'மற்றுமுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து,
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றியோர்'
என்று மாமுனிகள் போற்றிய முதலாழ்வார்கள் இத்திங்களில் தோன்றியதால்.
காஞ்சியில் தோன்றிய பொய்கையாழ்வார் உலகை அகலாக்கிக் கடலை நெய்யாக்கிக்
கதிரவனைச் சுடராக்கிச் சுடராழியானுக்குச் சொல்மாலை சூட்டினார்.
கடல் மல்லையில் தோன்றிய பூதத்தாழ்வார் அன்பை அகலாக்கி, ஆர்வத்தை
நெய்யாக்கி,
ஆழ்மனத்தைத் திரியாக்கிச் சுடரேற்றினார்.
மயிலையில் தோன்றிய பேயார் அச்சுடரொளியில் அச்சுதனைக் கண்டார்.
அத்திருவந்தாதிகளால் வைணவப் பேரொளி வையம் எங்கும் பரவியது.
மொழி விளக்கேற்றிய மூவர் பாடிய முதல் அந்தாதிகளைத் தொடர்ந்து மழிசைப்
பிரானும் அந்தாதி பாடினார்.அட்டபுயகரத்தானைப் பாடும்
திருமங்கை ஆழ்வாரால் ‘செந்தமிழ் பாடுவார்’என்று போற்றப்படுவோரும் இவர்களே
என்று முடிவுக்கு வரலாம்.
அந்நியரால் சீர்குலைந்த அரங்கம் மணவாள மாமுனிகள் காலத்துக்குப் பின்
பொலிவு பெற்றது;
சிங்கவேழ் குன்றம் உள்ளிட்ட திவ்ய தேசங்களில் கட்டுக்கோப்பான வழிபாட்டு
முறைகளை அவர் அமைத்தருளினார்; சடகோபன் தண்டமிழ் நூல் புது வாழ்வு
பெற்றது; ஈடு பெருகியது. மாமுனிகள் அவதரித்ததும் இத்திங்களில்தான்.
சங்கத்தமிழை தெய்வத்தமிழ் ஆக்கி, இறைவனுக்குப் படைத்த ஏற்றமிகு
அடியார்கள் அவதரித்த மாதம் ஐப்பசியே ! இதனால் ஐப்பசியே வைணவத்தின்
விடிவெள்ளி ஆகிறது.
விடியலை வணங்குவோம் !!
(மூலக்கருத்து - முனைவர் ராஜகோபாலன்)
தேவ்
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
பாராட்டுக்கு நன்றி; ஏற்கெனவே சீத வாதாவரணம்;
குளிர் நடுக்குகிறது.மரபு வழிக் கல்வியோடு நவீனக் கல்வித் துறைகளிலும்
ஒருசேரத் தேர்ச்சிபெற்ற பெரியோர் பார்வையிலும் படுமாறு அடியேனை
வைத்திருப்பது கண்ணன் செய்யும் கருணை.
‘ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக’ என்றனர் ஆன்றோர்; தனிப்பட்டவரின் எழுத்தையே
ஆவணமாகக் கருதிய காலம் ஒன்று இருந்தது.
’யாருமே எதையுமே எழுதக்கூடாது என்கிறாயா ?
21ம் நூற்றாண்டில் இது என்ன பிற்போக்குத்தனம் ?’என்று கேட்கலாம்.
ஒருவன் எழுத நேர்ந்தால் அதில் மென்மையும், சான்றாண்மையும், பொருளாழமும்
வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இதைக் கூறிச் சென்றனர்;மேலோர்
அஞ்சியபடியே தற்போது இவை அரிதாகி வருவதும் கண்கூடு.
மைதிலி சரணர் தேசிய கவி; கடி போலி ஹிந்தியை நளினமாகக்
கையாண்டவர்.இவர் எழுதிய பொருட்செரிவு மிக்க கவிதைகளின்பால் ஓர் ஈர்ப்பு
எனக்கு உண்டு.அறிஞர் பலர் நிறைந்த இவ்வரங்கில் பொருள் குன்றாமல் சுவைபட
எழுதும் ஆற்றல் அடியேனுக்கு உள்ளதா தெரியவில்லை.
’நாம் பெரியோமல்லோம்
நன்றும் தீதும் நமக்குரைப்பார் உளரென்று’ வர்த்திக்கவே ஆசைப்படுகிறேன்.
ஆயினும் போகிற போக்கைப் பார்த்தால் அனைத்தையும் காட்டிலும்
’அய்யம்பேட்டை’ ஆராய்ச்சிதான் மிகவும் தேவையானதாகத் தெரிகிறது.சென்றமுறை
மேற்கொண்ட யாத்திரையின்போது
அத்திருத்தலத்தின் அருமை,பெருமைகளை அறிந்தவனாக இல்லை; இன்னும்
முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தேவ்
க.>
2009/11/9 devoo <rde...@gmail.com>:
வடமொழியின் ஸமாஸமும் வரிச் சுமை குறைவதில் உதவியிருக்க
வாய்ப்புள்ளது; மருத்துவ நூல்களில் ‘ஸமூலம்’ என்னும் சொல் இடம்
பெறும்,‘வேருடன் சேர்த்து’என்னும் பொருளில். சில மூலிகைகளை வேருடன்
பறித்துப் பயன்படுத்த வேண்டும்.
தமிழ் மருத்துவ நூல்கள் பவுத்த,சமணர்களால் எழுதப்பட்டவை;
பெரிய சமய நூல்களில் சொற்செட்டுக்காக வடசொல் சேர்த்து எழுதும் வழக்கமும்
முதலில் சமணர் காலத்தில் தோன்றியதுதான்; அதுவே மணிப்ரவாளமானது.
வேதங்களை எழுத்தில் வடித்தால் பாட மாற்றம் ஏற்படும் என்பதால்
வாய்மொழி மரபு. துளஸீ ராமாயணத்தில் ஏற்படும் சர்ச்சையே
பாட பேதங்களால்தான்.மக்கள் பலரும் கையாண்டு பாடமாற்றத்தையும் ஏற்படுத்தி
விட்டது. கம்ப ராமாயணத்திலும் இடைச் செருகல் சர்ச்சைகள்.
தேவ்
On Nov 9, 1:17 pm, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:
> நான் தற்செயலாக (இறைவன் அருளால் கூட இருக்கலாம்) மஹாபெரியவாளின் தெய்வத்தின்
> குரல் புத்தகத்தை எடுத்து கைக்குக் கிடைத்த எதையாவது படித்துப் பார்க்கலாமே
> என்று எடுத்தேன்.
>
> என் கைக்குக் கிட்டிய வரிகள்..
>
> புத்த கல்விசாலைகள் வந்த பிறகுதான் எழுதி வைத்துப் பாடம் படிப்பது என்ற பழக்கம்
> உண்டானது...
>
> (இதில் வார்த்தைகளை அப்படியே நான் கொடுக்க வி்ல்லை. புத்தகம் என்னுடையது
> இல்லை. போன இடத்தில் திருட்டுத்தனமாகத் திருப்பி்ப் பார்த்த பக்கத்தில்
> கிடைத்த வரிகள் இவை)
>
> இந்தத் தகவல் சரியா? வேதாந்த பாடத்தில் ஸ்ரவணம் என்று இருக்கிறது-
> வேதங்களையும் வாய்மொழி வழியாகத்தான் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்.
> இந்து மதத்தில் பல ஆவணங்கள் இப்படி வாய்வழியாகவே நிலைபெற்றவை என்கிறார்கள்.
>
> ஆனால் புத்தவிகாரங்களில்தான் எழுதி வைத்துக் கொண்டு படிக்கிற பழக்கம்
> தோன்றியதா என்று பெரியவர்கள் யாராவது விளக்கினால் தெரிந்து கொள்ளலாம். அது
> எந்த நூற்றாண்டில் துவங்கியது என்கிற தகவல் இருந்தாலும் நலம்.
>
> காஞ்சி முனிவரின் இந்த நூல் தொகுப்பில் இப்படிப் பலப் பல அரிய தகவல்களைப்
> பார்த்து வியந்திருக்கிறேன்.
>
> எதற்காக இல்லை என்றாலும் எனக்கே உரித்தான அய்யம்பேட்டை வேலை எதுவும் செய்யாமல்
> முதல் முறையாக கொஞ்சம் சந்தேகம் கேட்கிறேன். அதற்காகவாவது யாராவது மனது
> வைக்க வேண்டும்.
>
> அன்புடன்
>
> பென்னேஸ்வரன்
>
> 2009/11/9 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > பரனூர் பெரியவர் அடிக்கடி சொல்வது.
> > கலியில் பிரஷ்டர்கள்தான் அதிகம். எனவே அவர்கள் மீது கோபம் கொண்டு ஒன்றும்
> > ஆகப்போவதில்லை.
> > ஆகக்கூடி இரக்கம் கொள்ளலாம்.
> > அப்படி இரக்கப்பட்டு எழுதினால் தேனீயார் சொல்வது போல் எமக்கு உஜ்ஜீவனம் ;-)
>
> > க.>
>
> > 2009/11/9 devoo <rde...@gmail.com>:
> > > ‘ஸஹஸ்ரம் வத; ஏகம் மா லிக’ என்றனர் ஆன்றோர்; தனிப்பட்டவரின் எழுத்தையே
> > > ஆவணமாகக் கருதிய காலம் ஒன்று இருந்தது.
> > > ’யாருமே எதையுமே எழுதக்கூடாது என்கிறாயா ?
> > > 21ம் நூற்றாண்டில் இது என்ன பிற்போக்குத்தனம் ?’என்று கேட்கலாம்.
> > > ஒருவன் எழுத நேர்ந்தால் அதில் மென்மையும், சான்றாண்மையும், பொருளாழமும்
> > > வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இதைக் கூறிச் சென்றனர்;மேலோர்
> > > அஞ்சியபடியே தற்போது இவை அரிதாகி வருவதும் கண்கூடு.
>
>>ayudha purushas<<
திருமாலைப்போலவே அவருடைய பஞ்சாயுதங்களும் புகழ் பெற்றவை; நித்ய ஸூரிகளே
ஆயுத வடிவம் தாங்கித் தொண்டு செய்கின்றனர். அந்த ஆயுதங்களை அணிகலனாகச்
செய்து சிறாருக்கு அணிவிப்பது தமிழர் மரபு. ஐம்படைத் தாலி என்று பெயர்.
குறிப்பாக ஸுதர்சந சக்ரம் தனித்த வழிபாட்டுக்குரியதாகிறது.
‘ஹேதி ராஜன்’(ஆயுதங்களுக்குத் தலைவர்) என்னும் பெயர் இவருக்கு உண்டு.முன்
புறம் ஸுதர்சனரும், பின்புறம் நரசிம்மராகவும் படிமம் அமைந்திருக்கும்.
காரணம் தெரியவில்லை.
ஸ்வாமி தேசிகன் காலத்திலிருந்து இவ்வழிபாடு வழக்கத்தில் வந்திருக்கலாம்;
பின்னர் திருவரங்கத்தில் இருந்த கூர நாராயண ஜீயர் என்பவரும்
இவ்வழிபாட்டிற்கு முதன்மை தந்தார் என்று தெரிகிறது; கோயிலொழுகில்
குறிப்பு உள்ளது.
கதாயுதம் குறித்து நீங்கள் கேட்டிருப்பதற்கு விளக்கம் தெரியவில்லை.
கண்ணபிரான் பரமபதம் புகுமுன் ஐம்படைகளும் அமர வடிவில் அவரை வலம் வந்து
வைகுந்தம் புகுந்தன என்று பாகவதம் கூறும்.
தேவ்
விண்ணகரங்களும், வரலாற்று நிகழ்வுகளும், அருளிச் செயல்களும்
வைணவத்துக்குப் பெருமை சேர்ப்பன. ஆழ்வார்களும், நாதமுனிகள் தொடக்கமான
ஆசார்யர்களும் தென்னக வைணவத்தின் தோற்றத்திற்கும் , வளர்ச்சிக்கும்
காரணமாக அமைந்தனர்.
பரிபாடல் மாலவனின் சிறப்பைக் கூறும்; கண்ணபிரான் முல்லைத் திணைக்குரிய
கடவுளானாலும் கண்ணன் வழிபாடு புகார் நகரிலும் இருந்ததை அறிகிறோம்;
பலராமனையும் பழந்தமிழர் வழிபட்டனர்.
நூல் வளமும், உரை வளமும் :
வேதம், ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள், ஆகமங்கள், ஆழ்வார்களின் அருளிச்
செயல் இவற்றின் அடிப்படையில் அமைந்தது வைணவம்.
தென்னக வைணவத்திற்கு ஆதாரமாக அமைந்த அருளிச் செயலில் பிள்ளைத் தமிழ்
இலக்கியத்தையும், அந்தாதியையும் , ஆசிரியப்பாவையும் ,வெண்பாவையும்,
விருத்தப் பாவையும், கலி வெண்பாவையும், கலித் துறை, ஆசிரியத்
துறைகளையும், தாண்டகத்தையும், எழு கூற்றிருக்கையையும் ஒருங்கே
காண்கிறோம்.
பிள்ளைத் தமிழ்ப் பிரபந்த வகையில் பெரியாழ்வார் அருளிய கண்ணபிரான்
பிள்ளைத்தமிழ் முதன்மையானது. தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய அந்தாதி
ஸ்வாமி நம்மாழ்வாரின் ’திருவாய் மொழி’ ஆகும்; ஓராயிரம் பாடல்கள்.
நாலாயிரத்தினுள் இராமானுச நூற்றந்தாதியுடன் சேர்த்து மொத்தம் ஆறு
அந்தாதிகள் உள்ளன.
திரு மங்கை ஆழ்வாரின் ‘எழு கூற்றிருக்கை’ கற்பனை வளம் மிகுந்த அரியதொரு
பிரபந்த வகையாகும்; தமிழ் இலக்கியத்தின் முதல் எழு கூற்றிருக்கை நூலும்
இதுதான்.
ஒரு காலத்தில் இப்பனுவல்கள் தமிழிசை மரபை ஒட்டியவையாக
இசைக்கப்பட்டன என்னும் கருத்தும் நிலவுகிறது. சங்கத்தின் நீட்சியே
பாசுரங்கள். அகத்துறைப் பாடல்களையும் ஆழ்வார் பனுவல்களையும் ஒப்பிடுவதால்
இவ்வுண்மை புலப்படும்.
மடலூர்தலை அருளிச் செயலிலும் காண்கிறோம். சில வரலாற்றாசிரியர்கள்
ஆழ்வார்களை ஆறாம் நூற்றாண்டுக்குப்
பின் தோன்றியவர்களாகக் கருதுகின்றனர்.
திராவிட வேதமான அருளிச்செயலின் பாசுரங்கள் மொத்தம் 3776 என்றாலும்
நாலாயிரம் என்றே கொள்ளப்படுகிறது. பெரிய திருமடலை 78 பாடல்களாகவும்,
சிறிய திருமடலை 40 பாடல்களாகவும் கணக்கிட்டு, இராமானுச நூற்றந்தாதி 108
ஐயும் சேர்த்து 3774+78+40+108 = 4,000 என்று மட்டுறுத்தும் வழக்கம்
பெரும்பாலான பதிப்புகளில் பின்பற்றப்படுகிறது.
பாவளம் மட்டுமின்றி அரிதான உரை வளத்தையும் வைணவத்தில் காண்கிறோம்.
பத்தாம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெறத் தொடங்கிய உரை, வடக்குத்
திருவீதிப் பிள்ளை காலத்தில் முழு உருப்பெற்றது எனலாம்.
பெரியவாச்சான் பிள்ளைகள் நாலாயிரத்துக்கும் இருபத்து நாலாயிரப்படியை
அருளினார். தவிர ஆறாயிரப்படி, ஒன்பதாயிரப்படி, பன்னீராயிரப்படி ,
முப்பத்தாறாயிரப்படி ஆகிய உரைகள் திருவாய் மொழிக்கு உள்ளன.
திருப்பாவைக்கு மட்டும் ஈராயிரம்,மூவாயிரம், ஆறாயிரம் ஆகிய உரைகள்.
ஆறாயிரப்படி – திருக்குருகைப்பிரான் பிள்ளான்
ஒன்பதாயிரப்படி – நஞ்சீயர்
பன்னீராயிரப்படி – வாதிகேஸரி அழகிய மணவாள ஜீயர்
இருபத்து நான்காயிரப்படி – பெரியவாச்சான் பிள்ளை
முப்பத்தாறாயிரப்படி (ஈடு) – வடக்குத் திருவீதிப்பிள்ளை
நம்பிள்ளைகள் தமது காலக்ஷேபத்தில் தொடர்ந்து முப்பத்தாறாயிரப்படியைத்
அருளிச்செய்து கொண்டிருந்ததால் இதனை ’நம்பிள்ளை ஈடு’ என்பர்.
நாதமுனிகள் காலம் தொடங்கி தலைமுறை தலைமுறையாகக் கை மாறிய, முதலிகள் கூறிய
அரிய கருத்துகளின் ஆவணத் தொகுப்பே உரை எனப்படுகிறது. காலக்ஷேபம் என்னும்
முறை இந்த அரும்பணிக்கு உதவியது. பாரதத்தில் குரு சீடருக்கு உபதேசிக்கும்
மரபு பொதுமையானது எனினும் குருமார்களின் கருத்துகளை ஒன்று விடாமல் பதிவு
செய்வது என்பது மிக அரிது.
ஆன்மிகத்தில் அறப்பெரிய ஆசார்ய புருஷர்கள் அருளியவற்றோடு தயிர்,பால்
விற்கும் ஓர் எளிய பெண்மணி கூறியவையும் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை
ரகசியம்’ என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.
பிற நூல்கள் என்று எடுத்துக்கொண்டால் யாமுனாசார்யரின் ‘ஸித்தி த்ரயம்’
தொடங்கி, ஸ்வாமி தேசிகனின் ‘ரஹஸ்ய த்ரய ஸாரம்’ வரை வைணவம் கண்ட வடமொழி/
மணிப்பிரவாள நூல்கள் எண்ணற்றவை. ஸ்ரீ ராமானுஜர் ப்ரம்ம ஸூத்ரத்துக்கு
ஸ்ரீபாஷ்யம் என்னும் விரிவான உரை எழுதினார் என்றாலும் அதன் நுட்பமான
கருத்துக்களைப் பல கோணங்களில் விவரிக்கும் வகையில் எழுந்த மிகப்பெரிய உரை
‘ச்ருத ப்ரகாசிகை’. ஸ்வாமி தேசிகன் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை
அருளியுள்ளார்.
அவற்றுள் சில நூல்கள் வெளிப்படையாக இலக்கியம்போல் தோன்றினாலும் வைணவக்
கோட்பாட்டின் ப்ரதிதந்த்ர அம்சங்களைச் சூல் கொண்டவையாகவே அமைந்துள்ளன..
கலாபத்திற்குப்பின் மாமுனிகள் செய்த தொண்டு போற்றுதற்குரியது. 17ம்
நூற்றாண்டில் தோன்றிய அழகிய மணவாள தாஸர் இயற்றிய தமிழ் நூல்கள் மிகவும்
புகழ் பெற்றவை. வானமாமலை மடமும், அஹோபில மடமும் வடபுலத்திலும் வைணவம்
பரவக் காரணமாயின. அருளிச் செயலுக்குத் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும்
உரைகள் அமைந்துள்ளன.
வைணவம் பற்றி அடியேன் புரிந்துகொண்டதை எழுதியுள்ளேன்;
பிழைகள் இருக்கலாம்.
தேவ்
2009/11/10 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
க.>
2009/11/10 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
> ஆமாம். ஒரு யோசனை. ஏன் சைவ சித்தாந்தத்தைப் பற்றி நமது
> நண்பர்கள் யாரேனும் ஒரு தொடர் எழுதக் கூடாது? அதுபோல்
> அத்வைதத்தைப் பற்றி? (திவாஜி காதில் விழுகிறதா?) சாக்தத்தைப்
> பற்றி? சமணம், பௌத்தம் மரபுகளைப்பற்றி? (வினோத் தப்பிக்க
> முடியாது :--)) ) கிராம தேவதைகளின் அங்கங்கே உள்ள வழிபாட்டு
> அம்சங்கள் பற்றி? நமக்கென்ன என்று தள்ளி இருந்தீர்கள்
> என்றால் ?
அன்பின் பென்
இது தனியிழையில் பேச வேண்டிய விஷயம்.
இது குறித்து கருத்துச் சொல்லும் பெரியோர் இருப்பதை நானறிவேன்.
யார் இக்கேள்வி பதில் போட்டாலும், 'வள்ளலாரின் பின்னாளைய நிலைப்பாடு'
எனும் தலைப்பில் எழுதவும்.
இவ்விழை வைணவம் குறித்தே இருக்கட்டும்.
நன்றி.
க.>
சரிதான் நரசிம்மரைப் பற்றிக் கேட்டுவிட்டு, அவரையே பார்த்துவிட்டீர்கள்,
பிறகென்ன? ;-)
ஆமாம், நம் பூச்செண்டு அவரைப் பார்த்தாரோ?
க.>
பொய்கைமுனி, பூதத்தார், பேயாழ்வார், தண்
பொருநல்வருங் குருகேசன், விட்டுசித்தன்,
துய்யகுலசேகரன், நம் பாணநாதன்,
தொண்டரடிப்பொடி, மழிசைவந்த சோதி,
வையமெல்லாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர்க்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித்
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே.
“நிரஞ்ஜநம் பரமம் ஸாம்யம் உபைதி திவ்யம்”-
பரம வ்யோமத்தில் பரம புருஷனுக்கு நிகராக ஒரு ஜீவன் பெறும் அந்தமில்
பேரின்பத்தை ‘திவ்யம்’என வர்ணிக்கிறது முண்டக உபநிஷத். அவனது வடிவுடன்
தொடர்புள்ள அனைத்தும் திவ்யம் எனத்தகும்.அவனது நாமம் திவ்ய நாமம்,
உறைவிடம் திவ்ய தாமம், தாங்கியிருப்பது திவ்ய ஆயுதங்களை, அவன் உகந்தருளிய
நிலங்கள் திவ்ய தேசங்கள், அவனுடைய அடியார்கள் திவ்ய ஸூரிகள், அவர்கள்
இயற்றிய பனுவல்கள் ’திவ்ய ப்ரபந்தம்’
மயர்வற்ற மதிநலம் வாய்க்கப் பெற்ற ஆழ்வார்கள் பரமனின்
ஸ்வரூப,ரூப,குண,விபூதிகளை உள்ளபடியே இப்பிரபந்தங்களில்
அனைவருக்கும் தெரியும்படி கூறியுள்ளனர். இவை அனைவரையும் உய்விக்க வல்லவை;
இவற்றை ஓதி உணர்வதில் அனைவரும் தகுதி பெற்றவர்.
மறைகளுக்கு எம்பெருமானது மிக்குயர் நிலையை, பரத்வத்தை வர்ணிப்பதில்
நோக்கம்; ஆகமங்கள் வ்யூஹத்தை வர்ணிக்கின்றன; இதிஹாஸ, புராணங்கள் விபவ
அவதாரங்களைப் பரக்கப் பேசுகிறன; யோக நூல்கள் உள்ளுறைபவனான அந்தர்யாமியை;
அருளிச் செயல்களுக்கோ தாழ்வுகளுக்கே கொள்கலமாக நிற்கும் நம்போல்வாரின்
கண்ணுக்கும் புலப்படும் வண்ணம் தெரியும் அர்ச்சைகளைப் போற்றுவதில்
நோக்கம் -
செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
துய்ய விபவமாய்த் தோன்றியவற்றுள் – எய்தும் அவர்க்கு
இன்னிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
பன்னுதமிழ் மாறன் பயின்று.
யோகியரான ஆழ்வார்களும் அர்ச்சைத் திருமேனிகளில்
மண்டிக் கிடந்தனர்; திவ்ய தேசங்களின் பெயரைக் கூறுவதிலும்
அவர்கள் சுவை கண்டனர்.
மறைகளை யோகதசையில் (ரிதம்பரா) உணர்ந்து உலகுக்கு உரைத்தனர் முனிவர்கள்;
நாத முனிகள் அருளிச்செயலை யோக தசையில் பெற்றார். ஸாமவேத ஸாரமான
திருவாய்மொழியை
கம்பீரமான நடையில் போற்றும் விதம் மனம் கவர்வதாக உள்ளது -
பக்தாம்ருதம் விச்வஜநாநுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம் |
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிடவேத ஸாகரம் ||
தேவ்
மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது சாமியோவ்!
கண்டேன் கண்ணபெருமானை!
இப்ப நம்ம ரெ.கா என்னை மடக்கமுடியாது சாமியோவ்!!
க.>
ஸ்ரீ நாத முனிகள் (824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராம மிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
பெரிய நம்பி ( 1017-1317 AD )
கூரத்தாழ்வான் (1010-1116 AD)
திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
கிடாம்பி ஆச்சான் ( 1057-1157AD )
பராசர பட்டர் ( b1074AD )
எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்)( 1106-1206 AD )
நம்பிள்ளை (1147– 1252AD)
நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
வடக்குத் திருவீதிப் பிள்ளை ( 1167-1264 AD )
பிள்ளை லோகாசார்யர் ( b 1264 AD)
வேதாந்த தேசிகன் (1268-1369 AD )
மணவாள மாமுனிகள் ( 1370-1443 AD )
குமார வரதாசார்யர் ( 1316-1401AD )
ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் ( 1286-1386 AD )
சில குறிப்புகள்:
நம் ஜீயரின் ஒன்பதாயிரப்படியும், உடையவரின் ஸ்ரீ பாஷ்யமும் ஒரே அளவு
கொண்டவை.
நம்பிள்ளைகள் 2ம் ராஜராஜன், 3ம் குலோத்துங்கன் இவர்களின் காலத்தவராக
இருந்திருக்க வேண்டும்.
பெரியவாச்சான் பிள்ளையும், வடக்குத் திருவீதிப்பிள்ளையும் ஒரே ஆண்டில்
அவதரித்தவர்கள்.
ஸ்வாமி தேசிகன் பரமபதம் சென்ற அடுத்த ஆண்டில் அவதரித்தவர் ஸ்வாமி மணவாள
மாமுனிகள்.
பொதுவாகத் துறவியர் இல்லறத்தாருக்குச் சீடராவதில்லை.
விதிவிலக்காகத் துறவியான நம்ஜீயர், பராசர பட்டரின் சீடராக இருந்தார்;
ப்ரம்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர், ஸ்வாமி தேசிகனின் சீடர்.
தேவ்
அவர் திருவடி சம்பந்தத்தால் பின்னால் வந்தோரையும்,
அவரது திருமுடி சம்பந்தத்தால் அவர்க்கு முன் தோன்றியோரையும்
உய்யக்கொண்ட எம்பெருமானார் எங்கே?
க.>
2009/11/10 devoo <rde...@gmail.com>:
> ஆசார்ய பரம்பரை
>
> ஸ்ரீ நாத முனிகள் (824-924 AD )
> உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
> மணக்கால் நம்பி (ராம மிச்ரர்) ( 832-937AD )
> ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
????
ரெ.கா.
----- Original Message -----
From: "N. Kannan" <navan...@gmail.com>
To: <mint...@googlegroups.com>
Sent: Tuesday, November 10, 2009 8:17 PM
Subject: [MinTamil] Re: வைணவத்தின் வைகறை
ஆசார்ய பரம்பரை
ஸ்ரீ நாத முனிகள் (824-924 AD )
உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
மணக்கால் நம்பி (ராம மிச்ரர்) ( 832-937AD )
ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
|
We can Wiki the entire serial.
K.>
இராமானுசர் (கிபி: 1017-1137) 120 வருடங்கள்
கூரத்தாழ்வான் (1009-1127) 118 வருடங்கள்
முதலி ஆண்டான் (1027-1132) 105 வருடங்கள்
எம்பார் (1021-1140) 119 வருடங்கள்
நஞ்சீயர் (1113-1208) 95 வருடங்கள்
பிள்ளை லோகாச்சாரியர் (1205-1311) 106 வருடங்கள்
அழகிய மணவாளன் (1207-1309) 102 வருடங்கள்
வேதாந்த தேசிகர் (1268-1373) 105 வருடங்கள்
திருவாய் மொழிப் பிள்ளை (1290-1410) 120 வருடங்கள்
இப்படிப் போகிறது பட்டியல். ஒருவர் கூட நூறு வயதுக்கு குறைந்து
வாழவில்லை. இந்தியாவின் சராசரி வாழ்வியல் வயது 60 களில் கூட 55 தாண்ட
வில்லை. இவர்களால் எப்படி இப்படி சளைக்காமல் சதம் போட முடிந்தது?
சரணாகதி!!!
கண்ணன்
தேவ்
On 11월11일, 오전6시23분, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:
> This was the question I wanted to raise in this thread. Thanks Kannan. But
> this is very good collection. If proofs/references for these years also
> given, then the list will be complete. This is my thought. Thanks for the
> effort.
>
> 2009/11/11 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
> > இதில் இன்னொரு ரகஸ்யமும் இருக்கிறது. கீழேயுள்ள பட்டியலைப் பாருங்கள்:
>
> > இராமானுசர் (கிபி: 1017-1137) 120 வருடங்கள்
> > கூரத்தாழ்வான் (1009-1127) 118 வருடங்கள்
> > முதலி ஆண்டான் (1027-1132) 105 வருடங்கள்
> > எம்பார் (1021-1140) 119 வருடங்கள்
> > நஞ்சீயர் (1113-1208) 95 வருடங்கள்
> > பிள்ளை லோகாச்சாரியர் (1205-1311) 106 வருடங்கள்
> > அழகிய மணவாளன் (1207-1309) 102 வருடங்கள்
> > வேதாந்த தேசிகர் (1268-1373) 105 வருடங்கள்
> > திருவாய் மொழிப் பிள்ளை (1290-1410) 120 வருடங்கள்
>
> > இப்படிப் போகிறது பட்டியல். ஒருவர் கூட நூறு வயதுக்கு குறைந்து
> > வாழவில்லை. இந்தியாவின் சராசரி வாழ்வியல் வயது 60 களில் கூட 55 தாண்ட
> > வில்லை. இவர்களால் எப்படி இப்படி சளைக்காமல் சதம் போட முடிந்தது?
>
> > சரணாகதி!!!
>
> > கண்ணன்
>
> --
> அன்புடன்
> சந்தர் சுப்ரமணியன்www.MovingMoon.com
ஒன்றும் அவசரமில்லை. திருத்திய பதிப்பே கொண்டுவருவோம்.
ஆச்சர்ய பரம்பரை பற்றிய தெளிவான நடைமுறைகள் இருக்கின்றன. இஷ்டத்திற்கு
மாற்றமுடியாது. மெல்ல வருவோம்.
நீங்கள் தொடருங்கள்.
ஆழ்வார்களுக்குள் மெல்லக்காலடி வைத்திருக்கிறீர்கள். சொல்ல இன்னும் ஆயிரமிருக்கே?
க.>
ஆராத அருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னர்க்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணர்க்குத் துணையாம் கோயில்
சேராத பயனெல்லாம் சேர்க்கும் கோயில்
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கம் எனத் திகழும் கோயில் தானே
- ஸ்வாமி
தேசிகன்
“நீல மேகம் நெடும்பொன் குன்றத்துப்
பால் விரிந்தகலாது படிந்தது போல
ஆயிரம் விரிந்தெழு தலையுடை அருந்திறல்
பாயல் பள்ளிப் பலர் தொழுதேத்த
விரிதிரைக் காவிரி வியன் பெருந்துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்....”
அரங்கன் கண் வளர்வதைச் சிலம்பும் வர்ணிக்கிறது.
க்ஷீராப்தியில் ப்ரணவ வடிவான விமானத்துடன் தோன்றிய
அரங்கனை ப்ரம்ம தேவர் ஆராதித்தார்; பின்னர் மாமன்னர் இக்ஷ்வாகுவுக்கு
அளித்தார்; சூரிய குலத்தோன்றல்கள் வழிவழியாக ப்ரணவாக்ருதி விமானத்தை
ஆராதித்து வந்தனர்.இரகுவீரன் மைதிலியுடன் வழிபட்டார்; அவரிடமிருந்து
விபீஷணாழ்வான் அதைப் பரிசாகப் பெற்றார்; இலங்கை செல்லும் வழியில் அரங்கனை
ஆராமம் சூழ்ந்த காவிரியின் இடைக்குறை கவர்ந்தது; அங்கேயே கோயில்கொள்ளத்
திருவுள்ளம் பற்றினான்.
பின்னர் அவதரிக்க இருக்கும் ஆழ்வார்களிடம் வ்யாமோஹம்,
அதுதானே உண்மைக் காரணம்! யுகாரம்பதிலிருந்தே அங்கு அரங்கனுக்கான சேஷபீடம்
இருந்து வந்ததை ஹம்ஸ சந்தேசத்தில் ஸ்வாமிதேசிகன் தெரிவிக்கிறார்.
ஆலயத்தினுள் அரங்கன் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் தென்திசை
நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். திருவுண்ணாழி (தர்ம வர்மன்) திருச்சுற்று,
ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, ஆலிநாடான்
திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திரிவிக்கிரமன் திருச்சுற்று,
கலியுகராமன் திருச்சுற்று என்னும் ஸப்த ப்ராகாரங்கள்; அவற்றை
உள்ளடக்கியதாக (156 ஏக்கர் பரப்பு) அடையவளைந்தான் திருச்சுற்று. 21
கோபுரங்கள்; .பல ஸந்நிதிகள், 236 அடி உயரத்தில் 13 கலசங்கள், 13
நிலைகளோடு நெடிதுயர்ந்த ராஜகோபுரம்.
(வளரும்)
உறுசகட முடையவொரு காலுற்றுணர்ந்தன
உடன் மருத மொடியவொரு போதிற்றவழ்ந்தன
உறிதடவுமளவிலுரலோடுற்று நின்றன
உறுநெறியோர் தருமன் விடுதூதுக்குகுகந்தன
மறநெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கைவருட மலர் போதிற் சிவந்தன
மறுபிறவி யறுமுனிவர் மாலுக்கிசைந்தன
மனுமுறையில் வருவதோர் விமானத்துறைந்தன
அறமுடைய விசயனமர் தேரில் திகழ்ந்தன
அடலுரக படமடிய வாடிக்கடிந்தன
அறுசமய மறிவரியதானத்தமர்ந்தன
அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கமைந்தன
வெறியுடைய துளவ மலர் வீறுக்கணிந்தன
விழுகறியோர் குமரனென மேவிச் சிறந்தன
விறலசுரர் படையடைய வீயத்துரந்தன
விடலரிய பெரிய பெருமாள் மென்பதங்களே
மூலவர் - ஸ்ரீரங்கநாதர்,
உத்ஸவர் - அழகிய மணவாளன்
தாயார் - பெரியபிராட்டியார்
தீர்த்தம் - சந்த்ர புஷ்கரிணி ,காவேரி
ப்ரணவாக்ருதி விமாநம்;
விபீஷணருக்கும்,தர்ம வர்மாவுக்கும்,சந்திரனுக்கும் ப்ரத்யக்ஷம்
ஸ்வயம்வ்யக்த ஸ்தலங்கள் எட்டிலும் முதன்மையானது ஸ்ரீரங்கம். ஸ்வயம்வ்யக்த
மூர்த்திகள் மனிதரால் செய்யப்படாதவை; தாமே தோன்றியவை.
வைகாநஸ வழிபாட்டு முறையில் இருந்த இந்த ஆலயத்தில் உடையவர்
ஸ்ரீபாஞ்சராத்ர முறையை நிறுவினார்; பாரமேச்வர ஸம்ஹிதை சார்ந்த வழிபாடு
என்பர். வழிபாட்டு மரபுகளை அமைத்தவர் ஸ்ரீராமானுஜர்.
இத்தலம் புராணம் போற்றும் பெருமை பெற்றது;
ஆழ்வார்கள் அனைவராலும் மங்களாசாஸநம் செய்யப் பெற்றது.
(மங்களம் - நற்பேறு,மேன்மை,வளம்)
இங்கு திருநந்தவனம் அமைத்துத் தொண்டு செய்த விப்ர நாராயணர் அரங்கம்
தவிர்ந்த வேறு திவ்ய தேசங்களைப் பாடவில்லை. திருமங்கை ஆழ்வார்
திருமதிளமைத்தபோது அந்த நந்தவனத்தைச் சுற்றிலும் மதிள் அமைத்தார்; இவர்
73 பாசுரங்கள் செய்துள்ளார். கம்ப ராமாயணம் அரங்கேறியது
இவ்வாலயத்தில்தான். நெடிய வரலாறு கொண்ட இத்தலம் மஹாபுருஷர்கள் பலரின் தல
யாத்திரையில் இடம் பெறுவது. ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு சாதுர்யமாஸ்ய நோன்பு
மேற்கொண்ட இடத்தை இங்கு இன்றும் பார்க்கலாம்..
சேர,சோழ,பாண்டிய,ஹொய்சள,நாயக்க மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்; மஹா
ப்ரபுக்கள் கொடுத்த விலை உயர்ந்த அணிமணிகளை ஏற்றுக்கொண்ட அரங்கன், எளிய
அடியார்கள் உஞ்சவ்ருத்தி மூலம் ஈட்டிய வருவாயில் செய்து ஸமர்ப்பித்த
ஆபரணங்களையும் அணிந்துகொண்டு அருள் செய்கிறான்.
ஈடு விளைந்த இடம்; பெரிய நம்பிகள், பட்டர், சீராமப்பிள்ளை, லோகாசார்யர்
போன்ற மஹநீயர்களின் அவதார ஸ்தலம் இது.
‘அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ’ என்பதற்கிணங்கக் கடைசிவரை அரங்கனின்
கடைத்தலை பற்றி வாழ்ந்த அடியார்கள் எண்ணற்றவர். ஸ்ரீ ப்ருந்தாவனத்திலும்,
ஸ்ரீ ரங்கத்திலும் உண்டுறங்கி வாழ்வதே கிடைத்தற்கரிய ஸாதனை என்பார்
பரனூர்ப் பெரியவர்.காளியன் ப்ருந்தாவன வாஸத்தாலேயே கண்ண பிரானின் திருவடி
ஸ்பர்சம் பெற்றான். ஸாது க்ருஷ்ண ப்ரேம் இவ்வாலயத்தில் இறையனுபவம்
பெற்றார்; இவர் அயல் நாட்டவர்.
சித்திரையில் வஸந்தோத்ஸவம் - விருப்பன் திருநாள், வைகாசியில் விசாக
உத்ஸவம், தொடர்ந்து ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் வஸந்த உத்ஸவம், ஆனியில்
ஜ்யேஷ்டாபிஷேகம், ஆடிப் பெருக்கு - அம்மா மண்டபத்திற்குத்
தங்கப்பல்லக்கில் உலா, புரட்டாசியில் நவராத்திரி உத்ஸவம், ஐப்பசியில்
ஊஞ்சல் உத்ஸவம், கார்த்திகை - மார்கழி மாதங்களில் திருவாய்மொழித்
திருநாள், வைகுண்ட ஏகாதசித் திருவிழா, தை மாதத்தில் பூபதித் திருநாள்
என்றழைக்கப்படும் தேரோட்டம், தெப்பத் திருவிழா, பங்குனியில் ஆதி
ப்ரம்மோத்ஸவம், பங்குனி உத்திர தினத்தில் உடையவர் செய்யும் சரணாகதி ஆகிய
திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும்.
அயலிடங்களில் வாழ்வோருக்கும், மதக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற
இயலாதவருக்கும் அரங்கமே கதி; திருவரங்கம் திகழும் திசை நோக்கித் தொழுவதே
ஸர்வபாப ப்ராஸ்சித்தம்; இது அற நூல்களின் ஸாரத்தை ஓதாமல் உணர்ந்த
பரனூர்ப் பெரியவர் முடிவாகக் காட்டும் வழி.
அறிவிலா மனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில்
பொறியில் வாழ்நரகமெல்லாம் புல்லெழுந் தொழியுமன்றே !
ஸ்ரீரங்கவாஸே ரமதாம் மநோ மே !!
வைணவத்தின் வைகறை தொடரை இப்போது தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ஆசாரிய பரம்பரையினைத் தந்து அதோடு ஒவ்வொருவரின் காலத்தையும் குறித்ததற்கு
நன்றி. கொஞ்சம் நுணுகிப் பார்க்க வகையுண்டாயிற்று. மிக்க நன்றி.
நாதமுனிகளுக்கும் அவருடைய திருப்பெயரரான யாமுனமுனிகளுக்கும் இடையில் இரு
ஆசாரியர்கள் பரம்பரையில் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் இருந்த
கால இடைவெளி தெரியாததால் கொஞ்சம் குழப்பம் கொண்டிருந்தேன். இப்போது தான்
தெரிகிறது. நாதமுனிகளும் உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியும்
ஒருவருக்கொருவர் சில வருடங்களே இளையவர்கள் என்று. நாதமுனிகள் காலத்திலேயே
ஆளவந்தாரின் திருவவதாரமும் நிகழ்ந்திருக்கிறது; அதனால் நாதமுனிகள் தம்
குலதனத்தை தன் திருப்பெயரரிடம் ஒப்படைக்குமாறு தம் சீடரை நியமித்தது
புரிகிறது.
பெரிய நம்பிகளின் காலத்தைக் கொஞ்சம் சரி பார்க்கவும். முன்னூறு வருடங்களா
அவர் இருந்தார்?
நடுவில் உடையவரின் காலத்தையும் தந்திருக்கலாம். அவர் திருப்பெயரைக்
காணாமல் திகைத்தேன்.
கூரத்தாழ்வான் பெரிய நம்பிகளை விட மூத்தவரா? அவர் உடையவரை விட மூத்தவர்
என்று அறிந்திருந்தேன். ஆனால் இங்கே தந்திருக்கும் காலங்களைப் பார்த்தால்
அவர் பெரிய நம்பிகளை விட மூத்தவர் போல் தோன்றுகிறது - அதனாலும் பெரிய
நம்பிகளின் காலக் குறிப்பு தவறோ என்று தோன்றுகிறது.
பிள்ளை உலகாரியரும் வேதாந்த தேசிகனும் ஒரே காலத்தவர் போல் தோன்றுகிறது.
இவர்கள் காலத்தில் தான் திருவரங்கத்திற்கும் காஞ்சிபுரத்திற்கும் வாதப்
பிரதிவாதங்கள் நடந்தனவா?
அன்பன்,
குமரன்.
மணவாள மாமுனிகளுடன் எங்கே ஆசாரிய பரம்பரை நிறைவுறுகிறது? அவருக்குத்
தனியன் பாடிய சிறுபிள்ளையுடன் அல்லவா நிறைவுறுகிறது? அப்போது தான்
அவனுடன் தொடங்கி அவனுடன் நிறைவுறும் ஆசாரிய வம்ச மாலை உருப்பெறும். சரி
தானே? :-)
அன்பன்,
குமரன்.
On Nov 10, 7:57 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> தெரிந்தவரை எழுதுகிறேன் என்று தேவ் முதலிலேயே கூறிவிட்டதால் நான்
> எதுவும் நடுவில் புகுர விரும்பவில்லை. அப்புறம் எழுதமாட்டேன் போ
> என்று கோபித்துக்கொண்டு விடுவார். இருந்தாலும் ஸ்ரீமணவாள
> மாமுனிகளோடு ஆசார்ய கோஷ்டியை நிறைவு படுத்துதல் ஸத் ஸம்ப்ரதாய
> பந்தா.
>
> இருந்தாலும் நல்ல முயற்சி.
>
> On 11/10/09, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > ஆசார்ய மாமுனியை பட்டியலில் காணோமே?
>
> > அவர் திருவடி சம்பந்தத்தால் பின்னால் வந்தோரையும்,
> > அவரது திருமுடி சம்பந்தத்தால் அவர்க்கு முன் தோன்றியோரையும்
> > உய்யக்கொண்ட எம்பெருமானார் எங்கே?
>
> > க.>
>
> > 2009/11/10 devoo <rde...@gmail.com>:
> > > ஆசார்ய பரம்பரை
>
> > > ஸ்ரீ நாத முனிகள் (824-924 AD )
> > > உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ( 826-931AD )
> > > மணக்கால் நம்பி (ராம மிச்ரர்) ( 832-937AD )
> > > ஆளவந்தார் (யாமுனாசர்யர்) ( 916-1041 AD )
>
> > ????
>
> > > பெரிய நம்பி ( 1017-1317 AD )
> > > கூரத்தாழ்வான் (1010-1116 AD)
> > > திருக்குருகைப் பிரான் பிள்ளான் (1026-1131 AD )
> > > கிடாம்பி ஆச்சான் ( 1057-1157AD )
> > > பராசர பட்டர் ( b1074AD )
> > > எங்கள் ஆழ்வான் (விஷ்ணு சித்தர்)( 1106-1206 AD )
> > > நம்பிள்ளை (1147– 1252AD)
> > > நடாதூர் அம்மாள்(வாத்ஸ்ய வரதர்) (1165-1275 AD )
> > > பெரியவாச்சான் பிள்ளை (க்ருஷ்ண ஸூரி) (1167-1262 AD)
> > > வடக்குத் திருவீதிப் பிள்ளை ( 1167-1264 AD )
> > > பிள்ளை லோகாசார்யர் ( b 1264 AD)- Hide quoted text -
>
> - Show quoted text -
எம்பெருமானாருக்காக உருகுகிறீர் பாரும்! அதுதான் உண்மையான வைஷ்ணவ லக்ஷணம்.
எம்பெருமானாரின் பிரபாவத்தைச் சொல்லும் போது சும்மா பால்காரக் கிழவிக்கு
ஓலை கொடுத்து வைகுந்தம் அனுப்பினார் என்போம். ஆனால் அவரோ திருகோஷ்டியூர்
நம்பி சொன்னது பலித்தாலும் பலிக்கலாமென்று கூரத்தாழ்வான் சகாயத்தால்
தமக்கு பரமபதம் கிடைக்கும் என்று காஞ்சியில் சொன்ன வைபவம் ஒன்றுண்டு
(முழுக்கதை மறந்துவிட்டது).
எம்பெருமானார் நிச்சயமாக உருகிப்போயிருப்பார். அவர் தயையின் இருப்பிடம் அல்லவோ!
தேவ்ஜி இதைத்தொட வேண்டும்! செவிக்கினியன செங்கண்மால் கதைகள்!
க.>
2009/12/1 Kumaran Malli <kumara...@gmail.com>:
ப்ரம்ம வித்யையைப் பொதுவுடைமை ஆக்கினார் பெரும்பூதூர் வந்த வள்ளல்.
பொது இழையான இதில் அடியேனிலும் விவரமறிந்தோர் பங்கேற்கலாம்.
வைகறை பகலாக ஒளிரும்.அடியேனும் ஏதோ எழுதுவேன்.
குமரன் அவர்கள் குறிப்பிடும் ஐயங்கள் அடியேனிடமும் உண்டு.
//பிள்ளை உலகாரியரும் வேதாந்த தேசிகனும் ஒரே காலத்தவர் போல் தோன்றுகிறது.
இவர்கள் காலத்தில் தான் திருவரங்கத்திற்கும் காஞ்சிபுரத்திற்கும் வாதப்
பிரதிவாதங்கள் நடந்தனவா?//
ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும்; ஸ்வாமி தேசிகன் உபாயாநுஷ்டாந
விஷயத்திலும்,
பிராட்டியார் விஷயத்தில் தம் பக்ஷத்திலுள்ள நியாயங்களை விசதமாகக்
கூறியுள்ளதிலிருந்து இது உறுதியாகிறது. கலாப சமயத்தில் இருவரும்
திருவரங்கத்தில் இருந்துள்ளனர். பிள்ளை லோகாசார்யர்
தென்திசையிலும், தேசிகன் மேற்கிலுமாகத் தப்பியிருக்க வேண்டும். ஸுதர்சந
ஸூரி உயிரிழந்தார்;
இவர் ச்ருத ப்ரகாசிகையின் ஆசிரியர்.
தேவ்
லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே |
ஸம்ஸார போகிஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ||
பிள்ளை லோகாசார்யர் 1205 ல் ஐப்பசி மாதம் திருவோண நாளில் காஞ்சி வரதராஜப்
பெருமாளின் அம்சமாக அவதரித்தார்.
‘உலகாரியன்’ என்னும் திருநாமம் முதலியாண்டானின் வமிசத்தவரான கந்தாடைத்
தோழப்பரால் நம்பிள்ளைக்குப் பரிவுடன் ஒரு ஸந்தர்பத்தில்
அளிக்கப்பட்டதாகும் (கந்தாடைத் தோழப்பர் தம் உகப்பால் “என்ன உலகாரியனோ”
என்றுரைக்க..) நம்பிள்ளைகளின் சீடரான வடக்குத் திருவீதிப்பிள்ளை ஆசார்ய
பக்தியால் அதையே ‘ லோகாசார்யன்’ என்று தம் மூத்த குமாரருக்குச்
சூட்டினார்; இவருடைய இளைய குமாரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
கலாப சமயத்தில் லோகாசார்யரின் தலைமையில் அழகியமணவாளனோடு ஒரு குழாம்
தப்பியது.
ஜோதிஷ்குடி என்ற சிற்றூரில் இவர் பரமபதம் அடைந்தார்.இது நிகழ்ந்தது
1311ல்; அப்போது இவரது வயது 106. அழகிய மணவாளனை மீண்டும் கோயிலில்
எழுந்தருளச் செய்வதற்கு மதுரை அரசில் பதவி வகித்த திருமலை ஆழ்வாரின்
(ஸ்ரீசைலேசர்) உதவியை நாடுமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்திவிட்டு இவர்
உயிர் துறந்தார்.
இவர் அருளிய க்ரந்தங்கள் –
தனிப்ரணவம், தனித்வயம், தனிசரமம், பரந்தபடி, ச்ரிய:பதிப்படி,
யாத்ருச்சிகப்படி, முமுக்ஷுப்படி, ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ஸாரஸங்க்ரஹம்,
தத்வத்ரயம், தத்வசேகரம், ப்ரபந்த பரித்ராணம், ப்ரமேய சேகரம்,
அர்ச்சிராதி, அர்த்த பஞ்சகம், நவவித ஸம்பந்தம், நவரத்நமாலை,
ஸ்ரீவசனபூஷணம்
இவரது திருவடிகளில் கூரகுலோத்தம தாஸர், மணப்பாக்கத்து நம்பி,
கொல்லிகாவல தாஸர், கோட்டூரிலண்ணர், திருமலையாழ்வார், விளாஞ்சோலைப்
பிள்ளை, திருமலையாழ்வாரின் திருத்தாயார் முதலான பலரும்
ஆச்ரயித்திருந்தனர்.
முற்காலத்தில் மிக ஏகாந்தமாயிருந்த காட்டழகியசிங்கர் ஆலயத்தில் இவர்
காலக்ஷேபம் ஸாதித்து வந்ததாகக் கூறுவர்.
(லோகாசார்யரின் தனியனிலிருந்து இவர்தம் தந்தையாரான வடக்குத் திருவீதிப்
பிள்ளையின் இயற்பெயர் க்ருஷ்ண தாஸர் என்று தெரிகிறது; கூடுமானவரை
ஆசார்யர்களின் பெயரைக் கூறாமல் ஊர்ப்பெயர், உறைவிடம் இவற்றை ஒட்டிச்
சுட்டும் மரபையும் தெரிந்து கொள்கிறோம்.
’ஆசார்ய பரம்பரை’ தலைப்பில் கொடுக்கப்பட்ட *பிள்ளை லோகாசார்யர் ( b 1264
AD)* என்னும் தகவல் தவறு; முனைவர் கண்ணன் கொடுத்த ஆண்டு சரியானது)
தேவ்
இவர் அருளிய க்ரந்தங்கள் –
தனிப்ரணவம், தனித்வயம், தனிசரமம்,
பரந்தபடி, ச்ரிய:பதிப்படி, யாத்ருச்சிகப்படி,
முமுக்ஷுப்படி, ஸம்ஸார ஸாம்ராஜ்யம், ஸாரஸங்க்ரஹம்,
தத்வத்ரயம், தத்வசேகரம், *ப்ரபந்த பரித்ராணம்* ,
ப்ரமேய சேகரம், அர்ச்சிராதி, அர்த்த பஞ்சகம்,
நவவித ஸம்பந்தம், நவரத்நமாலை, ஸ்ரீவசனபூஷணம்
இவை மொத்தம் 18 க்ரந்தங்கள்; ’அஷ்டாதச ரஹஸ்யம்’
என்று கூறுவர். புத்தகம் கிடைக்குமிடம் –
ஸ்ரீரங்க நாச்சியார் அச்சகம்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
214, கீழ உத்தர வீதி
ஸ்ரீரங்கம்
திருச்சி – 6
*ப்ரபந்ந பரித்ராணம்* என்றிருக்க வேண்டும்; ப்ரபந்த பரித்ராணம்
எழுத்துப் பிழை.
தேவ்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மோகனரங்கன் ஐயா,
மாமுனிகள் சன்னிதி எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். கட்டாயம் செல்வேன். நான் ஏற்கனவே சென்றிருக்கிறேனா என்று சட்டென்று நினைவிற்கு வரவில்லை. தாயார் திருமுன் இருக்கும் தேசிகன் சன்னிதிக்குச் சென்ற நினைவிருக்கிறது.
புத்தூர் சுவாமிகளின் நூல்கள் பலவற்றைப் படித்திருந்தாலும் புத்தூர் அக்ரஹாரம் சென்றதில்லை. இந்த முறை சில புத்தகங்களைப் பற்றி திருவரங்கத்தில் விசாரித்த போது புத்தூர் அக்ரஹாரம் சென்று கேட்கும்படி சொன்னார்கள். நேரமில்லாததால் செல்ல முடியவில்லை.
2010 ஜூன் ஜூலை இந்தியாவிற்கு வரும் திட்டம் இருக்கிறது. அப்போது திருவரங்கத்திற்குக் 'கூப்பிட்டால் போகும்' ஆசை இருக்கிறது.
அன்பன்,
குமரன்.
--
தேவ்
On Dec 16, 10:46 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> On 12/16/09, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
>
>
>
> > மோகனரங்கன் ஐயா,
>
> > மாமுனிகள் சன்னிதி எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். கட்டாயம் செல்வேன்.
> > நான் ஏற்கனவே சென்றிருக்கிறேனா என்று சட்டென்று நினைவிற்கு வரவில்லை. தாயார்
> > திருமுன் இருக்கும் தேசிகன் சன்னிதிக்குச் சென்ற நினைவிருக்கிறது.
>
> > புத்தூர் சுவாமிகளின் நூல்கள் பலவற்றைப் படித்திருந்தாலும் புத்தூர் அக்ரஹாரம்
> > சென்றதில்லை. இந்த முறை சில புத்தகங்களைப் பற்றி திருவரங்கத்தில் விசாரித்த
> > போது புத்தூர் அக்ரஹாரம் சென்று கேட்கும்படி சொன்னார்கள். நேரமில்லாததால் செல்ல
> > முடியவில்லை.
>
> > 2010 ஜூன் ஜூலை இந்தியாவிற்கு வரும் திட்டம் இருக்கிறது. அப்போது
> > திருவரங்கத்திற்குக் 'கூப்பிட்டால் போகும்' ஆசை இருக்கிறது.
>
> > அன்பன்,
> > குமரன்.
> > 2009/12/15 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
>
> >> குமரன் மல்லியாரே ஸ்ரீரங்கம் சென்றால் முதலில் ஸ்ரீமணவாள
> >> மாமுனிகள் சந்நிதிக்குச் சென்று வணங்குவதைக் கிரமமாக வைத்துக்
> >> கொள்ளுங்கள். புத்தூர் அக்ரஹாரம் சென்று ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனரைச்
> >> சந்திப்பதை ஓர் அங்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இது என்னுடைய
> >> கிரமம். இதற்கான காரணங்கள் கனக்க இருக்கின்றன. தமிழ் வளர்த்த,
> >> வளர்த்துக்கொண்டிருக்கும் குணவாளர்கள் இவர்கள்.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
>
> ...
>
> read more »
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆயின் ஒரு தலைப்பில் ஒருவர் துய்த்து எழுதும் போது வேறொரு துறை பற்றி
எழுதுங்கள் என்று சொல்லுதல் நயமல்ல.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் பல்வேறு தரிசனங்கள் பற்றி எழுத்தச்சொல்லிக் கேட்டு
மாதமாயிற்று. உங்களுக்கு சைவ சித்தாந்தம் பிடித்திருந்தால் அது பற்றி
நீங்கள்தான் எழுத வேண்டும். என்னைக் கேட்டால் (உம்) என்ன தெரியும்? ;_))
இங்கு பௌத்த, ஜீன, வைணவ தரிசனங்கள் வலம்வருகின்றன. பொதுவான ஹிந்து மத
தரிசனம் அடிக்கடி நிகழ்ந்த வண்ணமுள்ளது. நான் கூட திருப்பூவணத்து
புனிதனார் மேல் சில கட்டுரைகள் எழுதினேன். நமக்கு உறவு வேண்டும் முதலில்.
உறவுக்காரர்களைப் பற்றித்தான் எழுதமுடியும்.
உங்களுக்கு ரொம்பச் சொந்தம் சிவபெருமானார் எனில் நீங்கள்தான் அவர்
பற்றிச் சொல்ல வேண்டும். அதுதான் அழகு. ஒண்ணுக்குள் ஒண்ணு என்ற ரீதியில்
;-)
க.>
2009/12/16 தேவங்குடி டிவிசிவம் <gvs...@gmail.com>:
//ஸ்ரீபாஷ்யத்தை ஆழ அகலமாக நெடுகக் கற்ற சதுஸ்சாஸ்திர நிபுணராய்
இருந்தும் தமிழ் வேதத்தையும்,பகவத்விஷயம் என்னும் ஈடு
வியாக்யானத்தையுமே பிரசாரப் படுத்துவதில்
தம்மை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டார்//
மாமுனிகள் அருளியவற்றுள் ’யதிராஜ விம்சதி’,’தேவராஜ மங்களம்’
இரண்டு மட்டுமே வடமொழி நூல்கள் என்று நினைக்கிறேன்;
“அவதாரங்கள் போலே ஸ்வ மாஹாத்ம்யத்தை மறைத்து வைக்குமவர்கள்
பீதி யோக்யரில் ப்ரதாநர்” என ப்ரதாந சதகத்தில் ஸ்வாமி தேசிகன்
அருளிச் செய்ததும் நினைவுக்கு வருகிறது.
தேவ்
இதற்கு என்ன பொருள் ஐயா? குறிப்பாக பீதி யோக்யர் என்றால் யாரைக்
குறிக்கிறது?
அத்தகைய பேராற்றலும்,பேரறிவும் நிறைந்த பரம்பொருள் அறம் காப்பதற்காக
ஆறறிவுடைய பிறவி, அதனினும் குறைந்த அறிவாற்றல் கொண்டது என எந்நின்ற
யோனியுமாய்ப் பிறக்கவும் தயங்குவதில்லை; இது ஓர் அற்புதம். அதோடின்றி்த்
தன் பெருமைகளை வெளிக்காட்டாமல்
சூழற்கைதி போல் நடந்துகொண்டு அமைதியாக, தான் தோன்றியதற்கான நோக்கத்தையும்
நிறைவேற்றிக் கொள்கிறது ; இது மற்றோர் அற்புதம்.
இராமபிரான் அகலிகைக்குப் புது வாழ்வளித்து விட்டு ஏதுமறியாத ஒரு
மாணியைப்போல் அவளை
வலம்வந்து வணங்கி நிற்பதை ராமாயணம் காட்டுகிறது; அமரர்களாலும்,அருந்தவ
முனிவர்களாலும்
செய்ய முடியாததை அவர் பாதஸ்பர்ச மாத்திரத்தால் செய்தார். இராவணனின் மூல
பல சேனையைத் தனி ஓரு ஆளாக நிர்மூலம் செய்யும் அழகைப் பார்க்கும்போது,
இவரா கையாலாகாத ஒரு காட்டுவாசியைப்போல் ஒரு வானரனிடம் உதவி நாடிச்
சென்றவர் என்னும் வியப்பு மேலிடுகிறது.
அவதார புருஷர்கள் என்னும் மாமனிதர்களிடமும் இத்தன்மையின் கூறுகளைக்
காண்கிறோம்;
மணவாள மாமுனிகள், துளஸி தாஸர் போன்றோர் பெரும் புலமை படைத்தவர்கள்.
புலமைக்கு மிகுந்த வரவேற்பிருந்த சூழலில் வாழ்ந்தவர்கள்; ஆற்றல்
இருந்தால் அதை வெளிக்காட்டு்ம்
அரிப்பெடுக்கும்.இந்த ப்ராக்ருத குணத்திற்கு அவர்கள் சற்றும்
இடமளிக்கவில்லை. தன்னை வெளிக்காட்டுதல் அவர்களது நோக்கமாக இருந்ததில்லை;
சமுதாயத்திற்கு இறையுணர்வூட்டி
உய்விப்பதில் முனைந்தனர்; நீறு பூத்த நெருப்பாக வாழ்ந்தனர்.
இது போன்ற மஹான்களிடம் ஒரு ப்ரபந்நன் அபசாரப்படாமல் அஞ்சி மரியாதை காட்ட
வேண்டும் என எச்சரிக்கை செய்கிறார் ஸ்வாமி தேசிகன்.பாகவத அபசாரத்திற்குக்
கழுவாய் இல்லை.
தேவ்
true. a hero will rise (to the occasion).
On Dec 17, 8:06 am, devoo <rde...@gmail.com> wrote:
...
> இராவணனின் மூல
> பல சேனையைத் தனி ஓரு ஆளாக நிர்மூலம் செய்யும் அழகைப் பார்க்கும்போது,
> இவரா கையாலாகாத ஒரு காட்டுவாசியைப்போல் ஒரு வானரனிடம் உதவி நாடிச்
> சென்றவர் என்னும் வியப்பு மேலிடுகிறது.
...
"சித்திரச் சிலைக்கை வீரன்" (?) என்ற வரி நினைவிற்கு வருகிறது. சரியாக
நினைவில் இல்லை. இது கம்பராமாயணம் என்று நினைக்கிறேன். கம்பராமாயணம் தவிர
வேறொரு இராமாயணத்தை நான் படித்ததில்லை. :-)
இராமன் கையில் வில் பிடித்து அம்பு எய்வதைப் போல நின்றிருந்தாராம்.
வில்லிலிருந்து அம்பு செல்வதை போலத் தெரியவில்லை, ஆனால் எதிரி படைகள்
சரிந்து விழுந்தனவாம். பள்ளி ஆசிரியர் இதை விளக்கும் போது விநாடிக்கு 8
அம்புகள் மேல் எய்யும் போதுதான் இது போன்ற ஒரு காட்சியைக் காண முடியும்
என்று கூறினார். எந்த ஒரு காட்சியும் ஒரு விநாடியில் எட்டில் ஒரு பங்கு
நேரம் நம்மால் தொடர்ந்து பார்க்க முடிந்தால் மட்டுமே மூளையால் அதை
உணர்ந்து கொள்ள முடியும்.
மாந்தரிடம் அமைந்திருக்க வேண்டிய தைவ ஸம்பத்துக்களைத் தம்
வாழ்வில் கடைப்பிடித்துக் காட்டிய பின்னர்தான் க்ருஷ்ணாவதாரத்தில்
கீதையெனும் உபதேசம் !
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil