பாரெல்லாம் புகழ் பரவும் ஹிந்துமதம்

39 views
Skip to first unread message

srirangammohanarangan v

unread,
Nov 21, 2009, 2:47:28 PM11/21/09
to minT...@googlegroups.com
ஒரு  நூல்  கண்ணில்  பட்டது.    A  tribute  to  Hinduism   என்பது    நூலின்  தலைப்பு.    எழுதியவர்,   தொகுத்தவர்    Sushama  Londhe   என்ற  இந்திய   அமெரிக்கர்.   Pragun  Publication   New  Delhi  2008   பதிப்பு.    ரூ 895  போட்டிருந்தார்கள்.   549  சொச்சம்   பக்கங்கள்  கொண்ட  நூல்   என்னை   மிகவும்  கவர்ந்தது.   காரணம்    ஹிந்து  மதத்தைப்  ப்ற்றி   உலகில்   பல  காலங்களில்   பல  நாட்டு  அறிஞர்கள்   என்னென்ன   கூறியிருக்கின்றனர்  என்பதை   மிக  விரிவாகத்   தொகுத்துத்   தந்திருக்கின்றார்   சுஷமா.    ஏற்கனவே    சுவாமி  ததாகதாநந்தா   எழுதிய   நூலான    A  Journey   of  Upanishads to  the  West  என்ற   நூலும்  உபநிஷதங்கள்   மேற்கிற்குப்  போன  கதையையும்,   ஹிந்து  மதத்தின்  பெருமைகளை   மற்றவர்  விதந்தோதியதையும்    கூறும்.
 
சுஷமா    Hindu  Wisdom  என்றே    ஒரு  வலைத்  தளம்  வைத்திருக்கின்றார்  போலும்.
 
 
இப்பொழுதெல்லாம்   வலைத்  தளம்   நூலாக  ஆவது  சகஜமாகப்  போய்விட்டது.
அதைப்  படித்தவுடன்  எனக்கு    ஒரு  நப்பாசை    ஹிந்துவைப்  பற்றி    உலகத்தில்   யார்  யார்  என்னென்ன   பெருமையான    வாசகங்களைக்   கூறியிருக்கின்றனர்    என்று    சம்பாதிப்   பார்வையாகப்   பார்க்க  வேண்டும்  என்று.     ஏதோ அவ்வப்பொழுது    நான்  படித்த,  படிக்கும்,   கேள்விப்படும்    திசைகளிலிருந்து     ஹிந்துவின்   பெருமையை     நினைத்துப்  பார்க்கிறேன்.   நீங்களும்    கொஞ்சம்  ஒத்துழையுங்கள்.     நம்மை  நாமே   நிறையத்   திட்டிக்கொண்டாய்விட்டது.    For  a  change   நமது   பெருமை  என்ன  என்பதையும்     பார்ப்போமே!!
 
முதலில்   என்  கண்ணில்  பட்டது     ரிபப்லிகன்   சைனாவைச்   சேர்ந்த  தத்துவ  அறிஞரான   ஹூ  ஷி (Hu  Shih)   என்பவரது    அபிப்ராயம்.    இந்தியர்களின்    அமைதிக் காதலை   வியந்து  எழுதுகிறார்.  (பக் 51) 
 
India   conquered  and   dominated   China   culturally   for   20  centuries  without  ever  having   to  send  a  single  soldier  across  her  border.
 
Never  before  had  China  seen  a  religion   so  rich  in  imagery,  so  beautiful  and  captivating  in  ritualism  and  so  bold  in  cosmological   and  metaphysical  speculations.  Like  a  poor  beggar   suddenly  halting  before  a  magnificient  storehouse  of  precious  stones  of  dazzling  brilliancy  and  splendour,   China  was  overwhelmed,  baffled  and  overjoyed.  She  begged  and  borrowed   freely  from  this  munificent  giver.  The  first   borrowings  were   chiefly  from   the   religious  life  of  India,   in  which   China's  indebtedness  to  India  can   never   be  fully  told. 
 
ஹூ ஷி (1891 --1962)    மக்களின்  பிரதேச   வழக்கு  மொழியில்   எழுதுவதை  ஊக்கம்  கொடுத்துப்  பரப்பினாராம்.     அமெரிக்காவிற்குத்  தூதராகவும் (1938--42)   பீகிங்   பல்கலைக்  கழகத்திற்கு    சான்ஸலராகவும்(1946--48)   இருந்திருக்கிறார்.     
 

N. Kannan

unread,
Nov 21, 2009, 9:31:35 PM11/21/09
to mint...@googlegroups.com
ரங்கன்:

மிக நல்ல இழை. இதுதான் நான் விக்கியில் காண விரும்புவது. இந்தச் சீனர்
ஆங்கிலத்தில் எழுதினாரா? இல்லை சீனத்தில் எழுதி ஆங்கிலத்திற்கு வந்ததா?
என்று தெரியவில்லை. மூலம் சீனமெனில், மூலம், மொழி பெயர்ப்பு இரண்டையும்
நாம் மரபு விக்கியில் சேர்க்க வேண்டும்.

இது பிற ஐரோப்பிய மொழிகளுக்கும், ஆசிய மொழிகளுக்கும் (மத்திய கிழக்கையும்
சேர்த்து) பொருந்தும்.

உங்கள் தலைப்பில் `ஹிந்து மதம்` என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

`மதமென்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்` எனும் வள்ளலார் சொல்லும் நம்
திருமறையாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

சநாதன தர்மம் என்பது `மதத்திற்கும் மேல்`. வானமே கூரை. பெட்டிக்குள்
அடைக்க முடியாது.

புதிய சொல்லாட்சி ஏதேனும்?

கண்ணன்

2009/11/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Nov 21, 2009, 9:47:51 PM11/21/09
to mint...@googlegroups.com
வள்ளலார் மதமென்னும் பேய் பிடியாதிருக்கவேண்டும் என்று  கூறினாரே தவிற

மதமே  வேண்டாம் என்று கூறவில்லை

உண்மையில்  மதங்கள் இருக்கின்றன

ஆனால்   மதங்களே  இல்லாது போல் ஒரு மாயத்தோற்றத்தை நாம்  உருவாக்கிக்கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது

முதலில் இருப்பதை ஒப்ப்க்க்கொள்ளும் மன்னப்பான்மை வந்தால்தான்

நாம் கடைப்பிடிக்கும் அந்த மதத்தை  அடுத்த  மதத்துக்காரர்கள் புண்படாதபடி
அவர்கள் மதத்தையும் மதித்து வாழ நாம்  கற்றுக் கொள்வோம்

மதங்கள் இருக்கின்றன,ஜாதிகள் இருக்கின்றன

என்பதே நிதர்ஸனமான உண்மை



சநாதன தர்மம் என்பது `மதத்திற்கும் மேல்`. வானமே கூரை. பெட்டிக்குள்
அடைக்க முடியாது.

புதிய சொல்லாட்சி ஏதேனும்?

"சுதர்மம்"

அன்புடன்
தமிழ்த்தேனீ











22-11-09 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதினார்:

srirangammohanarangan v

unread,
Nov 22, 2009, 2:33:10 AM11/22/09
to mint...@googlegroups.com
ஹிந்துமதம்   என்றே    பெயரே    சிறந்தது.    ஸநாதன  தர்மம்   என்றெல்லாம்    சொன்னால்    ஹிந்துப்பண்பாட்டின்     விஸ்தீர்ணத்துக்குச்  சொந்தமானவர்களில்   சிலரை  வெளியேற்றி விடுகிறது.  ஹிந்துவாகிய    நானேதான்  ஒரு காலத்தில்    ஸநாதனியாக  இருக்கிறேன்,   ஒரு  காலத்தில்   சைவனாக  இருக்கிறேன்,    ஒரு  காலத்தில்    வைஷ்ணவனாக  இருக்கிறேன்,     ஒரு  காலத்தில்   சாக்தனாகவோ,     சமணனாகவோ,   பௌத்தனாகவோ    ஆகியிருக்கிறேன்.    ஒரு  காலத்தில்    நாஸ்திகனாகக்கூட   ஆகியிருக்கிறேன்.   ஆனால்  ஹிந்துப்பண்பாட்டில்  உருவாகியவன்    என்ற  என்    அடிப்படை  இயல்பில்    கெடாமல்தான்    என்   ஆர்வங்களும்,  பயணங்களும்     காலகதியில் இருந்துகொண்டிருக்கின்றன    வரலாறு  நெடுக.   
 
கர்ம   விளைவுகளைப்  பற்றிய    கொள்கையையும்,   மறுபிறப்பு,  புண்ணியம்  பாபம்   என்ற  கொள்கைகளும்,   உலகப்  படைப்பில்   நாம்  ஒரு  அங்கம்,    நமக்காகப்   படைக்கப்பட்டதே    உலகு  அனைத்தும்    என்று  நினைப்பது  தவறு    என்ற  தெளிவும்,    அனைத்து   உயிர்க்கும்    என்  எண்ணத்தால்,   சொல்லால்,  செயலால்   தீங்கு   கருதாமல்  இருப்பதே    நனி  சிறந்த  தவம்   என்ற    அமைதியும்,  சரியான    எண்ணங்கள்,   சரியான    பேச்சு,    சரியான   அனுஷ்டானம்,   சரியான   தியானம்    என்பதை  நோக்கிய   என்   தேட்டமும்    என்  சம்பிரதாயம்   எதுவாயினும்    என்னை ஹிந்துவாக   அடையாளம்  காட்டுகின்றன.   
 
என்னுடைய    பெருமையை    நான்  செவிமடுக்கும்  நேரமிது.  அவ்வளவே.    விரும்பியவர்கள்    சேர்ந்துகொள்ளலாம்.   
 
உஷ்!!    சத்தம்  போடாமல் இருங்கள்.     காலத்தின்     கடைக்கோடியிலிருந்து,    தேசத்தின்   ஆழங்களிலிருந்து,      நுண்ணிய   அதிர்வுகள்     வருகின்ற    நேரம்.  
silence  please !! 

 

Geetha Sambasivam

unread,
Nov 22, 2009, 2:35:09 AM11/22/09
to mint...@googlegroups.com
உஷ்!!    சத்தம்  போடாமல் இருங்கள்.     காலத்தின்     கடைக்கோடியிலிருந்து,    தேசத்தின்   ஆழங்களிலிருந்து,      நுண்ணிய   அதிர்வுகள்     வருகின்ற    நேரம்.  
silence  please !!  //

Tthamizth Tthenee

unread,
Nov 22, 2009, 2:57:40 AM11/22/09
to mint...@googlegroups.com
நுண்ணிய  அதிர்வுகள்  இந்த முறை  யாரை பண்படுத்தப் போகிறதோ தெரியவில்லை

உஸ்  சத்தம் போடாதீர்கள்


அன்புடன்
தமிழ்த்தேனீ

22-11-09 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள

தமிழ்த்தேனீ

srirangammohanarangan v

unread,
Nov 22, 2009, 5:34:54 AM11/22/09
to mint...@googlegroups.com
ஃப்ரான்ஸ்வா  மாரி  அரூஏ   வோல்தேர் (1694--1774)   என்பவரை  Voltaire  என்று   நாம்  அறிவோம்.    பிரான்ஸு  தேசத்தின்   தத்துவ  அறிஞர்களில்  ஒருவர்.   நாஸ்திகர்.   சர்ச்சைக்  கண்டால்   கண்டனம்தான்.    அவர்  பாடும்   ஹிந்துவின்  புகழ்   இருக்கிறதே   அலாதி!    ’துணிச்சலிலும்    கயமையிலும்   நாம்   அவர்களை   மிஞ்சி  எங்கேயோ  இருக்கிறோம்.  ஆனால்   ஞானத்தில்     அவர்களுக்குப்  பக்கத்தில்  நிற்கவும்  லாயக்கில்லை.    பாரதத்துக்குப்   போய்   ஐரோப்பிய   நாடுகள்   தங்களைத்  தாங்களே   பணத்திற்காகக்  கொன்று  குவிதததுதான்   மிச்சம்.  ஆனால்   கிரேக்கர்களோ    முற்காலத்தில்   அந்த  நாட்டுக்குப்  போய்தான்   தங்கள   அறிவை  ஈட்டிக்கொண்டார்கள்’    என்ற   பொருள்படக்  கூறுகிறார். 
 
