தமிழ் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் முதன்மையானது, சேதுக்கால்வாய்த் திட்டம். அத்த்திட்டம் செயல்பட முடியாத அளவுக்குக் குறுக்கிடுகிறது, இராமர் பாலம்.
இராமனுக்குப் பகை இராவணனிடந்தானே! நாட்டு நலன் இல்லையே! நாட்டு நலனுக்கு இடைஞ்சலாக எது இருந்தாலும் அதனை அகற்ற வேண்டும்! அல்லது அகல வேண்டும்! இதுதானே முறை. இதை நடைமுறைப்படுத்துவதற்கு என்ன தடை?
சரி,
இதற்குமேலும் இதனுள்ளே போக எனக்கு நேரமில்லை! ஒரே ஒரு செய்தியை மட்டு இங்கு ஆராயலாம்! எனக்கருதுகிறேன்.
இராமர் பாலம் என்பது என்ன? அவ்வளவுதான். அதற்குமேல் மூச்சே விடுவதாக இல்லை. யாரும் என்னைச் சபிக்கவோ அவிக்கவோ வதைக்கவோ புதைக்கவோ நசுக்கவோ பொசுக்கவோ நகைக்கவோ பகைக்கவோ வெறுக்கவோ முறுக்கவோ எதற்குமே தயாராக வேண்டாம்! என்று, கேட்டுக் கொள்கிறேன். (ஒரு தற்காப்புக்காகச் சொல்லிவைத்தேன்! அதையெல்லாம் நீங்கள் கேட்கவா போகிறீர்கள். அவரவர்க்கு மேவன செய்துகொள்ளலாம்)
இராமனின் காலம்
வடநூலாரின் யுகக் கணக்கின் படி, கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களின் மொத்த காலம் 4320000 ஆண்டுகள். இராவணன் ஆட்சிபுரிந்த காலம் 50 இலட்சம் ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், 84931 ஆண்டுகள் வாழ்ந்தவன் இராவணன் என்று கம்பர் கூறுகிறார். (முக்கேடி வாழ்நாள் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை)
இராமாயணம் நடந்த்தோ திரேதாயுகத்தில். அது, 1296000 ஆண்டுகள் கொண்டது. திரேதாயுகத்தில், இராவணன் 50 இலட்சம் ஆண்டுகள் எப்படி வாழ்ந்திருக்க முடியும்? அதேபோல், இராமன் வாழ்ந்த காலம் இன்றைக்கு 17 இலட்சம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட்து! என்கிறார்கள். மனித இனமே ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நிமிர்ந்த குரங்கு வடிவத்தில் இருந்ததாக்க் கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
கி.மு 2387 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கடல்கோளால், தமிழகப் பகுதியோடு ஒட்டிக் கிடந்த இலங்கை தனித் தீவானது! என்று டென்னெட் என்னும் வரலாற்றாசிரியர் இலங்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
இராமர் காலத்தில் இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் கடல் இருந்த்தில்லை. அப்படியானால், பாலம் எப்படிக் கட்டியிருக்க முடியும்?
சரி! இது, இத்துடன் இப்படியே இங்கேயே இருக்கட்டும்.
இராமர் பாலம் 100 யோசனை நீளமும் 10 யோசனை அகலமும் கொண்டது என அகராதிகள் குறிப்பிடுகின்றன.
ஒரு யோசனை 8 முதல் 10 மைல் என்கிறது, மோனியர் வில்லியம்ஸின் சமஸ்கிருத அகராதி.
ஒரு யோசனை 20 மைல் என்கிறது யாழ்ப்பாணத்து கதிரைவேற்பிள்ளை அகராதி.
ஒரு யோசனை 5 மைல் என்கிறது பெயர் குறிப்பிடப்படாத ஒரு அகராதி.
ஒரு யோசனை எவ்வளவு தூரமாக இருந்தாலும் குறைந்த தூரமான 5 மைல் என்றே வைத்துக் கொள்வோமே! (சிமெண்டும் கல்லும் கம்பியும் மிச்சமாகும் என்பதற்காகக் கூறவில்லை) அப்படுயே வைத்துக் கொண்டோமானால், தமிழகத்திற்கும் இலங்கை 500 மைல்கள் தூரத்தில் இருக்க வேண்டும். இராமர் பாலம் 500 மைல் நீளமும் 50 மைல் அகலமும் இருக்க வேண்டும். 50 மைல் அகலத்தில் எவராவது பாலம் கட்டுவாரா! இராமனாயிற்றே கட்டியிருக்கின்றாரே!
சமஸ்கிருதம் தான் கணக்கில் புலியாயிற்றே! அந்த அகராதிப்படிப் பார்த்தால், இலங்கை 800 மைல் தூரத்திற்கும் அப்பால் இருக்க வேண்டும். இராமர் பாலம் 800 மைல் நீளமும் 80 மைல் அகலமும் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.
இவ்வளவு அகலத்திலும் நீளத்திலும் ஒரு பாலம் கட்ட நேர்ந்திருந்தால், தமிழகத்திலுள்ள எல்லா மலைகளையும் உடைத்திருந்தாலும் கட்டி முடிந்திருக்காது.
இதற்குமேலும் என்னால் ஒன்றும் சொல்ல முடியாது! கொஞ்சம் தலையைச் சுற்றுகிறது. அது நின்றதும் மேலும் தொடர்கிறேன்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
இதுதானே வேண்டாங்கறது. இதுலே என்னதான் ருசியோ?
கடவுளே!
மனிதமும்,உலகமும் காப்போம்
மீண்டும், மீண்டும் பிரச்சனைக்குரிய விஷயங்களையே....அலுப்பாக உள்ளது!
எவ்வளவோ விளக்கியாகிவிட்டது..
I have explained in the NDTV interview about this uneconomical project fully. My points on this can be seen in the net also. As one who has sailed for more than 15 yrs and having worked as dredging cosultant in the World Bank all that I can say is the project does not take into account many important points!
Anyway the project is going on!
narasiah
Fills the coffers is more appropriate!
இந்த அளவு உணர்வோடு ஒட்டிய ஒரு சின்னத்தைச் சிதைக்க வேண்டாமே என்றால்
காவி முத்திரையும், கொச்சைப் பேச்சுமா ?
தேவ்
ராஜேந்திரன் அவர்களே,
On Jul 17, 10:35 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> அவாளுக்கு இது எல்லாம் தெரியாதுங்கறேளா?.
>
> வாக்கு வங்கிக்கு உண்ண பலி.
>
> --
>
> > வேந்தன் அரசு
> > சின்சின்னாட்டி
> > (வள்ளுவம் என் சமயம்)
'வெல்போர் இராமன்' என்று பாடிய கடுவன் மள்ளனார், 'கடுந்தெறல் இராமன்'
என்று பாடிய பசுங்குடையார், 'அருந்திறல் பிரிந்த அயோத்தி போல' என்று
பாடிய இளங்கோவடிகள்,