமக்குத்  தெரிந்த   விசேஷம்  பற்றி   ஏன்  குறிப்பிடவில்லை
> என்கிறாரே!     நாட்டில்  நடையாடும்     வித்யைகளைத்தானே  ஒருவர்   கற்றிருக்க
> முடியும்?     இதையெல்லாம்  விடுத்து  வேறு  என்ன  விசேஷ    சாஸ்திரமாக
> இருக்கக்  கூடும்?    என்று     நெடுநேரம்    சிந்தித்து    பட்டரையே
> கேட்டுவிட்டார்.    பட்டர்,   ‘ஸ்வாமி   நமக்குத்   திருநெடுந்தாண்டகம்
> போறும்   என்று  சொன்னீரோ?’   என்று   கேட்டார்.   (  போறும்  போறும்
> என்றால்     நன்கு  தெரியும்,  கைவரும்  என்று
> பொருள். )   தேசாந்திரி    திகைத்தார்.   அப்படி  ஒரு  சாஸ்திரம்
> இருப்பதாகத்   தாம்  நினைத்துக்  கூடப்  பார்க்கவில்லை.     ‘சரி   அடுத்த
> முறை   போகும் பொழுது  நிச்சயம்  சொல்கிறேன்’  என்று  சொல்லிப்
> போய்விட்டார்.     தேசங்களைச்  சுற்றி  வருமிடத்தே     மைசூருக்கு   வந்த
> அளவில்   மாதவ  வேதாந்தியைச்   சந்தித்துப்  பேசினார்.   மாதவ  வேதாந்தியே,
>  ‘பராசர  பட்டர்  எப்படி  இருக்கிறார்?’   என்று  கேட்டார்.     தேசாந்திரி,
> ‘அவர்  நலமே  உள்ளார்.    சென்ற  முறை  நான்   அவருடைய   வித்வத்தைப்
> பற்றிக்   கூறுமிடத்தே,   முக்கியமாக  அவருக்குத்  தெரிந்த    விசேஷ
> சாஸ்திரம்  ஒன்றைக்   குறிப்பிடத்    தவறிவிட்டேன் .    அந்த   சாஸ்திரத்தின்
> பெயர்    திருநெடுந்தாண்டகம்  என்பது’  என்றார்.   மாதவ  வேதாந்தியோ
> பெரிதும்  மனம்  கலக்கம்  உற்றார்.     ‘அடடா!       சாச்திரத்தின்   பெயர்
> கூட    நாம்   கேள்விப்பட்டதில்லை.  அதில்  அவரோ  பெரும்    நிபுணர்.     அவர்
> எத்தகைய  வித்வானாய்   இருக்க  வேண்டும்.    நாமோ    எல்லாரும்   அறிந்த
> சாச்திரங்களையே  அறிந்துவிட்டு,   ஆறு    தர்சனங்களுக்கு    ஆறு   ஆஸனம்
> இட்டு    அமர்ந்திருக்கிறோம்.’  என்று.
>
> சில  மாதங்கள்   கழித்து    பராசர  பட்டர்    மேல்நாட்டிற்குப்  பயணமானார்.
> அப்பொழுது   தேசாந்திரியிடம்       தம்   எண்ணத்தைக்   கூறிய
> பொழுது,   தேசாந்திரி,   ‘ஸ்வாமி!     நீர்   இப்படியெல்லாம்
> வெளிப்படையாகப்    போனால்   ஒரு  நாளும்   மாதவ  வேதாந்தியைச்   சந்திக்கவே
> முடியாது.    காரணம்  நீர்    வாதத்திற்கு
> வந்திருப்பதாகத்    தெரிந்ததும்    அவருடைய    சீடக்  குழாங்கள்  உங்களைச்
> சூழ்ந்துகொண்டு    நாட்கணக்கில்,   மாதக்கணக்கில்     வாதம்   செய்தே   நோக
> அடித்து விடுவர்.    அவர்களைத்    தாண்டிப்    போக  முடியாது’  என்றார்.
> பட்டரோ      அவரையே     பதிலுக்குக்  கேட்டார்.  ‘சரி  அப்படியானால்
> எப்படித்தான்  சந்தித்து   அவரோடு    வாதம்  செய்து    நம்  தர்சனத்திற்குக்
> கொணர்வது?’    தேசாந்திரி    சொன்னார்,
> ‘ ஸ்வாமி!      அவரிடம்    நேரே    போகவேண்டும்  என்றால்     தினமும்  அவர்
> அன்னதானம்    செய்வார்.    அந்த   வரிசையில்    சென்றால்
> யாரும்     தடுத்து  நிறுத்த  மாட்டார்கள்.   அங்கு  அவரே   நேரில்  வந்து
> நின்று   கவனிப்பார்.   அப்பொழுது   பார்க்க  முடியும்.’
>
> பராசர    பட்டர்     தமது    உடன்வந்தவர்களை    ஊருக்கு  வெளியிலேயே
> இருக்கச்  சொல்லிவிட்டுத்    தாம்  மட்டும்     ஒரு  தடுக்கு  இலையைக்
> கையில்   சுருட்டிக்  கொண்டு    பிக்ஷைக்கான    வரிசையில்   பொறுமையாய்ச்
> சென்று  கொண்டிருந்தார்.     மாதவ   வேதாந்தியை    வரிசை  நெருங்கியதும்
> பட்டர்     வரிசையை  விட்டுப்  பிரிந்து   நேரே    மாதவ  வேதாந்தியை  நோக்கிப்
> போனார்.     ஸ்வாமி!   வரிசை  அங்கே  அங்கே  என்றார்கள்.    மாதவ  வேதாந்தி
> கிட்ட  வந்தவரிடம்    ‘கா   பிக்ஷா?’    என்று  கேட்டார்.     பட்டரோ
> ‘தர்க்க   பிக்ஷா’  என்று  பதில்  சொன்னார்.      ஒருகணம்     துணுக்குற்ற
> மாதவ  வேதாந்தி    கூர்ந்து   நோக்கி    ‘நீவிர்    பராசர   பட்டரோ?’   என்று
> கேட்டார்.    ஆம்  என்றதும்     ஆஸனங்கள்  இடப்பட்டன.   வாதம்
> வெகுநாள்  தொடர்ந்தது.    மாதவ  வேதாந்தி    நஞ்சீயராய்   ஆவதற்கான
> மனநிலையை  அடைந்தார்.    பராசர   பட்டரோ    ‘அவசரப்  படவேண்டாம்.
> பொறுமையாக    உமது  அனைத்து     ஐயங்களையும்,    பழைய  வாஸனைகளையும்
> அகற்றிப்  பின்   முடிவெடுப்பீர்’   என்று
> கூறித்   திரும்பினர்  திருவரங்கம்.
>
>  பராசர   பட்டருக்கு    ஒரு  பழக்கம்.     தாம்   எங்கு   வெளியூர்
> சென்றாலும்     திருவரங்கம்    திரும்பியதும்
> முதலில்     ஸ்ரீரங்கநாதன்    சந்நிதி   சென்று      மகன்   தந்தையிடம்
> விவரிக்கும்   பாவனையில்     தாம்  சென்ற  செய்தி,    நடந்த  வ்ருத்தாந்தங்கள்
> ஒன்றுவிடாமல்       சொல்லிக்  களிப்புறுவார்.    அது    போலவே  இப்பொழுதும்
> உள்ளம்  களிநடம்   பொங்கச்    சென்று     புகும்  போது
> அர்ச்சக  ஆவேசத்தில்     அருளரங்கன்     அருளப்பாடு   ஆயிற்று.   ‘
> மேல்நாட்டில்  நீர்    வேதாந்தியை    வென்றவிதம்   எங்ஙனே’’
> என்று.       மகனை  விட   தந்தைக்கு   suspense    தாங்கவில்லை    போலும்.
>
> (ஸ்ரீரங்கத்தில்      வாழ்ந்த  காலத்தில்    எத்தனை   நாள்     பள்ளிக்கூடம்
> விட்டதும்    கோவில்  வழியாக   உள்ளே  புகுந்து    மணல்வெளி   தாண்டி
> வரும்போதெல்லாம்     எங்கள்  கதைகளைக்  கூறியபடியே   வந்திருக்கிறோம்.
> ஆதித்தாய்தந்தையராய்   எத்தனை    எத்தனை   உயிரினங்களின்     தோன்றி  வளர்ந்த
> கதைகளைக்  கேட்டவண்ணம்    இருக்கின்றனர்     அம்மாவும்  அப்பாவும்.
> என்ன   தீவினை     புரிந்தோமோ    நம்மை   வீட்டை  விட்டுத்  துரத்தி
> அந்தக்   கிழங்கள்  அடிக்கும்    கொட்டம் :--((((  )
>
> பராசர  பட்டர்,     ‘நாயன்    தே!
> திருநெடுந்தாண்டகத்தால்     தேவரீர்  ஆக்ஞை   நிறைவேறியது ‘   என்று
> சொல்லி    திருநெடுந்தாண்டகத்தின்    அர்த்த   விசேஷங்களைப்    ‘பெற்றோர்’
> முன்பே    சொல்லிக்காட்டினார்.     தாயும்  தந்தையும்    தனயருமாய்,     அவர்
> தயவால்     பின்வந்த      மகவுகளாய்     நாமும்     கூடிக்களிக்க
> இன்றளவும்        பகல்பத்து   தொடங்குவதற்கு   முந்தைய   நாள்    அமாவாஸ்யை
> ராத்திரி    ‘திருநெடுந்தாண்டகம்’   என்று     அந்தத்  திருவோலக்கம்
> கொண்டாடப்பட்டு  வருகிறது.
>
> பராசர  பட்டருக்குப்   பிடித்த    சாஸ்திரமே    இந்த
> திருநெடுந்தாண்டகம்.      திருமங்கை  மன்னனின்    இந்தத்   தாண்டகம்    30
> கொண்டே     மேல்நாட்டு    அத்வைத  வேதாந்தியை   வென்றார்   என்றால்     அந்த
> முப்பதிலும்      ‘மைவண்ண   நறுங்குஞ்சி’   என்று  தொடங்கும்     பாடல்
> பட்டருக்கு   உயிர்.     அவர்     எந்நேரம்  கேட்டாலும்     அதன்  அர்த்த
> பிரபாவத்தில்   ஆழ்ந்து   பரக்க  உபந்யஸிக்கத்   தொடங்கிவிடுவார்
> என்கிறது    குருபரம்பரா  பிரபாவம்.       அத்தனையையும்     பரக்க
> விளக்கி    எழுதும்    உத்வேகம்    எழுகிறது.    ஆயினும்    நமக்கு   அதிகாரம்
> கொடுக்கப்பட்டிருக்கிறதா    என்ற   அச்சம்      பின்வாங்குகிறது.
> ‘இவ்வண்ணத்து   இவர்நிலைமை  கண்டும்  தோழீ!   நம்மை   நாம்     ஓர்பொருட்டாய்
> எண்ணினோமே.’
>
> “மைவண்ண    நறுங்குஞ்சிக்   குழல்பின்    தாழ
> மகரம்சேர்   குழையிருபா   டிலங்கி  யாட
> எய்வண்ண   வெஞ்சிலையே  துணையா   இங்கே
> இருவராய்  வந்தாரென்  முன்னே  நின்றார்
> கைவண்ணம்  தாமரைவாய்  கமலம்  போலும்
> கண்ணிணையும்  மரவிந்த  மடியு  மஃதே
> அவ்வன்ணத்  தவர்நிலைமை கண்டும்  தோழீ!
> அவரைநாம்  தேவரென்  றஞ்சி  னோமே.”   (21)

