THF Announcement:மண்ணின் குரல் 07/08 [VoTHF July 08 Release]

0 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Jul 17, 2008, 4:18:21 PM7/17/08
to மின்தமிழ், ksuba...@gmail.com
வணக்கம்.
 
இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மலர்கின்றது மண்ணின் குரல். இந்த வெளியீடுகளை நமது வலைப்பக்கமான http://www.tamilheritage.org/ ன் கீழ்ப்பகுதியில்   Voice of THF   என்னும் பகுதியிலிருந்து கேட்டு மகிழலாம். அல்லது நேரடியாக இப்பக்கதிற்குச் செல்ல:
 
 
 
இம்மாத வெளியீட்டில் சேர்ந்திருக்கும் அங்கங்கள்;
 
1.ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு - திரு.குமரன் வழங்கும் ஆய்வுரை - பாகம் 7
கடந்த பதிவில், ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் ஆரம்ப கால தகவல்கள் வழங்கப்பட்டன. இம்மாத வெளியீட்டில் திரு குமரன் அவரகள் 1970-ஆம் ஆண்டுகளின் ஆரம்ப கட்டத்தில் ஜெர்மனியில் நிகழ்ந்த புலம் பெயர்வுகள் பற்றிய தகவல்களை வழங்குகின்றார். வரலாற்றுப் பூர்வமான இப்பதிவிவின் ஏனைய பதிவுகளும் கடந்த மாதங்களில் வெளிவந்துள்ளன.
 
2.பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - திருமதி தங்கம்மாள் எழுதிய நூலின் 6ம் பகுதி
 
3.தமிழ்த்தேனீ கவிதைகள் - சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களைக் கவிதைகளாக வடித்திருக்கின்றார். 4 கவிதைகள் இம்மாதம் வெளியீடு காண்கின்றன.
 
4.கர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ் தனது இசைப் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். 
 
இனிய பதிவுகள் அடங்கிய இம்மாத வெளியீடுகளைக் கேட்டு மகிழுங்கள். இந்த வெளியீட்டைப் பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
*உங்கள் ஆக்கங்களையும் இங்கு நீங்கள் பதிப்பிக்கலாம். ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
அன்புடன்
சுபா
(தமிழ் மரபு அறக்கட்டளை)
Reply all
Reply to author
Forward
0 new messages