நண்பர்களே,
இன்றைய தினம் ஜெர்மனிக்கு மட்டுமல்ல, ஐரோப்பா முழுமைக்கும் ஒரு முக்கிய நாள் என்றே சொல்லப்பட வேண்டும். ஜெர்மனியை கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிரித்திருந்த மதில் சுவர் இடிக்கப்பட்ட நாள். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் பிரிந்து துயரில் இருந்த வேளையில் ஒரு புது உலகத்தை காண்பித்த நாள்.
இன்று மிகப் பெரிய அளவில் இந்த நாள் ஜெர்மனியில் பெர்லினில் குறிப்பாகவும் ஏனைய இடங்களில் சிறப்பாகவும் கொண்டாடப்படுகின்றது. மேலதிக செய்திகள், காணொளிகள் மக்களின் உனர்வுகளைப் பிரதிபலிக்கும் பேட்டிகளின் ஒலிப்பதிவுகள் போன்றவற்றை இங்கு காணலாம்.
அன்புடன்
சுபா