 
‘We  have  shown   how  much  we  (Europeans)  surpass  the  Indians   in  courage   and  wickedness,  and  how  inferior   to  them   we  are   in  wisdom.   Our  European  nations   have  mutually   destroyed  themselves   in  this  land   where  we   only  go  in  search  of  money,  while   the  first  Greeks   traveled  to  the   same  land  only  to  instruct  themselves'  
 
விட்டாரா   வோல்டேர்?    ஏதோ  பிறவியில்  கங்கா  நதியில்  பிறந்திருப்பார்   போல.     கங்கா   என்று  உருகுகிறார். 
 
‘I  am  convinced   that  everything   has  come  down  to  us  from  the   banks  of   the  Ganges,-- astronomy,  astrology,  metempsychosis, etc.'
 
'It  is   very  important  to  note   that  some  2500  years  ago  at  the  least  Pythagoras   went  from  Samos   to  the  Ganges  to  learn  geometry...But  he  would  certainly  not  have  undertaken   such  a  strange   journey  had  the  reputation  of  the  Brahmins'  science  not  been  long  established  in  Europe..' 
 
இந்த  வால்டேருக்கு    பித்து  முத்திவிட்டது!    இங்கே  பாருங்கள் --
 
‘Everything  without  exception   is  of  Indian  origin'   ' Whether   directly  or  indirectly,  all  nations  are  originally  nothing   but   Indian  colonies.' 
 
பாரதம்    அதன்  ஞானத்திற்காக    அணுகப்படுவதை  விடுத்து   அதன்   செல்வங்களுக்காகச்   சூறையாடப்படுவதைக்   கண்டு  வெறுத்து    வோல்தேர்   விளம்புவது   ஈது -- 
 
If  the  Indians  had  remained  unknown   to  the  Tartars  and  to  us,  they  would  have  been  the  happiest   people  in  the  world.  
 
’ஏண்டா   தத்தாரியா  சுத்தற?’     என்பது    இந்த   Tartar  லிருந்து  வந்ததுதானோ? 
(Ref:Sushama  Londhe,  pp 6--7) 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

Innamburan Innamburan

unread,
Nov 22, 2009, 6:50:36 AM11/22/09
to mint...@googlegroups.com
ஐயா தேனியாரே!

உஷ்!  வள்ளலார் "மதமே  வேண்டாம் என்று கூறவில்லை"

ஆதாரம் கூறவும்.

இன்னம்பூரான்

2009/11/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>



--
இன்னம்பூரான்

Tthamizth Tthenee

unread,
Nov 22, 2009, 7:26:35 AM11/22/09
to mint...@googlegroups.com
’ஏண்டா   தத்தாரியா  சுத்தற?’     என்பது    இந்த   Tartar  லிருந்து  வந்ததுதானோ? 
(Ref:Sushama  Londhe,  pp 6--7) 
 
 
ஆஹா  இதைவிட அருமையாய் சொற்களைக் கண்டுபிடிக்க  யாரால் இயலும்
 
நல்ல  வார்த்தையடி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


22-11-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

karthi

unread,
Nov 22, 2009, 8:44:32 AM11/22/09
to mint...@googlegroups.com
ரங்கன்,
 
உற்சாகமான இழை.
 
பொதுவாக இந்து சமயத்தையும் இந்தியப் பண்புகளையும் போற்றியவர்கள்
பலர் இருக்கிறார்கள் அல்லவா? அவர்களில் சிலரை முடிந்த வரை இங்கு
நினைவு கூர்ந்து எழுதுவது நல்லது.
 
மாக்ஸ் முல்லர் நிறைய எழுதியுள்ளார். எனக்கு அந்த செய்தி தெரியுமே
தவிர விவரங்கள் தெரியாது. அவரைப் பற்றியும் ஏதாவது எழுதுங்கள்.
 
ரெ.கா.

srirangammohanarangan v

unread,
Nov 22, 2009, 12:48:07 PM11/22/09
to mint...@googlegroups.com
தேரோட்டி   சொன்னதுதான்    கீதை.    கார்   ஓட்டிப்போவோரின்  நினைவிலும்,      உட்கார்ந்து  போவோரின்  நினைவிலும்     ஒரு  பெயர்  நிச்சயம்  தெரிந்திருக்கும்.   அவர்தான்    ஹென்றி  ஃபோர்ட்.    Ford   Motor  நிறுவனத்தின்   ஸ்தாபகர்.    அவருடைய     பேரன்    ஆல்ப்ரட்   பி ஃபோர்ட்.   அவருடைய   ஹிந்துத்   திருநாமம்   என்ன  தெரியுமா?     என்ன  முழிக்கிறீர்கள்?     போர்ட்  எங்கே   ஹிந்துமதம்  எங்கே   என்று  பார்க்கிறீர்களா?       ஆல்பிரட்    மிக்க  ஈடுபாடு  கொண்ட    ஒரு   ஹிந்து.     அவருடைய  ஹிந்துத்  திருநாமம்   அம்பரீஷ்   தாஸ்.    கல்லூரி    நாட்களில்    ஹிந்துமதம்  பற்றிப்  படித்தார்.   ஈர்க்கப்பட்டார்.     இந்தியா    வந்தார்.    ஹிந்துப்பெண்ணாகப்   பார்த்து     ஜெய்பூரில்    ஷர்மிளா   பட்டாசார்யா    என்ற    டாக்டரை  மணந்தார்.    1975ல்   இஸ்கானில்    சேர்ந்தார்.     ஸ்ரீல  பிரபுபாதாவோடு   நெருக்கம்.  ஹவாயில்  முதல்  ஹிந்துக்  கோவில்  கட்டுவதற்குக்  காரணமாய்  இருந்தார்.     போர்ட்   குடும்பத்து  வாரிசு     மாஸ்கோ    சென்று     வேதப்  பண்பாட்டு   மையம்   ஒன்று  ஆரம்பிக்க    வாதாடியது.     மாஸ்கோவில்   பேசிய  போது   அம்பரீஷ்   தாஸ்    ‘For  me  the  most  important  thing  is  to  spread   the  Hindu  knowledge   about  the  soul.  This  is  more  important   than  any  other  knowledge   and  is  my  main  priority'.  
 
ரஷ்யாவில்   90,000   ஹிந்துக்கள்   இஸ்கான்  கணக்குப்படி.    அவர்களின்  பிரதிநிதிகளைச்  சந்தித்துப்  பேசிய    போர்ட்   கூறியது:  My  main  activity  is  connected  with   propagandizing  Indian  culture   throughout  the  world.  (நன்றி   Sushma  Londhe  pp 472)    

 

Innamburan Innamburan

unread,
Nov 22, 2009, 7:36:26 PM11/22/09
to mint...@googlegroups.com


Frontline: Volume 22 - Issue 20, Sep. 24 - Oct. 07, 2005

The interview with Prof. Fr. Francis X. Clooney, S.J. ("I am evangelising Christians", September 23), is one of the best reads that I have had for many years. It brings out the human potential of the highest order lucidly. I followed up by reading more about Clooney and can unhesitatingly state that we have one of the greatest of Acharyas in him in modern times. A rare individual, an eminent scholar and spiritual seeker beyond compare, he shows the path towards sanity for us.

Soundararajan Srinivasa


2009/11/22 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Nov 25, 2009, 1:21:41 PM11/25/09
to mint...@googlegroups.com
லின்  யூடங்  (1895 -- 1976)  Lin Yutang  என்ற   சீன    அறிஞரைப்  பலர்  அறிந்திருப்பர்.   The  Wisdom   of  China  and  India  என்ற  நூலை   எழுதியவர்.    ஹிந்துக்கள்    இயற்கையான     அருள்  நெறி  வாய்ந்தவர்கள்  என்பது  அவர்  கருத்து.    கடவுளை  நேராகக்   கண்டு    அனுபவிப்பது   என்பதே   அவர்களுடைய  மதம்   என்று   கருதியவர். 
 
அவர்     இதிகாசங்களைப்  பற்றி  எழுதுகிறார். 
 
My  love   and  true  respect   for  India   was  born   when  I  first  read   the  Indian   epics,  the  Ramayana   and  the  Mahabharata  in  the  present   translation   in  my   college   days.   In  these  two  masterpieces we  are  brought closer  to  the  atmosphere,  ideals  and  customs   of  ancient   Hindu life   than  by   a  hundred   volumes   of  commentary   on  the  Upanishads,  and  through  them  Hindu  ideals,   as  well  as   Hindu   men  and  women,  become  real  to us.
 
பாரதத்தின்  மிகச்  சிறந்த    இலட்சிய    பெண்மையான   சீதா  தேவியைப்  பற்றிக்  கூறுமிடத்து    பரவசமாகிறார்   லின்  யூடங்.
 
The   creative  imagination   of  the  Hindus   has  conceived   no  loftier   and  holier   character  than  Sita;   the  literature of  the  world   has not  produced  a  higher   ideal   of  womanly  love,   womanly  truth   and  womanly  devotion.
 
 
Amaury de Riencourt (1918)   என்பவர்   பிரான்ஸில்  ஆர்லியன்ஸ்   என்ற  இடத்தில்  பிறந்தவர்.   பல  நூல்கள்  எழுதியுள்ளார்.-- The  American  Empire,  The  Soul  of  India.   ஹிந்துமதம்   பற்றி  அவருடைய  கருத்து    
 
The  boundless  riches  of  the  Hindu  faith,  its  universal  appeal,  its  tolerance,   the  profundity  of  Hindu   philosophy  and  its  enduring  roots  among  the   Indian   people  all  this   made India  a  poor   soil   for  West -- Christian   sowing. 
(Ref: Sushama  Londhe ) 
 
 

Innamburan Innamburan

unread,
Nov 25, 2009, 7:44:18 PM11/25/09
to mint...@googlegroups.com
லின் யூடங், ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்த்தில், படிக்க விண்ணப்பித்தார். அவரை நேர்முக சோதனை செய்த,ப்ரின்ஸ்டன் தலைவர், 'அப்பா! நீ சின்னப்பையனாக இருக்கிறாயே. இங்கு படிக்கும் பக்குவம்? ('Dear Boy! So young! looks immature to join the course.') என்றார். பதில்: 'ஒருவரின் பக்குவத்தை, வயது, முகம், மட்டிலேயே மதிப்பிடுவது பக்குவமல்ல.' (Sir, to judge one's maturity by the looks, is immature in itself.'). அட்மிஷன் கிடைத்தது என்ரு சொல்லவும் வேண்டுமா?
இன்னம்பூரான்

2009/11/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Nov 28, 2009, 1:33:32 PM11/28/09
to mint...@googlegroups.com
அமெரிக்க   விண் நிலை  ஆய்வாளர்,   விண்  வெளி   உயிரியல்  நிபுணர்,   ’விஞ்ஞானத்தை   விளக்கப்  போறேண்டி’    என்று    பொதுமக்களுக்குப்  பரப்புவதில்   வெற்றியடைந்தவர்,    மற்ற   கிரகங்களில்   உயிர்  இருக்கிறதா   என்ற   ஆய்வுகளை   ஊக்கியவர்---  யாரென்று  உங்களுக்கே  தெரிந்திருக்கும்.   DR  Carl  Sagan  (1934--1996)  
 
ஹிந்து  மதக்  கருத்துக்களால்   ஈர்க்கப்பட்டவர்.    கூறுகிறார் :
 
The  Hindu  religion   is  the  only   one  of  the   world's   great  faiths   dedicated   to  the   idea   that   the  Cosmos   itself  undergoes   an  immense,  indeed  an   infinite,   number  of  deaths   and  rebirths.  It  is  the  only  religion  in  which   the  time  scales  correspond,   to  those  of  modern   scientific  cosmology.  (Cosmos)
 
The  most   elegant  and  sublime   of  these  is  a  representation  of  the  creation  of  the  universe  at  the  beginning  of  each   cosmic  cycle,   a  motif   known  as  the   cosmic   dance  of  Lord Shiva.. 
 
இவருடைய    புகழ்  பெற்ற  நூல்கள்     Cosmos,   Broca's  Brain .
 

srirangammohanarangan v

unread,
Nov 28, 2009, 2:10:45 PM11/28/09
to mint...@googlegroups.com
பதினொன்றாம்   நூர்றாண்டு  கி பி.   ஸ்பெயின்  தேசத்து   ராஜாவுக்கு   ஒரு  நீதிபதி.  பெயர்    செயித்  அல்   அந்தலூஸி  Sa'Id   Al -- Andalusi  (1029 -- 1070)    அவர்   ஒரு  நூல்  எழுதியிருக்கிறார்.    அதற்குப்  பெயர்   Kitab   Tabaqat   al  -- Uman,   நாடுகளின்   விவஸ்தைகள்   பற்றிய   ஒரு  நூல்.  அதில்     இந்தியாவைப்  பற்றி   எழுதும்  போது  
கூறுகிறார்:
 
The  Indians  among  all   nations,  through  many  centuries   and  since  antiquity,   have  been   the  source  of  wisdom,  fairness  and   moderation.   They  are  creators   of  sublime  thoughts,   universal  apologues,   rare  inventions  and  remarkable   concepts. 
 
The   Indians,   known  to  all  nations  for  many   centuries  are  the  metal(essence)   of  wisdom,   the  source  of  fairness  and  objectivity.  They  are   people  of  sublime  pensiveness,  universal  apologues,   and  useful   and  rare   inventions. 
 
To  their  credit,  the  Indians  have  made  great  strides in  the  study  of  numbers  and  of  geometry.  They  have  acquired   immense   information   and   reached   the  zenith   in  their   knowledge  of  the  movements  of  the  stars (astronomy)   and   the  secrets  of  the   skies (astrology)   as  well  as  other   mathematical  studies.   After  all  that,   they  have  surpassed   all  the  other   peoples  in  their  knowledge  of  medical  science   and  the  strengths  of  various  drugs,  the  characteristics  of  compounds  and  the  peculiarities  of  substances(chemistry) 
* *
 
உபநிஷதங்களை    பாரஸீக   மொழியில்    ‘மிகப்  பெரிய   ரகசியம்’   என்ற  தலைப்பிட்டு(Sirr--i--Akbar)    மொழிபெயர்த்து   அதனால்    இரண்டு  ஆண்டுகளின்  பின்னர்   தலையை  இழந்த    இளவரசர்    யார்  என்று  உங்களுக்குத்  தெரியுமே!     ஷா  ஜஹானுக்குப்  பிடித்த    மகன்   ஸூஃபியான     தாரா  ஷிகோ. (1627--1658 கி பி)    பாரஸிக   மொழிபெயர்ப்பின்    முன்னுரையில்  கூறுகிறாராம்:-- 
 
After   gradual  research,   I  have  come  to  the  conclusion  that  long  before  all   heavenly  books,   God   had  revealed   to   the  Hindus,   through   the   Rishis  of   yore,   of  whom   Brahma   was  the  Chief,   His  four  books  of  knowledge,   the   Rig  Veda,   the   Yajur  Veda,   the  Sama  Veda   and   the  Atharva   Veda. 
 
(இந்த    இடுகைக்கும்  முன்  இடுகைக்கும்    Ref-- Sushama  Londhe)

Innamburan Innamburan

unread,
Nov 28, 2009, 6:38:58 PM11/28/09
to mint...@googlegroups.com
இப்படியெல்லாம் சொல்பவர்கள், ஆழ்ந்து, படித்து, உணர்ந்தவர்கள். தமிழ்நாட்டில், தற்காலம், அப்படிப்பட்டவர்களை காண்பது அரிது.


2009/11/29 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Nov 30, 2009, 12:57:41 PM11/30/09
to mint...@googlegroups.com
ராஜா  ராம்  மோகன்  ராய்   என்பவரைப்  பற்றி   19ஆம்  நூர்றாண்டு    இந்திய   சரித்திரத்தில்  படித்திருப்பீர்கள்.     ஆனால்    நான்   குறிப்பிடப்போவது    Dr   Raja  Ram  Mohan  Roy.     இவர்  டொரொண்டோ   பல்கலைக்  கழகத்தில்    ஆராய்ச்சி  விஞ்ஞானியாகச்  செயல்  புரிகிறார்.    இவருடைய  நூல்   Vedic  Physics:  Scientific  Origin   of  Hinduism   என்பது.    அதில்   இவர்  நம்  கவனத்தை    சில    நறுக்கான   கருத்துக்களால்     கவர்கிறார்.     எது  பக்தி  இழையில்   ஓரிடத்தில்     சொல்லியிருந்தேன்.  அதாவது,  ‘அறிவை  முற்றிலும்  உள்வாங்கியது  பக்தி   என்பதை  என்று  புரிந்துகொள்கிறோமோ    அன்று  நமக்குக்  கிழக்கு  வெளுத்தது  என்று  பொருள்’    என்ற   பொருள்பட.    சிலர்    அது  எப்படி  என்று     கேட்டார்கள்  என்று  நினைவு.     ஆனால்     இதோ  இந்த  விஞ்ஞானி      ஹிந்துமத    என்பதைப்  பற்றியே  என்ன  கூறுகிறார்    என்று   பாருங்கள்.    படித்துவிட்டு  நான்  அசந்து  போயிருக்கிறேன். 
 
The   Vedas    are    considered   eternal   and   logic   demands   that  an  eternal   book   can  not  contain   mundane  stories   about   human  beings.   The   Vedas   have  been   extensively   studied   and  commented  on   by  Indian  intellectuals   for  all  through   history.    With   the   rise  of   modern  science   it   should  have  been  feasible   to  crack  the  Vedic   code   at  least  three  decades   earlier,   but  here  lies  the  greatest   tragedy  of  India.    Under the  Marxist   grip   Indian  intellectuals  have  been   made  ashamed   of  their   heritage   and   most   educated   Hindus   are  ready  to  parade  with   the  banner    "We  are ashamed   to  be  Hindu"  at  the  drop  of  a  hat.   Most   educated   Indians   including  scientists   have  no  clue   as to  what  is   in  the  Vedas.  The  Vedas   are  written  in  Sanskrit   and  most  educated  Indians   cannot   understand   it   as  there  is  a  conspiracy   to  finish  Sanskrit   and  everythingelse   that  Hindus  should  be  proud  of.
 
................The  Vedas  are  the  pillars  of  Hinduism.   Hinduism  has  evolved  from  the  Vedas.  The  Vedas   formed   the  very  basis   of   Indian   civilization.
 
........................................Modern  science  had  a  difficult  birth  for  formulating  scientific  theories,  which  Church  perceived   to  be  against   its  theory  of  creation.  It  is  not  a  coincidence   that  modern  science  is   against  the  idea  of  God    and  anything  special  about   Earth   and  human  beings.    In  India    this  type  of  conflict   never  arose.   Hinduism   was  raised   on  the  foundation  of   science   and  freedom  of  inquiry. 
 
..........................The  rise  and  fall  of  Hinduism   is  connected  to  the  rise  and  fall  of  science,  and  scientists  everywhere   in  the  world  are  followig  the  spirit   of  Hinduism   even  without  realising  it.
 
விஞ்ஞானம்    எதிர்ப்பு   என்றால்    அது   மேற்கத்திய    கடவுளுக்குத்தான்    எதிர்ப்பு.     ஏனென்றால்     அங்கே  கடவுள்  கருத்து    அறிவுக்கும்,  விஞ்ஞானத்துக்கும்,   சுதந்திரமான  விசாரத்திற்கும்    எதிர்ப்புகளால்    கட்டப்பட்டிருக்கிறது.    ஆனால்   ஹிந்துமதத்தில்     அறிவின்,  விசாரத்தின்,    சுதந்திரமான    அகவயத்  தேட்டத்தின்     அடிப்படையில்,   உள்ளடக்கிய   பொலிவாகத்தான்     ஹிந்து  மதம்  என்பதே   வளர்ந்து  நிற்கிறது.     
 
மொத்தத்தில்   மதம்  அறிவின்  எதிரி  --   மேற்கே,      மதம்   அறிவின்    நிலை   மாற்ற   வளர்ச்சி  ---  ஹிந்து பண்பாட்டுப்  புலத்தில்.

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 9:19:39 AM12/1/09
to mint...@googlegroups.com
இதைத்தான் நான்  அடிக்கடி கூறி வருகிறேன்
 
இன்னும் நம் வேதங்கள்  முறையாக ஆராயப்படவில்லை
 
நம்மிடையே  இருக்கும் அறிஞர்கள் எதை சொன்னாலும் அதற்கு ஆதாரங்கள் கேட்கின்றனர்
நம்முடைய வேதங்களில் அனைத்துக்கும் ஆதாரங்கள்  இருக்கின்றன
சம்ஸ்க்ருதம்  தெரியாத   காரணத்தாலும் ,
சம்ஸ்க்ருத மொழியின் மேல் இருக்கும் தேவையற்ற  வெறுப்பினாலும்
நாம் இன்னமும் அவற்றை  ஆராயமல்  இருக்கிறோம்
 
முன்னோர் சொன்ன வேதங்கள் பொய்யல்ல
 
அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு  விஞ்ஞான என்று சொன்னால் புரியாமல் போய்விடுமோ  என்னும் எண்ணத்தால்  வேதம் , சாத்திரம்  என்றெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்
 
அவற்றை தேவையற்ற  மொழி வெறுப்பினால் பேதத்தால் நாம் இன்னமும் ஆராயாமல் இருக்கிறோம்
அப்படி முறையாக ஆராய்ந்து
 
எந்த மொழியானாலும்  அதிலுள்ள  நல்லவறை எடுத்துக்கொண்டு
பயனடைய வேண்டும் என்னும் பொது நோக்கு நமக்கெல்லாம் வரும்போதுதான்
நம் வேதங்களில் உள்ள ரகசியங்கள் வெளி வரும் 
 
அதுவரை  ஏதோ மேம்போக்காக  விவாதம் செய்து பயனில்லை என்பதே 
இந்தச் சிறியவனின் கருத்து
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 


 
30-11-09 அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதினார்:

srirangammohanarangan v

unread,
Dec 8, 2009, 1:13:26 PM12/8/09
to mint...@googlegroups.com
Stephen P Huyler    என்பவர்     கலையின்   வரலாறு  பற்றிக்   கற்றுத்  துறைபோயவர்.    ஸ்மித்ஸோனியன்     கலை   நிறுவனத்தில்    க்யூரேடராக   வேலை  பார்ப்பவர்.    2002ல்    வெளிவந்த     அவருடைய  நூலான  
Meeting   God:   Elements   of  Hindu  Devotion    என்பதில்    ஹிந்துமதம்   என்றால்  என்ன    என்று     அனைத்து  அம்சங்களையும்  உள்ளடக்கிய   ஒரு  சித்திரம்   தீட்ட  முயல்கிறார்   பாருங்கள்  :
 
Hinduism   is  a  religion  of  individuality.   Both   good  and  evil   are    believed   to  be  of  God,  and  the  purpose   of  most   rituals   is  to  maintain   a  balance    between   such  opposites:  creation   and  destruction,   light  and  dark,   masculine   and  feminine.   All  Hindus  believe   that  the  absolute   is  the  pure  blend   of  opposites,  neither  masculine   nor   feminine.   For   the    Hindu,   as   every    aspect   of   existence   has  a  purpose,  human  meaning  involves  a  fundamental  sense  of  duty   and  of  conscientious   accountability.   All  individuals   are   considered   part  of  the  greater  whole,   which  functions   well   only  when   eaxch  person   fulfills  his  or  her  obligations.  The  focus  and   means  of  worship   are   many,  but  the  process   has  a  common  thread.  It  acknowledges  one  of  the  fundamental   principles  of  Hinduism.   God  is  a  universal  force,  indivisible   and  yet   infinitely  divisible,  the  one  and  the  many,  the  perfect  mixture   of  all  facets  of  existence. 
 
Hinduism  is  a  religion  of  strength,  vitality, innovation,  and  balance.
 
ஹிந்துமதம்   மனித    வாழ்வின்  அனைத்து    கன  பரிமாணங்களையும்     தன்னுள்  கொண்டு  இருப்பதுவாய் ,    தனி  ஒரு  மனிதனின்  அந்தரங்கக்  கோட்பாடாகவும்,   அதே  நேரத்தில்    சமுதாயத்தில்    அத்தனை  வித  தனி  மனிதர்களும்    தம்  தம்   உளப்பாங்கிற்கு   ஏற்ப     முன்னேற  வசதியாக    அமைந்து  இலகும்  ஒரே  மதம்  என்பதை     Huyler     ஆழ்ந்துணர்ந்து  சித்திரிப்பதைக்  காணலாம்.  

srirangammohanarangan v

unread,
Dec 10, 2009, 1:42:00 PM12/10/09
to mint...@googlegroups.com
ஜார்ஜ்  பெர்னார்ட்  ஷா  பற்றித் தெரியாதவர்கள்  இருக்கமுடியாது.   ஆங்கில    இலக்கிய,  நாடக  மேதை.    Pygmalion  போன்ற    நூல்களை  எழுதியவர்.     ஓர்  அழகான     மாது    அவரிடம்    ‘ஐயா    என்   அழகோடும்,   உங்கள்   அறிவோடும்   நமக்குள்   ஒரு  குழந்தை  பிறந்தால்    எவ்வளவு  நன்றாக  இருக்கும்!’  என்றாளாம்.   அதற்கு   ஷாவின்   பதில்,   ‘அது   சரி  அம்மணி.       பிறக்கும்   குழந்தை      என்   அழகோடும்   உங்கள்  அறிவோடும்    மாற்றிப்  பிறந்துவிட்டால்  என்ன  செய்வது?’     பொது  வாழ்க்கையில்   பல   அறிவாளிகளைக்  குறித்து    அவர்    ஷா  மாதிரி    அறிவு  தெறிக்க   பதிலடி  தருவதில்   என்ற    மாதிரியான     அபிப்ராயக்  கொழுந்துகளைக்  கேட்டிருப்போம்.   அவர்   ஹிந்துவைப்  பற்றியும்,   இந்தியா  பற்றியும்  கூறியிருப்பது    வினோதமாக   இருக்கிறது.    ஆனால்    கச்சிதமாகவும்  இருக்கிறது.
 
The   Indian   way   of   life   provides  the   vision  of  the  natural,   real   way  of  life.   We   veil  ourselves   with  unnatural  masks.   On  the  face  of  India   are  the  tender   expressions,  which  carry   the  mark   of  the   Creators  hand. 
 
In  the  face   of  an  Indian,   you  can  see  the  natural  glory  of  life,  while  we  have   covered   ourselves   with  an  artificial   clock. 
 
The  apparent   multiplication   of   gods   is  bewildering   at  the   first   glance,   but   you  soon  discover   that  they  are   the  same    GOD.   There  is    always    one   uttermost   God   who    defies   personification.   This   makes   Hinduism   the   most    tolerant   religion   in  the  world,   because    its  one  transcendent   God    includes   all  possible    gods.   In   fact   Hinduism  is  so  elastic   and  so  subtle.....
 
ஏகம்   ஸத்    விப்ரா  பஹுதா  வதந்தி   என்ற    ருக்கின்  அர்த்தத்தை    என்ன   அழகாகத்  தெரிந்தோ    தெரியாமலோ   வெளியிடுகிறார்     பெர்னார்ட்    ஷா.  (நன்றி  சுஷமா  லாந்தே)  
 
ஸ்ரீரஙகம் வி மோகனரங்கன் 
 

srirangammohanarangan v

unread,
Dec 26, 2009, 1:25:51 AM12/26/09
to mint...@googlegroups.com
ஹிந்து   ஆன்மிக  சேவைக்  கண்காட்சியை   நேற்று  சென்று  பார்த்தேன்.     கிட்டத்தட்ட  110   ஸ்டால்கள்.    பல   ஆதீனங்கள்,  பல  மடாலயங்கள்,  ஸேவா  நிறுவனங்கள்,     புனரமைப்புத்  திட்டங்கள்,   வனவாசி     மலைவாசி     முன்னேற்ற  அமைப்புகள்  என்று    பன்முக    அறிமுக   விழாவாகச்  சிறக்க  அமைந்திருக்கின்றது     மைதானம்.    திருவான்மியூர்  பஸ்டாண்டில்   இறங்கினால்    பக்கத்துச்  சாலையில்   கடைசி வாசுதேவ  நகர்    ராமச்சந்திரா  பல்கலைக்கழக மைதானத்தில்    28  வரை  நடக்கிறது.    பல  அமைப்புகள்   தமிழ்,  கன்னடம்,   தெலுங்கு,   ஹிந்தி    என்று    பாரத  தேச   பன்மொழி  பல  சம்பிரதாய   பல்  இனப்   பார்வை   கோலாஹலமாய்    இருக்கும்   ஹிந்து  ஆன்மிக   சேவைக்  கண்காட்சி    நிச்சயம்  அனைத்து     ஹிந்து   பண்பாட்டுக்  குடும்பங்களும்     குழந்தைகளோடு  சென்று களிக்க  வேண்டிய   கூட்டு  நிகழ்ச்சி.    நடுவில் மேடையில்   குழந்தைகளின்,  பள்ளி  சிறுவர்  சிறுமியரின்  கலை நிகழ்ச்சிகள்     காண  வேண்டிய  ஒன்று.   சென்னை  நண்பர்கள்   தங்கள்   குடும்பத்தினருக்கும்,  குழந்தைகளுக்கும்  தவற  விடக்கூடாத  நிகழ்ச்சி   இது.     
 
The    whole   celebration   of  Hindu   Spiritual   Seva   Exhibition  that  is  going  on  at  Tiruvanmiyur    till   Decenber  28   is    suffused  with an  authentic  accent   of   multifacetedness   and     indigeneous   cultural  variety.    It  is  a   grand    affirmation  and   introduction  of    Hindu  Culture,  especially  to  the  youth   and  future    generations.    Culturally  perceptive   friends   in  and  around   Chennai    will  be  giving   a   real  treat  to  their   kith  and  kin    by   visiting    the   Exhibition.            

srirangammohanarangan v

unread,
Jan 14, 2010, 1:14:23 AM1/14/10
to mint...@googlegroups.com
நாம்  இன்று   சொல்லும் ஹிந்துமதம் என்பது    பல  சம்ப்ரதாயங்களை   உள்ளடக்கியது.  பல  ஆகம  நெறிகளைத்  தன்  குடை  நிழலில்   குலவக்  காண்பது.    இத்தகைய     ஆகம்   வேத  வேதாந்தப்  பொதுப்  பண்பாட்டுச்  சங்கமமாக    மீமத   அமைப்பு    ஹிந்துமதம்   என்ற    பெயரில்    இனங்காணத்  தக்க  வகையில்  தழைத்தது    எங்கு?     வட  இந்தியாவிலா?    தமிழகத்திலா?    தமிழகம்தான்.  பாரதத்திற்கே  தமிழகம்  தந்த கொடைதான்   ஹிந்துமதம்.   என்ன  ஆச்சரியமாய்  இருக்கிறதா?     தமிழ்  நாகரிகத்தின் பெருமையையும்,    தமிழ்  வேதம்  செய்த   மாறன்  சடகோபன்   அடிபணிந்து  உய்ந்தவர்   சிறப்பையும்,    முப்பெரும்  தத்துவங்களும்    முகிழ்த்த   விளைநிலமாய்த் திகழ்ந்த   தென்னகத்தின்  மாண்பையும்     ஸ்வாமி  விவேகாநந்தரின்     வாய்மொழியில்    கேட்போம்::::
 
Again, the South has Hinduism alive during the Mohammedan rule and even for some time previous to it. It was in the South that Shankaracharya was born, among that caste who wear a tuft on the front of the head and eat food prepared with cocoanut oil: this was the country that produced Ramanuja: it was also the birthplace of Madhva Muni. Modern Hinduism owes its allegiance to these alone. The Vaishnavas of the Chaitanya sect form merely a recension of the Madhva sect; the religious reformers of the North such as Kabir, Dadu, Nanak, and Ramsanehi are all an echo of Shankaracharya; there you find the disciples of Ramanuja occupying Ayodhya and other places. These Brahmins of the South do not recognise those of the North as true Brahmins, nor accept them as disciples, and even to the other day would not admit them to Sannyasa. The people of Madras even now occupy the principal seats of religion. It was in the South that when people of North India were hiding themselves in woods and forests, giving up their treasures, their household deities, and wives and children, before the triumphant war-cry of Mohammedan invaders — the suzerainty of the King of Vidyânagar was established firm as ever. In the South, again, was born the wonderful Sâyanâchârya — the strength of whose arms, vanquishing the Mohammedans, kept King Bukka on his throne, whose wise counsels gave stability to the Vidyanagar Kingdom, whose state-policy established lasting peace and prosperity in the Deccan, whose superhuman genius and extraordinary industry produced the commentaries on the whole Vedas — and the product of whose wonderful sacrifice, renunciation, and researches was the Vedanta treatise named Panchadashi — that Sannyasin Vidyâranya Muni or Sayana (According to some, Sayana, the commentator of the Vedas, was the brother of Vidyaranya Muni.) was born in this land. The Madras Presidency is the habitat of that Tamil race whose civilisation was the most ancient, and a branch of whom, called the Sumerians, spread a vast civilisation on the banks of the Euphrates in very ancient times; whose astrology, religious lore, morals, rites, etc., furnished the foundation for the Assyrian and Babylonian civilisations; and whose mythology was the source of the Christian Bible. Another branch of these Tamils spread from the Malabar coast and gave rise to the wonderful Egyptian civilisation, and the Aryans also are indebted to this race in many respects. Their colossal temples in the South proclaim the triumph of the Veera Shaiva and Veera Vaishnava sects. The great Vaishnava religion of India has also sprung from a Tamil Pariah — Shathakopa — "who was a dealer in winnowing-fans but was a Yogin all the while". And the Tamil Alwars or devotees still command the respect of the whole Vaishnava sect. Even now the study of the Dvaita, Vishishtâdvaita and Advaita systems of Vedanta is cultivated more in South India than anywhere else. Even now the thirst for religion is stronger here than in any other place. 
(Memoirs  of  European  Travel) 
 
மேலும்     படிக்க   இணையக்  குறிப்புச்  சுட்டி   இதோ::: 
 

வினோத் ராஜன்

unread,
Jan 14, 2010, 2:39:20 AM1/14/10
to மின்தமிழ்
// The Madras Presidency is the habitat of that Tamil race whose

civilisation was the most ancient, and a branch of whom, called the
Sumerians, spread a vast civilisation on the banks of the Euphrates in
very
ancient times; whose astrology, religious lore, morals, rites, etc.,
furnished the foundation for the Assyrian and Babylonian
civilisations; and
whose mythology was the source of the Christian Bible. Another branch
of
these Tamils spread from the Malabar coast and gave rise to the
wonderful
Egyptian civilisation, and the Aryans also are indebted to this race
in many
respects. //

uh ?

V

On Jan 14, 11:14 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:

> renunciation, and researches was the Vedanta treatise named *Panchadashi* —


> that Sannyasin Vidyâranya Muni or Sayana (According to some, Sayana, the
> commentator of the Vedas, was the brother of Vidyaranya Muni.) was born in this
> land. The Madras Presidency is the habitat of that Tamil race whose
> civilisation was the most ancient, and a branch of whom, called the
> Sumerians, spread a vast civilisation on the banks of the Euphrates in very
> ancient times; whose astrology, religious lore, morals, rites, etc.,
> furnished the foundation for the Assyrian and Babylonian civilisations; and
> whose mythology was the source of the Christian Bible. Another branch of
> these Tamils spread from the Malabar coast and gave rise to the wonderful
> Egyptian civilisation, and the Aryans also are indebted to this race in many
> respects. Their colossal temples in the South proclaim the triumph of the
> Veera Shaiva and Veera Vaishnava sects. The great Vaishnava religion of
> India has also sprung from a Tamil Pariah — Shathakopa — "who was a dealer
> in winnowing-fans but was a Yogin all the while". And the Tamil Alwars or
> devotees still command the respect of the whole Vaishnava sect. Even now the
> study of the Dvaita, Vishishtâdvaita and Advaita systems of Vedanta is
> cultivated more in South India than anywhere else. Even now the thirst for
> religion is stronger here than in any other place.
> (Memoirs  of  European  Travel)
>
> மேலும்     படிக்க   இணையக்  குறிப்புச்  சுட்டி   இதோ:::
>

> http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_7/vol_7_fra...

Vedaprakash Vedaprakash

unread,
Jan 14, 2010, 3:48:09 AM1/14/10
to mint...@googlegroups.com, vedamved...@yahoo.com
As a researcher, I have to note the contradictions in every writing:

1. These Brahmins of the South do not recognise those of the North as true Brahmins, nor accept them as disciples, and even to the other day would not admit them to Sannyasa.

2. that Tamil race whose civilisation was the most ancient, and a branch of whom, called the Sumerians, spread a vast civilisation on the banks of the Euphrates in very ancient times; whose astrology, religious lore, morals, rites, etc., furnished the foundation for the Assyrian and Babylonian civilisations; and

3. whose mythology of Assyrian and Babylonian was the source of the Christian Bible.

4.  Another branch of these Tamils spread from the Malabar coast and gave rise to the wonderful Egyptian civilisation,


5. The usage of expressionsTamil race and "the Aryans also are indebted to this race" are intriguing (as we all know he debunks the AIT).

--- On Thu, 14/1/10, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:


From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
Subject: Re: [MinTamil] Re: பாரெல்லாம் புகழ் பரவும் ஹிந்துமதம்
To: mint...@googlegroups.com
Date: Thursday, 14 January, 2010, 11:44 AM

நாம்  இன்று   சொல்லும் ஹிந்துமதம் என்பது



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.

Mohanarangan V Srirangam

unread,
Sep 26, 2010, 2:00:07 PM9/26/10
to mint...@googlegroups.com
பாரதியுடன் ஒரு சந்திப்பு 

ஐயா! தங்களின் கருத்துகளை அவ்வப்பொழுது இங்கே எடுத்துப் போடுவோம். தங்களது அனுமதி தேவை. 

பாரதி -- ஆஹா! அதற்கென்ன. நல்ல முயற்சி, நல்ல மனிதர்கள், ஆக்க பூர்வமான முயற்சி - இவற்றுக்கு என்றைக்கும் என் ஆசி உண்டு. சலோ! பாய். முன்னேறு. ரொம்ப பண்டித நடையில் போகாதே. 
மீண்டும் பழைய காலம் திரும்பாது. 
காலதேவனுக்கு எப்பொழுதும் முதுகு வலி. 
அவனால் திரும்ப முடியாது. 
எனவே அவன் கஷ்டத்தை உணர்ந்து நடந்துகொண்டால் 
மனம் கனிவான். வாழ்க. 

ஐயா! இன்னும் ஒன்று. ஹிந்து மதம் பற்றி உங்களுடைய விளக்கம் தேவை. 

பாரதி -- ம் ம் ம் சரி பாடுகிறேன் கேள். 
தெரிந்தால் போல் கூடப்பாடாதே. கவனம் கொள். 

“மண்ணுலகின் மீதினிலே எக்காலும் 
அமரரைப் போல் மடிவில் லாமல் 
திண்ணமுற வாழ்ந்திடலாம். 

              அதற்குரிய 
உபாயமிங்கு செப்பக் கேளீர்! 

நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச் 
செய்கையெல்லாம் நடத்தும் வீறாய்த் 
திண்ணிய நல் அறிவொளியாய்த் திகழும் ஒரு 
பரம்பொருளை அகத்திற் சேர்த்து, 

செய்கையெலாம் அதன் செய்கை; நினைவெல்லாம் 
அதன் நினைவு; தெய்வமே நாம்; 
உய்கையுற நாமாகி நமக்குள்ளே 
ஒளிர்வதென உறுதி கொண்டு 
பொய் கயமை சினம் சோம்பர், கவலை, மயல், 
வீண்விருப்பம், புழுக்கம், அச்சம், 
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும் 
வாளாலே அறுத்துத் தள்ளி 

எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில் 
வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் 
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை 
பெற்றிடுவார்; 
சதுர்வேதங்கள் 
மெய்ப்பான சாத்திரங்கள் எனும் அவற்றால் 
இவ்வுண்மை விளங்கக் கூறும் 
துப்பான மதத்தினையே 
ஹிந்துமதம் 
எனப்புவியோர் சொல்லுவாரே.”  

(சந்திப்பு கற்பனை; பாட்டு உண்மை. எங்காவது இதையும் பாரதி சரிதத்துல சேர்த்துறப் போறானுவ. அப்பறம் இதுக்காக நான் போய் பழங்காலத்துல பொறந்திட்ருக்க முடியாது)

ஆராதி

unread,
Sep 26, 2010, 8:34:11 PM9/26/10
to mintamil
திரு ஸ்ரீரங்கரே

கற்பனை கவிதைக் கலந்துரையாடல் நடத்தினாலும் உண்மையில் கற்கண்டாய் இனிக்கிறது. அருமை.

அன்புடன்
ஆராதி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Ashwinji

unread,
Sep 26, 2010, 10:34:12 PM9/26/10
to மின்தமிழ்
//அப்பறம் இதுக்காக நான் போய் பழங்காலத்துல பொறந்திட்ருக்க முடியாது)//

வணக்கம் திருவரங்கன் அவர்களே.
அருமையான பாரதி சந்திப்பு.
நீங்கள் எழுதிய சங்கப் பாடலுக்கே தங்களை சங்ககால கவிஞர் வரிசையில் நிற்க
வைத்து விடுவார்கள் நம்மாட்கள். :)
பாரதியின் சமகாலத்தவராகவும் ஆகிவிட்டீர்கள். :))
நீங்கள் எல்லாக் காலத்திலும் ஜீவித்து இருங்கள்.
ஏனெனில் எங்களுக்கு தேவை தங்களின் தமிழமுதம்.

அஷ்வின்ஜி
'ப்'ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

On Sep 26, 11:00 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> *பாரதியுடன் ஒரு சந்திப்பு*

Tthamizth Tthenee

unread,
Sep 26, 2010, 11:42:03 PM9/26/10
to mint...@googlegroups.com
எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில்
வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர்
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்;
 
மேற்கண்ட  வரிகளே  தங்கள் நிலையை சொல்கிறதே
 
கொடுத்து வைத்தவர் நீர் காலச்சக்கரம் இல்லாமலே முக்காலத்துக்கும் பயணம் செய்யத்த் தெரிந்து வைத்துக்கொண்டு  எங்களையும்  அழைத்துச் செல்கிறீர்
 
இதில்     (சந்திப்பு கற்பனை; பாட்டு உண்மை. எங்காவது இதையும் பாரதி சரிதத்துல சேர்த்துறப் போறானுவ)  என்று  தங்களின் இயல்பான குறும்பு வேறு
 
ரசிக்க  கொடுத்து வைத்திருக்கிறோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2010/9/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

எப்போதும் ஆனந்தச் சுடர்நிலையில் 
வாழ்ந்து உயிர்கட்கு இனிது செய்வோர் 
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை 
பெற்றிடுவார்; 



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது


அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net


Mohanarangan V Srirangam

unread,
Sep 27, 2010, 9:34:10 AM9/27/10
to mint...@googlegroups.com
தமிழ்த் தேனியின் ஆசீர்வாதம்... 
பதினாயிரம் கட்டி வராகன்...அத்ற்கான யோக்யதை எனக்கு சீக்ரமேவ ப்ராப்திரஸ்து. 
:-))

2010/9/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>


--

Tthamizth Tthenee

unread,
Sep 27, 2010, 9:40:32 AM9/27/10
to mint...@googlegroups.com
ரசிப்பவனுக்கே  இத்தனை பாராட்டென்றால் படைப்பவனுக்கு?
 
அத்தனையும்  படைப்பாளிக்கே  போய்ச் சேரட்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/9/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 27, 2010, 12:31:27 PM9/27/10
to mint...@googlegroups.com
ப்ராப்தீட், வங்கியில்.

2010/9/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Chandrasekaran

unread,
Sep 27, 2010, 1:11:10 PM9/27/10
to mint...@googlegroups.com


2010/9/27 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ப்ராப்தீட், வங்கியில்.



'இ’ சார் back to form! 'இ’த ‘இ’த ‘இ’தத் தான் நான் எதிர்பார்த்தேன்.

ரங்கன் அண்ணா இந்தா பாரதியார் பாட்டை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. 

சந்திரா
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

N. Kannan

unread,
Sep 27, 2010, 11:47:27 PM9/27/10
to mint...@googlegroups.com
இந்த விளக்கத்தின் (definition) படி உலகில் பாதி ஜனம் இந்துக்கள்தான்.
இந்தியாவில் பாதி ஜனம் இந்துக்கள் எனும் அடைமொழியையும் இழக்க வேண்டி
வரலாம் :-))

க.>

2010/9/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Oct 2, 2010, 6:45:20 AM10/2/10
to mint...@googlegroups.com
அன்புள்ள திரு.ரங்கன்,
 
பாரதியுடன் இந்த உரையாடல் வித்தியாசமான முயற்சி. நீங்கள் தேர்ந்தெடுத்து வழங்கும் பாடல் அருமை. உங்கள் சந்திப்பை தொடருங்கள்.
....

பாரதி -- ம் ம் ம் சரி பாடுகிறேன் கேள். 
தெரிந்தால் போல் கூடப்பாடாதே. கவனம் கொள். 
 
இந்த கண்டிப்பும் அருமை..:-)
 
-சுபா

Mohanarangan V Srirangam

unread,
Oct 31, 2010, 3:23:51 PM10/31/10
to mint...@googlegroups.com
பாரதமா? எல்லாம் கட்டுக் கதை என்ற புரட்டர்களின் வாதம் எல்லாம் பல்லிளித்துப் போய் இப்பொழுது ஆர்க்கியலாஜியே சரஸ்வதி நதிக்கும், ஸ்ரீகிருஷ்ணரின் த்வாரகைக்கும், ஹஸ்தினாபுரத்திற்கும், குருக்ஷேத்திரப் போரின் மிச்சங்களுக்கும் மேலும் மேலும் சான்று பகர்கின்றதைப் பார்த்தால் என்ன சொல்வீர்கள்? 

அந்நியர் தமக்கடிமை அல்லவே -- நான் 
அந்நியர் தமக்கடிமை அல்லவே 

என்று பாடினார் பாரதி. 

இதோ இந்தக் குளிகையில் பாருங்கள். கடந்த காலம் தெரியும் -- அப்புறம் நீங்களும் பாடலாம் 
:--)) 


*** 
 


2010/10/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarethinam

unread,
Nov 1, 2010, 2:38:34 AM11/1/10
to மின்தமிழ்
மதங்கள்

பொதுவாக, அறிவில் குறைந்த மனிதனின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு, அந்த
காலகட்டத்தில் வாழ்ந்த தலை சிறந்த அறிவும் கருணையும் கொண்ட ஞானிகளால்
அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்ட தீர்வுகளில் ஒன்று. எந்த ஒரு பிரச்சனையின்
தீர்வும் புதிய பிரச்சனைகளை உருவாக்கும் (Sheldon kopp 43 Eschatological
laundry list).

இந்து மதம் என்ற ஒன்று வெளிநட்டவரால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று எண்ண
வாய்ப்புண்டு. இதை மதம் என்பதைவிட கலாசாரம் என்று சொல்வதே சரியானது.ஏன்?

மதங்களில்

(௧)கடவுள்கள், மறை, வழிபாட்டுமுறை எல்லாமே. ஒரு சிறிய பட்டியலில்
அடங்கும்.

(௨) அறிவிற்கும், சிந்தனைக்கும் மதங்களில் இடமில்லை. மறைகளில் கண்டதை
கண்டதுபோல வழி நடக்கவேண்டியது ` நியதி.

(௩) இறைவனை (மதத் தலைவர்களை) சார்ந்து வாழ்வது மட்டுமே.மத்ங்களின்
கட்டாயம்.

(௪) இறைவனை ஆராய்வது மதத்தில் எவருக்கும் உரிமை இல்லை. இறைவன் ஒருவன்,
அடையமுடியாதவன்.
(௫) மதங்களுக்கு ஒரு ஆதாரம், தன்மைஉண்டு. தோற்றுவித்தவர், தான்
நம்பியது.
கடமை, அன்பு, அறிவு என்பது போன்ற ஒன்று அடிப்படையில் ஆனது.


(௧) இந்து அல்லது, இந்திய கலாசாரத்தில், இறைவனை உணர, அறிய , அடைய
பலவழிகள் ஆராயப்பட்டு உள்ளது

(௨) மறைகள் ஒன்று இரண்டல்ல.
வழிபாட்டு முறைகள் கணக்கில்லாதவை.

(௩) எல்லாமதங்களின் தன்மையையும் தன்னுள் கொண்டது கலாசாரம்.

கிரித்துவ மதத்தை ஆராய்ந்தால், அதன் அடிப்படை, சக மனிதரிடம் அன்பு கருணை
மன்னிக்கும் தன்மை.
இது வைணவத்திற்கு ஓப்பாகும். வைணவர், தனது பாதையின் இறுதிக்கட்டத்தில்
ஒவ்வொரு உயிரிலும் திருமாலைக் காண்கிறார்கள்.

இஸ்லாம் - அறிவுரைகளையும் வாழ்க்கைப்பதைகளையும் ஊன்றிக்கவனித்தால் அறிவதை
(ஞானத்தை) மையமாக கொண்டது.
உருவமில்லா வழிபாடு மிகவும் கவனிக்கப்பட வேண்டியது.

(இந்தியகலாசாரதில் உள்ள சைவ சித்தாந்தம் பரிணாம வளர்ச்சியாக இறைவணக்கத்தை
மூன்று
கட்டமாக வணங்குவதை விளக்கியுள்ளது. அவை :

உருவம், அருவுருவம் மற்றும் அருவம்.- அருவம் அல்லது - இறைவனை
உருவமில்லாமல் வழிபாடு. செய்வது இஸ்லாமின் சிறப்பு.

காலங்கள் மாறும்போது மதங்களை வழி நடத்தும் மனிதர்கள் மதங்களின் திசைகளை
மாற்றி வருகிறார்கள்.

முக்கியாக ஆக்கத்திற்கானது அழிவதற்கு பயனாகிறது. (இது பிரமனின் தேவை
என்று ந்ம்மால் விளக்க முடியும்)
கவனிக்க: மதங்கள் நம்பிக்கையின் உதவியுடன் வாழும் பெரும்பாலான
மக்களுக்காக. அறிவினால் வாழும் மக்களுக்கோ அல்லது, அறிவில் பாதியும் (அதே
அறிவு தோற்கும்போதெல்லாம்) ஆண்டவனை மீதியும் நம்பியும் வாழ்பவர்களுக்காக.

நம்பியவர் நலம் பெறுவதோ நாசமாவதோ அவரை வழி நடத்துவோரின் செயல்களைப்
பொருத்தே.

ஓன்றை நிச்சயமாகச் சொல்லலாம். மதங்களை தோற்றுவிக்க மூல காரணமாயிருந்த
நல்ல இதயங்கள் மதங்களின் இன்றுள்ள ‘நிலையை, தங்கள் பெயரில்
வியாபாரமாக்கப்பட்டு, அழிவிற்கு ஆதாரமாக விளங்கும் அவலத்தை, அரசியல்
வாதிகள் பிரித்தாண்டு மக்க்ளை ஏமாற்ற காரணமாகியதை உணர்ந்து
துன்புறுவார்கள்.

கலாசரத்தில் அழிவில்லையா?
ஏன் இல்லை.?
அறிவில்லாதவர் தங்களை அழித்துக்கொள்ள ஆயுதம் ஒன்றா இரண்டா? முப்பாட்டனார்
செய்துவந்த தொழிலின் பெயரில் தங்களை பிரித்து வைத்து - நீ தாழ்ந்தவன்,
நான் உயர்ந்தவன் என்று அல்லாடுவதற்கு மதங்கள் வேண்டாம், ஜாதிகள் போதும்.

On Nov 1, 12:23 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> பாரதமா? எல்லாம் கட்டுக் கதை என்ற புரட்டர்களின் வாதம் எல்லாம் பல்லிளித்துப்
> போய் இப்பொழுது ஆர்க்கியலாஜியே சரஸ்வதி நதிக்கும், ஸ்ரீகிருஷ்ணரின்
> த்வாரகைக்கும், ஹஸ்தினாபுரத்திற்கும், குருக்ஷேத்திரப் போரின் மிச்சங்களுக்கும்
> மேலும் மேலும் சான்று பகர்கின்றதைப் பார்த்தால் என்ன சொல்வீர்கள்?
>
> அந்நியர் தமக்கடிமை அல்லவே -- நான்
> அந்நியர் தமக்கடிமை அல்லவே
>
> என்று பாடினார் பாரதி.
>
> இதோ இந்தக் குளிகையில் பாருங்கள். கடந்த காலம் தெரியும் -- அப்புறம் நீங்களும்
> பாடலாம்
> :--))
>
> http://www.youtube.com/watch?v=VlO9kBpB1uU&feature=related
>
> ***
>

> 2010/10/2 Subashini Tremmel <ksubash...@gmail.com>

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

செல்வன்

unread,
Nov 1, 2010, 2:50:31 AM11/1/10
to mint...@googlegroups.com
மத சட்டங்கள், மதவழி வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு எந்த மதத்தையும் பின்பற்றலாம்.



--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



Mohanarangan V Srirangam

unread,
Nov 8, 2010, 9:08:22 PM11/8/10
to mint...@googlegroups.com
ஹிந்து மதத்தின் பெருமையை உள்ளபடி உவந்து ஏற்க ஏன் சிலர் இவ்வளவு கஷ்டப் படுகின்றனர்? 

நம்மிலும் சிலர் ஹிந்து மதம் என்றாலே நெளிவதைப் பார்க்கிறோம். 

சிலருடைய உளவியல் தாங்கள் சுயச்சார்பு அற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்காகத் தங்கள் வீட்டின் மீதே கல்லை விட்டு எறிந்துகொண்டும், தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டும் போவோர் வருவோர், “சார்! அவர் பார்த்தீங்களா! அவருக்கு தன் வீடு என்ற உள்ளச் சார்பு, தான் என்ற பிடிப்பு அதெல்லாம் எதுவும் கிடையாது. பாருங்க! தன்னையா இருந்தாலும் எப்படி வெளுத்துக் கட்றாரு” -- இப்படிச் சொல்லிவிட்டால் அவ்வளவிதான் பெரும் பிறவிப்பயன். 

சிலர் தங்கள் குழந்தைகளைக் கண்டிப்போடு வளர்ப்பவர்கள் என்று ஊர் உலகத்தில் நல்ல பேர் எடுக்க வேண்டி, நாலு பேர் பார்க்க எப்பொழுது பார்த்தாலும் தங்கள் குழந்தையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவைத்து தண்டனை கொடுத்துக் கொண்டிருப்பார்கள். பார்க்கின்றவர்கள், “அதெல்லாம் அவர் ரொம்ப ஸ்ரிக்டு.” என்ரு தன்னைப் புகழ்வதைக் கேட்க ஒரு அரிப்பு அவருக்கு இருந்துகொண்டே இருக்கும். 

இதைப் போலவே இன்னும் சில மெண்டல் கேஸ்கள் இருக்கின்றன. உயர்ந்த விஷயங்களை ஓசைப் படாமல் யாரிடமிருந்தாவது காப்பி அடித்துவிடும். பிறகு அது தன்னுடையது சொந்தமாக என்பதுபோல் பாவனை காட்டித் திரிந்துகொண்டிருக்கும். உண்மை வெளிப்படும்வரை எவ்வளவு தூரம் ரோட்டோரத்துப் பாராட்டுகள் என்ற சில்லரைகளைப் பொறுக்கி மூட்டை கட்ட முடியுமோ ‘வந்தவரை லாபம்’ என்று சுருட்டிக் கொண்டு ஓடும். எல்லாம் ஸைகாலஜி பிரச்னை.பாவம் சின்ன வயசில் வளர்த்தவர்கள் சரியாகப் பாராட்டி ரெகக்னிஷன் தந்திருக்க மாட்டார்கள். அது இப்படி அல்பத் தனங்களில் ஓடவைக்கிறது. 

இது உலகு எங்கிலும் என்பதற்கு இதோ -- 

Diwali festival a good time to ask: Are we all Hindus now?

 

 

BY DOUGLAS TODD, VANCOUVER SUN NOVEMBER 4, 2010


 

 

'We are all Hindus now."


That was the headline of a noted essay that appeared in 2009 in Time magazine, and it's well worth reflecting on as Canadians of all backgrounds are increasingly drawn to the annual South Asian festival of Diwali.

North Americans have not, we know, openly converted en masse to Hinduism -- even if Elizabeth Gilbert's book about exploring Indian mysticism, Eat, Pray, Love, has become a hugely popular movie, and the lead actress, Julia Roberts, declared this fall she is Hindu.


But it is remarkable how Hindu beliefs, metaphysics and practices have quietly and thoroughly become integrated into North American culture in the past couple of decades, almost as if by stealth. Or osmosis.


For instance, Canada, especially the West Coast, has witnessed the rise of hundreds, if not thousands, of yoga studios, meditation centres, vegetarian restaurants and Ayurvedic health spas, all of which could be said to have roots in Hinduism.

The key Hindu teaching about reincarnation, as well, is accepted now by 30 per cent of all Canadians, including 37 per cent of Canadian women, according to a recent Leger poll.


Hindu meditation philosophy has also gone mainstream through best-selling spiritual teachers like Deepak Chopra and Vancouver's Eckhart Tolle, the author of The Power of Now.


In addition, a Pew Forum poll found that two out of three Americans now reject the theologically conservative Christian teaching that there is only one way to heaven, or salvation.


Most North Americans, even while declaring themselves "Christian" or "Jewish" or "secular," are signing onto the long-held Hindu attitude there are many authentic roads to spiritual truth.


It can't be claimed that Diwali, the autumn "festival of lights" that officially kicks off Friday at temples, is the main vehicle by which Hindu ideas and practices are becoming assimilated across North America.


Still, Diwali's growing acceptance among non-South Asian Canadians, especially among schoolchildren in urban centres such as Toronto and Vancouver, may have contributed to the quiet trend.


As most Canadians know, Diwali is celebrated not only by Hindus, but in different ways by Sikhs and Jains of South Asian heritage.

One of the many reasons Hinduism tends to be overshadowed in B.C. is that the province has four times more Sikhs than Hindus. Yet, across Canada, there are slightly more Hindus (roughly 360,000) than Sikhs (about 340,000).


Hinduism's unusually low profile in Canada is furthered by the fact Sikhs share many teachings with Hindus: Both promote reincarnation, karma, cremation and the belief that time is cyclical rather than linear.


Both teach the soul is continually reborn in different bodies.


Yet, compared to Sikhism, Hinduism is a much older, much larger and much more geographically and philosophically diverse religion. Compared to Sikhism, Hinduism has had a much wider impact on the planet (including by indirectly giving birth to Buddhism).


What is the biggest reason most North Americans fail to recognize there is truth in the provocative statement: "We're all Hindus now"?


It's simple: The religion is often not given credit where it is due. To put it another way, Hinduism is being plagiarized.


The co-founder of the Hindu American Foundation, Suhag Shukla, is among those miffed that many promoters of yoga, meditation, Ayurvedic health and Indian philosophy often go out of their way to avoid using the word "Hindu."


Shukla charges that most North Americans stereotype Hinduism as being about "caste, cows and curry." As a result, he maintains everyone from Eckhart Tolle to fitness teachers routinely act as if things like yoga and reincarnation have next to nothing to do with Hinduism.


How exactly does this intellectual theft occur? Many North Americans who market or teach what are in essence Hindu beliefs or practices often call them something else, such as "ancient Indian," "Vedic," "yogic" or even "universal."


Shukla says none of these euphemistic labels for describing Hindu-based practices are exactly wrong, but they're still misleading.

"Without a nod to their Hindu origins, this de-linking disenfranchises admitted Hindus of recognition and appreciation for the breadth and depth of their faith," Shukla writes.


He has a point. It's time to give proper credit as South Asian Hindus continue to take a larger role in everyday Canadian life, as Diwali becomes mainstream in Metro Vancouver, as yoga and meditation become firmly established and as more North Americans begin to concur with the foundational teaching of Hinduism's Rig Veda:

"Truth is One, but the sages speak of it by many names."


dt...@vancouversun.com Read Douglas Todd's blog atwww.vancouversun.com/thesearch

http://www.vancouversun.com/health/Diwali+festival+good+time+Hindus/3774655/story.html

(நன்றி -- டாக்டர் திரு கல்யாணராமனின் ஃபார்வேர்ட் அஞ்சல்)

devoo

unread,
Nov 8, 2010, 10:55:18 PM11/8/10
to மின்தமிழ்
நமக்குப் பரமார்த்த குரு கதை வீரமாமுனிவர் வாய்வழியே வரவேண்டும்;
அம்பழக்காடு இருப்பதை ஆங்கில விகி மூலம் தெரிவித்தால்தான்
ஒப்புக்கொள்வோம்

தேவ்

On Nov 8, 8:08 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> ஹிந்து மதத்தின் பெருமையை உள்ளபடி உவந்து ஏற்க ஏன் சிலர் இவ்வளவு கஷ்டப்
> படுகின்றனர்?
>
> நம்மிலும் சிலர் ஹிந்து மதம் என்றாலே நெளிவதைப் பார்க்கிறோம்.
>
> சிலருடைய உளவியல் தாங்கள் சுயச்சார்பு அற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்காகத்
> தங்கள் வீட்டின் மீதே கல்லை விட்டு எறிந்துகொண்டும், தங்களைத் தாங்களே
> சாட்டையால் அடித்துக் கொண்டும் போவோர் வருவோர், “சார்! அவர் பார்த்தீங்களா!
> அவருக்கு தன் வீடு என்ற உள்ளச் சார்பு, தான் என்ற பிடிப்பு அதெல்லாம் எதுவும்
> கிடையாது. பாருங்க! தன்னையா இருந்தாலும் எப்படி வெளுத்துக் கட்றாரு” --
> இப்படிச் சொல்லிவிட்டால் அவ்வளவிதான் பெரும் பிறவிப்பயன்.
>
> சிலர் தங்கள் குழந்தைகளைக் கண்டிப்போடு வளர்ப்பவர்கள் என்று ஊர் உலகத்தில் நல்ல
> பேர் எடுக்க வேண்டி, நாலு பேர் பார்க்க எப்பொழுது பார்த்தாலும் தங்கள்
> குழந்தையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவைத்து தண்டனை கொடுத்துக்
> கொண்டிருப்பார்கள். பார்க்கின்றவர்கள், “அதெல்லாம் அவர் ரொம்ப ஸ்ரிக்டு.” என்ரு
> தன்னைப் புகழ்வதைக் கேட்க ஒரு அரிப்பு அவருக்கு இருந்துகொண்டே இருக்கும்.
>
> இதைப் போலவே இன்னும் சில மெண்டல் கேஸ்கள் இருக்கின்றன. உயர்ந்த விஷயங்களை ஓசைப்
> படாமல் யாரிடமிருந்தாவது காப்பி அடித்துவிடும். பிறகு அது தன்னுடையது சொந்தமாக
> என்பதுபோல் பாவனை காட்டித் திரிந்துகொண்டிருக்கும். உண்மை வெளிப்படும்வரை
> எவ்வளவு தூரம் ரோட்டோரத்துப் பாராட்டுகள் என்ற சில்லரைகளைப் பொறுக்கி மூட்டை
> கட்ட முடியுமோ ‘வந்தவரை லாபம்’ என்று சுருட்டிக் கொண்டு ஓடும். எல்லாம் ஸைகாலஜி
> பிரச்னை.பாவம் சின்ன வயசில் வளர்த்தவர்கள் சரியாகப் பாராட்டி ரெகக்னிஷன்
> தந்திருக்க மாட்டார்கள். அது இப்படி அல்பத் தனங்களில் ஓடவைக்கிறது.
>
> இது உலகு எங்கிலும் என்பதற்கு இதோ --
>
> Diwali festival a good time to ask: Are we all Hindus now?
>

> *BY DOUGLAS TODD, VANCOUVER SUN *NOVEMBER 4, 2010

> http://www.vancouversun.com/health/Diwali+festival+good+time+Hindus/3...

N. Kannan

unread,
Nov 9, 2010, 6:02:22 AM11/9/10
to mint...@googlegroups.com
2010/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

>
> ஹிந்து மதத்தின் பெருமையை உள்ளபடி உவந்து ஏற்க ஏன் சிலர் இவ்வளவு கஷ்டப் படுகின்றனர்?
> நம்மிலும் சிலர் ஹிந்து மதம் என்றாலே நெளிவதைப் பார்க்கிறோம்.
> சிலருடைய உளவியல் தாங்கள் சுயச்சார்பு அற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்காகத் தங்கள் வீட்டின் மீதே கல்லை விட்டு எறிந்துகொண்டும், தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக் கொண்டும் . அது இப்படி அல்பத் தனங்களில் ஓடவைக்கிறது.

> Diwali festival a good time to ask: Are we all Hindus now?
>

அன்பின் மோகனரங்கன்:

ஒரு அமெரிக்காவையும், கனடாவையும் வைத்து ஒரு தீர்மானத்திற்கு
வந்துவிடாதீர்கள். ஐரோப்பாவில் இந்து மதம் பற்றி ஆழ்ந்த புரிதல் உண்டு.
குறிப்பாக ஜெர்மனியில். அங்கு ஒவ்வொரு சிற்றூரிலும் யோக நிலையங்களுண்டு!

நான் உபதலைவராக இருந்த 10 வருடங்களில் இந்தோ-ஜெர்மானியக் கழகம் தவறாமல்
ஒவ்வொருவருடமும் தீபாவளி கொண்டாடுவோம். சும்மா வெடி வெடித்து, இனிப்புத்
தின்பது மட்டுமா தீபாவளி. அதன் உண்மைப் பொருள் அறிந்தல்லவோ அதைத் தீப
வழிபாடாக நடத்தவேண்டும்! என் பெண் குட்டியாக இருந்ததிலிருந்து இந்தத்
தீபவிழாவைப் பார்த்துவருகிறாள். அவள் பெரிய பெண்ணான பின் ஒருமுறை
நியூயார்க் போயிருந்த போது பிள்ளையார் கோயிலில் சரஸ்வதி விக்ரகத்தின்
முன் நின்று அழுது கொண்டு இருக்கிறாள். என்னடி? என்றால், சரஸ்வதி அவ்வளவு
அழகாக இருக்கிறாளாம். அவளுக்கு நற்கல்வி வழங்குகிறாளாம்!’ அதை நினைத்து
அழுகை. அன்று நான் பெற்ற பயனை அடைந்தேன். அவளுக்கு இந்து மதத்தின் சாரம்
உள்ளே போய்விட்டது! இப்போது பாட்டியோடு சேர்ந்து சத்சங்கத்தை நடத்தும்
அளவிற்கு ஊறிப்போய்விட்டாள். ஒருமுறை அவளது கிறிஸ்தவப்பரிட்சையில்
அத்தத்துவங்களை இந்துமதக் கண்ணோட்டத்தில் விளக்கி எழுதிவிட்டு டீச்சர்
மார்க்குப்போடாமல் விட்டதில் மனம் உடைந்துவிட்டாள். டீச்சருக்குப் பயம்
இவள் கொடுத்த விளக்கம் தூய கிறிஸ்தவ தேவ சபையின் விளக்கங்களைப் புறம்
தள்ளி புதிய விளக்கம் தருவதாக அமைந்ததே அக்காரணம். மார்ட்டின் லூதர் என்ன
பாடு பட்டிருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம் ;-)

தாங்கள் passage to India படம் பார்த்திருக்கிறீர்களோ! அவ்வளவு அருமையான
படம்! எடுத்தது ஆங்கிலேயர்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம்
ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகம். அவரை அதற்கென உருவாக்கியது ஒரு
அன்னிபெசண்டு (ஆங்கிலேயர்). எனவே, சீக்கியர் சொல்லவில்லை, யோகா டீச்சர்
சொல்லவில்லை என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். என்று என் வாமனன்
திருவிக்ரமனாகி இப்பூவுலகின் மீது கால் வைத்தானோ அன்றே எல்லோருக்கும்
ஹிந்து தீக்ஷை ஆகிவிட்டது. நம்மாழ்வார் கண்டு சொன்னபடி கடல் வண்ணன்
பூதங்கள் (ஹரே! ராமா! ஹரே! கிருஷ்ணா!!) எங்கெங்கும் மலியப் புகுந்து
உழிதருகிறார்கள். வேளுக்குடி கிருஷ்ணன், ஹரிஜீ, விசாகாஹரிஜீ இப்படி
எத்தனையோ அடியார்கள் வருடா வருடம் உலகெங்கும் சுற்றிச் சுற்றி பண்டைய
பெருமையை நிலை நாட்டி வருகிறார்கள்.

நான் அவ்வப்போது அனுப்பும் EnlightenNext
(http://www.enlightennext.org/magazine/) பதிவைப் பார்த்துவந்தால்
புரியும். இந்தியாவில் எப்படி ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன் இந்து மதம்
பல்வேறு கிளைகளாய்ப் பரிணாமமுற்றதோ அதுபோல் இப்போது அமெரிக்காவிலும்,
உலகெங்கும் பரிணாமமுறுவதைக் காணமுடியும்!

நம்மவருக்கே ஒன்றும் தெரியாத போது எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்
சொல்ல முடியும்? அதற்காகத்தானே தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகி
இருக்கிறது. இதை விளைநிலமாகப் பயன்படுத்தி நம் இந்து மரபு பற்றி
ஐயமறக்கற்போம். கற்ற பின் அதற்குத்தக நிற்போமாக!

க.>.

Mohanarangan V Srirangam

unread,
Jul 17, 2011, 5:08:18 AM7/17/11
to mint...@googlegroups.com
ஹிந்து மதம் பற்றி சிகாகோ போலீஸ் துறை ஒரு விளக்கப் படம் தயாரித்துள்ளது. பொதுவாக பல மதங்களைப் பற்றியும் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட தொடரில் இது ஹிந்து மதம் பற்றியது. ஆர்கைவ் ஆர்க் என்னும் இடத்தில் இருந்தது. நன்றாக இருக்கிறது பொதுவாக. ஆனால் போலீஸ் அதிகாரிகள் மற்ற பண்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அதைச் சேர்ந்த மக்களிடம் நல்ல புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற இந்த எண்ணம் பாராட்டிற்குரியது. 


***

Geetha Sambasivam

unread,
Jul 17, 2011, 9:08:47 AM7/17/11
to mint...@googlegroups.com
அருமையான சுட்டிக்கு நன்றி. பார்த்தேன், ரசித்தேன்.

2011/7/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஹிந்து மதம் பற்றி சிகாகோ போலீஸ் துறை ஒரு விளக்கப் படம் தயாரித்துள்ளது. பொதுவாக பல மதங்களைப் பற்றியும் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட தொடரில் இது ஹிந்து மதம் பற்றியது. ஆர்கைவ் ஆர்க் என்னும் இடத்தில் இருந்தது. நன்றாக இருக்கிறது பொதுவாக. ஆனால் போலீஸ் அதிகாரிகள் மற்ற பண்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அதைச் சேர்ந்த மக்களிடம் நல்ல புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற இந்த எண்ணம் பாராட்டிற்குரியது. 


***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

coral shree

unread,
Jul 17, 2011, 9:58:57 AM7/17/11
to mint...@googlegroups.com
சிகாகோவில் உள்ள அரோரா கோவில். மிகப் பிரபலமான பெருமாள் கோவிலை அழகாகப் படம் பிடித்துள்ளனர். இந்து மதம் பற்றிய அடிப்படை பண்பாட்டுச் செய்திகளை மிக அழகாக தொகுத்துள்ளது பாராட்டுக்குரியது. மனிதம் மலர்கிறது! HATS OFF TO CHICAGO POLICE!!!

2011/7/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஹிந்து மதம் பற்றி சிகாகோ போலீஸ் துறை ஒரு விளக்கப் படம் தயாரித்துள்ளது. பொதுவாக பல மதங்களைப் பற்றியும் போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்ட தொடரில் இது ஹிந்து மதம் பற்றியது. ஆர்கைவ் ஆர்க் என்னும் இடத்தில் இருந்தது. நன்றாக இருக்கிறது பொதுவாக. ஆனால் போலீஸ் அதிகாரிகள் மற்ற பண்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அதைச் சேர்ந்த மக்களிடம் நல்ல புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற இந்த எண்ணம் பாராட்டிற்குரியது. 


***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Mohanarangan V Srirangam

unread,
Jul 24, 2011, 12:31:02 AM7/24/11
to mint...@googlegroups.com
ஹிந்து பண்பாட்டின் பெருமை ஆன்மிகத்தை முக்கியமாகக் கொண்டது. ஆயினும் விஞ்ஞானத்திலும் பழங்காலத்தில் சிறப்பான முன்னோடிகளாய் இருந்தவர்கள் ஹிந்துக்கள். உலகம் உருண்டை என்றும், பூமியின் Gravitational Field theory ஐயும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் முன்னமே மிக இயல்பாகக் குறிப்பிடும் அதிசயத்தைக் கண்டு வியக்கிறார் Will Durant என்னும் சரித்திரப் பேராசான். 

“India's work in science is both very old and very young: young as an independent and secular pursuit, old as a subsidiary interest of her priests. Religion being the core of Hindu life, those sciences were cultivated first that contributed to religion...grammar and philology....The greatest of Hindu astronomers and mathematicians, Aryabhata, discussed in verse such poetic subjects as quadratic equations. sines and the value of pi; he explained eclipses, solstices and equinoxes, announced the sphericity of the earth and its diurnal revolution on its axis. and wrote, in daring anticipation of Renaissance science: "The sphere of the stars is stationary, and the earth, by its revolution, produces the daily rising and setting of planets and stars"

His most famous successor, Brahmagupta, systematized the astronomic knowledge of India.....these men and their followers...expounded the theory, though not the law, of gravity when they wrote in the Siddhantas: "The earth, owing to its force of gravity, draws all things to itself."  

Klaus Klostermaier என்பவர் கூறும் பொழுது ஹிந்து மதம் எப்படித் தன்னை காலம் தோறும் கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளிப் புதுப்பித்துக் கொள்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். இதை நாம் ‘ஹிந்து மதம் ஓர் அறிமுகத் தெளிவு’ என்னும் தலைப்பில் எழுதிவருவதில் விளக்கிய ‘சுருதி-ஸ்ம்ருதி’ ‘மாறாததும், மாறுவதும்’ போன்ற கருத்துகளை நினைவு படுத்திக்கொண்டால் நன்கு புரிந்து கொள்ள முடியும். 

"Hinduism in its long history has undergone many changes; it is rapidly adopting to modern times and constantly bringing forth new movements and taking new directions. Hinduism has always been more than mere religion in the modern Western sense and it aims at being a comprehensive way of life as well today, a tradition by which people can live." 

(இரண்டு மேற்கோள்களுமே Journey of the Upanishads to the West, Swami Tathagatananda என்னும் நூலிலிருந்து மேற்கோள்கள் பகுதியிலிருந்து கிடைத்தவை. எழுத்துக்களை மையழுத்தம் தந்திருக்கிறேன் கவனப்படுத்த வேண்டி.) 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

Mohanarangan V Srirangam

unread,
Sep 15, 2011, 4:35:33 PM9/15/11
to mint...@googlegroups.com
வேதங்கள் பாடுவள் காணீர் 
உண்மை வேல் 
கையில் பற்றிக் குதிப்பாள் -- பாரதி. 

பேதங்கள் அற்று அனைத்து மனித குலமும் ஒற்றுமைப்பட்டு நிற்பது வேதங்களினால் ஆய பயன். 

ஐரோப்பா மட்டுமாவது ஒன்று திரண்டு, அதாவது அனைத்து ஐரோப்பாவைச் சேர்ந்த வேத கனபாடிகளும் ஒருங்கு திரண்டு அமர்ந்து ருதரம் சமகம் சொல்வதென்றால் என்ன அழகு! 



*** 


Subashini Tremmel

unread,
Sep 17, 2011, 5:07:06 AM9/17/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
பகிர்வுக்கு நன்றி. 

ஸ்விட்ஸர்லாந்தில் வடக்குப்; பகுதியில் ஜெர்மானிய மக்கள் ஏற்படுத்தி நடத்தி பாதுகாத்து வரும் அழகிய ஒரு லக்‌ஷ்மி கோயில் இருக்கின்றது. (ஒரு பெரிய் 2 மாடி வீடு ) பல அறைகளில் கணேசர், முருகன் தெய்வ வழிபாடுகளும் உண்டு. இந்த ஹிந்து ஆலயத்தின் சிறப்பு இங்கு தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக யாகம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது என்பது. ஒருவர் (ஆண் அல்லது பெண் காவி உடை அணிந்து) 4 மணி நேரங்கள் அமர்ந்து வேத மந்திரங்களை உச்சரித்து யாகத்தில் நெய் வார்த்துக் கொண்டிருப்பார். இவ்விடம் மிக அமைதியாக அவர் முனுமுனுக்கும் மந்திர ஒலி தெளிவாக கேட்கும் வகையில் இருக்கும். யாகத்தைப் பார்க்க விரும்புபவர்கள் அமைதியாக அமர்ந்து பார்த்துச் சென்று விடலாம். 4 மணி நேரத்திர்குப் பின்னர் வேறொருவர் இந்த யாகத்தைத் தொடர்வார். இரவு பகலாக நிறுத்தாமல் 30 வருடங்களுக்கும் மேலாக இந்த யாகம் நடந்து வருகின்றது. ஆலயத்தின் பெயர் மறந்து விட்டது. தேடி மீண்டும் தகவல் பகிர்ந்து கொள்கின்றேன்.

சுபா

2011/9/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

N. Kannan

unread,
Sep 17, 2011, 5:22:56 AM9/17/11
to mint...@googlegroups.com
சுபா:

அது ஓம்காரனந்தா ஆஸ்ரம். நாம் போயிருக்கிறோம். அவர் சுவாமி சிவானந்தரின்
சீடர். தெலுங்கர்.

நா.கண்ணன்


2011/9/17 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages