Web Images Videos Maps News Shopping Gmail more »
Recently Visited Groups | Help | Sign in
Google Groups Home
சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  Messages 1 - 25 of 47 - Collapse all  -  Translate all to Translated (View all originals)   Newer >
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post will appear after it is approved by moderators
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen and type the numbers you hear
 
N. Kannan  
View profile  
 More options Nov 4, 2:30 am
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 16:30:27 +0900
Local: Wed, Nov 4 2009 2:30 am
Subject: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
நம் சுபா சென்னை செல்வது உறுதியாகிவிட்டது.

சீதம்மா மின்தமிழில் எட்டயபுரம் பற்றி எழுதப் போய் இப்போது சுபாவிற்கும்
எட்டயபுர ஆசை பிடித்துக்கொண்டுவிட்டது ;-)

சுபாவின் வழக்கப்படி, போகுமுன் படி, படியென்று படித்துக்கொண்டு
இருக்கிறார். அதில் சமீபத்தில் சீதம்மா மின் தமிழில் ஆரம்பித்து, சென்னை
ஆன்லைனுக்குக் (கடத்தப்பட்டு ;-) வெளியிடப்பட்ட "எட்டயபுர வரலாறு" எனும்
சிறு மின்னூல் அடங்கும். நேற்று சுபா அனுப்பி, படித்துவிட்டுத்தான் தூங்க
வேண்டும் என அன்புக் கட்டளை இட்ட படியால் ஒரே மூச்சில் வாசித்து
முடித்தேன்.

எளிய, அழகான நடை. படியை யாரோ திருத்தி வெளியிட்டு இருக்க வேண்டும்.
இப்போது நடை ஆற்றொழுக்காகப் போகிறது. பொதுவாக நினைவுகளைக் கிளறும் போது
அது பாட்டுக்கு தறிகெட்டு ஓடும். எங்கே ஆரம்பித்தோம், எங்கே விட்டோம்
என்பது தெரியாமல் நாமும் குழம்பி வாசகர்களையும் குழப்புவதுண்டு.
அப்படியில்லாமல் இலக்கை விட்டு நகராமல், அதே சமயம் வேண்டிய வரலாற்றுச்
சேதிகளைச் சொல்லியுள்ளார்.

மின்தமிழ் மக்கா! இனியும் கட்டபொம்மன் படத்தில் உள்ளது போல் கட்டபொம்முவை
வீரபாண்டியனென்றும், எட்டப்பனை ஒற்றன், காட்டிக்கொடுப்பவன் என்று எண்ண
வேண்டாம். எட்டப்பன் நல்லவன். எட்டயபுரத்தை வேதபுரி என்று பாரதி
பேசுகிறான். இதுவே சீதம்மா நமக்கு சொல்லும் சேதி.

பாருங்களேன்! மிக சமீபத்தில் நடந்த வரலாறு. திரைப்படத்திற்கு ஏற்றவாறு
கதை எழுத உட்கார்ந்தால் வரலாறும் எப்படி மாறிப்போகுமென்று தெரிகிறது,
ஜாக்கிரதை!

நா.கண்ணன்

பிகு: சுபா அவர்கள் எட்டயபுரம் சென்று திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம்
;-) எதற்கும் பொறுத்திருப்போம்!!

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Hari Krishnan  
View profile  
 More options Nov 4, 2:44 am
From: Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 13:14:55 +0530
Local: Wed, Nov 4 2009 2:44 am
Subject: Re: [MinTamil] சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

2009/11/4 N. Kannan <navannak...@gmail.com>

> பாருங்களேன்! மிக சமீபத்தில் நடந்த வரலாறு. திரைப்படத்திற்கு ஏற்றவாறு
> கதை எழுத உட்கார்ந்தால் வரலாறும் எப்படி மாறிப்போகுமென்று தெரிகிறது,
> ஜாக்கிரதை!

> நா.கண்ணன்

திரைப்படத்தால் பேர் கெட்டுப் போனவன் எட்டப்பன்; திரைப்படத்தால் மிக உயர்ந்த
இடத்தைப் பிடித்தவன் கர்ணன்.  வியாசர் இப்படிச் சித்திரிக்கவில்லை. வில்லியின்
புண்ணியத்தால் கர்ணன் லேசாக உயர்த்திப் பிடிக்கப்பட்டான்.  சிவாஜி கணேசுன்
இன்னமும் கூட இலக்கிய விமர்சகர்களுக்கு--ஏதோ வியாசரே அப்படித்தான்
சொல்லியிருக்கிறார் என்பதுபோன்ற--பிரமையை உண்டுபண்ணியபடி இருக்கிறார்.
 கர்ணனுடைய மனைவியின் பெயர் தெரியாத காரணத்தால் ஒரு கவிதை எழுதப்படாமலே
நிற்கிறது என்று யாரோ ஒரு கவிஞர் எழுதியிருந்தாராம்.  ஆணாதிக்கச் சிந்தனையால்
கர்ணனுடைய மனைவி பெயர் சரிவரத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம்
சொல்லியிருந்ததாகக் கேள்விப்பட்டேன்.  அந்தம்மா பேரு காஞ்சனா.  இப்ப அந்தக்
கவிதைய எழுதி முடிச்சுடச் சொல்லுங்க என்று என்னிடம் இதைப் பற்றி பேசியவரிடம்
சொன்னேன்.  கவிதையை எழுதினாரா இல்லையா தெரியாது.

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று குறைப்பட்டுக்
கொள்பவர்கள் உண்டு.  வேலுத்தம்பியைப் பற்றி இந்தியா பத்திரிகையில் பாரதி
எழுதியிருக்கிறான்.  ஆனால், அவன் சொல்லியிருக்கும் வரலாறு வேறுவிதமானது.
 சொல்வானேன்... பாரதிக்கு இருக்கற பழி போதாது என்று அதை
வளர்ப்பானேன்.....:-))))

--
அன்புடன்,
ஹரிகி.

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Nov 4, 2:49 am
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 16:49:24 +0900
Local: Wed, Nov 4 2009 2:49 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
2009/11/4 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>:

> வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று குறைப்பட்டுக்
> கொள்பவர்கள் உண்டு.  வேலுத்தம்பியைப் பற்றி இந்தியா பத்திரிகையில் பாரதி
> எழுதியிருக்கிறான்.  ஆனால், அவன் சொல்லியிருக்கும் வரலாறு வேறுவிதமானது.
>  சொல்வானேன்... பாரதிக்கு இருக்கற பழி போதாது என்று அதை
> வளர்ப்பானேன்.....:-))))

அடடா! அண்ணா எதற்கோ கொக்கி போடறாரே!
இப்ப கதை கேட்காமல் தூக்கம் வராது ;-)

க.>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Geetha Sambasivam  
View profile  
 More options Nov 4, 4:08 am
From: Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 14:38:50 +0530
Local: Wed, Nov 4 2009 4:08 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

//திரைப்படத்தால் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்தவன் கர்ணன். //

பி.எஸ். ராமையா எழுதிய "தேரோட்டி மகன்"  நாடகத்தின் அடிப்படையில் கர்ணன்
திரைப்படம் தயாரிக்கப் பட்டது.

2009/11/4 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
shivan .  
View profile  
 More options Nov 4, 5:13 am
From: "shivan ." <sivan...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 15:43:11 +0530
Local: Wed, Nov 4 2009 5:13 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

திருப்தியாக இருக்கிறது. :)

கர்ணனை பற்றி கண்டபடிக்கு கேட்டு என்னடா என்றாகி இருந்தது. வியாஸ பாரதத்தில்
அப்படி எல்லாம் இல்லை என்று சொல்லி அமைதியாகி விட்டேன்.  ஒருத்தர் இப்படி
சொன்னதை கேட்டு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

திரைப்படத்தின் பாதிப்பு அவ்வளவு சுலபமாகப் போகாது.

கர்ணனை பற்றி யாராவது  (படத்தில் வந்ததை வைத்து) சொன்னால் என் நண்பர் , "
ஆமாம். அந்த கர்ணன் பாவம்தான்", என்று ஒரே ஒரு சொல் சொல்லிவிட்டு போய்விடுவார்.
:)

2009/11/4 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
V, Dhivakar  
View profile  
 More options Nov 4, 5:20 am
From: "V, Dhivakar" <venkdhiva...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 15:50:13 +0530
Local: Wed, Nov 4 2009 5:20 am
Subject: Re: [MinTamil] சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

அடியேனும் படித்'தேன்'.

நாடகத்திலிருந்து சினிமா வரை, சிவாஜி, எம்ஜீயார் என்று ஏகப்பட்ட விஷயங்கள்
நிரவிக் கிடக்கின்றன. இன்னொரு முறை படிக்கவேண்டும். சில உண்மைகள்
வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்லப்படாமலேயே போவது நல்லதல்ல. சினிமா எனும்
சாதனத்தால் சீர்கெட்ட எட்டயபுரத்தை நாம், நம்மை நிமிர்ந்து பார்க்க
வைத்திருக்கிறார் சீதாம்மா.

வாழ்க வாழ்க எட்டயபுரத்து அம்மை.

திவாகர்

On 11/4/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:

--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Nov 4, 7:36 am
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 21:36:25 +0900
Local: Wed, Nov 4 2009 7:36 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
எட்டப்பன் எனும் பெயர் வந்த கதை சொன்ன சீதம்மாவும் ஓர் எட்டம்மாள்தான்!
நிறையப்படித்த ஏட்டம்மாளும்தான் :-)

க.>

2009/11/4 V, Dhivakar <venkdhiva...@gmail.com>:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Ganesan  
View profile  
 More options Nov 4, 7:38 am
From: "N. Ganesan" <naa.gane...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 04:38:58 -0800 (PST)
Local: Wed, Nov 4 2009 7:38 am
Subject: Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

On Nov 4, 1:30 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> நம் சுபா சென்னை செல்வது உறுதியாகிவிட்டது.
> சீதம்மா மின்தமிழில் எட்டயபுரம் பற்றி எழுதப் போய் இப்போது சுபாவிற்கும்
> எட்டயபுர ஆசை பிடித்துக்கொண்டுவிட்டது ;-)
> சுபாவின் வழக்கப்படி, போகுமுன் படி, படியென்று படித்துக்கொண்டு
> இருக்கிறார். அதில் சமீபத்தில் சீதம்மா மின் தமிழில் ஆரம்பித்து, சென்னை
> ஆன்லைனுக்குக் (கடத்தப்பட்டு ;-) வெளியிடப்பட்ட "எட்டயபுர வரலாறு" எனும்
> சிறு மின்னூல் அடங்கும். நேற்று சுபா அனுப்பி, படித்துவிட்டுத்தான் தூங்க
> வேண்டும் என அன்புக் கட்டளை இட்ட படியால் ஒரே மூச்சில் வாசித்து
> முடித்தேன்.

சோமசுந்தர மணியகாரரின் நூல் தொடுப்பும்,
சென்னை ஆன்லைன் கட்டுரையும் வேண்டும்.

யாராவது அனுப்புங்களேன்.

நா. கணேசன்

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
karthi  
View profile  
 More options Nov 4, 7:46 am
From: karthi <karthige...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 04:46:59 -0800 (PST)
Local: Wed, Nov 4 2009 7:46 am
Subject: Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
ஹரி,

கண்ணதாசனாவது சிவகங்கைச் சீமை கதையைச் சரியாகச் சொன்னாரா?
அரு.இராமனாதன் ராஜ ராஜ சோழனைச் சரியாகச் சொன்னாரா?
எல்லாருமே சினிமாவுக்காக கொஞ்சம் உப்பை அதிகமாகச் சேர்த்துக்
கொள்ளுகிறார்களோ?

ரெ.கா.

On Nov 4, 3:44 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Tthamizth Tthenee  
View profile  
 More options Nov 4, 9:25 am
From: Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 19:55:44 +0530
Local: Wed, Nov 4 2009 9:25 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

வெள்ளித்திரையில்  மக்களைக் கவர

பணம் பண்ண    கதைக்கப்படும் கதைகளை  உண்மை என்று நம்பியவர்கள் நாம்

பாவம்  அவர்கள் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்

அவர்களை நோவதை விட  இனிமேலாவது  உண்மையை ஆராய்வோம்

வெள்ளித்திரை  நாயகர்களை  நம்புவதை  நிறுத்தினாலே

நாடே  வெளிச்சத்துக்கு  வந்து மின்னும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

4-11-09 அன்று, karthi <karthige...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc1...@gmail.com
http://thamizthenee.blogspot.com

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
M.RISHAN SHAREEF  
View profile  
 More options Nov 4, 9:36 am
From: "M.RISHAN SHAREEF" <mrishanshar...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 20:06:00 +0530
Subject: Re: [MinTamil] சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

அன்பு சீதாம்மாவின் எட்டயபுர வரலாறு மின்னூலை முழுவதுமாக ஒரே முறையில்
படித்தேன். மிகச் சுவாரஸியமான மொழிநடை. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறார்.
மின்னூலாக்கத்துக்கு நன்றி !
பாதுகாக்கப்பட வேண்டிய நூல் !
--
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Tthamizth Tthenee  
View profile  
 More options Nov 4, 10:37 am
From: Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 21:07:48 +0530
Local: Wed, Nov 4 2009 10:37 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

திருமதி  சீதாலக்ஷ்மி  அவர்களிடமிருந்து   இது வரை

ஒரு சதவிகிதம் செய்திதான் வந்திருக்கிறது

அவர் ஒரு தங்கச்சுரங்கம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

4-11-09 அன்று, M.RISHAN SHAREEF <mrishanshar...@gmail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc1...@gmail.com
http://thamizthenee.blogspot.com

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Subashini Tremmel  
View profile  
 More options Nov 4, 10:38 am
From: Subashini Tremmel <ksubash...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 16:38:10 +0100
Local: Wed, Nov 4 2009 10:38 am
Subject: Re: [MinTamil] சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

அன்புள்ள கண்ணன்,

>>பிகு: சுபா அவர்கள் எட்டயபுரம் சென்று திடுக்கிடும் தகவல்களை வெளியிடலாம்;-)

எதற்கும் பொறுத்திருப்போம்!!

திடுக்கிடும் தகவல் இல்லை.  பயன்படும் தகவலாக கொஞ்சம் சேகரிப்போமே என்பது தான்
எண்ணம்.  ஏற்பாடு செய்து வருகிறேன். அனைத்தும் தயாரானதும் தகவல்களைப் பகிர்ந்து
கொள்கிறேன். சீதாம்மாவின் கட்டுரையயும் விரைவில்,  முன்னரே நாம் வெளியிட்ட
எட்டயபுரம் பகுதியில் விரைவில் இனைக்கிறேன். ஆர்வமுள்ளவர்களுக்கு நிச்சயம்
பயன்படும்.

அன்புடன்
சுபா

On 11/4/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
kaviyogi vedham  
View profile  
 More options Nov 4, 10:48 am
From: kaviyogi vedham <kaviyogi_ved...@yahoo.com>
Date: Wed, 4 Nov 2009 07:48:32 -0800 (PST)
Local: Wed, Nov 4 2009 10:48 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று குறைப்பட்டுக் கொள்பவர்கள் உண்டு.(ஹரியண்ணா)
..
 இப்படிச் சொன்னவர்களில் எங்கள் பெருமதிப்புக்குரிய சுராஜ் அவர்களும் உண்டு.
சரியா?
 யோகியார்

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Tthamizth Tthenee  
View profile  
 More options Nov 4, 11:26 am
From: Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 21:56:18 +0530
Local: Wed, Nov 4 2009 11:26 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

சௌபாக்கியவதி  சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களே

எப்போது இந்தியா வரப் போகிறீர்கள்

எனக்கு தகவல் சொன்னால் நலம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

4-11-09 அன்று, kaviyogi vedham <kaviyogi_ved...@yahoo.com> எழுதினார்:

>   வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி பாரதி எதுவுமே எழுதவில்லை என்று
> குறைப்பட்டுக் கொள்பவர்கள் உண்டு.(ஹரியண்ணா)
> ..
>  இப்படிச் சொன்னவர்களில் எங்கள் பெருமதிப்புக்குரிய சுராஜ் அவர்களும் உண்டு.
> சரியா?
>  யோகியார்

--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc1...@gmail.com
http://thamizthenee.blogspot.com

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
சீதாலட்சுமி  
View profile  
 More options Nov 4, 2:47 pm
From: சீதாலட்சுமி <seethaalaks...@gmail.com>
Date: Wed, 4 Nov 2009 11:47:48 -0800 (PST)
Local: Wed, Nov 4 2009 2:47 pm
Subject: Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
கணேசன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக எட்டயபுரம் வரலாறு
விரும்புகின்றேன். எப்படி இதில் சேர்க்க என்று எனக்குத் தெரியவில்லை..
இதுவும் முழுமையானதல்ல. ஒரு பிரச்சனைக்காகத் தேவையான உண்மைகளை மட்டும்
தொகுத்திருக் கின்றேன். இன்னும் பல சிறப்புகள் எட்டயபுரத்திற்குண்டு.
எட்டயபுரத்துக்காரி என்பதற்காகக் கூறவில்லை. இலக்கியம் மட்டுமல்ல, ஓர்
வரலாற்று ஆர்வலர் என்ற முறையிலும் கூறுகின்றேன். நான் ரசிக்கின்ற
மாமன்னர் இராஜ இராஜன். சிற்றரசுகளில் எட்டயபுரம் சமஸ்தானம். சின்னப்
பிள்ளைகள் என்று நினைக்காமல் புலமையை மட்டும் கருத்திற்கொண்டதால்;தான்
நமக்கு உமறுப் புலவரும் பாரதியும் கிடைத்தார்கள். எத்தனை இசை மேதைகள்
எத்தனை கலைஞகர்கள்.! அன்று சடைடப்ப வள்ளலால் ஓர் கம்பன் கிடைத்தான்.
என்றும் வாழும் கம்பன் தமிழ் இராமாயணமும் கிடைத்தது. எட்டயபுரமன்னர்களால்
நமக்குக் கிடத்தவர்கள் பலர். போற்றிப் புகழ வேண்டிய கடமையில்
இருக்கின்றோம். ஆனால் சினிமாவால் தீங்கு நிகழ்ந்துவிட்டது.
மீண்டும் கட்டபொம்மன் படம் எடுக்க இருப்பதாகச் செய்தி பார்த்தேன்.
அதன் விளைவுதான் என்னுடைய படைப்பு . மின் தமிழில் எழுதும் பொழுது
சாதாரணமாகத் தொட்டுச் சென்றேன். ஆனால் செய்தி என்னை உலுப்பிவிட்டது.
வழக்காடு மன்றத்தில் நிறுத்தப் பட்டேன். உண்மைகளை அலசினேன். மீண்டும்
பிழை நேரக் கூடாது என்ற எண்னத்தில் எழுதினேன்

On Nov 4, 11:26 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
V, Dhivakar  
View profile  
 More options Nov 5, 1:00 am
From: "V, Dhivakar" <venkdhiva...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 11:30:03 +0530
Local: Thurs, Nov 5 2009 1:00 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

வீரபாண்டியகட்ட்பொம்மன் பற்றிய தகவல்கள் பற்றி தமிழ்வாணன் (கட்டபொம்மன் ஒரு
கொள்ளைக்காரன் என) எழுதியதையும் சீதாம்மா தெரிவித்திருக்கிறார். சீதாம்மாவின்
தாயுள்ளம் வீரபாண்டியனை தன் தேசிய நாட்டு மகன் போலவே பார்க்கிறது. அதனால்தான்
வீரபாண்டியன் மேல் அவதூறு படாதவகையில், அவன் சுதந்திர வீரனாகவே
 சித்தரித்து எழுதி இருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு தாயின் பரிவையே இங்கு
பார்க்கிறோம். ஆனால் சினிமா இப்படியெல்லாம் பார்க்கவில்லை. எட்டப்பனை எட்டி
உதைத்து சீரழித்து விட்டது மகா கோரம். இதற்கு முதல் காரணம் சரித்திரத்தை
ஆராயாமல் ஒரு படம் வெற்றியடையவேண்டும் என்ற கோணத்தில் மட்டுமே எடுத்திருப்பது.
வசனமும் சிவாஜியும் இரண்டாவது காரணம். மூன்றாவது காரணம் வி.கே.ராமசாமியின்
எட்டப்பர் வேடம். இந்த மூன்று காரணங்களும் சேர்ந்து இரண்டு சமஸ்தானங்களின்
பெயரைக் களங்கப்படுத்திவிட்டன. ஒன்று எட்டையபுரம், மற்றது, புதுக்கோட்டை.

தமிழ்வாணன் போன்றோருக்கு வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு தெரிந்திருந்தும்,
சினிமா எனும் மாயக் கவர்ச்சியில் தமிழ்வாணனின் கவர்ச்சி எடுபடாமல் போய்விட்டது
வாஸ்தவமே. அதே போல புதுக்கோட்டை சமஸ்தானத்தைப் பற்றியும் ஒரு பொய்த் தகவல் அந்த
சினிமாவில் புகுத்தப்பட்டது. வீரபாண்டியன் ஒளிந்து மறைந்து வாழ்ந்தபோது அவனைக்
காட்டிக் கொடுத்தது புதுக்கோட்டை சமஸ்தானம்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ள
கருத்தை மறுத்து மிகப் பலமான ஆதாரங்களுடன் புதுக்கோட்டை ஆராய்ச்சியாளர் திரு
ராஜா முகமது மிக நீண்ட கட்டுரைத் தொடரை 'புதுகைத் தென்றல்' எனும் மாத இதழில்
எழுதிவந்தார். படித்திருக்கிறேன்.

வீரபாண்டியகட்டபொம்மன் சினிமாவில் ஒரு வசனம் வரும். 'வானம் பொழிகின்றது, பூமி
விளைகின்றது - உனக்கேன் கொடுக்கவேண்டும் கிஸ்தி' என சிவாஜி வீரவசனம் பேச, அதை
இன்னமும் - சான்ஸ் தேடி அலையும்போது நடிகர்கள் பேசிப் பேசியே சான்ஸ்
பெற்றதாகவும் - தலைமுறை, தலைமுறையாகச் சொல்லி வருகின்றனர்.

ஆனால் உண்மையில் கட்டபொம்மன் ஒரு சில வருடங்களுக்கு
முறையாக வெள்ளையர்களுக்கு 'கிஸ்தி' கட்டியவன் என்பதும் மேலும் சில
வருடங்களுக்கு கிஸ்தி கட்டமுடியாமல் போனதற்கு 'அந்த வானம் பொழியாமை' தான்
காரணம் என்று விளக்கமாகவும் வினயமாகவும் வெள்ளையருக்குக் கடிதம் எழுதிவந்தான்
என்பதையும், தமிழ்நாடு பழைய கும்பெனியார் ரெவின்யூ ஆவணங்களில் இன்னமும்
இருப்பதையும் சுட்டிக் காட்டினார் ராஜாமுகம்மது. அந்தக் கடிதங்களின் முதல்
வரிகளே மிக மிக வினயமாக, அடிமைத்தன உணர்வோடும் வெள்ளையரை நமஸ்கரித்திருக்கும்
வீரபாண்டியரை நாம் காணலாம். பிற்காலத்தில் நிலைமை மோசமாகவே வெள்ளையரை
எதிர்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதையும் விவரணை இருக்கும்.

ஆனால் எட்டப்பரை மக்கள் மத்தியில் துரோகியாக்கிவிட்டதே.. இது போகவேண்டாமா,
என்று கேட்டால் அதற்கும் சினிமா வழிதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல
எட்டப்பரை (வமசத்தாரில் ஒருவர்) வைத்து ஒரு கதை செய்து அவரை
(அந்தப் பாத்திரத்தை) ஹீரோவாக்கினால், அதுவும் பிரபல நடிகர்களை வைத்து பெரிய
அளவில் சினிமா எடுத்து வெளியிட்டால்
(அதுவும் வெற்றியடைந்தால் மட்டுமே) வருங்காலம் எட்டப்ப வம்சத்தாரைப் புகழும்.

