நாடு சுதந்திரம் அடைந்த தினம்.நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்.அது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்,என்ற தேசிய உணர்வு எழுந்து அதன் முழுப் பலன் கண்ட நாள்.
நன்றி சார். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது முக்கியமாகத் தேசியம் பற்றிய கல்வி. அதாவது education in nationalism. அத்தகைய தேசியத்தைப் பற்றிய கல்வியில் முக்கியமானது citizenship awareness.***
மிக அழகான இழை! நன்றி.
நாம் தேசியம் என்பதன் பொருளை விவேகாநந்தர், பாரதி, காந்தி
இவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய தேசியம் என்பது
பக்தியுடன் மிளிரும் போது அது மானுட சகோதரத்துவமாக மலர்கிறது.
இந்தியாவின் இத்தனை வெற்றுமைகளில் ஒற்றுமை காண ஒருவன் பழகிவிட்டால்
உலகமொரு தூசு. மானுடம் வெல்லும்!
நா.கண்ணன்
On Aug 14, 9:36 pm, sk natarajan <sknatarajan...@gmail.com> wrote:
> தேசியம் , தேசப் பற்று ,இது குறித்து நிறையவே மாணவர்களுக்கு சொல்லித் தர
> வேண்டியுள்ளது
> குடிமையியல் பண்பு குறித்து பாடங்கள் இருப்பினும் ,அது மட்டும் போதும் என்று
> தோன்றவில்லை
> இன்றைய சுதந்திர தினத்தில் எதிர் மறைக் கருத்துக் கூறுபவர்களுக்கு பதில் அளிக்க
> கூட முடியாத நிலையில் சமுகம் உள்ளது
> பொது நலன் மறைந்து தன்னலம் அதிகமானதே இதற்கு காரணம்
> ஆனால் இவற்றை வீட்டில் இருந்தே துவக்க வேண்டும்
> காலத்தால் நிறைய நிகழ்வுகள் மறக்கடிக்கப் படுகின்றது
> உம் போன்றோர்களின் கட்டுரை பலரின் மனதை திறக்க வைக்கக் கூடும்
> நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா
>
> என்றும் அன்புடன்
> சா.கி.நடராஜன்.
திருவரங்கம் ரங்கனார் இழை இன்றைய கால கட்டத்துக்கு
மிக அவசியமானது. இந்திய தேசியம் பல மாநிலங்களில்,
பல மொழிகள் பேசும் எல்லா மக்களையும் அழைத்து
அரவணைத்துச் செல்ல வேண்டும். பிரிவினைவாதம்
தன் வலு இழந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இணையத்தில்
இருக்கும் அளவு நேரில் ஒன்றும் இல்லை.
பாரதமாதாவின் அருளும் அன்பும் எல்லா மக்களுக்கும்
மாநிலங்களுக்கும் நிச்சயமாய் உண்டு. ஐ.டி. போன்றவற்றால்
தென்னகத்தின் அருமை பெருமைகள் வடக்கே தெரிகின்றன.
ஆங்கிலம் விஞ்ஞான வளர்ச்சியற்ற ஹிந்தியை விட
இந்தியாவில் வேரூன்றிவிட்டது நன்மைக்கே.
சாகித்திய அகாதமி விருது பெற்ற நாஞ்சில்நாடன் (கோவை)
தேசிய ஒருமைப்பாடு என்ற கட்டுரை எழுதியுள்ளார்:
http://nanjilnadan.wordpress.com/2011/08/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
நா. கணேசன்
> கவிதை : தமிழ் சுவாசம்http://tamizhswasam.blogspot.com/<http://tamizhswasam.blogspot.com/>
>
> *குழுமம் :* தமிழ்
> சிறகுகள்<http://groups.google.com/group/tamizhsiragugal?hl=ta>
> http://groups.google.com/group/tamizhsiragugal
>
> ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்
> அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
>
> 2011/8/15 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > நன்றி சார். ஆனால் இங்கு குறிப்பிடப்படுவது முக்கியமாகத் தேசியம் பற்றிய
> > கல்வி. அதாவது education in nationalism. அத்தகைய தேசியத்தைப் பற்றிய கல்வியில்
> > முக்கியமானது citizenship awareness.
>
> > ***
>
> > 2011/8/15 sk natarajan <sknatarajan...@gmail.com>
>
> >> கல்வி வளர்ச்சி இல்லையேல் இன்றைய உலகில் நாம் காணாமல் போய் இருப்போம்
> >> அருமையான கட்டுரை ஐயா
> >> என்றும் அன்புடன்
> >> சா.கி.நடராஜன்.
> >> கவிதை : தமிழ் சுவாசம் http://tamizhswasam.blogspot.com/<http://tamizhswasam.blogspot.com/>
>
> >> *குழுமம் :* தமிழ் சிறகுகள்<http://groups.google.com/group/tamizhsiragugal?hl=ta>
> >> http://groups.google.com/group/tamizhsiragugal
>
> >> ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப் பெற மனம் நாடும்
> >> அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்
>
> >> 2011/8/15 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
சகோதரி நிவேதிதா தந்திருக்கும் தேசியத்தின் ப்ரார்த்தனை மிகவும் பொருள் செறிவு உடையது. அதைப் பகுதி பகுதியாக நாம் ஆழ்ந்து பார்த்தல் அவசியம்.I believe that India is one, indissoluble, indivisible.
இந்தியா என்பது ஒன்று.
இந்தியா என்பது மாற்றமுடியாதது.
இந்தியா என்பது பிரிக்க முடியாதது.
இதைத் தன் நம்பிக்கையாக எவன் போற்றுகிறானோ அவனே இந்திய தேசத்தின் குடிமகன்.இந்தியா என்பது ஒன்று என்பதைப் புரியவைக்க முடியும். யாருக்கு?இந்தியாவின் ஒன்றாகும் தன்மையை, ஒற்றுமையை, ஏகத்வத்தைத் தம் நம்பிக்கையாய்க் கொண்டு போற்றும் குடிமகனுக்கு ஏன் இந்தியா ஒன்று என்பதை நன்கு புரிய வைக்க முடியும்.அதேபோல்தான் இந்தியா என்பது மாற்ற முடியாதது. ’ஒன்று அன்று தனித்தனி’ என்று அதன் தேசமாகிய இயல்பை மாற்ற முடியாதது என்பதைத் தேசத்தின்பால் நம்பிக்கை பூண்டு போற்றும் குடிமகர்க்குப் புரியவைக்க முடியும்.அதேபோல்தான் பிரிக்க முடியாதது இந்தியா என்னும் கருத்தும் தேசத்தில் நம்பிக்கை கொண்ட குடிமகர்க்கு விளங்க வைக்க முடியும்.ஆனால் தேசமா? இதை மறுக்கிறோம். ஒன்றா? எப்படி? மாறாததா? பிரிக்க முடியாததா? எங்கே நிரூபி என்று அடிப்படையில் தன் தேசத்தையே மறுத்துக் கேள்வி கேட்கும் ஒருவருக்கு, இவற்றை என்ன விளக்கினாலும் பயனின்றிப் போயொழியும்.இந்திய தேசம் என்பதைத் தம் நம்பிக்கைக்கு உரிய போற்றும் இலக்காக ஆக்கிக்கொண்ட தேச பக்தர் ஒருவருக்குச் சில கேள்விகள் எழலாம்.இந்தியா ஒன்று என்றால் பழங்காலத்தில் பல நாடுகளாய் இருந்ததே! பல ராஜ்ஜியங்கள், பல அரசுகள் என்று இருந்ததே! ஒரு காலத்தில் பல அரசுகளாக இருந்தது இப்பொழுது ஆங்கில ஆட்சிக்குப் பின் ஒன்று என்று ஆகியதா?ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் பல தேசங்கள் தம் நிலப்பரப்பும், ஆட்சியும், பண்பாட்டுப் பரப்பும், மரபின் பரப்பும் ஒன்று போலவே அமைந்து காலம் நெடுக வரும்.ஆட்சிகள் மாறி மாறி அமைந்தாலும் அதை ஒரு தேசமாகக் காலம் நெடுக ஒரே தன்மை கொண்டதாகக் கருதுவது மாறிச் செல்லும் அதன் ஆட்சிகள் அடிப்படையில் அன்று.மாறாத அதன் பண்பாடு, வழிவழியான மரபு, சமுதாய நினைவு, பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், பண்டைய சரிதங்கள் ஆகிய இவையே ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு ஒரே தேசமாகத் தொடர்ந்து அடையாளம் காணப் படுவதற்கு ஏதுவாகும். மேலை நாடுகள், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதற்கான உதாரணங்களைக் காண்லாம்.இந்தியாவில் இமயம் தொட்டுக் குமரிவரை, ஆஸேது ஹிமாசலம் பண்பாடும், மரபுகளும், மக்கள் நம்பிக்கைகளும், பண்டைய சரிதங்களும் ஒன்று போலவே அமைந்து இந்த நிலப்பரப்பை ஒரே தேசமாக இனங்காணும் வகையில் தொடர்ந்து வந்திருக்கிறது.இந்தத் தொடர்ச்சி இன்று நேற்று அன்று பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமுதாய, பண்பாட்டு மெய்மையாக இயன்று வந்துள்ளமையைத் தான் புறநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது.“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்கீழ்து, முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்நீர்நிலை நிவப்பின் கீழு மேலதுஆனிலை உலகத்து ஆனு மானாதுஉருவும் புகழும் ஆகி விரிசீர்த்தெரிகோன் ஞமன்ன் போல வொரு திறம்பற்றலி லியரோ நிற்றிறஞ் சிறக்க...”(புறநானூறு 6)என்னும் வரிகளில் மன்னனின் புகழ் சிறக்கப் பாடும் புலவருக்குத் தன்னைப் போல் தம் பண்பாட்டுப் பரப்புதான் நாவில் வந்து நிற்கிறது.பாடும் பொழுதே பண்டைய சரிதங்கள்தாம் வரிகளில் வருகின்றன.( தொடுகடல் -- சகரரால் தோண்டப்பட்ட கடல்).வடக்கில் இமயமும், தெற்கில் குமரியும், கிழக்கிலும், மேற்கிலும் கடல்களும் இன்று போல் அன்றும் மக்கள் நெஞ்சில் தம் பூமியின் வரையறைகளாக நிலவுகின்றன.மக்களின் நம்பிக்கைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. மேலே ஆனிலை உலகம் (கோலோகம்) வரை உன் புகழ் சிறக்கட்டும் என்று பாடும் புலவர், ’பாரத நாடு பழம் பெரு நாடு, நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்’ என்று தானே உணர்த்துகிறார்?புறநானூறு 17 ஆம் பாடலில்“தென்குமரி வடபெருங்கல்குணகுடகட லாவெல்லைகுன்றுமலை காடுநாடுஒன்றுபட்டு வழிமொழியக்கொடிது கடிந்து கோல்திருத்திப்படுவதுண்டுப் பகலாற்றிஇனிதுருண்ட சுடர்நேமிமுழுதாண்டோர் வழிகாவல..”
என்னும் வரிகளிலும் புலவருக்கு இயல்பாக வருவது தம் பண்பாட்டுப் பூமியாகிய பாரதமே என்பது நன்கு புலனாகிறது.மதுரைக் காஞ்சியிலும் மாங்குடி மருதனார் பாடுகையில்,“தென்குமரி வடபெருங்கல்குணகுட கடலா வெல்லைத்தொன்று மொழிந்து வழிகேட்பவெற்றமொடு வெறுத்தொழுகியகொற்றவர்தம் கோனாகுவை..”பண்பாட்டு பூமியின் எல்லைகள்தாம் தம்மைப் போல் அவர் நினைவில் துலங்குகின்றன.இதில் நன்கு கவனிக்க வேண்டியது ‘தொன்று மொழிந்து’ என்று அந்தத் தொன்மைக் காலத்திலேயே புலவர் பாடுவாராயின் பாரத பூமியின் ஒற்றுமைக்குப் பழமையின் எல்லையை எப்படி நாம் யூகிக்க முடியும்?தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய் -- என்று பாரதி பாடுவதுதான் எவ்வளவு நியாயமானது!எனவே இந்தியா ஒன்று என்பதும், மாறாதது, பிரிக்க முடியாதது என்பதும் இன்று நேற்றன்று, தொன்னெடுங்காலம் தொட்டே மக்கள் நினைவில் ஆழப்பதிந்தது.இந்த மாறாத உண்மையையும் சந்தேகிக்கும் தேசியமற்ற மனப்பான்மை மாறி பாரத நாடு பழம்பெரும் நாடு நாம் அதன் புதல்வர் என்ற உண்மையைப் போற்றிப் பேணும் ஊக்கமே இங்கு நம்பிக்கை எனப்படுவது. இது உண்மையில் தன்னம்பிக்கை.***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மவுரியர்கள் இப்போதைய இந்தியாவின் 90 சதவீத நிலப்பரப்பையும் கூடவே
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளையும் கிட்டத்தட்ட
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே ஒன்றினைந்த தேசமாக
ஆண்டிருக்கிறார்கள். http://en.wikipedia.org/wiki/Maurya_Empire
இன்னும் பல சந்தர்ப்பங்களில் முழு இந்தியாவும் ஒன்று அல்லது இரண்டு
அரசுகளால் ஆளப்பட்டிருக்கிறது. பல மன்னர்களின் ஆட்சிகாலத்திலும் படைபலம்
மிக்க ஒருவருக்கு மற்றவர்கள் கப்பம் கட்டிக்கொண்டுதான் இருந்தார்கள்.
ஆங்கிலேயர் வரும் முன்னர் கடைசியாக 60 சதவீத இந்தியாவை மராத்தியர்கள்
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுகாலம் ஆண்டனர்.
ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இந்தியா ஆங்கிலேயர் வந்து ஒட்டுப்போட்டு
இணைத்த தேசம் என்ற பொய்பரப்புரை மிகுந்த வீச்சுடன்
முன்னெடுக்கப்படுகிறது.
மிக முக்கியச் சான்று ரங்கன்.
சங்கப்புலவன் பழமையான தேசமென்று வட இமயம், தென்குமரி என்று
காட்டுகிறானில் இந்திய தேசியென்பது என்றோ தோன்றிவிட்டது என்பது
புலனாகிறது. ராஜசங்கர் சொல்வது போல் நமக்கு தப்புத்தப்பாக வேண்டுமென்றே
பாடங்கள் புகட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கோணலைத்திருந்தவே நம்ம
வாழ்நாள் முடிந்துவிடும் போலுள்ளதே! எத்தனை பொய்கள்! எத்தனை பொய்கள்!
நா.கண்ணன்
நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி.அரசியல் என்ற துறையில் நீங்கள் நீந்திக் குளிப்பவர்கள். எனவே உங்களிடம் பயந்துகொண்டேதான் இதை எழுதுகிறேன்.என்னுடைய நோக்கம் ஹிந்து மதம் என்பது சுவாமி விவேகாநந்தரின் காரணமாக ஏற்பட்ட பொதுமன எழுச்சியினால் தேசிய உணர்வாக உருப்பெற்று, தாதாபாயினாலும், மற்றவர்களாலும் வடிவம் கொண்டு, சுதேசிய எழுச்சியாகவும், பின்னர் சுதந்திர இந்தியாவாக் மலரவும் காரணமாகியது என்பதைக் காட்டுவதும், இன்று தேசியக் கல்வி எப்படி அமையலாம் என்பதை எடுத்துக் கூறுவதும் ஆகும்.
National unity is built on the common home, the common interest and common love.National unity is built on the common home, the common interest and common love.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
[1] Language, where even small differences, more like dialects within one language,
matter for Self- or Other-identification.
[2] Religion, where even small differences, more like sects within one religion, matter for
self- and other-identification.
[3] History, meaning the reading of the past and also the present and future. Truths to
Self may be myths to Other, and vice versa.
History also defines sacred times, points in time to be celebrated.
[4] Geography, an attachment to territory, "these hills are ours, this is where our
ancestors lived and are buried". Geography also defines sacred places, points, areas, in
space to be celebrated.
நல்ல தொடர். தொடருங்கள்.
ராஜசங்கர்
On Aug 16, 10:02 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> நன்றி நாகராஜன் சார்.
>
> ஆனால் உள்ளதை உள்ளபடி அறிவதுதான் அறிவு.
>
> தேசம் என்ற உள்ள உண்மையின் அம்சத்தை மறுதலித்துச் செயல்படுவது உண்மையில்
> அறிவன்று. அது அபிப்ராயம் அறிவு போல் தோற்றம் கொள்ளும் வகை.
>
> தேசியம் என்பதன் மூலமே அதனைக் கடந்து மானிடம் என்றும், காக்கை குருவி எங்கள்
> சாதியென அனைத்து உயிரினத்தின் பால் அருளென்றும் விரிவடையவும் முடியும்.
>
> முதல் கட்ட உண்மையையே மறுதலிப்பவர் அடுத்த கட்ட உண்மைக்கு எப்படித் தாம்
> தகுதியுடையவர் ஆவார்?
>
> ***
>
> 2011/8/16 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > 1970-ஆம் ஆண்டு என்று நினைவு. டில்லியில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை.
> > முதன்முறையாக வட இந்திய வாசம். பகல் உணவுக்காக தினம் தமிழ்நாடு இல்லம்
> > செல்வேன். அப்போது தி.மு.வின் பாராளுமன்றக்குழுவின் தலைவராக இருந்தவர்
> > தத்துவமேதை டி.கே சீ்னிவாசன். பகுத்தறிவுவாதி
> > ஒருநாள் எங்களுடன் சேர்ந்து திரு.க.திரவியம் ஐ.ஏ.எஸ் உணவருந்தினார்.
> > டி.கே.சீனிவாசன் திரவியம் அவர்களைப்பார்த்து நீங்கள் ஒரு தேசியவாதி.
> > அன்மைக்காலமாக நீங்கள் பதுத்தறிவுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறீர்களே என்று
> > கேட்டார்
>
> > திரவியம் அவர்கள் I am both a nationalist and rationalist என்றார்
>
> > திரு சீனிவாசன் அவர்கள் It is impossible. A nationalist has a boundary but
> > a rationalist has no boundary என்று சொன்னார்
>
> > ஒருதேசம் என்பதற்கு விளக்கம்
>
> >http://www.iicp.at/communications/publications/papers/WP1SLfederation...
>
> > A nation is a human group with four characteristics:
>
> > [1] Language, where even small differences, more like dialects within one
> > language,
>
> > matter for Self- or Other-identification.
>
> > [2] Religion, where even small differences, more like sects within one
> > religion, matter for
>
> > self- and other-identification.
>
> > [3] History, meaning the reading of the past and also the present and
> > future. Truths to
>
> > Self may be myths to Other, and vice versa.
>
> > History also defines sacred times, points in time to be celebrated.
>
> > [4] Geography, an attachment to territory, "these hills are ours, this is
> > where our
>
> > ancestors lived and are buried". Geography also defines sacred places,
> > points, areas, in
>
> > space to be celebrated.
> > தேசிய உணார்வு தழைக்க இந்த நாலு பண்புகளும் தேவை. ஆயினும் நாலும் கட்டாயமாக
> > இருக்கவேண்டுவதில்லை
> > Nagarajan
>
> > 2011/8/16 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> >> நல்லதொரு இடுகைக்கு நன்றி.
>
> >> 2011/8/16 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> >>> *National unity is built on the common home, the common interest and
> >>> common love. *
>
> >>> *National unity is built on the common home, the common interest and
> >>> common love. *
> >>> *
> >>> *
> >>> ***
>
> >>> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
>
> >>> *
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
I believe that the strength which spoke in the Vedas and Upanishads, in the making of religions and empires, in the learning of scholars, and the meditation of the saints, is born once more amongst us, and its name today is Nationality.ஆழ்ந்த நெடுங்காலத்தே வேதங்களிலும், உபநிஷதங்களிலும் மனிதர்களோடு பேசிய பலம் அது என்ன?ஸங்கச்சத்வம், ஸம்வதத்வம்ஸம்வோ மனாம்ஸி ஜானதாம்ஒன்றுறப் பழகுவோம், ஒன்றுற மொழிவோம்ஒன்றுற மனத்தால் உணர்ந்திடுவோம் நாம்என்று முழங்கிய ருக் வேத காலத்திலும் சரி,ஹே அம்ருதஸ்ய புத்ரா:ஏ அழியாமையின் புதல்வர்களே!என்று மனிதர்தம்மைப் பார்த்து விளித்த உபநிஷத காலங்களிலும் சரி,அவ்வாறு பேசிய அந்தப் பலம் என்ன?வசுதா ஏக குடும்பகம் -- உலகம் ஒரே குடும்பம்என்ற எண்ணத்தோடு அகில உலகும் ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி தன் அடியால் அளந்த நெடியோனைப் பாடிப் பரவி, அனைத்தும் அவனுக்குச் சரீரமாக நிற்கையாலே இந்த உலகமே அவனுக்கு விபூதியானது என்ற எண்ணத்தில் ‘நிற்பதெல்லாம் நெடுமால்’ என்று ஸ்ரீவைஷ்ணவ மதத்தை, ஆகமப் பொலிவோடு பாடிப் பரப்பிய ஆழ்வார்களின் பாசுரங்களில் ஒலித்த அந்தப் பலம் எது?பஹுகுடும்பி என்று அனைத்துலகையுமே தன் குடும்பமாக உடையவன் சிவபெருமான் என்று அனைத்துயிர்களும் பசு என்றும், அவன் ஒருவனே பதி என்றும், பதியைப் பசு சார்ந்திடப் பாசம் விலகும் என்று மும்மலம் நீங்கிய முத்தி நிலையைக் கண்ட சைவம் நாயன்மார்களால் ஆகமங்களின் அடிப்படையில் தழைத்தது எந்தப் பலத்தால்?உலகெங்கணும் பெண் என்பவள் சொத்து ஜாபிதாவில் சேர்ந்த ஒரு பொருள் என்ற எண்ணத்தில் பல இனங்கள் உலகில் இருந்த காலத்திலேயே, துணிந்து பெண்ணின் பார்வையில் பரம்பொருளைப் பெண்மையின் முழுமையாகக் கண்டு, அந்தப் பெண்ணின் சக்தியால் இயங்கும் கடவுளரே அனைத்து கடவுள்களும் என்று சித்தாந்தம் செய்த சாக்த மதம் எழுந்தது எந்த பலத்தின் மீது?இதைப் போல் இந்த மண்ணில் எவ்வளவு மதங்கள்! அவை எழுந்ததெல்லாம் எந்தப் பலத்தின் அடிப்படையில்?உலகில் பல அரசுகளும் அந்நிய மதங்களைச் சேர்ந்தவர்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து புகலடைந்த பழங்காலத்து பார்ஸிகளாகட்டும், யூதர்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும், யாராயினும் சரி நட்புக்கரத்தோடு உதவி நாடி வந்தவர்க்குப் புகலிடம் தந்து, அவர்க்கு உரிய வழிபாட்டிடம் முதற்கொண்டு தம் செலவிலேயே கட்டிக் கொடுத்து, வந்து சேர்ந்த அந்நியர் இதைத் தம் சொந்த பூமியாகக் கருதும் வகையில் அவர்களுக்கு வேளாண்மை (உபகாரம்) செய்த அரசர்கள் கட்டி எழுப்பிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் எந்த பலத்தின் அடிப்படையில்?இந்த உலகில் எதுவும் நிலைத்ததன்று. ஆத்மா ஒன்றே நிலைத்தது என்ற தீரமான ஆத்ம பலத்தின் அடிப்படையில் அன்றோ இவையெல்லாம் எழுந்தன!பெரும் வித்யைகளைக் கண்ட மாபெரும் கல்விமான்கள், உலக இனங்கள் பலவும் காட்டில் அலைந்து கொண்டு தம் உடலில் ஊறும் பூச்சிகளைக் கூட எடுத்தெறிய அறியாதே திரிந்த காலத்தும் உலகம் வியக்கும் அறிவுத் துறைகளைக் கண்ட பேரறிஞர்கள், தம் அறிவுப் பெட்டகங்களை எந்த பலத்தின் அடிப்படையில் யாத்தனர்?ஆத்ம பலத்தின் அடிப்படையிலன்றோ!அலெக்ஸாண்டர் பழங்காலத்தில் படையெடுத்து வந்த காலத்து தியானத்தில் ஆழ்ந்திருந்த ஒரு முனிவரைத் தன் நாட்டிற்கு வருமாறு வற்புறுத்த அவர் மறுக்க, தான் அவரைக் கொலை செய்யவும் கூடும் என்று மிரட்டிய போது பெரும் சிரிப்பாகச் சிரித்துவிட்டு, ‘ஒரு பேரரசராக இருந்து கொண்டு இப்படி அந்நியாயத்துக்குப் பொய் சொல்லுகிறீரே! உம்மால் முடியாத காரியமே அதுதான். ஏனெனில் வாளால் வெட்டப் பட முடியாதவன் நான். நீரால் நனைக்கப் பட முடியாதவன் நான். தீயினால் எரிக்கவோ, காற்றினால் உலர்த்தவோ பட முடியாத என்னைக் கொல்வேன் என்று சொல்லி நீர் போய்யராக ஆகிவிட்டீரே!’ என்று அந்த முனிவன் தியானம் விழித்துச் சிரித்த சிரிப்பு எந்த பலத்திலிருந்து எழுந்தது?ஆங்கில ஆட்சியில் தொடக்கத்தில் ஹிமாலயச் சாரல்களில் ஒரு முனிவன் ஆழ்ந்த தவத்தில் இருக்க, அவரிடம் ஏதோ கேட்டுப் பதில் வராத காரணத்தால் ஆங்கிலப் படைவீரன் கோபத்தில் அந்த முனிவரைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட, சாகும் போதும் அந்த முனிவன், ‘நீயும் அவனேதான் நீயும் அவனேதான்’ என்று இருகை கொட்டிச் சிரித்தபடி உயிர் பிரிந்தானே அந்த மரணத்தையும் எள்ளி நகையாடும் சிரிப்பு எந்த பலத்தின் அடிப்படையில் எழுந்தது?ஆத்ம பலத்தின் அடிப்படியில்தானே!அந்த ஆத்ம பலம்தான் இன்று நம்மிடையே புத்துருவம் கொண்டு தேசியமாக உணர்வின் வடிவம் கொண்டு எழுந்துள்ளது.இந்திய வரலாற்றை நன்கு ஊன்றிக் கற்கையில் இந்தக் காலம் கடந்த உண்மையில் என் நம்பிக்கை அசைக்கவொண்ணததாய் ஆகிறது --என்பது தேசிய உணர்வெழுந்தோரின் ப்ரார்த்தனையில் மூன்றாங்கண்ணியாக சகோதரி நிவேதிதா உரைக்கிறார்.I believe that the strength which spoke in the Vedas and Upanishads, in the making of religions and empires, in the learning of scholars, and the meditation of the saints, is born once more amongst us, and its name today is Nationality.நிவேதிதாவின் சீடர் இதற்கு விளக்கம் பெய்யும் வகையில் யாத்த பாடலைக் காண்போம்.முன்னை யிலங்கை அரக்கர் அழியமுடித்த வில் யாருடை வில்? - எங்கள்அன்னை பயங்கரி பாரத தேவி நல்ஆரிய ராணியின் வில்.இந்திர சித்தன் இரண்டு துண்டாகஎடுத்த வில் யாருடை வில்? -- எங்கள்மந்திரத் தெய்வதம் பாரத ராணிவயிரவி தன்னுடை வில்ஒன்று பரம் பொருள் நா மதன் மக்கள்உலகின்பக் கேணி யென்றே -- மிகநன்று பல் வேதம் வரைந்தகை பாரதநாயகி தன் திருக் கை.காண்டிவ மேந்தி உலகினை வென்றதுகல்லொத்த தோளெவர் தோள்? -- எம்மைஆண்டருள் செய்பவள், பெற்று வளர்ப்பவள்ஆரியர் தேவியின் தோள்போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதைபுகன்ற தெவருடை வாய்? -- பகைதீர்க்கத் திறந்தரு பேரினள் பாரததேவி மலர்த்திரு வாய்(பாரத மாதா -- சில கண்ணிகள் -- பாரதியார் கவிதைகள், சீனி விசுவநாதன் பதிப்பு, பக் 38, 14-4-1991)
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
ஐயாஇந்தியா என்ற ஒரு தேசம் இல்லாது பல மதங்கள் நிறைந்த பலமொழிகள் வழங்கும் நிலையில் unity in diversity என்ற குமுக உணர்வு வையகப் பரிவுமிக்க மக்களிடையே வழி வழியாகப் பரவி நிறை்ந்து Social ethos என்ற அடிப்படைப் பண்pai மக்களின் அடிமனத்தில் படிந்திரு்ப்பதே இந்தியாவின் வலிமைஇந்தியா ஒரு பொங்கல் பானை அல்ல பழக்கூடை
It is not a melting point but a bowl of fruits
இதுவுமொரு அழகான பார்வை. அப்படிப் பார்ப்பதில் ஒரு மகிழ்ச்சி வருவது உண்மை.
அதே நேரம் நாம் காலம் சமைத்த சர்க்கரைப் பொங்கலும்தான். அஸ்கோ
பர்ப்போலாவின் கட்டுரையில் வாசுதேவ குடும்பம் எனப்படும் யாதவர்கள்
ஈரானிலிருந்து வந்தவர்கள். பின்னர் இவரே வேளிர் மக்கள் என
தென்தமிழகத்திற்கு வந்தனர் என்று சொல்கிறது. இது இயற்கையான மக்கள் பரவல்.
அதற்கும் முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்த ஆப்பிரிக்க மக்களே
இந்தியாவின் பூர்வகுடிகள் இவர்கள் இன்று பிரான்மலைக் கள்ளர் என்ற
பெயருடன் இங்கு வாழ்கின்றனர் என்று ஆய்ந்தறிந்து சொல்கிறார்
பேரா.பிச்சப்பன். அப்படியா! இன்று நம்ம ஊர் கோனாரிடம் போய் ஈரான் தேசத்து
வழக்கு ஒன்றை துளியேனும் உள்ளதா எனக்கேட்டால் அதன் சிறு சாடை கூடக்
காணமுடியாது. இது இந்திய அவியலில் கரைந்த ‘தான்’. சரி நம்ம மதுரை
கள்ளர்களிடம் போய் ஆப்பிரிக்க வழிமுறைகளைத் தேடமுடியுமோ? முடியாது. பாரதி
வேறு, பாரத மாதாவை, ‘ஆரிய ராணி’ என்று சொல்லிவிட்டான். உடனே
கிளம்பிவிடுவர் நம்மவூர் நாட்சிகள், அவரே சொல்லிவிட்டார் இந்தியா
ஆரியர்கள் தேசமென்று. திராவிடர்களின் கதி என்ன என்று? :-)) யார் இந்த
ஆரியர்கள்? இவர்களை எப்படி இனம் காண்பது? சயின்ஸ் எனும் உலகின் தலைசிறந்த
அறிவியல் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரைகளும், அது தொடர்பான விவாதங்களும்
நம் கிட்டங்கியில் உள்ளன. அறிவியல் சொல்வது, இந்தியர்கள் அனைவருமே இந்த
இரண்டு மக்கள் பரவலின் விளைவுகளே என்று. ஆரிய உதடுகள் உன்னது, திராவிட
உதடுகள் என்னது. ஆரியம்-திராவிடம் இரண்டும் கலக்கட்டுமே! என்று
எழுதுகிறார் 21ம் நூற்றாண்டுக்கவி ஒருவர் :-)
எப்படி நம்ம ஊர் தேவரை ஆப்பிரிக்கர் என்று சொல்வது அபத்தமோ, அதுபோல்தான்
நம்ம ஊர் கோனாரையோ, ஐயரையோ ஆரியர்கள் என்று சொல்வதும் அபத்தம். நாம்
எல்லாம் காலமெனும் மகள் செய்த பொங்கல்தான். சகோதரி நிவேதிதா சொல்வது போல்
இருப்பது ஒன்றுதான். அது அழியாத பேருண்மை பேசும் இந்தியம். ஆன்மா
அழிவில்லாதது என்பது போல் இந்திய மெய்ம்மை என்பதும் அழிவில்லாதது.
ஜெர்மனியில் ஒரு பார்ட்டியில் ஒரு ஜெர்மானிய மாது என்னிடம் வந்து,
‘உலகின் இதயம் இந்தியா! அது நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!’
என்றாள். எவ்வளவு அழகான பார்வை. இன்று லவ்லாக் போன்ற விஞ்ஞானிகள் ‘கையா’
எனும் கோட்பாடு மூலம் இவ்வுலகமே ஓர் பேருயிர் என்று நிறுவ
தலைப்படுகின்றனர். பூமி ஓர் பேருயிர் என்றால், இந்தியா அதன் இதயம் என்று
காண்பதில் தவறேது?
போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய்? -- பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திரு வாய்
நா.கண்ணன்
எனவே யாரும் கடத்திக்கொண்டு போக மாட்டார்கள். அஞ்சற்க!
க.> :-)
2011/8/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> திரு கண்ணனுக்கும், திரு நாகராஜனுக்கும் ஒரு வேண்டுகோள்.
> உங்கள் வாதங்கள் ஜாதி, இன வாதம் என்ற வழிகளில் கடத்தப் பட்டுவிடாமல் இருக்க
> மீண்டும் தேசியம் என்பதனோடு கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு
> உங்களுடையது.
> ஏனெனில் ஜாதி, இனம், மதம் என்றவற்றையெல்லாம் கடந்தது தேசியம்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஐயா மோகரங்கன் அவர்களுக்கு வணக்கம்.நல்லதொருபதிவை வழங்கியுள்ளீர்கள்பாராட்டுகள்.

புஸ்புஸ்சுன்னு சத்தம் கேட்குதா?ஐயோ அது என் சொந்தக் கதை சோகக்கதையை நெனச்சு நான் விடற பெருமூச்சு
On Aug 18, 8:27 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/8/18 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
கொஞ்சம் பொறுங்க, ஆங்கில வார்த்தைகள் எல்லாத்தையும் கிரந்த
எழுத்துக்களில் எழுதலாம். அதே மாதிரி, த்ராவிட பாஷைகளையும்,
ஹிந்தி, ... போன்றனவும் கிரந்தத்தில் எழுதலாம்.
நா. கணேசன்
திரு நாகராஜன் சார்! மறுமொழி இடவேண்டாம் என்றால் வருத்தப் படுகிறார்கள்.ஆனால் இடுகின்ற மறுமொழிகள் இழைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாதவையாய் இருக்கின்றன.நீங்களும் இவ்வாறு செய்ய வேண்டுமா?தயவு செய்து இந்த இழைக்குத் தொடர்பற்ற சொல்லாடல்களை இங்கே இடவேண்டாம்.I hope you respect the sentiments.***
தேசியம் அதாவது Nationalism என்பது----மண், மரபு, நினைவு, பண்பாடு, உள்செறிவு, எதிர்காலக் கனவு, நிகழ்கால ஊக்கம், பண்டைய சிறப்புகளை நன்கு உணர்ந்த அடிப்படையில் வேர்விட்டு எழுந்த தெளிந்த மதி----ஆகிய இவையெல்லாம் நன்கு பொருந்திய மன எழுச்சி.தெய்வ பக்திக்குப் பக்கத்தில் வருவது இந்த தேச பக்தி ஆகிய தேசியம்.தெய்வ பக்தியானது, தெளிந்த ஞானமும், தீரமான வைராக்கியமும் கூடச் சேர்ந்து செழிக்கவில்லையேல் தானும் சோர்ந்து போய் வெறும் உணர்ச்சிகளாய் விழுந்துவிடும்.உணர்ச்சிகளுக்கு என்று வினோதமான குருட்டுக் கண் உண்டு. -- எங்கே பள்ளம் என்று பார்த்துத் தள்ளிவிடும்.அதாவது உணர்ச்சிகள் என்பவை ஒரு வித கபந்தங்கள்.-- தலை வயிற்றுக்குள் இருக்கும் ஜன்மம்.ஆனால் பக்தி என்பது விசுவரூபம். -- கூடவே ஞானமும், வைராக்கியமும் செழித்தால்.ஸ்ரீமத் பாகவதத்தில் பக்தி என்ற பெண் நிர்கதியாக நின்று கொண்டு அழுதுகொண்டிருந்தாள். நாரதரைப் பார்த்து வார்த்தை சொல்லுமிடத்தே, ‘ஐயா! நாரதரே! திராவிட தேசத்தில் உதித்த நான், நவத்வீபத்தில் புத்துயிர் பெற்றுவிட்டேன். ஆனால் என் மக்களாகிய ஞானம், வைராக்கியம் இரண்டும் கிழடு தட்டிப் போய், தூக்கமும், தொய்வுமாய்க் கிடக்கின்றன. ஏதாவது வழி இருந்தால் சொல்லும்’ என்று அழுததாகத் தற்குறிப்பேற்ற அணி திகழும் கதையாகச் சொல்லியிருக்கிறது. அதாவது ஞானம், வைராக்கியம் கூடவே செழிக்காத பக்தி, நாளாவட்டத்தில் உணர்ச்சிகளாக மாறிவிடும்.விண்நெடு பார்வை மாறி மண்படு பார்வையாகிவிடும்.அதேபோல்தான் தேச பக்தி விஷயத்திலும்.----மண், மரபு, நினைவு, பண்பாடு, உள்செறிவு, எதிர்காலக் கனவு, நிகழ்கால ஊக்கம், பண்டைய சிறப்புகளை நன்கு உணர்ந்த அடிப்படையில் வேர்விட்டு எழுந்த தெளிந்த மதி----ஆகிய இவை பொருந்தித் திகழும் வரை தேச பக்தி என்பது உலகிற்கே ஒளியூட்டும்.வெற்று சொந்த நாட்டு கர்வமாகவும், தன்னாட்டுப் பீத்தலாகவும் உணர்ச்சி அளவில் விழுந்து விட்டால் பிறகு பார்வையில் உலகம் சிதறிப் போகும்.எனவேதான் நாடு சிறக்க வேண்டுமானால் குடிமகற் கல்வி என்பது ஓங்க வேண்டும். குடிமகற் கல்வி என்பதே தேசியம் பற்றிய கல்வி.தேசியத்திற்கான ப்ரார்த்தனையாக, தேச பக்தர் ஒவ்வொருவரின் அன்றாட உள்ள ஊக்கமாகத் திகழ சகோதரி நிவேதிதா இந்த தேச பக்தி த்யானத்தை வரைந்திருக்கிறாள்.
I believe that India is one, indissoluble, indivisible.
National unity is built on the common home, the common interest and common love.
I believe that the strength which spoke in the Vedas and Upanishads, in the making of religions and empires, in the learning of scholars, and the meditation of the saints, is born once more amongst us, and its name today is Nationality.
I believe that the present of India is deep-rooted in her past, and that before her shines a glorious future.O Nationality, come thou to me as joy or sorrow, as honour or as shame! Make me thine own!(The Complete Works of Sister Nivedita, Vol 4, pp 205)
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2011/8/15 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
நாடு சுதந்திரம் அடைந்த தினம்.நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்.அது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்,என்ற தேசிய உணர்வு எழுந்து அதன் முழுப் பலன் கண்ட நாள்.
பல சமஸ்தானங்களாய், பல தனி அரசுகளாய், இருந்த பாரத நிலப் பரப்பு தன்னை பண்பாட்டின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில், சமுதாய விழுப்பங்களின் அடிப்படையில் ஒரே நாடாக உணர்ந்து வந்தது எனிலும், அரசியல் ரீதியாக, ஆட்சியின் ஓட்டம் ரீதியாக, சட்டம், ஒழுங்கு. ஆட்சியில் மக்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் ரீதியாக ஒரே நாடாகத் தன்னை நடைமுறையில் கண்டது ஆங்கில ஆட்சியில். குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் அஞ்சல் தகவல் தொடர்பு, நெடுந்தொலைப் பயண வசதி ஆகிய தொழில், தொடர்பு முன்னேற்றங்கள் இந்தியா ஒரே நாடு என்னும் நடைமுறையை வலுப்படுத்தின.ஆங்கிலத்தால் நாட்டிற்குள் நுழைந்த பல வித உலகக் கல்விகள், மானுடத்துறை சித்தாந்தங்கள் நாட்டில் புதிய அறிவு விழிப்பையே ஏற்படுத்திவிட்டன. மாற்றம், பெரும் மாற்றம், வேர் முதல் மாற்றம் என்பது நாள் விதியாக நிலவியது.மதத்துறையிலும் ஏதோ சொன்னார்கள், பின்பற்றுகிறோம் என்பது மாறி, வழிவழியாக வந்த மதக் கருத்துகளையே அறிவின் திறத்தால் ஆய்ந்து அலசிப் பார்க்கும் புது யுக அறிஞர்கள் பெருகினார்கள்.ஆனால் நாடு என்பதற்கு முக்கியமான தேசியம் பற்றிய கல்வியைப் பெற்றிருக்கிறோமா?பெறவேண்டும். ஆம் இந்தக் கல்வி இல்லாமல் ஒரு தேசம் என்பது தன்னை முற்றிலும் உணர இயலாது. த்ன்னுணர்வு முழுமையடையாத தேசம் சிறக்காது.இந்தத் தேசியக் கல்வி என்பதை நன்கு வலியுறுத்துகிறார் சகோதரி நிவேதிதா.India is evolving a new civilization. New ideals and new methods have already made their appearance. Already she is projecting herself upon new developments in many different directions. The great danger of such an era is the loss of moral stability which it is apt to involve. For the aim and effort of civilization is always to maintain the supremacy of the moral faculty. And in periods of violent transition, the tendency is, by the breaking of old bonds and associations, to make the moral scum and wreckage of society come to the surface, and take the lead. (The Complete Works of Sister Nivedita, Vol 3, pp 465)
> Rice-field is highly symbolic of Nationalism.
> ***
> ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
வித்தியாசமான நோக்கு ரங்கன்!
நம் பண்டைய உயர் விழுமியங்களைத் தேடிப்பொருள் சொல்லும் தேவசபையாக மின்தமிழ் ஆகுக!
நா.கண்ணன்
அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும்?நம் பண்பாட்டில் மந்த்ராக்ஷதை என்பது என்ன?நெல்வயலின் விளைச்சல் பிரபஞ்ச தத்துவத்தைத் தன்னுள் கருக்கொண்டது என்பதை உணர்த்துவதுதானே.Mantrakshatha can be beads of Nationalism, consecrated by a divine awareness.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
*
நெற்குவியல்/ நெல் வயல் சுபிக்ஷத்திற்கும்,சுயாபிமானத்திற்கும் நன்நிமித்தமாக ஜப்பானிலும், ஃபிலிப்பைன்ஸிலும், இந்தோனேசியாவிலும், தான்சானியாவிலும் கூறப்படுவதாகவும், அந்த மரபு பண்டை காலத்தது என்றும்,சடங்குகளில் தென்படுகிறது என்றும், ஏதோ ஒரு anthropology நூலில் படித்த ஞாபகம். Ruth Benedict?இன்னம்பூரான்12 09 2011
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சரி. அப்படியென்றால் குடிமகர்க் கல்வி முடிந்தபின்னர்தான் தேசம் பற்றிய அக்கறை கொள்ளமுடியுமா என்றால் இந்தக் கல்வியை மக்கள் தங்கள் தேசிய வாழ்வு வாழ்வதனுடன் கூடவே சேர்ந்து பெற வேண்டிய ஒன்று. கல்வியை முடித்தபின் தேசத்துள் அட்மிஷன் என்பதல்லாம் முடியாது, இங்குதான் அறிஞர்கள், இலக்கிய கர்த்தர்கள், தத்துவ ஞானிகள் ஆகியோருடைய பங்கு இருக்கிறது.பொதுக் கல்வி என்பதும், பொது ஜனக் கல்வி என்பதும் இந்த தேசியத்தின் அடிப்படையான கல்வியை அணையாமல் காப்பதும், வளர்ப்பதுமேயாகும்.***
2011/9/12 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
2011/9/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
தேசம் என்பதும் தேசியம் என்பதும் நனா தேசம் என்பதும் வையகப் பரிவு என்பதும் எவ்வகையில் வேறுபடுகின்றனதமிழன் நாட்டுப் பற்று மிக்கவன் அதே நேரம் நாடு என்ற குறுகிய எல்லையைக் கடந்து உ்லகப் பற்றும் கொண்டவன்நீங்கள் கூறும் தேசியம் இரண்டாவாது பற்றைக் குறிக்குமா?நாகராசன்
ஐயா! நான் கூறுவது என்பதைவிட சகோதரி நிவேதிதா, பாரதியார் ஆகியோர் கூறும் தேசியம் என்பது குடிமகராம் தன்மையின் நிறைவின் அடிப்படையில் எழுவது.Civic sense, citizenship என்பது தன் வீடு தாண்டி தன் தெரு, தன் ஊர், தன் நகரம் என்றெல்லாம் விரிந்து தன் நாடு என்ற பெரும் பரப்பாக விரிகின்றது.Citizenship education நன்கு வாய்க்கப் பெற்றவன் தன் நாடு என்பதை உலகம் என்ற மீப்பொதுவில் அடங்கியதாய் உணர்வான் என்பது சொல்ல வேண்டியதில்லை.இங்கு நீங்கள் சொல்லும் நாட்டுப்பற்று என்பது இந்த குடிமகர்க் கல்வி என்பது ஏற்படாமல் வெறுமனே தான் பிறந்த இடம், மொழி என்பனவற்றை வைத்துக்கொண்டு எழும் உணர்ச்சி வேகங்கள். எப்பொழுதுமே உணர்ச்சி வேகங்கள் பொதுமைக்கும் தன் நிலைக்கும் உள்ள பிரிக்க முடியாத தொடர்பை உணரமாட்டா.நாட்டுப்பற்றைத் தூண்டிவிட்டு அரசர்கள் போர்புரிய பயன்படுத்திக் கொண்டார்கள். வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பு என்பது அதற்குத்தான் பயன்படும்.ஆனால் நாட்டை கணத்திற்குக் கணம், மணிக்கு மணி தன் ஈடுபாட்டாலும், சேவையாலும் உயர்த்தத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு வேண்டியது வெறும் உணர்ச்சிகள் அன்று. பூரணமான Citizenship Education. அதன் அடிப்படையில் எழுந்த தன் நாடு, பண்பாடு, பாரம்பரியம், வழிவழிவந்த தன் மொழிகள், தன் மொழியில் பண்பாட்டுச் செறிவாய் வரும் இலக்கியங்கள், இதிகாசங்கள், பண்டைய சரிதங்கள் --இவை சார்ந்த புரிதலுடன் கூடிய பெருமித உணர்வு. ‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே; அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி சிறந்ததும் இந்நாடே’ என்ற விம்மிதம், கர்வம்.Citizenship education நிரம்பாத கர்வம் வெறும் ஆவேசமாகவும், விறைப்பாகவும் ஆகும்.***
சிங்கப்பூர் தேசியம் பற்றி இடாக்குடர் பட்டத்துக்கு வழிகாட்டியிருக்கிறேன். பலமுறை சிங்கப்பூர் சென்றிருக்கிறேன். இன்றும் வணிகத்தொடர்புண்டு. எனது வணிகக் கூட்டாளி சீனர்
சீனர் இந்தியர் மலாய் என்று பல மொழிபேசுவோர் அங்கு ஒரே தேசிய நீரோட்டத்தில்
ஆயினும் அது கடுமையான சட்டங்களால் நடந்தது என்று கூறுவோர் உண்டு
தேசியம் கல்வியால் உருவாக்க முடியுமா அல்லது கடுமையான சட்டங்கள் மூலமாக உருவாக்க முடியுமா?
நாகராசன்
உயர் கல்வியில் உச்சநிலையை அடைந்ததுக்கு அடையாளமாகப் பலகலைக் கழகம் அளிக்கும் டாக்டர் பட்டம்தான் மின் தமிழில் இடாக்குடர் பட்டம் என்றழைக்கப்படுகிறது
> உயர் கல்வியில் உச்சநிலையை அடைந்ததுக்கு அடையாளமாகப் பலகலைக் கழகம் அளிக்கும் டாக்டர் பட்டம்தான் மின் தமிழில் இடாக்குடர் பட்டம் என்றழைக்கப்படுகிறது
அரங்கனார் அலுத்துக்கிறாரே! மின்தமிழுக்கு எப்படியெல்லாம் அர்ச்சனை
விழுகிறது என்பது அவருக்குத் தெரியுமோ? :-))
நா.கண்ணன்
2011/9/13 Nagarajan Vadivel radius.co...@gmail.com
..உயர் கல்வியில் உச்சநிலையை அடைந்ததுக்கு அடையாளமாகப் பலகலைக் கழகம் அளிக்கும் டாக்டர் பட்டம்தான் மின் தமிழில் இடாக்குடர் பட்டம் என்றழைக்கப்படுகிறதுசிரிச்சு மாளலை. உங்களை நகைச்சுவை மன்னர் என்று மின்தமிழில் பரிந்துரைக்கிறேன்.
--
ஐயாஎழுதுனா மட்டும் போதுமா. நீங்களும் பாரதியார் மாதிரி இப்புடி இருக்கீங்களேபதிப்புரிமை வாங்கனும்சுபாக்காகிட்ட ஏமாந்த நேரம் பாத்து உரிமையை எழுதி வாங்கிக்கனும்ஊரெல்லாம் கூட்டி இது என்னோடது எவனாவது தொட்டீங்க கையிருக்காதுன்னு மிரட்டனும்நீங்க தூங்கிட்டீங்க பட்டத்து யானை மாலை போட்டு என்னை ராஜாவாக்கிடுச்சு மாட்டேன்னா யானை விடுமுங்களா?


--
அமெரிக்காவில் யானை இப்படி சர்க்கஸ் மாவுத்தனைப் போட்டு தும்சம் செய்த
வீடியோ பார்த்திருக்கிறேன். இதுதான் கோரத்தின் உச்சம். ஒரு பயலை
மதிக்கலையே! இவனுகளும் என்னென்னமோ மந்திரம் போட்டுப்பார்க்கிறார்கள்.
நடக்கவில்லை. போதத குறைக்கு பக்கத்திலிருந்த யானையை குப்புறக்கவுத்து.
அடேங்கப்பா! பராகிரமசாலிதான். யானை பலம் என்று சும்மாவா சொல்கிறார்கள்!
ஆனால் யானைகள் பாவம். காட்டில் அத்தை, பெரியம்மா, சித்தி என்று கூட்டாக
வாழ்பவை. அவற்றின் குடும்பத்தைக் குலைத்து, அநாதைகளாக்கி, இறைவனின்
பெயரால், அவன் கோயிலிலேயே வைத்து செய்யும் வன்முறைகளுக்கு இப்படி
என்றாவது பதில் கிடைக்கிறது. நல்லவேளை இந்த யானைகள் இந்தியாவில் இருந்தன.
அமெரிக்காவாக இருந்தால் இன்னேரம் சுட்டுப் பொசுக்கி இருப்பார்கள். ஒரு
யானையோடு போச்சு, ஒரு மாவுத்தனோட போச்சு!
ஆமா! பேரா என்ன சொல்லவராரு. இவரு இந்த யானை மாதிரின்னு சொல்ல வராரா? :-))
சரி..சரி..இதுவே இவ்விழைக்கு அதிக பக்ஷம். இதை வேறு எங்கும் இழுக்கவும்
முடியாது. :-)
க.>
க.>
ஐயாஅவுரு சுபாவை கொட்டத்து யானை சின்னப்பொன்னுன்னு பட்டம் கிடைக்கிலே்ங்கறதுக்காக பொரனி பேசறார்
க.>
2011/9/14 Hari Krishnan <hari.har...@gmail.com>:
அமெரிக்காவில் யானை இப்படி சர்க்கஸ் மாவுத்தனைப் போட்டு தும்சம் செய்த
வீடியோ பார்த்திருக்கிறேன். இதுதான் கோரத்தின் உச்சம். ஒரு பயலை
மதிக்கலையே! இவனுகளும் என்னென்னமோ மந்திரம் போட்டுப்பார்க்கிறார்கள்.
நடக்கவில்லை. போதத குறைக்கு பக்கத்திலிருந்த யானையை குப்புறக்கவுத்து.
அடேங்கப்பா! பராகிரமசாலிதான். யானை பலம் என்று சும்மாவா சொல்கிறார்கள்!
சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
அப்படிங்கறார் வள்ளுவர். எத்தனைக்கெத்தனை தன் மீது அம்பு வந்து பாய்கின்றதோ அத்தனைக்கத்தனை எதிர்த்துக் கொண்டு போகுமாம் (போருக்காகப் பழக்கப்படுத்தப்பட்ட) யானை.
அப்படி ஒரு யானையைக் கற்பனை பண்ணனும்னா இப்படி ஒரு காட்சியைப் பாத்தாலே போறும். ஜராசந்தன் யானைப்படை, சுப்ரதீகம் எல்லாம் மனக்கண் முன்னால வந்து நிற்கிறது. உடல் தூக்கிப் போடுகிறது.
விடியோவுக்கு நன்றி போராசிரியர்! (டைப்போ இல்லை :D)
மணி நாகப்ப ஆசாரியின் அப்பா நாகப்ப ஆசாரி ஐந்தாம் ஜார்ஜ் அரசவைக் கலைஞர்அரசரின் உரு்ச் சிலையை வடிக்க அரசர் ஆசாரிமுன் மாடலாக இருக்க வேண்டும். அரசர் அப்படி அமரும் மரபில்லை என்று அவர் புகைப்படத்தை மட்டும் அனுப்பி வைத்தனர். அதை அடிப்படையாகக் கொண்டு அவர் வடிவமைத்த சிலையைக் கண்டு வியந்த ஐந்தாம் ஜார்ஜ் மனன்ர் அவ்ருக்கு ராவ்பகதூர் பட்டமளித்தார்
நானும் உடனே நினைத்தேன்.
கண்ணன் கம்சனை வதம் செய்யும் முன் யானையுடன் போரிட்டது. பீமன் ஆயிரம்
யானை பலமுடையவன் என்பது..எல்லாவற்றிற்கும் ஆதாரம் இந்த வீடியோ,.
மதம் பிடித்த யானைக்கு (அதாவது பெண் துணை தேடும் யானை) துணை கிடைக்காத
போது அந்த சைஸுக்கு கொஞ்சம் கிட்ட வரும் காண்டாமிருகத்தைக் கூட
முயலுமாம். ஆப்பிரிக்கக் காடுகளில் பாதி காண்டாமிருகச் சாவுகள் இப்படி
நிகழ்வதாக நேஷனல் ஜியாகிரஃபிக் சொல்கிறது!
நா.கண்ணன்
2011/9/14 Hari Krishnan <hari.har...@gmail.com>:
During Swamigal’s camp here, the hay shed near the place where the elephant
was staying caught fire one night and nobody noticed it. . The elephant, not being able to
withstanding the heat from the fire, broke of the chain and ran into the forest. The next
morning, the elephant was nowhere to be found and the shed was also burnt to ashes.
Mutt officials searched for the elephant for two days and could not find it anywhere.
Later, passers by, informed the mutt officials that an elephant was found lying own near a
pond filled with water, situated more than five miles from the camp. Many people
including the caretaker of the elephant went there and tried to get the elephant back, but
in vain. Finally, Swamigal went to that place. Immediately the elephant came to the shore
and knelt before Swamigal as if it was prostrating before its guru. When Swamigal saw
that the elephant was hurt from fire, he patted it softly and slowly and made arrangements
for the burns to be treated.
Nagarajanக.>
2011/9/14 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சார்! இத உங்க காதோட வச்சுக்கங்க! ஸ்ரீரங்கம் மோகனரங்கன் காதுக்கு எட்ட
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
அன்புடன்,
ஹரிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இடாக்குடர் காப்பிரைட் உங்களுக்கே..! அதுதானே நியாயம்!
ஆனாலும் பேராசிரியர் தான் நகைச்சுவை மன்னர் :-)
காப்பிரைட்டைப் பயன்படுத்த "ராயல்டி" எவ்வளவு?
காப்பிரைட்டைப் பயன்படுத்த "ராயல்டி" எவ்வளவு?
உங்க வீட்டுக் வரும்போது ஒரு கோப்பை டீ.
அச்சோ.. அந்த ஆள் பிழைத்திருப்பாரா என்பது சந்தேகம். முதலில் அவர் மாட்டிக் கொள்ளவில்லை. மாட்டிக் கொண்ட ஒருவரை காப்பாற்ற யானையை திசை திருப்புகின்றார் இல்லையா. கடைசியில் அவரை யானை இப்படி வதம் செய்து விட்டதே..சுபா
நிலத்திற்கும், மக்கள் நீர்மையின்பால் படும் தேசிய உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் காரணம் பற்றியே பாரதி, பாரத ஸமுதாயம் என்ற பாடலில், முதல் சரணத்தில் நில வளத்தைச் சொல்லி, அடுத்த சரணத்தில் உணவு என்பதை highly symbolic ஆக ஆக்கி, மூன்றாவது சரணத்தில் மனிதரின் நீர்மையின் உச்சக் கட்டத்தைத் தொட்டுக் காண்பித்து, இந்த உயரிய கல்வியின் பள்ளிக்கூடம்தான் தேசியம் என்பதை நாலாவது கண்ணியில் காட்டுகிறான்.பாரத ஸமுதாயம் வாழ்கவே என்றவன், ‘முப்பது கோடி ஜனங்களின் ஸங்க முழுமைக்கும் பொது உடைமை’எது?ஒப்பிலாத ஸமுதாயம், உலகத்துக்கொரு புதுமையான பாரத ஸமுதாயம்.முதல் சரணத்தில் -- மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ? -- என்று சீறியவர், ‘இனிய பொழில்கள், நெடிய வயல்கள், கனியும் கிழங்கும் தானியங்களும் மிகுந்த நில வளத்தைக் காட்டுகிறார்.அடுத்து ஸமுதாய வாழ்வின் படிக்கட்டு ஆரம்பம் ஆகிறது. ‘பசித்தவனுக்குச் சோறுதான் கடவுள்’ என்பார் விவேகானந்தர். Agricultural self-sufficiency என்பதுதான் ஒரு பெரும் வல்லரசு நாடாக ஆவதற்கு அடிப்படை என்று நாம் கவனிக்கத் தவறிய பொருளாதாரம் சொல்கிறது. அந்தக் கருத்தை எதிர்முகமாகப் பாடிக்காட்டுகிறார், ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று.அடுத்து பசி தீர்ந்திட, பல்கலைகளும் மலர்ந்திட, பான்மைகள் செழித்திட, தேசியக் கல்வி பூரணம் எய்திட, அதன் உச்சிச் சாதனையாய்த் திகழும் ஆன்மிக உலக உயிர் ஒருமைப்பாட்டைக் காண்பித்து, அதன் ஞானாசிரியப் பதவி இந்தியாவிற்கு என்று முடிக்கிறது பாரதியின் தேசிய ஸிலபஸ்.‘”எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”என்றுரைத்தான் கண்ண பெருமான்எல்லாரும் அமரநிலை எய்துநன் முறையைஇந்தியா உலகிற் களிக்கும்’என்று தேசியத்தின் கொடுமுடியைக் காட்டியவர், தேசியம் அனவரதமும் ஜபிக்கும் மந்திரத்தையும் கடைசியில் முத்தாய்ப்பாக வைக்கிறார்.‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்எல்லாரும் இந்தியா மக்கள்எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்எல்லாரும் இந்நாட்டு மன்னர்’
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
2011/9/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
தேசியத்தின் உயிர்நாடி எது? தேசிய உணர்வின் உறுதி.சென்று மறைந்து போன பழங்காலத்தையெல்லாம் அப்படியே தூக்கிக் கொணர்ந்து வந்து வழிபடுதல் என்பது தேசியம் அன்று.எக்காலமும் தேசத்தின் ஆளுமையாய் நிலவும் அம்சங்களை மீளவும் உணர்வு பூர்வமாக நிலை நிறுத்திக் கொள்ளுதல் என்பதுதான் உண்மையான தேசியம்.பாரதியார் The National Revival என்ற தலைப்பில் Bala Bharata என்னும் இதழில் 1907 ஆம் ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.“We desire to revive not the ancient forms and appearances, but the ancient virtues, the ancient character, the ancient Dharma. We want to revive the qualities of fearlessness, self-denial for public good, self-sacrifice, love of country etc.,.....We want to revive originality of thought and of conception, spontaneous action not stimulated from outside, daring to execute great responsibilities, in short, we want to revive the National Will."இந்த National Will என்பதை மீண்டும் எழச்செய்வதுதான் இன்றைய தேசியத்தின் விடியல். இந்த தேசிய உணர்வைக் கட்டிக் காப்பதுதான் பண்டைய காவியங்களைக் கற்றலினால் ஆகும் பயன்களில் ஒன்று.அது மட்டுமின்றி ஒரு தேசம் புறவயமாக மிகவும் அடிப்படையாகப் பார்த்தால் அதன் வயல்களில் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. வயிற்றுக்குச் சோறு என்பது மட்டுமன்று அதன் முக்கியத்துவம். குடிமகர்கள் முதன் முதலில் ஜனநாயகத்தைக் கற்கும் இடமாகவும் திகழ்வது வயல்கள்தாம்.நம் நிலம் நம்மைக் காக்கிறது. நம் நிலத்தை நாம் நன்கு பேணுகிறோம். நிலத்தின் மக்களாகிய அனைவரும் சேர்ந்து இந்த நிலத்தில் இறங்கி உழைக்கிறோம். இது நம்முடைய நிலம் -- என்ற இயற்கையான ஸ்வதேசப் பற்றை மிகவும் பௌதிகமாகப் போதிக்கும் ஆரம்பப் பள்ளிக் கூடமே வயல்தான்.ஒரு நாட்டின் ஆட்சி எவ்வளவுக்கெவ்வளவு வயலை முக்கியமாகக் கருதுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அந்த நாடு சிறக்கும்.Responsibility என்னும் கட்டுரையில் சகோதரி நிவேதிதா கூறுவது:“In India and the East generally, it is supposed, in similar fashion, that the great concrete experience on which the national character is built, and by which its potency for cooperation is largely determined, is the rice-field."தேசம் என்பதற்கு வயல் மிகவும் அடிப்படை என்பதை உணர்ந்தே வெள்ளைக்குடி நாகனார் புறநானூற்றில் பாடுகிறார்.“............அறம்புரிந்தன்ன செங்கோல் நாட்டத்துமுறைவேண்டு பொழுதில் பதனெளியோர் ஈண்டுஉறைவேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே.ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூமாக விசும்பின் நடுவு நின்றாங்குக்கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடைவெயின்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்தியகுடிமறைப் பதுவே கூர்வேல் வளவ....................................................................பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடைஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே”உன்னுடைய செங்கோலின் நாட்டம் வெறுமனே சட்டம் என்பதைச் செயலாக்குவது மட்டுமன்று. அறம் புரிதல்தான் அந்தச் செங்கோலின் உண்மையான பயன்.தங்கள் நிலை இழந்த எளியவர்கள் தமக்கு நியாயம் வழங்க வேண்டிய காலத்து அவர்கள்பால் மழையைப் போன்று கருணை செய்து அவர்களுக்கு உரிய முறை வழங்க வேண்டும்.மலையின் உச்சியிலிருந்து பரவி நிற்கும் மேகமானது சூரியனை மறைத்து நிற்கும். அது போல் அரசனது வெண்கொற்றக் குடை வெறுமனே வெய்யிலை மறைப்பதற்கான குடையாகப் பயன் படவோ இருக்கிறது. இல்லை. குடிகளின் வருத்தத்திலிருந்து குடிகளைக் காக்கவன்றோ அந்த வெண்கொற்றக் குடை விரிந்துள்ளது.அரசனது கையில் பிடித்த கோடாத செங்கோலுக்கும், குடிகளுக்கு வருத்தம் தவிர்க்கும் விதத்தில் விரித்த குடைக்கும் நோக்கம் ஒன்றேயாம்.அத்தகைய அரசாட்சியும், பகைவரைப் பொருது வெற்றியைத் தேடித்தரும் படையும் உண்மையில் உழுபடையின் ஊன்று சால் மருங்கில் விளையும் விளைச்சலின் பயன் தான் என்பது சொல்ல வேண்டியதில்லை.---உழவு என்பதும், நெல் என்பதும் அவ்வளவு முக்கியம் என்ற காரணத்தால்தான் ஒரு கட்டுரையில் பாரதியார் வயலில் நெல்லுக்குப் பதில் ஔரியையும், மணிலாக் கொட்டையையும் காசுக்காகப் பயிர் செய்வதைக் கண்டித்து எழுதுகிறார்.Rice-field is highly symbolic of Nationalism.
***ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்*
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
இன்னம்பூரான்21 09 2011
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil