Tamil-English bilingual webmagazine Dedicated to Education of Children. To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software. Bring out the child in you...
8 Words that Most Liars Use - Venkatram Shrinivas
Like never, it depends on how he uses it. If he puts that in front of a noun, like that woman or that money, it's a subconscious attempt for him to distance himself from the word. This is a common trick of manipulators.
EYE DONATION MOVEMENT - Nayanajyothi Jayaraman
OPEN YOUR EYES…MANY COULD SEE THE WORLD! We all have Only One Opportunity to Donate our own eyes. We have many opportunities to reach an EYE DONATION possibility to an EYE BANK. BECOME A SIGHT AMBASSADOR. SUPPORT EYE DONATION MOVEMENT.
ஆசிரியர் தினம் - நடராஜன் கல்பட்டு
ஆ சிறியர் அல்ல அவர் ஆற்றலில் பெரியவர் அவர் அறிவில் சிறியோரும் சிறப்பாய்க் கற்றிடல் வேண்டு மெனும் சீரிய நோக்குடையவ ரவர்
கற்றிடல் வேண்டும் - நடராஜன் கல்பட்டு
“எழுத் தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்பது முது மொழி. எழுத் தறிவித்தவன், அதான் ஆசிரியன், ஒரு மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இது பற்றிய என் சிந்தனைகளை ஒரு கவிதை வடிவில் தர முயற்சித்துள்ளேன்.
Dr. Radhakrishnan Speech - Venkatram Shrinivas
A beautiful speech given by Dr Radhakrishan on the eve of independence day. It echoes what we are still grappling with as a nation. Definitely worth reading for every Indian citizen.srkris2 Dr Radhakrishan in is own words
வ.உ. சிதம்பரனாரின் 141 வது பிறந்தநாள்!
ஆங்கிலேயர்களால் சிறைவைக்கப் பட்டபோது, அவர்களிடம் பணியாமல் இநதிய விடுதலை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயற்பட்டவர். சிறைக்குள் பல இன்னல்களை அனுபவித்த போதும், கொள்கையை மாற்றிக் கொள்ளாது விடுதலைக்கு பாடுபட்ட பலரில் வ.உ.சி யும் ஒருவர்.
திருமணநாள் வைபோகம் - தமிழ்த்தேனீ
திருமழிசை ஆழ்வாரின் அவதாரத் தலம். ஶ்ரீ ஜெகன்னாதர் எழுந்தருளியுள்ள இந்தத் திருமழிசையை மத்திய ஜெகந்நாதம் என்று கூறுவர். பன்னிரு ஆழ்வார்களில் நான்காவது ஆழ்வாராகிய பக்திசாரர் என வழங்கும் அருள்மிகு திருமழிசைப் பிரான் இந்தத் தலத்தின் ஸ்தலாதிபதி.
எங்கே போகுவேன் - நடராஜன் கல்பட்டு
பனி மேலெ நான் இனிமையா வாழ்ந்திருந்தேன் இனியவளோட குடும்பம் நடத்தி புள்ளெ குட்டி பெத்து வந்தேன் இனி நான் எங்கே போகுவேன்
மன்னர்களும் இசையும் - இணையப் பாட்டி
தென் இந்தியாவில் மஹாராஜா திரு ஸ்வாதி திருநாள் அவர்களின் கிருதிகள் அபூர்வமானவை. திருவாங்கூரை ஆண்ட அரசர்கள் பலர் பல பாடல்களை இயற்றினர். அதில் திரு ஸ்வாதிதிருநாள் ஆண்ட காலத்தில் இசை சிகரத்தைத் தொட்டது.
பாரதியின் பாரதத்தாய் - இணையப் பாட்டி
பாரதியார் மிகுந்த தேசபக்தி கொண்டதால் பாரதத்தாயைக் கோயிலில் இருக்கும் அம்பாளைப் போலவே பூஜித்திருக்கிறார்.' அவர் பூஜைக்கு உபயோகித்த மலர்கள் அவரது கவிதைகளே. அவர் பாரதமாதாவுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் தெரிவிக்கும் பல பாடல்கள் இன்றும் உயிர் பெற்று பவனி வருகின்றன.
philosophy website - Achalam
Naama Sankeerthanam helps to evolve oneself through Bhakthi Maarga. Naama Sankeerthanam with musical tunes and thaala Laya elevates one's mind and lifts it upwards and finally culminates in the realisation of the Almighty within us through self-experience.
அந்த நாள் ருசி - தமிழ்த்தேனீ
கிருஷ்ணா ஸ்வீட்ஸ், அடையார் ஆனந்த பவன், சரவணபவன் போன்றோர் அவர்கள் வியாபாரம் செய்து கொழிக்க நம் இல்லத்தரசிகளை சுகவாசியாக மாற்றிவிட்டனர். இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க என் இல்லத்தரசியை ஏதாவது பலகாரம் செய்யேன் என்று வேண்டினேன்.
விக்ன விநாயகா! - தமிழ்த்தேனீ
வேழமுகனே மோதகஹஸ்தனே வித்தைக்கு அதிபதியே! ஆழ உன்னை மனதில் நினைத்தேன் மூப்பு தளை அறுக்கும் முந்தி விநாயகா காப்புகள்பாடித் தோப்புக்கரணம் போட்டுத் துதித்தே வணங்குகின்றேன்
பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துகள்
அதனுடன் கர்நாடக சங்கீத் ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மதுரை மணி ஐயர் பாடியிருக்கும் தமிழ்த் தியாகராஜர் பாபநாசம் சிவன் அவர்களின் ‘தத்வமறிய் தரமா’ பாட்லைக் ‘காபியடித்துப்’ பாடியிருப்பதை தயவு செய்து கீழ்க்கண்ட இணைப்பில் கேளுங்கள்.
விஸ்வரூபம் போல் கணபதி - இணையப் பாட்டி
ஆம், இங்கிருக்கும் முந்தி வினாயகர் என்ற பெயர் கொண்ட கணபதி சுமார் 20 அடி உயரம், சுமார் 12 அடி அகலம், 8 அடி சுற்றளவு, 1 90,000 கிலோ எடை. அப்பாடி! எத்தனைப்பெரிய சிலை!
Mahaganapathy - Grandpa Cheenu
அப்பொழுதுதான் சமீபத்தில் எனது இரண்டாம் மகள் எனக்குப் பரிசளித்த நோகியா மொபைலை வைத்துக் கொண்டு படங்கள் எடுக்க முடியும் என்று. உடனே எனக்குத் தெரிந்த அளவிற்கு 3/4 படங்கள் எடுத்தேன்
சுந்தர காண்டம் - தமிழ்த்தேனீ
சிம்மிகை என்னும் அரக்கி நிழலைப் பற்றி இழுத்தே உணவுகளைத் தன்னகத்தே கொண்டு விடும் மாயக்காரி, அவளையும் தன்னுடைய சாதுர்யத்தாலே அனுமன் அவள் வாயினுள் புகுந்து உள்ளே சென்று பேருருவம் எடுத்து வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியேறினான்.
The CD story - N.V. Subbaraman
அவருடைய அறிவு, பணிவு, பாண்டித்யம், அன்பு, பக்தி, ஆன்மீகக் குணங்கள் அனைத்தும் என்னை ‘காஞ்சி சிந்தனா அமைப்பின் மாதாந்திரக் கூட்டத்தில் “நல்லதோர் வீணை” என்ற தலைப்பில் நான் உரை ஆற்றிய நாள் முதல், என்னைக் கவர்ந்தன; அவரது மானசீக அடிமையாக்கியது.
Nuclear Power plant
D. Raghunandan of the All India Peoples' Science Network argues for an independent review of nuclear safety measures and audit said to be concluded by the Atomic Energy establishment of the Indian government.
Nuclear Energy - Grandpa Cheenu
Chief Minister Jayalalitha has failed to address the concerns of the people in Kudankulam despite the indefinite hunger strike. An accident here will affect all of us. We need to tell the CM that the entire country supports the demands being made by the people in Idinthakarai and Kudankulam village.
Atomic Reactor - Grandpa Cheenu
But the bearded bloke had shot his bolt. He stood there, licked at last; and, watching him closely, I could see that he was now at the crossroads. I could spot what he was thinking as clearly as if he had confided it to my personal ear. He wanted to sit down and call it a day.
Mahatma Gandhi Sayings - Grandpa Cheenu
I am realizing every day that the search for truth is vain unless it is founded upon love. To injure a single human being is to injure those divine powers within us, and thus the harm reaches not only that one human being but with him the whole world.
Lal Bahadur Shastri Biography - Grandpa Cheenu
Played a leading role in Indian freedom struggle; became Parliamentary Secretary of Pandit Govind Vallabh Pant, the then chief minister of Uttar Pradesh; became the Minister of Police and Transport in Pant's Cabinet; appointed as the Railways and Transport Minister in the Central Cabinet;
அக்டோபர் இரண்டு - நடராஜன் கல்பட்டு
இவர்கள் மூவரும் நம் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் செய்த தியாகங்களை இன்று ஒரு நாளாவது மனதில் நினைத்துப் பார்த்து, அவர்கள் கொள்கைகளை நம்மால் முடிந்த அளவு நம் வாழ்க்கையிலும் கடை பிடிக்க முயலுவோமா?
காந்தி ஜெயந்தி உரை - சொ. வினைதீர்த்தான்
அவரது பாடலையும் உரையையும் கேட்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழ் அறிஞர்கள் எங்கெல்லாமோ குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார்கள் என்ற எண்ணம் மிகுந்தது. உரை சில பகுதிகளாகப் பதிவு செய்யப்பட்டது. பிரதி கேட்டுள்ளேன். கிடைத்ததும் பகிர்ந்துகொள்கிறேன்.
IS IT NOT STRANGE? - Parvamani
Isn't it strange how we need to know about an event for the TEMPLE/CHURCH/Gurdwara 2-3 weeks before the day so we can include it in our agenda, but we can adjust it for other events in the last minute?
சகோதரி வருகிறாள் - இணையப் பாட்டி
ஷீரடி பாபா மசூதியில் அமர்ந்திருந்தார். அவருடன் அவருடைய பக்தர் ஒருவரும் உடன் இருந்தார். ஆன்மீக தத்துவங்கள் அங்கு ஊற்றுப்போல் வந்துகொண்டிருக்கின்றன. அப்போது ஒரு பல்லி சுவரின் மேல் ஏறியபடியே 'டிக்டிக்' என ஏதோ சொல்லியது.
பெருமை வாய்ந்த பிள்ளையார் - பிள்ளையார் பாட்டி
திருசெங்காட்டாங்குடியின் பிள்ளையார் கபில வர்ணத்தவர் என முன்பே பார்த்தோம். கஜமுஹாசுரனை பிள்ளையார் சம்ஹாரம் பண்ணியபோது அவனுடைய ரத்தம் முழுதும் அங்கே பாய்ந்ததில் பிள்ளையாரும் பழுப்புச் சிவப்பாக ஆகிவிட்டார் என்பார்கள். இந்தத் தலத்துக்கு கணபதீச்சுரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
யோகாசனப் பயிற்சி 21 - கீதா சாம்பசிவம்
சிறுநீரகக் கோளாறுகள், பித்தப்பைக் கோளாறுகள் நீங்கும். இடுப்பு சிறுத்து வர ஆரம்பிக்கும். வயிறு பெரிதாக இருந்தால் ஒடுங்க ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் தலை தரையைத் தொடும் அளவுக்கு முதுகை வளைக்க முடியாது. ஆகவே ரொம்ப சிரமப் படுத்திக்கொள்ளாமல் இயன்றவரை செய்து வரவும். பின்னால் வளைக்கும்போதும் அப்படியே சிரமம் தெரியும். இயன்றவரை செய்து வந்தால் நாள் ஆக, ஆகப் பழகிவிடும்.
கம்பராமாணம் - அவைடக்கம்
ஓயாத ஒலி கடலுக்கு இயல்பு; ஆதலின் ‘ஓசை பெற்று உயர் பாற்கடல்’ என்றார். தேவருக்கு அமுது ஈந்த சிறப்பைப் பற்றி உயர் பாற்கடல் என்றார் போலும். எளிய பூனை ஆழ்ந்து பரந்த பாற்கடல் முழுவதையும் நக்கிக் குடித்துத்தீர்த்துவிட முடியாது என்பது தெளிவு.
ராமாயணம் - 36 - பிள்ளையார் பாட்டி
பம்பையைக் கடக்கும்போதெல்லாம் மனம் கலங்கிக் கதறி அழுத வண்ணமே ராமர் சென்றார். பார்க்கும் ஒவ்வொரு காட்சியும், பூக்கும் ஒவ்வொரு பூவும், பேசும் ஒவ்வொரு வார்த்தையும், உண்ணும் ஒவ்வொரு கவளமும், குடிக்கும் ஒவ்வொரு துளி நீரும் சீதையை நினைவு படுத்திய வண்ணமாகவே இருந்தது, ராமருக்கு.
ஸ்ரீலலிதைக்கு சோபனம் - 17 - கீதா சாம்பசிவம்
பெண்ணுக்கு உரிமை இல்லை என்பவர்கள் கவனிக்கணும். ஈசன் பதி, அம்பாள் பத்னி என்பதிலும் அம்பாளின் சக்தியால்தான் ஈசன் அசைவே ஏற்படுகிறது. அதாவது அம்பிகையானவள் ஆட்டி வைக்கிறாள். ஈசன் ஆடுகிறார். இதைத் தான் பெண்டாட்டி பேச்சுக்கு ஆடறான் பாருனு சொல்லி இருக்கலாமோ?
பகவத்கீதா சாரம் - அசலம்
நீண்ட நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குதல், வினா, சேவை முதலிய வழிகளைக் கையாண்டால், சத்திய வஸ்துவை அறிந்த புத்திசாலிகள் உனக்கு ஞானமார்கத்தை போதிப்பார்கள்
சங்கர விஜயம் 30 - பிள்ளையார் பாட்டி
இதில் முதல் பாகம் 41 ஸ்லோகங்களும் அம்பிகையைக் குறித்த மந்திர சாஸ்திர சாரமாகவும் அடுத்த 59 அம்பிகையின் வர்ணனையாகவும் அமைந்துள்ளது. இதன் பின்னர் ஆசாரியர் சுவாமின் ஆக்ஞைப்படி 5 ஸ்படிக லிங்கங்களில் ஒன்றை சிருங்கேரியும், இன்னொன்றைக் கேதாரிலும், மூன்றாவதை நீலகண்ட மலையிலும், அடுத்ததைக் காஞ்சியிலும் பிரதிஷ்டை செய்ததாகச் சொல்லப் படுகிறது.
அறுபத்து மூவர் - 41 - கீதா சாம்பசிவம்
மக்கள் துன்புற்றனர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பதை உணர்ந்த இருவரும் என்ன செய்யலாம் மக்கள் துன்பத்தைப் போக்க என யோசித்தனர். அப்போது ஈசன் ஓர் நாள் இருவரது கனவிலும் தோன்றி, அஞ்சற்க. யாருக்கும் எவ்விதத் தீங்கோ, துன்பமோ வராது. அவ்வாறு நான் காத்து வருவேன். அடியார்களது வாட்டம் தீரும் வகையில் தினம் இந்தக் கோயிலின் கிழக்குப் பீடத்திலும், மேற்குப் பீடத்திலும் ஒவ்வொரு பொன் காசை வைத்து அருளுவோம். இதன் மூலம் அடியார்களின் வறுமையைப் போக்கலாம், என்று கூறுகிறார்.
ஸ்ரீ காமாக்ஷி அம்மன் அந்தாதி - செபரா
கண்னால் காணமுடியாது போனாலும், பக்தர்களுக்கு உற்ற துணையாக இருந்து காப்பவள் வாழ்வில் பல தோல்விகளால் மனம் துவண்டு போன எளியவனான எனது நெஞ்சிலும் ஆழமாகப் பதிந்து நிற்கும் அவள் நினைப்பு என்னை (நல்லது செய்ய) ஊக்குவிக்கும்.
கிருஷ்ணா முகுந்தா - 28 - பிள்ளையார் பாட்டி
ராதை தன்னைத் தொட்டுப் புழுதியைத் தட்டிச் சுத்தம் செய்த போது இனம் புரியாத சந்தோஷம் தன் மனதில் வந்ததைக் கண்ணன் உணர்ந்தான். அவன் அதை இழக்க விரும்பவில்லை. ராதை சொல்கின்றாள்: “ம்ம்ம் அப்படியா? ஆனால் நான் தங்கினால் நிச்சயமாய் உன்னை எந்தத் தவறும் செய்ய விடமாட்டேன்.” ராதை சொல்கின்றாள்
இறைவனைக் காண்போம் - Natarajan Kalpattu
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதிக் காடுகளில் காணப்படும் ஒரு விநோதப் பறவை ‘லயர்’ பேர்ட் எனப்படும் பறவை. ‘லயர்’ என்றவுடன் ‘Liar’ பொய் சொல்பவர் என்று எண்ணி விடாதீர்கள். ‘Lyre’ என்பது ஒரு இசைக் கருவி.
அமெரிக்கா - 48 கீதா சாம்பசிவம்
எனினும் அமெரிக்கா யுத்தத்தை விட்டு விலகியே இருந்தது. உண்மையில் அதை யுத்தத்தில் முழுமையாக ஈடுபடச் செய்ய வைத்தது பெர்ல் ஹார்பரில் நடத்திய தாக்குதல் தான். 1939 ஜூலையில் ஜப்பானுக்கு காஸோலினும் இரும்பும் தேவைப்பட்டது. அது அமெரிக்காவிடம் அபரிமிதமாக இருந்தது.
தண்ணீர் சிக்கனம் - தமிழ்த்தேனீ
பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்ப்பரப்புதான். மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது, அதற்கேற்ப நீர்நிலைகள் வசதிப்படுத்தப்படவில்லை, அதனால் தண்ணீரின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது .அதனால் நாம் கிடைக்கும் தண்ணீரைக் குடிப்பதால் வியாதிகள் பரவுகின்றன.
நட்சத்திர பயணங்கள்: 7 - தாத்தா சீனு
வட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப் பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.
கபாலியும் நண்பர்களும் - நடராஜன் கல்பட்டு
“நான் மட்டும் என்னடா காசு குடுத்தா பேப்பரு வாங்கிப் படிக்கிறேன்? கலெலே காத்தான் கடெய்க்குப் போவேன். வாங்கண்ணே…. குந்துங்க. முடி வெட்டணுமா இல்லே ஷேவிங்கான்னு கேப்பாரு காத்தான். அதெல்லாம் இல்லேப்பா. சும்மா நீ எப்படிக் கீரேன்னு பாத்தூட்டு போகலாம்னு தான் வந்தேன்னு அங்கெ போட்டுருக்குற பெஞ்சுலெ ஒக்காந்து அங்கெ கெடெக்குற தினத் தந்தியெப் பிரிச்சுப் படிப்பேன்.
குயில் பாட்டு - N V Subbaraman
இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி, எல்லாம் மொழியும் எனக்கு விளங்குவதேன்? மானுடர்போல் சித்தநிலை வாயித்திருக்குஞ் செய்தியேன்? யானுணரச் சொல்வீர்' என வணங்கிக் கேட்கையிலே, கூறுகின்றாய் ஐயர்: 'குயிலே! கேள், முற்பிறப்பில்
புதையல் பெட்டகம் - எஸ்.வி.என்.
அப்படியானால் நான் என்றென்றும் வேட்டையாடிக் கொண்டு வனத்தில் தெரியும் ஒரு கன்னிப் பெண்ணாகவே இருக்க வேண்டும், எனக்குத் துணையாக நீங்கள் ஐம்பது வனதேவதைகளை அனுப்ப வேண்டும். வேட்டையாடுவதற்கு உதவியாக வேட்டை நாய்களையும் எனக்கு அனுப்ப வேண்டும். என்றாள்.
ஏழைகள் - நடராஜன் நாகரெத்தினம்.
அந்த ஆமைங்கிறது, மெதுவாப் போகுமே, அது இல்லங்க. அறியாமை என்கிறோம் இல்லையா? அதுதான். அந்த ஆமை மட்டும் நுழைந்துவிட்டால், அதோட குட்டிங்கள்ளாம் வரிசையா ஒண்ணு பின்னாடி ஒண்ணு வந்திடும். குட்டிஙக யாரு தெரியுமா? பொறமை, இயலாமை, ஆற்றாமை அப்புடின்னு சொல்லிக்கிட்டே போகலாம்.
--
AKR