பழமைங்றது ரொம்ப முக்கியம் இராசா!

3 views
Skip to first unread message

பழமைபேசி

unread,
Feb 24, 2010, 11:17:23 PM2/24/10
to மின்தமிழ், முத்தமிழ், tamizh...@googlegroups.com, ezhil

பழமைங்றது ரொம்ப முக்கியம் இராசா!

ஒருத்தர் சொன்னாரு, இறந்த காலம்ங்றது இறந்து போன ஒன்னு; எதிர்காலம்ங்றது இன்னும் கைக்கே வந்து சேராத ஒன்னு! ஆக, ஒருத்தங் கையில இருக்கிறது நிகழ்காலம் மட்டுமே. அந்த நிகழ்காலத்தை இனிமையாக்கி வாழறதுதான் மிக முக்கியம் அப்படின்னு!
 
ஆமாங்க, இதை ஏற்ற இறக்கத்தோட நயம்பட எழுதினா, படிக்க நல்லாதான் இருக்கும். ஆனா, வாழ்க்கைக்கு எது ஆதாரம்? எது மூலம்?? எது அடிப்படை???
 
பழமைதான் மூலம்; பழமைதான் ஆதாரம்; பழமைதான் அடிப்படை! ஒவ்வொருத்தரும், அவங்கவங்க வாழ்க்கையச் சக்கரம் கண்டுபிடிக்கிறதுல இருந்து ஆரம்பிக்க முடியுமா? முடியாது!
 
எழுதி வெச்சதைக் கத்துகிட்டு, லெளகீகங்றது எந்த நிலையில இருக்கோ, அதுல இருந்து மேம்பட முயற்சிக்கணும். சரிதானே? அப்ப, எழுதி வெச்சதை, பதிஞ்சி வெச்சதைப் படிச்சு ஆகணும். அப்பத்தான் புதுமைகள் மலரும்! இல்லாட்டி, பழசுலயேதான் திரும்பத் திரும்ப உழண்டுகிட்டு இருக்கணும்!
 
சரி, பழசைக் கத்துகிறதால என்ன அனுகூலம்?
 
  1. பழமையைக் கற்பதால், அடையாளத்தைத் தெரிவு செய்து, முகாந்திரம் வெளிப்படுகிறது.

  2. பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வழிமுறைகள் செம்மைப்படுகிறது.

  3. பழமையைக் கற்பதால், சமூகக் கோட்பாடுகளின் நிறை குறைகளை அறிய முடிகிறது.

  4. பழமையைக் கற்பதால், கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க முடிகிறது.

  5. பழமையைக் கற்பதால், தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுச் செம்மைப்படுத்த ஏதுவாகிறது.
சரி, இனி ஆரம்பிச்ச இடத்துக்கே வரலாம். ஒருத்தருக்கு எப்பவும் நிகழ்காலம் இனிமையாவே இருந்தா, அது நல்லதுதான். அந்த இனிமைக்கு எது முதலீடு? பழமைதான் முதலீடு! கடந்து வந்த பாதை முக்கியந்தானே?
 
பழமையான நினைவுகளை அசைப்போட்டுக் கூட, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும். பழைய தவறுகளை நினைச்சு, அதுல இருக்கிற வழுக்களைக் களைந்து, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும்.
 
அதேபோல, எதிர்காலத்தைப் பற்றிய அவதானமும், முன்னெச்சரிக்கையும் மிக அவசியம். வருமுன் காப்பது சாலச் சிறந்தது அப்படின்னு சொல்லிப் படிக்கிறமே?
 
இப்படி, எதிர்காலத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைக்கு மூலதனம் பழமை. இந்த முன்னெச்சரிக்கைக்காக, பழமைங்ற மூலதனத்தைப் போட்டு விளைச்சல் மேற்கொள்றது நிகழ்காலம். ஆக, எதிர்காலத்துக்கும் இன்றியமையாதது இந்தப் பழமை!
 
முத்தாய்ப்பா நாம சொல்றது என்னன்னா, பழமைய மேம்படுதலோட கூட்டிப் புதுமை காணுறதுதாங்க வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும்! பழமை, பழமைன்னு ஒதுக்கி வைக்கிறதாலப் புதுமை வந்திடாதுங்க இராசா!!
 
 
பழமை அறியாதவன் பாழ்!
 
பணிவுடன்,
பழமைபேசி. 

N. Kannan

unread,
Feb 25, 2010, 6:26:40 AM2/25/10
to mint...@googlegroups.com
2010/2/25 பழமைபேசி <pazam...@gmail.com>:

>
> பழமை அறியாதவன் பாழ்!
>

அப்படி போடு ஜக்கைன்னானாம் ;-)
நம்ம முதுசொம் இயக்கத்திற்கு இதைவிட அழகாக வேறுயார் முன்னுரை தந்திட முடியும்?
சபாஷ் பழமைபேசியே!

க.>

nazer ali

unread,
Feb 25, 2010, 6:45:05 AM2/25/10
to mint...@googlegroups.com


2010/2/25 N. Kannan <navan...@gmail.com>
2010/2/25 பழமைபேசி <pazam...@gmail.com>:
>
> பழமை அறியாதவன் பாழ்!
>

--பழமை அறிந்தவன்  பழம்
பழமை அறியாதவன் ஜடம்

விஜயராகவன்

unread,
Feb 25, 2010, 3:36:44 PM2/25/10
to மின்தமிழ்
ஐயா பழமைபேசி

`பழமை` என்பது நம் தற்கால தேவைக்கேற்ப்ப நாம் பழைய காலத்தை
பார்ப்பதுதான். `பழமை` என்பது நம் மூளை இண்டெர்ப்ரெட் செய்து , தேர்ந்து
வைத்திருக்கும் தகவல்கள்தான். அதைத்தான் ஒருவர் குறும்பாக சொன்னார்
“மனிதன் எதிகாலத்தை நினைத்து, பழைய காலத்தை கற்பனை செய்கிறான்” என.
சரி , நீங்க என்ன சொல்றீங்க என பாக்கிறேன்

On 25 Feb, 04:17, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
>
> *சரி, பழசைக் கத்துகிறதால என்ன அனுகூலம்? *
>
>    1. பழமையைக் கற்பதால், அடையாளத்தைத் தெரிவு செய்து, முகாந்திரம்


>    வெளிப்படுகிறது.

`அடையாளம்` என்பது வாழ்க்கையின் புது பாதைகளுக்கும், புது
வாய்ப்புகளுக்கும், புது அனுபவங்களுக்கும் தடையாகக் கூட இருக்கலாம்.
`அடையாளம்` என்பது வாழ்க்கையின் இன்றியொணா பகுதி இல்லை. `அடையாளம் என்பது
தன் கையில் நேரம் அதிகம் இருப்பவர்கள் செய்யும் சிந்தனைகள்

>
>    2. பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வழிமுறைகள்


>    செம்மைப்படுகிறது.

அது எதை `கற்கின்றீர்கள்` என்பதை பொருத்தது. மனிதர்களில் பெரும்பாலும்
வெறுப்பு, சோர்வு இவற்றைதான் `கற்கின்றீர்கள்`. இதற்கு எவ்வளவு
வேண்டுமானாலும் உதாரனம் தருகிறேன்

>
>    3. பழமையைக் கற்பதால், சமூகக் கோட்பாடுகளின் நிறை குறைகளை அறிய முடிகிறது.


அதே சமயம் சமூக குறைகளை நியாயப்படுத்தவும் செய்யலாம்
>
>    4. பழமையைக் கற்பதால், கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங்கள் கற்க


>    முடிகிறது.

அப்படிப்பட்ட `பாடங்கள்` தேவையா, இல்லையா என்பது, எந்த பாடங்களை
கற்கின்றீர்கள் என்பதை பொருத்தது


>    5. பழமையைக் கற்பதால், தன்னைப் பிறரோடு ஒப்பிட்டுச் செம்மைப்படுத்த


>    ஏதுவாகிறது.

இது ஒரு விஷ்ஃபுல் திங்கிங்.

> சரி, இனி ஆரம்பிச்ச இடத்துக்கே வரலாம். ஒருத்தருக்கு எப்பவும் நிகழ்காலம்
> இனிமையாவே இருந்தா, அது நல்லதுதான். அந்த இனிமைக்கு எது முதலீடு? பழமைதான்
> முதலீடு!

அது அபிப்பிராயத்தை பொறுத்தது.

> பழமையான நினைவுகளை அசைப்போட்டுக் கூட, நிகழ்காலத்தை இனிமையாக்க முடியும். பழைய
> தவறுகளை நினைச்சு, அதுல இருக்கிற வழுக்களைக் களைந்து, நிகழ்காலத்தை இனிமையாக்க
> முடியும்.


அது `முடியும்`, ஆனால் பழமையான நினைவுகள் ஆதங்கத்திற்க்கும் ஏது.


விஜயராகவன்

Tirumurti Vasudevan

unread,
Feb 27, 2010, 9:19:54 AM2/27/10
to mint...@googlegroups.com

இது நல்ல விவாதம். தொடருவது நல்லது

2010/2/26 விஜயராகவன் <vij...@gmail.com>

“மனிதன் எதிகாலத்தை நினைத்து, பழைய காலத்தை கற்பனை செய்கிறான்” என.
சரி , நீங்க என்ன சொல்றீங்க என பாக்கிறேன்



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

பழமைபேசி

unread,
Feb 27, 2010, 10:28:16 AM2/27/10
to மின்தமிழ்
// பழமையைக் கற்பதால், முடிவெடுத்தல் மறறும் தருக்க வழிமுறைகள்

> செம்மைப்படுகிறது.


அது எதை `கற்கின்றீர்கள்` என்பதை பொருத்தது. மனிதர்களில் பெரும்பாலும்
வெறுப்பு, சோர்வு இவற்றைதான் `கற்கின்றீர்கள்`. இதற்கு எவ்வளவு

வேண்டுமானாலும் உதாரனம் தருகிறேன்//

மேன்மைகள் யாவும், பழமைகளின் வழித் தோன்றலே!

உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

தீப்பிடித்தவுடனே, அந்த நபரைக் கம்பளி அல்லது பாயில் வைத்துச் சுருட்ட
வேண்டும். இது நான் துவக்கப் பள்ளியில் பயின்ற பாடம்.
தீப்பிடித்த நபரை, தண்ணீர் நிலை இருந்தால் உடனே அதில் போட வேண்டும்;
அல்லது நீர் விட்டு அணைக்க வேண்டும். இது புதுமைச் செய்தி!

இரண்டாவது எப்படித் தோன்றியது?

பாயில் அல்லது கம்பளியில் சுருட்டுவதால், சருமத்தின் மேல் பாகம்
சேதாரப்படுகிறது. அதை மீட்டெடுக்க முடியாது.
அதுவே நீரில் இடுவதால், கொப்புளங்கள் ஏற்பட்டாலும், சருமம் பழைய
நிலைக்குத் திரும்ப வல்லது என்பது பழமையில் இருந்து ஏற்பட்ட மேம்படுதல்.

இந்த நிலையில், ஒருவருக்கு இரண்டாவது கருத்தை மட்டுமே போதிக்கும் போது
மீண்டும் பழைய தவறு நடக்க வாய்ப்புள்ளது. கொப்புளிக்கிறதே என பாயில் அவர்
சுருட்ட முயற்சிக்க கூடும்.

அதுவே, பழையதோடு புதியதையும் கற்றவர் அந்தத் தவறைச் செய்யார்! பழமை
என்கிற போது, அது ந்ல்லதோ, கெட்டதோ, இரண்டையும் சேர்த்தே கற்க வேண்டும்.
நல்லதாயின் அதைப் போற்றுவோம்! கெட்டதாயின், அதை மேன்மைக்கு
உள்ளாக்குவோம். எனவேதான், பழமை என்பது ரொம்ப முக்கியம் இராசா!!

On Feb 27, 9:19 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> இது நல்ல விவாதம். தொடருவது நல்லது
>

> 2010/2/26 விஜயராகவன் <viji...@gmail.com>


>
> > “மனிதன் எதிகாலத்தை நினைத்து, பழைய காலத்தை கற்பனை செய்கிறான்” என.
> > சரி , நீங்க என்ன சொல்றீங்க என பாக்கிறேன்
>
> --

> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/

Reply all
Reply to author
Forward
0 new messages