“காசியின் நிஜமுகம் நிரந்தர முகமா?” அல்லது “காசி நகரத்தின் மறுபக்கம்”

115 views
Skip to first unread message

Vedaprakash

unread,
Nov 7, 2009, 6:23:54 AM11/7/09
to மின்தமிழ்
“காசியின் நிஜமுகம் நிரந்தர முகமா?” அல்லது “காசி நகரத்தின் மறுபக்கம்”
நிஜம் நிகழ்ச்சியில் சன் செய்திகள் 06-11-2009 அன்று இரவு 10 முதல் 10.30
வரை

“காசி நகரத்தின் மறுபக்கம்”, “மரணத்திற்காக காத்திருக்கும் மனிதர்கள்”,
“விடாமல் எரியும் சடலங்கள்”, “அலற வைக்கும் அகோரிகள்”, “திகிலூட்டும்
போதை உலகம்” “காசியின் நிஜமுகம் நிரந்தர முகமா?” என தொடர்ந்து
“முக்கியமான செய்திகள்” போல காட்டிக் கொண்டிருந்தது “சன்-செய்திகள்”
தொலைக்காட்சி.

நான்கு நாட்களாக காட்டப்பட்டுவரும் நிகழ்ச்சி, அவற்றின் தொகுப்பே இந்த
நிகழ்ச்சி என்றபீடிகையுடன் ஆரம்பித்தது “சன் செய்திகளின்” - “நிஜம்”.
நிகழ்ச்சி பார்க்கும்போதே தெரிந்தது, நிகழ்ச்சிற்கும் அதில் பேட்டி
காண்பவர்கள் சொல்பவர்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள்,
பேட்டிகண்டவர்களின் பேச்சுகள் வெட்டப்பட்டுள்ள நிலை, “சன்
செய்தியாளர்கள்’ கொடுக்கும் தவறான விளக்கம் முதலியன.

விசித்தரங்களின் நகரம்: இந்துமத நம்பிக்கையாளர்கள் ஒருதடவையேனும்
காசிக்குச் செல்வதை தமது கடமையாக, பாக்கியமாகக் கொண்டுள்ளர்கள். ஆனால்,
அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் திடுக்கிடும் வகையில் உள்ளன. கூட்டங்கள்
அதிகமாக இருந்தால் குற்றங்கள் அதிகமாகுமா? விசித்தரங்களின் நகரம்
என்றெல்லாம் விளக்கம் அளிக்கப் பட்டது!

கங்கையில் சடலங்கள்: கங்கையில் சடலங்கள் மிதக்கின்றன. சடலங்கள்
வீசியெரியப்படுகின்றன. சடலம் எரிந்த பிறகு, ஒரு பகுதியை ஞாபகார்த்தமாக,
இறந்தவரது மகன் கங்கை நீரில் எரிகிறார். அதை “சடலங்கள்
வீசியெரியப்படுகின்றன” என்று விவரிக்கப் படுகிறது. கேமரா இங்கும்
இங்குமாக திரும்பி அல்லது “எடிட்டிங்” செய்த “உடல்கள்| மிதக்கும்
காட்சிகள் காட்டப்படுகின்றன!

கங்கைநதி ஓடிக்கொண்டே இருக்கிறது. பல இடங்களிலிருந்து கழிவுகளை ஏற்று
வருகிறது. அக்கழிவுகள் எல்லாம் ஆறறிவு படைத்த மக்களது பங்களிப்பேயாகும்.
பலநேரங்களில் நீர்பெருக்கு திடீரென்று அதிகமாகும்போது, ஆற்றில் நீராடும்,
அருகில் இருக்கும் மனிதர்கள்-விலங்குகள் ஆற்றில் அடித்து செல்வது சகஜம்.
அந்த சடலங்கள் கரையில் ஒதுங்கும். ஆயிரக்கணக்கான பிணங்கள், ஆயிரக்கணக்கான
கி.மீ தூரங்களிலிருந்து எடுத்துவரப்பட்டு, அங்கு எரிக்கப் படுகின்றன.
அத்தகைய 24 மணிநேர “சடலம் எரிக்கும் பணியில்” கட்டுப்பாடுகள் எதுவும்
இல்லை.

அகோரிகள் மனித மாமிசம் சாப்பிடுவது: “கும்பல் கும்பலாக
உட்கார்ந்திருந்தனர். நள்ளிரவு தொடங்கியதும், அகோரிகள் தவம் செய்யத்
தொடங்கினர். நரமாமிசத்தை சாப்பிடுகின்றனர்” என்ற பீடிகையுடன், ஒரு அகோரி
ஒரு துண்டத்தை எடுப்பதாகக் காட்டுகின்றனெரேத் தவிர தின்பதாக இல்லை. ஆனால்
விவரிப்பவர், ஏதோ காசியில் எல்லொரும் மாமிசத்தை உண்பது போல நடு-நடுவே
கூறுகிறார்.

உண்மைநிலையை ஏற்கெனவே ஸ்வாமி ஓம்கார் என்பவர் கீழ்கண்ட தளங்களில் பதிவு
செய்துள்ளார்:
http://vediceye.blogspot.com/2009/02/blog-post_19.html
http://vediceye.blogspot.com/2009/02/blog-post_17.html
http://vediceye.blogspot.com/2009/02/blog-post_9628.html
ஆகவே, ஒருகுறிப்பிட்ட கூட்டத்தின் பழக்கத்தை மற்றவர்கள் எல்லோரும்
கடைபிடிக்கிறார்கள் அல்லது காசிநகரமே செய்கிறது அல்லது இந்துக்கள்
பின்பற்றுகிறார்கள் என்பதுபோலச் சித்தரிப்பது சரியானதல்ல.

மரணத்திற்காக காத்திருக்கும் மனிதர்கள்: வயதானவர்கள் தங்களது
வாழ்நாட்களின் இறுதியை காசியில் கழிக்கவேண்டும் என்று அங்கு வந்து
மடங்களில் தங்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் விவரிப்பதோ, “வாழ்வை
வெறுத்தவர்கள் நிறைய பேர்கள் மடங்களில் இருந்தனர்”. இதை “கங்கையில்
சடலங்கள்” “விடாமல் எரியும் சடலங்கள்”, “அலற வைக்கும் அகோரிகள்”,
“திகிலூட்டும் போதை உலகம்” என்றவற்றுடன் சேர்த்து சொல்லி, ஏதோ அந்த வயதான
பெண்மணிகள் எல்லாம் இறந்தவுடன், அவர்கள் உடல்கள் நீரில் வீசப்படும்
அல்லது அகோரிகள் வருத்து / வறுத்து சாப்பிட்டுவிடுவர் அந்த உன்மத்தநிலை
அடைவதற்கு கஞ்சா அடிக்கின்றனர் என்று காட்சிகளை இடை-இடையே காண்பித்து
“திகில் படம்” போன்று காட்டினார்கள்! இது முற்றிலும் தவறானச்
சித்தரிப்பாகும்.

மேலும் தம்புசாமி மற்றும் நாராயண ஐயர் என்ற இரு “சாஸ்திரிகளிடம்” பேட்டி
கண்டபோது, அவர்கள் உண்மையினை நன்றாகவே எடுத்துச் சொல்லியுள்ளார்கள்:

தம்புசாமி: “அங்கு மரணிப்பது மங்கலத்தை உண்டாக்குவதாகும். ஆகையால்தான்,
இங்கு வயதானவர்கள் வந்து தங்கி தங்களது கடைசி நாட்களைக் கழிக்கின்றனர்”
என்று இவர் விளக்குகிறார். ஆனால், அதிலுள்ள கருத்தை எடுத்து விளக்காமல்,
எல்லாஒரும் சாக அங்கு வருகிறார்கள், வந்தால் அவர்களது உடல்கள் ஒன்று
நதியில் எறியப்பட்டு கழுகு, முதலை சாப்பிடும் இல்லை அகோரிகள் நடு இரவில்
கஞ்சா போட்டு போதையுடன் வந்து எரித்து சுட்டு சாப்பிட்டி விடுவர்
என்பதுபோல “படம் காட்டுகின்றனர்”!

நாராயண ஐயர்: இவர் உள்ளநிலையை இவ்வாறாக, “காபாலிக மதத்தவர் தங்களது தவறான
அணுகுமுறையில் அத்தகைய தேவையற்ற பழக்கங்களைக் கடைப் பிடிக்கின்றனர்.
ஆன்மீகத்திற்கோ, காசிக்கோ, விஸ்வநாதருக்கோ இவர்களது செயல்களுக்கோ எந்த
சம்பந்தமும் இல்லை. அத்தகைய தீய பழக்கத்தை திருத்தத் தான் ஆதிசங்கரர்
காபாலிகர்களை மாற்றினார். இருப்பினும் சிலர் அறியாமையால் அவ்வாறு
செய்கிறார்கள். அது குறுக்குவழியில் போகும் பாதைதான்””, எடுத்துக்
காட்டியுள்ளார்.

இருப்பினும் “சன் செய்தி வல்லுனர்கள்” அதையும் காட்டி திரித்துக் கூற
முடிவு செய்தது எநன்றாகவே தெரிகிறது.

அவர்கள் பகுத்தறிவிற்கு தென்பட்டதெல்லாம் அவையே: காசியில் சுற்றித்
திரிந்ததில் கண்ணில் தெரிந்ததும் காசியின் போதை உலகம். அனைவர்களும்
போதையில் உள்ளார்கள். உன்மத்த நிலையை அடையவே அவர்களது முயற்ச்சி.
கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்காக இளைஞர்கள் அங்கு வருகின்றார்கள்.,
என்றெல்லாம் விளக்கம் அளிக்கிறார்கள். அத்தகைய உன்மத்த நிலையில்
அவர்களும் வந்துள்ளதால் அவர்களுக்கு “ஆன்மீகத்திற்கோ, காசிக்கோ,
விஸ்வநாதருக்கோ இவர்களது செயல்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை” என்று
சொன்னதும் விளங்கவில்லை, எந்த நல்லதும் கண்களுக்குத் தெரியவில்லை!

பெரியார் மற்றும் பாரதியார்களின் காசி விஜயம்!: பெரியார் காசிக்கு வந்து
அங்கு நடப்பவற்றைக் கண்டு மனம் மாறி நாத்திகர் ஆனார். சிறுவனாக வந்த
பாரதியாரோ அங்கு நடக்கும் “அகோரங்களை”ப் பார்த்து, ரௌத்ரமான உணர்வு
பெற்று, அதன்படியே பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இதற்கு “பாரதியார்
மருமகன்” என்று ஒரு அப்பாவியைப் பேட்டி கண்டு அதனையும் சேர்த்துள்ளனர்.
ஆகமொத்தத்தில் பாரதியார் “அகோரமாகி”விட்டார் ஆனால், ராமசாமி நாயக்கர்
பெரியாராகி “பகுத்தறிவு பகலவன்” ஆகி விட்டார் என்ற ரீதியில்
சித்தரிக்கிறார் அந்த “படம் காட்டும் வல்லுனர்”!

காசியில் தமிழர்கள்: காசிக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு உள்ளது. பல
தலைமுறைகளாக தமிழர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். அனுமன் கட்டில் பல
தமிழர்கள் வாழ்கிறர்கள். என்றெல்லாம் விவரித்து படம் காட்டினாலும்
பிராமணர்களையே அல்லது குடுமி வைத்த நபர்களையேக் காட்டியது வேடிக்கையாக
இருந்தது!

காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் உள்ள சம்பந்தம்: “அக்காலத்தில்
கஷ்டப்பட்டுதான் காசிக்குச் செல்வார்கள். மாட்டு வண்டியில் செல்வார்கள்.
அப்படி செல்பவர்கள் திரும்பி வரலாம் அல்லது இல்லை. ஆகையால், காசிக்குச்
சென்றவர்கள், பிரயாகைக்குச் சென்று மண்ணை எடுத்துவந்து, ராமேஸ்வரத்தில்
சிரார்த்தத்தை முடித்தால்தான் முழுமை ஏற்படும் என்ற வழக்கத்தை
ஏற்படுத்தியதனால் அவர்கள் திரும்பி ராமேஸ்வரத்திற்கு வந்தனர். அப்பொழுது
தங்களது குடும்பத்தினரைப் பர்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததால், மறுபடியும்
குடும்ப வாழ்க்கை ஆரம்பித்தனர்” என்றெல்லாம் ஒருவர் மூலம் விளக்கத்தைப்
பெற்று சேர்த்துள்ளனர்! பாவம், ஆயிரக் கணக்கான் ஏன் லட்சக் கணக்கான
சாமியார்கள், யோகிகள் முதலியோர் காசி சென்று குடும்பம் இல்லாமலேயே ஏன்
திரும்பி வந்தனர் என்று அவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை போலும்!

தாமே தமக்கு திட்டம்: “தரச் சான்றிதழ் தரும் கட்டம்”: அனுமான் கட்,
மணிகர்ணிகா கட் எல்லாம் பார்த்தாகி விட்டது. கஞ்சா அடித்தாகிவிட்டது,
நரமாமிசம் சாப்பிட்டு விட்டாகியது.. .. இனி?,, தங்களது நிகழ்ச்சிற்கு
தாங்களே “சான்றிதழ்” கொடுத்து கொல்லும் வகையில், தமக்கு சாதகமாக சிலரைப்
பேட்டிகண்டு நிகழ்ச்சியை ஒரு ஹாலிவுட் “ஹரர் / டெரோர்” படம் மாதிரி,
அத்தகைய இசையையும் கூட்டி “படத்தை” முடிக்கின்றனர்!

மோஹன்ராவ்: நான் ஐந்து தடவை காசிக்குச் சென்றுள்ளேன்.. அப்பொழுது வசதிகள்
குறைவு.. .. ..24 மணி நேரமும் சடலங்கள் வந்து கொண்டே
இருக்கும்.. ..அங்கு. கட்டை வைத்து எரிக்கிறார்கள்.. .. இங்கெல்லாம்
வராட்டி (வரட்டி) வைத்து எரிக்கிறார்கள்..

ஒரு பெண்: நான் இதையெல்லாம் பார்த்ததே இல்லை.. .. இதையேல்லாம் நான்
மிஸ் பண்னி விட்டோமா? என்று நினைக்கத்தோன்றுகிறது… .. எட்டு வருடமாகச்
செல்கின்றேன், ஆனால் நான் இவற்றைப் பர்த்தது இல்லை.. .. அடுத்த தடவை
செல்லும்போது, நான் சென்று பார்க்கிறேன்.. .. நல்ல இன்ஃபர்மேட்டிவா
இருக்கிறது… …என்னுடைய புரொக்ராமில் சேர்த்துகொள்கிறேன்.. ..

வேணுகோபாலன்: 20 வருடங்களுக்கு முன்பு ரயில் நிலையத்திலேயே படுத்து
கிடப்பர்.. .. அன்கிருந்தே தன்களுக்கு முக்தி கிடைக்குமா என்று ஏங்கிக்
கிடப்பர்.. .. .. பிறகுதான் பிர்லாவின் “முக்தியடைய ஆஸ்ரம்” கட்டப்
பட்டது.. ..ஸ்டேசனிலேயே.. .. .. இறக்கவிருக்கும் மனிதர்களைக் கிடத்தி,
இறந்தபிறகு எரிக்க எடித்துச் செல்வர்.. ..

சுசீலபாய்: டிவியை பார்க்காதவர் ஆனால் சன் செய்திகள் காசியைப் பற்றி
ஒளிபரப்பு செய்வதை அறிந்ர்து பார்த்தாரம்! ஆனால் தான் அதைப் பற்றி
ஒன்றும் சொல்ல விரும்பவில்லை என்று, காசியைப் பற்றி பொதுவான விவரங்களைக்
குறுப்பிட்டார்..

ராஜேஸ் சாஃப்ட்வேர் இஞ்சினியர்: நான் அங்கு பாஸிட்டிவ் அதிர்வுகளை
அனுபவித்தேன்… .. , அமைதியுள்ள இடம்… அதனை அனுபவித்தால்தான்
தெரியும்.. .. அங்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.. ..
என்றரீதியில் தனது ஆன்மீக அனுபவத்தை மெய் மறந்து விளக்கினார்!

ஸ்ரீரங்கம் நேயர்: இவர்தான் கடைசியாக “சன் செய்திகளுக்கு” ISO 9001 /
9002 ரீதியில் சான்றிதழ் வழங்கியவர்! நிகழ்ச்சி மிகவும் அருமை.. ..
உண்மையான நிஜம் தெரிந்தது.. .. காசியைப் பற்றிய விவரங்களை தெளிவாக,
துள்ளியமாக, .. .. .. படம் பிடித்துக் காட்டினார்கள்.. .. சிறப்பாக
காண்பித்தார்கள்.. .. .. , அருமையாக இருந்தன .. .. .. 100%
நம்புவதாக இருந்தது. .. .. சன் டிவிக்கு நன்றி சொல்ல கடமை
பட்டிருக்கிறோம்

பேட்டி கண்டவர்கள் சொல்வதிற்கும், நிகழ்ச்சியின் போக்கிற்கும் சம்பந்தமே
இல்லை. நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு உள்நோக்கத்துடன் தயாரிக்கப் பட்டு,
ஒளிபரப்பப் பட்டது நன்றாகத் தெரிகிறது. மேலாக அதில் அவர்கள் சொன்ன
விவரங்கள், காட்சிகள் முதலியன எல்லாம் ஏற்கெனவே உள்ளதுதான். மேனாட்டு
உல்லாசப் பயணிகள், கிருத்துவ-பிரச்சாரகர்கள், ஆராய்ச்சியாளர்கள்
என்பவர்கள் எல்லாம் இதைவிட அதிகமாகவே படம் பிடித்துள்ளனர், “கதைகள்”
எழுதியுள்ளனர். பிச்சைகாரர்களுக்கும் சாமியார்களுக்கும் வித்தியாசம்
தெரியாத இடத்தில், இவ்வாறாக பிரச்சார ரீதியில் போலிகளை பிடித்து, அவர்களை
வைத்து கதைக் கட்டுவது மிக சாதாரண விஷயம். இதில் சன் டிவி இறங்கி
இருப்பது தெரிகிறது.

shivan .

unread,
Nov 7, 2009, 8:56:55 AM11/7/09
to mint...@googlegroups.com
"உன் தாயின் முகமெல்லாம் கோரமாக சுருக்கம்;

உன் அம்மா அருகே போனால் நீச்ச வாடை அடிக்கிறது,ஒழுங்காக குளிக்க சொல்லக்கூடாதா?

அதென்ன அவர்கள் பல்லில் அப்படி ஒரு கறை?

 ஏம்பா  உங்கம்மாவை கையை சரியாக கழுவிக் கொண்டு சுத்தமாக சமையல் செய்ய சொல்லக் கூடாதா?

என்ன இப்படி பேச தெரியாமல் பேசுகிறாள் உன் அன்னை?"

இப்படி ஒருவர் கேட்டால் என்ன சொல்வது?

நீ என்ன சொன்னாலும் என் அம்மா அம்மாதான். அவனருளால் உண்மையான பிழைகள் இருந்தால் சரியாகும்; 

இவ்வளவுதான் காசியை பற்றி என்னால் சொல்ல முடிகிறது. 

2009/11/7 Vedaprakash <vedamved...@yahoo.com>

Sankaran M

unread,
Nov 7, 2009, 10:47:18 PM11/7/09
to mint...@googlegroups.com

சன் டீவியில் இதைத்தவிர வேறேன்ன எதிர்பார்க்கமுடியும்.தெரிந்ததுதானே! விட்டுத்தள்ளுங்கள்.உலக கோடீஸ்வரர் சொந்தமாக ஒருசேனல் வைத்துக்கொண்டு அண்டப்புளுகு ஆகாசப்புளுகு செய்துகொண்டு இருக்கிறார். மட்டமான திரைப்படத்தை அஹா ஓஹோ என்று தனக்குத்தானே புகழ்ந்து 5 நிமிடத்திற்கு ஒருதடவை விளம்பரம்செய்து தமிழ்மக்களை மூளை சலவை செய்துகொண்டு இருக்கிறார்கள். காசியில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதெல்லாம் இவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. மஹாபாரத துரியோதனன்களை தவிர்ப்பதுதான் நமக்கெல்லாம் நல்லது.

மீனாக்ஷி.சங்கர சர்மா.ஜோதிஷம்.சிதம்பரம்.

2009/11/7 shivan . <siva...@gmail.com>



--
Meenashi.Sankarasharma.
TAMIL NADU.  INDIA.


     

Suresh sundaresan

unread,
Nov 7, 2009, 11:01:16 PM11/7/09
to mint...@googlegroups.com
முற்றிலும் உண்மை நாற்பது வருடம் தி மு க மக்களை ஏமாற்றி
 வருகிறார்கள் இதற்கு  ஓர்வழி பாரதியார் கவிதைகள் படிபதுதான் 
  
 இப்படிக்கு
சுந்தரேசன்


2009/11/8 Sankaran M <sankaras...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 8, 2009, 5:40:04 AM11/8/09
to mint...@googlegroups.com
வருக. சுந்தரேசன், தமிழில். உங்கள் பாதை சிறந்தது. 
இன்னம்பூரான்

2009/11/8 Suresh sundaresan <sunds...@gmail.com>



--
இன்னம்பூரான்

Suresh sundaresan

unread,
Nov 8, 2009, 9:44:12 AM11/8/09
to mint...@googlegroups.com
நமஸ்க்காரம் 

எல்லாம் உங்கள் உக்கம் தான் 

என்றும் அன்புடன் 

சுந்தரேசன் 

2009/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Geetha Sambasivam

unread,
Nov 11, 2009, 5:45:26 AM11/11/09
to mint...@googlegroups.com
காசியிலே இப்படி எல்லாம் நடக்கிறதுனு இந்த இழையைப் பார்த்ததும் தான் புரியுது, நாங்களும் தான் போய் ஒரு வாரம் தங்கினோம். ம்ஹும், இப்படி ஒண்ணு கூட மாட்டிக்கலையே!

2009/11/7 Vedaprakash <vedamved...@yahoo.com>

Saravana Rajendran

unread,
Nov 13, 2009, 3:57:17 AM11/13/09
to mint...@googlegroups.com
 அம்மா நான் 5‍ம் வகுப்பு முதல் மதுரையில் படித்து வந்தேன், நாங்கள் பள்ளிகூடம் கட் அடித்துவிட்டு செல்லும் இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் (தற்போது உள்ளது போன்று 1988 முதல்96) வரையினாலான காலகட்டத்தில் வாசல் மூடமாட்டார்கள், மூலவர் சன்னதி மட்டும் தான் மூடி இருக்கும் , அந்த நேரத்தில் நடக்கும் கூத்துகள் வெளியில் சொல்ல முடியாது, தூண்களின் மறைவில் தற்போது மும்பை கடற்கரையில் நடக்கும்  அசிங்கங்க‌ள் நடக்கும், அப்போது அருகில் ஒரு தியேட்டர் இருந்தது அது ராயல் என்று நினைக்கிறேன்,
 ஆனால் மாலை ஆனதும் என்ன ஒரு பக்திமயம் நிறைந்துவிடும் அங்கு வரும் பக்தர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாது, அவர்கள் சொல்வது அம்மனை மனதார தரிசித்தேன், கோவிலுக்கு சென்றதில் இருந்து திரும்பும் வரை தெய்வீக மயம் தான் என்பார்கள்,
--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-

Geetha Sambasivam

unread,
Nov 14, 2009, 12:30:17 AM11/14/09
to mint...@googlegroups.com
// அம்மா நான் 5‍ம் வகுப்பு முதல் மதுரையில் படித்து வந்தேன், நாங்கள் பள்ளிகூடம் கட் அடித்துவிட்டு செல்லும் இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் (தற்போது உள்ளது போன்று 1988 முதல்96) வரையினாலான காலகட்டத்தில் வாசல் மூடமாட்டார்கள், மூலவர் சன்னதி மட்டும் தான் மூடி இருக்கும் , அந்த நேரத்தில் நடக்கும் கூத்துகள் வெளியில் சொல்ல முடியாது,//

பிறந்து வளர்ந்து படிச்சுக் கல்யாணம் ஆகி அப்புறமும் மதுரைக்குப் போயிருக்கேன். இரு வருடங்களுக்கு முன்னர் கூடப் போயிட்டு வந்தோம். அப்போது முதல் மதுரையே எனக்கு வெறுத்துப் போய்விட்டது. எழுபதுகளுக்கு முன்னால் வரையிலும் எனக்குத் தெரிஞ்சு ஆடி வீதிகளும், கோயில் கடைகளும் மட்டுமே திறந்திருக்கும். இப்படி எல்லாம் எதையும் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை. ஆனால் எழுபதுகளுக்குப் பின்னர் மதுரையின் முகமே மாறிவிட்டது. இப்போது இருப்பது என்னோட மதுரையே அல்ல, முகம் மாறிய நவநாகரீக மதுரை.

2009/11/13 Saravana Rajendran <rajesa...@gmail.com>

N. Kannan

unread,
Nov 14, 2009, 1:59:42 AM11/14/09
to mint...@googlegroups.com
2009/11/13 Saravana Rajendran <rajesa...@gmail.com>

> காலகட்டத்தில் வாசல் மூடமாட்டார்கள், மூலவர் சன்னதி மட்டும் தான் மூடி இருக்கும் , அந்த நேரத்தில் நடக்கும் கூத்துகள் வெளியில் சொல்ல முடியாது, தூண்களின் மறைவில் தற்போது மும்பை கடற்கரையில் நடக்கும்  அசிங்கங்க‌ள் நடக்கும், >

தாய்லாந்தில் பழைய இந்துக்கோயில்களில் நிறையக் குரங்குகள் இருக்கும். அவை
குரங்குகள். இருப்பது கோயில் என்று தெரியாது. எல்லாம் செய்யும். அது
போல்தான் இதுவும்.

மாக்களை மக்கள் ஆக்குவது மனம்.

க.>

shivan .

unread,
Nov 14, 2009, 3:08:03 AM11/14/09
to mint...@googlegroups.com
தாய்லாந்தில் பழைய இந்துக்கோயில்களில் நிறையக் குரங்குகள் இருக்கும். அவை
குரங்குகள். இருப்பது கோயில் என்று தெரியாது. எல்லாம் செய்யும். அது
போல்தான் இதுவும்.////

:))))))))))))))))))))

2009/11/14 N. Kannan <navan...@gmail.com>

Saravana Rajendran

unread,
Nov 16, 2009, 3:50:44 AM11/16/09
to mint...@googlegroups.com
அட்டே கோவில் நிர்வாகம் பல பணிகளுக்கு மனித வடிவில் பல குரங்குகளை
நியமித்தது என்று 20 வருடங்களுக்கு பிறகு புரிந்து கொண்டேன்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 16, 2009, 6:28:09 AM11/16/09
to mint...@googlegroups.com
அன்புள்ள வேதபிரகாஷ்
 
உங்கள் அஞ்சலை சன் டிவி நிருபர் ராமகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்தேன்  அவர் என்னுடைய நல்ல நண்பர்.  அவர்தான் நிகழ்ச்சியை தயாரித்தவர்.
 
அவருக்கு என் மேல் எக்கச்சக்கமாகக் கோபம்.  கன்னா பின்னாவென்று கத்தினார்.  (ஏதோ உங்களால் வழியாகக் கிடைத்த உதவி)
 
நான் அவருக்கு சொன்னேன்.  நீ்ங்கள் எனக்கு பதில் கொடுப்பது போலக் கொடுத்தால் நான் குழுவுக்கு அனுப்புகிறேன் என்று.
 
அவர் அவசர அவசரமாக வேண்டாம் என்று மறுத்து விட்டு அடுத்த நிகழ்ச்சி படப்பிடிப்புக்காக ரிஷிகேஷ் போயிருக்கிறார். 
 
உங்கள் அஞ்சலை அவர் ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இருந்திருந்தால் ரிஷிகேஷ் படப்பிடிப்பு நன்றாக செய்வதற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.
 
நமக்கெல்லாம் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்கக் கூடாதே.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்

2009/11/16 Saravana Rajendran <rajesa...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 16, 2009, 8:02:21 AM11/16/09
to mint...@googlegroups.com
நாம்  இறந்த பிறகு நம் உடல்  மீண்டும் இயற்கையாக
 
நிலம் ,நீர், நெருப்பு, வாயு,  ஆகாயம் என்னும்  பஞ்ச பூதங்களுடன்தானே
 போய்ச் சேரப் போகிறது
 
அப்படிப்பட்ட இந்த உடலை
 
மருத்துவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் அளித்தால்
 
காசியில்  சென்று இறந்து  அடையும் பலனை விட  அதிகமாக  அடையலாமே
 
மனித குலத்துக்கு  மீண்டும்  உதவுமே  நம் உடல்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
16-11-09 அன்று, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> எழுதினார்:
2009/11/16 Saravana Rajendran <rajesa...@gmail.com>


அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

shivan .

unread,
Nov 16, 2009, 12:32:55 PM11/16/09
to mint...@googlegroups.com
காசியில்  சென்று இறந்து  அடையும் பலனை விட  அதிகமாக  அடையலாமே///

???

2009/11/16 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

MANICKAM POOPATHI

unread,
Nov 16, 2009, 2:43:18 PM11/16/09
to mint...@googlegroups.com
வணக்கம்:

முன்னாள் முதல்வர் ஜெஜெ அவர்கள்..
மிகவும் துணிச்சலாக  எடுத்த நடவடிக்கைகளுள் ஒன்று
'வாசல்' தளங்களுக்கு இலக்கணமாய் திகழ்ந்திருந்த..
சீர்மிகு  மதுரை நகர் வீதிகளை ஆக்கிரமித்திருந்த/இருக்கும்
திடீர் வழிபாட்டு இடங்களையும்.. கடை கண்ணிகளையும்...
அப்புறப்படுத்த எடுத்த நடவடிக்கையினை சொல்லலாம். ..?

ஆனால்..அது முழுமையாக நிறைவேற்றப்
பட்டதா என்பது வேறு விஷயம்..!?


பழைமை பாதுகாக்கப் படவேண்டும். (face-lift plan)

நண்பர்களுக்கு நன்கு தெரியும்...

பழைய ஐதராபாத் போன்ற மிகவும் நெருக்கமான
குடி இருப்பு பகுதியில்/வீதிகளில்  வண்ண கற்களால்
(Belgian or Spanish styled street (granite/limestone/brick pavements
(plus additional electric car-track <or> monorail..? )) மேவப்பட்ட..   
நடை பாதைகளை.. இன்றைக்கும் காணமுடியும்..?

மிகவும் நீண்ட கால திட்டமிடுதல்/முதலீடு என
உடனடியான அரசியல் பயன் இல்லாவிட்டாலும்..  :-)
(most economical method of floor construction system in the long run.)

"உலக வங்கி"  போன்றவற்றின் கூட்டுறவுடன்
இத்தகைய மிகக் குறைந்த பராமரிப்பு மற்றும்
அதிகப்  புனரமைப்பு தேவையிராத.. ஆனால்
மிகவும் பாதுகாப்பான வழுக்கல் மற்றும் பாசம்
படியாத.. ('porous & permeable' organic local products)
நவீன தொழில் நுட்பத்துடனான..  நகர் புற கட்டுமானங்களை 
ஒவ்வொன்றாக வடிவமைக்க.. நடை முறைப் படுத்த (paving-blocks block by block)
தமிழக அரசு முனைப்புடன் திட்டமிடல் வேண்டும்.

நமது உலகத்தரம் வாய்ந்த சிவில் பொறியாளர்கள்
மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளையும்  கொண்ட
(Civil Aviation/Surface transport/Urban Development)
உயர்மட்டக் குழு ஒன்றினை.. இதில்
(with a directorate level plan & specifications )
முழுமையாக ஈடு படுத்தவும்  வேண்டும்..?

மான்புமிகு துணை முதல்வர் அவர்கள்
உலகப் பெரும் நகரங்களை நேரில் பார்த்தறிந்தவர்.
இதொன்றும்  அவருக்கு  புதிய விஷயங்களே  அல்ல.

என்றாலும்..  ஏற்கனவே  சிந்தையில் வீற்றிருக்கும்..
இத்தகைய கனவு திட்டங்களை..  அரசியல் நெருக்கடி
மற்றும் திட்டமிடல் முன்னுரிமை போன்ற காரணங்களால்
தொடர்ந்து ஒத்தி வைத்துகொண்டே போகாமல்...
செயல் வடிவம்  கொடுக்க முன்வர வேண்டும்.

மிகவும் நன்றி..!


அன்புடன்.../ பூபதி செ. மாணிக்கம்

_____________________________________

2009/11/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>

>
> // அம்மா நான் 5‍ம் வகுப்பு முதல் மதுரையில் படித்து வந்தேன், நாங்கள் பள்ளிகூடம் கட் அடித்துவிட்டு செல்லும் இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் (தற்போது உள்ளது போன்று 1988 முதல்96) வரையினாலான காலகட்டத்தில் வாசல் மூடமாட்டார்கள், மூலவர் சன்னதி மட்டும் தான் மூடி இருக்கும் , அந்த நேரத்தில் நடக்கும் கூத்துகள் வெளியில் சொல்ல முடியாது,//
>
> பிறந்து வளர்ந்து படிச்சுக் கல்யாணம் ஆகி அப்புறமும் மதுரைக்குப் போயிருக்கேன். இரு வருடங்களுக்கு முன்னர் கூடப் போயிட்டு வந்தோம். அப்போது முதல் மதுரையே எனக்கு வெறுத்துப் போய்விட்டது. எழுபதுகளுக்கு முன்னால் வரையிலும் எனக்குத் தெரிஞ்சு ஆடி வீதிகளும், கோயில் கடைகளும் மட்டுமே திறந்திருக்கும். இப்படி எல்லாம் எதையும் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை. ஆனால் எழுபதுகளுக்குப் பின்னர் மதுரையின் முகமே மாறிவிட்டது. இப்போது இருப்பது என்னோட மதுரையே அல்ல, முகம் மாறிய நவநாகரீக மதுரை.

>
> 2009/11/13 Saravana Rajendran <rajesa...@gmail.com>
>>
>>  அம்மா நான் 5‍ம் வகுப்பு முதல் மதுரையில் படித்து வந்தேன், நாங்கள் பள்ளிகூடம் கட் அடித்துவிட்டு செல்லும் இடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் (தற்போது உள்ளது போன்று 1988 முதல்96) வரையினாலான காலகட்டத்தில் வாசல் மூடமாட்டார்கள், மூலவர் சன்னதி மட்டும் தான் மூடி இருக்கும் , அந்த நேரத்தில் நடக்கும் கூத்துகள் வெளியில் சொல்ல முடியாது, தூண்களின் மறைவில் தற்போது மும்பை கடற்கரையில் நடக்கும்  அசிங்கங்க‌ள் நடக்கும், அப்போது அருகில் ஒரு தியேட்டர் இருந்தது அது ராயல் என்று நினைக்கிறேன்,
>>  ஆனால் மாலை ஆனதும் என்ன ஒரு பக்திமயம் நிறைந்துவிடும் அங்கு வரும் பக்தர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாது, அவர்கள் சொல்வது அம்மனை மனதார தரிசித்தேன், கோவிலுக்கு சென்றதில் இருந்து திரும்பும் வரை தெய்வீக மயம் தான் என்பார்கள்,
>>
>> On 11/11/09, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
>> > காசியிலே இப்படி எல்லாம் நடக்கிறதுனு இந்த இழையைப் பார்த்ததும் தான் புரியுது,
>> > நாங்களும் தான் போய் ஒரு வாரம் தங்கினோம். ம்ஹும், இப்படி ஒண்ணு கூட
>> > மாட்டிக்கலையே!
>> >

Innamburan Innamburan

unread,
Nov 16, 2009, 7:51:10 PM11/16/09
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனீ அவர்கள் கூறியது முற்றிலும் பொருத்தமான கருத்து. அது சாஸ்திரவிரோதமல்ல என்றொரு சான்று அறிவேன்.
இன்னம்பூரான்

2009/11/17 MANICKAM POOPATHI <poop...@gmail.com>

Saravana Rajendran

unread,
Nov 17, 2009, 3:48:57 AM11/17/09
to mint...@googlegroups.com
   சன் டீவி சோக் டீவி ஆயிப்போச்சு சார் ,
நான் எழுதிய தாராவி புத்தகம் பற்றி பேட்டி எடுக்க வந்தார்கள், சூரியனின் பலர் எனக்கு பழக்கம், ஆனாலும் சில ஹைடு, அந்த ஹைடுகளில் 3 வந்திருந்தார்கள், நான் அவரகளிடன்  சன்  தந்த அடையாள அட்டை தாருங்கள் என்றதும், தன்னுடைய அறிமுக அட்டையை தந்தார்கள்கள், நான் அடையாள அட்டை என்றதும் தாமதமாக புரிந்து கொண்டு ஓ ஐடென்ன்டி கார்ட்டுன்னு தான் நாங்க சொல்லுவோம் என்றார்கள், அடையாள அட்டைக்கு தமிழில் ஐடென்டி கார்டு என்று எனக்கு அன்றுதான் புரிந்தது, காசியை நாரடித்தது போல் தாராவியையும் நாரடிக்கும் நோக்கில் குற்றசெயல்கள் அதில் உள்ள தமிழர்கள் பற்றியே கேட்டார்கள், நான் பதிவானை நிறுத்த சொல்லிவிட்டு தாராவி ஒன்றும்  ரவுடிகள் தங்கும்  இடம் இல்லைங்க பிழைக்கவந்த தமிழர் தங்கும் இடம் தயவு செய்து தாராவி தமிழர்கள் என்றாலே குற்றவாளிகள் என்ற தோரனையில் எதையும் பதிவு செய்யவேண்டாம் என்று கூறினேன்,

  அதன் பிறகு நிதானமாக தமிழர்களை தவிர்த்து அங்கு வசிக்கும் பிறர் செய்யும் குற்றங்கள், அதில் அப்பாவி தமிழர்கள் சிலர் மாட்டி கொள்வது, மாபியாக்கள்,  நேரிடையாக இல்லாமல்  மறைமுகமாக செய்யும் காரியங்களுக்கு தமிழ் இளைஞர்கள் மாட்டி கொள்வது குறித்து விவரித்தேன்.

  ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை இவர்கள் நான் விவரித்ததை ஒலிபரப்புவார்கள் என்று ஏன் என்றால் பரபரப்பு தான் இவர்களுக்கு முக்கியம்,
வெட்டி ஒட்டி பேச்சில் குற்றம் தமிழர்கள் என்ற வார்த்தைகளை மட்டும் ஒலிபரப்புவார்கள் என்று நினைக்கிறேன், நான் சன்னில் பேச முழுமையாக விருமபவில்லை, ஆனால் அவர்கள் காசியை போல் தாராவியையும் அசிங்கம் என்று சொல்லிவிடக்கூடதே என்பதற்காகத்தான்,

எப்போது ஒலிபரப்புவார்கள் என்று கூட கேட்கவில்லை, மனமின்றி கொடுத்த பேட்டி அது

2009/11/16 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 18, 2009, 8:53:18 AM11/18/09
to mint...@googlegroups.com

சரவண ராஜேந்திரன்

உங்களையும் தாராவித் தமிழர்களையும் ஆண்டவன் காப்பாற்றட்டும்.

இப்போதைக்கு ஆண்டவர்கள் நம்மை ஆள்பவர்கள்தான். 
 
அவர்களின் ஊடகங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஊறு விளைவிப்பது போல அந்தக் காலக் களப்பிரர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2009/11/17 Saravana Rajendran <rajesa...@gmail.com>

Saravana Rajendran

unread,
Nov 18, 2009, 9:00:08 AM11/18/09
to mint...@googlegroups.com
இன்று ஒளிபரப்பாகிய தாராவி நிகழ்ச்சியில் எனது பேட்டி இடம்பெறவில்லையாம்  ஒருவகையில் நிம்மதி என்றாலும் மீண்டும் பகட்டுகாரர்களை தேடி ஊடகம் செல்கிறதே என்று வேதனையும் கூட‌

2009/11/18 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

Satheesh kumar R

unread,
Nov 18, 2009, 11:22:56 AM11/18/09
to mint...@googlegroups.com
<<<அவர்களின் ஊடகங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஊறு விளைவிப்பது போல அந்தக் காலக் களப்பிரர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.

அன்புடன்

பென்னேஸ்வரன்>>>

களப்பிரர்களைப் பற்றிய செய்திகளே மிகக் குறைவு, அவ்வாறிருக்க அவர்கள் தமிழுக்கு ஊறு விளைவித்தார்கள் என்பதற்கான குறிப்புகள் எங்கு இருக்கின்றன? ஒரு வேளை அவர்கள் கன்னடர் என்பதால் இவ்வாறு கூறுகிறீர்களா?

என்னிடம் களப்பிரர்கள் ஆட்சியில் தமிழகம் என்ற மயிலை சீனி வேங்கடசாமியின் நூல் உள்ளது, அதில் ஏதும் இது பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எதற்கும் ஒரு முறை மீண்டும் படித்துவிட்டு வருகிறேன்.

நன்றி,
இரா. சதீஷ் குமார்

வினோத் ராஜன்

unread,
Nov 18, 2009, 11:41:36 AM11/18/09
to மின்தமிழ்
> களப்பிரர்களைப் பற்றிய செய்திகளே மிகக் குறைவு, அவ்வாறிருக்க அவர்கள் தமிழுக்கு
> ஊறு விளைவித்தார்கள் என்பதற்கான குறிப்புகள் எங்கு இருக்கின்றன? ஒரு வேளை
> அவர்கள் கன்னடர் என்பதால் இவ்வாறு கூறுகிறீர்களா?

இது பின்னர் வந்தக்கொள்கையாக இருக்க வேண்டும். இதற்கு முதறல் காரணம்,
களப்பிரர்கள் பெரும்பாண்மையனார் பௌத்த ஜைன மதங்களை ஆதரித்தது.
அக்காலக்கட்டத்தில் பௌத்த ஜைன மதங்கள் செழித்தோங்கி இருந்தன.

அதனால் பின்னர் வந்த வைதீகவாதிகள் களப்பிர காலத்தை இருண்ட காலம் ஆக்கி
விட்டனர் :-)

V

On Nov 18, 9:22 pm, Satheesh kumar R <svp...@gmail.com> wrote:
> <<<அவர்களின் ஊடகங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஊறு விளைவிப்பது போல அந்தக்
> காலக் களப்பிரர்கள் கூட செய்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது.
>
> அன்புடன்
> பென்னேஸ்வரன்>>>
>

>

Satheesh kumar R

unread,
Nov 18, 2009, 1:30:30 PM11/18/09
to mint...@googlegroups.com
<<<<இது பின்னர் வந்தக்கொள்கையாக இருக்க வேண்டும். இதற்கு முதறல் காரணம்,
களப்பிரர்கள் பெரும்பாண்மையனார் பௌத்த ஜைன மதங்களை ஆதரித்தது.
அக்காலக்கட்டத்தில் பௌத்த ஜைன மதங்கள் செழித்தோங்கி இருந்தன.

அதனால் பின்னர் வந்த வைதீகவாதிகள் களப்பிர காலத்தை இருண்ட காலம் ஆக்கி
விட்டனர் :-)

V>>>>

அப்படியா! ஆனால் களப்பிரர்கள் அச்சுதன் என்ற பெயரல்லவா கொண்டிருந்தார்களாம்?

அச்சுதா அமரரேறே,ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவைதவிர யான்போய் இந்திரலேகம்மாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருள்ளானே

ஒருவேளை இந்த அச்சுதன் வேறோ?

அன்புடன்,

Banukumar Rajendran

unread,
Nov 18, 2009, 11:24:34 PM11/18/09
to mint...@googlegroups.com
அச்சுதா, அமலா, அருகா சரணம்!
அருந்தவகடலே அறிவா சரணம்!
                                           - தோத்திரத் திரட்டு
 
:-)
 
இரா.பா


 
2009/11/19 Satheesh kumar R <svp...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 18, 2009, 11:29:02 PM11/18/09
to mint...@googlegroups.com
ஓ.. வினோத் அவர்களுக்கு தன் மனம் திருப்தியடைய ஏதாவது சொல்லவேண்டுமென்றால் இப்படி தாராளமாக தீனி போட்டுக் கொள்ளலாம்.
 
வைதீகவாதிகள் மீது குற்றம் சுமத்தும்போது, நல்ல் ரெஃபரென்ஸ் உடன் குற்றம் சுமத்தவேண்டும்.
 
களப்பிரர்கள் ஆதியில் தமிழின் விரோதிகள் என்பதை ஆறுமுக நாவலர், சதாசிவ பண்டாரத்தார் இன்னும் சில மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் போன்ற 'வைதீகம்' அல்லாதோர் ஏராளமான அளவில் சொல்லிவிட்டுப் போய்விட்டனர். தமிழில் பாடிய சமணர்கள், மதம் மாற்றப்பட்ட தமிழர்களே தவிர அவர்கள் களப்பிரர் அல்ல.
 
தமிழ் நூல்கள் மூக்கியமாக சங்ககால நூல்கள் எரிக்கப்பட்ட காலம் களப்பிரர் காலம். அச்சுதக் களப்பிரரைப் பற்றிய தகவல் புத்தமத நூலிலிருந்து வந்தது. யாப்பருங்களம் எனும் நூல் அச்சுதக் களப்பராயன் எனும் நூல் ஒன்று இந்த அரசன் நந்தி ஹில்ஸ் (கர்நாடகம்) பகுதியைச் சேர்ந்தவன் என்றும் பிராம்மணர்களுக்கு தானம் செய்து புகழ்பெற்றான் என்றும் கூறுகிறது.
 
மதத்தால் செறுக்கு பெறும்போதுதான் மதம் பிடிக்கிறது. அந்த மதத்தை அழிக்க இன்னொரு மதத்தார்தான் வருவார்கள். இது இயற்கை. தென்னகத்தில் சமண-பௌத்தத்தை அழித்தவர்கள் வைதீகர்கள் இல்லை.
 
திவாகர்

 

devoo

unread,
Nov 19, 2009, 12:05:04 AM11/19/09
to மின்தமிழ்
>>அச்சுதா அமரரேறே,ஆயர்தம் கொழுந்தே<<
>>அச்சுதா, அமலா, அருகா சரணம்!<<

அச்சுதன் என்றால் புகல் அடைந்தவரைக் கை விடாதவன் என்று பொருள்.

’ஆதி’ என்பதும் எல்லாக் கடவுளருக்கும் பொதுப் பெயர்.
திருக்குருகூரின் ஆதிப்பிரானையும் சமணக் கடவுள் என்று கூற முயன்றனர்.
ஒம்சக்தி இதழில் விவாதம் நடந்தது; ஆதி என்னும் பெயர் ஸநாதந நூல்களிலும்,
நாலாயிரத்திலும் பல இடங்களில் இருப்பதைச் சுட்டிக் காட்டினேன்.

’அடைக்கலம்’கிறித்தவப் பெயர் என்பதே பெரும்பான்மையோரின் கருத்து;
உண்மை அதுவன்று.

தேவ்

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 19, 2009, 2:08:40 AM11/19/09
to mint...@googlegroups.com

அன்புள்ள தோழருக்கு
 
அந்த அளவுக்கு என்னிடம் சரித்திர ஆதாரங்கள் கேட்டால் நான் ஜூட்.
 
எங்கோ எதையோ கொளுத்திப்போட்டு இங்கே பிரச்னை ஆகிவிட்டது.
 
களப்பிரர்கள் சமாச்சாரம் அதிகமாக நான் திராவிட இயங்க சிஙகங்களின் பேச்சிலும் எழுத்திலும் கண்டது.
 
களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்ற அளவில் கேள்விப்பட்டது.
 
நான் சொன்னது தவறு என்றால் என்னுடைய கிண்டலை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தயார்.
 
களப்பிரர் சமாச்சாரம் விடுங்கள்.  ஆனால் நம் திராவிடத் தலைவர்களின் குடும்ப ஊடகங்களில் தமிழுக்கு ஊறு விளைவிப்பது என்னவோ உண்மையான விஷயம்தானே?
 
என்னுடைய களப்பிரர் உதாரணம் தவறு என்றால் உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதாவது கடுமையான உதாரணத்தை அங்கே மாற்றி வைத்துப் படித்துக் கொள்ளுங்கள்.  ஆனால் நான் சொல்ல வந்த விஷயத்தில் உறுதியாகத்தான் இருக்கிறேன்.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
2009/11/19 devoo <rde...@gmail.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Nov 19, 2009, 2:12:28 AM11/19/09
to mint...@googlegroups.com
ஐயா இன்னொரு விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.
 
நானே கன்னடக்காரன்தான்.  அதாவது தமிழகத்தில் பல தலைமுறைகளுக்கு முன்பு குடியேறிய கன்னட பிராமணன்.
 
இன்னான்று கணப்பிரர்கள் கன்னடக்காரர்கள் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.
 
அத்தனை சரித்திர ஞானம் எனக்கு.
 
அன்புடன்
 
பென்னேஸ்வரன்
 
2009/11/19 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>
2009/11/19 devoo <rde...@gmail.com>

Satheesh kumar R

unread,
Nov 19, 2009, 2:47:43 AM11/19/09
to mint...@googlegroups.com
இப்படியெல்லாம் ஜூட் விட்டா எப்படி சார், வாங்க சேர்ந்து தேடுவோம்.
 
அன்புடன்
சதீஷ்

19 நவம்பர், 2009 10:08 am அன்று, PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com> எழுதியது:

Satheesh kumar R

unread,
Nov 19, 2009, 3:04:23 AM11/19/09
to mint...@googlegroups.com
நன்றி திவாகர் சார்!
 
களப்பிரர் காலத்தில் மதங்கள் பற்றி மயிலை. சீனி வேங்கடசாமி எழுதியதை இங்கு இணைத்துள்ளேன். இதில் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மதங்கள் எவ்வாறு இருந்தன என்று விளக்கப்பட்டிருக்கிறது.
 
களப்பிரர் காலத்தில் தமிழ் மொழியின் நிலையைப் பற்றி எழுதியிருப்பதை பின்னர் இணைக்கிறேன். 
 
அன்புடன்,
இரா. சதீஷ் குமார்

19 நவம்பர், 2009 7:29 am அன்று, V, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:
Madhangal - kalappirar aatchiyil thamizhagam.pdf

Geetha Sambasivam

unread,
Nov 19, 2009, 3:22:06 AM11/19/09
to mint...@googlegroups.com
மிக்க நன்றி அருமையான புத்தகம் அளித்தமைக்கு.

2009/11/19 Satheesh kumar R <svp...@gmail.com>
நன்றி திவாகர் சார்!

Banukumar Rajendran

unread,
Nov 19, 2009, 6:35:20 AM11/19/09
to mint...@googlegroups.com
உயிருக்கு அஞ்சி புகலிடம் தேடிவரும் உயிர்களைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்டப் சமண பள்ளிகளுக்கு ”அஞ்சினான் புகலிடம்”  என்றுப் பெயர். முனி கடமைகளுள் அஞ்சி வரும் உயிர்களைக் காப்பதுவும் ஒன்று. “அஞ்சினான் புகலிடம்”  உள் நுழைய அரசனுக்கும்  அனுமதியில்லை.
 
இரா.பா

2009/11/19 devoo <rde...@gmail.com>

V, Dhivakar

unread,
Nov 19, 2009, 7:00:24 AM11/19/09
to mint...@googlegroups.com
மிக நுணுக்கமான தகவல் இது. திருடர்களாக இருந்தாலும், சமண பசடிகளில் இருக்கும்வரை பாதுகாப்பு உண்டு. இது புத்த மடங்களிலும் உண்டு. இங்கே கிருஷ்ணை நதிக்கரையின் தென்கரைகளில் புத்தமடங்கள்  நடைமுறையைப் பற்றிய தகவல்கள் தாமிரப் பட்டயங்கள் மூலம் பிராக்ருத மொழியில் தரப்பட்டுள்ளன. இவை இப்போதும் நாகார்ஜுன சாகர் மியூசியத்தில் உள்ளன. இந்த அணை கட்டப்பட்டபோது ஏராளமான பட்டயங்கள். சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டும், பல சிலைகள் மூழ்கடிக்கவும் பட்டன.
 
ஒரு கொசுறு: இந்தச் சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் என்னுடையை 'விசித்திரசித்தன்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
 
தி

 
2009/11/19 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Nov 19, 2009, 8:50:25 AM11/19/09
to மின்தமிழ்
”அஞ்சினான் புகலிடம்”

மிக அரிய நுட்பமான செய்தி, பானுகுமார்ஜீ !
அபய ப்ரதானத்திலும் பொதுமை காண்கிறோம்.
நம்பிக்கை குழுமத்தில் தர்பைக்கும் புத்த பிரானுக்கும் உள்ள
திவாகர் சார் எழுதியுள்ளதை இப்பொழுதான் படித்தேன்.
’ஆதி’ யிலும் பொதுமை உள்ளது.

தேவ்

amachu

unread,
Nov 19, 2009, 1:07:34 PM11/19/09
to mint...@googlegroups.com
On Thu, 2009-11-19 at 17:05 +0530, Banukumar Rajendran wrote:
> உயிருக்கு அஞ்சி புகலிடம் தேடிவரும் உயிர்களைக் காப்பதற்காக
> ஏற்படுத்தப்பட்டப் சமண பள்ளிகளுக்கு ”அஞ்சினான் புகலிடம்” என்றுப்
> பெயர். முனி கடமைகளுள் அஞ்சி வரும் உயிர்களைக் காப்பதுவும் ஒன்று.
> “அஞ்சினான் புகலிடம்” உள் நுழைய அரசனுக்கும் அனுமதியில்லை.

இன்று பல கிறித்துவ இயக்கங்கள் வேதம் வேதாகமம் என்று கூறி பைபிளை
வழங்குகின்றன. மறை என்பது பைபிளைக் குறிக்க பயன்பட்டது என்று கூட
சொல்லப்படலாம்.

தாங்கள் குறிப்பிடும் பல சமண சமயப் பொருத்தங்களை இத்தகையதாகவே கருத
வேண்டியுள்ளது. சில உண்மையாகவே பொருந்தலாம்.

--

ஆமாச்சு


Banukumar Rajendran

unread,
Nov 19, 2009, 10:53:05 PM11/19/09
to mint...@googlegroups.com
:-))
 
சிவத்தமிழோனுக்கு எழுதியது! இங்கும் பயன்படும்! ;-)
 
இரா.பா

2009/11/19 amachu <rama...@amachu.net>

Vedaprakash

unread,
Dec 21, 2009, 3:01:53 AM12/21/09
to மின்தமிழ்
I would like to get his contact no., e-mail etc.

CanI get?


On Nov 16, 4:28 pm, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 23, 2009, 9:09:29 AM12/23/09
to mint...@googlegroups.com
His mobile number is 09350494938.
 
 
I do not have his mail id.
 
regards
 
KP

2009/12/21 Vedaprakash <vedamved...@yahoo.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
http://www.vadakkuvaasal.com/
Reply all
Reply to author
Forward
0 new messages