ஐயா,
சமணரின் தீபாவளி பற்றித் தமிழ் நூல்கள் கூறுகின்றனவா ?
தேவ்
On Oct 16, 10:14 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
> அன்பு பெரியோர்களுக்கு,
>
> தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
>
> தீபநாயகனும், மோட்சலட்சுமியை மணந்தவனுமான மகாவீரன் தாள் போற்றி!
>
> "திங்கள் மும்மாரி பெய்க திருவறம் வளர்க செங்கோல்
> நன்கினி தரசன் ஆள்க நாடெலாம் விளைக மற்றும்
> எங்குள அறத்தி னோரும் இனிதூழி வாழ்க எங்கள்
> புங்கவன் பயந்த மெய்நூல் புகழொடும் பொலிக மிக்கே"
>
> இரா.பா.
>
On Oct 16, 2:31 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> இந்த இழையை தலைப்பை மாற்றி வெளியிடுகிறேன். கலந்துரையாடலுக்கு இது உதவும்
> என்பதால்.
>
> அன்புடன்
> சுபா
>
பேரா. தொ. பரமசிவனின் தீபாவளிக் கட்டுரை:
http://socratesjr2007.blogspot.com/2009/10/blog-post.html
தீபாவளி வாழ்த்துக்களுடன்,
நா. கணேசன்
தீபாவளி இந்தியர்களின் தேசியத்த்திருவிழா. சமய பேதம் பார்க்காமல்
இந்தியாவில் அனைவரும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி தான்.
இதில் தேவையற்ற இனதுவேஷத்தை புகுத்துவது ஏன் என்று விளங்கவில்லை. இவர்கள்
திருந்தப்போவதில்லை.
(வி)மிஷநரிகள் பொங்கலை கிறிஸ்தவமயாக்குவது தவறில்லையாம் (இதற்கு பெயர்
தான் மதச்சார்பிண்மையோ என்னவோ ! ), இந்தியர்கள் தங்களுடைய பாரம்பரிய
பண்டிகையினை பேதம் பாராமல் கொண்டாடுவது தவறாம்.
கிறிஸ்தவத்துக்கு சாமரம் வீசி இந்தியத்துவத்தை குறை சொல்வதில் அப்படி
என்ன அலாதி இன்பமோ இவர்களுக்கு !
அங்கு ஒபாமா வேத மந்திரங்கள் கூறி தீபாவளியை கொண்டாடுகிறார். இங்கு
என்னவோ, இந்தியர்களே இந்திய பண்டிகையை கொண்டாடக்கூடாது என்று இன துவேஷ
விஷத்தை கக்கும் கோஷ்டி ஒன்று பிதற்றுகிறது :-(
என்ன கொடுமை இதெல்லாம் !!
நிற்க.
இந்தியாவில், தார்மீக மதங்கள் அனைத்தும் பின்னிபிணைந்து இருக்கின்றன. பல
கூறுகள் அனைத்துக்கும் பொதுவானவை. இராமர், கிருஷ்ணர் போன்ற புருஷர்கள்
தார்மீக மதங்கள் அனைத்திலும் காணப்படுகின்றனர். கர்மம், மறுபிறப்பு போல
இந்திய மதங்கள் அனைத்துக்கும் பொதுவான கூறுகளில் இதுவும் ஒன்றும்.
எதிலிருந்து எது கடன்பெற்றது என்பது தேவையற்றது.
வட இந்தியாவில், இராமர் வன வாசம் சென்று திரும்பிய நாளாக தீபாவளியை
கொண்டாடுகின்றனர், தென்னிந்தியர்களுக்கு இன்னொரு கதை, சமணர்களும் அவர்கள்
பின்னணியில் புராணக்கதைகள் உண்டு.
புராணக்கதைகள் வேறு வேறு ஆயினும், உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் இன சமய
பேதம் பார்க்காமல் கொண்டாப்படும் "இந்திய" பண்டிகை தீபாவளி.
அதுவே இங்கு முக்கியமானது !
V
On Oct 16, 3:15 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Oct 16, 2:31 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>
> > இந்த இழையை தலைப்பை மாற்றி வெளியிடுகிறேன். கலந்துரையாடலுக்கு இது உதவும்
> > என்பதால்.
>
> > அன்புடன்
> > சுபா
>
>
On Oct 16, 5:47 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> புராணக்கதைகள் வேறு வேறு ஆயினும், உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் இன சமய
> பேதம் பார்க்காமல் கொண்டாப்படும் "இந்திய" பண்டிகை தீபாவளி.
>
> அதுவே இங்கு முக்கியமானது !
>
ஆம்.
தீபாவளி வாழ்த்துடன்,
நா. கணேசன்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
> அப்படியானால் இந்த விஷயங்கள், வில்லங்கங்கள் அனைத்தையும் மறந்து ஒரு குழந்தை
> போல குதூகலிக்க யாரால் முடியுமோ அவர்கள் மட்டும் என்னுடன் வாருங்கள்
>
இதை கொஞ்சம் டாஸ்மாக்வாதிகளின்..மன்னிக்கவும்..திராவிடவாதிகளின்
காதுகளில் நன்றாக படும் படி உரக்க ஓதினால், ஜினர், கிருஷ்ணர், ராமர்
என்று எல்லாரும் வரிசையாக வந்து உங்களுக்கு அருள்புரிவர் :-)
V
On Oct 16, 5:40 pm, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
றேன்
>
> இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா
>
> குழந்தையாக தீபாவளி கொண்டாடுவோம்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 16-10-09 அன்று, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> எழுதினார்:
>
>
>
>
>
>
>
> > ஜெய் வினோத்! உங்கள் பட்டாசு வார்த்தைகளுக்கு மகிழ்ச்சி!
>
> > On 10/16/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
> >> வினோத்திற்கு ஜே!
>
> >> க.>
>
> >> 2009/10/16 V, Dhivakar <venkdhiva...@gmail.com>:
> >> > வினோத்!
> >> > ஒரு மிகப் பெரிய ஆஆஆஆஅம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
>
> >> > தீபாவளி சுபாகாங்க்ஷுலு
>
> >> > திவாகர்
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,
>
> மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புள்ள
> தமிழ்த்தேனீ
>
> http://www.peopleofindia.net
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com
வினோத்திற்கு மீண்டுமொரு ஜே!
க.>
1. ஜைனத்திற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?
2. முதன் முதலில் ஜைனர்கள் -
எப்பொழுது,
எதற்காக,
ஏன்,
எங்கு,
எவ்வாறு
கொண்டாடினர்?
3. அத்தகைய பாரம்பரியம், சரித்திர ஆதாரங்கள் உண்டா?
4. விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
V
:-)))))))))))))))))
நம்ம குழுவிலேயே நகைச்சுவை உணர்வு அதிகமா இருக்கிறது அரிகி ன்னு நினைக்கிறேன்!
திவாஜி
--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
On Oct 16, 10:33 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/10/17 N. Kannan <navannak...@gmail.com>
>
> > 2009/10/16 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:
>
> > > இதை கொஞ்சம் டாஸ்மாக்வாதிகளின்..மன்னிக்கவும்..திராவிடவாதிகளின்
> > > காதுகளில் நன்றாக படும் படி உரக்க ஓதினால், ஜினர், கிருஷ்ணர், ராமர்
> > > என்று எல்லாரும் வரிசையாக வந்து உங்களுக்கு அருள்புரிவர் :-)
>
> > வினோத்திற்கு மீண்டுமொரு ஜே!
>
> > க.>
>
> நானும் ஒரு ஜே போட்டுடறேன். (மொதல்ல கிரந்த எழுத்த விட்டு எழுதலாம்னு
> நினைச்சேன். அப்புறம் ஜே போடப்போயி சே போட்டா பெரிய
> கயிட்டமாயிடுமுல்லா...அதான் ஜேயே போட்டுட்டேன்...
சே என்று எழுதி ஜே என்று ஒலிக்கவும் முறை இருக்கிறது,
jE ஒலிப்பு தர, 3 (அ) கேரன் (அம்புக் குறி) டையாக்கிரிடிக்
உபயோகிக்கலாம்.
அன்புடன்,
நா. கணேசன்
> ஜே, கலிஞர், இசுடாலின் அல்லாம் போட்டாச்சு).
> இதை கொஞ்சம் டாஸ்மாக்வாதிகளின்..மன்னிக்கவும்..திராவிடவாதிகளின்
> காதுகளில் நன்றாக படும் படி உரக்க ஓதினால், ஜினர், கிருஷ்ணர், ராமர்
> என்று எல்லாரும் வரிசையாக வந்து உங்களுக்கு அருள்புரிவர் :-)
>
> V
அப்படி உரக்க கத்துவது நல்லது; அதே சமயம் மூடப்பட்ட காதுகளும்,
காழ்ப்பில் தோய்ந்து இறுகப்பட்ட மூளைகளும், வெறுப்பில் தாளித்த மனதுகளும்
திரந்துவிடும், இளகிவிடும் என நம்பாதீர்கள். தமிழ்நாட்டு `அறிவுஜீவி`
கலாசாரம் இன, மத, மொழி அடிப்படைவாதிகளை அறிவு தளத்தில் நிச்சயம்
எதிர்கொள்ளாது, பக்க வாத்யம் அடிக்கும்.
விஜயராகவன்
ஸ்ரவணபெலாகுலா எனும் பிரம்மாண்டத்தைக் கண்டு மலைத்த நாள் இன்னும்
நினைவில் இருக்கிறது. அன்னை மூகாம்பிகையை தரிசிக்க கொல்லூர்
போயிருந்தபோது, அருகிலிருந்து சில கோயில்கள் ஜைனக்கோயில்கள் என்று
பின்னால்தான் தெரிந்து கொண்டேன். புரிந்து வெறுக்கும் அளவிற்கு
வித்தியாசமே தெரியாமல் இரண்டும் கலந்து நிற்கின்றன. ஒரு நல்ல இந்துவிற்கு
கோயில் என்றால் கோயில்தானே. அதிலென்ன வித்தியாசம். நல்ல எண்ணங்கள்
மிளிரும் இடம்தானே கோயில். இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால்
கொரியா, ஜப்பான், சைனாவில் வாழும் தமிழர்கள் எங்கு போவார்கள்? மனது
பிரிக்கப்பார்க்கும். அதை ஒருங்கிணைப்பதுதான் யோகம்!
நன்றி வினோத், ஹரி.
க.>
"ஒரு நல்ல இந்துவிற்குகோயில் என்றால் கோயில்தானே..."இதை விட சுருக்கமான, தெளிவான விளக்கம் கண்டதும் இல்லை. கேட்டதும் இல்லை.நன்றி.இன்னம்பூரான்
தேவ்
On Oct 18, 11:44 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/10/18 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
இந்து மதம், சமணம் இரண்டுமே தங்கள் புராண நிகழ்வுகளை அதனோடு தொடர்பு
படுத்துகின்றன. இதில் எது முதல் என்ற ஆய்வைச் செய்வதற்கு உறுதியான
வரலாற்று ஆதாரங்கள் இல்லை. இலக்கிய ஆதாரங்களை மட்டுமே கொண்டு
பேசும்போது சார்புகள் மட்டுமே முன்வருகின்றன.
தொ.பரமசிவன் கருத்து அவரது காழ்ப்புணர்வை வெளிப்படுத்துகிறதே அன்றி ஆய்வு
நோக்கை அல்ல. நரகாசுர வதம் என்பது மட்டுமே தீபாவளி தொடர்பான புராணம்
அல்ல. பாற்கடலில் மகாலஷ்மி திருஅவதாரம், ராமர் அயோத்தி திரும்பியது,
கண்ணன் கோவர்த்தன கிரி ஏந்தியது, மகாபலி வருகை என்று பற்பல புராண
நிகழ்வுகள் இப்பண்டிகையுடன் தொடர்பு கொள்கின்றன. வங்கத்திலும், வடகிழக்கு
இந்தியாவிலும் தீபாவளியை காளி பூஜா என்றே விமர்சையாக கொண்டாடுகின்றனர் -
கார்காலத்து அமாவாசை காளி வழிபாட்டுக்கு மிக உகந்த நாள் என்பதும்
குறிப்பிடத் தக்கது; மேலும், எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற
சடங்கு தமிழகத்தில் மட்டுல்ல, கர்நாடகம், மகாராஷ்டிரம், சில வட
மாநிலங்கள் எல்லாவற்றிலும் உள்ளது.
தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் தீபத் திருவிழாவை வைத்து வெறுப்பியல்
பிரசாரம் செய்யும் அறிவீனர்களைப் புறக்கணிப்பதும், கண்டனம் செய்வதும்
நம் கடமை.
On Oct 18, 9:32 pm, ஜடாயு <jataay...@gmail.com> wrote:
> ஆதிமுதலில் பருவ மாற்றங்கள், இயற்கை நிகழ்வுகளைக் கொண்டாடும் முகமாகவே
> தீபாவளி (மற்றும் எல்லா புராதன பண்டிகைகளும்) தோன்றியிருக்க வேண்டும்.
> தீபாவளி ஐப்பசி மாத அமாவாசையிலும், திருக்கார்த்திகை கார்த்திகை மாத
> பௌர்ணமியிலும் வரும் நாட்கள். இரண்டுமே விளக்கேற்றுதலுடன் தொடர்புடைய
> பண்டிகைகள். பெரும்பாலான வருடங்களில் இரண்டு பண்டிகைகளுக்கும் இடையில்
> பதினைந்து நாட்கள் இடைவெளியே இருக்கும்.. (இரண்டு மாதங்களிலும்
> இரண்டிரண்டு அமாவாசை/பௌர்ணமி வரும் சில வருடங்களில் மட்டும் இடைவெளி
> அதிகமாகும்).. சங்க இலக்கியங்களில், திருமுறையில் குறிப்பிடப் படும்
> கார்த்திகைத் திருநாள் என்பது குறிப்பிட்ட ஒரே ஒரு நாள் தான் என்று
> நாம் சொல்வதற்கு என்ன ஆதாரம்? தீபாவளி முதல் திருக்கார்த்திகை வரை
> விளக்கேற்றும் பருவமாக பதினைந்து இருபது நாட்கள் அந்த விழா கொண்டாடப்
> பட்டிருக்கலாம் அல்லவா? (அமாவாசை தொடங்கி பௌர்ணமியில் முடியும் பருவம்
> “இருளிலிருந்து ஒளியை நோக்கி” என்ற உருவகத்துடன் அழகாக ஒத்துப் போகவும்
> செய்கிறது!) இந்த ஒரு எளிய கேள்வியைக் கூட ஏன் “ஆய்வாளர்கள்”
> கேட்பதில்லை?
இதனைப் பற்றிச் சிறு கட்டுரை எழுதியுள்ளேன்.
சங்க இலக்கியத்தில், “பழவிறல் மூதூர்” என்னும் தொடர்
சிவபிரான் ஜோதிலிங்கமாக அண்ணாமலையில் தோன்றுவதனைக்
குறிப்பிட்டு அங்கும், பிற ஊர்களிலும் கார்த்திகை தீபம் கொண்டாடியதைக்
குறிக்கிறது என்றும் எழுதினேன்.
http://bit.ly/4Dt2RM
ஐப்பசி அமாவாசையில் சிவனும் பார்வதியும் வட்டாடி உலகைச்
சிருட்டிக்கத் தொடங்கினர். திருக்கலியாணம் கார்த்திகை விளக்கீடு
நாளில் அண்ணாமலையில் நடக்கிறது.
சேகரித்த செய்திகளைத் தொகுத்து எழுதினால் நல்ல கட்டுரை கிடைக்கும்.
எழுதவேண்டும்: http://bit.ly/4Dt2RM
சேங்கனூர் சண்டிகேசர் உருவம் நான்காம் நூற்றாண்டிலேயே
வடமதுரையில் கிடைப்பதும் தமிழ்ச் சைவத்தின் தொன்மைக்கு அடிப்படை
ஆதாரம்.
யோசித்துப்பார்த்தால், சைவத்தின் ஆழம் சங்க இலக்கியத்தில்
நிறையக் கிடைக்கிறது:
http://bit.ly/4Dt2RM
முதல் இரண்டு நூற்றாண்டுகளிலேயே பொதியில்மலை அவலோகிதேசுவரனை
பௌத்தர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர். பொதலா என்பது பொதியில்
என்று முதலில் எழுதியவர் ரா. ராகவையங்கார் (அவரது தமிழ் வரலாறு.
வெங்கையா குறிப்பு: உவேசா, புறநானூறு).
....
நா. கணேசன்
தீபாவளி இந்தியர்களின் தேசியத்த்திருவிழாக்களில் ஒன்று என்று கூறலாம்
அல்லவா?
தேசியத்த்திருவிழா என்றால் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களிலும் மற்றும் 7
ஒருங்கிணைந்த ஆட்சிப்பகுதிகளில் வாழ்வோர் அனைவரும் கொண்டாடும் விழாவன்றோ!
அப்போது, தீபாவளி அனைத்து மாநிலத்திலும் மற்றும் ஆட்சிப்பகுதிகளிலும்
கொண்டாடப்பட்டு வருகிறதா? அல்லது பெரும்பான்மையர் உள்ள சமயத்தினர்
கொண்டாடினால், தேசியத்த்திருவிழா என்று ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
> சமய பேதம் பார்க்காமல் இந்தியாவில் அனைவரும் கொண்டாடும் பண்டிகை தீபாவளி தான்.
அப்போது, தீபாவளி இந்தியர்களின் தேசியத்த்திருவிழா என்றில்லாமல்,
இந்தியர்களின் நல்லிணக்கத் திருவிழா என்றல்லவா இருக்கவேண்டும்!
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டின் முதலாவது மாதம் மாறும் என்று எங்கோ
படித்த நினைவு. இதில் ஏதும் குளறுபடிகள் நடந்திருக்கக் கூடும்.
இதிலிருந்து கடைசி ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் + சமண சமய தொடர்பு சரிவர இல்லை
என்று தெரிகிறது.
சித்திரை மாதத்தின் முதலாவது மாதம் ஆனது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் ?
சித்திரை ஆண்டின் முதலாவது மாதம் ஆனது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் ?
சித்திரை மாதத்தின் முதலாவது மாதம் ஆனது எத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் ?
The Hindu Calendar descends from the Vedic times. There are many references to calendrics in the Vedas. The Vedānga (adjunct to Veda) called Jyautisha (literally, "celestial body study") prescribed all the aspects of the Hindu calendars. After the Vedic period, there were many scholars such as Āryabhata (5th century CE), Varāhamihira (6th century) and Bhāskara (12th century) who were experts in Jyautisha and contributed to the development of the Hindu Calendar.
The most widely used authoritative text for the Hindu Calendars is the Sūrya Siddhānta, a text of uncertain age, though some place it at 10th century.
The traditional Vedic calendar used to start with the month of agrahayan (agra=first + ayan = travel of the sun, equinox) or Mārgashirsha. This is the month where the Sun crosses the equator, i.e. the vernal equinox. This month was called mārgashirsha after the fifth nakshatra (around lambda orionis). Due to the precession of the Earth's axis, the vernal equinox is now in Pisces, and corresponds to the month of chaitra. This shift over the years is what has led to various calendar reforms in different regions to assert different months as the start month for the year. Thus, some calendars (e.g. Vikram) start with Chaitra, which is the present-day month of the vernal equinox, as the first month. Others may start with Vaisakha (e.g. Bangabda). The shift in the vernal equinox by nearly four months from agrahaayana to chaitra in sidereal terms seems to indicate that the original naming conventions may date to the fourth or fifth millennium BCE, since the period of precession in the Earth's axis is about 25,800 years.
இந்த இழையை தலைப்பை மாற்றி வெளியிடுகிறேன். கலந்துரையாடலுக்கு இது உதவும் என்பதால்.அன்புடன்சுபா---------- Forwarded message ----------
From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
Date: 2009/10/16
Subject: Re: [MinTamil] Re: தீபாவளி வாழ்த்துகள்
To: mint...@googlegroups.com
திரு.தேவ் மற்றும் நண்பர்களே,சமணமும் தமிழும் என்னும் நூலில் திரு மயிலை சீனி வேஙடசாமி அவர்கள் இப்படிச் சொல்கிறார்.இது சமணரிடத்திலிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகா வீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலேயே தங்கியிருந்தபோது, அங்குக் குழுமியிருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினாரார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப்பொழுது ஆனபடியினாலே, சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர். வர்த்தமான மகாவீரரும் தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்த படியே வீடுபேறடைந்தார்.பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்த போது, மகாவிரார் வீடுபேறடைந்திருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து, உலகத்திற்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு, அவர் வீடு பெற்ற நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழா கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவலி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது.தீபம்= விளக்கு ஆவலி = வரிசை.அதோடு சைவ உணவு உண்ணும் பழக்கமும் சமணத்திலிருந்து வந்தது என்னும் கருத்தையும் இந்த நூலாசிரியர் முன் வைக்கின்றார்.அன்புடன்சுபா
2009/10/16 devoo <rde...@gmail.com>
ஐயா,
சமணரின் தீபாவளி பற்றித் தமிழ் நூல்கள் கூறுகின்றனவா ?
தேவ்
On Oct 16, 10:14 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
> அன்பு பெரியோர்களுக்கு,
>
> தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
>
> தீபநாயகனும், மோட்சலட்சுமியை மணந்தவனுமான மகாவீரன் தாள் போற்றி!
>
> "திங்கள் மும்மாரி பெய்க திருவறம் வளர்க செங்கோல்
> நன்கினி தரசன் ஆள்க நாடெலாம் விளைக மற்றும்
> எங்குள அறத்தி னோரும் இனிதூழி வாழ்க எங்கள்
> புங்கவன் பயந்த மெய்நூல் புகழொடும் பொலிக மிக்கே"
>
> இரா.பா.
>