மின் நூல்களின் பட்டியல்

26 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Nov 30, 2009, 3:42:27 PM11/30/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
நண்பர்களே,
 
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்களின் பட்டியலை அகரவரிசைப்படி பட்டியலிடும் ஒரு பக்கத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த பக்கத்தில் இதுவரை மின்பதிப்பு செய்யப்பட்ட  நூல்களின் பட்டியல்கள் உள்ளன. இந்த பட்டியலில் நூல்களை ,பெயர், நூலாசிரியர், வெளிவந்த ஆண்டு, மின்பதிப்பு செய்தவர், மின் நூல் உருவாக்கியவர், மொழி என்ற வகையில் வரிசைப்படுத்தலாம். இப்பக்கம் நமது மின்னூல்கள் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதனைக் காண http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html சென்று Click Here to view E-book Sortable Catalog என்ற பகுதியைக் காணவும் நேரடியாக இப்பக்கத்திற்குச் செல்ல http://www.tamilheritage.org/old/text/ebook/ebookcat.html. மின் பதிப்பாக்கம் செய்யும் நண்பர்களுக்கு இந்தப் பட்டியல் பெரிதும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
 
குறிப்பு: இந்த பட்டியல் முற்றிலும் முழுமை பெறவில்லை.
 
அன்புடன்
சுபா

Innamburan Innamburan

unread,
Nov 30, 2009, 6:40:36 PM11/30/09
to mint...@googlegroups.com
மிக்க நன்றி, ஸுபாஷினி,
என்னுடைய பட்டியலோ, பாக்கி இருக்கும் வேலை. அனுப்புகிறேன்.


2009/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
இன்னம்பூரான்

Subashini Tremmel

unread,
Dec 1, 2009, 3:16:58 AM12/1/09
to மின்தமிழ், ksuba...@gmail.com
ஒரு சிறிய குறிப்பு. இது ஒரு தற்காலிக பட்டியல் மட்டுமே.
இந்தப் பட்டியல் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் மேலும் சீரமைக்கப்படும்.  தற்போது இந்தப் பட்டியலை IE ப்ரவ்ஸரில் மட்டுமே  வரிசைப்படுத்த முடியும்.
 
சுபா
2009/11/30 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 1, 2009, 3:35:00 AM12/1/09
to mint...@googlegroups.com
 திரு.இன்னம்புரான்,
 
இந்த பக்கத்தில் அகரவரிசைப்படுத்திப் பார்த்ததேன். திரு.வி.க பட்டியலில் நாம் இதுவரை 12 நூல்களை முடித்திருக்கிறோம். 
 
102 சைவ சித்தாந்தமும் சமரச சுத்த சன்மார்க்கமும் திரு.வி.க
75 தமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத் திரட்டு - முதற் பகுதி திரு.வி.க. கதை  
76 இந்தியாவும் விடுதலையும் திரு.வி.க.
77 பொதுமை வேட்டல் திரு.வி.க. 
79 மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் திரு.வி.க.
85 சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து திரு.வி.க.
88 தமிழ்நாடும் நம்மாழ்வாரும் திரு.வி.க.  
91 சன்மார்க்க போதம் திரு.வி.க.  
94 தமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத் திரட்டு திரு.வி.க.
95 தமிழ்த் தென்றல் தலைமை உரைகள் திரு.வி.க.
143 திரு.வி.க வின் தேசபக்த கட்டுரைகள் திரு.வி.க.
144 வைத்திய திரவு கோல் திரு.வி.க.
 
மேலும் சில நூற்கள் மற்றும் தேசபக்தன் நவசக்தி இதழ்கள் ஆகியவற்றை நாம் திரட்ட வேண்டும்.  முழு நூல் பட்டியல் காண:
  
 
அன்புடன்
சுபா

 
2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Dec 1, 2009, 4:13:59 AM12/1/09
to mint...@googlegroups.com
அன்பின் சுபாஷிணி,

ஓரளவுக்கு நன்றாக செய்திருக்கிறோம். வாழ்க்கைகுறிப்புகள் 1000 பக்கத்துக்கு மேலானது. அதையும் அனுப்பிருக்கிறேன். 144 வைத்திய திரவு கோல் திரு.வி.க எழுதியது அல்ல. அதை பழைய அரிய நூல். அதை தான் திரு சுகுமாரனுக்குக் கொடுக்க வைத்திருக்கிறேன். திவாஜிக்குக் கொடுக்க நிணைத்த சாமவேதம் அகப்படவில்லை, இது வரை. அவருக்கு, வேறு நல்ல நூல் கொணருகிறேன், அது 6ம்தேதி வரை தேடமுடியவில்லை எனில். நவசக்தி, தேசபக்தனெல்லாம் காணாமல் போய்விட்டன. ஒரு நவசக்தி வருடாந்திர இதழ் ரோஜா முத்தையாவில். முனௌவர் நாகலிங்கம் மூலமாக, மேலும் தேடிக்கொண்டிருக்கிறேன்.
இன்னம்பூரான்

2009/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>

N. Kannan

unread,
Dec 1, 2009, 4:32:50 AM12/1/09
to mint...@googlegroups.com
சுபா:

இன்னும் கொஞ்சம் தொழில் நுட்பர்கள் கூட உழைத்தால் த.ம.அயின் சேகரங்கள்
அனைத்தையும் பட்டியலிட முடியும். அப்போதுதான் நமது சேகரங்களின் வளம்
தெரியும். பலர் நமது வலைப்பக்கங்கள் பக்கமே வருவதில்லை, எனவே தெரிந்து
கொள்ளாமல் இருக்கின்றனர்.

எப்படியும் நமது ஒலிப்பதிவுகள் அட்டவணைப்பட வேண்டும்.

இந்த மன்றத்தில் நிறையப் பேர் தினமும் சேருகின்றனர். யார், யாருக்கு
என்னின்ன திறமைகள், யாருக்கு நேரமிருக்கிறது, யாருக்கு ஆர்வமிருக்கிறது
என்பதெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை.

எங்கே? அடி ஆழத்திலிருந்து `இதோ நானிருக்கிறேன்` எனும் குரல் கேட்பது போலில்லை?

கண்ணன்

2009/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

> http://www.tamilheritage.org/old/text/ebook/ebookcat.html.

Subashini Tremmel

unread,
Dec 1, 2009, 4:43:01 AM12/1/09
to mint...@googlegroups.com
ஆமாம் கண்ணன்,
 
ஓலைச் சுவடிகளின் பட்டியல்
ஓவியங்கள்
ஓடுகள், சிலைகள்..
இசை
ஒலிப்பதிவுகள்
காணொளி பட்டியல்
இன்னும் பல சிறப்பு பக்கங்களில் உள்ள இன்ன பிற நூல்கள்.. உதாரணம் . .சித்தி ஜுனைதா ..
 
இவையெல்லாம் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.
 
சுபா


 
2009/12/1 N. Kannan <navan...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 1, 2009, 6:39:36 AM12/1/09
to mint...@googlegroups.com
ஒரு பட்டியல்  தயாரித்து
 
அதை மீண்டும்  படிக்க  கேட்க  பார்க்க  நம் நண்பர்களைத் தூண்டும் விதமாக
 
பரிசுகள்  அறிவிக்கலாம்
 
ரசமாக  இருக்கும்
 
சாறு பிழிய  யார் தயார்  பார்ப்போமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
1-12-09 அன்று, Subashini Tremmel <ksuba...@gmail.com> எழுதினார்:
2009/12/1 N. Kannan <navan...@gmail.com>


அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Tirumurti Vasudevan

unread,
Dec 1, 2009, 7:52:53 AM12/1/09
to mint...@googlegroups.com


2009/12/1 N. Kannan <navan...@gmail.com>
சுபா:

இந்த மன்றத்தில் நிறையப் பேர் தினமும் சேருகின்றனர். யார், யாருக்கு
என்னின்ன திறமைகள், யாருக்கு நேரமிருக்கிறது, யாருக்கு ஆர்வமிருக்கிறது
என்பதெல்லாம் ஒன்றுமே தெரிவதில்லை.
மாடரேட்டடருக்கு தெரியாட்டா எங்களுக்கு எப்படி தெரியும்? :-))
 சேர விண்ணப்பம் வரப்பவே தகவல்கள் சேக்கணும்.

திவாஜி

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

N. Kannan

unread,
Dec 1, 2009, 8:54:23 AM12/1/09
to mint...@googlegroups.com
ஆகாஹா!
அவ்வளவு சீக்கிரமாச் சொல்லிடுவாங்களா?
எல்லோரும் தமிழை உயர்த்திப் பிடிப்பதாகச் சொல்லித்தான் சேர்கிறார்கள்.
அப்படியே ஒரு கை கொடுத்தால் நிஜமாகவே உயர்த்திப்பிடிக்கலாம்!
காத்திருக்கிறோம்;-)
க.>

Innamburan Innamburan

unread,
Dec 1, 2009, 10:47:12 AM12/1/09
to mint...@googlegroups.com
திவாஜீ! திவாஜீ! நீங்கள் க்ரோம்பேட்டை எமைடியில் வகுப்பு எடுத்தபோதே, அக்கரை சீமையிலெருந்து அக்கரையாக்கேட்டேனே, ஞ்யாபகம் இருக்கோ? அப்போது இருபது பேர் போல வந்தார்களாமே? அவர்கள் ஏன் வாளாயிருக்கிறார்கள், ஐயா?
இன்னம்பூரான்

2009/12/1 N. Kannan <navan...@gmail.com>

Tirumurti Vasudevan

unread,
Dec 1, 2009, 10:59:09 AM12/1/09
to mint...@googlegroups.com


2009/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

திவாஜீ! திவாஜீ! நீங்கள் க்ரோம்பேட்டை எமைடியில் வகுப்பு எடுத்தபோதே, அக்கரை சீமையிலெருந்து அக்கரையாக்கேட்டேனே, ஞ்யாபகம் இருக்கோ? அப்போது இருபது பேர் போல வந்தார்களாமே? அவர்கள் ஏன் வாளாயிருக்கிறார்கள், ஐயா>?

யாமறியோம் பராபரமே!

N. Kannan

unread,
Dec 1, 2009, 6:14:54 PM12/1/09
to mint...@googlegroups.com
நாம்/நம்மிடம் முதலென்று சொல்லத்தக்க பல விஷயங்களுண்டு:

உத்தமம், த ம அ இரண்டும் சமகாலக் குழந்தைகள். த ம அக்கான அஸ்திவாரம்
1990களின் இறுதியிலும், தமிழகத்தில் 2000 ஆண்டு நடந்த இரு நிகழ்வுகளிலும்
போடபடுகிறது.

தமிழின் முதல் நாவல் எனக் கருதப்படும் அத்தியூர் அவதானி சரித்திரம்,
திரு.நரசைய்யா அவர்களின் உதவியால் மின்னாக்கம் பெறுகிறது (சிட்டியின்
திறனாய்வுக் கட்டுரை முக்கியம்)

பாரதிதாசன் `பாரதமாதா` குறித்து எழுதிய அரிய புத்தகமொன்று திரு.மாலன்
அவர்கள் உதவியால் மின்னாக்கம் பெறுகிறது. இது பாரதிதாசனை ஒரு தேசபக்தனாக
இனம் கட்டும் புத்தகம்.

சித்தி ஜுனைதா பேகம் அவர்களை த.ம.அ மின்னுலகில் அறிமுகப்படுத்துகிறது.
இதில் இரு சிறப்புகள். தமிழின் ஆரம்பகாலத்தில் உருவான பெண்
எழுத்தாளர்களுள் சித்தி முக்கியமானவர். சிறுபான்மையினரான முஸ்லிம்
சமூகத்தில் பிறந்தவர்.

தமிழின் முதல் OCR புத்தகம் வெளியாகிறது.

தமிழில் அண்டகோளம் பற்றிப் பேசும் பூகோள பகோள விஷயத்தை ஸ்ரீரங்கம்
மோகனரங்கன் அறிமுகப்படுத்துகிறார்.

தமிழுக்கும் சிந்து சமவெளி நாகரீகத்திற்குமுள்ள தொடர்பு மற்றும் தமிழின்
பழமை பற்றிப் பேசும் அரிய ஆவணங்களின் மின்னாக்கம்...

இப்படி...

திவாஜியும், ரங்கனும் team up ஆன பின் பல அரிய புத்தகங்கள் நம் கைவசம்
வந்து சேர்ந்துள்ளன. இது போன்ற செய்திகளை மேலும் பிரகாசிக்கச் செய்ய
இம்மாதிரி பட்டியல் உதவி செய்யும். நமது புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள்
இன்ன பிற பட்டியிலிட ஆர்வமுள்ளவர் வந்துதவக் கோருகிறோம்.

கண்ணன்

2009/12/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages