என்னைக் கவர்ந்த இணையத் தமிழ்ச் சொற்கள்

99 views
Skip to first unread message

devoo

unread,
Jul 22, 2008, 1:41:39 PM7/22/08
to மின்தமிழ்
தமிழ் வலை மனைகளைப் பார்த்துவரும்போது
சில சொற்கள் மனத்தில் பதிந்தன.

Cooking gas - எரிவளி
Crude oil - கரட்டு நெய்
Teen age - பதின்ம வயது

Dev

srirangammohanarangan v

unread,
Jul 23, 2008, 10:42:29 AM7/23/08
to minT...@googlegroups.com
தேவூ  சார்  இது  நல்ல  வேலை.   நீங்கள்   பார்க்கும்  வலைகளில்   நல்ல  தமிழ்ச்  சொற்கள்  கண்ணில்  பட்டால்  தொடர்ந்து   பகிர்ந்துகொள்ளுங்கள்.  நன்றி

2008/7/22 devoo <rde...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Jul 24, 2008, 10:51:35 PM7/24/08
to minT...@googlegroups.com
நல்ல தொடர்..தொடரட்டும்..

2008/7/23 devoo <rde...@gmail.com>:

> Crude oil - கரட்டு நெய்

அது என்ன கரட்டு நெய்? நெய் என்பது பால்/தயிர் திரிபு. உண்மையைச்
சொல்லப்போனால் crude oil லிருந்து வரும் ஏனைய எண்ணெய்களை (petrol,
kerosine, benzene) வேண்டுமானால் நெய் என்று சொல்லலாம். மூல எண்ணெய்யை
எப்படி நெய் என்று சொல்வது? அது நெய் போல் கெட்டியாக இருந்தாலும்?

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jul 24, 2008, 11:14:16 PM7/24/08
to minT...@googlegroups.com
>crude oil - கரட்டு நெய்!
 
ஆங்கிலத்தில் "crude"  என்கிறச் சொல்லின் பொருள் - "unrefined"
 
வழக்கத்தில் உள்ள பொழிபெயர்ப்பு "பண்படா(த) எண்ணெய்"
 
ஒரு வேளை "கரட்டெண்ணெய்" ஆக புத்தாக்கம் பெறலாம்!
 
தமிழார்வமகலா,
கண்ணன் நடராசன்

2008/7/25 Narayanan Kannan <nka...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jul 25, 2008, 12:16:01 AM7/25/08
to minT...@googlegroups.com
அதே போல் வெண்ணெய் காய்ச்சிய பிறகு
அதை வேரு ஒரு பாத்திரத்தில் சேமிப்பார்கள்,
வெண்ணெய் காய்ச்சிய பாத்திரத்தில் அடுப்பின் சூட்டினால்
பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் நெய்
சிறிது காந்திப் போயிருக்கும்
அதை  "கசண்டு"என்ப அது  சிரிதளவு கசப்பு சுவை கொண்டதாக இருக்கும்
அதனால் கசண்டு என்பார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
'
2008/7/25 Kannan Natarajan <thar...@gmail.com>:

மனிதமும்,உலகமும் காப்போம்

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 12:24:04 AM7/25/08
to minT...@googlegroups.com
கரட்டு என்பது Crude என்பதன் நேரடி உச்சரிப்பு போல் படுகிறது. கசடு
என்பது எஞ்சிய என்று பொருள் கொள்கிறது. 'கசண்டு' உண்டா? என்று
தெரியவில்லை! எப்படியும் அதுவும் பொருந்தாது. இது மூல எண்ணெய். கச்சா
எண்ணெய்.

கண்ணன்

2008/7/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Kannan Natarajan

unread,
Jul 25, 2008, 12:50:14 AM7/25/08
to minT...@googlegroups.com
"கச்சா" - தமிழா! கச்சையிலிருந்து வந்ததா?
 
இத்தொடர் "(வெ)எண்ணெய்க்(என்னைக்) கவர்ந்த இணையாக வலம் வருகிறது"! அதுவும் வெண்ணெயுண்டான் பெயருடையவர்கள் கருத்துப் பரிமாறிக்கொள்வதால்!!
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்
 


 
2008/7/25 Narayanan Kannan <nka...@gmail.com>:
இது மூல எண்ணெய். கச்சா எண்ணெய்.

கண்ணன்

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 12:56:00 AM7/25/08
to minT...@googlegroups.com
2008/7/25 Kannan Natarajan <thar...@gmail.com>:

> "கச்சா" - தமிழா! கச்சையிலிருந்து வந்ததா?
>

crude oil என்பதைக் கச்சா எண்ணெய் என்றுதான் தமிழகப்பத்திரிக்கைகள்
எழுதுகின்றன. 'கச்சா' இந்தி என்று நினைக்கிறேன்.

எப்படியும் வெண்ணெயோ நெய்யோ அல்ல :-) அது கருப்பு மண்டி!!

கண்ணன்

kra narasiah

unread,
Jul 25, 2008, 1:52:22 AM7/25/08
to minT...@googlegroups.com
Kaccha is a hindi word meaning unrefined as against Pakka
narasiah

Kannan Natarajan

unread,
Jul 25, 2008, 2:29:31 AM7/25/08
to minT...@googlegroups.com
பெட்ரோலியத்தைக் கச்சா எண்ணெய் அல்லது பாறைநெய் என்றும் கூறலாம்.
 
மேற்கூறு - பெட்ரோலியம் உருவாகும் முறை - http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்



2008/7/25 Narayanan Kannan <nka...@gmail.com>:
2008/7/25 Kannan Natarajan <thar...@gmail.com>:
> "கச்சா" - தமிழா! கச்சையிலிருந்து வந்ததா?
>

crude oil என்பதைக் கச்சா எண்ணெய் என்றுதான் தமிழகப்பத்திரிக்கைகள்
எழுதுகின்றன. 'கச்சா' இந்தி என்று நினைக்கிறேன்.

எப்படியும் வெண்ணெயோ நெய்யோ அல்ல :-) அது கருப்பு மண்டி!!

கண்ணன்



> இத்தொடர் "எண்ணெய்க்(என்னைக்) கவர்ந்த இணையாக வலம் வருகிறது"!
 
 

Swaminathan Venkat

unread,
Jul 25, 2008, 8:42:47 AM7/25/08
to minT...@googlegroups.com
எனது ஒரு எளிய கேள்வி. தமிழ் பற்று இயல்பாக இருக்கவேண்டும். மேடை முழுக்கமாக, பிரசாரமாக, வேறு ஏதோ காரணங்களுக்காக் முரட்டுத்தனமாக முன்வைப்பதாக இருக்கக் கூடாது. இதெல்லாம் போக, மொழி கேட்கவும், உணரவும் அழகாகவும் இனிமையயகவும் இருக்க வேண்டும். பொருளற்ற வீண் அலைசசலாகக் கூடடது இந்த தூய தமிழ்த் தேட்டம். கச்சா எண்ணெய என்று இருந்தால் என்ன கெட்டு விட்டது? அதை ஏன் கரட்டு நெய் என்று அவலப்படுத்த வேண்டும்.
 
எதுவும் பொருள் தருவதாக, எளிமை கொண்டதாக, அருவருப்பு தருவதாக இல்லாமல் இருந்தால் போதாதா? உருது கேட்க மிக மிருதுவான, இனிமையான மொழி. அரபு மொழியிலும் உருது மொழியிலும் வல்லுனரான மௌலானா அபுல் க்லாம் ஆஸாத் பேச நான் கேட்டிருக்கிறேன். Philosophy- என்று சொல்ல உருது மொழியின் ஒலி வடிவத்திற்கேற்ப,  ஃபல்ஸஃபா என்பார். Members என்று சொல்ல மெம்ப்ரா(ன்) என்பார். அழகாக் கேட்க இனிமையாக இருக்கும். அந்த பெரிய அறிஞரே  இப்படி உருது மொழியை வளப்படுத்தும் போது, நம்க்கு ஏன் (மன்னிக்கவும்) கோமாளித்த்னமான செய்ற்கையான, இயல்பற்ற செயல்க்ளில் மன்ம் செல்கிறது, தூய தமிழ் என்று சொல்லி.? - வெ.சா.

 

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2008, 9:18:44 AM7/25/08
to minT...@googlegroups.com


2008/7/25 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

எனது ஒரு எளிய கேள்வி. தமிழ் பற்று இயல்பாக இருக்கவேண்டும். மேடை முழுக்கமாக, பிரசாரமாக, வேறு ஏதோ காரணங்களுக்காக் முரட்டுத்தனமாக முன்வைப்பதாக இருக்கக் கூடாது. இதெல்லாம் போக, மொழி கேட்கவும், உணரவும் அழகாகவும் இனிமையயகவும் இருக்க வேண்டும். பொருளற்ற வீண் அலைசசலாகக் கூடடது இந்த தூய தமிழ்த் தேட்டம். கச்சா எண்ணெய என்று இருந்தால் என்ன கெட்டு விட்டது? அதை ஏன் கரட்டு நெய் என்று அவலப்படுத்த வேண்டும்.
 
 
கரட்டு நெய் என்பது கரடுமுரடான சொல்லாக இருக்கு
 
கச்சா எனபதே பகுத் அச்சா
 
எங்க அம்மா பார்க்கிறதுக்கு கொல்லங்குடி குப்பாயி மாதிரி இருப்பாக
 
அதனால் சந்தியாவை எங்க அம்மா ஆக்கிட்டேன். ஜெயலலிதா என் சிஸ்டர்.
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

devoo

unread,
Jul 25, 2008, 10:04:37 AM7/25/08
to மின்தமிழ்
நெய்ப்புத்தன்மையுடைய திரவம் யாதாயினும் அதை ‘நெய்’ என்பதில் தவறேதும்
இல்லை.
எள்+நெய் - எண்ணெய், அதற்கு மேல் ‘நல்ல’ என்பதையும் சேர்த்து
‘நல்லெண்ணெய்’ ஆக்கினோம்; அது தான் தவறு.
வெண்மை நிறம் கொண்ட நெய் ‘வெண்ணெய்’ ஆயிற்று.
மக்கள் தொ. கா வில் ‘ஆட்டோ’ வை ‘தானி’
என்றே கூறி வருகின்றனர். வேர்ச் சொல் ஆராய்ச்சிகளில் இறங்கவில்லை.
ஆழ்ந்த ஆராய்ச்சி தமிழ்ப்படுத்தும் வேகத்தைக் குறைக்கும் என்பதே அறிஞர்
பலரின் கருத்தும்.
'CRUDE' என்பதற்கு ‘கரடு’ என்றே வைத்துக் கொள்ளலாம் என்பதே என் கருத்து.
தேவ்

Swaminathan Venkat

unread,
Jul 25, 2008, 11:07:58 AM7/25/08
to minT...@googlegroups.com
கோமாளித்தனமே சிலர் பிறவிக்குண்மாக,  தெரிந்த ஒன்றேயாக இருக்கும் போது யாரரென்ன செய்யமுடியும்? வெ.சா.

Tthamizth Tthenee

unread,
Jul 25, 2008, 11:35:39 AM7/25/08
to minT...@googlegroups.com

crude oil என்பதைக் கச்சா எண்ணெய் என்றுதான் தமிழகப்பத்திரிக்கைகள்
எழுதுகின்றன. 'கச்சா' இந்தி என்று நினைக்கிறேன்
 
கச்சை என்றால் தமிழ்
குறுவாளை கச்சையில் சொருகிக் கொள்வார்கள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/7/25 Kannan Natarajan <thar...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2008, 12:18:02 PM7/25/08
to minT...@googlegroups.com


2008/7/25 Tthamizth Tthenee rkc...@gmail.com



 
கச்சை என்றால் தமிழ்
குறுவாளை கச்சையில் சொருகிக் கொள்வார்கள்
 
"நீலக்கச்சை பூவார்  ஆடை"
 
என்று சங்கத்தமிழில் படித்த நினைவு. இங்கு கச்சை என்றால் கால்சட்டை. போர் மறவர்கள் அணிவது.
 
பஞ்சாப்பின் சர்தார்கள் தாங்கும் திரியும்  ஐந்து ககரங்களில் ஒன்று கச்சேரா எனும் கால்சட்டை
 
கூந்தல், கோதி, கைவளை, கச்சேரா, கத்தி

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2008, 1:54:27 PM7/25/08
to minT...@googlegroups.com
"தொடிப்புழுதி கஃசா உணக்கின்"
 
இந்த கஃசா என்ன?

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2008, 2:03:23 PM7/25/08
to minT...@googlegroups.com


2008/7/25 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

கோமாளித்தனமே சிலர் பிறவிக்குண்மாக,  தெரிந்த ஒன்றேயாக இருக்கும் போது யாரரென்ன செய்யமுடியும்? வெ.சா.
 
 
சாரி உதாரணம் தப்போ?
 
அண்மையில் மருத்துவ மனையில் பிள்ளகள் பெற்ற தாயர்கள் இருவருக்குள் அந்த ஆண்குழந்தை தன்னுடைய்தே என்று போராட்டம்.
 
பெற்ற குழந்தை வேண்டும் என சண்டை இல்லை.
ஆண் குழ்ந்தை வேண்டும் என்று சண்டை
 
 

Tthamizth Tthenee

unread,
Jul 25, 2008, 2:19:29 PM7/25/08
to minT...@googlegroups.com
ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி
 
என்று பொருள்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/7/25 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 25, 2008, 2:22:22 PM7/25/08
to minT...@googlegroups.com
தூங்கினவன்
 கன்ரு கடாக் கன்ரு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
னே2008/7/25 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
2008/7/25 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>
கோமாளித்தனமே சிலர் பிறவிக்குண்மாக,  தெரிந்த ஒன்றேயாக இருக்கும் போது யாரரென்ன செய்யமுடியும்? வெ.சா.
சாரி உதாரணம் தப்போ?
 
அண்மையில் மருத்துவ மனையில் பிள்ளகள் பெற்ற தாயர்கள் இருவருக்குள் அந்த ஆண்குழந்தை தன்னுடைய்தே என்று போராட்டம்.
 
பெற்ற குழந்தை வேண்டும் என சண்டை இல்லை.
ஆண் குழ்ந்தை வேண்டும் என்று சண்
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

devoo

unread,
Jul 25, 2008, 2:23:23 PM7/25/08
to மின்தமிழ்


On Jul 25, 11:29 am, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
> பெட்ரோலியத்தைக் கச்சா எண்ணெய் அல்லது *பாறைநெய்* என்றும் கூறலாம்.
>
> மேற்கூறு - பெட்ரோலியம் உருவாகும் முறை -http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%...
>
> தமிழன்பகலா,
> கண்ணன் நடராசன்
>
> 2008/7/25 Narayanan Kannan <nkan...@gmail.com>:
>
> > 2008/7/25 Kannan Natarajan <thara...@gmail.com>:
> > > "கச்சா" - தமிழா! கச்சையிலிருந்து வந்ததா?
>
> > crude oil என்பதைக் கச்சா எண்ணெய் என்றுதான் தமிழகப்பத்திரிக்கைகள்
> > எழுதுகின்றன. 'கச்சா' இந்தி என்று நினைக்கிறேன்.
>
> > எப்படியும் வெண்ணெயோ நெய்யோ அல்ல :-) அது கருப்பு மண்டி!!
>
> > கண்ணன்
>
> > > இத்தொடர் "எண்ணெய்க்(என்னைக்) கவர்ந்த இணையாக வலம் வருகிறது"!

‘கரடு’ என்பதும் பாறையைக் குறிக்கும் சொல் தான்.(எ-கா) ‘பொய்மான் கரடு’
தேவ்

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2008, 2:41:15 PM7/25/08
to minT...@googlegroups.com


2008/7/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

தூங்கினவன்
 கன்ரு கடாக் கன்ரு
 
 
கன்று கடாக் கன்று
 
 
தேனீ தமிழில் ஆண் பால் பெயர்கள் பெரும்பாலும் க்'கரத்தில் தான் இருக்கும்
 
கடா, களிறு, கடுவன், காளை, கலை,
 
பெண் பால் பெயர்கள் எல்லாம் ப'கரத்தில் தான் இருக்கும்
 
பெண், பசு, பிடி, பிணை, பிணவு, பேடை, பேடு, பேய்.
 
தமிழ் ஒரு தான் தோன்றி

இரவா

unread,
Jul 25, 2008, 2:09:08 PM7/25/08
to minT...@googlegroups.com
கோமாளித்தனம் என்றால் என்ன?
 
கோ+ மாள் +இ+ தனம்?

 
2008/7/25, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

இரவா

unread,
Jul 25, 2008, 1:59:53 PM7/25/08
to minT...@googlegroups.com
குவாட்டர்

2008/7/25, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
"தொடிப்புழுதி கஃசா உணக்கின்"

Kannan Natarajan

unread,
Jul 25, 2008, 7:04:08 PM7/25/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
>எனது ஒரு எளிய கேள்வி. தமிழ் பற்று இயல்பாக இருக்கவேண்டும். மேடை முழுக்கமாக, பிரசாரமாக, வேறு >ஏதோ காரணங்களுக்காக் முரட்டுத்தனமாக முன்வைப்பதாக இருக்கக் கூடாது. இதெல்லாம் போக, மொழி >கேட்கவும், உணரவும் அழகாகவும் இனிமையயகவும் இருக்க வேண்டும். பொருளற்ற வீண் அலைசசலாகக் >கூடடது இந்த தூய தமிழ்த் தேட்டம். கச்சா எண்ணெய என்று இருந்தால் என்ன கெட்டு விட்டது? அதை ஏன் >கரட்டு நெய் என்று அவலப்படுத்த வேண்டும்.
 
வெ.சா அவர்களே, ஒரு மொழியில் உள்ள சில சொற்களுக்கு காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்களும், புத்தாக்கங்களும் ஏற்படுவது இயல்பு.அதில் சில மாற்றம் பெறும் சொற்கள் கடுமையாக இருப்பதாக மொழி வல்லுநர்களுக்கு இடையே கூட உணர்ந்துள்ளனர் என கேள்விப்பட்டுள்ளேன். ஒரு மொழியின் வளர்ச்சி ஒருபொருட்பன்மொழியின்(synonym) விரிவாக்கம். நீங்கள் சொன்னது போல, "எதுவும் பொருள் தருவதாக, எளிமை கொண்டதாக, அருவருப்பு தருவதாக இல்லாமல் இருந்தால் போதாதா!" அவ்வாறானத் தன்மை கொண்டும், நேர்மையான எண்ணத்திலும்  தான் மொழி வல்லுநர்களும்,சொல் அறிஞர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
 
அயலகத்தில் வாழும் தமிழர்கள், தாங்கள் அன்றாட வாழ்வில் காணும் பன்மொழிகளில் உள்ள மாற்றங்களையும்,அவற்றினூடே ஏற்பட்டு வரும் புதுச் சொற்களின் ஆக்கங்களையும்,பழையச் சொற்களின் புத்தாக்கங்களையும், இப்படியான மின் குழுமங்களில் கலந்துரைடாடினால், செம்மொழிக்கு செழுமைச் சேர்க்கும். அதையே தான், பன்மொழி வல்லுநர்களும் ஊக்கப்படுத்துகின்றனர். நீங்கள் எடுத்துரைத்தக் கருத்தைப் போல், தமிழிலும் பல புதிய அறிவியல்/கணினிச் சொற்கள் ஆங்கிலச் சொல்லின் ஒலியோடு மொழிபெயர்த்து வருகின்றன.
 
புதுச்சொற்களின் வருகை,புத்தாக்கம் பெரும் பழையச் சொற்களைக் கண்டு மருட்சி அடையாமல்,ஒருபொருட்பன்மொழியின்(synonym) வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைவோம்.
 
 
>நமக்கு ஏன் (மன்னிக்கவும்) கோமாளித்தனமான செயற்கையான, இயல்பற்ற செயல்களில் மனம் செல்கிறது, தூய தமிழ் >என்று சொல்லி.?
 
ஏனைய மொழிகளில் உள்ள ஒருபொருட்பன்மொழியின்(synonym) வளர்ச்சி, தமிழிலும் அமைவது  -கோமாளித்தனமான,செயற்கையான அல்லது இயல்பற்ற செயலா என்னும் முடிவு அவரவருடையது! நமது பண்பாட்டில் வழி தவறியவர்களுக்கு உரைத்த பழமொழியை நினைவுகூறுவது சாலப்பொருந்தும், "புதியன புகுதலும் பழையன கழிதலும் காலத்தின் ....!"
 
கலப்படமில்லாத உணவு வேண்டும்,கலப்படமில்லா தாய்மொழி வேண்டும் என்று ஆங்கிலம் முதன் மொழி அல்லாதோர் அகிலம் முழுதும் எழுப்பும் குரல் பன்மடங்காக எதிரொலிக்கும் காலம் வெகுதூரமில்லை. அப்போது தமிழுக்கும் பொற்காலம் மீண்டும் வராமலா போகும்!
 
தமிழார்வமகலா,
கண்ணன் நடராசன்

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 7:23:46 PM7/25/08
to minT...@googlegroups.com
> 'கரடு' என்பதும் பாறையைக் குறிக்கும் சொல் தான்.(எ-கா) 'பொய்மான் கரடு'
> தேவ்

சரி, இப்போது விளங்குகிறது. கரட்டு என்றால் பாறை, நெய் என்றால் எரிபொருள்.

கரட்டுநெய் என்று விட்டுப் பார்க்கலாம். 'வெல்லும் சொல் நிற்கும்'.

மேலும் தொடருங்கள்...

கண்ணன்

Swaminathan Venkat

unread,
Jul 25, 2008, 7:24:36 PM7/25/08
to minT...@googlegroups.com
அன்பfரே, இம்மாதிரியான உரையாடலில் நான் எவ்வளவு சாடப்பட்டாலும் எனக்கு மறுப்பில்லை. ஆனால் இங்கு சிலரிடம் ஃபாஸிஸ்ட் தனமான முரட்டுத்தனமும் கோமாளித்தனமும் ஒரு மாற்றமும் இல்லாது தவறாது தொடரப்பட்டு வருகிறது. அதில் க்ருத்துப் ப்ரிமாற்றம் இல்லை.  வெறுப்பும் பகைமையுமே புகைவதாகத் தெரிகிறது.
 
அது சரி, "கல்ப்படமில்லாத உணவு என்று எதைச்சொல்கிறீர்கள். காரட்டும், உருளைக் கிழங்கும் வெங்காயமும் தக்காளியும் மிளகாயும் கலந்து விட்டால் அது கல்ப்பட உணவாகிவிடுமா? - வெ.சா.

 

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 7:37:18 PM7/25/08
to minT...@googlegroups.com
2008/7/26 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:

> அன்பfரே, இம்மாதிரியான உரையாடலில் நான் எவ்வளவு சாடப்பட்டாலும் எனக்கு
> மறுப்பில்லை. ஆனால் இங்கு சிலரிடம் ஃபாஸிஸ்ட் தனமான முரட்டுத்தனமும்
> கோமாளித்தனமும் ஒரு மாற்றமும் இல்லாது தவறாது தொடரப்பட்டு வருகிறது. அதில்
> க்ருத்துப் ப்ரிமாற்றம் இல்லை. வெறுப்பும் பகைமையுமே புகைவதாகத் தெரிகிறது.
>

உண்மைதான். அறிவியலுக்குப் புறம்பான, சமகால நளினமற்ற ஒரு
வக்கிரமனப்பான்மை உலவுகிறது. இனவாதத்தை எதிர்த்து உலகே குரல் கொடுத்துக்
கொண்டிருக்கும் போது நாம் பத்தாம்பசலிகள் போல் இங்கு உரையாடினால் அதில்
'நளினம்' இல்லைதான்.

மொழி என்பது ஓர் கூட்டுமுயற்சி. வளரும் கரு. எது நிற்கும், எது
போகுமென்று யாரும் சொல்லமுடியாது. முடிந்தவரை நாம் சமகாலத் தமிழில்
எழுதிப்பழக வேண்டும். சுப்பிரமணிய சிவா அடிக்கடி, 'தமிழ் பாஷை' என்று
எழுதுகிறார். அது அக்கால வழக்கு. இப்போது யாரும் பாஷை (பாசை) என்று
எழுதுவதில்லை. அப்படி எழுதினார் என்பதற்காக சிவாவைச் சாட முடியாது. அவர்
காலத்தமிழில் அவர் எழுதினார். அவர் தமிழ் உணர்வு என்றும்
போற்றுதலுக்குரியது.


> அது சரி, "கல்ப்படமில்லாத உணவு என்று எதைச்சொல்கிறீர்கள். காரட்டும், உருளைக்
> கிழங்கும் வெங்காயமும் தக்காளியும் மிளகாயும் கலந்து விட்டால் அது கல்ப்பட
> உணவாகிவிடுமா? - வெ.சா.


ஆங்கில மொழியின் ஆளுமை கண்டு எல்லா மொழிகளும் அல்லாடுகின்றன. ஆனால்,
ஆங்கிலமோ, ஆங்கிலமாக இருக்கவில்லை. கர்மா, குரு, பண்டிதர், கறி, என்று
ஆயிரக்கணக்கான திசைச் சொற்கள் அங்கு. எல்லோருமே மொழியின் திமிர்தலில்
மிரண்டு போய்தான் உள்ளனர். மொழியில் மனிதன் உள்ளானா? அல்லது மொழி மனித
வரம்பில் உள்ளதா? :-)

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jul 25, 2008, 7:38:14 PM7/25/08
to minT...@googlegroups.com

கலப்படமில்லாத உணவு என்று எதைச்சொல்கிறீர்கள். காரட்டும், உருளைக் கிழங்கும் வெங்காயமும் தக்காளியும் மிளகாயும் கலந்து விட்டால் அது கலப்பட உணவாகிவிடுமா?
 
நான் சொல்ல வந்தது அரிசி,சர்க்கரை,உப்பு,பருப்பு வகைகள்.ஏனெனில்,நம் முதலாம் உணவு - அரிசி, நம் முது(தல்)மொழியைப் போல.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

 
2008/7/26 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

Kannan Natarajan

unread,
Jul 25, 2008, 7:55:24 PM7/25/08
to minT...@googlegroups.com
மனிதன் உள்ளானா? அல்லது மொழி மனித வரம்பில் உள்ளதா?
 
சிந்திக்க வைக்கும் கேள்வி.
 
மொழி மனித வரம்பில் உள்ளது. அதை வளப்படுத்துவதும்,செம்மையடைய வழித் தோற்றுவிப்பது நம் அனைவரின் பொறுப்பு.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 8:09:38 PM7/25/08
to minT...@googlegroups.com
2008/7/26 Kannan Natarajan <thar...@gmail.com>:

> மொழி மனித வரம்பில் உள்ளது. அதை வளப்படுத்துவதும்,செம்மையடைய வழித்
> தோற்றுவிப்பது நம் அனைவரின் பொறுப்பு.
>

மொழிகள் உயிருள்ளவை. உறவாடும் தன்மை கொண்டவை. எவ்வளவுதான் ஜாதி பார்த்து,
ஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்தாலும் 'கலப்புத் திருமணங்களை' தவிற்கவே
முடிவதில்லை. திமிர்தல் இயற்கை விதி. எல்லாம் 'நம்' கைக்குள் உள்ளது
என்று நினைப்பது ஒரு வகையான பேதமை :-) ஆயினும், வாழ்தல் நியதி என்பது ஒரு
நம்பிக்கையில் ஓடுகிறது. சங்க காலத்தில் பேசிய தமிழ் வழக்கில் எஞ்சி,
மிஞ்சியவை என்று ஒரு ஆயிரம் சொற்களைச் சொல்லலாம். தமிழில் உள்ளது ஒரு
லட்சம் வார்த்தை என்கிறார் '50 கிலோ தாஜ்மகால்' என்று எழுதிய வைரமுத்து.
வெறும் நூறு சொற்களை வைத்தே தனது நாவல்களைப் புனைந்து 'சாகித்ய அகாதமி'
பரிசு பெற்றுவிட்டார் ஓர் எழுத்தாளர் (சா.கந்தசாமி, சுபமங்களா
பேட்டியில்!).

ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு மொழிகள் வர்ண ஜாலம் செய்கின்றன. அதைக்
கண்டு சிரிக்கும் குழந்தை போல் மானுடம்...

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jul 25, 2008, 8:45:10 PM7/25/08
to minT...@googlegroups.com
கலப்பு - கைகலப்பாகாமல்,கைக்குலுக்கும் தன்மை சில அரிய,கடினச் சொற்களை தமிழில் மொழிபெயர்க்கும் போது நேர்ந்துள்ளன என தமிழ் மொழிபெயர்ப்பு ஆவணங்களில் படித்துள்ளேன்.அதே சமயம், மொழி வளர்ச்சியில் புதுச் சொற்களின் அறுவடையும்,புத்தாக்கத்திற்கும்  அன்பர் சொன்னது போல், எதுவும் பொருள் தருவதாகவும், எளிமை கொண்ட சொற்களாகத் தமிழ் கலப்(பை)பா(யா)ல் வளம் பெறவேண்டும். தமிழ்ச் சொற்களஞ்சியமும் மேன்மையுற வேண்டும் என விழைவோமாகா.
 
இப்படியும் சொல்லலாம், ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறு மொழிகள் சிறக்கின்றன. அதைக் கண்டு,மருளாமல் சிந்தித்து செயல்படும் இளம் தொழிலராக மானுடம் பரிணாம வளர்ச்சியுற்றால் - எம்மொழியும் செம்மொழியடையும்.

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2008, 9:57:06 PM7/25/08
to minT...@googlegroups.com


2008/7/25 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

அன்பfரே, இம்மாதிரியான உரையாடலில் நான் எவ்வளவு சாடப்பட்டாலும் எனக்கு மறுப்பில்லை. ஆனால் இங்கு சிலரிடம் ஃபாஸிஸ்ட் தனமான முரட்டுத்தனமும் கோமாளித்தனமும் ஒரு மாற்றமும் இல்லாது தவறாது தொடரப்பட்டு வருகிறது. அதில் க்ருத்துப் ப்ரிமாற்றம் இல்லை.  வெறுப்பும் பகைமையுமே புகைவதாகத் தெரிகிறது.
 
 
என்ன செய்வது
 
சிலருக்கு மொழி ஒரு உளி
சிலருக்கு உயிருக்கு நேர்
 

வேந்தன் அரசு

unread,
Jul 25, 2008, 10:00:48 PM7/25/08
to minT...@googlegroups.com


2008/7/25 Narayanan Kannan <nka...@gmail.com>
2008/7/26 Kannan Natarajan <thar...@gmail.com>:


ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றவாறு மொழிகள் வர்ண ஜாலம் செய்கின்றன. அதைக்
கண்டு சிரிக்கும் குழந்தை போல் மானுடம்...
 
கண்ணன்.
 
இந்த காலத்துக்கு வழக்கு தமிழ்மொழியில் நான் எழுத தொடங்கினால் என்னை குழுவில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு உங்களுக்கும் வெறுப்பு ஏற்படும்
 
 
இடிப்பாரை இல்லா ஏமரா தமிழும்
கொடுப்பார் இயல்பால் கெடும்

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 11:32:52 PM7/25/08
to minT...@googlegroups.com
2008/7/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> கண்ணன்.
>
> இந்த காலத்துக்கு வழக்கு தமிழ்மொழியில் நான் எழுத தொடங்கினால் என்னை குழுவில்
> இருந்து வெளியேற்றும் அளவுக்கு உங்களுக்கும் வெறுப்பு ஏற்படும்
>

இது தமிழின் சிக்கல் :-)

இப்போது சமகாலத் தமிழில்தான் நாம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். தமிழின்
பேச்சு வடிவம் வேறு. எழுத்து வடிவம் வேறு.

எழுதும் போது மொழி என்று எழுதினாலும், பேசும் போது, 'என்ன பாஷை
தெரியும்?' என்போம். என்ன மொழியில் கதைப்பாய்? என்று கேட்பதில்லை (இது
ஈழத்து வழக்கு). கிராமப்புரத்தில் சாம்பிடும் போது, 'தொட்டுக்க வெஞ்சனம்
வைக்கட்டா?' என்பார்கள். எழுதும் போது, 'சாப்பாட்டில் காய் கறிகள்
தேவையென்றால் சொல்லுங்கள்!' என்போம். இந்த வெஞ்சனம், பாஷை இவைகளை வடமொழி
என்றே யாரும் கருதுவதில்லை (இது என்ன கிருத்திரமமான பேச்சு :-) என்று
எண்ணுகிறீர்களா?)

பேசுவது போல் தமிழில் எழுதவே முடியாது. யாருக்கும் புரியாது!

தேவு, மூன்று சொற்கள் போட்டதற்கே இந்த இழை என்றால்...:-)?

கண்ணன்

Kannan Natarajan

unread,
Jul 26, 2008, 12:25:29 AM7/26/08
to minT...@googlegroups.com
தேவு(வா)!, மூன்று சொற்கள் போட்டதற்கே இந்த இழை என்றால்...:-)?
 
3 சொற்களுக்கு 8 பேரின் பங்கேற்பு
 
தமிழ் மேல் கொண்ட ஈடுபாட்டையும், தாக்கத்தையும் காட்டுகிறது.மகிழ்ச்சி.
 
"தமிழ்த்தென்றல்" திரு.வி.க எழுதுவது போல் பேசுவார் என கேள்விப்பட்டிருக்கிறோம்,ஒரு வேளை
"மின்தென்றல்" திரு.வே.அ (வேந்தன் அரசு)பேசுவது போல் தமிழில் எழுதவார்!

வேந்தன் அரசு

unread,
Jul 26, 2008, 9:16:38 AM7/26/08
to minT...@googlegroups.com


2008/7/25 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/7/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> கண்ணன்.
>
> இந்த காலத்துக்கு வழக்கு தமிழ்மொழியில் நான் எழுத தொடங்கினால் என்னை குழுவில்
> இருந்து வெளியேற்றும் அளவுக்கு உங்களுக்கும் வெறுப்பு ஏற்படும்
>

இது தமிழின் சிக்கல் :-)

இப்போது சமகாலத் தமிழில்தான் நாம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். தமிழின்
பேச்சு வடிவம் வேறு. எழுத்து வடிவம் வேறு.

எழுதும் போது மொழி என்று எழுதினாலும், பேசும் போது, 'என்ன பாஷை
தெரியும்?' என்போம்.
 
 
கண்ணன்,
 
அதனால்தான் சொல்லுகிறேன்
 
பேச்சுமொழி எப்படி இருந்தாலும் எழுதுமொழி செந்தமிழாக இருக்கவேண்டும்.  க்ரியாவில் தமிழ் அல்லாத பேச்சு மொழி சொற்களை எல்லாம் சேர்த்து அவை எழுத்து மொழி எனற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடாது

Narayanan Kannan

unread,
Jul 26, 2008, 9:29:05 AM7/26/08
to minT...@googlegroups.com
2008/7/26 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> க்ரியாவில் தமிழ் அல்லாத பேச்சு மொழி சொற்களை எல்லாம் சேர்த்து அவை எழுத்து


> மொழி எனற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடாது

அட விடமாட்டீர்கள் போலுள்ளதே. ஆங்கிலம் என்ற மொழியை எடுத்தால் எத்தனை
அகரமுதலிகள். ஒருமுறை தமிழ் படித்த ஒரு பிரெஞ்சுக்காரர் வீட்டில்
'இந்தியாவிலிருந்து கடன் வாங்கிய' சொற்கள் என்பதற்கே ஒரு அகராதி
வைத்திருக்கிறார்கள். பின் வட்டார வழக்கு அகராதி, கெட்ட வார்த்தைக்கென
அகராதி, பல சொல் ஒரு பொருள் களஞ்சியம் இன்னும் எத்தனையோ! தமிழ் செந்தமிழ்
என்ற போதிலும் அதன் மொழி அணுகல் என்பது மிகவும் பழமைக் கண்ணோட்டதில்
கட்டுபட்டியாக (conservative) இருக்கிறது. சத்தியமாகச் சொல்லுங்கள்
பார்ப்போம், நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் அகராதி பார்க்கும் வழக்கம்
உள்ளது?

சுஜாதா உயிருடன் இருக்கும் போது சென்னைப் பல்கலைக் கழகம், 'நாலாயிர
திவ்யப் பிரபந்த அகராதி' என்று ஒன்று போட்டதாம். வாங்க வேண்டுமென்ற
ஆசைதான். பதிப்பு இன்னும் உள்ளதா? என்று தெரியவில்லை. தமிழின் ஆழத்திற்கு
இன்னும் ஆயிரம் அகராதிகள் வேண்டும். விடுங்கள்!!

கண்ணன்

Reply all
Reply to author
Forward
0 new messages