[ இன்றைய பூச்செண்டு]

1 view
Skip to first unread message

Kamala Devi

unread,
Nov 8, 2009, 2:05:03 PM11/8/09
to mint...@googlegroups.com


                                                             [சுட்டும் சுடர்விழிக் கண்ணம்மா!!]

      வாழ்க்கையை அதன் அசல்தன்மையோடும், சாரத்தோடும் அப்படியே ரசிக்கப் பிடிக்கும்.
அதை அப்படியே பதிவுசெய்யும் நிஜம் இன்னும் பிடிக்கும். இசையில், இலக்கியத்தில்,ஓவியத்தில்,என எல்லா
தளங்களிலுமே, சத்ய சொரூபத்தோடு,பார்வையை உலவ விடும்போது,இலக்கியம் மட்டும் தான் இருகரம் நீட்டி
நெஞ்சோடு அரவணைத்துக் கொண்டது.அந்த வெதுவெதுப்பின் நெகிழ்வில் ஏனோ விம்மலும் விசும்பலுமாய் இன்னும் ஈஷிக்கொள்ள,
கன்னம் தொட்டுவழித்து, மார்போடணைத்து, சாஹித்ய வாசலில்,கைபிடித்துச்செல்லும்போது, பரவசத்தில் கரைந்தழத் தோன்றுகிறது.
கொண்டவனின் மார்பிலிழையும் வெட்கச்சிலிர்ப்பும் கூட ,புத்திலக்கியத்தில் அங்கத பாஷை அறிந்தவளுக்கு, அழகிய அனுபவமே.
மஹாகவியை முதன்முதலாய் படித்தபோது மிதந்திருக்கிறேன்,அழுதிருக்கிறேன்,அந்த கவிதையை, அந்த தமிழை,என்டெ பொன்னே, என்டெ முத்தே,
என்று விம்மி விம்மி , இதுதான் தமிழ், இது மட்டுமே என்டெ தமிழ், என்று மானசீகமாக உரிமை கொண்டாடியிருக்கிறேன்.சிறுகதைகளிலும்
பல நல்ல கதைகள் தமிழில் என்னை கவர்ந்துள்ளது.எழுத்தால், கருவால், கதைப்பின்னலால், என்று மட்டுமல்ல.தமிழால் ஆளப்பட்ட நடையழகால்,--?

 ஆனால்,80களுக்குப்பிறகு மேற்கத்தியப்பார்வையில், தமிழ்ப்படுத்தப்பட்ட சிறுகதைகளில், வரும் பின்நவீனத்துவப்
படைப்புக்கள்,முதன்முதலாக  வாசகர்களிடையே உலா வந்தபோதைய அதிர்ச்சியோ,ஆச்சரியமோ இன்றில்லை.
முதலில்  மரபுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, முற்றிலும் சிக்கலான பாணியில் தோன்றி,
பின் எதுவுமே இல்லை என்பதுபோல், பூடகமொழியில் திகைக்க வைப்பதுதான் நவீனத்துவம்
 என்பது ஒரு சாரார் மொழி. இன்னொரு சாராரோ,பன்முகக் கூறுகளைக் கூறும் அடர்த்தியான கதைகளை எழுதிவிட்டு,இடையே குண்டூசிக்குத்தலாக ,அந்தரங்க அவயங்களைக்கூட நிஸாரமாக 
எழுதிவிட்டு,  இதுதான் பின்நவீனத்துவத்தின் வார்ப்படம், தெரியுமா, என்று சிலிர்க்கும் போது,
அந்த மகோன்னதத்தையும் பிரசுரிக்கும் பத்திரிகையாளர்கள்தான் எத்தகு அறிவுஜீவிகள்?
 சாஹித்யத்தின் சங்கீர்த்தனம் என்பது,பாரதி எனும் யுகபுருஷனின் தரிசனம்போல்,
வாசகனை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும், .அங்குதான்  சாஹித்யதேவதை மண்டியிடுவாள்..
,what is creative? what is literature?
ஒவ்வொரு இல்க்கியப்பட்டறையின்,போதும் வாசகர்களுக்கு, புதிதாக எழுத வருபவர்களுக்கு கூறும்
 தாரக மந்திரம், பிறமொழி இலக்கியங்களையும் படிக்க முயல வேண்டும் என்பதே?!!
சிறுகதைக்கு இலக்கணம் உண்டா, எனில் உண்டு,..
ஆனால் வரம்புக்குட்பட்டு ,இப்படித்தான் ஒரு சிறுகதை இருக்கவேண்டும்,
என்று நியதிக்குட்பட்டு,கோடு கிழித்து எழுதுவது சிறுகதை இலக்கணமல்ல   .
பலமொழி இலக்கிய வாசிப்புள்ள ,ஒரு தரமான வாசக எழுத்தாளனால் மட்டுமே,
அங்கதச்சுவையோடு கதையை நகர்த்திச்செல்ல முடியும்.
தரமான கதையினை தெறிவு செய்யும் தகுதிகூட,அந்த வாசகனுக்கே உண்டு.
கதை சொல்லும் உத்தியில்  வாசகர்களிடம் ஒரு நெருக்கம் இருந்தாலே ,எழுத்தாளனின் ஆளுமையை வணங்குபவள் ஞான்.
 theory of modern short stories ன் வகுப்பில் கலந்து கொண்டபோது, அங்கு வாசிக்கப்பட்ட கதைகளில் ,
விறுவிறுப்பு இல்லை.சுவாரஸ்யம் இல்லை.
ஆனால் சின்ன நிகழ்வைக்கூட , தன் இருப்பு குறித்த பிரக்ஞையோடு பதிவு செய்திருந்த நேர்த்தி நெஞ்சை அள்ளியது
மலையாளத்தில் இந்தபாணி விரும்பி வரவேற்கப்படுகிறது..
தரமான இலக்கியம் சார்ந்தவர்களை , இலக்கியத்தில் பயணிப்பவர்களை , ஒரு விமர்சகராகவோ,
 சாஹித்யக்காரியாகவோ  அன்றி.ஒரு பாமர வாசகியாய்  கொண்டாடுபவள்  ஞான்..
அப்படி இணையத்தில் கிட்டிய அருமையான கவிஞர்  எங்கள் அன்பு ஹரி,
இன்று  இந்த அன்பான கவிஞர் ஹரிகிருஷ்ணனுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்.
 
                                         [அன்புடன்: கமலாதேவி அரவிந்தன்,சிங்கப்பூர்]

http://www.kamalagaanam.blogspot.com






















Windows 7: Simplify what you do everyday. Find the right PC for you.


New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

Innamburan Innamburan

unread,
Nov 8, 2009, 7:11:40 PM11/8/09
to mint...@googlegroups.com
ஹரிகி அவர்களுக்கு வாழ்த்துக்கள். சமயத்தில் 'கோணங்கி' யாக வந்து விட்டு போவதும் Creative அல்லவோ!  ஐயா, 'பூச்செண்டை' பதம் பிரித்துப் பார்க்கவேண்டாம்.

பூச்செண்டுடன், கமலத்தின் வாழ்த்துரைகள் அருமை. அவற்றை தொகுத்து ரசிக்கும் போது, 'இலக்கியம் எல்லையற்றது' என்று நான் சொல்வது புரியும்.

இன்னம்பூரான்

2009/11/9 Kamala Devi <saahi...@yahoo.com.sg>



--
இன்னம்பூரான்

Tthamizth Tthenee

unread,
Nov 8, 2009, 11:13:09 PM11/8/09
to mint...@googlegroups.com
ஹரிகி  அவர்களுக்கு  நமஸ்காரம்
 
உங்களுக்கு  திருமதி கமலம் அவர்கள்  அளித்த பூச்செண்டு
ஒரு ஆரம்பம் அவ்வளவே, ஆரம்பமே பூச்செண்டாய் வருகிறது
இனி விருதுகள் அனைத்தும் உம்மைத்தேடி வரட்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
9-11-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

N. Kannan

unread,
Nov 8, 2009, 11:24:02 PM11/8/09
to mint...@googlegroups.com
அன்பின் கமலம்:

வழக்கம் போல் அழகான இலக்கிய அலசல்.
ஒருகாலத்தில் ஜெயகாந்தன் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பே ஒரு
புத்தகமாகியது போல, தாங்கள் மலர்ச்செண்டு அளிக்கும் கமலவுரைகள்
புத்தகமாகிவிடும் போல.
ஹரி கி இணைய உலகில் நன்கு அறியப்பட்ட கவிஞர். இந்திய இதிகாசங்களை
மீண்டும் 21ம் நூற்றாண்டிற்கு அழைத்துவரும் தோழர்.
இணையர். அவருக்கு இப்பூசெண்டு சரியான பரிசே. அவரது இராமாயணம் குறித்த
ஆங்கிலக்கட்டுரைகள் மரபு விக்கியில் இடம்பெற உள்ளன.

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

கண்ணன்

2009/11/9 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:

devoo

unread,
Nov 9, 2009, 12:09:20 AM11/9/09
to மின்தமிழ்
>>இணையத்தில் கிட்டிய அருமையான கவிஞர் எங்கள்
அன்பு ஹரி<<

தரமான ஆய்வுக் கட்டுரைகளை வழங்கும் ஹரி அண்ணாவுக்கு
வாழ்த்துகள்.

தேவ்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 9, 2009, 12:23:55 AM11/9/09
to mint...@googlegroups.com
கமலம் அம்மையார் தரும் பூச்செண்டை விட அவர் விடுக்கும் கட்டியம் அருமை.
 
எங்கள் ஊர் தெருக்கூத்தில் கட்டியக்காரன் (எங்கள் ஊரில் பஃபூன் என்று சொல்வார்கள்.  பஃபூன் செல்லம் வாத்தியார் என்று ஒரு மேதை இருந்தார்.  அவர் தன் குடுமியில் இரண்டு மட்டைத் தேங்காய்களைக் கட்டிக் கொண்டு சுழற்றிக் கொண்டே மேடையில் பிரவேசம் செய்வார்).  அந்த கட்டியக்காரர்கள் அரங்கில் பிரவேசம் செய்யும் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றி தானும் பேசி, அவர்களுடனும் பேச்சுக் கொடுத்து அவர்களுடைய பூர்வாங்கங்களைப் பார்வையாளர்களுக்குப் புரிய வைத்துவிடுவார்.
 
அதுபோன்ற ஒரு விஷயத்தை கமலம் தன்னுடைய பூச்செண்டின் பூர்வாங்கத்தில் செய்து விடுகிறார்.
 
பூச்செண்டு கமலம் என்றே அவர் இன்றிலிருந்து இந்த உலகம் உள்ள வரை அழைக்கப் பட ஆசீர்வதிக்கிறேன்.  (ஒரு வேளை வணங்கவேண்டுமோ?)
 
தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜி மிகை நடிப்பில் பத்மினிக்கு தில்லானா மோகனாம்பாள் என்ற பட்டத்தை தருவார்.  அதை தயவு செய்து அதனை நினைவுக்குக் கொண்டுவரவேண்டாம். 
 
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வாரே...
 
நீர் புலவர்....
 
அந்த ரகத்தில் படித்துப் பார்க்கலாம்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/11/9 devoo <rde...@gmail.com>

Venkatachalam Subramanian

unread,
Nov 9, 2009, 12:24:17 AM11/9/09
to mint...@googlegroups.com
ஓம்
அடை மழை.கனமழை. சென்னைதண்ணீரில் ஆடுகின்றது. குடிநீர் நிலைகள் பாசன நீர்நிலைகள் பெருகி வருகின்றன. பெங்களூருவிலும்  சற்று மழைதான். ஹரிஜி உடம்பையும் ஆரோக்கியமாக பேணிக்கொள்ளவேண்டியது.
அன்புடைய திருமகளின் கமல வாசகங்கள் உணர்வையும் பாவத்தையும் நிகழ்புலங்களையும் வெள்ளிடைமலையெனத் தெள்ளிதின் எளிய மொழியில்  மலர்கொத்து வழங்கிய காட்சி கண்ணில் நிற்கிறது.
கொடுத்தவரும் எடுத்தவரும் அடுத்தவரும் நலமே வாழிய!
வெசுப்பிரமணியன் ஓம்.

2009/11/9 N. Kannan <navan...@gmail.com>

annamalai sugumaran

unread,
Nov 10, 2009, 12:51:19 AM11/10/09
to mint...@googlegroups.com

திரு ஹரி அவர்களே ,
தாங்கள் எப்பவுமே மலர்க்கொத்துகளுக்கு சொந்தக்காரர் தான் ,
தமிழுக்கு தாங்கள் தந்திருக்கும் பூக்கொத்துக்கள் மிக அதிகம் !
உங்களிடம் இருக்கும்  மணத்தை
மலர்க்கொத்து அளித்து  எங்களுக்கு
நினைவு படுத்துகிறார் கமலம் !

மேலும் மேலும் கமலத்தின் எழுத்து பரிமளிக்கிறது !
அது வாசமுள்ள மலர்களை தெரிந்தெடுப்பதாலா என்னவோ !
வாழ்க !
அன்புடன்
ஏ சுகுமாரன்



 

2009/11/9 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>


இது வரை செய்யாததை செய்யவேண்டும் !

kra narasiah

unread,
Nov 10, 2009, 1:08:24 AM11/10/09
to mint...@googlegroups.com
Kamaladevi's writings before offering the bouquet by themselves deserve greater
bouquets!
Yes there could be a collection of the writings that could be published separately
The bouquet is 'twice blest' it blesseth the one that gives and blesseth the one that takes

The bouquet gets even better recognition like this time!

Especially when the rceiver is deserving
narasiah
--- On Mon, 11/9/09, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote:

Chandra sekaran

unread,
Nov 10, 2009, 1:58:03 AM11/10/09
to mint...@googlegroups.com
கமலம் தரும் பூச்செண்டுகள் என்ற தலைப்பில்...
தருபவர், வாங்கும் ஹரி அண்ணா ஆகியோருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
சந்திரா
--
To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com
join http://groups/yahoo.com/temple_cleaners

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

Kamala Devi

unread,
Nov 10, 2009, 6:21:27 AM11/10/09
to mint...@googlegroups.com
மின்தமிழ் சித்தர் வந்துவிட்டரா?
அப்பாடா?
 நாளியிலிருந்து மூலிகை தகவல்களுக்காக காத்திருக்கப் போகிறேன்
கமலம்

 
http://www.kamalagaanam.blogspot.com



From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, 10 November 2009 1:51:19
Subject: [MinTamil] Re: [ இன்றைய பூச்செண்டு]

2009/11/9 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>
2009/11/9 N. Kannan <navan...@gmail.com>


> இன்று  இந்த அன்பான கவிஞர் ஹரிகிருஷ்ணனுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவோம்..

>
>                                          [அன்புடன்: கமலாதேவி



இது வரை செய்யாததை செய்யவேண்டும் !


Reply all
Reply to author
Forward
0 new messages