On Jan 3, 8:22 pm, rajam <ra...@earthlink.net> wrote:
>
> இன்னொரு சிறு கருத்து.
> முனைவர் பட்ட
> ஆய்வுக்காக, நான்
> தொல்காப்பிய ஆராய்ச்சி
> செய்த காலத்தில் ... இந்தக்
> "கண்" என்ற சொல்லைப் பல
> முறை நினைத்துப்
> பார்த்திருக்கிறேன். "orifice"
> என்ற ஆங்கிலச் சொல்லின்
> பொருள் ஒத்து வருவதாகப்
> பட்டது. நீங்கள்
> குறிக்கும்படி "புள்ளி"
> எழுத்தானால் உள் அடைப்பு
> இல்லாத வட்டமாக
> இருந்தால், நான் நினைக்கிற
> "கண்" என்ற சொல்லுக்குப்
> பொருந்திவரும்.
> இல்லாவிடில், நம்
> கருத்துக்கள் வேறுபடும்.
> அதிலொன்றும் தவறில்லை!
>
> அன்புடன்,
> ராஜம்
>
கண்ணெழுத்து:
கணிச்சி என்றால் மழு. கணித்தல் என்றால் எண்களை குழியாகப் பதிக்கும்
செயலோ?
மு. ராகவையங்கார் கட்டுரையில் கண்ணெழுத்து என்றால் சித்திர எழுத்து
என்று விரிவாகப் பேசி நிறுவுகிறார். கண்ணெழுத்து என்பதில் “கண்”
என்பது குழியாக சித்திரங்களை வரைவது. திசையாயிரத்து ஐஞ்ஞூற்றுவர்
போன்ற வணிகர்கள் குழுமங்கள், குலங்கள், தலைவர் பெயர்கள்
- சித்திரச் சின்னங்களாக இருந்திருக்கும். சிந்து சமவெளி முத்திரைகளில்
கிடைப்பவை அனேகமாக negative pictures தான். சாக்குப் பொதிகளில்
களிமண்ணை அப்பியபின் இந்த ‘நெகடிவ்’ முத்திரைகளைச்
சாத்துவார்கள். அப்போது சித்திரச் சின்னங்கள் ‘பாஸிட்டிவ்’ ஆக
வெளிப்படும்.
இதுதான் கண்ணெழுத்து என்று எண்ணுகிறேன்.
சிலப்பதிகாரம் கண்ணெழுத்து
என்று பாடும் வரிகளும் இந்த விளக்கத்திற்கு பொருந்துகிறது.
”வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி”
"கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்”
இங்கே பிராமி எழுத்து எழுதிய பெயர் என்று கொள்ள வேண்டியதில்லை.
அவர் பெயரைக் குறிக்கும் சின்னம் (logo picture (positive)
made from negative seals) - கண்ணெழுத்து என்று கொள்ளலாம்.
பேரா. குருமூர்த்தி, சென்னைப் பல்கலை, வெளியிட்டுள்ள
மெகாலித்திக் க்ராஃபிட்டி புத்தகம் பார்க்கவும்.
அதில் சில சித்திர எழுத்துக்கள், பிரமி எழுத்துக்கள்
- எல்லாம் கலந்து உள்ளன.
கண்ணெழுத்து - logo picture (positive) made from negative seals -
நெடிய வரலாறு உடையது.
பின்னரே,
அசோகன் பிரமி, தமிழ் பிரமி எழுத்துக்கள் உருவாயின.
நா. கணேசன்
On Jan 4, 9:03 pm, LNS <lns25...@gmail.com> wrote:
> அழகர்மலை தமிழ் பிராமி கல்வெட்டு 5-ல் கீழ்கண்டவாறு வருகிறது:
>
> *கணதிகன் கணக அதன் மகன் அதன் அதன் .*
> *
> *
> திரு ஐராவதம் மகாதேவன் 'கணதிகன்' என்ற பட்டம் 'காழதிகன்' (மாங்குளம்-3
> கல்வெட்டு) போல் உள்ளதென்றும் 'அதிகன்' என்றால் அதிகாரி, superintendent என்று
> பொருள் கொண்டு 'கணதிகன்' என்றால் 'chief of scribes' என்றும் எழுதி உள்ளார்.
> மேலும் சிங்கள பிராமி கல்வெட்டுகளிலும் 'கண' என்ற சொல் 'எழுத்தன்', scribe
> என்று பொருள்பட வருவதாகவும் கூறி உள்ளார். 'கண' என்பது பிராகிருதத்திலிருந்து
> வந்தது என்று அவர் கருத்து.
>
> இதில் சிந்திக்க வேண்டிய விஷயங்களாவன:
>
> 1) தமிழ் பிராமியை பொருத்த வரை நமக்கு கிட்டியதென்னவோ பெரும்பாலும்
> கல்வெட்டுகளும் பானைகீரல்களுமே. இவைகளில் முத்திரைக்கு வேலையில்லை.
> 2) கணேசனார் காட்டும் மேற்கோளில் 'பொறித்த' என்ற சொல் முத்திரையை சுட்டும்போது
> மறுபடியும் 'கண்ணெழுத்து' என்று ஏன் வரவேண்டும்? மேலும் சகடத்தின்மீது
> முத்திரையை வைத்து எப்படி பொறிக்க முடியும்?
”பொறித்த” என்ற சொல் பாட்டில் இல்லை.
“கண்ணெழுத்துப் படுத்த” என்றே உள்ளது.
கண்ணெழுத்துப் படுத்தல் என்பது இலச்சினையைப்
பதித்தல் என்று கருதுகிறேன்.
> 3) 'கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் மன்ணுடை முடங்கலம் மன்னவர்க்களித்து' என்ற
> வரியில் கண்ணெழுத்தாளர் என்பவர் வேந்தனின் ஶ்ரீமுகத்தை எழுதுகிறார்களா அல்லது
> முத்திரையை வைத்து 'seal' செய்கிறார்களா என்பது சிந்திக்கத்தக்கது. 'இவர்
> வரைந்து இலச்சினையிட்டு அவர் கைக்கொடுப்பத் திருமுகங் கொண்டு' என்பது உ வே சா
> நூலக உரை. மன்ணுடை முடங்கலம் என்பது களிமண்ணால் seal செய்யப்பட்ட ஓலைச்சுருளா?
>
கண்ணெழுத்தாளர் என்பது ஸீல் செய்ய அதிகாரம் உடையோர்.
அரக்கு போன்றவற்றின் மேல் முத்திரை இடும் வழக்கம்போல்
என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
நா. கணேசன்
அரச முத்திரைகளில் லாஞ்சனை, எழுத்து இரண்டும் இருக்கும்.
மிகப் பழங்காலத்திலேயே சிந்து முத்திரைகளிலும்
படம் (லாஞ்சனை) இருக்கும். மேலே “எழுத்து” இருக்கும்.
நா. கணேசன்