என்ன மாய உலகமோ

திவாகர்

On 11/5/09, சீதாலட்சுமி <seethaalaks...@gmail.com> wrote:

...

read more »

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Geetha Sambasivam  
View profile  
 More options Nov 5, 3:16 am
From: Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 13:46:30 +0530
Local: Thurs, Nov 5 2009 3:16 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

//தமிழ்வாணன் போன்றோருக்கு வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு தெரிந்திருந்தும்,
சினிமா எனும் மாயக் கவர்ச்சியில் தமிழ்வாணனின் கவர்ச்சி எடுபடாமல் போய்விட்டது
வாஸ்தவமே.//

மபொசியும் கூட வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றிய உண்மை வரலாற்றைக் கூறி உள்ளார்.
அவரை விட்டுட்டீங்களே!

2009/11/5 V, Dhivakar <venkdhiva...@gmail.com>

...

read more »

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Nov 5, 3:41 am
From: "N. Kannan" <navannak...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 17:41:24 +0900
Local: Thurs, Nov 5 2009 3:41 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:

> //தமிழ்வாணன் போன்றோருக்கு வீரபாண்டியகட்டபொம்மன் வரலாறு தெரிந்திருந்தும்,
> சினிமா எனும் மாயக் கவர்ச்சியில் தமிழ்வாணனின் கவர்ச்சி எடுபடாமல் போய்விட்டது
> வாஸ்தவமே.//

> மபொசியும் கூட வீரபாண்டியக் கட்டபொம்மன் பற்றிய உண்மை வரலாற்றைக் கூறி உள்ளார்.
> அவரை விட்டுட்டீங்களே!

என்ன கீதம்மா! அவரைத்தானே இப்போது உலுப்பிக்கொண்டு இருக்கிறோம் ;-)

க.>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Geetha Sambasivam  
View profile  
 More options Nov 5, 3:45 am
From: Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 14:15:30 +0530
Local: Thurs, Nov 5 2009 3:45 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

ஹிஹிஹி, பதில் கொடுத்துட்டுத் தான் மத்ததைப் படிச்சேன். அ.வ.சி.

2009/11/5 N. Kannan <navannak...@gmail.com>

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
PENNESWARAN KRISHNA RAO  
View profile  
 More options Nov 5, 4:03 am
From: PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 14:33:09 +0530
Local: Thurs, Nov 5 2009 4:03 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

வெள்ளித்திரையில்  மக்களைக் கவர

பணம் பண்ண    கதைக்கப்படும் கதைகளை  உண்மை என்று நம்பியவர்கள் நாம்

பாவம்  அவர்கள் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்

அவர்களை நோவதை விட  இனிமேலாவது  உண்மையை ஆராய்வோம்

வெள்ளித்திரை  நாயகர்களை  நம்புவதை  நிறுத்தினாலே

நாடே  வெளிச்சத்துக்கு  வந்து மின்னும்

 உண்மைதான் தேனீ ஐயா

கண்ணன்

எது எப்படியோ.

சிவாஜி கணேசன் வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்தில் பேசி இருக்கிறதைப் போல
உண்மையான கட்டபொம்மன் பேசி இருந்தால் அந்த செயற்கைத் தனம் தாளாமல் வீரபாண்டியக்
கட்டபொம்மனை தூக்கில் போடாமல் ஒரு வாரத்துக்கு முன்பே அதை விட மோசமான தண்டனை
அளிக்க வேண்டும் என்று அவசரக் கட்டளை பிறப்பித்து இருப்பார்கள்.  சிவாஜி போல
ஜாக்ஸன் துரையின் முகத்தின் மிக நெருக்கத்தில் கட்டபொம்மன் நின்றிருந்தால்
அன்று இரவு ஜாக்ஸன் துரையின் தாயார் அவனுக்குக் கொழுமோர் கொடுத்து இருந்திருக்க
வேண்டும்.

இப்படி எல்லாம் தமிழர்கள் திரைப்படம் எடுப்பார்கள் என்று அப்போதே
வெள்ளையர்களுக்குத் தெரிந்திருந்தால் டெல்லியில் அவர்கள் நம்மிடம் ஆட்சியை
ஒப்படைக்கும் போது இது போன்ற திரைப்படங்களை வருங்காலத்தில் எடுக்கத் தடை
விதிக்க வேண்டும் என்று நேருவை வற்புறுத்தி கையெழுத்து வாங்கிப்
போயிருப்பார்கள்.

ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எப்படி எல்லாம் எடுக்கக் கூடாது என்பதற்கு
எடுத்துக் காட்டாக அமைந்தது வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படம் என்பது
என்னுடைய தாழ்மையான கருத்து.

சரித்திரத்தில் வரும் ஒரு மன்னனை தன்னுடைய மிகை நடிப்பால் எப்படி எல்லாம்
மோசமாகக் காட்டலாம் என்பதற்கு எடுத்துக் காட்டு அந்தப் படத்தில் சிவாஜி கணேசன்
நடிப்பு.   அதே போல வரலாற்றை நம்முடைய இஷ்டத்துக்கு வளைத்து ஒரு இனத்தையே
உணர்ச்சி வசப்பட வைக்கலாம் என்று நிரூபித்தது அத்திரைப்படத் தயாரிப்பு.

பென்னேஸ்வரன்

2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>

--
http://www.vadakkuvaasal.com/

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Geetha Sambasivam  
View profile  
 More options Nov 5, 4:10 am
From: Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 14:40:05 +0530
Local: Thurs, Nov 5 2009 4:10 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

//ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எப்படி எல்லாம் எடுக்கக் கூடாது என்பதற்கு
எடுத்துக் காட்டாக அமைந்தது வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படம் என்பது
என்னுடைய தாழ்மையான கருத்து.   //

 வேறே ஒரு குழுமத்தில்  பல மாதங்களுக்கும் முன்னால் இதைச் சொல்லிட்டு
கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க. மொழி வெறினு.
கிரந்தம் எழுதினா என்ன தப்புனு கேட்டா வடமொழிப் பிரியம் னு சொல்றாங்க.
என்னத்தைச் சொல்றது??? [?][?][?][?][?][?][?]

2009/11/5 PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>

  360.gif
< 1K Download

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
வினோத் ராஜன்  
View profile  
 More options Nov 5, 4:27 am
From: வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 01:27:12 -0800 (PST)
Local: Thurs, Nov 5 2009 4:27 am
Subject: Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு
//கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.//

அவுனா ?

V

On Nov 5, 2:10 pm, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Geetha Sambasivam  
View profile  
 More options Nov 5, 4:28 am
From: Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 14:58:57 +0530
Local: Thurs, Nov 5 2009 4:28 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

அவுனே! [?][?][?]

2009/11/5 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

  360.gif
< 1K Download

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Hari Krishnan  
View profile  
 More options Nov 5, 4:33 am
From: Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
Date: Thu, 5 Nov 2009 15:03:58 +0530
Local: Thurs, Nov 5 2009 4:33 am
Subject: Re: [MinTamil] Re: சீதம்மாவின் எட்டயபுர வரலாறு

2009/11/5 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>

> அவுனே! [?][?][?]

> 2009/11/5 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

> //கட்ட்பொம்மன், தெலுங்கு என்பதால் சொல்றேன்னு சொல்லிட்டாங்க.//

பொம்மு நாயகன்.  பாளையக்காரன்.  கோவையில் தெலுங்குப் பாளையம் என்றொரு பாளையமே
இருக்கிறது.  (எல்லாம் தமிழ்வாணன் எழுதிப் படித்ததாக நினைவு.  எனக்கொரு 13-15
வயதில் அந்தத் தொடர் வந்துகொண்டிருந்தது.)

--
அன்புடன்,
ஹரிகி.

  360.gif
< 1K Download

    Reply    Reply to author    Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Messages 1 - 25 of 47   Newer >
« Back to Discussions « Newer topic     Older topic »

Create a group - Google Groups - Google Home - Terms of Service - Privacy Policy
©2009 Google