அவியல்

493 views
Skip to first unread message

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 11, 2010, 8:45:36 PM2/11/10
to mintamil digest subscribers
அவியல் 
மறையும் மரபு: கேட்கக் கூடலையே கெத்து வாத்தியம்!

நாம் நமது நெருங்கிய உறவினர்களையே பல நாட்களாகப் பார்க்க வாய்ப்பில்லாதபோது, சந்திக்கும் நம் சிறுவர்களுக்கு, ""இது நம்ம சித்தப்பாடா... அது நம்ம பெரியப்பாடா.. நீ பார்த்ததில்லை. அதனால்தான் உனக்குத் தெரியவில்லை'' என்று அறிமுகப்படுத்துவதுண்டு. அதுபோலத்தான் நாம் இப்போதைய சங்கீத ரசிகர்களுக்கு "கெத்து' வாத்தியம் பற்றி அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. இதனை அகத்திய முனிவர் தனது வழிபாட்டின்போது வாசித்ததாகக் கூறுவர். இந்த கெத்து வாத்தியம் பண்டைக் காலத்தில் "ஜல்லிரி', "ஜல்லி' என்றெல்லாம் கூட அழைக்கப் பட்டுள்ளது. ஸ்ரீ சுப்ரமண்ய சகஸ்ர நாமத்தில் "ஜல்லரி வாத்ய சுப்ரியாய நம' என்றும், முத்துசாமி தீட்சிதரின் கிருதியில் "ஜல்லி மத்தள ஜர்ஜர வாத்ய' (துவஜாவந்தி ராகம்) என்றும், பழைய குமாரதந்திரம் குறிப்புகளிலும் இப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கோயில்களில் வாசிக்கப்படும் இசைக் கருவிகள்:

இடைக்காலத்தில் அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கெத்து இசைக்கருவி திருக்கோயில்களில் வாசிக்கப்பட்டு வந்துள்ளது. பொதுவாகத் திருக்கோயில்களின் வழிபாட்டில் ஒத்து, நாகசுரம், முகவீணை, திருச்சின்னம், எக்காளம், கெüரிகாளம், கொம்பு, நவுரி, துத்தரி, சங்கு, புல்லாங்குழல் போன்ற காற்றுக் கருவிகளும், பலி மத்தளம், கவணமத்தளம், சுத்த மத்தளம், தவில், பேரிகை, சந்திரப் பிறை, சூரியப் பிறை, செண்டை, இடக்கை, டமாரம், டங்கி, டமாரவாத்தியம், தவண்டை, ஜக்கி, ஜயபேரிகை, தப்பு, கனகதப்பட்டை, மிருதங்கம், மத்தளம் (முட்டு), நகார் (நகரா), பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல், திமிலை, வீரகண்டி, வான்கா, தக்கை, கிடிகிட்டி போன்ற தோற்கருவிகளும், தாளம் பிரம்மதாளம், குழித்தாளம், மணி, கைமணி, கொத்துமணி, கோயில்மணி (ஓங்கார மணி), சேகண்டி (சேமக்கலம்) போன்ற உலோகக் கருவிகளும், வீணை, கெத்து போன்ற நரம்புக் கருவிகளும் வாசிக்கப்படுகின்றன. இதில் கெத்து இசைக் கருவியின் பங்கு சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்ததாகும்.
அஷ்டாதச வாத்தியங்கள்

திருக்கோயில்களின் பூஜா காலங்களில் வாசிக்கப்படும் 18 வகையான இசைக் கருவிகளுக்கு அஷ்டாதச வாத்தியங்கள் என்று பெயர். இவற்றில் மங்கள இசைக்கருவிகளில் 18 வகை உண்டு. அவை ஜோடி நாகசுரம், ஒத்து, சுற்றுத்தவில், மந்தத் தவில், டங்கா, கிடிகிட்டி, சக்கர வாத்தியம், பம்பை, மகா தமருகம், நகரா (முரசு), மகா, பேரி(உடல்), தவண்டை, மகா சங்கம் (சங்கு), சிகண்டி, சங்கீரணதாளம், நகரா தாளம், பேரி தாளம், பாணி (கைத்தாளம்) முதலியனவாகும். மேலும், செய்யூர் என்னும் ஊரிலுள்ள திருக்கோயிலில் "சர்வ வாத்தியம்' என்னும் பெயரில் 18 வகையான காற்றுக் கருவிகளும், தோல் கருவிகளும் இணைத்தும் தனித்தும் வாசிக்கப்படுகின்றன. அவை திருச்சின்னம், பூரி, தவளைச் சங்கு, நபூரி, முகவீணை, நாகசுரம், ஒத்து, பெரிய மேளம் (நாகசுரக் குழு), தகோர வாத்தியம் (நாகசுரமும், டமாரமும்), பங்கா (வங்கா), பஞ்சமுக வாத்தியம், டமாரம், ஜல்லரி, ஜெயபேரிகை (முரசு), நகரா (முரசு), டங்கா, தமுர் வாத்தியம், ராஜவாத்தியம், சர்வ வாத்தியம் (மேலே குறிப்பிட்ட அனைத்தும்) வாசிக்கப்படுகின்றன. இதில் செய்யூர் திருக்கோயிலில் வாசிக்கப்படும் சர்வ வாத்தியத்தில் "ஜல்லரி' என்று இந்த கெத்து வாத்தியம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவைகள் எல்லாம் இப்பொழுது வழிபாடுகளின் போது அவ்வளவாக வாசிக்கப்படுவதல்லை. மேலும் மறைந்து கொண்டும் இருக்கின்றன எனலாம்.

கோயிலில் கெத்து வாத்தியம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலில் இந்த "கெத்து' வாத்தியம் தினசரி வாசிக்கப்படுகின்றது. அங்குள்ள ஸ்ரீ யோகாம்பிகை சந்நிதியில் தினசரி மாலை நேர பூஜையின் போது இதனை முறைப்படி வாசித்து வருகின்றனர். கி.பி.1600 ஆம் ஆண்டிற்குட்பட்ட ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்களில் இந்த ஜல்லரி வாசிக்கும் கைங்கர்யம் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. இங்குள்ள தெய்வம் ஸ்ரீ யோகாம்பிகை யோக நிலையில் இருப்பதாக ஐதீகம். எனவே, சாயங்கால பூஜையில் மென்மையான இசையைத் தரும் வீணையும் அதற்குப் பக்க வாத்தியமாக இந்த கெத்து வாத்தியமும் அங்கு வாசிக்கப்படுகின்றது. தஞ்சை சோழ மன்னர்களும், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களும் இதற்காக நிலங்களைத் தானமாக வழங்கி (சர்வ மான்ய தானம்) சன்னதி கைங்கர்யமாக இந்த ஜல்லரி கைங்கர்யம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
கெத்து இசைக்கருவியின் அமைப்பு
இது வீணையைப் போன்றோ அல்லது தம்புராவைப் போன்றோ பார்வைக்கு இருக்கும். ஆனால் அமைப்பில் கோட்டு வாத்தியம் போன்று, அதாவது மெட்டுக்கள் (மேளம்) எதுவும் இல்லாமல் இருக்கும். வீணையை வாசிப்பவர் மடியின் மீது படுக்க வைத்த நிலையில் வைத்துக் கொண்டு வாசிப்பார். ஆனால் இந்த கெத்து வாத்தியத்தை தனக்கு முன்னால் சமதரையில் வைத்துக் கொண்டு வாசிக்கின்றனர். வீணையில் குடத்தைப் போன்றே அதன் மறுமுனையில் சுரைக்குடுக்கை தாங்கிக்காகப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் பின்பு யாளி முகம் கீழ்நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் கெத்து இசைக்கருவியில் சுரைக்காய்க்குப் பதிலாக யாளி முகத்தின் பகுதி தண்டியிலிருந்து கீழ்நோக்கிச் சென்று தாங்கியாகவும் பின்பு மேல்நோக்கி யாளி முகமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். தண்டியில் மேளங்கள் இருக்காது. மேலே 4 வெள்ளி தந்திகள் (வேறு வேறு கன அளவுள்ளதாக) இழுத்து 4 பிரடைகளில் கட்டப்பட்டிருக்கும். வீணையைப் போன்றே இதிலும் மணிக்காய்களின் மூலம் துல்லியமாக சுருதி சேர்க்கப்படும். இதில் மத்திய ஸ்தாயி சட்ஜம், அனுமந்திர ஸ்தாயி சட்ஜம், மத்திய ஸ்தாயி பஞ்சமம், தாரஸ்தாயி சட்ஜம் (அல்லது அனுமந்திர பஞ்சமம்) ஆகிய சுரங்கள் ஒலிக்கும். இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட சிறிய குச்சிகளை கையில் பிடித்துக் கொண்டு கம்பிகளின் மீது தட்டி இதனை வாசிப்பர். 2 குச்சிகளின் அடியிலும் 2 வெங்கல வெண்டயங்கள் பொருத்தப்பட்டு சலங்கை ஒலியையும் வெங்கல நாதத்தையும் குச்சிகள் உண்டாக்கும். இடது கைக்குச்சி (25 செ.மீ. நீளம்) மத்தியில் தட்டி வாசிப்பதற்கும் , வலது கைக்குச்சி (32செ.மீ. நீளம்) குடத்தின் மேலுள்ள குதிரையின் அருகில் தட்டி வாசிப்பதற்கும் ஏற்றார்போல் வாசிப்பவர் அமர்ந்திருப்பார். கச்சேரியில் மிருதங்கத்தில் வாசிக்கப்படும் அனைத்துச் சொற்கட்டுகளும் ஜதிகளும் இந்த கெத்து வாத்தியத்தில் லாகவமாகத் தட்டி வாசிக்கப்படும். இக்கருவி லயச் சொற்களின் கன-நய-ஒலி வேறுபாடுகளுடன், தந்தியின் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்பொழுது எவரையும் எளிதில் கவரும் தன்மையுடையதாக இருக்கும். இது பார்ப்பதற்குத் தந்திக் கருவியாக இருந்தாலும் வாசிக்கும் முறையில் ஒரு தாளவாத்தியக் கருவியாக உப பக்க வாத்தியமாகப் பயன்பட்டு வந்துள்ளது.
கெத்து வாசித்த இசைக் கலைஞர்கள்
இந்த கெத்து இசைக் கருவியை தஞ்சை சமஸ்தானக் கலைஞர்களான சேசையா சுப்பையா சகோதரர்களும் சுப்பையா குப்பையா சகோதரர்களும் பழங்காலத்தில் வாசித்துள்ளனர். மேலும் கிருஷ்ணபாகவதர்(கி.பி.1803), சுப்பராம ஐயர் (கி.பி.1906) போன்றோர்களும் இதனைச் சிறப்பாக இசைத்துள்ளனர். சமீப காலங்களில் சீத்தாராம பாகவதரும் அவர் மகன்களான வீராசாமி ஐயர் மற்றும் அரிகர பாகவதரும் (1895-1976) இதனை வாசித்துள்ளனர். தற்காலத்தில் அரிகர பாகவதரின் மகன்களான சீதாராம பாகவதர் மற்றும் சுப்ரமண்ய பாகவதர் இந்த "கெத்து' வாத்தியத்தை மிகவும் சிறப்பாக வாசித்து வருகின்றனர் என்றாலும், எதிர்காலத்தில் இந்த கெத்து இசைக் கருவியை வாசிக்க ஆள் இல்லை என்பதுடன், இசைக் கச்சேரிகளில் இந்த கெத்து இசைக்கருவி முற்றிலுமாக மறைந்தும் போய்விட்டது என்பதே உண்மை நிலையாகும்.

நன்றி;  புல்லாணி பக்கங்கள்

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 11, 2010, 11:25:24 PM2/11/10
to mintamil digest subscribers
அவியல்  
 யார் குற்றம்?
 

கோவைக் கல்லூரி ஒன்றின் மாடியில் இருந்து சக மாணவர்களால் ஓர் இளைஞன் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகப் புயல் எழுந்துள்ளது. புதுவை அருகே ஒரு கல்லூரியின் மாணவன், ராகிங் கொடுமை தாளாமல் தீக்குளித்ததாக வரும் செய்தியும் இதயத்தைக் குத்திக் கிழிக்கிறது. திருவண்ணாமலைப் பக்கம் ஒரு கல்லூரியிலோ, உடன் பயிலும் மாணவியோடு சேர்ந்து ஒரு மாணவன் அரங்கேற்றிய அசிங்கம், ஊரறியக் கேவலப்படுகிறது!

கடும் உழைப்பு, அசாத்திய புத்திசாலித்தனம்கொண்டு சாதனை படைக்கும் தமிழக மாணவ-மாணவியர்பற்றிய சந்தோஷச் செய்திகளுக்கு நடுவில், இப்படி நோகடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்துகொண்டே இருப்பது ஏன்?

அன்பான வழிநடத்தலும், அக்கறையான கண்காணிப்பும் கல்லூரிகளில்நாளுக்கு நாள் குறைகிறது என்ற குமுறல் நியாயமானதே. மதிப்பெண்களுக்கு மதிப்பே கொடுக்காமல், 'பணம் கொடுத்தால் இடம் கொடுப்போம்' என்று கூசாமல் கைநீட்டும் பல கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, அன்பும் அக்கறையும்மிக்க ஒழுக்க அறிவுரைகள் அளிக்கும் தகுதியை எதிர்பார்க்க முடியாது.

மாறாக, தங்கள் வளாகத்துக்குள் தவறு நடந்துவிட்டது என்று வெளியில் தெரிந்தால், அதனால் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டு, வருமானம் குறைந்துவிடுமே என்று அச்சப்பட்டு... தவறுகளைப் பூசி மெழுகி மறைக்கப் பார்ப்பதில்தான் இதுபோன்ற கல்லூரி நிர்வாகங்கள் குறியாக இருக்கும்!

இன்றைய தலைமுறையின் பெற்றோர் மீதும் தவறு உண்டு! தும்பைவிட்டு வால் பிடித்த கதையாக... ஆரம்ப வயதிலேயே தங்கள் குழந்தைகளின் மனதில் அன்பு, பொறுமை, ஒழுக்கம் ஆகிய குணங்களை விதைக்கத் தவறிவிட்டு... பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்தபிறகு, அவர்களின் முரட்டுக் காரியங்களால் வேண்டாத துன்பங்களில் ஆழ்கிறார்கள் பெற்றோர்!

கொசு அரக்க ரூபத்தில் இருப்பதில்லைதான். ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, அதனால் வரக்கூடிய விஷக் காய்ச்சல்களின் பாதிப்பு எத்தகையது என்பதைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!
 
 
நன்றி. ஆனந்த விகடன் வார இதழ்  தலையங்கம்

 

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 12, 2010, 1:59:23 AM2/12/10
to mintamil digest subscribers
அவியல்
 
தீவினையெச்சம் ---குறள்206

பொழிப்புரை :
தீப் பயன் தருவனவற்றை தான் பிறர் கண் செய்யாது விடுக; துன்பப் பிணிகள் தன்னை வருத்த வேண்டாதான்.

விரிவுரை :
துன்பப் பிணிகள் தம்மைப் பீடித்து வருத்த வேண்டாதாவன், பிறர் பால் தீமை விளைவிப்பதைச் செய்தல் கூடாது.

”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கூறுவதைப் போல, அவரவர் துன்பங்களின் துவக்கம் அவரவரே. ஆதலின் அத்துன்பம் தம்மை முழுவதுமாக வென்றுவிடக் கூடாது என்று விரும்புவோர், முதலில் பிறருக்குத் தீயவை செய்யும் எண்ணத்தை ஒழித்தல் வேண்டும். நாம் நமக்கு எதை விரும்புகின்றோமோ அதையே பிறருக்கு வழங்குதல் வேண்டும். ஏனென்றால் அவையே பன் மடங்கில் பிற்பாடு நம்மை வந்தடையும். முற்பகல் செய்த வினையே பிற்பகலில் பயனை விளைவாய்த் தருகின்றது.

பிறர்பால் தீய எண்ணம் கொள்ளாதோருக்குத் தீமைகள் உண்டாவதில்லை. இருந்தும் அவர் மேல் வேண்டுமென்று தீமை செய்வோர் தாமாகவே அழிந்து விடுவர். ஆதலால் எதிர்பாராமல் ஏற்படுகின்ற துன்பங்கள் தாமாகவே மறைந்தும் விடும். உண்மையில் அவர்தம் நல் எண்ண மிகுதியால் அவருக்கு நன்மைகளே பெருகி வரும்.

ஒருவர் தீயவை எண்ணும் நேரத்தில் நன்மையை எண்ணினால் தேவையற்ற துன்பங்கள் தடுக்கப் படுவதுடன், உண்மையில் நன்மைகளே அதிகமாக விளைய வாய்ப்பு உண்டாகின்றது.

ஆதலின் தீயவை, தம்மை அணுகுவதையும், தொடர்வதையும், தம்மைப் பீடித்து மிகுந்து வென்று துன்புறுத்தாமல் இருக்க வேண்டுவோர், அடிப்படை ஒழுக்கமாக எப்போதும் பிறர்பால் தீமை உண்டாவதை, விளைவதை விரும்பாதீர்; செய்யாதீர்.

குறிப்புரை :
தீயவை தன்னை வருத்த வேண்டாதவன் முதலில் தாம் பிறர்பால் தீயவற்றை எண்ணவோ, செய்யவோ கூடாது.

அருஞ்சொற் பொருள் :
தீப் பால - தீய பலன்கள் தருகின்ற
நோய்ப் பால - நோய்ப் பலன்கள் தருகின்ற, பிணிகள் தருகின்ற
நோய் - துக்கம், துன்பம், பிணி, வியாதி, நலிவு, வலி, குற்றம்

ஒப்புரை :

திருமந்திரம்: 538
ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வார் அவன்வயம்
போன பொழுதே புகுஞ்சிவ போகமே.

திருமந்திரம்: 431
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோ ரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே

திருமந்திரம்: 432
இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே

திருவாசகம்:
4. போற்றித் திருஅகவல் :

(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா)
சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப்
பிறிவினை அறியா நிழல் அது போல
முன் பின்னாகி முனியாது அத்திசை
என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி 80

பட்டினத்தார். பொது: 19
மாத்தா னவத்தையும் மாயா புரியின் மயக்கத்தையும்
நீத்தார் தமக்கொரு நிட்டையுண்டோ? நித்தன் அன்பு கொண்டு
வேர்த்தால் குளித்துப், பசித்தால் புசித்து, விழி துயின்று
பார்த்தால் உலகத் தவர்போல் இருப்பர் பற்று அற்றவரே!

ஔவையார். ஆத்திசூடி:
65. நன்மை கடைப்பிடி.

ஔவையார். கொன்றை வேந்தன்:
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்

ஔவையார். மூதுரை:
சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்? 18

ஔவையார். மூதுரை:
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23
 
நன்றி -குறள் அமுதம் வலைப்பூ

Madhurabharathi

unread,
Feb 12, 2010, 2:13:36 AM2/12/10
to mint...@googlegroups.com
இது வலைப்பக்கத்திலிருந்து தந்ததுதான். இருந்தாலும் ‘தீவினைச்சம்’ என்றல்லவோ இருக்க வேண்டும்?
 
அன்புடன்
மதுரபாரதி

2010/2/12 Kesaven Thirumalai Numbakkam <tnke...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 12, 2010, 9:43:28 AM2/12/10
to mintamil digest subscribers
அவியல்
 
பச்சை காய்கறி மசாலா
தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் (பச்சை நிறமுள்ளது) - 2 அல்லது 3
அவரைக்காய் - 4 முதல் 5 வரை
பீன்ஸ் - 5 அல்லது 6
குடமிளகாய் (பச்சை நிறமுள்ளது) - 1
பச்சை பட்டாணி - 1/2 கப்
வெண்டைக்காய் - 3 அல்லது 4
வெங்காயம் - 1
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

அரைக்க:

இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 2 அல்லது 3
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
கொத்துமல்லித்தழை - சிறிது
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

எல்லா காய்களையும் 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்திப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெண்டைக்காயைத் தவிர மற்ற காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீரை விட்டு வேக விடவும். காய் அரை வேக்காடு வெந்தால் போதுமானது. அதிக நேரம் வேக விட வேண்டாம். காய்களின் நிறம் மாறாமல் சற்று வெந்தவுடன் எடுத்து தனியாக வைக்கவும். தண்ணீரை தேவையான அளவு மட்டும் ஊற்றி வேக விட்டால், காயும் வெந்து, தண்ணீரும் சுண்டி விடும். இதனால் காய்களின் சத்து வீணாகாது.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு, சற்று வதக்கிக் கொள்ளவும். நிறம் மாறக்கூடாது. சிறு தீயில் வைத்து வதக்கினால், காயும் வதங்கும், நிறமும் மாறாது.

(காய்களை மைக்ரோ அவனில் வேக வைத்தால், நிறம் மாறாமல் அப்படியே இருக்கும்).

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, தேங்காய் ஆகியவற்றை, தண்ணீர் சேர்க்காமல், சற்று கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், வெந்த காய்கள் அனைத்தையும் போட்டு, உப்பையும் சேர்க்கவும். ஓரிரு வினாடிகள் நன்றாகக் கிளறி விடவும். பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டுக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, ஈரப்பசை போகும் வரை வதக்கி இறக்கி வைக்கவும்.

இந்த காய்கறி மசாலாவை, சூடான சாதத்தில் போட்டு பிசைந்து, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாயிருக்கும். சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். ரொட்டித்துண்டுகளின் மத்தியில் வைத்து, சாண்ட்விட்ச் செய்தும் சாப்பிடலாம்.

கவனிக்க: ஒரே நிற காய்களை உபயோகித்தால், கறி பார்க்க சற்று வித்தியாசமாக இருக்கும். மற்றபடி விருப்பமான எந்த காய்களையும் சேர்த்து இதைச் செய்யலாம்
நன்றி;கமலாவின் அடுப்பங்கரை

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 13, 2010, 2:09:12 AM2/13/10
to mintamil digest subscribers

அவியல் 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து

கூகுள் நிறுவனத்தின் சர்வர்களில் சில ஹேக்கர்கள் நுழைந்து மெயில்களை நாசம் செய்ததாக சில வாரங்களுக்கு முன் பெரிய அளவில் பிரச்னைகளும் அதன் பின்விளைவுகளும் நடந்தேறின. இதன் காரணமாக சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தகராறு முற்றி, சீனாவிலிருந்து கூகுள் வெளியேறும் எல்லை வரை இந்த பிரச்னை சென்றுவிட்டது.

கூகுள் மெயில் சர்வருக்குள் புகுந்து நாசம் செய்தவர்கள் சீனாவில் இயங்கும் ஹேக்கர்கள் தான் என்பது பலரின் வாதம். யார் என்பதைக் காட்டிலும், இந்த சர்வர் இயக்கத்தில் எங்கு பிழை ஏற்பட்டு ஹேக்கர்கள் நுழைந்தனர்? கூகுள் நிறுவனத்திற்கே இந்த கதி என்றால் நம் மெயில்கள் எல்லாம் என்ன ஆவது?

என்ற கவலை நம்மில் பலரைத் தொற்றிக் கொண்டது. இதற்கான மூலகாரணம் என்ன என்று பார்க்கும் போது, மைக்ரோசாப்ட் நிறுவனம், கூகுள் மீது ஏற்பட்ட பாய்ச்சலுக்குத் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள பிழைகளே காரணம் என்று ஒத்துக் கொண்டது.

அதனைச் சீர்செய்திடும் வழிகளையும் காட்டி உள்ளது. அந்த வழிகளை நாமும் பின்பற்றி நம் சர்வர்களையும், கம்ப்யூட்டர் களையும் பாதுகாத்துக் கொள்ளலாமே என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா! ஆசை எழுவது இயல்பு தானே. மிக எளிதாக இந்த பாதுகாக்கும் வழியை மேற்கொள்ளலாம். அதனை இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 2000 சிஸ்டத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5 வரை, இத்தகைய பிரச்னை எதுவுமில்லை. IE 6, IE 7, மற்றும் IE 8 ஆகிய பதிப்புகள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, சர்வர் 2003, விஸ்டா, சர்வர் 2008, விண்டோஸ் 7 மற்றும் சர்வர் 2008 E2 ஆகியவற்றில் தான் இந்த பிழை உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த இயக்கங்கள் எல்லாமே இப்போது அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இன்றைய நிலையில் இவற்றால் ஏற்படும் ஆபத்தினை முழுமையாகத் தவிர்க்க இயலவில்லை என்று மைக்ரோசாப்ட் ஒத்துக் கொண்டுள்ளது. இருந்தாலும் பிழை இருப்பதனை ஓரளவிற்கு மறைத்து வைக்க முடியும் என்று கூறி உள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள Protected Mode என்பதனை இதற்குப் பயன்படுத் தலாம். இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும்போது கிடைக்கிறது. இத்துடன் Data Execution Protection என்பதனையும் இயக்கை வைக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள IE security zone I "High"என வைப்பதும் ஒரு வழியாகும்.


புரடக்டட் மோட் Protected Mode
 

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் தரப்பட்டுள்ள புரடக்டட் மோட் (விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல் கிடைக்கும்) ஹேக்கர் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரில் தன்னுடைய டேட்டா அல்லது புரோகிராமினைத் திணிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. எனவே இந்த வழியை இயக்கி வைப்பது நல்லது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இது தானாக இயக்கிவைக்கப்படுகிறது.

ஆனால் முந்தைய பதிப்புகளில் நாம் தான் இதனை இயக்க வேண்டும். அடுத்ததாக, ஆக்டிவ் ஸ்கிரிப்டிங் இயங்குவதைத் தற்காலிகமாக நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் இதனை இயக்கும் முன் நமக்கு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அப்போது இதனைத் தற்காலிகமாக இயக்க அனுமதிக்கலாம். ஆனால் அவ்வாறு அனுமதிக்கும் முன் இன்டர்நெட் செக்யூரிட்டி செட்டிங்ஸை "High" என செட் செய்திட வேண்டும்.

புரடக்டட் மோட் வழியை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். IE 7 மற்றும் IE 8 பதிப்புகளில் இது மிகவும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Enable Protected Mode என்பதற்கு முன்பாக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இவ்வாறு அமைத்த பின் மாற்றங்களை இயக்குவதற்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும்.

இதே போல் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி ஸோனை "High" ஆக வைப்பதும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து அங்கு காணப்படும் ஸ்லைடரை "High" என்பதை நோக்கித் தள்ளிவிடவும். இந்த செட்டிங்ஸ் இயக்கத்திற்கு வர, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோ ரரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதில்லை.

டி.இ.பி. (DEP Data Execution Protection) இயக்க: இந்த பாதுகாப்பு வழி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இயக்கப்பட்டே கிடைக்கிறது. அதை உறுதிப்படுத்தவும், பதிப்பு 7ல் இயக்கவும், கீழே தரப்பட்டுள்ளபடி செயல்பட வேண்டும். Tools —> Internet Options சென்று Advanced டேப்பினைக் கிளிக் செய்திடவும்.

பின் Security பிரிவுக்கு ஸ்குரோல் செய்து செல்லவும். அடுத்து "Enable memory protection to mitigate online attacks" என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றம் செயல்பட, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடிப் பின் மீண்டும் இயக்கவும்.

இதனை எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ல் இயக்குவது என்று பார்க்கலாம். மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்வான்ஸ்டு டேப்பில் கிளிக் செய்திடவும்.

இனி Performance என்பதில் செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து, Data Execution Prevention என்ற டேப்பிற்குச் செல்லவும். அடுத்து "Turn on DEP for all programs and services except those I select" என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து மூடவும்.

மைக்ரோசாப்ட் இணையமூடாக தானாக இயங்கும் Tool ஒன்றை தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பெற என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதில் தரப்பட்டுள்ள குறிப்புகள் படி செயல்படவும்.

மேலே கண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டால், ஹேக்கர்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பு பெற முடியுமா? சந்தேகம்தான். இருப்பினும் ஓரளவிற்கு பாதுகாப்பினை இது தரும்.

மைக்ரோசாப்ட் விரைவில் இதற்கான பேட்ச் பைல் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த செய்தியை எழுதும் நேரத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு ஸ்பெஷல் பேட்ச் பைல் ஒன்றை வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஆனால் ஜெர்மனியில் பயர்பாக்ஸ் பிரவுசர் டவுண்லோட் திடீரென அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சீன கூகுள் ஹேக்கர் பிரச்னையால், ஜெர்மனியில் இயங்கும் இணைய பாதுகாப்பு மையம், Federal Office for Information Security, , இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நீக்கிவிட்டு, வேறு ஏதேனும் ஒரு பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்குமாறு அறிவித்துள்ளது.

இதனால் நான்கு நாட்களில் மட்டும் ஜெர்மனியில் 3 லட்சம் பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்துள்ளனர். இதேபோல் பிரான்ஸ் நாட்டின் இன்டர்நெட் பாதுகாப்பு மையமான CERTA வெளியிட்ட அறிக்கையில், இன்டர்நெட் பிரவுசரை நிறுத்திவிட்டு வேறு பிரவுசரைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போன்ற ஒரு எச்சரிக்கை ஆஸ்திரேலியாவிலும் வெளியாகியுள்ள

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 13, 2010, 8:41:49 AM2/13/10
to mintamil digest subscribers
அவியல் 

''கற்றுக்கொள்ளும்  வேட்கை '''---உலகின் இளம் தலைமை ஆசிரியர்  பாபர் அலி 


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவருக்கு “உலகின் இளம் தலைமையாசிரியர்” என்று புகழாரம் சூட்டியிருக்கிறது பி. பி. சி.

பி பி சி செய்தி நிறுவனம் “கற்றுக் கொள்ளும் வேட்கை” என்ற பெயரில் புதிய செய்தித் தொடர் ஒன்றைத் தொடங்கியுள்ளது. உலகெங்கும் மிக மோசமான சூழல்களுக்கு இடையிலேயும் கற்றுக் கொள்ளும் வேட்கையோடு செயல்படுபவர்களை உலகுக்கு அடையாளம் காட்டும் நோக்கோடு இத்தொடரை பி பி சி வெளியிடுகிறது. இத்தொடரின் முதல் செய்தியாக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பள்ளிக்கூடத்தைப் பற்றி பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது.

குடும்பத்தின் முதல் மாணவரான பாபர் அலி, தன்னுடைய வீட்டிலிருந்து 10 கி மி தொலைவிலுள்ள ராஜ் கோவிந்தா பள்ளியில் படித்து வருகிறார். இது ஓர் அரசுப் பள்ளி என்பதால், பாபர் அலிக்குப் பெரிய அளவில் செலவுகள் எதுவுமில்லை. ஆனால் பிறரைப் போல குடும்பச் சுமையைப் பகிர்ந்து கொள்ளாததோடு, குடும்பத்தினருக்கு மேலும் ஒரு சுமையைத் தரும் வகையில், தான் படிக்க வந்திருப்பதே ஒரு பெரிய காரியம்தான் என்கிறார் பாபர் அலி. அவர் சொல்வது உண்மைதான். பாபர் அலி பகுதியைச் சேர்ந்த , ‍ அவர் வயதை ஒத்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து ரூபாய்க்கும் , பத்து ரூபாய்க்கும் கிடைக்கும் வேலையைச் செய்து, குடும்பப் பாரத்தினைச் சுமக்கும் துர்பாக்கியமான நிலையிலேயே இருக்கின்றனர். ஆகையால் தனக்கு தன் குடும்பம் அளித்த மிகப் பெரிய கொடையாக பள்ளிக் கூட வாய்ப்பைக் கருதிய பாபர் அலி, கல்வியில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்கிறார்.

ஆனால் பாபர் அலிக்கு பி பி சி புகழாராம் சூட்டக் காரணம் ராஜ் கோவிந்தா பள்ளியின் சிறந்த‌ மாணவராக அவர் திகழ்வதற்காக அல்ல. பாபர் அலி விளையாட்டாகத் தொடங்கிய இன்னொரு காரியத்திற்காக. அதாவது அவர் விளையாட்டாகத் தொடங்கிய பள்ளிக்கூடத்துக்காக.

அப்போது பாபர் அலிக்கு வயது 9. நம் வீட்டுப் பிள்ளைகள் விடுமுறை நாட்களில் “டீச்சர் விளையாட்டு” விளையாடுவது போல, தன் வீட்டில் ஒரு நாள் டீச்சர் விளையாட்டைத் தொடங்கினார் பாபர் அலி. டீச்சர் ‍ = பாபர் அலி. மாணவர்கள் யார் என்றால், அங்குள்ள பிள்ளைகள். அதாவது, முன்னெப்போதும் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத ஏழைப் பிள்ளைகள். விளையாட்டு எல்லோருக்கும் பிடித்துப் போனது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விளையாடத் தொடங்கினார்கள்.

விளையாட்டு ஒரு கட்டத்தைத் தாண்டியபோது தான் தெரிந்தது பாபர் அலிக்கு. தன் சக நண்பர்களின் ஆர்வம் விளையாட்டின் மீதானது மட்டுமல்ல, கல்வியின் மீதானதும் என்று. பாபர் அலி தன்னுடைய விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை உண்மையான பள்ளிக்கூடமாக மாற்றினார். ஒரு புதிய வரலாறு அங்கு உருவாகத் தொடங்கியது. சொன்னால் பிரமித்துப் போவீர்கள். இப்போது பாபர் அலியின் பள்ளிக்கூடத்தில் எத்தனை பேர் படிக்கிறார்கள் தெரியுமா? 800 பேர்.!

பாபர் அலி நடத்தும் இந்தப் பள்ளிக்கூடம் முற்றிலும் வித்தியாசமானது. பாபர் அலியின் வீட்டு முற்றம், வீட்டைச் சுற்றியுள்ள கொட்டகைகள், மரத்தடிகளே இந்தப் பள்ளிக் கூடம். களிமண்ணில், கட்டாந்தரையில் என்று கிடைக்கும் இடங்களில் அமர்ந்து பாடம் கற்கிறார்கள் மாணவர்கள். இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள் யார்? பாபர் அலியும், அவருடன் படிக்கும் சில நண்பர்களும்தான். ஒவ்வொரு நாளும் தான் பள்ளிக்கூடம் சென்று வந்த பின்னர், இந்தப் பள்ளிக்கூடத்துக்கு மணியடிக்கிறார், பாபர் அலி. மணியோசை கேட்டதும் ஓடி வருகின்றனர் பிள்ளைகள். பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலையிலுள்ள முர்ஷிதாபாத் பகுதியில், மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது பாபர் அலியின் இந்தப் பள்ளிக் கூடம். தான் விரும்பும் சமூக மாற்றத்தை தன்னிலிருந்து தொடங்கிய பாபர் அலியை மகத்தான மனிதன் என்று கொண்டாடுகிறது பி பி சி. உலகின் இளம் தலைமையாசிரியர் இவரே என்றும் பிரகடனப் படுத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முர்ஷிதாபாத்தின் இந்த இளம் தலைமையாசிரியருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.


கேள்விக்கணை ;எல்லா சிறார்களையும் பள்ளிக்கு அழைத்து செல்கிறோம் என்று கோடி கோடியாய்
UNISEF ,உலக வங்கி இடம் கடன் வாங்கும் அரசு MURSHIDABADIL செலவழிக்கவில்ல்யா?

2;கல்விக்கு தனியாக கல்விதீர்வை என்ற பெயரில் ஐந்து ஆண்டுக்கு மேலாக சுங்க,கலால் வருமானவரியில்மூன்று சதவீதம் விதிக்கும் அப்பணம் ஏற்க்கனவே கொழித்து கொட்டும் I I T ,நித     வளர உதவும் அரசு இந்த ஆண்டு வருமானம் 6000 CRORES (இந்திய வரவு -செலவு அறிக்கை)எங்கிருந்தோ வரும் BBC டிவி  முர்ஷிதாபாத்  வரை வந்த்து தகவல் சேகரிக்கும் வரை  நம் நாட்டு தொலைக்காட்சி  சேனல்கள்  அனைத்தும்  ''மானாட மயிலாட சென்று விட்டனவா?      கொடுமை 
நன்றி
தினமணி

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 13, 2010, 10:20:09 AM2/13/10
to mintamil digest subscribers
அவியல் 

பதினாறும் பெற்று பெரு வாழ்வு  வாழ்க 

அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று இந்தப் பதினாறு செல்வங்கள் என்னென்ன என்பதை அழகாகக் கூறுகின்றது 

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி
ஆகுநல் லூழ்நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப்பாய்
 -(அபிராமி அந்தாதி பதிகம்)


பதினாறு செல்வங்கள் 


1.உடலில் நோயின்மை, 
2.நல்ல கல்வி, 
3.தீதற்ற செல்வம், 
4.நிறைந்த தானியம், 
5.ஒப்பற்ற அழகு, 
6.அழியாப் புகழ், 
7.சிறந்த பெருமை,
8.சீரான இளமை, 
9.நுண்ணிய அறிவு, 
10.குழந்தைச் செல்வம், 
11.நல்ல வலிமை, 
12.மனத்தில் துணிவு, 
13.நீண்ட வாழ்நாள்(ஆயுள்), 
14.எடுத்தக் காரியத்தில் வெற்றி, 
15.நல்ல ஊழ்(விதி), 
16.இன்ப நுகர்ச்சி 



ஆகியவையே அந்தப் பதினாறு பேறுகள் அல்லது செல்வங்கள்.

மக்கள் வாழ்க்கைக்கு முழுமையான மகிழ்வையும் நிறைவையும் அளிக்கும் பதினாறு பேறுகளை நமது முன்னோர்கள் அன்றே வகுத்திருப்பது எண்ணிப்பார்க்கத் தக்கது. 


மேலும், இந்தப் பதிகம் என்றோ எழுதப்பட்டதாக இருந்தாலும் இன்றும்கூட மக்கள் வாயில் வழங்கிவருவதிலிருந்து இப்பாடலுக்கும், இந்தப் பாடல் எழுதப்பட்ட தமிழுக்கும் இருக்கின்ற தனித்தன்மையும் தெய்வத்தன்மையும் நினைத்து நினைத்து மகிழத்தக்கது.


இனிமேல் மணமேடை காணவிருக்கும் வாழ்விணையர் அனைவருக்கும் மனமார சொல்லிவைப்போம் "பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" 

பதினாறும் பெறறு பெரு வாவு வாழ் எனச்சொல்லும் பாடல்கள் காளமேகப்புலவரினாலும் பாடப்பட்டுள்ளது.

துதி, வானி, வீரம், விசயம், சந்தானம், துணிவு,தனம்
அதிதானியம், சவுபாக்கியம், போகம், அறிவு, அழகு
புதிதாம்பெருமை, அறம்குலம், நோய்இன்மை, பூண்வயது
எனப் பதினாறு பேறும் தருவாய் பராபரனே! 




3;அபிராமி அந்தாதி 
கலையாத கல்வியும் முழுமையான அறிவு தரக்கூடிய கல்வியும் 

குறையாத வயதும் நீண்ட ஆயுளும் 


கபடு வாராத நட்பும் ஏமாற்றம் அளிக்காத நட்பும் 


கன்றாத வளமையும் அழியாத செல்வங்களும் 


[b]குன்றாத இ ளமையும் - மங்காத இளமையும் 


கழுபிணியி லாத உடலும் சூலப்பிணி போன்ற நோய்கள் வராத உடலும் 

சலியாத மனமும் ...சீ என்று ஒதுக்ககூடிய எண்ணங்கள் இல்லாத மனமும்


அன்பு அகலாத மனைவியும் தன்ணை மிகவும் நேசிக்கும் துணையாளும் 

தவறாத சந்தானமும் சொன்னசொல் தவறாத குழந்தைகளும் 


தாழாத கீர்த்தியும் குறையாத புகழும் 


மாறாத வார்த்தையும் - சொன்ன சொல் தவறாமையும் 

தடைகள் வாராத கொடையும் - தானம் செய்வதற்கு வேண்டிய செல்வம் தடையில்லாமல் கிடைக்கவும் அல்லது தானம் செய்ய வேண்டிய தருணங்களில் தடைகள் வராமலும் 

தொலையாத நிதியமும் செல்வங்கள் திருடு போகாமலும் 

கோணாத கோலும் - தர்ம நீதி தவறாத அரசாட்சியும் 

ஒரு துன்பம் இ ல்லாத வாழ்வும் மனவருத்தம் இல்லாத வாழ்க்கையும் 

துய்ய நின்பாதத்தில் தூய்மையான நின் திருத்தாள்களில் 

அன்பும் உதவி அன்புடன் உதவி புரிந்து 

பெரிய தொண்டரொடு மகிமைமிக்க நின் அடியார்கள் கூட்டத்துடன் 

கூட்டு கண்டாய் - (என்னை) சேர்த்து விட்டாய் 

அலைஆழி அறிதுயிலும் மாயனது தங்கையே - அலைகடலில் பள்ளிக்கொண்டிருக்கும் திருமாலுக்கு சகோதரியே 

ஆதி கடவூரின் வாழ்வே - ஆதி கடவூர் என்ற திருத்தலதில்எழுந்தருளிய 

அமுதீசர் ஒரு பாகம் அகலாத - அம்ருதகடேஸ்வரரின் ஒரு பக்கத்தில் என்றும் நிலைத்திருக்கும் 

சுகபாணி - நன்மைதரும் கரத்தினளே 

அருள்வாமி - அருள்பாலித்து (சிவனின்)இடது பாகத்தில் அமர்ந்திருப்பவளே 

அபிராமியே - அழகுடையவளே[/b]



ஒரு மனிதனுக்கு வேண்டியது அனைத்தையும் வரமாக அன்னையிடம் கேட்கின்றார். தனிப்பட்ட முறையில் மட்டுமில்லாது அவன் எதிர்பார்க்கும் நன்மைகளை 
குடும்பத்திலிருந்தும், சமுதாயத்திலிருந்தும், அவனை ஆளும் அரசனிடமிருந்தும் எதிர் பார்க்கின்றார். கல்வி, நோயற்ற வாழ்வு முதலியன அவனை தனிப் பட்ட முறையில் ஏற்றமுறச் செய்பவை. தவறாத சந்தானம், அன்பகலாத மனைவி, குடும்பத்திலிருந்து எதிர்பார்ப்பது. கபடு வாராத நட்பு, தடைகள் வராத கொடை முதலியன அவன் சமூகத்திலிருந்து கேட்பது. தொலையாத நிதி, கோணாத கோல் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்ப்பது. பாடுபட்டு சேர்த்த நிதி கொடைக்கு உதவவேண்டுமென்றால் தடைகள் வராமலும், தொலையாமலும், திருடர் பயம் இல்லாமலும் இருக்க வேண்டும். அதற்கு அரசனின் செங்கோலாட்சி நன்கு நடைபெற வேண்டும். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக் கிடைப்பதற்கு, தான் மட்டுமின்றி சமூகத்தில் உள்ள அனைவரும் தொண்டர்களாக, அடியார்களாக, நல்லவர்களாக இருக்க வேண்டும்---

நன்றி; நிஷா  

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 13, 2010, 11:12:19 AM2/13/10
to mintamil digest subscribers
 அவியல்

 திருக்குறள் தீவினையெச்சம் 
எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்.

பொழிப்புரை :
[வேறு] எத்தகையப் பகையை உடையவரும் அதனின்று தப்பிவிடுவர்; [ஆனால் தீ] வினைப் பகை [அழியவே] அழியாது தொடர்ந்து பின் சென்று வருத்தும்.

விரிவுரை :
எவ்வளவு கொடிய பகையை உடையவரேனும் அதனின்று எவ்விதமேனும் முயற்சித்துத் தப்பித்து விடுவர். ஆனால் ஒருவர் செய்த தீ வினையால் விளைந்த பகைமை எனும் பலன் அழிக்க இயலாதவாறு, அவரைத் தப்பிக்க விடாது, பின் சென்றுத் துன்புறுத்தி வருத்தி நிற்கும்.

அதாவது ஒருவர் வேறு எப்படிப்பட்டப் பகையினின்றும் அல்லது இடர்களிலிருந்தும் முயற்சித்துத் தப்பிக்க இயலலாம்; ஆனால் அவர் பிறர் பால் செய்த தீ வினைப் பயனால் விளைந்த பகைமையிலிருந்து தப்பிக்கவே முடியாத வகையில் அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு வருத்தித் துன்புறுத்திக் கொல்லுமாம்.

வினையாலன்றி வருகின்ற எந்தப் பகையையும் இடரையும் ஒருவர் எவ்விதமேனும் வென்றோ அன்றில் தப்பித்தோ கொள்ளலாம். ஆனால் முன் வினைகளிலிருந்தும் பிறருக்குச் செய்த செய் வினைகளிலிருந்தும் தப்புவதற்கு வழியே இல்லை. “ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்” . எனவே செய்கின்ற ஒவ்வொரு வினையையும் சீர் தூக்கி நல்லதையே செய்ய வேண்டும் என்பது இக்குறளின் உட் கருத்து.

செய்து விட்ட வினையைத் திருத்துவது கடினம். சமயங்களிலில் இயலாமலே கூடப் போகலாம். ’விதியை மதியால் வெல்ல முடியாது’, ‘எல்லாம் விதிப்படித்தான் நிகழும்’ என்பவை, முன் வினைகளைத் திருத்த இயலாது என்பதன் சுருக்கமே. உதாரணத்திற்குத் தவறி ஒரு கொலையைச் செய்து விட்டால், மீண்டும் உயிர் தர இயலுமா?

ஆதலின் எப்போதும் தீய வினையைச் செய்வதில்லை எனும் கொள்கையுடன், சிந்தித்துப் பணி ஆற்றினால் இவ்விதமான மாற்ற இயலாத குற்றங்களிலிருந்து ஒருவர் தப்பிக்கலாம்.

எப்போதும் கருமங்களை எண்ணித் தெளிந்து துணிந்து, துவக்க வேண்டும். நடக்கும், நிகழும் நிகழ்வுகளை நாம் மதியால் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். ஒருவேளை அவை விதி வசத்தால் மாறான பலனைத் தர நேரினும் கூட நாம் மாறாது நல்லதை மட்டுமே செய்தலை ஒழுகுதல் வேண்டும்.

முன், பின் வினைகள் என்பதில் முன் வினைகளின் பலனையே விதி வசத்தால் ஆனது என்பது. பெற்றோர், உற்றார், சுற்றம், இற்றைய வாழ்வின் பலன்கள் எல்லாவற்றிலும் விதியின் தாக்கம் உண்டு. ஒவ்வொரு செயல் பாட்டின் முடிவிலும் முன் வினைகளின் தாக்கம் பிரதிபலிக்கும். அவையே எதிர் பாராத முடிவுகள் தோன்றுவதற்கான காரணமும் ஆகும்.

எனவே நன்மையே செய்வோருக்கு, முன் வினைகளிலும் நன்மை செய்திருப்போருக்கு எல்லாமே கூடி வரும். இன்பங்கள் நிறையும்.

”வினை விதைத்தவன், பலன்களை அடையாமல் ஓடித் தப்பிக்க முடியாது”. “முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே விளையும்” , என்பதனால், செய்யும் ஒவ்வொரு செயலையும் எப்போதும் சீர் தூக்கிப் பார்த்து நல்லனவற்றை மட்டுமே செய்தல் அன்றிச் செய்வித்தல் வேண்டும்.

குறிப்புரை :
ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அஃது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.

அருஞ்சொற் பொருள் :
உற்றார் - சிறப்பு அடைந்தவர்கள், உறவினர், நண்பர்
உய் - உயிர் வாழ், நற்கதி அடை, துன்பம் நீங்கப் பெறு, இருள் நீக்கு
வீயாது - அழியாது, நீங்காது, இறக்காது, மாறாது, ஓயாது, ஒழியாது
அடும் - காய்ச்சும், சமைக்கும், வருத்தும், அழிக்கும், கொல்லும், உருக்கும், குத்தும்.

ஒப்புரை :

திருமந்திரம்: 435
தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானுஞ்
சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
இருளும் அறநின் றிருட்டறை யாமே

திருமந்திரம்: 667
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடி ஒருகை மணிவிளக் கானதே

திருமந்திரம்: 744
மனைபுகு வீரும் மகத்திடை நீராடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே

திருவாசகம்:
4. போற்றித் திருஅகவல் :
(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) 

அன்பு எனும் ஆறு கரை அது புரள
நன்புலன் ஒன்றி நாத என்று அரற்றி
உரை தடுமாறி உரோமம் சிலிர்ப்ப
கரமலர் மொட்டித்து இருதயம் மலரக்
கண்களி கூர நுண் துளி அரும்ப
சாயா அன்பினை நாள்தொரும் தழைப்பவர்
தாயே ஆகி வளர்த்தனை போற்றி
மெய் தரு வேதியன் ஆகி வினைகெடக்
கைதரவல்ல கடவுள் போற்றி
ஆடக மதுரை அரசே போற்றி 90

பட்டினத்தார். பொது: 
விட்டேன் உலகம்; விரும்பேன் இருவினை; வீணருடன்
கிட்டேன்; அவர் உரை கேட்டும் இரேன்; மெய் கெடாத நிலை
தொட்டேன்; சுகதுக்கம் அற்றுவிட்டேன்; தொல்லை நான் மறைக்கும்
எட்டேன் எனும்பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே! 24

என் செயலாவது யாதொன்றும் இல்லை; இனித் தெய்வமே!
உன் செயலே யென்று உணரப் பெற்றேன்; இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை இறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே! 22

அழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன? ஆவதில்லை
தொழுதால் பயனென்ன? நின்னை ஒருவர் சுடவுரைத்த
பழுதால் பயனென்ன? நன்மையும் தீமையும் பங்கயத் தோன்
எழுதாப்படி வருமோ? சலியாதுஇரு என்ஏழை நெஞ்சே! 37

ஔவையார். ஆத்திசூடி:

59. தூக்கி வினைசெய்.

ஔவையார். கொன்றை வேந்தன்:

74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

ஔவையார். மூதுரை:
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

ஔவையார். நல்வழி:
ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம். 8

ஔவையார். நல்வழி:
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! 17

நன்றி; குறளமுதம் VALAIPPOOO 



Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 13, 2010, 9:48:52 PM2/13/10
to mintamil digest subscribers

அவியல்

குறளும் குத்து மதிப்பும் ( குறள் எண் : 33)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.(குறள் எண் :33)

* மு.வ : செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

* சாலமன் பாப்பையா : இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

 குத்து மதிப்பு : தபால் நிலையத்தில் அந்த முதியவருக்கு அஞ்சல் தலை வாங்க காசு கொடுக்க வேணாம் ... அதை ஓட்ட "பசை டப்பா" நாலு கவுன்ட்டர் தள்ளி இருக்கும் எடுத்து வந்து கனிவா ஒட்டி தபால் பெட்டியில் போடு
 
நன்றி;கிளாச்சிக் பழனி ராஜ் வலைபூ ..

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 13, 2010, 10:05:18 PM2/13/10
to mintamil digest subscribers
அவியல்

சான்றோரின் வாழ்க்கையில் நடந்தவை - தகவல்கள்

காசி இந்து பல்கலைக்கழகத்தின் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மகாத்மா காந்தி.
பல்கலைக்கழகம் உருவாக அரும்பாடுபட்ட அன்னி பெசன்ட் அம்மையார், தாராளமாக நிதி அளித்து உதவிய 'தார்பங்கா' மகாராஜா உட்பட பிரபலங்கள் பலரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.

பிரபலங்கள் ஒவ்வொருவராக சிறப்புரை ஆற்றினர். கடைசியாகப் பேச எழுந்தார் காந்திஜி. அவர், ''இந்தியாவின் புனித நகரம் காசி. அதை நாம் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமா? இல்லை! இப்படி இருந்தால் நம் மீது மற்றவர்களுக்கு எப்படி மரியாதை வரும்?
நாட்டில் ஏழைகள் பலர் இருக்கின்றனர். ஆனால், மகாராஜாவோ விலை உயர்ந்த பட்டாடைகளை அணிந்து கொண்டு வந்திருக்கிறார். 'இப்படிப்பட்ட ஆடம்பரம் தேவையா?' என்பதை மகாராஜா நினைத்துப் பார்க்க வேண்டும். நான் இப்படியெல்லாம் பேசுவதால், பலரது மனம் புண்படக்கூடும். ஆனால், அதைப் பற்றி கவலையில்லை.
நமக்கு, பேச்சு முக்கியம் அல்ல; செயலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே முக்கியம்!'' என்று குறிப்பிட்டார்.


வெற்றியின் ரகசியம்!

''நான் இளைஞனாக இருக்கும்போது பத்துக் காரியங்கள் செய்தால், அதில் ஒன்பது, தோல்வியில் முடிந்ததையே கண்டேன். வாழ்க்கையில் தோல்விகளை விரும்பாத நான், 'ஒன்பது முறை வெற்றி பெறுவது எப்படி?' என்று யோசித்தேன். அப்போது, எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது. '90 முறை முயன்றால், ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும்!' என்பதே அது. ஆகவே, எனது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்!'' - இப்படி தனது வெற்றியின் ரகசியத்தைக் கூறியவர் யார் தெரியுமா? பெர்னாட்ஷா!

 

நன்றி ;மோகன்காந்தி
 

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 14, 2010, 2:41:11 AM2/14/10
to mintamil digest subscribers
அவியல்
சிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள் 


uthor: டாக்டர். பெரு. மதியழகன்

எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம்.
விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர் வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

முன்னோர்தம் அறிவையும் அனுபவத் தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள்.

 “உன்னிடம் எதையும் எதிர்பார்க்க ôமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ.

ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல. அவை உண்மைகளின் ஊற்றுக்஑ண். புத்துலகு நோக்கி மனிதனை வழி நடத்துபவை. புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறான்.

சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிறகருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிறநூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது.

நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்களே.

 “நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக் கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களே”என்றார் கவிஞர் ராபர்ட் கதே.

“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். 

ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற் றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும்.

“காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்றபேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு.

 நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக் குளியலுக்குள்ளானதும், புத்தகங் களின்பால் அச்சம் கொண்டவர்களை அடை யாளம் காட்டும் நிகழ்ச்சிகளாகும்.

 படையெடுப் பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள்.

 அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்க தெரியாதவர்

 என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோ ராகவும் விளங்கினார்.

நூல் படிக்கும் பழக்கம்

பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, “புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் “அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார் இது ஒரு வகை

. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. 

காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும்.

 புத்தகம் படிக்கிறநல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்றசிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன்.

 “மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”

. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதாவிலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.

கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம்.

 இலிபியா நாட்டு உமர் முக்தர் என்றபுரட்சியாளர் தூக்குக் கயிற்றைஅவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம்

 இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.

நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

 பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம். 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப் பதிலும் செலவிட்டாராம்.

 இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டு மல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரண மாயிருந்தது.

 இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்றவள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.

இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய் வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள் கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரி யாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது.

 ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.

ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு. சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால் களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந் துணை யாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை வாசிப்பு வழங்கும்.

வாங்கிப்படி

எட்டையபுரம் மகாராஜாவுடன் சென்னை சென்ற பாரதியார், “செல்லம்மா! வரும்போது உனக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லிச் சென்றவர் மகாராஜா கொடுத்த பணத்தில் மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வாங்கி வந்து விட்டார். கோபமாய்ப் பார்த்த மனைவியிடம், “செல்லம்மா! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தைக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி சமாதானம் செய்தாராம்.

நம்மவர்க்கு நூல்களை விலைபோட்டு வாங்கிப் படிக்கிற பழக்கம் மிகமிகக் குறைவு. படிப்பவர்களிலும் இரவல் வாங்கிப் படிப்பவர்களே மிகுதி. அப்படி இரவல் வாங்கிச் செல்கிற பலர் நூல்களைத் திருப்பித் தருவதே இல்லை. 

ஒருமுறை ஆங்கில நாடக நூலாசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் பேசும்போது “புத்தகங்களை இரவலாக வாங்கிச் செல்வோரில் சிலர் திருப்பித் தருவதே இல்லை. என்னிடம் பெரிய நூலகமே உள்ளது. அதில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அப்படி வந்தவையே” என்றாராம்.

 தாங்கள் வாங்கிய நூலை மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்கிறதாராள மனம் கொண்டவர்கள் கூட, நாணயமற்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறவர்கள் இரவல் கேட்கும் போது மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அப்படியே நூல்களை இரவல் வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தாலும் அது உருக்குலைந்து கிழிந்து அழுக்காகி வந்து சேரும். 

“பொன்னள்ளித் தந்தாலும் தருவேன் அன்றி புத்தகத்தை நானிரவல் தரவே மாட்டேன்! கன்னியரை புத்தகத்தை இரவல் தந்தால் கசங்காமல் வீடுவந்து சேர்வதில்லை!”

என்பார் கவிஞர் சுரதா. 

இதற்கு மாறான சில நிகழ்வுகளும் உண்டு.

 கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளைப் பிரிப்பதற்காக நெடுஞ்சுவர் ஒன்று எழுப்பப் பட்டது. இதனால் மேற்கு பெர்லின் அமெரிக்கன் மெமோரியல் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துச் சென்றஒரு கிழக்கு ஜெர்மன் வாசகரால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இருபத் தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நெடுஞ்சுவர் இடிக்கப்பட்டு இரு ஜெர்மனி களும் இணைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த வாசகர் புத்தகங்களைப் பத்திரமாகத் திரும்ப ஒப்படைத்தாராம்.

இதில் பின்னவரைப் பின்பற்ற முயல்வோம். இரவல் பெற்றதைத் திருப்பித் தருவதன் மூலம் நட்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வோம்.

சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ தாளின் தரத்திலோ, அட்டையின் அழகிலோ இல்லை. வாசிப் பவரது மனதில் அது உண்டாக்கும் தாக்கத்தில் மறைந்திருக்கிறது.

எனவே சிறந்த நூல்களுக்குச் செலவிடுவது செலவே அல்ல. அது சேமிப்பு. சேமிப்பு எதற்கு? தேவை வரும் போது பயன்படுத்தத்தான். இடுக்கண் வருங்கால் உடுக்கை இழந்தவன் கை போல ஓடி வந்து உற்ற துணையாக, வழி காட்டியாக இருப்பவை நூல்களே''.இடுக்கண் வருகால் படிக்க ''' நமக்கு மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கும் 

உங்களது சந்ததியர்க்கும் அது வழி காட்டும், வாழ்வில் ஒளி காட்டும்

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 14, 2010, 2:57:16 AM2/14/10
to mintamil digest subscribers

அவியல் 

முரண் சுவை 

ஹிட்லரால் வளர்ந்த கம்யூனிஸம்!

ரஷ்யாவின் சர்வாதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்டாலின் ரஷ்யர் அல்ல;​ ஒரு ஜார்ஜியன்.​

 பிரான்ஸ் தேசத்தின் சிம்மாசனத்தை அலங்கரித்த நெப்போலியன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அல்ல;​ ​ கார்ஸிகாவைச் சேர்ந்தவர்.​ 

அதேபோல்,​​ ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ஜெர்மானியர் அல்ல.​ அவர் ஓர் ஆஸ்திரியர்.​ எத்தனை முரண்கள் பாருங்கள்.

ஆஸ்திரியாவில் பிறந்ததால் ஜெர்மன் ராணுவத்தில் சேர முடியாமல் தவித்தவர்தான் ஹிட்லர்.​ ஆனால் ஜெர்மனியை தன்னால்தான் காப்பாற்ற முடியும் என்று நினைத்ததோடு,​​ ஜெர்மனியைக் காப்பாற்ற வந்த தேவ தூதனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டார்.​ ​

ஜெர்மன் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்தவர்கள் யூத இனத்தைச் ​ சேர்ந்த கோடீஸ்வரர்கள்.​

 ஒரே நாளில் அவர்களை எல்லாம் ஹிட்லரால் பிச்சைக்காரர்களாக மாற்ற முடிந்தது.​ ​

சினிமா வில்லன்கள் என்றால் எப்போதும் கையிலே கோப்பையும் வாயிலே புகையுமாக இருப்பார்கள்.​

உலக வில்லனாகக் கருதப்பட்ட ஹிட்லர் ​ சைவ உணவு உண்பவர்.​ புகை பிடிக்க மாட்டார்.​ மது அருந்த மாட்டார்.​ பொது விருந்துகளில் தன்னுடைய பிறந்த நாளன்று மட்டும் தம் அதிகாரிகளுக்காக அவர்களுடன் சேர்ந்து ஷாம்பெய்ன் சாப்பிடுவார்.​ 

ஹிட்லருக்குத் தன் தந்தை யார் என்று தெரியாது.​ ஹிட்லருக்கு அவருடைய அம்மா தான் தெரியும்.​ தன் முன்னோர்களிடம் வேலை ​பார்த்த யூத குடும்பத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர்தான் தன் தந்தை என்பது ஹிட்லரின் சந்தேகம்.

எந்த யூத குலத்தை வேரோடு அழிக்க நினைத்தாரோ அதே யூத குலத்தைச் சேர்ந்தவர் தான் அவருக்குத் தந்தை என்பதே எதிர்மறையான சந்தேகம்தான்.​ 

ரஷ்யாவைத் திசைத்திருப்ப வேண்டுமென்று திட்டமிட்ட ஹிட்லர் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டன் மீது 65 இரவுகள் குண்டு மழை பொழிந்தார்.​
 அதன் காரணமாகவே சர்ச்சில்,​​ ரூஸ்வெல்ட்,​​ ஸ்டாலின் கூட்டு உருவாகியது.​ அதன் காரணமாக ஜெர்மனி தோற்றது.​ 
ஒரு பிரச்னை எப்படி எதிர்பாராத வேறு ஒரு பிரச்னையாக வெடிக்கிறது கவனியுங்கள்.

ஜெர்மனியில் கம்யூனிஸ்ட்களை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஒழித்துக் கட்டினார் ஹிட்லர்.​ ஆனால் ஹிட்லரால் துவக்கப்பட்ட இரண்டாவது உலகச் சண்டை முடிந்த பிறகு ஏகப்பட்ட நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது.

ஹிட்லரால் உருவான இரண்டாம் உலகப் போர்தான் இந்தியச் சுதந்திரத்தையும் வேகப்படுத்தியது. கெடுதியிலும் ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது.

ஹிட்லர் தன்னுடைய 12 வருட ஆட்சி காலத்தில் கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கை 65 லட்சம்.​ உலகச் சண்டையை முடுக்கிவிட்டதே அவர்தான்.​ தனிப்பட்ட ஒரு மனிதரின் குணத்தாலும் அதிகார வெறியாலும் கோடிக்கணக்கான மனிதர்களைக் கொல்ல முடியும் என்பதற்கு ஹிட்லர் ஓர் உதாரணம்.​ இரண்டாவது உலகச் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடி.

50 லட்சம் யூதர்களை அகதிகளாக்கி அலையவிட்டார்.​ பிரிட்டன் ஒரு சமயம் சுமார் 40,000 ஜெர்மானிய யூதர்களை அகதிகளாக ஏற்றுக் கொண்டது.​ சுமார் 20,000 ஆஸ்திரிய அகதிகளும் இங்கிலாந்திற்குச் சென்றார்கள்.​ அப்படிப் போன ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் தான் பின்னாளில் இங்கிலாந்தையே ஆண்ட மார்க்கரெட் தாட்சர்.​ இது வரலாறு தரும் சுவாரஸ்யம்.

ஹிட்லருக்குத் தன்னுடைய 56வது பிறந்த நாளிலேயே அவருக்குத் தெரிந்து விட்டது,​​ அடுத்த பிறந்த நாள் கொண்டாட்டம் இருக்காது என்பது.

பெர்லினுக்கு 100 கிலோமீட்டர் தூரத்தில் ரஷ்யப் படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கேள்விப்பட்டார்.​ ஹிட்லருக்கு நூற்றுக்கணக்கான ஆடம்பர அறைகள் இருந்தன.​ அத்தனையையும் விட்டுவிட்டு பதுங்கு குழிக்குள் பதுங்கியிருக்க வேண்டியதானது.

தான் இறந்த பிறகு தன்னுடைய உடலின் சிறு பகுதிகூட ஸ்டாலினுக்குக் கிடைக்கக் கூடாது என்று முடிவு செய்த ஹிட்லர், "என்னை எரித்து விடுங்கள்' என்றார்.​ ஹிட்லரின் உடலை எரிக்க 200 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.​ சாம்ராஜ்ஜிய சக்ரவர்த்திக்கு 200 லிட்டர் பெட்ரோல் கிடைப்பதுதான் பெரிய விஷயமா என்று நினைக்கலாம்.​ ஆனால்...​ சண்டை உச்சக்கட்டத்தில் இருந்ததால் பெட்ரோல் கிடைப்பது அரிதாக இருந்தது.​ பல பெட்ரோல் பங்குகளில் அலைந்து திரிந்து ராணுவத்தினர் சேகரித்தனர்.​ கடைசியில் 195 லிட்டர் பெட்ரோல்தான் கிடைத்தது.​ பெட்ரோல் கிணறுகளுக்காகவே பல நாடுகளின் மீது படை எடுத்து வென்றவர் ஹிட்லர்.​ அவருடைய உடலை எரிக்க போதுமான பெட்ரோல் கிடைக்கவில்லை.​ தேவையோ 200 லிட்டர்.​ கிடைத்ததோ 195 லிட்டர்.​ ​

ஏப்ரல் 20ம் தேதி தான் ஹிட்லரின் பிறந்த நாள்.​ தற்கொலை செய்து கொண்டது ஏப்ரல் 30ம் தேதி 1945ம் ஆண்டு.​ அந்த 10 நாட்கள் ஹிட்லரின் வாழ்க்கையில் மறக்க முடியாத வேதனையான,​​ சோதனையான நாட்கள்.

எந்தத் துப்பாகியால் யூதர்களை ஹிட்லர் சுட்டாரோ, அதே துப்பாக்கியால் தன்னுடைய நெற்றிப் பொட்டில் வைத்து ஹிட்லர் சுட்டுக் கொண்டார்.​ பிஸ்டலின் பெயர் பரீட்டா.​

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 14, 2010, 11:45:32 AM2/14/10
to mintamil digest subscribers
அவியல் 

கூகிள்  லாபஸ் -இல்  புதிய தேடல் வசதிகள் 

கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம். கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.

ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.

Undo Send

இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.

Snake


கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.

Attachment Detector

அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.

Hide Unread Counts

நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.

Vacation Time 

வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.

You Tube Preview

உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.

Insert இமேஜ்

இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். 

யே
 நன்றி அண்ணாநகர் டைம்ஸ்ம்

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 15, 2010, 1:14:34 AM2/15/10
to mintamil digest subscribers

அவியல் 

Subject: தங்கம் விலை எகிறக் காரணம் என்ன!!!

 

 

 

ஒரு கிராம் தங்கம் விலை 1,600 ரூபாயைத் தாண்டிவிட்டது. மிக விரைவில் கிராம் 2,000ரூபாயையோசவரன் 20 ஆயிரம் ரூபாயையோ எட்டினால் வியப்பதற்கில்லை. அந்த உயரம்வெகு தூரமில்லை என்கின்றனர் நகை வியாபாரிகள். 

 

"இப்படி நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலைக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை;மொத்தத்தையும் தீர்மானிப்பதுவெறும் 14 பேர் தான்'என்றால் நம்ப முடிகிறதாஉண்மை அதுதான்.

 

இதுகுறித்துஸ்ரீ குமரன் தங்க மாளிகை மேலாண் இயக்குனர் ஆறுமுகம் கூறியதாவது: பிரிட்டன் தலைநகர் லண்டனில்புல்லியன் எக்சேஞ்ச் ஒன்று இருக்கிறது. நம்மூர் பங்குச் சந்தைகள் மாதிரிதங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சந்தை இது தான். இதில் 14வங்கிகள் பங்குதாரர்களாக உள்ளன. 

 

இவற்றில் 11 வங்கிகள் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவை. இவை தங்கச் சுரங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துஉற்பத்தி அளவுக்கேற்ப மார்க்கெட் விலையை நிர்ணயிக்கின்றன. உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த புல்லியன் எக்சேஞ்ச் தான். இதில்அங்கத்தினர்களான வங்கிகள் கூடி, "இன்று இதுதான் விலைஎன்று அறிவித்தால்உலகம் முழுவதும் அன்றைய விலையாகஅதுவே தீர்மானிக்கப்படுகிறது. 

 

அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோதங்கச் சுரங்கங்களில் உற்பத்தி குறைந்தாலோகச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோதங்கத்தில் முதலீடு செய்வதும்அதன் தேவையும் அதிகரித்துவிடுகிறது. கையோடுஅன்றைய மார்க்கெட் விலையைலண்டன் புல்லியன் அதிகரித்துவிடுகிறது.

 

 

தங்கம் விலை நிர்ணயத்தின் முக்கிய காரணியாகஆன்-லைன் வர்த்தகம் தான் செயல்படுகிறது. ஆன்-லைனில்,எந்த நேரடி பணப் புழக்கமும் இல்லாமல்வெறுமனே, "இன்றைக்கு எனக்கு இத்தனை கிலோ தங்கம் ஒதுக்கிவையுங்கள்என பதிவு செய்துவிட்டால்உங்கள் கணக்கில் அந்தத் தங்கம் சேர்க்கப்படும். 

 

ஒட்டுமொத்தமாகஇந்தியாவின் தனி மனிதத் தேவைக்குப் பயன்படும் தங்கத்தைஅமெரிக்காவில் இருக்கும் ஒரே ஒரு வர்த்தகரே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துவிடுகிறார். இப்படித்தான்செயற்கை முறையில் தங்கத்தின் தேவை அதிகரிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கம் வாங்குவோரில், 80 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். 

 

20 சதவீதம் வாடிக்கையாளர்கள் தான் செல்வந்தர்கள். விலை உயர்வால் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது,நடுத்தர வர்த்தக மக்கள் தான். இந்த அதிரடி விலை உயர்வால்தங்கள் அவசியத் தேவைக்கு கூட தங்கம் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அந்த வகையில்,தங்கம் விலையை 90 சதவீதம் ஆன்-லைன் வர்த்தகமும், 10 சதவீதம் மட்டுமே தனிமனிதத் தேவையும் நிர்ணயிக்கிறது. இவ்வாறு ஆறுமுகம் கூறினார்.

 

 

தங்கத்தின் கதை: உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில் தான் (இப்போதைய ஈரான்ஈராக்) முதல் முதலில் தங்கம் ஓர் புனிதமானஆடம்பரமான,அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப் பட்டது. கிட்டத்தட்ட அதே காலத்தில்தங்கம் உற்பத்தியில்,முன்னணியில் இருந்த எகிப்தியர்களும்தங்கத்தை சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். 

 

அவர்களும் தங்கத்தை சொந்த உபயோகத்துக்குத் தான் பயன்படுத்தினர். நான்காம்ஐந்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள்தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன் முதலில்பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் கி.மு., 560 - கி.மு., 546ல் ஆண்ட லிடியா (இப்போதைய மேற்கு டர்க்கி) மன்னர் கிரீசஸ் தான். அதில்சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் தான் ,உலகத்திலேயே முதல் முறையாக வர்த்தகப் பயன் பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

 

 

மொத்தத் தங்கம்: தங்க வயல் சுரங்க சேவைகள் என்ற நிறுவனம் 2003ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி,உலகத்தில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 500 டன் புழக்கத்தில் உள்ளது (இதில் உங்கள் வீட்டில் எவ்வளவு இருக்கிறது?). இதில் 61 சதவீதம், 1950ம் ஆண்டுக்குப் பிறகு பூமியிலிருந்து சுரண்டப்பட்டவை. மொத்த தங்கத்தையும் ஒரு கட்டியாகச் செய்தால்நான்கு புறமும் 19 மீட்டர் கொண்ட கனசதுரம் கிடைக்கும். அவ்வளவு தான்.

 

 

சொக்கத்தங்கம்: பொதுவாகதங்கத்தின் மதிப்பு காரட் அடிப்படையில் அளவிடப்படுகிறது. காரட் என்ற வார்த்தை காரப் என்ற விதையில் இருந்து வந்தது. இந்த விதை,கீழ்திசை நாடுகளில்எடைக்கற்களாகப் பயன்படுத்தப்பட்டது. சொக்கத் தங்கம் என்றழைக்கப்படும் சுத்தமான தங்கம், 24 காரட் மதிப்புடையது. 

 

நேர்த்தியான நிலையில், 100 சதவீதம் சுத்தமான இத்தங்கம்நகை செய்ய உகந்தது அல்ல. நகைக்கு பயன்படுத்தப்படும் தங்கம் 22 காரட் உடையது என பரவலாக சொல்லப்படுகிறது. இது 91.67 சதவீதம் சுத்தமான தங்கம். ஆனால், 75 சதவீதம் சுத்தத் தங்கமான18 காரட்டைப் பயன்படுத்தினாலே பெரிய விஷயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்

 -- 

Thanks & Regards,




English proverbs and its meaning, some collection.

K.Raman

__._,_.___

Attachment(s) from Raman K

2 of 2 File(s)

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 15, 2010, 10:55:33 AM2/15/10
to mintamil digest subscribers

அவியல் 


நம்மாழ்வார் காட்டும் பரமபத வழி அனுபவத்தை, அவரின் பாசுரங்கள் மூலம் நாமும் உணர முயற்சிப்போம்.

பரமபதம் செல்கின்ற வைணவர்களைக் கண்டதும், உயிரற்ற மேகங்களும் மகிழ்ந்தன. அவை, இவர்கள் செல்லும் வழியில் உள்ள ஆகாயம் எங்கும் நிறைந்து, தூய கோஷத்தை உண்டாக்கின. கடல்கள், தங்கள் அலைக் கரத்தை உயர்த்தி ஆடின. இப்படி, அந்த வழி எல்லாம் மங்களகரமாகத் திகழ்ந்தது. (முதல் பாசுரத்தின் கருத்து)

நாராயணனின் அடியார்களைக் கண்டு ஆகாயத்தில் தேவர்கள் பூரணகும்பம் ஏந்தி நின்றனர்; தோரணம் கட்டி மகிழ்ந்தனர் (2).

அனைத்து உலகத்தாரும் இவர்களைக் கண்டு, கைகூப்பித் தொழுதனர். முனிவர்கள் வரிசையாக நின்று, ''இங்கே சற்று தங்கிச் செல்லலாம்'' என்றனர் (3).

வழியில் தங்கிச் செல்ல ஏதுவாக, தோப்புகள் அமைத்தும், வாத்தியங்கள் இசைத்தும் தேவர் கள் இவர்களைக் கொண்டாடினர் (4).

தேவர்கள், தங்கள் செல்வங்களை இவர்களுக்கு அளித்து, ஏற்றுக் கொள்ளச் சொன்னார்கள். கின்னரரும் கருடர்களும் இணைந்து கீதம் இசைத்தனர்; வேத ஒலி அங்கே நிறைந்தது (5).

தேவலோகப் பெண்கள் நறுமணப் புகை பரவச் செய்து, இவர்களை வாழ்த்தினர் (6).

மருத் கணங்கள், வஸூக்கள் ஆகியோர் தங்கள் எல்லை வரைக்கும் தொடர்ந்து வந்து இவர்களை வாழ்த்தினர் (7).

பிரக்ருதி மண்டலம் கடந்து, பரமபதத்தின் வாசலை அடைந்த இவர்களை, ஸ்ரீமந் நாராயணனுடன் நித்யவாசம் புரிபவர்களான 'நித்யசூரிகள்' எதிர்கொண்டு

அழைத்தனர் (8).

நாராயணனின் அடியார்களைப் பலவாறு போற்றி, வாசலில் இருந்து அழைத்துச் சென்றனர் (9).

இவர்களை பரமபதத்தில் பலவாறாகக் கொண்டாடினார்கள் (10).

இந்தப் பத்து பாசுரங்களையும் சொல்பவர்கள், ஸ்ரீமந் நாராயணனுடன் நித்யவாசம் புரியும் மேலோர்களான நித்யசூரிகளுக்கு ஒப்பாக வைக்கப்படுவர் என்பதை, 11-ஆம் பாசுரத்தில் தெரிவிக்கிறார் நம்மாழ்வார்!

இப்படி, ஸ்ரீமந் நாராயணனால் பரமபத அனுபவம் காட்டப் பெற்ற நம்மாழ்வார், தாம் விரைவில் அங்கே செல்லப் போவதாக, தம் சிஷ்யரான மதுரகவிகளிடம் கூறினார். இதைக் கேட்டு திடுக்கிட்டார் மதுரகவியாழ்வார்.

குரு என்பவர், சீடரின் ஆத்ம பலத்தைப் பேணி, வலிமை உண்டாக்க வேண்டும். சீடன் என்பவன், குருவுக்கு தகுந்த பணிவிடை செய்து, அவரின் தேகத்தைப் பேண வேண்டும். அந்த வகையில், நம்மாழ்வார் ஒருவரையே எல்லாமாக எண்ணி வாழ்ந்த மதுரகவியாழ்வார், குரு நம்மாழ்வாரைப் பிரிந்து இருக்கப் போவதை நினைத்து வருந்தினார். அவர் வருத்தம் போக்க, நம்மாழ்வார் அவருக்கு தாமிரபரணி

நீரைக் காய்ச்சி, அதன் மூலம் கிடைக்கப் பெறும் உற்ஸவ விக்கிரகத்தை வைத்து பிரிவாற்றாமையை தணித்துக் கொள்ளச் சொன்னார் என்பதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

நம்மாழ்வார் பரமபதம் அடைந்த பிறகு, தாம் பெற்றுக்கொண்ட நம்மாழ்வாரின் விக்கிரகத்துக்கு சிறப்பான வழிபாடுகளைச் செய்து வந்தார் மதுரகவியாழ்வார். இந்த நேரத்தில், மதுரை தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த சிலர், ''உமது குரு என்ன தமிழ்ச் சங்கம் ஏறிய புலவரா? அவர் பாடிய திருவாய்

மொழி சங்கம் ஏறிய செய்யுளா? இவரை வேதம் தமிழ்செய்தவர் என்று எப்படி சிலாகிக்கலாம்?'' என்றெல்லாம் குதர்க்கம் பேசினர்.

இதனால் வேதனை அடைந்தார் மதுர கவியாழ்வார். அவர் தனது குருவைத் தவிர

வேறு எவரிடமும் செல்லாதவர் ஆயிற்றே! எனவே, நம்மாழ்வாரிடமே பிரார்த்தித்தார். அவரும் மதுரகவிக்கு காட்சியளித்து, ''கண்ணன் கழல் இணை - திருவாய்மொழி பாசுரத்தை ஓலையில் எழுதி, 'இந்த ஓலையை சங்கப் பலகையின் மேல் வையுங்கள்' என்று, தமிழ்ச் சங்கத்தாரிடம் கொடுத்துவிடுக!'' என்றார் மதுரகவிகளிடம்!

அப்படியே செய்தார் மதுரகவி. தமிழ்ச் சங்கத்தில் விசையுடன் கூடிய பெரிய பலகை போடப்பட்டது. தமிழ்ச் சங்கப் புலவர்கள் அனைவரும் தாம் எழுதிய கவிதைகளுடன் பலகையின் ஒரு பக்கத்தில் அமர்ந்தனர். மறுபுறம், இந்தச் சிறு ஓலை வைக்கப்பட்டது. அவ்வளவுதான்! தமிழ்ப் புலவர்களையும், அவர்களின் ஏடுகளையும் தூக்கி எறிந்தது சங்கப் பலகை; ஓலை வைக்கப்பட்ட இடம் பாரம் மிகுந்திருந்தது! இதனால், இறுமாப்பு அழிந்த புலவர்கள், மதுரகவிகளிடம் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வணங்கினர்.

பிறகு, அவர்கள் அனைவரும் நம்மாழ்வார் குறித்து தனித்தனியே அமர்ந்து பாடலை எழுதினர். அவர்கள் அனைவரிடம் இருந்தும் வாங்கிப் பார்த்த ஓலையில் இருந்தது ஒரே ஒரு பாடல்தான்! அதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். நம்மாழ்வாரைப் போற்றி வணங்கினர். அந்தப் பாடல்...

சேமங் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ - தாமந்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு
முளவோ பெருமான் உனக்கு!

இப்படி, தம் குருவான நம்மாழ்வாரின் பெருமையை யாரும் குறைத்து மதிப்பிடாதபடி, அவரது விக்கிரகத்தை பன்மடங்கு சிறப்புறக் கொண்டாடி, பிறப்பிலாத பெருவீடு அடைந்தார் மதுரகவியாழ்வார்.

பெரியபெருமாள் திருவடியைவிட தம் குருவின் திருவடியே உயர்ந்தது என்று வாழ்ந்தவர் மதுரகவியாழ்வார். நம்மாழ்வார் குறித்து இவர் எழுதிய 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' பாசுரம்தான், நாலாயிர திவ்யப் பிரபந்தம் வெளிப்பட காரணமாக இருந்தது. நம்மாழ்வாரை தரிசிக்கும் பேறும் நாதமுனிகளுக்குக் கிடைத்தது! இதற்கு காரணமும் ஒரு பாசுரம்தான்!

ஆராஅமுதே! அடியேன் உடலம் அன்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்றன நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தால் கண்டேன் எம்மானே

தல யாத்திரை செய்துகொண்டிருந்த ஒருவர்... கும்பகோணம் ஆராவமுதப் பெருமாள் சந்நிதியில் இந்தப் பாசுரத்தை மெய்யுருகப் பாடிக் கொண்டிருந்தார். அங்கே, பெருமாளின் தரிசனத்துக்கு வந்த மகாயோகி நாதமுனிகளின் காதுகளில் இந்தப் பாசுரம் விழுந்தது. அந்த நொடியில், நாதமுனிகளின் மெய்யுணர்வு எதையோ உணர்த்தியது. இந்த உணர்வே, தமிழ் அமுதமாம் நாலாயிர திவ்ய பிரபந்தம் கிடைப்பதற்குக் காரணமானது. இதற்குக் காரண கர்த்தா... ஆராவமுத பெருமாள்!

பன்னீராயிரம் முறை கண்ணிநுண்சிறுத்தாம்பு பாசுரத்தைப் பாடி, நம்மாழ்வார் தரிசனத்துடன் அவரிடம் இருந்து பிரபந்தங்களையும் பெற்று, தன்னுடைய மருமகன்களான மேலையகத்தாழ்வான்,

கீழையகத்தாழ்வான் மூலம், இயல்-இசை எனும் வடிவில், பாசுரங்கள் மக்களிடையே பிரபலம் அடையக் காரணமானார் ஸ்ரீமந் நாதமுனிகள். இவரால்தான், அரையர் இசை எனும் தெய்விக இன்னிசை-நாட்டிய வழிமுறைஏற்பட்டது.

அரையர் என்பதற்கு மன்னன் என்றொரு பொருளும் உண்டு. இயல்-இசை-நாட்டியம் ஆகியவற்றில் ராஜா போன்று திகழ்ந்த தால் இந்தப் பெயர்!

ஸ்ரீரங்கத்தில் கீழ உத்திர வீதி முழுவதுமே அரையர்களால் சூழப்பட்டிருந்ததாம்! இந்த வீதியை 'செந்தமிழ் பாடுவான் வீதி' என்றே அழைத்திருக்கிறார்கள்! ஸ்ரீராமாநுஜர் காலத்தில் 700 அரையர்கள் இருந்தார்களாம். அரையர்கள் வீட்டில் குழந்தை பிறந்தால், அப்போது அவர்களின் மனதில் தோன்றும் திவ்யதேச பெருமாளின் பெயரை குழந்தைக்கு சூட்டி, அந்தத் தலத்துக்கான பிரபந்தங்களையும் அவர்களுக்கு விசேஷமாகக் கற்பிப்பார்களாம்! அதன்மூலம், அந்த அந்தத் தலத்து அரையர் சேவை பிரபந்த இசை பரம்பரையாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், நம்பி கருணாகர தாஸர், ஏறுதிருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலை தேவியாண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான் ஆகிய எட்டு பேருக்கு, சகல வேத சாஸ் திரங்களையும், திவ்யப் பிரபந்தங்களையும் கற்பித்தார் ஸ்ரீமந் நாதமுனிகள். குருகைக்காவலப்பனுக்கு அஷ்டாங்கயோகக் கிரமத்தினை அளித்தார். இந்த அஷ்டாங்க யோகத்தை கற்க மறுத்துவிட்ட உய்யக்கொண்டாருக்கு சாஸ்திரங்களையும் பிரபந்தங்களையும் கற்பித்தார்.

நாதமுனிகளுக்கு ஈஸ்வரமுனி என்று ஒரு புத்திரர். நாதமுனிகள், தமது யோக நிஷ்டையால், தமக்கு தலைசிறந்த வைணவர் ஒருவர் பேரனாகப் பிறக்கப் போவதை அறிந்தார். தன் புத்திரனை அழைத்து, அவனுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் என்று பெயர் வைக்கும்படி சொன்னார். தன் சீடர்களான குருகைக்காவலப்பனையும், உய்யக் கொண்டாரையும் அழைத்து, தனக்குப் பிறக்கப்போகும் பேரன் யமுனைத்துறைவனுக்கு குருவாக இருந்து, தாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அனைத்தையும் அவனுக்கு கற்பிக்கும்படி சொல்லிவிட்டு, யோகத்தில் ஆழ்ந்தார் நாதமுனிகள்!

நன்றி;சக்திவிகடன் )

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 15, 2010, 10:59:50 AM2/15/10
to mintamil digest subscribers

அவியல்

தற்போது தஞ்சாவூரில்- வெண்ணாற்றங்கரை பகுதியில் இடுகாடாகத் திகழும் இடம், அந்தக் காலத்தில் சோலைவனமாக இருந்ததாம். அரக்கர்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள் அனைவரும் இந்த வனத்தில் ஒன்றுகூடி, உலக நன்மைக்காக யாகம் நடத்தினர். ஆனால் அரக்கர்களோ, 'தங்களை அழிக்கவே தேவர்கள் யாகம் வளர்க்கின்றனர்' என்று கருதி, யாகத்தைத் தொடரவிடாமல் தொல்லை கொடுத்தனர்.

மனம் வெதும்பிய தேவர்கள், சிவனாரிடம் சென்று முறையிட்டனர். அவரோ, ''பராசக்தியிடம் வேண்டிக் கேளுங்கள்'' என்றார்.

தேவர்களும் தங்களின் துன்பத்தைத் தீர்த்து வைக்கும்படி பராசக்தியிடம் வேண்டினர்.

அவர்களது இன்னல்களைப் போக்க திருவுளம் கொண்டாள் பராசக்தி. தஞ்சையின் வடபகுதியில்- ஸ்ரீதஞ்சை புரீஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் ஆனந்தவள்ளியின் சக்தியையும், சிவனின் சக்தியில் ஒரு பகுதியையும் சேர்த்து புதிதாக ஓர் அம்மனை படைத்தாள். அவள்தான் கோடியம்மன்!

பராசக்தியால் படைக்கப்பட்ட கோடி அம்மன் வானத்தில் இருந்து, பச்சைத் திருமேனியளாகக் காட்சி தந்த இடம் காளி மேடு. இதுவே இப்போது, கோடியம்மன் கோயிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில், களிமேடு கிராமமாகத் திகழ்கிறது! அரக்கர் களின் கொட்டத்தை அடக்க பூமிக்கு வந்த ஸ்ரீகோடியம்மன், தனது மூக்குத்தியைக் கழற்றி வீசி வடவாறு எனும் நதியை உருவாக்கினாள். அதுதான் இப்போது தஞ்சை மணிமுத்தாறாக மாறியிருக்கிறது.

கோடியம்மனின் வருகையை கேள்விப் பட்டு தஞ்சனும், தாரகனும் தாங்களாகவே அவளிடம் போரிட வந்தனர். அப்போது காளி அவதாரம் எடுத்த கோடியம்மன் அரக்கர்களை ஓட ஓட விரட்டினாள். அவளிடமிருந்து தப்பிக்க அடுத்தடுத்து அவதாரங்களை எடுத்தனர் அரக்கர்கள். பதிலுக்கு... அரக்கர்களை அழிக்க அம்மனும் கோடி அவதாரம் எடுத்தாள். இறுதியில், அரக்கர்களை அழித்தாள் கோடியம்மன். உயிர் பிரியும் நேரத்தில், ''இவ்வளவு காலமும் இந்த இடத்தில் செல்வாக் குடன் இருந்து விட்டேன். அதற்கு அடையாளமாக, நான் இறந்த பிறகும் இந்த இடத்துக்கு எனது பெயரே நிலைக்க வேண்டும்'' என்று அம்மனிடம் கோரிக்கை வைத்தான் தஞ்சன். கோடியம்மனும் அதற்கு சம்மதித்தாள். அன்று முதல் அழகைபுரி, 'தஞ்சன் ஆவூர்' என்றானது. இந்தப் பெயரே தஞ்சாவூர் என்று மருவியதாம்.

அரக்கர்களை வதம் செய்ய பச்சைத் திருமேனியுடன் அவதரித்து வந்த கோடியம்மன், அரக்கர்களை சம்ஹாரம் செய்தபோது, அவர்களின் ரத்தம் பட்டு உடம்பெல்லாம் பவள (சிவப்பு) வண்ணமாக காட்சியளித்தாளாம். அசுரர் வதத்துக்குப் பிறகு ஆங்காரமாக தாண்டவமாடிய கோடியம்மன், வெண்ணாற்றங் கரையில் வந்து அமர்ந்தாள். அன்றிலிருந்து அவளே, தஞ்சை மக்களைக் காக்கும் எல்லை தெய்வம் ஆனாள்.

காளி அவதாரமாக வந்தவள் என்பதால்... காத்துக் கருப்பு, பில்லி- சூனியம் போன்ற தீய சக்திகளால் ஏற்பட்ட

பாதிப்புகளுக்கு நிவர்த்தி அளிப்பதில் கண்கண்ட தெய்வம் இவள். மாதந்தோறும் இங்கே நடைபெறும் பௌர்ணமி பூஜையின் போது... திருமணத் தடை, குழந்தையின்மை உள்ளிட்ட சிக்கல் இருப்பவர்கள் இங்கே வந்து பூஜை செய்தால் குறைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இதேபோல், அம்மனுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நாகதோஷம் நீங்குமாம். இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீவிஷ்ணு துர்கைக்கு, வெள்ளிக் கிழமைகளில் ராகு கால பூஜை செய்தால், திருமணத் தடைகள் நீங்கும்; வெள்ளி, செவ்வாய், ஞாயிறு உள்ளிட்ட நாட்களிலும் ஆடி மாத வெள்ளிக் கிழமைகளிலும் கோயில் வாசலில் ஜனத் திரளைப் பார்க்கலாம்.

தஞ்சாவூரின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கிறது கோடியம்மன் கோயில். கோயில் முகப்பில் இடப்புறம் முருகன்; வலப்புறம் விநாயகர். விநாயகருக்கு சற்று தள்ளி தேவியருடன் ஐயனாரும், அடுத்து மதுரை வீரனும் அருள்கின்றனர். அம்மனுக்குள் சிவனும் அடக்கம் என்ற ஐதீகத்தின் அடிப்படையில் முகப்பில் நந்தி சிலையை வைத்திருக்கின்றனர். உள்ளே கோயிலின் கருவறையில் பவளத் திருமேனியுடன், ஆக்ரோஷ கோலத்தில், சூலாயுதம் ஏந்தி நிற்கிறாள் ஸ்ரீகோடியம்மன். அடுத்துள்ள சிறிய மண்டபத்தில்... இடப் பக்கம்- பவளக்காளியும் வலப் பக்கம்- பச்சைக்காளியும் இருக்கின்றனர்.

கருவறை மண்டப முகப்பில் இரண்டு பக்கமும் துவார சக்திகள் நிற்கின்றனர். வெளி மண்டபச் சுவர்களில் கோடியம்மன் அவதாரக் கதையை ஓவியங்களாகத் தீட்டி வைத்துள்ளனர். வெளிப் பிராகாரத்துக்கு வந்தால் நாகக் கன்னி, ஸ்ரீபாலதண்டாயுதபாணி, ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீசிவ துர்கை, ஸ்ரீவிஷ்ணு துர்கை, ஸ்ரீகாலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களை ஒரே இடத்தில் அடுத்தடுத்து தரிசிக்கலாம்.

ஆண்டுதோறும் மாசி அல்லது பங்குனி மாதத்தில் கோடி அம்மனுக்கு திருவிழா. தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஐயனாருக்கு திருவிழா முடிந்ததும் கோடியம்மனுக்கு காப்புக் கட்டி திருவிழா ஆரம்பமாகும். அம்மன் திருவிழா வில் பச்சைக்காளி மற்றும் பவளக்காளி சிரசுகளை மட்டும் அலங்கரித்து தூக்கி வருவர். இதற்காக இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். இவர்கள், திருவிழாவுக்கு 40 நாட்களுக்கு முன்பே கடும் விரதத்தைத் தொடங்கி விடுகிறார்கள். திங்கள் கிழமை இரவில் அம்மனுக்கு காப்புக்கட்டு. அதற்கு முன்னதாக அம்மனின் பூஜைப் பொருட்கள் அடங்கிய பெட்டிகளை, மேல வீதி- ஸ்ரீகொங்கனேஸ்வரர் கோயிலில் இருந்து எடுத்து வருகின்றனர்.

காப்புக்கட்டு முடிந்ததும் செவ்வாய்க்கிழமை காலையில், ஸ்ரீகொங்கனேஸ்வரர் கோயிலில் வைத்து பவளக்காளி சிரசும், ஸ்ரீசங்கரநாரா யணர் கோயிலில் வைத்து பச்சைக்காளி சிரசும் ஜோடிக்கப்படுகின்றன. பிறகு, இதற்கென விரதம் இருந்தவர்கள், காளிகளின் சிரசுகளைத் தூக்கிக் கொண்டு, தஞ்சையின் முக்கிய வீதிகளில் சென்று ஆசி வழங்குவர்.

அப்போது, வீடு தவறாமல் காளிகளுக்கு பூஜை செய்து வழிபாடு நடக்கும். புதன் கிழமை இரவு இரண்டு காளிகளும் மேலரத வீதியில் நேருக்கு நேர் சந்திக்கும் உறவாடல் நிகழ்ச்சி நடக்கும். அசுரனைக் கொன்ற காளி, ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்ச்சியாக இதை வர்ணிக்கின்றனர். அன்று பின்னிரவில் காளிகள் இருவரும் தஞ்சை அரண்மனைக்குச் சென்று சிம்மாசனத்தில் அமர்வர்.

மறுநாள் பகலில் அரண்மனையில் இருப்பவர்கள், காளிகளுக்கு சேவகம் செய்வர். வியாழன் மதியத்துக்கு மேல் அங்கிருந்து புறப்படும் காளிகள், அன்று இரவு மீண்டும் மேல ரத வீதியில் உறவாடி பிரிவர். பிறகு இரண்டு காளிகளும் முறையே கொங்க னேஸ்வரர் கோயிலுக்கும் சங்கரநாராயணர் கோயிலுக்கும் திரும்புவர்.

வெள்ளியன்று காலையில் கோடியம்மன், பச்சைக் காளி, பவளக்காளி, சூலப்பிடாரி ஆகிய தெய்வங்களின் உற்ஸவ மூர்த்திகள், தஞ்சை நகருக்குள் இருந்து புறப்பட்டு, கோடியம்மன் கோயிலுக்கு வந்து சேர்வர். அன்று இரவு காளிகள் இருவரும் பிறந்த இடமான

களிமேட்டுக்குச் செல்வர். சூலப்பிடாரியை பொந்திரி பாளையத்துக்கு தூக்கிச் செல்வர். இரவு இந்த இரண்டு ஊர்களிலும் கிடாவெட்டு பூஜைகள் நடக்கும்.

சனிக்கிழமை மதியம் காளிகள் மீண்டும் கோடியம்மன் கோயிலுக்குத் திரும்புவர். ஞாயிற்றுக்கிழமை அன்று செட்டியார் இனத்து மக்கள் பால்- பழம் எடுத்து வந்து கோடியம்மனுக்கு படையல் வைப்பர். அன்று மதியம் காப்பு அவிழ்த்ததும், பாலபிஷேகம் செய்து அம்மனை குளிர்வித்த பிறகு, கோயில் வாசலிலேயே அன்னதானம் நடக்கும். அத்துடன் திருவிழாவும் நிறைவுக்கு வரும்.

தஞ்சை பெரிய கோயில் கட்ட 
உத்தரவு கொடுத்த கோடியம்மன்

சோழர்கள் ஆட்சியில், அரண்மனையில் எந்த முக்கிய முடிவுகள் எடுத்தாலும், கோடியம்மன் கோயிலுக்கு வந்து உத்தரவு வாங்காமல் செய்ய மாட்டார்களாம். இன்னும் சொல்லப் போனால்... ஸ்ரீகோடியம்மனிடம் உத்தரவு வாங்கிய பிறகே தஞ்சை பெரிய கோயிலை கட்டத் துவங்கினாராம் ராஜராஜ சோழன். எனவேதான், தஞ்சை அரண்மனை தேவஸ்தான இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 88 கோயில்களில், பிரதானமாகத் திகழ்கிறது ஸ்ரீகோடியம்மன் கோயில்.

இந்த அம்மன், அரக்கர்களை அழித்ததும் வெண்ணாற்றங் கரையில் ஸ்ரீஆனந்தவள்ளி அம்மனின் சந்நிதி பார்க்க வந்து அமர்ந்தாள். அந்தக் காலத்தில் ஆனந்தவள்ளி அம்மனுக்கு பூஜை நடந்தால், அதை கோடியம்மன் கோயிலில் இருந்தபடியே பார்க்கலாமாம். இப்போது ஊர் விஸ்தாரமாகி நிறைய கட்டடங்கள் வந்து விட்டதால், ஆனந்தவள்ளி அம்மன் கோயில் சந்நிதி, கோடியம்மனின் பார்வையை விட்டு மறைந்து விட்டது. என்றாலும், இன்றைக்கும் கோடியம்மனை ஆனந்தவள்ளியின் அவதாரமாகவே பார்க்கிறார்கள் தஞ்சை மக்கள்.

நன்றி;சக்தி விகடன் 
)அவியல்; 

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 16, 2010, 12:31:37 AM2/16/10
to mintamil digest subscribers

அவியல்
 
The TiruppAvai I am sure will bear just one more round of comparison with the idea of the modern "box-office hit" cinema  if only to serve my main purpose in penning  this series of postings: viz. to drive home the point that this ancient and exquisite Tamil hymn always arouses a variety of "ordinary" interests in a variety of "ordinary people" in a variety of "ordinary ways".

What makes a Bollywood/Hollywood movie a "smash-hit"? An avid movie-goer will tell you (I am not one, by the way) that it is not only the overall entertainment value it has for the  audience; it is also, and perhaps more importantly, in certain "frames", in certain "sequences" or in particular "scenes" in it that are memorable or "unforgettable" . Long after one has watched the movie, once or perhaps even several times, one may feel over time that its original vividity is beginning to pale. But what will remain, however, forever stuck in one's memory, as fresh and unwaning as the matinee show in which it was first witnessed, are particular "scenes" or "sequences" in the movie. They are of a certain "gripping" quality and they remain indelibly etched in the viewer's memory for several long years and eventually become a permanent store-house of personal joy to him/her as he/she recollects, re-enacts them at will within the mind and enjoys them at leisure
---- not unlike the famous English poet who while describing the same experience in a different context wrote these immortal lines:

             "When oft upon the couch I lie
               In vacant or in pensive mood,
              They flash upon the inward eye
               Which is the bliss of solitude"
                                  (W.Wordsworth "The Daffodils") 

                         ************ ****

Now, in the TiruppAvai, once again, it is the individual phrases or particular set of expressions in it that are to the hymn what individual "scenes" or particualr "sequences" are to the "box-office smash-hit". Collectively, or in combined effect, they make the TiruppAvai what it truly is: a work non-pareil of art, literature, philosophy and theology all seamlessly and excellently created. But individually, in no less a measure, they stand out as "unforgettably" brilliant gems of classic, epigrammatic thought. They stand out in their own right quite apart from the poem as a whole and in this  aspect a movie-buff might be tempted to characterize them as is his/her wont in terms such as "a super-scene" , a "humdinger of a sequence", a "dazzling flash-point" , "a consummative masterstroke in the narrative flow of creative inspiration" etc...   

There are several such special individual "phrases" or expressions in the TiruppAvai that can be quoted as examples. In fact, the traditional TiruppAvai commentators, the great "vyAkhyAna-kartAs" all invariably weave their splendid "vyAkhyAnam- s" principally around "individual expressions/ phrases". Their methodology is pretty standard: they will take up a stanza, first give a "word by word" literal analysis, then proceed to give a summary of the meaning  of the  stanza against the  dramatic context of the TiruppAvai; then will follow a brief dissertation on some fine nuance regarding  the poetic merit, grammatical or prosodic quality of the passage; if there are any "paurAnic" or mythological allusion to be highlighted they will by duly covered; and then finally, will come the "svApadEsam" which is the culling out of "esoteric essence" contained  in the particular stanza, the "essence" being either latent Vedantic philosophy or some fine theological
doctrine disguised in allegory.

And it is while elaborating the "svApadEsam" , that the commentators will be seen to be building their case quite predominantly on the strength of "individual expressions" or "particular phrases". They will pick a single "phrase" in the stanza and then subject it to such intense analysis as to derive layer upon layer upon layer of "interpretative significance" from out of it.

One very popular example of how traditional "vyAkhyAnam" is built  up around a mere phrase or expression in the TiruppAvai is the line from Stanza 19 containing the words

        ".. metthenra pancha-sayanattin mEl eri"...

The literal meaning of this phrase is "cotton bedding or bedding of any fabric that has 5  essential features ("pancha-sayanam" ) of "beauty, coolness, whiteness, softness and fragrance". But when this phrase is taken up by the commentators for exegesis in the "svApadEsam" section of their dissertation, they show how in the simple phrase lies hidden the profound 5-fold doctrine of "artha-panchaka" in SriVaishnava theology, the "5 principles of spiritual awareness" essential for Man to ascend to Godhead. They are enumerated in rather technical terms:

         (1) "paramAtma svarUpa"- the nature of the Supreme Being or
                                   Reality
         (2) "jIvAma svarUpa"- the nature of human existence
         (3) "upAya svarUpa"- the nature of means to transcend human
                              condition
         (4) "virOdhi svarUpa"- the nature of impediments to or the
                                struggle involved in transcending the
                                human condition
         (5) " purushArtha svarUpa": the nature of spiritual liberation

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 16, 2010, 12:34:23 AM2/16/10
to mintamil digest subscribers
அவியல்
 
Thai Hastham Kuresa Thirunakshathram. 1000 years ago- Swami appeared for our sake. A personification of Athma guNAs. A wonderful prathama sishya of Sri Ramanuja....

Let us enjoy the seventh verse of Amudhanaar's
Iraamaanusa nooRRanthAthi:

Though I am not qualified, what I am doing is apt for
my swaroopam. There is nothing worng. adiyEn due to
KooratthAzhwAn sambandham, can compose these verses.
EmperumAnAr Ramanuja’s glories are ineffable. yathO
vaachO nivartthanthE apraa aapya manasa sa: Where the
words can not reach, the mind also can not describe or
contemplate the glories. Knowing fully well, one
can’t still stop praising Ramanuja. It is one’s
karthavyam [duty] to do so. It is not to fully
comprehend His glories and sing; but attempt and show
his gratitude. Why are you trying then- one may ask
me. You may try on your own acharya KoorathhAzhwAn. He
is also beyond one’s description as he has crushed
three kuRumbu. [described below]. Even foe one
sthuthi, I am not qualified. How can I compose two
sthuthis – one on Ramanuja and another on AzhwAn. It
si AzhwAn’s grace that I can even think of
attempting this. He [AzhwAn] gets pleased by such an
attempt of mine because I am praising his acharya-
Paramaachaarya.

mozhiyaik katakkum perumpuka zaan,vancha mukkuRumpaam
kuzhiyaik katakkumn^am kooraththaaz vaan_charaN kootiyapin
pazhiyaik kataththum iraamaa Nnuchanpukaz paatiyallaa
vazhiyaik kataththal enakkini yaathum varuththamanRE. 7

Indescribable KooratthAzhwAn (Sri Ramanujacharya' s
prime disciple) has got immense and enormous greatness
in him; He could get rid of and is able to cross over
the three great pitfalls that pushes one down with its
strong influence and do great damage to the individual
(they are: False pride for being born in the highest
caste; for being blessed with the good education and
jnAnam; for being a strict follower of VairAgyam and
anushtaanam - AzhwAn has no pride even though he
fulfils and has all three above attributes! What a
personality! ) I, after taking refuge at his feet, am
able to compose on the greatness of Emperumaanaar Sri
Ramanujacharya, (who enables his disciples get over
their karmic bondage and samsaaric afflictions) , and
am able to go away from the track of being away from
the Greatest Bliss. Hence, there is no grievance or
regret for me.

When one sings of Ramanuja, all sins would vanish.
EmperumAnaar, his millions of sishyas and their
sishyas, their ArAdhyan Lord RanganAthan- 0 due to
Their limitless compassion and dayA on me, all my
paapms would evaporate. Emeprumaanaar, is the acharyan
of asmadhAchArya [my acharya] Swami KooratthAzhwAn,
who has crossed the great pitfalls. Thus my sthuthi is
also kind of Acharya sthuthi. As per saasthrAs, when
Acharya’s acharya is present, one should first
prostrate at Pracharya and then only Acharyan. It is
Sishya kruthyam.

Sishya’s Parama purusha praapthi [The ultimate goal
of attaining Parama Purush’a Lotus Feet] alone is
the consideration and thinking of Acharyas.
Acharya’s glory and praising their greatness alone
is the goal and thought of sishyas. KooratthAzhwAn
thus has been immensely pleased about these verses
that are sung in praise of his acharyan, Swami
Emperumaanaar and thus adiyEn [Amudhanar] is also
happy about that as it is my acharyan ThiruvuLLam.
Kaimkaryamaavadhu Swami ugandha yEval thozhil
seyvadhu- says Swami Desikan. Kaimkaryam is serving
what is acharya’s thiruvuLLam [in acharyan’s
mind]. Thus, these verses are accepted and are enjoyed
by Acharyan, Praachaaryan as well as all millions of
Paramacharya’s sishyas.Mozhiyai kadakkum.. vanja
mukkuRumbaam kuzhiyai kadakkum…

AmudhanAr further says kooraththAzhvan is the One
who has surpassed the mukkuRumbhu. What is mukkuRumbhu?

Smt Sumitha Varadarajan adds beautifully:

It is nothing but considering oneself great due to the
wealth he possesses, or due to the family or caste in
which he is born or due to his educational
qualification or intelligence. KooraththAzhvan had
all the three. He was so wealthy that he used to do
anna dhAnam throughout the day which even surprised
perundEvi thAyar of kAnchipuram, who is none other
than the goddess of wealth (SridEvi). KooraththAzhvan
was a high class Brahmin but he never cared about
that, he cared about only rAmAnuja sambhandham and
considered all rAmAnuja sambhandhis irrespective of
their birth to be equal. Thirdly, the intelligence of
ooraththAzhvan. Azhvan is the prime reason for us to
have got SribhAshyam today. He was an Ekasandha krAhi
(one who learns all the lessons in just one session).
He just out of interest scanned through the pages of
the bhOdhAyana vriththi grandham got from the
saraswathi bandharam during the nights when ethirajar
was asleep.

After losing the grantham to others, rAmAnujar was
struck with grief but Azhvan with great confidence
assured that he can recollect whatever he has read in
the two or three nights and since he has seen through
the whole book he will help EmperumAnAr with the
writing of SribhAshyam. Only with this confidence
EmperumAnAr started writing the bhAshyam and completed
it successfully. In appropriate places, Azhvan
corrected EmperumAnAr without any hesitation. Such
was the understanding between the acharya and shisya.
But at no time did Azhvan feel that he is more
intelligent and great. He always considered himself to
be only the shisya of EmperumAnAr.

The three egos, which generally puts down a person was
won by koorththAzhvan and that has been remarked by
amudhAnAr in the above paasuram.

Azhvan gave his darshan for our darshanam (rAmAnuja
darshanam). He is the acharya who saved the life of
our ethirajar. Even when ethirajar forced him to pray
to the lord to grant him vision he refused saying that
it is against the norms of a prapanna to ask for
anything from the lord. A prapanna is deemed to
accept whatever the lord grants him and always remain
in the service to the lord. KooraththAzhvan showed it
in practice. Even after loosing vision he did not
keep quiet but continued to do pushpa (flower)
kainkaryam to Azhagar in thirumAlirunchOlai. He sang
excellent prabhandams famously known as panchastavams
viz., Sri Vaikunda stavam, athimAnusha stavam,
sundarabhAhustavam, VaradarAja stavam, Sri stavam.
Thanks to Smt Sumithra Varadarajan. [if one wishes to
inculcate Athma guNAs, one needs to constant
contemplate on Swami KooratthAzhwAn’s glories. ]

AzhwAn, even when Ramanjua was writing the Sri
bhashyam, used to write what Ramanuja orally tells and
AzhwAn will check if it is alignment with what he had
read in bodhayanavritthi. If there is any
inconsistency, he would not even voice due to greatest
respect for acharyan and Ramanuja would understand and
revisit what he had said to enhance and improve upon.
AzhwAn would happily start again. That is sishya
lakshaNam.

Though he himself had such an apaara jnAnam, he had
sent his sons Vyaasa bhattar and Parasara bhattar to
Embaar. No vidhyAmadhakuRumbu.
EmeprumAnAr ThiruvaDigaLE SaraNam
Regards
Namo Narayana

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 16, 2010, 12:45:18 AM2/16/10
to mintamil digest subscribers


அவியல்   The Parrot Advice

 The Parrot Advice is worth


A man had a parrot of which he was excessively fond. He kept it in a silver cage and fed it fruits and nuts and anything else the bird asked for, for the parrot was so clever it could engage in conversation.

The parrot longed for freedom and often asked for it but the merchant would always reply: “Ask for anything else.”

One day the parrot said to him: “Give me freedom and I’ll give you three pieces of advice that could be of great benefit to you.”

The merchant loved the parrot but he loved money more. He thought: “If his advice helps me amass wealth, it would be worth it.”

“Go,” he said, opening the cage.

The parrot hopped out onto his hand.

“Never grieve over loss of wealth,” he said. The merchant thought it was tame advice but said nothing.

The parrot flew to the roof of the merchant’s house. “This is my second advice,” he said. “Never believe everything that is told to you.”

“Tell me something that I don’t know,” said the man, sounding annoyed.

“What you don’t know is that I’ve two priceless gems in my stomach,” said the bird.

“Two priceless gems,” echoed the merchant. “Oh, what a fool I was to set you free! I’ll regret this for the rest of my life!!”

“Don’t you want to hear my third advice?” asked the parrot.

“Tell me,” said the merchant, bitterly.

“I advised you never to grieve over losses but here you are grieving over losing me,” said the parrot.

“I advised you never to believe everything you hear but you immediately believed me when I told you I had two gems in my stomach. Could I have survived if I really had two gems in my stomach?” said the bird.

Then it added, “My third advice is, Listen, learn to listen with your mindinstead of just with your ears.”

And with that, the parrot flew away, leaving the merchant gaping.

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 16, 2010, 10:28:36 AM2/16/10
to mintamil digest subscribers
அவியல் 

ராமானுஜர் அஷ்டாக்ஷரம் எனப்படும் "ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தின் பெருமையை உலகிற்கு அறிவித்த தலம் திருக்கோஷ்டியூர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள பெருமாள் கோயில் கோபுரத்தின் மீதேறி ஊராரைக் கூவியழைத்த ராமானுஜர், இந்த மந்திரத்தைச் சொன்னால், பரமபதத்தை அடையலாம் என்ற ரகசியத்தை தனது குரு திருக்கோஷ்டியூர் நம்பியின் ஆணையையும் மீறி செய்தார். ஊர் நலனுக்காக குரல்கொடுத்த தன் சீடரை, ""எம்பெருமானாரே! நீரே உத்தமர்,'' என்றார். இதன்பிறகே, ராமானுஜருக்கு "எம்பெருமானார்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. காசி மன்னரான புரூரவஸ் சக்கரவர்த்தி தீர்த்தயாத்திரையாக ராமேஸ்வரம் சென்றபோது, வழியில் கண்ட திருக்கோஷ்டியூர் தலத்தின் பெருமை அறிந்து தங்கி கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வித்தார். அப்போது மாசிமகம் நெருங்கிவிட்டது. புனித நீராடுவதற்காக பெருமாளை வேண்டினார் மன்னர். அவருக்கு உதவும் வகையில் பெருமாளே ஒரு கிணற்றை உண்டாக்கினார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகத்தன்று இக்கிணற்றுக்கு கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருள்வது வழக்கம். இக்கோயிலில் ஏதாவது வேண்டுதலை மனதில் எண்ணி, விளக்கு ஒன்றினை ஏற்றி, அதை வீட்டுக்கு கொண்டு வந்து விடவேண்டும். பிரார்த்தனை நிறைவேறிய பின் நம்மால் முடிந்த அளவுக்கு விளக்குகளை கோயிலில் ஏற்றி வைக்க வேண்டும். குறிப்பாக மாசி மக தெப்பவிழாவில் இவ்வேண்டுதலை செய்வதற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவது சிறப்பு. பிப்ரவரி 28ல் மாசிமக தெப்பத்திருவிழா 

கடலூர் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணத்தில், பெருமாள் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதார கோலத்தில் அருளுகிறார். இவரை "பூவராகர்' என்கின்றனர். பெருமாளின் இத்தகைய கோலத்தை தரிசிப்பது மிகவும் அரிது.

தல வரலாறு: இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை, கடலுக்கடியில் ஒளித்து வைத்துவிட்டான். இதனால் வருத்த மடைந்த பூமாதேவி, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து கடலுக்கடியில் சென்றார். அசுரனை அழித்து, பூமியை மீட்டு வந்தார். "பூ' எனப்படும் பூமியை, வராக அவதாரம் எடுத்து, தன் கோரைப்பற்களில் முட்டி தூக்கி வந்தார். இதனால், இத்தலம் "திரு முட்டம்' என அழைக்கப்பட்டு பின், "ஸ்ரீமுஷ்ணம்' என மருவியது. சுவாமிக்கு "பூவராகர்' என்ற பெயர் வந்தது.

சங்கு, சக்கரம் மறைத்த பெருமாள்: இரண்யாட்சகனை பெருமாள் அழித்த போது அவன் சுவாமியிடம், எப்போதும் தான் இருக்கும் திசையைப் பார்த்தபடி இருக்குமாறு வேண்டிக்கொண்டான். சுவாமியும் அவ்வாறே அருள் செய்தார். எனவே, சுவாமி இடுப்பில் கைவைத்தபடி, மேற்கு நோக்கி நின்றாலும், முகத்தை மட்டும் தெற்கு நோக்கி திரும்பி காட்சியளிக்கிறார். காக்கும் கடவுளான மகாவிஷ்ணு அசுரனை அழித்த வேளை யில், தன் செயல் குறித்து அசுரன் வருந்துவான் என நினைத்து, சங்கு சக்கரத்தை இடுப்பில் மறைத்து வைத்துக் கொண்டார். இந்த கோலத்திலேயே இங்கு சுவாமி காட்சி தருகிறார்.

சுயம்வியக்த தலம்: ஏழுநிலை ராஜ கோபுரத்துடன் அமைந்த இக்கோயிலில், பூவராகர் சாளக் கிராமத்தால் ஆன மூர்த்தியாக அருளுகிறார். பெருமாள் தானாக தோன்றியருளிய எட்டு தலங்கள், "சுயம்வியக்த தலங்கள்' எனப்படுகின்றன. இதில் இத்தலமும் ஒன்று. பெரும்பா லான பெருமாள் கோயில்களில் மூலவருக்கு தைலக்காப்பு மட்டும் சாத்தப்பட்டு, உற்சவருக்கே தினமும் திருமஞ்சனம் நடக்கும். ஆனால், இங்கு மூலவருக்கு தினமும் திரு மஞ்சனம் நடக்கிறது. தாயார் அம்புஜ வல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உள்ளார். இத்தலத்தில் அன்னதானம் செய்து வழிபடுவது சிறப்பு.

வாகனம் படைத்தல்: இறைவன்  எல்லா உயிர்களையும் நேசிக்கிறார். அதனால் தான் அவர் எல்லோராலும் ஒதுக்கப்படும் பன்றியின் வடிவில் இங்கு காட்சியளிக்கிறார். பொதுவாக, பன்றி மீது வாகனம் மோதிவிட்டால், அதை அபசகுனமாக எடுத்துக் கொண்டு வண்டியையே மாற்றி விடுவர். ஆனால், இந்தக் கோயிலுக்கு மோதிய வாகனத்துடன் வந்து தோஷ நிவர்த்தி பூஜை செய்து, தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். இந்த சடங்கிற்கு "வாகனம் படைத்தல்' என்று பெயர் சூட்டியுள்ளனர். சித்திரை மாத ரேவதி நட்சத்திரத்தில் பூவராக ஜெயந்தி விழா நடக்கிறது.

திறக்கும் நேரம்: காலை 6- 12 மணி, மாலை 4- 8 மணி.

இருப்பிடம்: விருத்தாசலத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள இத்தலத்திற்கு பஸ் வசதி உள்ளது.

போன்: 04144-245 090.

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 16, 2010, 10:40:02 AM2/16/10
to mintamil digest subscribers

அவியல் 


கண்ணனின் கின்னேஸ் சாதனை 


கின்னஸ் புத்தகம் இருக்கிறது. ''அரை மணி நேரத்தில் ஆயிரம் இடியாப்பம் சாப்பிட்டு சாதனை படைத்தேன், ஐந்தே நிமிடத்தில் அரைப்பானை ஐஸ்கிரீமை வயிற்றில் அடைத்து விட்டேன்,'' என்றெல்லாம் அதில் எழுதச் சொல்கிறார்கள். சாதனை செய்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே! ஆனால்,


 கடவுளின் சாதனையின் முன் நம் சாதனைகள் வெறும் தூசு தான். யார் அந்தக் கடவுள் தெரியுமா? 


வெண்ணெய் திருடி, மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நமது கண்ணன் தான்.

குரு�க்ஷத்திர யுத்தம் போல இனியொரு யுத்தம் நடக்கப்போவதில்லை. யுத்தகளம் என்றால் சாதராண இடமல்ல அது. 70மைல் நீளம், 30மைல் அகலமுடையது அந்தக்களம். இந்தக்களத்திலே தான் ஒரு நொடியை ஐந்தாகப் பிரித்து அதன் நான்கு பகுதிக்குள் 18 அத்தியாயங்கள், 700 ஸ்லோகங்கள் கொண்ட பகவத்கீதையை சொல்லி முடித்தார். பகுத்தறிவுள்ள யாராவது ஒருவன் இதை நம்புவானா எனக் கேட்கலாம்.

இதன் உட்பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். கேட்பவன் சரியானவனாக இருந்தால், சொல்லிக் கொடுப்பவனுக்கு கவலையில்லை. ஆசிரியர் சொல்லித்தரும் பாடத்தை முதலிலேயே கவனித்து விட்டால், வீட்டில் வந்து படிக்கவே தேவையில்லை. அப்படியே மனதில் ஆகி விடும்.


 அது போலத்தான் அர்ஜூனன். அவன் மிகப் பெரிய ஞானி. அந்த ஞானியின் ஞானத்தை கண்ணன் தூண்டி விடுவதற்கான நேரமே இது.மிக இலகுவாக கண்ணனின் கருத்துக்களை புரிந்து கொண்டான். போரில் வெற்றியும் பெற்றான். 

உணவு எளிதில் ஜீரணமானால் மனிதனின் உடல்நிலை நன்றாக இருக்கும். இதனால் தான் பீமனுக்கு 'விர்க்கோதரன்' என்ற பெயர் உண்டு. 'விர்க்கோதரம்' என்றால் 'எளிதில் ஜீரணமாகுதல்' எனப் பொருள். ஜீரணமாகி விட்டால் உடலில் அதிக பலம் ஏற்படும். அதுபோல புரிந்து கொள்ளும் தன்மை அதிகமாக உள்ளவர்களே வாழ்வில் வெற்றி பெறுவார்கள். இதனால் தான் அதீத புத்தியுள்ள அர்ஜூனனை தேர்ந்தெடுத்து கண்ணன் கீதையை உபதேசித்தான்.


கீதையில் இல்லாத கருத்துக்களே இல்லை. முக்கியமாக கீதை பயத்தை போக்குகிறது.

''உன் குடும்பத்தோடு ஒட்டும் உறவும் வைப்பதால் தான், உனக்கு பயமே ஆரம்பமாகிறது என்கிறது கீதை. நீ பிறக்கும் போதே நிச்சயிக்கப்பட்ட மரண தேதியுடன் தான் பிறந்து வந்துள்ளாய். எனவே, ஒருநாள் நீ உன் சுற்றத்தாரை விட்டு பிரியத்தான் போகிறாய். அவர்களைப் பிரிந்து விட்டால், உன் குடும்பமே தெருவுக்கு வந்து விடுமோ என பயப்படுகிறாய். இந்தக் கவலையை ஒழிக்கும் பக்குவம் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்கும். நீ பகவானை மட்டுமே தியானம் செய். போதும். என்னை விட்டு விடாதே,'' என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

''குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்!

அனார்யஜூஷ்டமஸ் வர்க்யப கீர்த்தி கரமர்ஜூன!!''

என்பது கீதையில் பகவான் சொல்லும் ஸ்லோகம்.

இதன் பொருள் என்ன தெரியுமா?

''அர்ஜூனா! பாமரர்களால் மேற்கொள்ளத்தக்கதும், சொர்க்கத்தின் கதவை அடைப்பதும், அபகீர்த்தியை தருவதுமான மோகத்தை எங்கிருந்து நீ பெற்றாய்?'' என்பது தான்.

மோகத்தை விட்டுவிடு, பாசத்தை வேரறுத்து விடு, பணத்தின் மீது பற்று வையாதே,'' இதுதான் பகவான் கிருஷ்ணன் சொல்லித் தரும் பாடம். முயற்சி செய்யுங்களேன். கீதையின் இந்த வரிகளைப் பின்பற்ற.

'கஸ்மாலம்' என்றால் என்ன? : பகவத்கீதையின் இரண்டாவது அத்தியாயம் இரண்டாவது ஸ்லோகத்தில், 'கஸ்மல' என்ற வார்த்தை வருகிறது. 'கஸ்மலம்' என்றால் 'மோகம்' என்று பொருள். இந்த வார்த்தை திரிந்து 'கஸ்மாலம்' ஆகிவிட்டது. நமது சென்னை மக்கள் இதை, 'திட்டும்' வார்த்தையாக பயன்படுத்துகிறார்கள். 'மோகம் கொண்டவனே' என்று இதற்கு பொருள்.

தை அமாவாசை தீர்த்தங்கள்: தை அமாவாசை து. தீர்த்தம் ஆட ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி 

 இம்முறை தாமிரபரணியின் நீர் வீழ்ச்சிகளான கல்யாணி தீர்த்தம், பாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்ககள்.

பாண தீர்த்தம்: தாமிரபரணியின் முதல் தீர்த்தமான பாணதீர்த்தம் வானத்தில் இருந்து விழுவதைப் போன்ற தோற்றமுடையது. எனவே இதை வான தீர்த்தம் என்றும் சொல்வர். அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல் அருவி கொட்டுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இங்கிருந்து 2 கி.மீ.,தொலைவில் சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. சாஸ்தா கோயில்களில் இதுவே முதன்மையானது என்பர். தாமிரபரணி ஆற்றின் நடுவே கோயில் உள்ளது. கோயிலைச் சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இங்கு, தை மற்றும் ஆடி அமாவாசைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவர். சிறப்பு பூஜைகள் உண்டு. இங்கு தர்ப்பணமும் செய்யலாம்.

கல்யாணி தீர்த்தம்: பாபநாசத்திலுள்ள லோயர்டேம் எனப்படும் நீர்மின்நிலையப் பகுதியை ஒட்டி, கல்யாணி தீர்த்தம் அமைந்துள்ளது. இதைக் கண்டு களிக்க மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வெள்ள காலங்களில் இந்த அருவி பார்ப்பதற்கு மிக பயங்கரமாக இருக்கும். இதை பார்த்தாலே பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.

மனிதனுக்குள் உயர்வு தாழ்வு இல்லை என்ற கருத்தை உலகோருக்கு வலியுறுத்த, சிவபெருமான் தனது திருமணத்தின் போது உலகை ஒருபுறமாக சரியச் செய்தார். இந்த ஏற்றத்தாழ்வை போக்க, அகத்தியர் பொதிகைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு திருமணக்காட்சி கொடுத்த இடமே கல்யாணி தீர்த்தம்.

அகத்தியர் அருவி: கல்யாணி தீர்த்தத்தின் தண்ணீர் அடர்ந்த பாறைகளைக் கொண்ட ஆற்றின் வழியே சென்று, அகத்தியர் அருவி என்ற பெயரில் விழுகிறது. இந்த அருவியில் மக்கள் ஆபத்தின்றி குளிக்கலாம. அமாவாசை தர்ப்பணத்தை இந்த அருவிக்கரையில் செய்து வருவது மிகவும் சிறப்பு.

பாபநாசம் படித்துறை: தாமிரபரணி நதியில், கங்கை ஆண்டில் ஒருமுறை வந்து மூழ்குவதாக பாபநாசம் தலபுராணம் சொல்கிறது. பாபநாசம் பாபநாசநாதர் கோயிலில், சித்திரை முதல் நாள் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்படுகிறது. பாவங்களைச் சுமந்து வரும் கங்கை, தாமிரபரணியில் தனது பாவத்தை தொலைத்துக் கொள்கிறது என்பது ஐதீகம். பாபநாசத்திலுள்ள பாபநாசநாதர் சிற்பம் ருத்ராட்சத்தால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இவரை வணங்கினால், ஆன்மிக உணர்வு அதிகரிக்கும். நோய்கள் நீங்கும்.

செல்லும் முறை: சென்னை, மதுரை, கோவையிலிருந்து செல்பவர்கள் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து 45 கி.மீ., தொலைவில் உள்ள பாபநாசத்தை ஒன்றரை மணி நேரத்தில் அடையலாம். பாபநாசத்தில் இருந்து அமாவாசையை ஒட்டி சிறப்பு பஸ்கள் அகத்தியர் அருவி, கல்யாணி தீர்த்தம், சொரிமுத்தையன் கோயில் வரை செல்லும். இங்கிருந்து 2 கி.மீ., நடந்தோ, பஸ்களிலோ, காரையார் செல்லலாம். இங்கு தாமிரபரணி அணை இருக்கிறது. அணைக்குள் செல்லும் படகுகளில் சென்றால், பாண தீர்த்தத்தை அடையலாம். இங்கு ஓரமாக நின்று நீராட கம்பித் தடுப்பு உண்டு. மிகக்கவனமாக நீராடி விட்டு, காரையாரில் இருந்து புறப்படும் பஸ்களில் பாபநாசம் திரும்பலாம். பாபநாசம் பாபநாசநாதர் கோயில் முன்பு தாமிரபரணியில் கம்பித்தடுப்பு எல்கைக்குள் நின்று, 

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 16, 2010, 10:53:33 AM2/16/10
to mintamil digest subscribers
அவியல் 

ஆதியில் சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் பொருட்டு தோன்றியவள் அங்காளம்மன்.
பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்த பார்வதிதேவிதான் அங்காளம்மன் என்பர்.

இந்த அங்காளம்மனுக்கு பந்தநல்லூர் என்ற ஊரில் ஓர் ஆலயம் அமைந்துள்ளது.
பார்வதிதேவி அங்காளம்மன் என அழைக்கப்படுவதற்கு ஒரு புராணக்கதை சொல்லப்படுகிறது.
ஒருசமயம், பிரம்மா தனக்கு ஐந்தாவது தலை வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஐந்தாவது தலையைப் பெற்றதும் பிரம்மாவை அகங்காரம் பற்றிக் கொண்டது. கயிலாயம் சென்றார். ஐந்து தலை பிரம்மாவைக் கண்ட பார்வதி, அவசரத்தில் பரமசிவன் என்றெண்ணி அவரை வணங்கிவிட்டாள். பிறகுதான் பார்வதிக்கு உண்மை புரிந்தது.
ஐந்து தலையால் ஏற்பட்ட குழப்பம் இது என பார்வதி பரமசிவனிடம் கூற பரமசிவன், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார். ஆனால் தலை மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே வந்தது. 999 தலைகள் வந்ததும் சிவபெருமான் மாலையாக அவற்றைத் தரித்துக் கொண்டார். கடைசியாக வந்த ஒரு தலையை கையில் வைத்துக் கொண்டார்.
சிவபெருமான் கையிலிருந்த அந்த பிரம்மகபாலம் அப்படியே அவரது கையோடு ஒட்டிக் கொண்டது. என்ன செய்வது என்று புரியவில்லை பரமசிவனுக்கு. மகாலட்சுமி, பரமசிவனுக்கு ஒரு யோசனை சொன்னாள். அதன்படி பரமசிவன் பார்வதியிடம் கபாலத்துடன் வந்தபோது சுவையான உணவை இரண்டு முறை கபாலத்தில் போட்டாள் பார்வதி. மூன்றாவது முறை கபாலத்தில் போடுவது போல் போக்குக்காட்டி அதைக் கீழே போட்டாள்.உணவு கீழே கொட்டிவிட்டதே என்று கபாலம் கீழே இறங்கியது. விஸ்வரூபம் எடுத்த பார்வதி அதனைத் தன் காலால் மிதித்து பூமியில் அழுத்த கபாலம் அழிந்தது.
உக்ர பார்வதி தேவியே அங்காளம்மனாக விளங்கினாள். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பந்தநல்லூர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அன்னை அங்காளம்மன் பலநூறு குடும்பங்களின் குலதெய்வம்.
வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் முன் அழகிய மண்டபம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகிககளிஓவியங்கள் உள்ளன.
உள்ளே இறைவியின் முன் நந்தி, பலிபீடம் இருக்க, மண்டபத்தின் இடதுபுறம் பைரவர், விஷ்ணு, இருளன், காட்டேரி, மதுரைவீரன், பாவாடைராயன், மாயாண்டி புத்திரர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன.
அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் வினாயகர் அருள்பாலிக்கிறார். கருவறையில் அன்னை அங்காளம்மன் அமர்ந்த கோலத்தில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்புரிகிறாள்.
தினசரி ஒருகால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி, திருக்கார்த்திகை, மார்கழி மாத அனைத்து தினங்கள், தைப் பொங்கல் முதலிய நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தன்னை நாடிவரும் பெண்களின் குறை தீர்த்து அவர்கள் மனம் குளிர அருள்புரிவதில் அன்னை அங்காளம்மனுக்கு நிகரில்லை என்று பக்தர்கள் சிலிர்ப்போடு சொல்கின்றனர்.
திருப்பளந்தாள் - மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ளது. பந்தநல்லூர் 

நன்றி குமுதம் பக்தி ஸ்பெஷல் 

2;

இயற்கை கொஞ்சும் இடத்தில் பிரமாண்டமாக ஒரு நதி, அந்த ஆற்றின் நடுவில் யானை நீராடுவதுபோல சின்னதாய் ஒரு குன்று. அந்தப் பாறைத் திட்டின் உச்சியில் அற்புதமாய் ஒரு சிவாலயம்.
இது ஏதோ வடநாட்டில் இருக்கும் ஒரு கோயில் என்று நினைத்துவிடாதீர்கள். நம் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் நடுவில் கல்பாக்கம் அருகில் உள்ள பரமேஸ்வர மங்கலத்தில்தான் இந்தத் தீவு ஆலயம் அமைந்திருக்கிறது.
அதுவும் இந்தக் கோயில் தஞ்சைப் பெரியகோயிலைவிட பழமையானது. ஆமாம் 1300 வருடங்களுக்கு முன்னால் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டது!
பாலாறைக் கடக்கப் பாலமெல்லாம் கிடையாது. முழங்கால் அளவு ஓடும் சில்லென்ற தண்ணீரில் கால்களையும் கொஞ்சம் ஆடைகளையும் நனைத்தபடி நடந்து சென்று குன்றேற வேண்டும். அங்கே அருள்புரியும் கனகாம்பிகையையும் கைலாசநாதரையும், வழிபட்டுவிட்டு பாறைத்திட்டில் குளுமையாக வீசும் காற்றை வாங்கியபடி, சற்று நேரம் நின்று சுற்றிலும் பச்சைப்பசேலென்று காட்சி தரும் இயற்கையின் பேரழகையும் அழகாக ஓடும் நதியையும் ரசித்தால், ஒரு சந்தோஷமும், மனநிறைவும் வரும்அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
? கைலாசநாதரே அப்படி இந்த இடத்தின் அதிசய அழகில் கவரப்பட்டுதான் இங்கேயே தங்கிவிட்டார்  இதோ அந்தக் கதை.
நத்தம் நகரில் இருந்தார் சிவபெருமான். ஒருநாள் இந்தப் பக்கமாக வந்த அவர் பாலாற்றின் நடுவில் இருந்த இந்தத் தீவுத் திட்டில் அமர்ந்தார். சூழ்நிலையால் மெய்மறந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அந்தத் தலத்தைக் காண வருணதேவனும் வருகை புரிந்தான். ஆமாம், மழை கொட்டோ கொட்டென்று கொட்டிற்று. அதில் நனைந்தபடியே தவத்திலாழ்ந்தார் இறைவன்.
பாறைத்திட்டில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாடு, அந்தக் காட்சியைப் பார்த்துப் பதறி ஓடிவந்து இறைவனை மறைத்தபடி நின்று கொண்டது. பாலாற்றில் வந்து கொண்டிருந்த ராஜநாகம் ஒன்று அந்தக் காட்சியைப் பார்த்தது. சிவன் நனையாமல் இருக்க, பாவம் அந்தப் பசு நனைகிறதே என்று பதறி சிவனுக்கும் பசுவுக்குமாகச் சேர்த்து, பெரிதாய்ப் படமெடுத்து குடைபோல் விரித்துக் காத்தது.
மகிழ்ந்துபோன இறைவன் இந்த இடத்திலேயே இருக்க ஆசைப்பட்டார். லிங்க உருவில் மாறி, அருள்புரிந்தார். விஷயம் கேள்விப்பட்ட மன்னன் பரமேஸ்வர பல்லவன் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த இடத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டினான். அவன் பெயராலேயே இந்த ஊரும் பரமேஸ்வர மங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
கம்பீரமான பெரிய உருவில் கைலாசநாதரும், ஐந்தடி உயரத்தில் பத்மாசனத்தில் நின்றபடி அழகு கொஞ்சும் அருட்பார்வையுடன் கனகாம்பிகையும் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்கள். இங்கேயுள்ள விநாயகர் சிலை வேறெங்கும் இல்லாத மாதிரி வித்தியாசமாய் அமைந்திருக்கிறது. தேவச்சாணி என்ற பக்தை அமைத்த விநாயகர் இது தனிக்கோயிலில் காட்சி தந்த விநாயகர். இப்போது காலத்தின் கோலத்தால் கோயில் சிதைய தந்தை கைலாசநாதர் சன்னதி அருகிலேயே காட்சி தருகிறார். நவகிரகம், சண்டீசர் ஆகியோரும் இருக்கிறார்கள்.
நிரூபதுங்க வர்மன் காலத்திய கல்வெட்டு ஒன்றும் இங்கே இருக்கிறது. சைலேஸ்வரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஆலயத்தில் மதிய உணவு வழங்கவும் விளக்கு வைப்பதற்கும் கழஞ்சு பொன்னை நந்தி நிறைமதி என்பவன் அளித்ததாக வரலாறு சொல்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனே வந்து விரும்பித் தங்கியுள்ள இடம் இது என்பதால் அதன் சிறப்பைச் சொல்லவும் வேண்டுமா?
பங்குனி உத்திரவிழா வெகுசிறப்பாக இங்கே நடைபெறுகிறது. இங்கே வந்து தரிசனம் செய்தால் திருமணபாக்கியம் ஏற்படும் என்று கூறுகிறார்கள் சென்னையைச் சேர்ந்த ராஜாராம் தம்பதி.
ஒருகாலத்தில் பெரியதாக இருந்த இந்தக் கோயிலை ஊர் மக்கள் ஆதரவுடன் மீண்டும் செப்பனிட்டு ராஜகோபுரம், சுற்றுச்சுவர், மண்டபம், ஆற்றுப்பாலம் என்று கட்டிச் சீரமைக்க விக்னேஷ்வரா சாரிட்டபின் டிரஸ்ட் (1, சாரதி தெரு, சென்னை 17) பெருமுயற்சி செய்து வருகிறது. நீங்களும் இந்தப் புனிதத் தொண்டில் பங்கு பெற்று இறைவனின் பேரருளைப் பெறுங்கள்.
அத்துடன் ஒருமுறை நேரிலும் சென்று ஈசனை வழிபட்டுவிட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.நன்றி; குமுதம் வர இதழ் 
- சுரேஷ்கண்ணா

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 16, 2010, 9:49:35 PM2/16/10
to mintamil digest subscribers

அவியல்  

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்


கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டவோ?- அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
வசப்படலாகாதோ?
எண்ணிஎண்ணிப் பலநாளும் முயன்றிங்கு
இறுதியிற் சோர்வோமோ?- அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!
-மகாகவி பாரதி
நன்றி 
 
 குழலும் யாழும் வலைப்பூ  
 
 
(ஆத்ம ஜயம்)

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 17, 2010, 12:17:10 AM2/17/10
to mintamil digest subscribers
அவியல்
 
பல் பாதுகாப்பு
 
ஒவ்வொரு முறை உணவு உண்ட பிறகும் பற்களை கட்டாயம் துலக்க வேண்டும். காலையில் சாப்பிட்டவுடன், ஒருமுறை, பின் மதியம் உணவு உண்ட பின், அடுத்தது மாலை வேளையில் சிற்றுண்டி எடுத்துக் கொண்ட பிறகு, அதற்குப் பிறகு இரவு உணவு உண்டு விட்டுப் படுக்கப் போவதற்கு முன் என இப்படி நான்கு வேளைகளாகப் பிரித்துக் கொண்டு பல் துலக்கி விட்டால் போதும், பல்லில் எந்தவிதமான தொந்தரவும் அறவே வராது. குழந்தைகளுக்குப் பல் ஆரோக்கியம் என்பது அவர்கள் கருவில் இருக்கும்போதே துவங்கி விடுகிறது. குழந்தை வயிற்றில் இருக்கும்போதே அந்தக் கர்ப்பத்தைத் தாங்கி நிற்கும் அம்மாக்கள் கட்டாயம் கால்சியம் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு நிச்சயம் ஆரோக்கியமான பற்கள் முளைக்கும். பற்களின் முதல் எதிரி சாக்லேட்டுகள்தான். ஒரு குழந்தை தனது பத்தாவது வயதை எட்டும்வரை சாக்லெட்டுக்கு நோ சொல்லுங்க ! அழும் குழந்தையைச் சமாதானப்படுத்தலாம்னு சாக்லெட் கொடுத்து பல் ஆரோக்கியத்தைக் கெடுத்துடக்கூடாது. பிறந்ததிலிருந்து ஒரு வயதை எட்டும் வரையிலும் குழந்தை தூக்கத்திலேயே பால் குடிக்கும். இந்தப் பால் அப்படியே பற்களில் தங்கி வாயில் ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் கிடுகிடுவென வளர ஏதுவாகி விடும். எனவே, ஒவ்வொரு முறையும் குழந்தைகள் பால் குடித்து முடித்த உடனேயே தாய்மார்கள் தங்களது சுத்தமான, நகங்கள் எதுவும் இல்லாத கைகளை கொண்டு குழந்தையின் நாக்கில் ஒட்டிக் கொண்டுள்ள பாலை வழித்து எடுத்துவிட வேண்டும். பாலில் இருக்கிற சர்க்கரை, பாக்டீரியாக்களுக்குத் தீனியாகி விடும். எனவே, பற்களில் பால் நீண்ட நேரம் படியாமல் பார்த்துக்கொள்வதே பற்களின் ஆரோக்கியத்துக்கு முதல் படி.'' பற்களை பார்த்தே ஒருவருக்கு உடலில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா ? ""நிச்சயம் சொல்ல முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்களின் பற்களைப் பார்த்தால் அவர்களது ஈறுகள் சொதசொதவென இருக்கும். புற்று நோய் உள்ளவர்களின் வாயைப் பார்த்தால் அவர்களது ஈறுகள் அதிகப்படியான சிவப்பு நிறத்தில் இருக்கும். ப்ளெட் ப்ரஷருக்காக ஒருவர் உட்கொள்ளும் மருந்து அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும், அதையும் அவர்களது பற்களைப் பார்த்தே கண்டுபிடித்து விடலாம். முகம் என்பது மனம் காட்டும் கண்ணாடி என்பதைப் போல, பற்கள் ஒருவரது ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி. பற்களின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்தான்.'' ""ஆயில் புல்லிங் என்ற ஒரு முறைப்படி வாயை எண்ணெய் கொண்டு கொப்பளிப்பது பற்களின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்துமா ?'' ""இதுவரை அறிவியல் பூர்வமாக அப்படி எந்தவிதமான ஆதாரமும் இல்லை. விலை குறைவு என்றாலும், பிரஷ் கொண்டு பல் துலக்கும் முறை பல்லைச் சுத்தமாகவும், சத்தாகவும் வைத்துக்கொள்ளப் போதுமே'' என்கிறார் டாக்டர் ஜெயகிருஷ்ணா.
 
நன்றி கல்கி வார இதழ்
 
மச்சமுனி சித்தர்
சித்தர்கள் யுகங்கள் பல கடந்து தம்முடைய தேகத்தை கல்பதேகமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருவார்கள். திரேதாயுகத்தில் அப்படி அபூர்வமாக வாழ்ந்த சித்தர்களில் மச்சரிஷியும் ஒருவர். மச்சமுனி, மச்சேந்திரர், மச்சேந்திரநாதர் என்ற பெயர்களெல்லாம் கொண்ட சித்தர் ஒருவரே. ஓர் இடத்தை விட்டு வேறு ஓர் இடத்துக்குச் செல்லும் போதும், ஒரு காலட்டத்தைக் கடந்து வாழும் போதும் பெயர்கள் தான் வேறுபடுகின்றன. தலையில் சடைமுடியுடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, கையில் ஒரு பிரம்புத்தடியுடன் ஒரு சாமியார் இருந்தால், அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள், அவரை சடைசாமி என்று அழைப்பார்கள். ஒரு சிலர் அவரை விபூதி சாமி என்ற சொல்வார்கள். சிலர், பிரம்ரபு சாமி என்பார்கள். இதேபோல ஊர்ப் பெயரை வைத்து பூண்டிமகான், திருவலச்சித்தர் என்ற பெயர்களும் உண்டு.
சித்தர்களுக்கு, உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன் என்பது கொள்கையாகும். சித்தர்களுடைய பெயர்கள் எல்லாம் அவர்களாக வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு எந்தப் பெயரை வைத்தாலும் அதில் அக்கறை காட்டுவதுமில்லை. தூல உடம்புக்கு எந்தப் பெயர் வைத்தால் என்ன என்று இருப்பார்கள்.
மச்சமுனி, அகத்தியர் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு சமயம், கடற்கரையோரத்தில், சிவபெருமான், உமையம்மைக்கு தாரக மந்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருக்கையில் அம்மைக்கு உறக்கம் வந்துவிட்டது. அக்கடலில் வசித்த மீன் ஒன்றின் வயிற்றில் இருந்த கருவானது, இம்மந்திரத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டது. பின் வெளியே வந்த அந்த மீன் வயிற்றுப் பிள்ளைக்கு சிவபெருமான், மச்சர் என்ற பெயரைக் கொடுத்தார்.
மச்சரின் உருவத்திலிருந்து தலை மனித வடிவமும், உடல் மீனின் வடிவமும் கொண்டது என்ற குறிப்பு, நமக்குக் கிடைக்கிறது. முழவதும் மனித வடிவம் கொண்டதே மச்சரின் உருவம் என்ற கருத்தும் நிலவுகிறது. இது மச்சமுனியின் அவதார வரலாறு.
பிறக்கும் போதே சிவபெருமானின் உபதேசத்தோடு பிறந்தவர் என்பதால் மச்சமுனிக்கு தவயோகம் தானாகவே நேர்ந்தது. அவர் நீண்ட நெடுங்காலம் யோக வழியில் தவம் மேற்கொண்டார். அட்டமா சித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். ஊர் ஊராக சஞ்சாரம் செய்து வரும்போது ஓர் ஊரில், இவர் உணவு வேண்டி ஒரு வீட்டின் முன் நின்றார். இவருக்கு பிச்சையிட்ட அந்த வீட்டுப் பெண் இவரை வலம் வந்து வணங்கினாள்.அந்தப் பெண்ணனின் முகவாட்டத்தைப் பார்த்த சித்தர், என்ன காரணம் என்று கேட்டார். தனக்கு வெகு காலமாக புத்திரப்பேறு வாய்க்கவில்லை என்று தன் மனக்குறையைக் கூறி, தனக்குப் புத்திரப் பேறு அருளுமாறு அந்தப் பெண் சித்தரை வேண்டினாள். மச்சமுனி, அவளுடைய நிலைக்கு இரக்கங்கொண்டு விபூதி பிரசாதம் கொடுத்து இதனை நீ உட்கொள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்தப் பெண் விபூதியைப் பெற்றுக் கொண்டு தனது பக்கத்துவீட்டுப் பெண்ணிடம் நடந்தவற்றைக் கூறினாள். அவள் இந்த முனிவர் மாய வேஷக்காரன். விபூதி கொடுத்து உன்னை மயக்கி, தன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடுவான் என்று கூறினாள். அந்தப் பெண் விபூதியை அடுப்பிலிருந்த நெருப்பில் போட்டுவிட்டாள். பின்பு அடுப்புச் சாம்பலை அள்ளி வீட்டின் புழக்கடையில் கொட்டிவிட்டு இந்த நிகழ்ச்சியை அறவே மறந்துபோய்விட்டாள். வருடங்கள் சில சென்றன.
மச்சமுனி மீண்டும் அவ்வழியே வந்து தான் விபூதி கொடுத்த அந்தப் பெண் வீட்டின் வாசலில் நின்று அவளை அழைத்து உன் பிள்ளையை நான் பார்க்க வேண்டும், அழைத்து வா என்றார். அந்தப் பெண் உண்மையை மறைக்காது நடந்தவற்றை அப்படியேக் கூறினாள். அந்த அடுப்புச் சாம்பல் எங்கே என்று மச்சமுனி வினவ, தன் வீட்டுப் புழக்கடையில் உள்ள குப்பையைக் காட்டினாள்.
மச்சமுனி அந்த இடத்துக்குச் சென்று கோரக்காவா என்று குரல் கொடுத்தார். அங்கே ஓர் அதிசயம் நடந்தது. சாம்பல் குப்பையிலிருந்து, சித்தர் விபூதி கொடுத்த காலம் முதல், பிள்ளையை அழைத்த காலம் வரை உள்ள ஆண்டுகள் நிரம்பிய வயது கொண்ட சிறுவன் ஒருவன், ஏன்? என்று பதில் குரலுடன் வெளியே வந்தான்.
அந்தச் சிறுவனை அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் சித்தர். சிறுவனோ தான் மச்சமுனியையே குருவாகக் கொண்டு அவரைத் தொடர்ந்து வர விரும்புவதாகக் கூறினான். அவனைத் தன் சீடனாக ஏற்றுக் கொண்டார் மச்சமுனி. இருவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
நீண்ட நெடுங்காலம் பாரதக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருவரும் தவம் செய்தனர். வட இந்தியாவில் வாழ்ந்த நவநாத சித்தர்களில் இவரும் ஒருவராக மச்சேந்திர நாதர் என்ற பெயரில் குறிக்கப்படுகிறார். மச்சமுனி இரசவாத வித்தை, வைத்தியம், வாதநிகண்டுகள் உள்ளிட்ட பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் தற்போது திருப்பரங்குன்றம் வரை பெயர் கொண்ட தலத்தில், முக்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. திருப்பரங்குன்றம், முருகப்பெருமானின் அருள் கூடிய அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பெருமை பெற்றது நாம் அறிந்ததே.
மச்சமுனியைக் குருவாகக் கொண்ட கோரக்கரும் சித்திகள் பல அடைந்து சிறப்பு பெற்றவர். இவரும் வடநாட்டில் கோரக்கநாதர் என்ற பெயருடன் குறிக்கப்படுகிறார். இந்தியாவில் உள்ள கோரக்பூர் என்னும் நகரப் பகுதியில் இவர் வாழ்ந்ததாகவும், இவர் பெயராலேயே அந்த நகரம் குறிக்கப்படுகிறது என்றும் ஒரு செய்தி உண்டு.
சீனா, நேபாளம் ஆகிய இடங்களில் கோரக்கர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இலட்சுமி நரசிம்மன் என்னும் பெயர் கொண்ட மன்னன், நேபாளத்தை ஆட்சி செய்தான். மரப்பலகைகளால் கோரக்கநாதருக்கு அவன் ஒரு கோயில் கட்டியதாகவும், அக்கோயிலுக்கு கஸ்தமண்டபம் என்ற பெயர் இருந்ததாகவும், இப்பெயரே நாளடைவில் காட்மண்டு என்று மருவியதாகவும் நம்பப்படுகிறது. காட்மண்டுவில், கோரக்கர் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் ஆலயம் ஒன்று உள்ளது தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகே உள்ள திருப்புவனம் என்னும் ஊரிலும் ஆதிகோரக்க சித்தருக்கு ஆலயம் உள்ளது.கோரக்கர், நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள திருப்புவனம் என்னும் ஊரிலும் ஆதிகோரக்க சித்தருக்கு ஆலயம் உள்ளது.
கோரக்கர், நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள பொய்கை நல்லூரில், சமாதி நிலை எய்தினார் என்ற செய்தி பெரும்பான்மையாக உறுதி செய்யப்படுகிறது.
நன்றி; மங்கையர் மலர் இதழ்

karthi

unread,
Feb 17, 2010, 12:39:03 AM2/17/10
to mint...@googlegroups.com
"ஒவ்வொரு முறை உணவு உண்ட பிறகும் பற்களை கட்டாயம் துலக்க வேண்டும். காலையில் சாப்பிட்டவுடன், ஒருமுறை, பின் மதியம் உணவு உண்ட பின், அடுத்தது மாலை வேளையில் சிற்றுண்டி எடுத்துக் கொண்ட பிறகு, அதற்குப் பிறகு இரவு உணவு உண்டு விட்டுப் படுக்கப் போவதற்கு முன் என இப்படி நான்கு வேளைகளாகப் பிரித்துக் கொண்டு பல் துலக்கி விட்டால் போதும், பல்லில் எந்தவிதமான தொந்தரவும் அறவே வராது."
 
ஏங்க! இந்த "அறவே வராது" அப்படீங்கிறத ஒவ்வொரு முறையும் தமிழ்ல மருத்துவம் சொல்றவங்க சொல்றாங்க!
ஆங்கில டாக்டர் யாரும் "இப்படி பண்ணா இனிமே இந்த வியாதி வரவே வராது"ன்னு சொல்றதில்ல.
கொஞ்சம் அடக்கி வாசிச்சா என்ன?
 
போகட்டும். "காலையில சாப்பிட்டவுடன்" அப்படின்னா, எழுந்த ஒடனே பல் விளக்க வேண்டியதில்லையா?
பல் விளக்காம சாப்பிடிறியான்னு ஓட ஓட அம்மாங்க விரட்ட மாட்டாங்க?
 
ரெ.கா.
  
Message has been deleted

K R A Narasiah

unread,
Feb 18, 2010, 1:02:38 AM2/18/10
to mint...@googlegroups.com
மஹால் கட்டப்பட்ட விதத்தைத் திருப்பணிமாலையின் 82 வது பாட்டு இவ்வாறு கூறுகிறது:
 உரக்க வெகு ரொக்கங் கொடுத்துப் படங்குதூ
              ணுத்திர முதற்ப ழங்கல்
 ஒடிந்தன பிடுங்கிநவ மாயைமைத் துக்காரை
              யோடுசீ ரணம கற்றி
 அரைத்த சுண்ணாம்பைவெல் லச்சாறு  விட்டுநன்
               றாய்குழைத்துச் செங்கலும்
 அடுக்காய்ப் பரப்பிக் கடுக்காயொ டாமலக
               மரியதான் றிக்கா யுழுந்
 தொருக்கா லிரிக்க லிடித்துநன் நீரினி
               லூரிய கடுஞ்சா றும் விட்
 டூழிகாலம் வாழவே மீனாட்சி கோயிலுஞ்
              செப்பமிடு வித்து நன்றாய்
 செய்வித்த புண்ணியஞ் சதகோடி புண்ணியந்
               திருமலை மகீபனுக்கே!
நரசய்யா
              

2010/2/18 Kesaven Thirumalai Numbakkam <tnke...@gmail.com>

அவியல்

திருமலை நாயக்கர் மஹால்

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைப் பற்றி .  மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல! நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை . அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால்.  உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.


இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது.  அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும்.  மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள்.  பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை).  அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும்.  ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.


இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது.  மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது.  தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  


தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது.  தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.  முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன.
 
நன்றி ;தமிழ்நாடு சுற்றுலா கையேடு வலைத்தளம்

amal eronimus

unread,
Feb 19, 2010, 2:38:05 AM2/19/10
to mint...@googlegroups.com
நாயக்கருக்கு  மகால் செய்யும் அரசால் ஏன் தமிழ் தொல்லியல்  இடங்களை பாதுகாக்க முடியவில்லை..
தமிழரின் அடிமைத்தனம் இன்னும் முடியவில்லை...
அரியலூரில் பாறைகளை உடைத்த்ழின் தொன்மையை அழிக்க உத்தரவிட்ட அரசு எப்படி தமிழருக்கு உதவ முடியும்..
அன்பில் அமல்

2010/2/18 Kesaven Thirumalai Numbakkam <tnke...@gmail.com>

அவியல்

திருமலை நாயக்கர் மஹால்

மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மஹாலைப் பற்றி .  மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல! நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை . அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால்.  உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.


இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது.  அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும்.  மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள்.  பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை).  அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும்.  ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.


இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது.  மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது.  தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  


தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது.  தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.  முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன.
 
நன்றி ;தமிழ்நாடு சுற்றுலா கையேடு வலைத்தளம்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அமல்
24 /36 அ. களிமார்
குளச்சல்
குமரி - 6 2 9 2 5 1
பேச: 9791185225

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 20, 2010, 10:50:29 AM2/20/10
to mintamil digest subscribers
அவியல்
 
மாதம் ஒரு கோடி ஊதியம் பெரும் தமிழன்
 
காலேஜ் பீஸ் கட்ட டடுஷன் எடுத்தேன்
 
பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா முதல் அமைந்தகரை வரை சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நேரத்தில், மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் நம்மவரை வேலைக்கு அழைத்திருக்கிறது அமெரிக்க நிறுவனம் ஒன்று.
 
நேனோ தொழிற்நுட்பத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் சென்னை இளைஞரான சிவராமனுக்குதான் இப்படியொரு ஆச்சர்ய வாய்ப்பு.
வேலை பறிபோகுமா, சம்பளம் குறைக்கப்படுமா என பலர் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஒரு கோடி ரூபாய் வேலை எப்படி சாத்தியமானது?
 

''பூர்வீகம் புதுக்கோட்டை. அப்பா அரசாங்க அதிகாரிங்கிறதால மும்பை, கொல்கத்தான்னு என்னோட பள்ளிப் பருவம் முடிஞ்சது. காலேஜ் போற சமயத்துல குடும்பத்தோட சென்னைக்கு வந்தோம். எனக்கு சின்ன வயசுலேர்ந்தே கம்ப்யூட்டர் மேல ஈர்ப்பு அதிகம். ஒன்பதாவது படிக்கிறப்போ அப்பா கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தார். கம்ப்யூட்டரை கத்துக்க கிளாஸெல்லாம் போனது கிடையாது. நானாகவே கத்துக்கிட்டேன்.

கம்ப்யூட்டர் மேல இருந்த ஆர்வத்துலதான் எஸ்ஆர்எம் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். அதேசமயத்துல பிட்ஸ்பர்க்ல ரோபோக்கள் பற்றி ஆராய்ச்சி படிப்பு படிக்கிற வாய்ப்பும் கிடைச்சது. ஒரு வருஷம்தான் படிப்புங்கிறதால வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டேன். அங்க அறிமுகமானதுதான் நேனோ தொழிற்நுட்பம்.

ஆங்கில மருத்துவத்தில் பக்க விளைவுகள் அதிகம். உதாரணத்துக்கு காய்ச்சலுக்குக் காரணம் குறிப்பிட்ட பகுதியில் நோய்க்கிருமி தொற்று ஏற்படறதுதான். இந்த குறிப்பிட்ட பகுதியில் பரவியிருக்கிற கிருமியை அழிக்கிறதுக்காக செலுத்தப்படற மருந்து, உடம்பின் மற்ற பாகங்களிலும் பரவுறதாலதான் பக்க விளைவுகள் ஏற்படுது. இதைத் தவிர்க்க குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட நோய்த்தொற்றை சரியா கண்டறிந்து சிகிச்சை செய்வதற்கு நேனோ தொழிற்நுட்பம் பயன்படுது. மருத்துவத் துறையில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் நேனோ தொழிற்நுட்பத்தை பயன்படுத்த முடியும். இதற்கான ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்திட்டு இருக்கு.

 ரோபாக்களை நேனோ தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படி மேம்படுத்தலாங்கிறதுதான் ஆராய்ச்சிக்கான சப்ஜெக்ட்.

இதை முடிச்சிட்டு இந்தியா வந்து எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.டெக் சேர்ந்தேன். நேனோ தொழிற்நுட்பத்தை சிறப்பு பாடமா எடுத்துப் படிச்சேன். தொடர்ந்து இங்கேயே மாஸ்டர்ஸ் முடிச்சி நேனோ மெக்னடிசம் பற்றி டாக்டரேட்டும் முடிச்சிட்டேன்.

என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து எஸ்ஆர்எம் கல்லூரியே நேனோ தொழிற்நுட்பத்துல ஆராய்ச்சி செய்றதுக்கு மூணு கோடி ரூபாய்ல லேப் செட் பண்ணி கொடுத்திருக்காங்க. இப்போ நான் முழுநேர ஆராய்ச்சியாளன்'' என்று தன்னைப்பற்றி அறிமுகம் தரும் சிவராமன்.

''நேனோ தொழிற்நுட்பத்தின் மூலமா கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்கின் மெமரியை எப்படி மேம்படுத்துறதுங்கிறதுதான் என்னோட ஆராய்ச்சி. ஒரு இஞ்ச் இடத்துல ஐந்நூறு கீகா பைட்ஸ் அளவுக்கு கோப்புகளை சேமிக்கலாம். என்னோட ஆராய்ச்சி மூலமா இதை இன்னும் மேம்படுத்தி, அதற்கான காப்புரிமையையும் வாங்கி வெச்சிருக்கேன். பல நாடுகள்ல நடந்த கருத்தரங்கங்கள்ல என்னோட கண்டுபிடிப்பை பிரசண்ட் செய்திருக்கேன். இதைப்பார்த்த சீகேட்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனம்தான் என்னை ஒரு கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலைப் பார்க்க அழைச்சிருக்கு'' நிதானித்த சிவராமன்..

''பொருளாதார ரீதியாக என் குடும்பம் ஓரளவு தன்னிறைவானதுதான். டிகிரி படிக்கிறதுக்கும் மாஸ்டர்ஸ் முடிக்கிறதுக்கும் அப்பா செலவு செய்யத் தயாரா இருந்தார். ஆனா நான் ஒத்துக்கலை. என்னோட காசுல படிக்க விரும்பினேன். லோன் வாங்கி காலேஜ் பீஸ் கட்டினேன். டியூஷன் எடுத்தேன்'' என்கிற சிவராமனின் சுயமரியாதையும், உழைப்பும்தான் இன்று அவரை, இளைஞர்களுக்கு முன்னுதாரணம் ஆக்கியிருக்கிறது.

எனக்கு நிறைய விஷயங்கள்ல ஆர்வம் இருக்கு. தத்துவம் படிக்கிறது, சாஃப்ட் மியூசிக் கேட்கிறது, பேஸ்கெட் பால் விளையாடறது, சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் லோக் பரித்ரா என்கிற கட்சியில் முக்கிய நபராவும் இருந்திருக்கேன். நண்பர்களோட சேர்ந்து 'நாலெட்ஜ் மேனேஜ்மெண்ட் கம்பெனி' ஒன்றையும் தொடங்கி நடத்திக்கிட்டு இருக்கேன். அதோட கிராமப்புற மாணவர்களுக்கு தேவைப்படற கல்வி உதவிகளையும் நிறுவனம் மூலமா செய்துட்டு வர்றேன். என்னைப் பொறுத்தவரை எதைச் செய்தாலும் மனசுக்கு பிடிச்சி செய்யணும். அனுபவிச்சி செய்றதால தான் என்னால இத்தனையையும் செய்ய முடியுது.

என்னை வேலைக்குச் சேர அழைச்சிருக்கிறது நேனோ தொழிற்நுட்பத்தில் தலைச்சிறந்த நிறுவனம். இப்படியொரு நிறுவனத்துல வேலை செய்கிற வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. இங்க செய்ய நினைக்கிறதை அங்கே போய் செய்வேன். இன்னொரு பக்கம் இந்தியாவிலேயே இருந்து ஆராய்ச்சி செய்யணும்கிற விருப்பமும் இருக்கு. அதனாலதான் இதுவரைக்கும் வந்துக்கிட்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் தவிர்த்துகிட்டு வந்தேன்.

என் மக்களுக்கு நான் நிறைய செய்யணும்னு கனவு காண்கிறேன். என்னோட ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு எல்லாமே சாதாரண மக்களுக்காக இருக்கணுங்கிறதுல தீர்மானமா இருக்கேன்'' என்கிறார் சிவராமன் தீர்க்கமான சிந்தனையோடு.

நன்றி; சூரியகதிர்

Tthamizth Tthenee

unread,
Feb 20, 2010, 12:46:51 PM2/20/10
to mint...@googlegroups.com
இனி  வருங்காலத்தில் நேனோ  தொழில்நுட்பம்தான்  உலகை  ஆளப்போகிறது  என்பதில் ஐயமில்லை
  மரபணுக்களின்  குணாதிசயங்களையே  மாற்றவிருக்கும் நேனோ  தொழில்நுட்பத்தை  பயில    இப்போதே  இளைய  தலைமுறைகளை  தயார்படுத்தவேண்டும்,நம் கல்விமுறையில் நேனோ  தொழில் நுட்பத்தை பாடமாக  கொண்டுவரவேண்டும்

சென்னை  இளைஞர் சிவராமனுக்கு  வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

 
20-2-10 அன்று, Kesaven Thirumalai Numbakkam <tnke...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 20, 2010, 9:44:57 PM2/20/10
to mintamil digest subscribers
அவியல்
 
வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை நம்மில் சாப்பிடாதவர்கள் சிலர் தான் இருப்பர். மிக குறைந்த விலையில் உடல்நலத்திற்கு ஏற்றது. வெள்ளரியை மூன்று வகையாக பிரிக்கலாம்.
பிஞ்சு வெள்ளரிக்காய்
பச்சையாக சாப்பிடுவதற்கு ஏற்றது. இதில் விதைகள் சிறிதாக இருக்கும் இதனால் சாப்பிடவதற்கு சுவையாகவும் இருக்கும். இதை சாப்பிடும்போது கொஞ்சம் உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் இதன் சுவை சொல்லிமளாது. அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றது இதுதான். வெள்ளரி வாங்கும் போது பிஞ்சு வெள்ளரியாக பார்த்துவாங்க வேண்டும்.
வெள்ளரிக்காய்
இது பிஞ்சுக்கும் அடுத்தநிலை. இதை குழம்பு வைக்க பயன் படுத்தலாம். இதை வைத்து பழ வகை குழம்பு வைக்கலாம். அதற்கான பதிவு நம் வலைப்பூவில் நிறைய இருக்கின்றது.
வெள்ளரிபழம்
வெள்ளரி நன்கு பழத்து இருக்கும் பெரியதாகவும் இருக்கும். பழத்தை ஜூஸ் செய்து சாப்பிட ஏற்றது. இல்லை எனில் நாட்டுச்சக்கரை கலந்து அதனுடன் பழத்தை சேர்த்து சாப்பிடலாம். வெப்ப காலத்தில் உடலுக்கு அதிக குளிர்ச்சியைத் தரும்.
வெள்ளரியின் பயன்கள்:
விட்டமின் ஏ, பொட்டாசியம் அதிகம் உள்ளது
  1. சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  2. வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும்.
  3. வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
  4. உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும்
நன்றி ;சங்கவி VALAIPPOOO

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 20, 2010, 9:56:47 PM2/20/10
to mintamil digest subscribers
அவியல் 
 
 அண்டை நாடுகளுடன்
அமைதி பேச்சா..?
அப்புறம்
பார்க்கலாம்..!
முதலில்

எங்கள்
மாநிலங்களுக்கு
இடையே
சண்டைகள்
ஓயட்டும்
..!
(முல்லை -பெரியார் ,ஹோக்கனேக்கள் நீர்வீட்சி, கஷ்மீர் , தெலிங்கானா )
,

Kesaven Thirumalai Numbakkam

unread,
Feb 20, 2010, 10:05:36 PM2/20/10
to mintamil digest subscribers
அவியல்

Horlicks ( 500 கிராம் ) - Rs 125
Complan ( 500 கிராம் ) - Rs 175

ஏதோ
மளிகை கடை List-ன்னு
நினைச்சிக்காதீங்க..!

6 மாசத்துக்கு முந்தி
Horlicks தேவையில்லாம Complan -
வம்புக்கு இழுத்துச்சி..

" விலை கம்மியா Horlicks கிடைக்கும்
போது அதிக விலை கொடுத்து Complan
ஏன் வாங்கணும்..? " - இது Horlicks விளம்பரம்..

" தகரத்தோட விலையில தங்கம்
கிடைக்காது.. குழந்தைங்க ஆரோக்கியத்தில
Risk எடுக்கணுமா..? " - இது Complan பதிலடி.

இது நமக்கு தெரிஞ்சது தான்..
இப்போ விஷயம் என்னான்னா..

Horlicks - Pro Height -ன்னு
புது பானம் அறிமுகப்படுத்தி இருக்கு..
Complan மாதிரியே இதுல 23 Vitamins.

விலை..?
அதிகமில்லை 400 கிராம் - Rs 200
( அப்போ 500 கிராம் - Rs 250 )

Complan - விலை அதிகம்னு
சொன்ன Horlicks.,

இப்போ..,
அதைவிட 75 ரூபாய் அதிகத்துல
அதே மாதிரி ஒரு பானம்
கொண்டுவர்றது யாரை நம்பி..?

இதுல என்ன சந்தேகம்..?
நம்மள நம்பித்தான்...

திரிஷா சொன்னாங்கன்னு " Vivel Soap "
வாங்குன ஆளுங்களாச்சே நாம..!

இனிமேலாவது உஷாரா
இருக்கணும்யா..
நம்மள மாதிரி குழந்தை பசங்கள
ஏமாத்திபுடுவாங்க..!
Reply all
Reply to author
Forward
0 new messages