தனி தெலுங்கானா வன்முறைகள் ஆரம்பம்

0 views
Skip to first unread message

காமேஷ்

unread,
Nov 30, 2009, 7:12:10 PM11/30/09
to தமிழமுதம், முத்தமிழ், minTamil, tamil2friends, palsuvai, பண்புடன்
சித்தூர்: தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி ஆந்திராவில் 11 மாவட்டங்களில் நேற்று நடந்த பந்த்தில் வன்முறை வெடித்தது. அரசு அலுவலகங்கள், பஸ்கள் கொளுத்தப்பட்டன. இதனால், மக்களின் சகஜ வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு 11 மாவட்டங்களும் ஸ்தம்பித்தன.
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா என்ற பெயரில் புதிய மாநிலம் உருவாக்கக்  கோரி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க முயன்ற இக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, 2 மாணவர்கள் தீக்குளித்தனர்.  பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேடக் தொகுதி எம்.பி.யும், நடிகையுமான விஜய சாந்தி உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதனால், தெலுங்கானா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களிலும் டி.ஆர்.எஸ். தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பந்த்துக்கு அழைப்பு: தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரியும் சந்திரசேகர ராவ் கைதை கண்டித்தும் தெலுங்கானா பகுதியில் நேற்று  பந்த் நடத்த டி.ஆர்.எஸ். அழைப்பு விடுத்தது. இதைத் தொடர்ந்து, கரீம் நகர், மகபூப் நகர், வாரங்கல், கம்மம், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா உட்பட 11 மாவட்டங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பந்த் தொடங்கியது. இதற்கு பா.ஜ., பிரஜா ராஜ்யம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

பஸ்கள் கொளுத்தப்பட்டன: பந்த் காரணமாக தெலுங்கானா பகுதியில் நேற்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், கடைகள் மூடப்பட்டன. கரீம் நகரில் பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ்சை நள்ளிரவில் ஒரு கும்பல் கொளுத்தியது. வாரங்கல்லில் 2 பஸ்கள் எரிக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
அரசு அலுவலகங்களுக்கு தீ: நலகொண்டா மாவட்டத்தில் உள்ள முணகலா தாலுகா அலுவலகத்துக்கு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் கணினி அறை, முக்கிய ஆவணங்கள், மேசை, நாற்காலிகள் எரிந்து சாம்பலாகின.  ராமகுண்டம் நகராட்சி அலுவலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. கம்மம் மாவட்டத்தில் கொத்தகூடம் உதவி கலெக்டர் அலுவலகத்துக்குள் 2 தொண்டர்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

பஸ்கள் ஓடவில்லை: ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் 2 ஆயிரம் மாநகர பஸ்கள் இயக்கப்படவில்லை. வெளியூர்களுக்கு செல்லும் 424 பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. அடிலாபாத்தில் 600 பஸ்களும், நிஜாமாபாத்தில் 700, கரீம் நகர் மாவட்டத்தில் 650, வாரங்கல் மாவட்டத்தில் 350 பஸ்களும் இயக்கப்படவில்லை. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
நலகொண்டா மாவட்டத்தில் திப்பர்த்தி அருகே ரயில் தண்டவாளத்தின் கொக்கிகளை கழற்றி விஷமிகள் நாசவேலை செய்து இருந்தனர். சரியான நேரத்தில் அது கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.

http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=1392

~காமேஷ்~

11மாவட்டங்கள் தனி தெலுங்கானா கேட்டா கொடுத்திட வேண்டியது தானே..

இது எங்கே போய் முடியுமோ..

சென்னையும், திருப்பதியும்  ஆந்திராவோடு சேருமா.. தெலுங்கானாவோடு சேருமா

காமேஷ்

unread,
Dec 1, 2009, 12:47:28 AM12/1/09
to tamil2friends, தமிழமுதம், minTamil, முத்தமிழ்
வாவ் சோ நேட்சுரல். நன்றி ரமேசு.

அந்த பையன் முகத்திலிருந்து தோல் வெந்து கீழே விழுவதை அருமையாக படம் பிடிச்சிருக்கார்...

பாவம் பையனுக்கு என்ன கஷ்டமோ.. தீ அவனே வச்சிகிட்டானா.. எவனா வச்சி விட்டானு தெரியல.

பின்னால 2 போலிஸ் லட்டி யோடு நிற்பதை நான் பாத்திட்டேன்.



~காமேஷ்~



---------- Forwarded message ----------
From: V Ramesh <rames...@gmail.com>
Date: 2009/12/1
Subject: Re: [தமிழமுதம்] தனி தெலுங்கானா வன்முறைகள் ஆரம்பம்
To: tamil2...@googlegroups.com


நேத்து தினகரனில் வந்த  படம் பாருங்க... இந்த படத்துக்கு கீழே செய்வதறியாது நிற்கும் போலிஸ்ன்னு ஒரு கேப்சன் போட்டு இந்த படத்தை போட்டிருக்காங்க

?ui=2&view=att&th=12548c1d7f706387&attid=0.1&disp=attd&realattid=ii_12548c1d7f706387&zw
?ui=2&view=att&th=12548c234dbceb90&attid=0.1&disp=attd&realattid=ii_12548c234dbceb90&zw


--
நட்புடன்
ரமேஷ்  
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்



Reply all
Reply to author
Forward
0 new messages