V, Dhivakar

unread,
Dec 15, 2009, 5:30:34 AM12/15/09
to mint...@googlegroups.com
பராசர  பட்டர்    மேல்நாட்டிற்குப்  பயணமானார்.
 
ஐயா ரங்கனாரே.. மேலை நாடா, மேற்கு நாடா.. மேல்நாடென்றால் பொருள் வேறாகாதோ..
 
கேட்பது தவறிருப்பின் மன்னித்தருளுங்கள்.. உங்களது அருமையான காவிய நடை.. திருநெடுந்தாண்டகம் போல சுகம்..
 
தி

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Dec 15, 2009, 5:46:47 AM12/15/09
to mint...@googlegroups.com
அம்மாவும்  அப்பாவும்.    என்ன   தீவினை     புரிந்தோமோ    நம்மை   வீட்டை  விட்டுத்  துரத்தி    அந்தக்   கிழங்கள்  அடிக்கும்    கொட்டம் :--((((  )  
 
 
அடடா என்னமாய்  அனுபவிக்கிறீர்
 
எங்களையும் ஆழத்தே  அழைத்துச் சென்று
 
ஆழங்காணப்படுமாற் போலச் செய்யும்  உம் வித்தையே
எமக்கு மிகவும் சந்துஷ்டியை  அளிக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
15-12-09 அன்று, V, Dhivakar <venkdh...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

srirangammohanarangan v

unread,
Dec 15, 2009, 5:52:48 AM12/15/09
to mint...@googlegroups.com
On 12/15/09, V, Dhivakar <venkdh...@gmail.com> wrote:
பராசர  பட்டர்    மேல்நாட்டிற்குப்  பயணமானார்.
 
ஐயா ரங்கனாரே.. மேலை நாடா, மேற்கு நாடா.. மேல்நாடென்றால் பொருள் வேறாகாதோ..
 
கேட்பது தவறிருப்பின் மன்னித்தருளுங்கள்.. உங்களது அருமையான காவிய நடை.. திருநெடுந்தாண்டகம் போல சுகம்..
 
தி
 
திவாகர்  சார்!    மேல்நாடு   என்பது   மைசூர்  பிராந்தியங்களைக்  குறிப்பதாக    சம்ப்ரதாய   க்ரந்தங்களில்  பயன்படுத்துகிறார்கள்.     நீங்கள்  ஐயப்படும்  பரமபதம்  என்பது  திருநாடு   என்ற  சொல்லால்   குறிக்கப்படுகிறது.     சமயத்தில்   மேல்வீடு   என்றும்  குறிக்கிறார்கள்.    இன்றும்  மேல்கோட்   என்றுதானே    பெயர்  வழங்கி  வருகிறது.     நீங்கள்  கேட்டவுடன்    எதற்கும்  மீண்டும்    ஸ்ரீ உ வே  பிரதிவாதி   பயங்கரம்  அண்ணங்கராச்சாரியார்   ஸ்வாமி    முதலியோரின்  பயன்பாட்டை  ஊர்ஜிதம்  செய்துகொண்டுதான்     பதில்  எழுதுகிறேன்.    தாங்கள்  அக்கறையுடன்  படிப்பது    மிக்க  மகிழ்ச்சியைத்  தருகிறது. 
 
பி கு  --   தயவுசெய்து   ‘மன்னித்தருளுங்கள்’   என்ற   வார்த்தைகளைப்  பயன்படுத்த  வேண்டா.    மன்னித்தருளுங்கள்    என்று  கேட்கப்பட      நான்     உரியவனோ,  பெரியவனோ   இல்லையே  :--))) 

 

N. Kannan

unread,
Dec 15, 2009, 6:12:18 AM12/15/09
to mint...@googlegroups.com
ஏதோ மின்தமிழ் செய்த புண்ணியம் தொழுகுலத்தோர் ஒருவர் இங்கு வந்து
விசேஷார்த்தங்கள் சொல்லப்புறப்பட்டு இருப்பது. இவ்வாய்ப்பையும் யாம்
தவறவிட்டோமெனில் சென்மம் கடைத்தேறா!

ரங்கா! இல்லை, வேங்கடவா! நம்மாளு கனவிலே கொஞ்சம் பயமுறுத்தி ”மைவண்ண
நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ“ வியாக்கியானத்தை ஆரம்பிக்கச் சொல்லவும்.
அர்ச்சகமுகனே எழுந்தருள மின் தமிழ் அர்ச்சகர் யாரோ?

க.>

2009/12/15 devoo <rde...@gmail.com>:

seenu

unread,
Dec 15, 2009, 2:40:15 PM12/15/09
to மின்தமிழ்
Vanakkam sir,
mudhal azhwargal, thirumazhisai
piran,nammazhwar,kulasekarara perumal,periyazhwar,Andal is the sixth
azhwar so she is anjukudi endrum undu.
ARNGAN ARULVANAGA.
anbudan,
srinivasan.

On Dec 1, 8:44 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> என்ன  இது  இந்த   ஷைலஜா   இப்படி  நம்மை  வேலை  வாங்குகிறார் !!      இந்த
> நியாயத்தைக்  கேட்கறத்துக்கு   யாருமே  இல்லையா?
>
> அது    மதுர  கவி  ஆழ்வாரையும்,   ஆண்டாளையும்   விசேஷமாக   ஆக்கி   மற்ற
> பதின்மர்   என்பது   ஒரு  கணக்கு.    கடைக்குட்டி  என்று   கலியனும்,     ஒரு
> மகள்  தன்னை  உடையோம்  என்று   ஆழ்வார்களுக்குச்  சந்ததி    என்று
> அக்காவும்    சொல்லப்படுவதுண்டு.
>
> ‘அஞ்சு  குடிக்கு  ஒரு  சந்ததியாய்’   என்பது     ஸ்ரீஸ்ரீமணவாள  மாமுனிகள்
> அவர்தம்   உபதேச   ரத்தின  மாலை   வாக்கு.
>
> அது  என்ன  அஞ்சு  குடி?      கோபஸ்த்ரீகளுக்கு  பஞ்ச  லக்ஷம்   ஸ்த்ரீ
> ஜனங்கள்   என்று  வ்யபதேசம்   என்று   திருப்பாவை  வ்யாக்யானத்தில்
> காண்கிறது.   பஞ்ச  லக்ஷம்  ஸ்த்ரீகளான    கோப  ஸ்த்ரீகளுக்கு    ஸந்ததி
> போன்று  அவர்களின்   பாவ  ப்ரகர்ஷத்தை    ஆண்டாள்    தான்
> ஏறிட்டுக்கொண்டாள்    என்பது  பற்றி    அஞ்சு  குடிக்கு  ஒரு  சந்ததியாய்  -
> அஞ்சு  குடி  அஞ்சு   லக்ஷம்  குடி   என்பதற்கு   செய்யுள்  பிரயோகம்.
> நாம்   வியவகாரத்தில்    5  ரூபாய்   என்று   5  லக்ஷத்தையும்,   5l  5k
> என்றும்    சொல்லாடுவதில்லையா?     எதுதான்  எப்ப  இல்லாம
> இருந்திருக்கிறது?    எல்லாம்  புனரபி  புனரபி.
>
> அது  மட்டுமில்லை.   அஞ்சு  குடி  என்பதில்   ஒரு  விசேஷம்.     அஞ்சு  குடி
> என்றால்   அஞ்சிய  குடி,  அஞ்சும்  குடி,   அஞ்சப்போகும்  குடி   என்று
> வினைத்தொகையாய்     முக்காலத்திலும்   அஞ்சுகின்ற  குடி  என்று
> பெரியாழ்வாரைக்   குறிக்கும்.    அஞ்சுதல்   என்பது  அஸ்தானே  பய
> சங்க்யையாய்    மங்களாசாசனத்தைக்  குறிக்கும்.
>
> என்ன  அது?     அஸ்தானே  பய  சங்க்யை?     மங்களா  சாசனம்?     சொல்கிறேன்.
>
> ஸ்தானம்   என்றால்  இடம்.   ஸ்தானே  --   ஏழாம்  வேற்றுமை   உருபு  ஏறி
> ‘இடத்தில்’  என்று  பொருள்.    அஸ்தானே   என்றால்  இடமல்லாத    இடத்தில்.
> பய  ஸங்க்யை  என்றால்     அச்சத்திற்கு  இடம்  இருப்பதாக  எண்ணுவது.     எதைக்
> குறித்து   நாம்   அதற்கு  ஏதாவது   உற்பாதம்  ஏற்பட்டு  விடுமோ  என்று
> அஞ்சத்   தேவையே  இல்லையோ    அதைக்குறித்து    அத்தகைய  அச்சம்  ஏற்பட்டால்
> அப்பொழுது    அங்கு    பயம்  தேவையில்லாத  இடத்தில்    ஏற்பட்ட   பய
> உணர்ச்சி   என்று  சொல்லலாம்.     நடுக்கடலில்
> கப்பலுக்கு  ஏதாவது  ஆகிவிடுமோ   அலைகளில்   என்ற   அச்சம்    இடம்
> இருக்கும்   அச்சம்.    ஆனால்   அங்கு    எழுந்து  நிற்கும்  மலை
> ஒன்றிற்கு    ஏதாவது  ஆகிவிடுமோ  என்று  அஞ்சினால்   அது     இடமற்ற  இடத்தில்
> அச்சம்.
>
> அதைப்போல    அஞ்சத்  தேவையில்லாத   இடமான    பரம்பொருளுக்கு   என்  வருகிறதோ
> என்று     மடிபிடிக்கும்    ஸ்வபாவர்    பெரியாழ்வார்.   அவனுக்கு
> எதுவும்      நேர்ந்துவிடக்கூடாது,  எந்தக்  கண்ணேறும்  பட்டுவிடக்  கூடாது
> என்று  அவனுக்கு  மங்களத்தை     ஆசாஸிப்பவர்(பிரார்த்திப்பவர்)    பட்டர்
> பிரான்.      அத்தகைய  மங்களா  சாஸனக்  குடிக்குச்   சந்ததியானவள்     என்று
> அஞ்சு  குடிக்கு   ஓர்  சந்ததியாய்     என்பதற்கு  அர்த்தம்.
>
> (வர  வர  ரொம்ப  வாயாடுகிறேனோ)
>
> On 12/1/09, shylaja <shylaj...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > வேடுபறி மற்றும் கலியனைப்பற்றிய  சீரார்ந்த தகவல்களை மோகனரங்கன்  வந்து
> > கூறும்படி  கேட்டுக்கொள்கிறேன்!
>
> > 2009/12/1 shylaja <shylaj...@gmail.com>
>
> >> 2009/12/1 N. Kannan <navannak...@gmail.com>
>
> >>> 2009/12/1 shylaja <shylaj...@gmail.com>:


> >>> > பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டி!
>

> >>> பன்னிருவரில் கடைக்குட்டி ஆண்டாள் இல்லையோ?
>
> >>> க.><<<>.
>
> >> உங்க ஆண்டாள்   அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி! அஷ்டே  க!
>
> >>> --
> >>> ஷைலஜா- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
Message has been deleted
0 new messages