தினம் ஒரு பாடல் - சமூக சேவை

1,155 views
Skip to first unread message

AKR

unread,
Nov 30, 2009, 11:02:59 AM11/30/09
to minT...@googlegroups.com
உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
............
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
.............
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
 
ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.
 
எனும் மஹாகவி பாரதியாரின் பாடல் வரிகளில் கண்ட நெறியைப் பின்பற்றி நம்மிற்பலர் தாம் ஈட்டிய செல்வம் மற்றும் தமது நேரத்திலும் உழைப்பிலும் பெரும்பகுதியை சமுதாய நன்மைக்காகவே செலவிட்டு, சமூகத்தொண்டு செய்வது ஒன்றே தமது வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சாரார் மனித உயிர்காக்கும் நல்ல நோக்கத்துடன் இரத்த தானம், கண் தானம், உடலுறுப்புகள் தானம் முதலான இயக்கங்களை ஏற்படுத்தித் தன்னுடன் பிற நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் பலரையும் ஒன்று சேர்ததுப் பாடுபடுகின்றனர்.
 
இத்தகைய தொண்டு செய்வோரைத் தலைவணங்கிப் போற்றுவோம். அதே சமயம் இத்தகைய அன்பர்கள் தமது நலத்தைத் தியாகம் செய்து பாமர மக்கள் நல்வாழ்வுக்கெனத் தொகுத்து அளிக்கும் தானங்களைப் பெற வேண்டிய சூழ்நிலையிலுள்ள மனிதர்களுக்கு, அதற்கேற்ற மருத்துவச் சிகிச்சை கிடைக்கப் பெறுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டை ஆள்வோர் மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கி, அரசு மருத்துவமனைகள் முறையாக இயங்க ஆவன செய்யாது, தமது சுயலாபத்தை மட்டுமே சிந்தித்து செயல்படும் போக்கேயாகு்ம்.
 
இத்தகைய போக்கு மாறி அரசுகள் உண்மையிலேயே மக்களுக்காக, மக்களைக் கொண்டு மக்களால் நடத்தப் படும் சூழ்நிலை உருவாவது மிகவும் அவசியம். அத்தகைய நல்லாட்சி நாட்டில் நிலவுகையில் மேற்குறிப்பிட்ட அன்பர்களின் தொண்டு மென்மேலும் சிறந்து மனிதகுலம் மிகவும் மேன்மையடையும் என்பதில் ஐயமில்லை.
 
 
திரைப்படம்: கருப்புப் பணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
 
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
 
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
 
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
 
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
 
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
 
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

N. Kannan

unread,
Dec 1, 2009, 12:20:08 AM12/1/09
to mint...@googlegroups.com
2009/12/1 AKR <akrcons...@gmail.com>:

> எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
> இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
> எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
> இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
> வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
> வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
> வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
> வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
> வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது.
மனிதன் படைத்த உலகில் பொதுவுடமை என்றும் வாராது.
இதற்கென தனியே ஒரு உலகம் வைத்திருக்கிறானாம் இறைவன்.
அங்குதான் பொதுவுடமை முழுவதுமாம்.
அதுதான் உண்மையான நம் வீடாம்!
வைகுந்தப் பிராப்தரஸ்து!

க.>

akr

unread,
Dec 1, 2009, 3:17:32 AM12/1/09
to மின்தமிழ்
செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர் அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்.

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுத்தி சேர்ந்திடநாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்.

என்ற மஹாகவியின் வாக்கு பொய்யாகாது. இவ்வுலகிலேயே சமத்துவம் நிலைக்க
வழியுண்டு. அதைக்காண மனமின்றி, புலன்கள் வழியே காணும் இன்பத்தில் பற்று
வைத்து பொய், கொலை, களவு, காமம், கட்குடி எனும் பஞ்சமாபாதங்களைப்
புரிந்து வாழும் மனிதரை உத்தமரென்றேயெண்ணி அவர் கைச்சாட்டையில் சுழலும்
பம்பரமாய் அறியாமையால் உழன்று மக்கள் ஆடுவதே இத்தகைய எதிர்மறை எண்ணங்களை
விளைவிக்கிறது.

மதுகோடா


On Dec 1, 10:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2009/12/1 AKR <akrconsulta...@gmail.com>:

N. Kannan

unread,
Dec 1, 2009, 3:51:34 AM12/1/09
to mint...@googlegroups.com
மகாகவி என்றில்லையே வள்ளுவன், நம்மாழ்வார், வள்ளலார், கண்ணதாசன் என்று
எல்லோரும் பாடியிருக்கிறார்கள்.
இவ்விஷயத்தில் சமயங்கள் பொய்த்திருக்கின்றன, அரசியல் சித்தாந்தங்கள்
பொய்த்திருக்கின்றன.
மனிதனின் பொது நலன் என்பது சுயநலத்திற்கு அப்பால்தான் என்பது யதார்த்தம்.
நான் யோசிப்பதுண்டு, இப்போது சரி, 100 கோடிக்கும் மேலே, ஆனால் வள்ளுவர் காலத்தில்?
அப்போது இருந்திருக்கும் சிறிய மக்கள் கூட்டமே பசித்தவனுக்கு சோறு
போடவில்லை என்பது சங்கப்பாடல்களில் பரவலாய் ஒலிக்கிறது. அப்போதே
பொதுவுடமை வரவில்லையெனில் இப்போது எப்படி?
எல்லோரும் ஆளுக்கொரு கவிதை செய்யலாம்.
அது அடுத்தவனுக்கு சோறுபோடுவதைவிட எளிது ;-)

க.>

2009/12/1 akr <akrcons...@gmail.com>:

akr

unread,
Dec 6, 2009, 1:33:37 AM12/6/09
to மின்தமிழ்
வெள்ளத்தில் சிக்கியவன் நீந்திக் கரை சேர முயல்வதே உசிதம். முடியாது
எனும் எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடமளித்தால் வாழ முடியாது. தற்காலம்
பெரும்பாலும் தீமைகளே விளைந்த போதிலும் எதிர்காலத்தில் நன்மையே விளையுமென
நம்புவோம்.

On Dec 1, 1:51 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> மகாகவி என்றில்லையே வள்ளுவன், நம்மாழ்வார், வள்ளலார், கண்ணதாசன் என்று
> எல்லோரும் பாடியிருக்கிறார்கள்.
> இவ்விஷயத்தில் சமயங்கள் பொய்த்திருக்கின்றன, அரசியல் சித்தாந்தங்கள்
> பொய்த்திருக்கின்றன.
> மனிதனின் பொது நலன் என்பது சுயநலத்திற்கு அப்பால்தான் என்பது யதார்த்தம்.
> நான் யோசிப்பதுண்டு, இப்போது சரி, 100 கோடிக்கும் மேலே, ஆனால் வள்ளுவர் காலத்தில்?
> அப்போது இருந்திருக்கும் சிறிய மக்கள் கூட்டமே பசித்தவனுக்கு சோறு
> போடவில்லை என்பது சங்கப்பாடல்களில் பரவலாய் ஒலிக்கிறது. அப்போதே
> பொதுவுடமை வரவில்லையெனில் இப்போது எப்படி?
> எல்லோரும் ஆளுக்கொரு கவிதை செய்யலாம்.
> அது அடுத்தவனுக்கு சோறுபோடுவதைவிட எளிது ;-)
>
> க.>
>

> 2009/12/1 akr <akrconsulta...@gmail.com>:

N. Kannan

unread,
Dec 6, 2009, 2:40:52 AM12/6/09
to mint...@googlegroups.com
உண்மைதான். I am a born optimist.

ஜெயமுண்டு பயமில்லை மனமே! என்பதையும்
நம்பினார் கெடுவதில்லை, நான்குமறை தீர்ப்பு என்பதையும்,
தெய்வம் நமக்கு துணை பாப்பா!
ஒரு தீங்கு வரமாட்டாது பாப்பா! என்பதையும் முழுவதும் நம்புகிறேன்.

கவிஞர் கண்ணதாசன் வரிகள் மெய்யாகட்டும்.
நான் சுட்டியது நம்பிக்கையின்மையால் அல்ல.
மக்களை ருசுப்படுத்தவே அவ்வாறு எழுதினேன்.

க.>


2009/12/6 akr <akrcons...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages