1840ற்கு முன்பு "பல்லவர்களை" சரித்திர ஆசிரியர்களுக்குத் தெரியுமா?

78 views
Skip to first unread message

Vedaprakash

unread,
Nov 29, 2009, 7:24:42 PM11/29/09
to மின்தமிழ்
1840ற்கு முன்பு "பல்லவர்களை" சரித்திர ஆசிரியர்களுக்குத் தெரியுமா?

"பல்லவர்களை"ப் பற்றி "சரித்திர" ஆசிரியர்கள் பற்பல கதைகள் விட்டுக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதாவது கேள்வி கேட்டால் ஓடிவிடுகிறார்கள்.

ஆகவே, "தில்" உள்ளவர்கள், மேலே எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதில்
கொடுக்கவும்!

vj kumar

unread,
Nov 29, 2009, 9:28:13 PM11/29/09
to mint...@googlegroups.com
Hi sir

From what i remember reading, the earliest reference to Pallava art ( mamallapuram) via european accounts is that of John Chambers 1788.

rgds
vj
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/11/30 Vedaprakash <vedamved...@yahoo.com>

Vedaprakash

unread,
Nov 29, 2009, 10:10:42 PM11/29/09
to மின்தமிழ்
According to Vincent A. Smith2 the Pallavas were unknown to Europeans
before 1840 and constituted one of the mysteries of Indian history!

2. Vincent A. Smith, The Oxford History of India, Clarendon Press,
London, 1923, pp.205-6.

தயவு செய்து தாங்கள் குறிப்பிட்டதற்கு ஆதாரத்தைத் தரவும்.

vj kumar

unread,
Nov 29, 2009, 10:42:12 PM11/29/09
to mint...@googlegroups.com


http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/11/30 Vedaprakash <vedamved...@yahoo.com>
According to Vincent A. Smith2 the Pallavas were unknown to Europeans

Vedaprakash

unread,
Nov 30, 2009, 8:50:02 PM11/30/09
to மின்தமிழ்
மிக்கவும் நன்றி!

மிகவும் கவனமாகப் படித்துப் பார்த்தேன்:

Another name, by which Mahabalipuram was known to earlier mariners, at
least since Marco Polo's days, is "seven pagodas" as
seven tall structures were visible from farwhile approaching. Carr
(1869) refers to the account given by William chambers after his
second visit to Mahabalipuram in 1776 that "according to the natives
of the place, the more aged people among them, remembered
to have seen the tops of several
pagodas....................................................

இங்கு என்குமே "பல்லவர்" என்ற வார்த்தை இல்லையே. "ஏழு பகோடா" (!)
என்றுதான் கூறுகின்றனர்!

இந்த புத்தகம் என்னிடத்தில் இல்லை: Chambers William. 1869 Some account
of the sculptures and Ruins at Mavalipuram, a place a few miles north
of Sadras, and known to Seamen by the name of the Seven Pagodas, in
The Seven Pagodas (Ed. Carr. M.W.) New Delhi, pp 1-29.

ஒருவேளை திரு. நரசய்யா அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

On Nov 30, 8:42 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> Dear sir
>
> *http://drs.nio.org/drs/bitstream/2264/506/1/Migration_Diffusion_4_67.pdf
>
> rgds
> vj
> *
>

vj kumar

unread,
Nov 30, 2009, 9:08:07 PM11/30/09
to mint...@googlegroups.com



rgds
vj
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/1 Vedaprakash <vedamved...@yahoo.com>

kra narasiah

unread,
Dec 1, 2009, 7:46:38 AM12/1/09
to mint...@googlegroups.com
We are working on a project Pallava Mallai and Prof Swaminathan is leading it. In fact for a site seminar in Jan 2010 we are working on.
A map of the "the coasts of Malabar and Coromandel presented to the King by William de l'Isle at Amsterdam " dated 1723 mentions "les 7 pagodas". The name of teh site is "Miah-bali-puram or Mauvelivaram, i. e., 7 pagodas" 
(from N S Ramaswamy's work)
Narasiah


--- On Mon, 11/30/09, vj kumar <vj.ep...@gmail.com> wrote:

Vedaprakash

unread,
Dec 2, 2009, 9:12:13 PM12/2/09
to மின்தமிழ்
நன்றி.

இதையும் படித்துப் பார்த்தேன்.

பல விஷயங்கள் உள்ளன [எப்படி நாணயங்கள் மறைதிருக்கக்கூடும் முதலியன].

ஆனால், "பல்லவர்" என்ற வார்த்தை என் கண்களில் படவில்லை.

எனக்கு வயதாகிவிட்டது. கண்கள் பிரச்சினை இருக்கிறது. கண்ணாடி
போட்டிருக்கிறேன். ஒருவேளை நான் சரியாக பார்க்கவில்லையோ என்றும்
தோன்றுகிறது!

ஒருவேளை இருக்கிறது என்றால் சொல்லவும்.

On Dec 1, 7:08 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> Dear Sir
>
> Please refer to this work
>

> http://library.britishcouncil.org.in/IndiaCollections/DissertationsAn...
>

vj kumar

unread,
Dec 2, 2009, 9:16:08 PM12/2/09
to mint...@googlegroups.com
நீங்கள் சொல்வது சரிதான் - பல்லவர் என்று அவரது குறிப்பில்  இல்லை. நீங்கள் தொடருங்கள்.

விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/3 Vedaprakash <vedamved...@yahoo.com>

Vedaprakash

unread,
Dec 2, 2009, 9:40:32 PM12/2/09
to மின்தமிழ்
நீங்கள் சொன்னவுடன் தைரியம் வந்துவிட்டது.

உங்களது "கற்கள் / சிற்பங்கள் பேசுவது" மிகவும் அருமை. உங்களிடத்தில்
நான் தெரிந்து கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது.

ஜான் ஃபைத்ஃபுல் ஃபிளீட் (John Faithful Fleet), நம்பிக்கையுடன் எப்படி
இந்தியாவில் நூற்றுக்கணக்கான வம்சாவளிகள் (dynasties) இருந்துள்ளன என்று
ஒரு புத்தகம் எழுதினான்.

அப்பொழுது "பல்லவர்" பற்றி ஆராய்ந்தபோது திகைதான்.

ஏனெனில் அத்தகையவர் இல்லவே இல்லை!

ஆனால் உள்ள சிற்பங்கள் தோராயமாக 4 முதல் 7 வரை நூற்றாண்டுகளை CEச்
சேர்ந்தது என்று ஒப்பீடு (comparative and relative chronology)
முறைப்படி தேதியைக் குறித்தனர்.

தென்மேற்கு ஆசிய நாடுகளில் இருந்த "பல்லவர்களின்" கல்வெட்டுகளோ
அகழ்வாய்வு அடுக்குகளின் தேதிப்படி "பல்லவ"காலத்திற்கு (pre-Pallavan
period) முன்னே சென்றன!

அவர்களது சிற்பக்கலை (comparing with sculpture, so-called style and
dating them accordingly) / வரிவடிவ (script - it could start only from
Asokan i.e, c.272 BCE and no before) ஒப்பீடுகள் தவறு என்று நன்றாக
அறிந்து கொண்டனர்.

இங்கும் கல்வெட்டுகள் என்று அத்தாட்சி கொண்டு, அந்த சிற்பங்களின்
சொந்தக்கரர்கள் யார் என்று பார்த்தால் மஹாபாரத காலத்திற்குச் செல்கிறது,
அதாவது 3102 BCE.

c.272க்கு முன்னால் எந்த தேதி சென்றாலும், அது இந்தியாவில்
செல்லுபடியாகாது, சரித்திர காலமாகாது (pre-historic)! அப்படியொரு சரத்து!

On Dec 3, 7:16 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> நீங்கள் சொல்வது சரிதான் - பல்லவர் என்று அவரது குறிப்பில்  இல்லை. நீங்கள்
> தொடருங்கள்.
>
> விஜய்http://www.poetryinstone.in
> Here the language of stone surpasses the language of man
>

> 2009/12/3 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>

vj kumar

unread,
Dec 2, 2009, 10:09:42 PM12/2/09
to mint...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா. உங்களை போல பெரியவர்கள் ஆசிகளும் ஆதரவும் எனக்கு நிறைய  தேவை. To hear such words from you is really inspiring. I am quite amazed at the wide spread of topics on which you post detailed messages. I guess i am confining  myself ,atleast for now,  to the study of sculpture and related histories only.

rgds
vj

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/3 Vedaprakash <vedamved...@yahoo.com>

வி. சு.

unread,
Dec 2, 2009, 11:53:53 PM12/2/09
to மின்தமிழ்
On Nov 30, 5:24 am, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> 1840ற்கு முன்பு "பல்லவர்களை" சரித்திர ஆசிரியர்களுக்குத் தெரியுமா?
...

பல்லவர்கால தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஏதேனும் தகவல்கள் உள்ளனவா?

Geetha Sambasivam

unread,
Dec 3, 2009, 3:06:19 AM12/3/09
to mint...@googlegroups.com
அருமையான தகவல்களைக் கொண்ட பாதுகாக்கப் படவேண்டிய இழை. நன்றி தகவல்கள் பரிமாற்றத்துக்கு.எல்லாத்தையும் நானும் படிச்சுக்கறேன். நன்றி.

2009/12/3 vj kumar <vj.ep...@gmail.com>

V, Dhivakar

unread,
Dec 3, 2009, 3:42:23 AM12/3/09
to mint...@googlegroups.com
என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க..
 
நீங்கள் எதற்காக கேட்டீர்கள் என்று புரியவில்லை.
 
தேவார, திவ்வியப்பிரபந்தங்கள் பாடப்பட்டு அருளப்பட்டது பல்லவர்கள் ஆண்ட காலத்தில்தான்.
 
நந்திக்கலம்பகம் என்றோர் அருமையான நூல், நந்திவர்ம பல்லவன் புகழ் பாடப்பெறப்பட்டது.
 
திருத்தொண்டர்புராணப் பாடல்கள் பல்லவர்கால நாயன்மார்கள் பெருமை பேச எழுதப்பட்டது.
 
முதல் தமிழ்க் கல்வெட்டு மகேந்திரர் காலத்தில் வரையப்பட்டதாகும்.
 
மூவர்கள் தமிழ் பாட ஒவ்வொரு கோயில் உள்ள ஊரும் தவம் கிடந்ததாக கதை சொல்வர்.
 
முன்னூறு ஆண்டுகள் மூலையில் கிடந்த தமிழை முன்னிலைப் படுத்தியவர்கள் பல்லவர்களே..
 
திவாகர்

 

V, Dhivakar

unread,
Dec 3, 2009, 3:44:11 AM12/3/09
to mint...@googlegroups.com
திருத்தொண்டர் புராணம் 12ஆம் நூற்றாண்டு நூலானாலும் எனக் கூட்டி வாசிக்கவும்.
 
சீவகசிந்தாமணி 9ஆம் நூற்றாண்டு நூல் - இது பல்லவர்கள் காலம்தான்.
 
தி

 



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

vj kumar

unread,
Dec 3, 2009, 5:10:48 AM12/3/09
to mint...@googlegroups.com

மகேந்திர குடைவரைகள் நூலில் இருந்து - ( திவாகர்  சார் உபயம் ) 


சிராப்பள்ளி அந்தாதி

 

ஒரு பாடலின் இறுதி எழுத்தையோ, அசையையோ, சொல்லையோ, சீரையோ அல்லது அடியையோ முதலாகக் கொண்டு அடுத்த பாடலை அமைக்கும் இலக்கிய வகை அந்தாதி எனப்படும். தமிழ்நாட்டில் காலத்தால் பழமையான அந்தாதிகளாக முதலாழ்வார்களாகக் கருதப்படும் பொய்கையார், பூதத்தார், பேயார் பாடிய திருவந்தாதிகள் மூன்றையும் குறிப்பிடலாம். திவ்விய பிரபந்தத்தில் திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் அந்தாதி இடம்பெற்றுள்ளது. நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி என 87 பாசுரங்களைப் பாடியுள்ளார். சைவ உலகின் கண்ணாகக் கருதப்படும் காரைக்கால் அம்மையாரின் ‘பிறந்து’ எனத் தொடங்கி ‘பிறந்து’ என்றே முடியும் அற்புதத் திருவந்தாதியும் காலத்தால் முற்பட்டதாகும். சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்து அந்தாதியும் குறிப்பிடத்தக்கது. இத்தகு அந்தாதி இலக்கியங்களுள் ஒன்றாகக் கல்லில் மலர்ந்திருக்கும் சிராப்பள்ளி அந்தாதி நூறு கலித்துறைப் பாடல்களால் அமைக்கப்பட்டுள்ளது.

 

இவ்விலக்கியத்தைப் படைத்தவர் தம்மை ‘தமிழ் நாராயணன்’ என்றழைத்துக் கொள்வது நினைந்து மகிழத்தக்கது. இவர் தந்தையார் பெயர் மணியன். ‘மாட மதிரை மணலூர் மதில் வெம்பையோடமர் சேஞலூர் குண்டூர் இந்நீடிய நற்ப்பதிக்கோன் நாராயணன்’ என்று இவரை அடையாளப்படுத்தும் கல்வெட்டு. இவ்விலக்கியத்தைக் கவி நாராயணன் கற்பந்தல் நிழலில் வைத்துள்ளதாகப் பெருமைப்படுகிறது.

 

நூற்று நான்கு வரிகளில் இரு பிரிவுகளில் அடங்குமாறு குடைவரையின் அர்த்தமண்டபப் பின்சுவரில் வெட்டப்பட்டிருக்கும் இவ்விலக்கியமே தமிழ்நாட்டளவில் கல்லில் பொறிக்கப்பட்ட முதல் முழு இலக்கியம் எனலாம். இவ்விலக்கியத்தின் தொடக்கத்தில் உலகத்தின் நெற்றியாக உறையூரைச் சுட்டும் நாராயண கவி, அந்நெற்றிக்குத் திலகமாகப் பரமன் அமரும் சிராமலையைக் குறிப்பிட்டு, உறையூரை வளப்படுத்திப் பாயும் பொன்னி நதியை சிவபெருமான் தம் கழுத்தில் கொண்ட வெள்வடம் என்று சிறப்பிக்கிறார். புரமெரித்தது, காலனைச் சாய்த்தது போன்ற இறைவனின் அருட்செயல்களை விதந்தோதி, அத்தகு சிவபெருமானின் திருவடி இணை சேர்வதே வாழ்க்கையின் குறிக்கோளாக வேண்டுமெனச் சுட்டி, ஆங்காங்கே மலைவளம், மலைவாழ் மக்கள் வளம் கூறி இவ்விலக்கியத்தை அமைத்துள்ளார் நாராயணன்.


நூலின் முழு வடிவம் பெற


http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0337.html


விஜய்
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/3 V, Dhivakar <venkdh...@gmail.com>

V, Dhivakar

unread,
Dec 3, 2009, 5:20:30 AM12/3/09
to mint...@googlegroups.com
விஜய்!
 
அது என் உபயம் இல்லை.
டாக்டர் கலைக்கோவன் உபயம்.
 
இந்தப் பாடல்கள் அனைத்தும் மகேந்திரன் காலத்தில் வடிக்கப்பட்டதா என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனாலும் பாடல் பொருள் வரிகள் அனைத்தும் தேவாரப்பாடலையே ஒத்திருக்கும்.
 
மனிதனுக்கு கையிருந்தும், காலிருந்தும், நடை தெரிந்தும், கண்ணிருந்து பயன் என்ன என்று கேட்பார் தமிழ் நாராயணன். கால்கள் அந்தக் கோயிலைச் சுற்றத்தான், கைகள் கூப்பி வணங்கத்தான், கண்கள் அவன் திருவுருவைக் காணத்தான்..
 
காலால் வலஞ்செய்து கையால் தொழுதுகண் ணாரக்கண்டு
மேலா னவருடன் வீற்றிருப் பாலெண்ணில் மெய்ப்பலவீர்
சேலார் கழனிச் சிராமலை மேயசெம் பொற்சுடரைப்
பாலா னறுநெய்யோ டாடியைப் பாடிப் பணிமின்களே
 
இந்தப் பாடல் அந்தாதி வரிசைதான் கல்லில் வடிக்கப்பட்ட முதல் இலக்கியப் படைப்பு.
 
கல்லிலே கலை வண்ணம் காண்பவருக்கு இந்தக் கல்லிலே காவியம் படைத்தவரைக் கண்டதும் காதல் வருவது இயற்கைதான்.
 
திவாகர்

 

Satheesh kumar R

unread,
Dec 3, 2009, 5:21:02 AM12/3/09
to mint...@googlegroups.com
மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நூலின் ஒரு பகுதியைப் பார்க்கவும்.
பல்லவர்கள் காலம் பக்தி இலக்கிய காலம்....
 
சதீஷ்

3 டிசம்பர், 2009 1:10 pm அன்று, vj kumar <vj.ep...@gmail.com> எழுதியது:
Pages from Tamilnaattu samuthaaya panpaattu varalaaru.pdf

V, Dhivakar

unread,
Dec 3, 2009, 5:28:45 AM12/3/09
to mint...@googlegroups.com
ஓ.. முத்தொளாயிரம் கூடவா..
நன்றி சதீஷ்!
 
தி

 

vj kumar

unread,
Dec 3, 2009, 5:28:57 AM12/3/09
to mint...@googlegroups.com
ஆஹா , அருமை அருமை . சபை கலை கட்டுது

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/3 Satheesh kumar R <svp...@gmail.com>

V, Dhivakar

unread,
Dec 3, 2009, 5:47:53 AM12/3/09
to mint...@googlegroups.com
ஆமாம். களை கட்டுது. 'நகரேஷு காஞ்சி' என போற்றப்பட்ட நகரத்தைக் கொண்டு ஆண்டவர்கள் பல்லவர்கள்., எந்த ஒரு பெயர் பெற்ற, கல்வியில் மிகச் சிறந்த நகரத்திலும் பல ஊர்களைச் சேர்ந்த கல்வியாளர்கள் பலர் இருப்பது வாஸ்தவமே.
 
பல்லவர்கள் பாரசீகக்காரர்களா, வடமொழியாளர்களா என்று ஆராய்வதை விட, பல்லவர்களால் நம் தமிழ் நாட்டுக்கு என்ன கிடைத்தது என்பதை நினைத்துப் பார்த்தோமேயானால் அவர்கள் அருமை பெருமை புரியும். இன்று உலகமே புகழும் மல்லைச் சிற்பங்கள், கற்கோயிலகள், நமக்குக் கொடுத்துச் சென்றது இவர்கள்தான். இவைகள் மூலம் நம் பாரதத்தின் பண்டைய பெருமையை மிக தீர்க்கமாக எடுத்துச் சொன்னவர்கள். இன்று பாரதம் மேலைநாட்டினரால் ஏறெடுத்துப் பார்ப்பதற்கு இவர்களும் ஒரு காரணம்.
 
தொன்றுதொட்டே மொழி என்பது நாம் பிறருக்கு எடுத்துச் சொல்லி விளக்குவதற்காகத்தான் ஏற்பட்டது, (A vehicle to convey the message) வடமொழி என்று சொல்லப்படும் சமுஸ்கிருதம் பல்லவர் காலத்தில் சிறப்பாக இருந்ததற்குக் காரணம் அந்த மொழி அனைத்துக் கல்வியாளரையும் ஒருமைப் படுத்தியதுதான் (தற்போதைய ஆங்கிலம் போல). அந்த அளவுக்கு மட்டுமே பல்லவர்களும் அம்மொழியைப் பயன்படுத்தினர். தவிர தமிழ் அவர்களுக்கு இன்றியமையாத மொழியாக பிற்காலகட்டத்தில் மாறும்போது, செந்தமிழையும் சேர்த்து வளர்த்தனர். தமிழால் ஒரு மாபெரும் மன்னனே மரணமடைவதற்குக் கூட சித்தமானான். நந்திக்கலம்பகம் ஒவ்வொரு பாடலும் நந்திவர்மனை ஒவ்வொரு அடியாக சுடுகாடு நோக்கி செல்ல வைத்தது. அவனும் சுகமாகவே சென்றதாகத்தான் செய்திகள் சொல்லுகின்றன.
 
ஒருவனின் நதிமூலம் ரிஷி மூலம் பார்த்தோமேயானால், பல்லவர் என்றில்லை, பிற்கால, சோழ, பாண்டியர் கூட வடமொழிக் கலப்புதான்.
 
திவாகர்

 

Subashini Tremmel

unread,
Dec 3, 2009, 7:34:52 AM12/3/09
to mint...@googlegroups.com
திரு.சதீஷ்,
 
இந்த நூலின் ஆசிரியர் யார்? தகவல் வழங்க முடியுமா?
 
அன்புடன்
சுபா

2009/12/3 Satheesh kumar R <svp...@gmail.com>
மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நூலின் ஒரு பகுதியைப் பார்க்கவும்.

Subashini Tremmel

unread,
Dec 3, 2009, 7:38:26 AM12/3/09
to mint...@googlegroups.com
திரு.திவாகர், விஜய், சதீஷ், மற்றும் நண்பர்களே,
சென்னை சுற்று வட்டாரத்தில் ஏதேனும் பல்லவர் காலத்து ஆலயங்கள் இருக்கின்றனவா? அவற்றைப் பற்றிய  தகவல் தரமுடியுமா? சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் ஒரு பல்லவர் காலத்து ஆலயம் ஒன்றிற்குச் சென்றிருக்கிறேன். இம்முறை சென்னையில் இருக்கும் போது பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்ல வேண்டும்.
அன்புடன்
சுபா
 
2009/12/3 V, Dhivakar <venkdh...@gmail.com>

Satheesh kumar R

unread,
Dec 3, 2009, 7:53:40 AM12/3/09
to mint...@googlegroups.com
திருமதி. சுபா,
 
இந்த நூலை நான் தஞ்சை நூலகத்தில் இருந்து எடுத்து வருடினேன். இதில் அட்டைப் பக்கம் இல்லை, அதனால் எழுத்தாளர் விவரமும் இல்லை. ஆனால் நூலைப் பார்த்தால் ஏதோ கல்லூரியின் பாடநூல் போல் தெரிகிறது.
 
நூலின் தலைப்பு “தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு”
 
அன்புடன்,
சதீஷ்

3 டிசம்பர், 2009 3:34 pm அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Dec 3, 2009, 8:08:16 AM12/3/09
to மின்தமிழ்

On Dec 3, 6:53 am, Satheesh kumar R <svp...@gmail.com> wrote:
> திருமதி. சுபா,...
>
> read more »


>
> இந்த நூலை நான் தஞ்சை நூலகத்தில் இருந்து எடுத்து வருடினேன். இதில் அட்டைப்
> பக்கம் இல்லை, அதனால் எழுத்தாளர் விவரமும் இல்லை. ஆனால் நூலைப் பார்த்தால் ஏதோ
> கல்லூரியின் பாடநூல் போல் தெரிகிறது.
>
> நூலின் தலைப்பு “தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு”
>

முனைவர் ஏ. சுவாமிநாதன், 1997-ல் அச்சான புத்தகம்.

> அன்புடன்,
> சதீஷ்
>
> 3 டிசம்பர், 2009 3:34 pm அன்று, Subashini Tremmel

> <ksubash...@gmail.com>எழுதியது:


>
>
>
> > திரு.சதீஷ்,
>
> > இந்த நூலின் ஆசிரியர் யார்? தகவல் வழங்க முடியுமா?
>
> > அன்புடன்
> > சுபா
>
> >  2009/12/3 Satheesh kumar R <svp...@gmail.com>
>
> >>  மேலும் தகவல்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நூலின் ஒரு பகுதியைப் பார்க்கவும்.
> >>   பல்லவர்கள் காலம் பக்தி இலக்கிய காலம்....
>
> >> சதீஷ்
>

> >> 3 டிசம்பர், 2009 1:10 pm அன்று, vj kumar <vj.epist...@gmail.com>எழுதியது:

> >>> 2009/12/3 V, Dhivakar <venkdhiva...@gmail.com>


>
> >>>  திருத்தொண்டர் புராணம் 12ஆம் நூற்றாண்டு நூலானாலும் எனக் கூட்டி
> >>>> வாசிக்கவும்.
>
> >>>> சீவகசிந்தாமணி 9ஆம் நூற்றாண்டு நூல் - இது பல்லவர்கள் காலம்தான்.
>
> >>>> தி
>

> >>>>  On 12/3/09, V, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
> >>>>>  என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க..
>
> >>>>> நீங்கள் எதற்காக கேட்டீர்கள் என்று புரியவில்லை.
>
> >>>>> தேவார, திவ்வியப்பிரபந்தங்கள் பாடப்பட்டு அருளப்பட்டது பல்லவர்கள் ஆண்ட
> >>>>> காலத்தில்தான்.
>
> >>>>> நந்திக்கலம்பகம் என்றோர் அருமையான நூல், நந்திவர்ம பல்லவன் புகழ்
> >>>>> பாடப்பெறப்பட்டது.
>
> >>>>> திருத்தொண்டர்புராணப் பாடல்கள் பல்லவர்கால நாயன்மார்கள் பெருமை பேச
> >>>>> எழுதப்பட்டது.
>
> >>>>> முதல் தமிழ்க் கல்வெட்டு மகேந்திரர் காலத்தில் வரையப்பட்டதாகும்.
>
> >>>>> மூவர்கள் தமிழ் பாட ஒவ்வொரு கோயில் உள்ள ஊரும் தவம் கிடந்ததாக கதை
> >>>>> சொல்வர்.
>
> >>>>> முன்னூறு ஆண்டுகள் மூலையில் கிடந்த தமிழை முன்னிலைப் படுத்தியவர்கள்
> >>>>> பல்லவர்களே..
>
> >>>>> திவாகர்
>

> >>>>>  On 12/3/09, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
>
> >>>>>> On Nov 30, 5:24 am, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> >>>>>> > 1840ற்கு முன்பு "பல்லவர்களை" சரித்திர ஆசிரியர்களுக்குத் தெரியுமா?
> >>>>>> ...
>
> >>>>>> பல்லவர்கால தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஏதேனும் தகவல்கள் உள்ளனவா?
>

> >>>>>>http://aduththaveedu.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -

Satheesh kumar R

unread,
Dec 3, 2009, 8:22:00 AM12/3/09
to mint...@googlegroups.com


3 டிசம்பர், 2009 4:08 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:




> இந்த நூலை நான் தஞ்சை நூலகத்தில் இருந்து எடுத்து வருடினேன். இதில் அட்டைப்
> பக்கம் இல்லை, அதனால் எழுத்தாளர் விவரமும் இல்லை. ஆனால் நூலைப் பார்த்தால் ஏதோ
> கல்லூரியின் பாடநூல் போல் தெரிகிறது.
>
> நூலின் தலைப்பு “தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு”
>

முனைவர் ஏ. சுவாமிநாதன், 1997-ல் அச்சான புத்தகம்.
 
 
நன்றி ஐயா..
 
சதீஷ்

vj kumar

unread,
Dec 3, 2009, 8:48:14 AM12/3/09
to mint...@googlegroups.com
dear suba

REACH is renovating the utiramerur kailasanatha temple which dates back to danti varma pallava.

http://www.poetryinstone.in/lang/ta/2008/09/05/a-thousand-year-struggle-to-survive.html

you can also visit the utiramerur vaikunta perumal temple - which is a structural temple but with sudhai moolavars.

http://www.poetryinstone.in/lang/ta/2008/12/03/a-delightful-miniature-from-sundara-varadha-perumal-temple-utiramerur.html

kanchipuram abunds in pallava structures

kailasanatha, vaikunta perumal ...the list is long

then there are later pallava temples like mathangeshwara and mukteshwara

http://www.poetryinstone.in/lang/ta/2009/11/18/later-pallava-doorguardians-mathangeshwara-kanchi.html

there are hundreds of pallava temples, chandra can send you a large list...

rgds
vj

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Satheesh kumar R

unread,
Dec 3, 2009, 8:53:58 AM12/3/09
to mint...@googlegroups.com
விஜய்,
 
சீயமங்கலம், வல்லம், தளவானூர், மண்டகப்பட்டு, பல்லாவரம், குரங்கணில் முட்டம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமல்லவா?
 
சதீஷ்

3 டிசம்பர், 2009 4:48 pm அன்று, vj kumar <vj.ep...@gmail.com> எழுதியது:

Subashini Tremmel

unread,
Dec 3, 2009, 9:31:12 AM12/3/09
to mint...@googlegroups.com
அன்புள்ள சதீஷ்,

2009/12/3 Satheesh kumar R <svp...@gmail.com>
விஜய்,
 
சீயமங்கலம், வல்லம், தளவானூர், மண்டகப்பட்டு, பல்லாவரம், குரங்கணில் முட்டம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாமல்லவா?
 
இந்த இடங்களெல்லாம் சென்னைக்கு அருகிலேயே உள்ளனவா?
 
அன்புடன்
சுபா
 
சதீஷ்

Satheesh kumar R

unread,
Dec 3, 2009, 10:46:08 AM12/3/09
to mint...@googlegroups.com
திருமதி. சுபா,

இவை சென்னையிலிருந்து மூன்று மணிநேர பயணத்திற்குள்தான் உள்ளன. இதோ கீழுள்ள சுட்டிகளைப் பாருங்கள், விஜய் அருமையாக எழுதியுள்ளார்.

http://www.poetryinstone.in/lang/ta/2009/04/23/shatrumalleswaraalayam-a-splendid-creation-of-mahendra-pallava.html

http://www.poetryinstone.in/lang/ta/2009/04/16/the-first-ever-depiction-of-nataraja-in-stone-in-south-india.html

சதீஷ்

3 டிசம்பர், 2009 5:31 pm அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதியது:

V, Dhivakar

unread,
Dec 3, 2009, 10:56:44 AM12/3/09
to mint...@googlegroups.com
Dear Subha,
 
Nearby Chennai - Pallava structures and sculptures
1. Chengleput (vallam cave temple) - 60 kms from Chennai
2. Pallavaram (but difficult to go inside due to the occupation of Mosque)
3. Mamallapuram, (40 kms from Chennai)
4. Kanchipuram (70 kms from Chennai)
5. Beyond Kanchi and a distance of 150 kms south of Chennai, you may find scores of temples, but you need to have time.
6. Thiruveezhimalai, Thirukkazhukkundram, Triplicane, Tiruvanmiyur, Tiruvottiyur, Temples in Chennai most of them prior to Pallava's.
7. Kapaleeswarar Temple - though Padal petra sthalam but the temple is 17th C.
 
D
 


 

Subashini Tremmel

unread,
Dec 3, 2009, 11:03:13 AM12/3/09
to mint...@googlegroups.com
அருமை.
 
மிக்க நன்றி.
சுபா

Subashini Tremmel

unread,
Dec 3, 2009, 11:07:51 AM12/3/09
to mint...@googlegroups.com
நிச்சயம் முயற்சிக்கிறேன்.  அதே போல் கும்பகோணம் போகவும் விருப்பம் உள்ளது. தஞ்சைக்கு சென்று திரும்பும் போது வாய்ப்பு அமைந்தால் நிச்சயமாக போய் வர வேண்டும்..
 
அன்புடன்
சுபா

2009/12/3 V, Dhivakar <venkdh...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 3, 2009, 12:03:52 PM12/3/09
to mint...@googlegroups.com
பல்லாவரம், என் வீட்டுப்பக்கத்தில். போக விருப்பமிருந்தால், மேலெம் மசூதி பிரச்னை தீர்வு காண முடிய்மா என்று விசாரிக்கலாம். கும்பகோணம் போனால், ராமசாமி கோயில் தூண் சிற்பங்களைப் பர்க்கவேண்டும். தஞ்சாவூரில், ஆர்க்கியலாஜிகல் டிபார்ட்மெண்ட் வைத்துள்ள சாவியின் உதவியால், கோயில் உள்ளமைப்பை, ஏறிப்பார்க்கலாம். நாட்டிய கரண சிற்பங்களைப் பார்க்கலாம். உத்தரவு சென்னை தலைமை அதிகாரி திருமதி முனைவர் பத்ரிநாத்திடம் வாங்கவேண்டும். அப்பக்கூட லோகல் ஊழியர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். கும்பகோணம் அருகில் தாராசுரம் கோயில் சிற்பங்கள் யூனெஸ்கோ பட்டியலில். ஸூபர்.
இன்னம்பூரான்

2009/12/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
இன்னம்பூரான்

Satheesh kumar R

unread,
Dec 3, 2009, 1:34:25 PM12/3/09
to mint...@googlegroups.com
அதோடு தவறாமல் புள்ளமங்கை ஆலயத்தையும் பார்க்கவும், இது கும்பகோணம் தஞ்சை சாலையில் பசுபதிகோவில் என்னும் ஊரில் உள்ளது. நேரமிருந்தால் திருவையாறு, திருமழபாடி பார்க்கலாம்.

சதீஷ்

3 டிசம்பர், 2009 8:03 pm அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:

விஜயராகவன்

unread,
Dec 3, 2009, 2:14:49 PM12/3/09
to மின்தமிழ்
சுபா

சென்னையில்/ சென்னைக்கு அருகில் உள்ள கோவில்களை பற்றி ஒரு நல்ல பிளாக்

http://shanthiraju.wordpress.com/directory-of-temples-around-chennai/


விஜயராகவன்

> > 3 டிசம்பர், 2009 4:48 pm அன்று, vj kumar <vj.epist...@gmail.com> எழுதியது:- Hide quoted text -

vj kumar

unread,
Dec 3, 2009, 8:33:38 PM12/3/09
to mint...@googlegroups.com
dear Suba

I am not sure if you would be interested in these cave temples. Hence had not included. If you need to visit these to view the early stone work - then there are some lovely spots, but not easily accessible, you need to have someone to guide you plus most of these are not in worship anymore - hence no spiritual value. If you want to look at both spiritual + structural temples then kanchi is best bet. Of course nartamalai etc, you need someone to assist to rech. Similarly around tanjore there are scores of smaller temples - like the koranganathar temple, pullamangai brahmapureerswarar, kumbakonam nageshwara temple etc are beauties in their own right. please do not miss the mahendra cave in trichy rockfort and the lower cave as well.
 
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


Vedaprakash

unread,
Dec 3, 2009, 8:49:08 PM12/3/09
to மின்தமிழ்
திரு. Vijayakumar Subburaj கேள்வி கேட்டவுடன்,

On Dec 3, 9:53 am, வி. சு. <vijayakumar.subbu...@gmail.com> wrote:
> On Nov 30, 5:24 am, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:> 1840ற்கு முன்பு "பல்லவர்களை" சரித்திர ஆசிரியர்களுக்குத் தெரியுமா?
>
> ...
>
> பல்லவர்கால தமிழ் இலக்கியங்களைப் பற்றி ஏதேனும் தகவல்கள் உள்ளனவா?

"பல்லவர்" காலத் தமிழ் இலக்கியங்கள் பட்டியலிஅடப்படுகின்றன, அருமை.

ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால் அதில் "பல்லவர்" என்ற பெயர் உள்ளதா
என்பதுதான்?

ஆர்தர் வின்சென்ட் ஸ்மித் சாதாரமான ஆள் இல்லை, நிறைய விஷயங்களை
அறிந்தவன். இந்திய சரித்திரம் இப்படித்தான் எழுதப்படவேண்டும் என்று
தீர்மானித்ததில் முக்கியப் பங்கு வகித்தவன். அவன் பார்வையில் படாமல்
அல்லது திருத்தாமல் எந்த புத்தகமும் வெளிவந்ததில்லை எனலாம்.

"பல்லவர்கள் இந்திய சரித்திரத்தில் இருக்கும் பல மர்மங்களில் ஒன்றாக
இருக்கிறது. பல்லவர்கள் பஹ்லவர்கள், அதாவது வடமேற்கத்தைய பார்த்தியர்கள்
அல்லது பாரசீகர்கள் என்று மேலெழுந்தவாரியாக ஒரு சொல்லின் சப்தத்தின்
ஒப்புமையை மட்டும் வைத்துக் கொண்டு யூகமாகக் கூறுவதை முழுவதுமாக
அடிப்படையற்றது என்று ஒதுக்கப்படுகிறது. அவர்களைப் பற்றிய தெரிந்த
விவரங்கள் எல்லாம் அவர்கள் தென்னிந்திய தீபகற்பத்தைச் சேர்ந்த - இனம்,
குழுமம் அல்லது சமூகக்கூட்டம் என்றேக் காட்டுகிறது. அதாவது, அவர்கள்
ஆரம்பக்கால தமிழ் பாரம்பரியத்தில் முக்கியமான பங்கு வகித்த கிராமிய ஆடு-
மாடு வளர்த்த குறும்பர்கள் என்பவர்களே ஆகலாம் அல்லது அவர்களுடன்
நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கலாம் / சம்பந்தப்பட்டிருக்கலாம். சில
நேரங்களில் பல்லவர் "காட்டுவாசிகள்" என்றும் விவரிக்கப்படும்போது,
கள்ளர்களுடனும் ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் எனலாம். ஏனெனில் அவர்கள்
எல்லோரும் வெற்றிக்கொள்ளமுடியாத அக்காலத்து வீரவர்க்கத்தினர் ஆவர்
மற்றும் இக்காலத்து "தைரியமான, கட்டுக்கடங்காத மற்றும் வீரதீர பழக்கங்கள்
கொண்ட"வர்களுடன் இணைக்கப்படுகின்றனர். இன்றைய திருச்சி, தஞ்சாவூர், மதுரை
நகரங்களுக்கு இடைப்பட்ட பிரதேத்தை ஆளும் புதுக்கோட்டை அரசன், தான்
கள்ளர் மரபினன் என்றும் பல்லவர் வழிவந்தவன் என்றும் கூறி பெருமைப்பட்டுக்
கொள்கிறான். அவன் தனது மூதாதையரது பழக்க-வழக்கங்களையெல்லாம்
ஒழித்துவிட்டு நவீனகால மரியாதைக்குரிய ஆட்சியாளனாக இருக்கிறான். அவன்
திருச்சியின் கலெக்டரின் ஆலோசனை கூறுபவர்களின் உதவியுடன் ஆட்சி
செய்கிறான்.

பல்லவர்களின் சரித்திரம் எல்லோராலும் முழுவதுமாக மறக்கப்பட்டு விட்டது.
சில உள்நாட்டு மொழிகளில் அங்கும்-இங்கும் அவர்களைப் பற்றியது போல, ஏதோ
சிறு-சிறு குறிப்புகள் இருக்கலாம், இருப்பினும் 1840ற்கு முன்பு
ஐரோப்பியர்களுக்கு நிச்சயமாக உறுதியாக தெரியப்படவில்லை. அப்பொழுதுதான்
அவர்களது கல்வெண்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவந்துக் கொண்டிருந்தன.
அப்பொழுதிலிருந்து பொறுமையுடன் ஆராய்ச்சியாளர்கள் / கண்டுபிடிப்பாளர்கள்
முதலியோருடைய கடும் உழைப்பினால் பல்லவ சரித்திரத்தின் வெளித்தோற்றத்தை
ஓரளவிற்கு திரும்பப் பெற்று, அந்த வம்சாவளியை இந்திய சரித்திரத்தில்
அதற்குரிய இடத்தில் வைத்தார்கள் என்பது ஒரு சாதாரண விஷயமல்ல".

என்று அவன் சொல்லியிருக்கிறான்! [என்னால் முடிந்த அளவிற்கு ஆங்கிலத்தில்
உள்ளதை மொழிபெயர்த்திருக்கிறேன். முன்பே குறிப்பிட்டபடி புத்தகத்தில்
பார்த்து கொள்ளலாம்]

இதில் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக நோக்கத்தக்கது.

vj kumar

unread,
Dec 3, 2009, 9:29:19 PM12/3/09
to mint...@googlegroups.com
இந்த தேவார வரிகளில் பல்லவர் என்று வருகிறதே.


http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1253&padhi=72&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

படிமிசை நிகழ்ந்த தொல்லைப்
    பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற
    கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன்
    றறிவினில் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர்
    கோக்கழற் சிங்கர் என்பார்.

பொழிப்புரை :

இந்நிலவுலகில் விளங்கும் பழமையான பல்லவர் குலத்தில் தோன்றியவர். காப்புமிக்க மதில்களையுடைய முப்புரங்க ளையும் எரித்த கங்கை பொருந்திய நீண்ட சடையையுடைய சிவ பெருமானின் செவ்விய திருவடிகளையே அல்லாது வேறொன்றை யும் தம் அறிவினில் பொருளாகக் கொள்ளாத தன்மையர். அவர் வெற்றிக் கொடியை ஏந்திய நெடிய படைகளையுடைய மன்னர் மன்னரான `கழற்சிங்கர்' என அழைக்கப்படுபவர்.

vijay
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/4 Vedaprakash <vedamved...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Dec 3, 2009, 11:33:02 PM12/3/09
to mint...@googlegroups.com


2009/12/4 vj kumar <vj.ep...@gmail.com>



--

V, Dhivakar

unread,
Dec 4, 2009, 12:24:58 AM12/4/09
to mint...@googlegroups.com
இது பெரிய புராணப்பாடல் - 12 ஆம் நூற்றாண்டு. பல்லவர் அல்லது காடவர் என்றே அழைக்கப்படுவர். காடவர்கோன் என்பது பல இலக்கியங்களில் செய்திகளாக வருகிறது.
 
சரி.. இலக்கியம் போகட்டும், கல்வெட்டுக்கு வருவேமோ..
சிதம்பரம் கோயிலில் ஒரு கல்வெட்டே பல்லவ இளவரசனின் திருமணம் பற்றியும், அதற்காக தில்லை அலங்கரிக்கப்படுவதையும் குறிப்பிடுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த பல்லவ இளவரசன் சோழன் மனைவியோடு தில்லை வந்து சேரத்து மங்கையை மணம் புரிவது இந்தக் கல்வெட்டுப் பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதோ செய்யுள்
 
சுந்தரத் தோரணம் நாட்டித் துகில்கொடி சூட்டிமுத்துப்
பந்தரப் பாலிகை தீபம் பரப்புமின் பல்லவர்கோன்
செந்தளிர்க் கைகொத் தபையன் மகளுடன் தில்லைஉலா
வந்(து)அளிந்தளிக் கும்பெரு மாள்வெற்பர் மாதை மணம்செயவே

 

இப்படி ஏராளமாகப் போடலாம். ஆனால் திடீரென ஏன் பல்லவர் மீது இத்தனை கரிசனம் அல்லது கோபம்.. யாராவது சொல்லுங்களேன்..
 
திவாகர்


 

vj kumar

unread,
Dec 4, 2009, 1:25:36 AM12/4/09
to mint...@googlegroups.com
"இப்படி ஏராளமாகப் போடலாம். ஆனால் திடீரென ஏன் பல்லவர் மீது இத்தனை கரிசனம் அல்லது கோபம்.. யாராவது சொல்லுங்களேன்.."

பல்லவபுரம் என்ற பல்லாவரத்தை கூட மறந்தாச்சே !!! இப்படியாவது நினைவு படுத்தினால்தான் உண்டு.

விஜய் 
http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/4 V, Dhivakar <venkdh...@gmail.com>

devoo

unread,
Dec 4, 2009, 4:14:44 AM12/4/09
to மின்தமிழ்
Dec 4, 7:29 am, vj kumar

> படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
> கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்ய

> அடிமலர் அன்றி வேறொன் றிவினில் குறியா நீர்மைக்


> கொடிநெடுந் தானை மன்னர் கோக்கழற் சிங்கர் என்பார்.

தொண்டைமான்

கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி
புரிந்தோனாவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை
சேர்ந்தவன். இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை
நாட்டை அரசாண்டு வந்தனர்.

பல்லவர்

இளந்திரையனுக்குச் சில தலைமுறை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும்,
சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன் ஆட்சி
புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர்,
அதுபற்றியே தொண்டையர், பல்லவரெனப்பட்டனர். இப்பெயர்களும், பல்லவர்க்கு
வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னும் பெயர்களும், அந்நாடு முன்பு
காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர்
அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும்,
ஒருவகுப்பினரையே குறிப்பன. சோழர்கள் வழியில் வந்தோரே பல்லவர் என்றும்
சிலர் கருதுகின்றனர்.தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று
கூறப்படுதலாயினும், பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும்
இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும்.

(தமிழ் விக்கிபீடியா)

தொடர்ந்து தமிழகத்தின் சமஸ்தானாதிபதிகளுக்கும் ‘தொண்டைமான்’ என்னும்
பட்டம் எப்படி ஏற்பட்டது ?

தேவ்

V, Dhivakar

unread,
Dec 4, 2009, 5:04:42 AM12/4/09
to mint...@googlegroups.com
சரித்திர ஆசிரியர்கள், முக்கியமாக ஐரோப்பிய ஆசிரியர்கள் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைக்காத காலகட்டத்தில் தத்தமக்குத் தோன்றிய வகையில் பல்லவர்களைப் பற்றி எழுதிவிட்டுப் போய்விட்டனர். ஆனால் 1970க்குப் பிறகு ஏகப்பட்ட நூல்கள் பல்லவர்கள் மீது உள்ளன. இவையெல்லாம் ஏதாவது சில கல்வெட்டுகள் ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவையேதான். ராஜமாணிக்கனார், பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரியார், என்.வெங்கடரமணைய்யா போன்றோர் பலத்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எழுதி உள்ளதால் அவைகளை புறக்கணிக்கலாகாது. மேலும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தென் ஆந்திரத்தில் பல்லவர்கள் ஆணைகளாக பல செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
 
பொதுவாகவே தொண்டைமண்டலத்தை ஆண்டுவந்தவர்கள் தொண்டைமான் என்ற அடிப்படையிலே சரித்திரங்கள் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றன. தமிழகத்தை வடவேங்கடம் எல்லையாகக் கொண்டிருந்த பிரதேசத்தில் தொண்டைக்கொடிகள் ஏராளமான அளவில் இருந்ததாக சொல்லுகின்றனர். ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் தற்போதைய வடக்குத் தமிழகம் காடாகத்தானே இருந்திருக்கவேண்டும். காஞ்சி நகரம் கூட காட்டிலிருந்து நாட்டுக்கு செல்வது போல அமைந்ததாக காணப்பட்டது என எழுதுகின்றனர். (ராஜமாணிக்கனார்)
 
ராமாநுஜ சரிதை சமீபத்தில் படிக்கும்போது அவர் இளைய காலத்தில் காஞ்சியிலிருந்து காசி வரை யாத்திரை மேற்கொண்டதாகவும், போகும் வழியில் அவரைக் கொன்றுவிட அவர் குருவே முடிவு செய்ய, அவர் தப்பித்து மீண்டு வரும்போது காட்டில் அவருக்குத் துணையாக ஆதி தம்பதியரே துணை வந்ததாகவும் காட்டிலிருந்து காஞ்சி வந்தவுடன் மறைந்துவிட்டதாகவும் ஒரு செய்தி வரும். இதில் உள்ள மற்ற விஷயங்களை சற்றே தூரம் வைத்து விட்டுப் பார்த்தோமானால் அந்த 11ஆம் நூற்றாண்டிலும் காடுகள் சுழ்ந்த நிலையில்தான் காஞ்சி இருந்தது என்பது புரியும்.
 
காஞ்சியைப் புகழ்ந்து பாடிய பெரும்பாணாற்றுப்படைப் பாடல்கள் ஏறத்தாழ ஒன்றாம் நூற்றாண்டு என வைத்துக் கொண்டாலும், ராமாநுஜர் கதையைப் படிக்கும்போது, அந்த ஆயிரம் ஆண்டுகளிலும் காஞ்சியைச் சுற்றி மாற்றம் அதிகம் இல்லை எனவே கொள்ளலாம். ஆகையினால் காடுகள் செழித்து விளங்கிய பகுதியாகவும், தொண்டைக் கொடிகள் பரவலாக இருந்த பகுதியானதாலும் தொண்டை அரசு, அல்லது காடவர் என அழைக்கப்பட்டிருக்கலாம்.
 
இந்த தொண்டைமான் எனும் சொல், தெலுங்கில் இந்தப் பிராந்தியத்தில் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அன்னமய்யா பாடல்களில் கூட வருகிறது. திருவேங்கடவனுக்கு திருக்கோயில் எழுப்பியதே தொண்டைமான் தான் என குறிப்புகள் உள்ளன (அன்னமய்யா குறிப்பிட்டுள்ளார், அதுவும் தொண்டைமான் சக்கரவர்த்தி என பாடியுள்ளார்)
 
தொண்டைமான் சோழர்மன்னனான கரிகாலனின் பேரனான இளந்திரையனின் காலத்திலிருந்து வந்திருக்கவே வாய்ப்புகள் உண்டு. இளந்திரையனைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்களே பெரும்பாணாற்றுப்படை.அப்படிப் பார்க்கும்போது இவர்கள் தமிழர்கள்தான் என்று சொல்லலாம் இல்லையா.. வட இந்தியாவில் கொடிகட்டிப் பறந்த இந்துசாம்ராஜ்யமான குப்தர்களின் மேலாண்மையால் பாரதமெங்கும் மாற்றம் ஏற்பட ஆரம்பித்த காலம் அது. இந்தியாவின் பொற்காலம் எனப் புகழ்பெற்ற அப்படிப்பட்ட சூழ்நிலையில் தொண்டைமான்கள் ஆட்சியிலும் தாக்கம் இருந்திருக்கவே வாய்ப்புகள் இருந்தன.
 
சரி, தேவ் அவர்களின் கேள்வி,
தமிழகத்தின் சமஸ்தானாதிபதிகளுக்கும் ‘தொண்டைமான்’ என்னும்
பட்டம் எப்படி ஏற்பட்டது?
 
சிற்றரசர்களாகிவிட்ட சூழ்நிலையில் பல்லவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆதி அங்கீகாரம் இந்த தொண்டைமான் பட்டம் மட்டுமே. (இப்போதும் பழைய ஜமீன்களுக்கும் ராஜாக்களுக்கும் அவர்கள் குடிப்பெயரை வைக்க அனுமதிக்கிறார்கள் -( உ.ம். சிந்தியா - மத்தியப்பிரதேசம், கஜபதி - ஆந்திர விஜயநகரம்) அதுபோலவே இந்தத் தொண்டைமானும் நீடித்திருக்கவேண்டும்.  அவர்கள் சோழர்கள் காலத்தில் ஆண்டுகொண்டிருந்த பகுதியும் வடதமிழகமாகவே இருந்தது. (புதுக்கோட்டை பற்றிக் கேட்டீர்களேயானால், அவர்கள் ஆதியிலேயே பல்லவகுலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டனர்).
 
தி 
.

 

devoo

unread,
Dec 4, 2009, 5:23:49 AM12/4/09
to மின்தமிழ்
நன்றி, திவாகர் சார். தெளிவான விளக்கம். புதுக்கோட்டை சமஸ்தானத்தை
மனத்தில் கொண்டே இக்கேள்வி கேட்டேன்.

தேவ்

> ...
>
> read more »

devoo

unread,
Dec 4, 2009, 6:15:37 AM12/4/09
to மின்தமிழ்
Dec 4, 3:04 pm, "V, Dhivakar"

> சிற்றரசர்களாகிவிட்ட சூழ்நிலையில் பல்லவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஆதி
> அங்கீகாரம் இந்த தொண்டைமான் பட்டம் மட்டுமே.அவர்கள் சோழர்கள் காலத்தில்
> ஆண்டுகொண்டிருந்த பகுதியும் வடதமிழகமாகவே இருந்தது. (புதுக்கோட்டை பற்றிக் >கேட்டீர்களேயானால்,அவர்கள் ஆதியிலேயே பல்லவகுலத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் >கொண்டனர்) ?//

எமது சிற்றூரின் ( இலஞ்சி) முக்கிய அங்கம் ‘தொண்டைமான் குளம்’
பிற்காலப் பாண்டியர்களால் சீரமைக்கப்பட்ட இப்பகுதியில்
தொண்டைமானின் பெயரோடு ஒரு நீர்நிலை.

இதைப் புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் தொடர்பு படுத்துவதா,
பல்லவ வம்சத்துடன் தொடர்பு படுத்துவதா என்று தெரியவில்லை.
இப்பகுதியின் ஆலயங்கள் எவற்றுக்கும் பல்லவர் தொடர்பு கிடையாது;
புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குச் சொந்தமானது எதுவும் இப்பகுதியில் இல்லை.

தேவ்

வி. சு.

unread,
Dec 4, 2009, 6:34:49 AM12/4/09
to மின்தமிழ்

தொண்டை நாடு, தொண்டைமான் - என்பனவற்றில் வரும் "தொண்டை" என்பதன் பொருள்
என்ன ?

தொண்டை - throat ?!

இவர்கள் குரல்வளம் மிக்கவர்கள் போலும். :-)

vj kumar

unread,
Dec 4, 2009, 9:25:35 PM12/4/09
to mint...@googlegroups.com
http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_thondai.htm

The region in which Kanchipuram is situated is generally known as Thondaimandalam or the Pallava country. The area includes Chingleput district and parts of the districts of Chittore, North Arcot and South Arcot. The thondai creeper (Capparis zeylanica) after which the region is named is commonly found in the jungle areas and the creeper produces spectacular flowers in March, and bright red globular fruits later. The flowers were used by the Pallava monarchs in their garlands, and the fruits were compared to the red lips of pretty women by the Tamil poets.

http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2009/12/4 வி. சு. <vijayakuma...@gmail.com>

N. Kannan

unread,
Dec 4, 2009, 9:37:24 PM12/4/09
to mint...@googlegroups.com
Dr.D.Narasimhan from MCC, Chennai has pictured this!

http://tnenvis.nic.in/floral_gal/cappariszeylanica.jpg

I wonder, Dr.Prabakar may enlighten us more on this person. Probably a
Botany professor?

Kannan

2009/12/5 vj kumar <vj.ep...@gmail.com>:

Vedaprakash

unread,
Dec 4, 2009, 11:15:36 PM12/4/09
to மின்தமிழ்
என். சுப்ரமணியன் பாலவர்களுக்கு முந்தைய தமிழ் சொல்லடைவு என்ற நூலின்
முன்னுரையில், 600 CE க்கு முந்தைய காலத்தை அவ்வாற்றாகக் கொள்வதாகக்
குறிப்பிடுகின்றார்! [N. Subramanian, Pre-Pallavan Tamil Undex,
University of Madras, 1990]

பி. சி. சாப்ரா இந்திய தொல்துறை நிர்வாகி தமது “பல்லவர் காலத்தில் இந்தோ-
ஆரியர்களின் கலாச்சார விரிவாக்கம் (கல்வெட்டுகளின்
ஆதரத்துடன்)” [Expansion lof Indo-Aryan Culture During Pallava Rule (as
evidenced by Inscriptions). Munshi Ram Manoharlal, New Delhi, 1965]
என்ற நூலில் பல ஆர்வமூட்டும் விஷயங்களைத் தந்துள்ளார்.

1. 2ம் நூற்றாண்டிலிருந்து CE பல்லவர்களின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகி
ஒரு வலுவுள்ள பேரரசாக வளருகின்றது.

2. 7வது நூற்றாண்டில் உச்சநிலையை அடைகின்றது. பிறகு அது வலுவிழந்து9ம்
நூற்றாண்டில் மறைந்துவிடுகிறது [தாங்கள் கொடுக்கும் இலக்கிய ஆதாரங்கள்
எல்லாம் “பல்லவர்கள்” மறைந்த பிறகுதான் உள்ளன. பல்லவர்கள் இல்லாத
காலத்தில் பல்லவர்களைப் பற்றி ஏன் இலக்கியங்கள் குறிப்பிடவேண்டும்?].

3. ஐந்தாம் நூற்றாண்டில் தென்மேற்காசிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள
பல்லவர்களின் கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளன. அவை
தென்னிந்திய கிரந்த எழுத்துடன் ஒப்பிடலாம் [ஆனால் அந்த பல்லவ கிரந்த
வரிவடிவங்கள் பிற்காலத்தையது என்று தேதியிடப்படுகின்றன].

4. இந்தியாவில் அசோகனுடைய பிரம்மி எழுத்துவடிவங்கள் c. 272 BCE
காணப்படினும், தென்மேற்காசிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ள
கல்வெட்டுகள் பல்லவ-கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன [புத்த மதம் பல
நாடுகளுக்குப் பரவியிருந்தது என்றால் அவர்களது கல்வெட்டுகள் ஏன்
காணப்படவில்லை].

5. எட்டாம் நூற்றாண்டில்தான் ஜாவாவில் இந்தியாவைச் சார்ந்த ஒரு நகரிக்கு
முந்தைய வரிவடிவம் காணப்படுகிறது [N. J. Krom, Hind-Java, Gesch, p.5].
சைலேந்திரிய அரசர்களின் கீழுள்ள ஜாவாவிலும், யசோவர்மனின் கம்போடியாவிலும்
அந்த வரிவடிவன் காணப்படுகிறது [B. R. Chatterji, Indian Cultural
Influence in Cambodia, p.110]. அதாவது வரிவடிவம் ரீதியாக, அதுவரை
“இந்தியத் தாக்கம்” இல்லை!

6. தென்னிந்திய பல்லவர்களின் ஆதிக்க வளர்ச்சி, இந்த தென்மேற்காசிய
நாடுகளில் காணப்படும் பல்லவ தாக்கத்துடன் ஒத்துப்போகின்றது. இதனால்,
கடல்வழி தொடர்பு இருந்திருக்கவேண்டும் எனத்தெரிகின்றது. அதாவது “இந்திய
பல்லவர்கள்” “பல்லவ கால”த்திற்கு முன்பேயே தென்மேற்காசிய நாடுகளில்
இருச்ந்திருக்க வேண்டும்!

7. மேலும் விந்தையான விஷயமென்னவென்றால் இங்குள்ள கல்வெட்டுகள் இஎதியாவின்
சம்பந்தத்தைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை.

8. ஸர் வால்டெர் எல்லியட் என்பார் 7வது நூற்றாண்டுக்கு பல
நூற்றாண்டுகளிக்கு முன்பு பாலார் மற்றும் பெண்ணார் ஆறுகளுக்கு இடைப்பட்ட
பிரதேசத்தில் இருந்த குரும்பர்கள் என்பவர்கள் கப்பல்கள்
வைத்திருந்திருந்தனர். அவர்கள் கடல்வழி வாணிகம் செய்து வந்தனர் [Sir
Walter Elliot, Coins of Southern India, in Numismata Orientalia, pp.
36,37]. அவர்கள் இரட்டைப் பாய்மரக் கப்பலின் சின்னத்தை தமது நாணயங்களில்
பொரித்தனர். ஆனால், பல அத்தகைய நாணயங்கள் அழிக்கப் பட்டுவிட்டன.
அதுமட்டுமல்ல, வால்டர் எல்லியனுடைய சேகரிப்பிலிருந்து குறிப்பிட்ட
அத்தகைய நாணயங்கள் மறைந்து விட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார்
[K. V. RamaKrishna Rao, The Riddles of Pallava Script, a paper
presented at the SIHC, 26th Session held ast Bangalore from March 3rd
to 5th, 2006;
….……………………….., The Ship-type coins of Tamizhagam, a paper presented at
THC at Rajapalayam held from Feb. 2nd to 4th 2007
........................................, The Appearance and
Disappearance of Ancient Indian Coins, to appear in "A Festschrift to
Dr Raja Reddy"].

9. அதாவது அந்த பிரதேசத்தில்தான் பல்லவர்களும் ஆட்சி புரிந்து வந்தனர்.
ஆகையால், பல்லவர்களுக்கும் “குரும்பர்களுக்கும்” தொடர்பு இருக்கவேண்டும்.

10. அதே மாதிரி 12ம் நூற்றாண்டு வரை ஆப்பிரிக்க, மத்தியத்தரைக்கடல்
நாடுகளுடன் வியாபாரம் செய்து வந்த கடம்பர்களுக்கும் பல்லவர்களுக்கும்
சம்பந்தம் இருக்க வேண்டும். தண்டிவர்மன் c.775-c.826 CE, அக்கலனிம்மதி
(?) என்ற கடம்ப இளவரசியை மணம் புரிந்துக் கொள்கிறான் [Inscriptions of
Paalava].

வேதபிரகாஷ்
05-12-2009


V, Dhivakar

unread,
Dec 5, 2009, 1:51:48 AM12/5/09
to mint...@googlegroups.com
>>>7வது நூற்றாண்டில் உச்சநிலையை அடைகின்றது. பிறகு அது வலுவிழந்து9ம்
நூற்றாண்டில் மறைந்துவிடுகிறது [தாங்கள் கொடுக்கும் இலக்கிய ஆதாரங்கள்
எல்லாம் “பல்லவர்கள்” மறைந்த பிறகுதான் உள்ளன. பல்லவர்கள் இல்லாத
காலத்தில் பல்லவர்களைப் பற்றி ஏன் இலக்கியங்கள் குறிப்பிடவேண்டும்?].<<<
 
Sir, With due respects to your postings, i give following.
 
7th, 8th, 9th - three centuries, Pallavas were very strong. Small loses here and there can not be counted. Nandhi and Dhanthi Varman were ruling most part of the centuries (8th and nineth).
 
It seems, you don't want to take Devaram or Nandhikkalambakam are all of Pallava's work during their period.
 
Most of your views are based on very old letters of Europeans, it seems (any how I will have to check-up), Please rely on the great efforts of our own people who spent entire life on research. You can take references from Dr. Nagasamy. He did lot of research and put his comments on his web site.
 
Marriages of Kings with other countries, these were very common those days. There was an copper inscription about how one Mahendra Pallava at the age of 50, travelled in Ship upto Ganges then with the help of Brahmins at Ganges and Kaasi, he wedded Gupta's daughter Iswarya, for which the Brahmins asked the King to donate volunteely to them. When he travels back again the sea route, there was a war between his soldiers and some pirates which he won too.
 
Pallava ended their rule by the mid of 10th century then Chola occupied. What you said 12th century Pallava, they were sub-ordinates to Chola's and any inscription they were suppose to mention the Chola Emperor name only. It was the practice those days. Then 13th Century and 14th Century Kadava Singa took over the reign for some time. That too not at Kanchipuram but ruling from Chidambaram.
 
I request you to consider the latest findings too which are more authentic sources. Olden day's proofs were sometimes strengthened and sometimes proved false. For your information (you may already know otherwise), the same europeans considered Tanjore Big Temple was constructed by Karikal Chola. Later it was clarified by eminent Historian S.Krishnaswamy who did marvellous efforts in finding inscriptions by walking all the distances in those days for want to source. I salute these people who did proud to our culture. Burten Stein, the living legend, and ex-cambride who wrote many books has properly acknowledged this.
 
I have already given an inscription song of Pallava, sculptured on the wall of Chidambaram Temple of 9th century. The verse has the word of Pallava very much. and This is in Tamil classic and the old europeans did not do any research on old tamil verses or tamil inscription while British ruling this part of the world. Still what you need to prove, I do not know.
 
Hope these clarification may help you.
 
Dhivakar

V, Dhivakar

unread,
Dec 5, 2009, 2:00:45 AM12/5/09
to mint...@googlegroups.com
தொண்டை நாடு, தொண்டைமான் - என்பனவற்றில் வரும் "தொண்டை" என்பதன் பொருள்
என்ன ?

தொண்டை - throat ?!
 
கேள்வியின் நாயகர் - எனப் பெயர் வைக்கலாமா தங்களுக்கு? (:-
 
கோவைப்பழத்தை தொண்டைப்பழம் எனச் சொல்வார்கள். கோவைக்காய் இப்போதும் தொண்டைக்காய் எனவே ஆந்திரப்பகுதியில் பயிரிடப்பட்டு உணவுப் பொருளாகப் பிரபலம். சென்னையிலும் இந்தக் காய் கோவைக்காய் என்ற பெயரில் கிடைக்கிறது. இது பொதுவாக வேலிகள் அமையும்போது கொடியாக படரும் இயல்புடையது. எங்களூர்ப் பகுதியில் வேலிகளில் இப்போதும் படர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சீண்டுவார் யாருமில்லை.
 
தி

 

Geetha Sambasivam

unread,
Dec 5, 2009, 2:11:51 AM12/5/09
to mint...@googlegroups.com
ஆதிசக்தியை ராஜராஜேஸ்வரியாக வழிபட்ட பிரம்மன் பூஜித்த தாமரை மலர் ஒன்று மானுடனாக மாறி விண்ணில் இருந்து பூமிக்கு வர, அவனுக்கு ஆகாச பூபதி என்ற பெயருடன் காஞ்சியை ஆண்டுவரச் செய்தனர். அவன் குழந்தைப்பேறுக்காகத் தவம் இருக்க விநாயகரை அவனுக்கு மகவாகப் பிறக்கும்படி அருளுகின்றாள் அம்பிகை. குழந்தைக்குத் துண்டீரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த வேளையில், அரசன் நடத்திய சுமங்கலி போஜனத்தில் அவன் அறியாமல் காமாக்ஷியும் கலந்து கொள்ள, குழந்தையாய் வந்த விநாயகரை தாயைக் கண்டு தவழ்ந்து அவளிடம் செல்ல, அன்னை மறைந்தாள். அன்னை அருந்திய உணவில், அரசியின் மாலையின் முத்து ஒன்று பருப்போடு கலந்து அன்னையின் வயிற்றில் போக, தான் எடுத்துக் கொண்ட ஒரு தங்க முத்துக்காக, நகரம் பூராவும் தங்கமாய் வருஷிக்கச் செய்தாள் அன்னை. துண்டீரன் ஆண்டதாலேயே இந்தப் பகுதி தொண்டை நாடு என்ற பெயரும் பெற்றது.
http://geethasmbsvm6.blogspot.com/2009/10/1.html//

இது தொண்டைநாடு பெயர்க்காரணம் பற்றிப்  புராணங்கள் சொல்வது. தொண்டைமான் என்ற பெயர் தனக்கு வந்தது எப்படி என்று திரு பாஸ்கரத் தொண்டைமான் குறிப்பிட்டிருக்கிறார். புத்தகம் தேடணும். கிடைத்தால் அது பற்றிய குறிப்புகளைத் தர முயல்கிறேன்.

2009/12/5 V, Dhivakar <venkdh...@gmail.com>

Chandra sekaran

unread,
Dec 7, 2009, 12:31:00 PM12/7/09
to mint...@googlegroups.com
திரு.திவாகர், விஜய், சதீஷ், மற்றும் நண்பர்களே,
சென்னை சுற்று வட்டாரத்தில் ஏதேனும் பல்லவர் காலத்து ஆலயங்கள் இருக்கின்றனவா? அவற்றைப் பற்றிய  தகவல் தரமுடியுமா? சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் ஒரு பல்லவர் காலத்து ஆலயம் ஒன்றிற்குச் சென்றிருக்கிறேன். இம்முறை சென்னையில் இருக்கும் போது பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்ல வேண்டும்.
 
அன்புடன்
சுபா
 
 
என்ன இப்படி கேட்டுட்டீங்க? உத்தரமேரூர் முழுதும் பல்லவ்ர் கோயில்கள் உள்ளனவே? ரீச் சீர் செய்யும் கைலாசநாதர் கோயிலும் பல்லவ்ர் காலத்து கோயிலே! சும்மா காலை 7 மணிக்கு கிளம்பினால் மாலை 3 க்குள் வந்துவிடலாம். சைதாப்பேட்டையில் கூட பல்லவ்ர் கால கோயில் உள்ளது.
சந்திரா
 

 

விஜயராகவன்

unread,
Dec 7, 2009, 3:05:28 PM12/7/09
to மின்தமிழ்

> > சென்னை சுற்று வட்டாரத்தில் ஏதேனும் பல்லவர் காலத்து ஆலயங்கள் இருக்கின்றனவா?
> > அவற்றைப் பற்றிய  தகவல் தரமுடியுமா? சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில்
> > ஒரு பல்லவர் காலத்து ஆலயம் ஒன்றிற்குச் சென்றிருக்கிறேன். இம்முறை சென்னையில்
> > இருக்கும் போது பார்க்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்ல வேண்டும்.
>
> > அன்புடன்
> > சுபா

சென்னை பகுதிகள் பல்லவர்கள் நேரடி நிர்வாகத்தில் இருந்ததால் பல பல்லவர்
கால கோவில்கள் உள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலை ஆழ்வார்கள்
பாடியுள்ளனர். ஹிண்டு கட்டுரை படி (http://www.hindu.com/fr/2004/05/21/
stories/2004052102020600.htm)
A Pallava king built the present temple in the eighth century. The
gopuram was also built by a Pallava king - Tondaiman Chakravarthy.

Kodambakkam Sri Vyakrapureeswarar Temple

North Chennai Sri Kailasanathar Temple at Madhavaram This is a
7th century temple built by the Pallava King Nandhivarman II

About Pallava connections to Kodambakkam
http://www.hinduonnet.com/thehindu/fr/2004/01/02/stories/2004010201511200.htm

விஜயராகவன்

Reply all
Reply to author
Forward
0 new messages