மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்யமுடியுமா?

22 views
Skip to first unread message

Vedaprakash

unread,
Nov 18, 2009, 8:22:21 PM11/18/09
to மின்தமிழ்
மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்யமுடியுமா?

முடியும்! ஐரோப்பிய ராஜாக்கள் அவ்வாறு செய்ததாக அவர்கள் சரித்திரம்
கூறுகிறது. அதைப்பற்றிய அழகான ஓவியங்களும் உள்ளன!

பிரெஞ்சு அரசன் லூயிஸ் XIV அத்தகைய அழகான "அரசணை" (Toilet throne)
அமைத்துக்கொண்டு, மலங்கழித்துக் கொண்டே தர்பார் நடத்துவானாம்!

ஒருதடவை எலிஸபெத் ராணி தேம்ஸ் நதிக்கரைக்கு உலாவச் சென்றாராம்!
அமைச்சர்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள் அம்மையார் பிடிவாதமாக
சென்றுவிட்டார். அவர்களும் நதிக்கரைக்குச் செல்லாமல் தொலைவிலேயே
நிற்க்கவைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். ராணி அருகில் செல்ல ஆசைபட்டார்.
வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றனர்! ஒரே பீ-நாத்தம். சகிக்கவில்லை!

19ம் நுற்றாண்டு மற்றும் 20 கால ஆரம்பம் வரை அப்படித்தான் தேம்ஸ்
நதிக்கரை மணம் வீசிக்கொண்டிருந்தது.

ஆங்கிலேயரின் "Night soil" கைகளினால்தான் அள்ளப்பட்டு வந்தது!

"Seaward" என்பதுதான் "sewer" என்றாகியது தெரியுமோ?

கடற்கரையில் மலங்கழிப்பது "கொள்ளைக்கு போவது" என்பதாகும்!

சிந்துசமவெளி நாகரிகத்தில் மிகப்பெரிய "பாத்ரூம்" இருந்தது என்று
மேனாட்டவர் எழுதி-எழுதி வியந்தனரே ஏன்?

ஏனெனில், அவர்களுக்கு பாத்ரூம் பழக்கமே இல்லை. அதாவது தினமும் குளிக்கும்
வழக்கம் இல்லை!

அதேமாதிரித்தான், மலங்கழிப்பதும்! மலங்அழித்துத் துடைத்துப்
போட்டுவிடுவார்கள். நாற்றம் வந்துகொண்டேயிருக்கும். அதை மறைக்க சென்டு
அடித்துக் கொள்வார்கள்!

அத்தைகைய நாகரிகம் கொண்ட ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்தபோது "Dray
latrine" முறையை அறிமுகப்படுத்தினார்கள். அதன்படி, கட்டப்பட்ட
கக்கூஸுகளில் அவர்கள் மலம் கழிப்பார்கள், மறுநாள் அல்லது ஒருநாளைக்கு
இருமுறை அள்ளி சுத்தப்படுதுவார்கள். அதற்காக குறிப்பிட்ட இந்தியர்கள்
அமர்த்தப்பட்டார்கள். இவ்வ்வாறுதான் மலம் அள்ளும் பழக்கம் இந்தியாவில்
அறிமுகப்படுத்தப் பட்டது. முன்னால் முகமதிய / முகலாய சுல்தானகளும் செய்து
வந்தனர்.

இதைபற்றி பல இணைதளங்களும், புத்தகங்களும் உள்ளன!

விஜயராகவன்

unread,
Nov 18, 2009, 8:46:55 PM11/18/09
to மின்தமிழ்
On 19 Nov, 01:22, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
>
> ஒருதடவை எலிஸபெத் ராணி தேம்ஸ் நதிக்கரைக்கு உலாவச் சென்றாராம்!
> அமைச்சர்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள் அம்மையார் பிடிவாதமாக
> சென்றுவிட்டார். அவர்களும் நதிக்கரைக்குச் செல்லாமல் தொலைவிலேயே
> நிற்க்கவைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். ராணி அருகில் செல்ல ஆசைபட்டார்.
> வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றனர்! ஒரே பீ-நாத்தம். சகிக்கவில்லை!
>
> 19ம் நுற்றாண்டு மற்றும் 20 கால ஆரம்பம் வரை அப்படித்தான் தேம்ஸ்
> நதிக்கரை மணம் வீசிக்கொண்டிருந்தது.

1858 வரை தேம்ஸ் நதி ‘பெரும் நாற்றம்’ என்ற பெயர் தாங்கியது.
இங்கிலாந்தின் பார்லிமெண்ட் கட்டிடங்கள் தேம்ஸ் நதி மேலே உள்ளன. அங்கும்
பெரும் நாற்றம் அடிக்கும். அதற்கு மேல் வீட்டு சாக்கடை தேம்ஸில்
விடப்பட்டது.

அதனால் ஆங்கில அரசு ஜோசப் பேசல்கெட் என்ற இன்ஜினியரை நியமித்தது. ஜோசப்
பேசல்கெட் லண்டனின் பாதாள சாக்கடைகளை கட்டி வீட்டு சாக்கடைகளை தேம்ஸில்
உள்ளே செல்லாமல் , நேராக கடலில் போய் விழச் செய்தார். மேலும் லண்டனில்
தேம்ஸ் இரு பக்கத்திலும் மனிதர்கள் நடப்பதற்க்காக Embankment களை
கட்டினார். லண்டனின் கீழே 83 மைல் தூர பாதாள சாக்கடைகளை கட்டியது, அந்த
காலத்தில் லண்டனை துப்புரவாக வைப்பதில், அது பெரும் சாதனையாகும், இன்றும்
அதே பாதாள சாக்க்டைகள் உபயோகத்தில் உள்ளன.

http://en.wikipedia.org/wiki/Joseph_Bazalgette
http://en.wikipedia.org/wiki/Thames_Embankment
http://en.wikipedia.org/wiki/Chelsea_Embankment

http://www.thamespilot.org.uk/ixbin/hixclient.exe?a=query&p=thames&f=generic_theme.htm&_IXFIRST_=1&_IXMAXHITS_=1&%3Dtheme_record_id=tp-tp-environment_stink

1870ல் இருந்து தேம்சும், லண்டனும் துப்புரவாகி, காலரா நோய் அடங்கியது


விஜயராகவன்


Innamburan Innamburan

unread,
Nov 18, 2009, 8:50:47 PM11/18/09
to mint...@googlegroups.com
'இன்றும்
அதே பாதாள சாக்க்டைகள் உபயோகத்தில் உள்ளன.'

அது தான் பாயிண்ட். இயங்குவதில், பருந்து பார்வை; செம்மையான கட்டமைப்பு; லஞ்ச வாவண்யம் இல்லாமை.


2009/11/19 விஜயராகவன் <vij...@gmail.com>



--
இன்னம்பூரான்

விஜயராகவன்

unread,
Nov 19, 2009, 2:56:10 AM11/19/09
to மின்தமிழ்
அது ஒரு டிபிகல் விக்டோரியா காலத்து பொறியியல் சாதனை. விக்டோரியா
இங்கிலாந்தில் புகழ் பெற்ற இன்ஜினியர்கள், மிகப் பெரிய சாதனைகளை
செய்தனர், அவர்கள் வரிசயில்தான் ஜோசப் பெசல்கெட்.


விஜயராகவன்

On 19 Nov, 01:50, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> 'இன்றும்
> அதே பாதாள சாக்க்டைகள் உபயோகத்தில் உள்ளன.'
>
> அது தான் பாயிண்ட். இயங்குவதில், பருந்து பார்வை; செம்மையான கட்டமைப்பு; லஞ்ச
> வாவண்யம் இல்லாமை.
> இ
>

> 2009/11/19 விஜயராகவன் <viji...@gmail.com>


>
>
>
>
>
> > On 19 Nov, 01:22, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
>
> > > ஒருதடவை எலிஸபெத் ராணி தேம்ஸ் நதிக்கரைக்கு உலாவச் சென்றாராம்!
> > > அமைச்சர்கள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள் அம்மையார் பிடிவாதமாக
> > > சென்றுவிட்டார். அவர்களும் நதிக்கரைக்குச் செல்லாமல் தொலைவிலேயே
> > > நிற்க்கவைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். ராணி அருகில் செல்ல ஆசைபட்டார்.
> > > வேறு வழியில்லாமல் அழைத்துச் சென்றனர்! ஒரே பீ-நாத்தம். சகிக்கவில்லை!
>
> > > 19ம் நுற்றாண்டு மற்றும் 20 கால ஆரம்பம் வரை அப்படித்தான் தேம்ஸ்
> > > நதிக்கரை மணம் வீசிக்கொண்டிருந்தது.
>
> > 1858 வரை தேம்ஸ் நதி ‘பெரும் நாற்றம்’ என்ற பெயர் தாங்கியது.
> > இங்கிலாந்தின் பார்லிமெண்ட் கட்டிடங்கள் தேம்ஸ் நதி மேலே உள்ளன. அங்கும்
> > பெரும் நாற்றம் அடிக்கும். அதற்கு மேல் வீட்டு சாக்கடை தேம்ஸில்
> > விடப்பட்டது.
>
> > அதனால் ஆங்கில அரசு ஜோசப் பேசல்கெட் என்ற இன்ஜினியரை நியமித்தது.  ஜோசப்
> > பேசல்கெட்  லண்டனின் பாதாள சாக்கடைகளை கட்டி வீட்டு சாக்கடைகளை தேம்ஸில்
> > உள்ளே செல்லாமல் , நேராக கடலில் போய் விழச் செய்தார். மேலும் லண்டனில்
> > தேம்ஸ் இரு பக்கத்திலும் மனிதர்கள் நடப்பதற்க்காக Embankment களை
> > கட்டினார். லண்டனின் கீழே 83 மைல் தூர பாதாள சாக்கடைகளை கட்டியது, அந்த
> > காலத்தில் லண்டனை துப்புரவாக வைப்பதில், அது பெரும் சாதனையாகும், இன்றும்
> > அதே பாதாள சாக்க்டைகள் உபயோகத்தில் உள்ளன.
>
> >http://en.wikipedia.org/wiki/Joseph_Bazalgette
> >http://en.wikipedia.org/wiki/Thames_Embankment
> >http://en.wikipedia.org/wiki/Chelsea_Embankment
>

> >http://www.thamespilot.org.uk/ixbin/hixclient.exe?a=query&p=thames&f=...


>
> > 1870ல் இருந்து தேம்சும், லண்டனும் துப்புரவாகி, காலரா நோய் அடங்கியது
>
> > விஜயராகவன்
>
> --

> இன்னம்பூரான்- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Kannan

unread,
Nov 19, 2009, 3:37:55 AM11/19/09
to mint...@googlegroups.com
நானும் தொழிற்சாலை நகரமெனப்படும் மான்செஸ்டட்டர் பற்றி ஒரு ஆங்கிலேயரே
சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் தொழில்புரட்சியும், அறிவியல் வளர்ச்சியும் அவர்கள் பிரச்சனைகளைத்
தீர்த்துவிட்டன.

ஆனால் நாம்தான் இன்று பன்றி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஏதொரு
சமூகப் பிரக்ஞையும் இல்லாமல். சிந்து சமவெளியை நினைத்து என்ன செய்ய? அது
கூவத்தின் நாற்றத்தைப் போக்குமா?

க.>

2009/11/19 Vedaprakash <vedamved...@yahoo.com>:

kra narasiah

unread,
Nov 19, 2009, 3:56:43 AM11/19/09
to mint...@googlegroups.com
Incidentally today, th 19th Nov is the Interntional toilet day!
Naraste

--- On Thu, 11/19/09, N. Kannan <navan...@gmail.com> wrote:

kra narasiah

unread,
Nov 19, 2009, 4:00:43 AM11/19/09
to mint...@googlegroups.com
The Calcutta telegraph article can be seen in this connection
http://www.telegraphindia.com/1091119/jsp/nation/story_11759367.jsp
Best wishes for a great toilet experience!!!!!!!!!!!!!!!!!!!
Narasiah

--- On Thu, 11/19/09, N. Kannan <navan...@gmail.com> wrote:

From: N. Kannan <navan...@gmail.com>
Subject: [MinTamil] Re: மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்யமுடியுமா?
To: mint...@googlegroups.com
Date: Thursday, November 19, 2009, 2:37 AM

shivan .

unread,
Nov 19, 2009, 4:05:24 AM11/19/09
to mint...@googlegroups.com
:)))

2009/11/19 kra narasiah <nara...@yahoo.com>

Vedaprakash

unread,
Nov 19, 2009, 6:34:54 AM11/19/09
to மின்தமிழ்

> ஆனால் நாம்தான் இன்று பன்றி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஏதொரு
> சமூகப் பிரக்ஞையும் இல்லாமல்.

* இந்தியாவில் உள்ளவர்கள் என்ற நிலையில், நான் என் கருத்துகளைச்
சொல்கிறேன். இந்தியர்கள் ஒழுங்காகத் தான் தமது காலைக் கடன்களை
கழித்துவந்தனர். ஆனால், உள்ள நிலையை மாற்றியபிறகு, இந்தியர்களைக்
குற்றஞ்சொல்லுவது, கேலி பேசுவது முதலியவைதான் வேடிக்கையானது!

* ஆங்கிலேயர் இந்தியர்களை மலம் அள்ளவைத்து, அத்தகைய சாதியை உருவாக்கியப்
பிறகு, அவர்கள் "விஞ்ஞானத்தால்" முன்னேறிவிட்டால், அவர்களது
"பறங்கியர்தனம்" மறைந்துவிடுமா?

* இங்கு இந்தியர்கள் "இன்று பன்றி வாழ்க்கை வாழ்ந்து கொண்டி"ருந்தால் ,
அதற்கு யார் பொறுப்பு?

* அந்த "பன்றி வாழ்க்கை"களிலும் சாதி பார்ப்பது யார்?

* பணம் உள்ளர்கள், நாகரிகமானவர்கள், அவ்வாறு பார்க்கிறார்களே?

* பிறகு எதற்கு இந்தியாவில் இத்தனை விஞ்ஞானிகள் உள்ளனர் (உலகத்திலேயே
அதிகமாக) என்றெல்லாம் சொல்லிக்கொள்ளவேண்டும்?

சிந்து சமவெளியை நினைத்து என்ன செய்ய? அது
> கூவத்தின் நாற்றத்தைப் போக்குமா?

* இந்தியர்கள் நினைத்தார்கள் என்று சொல்லவேயில்லை. அன்று தேம்ஸ் மணந்தது,
இன்று கூவம் மணக்கிறது!

* ஊழல் தாக்கத்தில்தான் "சமூகப் பிரக்ஞை" மரத்துவிட்டது.

* அந்த ஊழல்காரர்களுடந்தான் அந்த விஞ்ஞான அறிவியல் முன்னேற்றம்
அடைந்தவர்கள் செந்துகொண்டு இன்றும் இந்திய சின்னங்களைத்
தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

* இந்திய சமுதாய அமைப்புகள் எப்படி அவர்களால் அழிக்கப்ப்ட்டன,
மிஞ்சியுள்ளவைகளும் அழிக்கப்படுகின்றன என்ற "சமூகப் பிரக்ஞை"யே இல்லையே?

* பிறகெதற்கு "பன்றி வாழ்க்கை" இந்தியர்களை விமர்சனிக்கவேண்டும்?

On Nov 19, 1:37 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> நானும் தொழிற்சாலை நகரமெனப்படும் மான்செஸ்டட்டர் பற்றி ஒரு ஆங்கிலேயரே
> சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
>
> ஆனால் தொழில்புரட்சியும், அறிவியல் வளர்ச்சியும் அவர்கள் பிரச்சனைகளைத்
> தீர்த்துவிட்டன.
>
> ஆனால் நாம்தான் இன்று பன்றி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஏதொரு
> சமூகப் பிரக்ஞையும் இல்லாமல். சிந்து சமவெளியை நினைத்து என்ன செய்ய? அது
> கூவத்தின் நாற்றத்தைப் போக்குமா?
>
> க.>
>

> 2009/11/19 Vedaprakash <vedamvedaprak...@yahoo.com>:

சாதிக் அலி

unread,
Nov 19, 2009, 6:45:43 AM11/19/09
to mint...@googlegroups.com


2009/11/19 N. Kannan <navan...@gmail.com>

நானும் தொழிற்சாலை நகரமெனப்படும் மான்செஸ்டட்டர் பற்றி ஒரு ஆங்கிலேயரே
சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் தொழில்புரட்சியும், அறிவியல் வளர்ச்சியும் அவர்கள் பிரச்சனைகளைத்
தீர்த்துவிட்டன.

ஆனால் நாம்தான் இன்று பன்றி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஏதொரு
சமூகப் பிரக்ஞையும் இல்லாமல். சிந்து சமவெளியை நினைத்து என்ன செய்ய? அது
கூவத்தின் நாற்றத்தைப் போக்குமா?

 
சரியாக சொன்னீர்கள் கண்ணன். நாம் சிந்து சமவெளியும் தேம்ஸ் பிரிட்டிஷ் என்று  பேசுவதால் என்ன லாபம். இன்று இவ்வளவு நாகரீகமடைந்தக் காலத்திலும் மனிதன் பொதுவாக நம் தமிழ்நாட்டின் கிராமங்களில் இன்றும் ரோட்டோரத்தில் மலம் கழிக்கின்றார்கள். காலையில் பஸ்ஸில் போகின்றவர்களுக்கு சில வெட்கமற்றவர்களின் குந்திய தரிசனம் கிடைக்கும் அவலங்கள், நாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கத் தான் செய்கிறது. 

--

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

         sade...@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

N. Kannan

unread,
Nov 19, 2009, 8:14:56 AM11/19/09
to mint...@googlegroups.com
ஆம்! நான் `சமூகப்பிரக்ஞை அற்று` என்றுதான் சொன்னேன்.

விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்!

கூவத்தில் சேரிகள். அது மனிதர் வாழுகின்ற இடமா?

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் சகித்துக் கொண்டுதானே அங்கே வாழ்க்கை
ஓடுகிறது. வெள்ளைக்காரனைக் கேலி பண்ணுகிறோம். ஆனால் அங்கு பூங்காக்கள்
சுத்தமாய் இருக்கும். பொது இடங்கள் சுத்தமாய் இருக்கும். அவர்களுக்கு
சமூகப்பிரக்ஞை அதிகம். நமக்கு பொது இடம் என்றால் அது யாருக்கும்
சொந்தமில்லாதது எனவே அசிங்கம் பண்ணலாம் என்ற எண்ணம். இதை டாக்டர் அப்துல்
கலாம் கூட தனது பிரகடணத்தில் பேசுகிறார். அவர் தெருவில் எச்சல் துப்புதை
மேற்கோள் காட்டுவார். இதே தமிழன் சிங்கப்பூரிலோ? துபாயிலோ செய்கிறானா?

ஏன் இந்தியாவென்றால் இவனுக்கே இளக்காரமா?

மற்றவரை சுட்ட நம் விரல்கள் எப்படித்துணிகின்றன, என்பதே என் கேள்வி?

கண்ணன்

2009/11/19 சாதிக் அலி <sade...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Nov 19, 2009, 9:52:49 AM11/19/09
to mint...@googlegroups.com
விலங்குகள் மனிதனை விட பிரக்ஞையுடன் தான் வாழ்கின்றன. அவற்றை வம்புக்கு இழுக்கவேண்டாம். 

'கூவத்தில் சேரிகள்' இதை ஒரு மேற்கோளாக எடுத்துக்கொள்வோம். தமிழனுக்கு, இந்தியனுக்கு, சமுதாய பொறுப்புணர்ச்சி குறைவு. வீட்டின் வாசலில் குப்பையைக் கொட்டுவது நமக்கு தொட்டில் பழக்கம். அவர்கள் சில மாப்பிள்ளைகள் போல. தனக்கும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டார்கள். சாலை வீதியை மீறும் நபரை, பண்புடன் திருத்த முயலுங்கள். வசை பாடுவார், அவர். இந்த ப்ரகிருதிகள், அமெரிக்காவில், நாகரீக சின்னமாக வாழ்ந்து காட்டுவார்கள். இதெற்கெல்லாம் காரணம் அடிப்படை போலி குணம், தன்னலம் பேணுதல், திமிர். 'படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில்.'

ஒரு வழி உண்டு. தடாலடி அபராதங்கள். வாசலில் குப்பை கொட்டும் மாமியின் தங்கவளைகளை சட்டம் பிடுங்கட்டும். சாலை விதி மீறுபவனின் வண்டியை பிடுங்கட்டும். இரண்டே நாளில் உருப்படுவார்கள். 

1968. குஜராத்தில் இனக்கலவரம். ராணுவம் நிர்வாஹம் எடுத்துக்கொண்டது. முதல் நாள், அலக்ஷயமாக, விதி மீறி, மோட்டார்காரில் வந்த மில் முதலாளிகளை, அவரது மனைவியிடம் கம்பு கொடுத்து அடிக்கச் சொன்னார்கள். அவளை ஜீப்பில் வீட்டில் விட்டார்கள். காரைப்பிடுங்கிக்கொண்டு, அவரை நடந்து போகச்சொல்லி, அதற்கான பாஸ் கொடுத்தார்கள். அம்பேல். ஐயாமாரும், அம்மா மாரும் அடைந்து கிடந்தார்கள்.

இன்னம்பூரான்
2009/11/19 N. Kannan <navan...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 19, 2009, 9:54:56 AM11/19/09
to mint...@googlegroups.com


2009/11/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--

Subashini Tremmel

unread,
Nov 19, 2009, 11:05:55 AM11/19/09
to mint...@googlegroups.com
திரு.இன்னம்புரான்,
 
நான் மனதில் நினைத்தை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். அடிப்படை சுத்தத்தில் இல்லாத அக்கறை பெட்டிக்குள் உறங்கும் பணத்திலும் தங்கத்திலும் உள்ளவரை மாற்றத்தை எப்படி காண்பது?
 
சுபா

 

சாதிக் அலி

unread,
Nov 19, 2009, 10:10:25 AM11/19/09
to mint...@googlegroups.com


2009/11/19 N. Kannan <navan...@gmail.com>

ஆம்! நான் `சமூகப்பிரக்ஞை அற்று` என்றுதான் சொன்னேன்.

விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இருக்க வேண்டும்!

கூவத்தில் சேரிகள். அது மனிதர் வாழுகின்ற இடமா?

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டும் சகித்துக் கொண்டுதானே அங்கே வாழ்க்கை
ஓடுகிறது. வெள்ளைக்காரனைக் கேலி பண்ணுகிறோம். ஆனால் அங்கு பூங்காக்கள்
சுத்தமாய் இருக்கும். பொது இடங்கள் சுத்தமாய் இருக்கும். அவர்களுக்கு
சமூகப்பிரக்ஞை அதிகம். நமக்கு பொது இடம் என்றால் அது யாருக்கும்
சொந்தமில்லாதது எனவே அசிங்கம் பண்ணலாம் என்ற எண்ணம். இதை டாக்டர் அப்துல்
கலாம் கூட தனது பிரகடணத்தில் பேசுகிறார். அவர் தெருவில் எச்சல் துப்புதை
மேற்கோள் காட்டுவார். இதே தமிழன் சிங்கப்பூரிலோ? துபாயிலோ செய்கிறானா?

ஏன் இந்தியாவென்றால் இவனுக்கே இளக்காரமா?

மற்றவரை சுட்ட நம் விரல்கள் எப்படித்துணிகின்றன, என்பதே என் கேள்வி?

கண்ணன்


சரியான விளக்கம். அவர் ஏதோ சரித்திரத்தைப் புரட்ட வேண்டுமென்று அசைப் பட்டு விட்டார், யதார்த்தத்தை மறந்து விட்டு ... விடுங்கள் கண்ணன். 

பன்றிக்காய்ச்சல் வந்த பிறகு தான். கை கழுவுவதின் அவசியம் தெரிந்திருக்கிறோம். இனி எப்போது வாய்க்காலில் கால் கழுவுவதை நிறுத்தப் போகிறோமோ..?

நம் நாட்டில் நகரங்களெல்லாம் அல்ட்ரா மாடர்னில் மாறிக்கொண்டு வருகிறது. அதுவும் ஒரு புறம் பயத்தைக் கிளப்புகிறது. டேட்டிங், லிவ் டு கெதர் (கல்யாணம் பண்ணாமல்), டிஸ்கொதே, டிஜே.. இன்னும் என்னென்ன கருமமெல்லாமோ நம் கலாச்சாரத்துக்கு எதிரே முளைத்து வேறூன்றி விட்டுள்ளது. இது ஒரு அபாயகரமான ஆரம்பம். 

இதைப் பற்றி ஆரம்பியுங்களேன்....

Innamburan Innamburan

unread,
Nov 19, 2009, 11:28:32 AM11/19/09
to mint...@googlegroups.com
நன்றி, சுபா,

அடிப்படை சுத்தத்தில் அக்கறை, அப்பா, அம்மா,ஆசிரியர் தர இயலும். என்றும் மறக்கமாட்டோம். புஜம்மா ஒரு ஏழை தலித் பெண்மணி. கணவன் குடிகாரன். அவள் மகன் பொறியியல் படிக்கிறான். மகள் ஆங்கில இலக்கியம் படிக்கிறாள். மேல்தட்டு மக்கள் உதவினர் எனினும், அடிப்படைசுத்தம் அவளது கேடயம். அவள் தொழில்: சாக்கடை கழுவுவது.

இன்னம்பூரான்


2009/11/19 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

Tthamizth Tthenee

unread,
Nov 19, 2009, 11:37:18 AM11/19/09
to mint...@googlegroups.com
எரிகளில்  குடியிருப்புகள்  தந்தால்  முதலில் மனு போடுவது நாம்
 
கூவம் நதிக்கரையில் குடிசை போட இடம் கொடுத்தால் முதல் குடிசை நம்முடையது
 
வாக்களிக்க  பணம் கொடுத்தால் வரிசையில் முதல் மனிதராக நாம்
 
மந்திரி வந்தால்  கை தட்டும் இடத்தில் ஓங்கி ஒலிக்கும் கைதட்டல் நம்முடையது
 
நாம் வாழும்  பகுதியில் அவர் செய்யும் புறம்பான காரியத்தை  வார்ட் மெம்பரை  தட்டிக் கேட்டால்  மக்களை  அமைதிப்படுத்தி  வார்ட் மெம்பருக்கு உதவிக் கரம் நீட்டுபவர் நாம்
 
இப்படி இருக்க  எப்படி முன்னேறும் நம் நிலை
 
முயன்று ஒரே ஒரு நாள்  ஏதேனும் ஒரு அரசியல்வாதியை
 
கூவம் நதிக்கரையில்  இருக்கும் மரத்தில் கட்டிபோட்டு
 
அந்த நாற்றத்தில்  கட்டாயமாக அவரை இருக்க வைக்க நம்மால் முடிந்தால்
மறு நாள்  அந்த அரசியல் வாதி  நம் சார்பாக  நாடாளு மன்றத்தில் பேசுவார்  என்று எதிர் பார்த்தால்
 
அவர்  அந்த  கூவம் நதிக்கரையின் ஒரு பகுதியையே வளைத்துப் போட்டு
தன் நிலம் ஆக்கிக் கொள்கிறார்
 
நம்மால் எதையுமே தட்டிக் கேட்க முடியவில்லை
 
இப்படி இருக்கிறது தமிழ்நாட்டின் நிலை
 
எப்போது நாம் விழித்துக்கொள்ளப் போகிறோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
19-11-09 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

விஜயராகவன்

unread,
Nov 19, 2009, 12:51:23 PM11/19/09
to மின்தமிழ்
On 19 Nov, 01:22, Vedaprakash <vedamvedaprak...@yahoo.com> wrote:
> மலங்கழித்துக் கொண்டே அரசாட்சி செய்யமுடியுமா?
>
> முடியும்! ஐரோப்பிய ராஜாக்கள் அவ்வாறு செய்ததாக அவர்கள் சரித்திரம்
> கூறுகிறது. அதைப்பற்றிய அழகான ஓவியங்களும் உள்ளன!
>
> பிரெஞ்சு அரசன் லூயிஸ்  XIV அத்தகைய அழகான "அரசணை" (Toilet throne)
> அமைத்துக்கொண்டு, மலங்கழித்துக் கொண்டே தர்பார் நடத்துவானாம்!

17ம் நூத்தாண்டை விடுங்கள். நம் கண் எதிரிலேயே ஆதிக்கம் செய்த மாவ்-சே-
துங் செய்த லூட்டி கொஞ்ச, நஞ்சம் இல்லை.

மாவ்-சே-துங் 1949ல் சீன உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்று, ‘மக்கள் குடி
அரசு’ என்ற ‘புரட்சிகரமான’ நாட்டை துவங்கினார். கம்யூனிஸ்ட் சீனம் தான்
உலகத்திலேயே மிகப் புரட்சியான, முற்போக்கான நாடு என எந்த அறிவு ஜீவியும்
1990 வரை சத்தியம் செய்தார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் சீனம் எப்படி நடத்தப்
பட்டது?

எல்லா அதிகாரமும் மாவோ கையில்தான். மாவோனோட ஸ்டைலே தொன் சீனத்தின்
பேரரசர்களைப் போன்றது. படுக்கையை விட்டு சில நாள்கள் எழுந்திருக்க
மாட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சி பாலிட்-ப்யூரோ மீடிங், அரசாங்க
அமைச்சரவை மீடிங் இதல்லாம் அவர் படுக்கையை சுற்றிதான். மாவோ பல
மாதங்களாக பல்லை தேய்க்கவில்லை, பல வருடங்கள் குளிக்க வில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கம், பத்திரிக்கைகள் இவையெல்லாம் அடிக்கடி மாவோ
துதி போடணும். இல்லாட்டால் க்ளோஸ்தான். இதற்கு மேல் மாவோ ஆயிரக்கணக்கான
பெண்கள் , அதாவது கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தினர், உயர் ராணுவ தளபதிகள்,
அதிகாரிகள் இவர்களின் பெண்ணாட்டிகளைகளையும், மகள்களையும் கற்பழித்தார்.
இதையெல்லாம் மாவோவின் சொந்த மருத்துவரே எழுதியுள்ளர்.

மாவோ பற்றி 1980 வரை வந்ததெல்லாம் உண்மை கலப்படமற்ற பிரச்சாரம்.
மாவோவினால் 700 லக்ஷம் மக்கள் அகால மரணம் அடைந்திருப்பார்கள் என நம்பப்
படுகின்றது.

http://vijvanbakkam.blogspot.com/2008_10_01_archive.html

இன்றைக்கு மாவோ ஸ்டைலில் வாழும் ஒரே சர்வாதிகாரி வட கொரியாவின் கிம் ஜோங்
இல். அப்பனுக்கு ஏற்ற பிள்ளை - ஏனெனில் அவர் தந்தை கிம்-இல்-சுங் மாவோ
பாணி சர்வாதிகாரி - சமர்த்தாக தன் பதவியை பிள்ளைக்கு கொடுத்து இறந்தார்.


விஜயராகவன்

Vedaprakash

unread,
Nov 19, 2009, 8:54:01 PM11/19/09
to மின்தமிழ்
நான் குறிப்பிட்டது-

"சிந்துசமவெளி நாகரிகத்தில் மிகப்பெரிய "பாத்ரூம்" இருந்தது என்று

மேனாட்டவர் எழுதி-எழுதி வியந்தனரே ஏன்?" என்பதுதான்!

1. முன்பு நாங்கள் (நான்கைந்து நண்பர்கள் பல இணைதளங்களில்) உரையாடல்கள்
நடத்தும்போது www.allempires.comல் பாகிஸ்தான் நண்பர்கள் சொன்னார்கள்,
"சிந்துசமவெளி நாகரிகம்" இந்தியர்களுடையது இல்லை. இந்தியர்கள் அதை
சொந்தம் கொண்டாடமுடியாது!", என்றார்கள்! சரித்திர புத்தகங்களிலிருந்தே
எடுத்துவிடவேண்டும் என்றார்கள். அதுமட்டுமல்ல, அப்பொழுது தமிழ்நாடு
அரசாங்கம் "கண்டியூர் ஆதாரத்தின்" மீது ஒரு அனைத்துலக மாநாடு
ஏற்பாடுசெய்து, பாகிஸ்தான் அறிஞசர்களையும் அழைத்திருந்தது. அப்பொழுது
அவர்கள் சொன்னார்கள், "எங்களது தொல்துறை அறிஞசர்கள் நிச்சயமாக
வரமாட்டார்கள்" என்று. ஆமாம் யாரும் வரவில்லை [ஜப்பான், ஐரோப்பிய
நாடுகலையும் சேர்த்து]. இதை அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே
சொன்னதுதான் ஆச்சரியம்!

2. சென்னையில் எங்களுக்குக்கூட பல நண்பர்கள் உள்ளார்கள். அவர்களில் பலர்
வயலோரங்களில், தெருவோரங்களில் "கொள்ளைக்கு போனார்கள் " அல்லது
'குந்தியிருந்து தரிசனம் தந்தார்கள்". அவர்களில் ஒருவன் இன்று சென்னையில்
""மில்லியனர்" ஆய்விட்டான். அழகான, சொகுசான, "பாரிவாரில்" [இதிலும்
பாரிஸ் தொடர்பு போலும், லூயிஸ் மாதிரி!] குந்தியிருக்கிறான் தினமும்
ஆனால் ரகசியமாக! அவன் சொல்கிறான் எனக்கு, "கக்கூஸ்தான் சிந்தனைக் கூடம்"
என்று!

3. இன்றும் இங்கு நமது "மின்-தமிழ்" நண்பர்கள் சொல்கிறபடியே
"போய்கொண்டிருக்கின்றிருக்கிறார்கள்" எனவே பிரச்சினை என்னவென்றால்
நாகரிகமாக போக வேண்டும் என்பதில் இந்தியர்களுக்கு மாற்று எண்ணம் இல்லை.
"பழங்கதை" பேசவில்லை. ஆனால், இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொண்டு,
இந்தியர்களுக்கு தமது முறைகளை மறக்கடிக்கவைத்துவிட்டு, அவற்றை நினைப்பது,
எழுதுவது அல்லது ஞாபகப்படுத்துவதே கூடாது, தவறு என்று வாதிடுவது என்ன?

4. முன்பு அரசியல் ரீதியாக, இப்பிரச்சினை கீழ்கண்ட தளத்தில்
அலசியுள்ளேன்:
http://vedaprakash.indiainteracts.in/2008/08/23/why-%E2%80%9Cdravidanadu%E2%80%9D-promotes-manual-scavenging/

இந்தியாவை அவ்வாறு நவீனப் படுத்துவதில் தடங்கலாக இருப்பவர்களை மாற்ற,
அவர்களை இனங்காணும் முயற்ச்சியில் தான் நாம் உள்ளோம். மேலே நண்பர்
சொல்லியபடி, "ஒரே ஒரு நாள் ஏதேனும் ஒரு அரசியல்வாதியை கூவம்


நதிக்கரையில் இருக்கும் மரத்தில் கட்டிபோட்டு அந்த நாற்றத்தில்
கட்டாயமாக அவரை இருக்க வைக்க நம்மால்

முடிந்தால் .............................." என்று அருமையாக சொன்னார்!

5. நன்கு விஷயங்களை அறிந்த நமது நண்பர்களுக்கு இந்திய பிரச்சினைகள்
தெரிந்திருக்கும்-

$ சமம்-சமத்துவம்- என பேசுபர்கள் "சமநீதி" பற்றி பேசமாட்டார்கள்!

$ சமூகநீதி பேசுபவர்கள் சமத்துவ நீதி, சமூகத்தின் சமநீதி என்றெல்லாம்
நினைக்க மாட்டார்கள்?

$ "பாரிவேரில்" சொகுசாக குந்தியிருப்பவர்கள் மற்றவர்களுக்கு அத்தகைய
நிலையைத் தரமட்டார்கள்!

$ பொதுகழிப்பிடம் கட்டி, டென்டர்விட்டு சிறுநீர் - ரூ.2/- மலம் கழிக்க ரூ.
5/- என்று கொள்ளையடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்! ஏன் இலவச டிவிக்கள்
கொடுக்கிம்போது, ஏன் இலவச கழிப்பிடம் கட்டித்தரக்கூடாது?

$ பிந்தேஸ்வர் தூபே என்பவர் இதைப் பற்றி நிறைய செய்துள்ளார் [தயவு
செய்து அவரது இணைத்தளத்தைப் பார்க்கவும். அவரும் பழங்கதை
நிறையபேசுவார்!]. அவரை இந்தியாவின் சுகாதார மந்திரியாக்கினால், ஒருவேளை
நிலை மாறலாம்!

Reply all
Reply to author
Forward
0 new messages