Dyslexia with Tamil words - Need examples

114 views
Skip to first unread message

Mani Manivannan

unread,
Nov 20, 2010, 2:49:17 PM11/20/10
to tamilmanram, tamil_ulagam, அன்புடன், மின்தமிழ், Mani Manivannan
டிஸ்லெக்சியா என்னும் எழுத்துக்குழப்பம் சிலருக்கு இருக்கிறது.  பொதுவாக இந்திய மொழிகளின் எழுத்துகள் ஒலியன் அடிப்படையில் அமைந்திருப்பதால் அத்தகைய குழப்பங்கள் குறைவு.  இந்தக் குழப்பங்கள் இடவல மாற்றங்களாலும் நடப்பவை.  தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் இட வல மாற்றம் ஆனாலும், வேறு எழுத்தோடு குழம்ப வாய்ப்பில்லை.  ஆங்கிலத்தில் b என்ற எழுத்தும் d எழுத்தும் இட வல மாற்றம் நேர்ந்தால் குழம்பிக் கொள்ள நேரிடும்.
 
என்னுடன் படித்தவர்கள் எவருக்கும் இத்தகைய எழுத்துக் குழப்பம் இருந்ததில்லை.  அமெரிக்காவில் இது சற்று கூடுதல்.  ஏனென்றால் ஆங்கிலத்தின் எழுத்து முறை அப்படிப் பட்டது.  ஒலிப்புக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு மேம்போக்கானது (Orthographically shallow).  இந்திய எழுத்துகள் பொதுவாக ஒலிப்புக்கும் எழுத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவை. (Orthographically deep).  ஆனாலும், அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன.  தேவநாகரியில் கூட்டெழுத்துகள் ஏராளம்.  அவை அனைத்தையும் மனனம் செய்வது சற்றுக் கடினம்.  அவற்றிலும் இட வல மாற்றக் குழப்பங்கள் நேரிடலாம்.  தமிழ் எழுத்துகள் பல ஒலியன்களைச் சுட்டக் கூடியவை.  காக்கை, காகம், தங்கம், சென்னை, பச்சை, பசை, இஞ்சி என்ற சொற்களில் க, ச என்ற எழுத்துகளின் ஒலியன்கள் இடத்துக்கு ஏற்றவாறு மாறுபவை.  இதைத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எளிதில் கற்றுக் கொண்டாலும், தமிழை மூன்றாம் மொழியாகக் கற்கும் பிறநாட்டினருக்கு இது குழப்பம் தரும்.  இத் தன்மையால் எழுத்துக் குழப்பமும் வரலாம்.
 
பொதுவாக  Orthographically deep script இருக்கும் மொழியில் Dyslexia குறைவு. Orthographically shallow script உள்ள மொழியில் கூடுதல்.  ஆங்கிலம், இத்தாலிய மொழி இரண்டுக்கும் எழுத்து பொதுவாக இருந்தாலும், இத்தாலிய மொழியில் எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு சற்று நெருக்கமே.  ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் லத்தீன் எழுத்துகளை இரவல் வாங்கியதால் அவற்றில் ஒலிக்கும் எழுத்துக்கும் உள்ள நெருக்கம் குறைவு.  எனவே இவற்றில் எழுத்துகள் Orthographically shallow என்பார்கள்.  அதனால் இத்தாலிய மொழியை விட பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் எழுத்துக் குழப்பம் கூடுதலாக இருக்கும்.
 
தற்போது இந்தியாவில் பல இடங்களிலும் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா நோய் இருப்பதைக் கண்டு பிடித்து அதற்கு ஏற்ற முறைகளில் கற்பிக்க முயன்று வருகிறார்கள்.  அதில் தமிழ்க் குழந்தைகளையும் பிற நாட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டு வருகிறார்கள்.  ஆனால் இத்தகைய ஆராய்ச்சிகளில் இந்தக் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதும்போது எழுத்துக் குழப்பம், டிஸ்லெக்சியா இருக்கிறதா என்று ஆய்பவர்கள் வெகு சிலரே.
 
எம்.ஜி.ஆர். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்த பிறகு, தமிழில் டிஸ்லெக்சியா கூடி இருக்க வேண்டும்.  னை,ணை,லை போன்ற எழுத்துகள் எழுத்துக் குழப்பத்தைக் கொடுப்பவை.  பழைய எழுத்து முறையில் இத்தகைய குழப்பங்கள் வராது.  இது போதாது என்று இன்னும் எழுத்துச் சீர்திருத்தம் செய்தால் குழந்தைகள் கற்பது எளிதாகும் என்பவர்கள், இந்த டிஸ்லெக்சியா பற்றிய ஆராய்ச்சியைப் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
 
இதன் தொடர்பாக, தமிழில் இட வல மாற்ற எழுத்துக் குழப்பங்களைக் காணும்போதெல்லாம் நான் திரட்டத் தொடங்கியுள்ளேன்.
 
இன்று கூட ஒரு கடிதத்தில் தருகிறேன் என்பதற்கு தருகேரீன் என்று ஒருவர் எழுதியிருந்தார்.
 
இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால் எனக்குத் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழகம்.

தாரகை

unread,
Nov 20, 2010, 4:09:47 PM11/20/10
to மின்தமிழ்
காலத்தின் தேவையை அறிந்த மணியான இழை:-)

Dyslexia - defining a learning disability that impairs a person's
ability to read and which can manifest itself as a difficulty with
phonological awareness, phonological decoding, orthographic coding,
auditory short-term memory, and/or rapid naming. ( http://en.wikipedia.org/wiki/Dyslexia
)

Dyslexia - எழுத்துக்குழப்பம் என்பதைவிட சொல்யெழுத்துக்கேடு எனலாம்.

> இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால் எனக்குத் தெரிவித்தால்
> நன்றியுடையவனாக இருப்பேன்.

பரவலாக உள்ளது.

தேவைப்படுமின், அடியேனின் இழைகள் சிலவற்றில் காணலாம்:-)

rajam

unread,
Nov 20, 2010, 4:29:07 PM11/20/10
to mint...@googlegroups.com
//Dyslexia //

ஹ்ம்ம்ம்ம்... இதெ வேறெ எங்கெயோ வேற மாதிரிக் கேட்டமாதிரி இருக்கே, எங்க மொழியியல் வகுப்பில் தொடங்கி:
இந்தக் குழப்பம் எழுத்திலும் பேச்சிலும் உண்டு. எனக்குக் கணினித் தட்டெழுத்தில் பலநேரம் குறுக்கிடும்.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தொடக்கநிலை மென்பொறி நிறுவனத்தில் (startup software company) பணியாற்றியபோது...
தலமை architect (அவருக்குத் தாய்மொழி தமிழ்/ஆங்கிலம் அன்று) "use" என்பதற்குப் பதிலாக "sue" என்று கணினியில் தட்டி எழுதி அது மென்பொருளினூடும் (in software also) இணைந்துவிட்டது. அதைச் சுட்டிக்காட்டியபோது எனக்கு நல்ல வரவேற்பு இல்லவே இல்லை! இதே மாதிரி மில்லியன் (million) என்ற சொல்லையும் அவர் milion என்று மென்பொருளில் பயன்படுத்தியதை நான் சுட்டிக்காட்ட ... நல்ல பெயர் வாங்க முடியவேயில்லை! என்ன செய்ய!
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு!
அன்புடன்,
ராஜம்

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Nov 20, 2010, 5:45:11 PM11/20/10
to mint...@googlegroups.com
பேச்சு மொழியில் இந்த //Dyslexia // என்ற "போக்கு" பழைய ஒரு மொழியிலிருந்து ("பழந்தமிழிலிருந்து"? யாருக்குத் தெரியும்?) சில தெலுங்குச் சொற்களை உருவாக்கியது என்று கேள்வி. சரியோ தப்போ தெரியாது. உண்மை தெரிந்துகொள்ள வேண்டுமானால் திரு திவாகர் போன்றவர் உதவலாம்.
அன்புடன்,
ராஜம்

விஜயராகவன்

unread,
Nov 20, 2010, 5:50:20 PM11/20/10
to மின்தமிழ்
It is difficult to say when an error in writing or speech becomes
something with can be identified as a psychiatric disorder. To call
டிஸ்லெக்சியா an எழுத்துக்குழப்பம் is an oversimplification. The
wikipedia defines it as "Dyslexia is a broad term defining a learning
disability that impairs a person's ability to read,[1] and which can

manifest itself as a difficulty with phonological awareness,
phonological decoding, orthographic coding, auditory short-term
memory, and/or rapid naming."

Perhaps if there is a consistent pattern in a person's speech or
writing errrors - giving due allowance for cultural and environmental
differences , one may establish a syndrome.

The English word barbarian comes from Greek. Greeks called the
surrounding non-Greek speaking people 'barbari' since their language
sounded to them as bar-bar-bar. But this is a simple case of
ethnocentrism on the part of Greeks an not a psychiatric syndrome.
This itself shows the difficulties of disentangling cultural
prejudices from objective phenomena..


Manivannan makes a direct correlation with writing systems - with a
pat on the back. I don't know how valid it is. Is it a case of
ethnocentrism?


In my view, instead of looking for "errors" in writing or speech , we
must concentrate on a single person and see if there is a consistency
- to really find out about this dyslexia

Regards


Vijayaraghavan

தாரகை

unread,
Nov 20, 2010, 6:13:36 PM11/20/10
to மின்தமிழ்
> It is difficult to say when an error in writing or speech becomes
> something which can be identified as a psychiatric disorder

Psychiatric disorder?

Its neither a psychiatric disorder nor an intellectual disability. Its
ONLY an impairment.

> In my view, instead of looking for "errors" in writing or speech , we
> must concentrate on a single person and see if there is a consistency
> - to really find out about this dyslexia

Rather than concentrating on a single person & siding with
discrimination, it would be worthwhile to study the present day
Thamizh ethnic diversion from a very high Thamizh reading population
to a sparse Thamizh reading group(s). What type of (r)evolutionary act
transformed this change?

Hari Krishnan

unread,
Nov 20, 2010, 10:35:43 PM11/20/10
to mint...@googlegroups.com


2010/11/21 Mani Manivannan <mmani...@gmail.com>

இன்று கூட ஒரு கடிதத்தில் தருகிறேன் என்பதற்கு தருகேரீன் என்று ஒருவர் எழுதியிருந்தார்.

வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தட்டச்சு சொல்லித் தருவதிலும், தட்டிய தாள்களைத் திருத்துவதிலும், தட்டச்சுத் தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணியிலும் கழித்தவன் என்பதால், ஒருவர் செய்யும் எழுத்துப் பிழையிலிருந்தே அவர் என்ன முறையைப் பயன்படுத்தித் தட்டுகிறார் என்பது எனக்கு அவருடைய விரலே நேரில் வந்து சாட்சி சொல்வதைப் போலப் பிடிபட்டுவிம்.

தருகேரீன் என்று தட்டியிருப்பதற்குக் காரணம், பயனர், ட்ரான்ஸ்லிடரேஷன் முறையைப் பயன்படுத்துகிறார்.  tha-ru-ki-rEn அல்லது tha-ru-ki-reen என்று தட்டவேண்டிய இடத்தில், tha-ru-kee-riin என்று தட்டியிருக்கிறார்.  தமிழ்த் தட்டச்சு முறையை ஒழித்துக் கட்டவேண்டும் என்று கணேசன் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்.  மணிவண்ணன் அழகாக டிஸ்லெக்சியாவையும் இந்தப் பிழைகளையும் தொடுகோட்டால் இணைத்தார்.

மணி, எனக்கு இன்னமும் (இளம்பருவம் தொடங்கி) டிஸ்லெக்சியாவின் வேறுவிதமான பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. எழுத்தில் ஒருபோதும் இட-வலக் குழப்பம் ஏற்படாது.  அல்லது தட்டுப்பிழை அனேகமாக வெகு குறைவாக இருக்கும்.  இதற்கு என் தட்டுப் பயிற்சியே காரணம்.  ஆனாலும் வண்டி ஓட்டும்போது, பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவி (அலலது நண்பர்) ‘இப்ப வர்ர லெஃப்ட்ல திரும்பணும்’ என்று சொன்னாரானால், நான் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையாகவும், ‘இடது பக்கம்... இடது என்றால் இதோ இந்தக் கை’ என்று மனத்தில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வலதுபக்கம் திரும்பிவிடுவேன்.  இது இன்னமும் தொடர்கிறது.  எனவே என் மனைவிக்கு நான் மோட்டார் சைக்கிள் ஓட்டும் நேரங்களில் ‘இடது பக்கம் திரும்ப வேண்டும்’ என்று சொல்லும்போதே இடது தோளைத் தொடு என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

டிஸ்லெக்சியா பிரச்சினையின் சிறிய அளவு பாதிப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும் நான் தட்டுவதில் ஏன் இவ்வாறு எழுத்துக் குழப்பங்கள் ஏற்படுவதில்லை?  (சில சமயம் சர்க்கரையின் அளவு குறைந்திருக்கும் சமயங்களில் தட்டினால் என் கடிதங்களில் எழுத்துப் பிழைகள் நிறையத் தென்படும்.  மற்றபடி, என் தட்டச்சு குடும்பச் சொத்து.  அதில் பிழை ஏற்படுவது மிகக் குறைவு.

வேண்டுமானால் பிழைபடத் தட்டியிருக்கும் ஒவ்வொரு இடத்தையும் சொல்லுங்கள்.  ஏன், எப்படி, எவ்வாறு தவறு நேர்ந்திருக்கிறது என்பதை விளக்குகிறேன்.  ட்ரான்ஸ்லிடரேஷன் முறையில் தட்டுபவர்களுக்கு இப்படிப்பட்ட மாடுதற்றங்கள்...(அட தடுமாற்றங்களைத்தான் சொல்றேன்) ஏற்படுவது சகஜம்.  பலருடைய கடிதங்களில் ஜூ எல்லாம் ஜீ என்று மாறிவிடுவதைக் காணலாம்.  ஜீன் மாதம், ஜீலை மாதம், ஜீனியர் விகடன் என்றுதான் தட்டுவார்கள்.  இந்த இடத்தில் ட்ரான்ஸ்லிடரேஷன் காரணமில்லை.  There is a lot of a difference in typing juu or jU and jii and jI. though both keys are placed next to each.  இது வடிவக் குழப்பம்.  எழுத்து வடிவத்தை மனத்தில் பதியாததால் ஏற்படும் குழப்பம்.

போதாதற்கு, தட்டச்சு கற்றுக் கொள்வதே below dignity என்ற மனோபாவம் வந்து இருபது வருடங்கள் சென்றுவிட்டன.  தட்டச்சுப் பொறி மட்டுமே இருந்த காலத்திலேயே என்னைப் பார்த்து Why are you doing ladies' job என்று கேட்டவர்கள் நிறைய உண்டு.  இந்த மனோபாவத்தால் ஒருவிரல் கிருஷ்ணாராவ்கள் நிறையப் பேர் தட்டுகிறார்கள்.  ஒருவிரலால் தட்டும்போது இப்படிப்பட்ட மாடுதற்றங்கள் நிறைய ஏற்படுவது சகஜம்.  இதை என் நேரடி அனுபவத்தால் சொல்கிறேன்.  (போறாதுக்கு இந்த ஒருவிரல் கிருஷ்ணாராவ்கள் ‘நான் ஒர்ரே வெரல்ல தட்டினாலும் ஒன்னவிட ஸ்பீடா அடிப்பேனாக்கும்’ என்று பீற்றிக் கொள்வதைக் கேட்டால் சிரிப்பாகத்தான் இருக்கும்.  ஒன்பது விரல் தட்டு முறையின் வேகமும் துல்லியமும் அளவிட முடியாத ஒன்று.  

டிஸ்லெக்சியா பிரச்சினையால் தருகிறேன் தருகேரீன் ஆகும் வாய்ப்பு உண்டு.  ஏனெனில், தட்டிக் கொண்டிருக்கும்போது, எந்த சீக்வென்ஸில் தட்டினோம், அடுத்தது என்ன எழுத்தைத் தட்டவேண்டும் என்பதற்கான மனப் பயிற்சியில் கணநேரப் பிறழ்வு ஏற்படும்.  (எழுதிய பிறகு அதை வாசித்துப் பார்த்துத் திருத்தவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருப்பதில்லை.  அது அவர்களுடைய நேரக் குறைவு என்று கொள்வோம்.)  

தட்டச்சு முறையைக் கற்றுக் கொண்டால், டிஸ்லெக்சியாவின் சின்னக் கூறு இன்னமும் உள்ள என்னைப் போன்றவர்கள்கூட சீராகவும் பிழையின்றியும் தட்ட முடியும்.  டைப்ப்ப்பிஸ்ட் ஆக மனம்தான் தயாராக இருக்கவேண்டும்.  நான் டைப்பிஸ்ட் ஆகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால் தப்பிஸ்ட்டாகவே தொடர வேண்டியதுதான். :))

தொடருங்கள்.  என்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறேன்.  


--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Nov 20, 2010, 10:43:36 PM11/20/10
to mint...@googlegroups.com


2010/11/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

தமிழ்த் தட்டச்சு முறையை ஒழித்துக் கட்டவேண்டும் என்று கணேசன் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்.  

வேண்டுமானால் பார்த்துக்கொண்டே இருங்கள்.  தமிழ்த் தட்டச்சு முறையைக் காட்டிலும் தமிழ்99 முறையே சிறந்தது என்று கணேசனார் வந்து வாதிட்டு நிலைநிறுத்தத்தான் போகிறார்.  இந்த விஷயத்தை அவர் பேசாவிட்டால் ஒன்று என் பெயரைக் கிரிஹருஷ்ணன் என்று மாற்றுங்கள்; அல்லது அவர் பெயரை காந ணகேசன் என்று மாற்றுங்கள். :)))

mmanivannan

unread,
Nov 21, 2010, 1:04:32 AM11/21/10
to மின்தமிழ், mmani...@gmail.com
On Nov 21, 3:50 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> It is difficult to say when an error in writing or speech becomes
> something with can be identified as a psychiatric disorder. To call
> டிஸ்லெக்சியா an எழுத்துக்குழப்பம் is an oversimplification.

அகராதியிலிருந்து:

dys·lex·i·a (ds-lks-)
n.
A learning disorder marked by impairment of the ability to recognize
and comprehend written words.
[New Latin : dys- + Greek lexis, speech (from legein, to speak; see
leg- in Indo-European roots).]

இது உளவியல் நோய் எல்லாம் இல்லை. மூளையில் நம்மில் பலருக்கும் இருக்கும்
ஒரு குறை. இதன் வெளிப்பாடு சொற்களைக் குழப்பி எழுதுவதில்
வெளிப்படுகிறது. இதற்கென்று மருத்துவக் கலைச்சொல் இருக்கிறதா எனத்
தெரியாது. ஆனால், ஆங்கிலச் சொல்லில் இருந்து கருத்தை நேரடியாக வெளிக்
கொணரும் அதே நேரத்தில், இது நோய் என்றோ, வேறு எவ்வாறோ மட்டம் தட்டாமல்
குறிப்பிடுவதற்காக “எழுத்துக் குழப்பம்” என்று குறிப்பிட்டேன். இப்போது
தமிழிலும் “மாற்றுத் திறனாளிக்ள்” என்ற சொல் (alternatively enabled)
பரவிக் கொண்டிருக்கிறது.

> Manivannan makes a direct correlation with writing systems - with a
> pat on the back. I don't know how valid it is. Is it a case of
> ethnocentrism?

அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. எண்ணற்ற
பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நான் புரிந்து கொண்டதைத்தான் நான்
எழுதியிருக்கிறேன். அதனால், நம் எழுத்து முறையைக் கொண்டாடவில்லை.
நீங்கள் கூர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், தேவநாகரியிலும், தமிழிலும்
உள்ள சிக்கல்களையும் சுட்டிக் காட்டி இருக்கிறேன். ஆனால்,
ஆராய்ச்சியாளர்கள் முடிவு என்னவென்றால், ஒலிக்குப் பொருந்தி வரும்
எழுத்துருக்களில், நேர் வடிவங்களில் உள்ள எழுத்துகள் உள்ள மொழிகளில்
டிஸ்லெக்சியாவின் தாக்கம் குறைவு. அந்த நோய் இல்லாமல் இல்லை. ஆனால்,
நோய்க்கு மருந்தாக மொழியின் நேர்வடிவம் அமைந்திருக்கிறது. மொழியில்
எழுத்து, ஆங்கிலம்/பிரெஞ்சு போலக் குறைவடிவத்தில் இருந்தால்,
டிஸ்லெக்சியாவின் தாக்கம் கூடுதலாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இதை
வெகுவாக ஆராய்ந்தே இம்முடிவுக்கு வந்திருக்கின்றனர்.

> In my view, instead of looking for "errors" in writing or speech , we
> must concentrate on a single person and see if there is a consistency
> - to really find out about this dyslexia

எண்ணற்ற பல முறைகளில் ஆராய்ச்சியாளர்கள் இந்த நோயைப் பற்றி ஆய்ந்து
வருகின்றனர். இந்த நோயைக் குணப்படுத்த எழுத்துகளை மாற்ற வேண்டும் என்று
யாரும் சொல்லவில்லை. ஆனால், எழுத்துக் குழப்பம் ஏற்பட எழுத்து
வடிவங்களின் தன்மையும் இடைஞ்சலாக இருக்கிறது என்பது தெரிந்தால், அதற்கு
ஏற்றவாறு குழந்தைக் கல்வி அமைய வேண்டும். இல்லையேல், பள்ளிகளில்
குழந்தைகளை வீணாகத் தொந்தரவு செய்ய நேரிடலாம்.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஒரு பாடமொழியாக மட்டும் இருந்த காலத்தில்
டிஸ்லெக்சியாவின் தாக்கம் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆங்கிலம்
கற்பிக்கும் மொழியாகவும் ஆகிவிட்டதனால், டிஸ்லெக்சியாவின் தாக்கத்தைத்
தமிழ்ப் பெற்றோர்களால் நன்றாகவே உணர முடிகிறது.

சில குழந்தைகளுக்குக் கற்பதில் ஆர்வம் குறைவதும், கற்க முடியாமல்
திணறுவதும், அதனால் பள்ளியை விட்டு விலகுவதும் அன்றாடம் கல்வித்துறை
பார்க்கும் நிகழ்ச்சிகள். இவற்றை ஓரளவுக்காவது புரிந்து கொண்டால்,
குழந்தைக் கல்வியில் இருக்கும் சிக்கல்களைக் குறைக்க முடியும்.

இது இன்னும் முழுமையாகப் புரிபடாத நோய். ஆனால், இதற்கான இடைக்காலத்
தீர்வுகள் இருக்கின்றன. பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை,
மருத்துவர்கள் என்று எல்லோரும் கலந்து செயலாற்ற வேண்டிய துறை இது.
பெருநகரங்களில் இதைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும்,
சிற்றூர்களிலும், பேரூர்களிலும், இதைப் பற்றி அவ்வளவாகத்
தெரிந்திருக்காது.

இதற்கிடையில், குழந்தைகளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று எழுத்தைச்
சீர்திருத்தம் செய்யக் கிளம்புபவர்கள் குட்டையை மேலும் குழப்பிவிடக்
கூடும். அதனால், எழுத்துச் சீர்திருத்தம் செய்கின்ற பேர்வழிகளை இதைப்
பற்றியும் முறையாகக் கள ஆய்வு செய்ய வற்புறுத்த வேண்டும்.

இப்படிக்கு,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழகம்

துரை.ந.உ

unread,
Nov 21, 2010, 1:13:03 AM11/21/10
to mint...@googlegroups.com


2010/11/21 Hari Krishnan <hari.har...@gmail.com>


2010/11/21 Mani Manivannan <mmani...@gmail.com>
 
வண்டி ஓட்டும்போது, பில்லியனில் அமர்ந்திருக்கும் மனைவி (அலலது நண்பர்) ‘இப்ப வர்ர லெஃப்ட்ல திரும்பணும்’ என்று சொன்னாரானால், நான் மிகுந்த கவனமாகவும், எச்சரிக்கையாகவும், ‘இடது பக்கம்... இடது என்றால் இதோ இந்தக் கை’ என்று மனத்தில் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வலதுபக்கம் திரும்பிவிடுவேன்.  இது இன்னமும் தொடர்கிறது.  

எனக்கும் இது உண்டு அய்யா ..:))
 
எனவே என் மனைவிக்கு நான் மோட்டார் சைக்கிள் ஓட்டும் நேரங்களில் ‘இடது பக்கம் திரும்ப வேண்டும்’ என்று சொல்லும்போதே இடது தோளைத் தொடு என்று சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

ஆகா ..அருமையான தீர்வு..
மிகப் பெரிய சிக்கலைத் தீர்த்துள்ளீர்கள் எனக்கு ...
மிகமிக நன்றி 

--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

mmanivannan

unread,
Nov 21, 2010, 1:18:15 AM11/21/10
to மின்தமிழ், Mani Manivannan
அன்பின் ஹரி,

நீங்கள் குறிப்பிட்டது மிகவும் முக்கியமான பார்வை.

நானும் முறையாகத் தட்டச்சு பயின்றவன். வெகுவேகமாத் தட்டச்சிடும்போது
எனக்கும் இட வல மாற்றம் (தட்டச்சில்) ஏற்படும். இடது பக்கத்தில் வர
வேண்டிய எழுத்துக்கு முன்னரே வலது பக்க எழுத்து விழுந்து விடும். எனது
தட்டச்சின்மேல் எனக்கு நம்பிக்கை கூடுதல் என்பதால், பல முறை, நான்
தட்டச்சிட்டதைப் படிக்காமலேயே அனுப்பி விடுவேன்.

இளமைப் பருவத்தில் விழாத இடவல மாற்றப் பிழைகள், அண்மைக்காலத்தில்
அடிக்கடி விழுகின்றன. அதற்கும் சர்க்கரையின் அளவுக்கும் தொடர்பு
இருக்கக்கூடும் என்பது உங்கள் கடிதத்தில் இருந்துதான் தெரிந்து
கொண்டேன்.

இந்த தட்டுப் பிழை வேறு. எழுத்துக் குழப்பம் வேறு.

இடது கைக்காரர்களால் வலது கைக்காரர்கள் உருவாக்கிய உலகில் வாழ்வதில்
சிக்கல்கள் எவ்வளவு இருக்கின்றனவோ, அதே போல்தான் டிஸ்லெக்சியாவால்
நொந்திருக்கும் குழந்தைகள்/பெரியவர்களுக்கும். இதன் முதல் கட்டம், இதை
ஆராய்ச்சி செய்வதே.

டிஸ்லெக்சியா என்று ஒரு நோயைப் பண்டைக்காலத்திலேயே தமிழர்கள் கண்டறிந்து
அதற்கு ஏற்றாற்போல வரிவடிவங்களை அமைத்தார்கள் என்று தம்பட்டம் அடித்துக்
கொள்ள் வருகிறேன் என்று யாரேனும் தவறாக நினைத்துக் கொண்டால், அதற்கு நான்
பொறுப்பல்ல.

பண்டைக் கால மனிதர்கள் நம்மைப் போலவே அறிவுள்ளவர்கள். அவர்கள் சூழலுக்கு
ஏற்றாற்போல அவர்கள் தம் உலகைப் படைத்துக் கொண்டார்கள். உணவே மருந்து,
மருந்தே உணவு என்று அவர்கள் வாழ்ந்தது நமக்கு இன்று வியப்பளிக்கலாம்.

டிஸ்லெக்சியா நோய் எப்போது தோன்றியிருக்கும் என்று ஆய்வாளர்களுக்குத்
தெரியவில்லை. ஆனால், இந்த மூளைநோய், எழுத்துகளை உருவாக்குவதற்கு
முன்பும் இருந்திருக்க வேண்டும். ஆனால், எழுத்து முறை தோன்றிய போது
வெளிப்பட்டிருக்க வேண்டும். நோயைப் புரிந்து கொள்ளாமல், மாணவர்களின்
திறனை மதிப்பிடும் நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை இதனால்
வெகுவாகப் பாதிக்கப் படும்.

நீங்கள் சொல்வது போல் அன்றாட வாழ்வில் இட/வல மாற்றக் குழப்பங்கள்
உள்ளவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோர் இடது
கைப் பழக்கம் உள்ளவர்கள். நீங்களும் இடதுகைப் பழக்கம் உள்ளவரா எனத்


தெரியாது.

உங்கள் குறிப்பிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம், எழுத்துக்குழப்பம்
வேறு, தட்டுப் பிழை வேறு. ஒன்றுக்கு ஒன்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

அப்படியானால், தருகேரீன் என்பது நிச்சயமாகத் தட்டுப்பிழைதான். இது
டிஸ்லெக்சியா இல்லை.

என் தேடல் தொடர்கிறது!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்

சென்னை, தமிழ்நாடு

On Nov 21, 8:35 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/21 Mani Manivannan <mmanivan...@gmail.com>

rajam

unread,
Nov 21, 2010, 1:22:41 AM11/21/10
to mint...@googlegroups.com
"There's a woman behind every successful man" என்று தெரியாமலா சொன்னார்கள்!! :-) :-) :-)


Nagarajan Vadivel

unread,
Nov 21, 2010, 3:34:51 AM11/21/10
to mint...@googlegroups.com
இப்ப எல்லாம் சென்னையில் நிறையப் பெண்கள் தாங்களே ஸ்கூட்டர் ஓட்டிகளாக மாறிவிட்டனர்
ஆண்கள் பின் சீட்டில் உட்கார்ந்து அடக்க ஒடுக்கமாக வருகிறார்கள்
இப்பெல்லாம் Behind every successful woman one unsuccessful man தான் உண்மை
அப்படியே பெண்கள் பின்னால் இருந்தாலும் எதிப்பக்கம் திரும்பி உட்கார்ந்து அந்த பாவாத்மாவைப் பார்க்காமலே போய்க்கொண்டிருகிறார்கள்
நாகராசன்


2010/11/21 rajam <ra...@earthlink.net>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Nagarajan Vadivel

unread,
Nov 21, 2010, 3:54:04 AM11/21/10
to mint...@googlegroups.com
அன்புடை மணிவண்ணன்
நீங்கள் என்னைக் கொஞ்சம் அச்சமடையச் செய்துவிட்டீர்கள்.  நான் எழுதுவதில் எழுத்துபிழை இருப்பதாகத் தனி மடலிலும் மின் அஞ்சலிலும் சேதி வந்தபோது கொஞ்சம் கலங்கிப் பொயிருதேன்
குறிப்பாக கணேசன் அவர்கள் அவர் பெயரில் மட்டுமாவது ணே சரியாக எழுதுமாறு கடும் குடைச்சல் கொடுக்கிறார்.  இணைய தளங்களிலும் தவறாமல் எழுத்துக்கடவுள் என்ற செட் அப்பில் தாகுதலை ஆரம்பித்துவிட்டார்
இந்த நேரம் பார்த்து நீங்கள் டட்டச்சு செய்யும் என்போன்றொருக்கு இருக்கும் என்று திர்மானித்துவிட்டதுபோல் தோன்றவே கொஞ்சம் பழைய சரக்குகளைத் தோண்டினேன்
நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்குத் தொடர்புடைய ஆய்வுக் குறிப்பு ஒன்று கிடைத்தது

கீழே குறிப்பிட்ட ஆய்வுக் குறிப்பைப் பார்க்கவும்

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/14559203

Most of the research on developmental dyslexia comes from English-speaking countries. However, there is accumulating evidence that learning to read English is harder than learning to read other European orthographies (Seymour, Aro, & Erskine, 2003). These findings therefore suggest the need to determine whether the main English findings concerning dyslexia can be generalized to other European orthographies, all of which have less irregular spelling-to-sound correspondences than English. To do this, we conducted a study with German- and English-speaking children (n=149) in which we investigated a number of theoretically important marker effects of the reading process. The results clearly show that the similarities between dyslexic readers using different orthographies are far bigger than their differences. That is, dyslexics in both countries exhibit a reading speed deficit, a nonword reading deficit that is greater than their word reading deficit, and an extremely slow and serial phonological decoding mechanism. These problems were of similar size across orthographies and persisted even with respect to younger readers that were at the same reading level. Both groups showed that they could process larger orthographic units. However, the use of this information to supplement grapheme-phoneme decoding was not fully efficient for the English dyslexics.
இது தொடர்பான மேலும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளுவேன்
நாகராசன்



2010/11/21 mmanivannan <mmani...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

mmanivannan

unread,
Nov 21, 2010, 4:59:31 AM11/21/10
to மின்தமிழ், mmani...@gmail.com
அன்புள்ள பேரா. நாகராசன்,

உங்கள் குறிப்புகளுக்கு நன்றி. இதையும் இதன் தொடர்புள்ள பல
கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். தமிழ் எழுத்துகளிலும் உள்ள
குழப்பங்களைப் பற்றி அண்ணாமலைப் பல்கலை ஆராய்ச்சியாளர் ஒருவர் ஆராய்ச்சி
செய்து வருகிறார். ஏனைய இந்திய மொழிகளிலும் இந்தக் குழப்பம் இருப்பதும்
தெரியவருகிறது.

இந்திய மொழிகளில் கூட்டெழுத்துகள் கூடுதலான வடிவங்களைக் கொண்டவற்றில்
எழுத்துக் குழப்பம் நேரிடுவது இயல்பே. அதே போல் ஒன்றுக்கு மேற்பட்ட
ஒலிகள் கொண்ட எழுத்துகள் கொண்ட மொழிகளிலும் ஒலிக்குழப்பம் நேரிடலாம்.
தமிழில் ல/ள/ழ, ந/ன/ண, ர/ற குழப்பங்களை எழுத்தில் பார்த்திருக்கிறேன்.
ஆனால், டிஸ்லெக்சியாவுக்குச் சரியான சான்றுகள் தேவை.

உங்கள் கட்டுரைகளில் உள்ள தவறான எழுத்துகளுக்கு ஒலிமுறைத் தட்டெழுத்து
முறையில் உங்களுக்குப் போதிய பயிற்சியில்லாமை காரணமாயிருக்கும் என்று
தோன்றுகிறது. கணேசன் பெயரில் மூன்றாவது க இருப்பதால் அதையும் தட்டெழுத
வேண்டும் என்று கிரந்த எழுத்தை எழுதச் சொன்னாலும் சொல்லுவார். அதைப்
பற்றிக் கவலைப் பட வேண்டாம்!

சொல் திருத்தி ஏதாவது கிடைத்தால் வாங்குங்கள். மற்றபடி டிஸ்லெக்சியா,
நீரிழிவு நோயால் வரும் குழப்பங்கள் இவற்றைப் பற்றிச் சரியான கருத்து
சொல்ல திறமையுள்ள மருத்துவர் ஒருவரால்தான் முடியும்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

On Nov 21, 1:54 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> அன்புடை மணிவண்ணன்
> நீங்கள் என்னைக் கொஞ்சம் அச்சமடையச் செய்துவிட்டீர்கள்.  நான் எழுதுவதில்
> எழுத்துபிழை இருப்பதாகத் தனி மடலிலும் மின் அஞ்சலிலும் சேதி வந்தபோது கொஞ்சம்
> கலங்கிப் பொயிருதேன்
> குறிப்பாக கணேசன் அவர்கள் அவர் பெயரில் மட்டுமாவது ணே சரியாக எழுதுமாறு கடும்
> குடைச்சல் கொடுக்கிறார்.  இணைய தளங்களிலும் தவறாமல் எழுத்துக்கடவுள் என்ற செட்
> அப்பில் தாகுதலை ஆரம்பித்துவிட்டார்
> இந்த நேரம் பார்த்து நீங்கள் டட்டச்சு செய்யும் என்போன்றொருக்கு இருக்கும்
> என்று திர்மானித்துவிட்டதுபோல் தோன்றவே கொஞ்சம் பழைய சரக்குகளைத் தோண்டினேன்
> நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்குத் தொடர்புடைய ஆய்வுக் குறிப்பு ஒன்று

> கிடைத்தது...
>
> read more »

Nagarajan Vadivel

unread,
Nov 21, 2010, 5:11:16 AM11/21/10
to mint...@googlegroups.com
aஅன்புடை மணிவண்ணன் அவர்களே
தங்களின் ஆற்றுப்படுத்தலுக்கு நன்றி.  இன்றுகாலை என்னுடைய அண்ணனிடம் இதுபற்றிப் பேசினேன்.  அவர் பெயர் தங்கராஜன்.  ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் தனித்தமிழ் இயக்கத்தில் இணந்து தன் பெயரைப் பொன்னரசன் என்று மாற்றி வகுப்பில் மட்டும் ஆங்கிலம் பேசும் தன்மை கொண்டவர்
அவரும் நீங்கள் சொன்னதைத் தான சொன்னார்
ஆதியில் இருந்தே உனக்குத் தமிழ் வராது.  அதிலும் அயல்மொழிப் பெண்ணைக் காதலித்துக் கைப்பிடித்து இருந்த தமிழையும் மறந்துவிட்ட உனக்கு வேறென்ன நோய்.  ஒழுங்காய் முறையாய்த் தமிழ்படி.  கணேசன் அவர்கள் உடுமலைப் பக்கம் வரும்போது சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்
தங்களுக்குத் தேவை எனில் மேலும் சில குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளுவேன்.  இங்கே மேலேற்றம் செய்யும் முறை பிடிபடவில்லை
எனினும் ஒரு கோப்பை அனுப்பியிருக்கிறேன்
நன்றி
நாகராசன்

2010/11/21 mmanivannan <mmani...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
aquniversal.ppt

விஜயராகவன்

unread,
Nov 21, 2010, 5:24:17 AM11/21/10
to மின்தமிழ்
On Nov 21, 11:11 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> பேசினேன்.  அவர் பெயர் தங்கராஜன்.  ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு
> பெற்றவர் தனித்தமிழ் இயக்கத்தில் இணந்து தன் பெயரைப் பொன்னரசன் என்று மாற்றி

தங்கம் என்பதே சுத்தத்தமிழ் தானே? அரசன் `ராஜன்` என்பதன் பிராகிரித்
வடிவம்.

விஜயராகவன்

Nagarajan Vadivel

unread,
Nov 21, 2010, 5:27:19 AM11/21/10
to mint...@googlegroups.com
எங்காவது தனித்தமிழ் இயக்கத்தாருடன் பேசி ஒத்த கருத்தை உருவாக்க முடியுமா என்ன.
கிரந்தம் பற்றிப் பேசுவதற்குமுன் தற்காப்புக்குக் கேடயம் எடுத்துக்கொண்டு செல்லலாம் என்றிருக்கிறேன்
நாகராசன்


2010/11/21 விஜயராகவன் <vij...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Nov 22, 2010, 7:56:27 AM11/22/10
to மின்தமிழ்
>>> இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால்..<<<

*செயய்* முடிந்தால் அதுவும் நல்ல முயற்சியாக - ‘வாழ்த்துக்கள்’ இழையில்
சுபா அம்மா.
அவசரத்தில் தட்டெழுதி இருப்பார்; தவறாக எண்ணக் கூடாது.

மதுரை - மருதை; குதிரை - குருதை; சுஜாதா - சுதாஜா
இதுபோல் உச்சரிப்புக் குழப்பத்தையும் தொகுக்கலாம்

தேவ்

On Nov 20, 3:09 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
> காலத்தின் தேவையை அறிந்த மணியான இழை:-)
>
> Dyslexia - defining a learning disability that impairs a person's
> ability to read and which can manifest itself as a difficulty with
> phonological awareness, phonological decoding, orthographic coding,

> auditory short-term memory, and/or rapid naming. (http://en.wikipedia.org/wiki/Dyslexia

N. Ganesan

unread,
Nov 23, 2010, 1:55:59 PM11/23/10
to மின்தமிழ்

தங்கம் சுத்த தமிழா? ஐயமாக இருக்கிறது. பொன் பழந்தமிழ்.
பொன் துகள்கள் கிடைத்த நதி பொன்னி (கோலார் தங்க சுரங்கம்).
(தூள்கள் தூட்கள் ஆகாமல் இருந்தால் சரி, நாள்கள் நாட்கள்
ஓரிரு இடத்தில் விதிவிலக்கு.)

தங்கம் மலாய் சொல் என்று எங்கோ படித்த நினைவு.
சொர்ணபூமி மலாயாவில் இருந்து தமிழர் இறக்குமதிகளில்
ஒன்றாக இருந்ததா? ரெ. கா. போன்றோரைக் கேட்கணும்,
தங்கம் எங்கிருந்து வந்த சொல் என.

நா. கணேசன்

Subashini Tremmel

unread,
Nov 23, 2010, 2:37:12 PM11/23/10
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram


2010/11/23 N. Ganesan naa.g...@gmail.com


...
 
 
தங்கம் மலாய் சொல் என்று எங்கோ படித்த நினைவு.
 
emas  என்பது தங்கம் என மலாய் மொழியில் பொருள்படும்.
உதாரணமாக rantai emas என்பது தங்கச் சங்கிலி என்று பொருள்படும். இங்கு  rantai  என்பது சங்கிலி என்பதாகும்.
"தங்கம்" என்ற  சொல் எனக்குத் தெரிந்து மலாய் மொழியில்  இந்த பொருளில் இல்லை.
ஸ்வர்ணபூமி - Swarna Bumi  என்பது முன்னர், அதாவது 12, 13ம் நூற்றாண்டு வாக்கில் மலாயா இந்தோனீசீயா ஆகிய நாடுகளை குறிக்க பயன்படுத்தப்பட்ட பெயர்.
 
-சுபா
 
 
சொர்ணபூமி மலாயாவில் இருந்து தமிழர் இறக்குமதிகளில்
ஒன்றாக இருந்ததா? ரெ. கா. போன்றோரைக் கேட்கணும்,
தங்கம் எங்கிருந்து வந்த சொல் என.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 23, 2010, 3:02:15 PM11/23/10
to மின்தமிழ்

On Nov 23, 1:37 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> emas  என்பது தங்கம் என மலாய் மொழியில் பொருள்படும்.

Any connection with hema (Skt.)?

Hari Krishnan

unread,
Nov 23, 2010, 9:15:45 PM11/23/10
to mint...@googlegroups.com


2010/11/24 N. Ganesan <naa.g...@gmail.com>

தங்கம் சுத்த தமிழா? ஐயமாக இருக்கிறது. பொன் பழந்தமிழ்.
பொன் துகள்கள் கிடைத்த நதி பொன்னி (கோலார் தங்க சுரங்கம்).
(தூள்கள் தூட்கள் ஆகாமல் இருந்தால் சரி, நாள்கள் நாட்கள்
ஓரிரு இடத்தில் விதிவிலக்கு.)

இடைக்கால இலக்கிய ஆட்சி இருக்கிறது.  

இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி.......

மாதங்கம் என்றேன், யாம் வாழ்ந்தேம் என்றாள்

என்ற ராமசந்திர கவிராயர் பாடலில் உள்ள மாதங்கம் என்பதன் சிலேடை (யானை, பெரிய அளவில் தங்கம்) இச்சொல் இடைக்காலத் தமிழில் சரளமான புழக்கத்திலிருந்தது என்பதற்குச் சான்று.  This is only a quick response.  I quoted what struck my mind first.  இன்னும் கொஞ்சம் முனைந்து யோசித்து, தேடினால் தங்கம் எங்கெல்லாம் தென்படுகிறது என்பதனை அறியலாம்.

சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூ நதமென
ஓங்கிய கொள்கையின் பொலந்தெரி மாக்கள் 
கலங்கஞ ரொழித்தாங்கு இலங்குகொடி யெடுக்கும் 
நலங்கிளர் வீதியும் 

என்று சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் தங்கத்தைப் பற்றிய குறிப்பும் உடனடியாக நினைவுக்கு வருகிறது. 

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூனதம் என்று பொன்னில் நான்குவகை என்பார் இளங்கோ.  ஆனால் இந்த நான்கு பெயர்கள் வேற்றுமொழியிலிருந்து கிளைத்தன போன்று தோன்றுகிறது.  கிளிச்சிறை என்பது முழுத்தமிழாக தொனித்தாலும், மற்ற மூன்றும் அவ்வாறு தொனிக்கவில்லை.  இதை அறிஞர்கள்தாம் உறுதி செய்யவேண்டும்.

பொன் என்ற சொல் (ஆடகம் என்பதைப் போலவே) சங்ககாலம் தொட்டு வழக்கில் இருப்பினும், பொன் என்பது தங்கத்தை மட்டுமே குறித்த சொல்லன்று.  பொன் என்றால் இரும்பு என்றும் பொருள் உண்டு.

வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கிற் றற்று

என்ற குறளிலுள்ள தூண்டிற்பொன் என்பதற்கு, தூண்டிலாகிய இரும்பை என்று பொருள்.  

ஆகவே, ஸர்ஃப் எக்செல் தமிழர்கள்தாம் எந்தப் பெயரில் தங்கம் சுத்தத் தமிழில் அழைக்கப்பட்டது என்று சொல்லவேண்டும்.  சொல்றீங்களா சுத்தத் தமிழ் ஐயா?  (நகைக்குறி இடலாம் என்று நினைத்தேன்.  அதுக்கு வேற நீங்க கோச்சுக்கப் போறீங்கன்னு உட்டுட்டேன்.  தங்கம் இருக்கும் இடத்தில் நகைக்கா பஞ்சம்.....தங்கமா நகைங்க...)

Hari Krishnan

unread,
Nov 23, 2010, 10:07:22 PM11/23/10
to mint...@googlegroups.com


2010/11/24 N. Ganesan <naa.g...@gmail.com>

(தூள்கள் தூட்கள் ஆகாமல் இருந்தால் சரி, நாள்கள் நாட்கள்
ஓரிரு இடத்தில் விதிவிலக்கு.)

எது விதி, எது விலக்கு என்பதெல்லாம் இலக்கண நூல்கள் (நூல்கள், நூற்கள் ஆகாமல் இருந்தால் சரி,)  சொல்லவேண்டிய விஷயமுங்க.  

லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவும் இடைவரி னியல்பும்
ஆகும் இருவழி யானு மென்ப

அப்படிங்கற நன்னூல் சூத்திரத்துக்குக் கொஞ்சம் பொருள் சொல்லி விளக்கறீங்களா அய்யா?  

எல்லாம் விதி!  இல்ல!  (நகைக்குறி நகைக்குறி.....)

karthi

unread,
Nov 23, 2010, 11:33:38 PM11/23/10
to mint...@googlegroups.com
"தங்கம் மலாய் சொல் என்று எங்கோ படித்த நினைவு"

இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதில்லை.
தங்கத்திற்கு இப்போது வழங்கும் மலாய்ச் சொல் "மாஸ்".
emas என எழுதப்படும். e ஒலிக்காது.

ரெ.கா.


----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
To: "மின்தமிழ்" <mint...@googlegroups.com>
Sent: Wednesday, November 24, 2010 2:55 AM
Subject: [MinTamil] Re: Dyslexia with Tamil words - Need examples


>
>
> On Nov 21, 4:24 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>> On Nov 21, 11:11 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>> wrote:
>>
>> > பேசினேன். அவர் பெயர் தங்கராஜன். ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு
>> > பெற்றவர் தனித்தமிழ் இயக்கத்தில் இணந்து தன் பெயரைப் பொன்னரசன் என்று
>> > மாற்றி
>>
>> தங்கம்என்பதே சுத்தத்தமிழ் தானே? அரசன் `ராஜன்` என்பதன் பிராகிரித்
>> வடிவம்.
>>
>> விஜயராகவன்
>
> தங்கம் சுத்த தமிழா? ஐயமாக இருக்கிறது. பொன் பழந்தமிழ்.
> பொன் துகள்கள் கிடைத்த நதி பொன்னி (கோலார் தங்க சுரங்கம்).
> (தூள்கள் தூட்கள் ஆகாமல் இருந்தால் சரி, நாள்கள் நாட்கள்
> ஓரிரு இடத்தில் விதிவிலக்கு.)
>

> .
> சொர்ணபூமி மலாயாவில் இருந்து தமிழர் இறக்குமதிகளில்
> ஒன்றாக இருந்ததா? ரெ. கா. போன்றோரைக் கேட்கணும்,
> தங்கம் எங்கிருந்து வந்த சொல் என.
>
> நா. கணேசன்
>

N. Ganesan

unread,
Nov 24, 2010, 6:38:35 AM11/24/10
to மின்தமிழ்

On Nov 23, 8:15 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> இடைக்கால இலக்கிய ஆட்சி இருக்கிறது.
>
> இம்பர்வான் எல்லை இராமனையே பாடி
> என்கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி.......
>
> மாதங்கம் என்றேன், யாம் வாழ்ந்தேம் என்றாள்
>
> என்ற ராமசந்திர கவிராயர் பாடலில் உள்ள மாதங்கம் என்பதன் சிலேடை (யானை, பெரிய
> அளவில் தங்கம்) இச்சொல் இடைக்காலத் தமிழில் சரளமான புழக்கத்திலிருந்தது
> என்பதற்குச் சான்று.  

அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடல்.
ராமச்சந்திரக் கவிராயர் பிரிட்டிஷாருக்கு
ஆங்கிலம் கற்பித்தவர். அவருக்கு 200 வருஷம் முன்னர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 24, 2010, 7:21:35 AM11/24/10
to மின்தமிழ்

On Nov 23, 10:33 pm, "karthi" <karthige...@gmail.com> wrote:
> "தங்கம் மலாய் சொல் என்று எங்கோ படித்த நினைவு"
>
> இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதில்லை.
> தங்கத்திற்கு இப்போது வழங்கும் மலாய்ச் சொல் "மாஸ்".
> emas என எழுதப்படும். e ஒலிக்காது.
>
> ரெ.கா.
>

நன்றி, ரெ. கா.

emas என்ற சொல் வடசொல் hema - தொடர்புண்டா?

--------

பொன்னாசாரியை தட்டார் என்கிறோம்.
டங்கசாலை - தங்க சாலை என்கிறது சென்னை அகராதி.
டங், டங் என்னும் ஒலிச்சொல் தங்கம் என மெலிந்ததோ?
தக்கது என்றால் தகுதி மிக்க உலோகம்,
பொன்னில் (அதாவது உலோகங்களில்) தக்கது
எனக் காட்ட தங்கம் என்று இரண்டாம் எழுத்து மெலிந்ததோ?
(உ-ம்: நக்கு: நங்கு பார்த்தல். தக்கம்: தங்கம், பக்கம் :பங்கு )

நா. கணேசன்

Subashini Tremmel

unread,
Dec 1, 2010, 3:41:02 PM12/1/10
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

திரு.கணேசன்,
 
ஸ்வர்ணபூமி என்ற சொல் தொடர்பாக ஒரு வரைபடம் இணைத்திருக்கின்றேன். ஸ்வர்ணபூமி என்பது மலேசியா, இந்தோனியாவின் ஜாவா சுமத்திரா தீவுகளை உள்ளடக்கி இருப்பதைக் காணலாம்.
 
அதில் ஜாவா தீவில் உள்ள Borobudur என்னும் பகுதி தான் மிகப்பெரிய புத்த/ஹிந்து கோயிலான 9ம் நூற்றாண்டு போரபுடுர் கோவிலைக் குறிப்பது.  புத்த வழிபாடே மிகுந்திருந்த ஆலயட்தில் சிவன், நந்தி சிலைகள் மற்றும் பல தகவல்களையும் இந்த பக்கத்தில் காணலாம். http://www.borobudur.tv/prambanan_01.htm
 
இந்த வரை படம் மலேசியாவின் கெடா மானிலத்தில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு அகரழ்வாராய்ச்சி நிலையத்தில் உள்ளது. 2008ல் அங்கு சென்றிருந்த போது நான் பதிவாக்கினேன். அதில் Champa எனக் குறிப்பிடும் பகுதியும் மலேசியா இந்தோனியா பகுதி முழுதும் உள்ளடக்கி இருந்த பேரரசு ஸ்ரீவிஜயா பேரரசு. அதன் தலை நகரமான ஸ்ரீவிஜயா எனும் நகரம் சுமத்திராவில் இருந்தது. இவையெல்லாம் 9ம்/10ம் நூற்றாண்டு நிலை.13ம் 14ம் நூற்றாண்டு இஸ்லாமிய மத மாற்றத்திற்குப் இந்தோனியசியா மலேசியா முழுதுமே இஸ்லாமிய நாடுகளாக மாறின.
 
hindukingdom.jpg

 
 
அன்புடன்
சுபா
 
 
2010/11/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 1, 2010, 8:45:08 PM12/1/10
to mint...@googlegroups.com
I visited the islands.  I understand that there is a place in Java island known as Madura.  I also travelled in the mhakam river upstream in Easr Kalimantan upto the sea mouth. the capital of South Sumatra has been tied to its rivers. It was, after all, the heart of the littoral Sriwijaya Empire. Indeed, it was once called the “Venice of the East.” This sea route was a strategic one both in trade and war.  The Japanese in warfare and the Dutch East India Company used this route,  Any historical information to associate people of madura to Tamilnadu.  madura means sweet as tamil means sweet
Nagarajan

2010/12/2 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Dr M.D.Jayabalan

unread,
Dec 1, 2010, 9:31:43 PM12/1/10
to மின்தமிழ்
எழுத்துப் பிறழ்ச்சி பற்றிய இக் கட்டுரையும் அணுகுமுறையும் மிகவும்
சிறப்பாக உள்ளது; ஏற்றுக் கொள்ளக்கூடிய விதத்திலும் உள்ளது.

எனக்குத் தெரிந்த்வரையில் இது போன்ற பிழைகளைத் தமிழ் கற்கும்
குழந்தைகளிடம் கண்டதில்லை.

ஆனால் எண்களை எழுதும்போது பரவலாகக் காணப்படுகின்றது. படித்தவர்களிடமும்
பெரியவர்களிடமும் இக் குறைபாடு உள்ளது. 16 ஐ 61 என்றோ மாற்றியோ
மதிப்பெண்கள் பட்டியலில் ஆசிரியர்கள் பதிவு செய்வதைக் கண்டு
திருத்தியிருக்கிறேன்.

எம்.டி.ஜெயபாலன்

> இதன் தொடர்பாக, தமிழில் இட வல மாற்ற எழுத்துக் குழப்பங்களைக் காணும்போதெல்லாம்
> நான் திரட்டத் தொடங்கியுள்ளேன்.


>
> இன்று கூட ஒரு கடிதத்தில் தருகிறேன் என்பதற்கு தருகேரீன் என்று ஒருவர்

> எழுதியிருந்தார்.


>
> இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால் எனக்குத் தெரிவித்தால்

> நன்றியுடையவனாக இருப்பேன்.


>
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்

> சென்னை, தமிழகம்.

rajam

unread,
Dec 2, 2010, 12:49:40 AM12/2/10
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நல்ல தகவல்கள், சுபா! நன்றி.
போரபுடுர் கோவிலில் உள்ள துர்க்கைக்கும் திருமாலுக்கும் ஒற்றுமை இருப்பதுபோலத் தெரிகிறது. 
அகத்தியர் சிலை கூட இருக்கிறதே!
இந்தப் படத்தில் கங்கைக்கு அருகில் உள்ள Tamralipti என்ற இடத்துக்கு இப்போது என்ன பெயர்? 
அன்புடன்,
ராஜம்

N. Kannan

unread,
Dec 2, 2010, 4:50:20 AM12/2/10
to mint...@googlegroups.com
2010/12/2 rajam <ra...@earthlink.net>

>
> நல்ல தகவல்கள், சுபா! நன்றி.
> போரபுடுர் கோவிலில் உள்ள துர்க்கைக்கும் திருமாலுக்கும் ஒற்றுமை இருப்பதுபோலத் தெரிகிறது.

அவள் வைஷ்ணவி அல்லது விஷ்ணு துர்க்கை எனப்படுகிறாள்.
மதுரை மீனாட்சியைக் கூட அப்படிச் சொல்வதுண்டு.

க.>

Innamburan Innamburan

unread,
Dec 2, 2010, 5:36:29 AM12/2/10
to mint...@googlegroups.com
எல்லாமே புதிது. 60 வருடங்களுக்கு முன் இந்திய குடியிரிமை கேட்டு வாங்கிய ஆங்கிலேய விஞ்ஞானி ஜே.பீ.எஸ். ஹால்டேன் அவர்களுக்கு , 'நீங்கள் எங்கள் காந்திஜியை புரிந்து கொள்ளவில்லை' என்று மென்மையாகக் கண்டித்து எழுதினேன். கைப்பட தன்னிலை விளக்கம் எழுதிய அந்த சான்றோன், தன் மனைவியை 'வைஷ்ணவி' என்று வர்ணித்தார். இப்போது தான் கொஞ்சம் புரிகிறது.
இன்னம்பூரான் 

2010/12/2 N. Kannan <navan...@gmail.com>

--

rajam

unread,
Dec 2, 2010, 12:33:49 PM12/2/10
to mint...@googlegroups.com, Narayanan Kannan
இழைத் தலைப்பை மாற்றினேன் -- பொருள் கோப்புக்காக...
-------------------------------------------------------------------------
ஆம், எனக்கும் வைஷ்ணவி-மீனாட்சி பற்றிய குறிப்பு நினைவுக்கு வந்தது.
சிலப்பதிகாரத்தில் கொற்றவை பற்றிய விளக்கம் வியப்புத் தரும்.
ஐயை கோட்டத்தில் கொற்றவை வழிபாடு நடக்கிறது.
வேட்டுவ மக்கள் கொற்றவைக் கோலத்தை எப்படி உருவமைத்தார்கள் என்பது சுவையான செய்தி.
அதை விளக்கியெழுதக் கூடுதல் நேரம் தேவை.
இங்கே இப்போது சுருக்கமாக ஒரே ஒரு செய்தி:
கொற்றவையை வழிபடும்போது வேட்டுவர்கள் பாடுவது சிந்தனையைத் தூண்டவேண்டும்!
"ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்து
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் "
["மகிஷாசுர மர்த்தனி" நினைவுக்கு வரவேண்டுமே!]


"வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய் "

"சங்கமும் சக்கரமும் தாமரைக் கை ஏந்தி
செங்கண் அரிமான் சின-விடைமேல் நின்றாயால் "
[திருமால் நினைவு வர வேண்டுமே!]


"கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறை ஏத்தவே நிற்பாய் "
[உமையொருபாகன் நினைவுக்கு வர வேண்டுமே!]

"சங்கரி, அந்தரி, நீலி, சடாமுடி-ச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய் "
[சிவன் நினைவு வரவேண்டுமே!]


"விண்ணோர் அமுது உண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சு உண்டு இருந்து அருள் செய்குவாய்"
["நீலகண்டன்" நினைவுக்கு வரவேண்டுமே]

"மருதின் நடந்து, நின் மாமன் செய் வஞ்ச-
உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய்"
["கண்ணன்" நினைவுக்கு வரவேண்டுமே]

கற்பனை செய்து வாழ்த்தி வணங்கி மகிழவும்!
என் மகிழ்ச்சி எதன் பொருட்டு? முன்னொரு காலத்தில் ... ... ... ஒருவகையான, பிளவில்லாத சமூகச் சூழல் இருந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வதால்.
அன்புடன்,
ராஜம்
 


Innamburan Innamburan

unread,
Dec 2, 2010, 12:41:00 PM12/2/10
to mint...@googlegroups.com
எனக்கு சமாதானமாக இருக்கிறது, இந்த பிளவில்லாத சமூகச்சூழல். அது கிரேக்க
நாட்டில், கிட்ட்தட்ட அந்த கால அளவில் இல்லையெனினும்.

இன்னம்பூரான்

2010/12/2 rajam <ra...@earthlink.net>:

devoo

unread,
Dec 2, 2010, 1:56:56 PM12/2/10
to மின்தமிழ்
>>டங், டங் என்னும் ஒலிச்சொல் தங்கம் என மெலிந்ததோ?<<

டங்க: (tankah) - உளி
டங்கசாலை - உளி பயன்படும் இடம்; தங்க நாணயம் செய்யுமிடம்.
விடங்கர் - உளி கொண்டு செதுக்கப்படாமல் தாமே உருவானவர்


தேவ்

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2010, 12:47:30 AM12/3/10
to mint...@googlegroups.com
இந்தப் படத்தில் கங்கைக்கு அருகில் உள்ள Tamralipti என்ற இடத்துக்கு இப்போது என்ன பெயர்? 
அன்புடன்,
ராஜம்

தாமுளுக் என்ற பெயர்
 
 
Tamluk (Bengali: তমলুক) is the district headquarters of Purba Medinipur district of West Bengal, India. Though there is some controversy, scholars have generally agreed that present day Tamluk is the site of the ancient city variously known as Tamralipta or Tamralipti. The present town is located on the banks of the Rupnarayan River close to the Bay of Bengal.

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2010, 1:01:25 AM12/3/10
to mint...@googlegroups.com

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2010, 1:19:16 AM12/3/10
to mint...@googlegroups.com
For further information visit

http://orissa.gov.in/e-magazine/Journal/Journal2/pdf/ohrj-017.pdf

Nagarajan

http://orissa.gov.in/e-magazine/Journal/Journal2/pdf/ohrj-017.pdf

On Fri, Dec 3, 2010 at 11:17 AM, s.bala subramani B+ve <sunke...@gmail.com> wrote:
--

rajam

unread,
Dec 3, 2010, 1:40:32 AM12/3/10
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel, s.bala subramani B+ve
தலைப்பை மாற்றினேன் -- Dyslexia-வுக்கும் Tamralipti-க்கும் தொடர்பில்லாததால். பொறுத்தருளவும்.
திரு பாலா அவர்களுக்கும் பேராசிரியர்க்கும் நன்றி! கவனமாகப் படித்துப் பார்க்கிறேன்.
அந்த... "தாமுளுக்" என்ற சொல் கொஞ்சம் கவனத்துக்குரியதுதான். நல்ல குறிப்பு.
நான் என்னவோ நான் பொறந்தெ ஊர்லெ ஓடற தாம்ரபரணி பத்திச் சொல்லிட்டாங்க்ளோ-னு நெனச்சென். தப்பு! தப்பு!
மீண்டும் நன்றி.
அன்புடன்,
ராஜம்

Geetha Sambasivam

unread,
Dec 3, 2010, 4:31:24 AM12/3/10
to mint...@googlegroups.com
அருமையா இருக்கு அம்மா.  பாடலை முழுசும் கொடுங்க. சேமிச்சுக்கலாம்.  எப்போப்பாடினது எனக் குறிப்புகளும் கொடுங்களேன்.

2010/12/2 rajam <ra...@earthlink.net>

kalairajan krishnan

unread,
Dec 3, 2010, 5:03:38 AM12/3/10
to mint...@googlegroups.com
அக்கா வணக்கம்

அருமையா இருக்கு அம்மா.  பாடலை முழுசும் கொடுங்க.  எப்போப்பாடினது எனக் குறிப்புகளும் கொடுங்களேன்.

ஆமாம், இப்பாடல்கள் மந்திரங்களுக்குச் சமமான​வை​போல் ​தெரிகிறது,
அன்புடன் முழுப் பாடல்க​ளையும் ​வெளிட ​வேண்டுகி​றேன்,

அன்பன்
கி.கா​ளைராசன்

N. Ganesan

unread,
Dec 3, 2010, 5:44:21 AM12/3/10
to மின்தமிழ்

On Dec 2, 12:56 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >>டங், டங் என்னும் ஒலிச்சொல் தங்கம் என மெலிந்ததோ?<<
>
> டங்க: (tankah)  - உளி
> டங்கசாலை - உளி பயன்படும் இடம்; தங்க நாணயம் செய்யுமிடம்.
> விடங்கர் - உளி கொண்டு செதுக்கப்படாமல் தாமே உருவானவர்
>
> தேவ்
>

ஆம் ஐயா. அதனால் தங்கம்: டங்க என்பதன் தொடர்பு கேட்டேன்.

தக்க(து) : தங்கம். (Cf. கொக்கு:கொங்கு - வளைந்த என்ற
பொருள்)

கொத்து :கொந்து, நத்து : நந்து (இலங்கை வன்னியில்
நந்திக் கடல் இந்த நத்தை தான். ஈழப் போர் ஆர்வம் உடைய
இளைஞர் பலர் இங்கே நந்தி என்றால் சிவன் நந்தி என்று
கருதுவர். அது பிழை.)

நா. கணேசன்

> On Nov 24, 6:21 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Nov 23, 10:33 pm, "karthi" <karthige...@gmail.com> wrote:
>
> > > "தங்கம் மலாய் சொல் என்று எங்கோ படித்த நினைவு"
>
> > > இதுவரை இப்படிக் கேள்விப்பட்டதில்லை.
> > > தங்கத்திற்கு இப்போது வழங்கும் மலாய்ச் சொல் "மாஸ்".
> > > emas என எழுதப்படும். e ஒலிக்காது.
>
> > > ரெ.கா.
>
> > நன்றி, ரெ. கா.
>
> > emas என்ற சொல் வடசொல் hema - தொடர்புண்டா?
>
> > --------
>
> > பொன்னாசாரியை தட்டார் என்கிறோம்.
> > டங்கசாலை - தங்க சாலை என்கிறது சென்னை அகராதி.
> > டங், டங் என்னும் ஒலிச்சொல் தங்கம் என மெலிந்ததோ?
> > தக்கது என்றால் தகுதி மிக்க உலோகம்,
> > பொன்னில் (அதாவது உலோகங்களில்) தக்கது
> > எனக் காட்ட தங்கம் என்று இரண்டாம் எழுத்து மெலிந்ததோ?
> > (உ-ம்: நக்கு: நங்கு பார்த்தல். தக்கம்: தங்கம், பக்கம் :பங்கு )
>

> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Dec 3, 2010, 6:03:50 AM12/3/10
to மின்தமிழ்

On Dec 1, 11:49 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> நல்ல தகவல்கள், சுபா!
>   நன்றி.
>
> போரபுடுர் கோவிலில் உள்ள  
> துர்க்கைக்கும்  
> திருமாலுக்கும் ஒற்றுமை  
> இருப்பதுபோலத் தெரிகிறது.
> அகத்தியர் சிலை கூட  
> இருக்கிறதே!
>

இது போரோபுதூர் அன்று.
போரோபுதூரில் துர்க்கை, விஷ்ணு,
... எல்லாம் இல்லை.
அவர்கள் இருப்பது சிவன் கோயில்
- ப்ரம்பானன்.

போரோ - என்றால் விகாரை.
தந்த்ரயான கட்டிடம்.
ஒரு ‘மண்டலம்’ என்றும்
பேப்பர்கள் உள்ளன.
சுதனன் என்னும் தனவைசிய
இளைஞர் தன் வாழ்க்கையில்
ஆத்மப்ரயாணம் பற்றிய செய்திகள்.
56 என்று நினைக்கிறேன்,
வாழ்க்கையின் எல்லாப் படிநிலைகளிலும்
உள்ள கல்யாண மித்ரர் என்னும்
ஆசான்களை சுதனன் சந்திக்கும்
செய்திகள் புடைச்சிற்பமாக
வடிக்கப்பட்ட இடம் போரோபுதுர்.

அதற்குக் கண்டவ்யூக சூத்திரம்
அடிப்படை. கண்டவ்யூகம்
2-ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில்
மொழிபெயர்த்தாச்சு. அதில் தமிழ்நாட்டின்
பல ஊர்கள் சொல்லப்படுகின்றன.
உ-ம்: கொல்லிப்பாவை - வசுமித்ரா.
போதலா - பொதியில் அவலோகிதன்.
கடலாடு ஐந்நூற்றவரைக் காப்பவன்
etc.,

அஸ்திவாரத்தில் வினையால் அழுந்தும்
நரகம், ... நரகத்தில் என்னென்ன
அனுபவிக்கணும் என்ற சிற்பங்கள்
(மண்ணுள் புதையுண்டு). அவை
கர்ம விபாங்க சூத்திரத்தில் உள்ளவை.

போரோபுதூர் கண்டவியூக சூத்திரத்தின்
கலைப்படைப்பு. நெல்லை பொதியில்
பிறந்தவர் வஜ்ரபோதி. அவர் தாபித்தது
தந்த்ரயானம் என்று சீன இலக்கியங்கள்
சொல்கின்றன. அவரது பிரதம சீடர்
சிங்கள தேசத்தார் (தமிழ் பௌத்தர்?).

பிற பின்,
நா. கணேசன்

> > அன்புடன்
> > சுபா
>

> > 2010/11/23 Subashini Tremmel <ksubash...@gmail.com>
>
> > 2010/11/23 N. Ganesan naa.gane...@gmail.com

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com


> > For more options, visit this group athttp://groups.google.com/
> > group/minTamil
>
> > --

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage  
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you  
> > may like to visit our Muthusom Blogs at: http://

> >www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,  


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to minTamil-

> > unsub...@googlegroups.com


> > For more options, visit this group athttp://groups.google.com/

> > group/minTamil- Hide quoted text -

rajam

unread,
Dec 3, 2010, 12:15:28 PM12/3/10
to mint...@googlegroups.com
இவை எனக்குப் புதிய
செய்திகள். நன்றி, கணேசன்!
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,

rajam

unread,
Dec 4, 2010, 9:23:45 PM12/4/10
to மின்தமிழ், Geetha Sambasivam, kalairajan krishnan
அன்பின் தம்பிக்கும் கீதாவுக்கும் வணக்கம்.

சிலப்பதிகாரக் காலம் என்னவோ அதுதான் இந்தப் பாடலின் காலமும். எனக்கென்னவோ இது தேவார, திருவாசக காலத்துக்கு முன்னால் அல்லது அதே நேரத்தில் ஒரு சிறு குழுவில் ("எயினர்"; 'காட்டு வேடர்கள்' குழுவில்) புழங்கிய வழக்கம் என்று தோன்றுகிறது.

பாடல் முழுமையும் இங்கே. சொற்களைப் பிரித்து எழுதியிருக்கிறேன். எளிய அகராதி உதவியுடன் படித்தாலும் புரியும் என்று நினைக்கிறேன்.
மேற்கொண்டு தேவையானால் எனக்குத் தெரிந்த விளக்கம் தருகிறேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++
("கொற்றவை போற்றுதல்" என்று குறிக்கிறார்கள்)
மதியின் வெண் தோடு சூடும் சென்னி
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து-ப்
பவள வாய்ச்சி, தவள வாள் நகைச்சி

நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து-
அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோய்
துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி

வளையுடைக் கையில் சூலம் ஏந்தி
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலையாட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாள் கொற்றவை

இரண்டு வேறு உருவின் திரண்ட தோள் அவுணன்
தலமிசை நின்ற தையல், பலர் தொழும்
அமர், குமரி, கவுரி, சமரி
சூலி, நீலி, மாலவற்கு இளங்கிளை
ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கை-ப்
பாய்கலை-ப்-பாவை, பைந்தொடி-ப்-பாவை
ஆய்-கலை-ப்-பாவை, அருங்கல-ப்-பாவை 
**********
(இதை "முன்னிலைப் பரவல்" -- 'ஒருவர் முன் நின்று வாழ்த்தல்' -- என்ற பிரிவில் அடக்குகிறார்கள்.)

ஆனை-த்-தோல் போர்த்து-ப் புலியின் உரி உடுத்து
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்

வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய்

வரி வளைக்கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று
கரிய திரி கோட்டு-க் கலைமிசைமேல் நின்றாயால்

அரி அரன் பூமேலோன் அகமலர்மேல் மன்னும்
விரி-கதிர்-அம்-சோதி விளக்கு ஆகியே நீ நிற்பாய்

சங்கமும் சக்கரமும் தாமரைக்-கை ஏந்தி
செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்

கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறை ஏத்தவே நிற்பாய்

**********
(இதை "அவிப்பலி" என்று குறிக்கிறார்கள்.)
சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர் கெட அருளும் நின் இணையடி தொழுதேம்
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது
மிடறு உகு குருதி; கொள் விறல் தரு விலையே
அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு
மணி உருவினை; நின் மலர் அடி தொழுதேம்
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது
நிணன் உகு குருதி; கொள் நிகர் அடு விலையே
துடியொடு சிறு பறை வயிரொடு துவை செய
வெடிபட வருபவர் எயினர்கள் அரை இருள்
அடு புலி அனையவர்; குமரி, நின் அடி தொடு
படு கடன் இது உகு பலி முக மடையே
**********
(இதைப் "பலிக்கொடை" என்று குறிக்கிறார்கள்.)

வம்பலர் பல்கி, வழியும் வளம் படா
அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய்

சங்கரி, அந்தரி, நீலி சடாமுடி-ச்
செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்

துண்ணென் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு
கண்ணில் எயினர் இடு கடன் உண்குவாய்

விண்ணோர் அமுது உண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சு உண்டு, இருந்து, அருள் செய்குவாய்

பொருள் கொண்டு புன்செயின் அல்லதை, யார்க்கும்
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய்

மருதின் நடந்து, நின் மாமன் செய் வஞ்ச
உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய்

+++++++++++++++++++++++++++++++++++++++ 
அன்புடன்
ராஜம்

Innamburan Innamburan

unread,
Dec 4, 2010, 9:27:02 PM12/4/10
to mint...@googlegroups.com
எனக்கு பாடம் கிடைத்தது.
நன்றி, ராஜம்.


2010/12/5 rajam <ra...@earthlink.net>

rajam

unread,
Dec 4, 2010, 10:27:49 PM12/4/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ஓ! மகிழ்ச்சி 'இ' சார்!
//அமர், குமரி, கவுரி, சமரி//
"அமரி" என்று திருத்திக் கொள்ளவும்.
அன்புடன்,
ராஜம்

RAJAGOPALAN APPAN

unread,
Dec 5, 2010, 7:32:38 AM12/5/10
to mint...@googlegroups.com

'மதுரை' என்கிற ஊர்ப் பெயரை 'மருதை' என்று சொல்வதும் எழுதுவதும் உண்டு.
அ.ரா
 
 
2010/11/21 Mani Manivannan <mmani...@gmail.com>
டிஸ்லெக்சியா என்னும் எழுத்துக்குழப்பம் சிலருக்கு இருக்கிறது.  பொதுவாக இந்திய மொழிகளின் எழுத்துகள் ஒலியன் அடிப்படையில் அமைந்திருப்பதால் அத்தகைய குழப்பங்கள் குறைவு.  இந்தக் குழப்பங்கள் இடவல மாற்றங்களாலும் நடப்பவை.  தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் இட வல மாற்றம் ஆனாலும், வேறு எழுத்தோடு குழம்ப வாய்ப்பில்லை.  ஆங்கிலத்தில் b என்ற எழுத்தும் d எழுத்தும் இட வல மாற்றம் நேர்ந்தால் குழம்பிக் கொள்ள நேரிடும்.
 
என்னுடன் படித்தவர்கள் எவருக்கும் இத்தகைய எழுத்துக் குழப்பம் இருந்ததில்லை.  அமெரிக்காவில் இது சற்று கூடுதல்.  ஏனென்றால் ஆங்கிலத்தின் எழுத்து முறை அப்படிப் பட்டது.  ஒலிப்புக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு மேம்போக்கானது (Orthographically shallow).  இந்திய எழுத்துகள் பொதுவாக ஒலிப்புக்கும் எழுத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவை. (Orthographically deep).  ஆனாலும், அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன.  தேவநாகரியில் கூட்டெழுத்துகள் ஏராளம்.  அவை அனைத்தையும் மனனம் செய்வது சற்றுக் கடினம்.  அவற்றிலும் இட வல மாற்றக் குழப்பங்கள் நேரிடலாம்.  தமிழ் எழுத்துகள் பல ஒலியன்களைச் சுட்டக் கூடியவை.  காக்கை, காகம், தங்கம், சென்னை, பச்சை, பசை, இஞ்சி என்ற சொற்களில் க, ச என்ற எழுத்துகளின் ஒலியன்கள் இடத்துக்கு ஏற்றவாறு மாறுபவை.  இதைத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எளிதில் கற்றுக் கொண்டாலும், தமிழை மூன்றாம் மொழியாகக் கற்கும் பிறநாட்டினருக்கு இது குழப்பம் தரும்.  இத் தன்மையால் எழுத்துக் குழப்பமும் வரலாம்.
 
பொதுவாக  Orthographically deep script இருக்கும் மொழியில் Dyslexia குறைவு. Orthographically shallow script உள்ள மொழியில் கூடுதல்.  ஆங்கிலம், இத்தாலிய மொழி இரண்டுக்கும் எழுத்து பொதுவாக இருந்தாலும், இத்தாலிய மொழியில் எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு சற்று நெருக்கமே.  ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் லத்தீன் எழுத்துகளை இரவல் வாங்கியதால் அவற்றில் ஒலிக்கும் எழுத்துக்கும் உள்ள நெருக்கம் குறைவு.  எனவே இவற்றில் எழுத்துகள் Orthographically shallow என்பார்கள்.  அதனால் இத்தாலிய மொழியை விட பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் எழுத்துக் குழப்பம் கூடுதலாக இருக்கும்.
 
தற்போது இந்தியாவில் பல இடங்களிலும் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா நோய் இருப்பதைக் கண்டு பிடித்து அதற்கு ஏற்ற முறைகளில் கற்பிக்க முயன்று வருகிறார்கள்.  அதில் தமிழ்க் குழந்தைகளையும் பிற நாட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டு வருகிறார்கள்.  ஆனால் இத்தகைய ஆராய்ச்சிகளில் இந்தக் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதும்போது எழுத்துக் குழப்பம், டிஸ்லெக்சியா இருக்கிறதா என்று ஆய்பவர்கள் வெகு சிலரே.
 
எம்.ஜி.ஆர். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்த பிறகு, தமிழில் டிஸ்லெக்சியா கூடி இருக்க வேண்டும்.  னை,ணை,லை போன்ற எழுத்துகள் எழுத்துக் குழப்பத்தைக் கொடுப்பவை.  பழைய எழுத்து முறையில் இத்தகைய குழப்பங்கள் வராது.  இது போதாது என்று இன்னும் எழுத்துச் சீர்திருத்தம் செய்தால் குழந்தைகள் கற்பது எளிதாகும் என்பவர்கள், இந்த டிஸ்லெக்சியா பற்றிய ஆராய்ச்சியைப் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
 
இதன் தொடர்பாக, தமிழில் இட வல மாற்ற எழுத்துக் குழப்பங்களைக் காணும்போதெல்லாம் நான் திரட்டத் தொடங்கியுள்ளேன்.
 
இன்று கூட ஒரு கடிதத்தில் தருகிறேன் என்பதற்கு தருகேரீன் என்று ஒருவர் எழுதியிருந்தார்.
 
இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால் எனக்குத் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழகம்.

--
Reply all
Reply to author
Forward
0 new messages