Fwd: தமிழர்களின் பாராமுகமும் உயர்வு நவிற்சிப் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்- நீதிக்கட்சி

89 views
Skip to first unread message

gnana bharathi

unread,
Mar 15, 2011, 3:26:05 PM3/15/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
ஆங்கிலேயர் இந்தியாவின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது முதல் பல்வேறுவகையான போர் போன்ற வன்மையான எதிர்ப்புகள் அவர்களை எதிர்த்து நடைபெற்றன. பின்னர் அவர்கள் நம்மை முழுமையாக ஆண்டபோது, வன்முறைப் போராட்டங்களை விட அறவழிப் போராட்டங்கள் முதன்மை பெற்றன. வன்முறைப் போராட்டங்கள் முற்றிலுமாக ஆங்கிலேயர்க்கு, அவர்தம் பணியாட்களுக்கு, அவர்களை ஒழித்துக்கட்ட அல்லது நாட்டைவிட்டு விரட்டிவிட என்ற நோக்கில் நடைபெற்றது. மாறாக, அறவழிப்போராட்டம் அவர்களை எதிர்த்தும், ஆதரித்தும், சில சலுகைகள் வேண்டியுமாக நடைபெற்றன.

இந்திய தேசிய காங்கிரஸ் முதலில் சில சலுகைகள் வேண்டியும், பின்னர் ஆதரித்தும் எதிர்த்தும் வந்தது. ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் "சதி" போன்ற பழக்க வழக்கங்களை ஆங்கிலேயரின் துணை கொண்டே இந்தியாவிலிருந்து அகற்ற சட்டம் கொண்டுவந்தார். 

இவ்வாறான சூழலில் ஆங்கிலேயரின் கீழிருந்த சென்னை மாகாணத்தில் வேறு ஒரு கண்ணோட்டம் வெளிப்பட்டது. அது ஆங்கிலேயரை எதிர்ப்பது, ஆதரிப்பது என்றில்லாமல், அவர்களின் அரசமைப்பில் பங்குவேண்டுமென்ற விருப்பத்தின் விளைவாக தோன்றிய் எண்ணமாகும்.  

தமிழக மன்னர்களின் ஆட்சி காலங்களில் பார்பனருக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுவந்தன என்பது தற்பொழுது பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் உடல் உழைப்பு,  நுட்ப, நுணுக்க செயல்கள் என்பனவற்றிலிருந்து வேறுபட்டு சமய சடங்குகளை நடத்தும் நடைமுறை பாங்குகளின் முறைமைக்காக நிலம், பொருள், செல்வம் போன்றவற்றை ஈட்டனர்.  

தமிழ் மன்னர்களின் லட்ச்சக்கணக்கான கல்வெட்டுக்களில் மணிப்ப்ரவள உரைநடை காணப்படுவதிலிருந்து சமஸ்கிருதத் தாக்கமும் ஊடுருவி இருந்ததை உணரலாம். அதாவது தமிழல்லாத மொழியும் கற்றுணர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கோவலன் போல் பழமொழி தெரிந்தும்  கம்பன் போல் சமஸ்கிருதம் தெரிந்தும் சிலர் இருந்திருந்தாலும் சமூகங்களாக, குழுக்களாக இருந்திருக்கக் கூடியவர்கள் பார்பனரே. 
 
இவ்வாறான செயல்களாலும் அவர்களின் நடைமுறை வாழும் முறை காரணமாகவும், தன் சமூகம் சார்ந்த பற்று போன்ற காரணங்களால், ஆங்கிலேயர் அரசமைப்பில் வந்த வேலைகளை பார்ப்பனர் முற்றிலும் தமதாக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பார்பனர் இல்லாத (மத, சமூக அடிப்படையில்) உயர் ஜாதியினருக்கு தெளிவாக தெரியத் த்டங்கியது. 

எனவே, ஆங்கில அரசமைப்பில் பார்பனர் அல்லாதவருக்கு முன்னுரிமை வேண்டும் என்ற கோரிக்கை வெளிப்படுத்தப் பட்டது.  இந்தியா முழுதும் பார்ப்பனர்களே பெரும்பாலான ஆங்கிலேய அரசமைப்பில் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் சென்னை மாகாணத்தில் தான் இது உணர்ந்து ஒலிக்கப்பட்டது.  அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளம் போன்றவையும் இருந்ததால் இது பார்ப்பனரல்லாத தமிழர்க்கு மட்டுமே உரிய கோரிக்கை என்றில்லாமல், பார்ப்பனரல்லாத பிறமொழி பேசும் மக்களையும் கொண்டிருந்தது.  

நாட்டு விடுதலை என்ற நோக்கை கொள்ளாமல் ஆங்கில அரசமைப்பில் பங்கு என்ற நோக்கில் ஒரு அமைப்பு 1912 ல் உருவானது. அதன் பெயர் மெட்ராஸ் யுனைட்டட் லீக். 1914 ல் அது மெட்ராஸ் திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் அடைந்தது. 1916 ல் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாகி, ஆங்கில, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் செய்தி வெளியிட முடிவு செய்தனர். தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியையும் தொடங்கினர். இவ்வமைப்பை உருவாக்க பெருமுயற்சி கொண்டவர் நடேச முதலியார் என்பவர்.  ஆனால் அவர் ஏனோ தலைமை  ஏற்கவில்லை. தமிழரின் தாழ்வுக்கு, தலைமை ஏற்காததால், வித்திட்டவர்களில் இவர் ஒருவர். 

இவர்கள் தொடங்கிய ஆங்கில ஏட்டிற்கு ஜஸ்டிஸ் என்றும், தெலுங்கு ஏட்டிற்கு ஆந்திர கேசரி என்றும் தமிழ் ஏட்டிற்கு "திராவிடியன்" என்றும் பெயரிட்டனர். 

2011/2/7 gnana bharathi <dgbha...@gmail.com>
ஐந்தாவது இழப்பு (சூறை அல்லது சுனாமி போன்றது)
இந்திரா காந்திக்கு, அவரின் அரசுக்கு, தமிழகத்தை மேலும் சீரழிக்க வேண்டுமென்று தோன்றியதோ அல்லது வேறு காரணமோ மேலும் ஒரு பெரிய இழப்பை தமிழகத்திற்கு செய்வதாக எண்ணி இந்தியாவிற்கும் செய்தார். 

1976 ஆம் ஆண்டு மேலும் ஒரு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. இவ்வொப்பந்தத்தில் 1974 ல்  வரைந்த எல்லைக்கோட்டை நீட்டிப்பது/ முழுமைப்படுத்துவது என்ற நோக்குடன் நடந்தது. 1974 ல் வெளியுறவுத்துறை அமைச்சரை தமிழக முதவருடன் பேச வைத்ததை போல இம்முறை செய்யவேண்டுமென்று நினைக்க வில்லை என்று படுகிறது.  ஏனெனில் கடிதம், தந்தி, சட்டசபைத் தீர்மானம் போன்றவை செயவிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. தேவை இல்லை என்று நினைத்து விட்டனரோ!

ராமேஸ்வரத்திற்கு தெற்கே நீட்டிக்கப்பட்ட எல்லைக்கோடு மாலத்தீவுடன் எல்லை வரை நீடித்தது. இதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை (கேரள கடற்கரைப் பகுதியும் வந்துவிட்டதென்பதாலோ)  

ஆனால்,
திருமறைக்காட்டிற்கு (வேதாரண்யம்) கிழக்கே தமிழக மீனவர்கள் மட்டுமே மீன் பிடிக்கக் கூடிய பகுதிகளில் ஏறத்தாழ் 25000 ச.கி.மீ. பரப்பளவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தனர். கடல் வளம் கடலுக்குக் கீழே இருக்கக்கூடிய இயற்கை எரிவாயு எண்ணெய் வளம், கடல் தரைப்பரப்பில் உள்ள கனிம வளம், ......... எல்லாம் போயின.  படம் 1 & 2  

காஷ்மீரில் ஒரு அடி பரப்பைக்கூட பாக்கிஸ்தானுக்கு கொடுக்க விரும்பாதவர்கள், பொதுமக்கள் யாருக்குமே,  இன்றுவரை,  பயன்படாத சியாச்சின் பனிமலைப் பகுதிகளை பத்தாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை, ஆயிரக்கணக்கான கொடிகளை கொட்டி பாதுகாத்துவரும் நாட்டிற்கு கேரளாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட அளவு பரந்த கடற்பரப்பை விட்டுக்கொடுக்க எதனால் மனம் வந்தது?

இம்முறை இந்தியாவில் எங்குமே, தமிழகம் நிச்சயமாக, ஆர்ப்பாட்டமோ, கிளர்ச்சியோ, நகல் எரிப்போ நடைபெறவில்லை. நாடு அவசரகால சட்டத்தின் கீழ் இருந்தது.

தமிழ் நாட்டில்,
கருணாநிதி இந்திராவின் அவசரகால சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  காவிரியில் இழந்ததை ஏற்றுக்கொண்ட மக்கள் இதையெல்லாம் இழப்பாகவா கருதப்போகிறார்கள் என்று நினைத்திருக்கலாம் அல்லது எம்ஜிஆரை வீழ்த்த என்ன செய்ய வேண்டுமென்ற யோசனையில் கண்டுகொள்ளாதிருக்கலாம் 

எம்ஜிஆர், ஆட்சியைப்பிடிக்க, இதுபோன்ற கேடுகள் நிகழாமல் இருக்க,  தமிழ் நாட்டுப்பெண்களின் கவர்ச்சி போதாதென்று பஞ்சாபிலிருந்து ராதா சலுஜாவை வரவழைத்திருந்தார்.  

25,000.ச.கி.மீ. என்பது சரியா? 
இது துல்லியமான அளவு இல்லை. உலகில் நாடுகளுக்கு இடையேயுள்ள கடற்பரப்பு பிரிக்கப்படும்போது வலிமையான நாடு சற்று கூடுதாலப் பெற்றுக்கொள்வதுண்டு.  சரிசம நிலையிலுள்ள நாடுகளில் இருநாடுகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் கடற்பரப்பு பிரிக்கப்படுகிறது.எ.கா. இங்கிலாந்து- ப்ரான்ஸ் கடல் எல்லை. 
இந்திய இலங்கை எல்லைக்கோடு நேர்கூடாக அல்லாமல் ஒரு பெரு வட்டத்தின் கொட்டைப்போல வரையப்பட்டது. மையப்புள்ளி இலங்கைப்பகுதியில் வைத்து வரைந்ததால் தஞ்சை/நாகை மீனவருக்கு கிழக்கு எல்லை நூறு மைல்களுக்குள் வந்துவிடும்.  இலங்கையினருக்கு கிழக்கே எல்லை கிடையாது. யாழ், முல்லைத்தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்களுக்கு செல்லக்கூடிய அளவு தஞ்சை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி மீனவர்களுக்கும் உண்டு என்பதை, சர்வதேச விதிமுறைகளின் படி, நாடுகளிடையே கடல் எல்லை பிரிக்கப்பட்டிருப்பதன்படி பெற முடியும். 

"சர்வே"ஸ்வரர்களைக் கொண்டு துல்லியமாக அளவிடலாம். இழந்தது பத்தாயிரக்கணக்கான ச.கி.மீ. என்பதில் சந்தேகமில்லை

2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>
முதல் இழப்பு ஆங்கிலேயரால் நடந்தது
இரண்டாவது இந்திய தன்னிச்சையான முடிவால் ஏற்பட்டது
மூன்றாவது காங்கிரஸ் ஆட்சியாளர் பாராமுகத்தால் நிகழ்ந்தது
(காமராஜர் ஆட்சியில் நடந்த பெரும் இழப்பு இதுவாகத்தான் இருக்கும். மக்களைவிட கட்சி மேலானது என்று அவர் கருதியதால் ஏற்பட்ட இழப்புகளில் இதுவும் ஒன்று) 
கேரளத்திடம் இழந்தது இந்திய சீன எல்லையை பிரித்தது போல நடந்தது.  மக்மோகன் எல்லை இந்தியர்கள் - சீனர்கள் பிரிந்து வாழும் பகுதிகள் என்றில்லாமல் இமயமலையின் உயரமான சிகரங்களை இணைக்கும் கோடாக அமைந்தது. ஒருவேளை இமயமலை பனிபடர்ந்த மலைத்தொடராக இல்லாது இருந்தால் இக்கோடு இந்தியாவை பாலைவனமாக்கியிருக்கும்.

இக்கூற்றை நிருபிக்கும் விதமாக அமைந்ததே தமிழக-கேரள எல்லைப் பிரிவு. மேற்கு தொடர்ச்சிமலையின் மிகஉயர்ந்த சிகரங்களை, மக்மோகன் எல்லை வகுத்தமுறையின் அடிப்படையில், பிரித்தனர். அவ்வாறு பிரித்தால் தமிழ் நாடு மழைமறைவுப் பகுதியாக அஆகிவிடும் என்று அரசியலர், அலுவலர் ஒருவர் கூட உணராமல் இருந்தனரா என்பது ஆச்சரியம்.   படம் 1

ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களிடம் இழந்ததென்பது ஒரே நாட்டிற்குள் நடைபெற்ற ஒரு ஒருதரப்பு சாதகச் செயல். உண்மையில் நல்ல எண்ணம் கொண்ட மக்களாக இருந்தால் பல சிக்கல்கள் வராது.  

நான்காவது இழப்பு (அடிமையின் இழப்பு)
இந்தியா நடத்திய அணுகுண்டு பரிசோதனையால் உலக நாடுகள் இந்தியாவை புறக்கணித்தபோது, இலங்கை இந்தியாவை ஆதரித்ததால் அந்நாட்டிருக்கு கைம்மாறு செய்ய இந்திராகாந்தி இழக்க விரும்பியது தமிழ் நாட்டின் சொத்துக்களைத் தான் (காங்கிரஸ் தோற்றதால், தனிநாடு கோரிய திராவிடர்களின்  வலுவைத் தெரிந்துகொள்ள விரும்பியதால், காமராஜர் - ராஜாஜி போன்றோர் மீதிருந்த வெறுப்பால்  .............)   
1974 ல் திமுக ஆட்சியில் இருந்தபோது இலங்கை கோரிய கச்சத்தீவை விட்டுக்கொடுத்தகாக் கூறப்படுவதில் இழந்தது கச்சத்தீவை மட்டுமல்ல..  கச்சத்தீவு ஒரு ச.கி.மீ. பரப்பளவு கூட இல்லாத பகுதி.  ஆனால் இழந்தது 700 ச.கி.மீ. கும் மேற்பட்ட பரப்பளவுள்ள கடற்பரப்பை. 
எப்படி?
இரு நாடுகளின் கடற்பரப்பை பிரிக்க அந்தந்த நாடுகளுக்கிடையேயான நிலப்பரப்புகளுக்கு இடையே உள்ள பரப்பை பாதியாகப் பிரித்து எடுத்துக்கொள்வர். ஒருவேளை ஒருநாட்டின் சிறு தீவு மற்றொரு நாட்டின் எல்லைக்கருகில் இருந்தது என்றால், பிரிவு அச்சிறு தீவிற்கும் மற்றொரு நாட்டின் பொது நிலப்பரப்பிற்கும் இடையே வகுக்கப்படும். அதாவது நமது சிறு தீவு ஒன்று அடுத்த நாட்டின் எல்லைக்கருகில் இருந்தால் அந்நாட்டிற்கான கடல் பரப்பளவை பெரிதும் குறைத்து விடலாம்.  அதாவது அந்தமான் தீவு போன்ற தொலைவில் உள்ள ஒரு தீவுக்கூடமோ அல்லது ஒரே ஒரு தீவோ ஆஸ்திரேலியாவின் நிலப்பரப்பிற்கு அருகில் இருந்திருந்தால், அந்நாட்டிருக்கு அருகில் வேறு நாடெதுவும் இல்லை என்பதால், அந்நாடு தற்பொழுது கொண்டிருக்கும் கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான கி.மீ. பரப்பளவு நமக்குரியதாகியிருக்கும்.

இரண்டாம் படத்தில் இந்தியாவுடனிருந்த கச்சத்தீவும் இலங்கையின் நெடுந்தீவும் குறிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் இந்திரா காந்தி சிறிமாவோ பண்டாரநாயகா மீது கொண்ட பாசத்தால் கச்சத்தீவை விட்டுக்கொடுத்து கடல் எல்லையை வகுத்தார்.  படம் 3

கச்சத்தீவு நமதென்றால் அத்தீவை இந்தியாவின் எல்லைப்புள்ளியாக வைத்து கச்சத்தீவிற்கும் இலங்கையின் மற்ற பகுதிகளுக்குமிடையே ஆன கடற்பரப்பு பிரிக்கப்பட்டிருக்கும். படம் 4

எனவே இழந்தது தமிழக கட்சிகள் கூறிவரும் கச்சத்தீவு மட்டுமல்ல.  அதைப்போல் 1000௦ மடங்கு கூடுதலான பரப்பளவை. 

உண்மையில் இலங்கையின் தயவால் தான் நம்மால் கச்சத்தீவு வரை மீன்பிடிக்க முடிகிறது. ஒருவேளை அவர்கள் ஐநா போன்ற இடங்களில் முறையிட்டால் அவர்களுக்கு மேலும் பல நூற்றுக்கணக்கான ச.கி. மீ. கடற்பரப்பு உரியதாகிவிடும். படம் 5

ஏன் இவ்வாறு நடந்தது?
ராமநாதபுர சேதுபதி இந்தியாவுடன் சேருவதாக கையெழுத்து போட்டவுடன் அவரிடமிருந்த பத்திரங்கள் அனைத்தும், கச்சத்தீவு சார்ந்தது உட்பட, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது. நகல் கூட நாம் எடுத்துக்கொள்ள வில்லை. இந்திராகாந்தி அனுப்பிய வெளிவுரவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங் (சரண் சிங் அல்ல) தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்தினார். உண்மையில் கருணாநிதி கடுமையாக எதிர்த்தார் என்று கூறப்படுகிறது.. ஆனால் அவரைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் நகல் எரிக்கப்பட்டது. இதைச் செய்தவர்களில் ஒருவரும் தமிழரில்லை.
 
ஆனால் இதற்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பு இல்லை. ஏன்? 
- தமிழக காங்கிரஸ், பொதுவுடைமை போன்றவை வலு இழந்து விட்டிருந்த்திருந்தன.
- காமராசரும் ராஜாஜியும் உயிருடன் இல்லை.       
- ஈ.வே.ரா., அண்ணா போன்றோரும் இல்லை.
- கருணாநிதி - எம்.ஜி.ஆர் பிரிந்த நேரம்.
கருணாநிதிக்கு எம்ஜிஆரின் வளர்ச்சியைத் தடுக்க தமிழரை விட இந்திரா காந்தி தயவு போதுமென்று பட்டது. எதிர்க்கத் துணிவில்லை (மன்மோகன் சிங் இரண்டாவது முறை பதவி ஏற்ற பொழுதுதான் முதன் முதலாக எதிர்ப்ப்பைக் காட்டினார் என்று நினைக்கிறன்)

எம்கிஆருக்கு ஆட்சியரின் குறைகளை வெளிப்படுத்தி நல்லதொரு வழிப்படி ஆட்சி நடத்துவேன் என்று கூறுவதை விட திரைப்படங்களில் உடல் வெளுத்த பார்ப்பனப் பெண்களின் துகிலுரித்தால் போதுமென்று இருந்தது. 

      
2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>

தமிழர்களின் பாராமுகமும்  உயர்நவிழ் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்
வரலாற்றில் உலகின் பெரும் நிலப்பரப்பை ஆண்ட அரசுகளில் ஒன்றாக விளங்கிய தமிழ் சமுதாயம் பல நூற்றாண்டுகளாக அடிமைப் படுத்தப்பட்டு இருந்தது.  பேரரசுகளாக வாழ்ந்தும் சூழ்ச்சிகளாலும் குடும்ப சண்டைகளாலும் அரச பரம்பரைகள் அழிந்துபோனது. தொடர்ச்சியான ஆளுமை இல்லாத சமூகமாக தமிழர்கள் 700 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும் எதிர்ப்புணர்ச்சி அவ்வப்போது பல வழிகளில் வெளிப்பட்டது.  ஆனால் இவைகளில் சூழ்ச்சியில்லை, தந்திரமில்லை தமிழர் என்ற உணரவில்லை.  இதனால் பிறர் சூழ்ச்சிகளுக்கும் தந்திரங்களுக்கும்  மீண்டும் அடிமையானோம். அடிமைத்தனம் நமக்கு எதிலும் பற்று இல்லாத ஒரு தன்மையைக் கொடுத்துவிட்டது. இருப்பினும் புதிய தலைமைகள் உருவானபோது விழிப்புணர்வு போன்ற நிலை ஏற்பட்டாலும் தலைமையின் மேல் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையால், அவர்களை அவர்களின் திறனுக்கும் மேலாக கருதியதால் வீறுகொண்டு எழுந்தவுடன் மீண்டும் வீழ்ந்தோம், மீண்டும் மீண்டும் வீழ்ந்தோம். 

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறிய மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்.
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயம் என்றேன். சூம்பல் தோளை
வழங்கா தகையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றாய்
யானும் என்தன் குற்றத்தால் ஏகின்றேனே.
                                                                                                       - ராமச்சந்திரக் கவிராயர் 

முதல் இழப்பு 
1911 ல் சித்தூர் மாவட்டம் என்பது உருவாக்கப்பட்டது. இது ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தை பிரித்து அமைக்கப்பட்டது. மாவட்டத்தின் அளவைப் பெரிதாக்க வடாற்காடு மாவட்டத்தின் ஒருபகுதியை சித்தூருடன் இணைத்தனர்.   பின்னாளில் இந்தியா விடுதலை அடைந்த பிறகு ஏற்பட்ட மொழிவாரி மாநிலம் என்ற திட்டம் வருவதற்கு முன்னாலேயே பொட்டிஸ்ரீராமுலு (சென்னையில் பிறந்து சென்னையில் வளர்ந்து இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியவர், காமராஜர், அண்ணா போன்ற தமிழர் தலைமை உருவானதும் தனி ஆந்திரம், அதுவும் சென்னையை தலைநகராகக் கொண்டு, வேண்டுமென்று உண்ணாநிலையில் உயிர் விட்டார்) என்பவரின் போராட்டத்தின் விளைவாக சென்னை மாகாணம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, சித்தூர் மாவட்டத்தின் தமிழ் நாட்டுப்பகுதிகளை நாம் நமதாக்கிக்கொள்ளவில்லை.  

இதனால் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட பொழுது சில பகுதிகளைக் கொடுத்துதான் அதே அளவு பகுதிகளைப் பெறமுடிந்தது (மா.பொ. சி. போன்றோரின் போராட்டத்தால்)

இந்த இழப்பு நடை பெற்றபோது மின்டோ-மார்லி சீர்திருத்தின்படி தேர்தல்கள் ஏதும் நடக்காமல் இருந்தாலும் காங்கிரஸ் தமிழகத்தின், இந்தியாவின் மிகப்பெரியக் கட்சியாக இருந்தது. அங்கு தமிழர் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பில்லை. திராவிடம் என்பது அரசியலாகவில்லை.  தீங்கை மட்டுமே விளைத்த ஆற்காட்டு நவாப் இதில் தலையிட்டிருக்க வேண்டுமென நினைத்துக்கூட இருக்க மாட்டார். 

இரண்டாவது இழப்பு
இந்தியா விடுதலை அடைந்தவுடன் போட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தையடுத்து எவ்வித கொருதலுமின்றி இந்திய அரசு சென்னை மாகாணத்தைப் பிரித்து ஆந்திர மாநிலத்தை உருவாக்கியது. 

தமிழர் முதல்வராக (மாகனத்தின் பிரதமராக) இருந்தார். திராவிடம் தளைத்தோங்கி கிளை விட்டு வளர்ந்திருந்தது. தமிழர் பகுதிகளை தக்கவைக்க யாரும் முயற்ச்சிக்க வில்லை - கண்டு கொள்ளவில்லை.

மூன்றாவது இழப்பு (பேரிழப்பு)
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட முடிவு செய்தபோது, மைசூர் அரசும் (கடற்கரை இல்லாத சிறிய பரப்பளவைக் கொண்டது)  கொச்சி-திருவாங்கூர் அரசும் தங்கள் பகுதிகளை விரிவாக்க முயற்சித்தனர்.
கன்னடம் பேசும் இடங்களை ஒருங்கிணைக்க மிகப்பெரும் முயற்சியில் மைசூர் அரசும் இந்தியாவில் உயர்பதவில் இருந்த கன்னடர்களும் பெருமுயற்சி கொண்டனர். எவ்வித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டதால், கன்னடம் பேசுவோர் பெருவாரியாக வாழ்ந்த பகுதிகளை மட்டுமல்லாமல் அம்மொழி மக்கள் இருந்த இடமெல்லாம் தமது என்று போராடிப் பெற்றனர். மொழிவாரி மாநில அமைப்பில் பெருநன்மை அடைந்தவர் கன்னடர்களே.

தமிழர்கள் கர்நாடகத்தின் கடற்கரை பகுதிகளை தமக்கு வேண்டுமெனக் கேட்டிருந்தால் அதை நியாயப்படுத்தியிருக்க  முடிந்திருக்காது.  ஆனால் கொள்ளேகால், கோலார், மற்றுமிருந்த பல தமிழர் பெருவாரியாக வாழ்ந்தப் புகுதிகளை ஏன் விட்டுக்கொடுத்தார்கள் என்று புரியவில்லை. கோலார் பகுதி கனிவளம் மிக்க பகுதி. கொள்ளேகால் வட்டம் (இப்பொழுது சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் பகுதி) 2789 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது.  காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்பகுதியை நாம் தக்கவைத்திருந்தால் நாம் கோரும் காவிரி நீரின் அளவை கூட்டியிருக்க முடியுமென்பதோடு பெரும் விளைநிலத்தையும் கொண்டிருந்திருக்கலாம். 
Tamil speaking kongu vellala gounders are majority in Kollegal. People in Kollegal speak a variation of Kannada distinct from that spoken in Mysore andBangalore. This dialect of Kannada at times suffixes da when spoken among pals. Kannada as spoken in Kollegal was used in the 2005 film Jogi starring Shivarajkumar.

கொச்சி-திருவாங்கூர் பகுதி மக்களும் மலையாளம் பேசும் பகுதிகளை ஒருங்கிணைக்க வேண்டுமென்று ஒன்றுகூடி போராடினர். மலபார், காசர்கோடு போன்ற பகுதிகள் கேரளத்துடன் சென்றுவிட்டது. தமிழர் வாழும்  பாலக்காடு போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்கவேண்டுமென்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்தனர். பல மொழி பேசும் பகுதியான காசர்கோடு பகுதியை பழங்குடியினர் கூடுதலாக வாழும் பகுதி என்று கருதியதால் தமிழர்கள் வேண்டாமென்று இருந்துவிட்டதாகக் கூறுவதுண்டு. கன்னடர்கள் இன்றும் கோரிவரும் சில பகுதிகளையும்  தன்னகத்தே கொண்டிருகின்றனர் 

ஆட்சியில் காங்கிரசும், எதிர்கட்சியாக இருந்த பொதுவுடமைக் கட்சியும் அதன் தலைவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணமில்லாமல், பிற மாநிலத்தினர் தத்தம் மாநிலமே முதன்மை என்றிருந்தபோதும், இந்தியாவின் ஆட்சியாளர் செய்யும் நாட்டுக்குத் தேவையான ஒன்றென்று ஏதும் செய்யவில்லை. 
திராவிடத் தலைவர்  ஈ.வே.ரா., தமிழகத்தின் தலைமேல் இன்றுவரை நிறுத்திவைத்திருக்கும் தலைவர், இனிமேல் திராவிட நாடு என்பது புதிதாக வரையறுத்த புகுதிகளுக்குள் உட்பட்டே செயல்படும்/கோரப்படும் என்ற பகுத்தறிவுக் கருத்தை கூறி தன் கடமையை முடித்துக்கொண்டார். 

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா "சீதையை வேண்டிச் சென்ற ராமனிடம் மற்றொரு பெண்ணைக் காட்டி சீதைக்குப் பதிலாக கூட்டிச்செல்லச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பாரோ" அதுபோல தங்கள் கோரிக்கை, தமிழகப் பகுதிகளை இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், பரந்துபட்ட விந்தியமலைக்குக் தெற்கே உள்ள மொத்த பரப்பையும் திராவிட நாடாக இந்தியாவிடமிருந்து  பிரிப்பதுதான் தம் கொள்கை என்பது போல் பேரறிஞராக  அறிக்கை விடுத்தார்.  மாற்றவர்கள் தங்களைத் திராவிடர்களாக என்றுமே கருதியதில்லை என்றபோதிலும் அவர்களையும் தம்முடன் சேர்த்து தனிநாட்டை உருவாக்கும் நீண்டகாலத் திட்டம் கொண்டிருந்தார்.





gnana bharathi

unread,
Mar 15, 2011, 3:28:58 PM3/15/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com
1912 ல் உருவான மெட்ராஸ் யுனைட்டட் லீக், 1914 ல் அது மெட்ராஸ் திராவிட சங்கம் (Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் அடைந்த வரை திராவிடம் என்பது தென்னிந்திய மொழிகளின் குழுப்பெயர் என்ற நிலையில் இருந்தது. இதில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு இன்னபிற மொழிகள் அனைத்தும் அடங்கும். 

1916 ல் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாகி, . தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி ஆங்கில, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் செய்தி வெளியிட முடிவு செய்த பொழுது தெலுங்கை திராவிட என்ற அடையாளமிடாமலும் தமிழைத்  தமிழ் என்ற அடையாளமிடாமலும் பிரித்தாளும் முறைமை தொடங்கி வைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏற்பட்ட புரட்டுகளுக்கும் பித்தலாட்டங்களுக்கும் முதல் படியாக அமைந்தது இதுவே. (இவர்களின் ஆங்கில ஏட்டிற்கு ஜஸ்டிஸ் என்று பெயரிட்டதால் தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு பின்னாட்களில் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி)என்று அழைக்கப்பட்டது)

இந்திய விடுதலைப் போராட்டங்களில், முதல் இந்திய சுதந்திரப்போருக்குப் பின், இந்தியர் பெரும்பான்மையோர் ஈடுபட்டிருந்த காலங்களில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை என்ற நோக்கு மிகச் சிறிய குழுக்களிடமே இருந்தது.  தீவிரவாதியாகக் கருதப்பட்ட பால கங்காதர திலகர் வேண்டியதே சுயராஜ்யம் தான். 

ஆனால் வங்காளம் பிரிக்கப்பட்டதிலிருந்து (1905) இந்தியர்களிடையே ஒருமைப்பட்டு உணர்வும் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற எண்ணமும் தலைத் தூக்கியது. இதன் விளைவாகவே பிரிந்த வங்காளம் 1912  ல் ஒன்றிணைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் உலகப்போர் 1914   ல் தொடங்கியது. ஆங்கிலேயருக்கு இந்தியரின் சேவை தேவைப்பட்டதால், இந்தியரின் பல கோரிக்கைகளை ஏற்றும் ஏற்பது போல் காட்டியும் தம் தேவைகளுக்கு இந்தியரின் சேவையை அவர்களின் உயிரை பன்படுத்திக்கொண்டனர். 
இதன் விளைவாகத்தான் மாண்டேகு-செமஸ்போர்டு சீர்திருத்தம், 1918, அதாவது இந்தியருக்கு சில அரசியல் உரிமைகள், சுயராஜ்யத்தை விட சற்றே குறைவாக, கொடுக்க சம்மதித்தனர்.
1918   ல் முதல் உலகப்போர் முடிந்தபின், 1919  ல் நடந்தேறிய ஜாலியன்வாலாபாக் கொடூரத்தின் விளைவாக இந்தியர்களிடையே விடுதலைப்போராட்டம் மிகத் தீவிரமடைந்து ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்றவை நடை பெற்று வந்த காலத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த கட்சியின் பெயர் நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் முன்னோடிக் கட்சி. 
நாடு அடிமைப்பட்டிருப்பது பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முழு ஏற்பு கொடுத்த கட்சி தான் நீதிக்கட்சி. நல்லதோர் பெயர் அல்லவா!!!
1920 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியமைத்தது. கட்சியின் தலைவராக இருந்த பிட்டி தியாகராய செட்டி ஆட்சிப் பொறுப்பேற்காமல் தன் வழியில் அரசாளும்படி தன் கட்சியினரைப் பணித்தார். காந்தியாருக்கு முன்னாலேயே பதவிமீது விருப்பம் காட்டாதவராகத் திகழ்ந்தாலும் இவர் பொட்டி ஸ்ரீராமுலு அவர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது தான் தமிழருக்கு இழப்பை ஏற்படுத்தியது. சென்னையின் சுற்று வட்டாரத்தில் பிறந்து சென்னையில் கல்விபயின்ற இவர் தான் உயிரோடு இருந்த வரை நீதிக்கட்சியின் சார்பில் அரசாளுபவர் தன் தாய்மொழியான தெலுங்கு பேசுபவராகத்தான் இருக்க வேண்டுமென்பதை செயல் படுத்தினார்.  http://en.wikipedia.org/wiki/Madras_Presidency_legislative_council_election,_1923  
1923ல் இதை உணர்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்ப்பு மற்றும் கட்சிப் பிளவு என்ற நிலைகளுக்கு ஆட்பட்ட பிறகு மூன்றுபேர் கொண்ட அமைச்சரவையில் ஒருவரை தமிழராகக் கொள்ளச் சம்மதித்தார் (முதல்வராக அல்ல). அதனால்தான் அண்ணா முதல் இன்றைய திராவிடர் வரை அவரை நினைக்க மறுப்பதில்லை. 

சென்னை மாகாணத்தின் வரைபடம்.
சென்னை மாகாணத்தில் நிஜாம் ஆண்ட ஐதராபாத் பகுதிகளும் (ஆந்திர கர்நாடக பகுதிகள்) கர்நாடகாவின் மைசூர் பகுதிகளும், கேரளாவின் திருவாங்கூர் பகுதிகளையும் கொண்ட பெரும் பரப்புகளும், ஆந்திராவிலுள்ள பங்கனப்பள்ளி, கேரளாவின் கொச்சின், கர்நாடகாவின் கூர்கு, மற்றும் தமிழகத்தின் புதுக்கோட்டை போன்ற சிற்றரசுகளும் இடம் பெறவில்லை. 
1871 மற்றும் 1901ஆம் ஆண்டுகளின் மக்கள்தொகை கணக்கீட்டின்படி சென்னை மாகாணத்தின் பெருவாரியான மக்களால் பேசும் மொழி தமிழ்.
பார்ப்பனர் வேண்டாமென்று தனித்தவர்கள் வேறொரு குழியில் விழுந்தது தொடங்கியது இதிலிருந்து தான் தொடங்கியது. நீதிக்கட்சி தன் செல்வாக்கை முற்றிலும் இழக்கும் நிலை வரை அதன் தலைவராகவும் அக்கட்சி ஆட்சி அமைத்தபோதேல்லாம் அதன் முதல்வராகவும் இருந்தவர்கள் யாரும் தமிழர்களாக இருக்கவில்லை.
                        
      


  

       


2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>
chennai mozhip pirivukal.JPG

N. Ganesan

unread,
Mar 15, 2011, 6:24:12 PM3/15/11
to மின்தமிழ்

On Mar 15, 2:26 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:
> எனவே, ஆங்கில அரசமைப்பில் பார்பனர் அல்லாதவருக்கு முன்னுரிமை வேண்டும் என்ற
> கோரிக்கை வெளிப்படுத்தப் பட்டது.  இந்தியா முழுதும் பார்ப்பனர்களே பெரும்பாலான
> ஆங்கிலேய அரசமைப்பில் இருந்திருக்க வேண்டும்.  ஆனால் சென்னை மாகாணத்தில் தான்
> இது உணர்ந்து ஒலிக்கப்பட்டது.  அன்றைய சென்னை மாகாணத்தில் இன்றைய ஆந்திரம்,
> கர்நாடகம் மற்றும் கேரளம் போன்றவையும் இருந்ததால் இது
> பார்ப்பனரல்லாத தமிழர்க்கு மட்டுமே உரிய கோரிக்கை என்றில்லாமல்,
> பார்ப்பனரல்லாத பிறமொழி பேசும் மக்களையும் கொண்டிருந்தது.
>

ஞானபாரதி,

(அ) ரிஸர்வேசன் பாலிசி - முதலில் தமிழ்நாட்டில் தோன்றியதல்ல.
அதன் பிறப்பிடம் மஹாரஷ்ட்ரா. கி. பி. 1902-ல் சாஹு மஹாராஜா
(கோல்ஹாப்பூர் அரசர்) சட்டமாக்கினார்.
http://en.wikipedia.org/wiki/Shahu_Maharaj
[இதுபற்றி மேலும் அறிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள்/நூல்கள் உள்ளன.

(ஆ) பெரியார் தந்தை கன்னடியர், தாய் தெலுங்கு என்று
எழுதியிருக்கிறீர்கள். அது பிழையான செய்தி. ஈவேரா நாயக்கரின்
தந்தையும் தாயும் கன்னடக்காரரே. அவரே பலமுறை பதிவு செய்துள்ளார். அவரது
உறவினர்களையும் கேட்டு அறிந்த
செய்தி இது. அண்மையில் அவரது அண்ணன் வீட்டாரில்
ஒருவர் (மருத்துவர்) லண்டனில் வீடு வாங்கினார் ... அப்போதும்
கேட்டேன்.

நா. கணேசன்

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 15, 2011, 11:44:53 PM3/15/11
to மின்தமிழ்
திரு ஞான பாரதி!

உங்களுடைய வாதம் கொஞ்சம் தவறான அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்டது போல
இருக்கிறது.

திரு ஈ எம் எஸ் நம்பூதிரிபாத் எழுதிய Kerala: Society and Politics
புத்தகத்தைக் கொஞ்சம் படித்தால்,ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கும்
என்று நம்புகிறேன். ஆங்கிலேயர்களுடைய அரசில் அரைக்காசு உத்தியோகத்தை
ஏற்றுக் கொள்வதற்கும், ஆங்கிலக் கல்வியைப் பயில்வதற்கும், கேரளாவிலும்,
தமிழ் நாட்டிலும் இரண்டு வித்தியாசமான போக்குகள் ஆரம்பித்தன.

கேரளாவில் நம்பூதிரிப்பார்ப்பனர்கள், தங்களுடைய பழமையை விடத்தயாராக
இல்லை. ஆனால், நாயர் சமூகமோ மாறுதலைப் புரிந்து கொண்டு ஆங்கிலக் கல்வி,
அரசு உத்தியோகங்களை ஏற்றுக் கொண்டது. இங்கே தமிழ்நாட்டில்,இதர
சமூகத்தவர் அந்த அளவுக்கு ஈடு பாடுகொள்ளவில்லை. பார்ப்பனர்கள் மட்டுமே
தயாராக இருந்தார்கள்.ஆக, இயல்பாகவே, பார்ப்பனர்கள் இங்கே அரசு நிர்வாக
அமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது நிகழ்ந்தது.

ஒரு கட்டத்தில் இரண்டு பிரதான சமூகங்கள், (செட்டியார்களும்
முதலியார்களும்) அரசு நிர்வாகத்தில் தங்களுடைய ஆட்கள் இருப்பதன் அவசியம்
சௌகரியத்தைப் புரிந்துகொண்டார்கள். அவர்களே சமூக நீதிக்காக குரல்
கொடுத்த நீதிக் கட்சியினராகவும், பார்ப்பனரல்லாதவர்கள் அத்தனை
பேருக்குமான மொத்தப் பிரதிநிதிகள் போலவும் தங்களை சித்தரித்துக்
கொண்டார்கள். இதற்குப் பின்னால், அப்பட்டமான சுயநலமே ஓங்கியிருப்பதையும்,
அதை வளர்ப்பதில் அன்றைய ஆங்கிலேய ஆட்சி முதல் இன்றைக்கு ஆளுகிறவர்கள்
வரையிலும் தொடர்வதையும் பார்க்க முடியும். இவர்கள் சமூக நீதிக்காகப்
போராடியது என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புத்தான்.

நீதிக்கட்சிக்குப் பின் தோன்றிய திராவிட இயக்கங்கள் பார்ப்பன எதிர்ப்பு
ஒன்றை மட்டுமே தங்களுடைய பொதுவான கொள்கையாக வைத்துக் கொண்டு வளர
ஆரம்பித்தது வரலாறு.

--------------------------
கிருஷ்ணமூர்த்தி

S.Krishnamoorthy

unread,
Mar 16, 2011, 2:11:15 AM3/16/11
to mint...@googlegroups.com
இரண்டு பிரதான சமூகங்கள் -
மூன்று முக்கிய சமூகங்கள் என்பதே சரி. பார்ப்பனர்களைப் போலவே அரசு அலுவலங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள நாயுடு-நாயக்கர் சமூகத்தை விட்டுவிடமுடியாது.

2011/3/16 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

Nagarajan Vadivel

unread,
Mar 16, 2011, 3:21:22 AM3/16/11
to mint...@googlegroups.com
ஆங்கிலேயர்களின் அரவணைப்பில் ஆங்கிலேயர்களின் வணிகம், நிதி, நீதி, நிர்வாகம் ஆகியவற்றில் அந்தணர்களைப்போன்றே செட்டியார்களும் முதலியார்களும் பங்குபெற்றுப் பயனடைந்தனர்.
பிரச்சினையே குறைந்த விழுக்காடுள்ள அந்தணர்கள் அதிக அளவில் அரசுப்பதவிகளில் இருந்தது அதைக் குறைக்கவேண்டும் என்று குறுக்குச்சால் ஓடிய அரசியல் பார்வைக்கோளாறே
சென்னையில் வாழ்ந்த பேரிச் செட்டியார்கள் ஆங்கிலேயர்களின் நிதி ஆலோசகர்களாக வங்கி பன்னாட்டு வணிகத்தில் தழைத்தோங்கியதையும் கைக்கோளர்கள் தனிப்படை அமைத்துத் துணி வணிகத்தில் சிறந்து விளங்கியதையும் அறியலாம்
ஆட்சியில் அரசு நிர்வாகத்தில் நீதித் துறையில் மக்கட்தொகைக்கு அதிகமாக அந்தணர்கள் பதவிபெற்று மற்ற அந்தணரல்லாதவருக்கு வாய்ப்புக்கிடைப்பதைத் தடுக்கிறார்கள் என்று ஆரம்பித்த அரசியல் நீதிக்கட்சி, தி..க,  தி.மு.க என்று வழி வழியாக கண்மூடித்தனமாக வளர்ந்து தான் வளர வேண்டும் என்பதற்குப் பதிலாக வளர்ச்சியடைந்தவனின் உயரத்தைக் குறைக்கவேண்டும் என்று ஆட்சியாளர்களை வற்புறுத்தி அதை சமூக (அ)நீதி என்று நாமகரணம் செய்துவிட்டார்கள்.
நாகராசன்
2011/3/16 N. Ganesan <naa.g...@gmail.com>


On Mar 16, 1:11 am, "S.Krishnamoorthy"

<sundara.krishnamoor...@gmail.com> wrote:
> இரண்டு பிரதான சமூகங்கள் -
> மூன்று முக்கிய சமூகங்கள் என்பதே சரி. பார்ப்பனர்களைப் போலவே அரசு அலுவலங்கள்
> அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள நாயுடு-நாயக்கர் சமூகத்தை விட்டுவிடமுடியாது.
>

திரு. கிருஷ்ணமூர்த்தி,

உங்கள் மடல்கள் கேரளா தமிழ்ப் பேராசிரியர்கள்
கூறிவற்றை நினைவுக்கு கொண்டுவருகின்றன.
திருவனந்தபுரம் மன்னர் ஆட்சியில் எல்லா உயர்
பதவிகளும் நெல்லை தமிழ் பிராமணர்கள் வைத்திருந்தனர்.
அதை மாற்ற முதலில் நாயர்கள் சொசைட்டி ஆரம்பித்தனராம்.

இது சம்பந்தமாய்,
கனடாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் சரித்திர
பேராசிரியர் ராபின் ஜெஃப்ரி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Jeffrey, R. (1977) "The Malayali Origins of Anti-Brahminism in South
India", Indian Economic and Social History Review, XIV, 2, April-June,
255-68.

-------

Jeffrey, R. (1974) "The Social Origins of a Caste Association,
1875-1905: The Founding of the SNDP Yogam", South Asia, 4, 1974,
39-59.

Jeffrey, R. (1974) "The Temple-Entry Movement in Travancore,
1860-1940", Social Scientist (Trivandrum), 44, March, 3-27. Reprinted
in Social Compass, Louvain, special issue on religion and caste,
XXVIII, 2-3, 1981, 269-91.

NG


> 2011/3/16 கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com>
> S. Krishnamoorthy- Hide quoted text -
>
> - Show quoted text -

Raja sankar

unread,
Mar 16, 2011, 3:33:45 AM3/16/11
to mint...@googlegroups.com
கிருஷ்ணமூர்த்தி,

நாயர்களை வேண்டுமென்றே அரசு நிர்வாகத்தில் இருந்து பிரிட்டீஷார் தூக்கினார்கள். நாயர் தளவாய்கள், திவான்கள் செய்த கலமே காரணம். 

கொடும் இனவாதிகளான பிரிட்டீஷார் தங்களுடைய ஆட்சிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். முன்பு ஆட்சியிலும் அரசதிகாரத்திலும் இருந்த சமூகங்கள் எதுவும் பிரிட்டீஷாரின் ஆட்சியில் அரசு வேலைக்கு வந்துவிடவில்லை. 

கிரிமினல் டிரைப்ஸ் ஆக்டும், மார்டியல் ரேசஸ் தியரிகளும் இதை முன்னெடுத்தன. சாதியை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே சாதீய, இனவாதங்களை முன்னெடுத்தார்கள். பிராமணர்கள் அரசு வேலைகளில் எடுக்கப்பட்ட காரணம் அவர்களால் அரசுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடாது என்று கருதியே தவிர அவர்கள் கல்வி கற்றார்கள் என்பதெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள்.  எந்த சாதியால் ஆபத்து வராதோ, எந்த சாதி மக்கள் தொகையில் குறைவாக இருக்கிறார்கள், எந்த சாதியை அரசு வேலைகளில் எங்கு வைத்தால் சிக்கல் இல்லை என்று பார்த்துதான் வேலை வாய்ப்புகள் தரப்பட்டன. 

குற்றபரம்பரை சட்டம் இப்போது தொடர் குற்றவாளிகள் சட்டமாக இன்னமும் இருக்கிறது. சாதி சமத்துவம் என்று வாய் கிழிய பேசும் ஆட்கள் பிரிட்டீஷாரால் கொண்டு வரப்பட்ட சாதிச்சட்டங்கள் எதிர்த்து ஒரு துரும்பைக்கூட நகர்த்தமாட்டார்கள். 

ராஜசங்கர்

2011/3/16 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

devoo

unread,
Mar 16, 2011, 4:12:58 AM3/16/11
to மின்தமிழ்
நீதிக்கட்சியினரின் மாய்மாலங்களை ம.வெங்கடேசன் என்பவர்
‘தமிழ் ஹிந்து’ தளத்தில் எழுதி வந்தார்; புத்தகமாகவும் வெளியானது
என்று நினைக்கிறேன்

தேவ்

On Mar 15, 2:26 pm, gnana bharathi <dgbhara...@gmail.com> wrote:

> 2011/2/7 gnana bharathi <dgbhara...@gmail.com>
>
> > *ஐந்தாவது இழப்பு (சூறை அல்லது சுனாமி போன்றது)*


> > இந்திரா காந்திக்கு, அவரின் அரசுக்கு, தமிழகத்தை மேலும் சீரழிக்க வேண்டுமென்று
> > தோன்றியதோ அல்லது வேறு காரணமோ மேலும் ஒரு பெரிய இழப்பை தமிழகத்திற்கு செய்வதாக
> > எண்ணி இந்தியாவிற்கும் செய்தார்.
>
> > 1976 ஆம் ஆண்டு மேலும் ஒரு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.
> > இவ்வொப்பந்தத்தில் 1974 ல்  வரைந்த எல்லைக்கோட்டை நீட்டிப்பது/
> > முழுமைப்படுத்துவது என்ற நோக்குடன் நடந்தது. 1974 ல் வெளியுறவுத்துறை அமைச்சரை
> > தமிழக முதவருடன் பேச வைத்ததை போல இம்முறை செய்யவேண்டுமென்று நினைக்க வில்லை
> > என்று படுகிறது.
>

> ...
>
> read more »

Dhivakar

unread,
Mar 16, 2011, 4:48:59 AM3/16/11
to mint...@googlegroups.com
>>பிராமணர்கள் அரசு வேலைகளில் எடுக்கப்பட்ட காரணம் அவர்களால் அரசுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடாது என்று கருதியே தவிர அவர்கள் கல்வி கற்றார்கள் என்பதெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதைகள்.  எந்த சாதியால் ஆபத்து வராதோ, எந்த சாதி மக்கள் தொகையில் குறைவாக இருக்கிறார்கள், எந்த சாதியை அரசு வேலைகளில் எங்கு வைத்தால் சிக்கல் இல்லை என்று பார்த்துதான் வேலை வாய்ப்புகள் தரப்பட்டன<<

புரிதலில் தவறோ..

பிராம்மண சாதியால் ஆட்சிக்கு ஆபத்து வராது என்று யார் சொன்னார்கள்?. 
சரித்திரத்தின் பக்கங்கள் அப்படி சொல்லாமல் நேர் மாறாக சொல்லுகின்றன.

தி
 


2011/3/16 Raja sankar <errajasa...@gmail.com>
கிருஷ்ணமூர்த்தி,

நாயர்களை வேண்டுமென்றே அரசு நிர்வாகத்தில் இருந்து பிரிட்டீஷார் தூக்கினார்கள். நாயர் தளவாய்கள், திவான்கள் செய்த கலமே காரணம். 

கொடும் இனவாதிகளான பிரிட்டீஷார் தங்களுடைய ஆட்சிக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். முன்பு ஆட்சியிலும் அரசதிகாரத்திலும் இருந்த சமூகங்கள் எதுவும் பிரிட்டீஷாரின் ஆட்சியில் அரசு வேலைக்கு வந்துவிடவில்லை. 

கிரிமினல் டிரைப்ஸ் ஆக்டும், மார்டியல் ரேசஸ் தியரிகளும் இதை முன்னெடுத்தன. சாதியை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே சாதீய, இனவாதங்களை முன்னெடுத்தார்கள்.



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Nagarajan Vadivel

unread,
Mar 16, 2011, 5:04:57 AM3/16/11
to mint...@googlegroups.com
//எந்த சாதியை அரசு வேலைகளில் எங்கு வைத்தால் சிக்கல் இல்லை என்று பார்த்துதான் வேலை வாய்ப்புகள் தரப்பட்டன//
அரசின் உயரிய பதவியான ஐ.சி.எஸ் தேர்வுபெற்றவர்கள் சில பிராமணர்கள் ஆங்கில அரசை எதிர்த்தனர்
அரசுப்பதவியீருந்து விலகிப் பல பிராமணர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆங்கிலேயர்கள் இந்த சாதியனர் மட்டுமே தேவை என்று வெளிப்படையாக விருப்பம் தெரிவித்ததற்குச் சான்று இல்லை
வாய்ப்புகளை மற்ற சாதியினரைவிட பிர்மணர்கள் அதிகம் பயன் படுத்திக்கொண்டது அவர்கள் தங்களைச் சூழலுக்கு ஏற்றவாரும் எதிர்கால்த்தைச் சரியாகக் கணித்தும் வாழ்வைத் திட்டமிட்டதால் பெற்ற பலன்
நாகராசன்


2011/3/16 Dhivakar <venkdh...@gmail.com>

Raja sankar

unread,
Mar 16, 2011, 5:40:39 AM3/16/11
to mint...@googlegroups.com
ஆங்கிலேயர் வந்தபோது அப்போது யார் எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலையை வைத்துதான் கணிக்கப்பட்டார்கள். 
ஆங்கிலேயர் ஆட்சி பிடிக்கும் கால கட்டத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு பதவிகளில் இருந்தார்கள் என பார்த்தால் தான் போதுமானது. 

யாரும் தங்களிடம் இருக்கும் பதவியையோ, அதிகாரத்தையோ விட்டு தரமாட்டார்கள். போராடுவார்கள். வரலாறு அவைகளை பதிவு செய்துள்ளது. பதவியில் இல்லாதவர்கள் ஆதிக்கத்தில் இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? 

ராஜசங்கர்

2011/3/16 Dhivakar <venkdh...@gmail.com>

Raja sankar

unread,
Mar 16, 2011, 5:42:44 AM3/16/11
to mint...@googlegroups.com
இவைகள் எல்லாம் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில். ஆங்கிலேயர் ஆட்சியை பிடித்தது 19 ஆம் நூற்றாண்டில். 

ஆங்கிலேயர் இந்த சாதிகள் இந்த வேலைக்கு என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டுதான் போயிருக்கிறார்கள். நாம் தான் அவர்களை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு அவர்களின் இனவெறியை புரிந்து கொள்ள மறுக்கிறோம். 

ராஜசங்கர்


2011/3/16 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 16, 2011, 6:35:13 AM3/16/11
to mint...@googlegroups.com


16 மார்ச், 2011 2:11 am அன்று, S.Krishnamoorthy <sundara.kri...@gmail.com> எழுதியது:

இரண்டு பிரதான சமூகங்கள் -
மூன்று முக்கிய சமூகங்கள் என்பதே சரி. பார்ப்பனர்களைப் போலவே அரசு அலுவலங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள நாயுடு-நாயக்கர் சமூகத்தை விட்டுவிடமுடியாது.

 
 
இவர்கள் தெற்கு சீமை நாய்க்கர்கள்
 
கோவை நாய்க்கர்கள் எல்லாரும் தொழில்தான், அல்லது அமெரிக்காதான்
 
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 16, 2011, 7:38:31 AM3/16/11
to மின்தமிழ்
திரு ராஜசங்கர்!

இந்த விஷயத்தைப் பற்றி சொல்வதற்கு, நீங்கள் சொல்வதை மறுப்பதற்கு ஏராளமான
குறிப்புக்கள், தரவுகள் என்னிடம் உண்டு.ஆனால் அதையெல்லாம் இங்கே
விவாதிக்கப் புகுந்தால், அரசியல் பேசுவதும் தவிர்க்க
முடியாததாகிவிடும்.அப்புறம் கண்ணன் வந்து இந்த வம்பர்கள் தொல்லை தாங்க
முடியவில்லை என்று மறுக ஆரம்பித்துவிடுவார்!

:-)))

தவிர வரலாற்றை எப்படிப் புரிந்துகொள்வது என்பதிலேயே உங்களுக்கும்
எனக்கும் நிறைய இடைவெளி இருக்கிறது.

------------------------
அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

Raja sankar

unread,
Mar 16, 2011, 9:05:08 AM3/16/11
to mint...@googlegroups.com
கிருஷ்ணமூர்த்தி,

இருக்கலாம். நீங்கள் மட்டுமல்ல எத்தினையோ பேர் ஒரு தரப்பான தரவுகளை ஆதாரங்களை மட்டும் எடுத்துப்போட்டு வரலாற்றை ஆராய்கின்றனர். 

என்னுடைய அவதானிப்புகள், முடிபுகள் கீழ்கண்டவைகளில் இருந்து வருகின்றன. 

1. ஆங்கிலேயர் நாட்டை அடிமைபடுத்தவும், கொள்ளையடிக்கவும் வந்தனர். இந்தியர்களுக்கு நல்லது செய்ய அல்ல. 
2. தாங்களே உயர்ந்தவர்கள், கலாச்சாரத்தில் சிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்பதை அரசாங்க கொள்கையாக வைத்திருந்தவர்கள். White Man's burden
3. தங்களுக்கு எது சரியோ அதை மட்டும் செய்தனர். எப்போதெல்லாம் இந்தியர்களை பிரிக்க சந்தர்ப்பம் கிடைத்தோ அதை நன்கு பயன்படுத்தினார்கள். Separate electorate for Muslims, etc 
4. இனவாத, மொழிவாத, வகுப்பு வாத கொள்கைகளை மட்டும் பரப்பினர். Martial Races, Aryan Invasion Theories. Criminal Tribes act. etc. 
5. இங்கிருந்த அறிவுசார்ந்த செல்வங்கள் அனைத்தையும் அழித்தொழித்தனர். 

நீங்கள் இதை மறுத்து தலித்துகளுக்கு உரிமை கொடுத்தார்கள், பெண்களுக்கு உரிமை கொடுத்தார்கள் என சொல்லாம். ஆனால் ஆழ்ந்து படிக்கும் போது அவற்றிக்கான ஆரம்பம் இந்தியர்களிடம் தான் ஆரம்பிக்கிறது. ஆட்சியாளர்களாக இருந்ததால் நடக்கும் நல்லதும் அவர்களிடம் சேர்ந்தது. இதை இப்போதையை ஆட்சியையும் மீறி பொருளாதாரம் நன்றாக இருப்பது போல். உண்மையில் ஆட்சியாளர்கள் செய்யும் தீங்கையும் மீறித்தான் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏதோ பெரும் காரியம் செய்தது போல் உரிமை கொண்டாடுகிறார்கள். 



ராஜசங்கர்

2011/3/16 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 16, 2011, 9:27:15 AM3/16/11
to மின்தமிழ்
On Mar 16, 1:11 am, "S.Krishnamoorthy"

<sundara.krishnamoor...@gmail.com> wrote:
> இரண்டு பிரதான சமூகங்கள் -
> மூன்று முக்கிய சமூகங்கள் என்பதே சரி. பார்ப்பனர்களைப் போலவே அரசு அலுவலங்கள்

> அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள நாயுடு-நாயக்கர் சமூகத்தை விட்டுவிடமுடியாது.

திரு. கிருஷ்ணமூர்த்தி,

உங்கள் மடல்கள் கேரளா தமிழ்ப் பேராசிரியர்கள்
கூறிவற்றை நினைவுக்கு கொண்டுவருகின்றன.
திருவனந்தபுரம் மன்னர் ஆட்சியில் எல்லா உயர்
பதவிகளும் நெல்லை தமிழ் பிராமணர்கள் வைத்திருந்தனர்.
அதை மாற்ற முதலில் நாயர்கள் சொசைட்டி ஆரம்பித்தனராம்.

இது சம்பந்தமாய்,
கனடாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் சரித்திர
பேராசிரியர் ராபின் ஜெஃப்ரி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Jeffrey, R. (1977) "The Malayali Origins of Anti-Brahminism in South
India", Indian Economic and Social History Review, XIV, 2, April-
June,
255-68.

-------

Jeffrey, R. (1974) "The Social Origins of a Caste Association,
1875-1905: The Founding of the SNDP Yogam", South Asia, 4, 1974,
39-59.

Jeffrey, R. (1974) "The Temple-Entry Movement in Travancore,
1860-1940", Social Scientist (Trivandrum), 44, March, 3-27. Reprinted
in Social Compass, Louvain, special issue on religion and caste,
XXVIII, 2-3, 1981, 269-91.

NG

> 2011/3/16 கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com>

Raja sankar

unread,
Mar 16, 2011, 9:58:08 AM3/16/11
to mint...@googlegroups.com
தெலுங்கு நியோகி பிராமணர்கள் மட்டும் அல்ல. எல்லோரும் தான் நாயக்க மன்னர்கள் காலத்தில் இருந்தார்கள். சவுராஷ்டிரர்களை பிராமணர்கள் என அறிவித்தது இந்தியாவில் அரசர்கள் தான் யார் என்ன சாதி என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்திருந்தார்கள் என்பதற்கு ஒர் நல்ல உதாரணம். 

மராத்திய அரசில் படைவீரர்களாக இருந்த மகர்கள் பிரிட்டீஷார் வந்தவுடன் படையில் இருந்து விலக்கப்பட்டனர். இவ்வளவுக்கும் அவர்கள் சத்ரபதி சிவாஜி காலத்தில் இருந்து படைவீரர்களாக இருந்தவர்கள். 

தென்னிந்தியாவுக்கு ரயத்துவாரியும் வட இந்தியாவுக்கு ஜமீன்தாரியும் கொண்டு வந்தவர்கள். இங்கு பிரச்சினைகள் பெரிதாக இல்லை நேரடி ஆட்சி சரி எனவும் அங்கு பிரச்சினைகள் நிறைய உண்டு, அவுட்சோர்சிங் செய்து விடலாம் எனவும் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது. 

ராஜசங்கர்

2011/3/16 N. Ganesan <naa.g...@gmail.com>


On Mar 16, 4:40 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> ஆங்கிலேயர் வந்தபோது அப்போது யார் எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலையை
> வைத்துதான் கணிக்கப்பட்டார்கள்.
> ஆங்கிலேயர் ஆட்சி பிடிக்கும் கால கட்டத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு
> பதவிகளில் இருந்தார்கள் என பார்த்தால் தான் போதுமானது.
>
> யாரும் தங்களிடம் இருக்கும் பதவியையோ, அதிகாரத்தையோ விட்டு தரமாட்டார்கள்.
> போராடுவார்கள். வரலாறு அவைகளை பதிவு செய்துள்ளது. பதவியில் இல்லாதவர்கள்
> ஆதிக்கத்தில் இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
>
> ராஜசங்கர்
>

விஜயநகருக்குப் பின்னர் நாயக்க மன்னர்கள்
ஆட்சியில் தெலுங்கு நியோகி பிராமணர்கள்
அதிகாரிகளாய் இருந்ததைப் பார்த்து
ஆங்கிலேயர் ஆட்சி வடித்தமைக்கப்பட்டது.
மராட்டியர் ஆட்சியில் பேஷ்வாக்களுக்கு
இருந்த பங்கு பெரியது. 14-ஆம் நூற்றாண்டில்
விஜயநகருக்கு அப்புறம் ஹிந்துத்துவ ஆட்சி
டில்லி துருக்க சுல்தான்களுக்கு எதிராய் நிறுவ
வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியை எப்படி அமைப்பது
என்று திட்டம் வகுத்தவர் சர் தாமஸ் மன்ரோ.

விவரங்களுக்கு:
Burton Stein, Thomas Munro: The Origins of the Colonial State and his
Vision of Empire, Oxford University Press (1990)

சென்னை கடற்கரையில் குதிரை மீது மன்ரோ உள்ள
சிலை இருக்கிறது. ஒரு வெள்ளைக்காரர் தம் குழந்தையிடம்
மன்ரோவைப் பார் என்றதாகவும், அச் சிறுமி, மன்ரோ மீது
யார் ஆரோகணித்துள்ளார்? என்ரதாகவும் ஜோக் சொல்வார்கள்.
குதிரை அவ்வளவு தத்ரூபம் என்ப.

நா. கணேசன்

ஞானபாரதி

unread,
Mar 16, 2011, 1:08:04 PM3/16/11
to மின்தமிழ்
திரு கிருஷ்ணமூர்த்தி,
நான் கூறியதிலிருந்து தாங்கள் வேறுபடுவது போல் எனக்கு தெரியவில்லை. நான்
தமிழகச் சூழலை மட்டுமே எடுத்துக்கொண்டேன். அரசன் முதல் என்றில்லாமல்
போனபோது ஆங்கிலேயர் ஆட்சியில் பார்ப்பனர் முதலில் தலை எடுத்தனர். அடுத்து
முதலியார், செட்டியார், பிள்ளைமார் என்போர் மேலெழ முயற்சித்தனர். அவர்கள்
தங்களின் தேவைகளுக்காக உருவாக்கியதே நீதிக்கட்சி. உயர்ந்த சமூகம்
ஒன்றென்று இருந்தது இரண்டு, மூன்று, நான்கு என்றானது.

நீதிக்கட்சியின் பிற்போக்கால், தமிழரை முதன்மைபடுத்தக்கூடாது என்ற
போக்கால், உயர்ந்த சமூகம் என்பவை ஐந்து, ஆறு எனப் பெருகி வளராமல்
போனது....... என்பதே பார்வை

அன்புடன்
பாரதி

ஞானபாரதி

unread,
Mar 16, 2011, 1:13:18 PM3/16/11
to மின்தமிழ்
திரு ராஜா சங்கர்,

"4. இனவாத, மொழிவாத, வகுப்பு வாத கொள்கைகளை மட்டும் பரப்பினர். Martial
Races,
Aryan Invasion Theories. Criminal Tribes act. etc."
என்பது எனக்கு தெளிவாகப் புரியவில்லை. சண்டையிட வலிவுள்ளவர்களைப்
ஆட்சியாளர் பயன்படுத்தினர். ஆரிய படையெடுப்பு என்பது ஆய்வாளகளின் கூற்று,
என்ற அளவில் தான் என்று எண்ணினேன்

அன்புடன்
பாரதி

On Mar 16, 6:05 pm, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> கிருஷ்ணமூர்த்தி,
>

> இருக்கலாம். நீங்கள் மட்டுமல்ல எத்தினையோ பேர் ஒரு தரப்பான தரவுகளை ஆதாரங்களை
> மட்டும் எடுத்துப்போட்டு வரலாற்றை ஆராய்கின்றனர்.
>
> என்னுடைய அவதானிப்புகள், முடிபுகள் கீழ்கண்டவைகளில் இருந்து வருகின்றன.
>
> 1. ஆங்கிலேயர் நாட்டை அடிமைபடுத்தவும், கொள்ளையடிக்கவும் வந்தனர்.
> இந்தியர்களுக்கு நல்லது செய்ய அல்ல.
> 2. தாங்களே உயர்ந்தவர்கள், கலாச்சாரத்தில் சிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும்
> காட்டுமிராண்டிகள் என்பதை அரசாங்க கொள்கையாக வைத்திருந்தவர்கள். White Man's
> burden
> 3. தங்களுக்கு எது சரியோ அதை மட்டும் செய்தனர். எப்போதெல்லாம் இந்தியர்களை
> பிரிக்க சந்தர்ப்பம் கிடைத்தோ அதை நன்கு
> பயன்படுத்தினார்கள். Separate electorate for Muslims, etc
> 4. இனவாத, மொழிவாத, வகுப்பு வாத கொள்கைகளை மட்டும் பரப்பினர். Martial Races,
> Aryan Invasion Theories. Criminal Tribes act. etc.
> 5. இங்கிருந்த அறிவுசார்ந்த செல்வங்கள் அனைத்தையும் அழித்தொழித்தனர்.
>
> நீங்கள் இதை மறுத்து தலித்துகளுக்கு உரிமை கொடுத்தார்கள், பெண்களுக்கு உரிமை
> கொடுத்தார்கள் என சொல்லாம். ஆனால் ஆழ்ந்து படிக்கும் போது அவற்றிக்கான ஆரம்பம்
> இந்தியர்களிடம் தான் ஆரம்பிக்கிறது. ஆட்சியாளர்களாக இருந்ததால் நடக்கும்
> நல்லதும் அவர்களிடம் சேர்ந்தது. இதை இப்போதையை ஆட்சியையும் மீறி பொருளாதாரம்
> நன்றாக இருப்பது போல். உண்மையில் ஆட்சியாளர்கள் செய்யும் தீங்கையும் மீறித்தான்
> பொருளாதாரம் நன்றாக இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏதோ பெரும் காரியம் செய்தது போல்
> உரிமை கொண்டாடுகிறார்கள்.
>
> ராஜசங்கர்
>

> 2011/3/16 கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com>

gnana bharathi

unread,
Mar 16, 2011, 1:16:41 PM3/16/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: gnana bharathi <dgbha...@gmail.com>
Date: 2011/2/15
Subject: Re: தமிழர்களின் பாராமுகமும் உயர்வு நவிற்சிப் பார்வையும் - ஏற்பட்ட இழப்புகளும்
To: tamil...@googlegroups.com


சென்னை மாகாணத்தில் மூன்று விழுக்காடு மக்கள் தொகை கொண்ட பார்பனர்கள் அரசு அமைப்பில் அனைத்து வேலைகளையும் தமதாக்கிக் கொண்டதுடன் அரசியல் அரங்கிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டதே, தகுதியுடையவராக நிருபித்தும் வாய்ப்பை இழந்த/மறுக்கப்பட்ட மற்ற ஆளும் சமூகப்பிரிவுகளுக்குள், எதிர்ப்பு கிளம்பக் காரணமாகியது. 

எனவே, நீதிக்கட்சி என்பது பார்பனரல்லாத மொத்த சமூகத்தின் வெளிப்பாடாக இல்லாமல் ஓரங்கட்டப்பட்ட ஆளுமைத் திறன் கொண்டிருந்த சில சமூகங்களின் எதிர்ப்புக் குரலாகவே இருந்தது. 

இந்த எதிப்பு 1895 முதல் வெளிப்படத் தொடங்கியது.  முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்களாலேயே உணரப்பட்டு அது அக்கட்சியினரால் ஏற்றுக்கொள்ளப் படாததால் வெறுப்புற்று வெளியேறியவர்களால் தான் 1920 ல் நீதிக்கட்சியாக உருபெற்றது.

இவ்வாறு வெளியேறியவர்களின் செயல்திறனை/வளர்ச்சியை முடக்க காங்கிரஸ் கட்சி தன் கட்சியிலிருந்த பார்பனரல்லாதவர்களை வெளிப்படுத்தி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்ச்சித்தது. காங்கிரஸ் கட்சி திரு.வி.க., இ.வே.ராமசாமி, பி.வராதலாஜுலு நாயுடு, கேசவன் பிள்ளை போன்றோரைப் பயன்படுத்தி தன் முகத்தை மறைத்துக்கொண்டதேயோழிய மற்ற சமூகங்களின் வளர்ச்சியை முன்னிறுத்த துணியவில்லை.

மேலும் இந்திய அளவில் 1920  ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்ததால் நீதிக்கட்சி பெருவாரியாக வெற்றி பெற்றது.  அக்கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி தாம் பதவி ஏற்காமல், சுப்பராயலு ரெட்டியை முதல்வராகவும், பனகல் ராஜா (பணங்கன்ட்டி ராமராயநிங்கர் )  மற்றும் குமாரவேங்கட்ட ரெட்டிநாயுடு ஆகிய இருவரை அமைச்சர்களாகவும் நியமித்தார். 
1923 தேர்தலிலும் வெற்றி பெற்றதை அடுத்து தியாகராயர் பனகல் ராஜா, எ.பி. பெட்ரோ மற்றும் குமார வேங்கட ரெட்டிநாயுடு ஆகியோரை அமைச்சர்களாக்க பரிந்துரை செய்தார். 

தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை நடேச முதலியார் போன்றவர்கள் சுட்டிக்காட்டி எதிர்த்ததைத் தொடர்ந்து குமார வேங்கட ரெட்டி நாயுடுவை நீக்கிவிட்டு சிவஞானம் பிள்ளையை அமைச்சராக்கினார். 
1925 ல் தியாகராயர் மறைந்தார்.  பனகல் ராஜா தலைவரானார்.
(தியாகராயரும் பின்னாளில் இருந்த பொட்டி ஸ்ரீராமுலுவும் ஆந்திர மக்களால் என்றும் பாராட்டக் கூடியவர்கள்.ஆனால் தமிழகத்தில் பின்னவர் மறக்கடிக்கப் பட்டும் முன்னவர் போற்றப்பட்டும் நினைவு கூறப்படுகிறார்கள். தியாகராய நகர் என்று அவர் பெயரால் சென்னையின் ஒரு பகுதி இன்றும் அழைக்கப்படுகிறது, அவரின் சேவைகளுக்காக.)
 
1928 ல் பனகல் ராஜா மறைந்தார். பி. முனிசாமி நாயுடு தலைவரானார்.
1930 ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற நீதிக்கட்சியில் முனுசாமி நாயுடு முதல்வராகவும் பொன்னம்பல தியாகராஜ முதலியார் (பி.டி ராஜன்) மற்றும் குமாரசாமி ரெட்டியாரும் அமைச்சர்களானார்கள்.  பி.டி. ராஜனும் குமாரசாமியும் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டதால் தன் நிலையை நிலைநிறுத்திக்கொள்ள விரும்பிய முனுசாமி நாயுடு மூன்று ஆண்டுகளாக கட்சியின் தேர்தலை நடத்தாமலேயே இருந்தார்.

இடையே, முத்தையாச் செட்டியார் போன்றோரின் எதிர்ப்பின் காரணமாக முனுசாமி நாயுடு பதவி விலகினார். அதனால் நீதிக்கட்சியின் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல்வராகவும் பொப்பிலி ராமகிருஷ்ண ரங்காராவ் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு மறைந்தார்.

1937 ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி முற்றிலுமாகத் தோல்வி அடைந்தது.
 
நீதிக்கட்சி தெலுங்கர் தலைமை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. இதை உணர்ந்த, ஆளுமை உடைய நடேச முதலியார், ராமசாமி முதலியார், முத்தையாச் செட்டியார் போன்றவர்களால் தம் சமூகத்தைக் கூட முன்னிறுத்த முடியவில்லை.

பார்ப்பனரோ இவற்றை சுட்டிக்காட்டி நீதிக்கட்சியின் பொய்முகத்தை வெளிக்காட்டச் செய்யாமல், தமிழ் பேசும் சமூகத்தினரை ஒன்றிணைக்காமல், கிடைத்தவரை கொள்ளலாம் என்றும்  பார்ப்பனர் தலைமைக்கு ஆபத்துவராமல் இருந்தால் போதுமென்றும் இருந்தனர்.

நாட்டை கைப்பற்றி ஆண்டவர்களை எதிர்க்காமல் அவர்களின் ஆளுமையை முற்றிலும் ஏற்று அடிமை வாழ்வில் சுகம் காண விரும்பிய கட்சிதான் நீதிக்கட்சி. தொடங்கிய நாள் முதல் முற்றிலுமாக வீழ்த்தப்பட்ட நாளுக்கு முதல்நாள் வரை அதன் தலைமையில் தமிழர் இல்லை. ஆட்சி செய்தபோதெல்லாம் தமிழர் புறக்கணிப்பு. 

நீதிக்கட்சி கொண்டுவந்த திட்டங்களில் மிகவும் போற்றப்படுவது இடஒதுக்கீடு என்பதாகும்.  தலைமையைக் கைப்பற்றிய பிறகும் தம் மக்களுக்கு இடஒதுக்கீடு என்ற நோக்கு ஒரு பிற்போக்காகவே கருதப்பட வேண்டும்.

பெண்களுக்கும் அரசியல் பங்களிப்பு கொடுத்தது சிறப்பான ஒரு செயல். இன்று வரை தமிழ் நாட்டில் சமூக, மருத்துவ, சாதிய போன்றவற்றிற்கே பெண்கள் அமைச்சர்களாகிறார்கள். இப்பொழுதுதான் தகவல் தொழில்நுட்ப அமைச்க்கர்ராக பெண் பொறுப்பேற்றுள்ளார்.

முன்பே இருந்த சென்னை பல்கலைக்கு நிகராக ஆந்திரப்பகுதியில் ஆந்திரப் பல்கலையை உருவாக்கினர்.  பல போராட்டங்களுக்குப் பிறகு அண்ணாமலை பல்கலை உருவாக ஒப்புதல்.
அதனால்தான்,
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12799&Itemid=193  
போன்ற வெளிப்பாடுகளால் அவர்கள் இன்றும் நினைவுருத்தப்படுகிறார்கள்.


2011/2/14 gnana bharathi <dgbha...@gmail.com>
பேரா. செல்வா,
நான் கொடுப்பவை பெரும்பாலும் ஏற்கனவே பதிவானவற்றின் தொகுப்புகளே.அவற்றை ஏற்பதும் மறுப்பதும் என்னைச் சார்ந்ததில்லை. பதிவகளுக்குப் பின்வரும் என் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டால் அவை மறுப்புகளும் திருத்தங்களும் ஏற்று தெளிவு பெரும் என்பதே என் நோக்கம்.

அன்புடன்
பாரதி .
 (தொகுப்பிற்கும் பதிப்புரிமை கோரலாம்தான், கல்லூரிகளில் பேராசிரியர்கள் தங்களின் தொகுப்புகளை மாணவர்கட்கு தராமல் இருப்பதை பலரும் அறிவர், அது சரியா?) 

2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>
1912 ல் உருவான மெட்ராஸ் யுனைட்டட் லீக், 1914 ல் அது மெட்ராஸ் திராவிட சங்கம் (Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் அடைந்த வரை திராவிடம் என்பது தென்னிந்திய மொழிகளின் குழுப்பெயர் என்ற நிலையில் இருந்தது. இதில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு இன்னபிற மொழிகள் அனைத்தும் அடங்கும். 

1916 ல் தென்னிந்திய மக்கள் சங்கம் என்ற அமைப்பு உருவாகி, . தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு என்ற அரசியல் கட்சியையும் தொடங்கி ஆங்கில, தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் செய்தி வெளியிட முடிவு செய்த பொழுது தெலுங்கை திராவிட என்ற அடையாளமிடாமலும் தமிழைத்  தமிழ் என்ற அடையாளமிடாமலும் பிரித்தாளும் முறைமை தொடங்கி வைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஏற்பட்ட புரட்டுகளுக்கும் பித்தலாட்டங்களுக்கும் முதல் படியாக அமைந்தது இதுவே. (இவர்களின் ஆங்கில ஏட்டிற்கு ஜஸ்டிஸ் என்று பெயரிட்டதால் தென்னிந்திய முற்போக்கு கூட்டமைப்பு பின்னாட்களில் ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி)என்று அழைக்கப்பட்டது)

இந்திய விடுதலைப் போராட்டங்களில், முதல் இந்திய சுதந்திரப்போருக்குப் பின், இந்தியர் பெரும்பான்மையோர் ஈடுபட்டிருந்த காலங்களில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை என்ற நோக்கு மிகச் சிறிய குழுக்களிடமே இருந்தது.  தீவிரவாதியாகக் கருதப்பட்ட பால கங்காதர திலகர் வேண்டியதே சுயராஜ்யம் தான். 

ஆனால் வங்காளம் பிரிக்கப்பட்டதிலிருந்து (1905) இந்தியர்களிடையே ஒருமைப்பட்டு உணர்வும் ஆங்கிலேயரை விரட்ட வேண்டுமென்ற எண்ணமும் தலைத் தூக்கியது. இதன் விளைவாகவே பிரிந்த வங்காளம் 1912  ல் ஒன்றிணைக்கப்பட்டது. இந்நிலையில் முதல் உலகப்போர் 1914   ல் தொடங்கியது. ஆங்கிலேயருக்கு இந்தியரின் சேவை தேவைப்பட்டதால், இந்தியரின் பல கோரிக்கைகளை ஏற்றும் ஏற்பது போல் காட்டியும் தம் தேவைகளுக்கு இந்தியரின் சேவையை அவர்களின் உயிரை பன்படுத்திக்கொண்டனர். 
இதன் விளைவாகத்தான் மாண்டேகு-செமஸ்போர்டு சீர்திருத்தம், 1918, அதாவது இந்தியருக்கு சில அரசியல் உரிமைகள், சுயராஜ்யத்தை விட சற்றே குறைவாக, கொடுக்க சம்மதித்தனர்.
1918   ல் முதல் உலகப்போர் முடிந்தபின், 1919  ல் நடந்தேறிய ஜாலியன்வாலாபாக் கொடூரத்தின் விளைவாக இந்தியர்களிடையே விடுதலைப்போராட்டம் மிகத் தீவிரமடைந்து ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் போன்றவை நடை பெற்று வந்த காலத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த கட்சியின் பெயர் நீதிக்கட்சி, திராவிட இயக்கங்களின் முன்னோடிக் கட்சி. 
நாடு அடிமைப்பட்டிருப்பது பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முழு ஏற்பு கொடுத்த கட்சி தான் நீதிக்கட்சி. நல்லதோர் பெயர் அல்லவா!!!
1920 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் ஆட்சியமைத்தது. கட்சியின் தலைவராக இருந்த பிட்டி தியாகராய செட்டி ஆட்சிப் பொறுப்பேற்காமல் தன் வழியில் அரசாளும்படி தன் கட்சியினரைப் பணித்தார். காந்தியாருக்கு முன்னாலேயே பதவிமீது விருப்பம் காட்டாதவராகத் திகழ்ந்தாலும் இவர் பொட்டி ஸ்ரீராமுலு அவர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது தான் தமிழருக்கு இழப்பை ஏற்படுத்தியது. சென்னையின் சுற்று வட்டாரத்தில் பிறந்து சென்னையில் கல்விபயின்ற இவர் தான் உயிரோடு இருந்த வரை நீதிக்கட்சியின் சார்பில் அரசாளுபவர் தன் தாய்மொழியான தெலுங்கு பேசுபவராகத்தான் இருக்க வேண்டுமென்பதை செயல் படுத்தினார்.  http://en.wikipedia.org/wiki/Madras_Presidency_legislative_council_election,_1923  
1923ல் இதை உணர்ந்த தமிழ் பேசும் மக்கள் எதிர்ப்பு மற்றும் கட்சிப் பிளவு என்ற நிலைகளுக்கு ஆட்பட்ட பிறகு மூன்றுபேர் கொண்ட அமைச்சரவையில் ஒருவரை தமிழராகக் கொள்ளச் சம்மதித்தார் (முதல்வராக அல்ல). அதனால்தான் அண்ணா முதல் இன்றைய திராவிடர் வரை அவரை நினைக்க மறுப்பதில்லை. 

சென்னை மாகாணத்தின் வரைபடம்.
சென்னை மாகாணத்தில் நிஜாம் ஆண்ட ஐதராபாத் பகுதிகளும் (ஆந்திர கர்நாடக பகுதிகள்) கர்நாடகாவின் மைசூர் பகுதிகளும், கேரளாவின் திருவாங்கூர் பகுதிகளையும் கொண்ட பெரும் பரப்புகளும், ஆந்திராவிலுள்ள பங்கனப்பள்ளி, கேரளாவின் கொச்சின், கர்நாடகாவின் கூர்கு, மற்றும் தமிழகத்தின் புதுக்கோட்டை போன்ற சிற்றரசுகளும் இடம் பெறவில்லை. 
1871 மற்றும் 1901ஆம் ஆண்டுகளின் மக்கள்தொகை கணக்கீட்டின்படி சென்னை மாகாணத்தின் பெருவாரியான மக்களால் பேசும் மொழி தமிழ்.
பார்ப்பனர் வேண்டாமென்று தனித்தவர்கள் வேறொரு குழியில் விழுந்தது தொடங்கியது இதிலிருந்து தான் தொடங்கியது. நீதிக்கட்சி தன் செல்வாக்கை முற்றிலும் இழக்கும் நிலை வரை அதன் தலைவராகவும் அக்கட்சி ஆட்சி அமைத்தபோதேல்லாம் அதன் முதல்வராகவும் இருந்தவர்கள் யாரும் தமிழர்களாக இருக்கவில்லை.
                        
      


  
ல் 

       


2011/2/13 gnana bharathi <dgbha...@gmail.com>

ஆங்கிலேயர் இந்தியாவின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது முதல் பல்வேறுவகையான போர் போன்ற வன்மையான எதிர்ப்புகள் அவர்களை எதிர்த்து நடைபெற்றன. பின்னர் அவர்கள் நம்மை முழுமையாக ஆண்டபோது, வன்முறைப் போராட்டங்களை விட அறவழிப் போராட்டங்கள் முதன்மை பெற்றன. வன்முறைப் போராட்டங்கள் முற்றிலுமாக ஆங்கிலேயர்க்கு, அவர்தம் பணியாட்களுக்கு, அவர்களை ஒழித்துக்கட்ட அல்லது நாட்டைவிட்டு விரட்டிவிட என்ற நோக்கில் நடைபெற்றது. மாறாக, அறவழிப்போராட்டம் அவர்களை எதிர்த்தும், ஆதரித்தும், சில சலுகைகள் வேண்டியுமாக நடைபெற்றன.

இந்திய தேசிய காங்கிரஸ் முதலில் சில சலுகைகள் வேண்டியும், பின்னர் ஆதரித்தும் எதிர்த்தும் வந்தது. ராஜா ராம் மோகன்ராய் போன்றவர்கள் "சதி" போன்ற பழக்க வழக்கங்களை ஆங்கிலேயரின் துணை கொண்டே இந்தியாவிலிருந்து அகற்ற சட்டம் கொண்டுவந்தார். 

இவ்வாறான சூழலில் ஆங்கிலேயரின் கீழிருந்த சென்னை மாகாணத்தில் வேறு ஒரு கண்ணோட்டம் வெளிப்பட்டது. அது ஆங்கிலேயரை எதிர்ப்பது, ஆதரிப்பது என்றில்லாமல், அவர்களின் அரசமைப்பில் பங்குவேண்டுமென்ற விருப்பத்தின் விளைவாக தோன்றிய் எண்ணமாகும்.  

தமிழக மன்னர்களின் ஆட்சி காலங்களில் பார்பனருக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுவந்தன என்பது தற்பொழுது பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் உடல் உழைப்பு,  நுட்ப, நுணுக்க செயல்கள் என்பனவற்றிலிருந்து வேறுபட்டு சமய சடங்குகளை நடத்தும் நடைமுறை பாங்குகளின் முறைமைக்காக நிலம், பொருள், செல்வம் போன்றவற்றை ஈட்டனர்.  

2011/2/7 gnana bharathi <dgbha...@gmail.com>


2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>
2011/2/6 gnana bharathi <dgbha...@gmail.com>

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் அண்ணா "சீதையை வேண்டிச் சென்ற ராமனிடம் மற்றொரு பெண்ணைக் காட்டி சீதைக்குப் பதிலாக கூட்டிச்செல்லச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பாரோ" அதுபோல தங்கள் கோரிக்கை, தமிழகப் பகுதிகளை இழந்ததைப் பற்றிக் கவலை கொள்ளாமல், பரந்துபட்ட விந்தியமலைக்குக் தெற்கே உள்ள மொத்த பரப்பையும் திராவிட நாடாக இந்தியாவிடமிருந்து  பிரிப்பதுதான் தம் கொள்கை என்பது போல் பேரறிஞராக  அறிக்கை விடுத்தார்.  மாற்றவர்கள் தங்களைத் திராவிடர்களாக என்றுமே கருதியதில்லை என்றபோதிலும் அவர்களையும் தம்முடன் சேர்த்து தனிநாட்டை உருவாக்கும் நீண்டகாலத் திட்டம் கொண்டிருந்தார்.








needhikkatchi mu ka 1.JPG

gnana bharathi

unread,
Mar 16, 2011, 1:18:23 PM3/16/11
to mint...@googlegroups.com, mutht...@googlegroups.com, panb...@googlegroups.com

நீதிக்கட்சி தொடக்கமும் வளர்ச்சியும் நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த ஒரு சமூகத்தின் சில குலங்கள்  மீண்டெழ முயற்சித்ததன் முதல் வெளிப்பாடாகும். 

மராட்டிய, தெலுங்கு (விஜயநகர), முஸ்லிம் மன்னர்களின் ஆதிக்கத்தின்போது தமிழ் மன்னர்கள் வைத்திருந்த நிலையைப் செல்வாக்கு பெற்றிருந்த மக்கள் கூட  பெற்றிருக்க முடியாது. அக்காலத்தில் வேளாண்மையும் வணிகமுமே வாழ்வாதாரங்களாக இருந்திருக்க வேண்டும். அதிலும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலையில் மக்கள் இருந்திருப்பர். 

ஆங்கிலேயர் ஆட்சி சில சமூகங்களுக்கு புதிய உரிமைகளையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்கின. இதில் செட்டியார், முதலியார், பிள்ளைமார் போன்றோர் தனித்து, வணிகம், தொழில், வேளாண்மை என்று  தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர்.  பார்ப்பனர், அரசு சார்ந்த அமைப்புகளில் நுழைந்து தங்கள் நிலையை நிலை நிறுத்திக்கொண்டனர்.  அரசு சார்ந்த அமைப்பில் இருந்தவர்களுக்கு மற்றவர்களின் மீது ஆளுமை செலுத்தக்கூடிய நிலை உள்ளதை நாளடைவில் வளர்ந்த சமூகங்கள் உணரத் தொடங்கியதன் விளைவே அவர்களின் உரிமைப் போராட்டங்கள் நடைபெற்றன.

வளர்ந்த இச் சமூகங்களின் உரிமைப் போராட்டங்கள் அரசியல் வடிவெடுத்து பார்ப்பனரிடமிருந்து ஆட்சியைப்  பறித்து தமதாக்கிக் கொள்ளாமல் மற்றவரிடம் கொடுத்ததாக அமைந்தது. இந்தியாவிலும் கடல் கடந்தும் செழிப்புற்ற சமூகங்கள் ஆளுமையைப் பெறாதது அடுத்து ஏற்பட்ட தாக்கங்களால் (தாக்குதல்களால்)  உயர் நிலையை அடையாமல் போயின.  பார்ப்பனரும் கூட்டுசேராமல் கிடைத்தவரை லாபம் என்று கருதியதால் அடுத்து ஏற்பட்ட தாக்கங்களுக்கு உள்ளாயின.  இச்சமூகங்களில் தனி நபர் வளர்ச்சியே உயர்வைக் கொடுத்ததேயன்றி ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியை அடையவில்லை.



2011/2/15 gnana bharathi <dgbha...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 16, 2011, 9:41:17 AM3/16/11
to மின்தமிழ்

On Mar 16, 4:40 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:

> ஆங்கிலேயர் வந்தபோது அப்போது யார் எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலையை
> வைத்துதான் கணிக்கப்பட்டார்கள்.
> ஆங்கிலேயர் ஆட்சி பிடிக்கும் கால கட்டத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு
> பதவிகளில் இருந்தார்கள் என பார்த்தால் தான் போதுமானது.
>
> யாரும் தங்களிடம் இருக்கும் பதவியையோ, அதிகாரத்தையோ விட்டு தரமாட்டார்கள்.
> போராடுவார்கள். வரலாறு அவைகளை பதிவு செய்துள்ளது. பதவியில் இல்லாதவர்கள்
> ஆதிக்கத்தில் இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்?
>
> ராஜசங்கர்
>

விஜயநகருக்குப் பின்னர் நாயக்க மன்னர்கள்

N. Ganesan

unread,
Mar 16, 2011, 2:46:04 AM3/16/11
to மின்தமிழ், cta...@googlegroups.com

On Mar 16, 1:11 am, "S.Krishnamoorthy"
<sundara.krishnamoor...@gmail.com> wrote:

> இரண்டு பிரதான சமூகங்கள் -
> மூன்று முக்கிய சமூகங்கள் என்பதே சரி. பார்ப்பனர்களைப் போலவே அரசு அலுவலங்கள்
> அனைத்திலும் நீக்கமற நிறைந்துள்ள நாயுடு-நாயக்கர் சமூகத்தை விட்டுவிடமுடியாது.
>

திரு. கிருஷ்ணமூர்த்தி,

உங்கள் மடல்கள் கேரளா தமிழ்ப் பேராசிரியர்கள்
கூறிவற்றை நினைவுக்கு கொண்டுவருகின்றன.
திருவனந்தபுரம் மன்னர் ஆட்சியில் எல்லா உயர்
பதவிகளும் நெல்லை தமிழ் பிராமணர்கள் வைத்திருந்தனர்.
அதை மாற்ற முதலில் நாயர்கள் சொசைட்டி ஆரம்பித்தனராம்.

இது சம்பந்தமாய்,
கனடாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் சரித்திர
பேராசிரியர் ராபின் ஜெஃப்ரி பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

Jeffrey, R. (1977) "The Malayali Origins of Anti-Brahminism in South
India", Indian Economic and Social History Review, XIV, 2, April-June,
255-68.

-------

Jeffrey, R. (1974) "The Social Origins of a Caste Association,
1875-1905: The Founding of the SNDP Yogam", South Asia, 4, 1974,
39-59.

Jeffrey, R. (1974) "The Temple-Entry Movement in Travancore,
1860-1940", Social Scientist (Trivandrum), 44, March, 3-27. Reprinted
in Social Compass, Louvain, special issue on religion and caste,
XXVIII, 2-3, 1981, 269-91.

NG


> 2011/3/16 கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com>

Raja sankar

unread,
Mar 16, 2011, 9:27:37 PM3/16/11
to mint...@googlegroups.com
அன்பின் ஞானபாரதி,

ஆங்கிலேயர் இங்கு வந்தபோது ஒரு மத்திய அரசு இல்லாமை, இருக்கும் மக்களுக்கிடையே ஒற்றுமை இல்லாமை போன்றவற்றை உபயோகிக்க எண்ணினர். அப்போதைய காலகட்டம் முகலாய அரசு வீழ்ந்து சீக்கியர்கள், மராத்தியர்கள் போன்றோர் வலுவான சக்தியாக உருவெடுத்த காலம். 

படையில் ஆள்சேர்க்க சில இனங்களை நீங்கள் சண்டையிட பிறந்தவர்கள் என்று சொல்லி சேர்த்தார்கள். அவர்கள் ஆங்கிலேயர் அரசுக்கு கட்டுபட தயாராக இருந்தவர்கள். பல இனங்களை குற்றப்பரம்பரையினர் என்று சொல்லி ஒடுக்கினார். இவர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரிட்டவர்கள். 
இது இரண்டும் சண்டையிட வலு உள்ளவர்களா இல்லையா என்று பார்த்து சேர்க்கப்படவில்லை. அப்படி பார்த்தால் பார்சிகள், பிராமணர்கள் என எல்லோரும் இந்திய ராணுவத்தில் இப்போது உள்ளார்கள். :-) 

இந்த ஆள் பிடிக்கும் முயற்சியையும் முஸ்ஸீம்களை காட்டி இந்துக்களையும், இந்துக்களை காட்டி முஸ்ஸீம்களையும் சேர்த்தார்கள். ஒன்றாக இருந்த பஞ்சாப்பில் இவர்கள் இப்படி செய்து ஆள் சேர்த்தது விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதே போல் கல்கத்தாவில் கலவரமா கூப்பிடு பஞ்சாபிகளை, பீகாரில் கலவரமா கொண்டுவா மதராஸிகளை என கலவரங்களை, ஆட்சிக்கு எதிரான போராட்டங்களையும் ஒடுக்க பிரித்தாளும் கொள்கையை நன்றாக பயன்படுத்தினர். 

இந்த போரிடும் இன கொள்கை, குற்றப்பரம்பரை சட்டம் பற்றி படிப்ப்து சமூக நீதிக்கான போராட்டம் என்பது பற்றி இன்னோர் பரிமாணத்தை காட்டும். நேரம் கிடைத்தால் விரிவாக ஒரு பதிவு இடலாம் என்றிருக்கிறேன். 

ராஜசங்கர்

2011/3/16 ஞானபாரதி <dgbha...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Raja sankar

unread,
Mar 16, 2011, 9:33:04 PM3/16/11
to mint...@googlegroups.com
//நீதிக்கட்சி தொடக்கமும் வளர்ச்சியும் நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த ஒரு சமூகத்தின் சில குலங்கள்  மீண்டெழ முயற்சித்ததன் முதல் வெளிப்பாடாகும். 
//

//வளர்ந்த இச் சமூகங்களின் உரிமைப் போராட்டங்கள் அரசியல் வடிவெடுத்து பார்ப்பனரிடமிருந்து ஆட்சியைப்  பறித்து தமதாக்கிக் கொள்ளாமல் மற்றவரிடம் கொடுத்ததாக அமைந்தது. இந்தியாவிலும் கடல் கடந்தும் //

இந்த இரண்டும் சுத்தப்பொய்கள். எந்த சமூகமும் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக இருக்கவில்லை. பார்பனர்கள் எனும் சாதி என்றைக்கும் ஆட்சி புரியவில்லை. 

சமூக நீதிக்கான போராட்டம் என்பது காலம் காலமாக இந்தியாவில் நடந்து வந்த ஒன்று. ஒவ்வொரு காலகட்டதில் அதற்கான சான்றுகள் உள்ளன. நீதிக்கட்சி வந்து தான் இதை ஆரம்பித்து வைத்தார்கள் என்பது வரலாற்றை மாற்றி எழுத முயலும் செயல். 

லிங்காயத்துகள் பற்றி ஏதேனும் படித்திருக்கிறீர்களா? அதை ஆரம்பித்த பசவர் எல்லோரும் சமம் என்ற கொள்கையை தான் பரப்பினார். வைணவர்கள் போல் அவர்கள் பின்பு தனி சாதியாகிப்போனார்கள். :-) ஒவ்வொரு இடத்திலும் இப்படி ஒருவர் தோன்றியிருப்பார். அவரை பின்பற்றுபவர்கள் இன்றைக்கும் இருப்பார்கள். என்ன நம்மவர்கள் நம்முடைய கடந்த கால வரலாற்றை மறுத்தே எழுதுகிறார்கள். 

ராஜசங்கர்

2011/3/16 gnana bharathi <dgbha...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 16, 2011, 9:44:45 PM3/16/11
to mint...@googlegroups.com
//இந்த இரண்டும் சுத்தப்பொய்கள். எந்த சமூகமும் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக இருக்கவில்லை. பார்பனர்கள் எனும் சாதி என்றைக்கும் ஆட்சி புரியவில்லை. //
பொய் என்ற வார்த்தையைத் தயவுசெய்து தவிர்க்கவும்.  இதுபோன்ற விவாதங்களில் வெளியான கருத்துக்கு மாற்றுக்கருத்தைச் சொல்வதும் ஒருவர் கருத்தைச் சுத்தப் பொய் என்று சொல்வதும் இருவேறு நிலைகள்.
//பார்பனர்கள் எனும் சாதி என்றைக்கும் ஆட்சி புரியவில்லை. //
இலங்கையின் ராவணனும், காசி மன்னரும் இன்னும் பல அரசர்களும் அந்தணரே
நாகராசன்

2011/3/17 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Mar 16, 2011, 10:23:39 PM3/16/11
to mint...@googlegroups.com
//பொய் என்ற வார்த்தையைத் தயவுசெய்து தவிர்க்கவும்.  இதுபோன்ற விவாதங்களில் வெளியான கருத்துக்கு மாற்றுக்கருத்தைச் சொல்வதும் ஒருவர் கருத்தைச் சுத்தப் பொய் என்று சொல்வதும் இருவேறு நிலைகள்.//

Point taken. 

Thanks

ராஜசங்கர்



2011/3/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Raja sankar

unread,
Mar 17, 2011, 12:28:42 AM3/17/11
to mint...@googlegroups.com
சாளுக்கியர்கள், பல்லவர்கள், சிங்களவர், வேளிர் போன்ற வம்சங்கள் அரசு புரிந்ததாக படித்திருக்கிறேனே தவிர பார்பனர் எனும் அரச வம்சம் இருந்தாகவோ ஏதேனும் வம்சம் பார்பன சாதியில் உள்ளடக்கம் என்றோ படித்தில்லை. ஏதோ ஒன்றிரண்டு பேர் இருந்திருக்கலாம். அதற்காக அவர்களே பரம்பரையாக ஆட்சி புரிந்தார்கள் என்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. 

அடுத்து அரசர்களிடம் இவர்களே மேம்பட்ட வேலைகளில் இருந்தார்கள் என்பதும் ஏதேனும் புள்ளிவிவரங்கள் கொண்டோ சரித்திர சான்றுகள் கொண்டே சொல்லப்படுவது இல்லை. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று சொல்லப்படுபவை. அக்காலத்திய மக்கள் தொகையோ அல்லது படை பிரிவோ அல்லது கல்வெட்டுகளில் காணப்படும் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கையோ எடுக்கப்பட்டு அதில் பார்பனர்கள் அல்லது மேல் சாதியினர் எவ்வளவு பேர் எந்ததெந்த பதவிகளில் இருந்தார்கள் என்ற ஆராய்ச்சி எல்லாம் கிடையாது. 

சும்மா ஒரு சாதியை எந்த ஆதாரமும் இன்றி திட்டுவது எப்படி வரலாறு ஆகும் எப்படி சமூக நீதி ஆகும்?

சாதீய வேறுபாடுகள் உண்டு இல்லை என்பது சரித்திர, கல்வெட்டு, இலக்கிய, மொழிச்சான்று கள் கொண்டு ஆராயப்படவேண்டுமே அன்றி ஒரு தலைப்பட்சமாக இருக்க கூடாது. 

ராஜசங்கர்

2011/3/17 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
இலங்கையின் ராவணனும், காசி மன்னரும் இன்னும் பல அரசர்களும் அந்தணரே

Nagarajan Vadivel

unread,
Mar 17, 2011, 12:49:45 AM3/17/11
to mint...@googlegroups.com
தங்களுடைய முயற்சி பயனுள்ள கருத்துக்களைப் புதிய கோணத்தில் நோக்க வழி செய்யட்டும்
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்புநலனை சமயம் மொழி நீதி அரசாளுமை ஆகியதுறைகளில் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருத்தி வந்ததுள்ளது
ராஜராஜன் ஆட்சியில் ஒரு பேரரசு உருவாகும்வரை தமிழகத்தில் மைய ஆட்சிமுறை நிலவியதாகக் குறிப்பில்லை
குடிகள் உள்ளாட்சிமுறையில் தங்கள் அரசாட்சியை வகுத்துக்கொள்ள அரசர்கள் வலியுறுத்தி அவ்வகை ஆட்சி நிலைபெற உதவினார்கள்
நாடு மண்டலம், கோட்டம், பட்டிணம் கிராமம் என்று மண்டல (வட்டம்) வடிவில் அமைக்கப்பட்டு உள்ளாட்சி முறையை செயல்படுத்தினர்
தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்ட  பிற்கால அர்சர்களும் வேற்று நாட்டவரும் உள்ளாட்சிமுறைக்குப் பாதகமில்லாமல் பிரதிநிதிகளை வைத்து ஆட்சி செய்தனர்
ஆங்கிலேயர்கள் அரசர்களின் ஆட்சிமுறையில் நேரடியாக உள்ளாட்சியில் தலையிடாமல் மன்னரைக் கட்டுப்படுத்துவதோடு நிறுத்திகொண்டார்கள்
மலையகத்து மக்களின் வாழ்வில் தலையிடாமல் அவர்களுடைய தலைமையுடன் புரிந்துணவுடன் தலையிடாக் கொள்கையைச் செயல் படுத்தி நிர்வாகம் செய்தனர்
ஒவ்வொரு மன்னரும் அவர் நாட்டின் தகவுக்கேற்ப உள்ளாட்ட்சிமுறையை அமைத்துக்கொள்ள ஆங்கிலேயர்கள் தடைபோட்டதில்லை
தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம் நடந்தபோது புதுக்கோட்டை அரசர் அவர்வழியே ஆட்சி  செய்தார்.  ஆங்கிலேயர் தலையீடு மன்னர்களிடையே அதிக அளவில் இருந்ததில்லை
ஆங்கில அரசு அகன்று சுதந்திர இந்தியா தோன்றியதும் நடைமுறைப்படுத்தப்பட்ட மன்னர் ஆட்சி ஒழிப்பு, இந்து-முஸ்லிம் அடிப்படையில் பிரிவு, மொழி வாரிப் பிரிவு, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று மேற்கொண்ட புதிய முயற்சிகள் நன்மையை விளைவிக்கத்தவறி புதிய சிக்கல்களுக்கு வழிகோலியது
இந்தக் கோணத்தில் தமிழகம் சந்தித்த பிரச்சினைகளி அலசமுடியுமா?
நாகராசன்




2011/3/17 Raja sankar <errajasa...@gmail.com>
அன்பின் ஞானபாரதி,

ஞானபாரதி

unread,
Mar 17, 2011, 1:20:51 PM3/17/11
to மின்தமிழ்
திரு ராஜா சங்கர்,
//நீதிக்கட்சி தொடக்கமும் வளர்ச்சியும் நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்த
ஒரு
சமூகத்தின் சில குலங்கள் மீண்டெழ முயற்சித்ததன் முதல் வெளிப்பாடாகும்.
//

//வளர்ந்த இச் சமூகங்களின் உரிமைப் போராட்டங்கள் அரசியல் வடிவெடுத்து
பார்ப்பனரிடமிருந்து ஆட்சியைப் பறித்து தமதாக்கிக் கொள்ளாமல்
மற்றவரிடம்
கொடுத்ததாக அமைந்தது. இந்தியாவிலும் கடல் கடந்தும் //

"இந்த இரண்டும் சுத்தப்பொய்கள். எந்த சமூகமும் பல நூற்றாண்டுகளாக
அடிமைகளாக
இருக்கவில்லை. பார்பனர்கள் எனும் சாதி என்றைக்கும் ஆட்சி புரியவில்லை. "

பாண்டியரின் வீழ்ச்சிக்குப் பிறகு பி. சுப்பராயன் சுயேச்சை முதல்வராக
பதவியேற்ற காலம் வரை தமிழர் யாரும் அரசுரிமை (சிற்றரசுகளாக இருந்துகொண்டு
மூலோக வேந்தே எனப்பாடும் புலவர்களைக் கொண்டிருந்தவர்களைத் தவிர்த்து)
பெற்றிருந்ததாக எனக்கு தெரியவில்லை.

தமிழர் என்ற அடையாளத்துடன் உள்ள சமூகத்தில் அச்சமூகத்தினருள் ஒருவரோ
அல்லது குழுவோ ஆட்சியாளராக இல்லை என்றால் அச்சமூகம்
அடிமைப்பட்டிருப்ப்பதாகவே நான் கருதுகிறேன். எதிர்த்து, மறைந்து,
வெளிநாட்டில் அரசமைத்து இருந்ததாகவும் தகவல் இல்லை.
ஒரு உட்பிரிவினர் ஆட்சி புரியவில்லை என்றால் அடிமை என்றாகுமா? மன்னர்
பரம்பரையைத்தவிர மற்றவரை அடிமை என்று கூறலாகுமா

எனவே நீதிக்கட்சி என்பது கிட்டத்தட்ட ஏழு நூற்றாண்டுகளாக அடிமையாகக்
கிடந்த சமூகத்தின் மீண்டெழுந்த வெளிப்பாடுகளாகவே கருதுகிறேன்.

நடேச முதலியாரும் மற்றோரும் பார்ப்பனரை விரட்டி பிற மொழி பேசுவோரை
ஆட்சிக்குக் கொணரவேண்டுமேன்றா அரசியலமைப்பைத் தொடங்கினர். நீதிக்கட்சி
ஆட்சியில் இருந்தவரை தமிழர் அரசுத்தலைமையும் கட்சித்தலைமையும்
ஏற்கமுடியாவண்ணம் சூழல் ஏற்பட்டதை வேறெப்படி சொல்வது என்றும் எனக்கு
தெரியவில்லை.


"சமூக நீதிக்கான போராட்டம் என்பது காலம் காலமாக இந்தியாவில் நடந்து வந்த
ஒன்று."

தமிழகத்தில்?

"ஒவ்வொரு காலகட்டதில் அதற்கான சான்றுகள் உள்ளன. நீதிக்கட்சி வந்து தான்
இதை
ஆரம்பித்து வைத்தார்கள் என்பது வரலாற்றை மாற்றி எழுத முயலும் செயல். "

ராமலிங்க அடிகளார் செய்தது சமயம் முதன்மையாகக் கொண்ட செயல்.

"லிங்காயத்துகள் பற்றி ஏதேனும் படித்திருக்கிறீர்களா? அதை ஆரம்பித்த
பசவர்
எல்லோரும் சமம் என்ற கொள்கையை தான் பரப்பினார். வைணவர்கள் போல் அவர்கள்
பின்பு
தனி சாதியாகிப்போனார்கள். :-) ஒவ்வொரு இடத்திலும் இப்படி ஒருவர்
தோன்றியிருப்பார். அவரை பின்பற்றுபவர்கள் இன்றைக்கும் இருப்பார்கள்.
என்ன
நம்மவர்கள் நம்முடைய கடந்த கால வரலாற்றை மறுத்தே எழுதுகிறார்கள். "

எனக்குத் தெரியவில்லை. நான் தமிழகம் சார்ந்தவை பற்றியே எழுதுகிறேன்.
தவறுகளை தங்களைப் போன்றவர் திருத்துவர் என்ற நம்பிக்கையோடு.

ஞானபாரதி

unread,
Mar 17, 2011, 1:36:11 PM3/17/11
to மின்தமிழ்

> படையில் ஆள்சேர்க்க சில இனங்களை நீங்கள் சண்டையிட பிறந்தவர்கள் என்று சொல்லி
> சேர்த்தார்கள்.

உ.பி, பீகாரில் சத்திரியர் என்று கூறிக்கொள்பவர்களைப்
பார்த்திருக்கிறேன். ஏழ்மையில் இருக்கிறார்கள். ஆங்கிலேயரிடம் படை
வீரர்களாகவும் முன்னர் அரச குடும்பங்களாகவும் இருந்ததாகக் கூறுவர்.


தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியமன்னர்கள் இருந்தனரே, எத்தனை குறுநில
மன்னர்கள், படைத் தளபதிகள், புறநானூற்றில் இல்லையா வீரப்பரம்பரையினர்.

1983 - 84 ல் இலங்கையில் இனப்படுகொலையின் போது சண்டையிட தயார் என்ற
எண்ணம் கொண்டோர் சாதி சமயம் கடந்து தமிழ் நாட்டில் தோன்றவில்லையா?
ஊரைத்தாண்டி செல்லாதிருந்தும் அவ்வெண்ணம் வந்ததே.

அன்புடன்
பாரதி

அவர்கள் ஆங்கிலேயர் அரசுக்கு கட்டுபட தயாராக இருந்தவர்கள். பல


> இனங்களை குற்றப்பரம்பரையினர் என்று சொல்லி ஒடுக்கினார். இவர்கள் ஆங்கிலேய
> அரசுக்கு எதிராக போரிட்டவர்கள்.
> இது இரண்டும் சண்டையிட வலு உள்ளவர்களா இல்லையா என்று பார்த்து
> சேர்க்கப்படவில்லை. அப்படி பார்த்தால் பார்சிகள், பிராமணர்கள் என எல்லோரும்
> இந்திய ராணுவத்தில் இப்போது உள்ளார்கள். :-)
>
> இந்த ஆள் பிடிக்கும் முயற்சியையும் முஸ்ஸீம்களை காட்டி இந்துக்களையும்,
> இந்துக்களை காட்டி முஸ்ஸீம்களையும் சேர்த்தார்கள். ஒன்றாக இருந்த பஞ்சாப்பில்
> இவர்கள் இப்படி செய்து ஆள் சேர்த்தது விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதே போல்
> கல்கத்தாவில் கலவரமா கூப்பிடு பஞ்சாபிகளை, பீகாரில் கலவரமா கொண்டுவா மதராஸிகளை
> என கலவரங்களை, ஆட்சிக்கு எதிரான போராட்டங்களையும் ஒடுக்க பிரித்தாளும் கொள்கையை
> நன்றாக பயன்படுத்தினர்.
>
> இந்த போரிடும் இன கொள்கை, குற்றப்பரம்பரை சட்டம் பற்றி படிப்ப்து சமூக
> நீதிக்கான போராட்டம் என்பது பற்றி இன்னோர் பரிமாணத்தை காட்டும். நேரம்
> கிடைத்தால் விரிவாக ஒரு பதிவு இடலாம் என்றிருக்கிறேன்.
>
> ராஜசங்கர்
>

> 2011/3/16 ஞானபாரதி <dgbhara...@gmail.com>

> ...
>
> read more »

Raja sankar

unread,
Mar 17, 2011, 9:31:09 PM3/17/11
to mint...@googlegroups.com
நீங்கள், ஆட்சியில் இருப்பதையும் உரிமைகள் அற்று இருப்பதையும் குழப்பிக்கொள்கிறீர்கள். சுப்பராயன் முதல்வராக வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில் தானே. அப்புறம் எப்படி தமிழருக்கு ஆட்சி உரிமை வந்தது? அடிமை என்றால் தனிப்பட்ட உரிமைகள் ஏதும் இன்றி இருந்ததாக த்தான் பொருள். தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட ஆட்சிகளா நடந்தது? 

பாண்டியரின் வீழ்ச்சிக்கு மாலிக்காபூரின் போன்ற முஸ்ஸீம்களின் படையெடுப்புதானே காரணம். அதுவும் இப்போது வேறு யாராவது தலையில் கட்டப்படுகிறதா?

இதற்கு முன்னால் யார் தமிழர் என்று உங்களால் சொல்ல முடியுமா? தமிழர் என்பது இனமா? மொழி பேசும் மக்களா? எந்த அர்த்தத்தில் அதை சொல்கிறீர்கள்?

தமிழகத்திலேயே நடந்த இயக்கங்கள், சண்டைகள் பற்றி நீங்கள் ஏதும் சொல்லவில்லை. பொத்தாம் பொதுவாக தமிழர்கள் அடிமைகளாக இருந்தார்கள் என்று சொல்லிப்போகிறீர்கள். 

ராஜசங்கர்



2011/3/17 ஞானபாரதி <dgbha...@gmail.com>

செல்வன்

unread,
Mar 17, 2011, 10:24:33 PM3/17/11
to mint...@googlegroups.com
தமிழன், தெலுங்கன்,கன்னடன் என இன்று இருக்கும் வரையறைகள் அன்று இல்லை.சோழர்கள் பாண்டியநாட்டை பிடித்தபோது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் பாண்டியர் எதிர்த்து போராடினர் (ஆதித்த கரிகாலன் காலம் முதல் மூன்றாம் ராஜேந்திரன் காலகட்டம் வரை). தமிழன் ஆட்சி தானே நடக்கிறது என போராடாமல் இருக்கவில்லை.

அதே மதுரை மக்கள் நாயக்கர் ஆட்சியை பலநூறாண்டுகளாக எதிர்க்கவில்லை.தஞ்சை மக்கள் மராட்டியர் ஆட்சியை எதிர்க்கவில்லை.காரணம் இந்த அரசர்கள் தமிழன் என்ற காரணத்தால் யாரையும் ஒடுக்கவில்லை.பக்ஷபாதம் காட்டவில்லை.மைசூர் ராஜ்ஜியம் காவிரிக்கு குறுக்கே அணை கட்டியபோது மதுரையை ஆண்ட நாயக்கர் அரசும், தஞ்சையை ஆண்ட சரபோஜி வம்சமும் பகைமையை மறந்து படைகளை திரட்டி மைசூருக்கு அனுப்பி யுத்தம் புரிந்து அணையை இடித்தன.இந்த போரில் கலந்துகொள்ள ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னருக்கு அவை அழைப்பு அனுப்பியபோது "காவிரி ஆறு ராமநாதபுர்த்தில் ஓடவில்லை" என சேதுபதி மன்னர் மறுத்துவிட்டார்.

இன்னும் சொல்லபோனால் வன்னியை ஆண்ட தமிழ்மன்னன் சங்கிலி போர்ச்சுகிசியரால் பாதிக்கபட்டபோது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரிடம் உதவி கோரினார்.சரபோஜி மன்னர் எங்கோ இலங்கையில் நடப்பதை பற்றி நான் ஏன் கவலைபடவேண்டும் என யோசிக்கவில்லை.தன் தளபதி வருணகுலத்தான் என்பார் தலைமையில் சங்கிலி மன்னருக்கு உதவ படைகளை அனுப்பினார்.மாபெரும் வீரசாகசங்களை புரிந்த வருணகுலத்தான் இறுதியில் போர்ச்சுகிசியரால் கொல்லபட்டான்.

ஆக இந்த மன்னர்கள் மக்களை அடிமைபடுத்தி ஆளவில்லை என்பது தெளிவு.மாலிகாபூர் காலகட்டத்துக்கு பிறகு சேர,சோழ,சாளுக்கிய பேதங்கள் மறைந்து விட்டன.மொழி அடிப்படையிலான தேசியங்கள் இந்தியா என்ற நாடு உருவானபிறகு 1950களில் தான் எழுந்தன.

2011/3/17 Raja sankar <errajasa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
செல்வன்

"Democracy is worth dying for, because it's the most deeply honorable form of government ever devised by man" - Ronald Reagan

www.holyox.blogspot.com


N. Ganesan

unread,
Mar 17, 2011, 10:40:21 PM3/17/11
to மின்தமிழ்

On Mar 17, 9:24 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தமிழன், தெலுங்கன்,கன்னடன் என இன்று இருக்கும் வரையறைகள் அன்று இல்லை.சோழர்கள்
> பாண்டியநாட்டை பிடித்தபோது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் பாண்டியர் எதிர்த்து
> போராடினர் (ஆதித்த கரிகாலன் காலம் முதல் மூன்றாம் ராஜேந்திரன் காலகட்டம் வரை).
> தமிழன் ஆட்சி தானே நடக்கிறது என போராடாமல் இருக்கவில்லை.
>
> அதே மதுரை மக்கள் நாயக்கர் ஆட்சியை பலநூறாண்டுகளாக எதிர்க்கவில்லை.தஞ்சை மக்கள்
> மராட்டியர் ஆட்சியை எதிர்க்கவில்லை.காரணம் இந்த அரசர்கள் தமிழன் என்ற
> காரணத்தால் யாரையும் ஒடுக்கவில்லை.பக்ஷபாதம் காட்டவில்லை.மைசூர் ராஜ்ஜியம்
> காவிரிக்கு குறுக்கே அணை கட்டியபோது மதுரையை ஆண்ட நாயக்கர் அரசும், தஞ்சையை
> ஆண்ட சரபோஜி வம்சமும் பகைமையை மறந்து படைகளை திரட்டி மைசூருக்கு அனுப்பி
> யுத்தம் புரிந்து அணையை இடித்தன.இந்த போரில் கலந்துகொள்ள ராமநாதபுரத்தை ஆண்ட
> சேதுபதி மன்னருக்கு அவை அழைப்பு அனுப்பியபோது "காவிரி ஆறு ராமநாதபுர்த்தில்
> ஓடவில்லை" என சேதுபதி மன்னர் மறுத்துவிட்டார்.
>
> இன்னும் சொல்லபோனால் வன்னியை ஆண்ட தமிழ்மன்னன் சங்கிலி போர்ச்சுகிசியரால்
> பாதிக்கபட்டபோது தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரிடம் உதவி கோரினார்.சரபோஜி மன்னர்
> எங்கோ இலங்கையில் நடப்பதை பற்றி நான் ஏன் கவலைபடவேண்டும் என யோசிக்கவில்லை.தன்
> தளபதி வருணகுலத்தான் என்பார் தலைமையில் சங்கிலி மன்னருக்கு உதவ படைகளை
> அனுப்பினார்.மாபெரும் வீரசாகசங்களை புரிந்த வருணகுலத்தான் இறுதியில்
> போர்ச்சுகிசியரால் கொல்லபட்டான்.
>
> ஆக இந்த மன்னர்கள் மக்களை அடிமைபடுத்தி ஆளவில்லை என்பது தெளிவு.மாலிகாபூர்
> காலகட்டத்துக்கு பிறகு சேர,சோழ,சாளுக்கிய பேதங்கள் மறைந்து விட்டன.மொழி
> அடிப்படையிலான தேசியங்கள் இந்தியா என்ற நாடு உருவானபிறகு 1950களில் தான்
> எழுந்தன.
>

மொழி பற்றிய சிந்தனை, விழிப்புணர்வு வர முக்கியக்
காரணம் பள்ளிப் படிப்பு பரவலானமை. நியூஸ்பேப்பர்,
கழகங்களின் ஓட்டு பாலிடிக்ஸ், சினிமா பிரச்சாரங்கள்.

முன்பு மதறாஸ் ப்ரஸிடென்ஸி. அதனால் திராவிடம்
என்று பெரியார் எடுத்தார். இப்போது தமிழ்நாடு மாத்திரம்.

எனவே, ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்கிறார்கள்.
திராவிடம் என்பதே விஜயநகர ஆட்சிக்காலத்தில்
தமிழகம் வந்து வளமாக வாழும் தெலுங்கு, கன்னட
ஜாதியர்களின் கோட்பாடு. எங்களுக்கு தமிழ் தேசியம்
வேண்டும் என்று தமிழரில் எண்ணிக்கையில் பெரிய
ஜாதிகளைச் சேர்ந்த சிலர் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர்.
பெங்களூரில் குணா இதில் புத்தகங்கள் எழுதுவதில்
முன்னோடி. வள்ளுவத்தின் வீழ்ச்சி, ....

சீமான் முன்னெடுக்கும் ‘தமிழ் தேசியம்’. எவ்வளவு
தூரம் வாக்கு வங்கி பெறும்? காலம் தான் பதில்சொல்லவேண்டும்.

சீமானின் பேட்டி:
http://tamilthesiyam.blogspot.com/2011/03/blog-post_4966.html

அன்புடன்,
நா. கணேசன்


> 2011/3/17 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
>
>
>
>
> > நீங்கள், ஆட்சியில் இருப்பதையும் உரிமைகள் அற்று இருப்பதையும்
> > குழப்பிக்கொள்கிறீர்கள். சுப்பராயன் முதல்வராக வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில்
> > தானே. அப்புறம் எப்படி தமிழருக்கு ஆட்சி உரிமை வந்தது? அடிமை என்றால் தனிப்பட்ட
> > உரிமைகள் ஏதும் இன்றி இருந்ததாக த்தான் பொருள். தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட
> > ஆட்சிகளா நடந்தது?
>
> > பாண்டியரின் வீழ்ச்சிக்கு மாலிக்காபூரின் போன்ற முஸ்ஸீம்களின் படையெடுப்புதானே
> > காரணம். அதுவும் இப்போது வேறு யாராவது தலையில் கட்டப்படுகிறதா?
>
> > இதற்கு முன்னால் யார் தமிழர் என்று உங்களால் சொல்ல முடியுமா? தமிழர் என்பது
> > இனமா? மொழி பேசும் மக்களா? எந்த அர்த்தத்தில் அதை சொல்கிறீர்கள்?
>
> > தமிழகத்திலேயே நடந்த இயக்கங்கள், சண்டைகள் பற்றி நீங்கள் ஏதும் சொல்லவில்லை.
> > பொத்தாம் பொதுவாக தமிழர்கள் அடிமைகளாக இருந்தார்கள் என்று
> > சொல்லிப்போகிறீர்கள்.
>
> > ராஜசங்கர்
>

> > 2011/3/17 ஞானபாரதி <dgbhara...@gmail.com>


>
> >> தமிழர் என்ற அடையாளத்துடன் உள்ள சமூகத்தில் அச்சமூகத்தினருள் ஒருவரோ
> >> அல்லது குழுவோ ஆட்சியாளராக இல்லை என்றால் அச்சமூகம்
> >> அடிமைப்பட்டிருப்ப்பதாகவே நான் கருதுகிறேன். எதிர்த்து, மறைந்து,
> >> வெளிநாட்டில் அரசமைத்து இருந்ததாகவும் தகவல் இல்லை.
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> செல்வன்
>
> "Democracy is worth dying for, because it's the most deeply honorable form
> of government ever devised by man" - Ronald Reagan
>

> www.holyox.blogspot.com- Hide quoted text -

செல்வன்

unread,
Mar 18, 2011, 2:48:05 AM3/18/11
to mint...@googlegroups.com


2011/3/17 N. Ganesan <naa.g...@gmail.com>

மொழி பற்றிய சிந்தனை, விழிப்புணர்வு வர முக்கியக்
காரணம் பள்ளிப் படிப்பு பரவலானமை. நியூஸ்பேப்பர்,
கழகங்களின் ஓட்டு பாலிடிக்ஸ், சினிமா பிரச்சாரங்கள்.

முன்பு மதறாஸ் ப்ரஸிடென்ஸி. அதனால் திராவிடம்
என்று பெரியார் எடுத்தார். இப்போது தமிழ்நாடு மாத்திரம்.


உண்மை. மொழி என்பது இயற்கையாக மக்களை இணைக்கும் சங்கிலி.ஆனால் அதை மக்களை பிரிக்கும் விலங்காக மாற்ற நடைபெற்ற முயற்சிகளை தமிழர்கள் என்றும் ஆதரித்ததே இல்லை. எம்.ஜி.ஆர் மலையாளி, ஜெயலலிதா கன்னடத்தி, விஜயகாந்த் தெலுங்கர் என்பது போல நடந்த பிரச்சாரங்களை தமிழக மக்கள் நிராகரித்து இவர்களுக்கு ஓட்டளித்துதான் வந்திருக்கிறார்கள்.

இந்தியமாநிலங்கள் அனைத்திலும் மக்கள் குடிபெயர்வு காலம் காலமாக மொழி எல்லைகளை தாண்டி நடைபெற்று கொண்டுதான் உள்ளது.ஏராளமான எண்ணிக்கையில் ஒவ்வொரு மாநிலங்களும் மொழி சிறுபான்மையினரை கொண்டுள்ளன.பால்தாக்ரே பாணியில் மண்ணின் மைந்தன் கோஷம் எழுப்பபடும்போதெல்லாம் இந்திய மக்கள் அதை நிராகரித்தே வந்துள்ளனர்.

இன்று தமிழன் இல்லாத நாடு,மாநிலம் எதாவது உலகில் இருக்குமா என்பது சந்தேகமே.இந்த அளவுக்கு குளோபலைஸ் ஆன இனத்தில் தேசியவாத கோஷங்கள் எடுபடும் வாய்ப்பு சுத்தமாக இல்லை.

--
செல்வன்

"Democracy is worth dying for, because it's the most deeply honorable form of government ever devised by man" - Ronald Reagan

Raja sankar

unread,
Mar 18, 2011, 3:22:24 AM3/18/11
to mint...@googlegroups.com
//மொழி பற்றிய சிந்தனை, விழிப்புணர்வு வர முக்கியக்

காரணம் பள்ளிப் படிப்பு பரவலானமை. நியூஸ்பேப்பர்,
கழகங்களின் ஓட்டு பாலிடிக்ஸ், சினிமா பிரச்சாரங்கள்.

முன்பு மதறாஸ் ப்ரஸிடென்ஸி. அதனால் திராவிடம்
என்று பெரியார் எடுத்தார். இப்போது தமிழ்நாடு மாத்திரம்.
//

இதுக்கு முன்னாடி தமிழ் நாட்டில் இருந்தவங்க எல்லாம் மொழி பற்றிய சிந்தனையே சிந்தனையே இல்லாமல் இருந்தார்கள் போலும். இந்த நீக்கட்சியும், திராவிட இயக்கமும் வந்துதான் தமிழை வாழ வைத்தார்கள். :-)

தயை செய்து வரலாற்றை திராவிட கட்சிகளில் இருந்து தொடங்காதீர்கள். தமிழை சமய வேறுபாடில்லாமல், சாதி வேறுபாடில்லாமல் யாவரும் வளர்த்திருக்கிறார்கள், இன்னமும் வளர்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாம் வரலாற்றை படிக்கவில்லை என்றால் வரலாறு மாறிவிடாது. வரலாற்றை என்ன தான் மாற்றி எழுதினாலும் உண்மை என்பது அப்படியே தான் இருக்கும். 

இன்றைக்கு சமூக நீதி,திராவிடம் என்று பேசும் கட்சிகள் இயக்கங்கள் தமிழை வளர்ப்பதை பார்த்துகொண்டு தான் இருக்கிறோம். இவர்கள் தமிழை வளர்ககாமல் இருந்தாலே அது தப்பி பிழைக்கும். 

ராஜசங்கர்

2011/3/18 N. Ganesan <naa.g...@gmail.com>

ஞானபாரதி

unread,
Mar 18, 2011, 1:41:01 PM3/18/11
to மின்தமிழ்
> சுப்பராயன் முதல்வராக வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில்
> தானே. அப்புறம் எப்படி தமிழருக்கு ஆட்சி உரிமை வந்தது?

சுப்பராயன் முதல்வராக இருந்தபோது சட்டமியற்ற முடிந்தது. அதை
நடைமுறைப்படுத்த முடிந்தது. பிடித்தவர் பிடிக்காதவர் என்ற அனைவரும்
சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். அந்த எண்ணத்தில்தான் கூறினேன்.


> அடிமை என்றால் தனிப்பட்ட
> உரிமைகள் ஏதும் இன்றி இருந்ததாக த்தான் பொருள். தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட
> ஆட்சிகளா நடந்தது?

நிச்சயமாக அப்படிப்பட்ட ஆட்சிகள் இல்லை.

>
> பாண்டியரின் வீழ்ச்சிக்கு மாலிக்காபூரின் போன்ற முஸ்ஸீம்களின் படையெடுப்புதானே
> காரணம். அதுவும் இப்போது வேறு யாராவது தலையில் கட்டப்படுகிறதா?
>
> இதற்கு முன்னால் யார் தமிழர் என்று உங்களால் சொல்ல முடியுமா? தமிழர் என்பது
> இனமா? மொழி பேசும் மக்களா? எந்த அர்த்தத்தில் அதை சொல்கிறீர்கள்?

மொழிக்குடும்பம் தான். நமக்குரிய அடையாளத்துடன் உள்ள மக்களை
குமரிமுனையிலிருந்து காஷ்மீர் வரையிலும் குஜராத்திலிருந்து வங்காளம்
வரையிலும் காணலாம். பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள்.

>
> தமிழகத்திலேயே நடந்த இயக்கங்கள், சண்டைகள் பற்றி நீங்கள் ஏதும் சொல்லவில்லை.
> பொத்தாம் பொதுவாக தமிழர்கள் அடிமைகளாக இருந்தார்கள் என்று
> சொல்லிப்போகிறீர்கள்.

நான் கூறவந்தது தலைமை தாங்கி அரசியல் அமைப்பை செயல்படுத்தவேண்டும் என்ற
எண்ணம் பார்ப்பனரை விட நீதிக்கட்சியினருக்குத் தான் இருந்தது. ஆனால்
அவர்கள், காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டபோது கொண்ட கொள்கைகளான ஆங்கிலேயர்
ஆட்சி செவ்வனே நடக்கட்டும்; நமக்கு வேண்டிய சில உரிமைகளைக் கோருவோம்,
என்ற அளவில் தான் இருந்தனர் என்பதும் உண்மை.

அன்புடன்
பாரதி

> ராஜசங்கர்
>
> 2011/3/17 ஞானபாரதி <dgbhara...@gmail.com>

Raja sankar

unread,
Mar 18, 2011, 9:17:47 PM3/18/11
to mint...@googlegroups.com
//சுப்பராயன் முதல்வராக இருந்தபோது சட்டமியற்ற முடிந்தது. அதை

நடைமுறைப்படுத்த முடிந்தது.  பிடித்தவர் பிடிக்காதவர் என்ற அனைவரும்
சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். அந்த எண்ணத்தில்தான் கூறினேன்.//

அந்த சட்டங்கள் எல்லாரும் ஆங்கிலேயருக்கு பிடித்திருந்தால் மட்டுமே ஆளுநரின் ஒப்புதலை பெறும். ஆளுநரை மன்னர் என்று கொண்டால் சுப்பாரயன் திவான்/அமைச்சர் என்ற பதவியில் தான் இருந்தார். அது போல் முன்பு இருந்தவர்களும் உண்டு. ஆட்சி செய்தவர்களும் உண்டு. 

//மொழிக்குடும்பம் தான். நமக்குரிய அடையாளத்துடன் உள்ள மக்களை
குமரிமுனையிலிருந்து காஷ்மீர் வரையிலும் குஜராத்திலிருந்து வங்காளம்
வரையிலும் காணலாம். பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள்.
//

மொழிக்குடும்பம் தான் அடையாளம் என்றால் சாதியை எதில் சேர்ப்பீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு பக்கம் சாதியை அடையாளமாக கொண்டு ஒரு சாதியை திட்டுகிறீர்கள். இன்னொரு பக்கம் மொழிக்குடும்பம் தான் அடையாளம் என்கிறீர்கள். இதில் எதை எடுப்பது?


ராஜசங்கர்



2011/3/18 ஞானபாரதி <dgbha...@gmail.com>

fonio sivakumar

unread,
Mar 18, 2011, 1:45:58 PM3/18/11
to mint...@googlegroups.com
ஐயா எது சொன்னாலும் தெளிவாக சொல்லுங்கள் நீங்கள் சொல்வதை நாங்கள் நம்பதான் போகிறோம். நாங்கள் பிறபதற்கு முனால் நடந்தவைகளை கேட்டு கொண்டு இருகிறோம்
நன்றி !!!
ஃ போனியோ 

2011/3/18 ஞானபாரதி <dgbha...@gmail.com>
> சுப்பராயன் முதல்வராக வந்தது ஆங்கிலேயர் ஆட்சியில்

ஞானபாரதி

unread,
Mar 19, 2011, 6:55:30 AM3/19/11
to மின்தமிழ்
> //சுப்பராயன் முதல்வராக இருந்தபோது சட்டமியற்ற முடிந்தது. அதை
> நடைமுறைப்படுத்த முடிந்தது.  பிடித்தவர் பிடிக்காதவர் என்ற அனைவரும்
> சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். அந்த எண்ணத்தில்தான் கூறினேன்.//
>
> அந்த சட்டங்கள் எல்லாரும் ஆங்கிலேயருக்கு பிடித்திருந்தால் மட்டுமே ஆளுநரின்
> ஒப்புதலை பெறும். ஆளுநரை மன்னர் என்று கொண்டால் சுப்பாரயன் திவான்/அமைச்சர்
> என்ற பதவியில் தான் இருந்தார். அது போல் முன்பு இருந்தவர்களும் உண்டு. ஆட்சி
> செய்தவர்களும் உண்டு.

இப்பொழுதும் அப்படித்தானே.
காகிதப்புலிகள் இயற்றாத தீர்மானங்களா? அடிக்காத தந்திகளா,
கடிதங்களா...... கேட்பாரற்றுத்தானே கிடக்கின்றன.

>" இதற்கு முன்னால் யார் தமிழர் என்று உங்களால் சொல்ல முடியுமா? தமிழர் என்பது
> இனமா? மொழி பேசும் மக்களா? எந்த அர்த்தத்தில் அதை சொல்கிறீர்கள்? "
>

> //மொழிக்குடும்பம் தான். நமக்குரிய அடையாளத்துடன் உள்ள மக்களை
> குமரிமுனையிலிருந்து காஷ்மீர் வரையிலும் குஜராத்திலிருந்து வங்காளம்
> வரையிலும் காணலாம். பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள்.
> //
>
> மொழிக்குடும்பம் தான் அடையாளம் என்றால் சாதியை எதில் சேர்ப்பீர்கள் என்று
> சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு பக்கம் சாதியை அடையாளமாக கொண்டு ஒரு சாதியை
> திட்டுகிறீர்கள். இன்னொரு பக்கம் மொழிக்குடும்பம் தான் அடையாளம் என்கிறீர்கள்.
> இதில் எதை எடுப்பது?

ஜாதியை இங்கு எங்கே திட்டினேன் என்று தெரியவில்லை. ஒன்று செய்யநினைத்தது
வேறொன்றாக மாறிவிட்டது என்றே குறிப்பிட்டேன்.

அன்புடன்
பாரதி

> ராஜசங்கர்
>
> 2011/3/18 ஞானபாரதி <dgbhara...@gmail.com>

ஞானபாரதி

unread,
Mar 19, 2011, 6:58:52 AM3/19/11
to மின்தமிழ்
> //சுப்பராயன் முதல்வராக இருந்தபோது சட்டமியற்ற முடிந்தது. அதை
> நடைமுறைப்படுத்த முடிந்தது.  பிடித்தவர் பிடிக்காதவர் என்ற அனைவரும்
> சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டனர். அந்த எண்ணத்தில்தான் கூறினேன்.//

> அந்த சட்டங்கள் எல்லாரும் ஆங்கிலேயருக்கு பிடித்திருந்தால் மட்டுமே ஆளுநரின்
> ஒப்புதலை பெறும். ஆளுநரை மன்னர் என்று கொண்டால் சுப்பாரயன் திவான்/அமைச்சர்
> என்ற பதவியில் தான் இருந்தார். அது போல் முன்பு இருந்தவர்களும் உண்டு. ஆட்சி
> செய்தவர்களும் உண்டு.

இப்பொழுதும் அப்படித்தானே.
காகிதப்புலிகள் இயற்றாத தீர்மானங்களா? அடிக்காத தந்திகளா,
கடிதங்களா...... கேட்பாரற்றுத்தானே கிடக்கின்றன.

>" இதற்கு முன்னால் யார் தமிழர் என்று உங்களால் சொல்ல முடியுமா? தமிழர் என்பது
> இனமா? மொழி பேசும் மக்களா? எந்த அர்த்தத்தில் அதை சொல்கிறீர்கள்? "

> //மொழிக்குடும்பம் தான். நமக்குரிய அடையாளத்துடன் உள்ள மக்களை
> குமரிமுனையிலிருந்து காஷ்மீர் வரையிலும் குஜராத்திலிருந்து வங்காளம்
> வரையிலும் காணலாம். பாக்கிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறார்கள்.
> //

> மொழிக்குடும்பம் தான் அடையாளம் என்றால் சாதியை எதில் சேர்ப்பீர்கள் என்று
> சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு பக்கம் சாதியை அடையாளமாக கொண்டு ஒரு சாதியை
> திட்டுகிறீர்கள். இன்னொரு பக்கம் மொழிக்குடும்பம் தான் அடையாளம் என்கிறீர்கள்.
> இதில் எதை எடுப்பது?

மொழிக்குடும்பத்தில் உள்ள பிரிவுகளே, ஜாதி, மதம், பழக்க வழக்கங்கள்,
பண்டிகைகள் மற்றும் அவற்றினுள் உள்ள சிறுசிறு வேறுபாடுகள்/உட்பிரிவுகள்.

Reply all
Reply to author
Forward
0 new messages