நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!

39 views
Skip to first unread message

Vedaprakash

unread,
Dec 4, 2009, 7:45:24 PM12/4/09
to மின்தமிழ்
நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்!

தமிழச்சிக் கலக்குகிறாள் அங்கே, தமிழச்சி கலங்குகிறாள் இங்கே
தமிழனும் கலங்குகிறான், தமிழன் பதறுகிறான் இப்பாரதத்தில்.
நாகரிகத்தின் அநாகரிகமா, அப்பண்பாட்டுச் செருக்கின் சீரழிவா
நிர்வாணம் அகோரமா, விகாரமா, அசிங்கமா, ஆபாசமா? [1]

புத்தரை வெல்லும் நிர்வாணமா ஜைனத்தை வெல்லும் நிர்வாணமா
இல்லை, கிரேக்க-ரோமானிய நிர்வாணத்தையும் வெல்லும் அவமானமா
நிர்வாணத்திலும் சமதர்மம் பார்க்கும் அம்மணமான பெண்மையே
உன்னை மூட முடியாதலால் மூடுகிறேன் எனது கண்களை. [2]

பத்மா லட்சுமி, அம்மா தாயே, தெய்வமே பயமாக இருக்கிறது!
பத்மஸ்ரீக்கள், கலைமாமணிகள் நோக்க நோகடிக்கவே
சுபாஷினி அலி, பார்வதி கான், என்று கேள்விப்பட்டிருக்கிறோம்
சல்மான் ருஸ்டியின் பத்தினி நீ, கண்ணகியையும் வென்றுவிடாய். [3]

தமிழன் பாடினான் ஓரக்கண்ணால் பார்த்தாலே “பிள்ளத்தாச்சி”
தமிழச்சி நீயோ கண்களைக் கட்டுகிறாய், நீயும் ஒரு “பிள்ளத்தாச்சி”
அச்சம், நாணம், மடம், கற்பு, பயிர்ப்பு என்ற ஐங்குணங்கள்
அச்சம்கொண்டு நாணிமடத்துடன் கற்பைவிட்டு பயிர்ப்போடு பெயர்ந்தன. [4]

பத்மஸ்ரீக்களின் கலக்கல்களின்று மீள்வதற்குள், நீ மீறிவிட்டாய்.
“தமிழச்சி”களின் “முலைகள்” கவிதைக் கொடுமைகள் தீருவதற்குள்
தமிழச்சி நீ குனிந்து விட்டாய், நாங்கள் தலை குனிந்துவிட்டோம்.
கைகால்களை சேர்த்து குவித்துவிட்டாய், நாங்களும் கூனிக்குருகிவிட்டோம்.
[5]

கற்பாம், மானமாம், கண்ணகியாம், சீதையாம் பாடப்பட்டது அன்று
அதெல்லாம் பார்க்கமுடியாது என்ற குஷ்புவிற்கு காட்டுகிறாய் நீ இன்று
மனம் மாறினால் மணம் மாறுகிறது, மணம் மாறினால் மனம் மாறுகிறது.
இருமனம்-திருமணம், பலமனம்-பலமணம் குஷ்பு மாறுகிறது, நாறுகிறது. [6]

அம்மணத்தில் எம்மணம் பொதுமையானதென ஆயும் கம்யூனிஸ தந்தைல்லை
நிர்வாணத்தில் பகுத்தறிவோடு புகுந்து பார்க்க பெரியாரின் சகோதரனுமில்லை
அம்மணியின் அந்தரங்கங்களைப் பேச நான் மோஹனரங்க புருஷனுமில்லை
இம்மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்றுக்கொண்ட அந்நியன் நான். [7]

பெண்ணின் உடல் என்பது யாருக்குச் சொந்தம் என்பதிலில்லைப் பிரச்சினை
அவ்வுடலின் நிர்வாணம் யாருக்குச் சொந்தம் என்பதில்தான் சர்சை
ஒழுங்கு-ஒழுங்கீனம் என்று நிர்வாணத்தின் சாரம்-ஆசாரம் கண்டு
பகுத்தறிவோடு தரச்சான்றிதழ் கொடுக்கும் பன்னாட்டு நிருவனங்களுமில்லை
[8]

நங்காசாதுக்களுடன் நங்கைசென்றால் தடுப்பது பாரதமில்லை இந்தியா
நங்கைகளையும் மறுத்து, நிர்வாணங்களை அரங்கேற்றுவது இவ்விந்தியா
ஜைன நங்காக்களையும் மறுப்பதும் பெரியாரியம் பேசி கல்லடிப்பதும் தமிழகம்
பாரதத்திற்கு சமாளிக்கவேண்டிய நிலையில்லை, நாரிகளுக்குத்தான் உள்ளது. [9]

காமத்தைக்காதலாக்கி இச்சைகளைக்கொச்சைப்படுத்தி நடத்துவது புனிதப்போர்!
நிர்வாணத்தை நிருவானமாக்கி சித்தாந்தம் பேசி மயக்குவது உலகத்துவப்போர்.
பாற்சமன்பாடுசெய்ய பால்சமத்துவம் பேசும் பால்கார சண்டைகள் வேண்டாம்
பாற்கடலைக்கடைந்தால் மகனெப்படி பிறப்பானென்ற பகுத்தறிவும் வேண்டாம்.
[10]
நிர்வாணத்தில் நிர்மலமில்லாவிடில் மலமிகும் அம்மணவாழ்க்கையில்
அம்மணத்தை படமிட்டு சமத்துவம் பேசினால் தாயும் வேசியாகுவாள்
நிருவானத்தில் பொதுவுடமை கொண்டால், கொண்டவள் பங்கு போடப்படுவாள்
இப்பெண்மை நிர்வாணத்தில் வேண்டாம் எனக்கு சமத்துவம், சகோதரத்துவம் [11]

அம்மனை அம்மத்தை மறைத்தது தொழில்நுட்பமாவென ஆயும் தகுதியில்லை
நிர்வாணம் அடையத்துடிக்கும் புத்தனாகி போதிமரத்திடியில் தங்க நேரமில்லை
நிரியானம் அடைய வடக்கிருக்க நிருவாண தீட்சையும் பெறவில்லை
நிருவானம் பார்க்க அருகனுமில்லை, அந்த அருகதையும் எனக்கில்லை.[12]

பாசநேசமுள்ள மகளின் தந்தை நான் அன்பு-பண்புடைய அக்காளின் தம்பி நான்
ஆசாபாசமுள்ள கொண்ட தங்கையின் அண்ணன் நான்; பாரததேசத்தவன் நான்
மனைவியின் நிர்வாணம் எனக்குத்தானெண்ணும் பொறாமைக் கணவன் நான்
அவை தவறென்றால் நிர்வாணதேசத்தில் கோமணம் கட்டியவன் தான் நான்! [13]

வேதபிரகாஷ்
05-12-2009

Geetha Sambasivam

unread,
Dec 4, 2009, 8:05:27 PM12/4/09
to mint...@googlegroups.com


2009/12/5 Vedaprakash <vedamved...@yahoo.com>

Tthamizth Tthenee

unread,
Dec 4, 2009, 8:26:30 PM12/4/09
to mint...@googlegroups.com
பெண்மை  தரமிழந்துவிட்டது
ஆண்மை  அவற்றைத் தடுக்கும்  ஆண்மை இழந்துவிட்டது
 
இந்தச் சூழலில் இன்னும் பெண்களுக்கு  சம உரிமை வேண்டுமாம்
 
எது சம உரிமை
 
குறைந்த அளவு  ஆண்களைப் போல்  முழுவதும் துணியால் மூடி இருக்கலாமே
 
பாரத மாதா என்கிறோம் நாம்
 
தாய்மையை, பெண்மையை, புனிதத்தை, எல்லாவற்றையுமே சீரழித்துவிட்டார்கள் பெண்கள்
 
பெண்மையை போற்றுதும் பெண்மையைப் போற்றுதும் என்றே நாம் கொண்டாடி வருகிறோம்
அவர்கள் புரிந்து கொள்ளாமல்  அவரகளை  அவர்களே  போற்றாமல்  சீரழிந்து வருகிறார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
5-12-09 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:

N. Kannan

unread,
Dec 4, 2009, 9:08:47 PM12/4/09
to mint...@googlegroups.com
ஏன் சார் இது உங்களுக்கே நியாயமா இருக்கா? :-))
கவர்ச்சிப்படம் சீரியல் ஒன்று போட்டுவிட்டு,
கவிதையில் ஒரு சீரியல் அதை எதிர்த்து!! :-))
 
மின்தமிழை குமுதம், விகடன் அளவிற்குக் கொண்டு போய்விட்டீர்களே :-))
 
காலங்கார்த்தாலே சுப்ரபாதம் போல் உங்கள் கவிதை :-)
 
மின்தமிழ் தமிழர் உளப்பதிவு என்பதால் இதையும் ஏற்றுக்கொண்டு களிக்கத்தான் வேண்டியுள்ளது!
 
ஒரு ஜென் கதை ஞாபகம் வருகிறது..எதற்கு..வேண்டாம் :-)
 
க.>

2009/12/5 Vedaprakash <vedamved...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Dec 5, 2009, 8:12:03 PM12/5/09
to mint...@googlegroups.com
'மின்தமிழை குமுதம், விகடன் அளவிற்குக் கொண்டு போய்விட்டீர்களே :-))

சரியாகச்சொன்னீரிகள். இதென்னெக் கூத்து என்று தோன்றியது, எனக்கு.
இன்னம்பூரான்

2009/12/5 N. Kannan <navan...@gmail.com>



--
இன்னம்பூரான்

Vedaprakash

unread,
Dec 5, 2009, 8:16:07 PM12/5/09
to மின்தமிழ்
மன்னிக்கவும்.

அதனை உன்னிப்பாக படித்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை.

அந்த அளவிற்கு உமது தராதரத்திற்கு ஒவ்வாமல் இருந்தால் தாராளமாக அந்த
பதிவைச் சிதைத்து விடுங்கள்!

On Dec 6, 6:12 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> 'மின்தமிழை குமுதம், விகடன் அளவிற்குக் கொண்டு போய்விட்டீர்களே :-))
>
> சரியாகச்சொன்னீரிகள். இதென்னெக் கூத்து என்று தோன்றியது, எனக்கு.
> இன்னம்பூரான்
>

> 2009/12/5 N. Kannan <navannak...@gmail.com>


>
>
>
> > ஏன் சார் இது உங்களுக்கே நியாயமா இருக்கா? :-))
> > கவர்ச்சிப்படம் சீரியல் ஒன்று போட்டுவிட்டு,
> > கவிதையில் ஒரு சீரியல் அதை எதிர்த்து!! :-))
>
> > மின்தமிழை குமுதம், விகடன் அளவிற்குக் கொண்டு போய்விட்டீர்களே :-))
>
> > காலங்கார்த்தாலே சுப்ரபாதம் போல் உங்கள் கவிதை :-)
>
> > மின்தமிழ் தமிழர் உளப்பதிவு என்பதால் இதையும் ஏற்றுக்கொண்டு களிக்கத்தான்
> > வேண்டியுள்ளது!
>
> > ஒரு ஜென் கதை ஞாபகம் வருகிறது..எதற்கு..வேண்டாம் :-)
>
> > க.>
>

> > 2009/12/5 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>

PENNESWARAN KRISHNA RAO

unread,
Dec 5, 2009, 11:49:27 PM12/5/09
to mint...@googlegroups.com

ரொம்ப நேரமாக மதகடியில் அமைதியாக உட்கார்ந்து அலுத்து விட்டது.

பெரியவர்கள் அநியாயத்துக்குத் தத்துவ மழையாக ஆத்ம விசாரணையாகப் பொழிந்து கொண்டிருக்கிறீாகள் நிர்வாண நிலையைப் பற்றி. 
 
சும்மா மதகி்ல் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தால் எப்படி?

டெல்லியில் நடந்தது இது.

89ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.  என்னுடைய மூத்த மகள் பாரதிக்கு இரண்டு வயதிருக்கும்.  வீிட்டில் ஏக ரகளை பண்ணிக் கொண்டிருந்தாள். சரி.  வெளியில் அழைத்துச் செல்லலாம் என்று நானும் என் நண்பர் ராமசாமியும் (இப்போது அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் குழந்தைகளுக்கான நாடகம் குறித்து போதிக்கிறார் ராமசாமி) வெளியே கிளம்பினோம்,  ராமசாமியி்ன் இடுப்பில் தொங்கிக்கொண்டு பாரதி வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்

அன்று ஜெயினர்களுக்கு ஏதோ விசேஷம்,  எங்கள் வீதிமுனையில் இருந்த ஜெயின் மந்திரில் யாரோ ஒருவர் புதிதாக துறவறம துவங்கப்போகிறார் என்று சொன்னார்கள்.  அதைத் தொடர்ந்த கொண்டாட்டமாக இருக்கவேண்டும்,  வேறு ஏதாகவும் இருக்கலாம்.

முதலில் வரிசையாக சில யானைகள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு படுகம்பீரமாக அணிவகுத்துச் சென்றன,  அதைத் தொடர்ந்து குதிரைகள்.,  குதிரைத் தொடர்ந்து பேண்டு வாத்தியங்களின் அணிவரிசை. 

இவற்றைத் தொடர்ந்து சில ஜைன சன்யாசிகள் நடந்து வந்தனர்,  அவர்களில் இருவர் நிர்வாண சந்நியாசிகள்.  அவர்களின் கைகளில் துணியால் ஆன சாமரம் இருந்தது.  தங்கள் நிர்வாணத்தை மறைத்துக் கொள்ள முயற்சிக்க வி்ல்லை அவர்கள்,  சாலையில் எங்களுடன் ஒதுங்கி நின்ற பல ஆண்களும் பெண்களும் அந்த சந்நியாசிகளைப் பார்த்து கைகூப்பி வணங்கி நின்றார்கள். டெல்லிக்கு வந்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகியிருந்தும் அது புதிய அனுபவம்.  என்னுடைய ஜெயின் நண்பர்களுடன் ஜெயின் மந்திருக்கு சென்று திகம்பரர்களை சந்தித்து இருக்கிறேன்,  ஆனால் சாலையில் அப்படிப் பார்த்தது முதல் முறை,  உண்மையை சொல்லவேண்டும் என்றால் அந்த சன்னியாசிகள் மேல் ஒருவிதப் பொறாமை வந்தது.  அந்த நேரத்து் உணர்ச்சியை இப்போது சரியக சொல்ல எனக்குத் தெரியவில்லை.  

நானும் ராமசாமியும் கூட்டத்தை வேடிக்கை பார்க்க அங்கேயே நின்றுவிட்டோம்,  நாங்கள் நின்றிருந்த இடத்தில் ஆண்களும் பெண்களுமமாக சற்று நெரிசல் இருந்தது. 

அந்த பாண்டு வாத்திய சத்தம் மற்றும் இரைச்சல்களை மீறி பாரதி “ஐயே... ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்ற ரீதியில் உரக்கக் கத்தியது. 

எங்களைச் சுற்றி பக்திப் பரவசம் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது.  ஆண்களும் பெண்களும் அந்த சந்நியாசிகள் இருக்கும் திசைநோக்கி பரவசத்துடன் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  சில பெண்கள் அந்த சந்நியாசிகள் செல்லும் திசை நோக்கி தலையில் குனிந்து மண்ணைத் தொட்டு வணங்கினார்கள்.  இந்தக் கூட்த்தில்   குழந்தை இப்படி  மானத்தை வாங்குகிறதே என்று எனக்கும் ராமசாமிக்கும் பதைப்பு ஏற்பட்டது.  சரி.  யாராவது இன்று அநியாயத்துக்கு எங்களை உதைக்கப்போகிறார்கள் என்று அவசரமாக பாரதியின் முகத்தைத் திருப்பி அங்கிருந்து அவசர அவசரமாகக் கிளம்பினோம்.

ஒரு பெண்மணி எங்களை நிறுத்தி சொன்னார்.  குழந்தையும் கடவுள்தான்.  நீங்கள் எதற்குப் பதட்டப் படுகிறீர்கள்?

சரி.  இதுக்கும் பத்மா அம்மையாரின் நிர்வாணத்துக்கும் நான் முடிச்சுப போடவில்லை.  இரண்டாவது சற்று கொழுப்பும் அகங்காரமும் சார்ந்ததன் கலவை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

இதை யார் நியாயப்படுத்தினாலும் சற்று அதீதமாகத்தான் தெரிகிறது.

இவர்களின் ஜொள் தெறித்து என்னுடைய சட்டை ஈரம் ஆகிறது போல ஒரு உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவி்ல்லை.

பென்னே்ஸ்வரன்
 

2009/12/6 Vedaprakash <vedamved...@yahoo.com>

N. Kannan

unread,
Dec 6, 2009, 2:30:29 AM12/6/09
to mint...@googlegroups.com
2009/12/6 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:

> இவர்களின் ஜொள் தெறித்து என்னுடைய சட்டை ஈரம் ஆகிறது போல ஒரு உணர்வு
> ஏற்படுவதைத் தவிர்க்க முடியவி்ல்லை.
>

:-))

க.>

Innamburan Innamburan

unread,
Dec 6, 2009, 10:21:31 AM12/6/09
to mint...@googlegroups.com
'ஒரு பெண்மணி எங்களை நிறுத்தி சொன்னார்.  குழந்தையும் கடவுள்தான்.  நீங்கள் எதற்குப் பதட்டப் படுகிறீர்கள்.' இதற்கு மறு பெயர்: பக்குவம். மூலம்: வடமொழி: பொருள்: சமைப்பது.


2009/12/6 N. Kannan <navan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages