அறிவியல் அறிஞர்க்கு - ஒரு கேள்வி!

18 views
Skip to first unread message

இரவா

unread,
Jul 14, 2008, 1:27:19 AM7/14/08
to minT...@googlegroups.com, thami...@googlegroups.com
என்ன அநாகரிகம் பாருங்கள்! பகுத்தறிவுக்கு ஒத்ததா? என்றெல்லாம்
பத்தி பத்தியாக எழுதி புலவர் முனைவர் என்றெல்லாம் பேர் போட்டுக்
கொள்ள மாட்டார்களா? --

அறிவியல் அறிஞர்களே!

MAY FLOWER என்றழைக்கப்படும் தீப்பிழம்பு போன்ற மலர் மரத்திற்கும்
மகிழ்ச்சியைக் கிளம்பி விடக்கூடியது.

உத்திரத்திற்கு உதவாதவை என்று (சில மனிதர்களைப் போன்று) ஒதுக்கப்படும்
ஒதிய மரமும் கூந்தலைப் படர விட்டு பச்சை மலர்களை அவிழ்த்துவிட்டு
இலைகளில்லாமல் அழகுடன் காட்சி தருகிறது.

ஆனால், கொன்றை என்றழைக்கப்படும் ---மஞ்சள் பூக்களைக் கோடையில் அள்ளித்
தரும் --- அதை ஆங்கிலத்தில் GOLDEN SHOWER,INDIAN LABURNUM என்ற
பெயர்களால் அழைப்பார்கள். தாவரவியலார் CASSIA FISTULA என்று
குறிப்பிடுவார்கள்.

தேவாரப் பாடலில் சிவன் அணிந்ததாகக் கூறப்படும் இந்தக் கொன்றை மலர் சங்க
காலப் புலவர்களால் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளது.

குறுந்தொகையில் (21ஆது) ஒதலாந்தையார் எழுதிய அழகுணர்வு நிறைந்த
இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

பாடல்:

வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூக் கொன்றைக்
கானங் காரெனக் கூறினும்
யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.

-ஒதலாந்தையார்

பொருள்:

அப்படிப்பட்ட கொன்றை பூத்து இது கார் காலம் (மழைக்காலம்) வந்தது என்று
அறிவித்தாலும் நான் அதை நம்ப மாட்டேன்.

ஏனென்றால் கார் காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற என் கொழுநர்
இன்னும் வீடு திரும்பவில்லை; அவர் பொய் சொல்ல மாட்டார். இந்த மரங்கள்தான்
கார் வரும் முன்பே பூத்து விட்டன என்பதாகும்.

இந்த நூலை ஏட்டுச் சுவடிகளிலிருந்து சேகரித்த உ.வே.சாமிநாதையர் அவர்கள்
மேலும் பல சங்க நூல்களில் இவ்வாறு கொன்றை மரம் கார் காலத்தில் பூக்கும்
என்றும், கார் காலமாவது ஆவணி, புரட்டாசி மாதங்களாகும் (ஆகஸ்ட்,
செப்டம்பர்) என்றும் கூறுகிறார்.

இப்போதோ கொன்றை மரம் ஏப்ரல், மே மாதங்களில்தான் பூக்கிறது.

தமிழ் நாட்டில் இம்மாதங்களில் எந்த இடத்திலும் மழைப் பருவமில்லை.

அக்டோபர், நவம்பருக்கு ஆறு மாதம் முன்பே கொன்றை பூப்பதால் இதை அறிவியல்
ஞானிகள்தான் ஆராய்ந்து கூற வேண்டும்.

பருவ காலங்களிலேயே மாறுதல் வந்துவிட்டதா, அல்லது தாவரங்களின் BIORHYTHM,
BIO CLOCK எனப்படும் உயிரின் முறையே மாறி விட்டதா என்பதைத் தெரிவிக்க
வேண்டும்.

மேலும் இதைப் பற்றிக் கூற புலவனுக்கும் முனைவனுக்கும் அறிவு ஏது?


இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Jul 14, 2008, 9:53:38 AM7/14/08
to minT...@googlegroups.com

"கலிகாலம்"  

 

பருவம் மாறிப் போச்சு  மச்சான்,

பருவம்  மாறிப் போச்சு!

பட்டணத்துக் கோழி, பகலில் கூவுது........

எட்டடுடுக்கு மாடியா, ஏரி குளமெல்லாம் ,

உருவம் மாறிப்போச்சு ,....                                       

                                                                                                  _ பருவம்

 பத்து வயசுப் பொண்ணு, கள்ளப் பார்வையா ,

எட்டி எட்டி பாக்குது, -    எதிர் வீட்டுக் காளைய

எட்டி எட்டி பாக்குது,.......

படிக்கிற வயசுலெ , காதல் காதல்னு-

புத்தி கெட்டு  போயி அலையுது                   

                                                                                                      _ பருவம்

 

 படிக்கிற படிப்ப ,   கூவி விக்கிறான்...

குடிக்கிற தண்ணீயை,   காசுக்கு விக்கிறான்....

அடிக்கு மட்டும்தான், மனுஷன் பதுங்குறான்,

மனசாட்சிய  எப்பவோ,  மண்ணுலெ புதைச்சுட்டான்
                                                                                                                 _ பருவம்

 

ஆம்பளை யெல்லாம்,  வீரம்  தொலைச்சாச்சு...

பொம்பளை யெல்லாம், மானம் தொலைச்சாச்சு....

மனுஷத்தன்மையே , மறைஞ்சு போச்சுது,

மிருக வெறி தான் அதிகமாச்சுது....                  _ பருவம்

 

அப்பனும் பிள்ளையும்,  அதுக்கு அலையுறான்,

தப்பா வந்து பொறந்து  தொலைச்சுட்டான்,

உப்பக் கூட, இப்போ  கவரில்  விக்கிறான்,

தப்ப  மட்டும்தான்,  பணம் பண்ணுறான்...             _ பருவம்

 

சாதி ஜனங்க,   ஓட்டு போடுது-கவர்மென்ட்டு

புள்ளி வைக்குது ,   -மையிலெ

புள்ளி வைக்குது,.....-

ஆதி மூலமும்,  வேடிக்கை பாக்குது,

அதுவும் கூடதான்,  லஞ்சம் கேட்குது.....            _ பருவம்

                                                    

 

பனிக் காலத்திலெ  ,  காத்தடிக்குது.....

வரண்ட காத்தடிக்குது...

மழை காலத்துலெ .  பூமி காயுது-.

தண்ணயிலாமெ    பூமி காயுது.....            _ பருவம்

 

பசுமாடல்லாம் , போஸ்டர் தின்னுது..-

பசும்பாலைக்கூட, இப்பொ- மிஷினு கறக்குது,

வேலிகளெல்லாம்   பயிர  மேயுது,

புனித தாலிகளெல்லாம் கொடியில் தொங்குது,  
                                                                                                   -  பருவம்

 

ஆப்த நண்பனும் அடுத்துக்  கெடுக்குறான்

ப்ராப்தம் இதுதான்னு  கதைய அளக்குறான்

பரிகாரம்  செய்யவே நம்மைத் தூண்டுறான்

பணம் பண்ணவே  வழியத் தேடுறான்         -      பருவம் 

 

பருவம்  மாறவேணும்  மச்சான்  பருவம் மாறவேணும்

நல்ல   பருவத்திலெயே  மழையும் பெய்யவேணும்

பச்சை வயலும்  விளையவேணும்

பஞ்சம் தீர வேணும்  பசுமைப்  புரட்ச்சி

மலரவேணும்

பட்டிக்காட்டுக் கோழிகூட  கருக்கலில் கூவோணும்

வேலியே பயிர மேய்ஞ்சுட்டு போற

வக்கரிப்பும்  தீரவேணும்

அதுக்கு  மனசுலெ   ஈவு இரக்கம்   வேணும்

நியாயம் தர்மம் வேணும்,

நாடு நிச்சயம்   நல்லா வளரும்

பழைபடி இப்போ சந்தோஷம் மலரும்

பட்டிக்காட்டுக் கோழியும்  கருக்கலில் கூவும்   -

பருவம் மாறிப்போகும்  மச்சான் பருவம் மாறிப்போகும்  

 



அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/7/14 இரவா <vasude...@gmail.com>:

மனிதமும்,உலகமும் காப்போம்

Message has been deleted

Srivatsan R

unread,
Jul 14, 2008, 3:33:34 PM7/14/08
to minT...@googlegroups.com
 
**பருவம்

 பத்து வயசுப் பொண்ணு, கள்ளப் பார்வையா ,

எட்டி எட்டி பாக்குது, -    எதிர் வீட்டுக் காளைய

எட்டி எட்டி பாக்குது,.......

படிக்கிற வயசுலெ , காதல் காதல்னு-

புத்தி கெட்டு  போயி அலையுது** 
                  
என்ன   திரு  தமிழ்த்தேனி,   சங்க  இலக்கியத்தைக்  கிண்டல்  செய்கிறீர்களா?  விட்டால்   பரத்தை  வீட்டுக்குப்  போவது,  எதிரியின்  குழந்தைகளைக்  கொண்டு  வந்து   பூமிக்கடியில்  புதைத்து,  தலை மட்டும்  வெளியே  தெரியும் படி  வைத்து  யானையை விட்டு  இடரச்  சொல்வது  போன்ற   வாழ்க்கைக்கு  வேண்டிய   பெரும்  இலட்சியங்களையெல்லாம்   கூட  கிண்டல்  செய்வீர்கள்  போல்  இருக்கிறதே?
 
2008/7/14 Tthamizth Tthenee rkc...@gmail.com:



 

வேந்தன் அரசு

unread,
Jul 14, 2008, 4:13:46 PM7/14/08
to minT...@googlegroups.com
பாட்டு நல்லா இருக்கு தேனி.

2008/7/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

"கலிகாலம்"  

 

 

 
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

வேந்தன் அரசு

unread,
Jul 14, 2008, 4:32:52 PM7/14/08
to minT...@googlegroups.com


2008/7/14 Srivatsan R <vaid...@gmail.com>:
பரத்தை வீட்டுக்கு போகும் வழக்கம் உலகம் பிறந்த நாள் தொட்டு இருக்கு. அதை ஒழிக்க எந்த தேவராலும் இயலாது. தமிழ் இலக்கணங்கள் அதை ஒரு திணையாகவே கருது பாடியுள்ளன.
 
சங்க இலக்கியங்களின் பெருமையே உள்ளதை உள்ளபடி சொல்வதுதான்.
 
யானைகாலில் இடறசெய்யும் வழகக்த்தை யாரும் புகழவில்லை. மாறாக அறிஞர்கள் எதிர்த்துதான் இருக்கிறார்கள்.
 
புலவனின் அறிவுரையை மன்னன் கேட்டு சிறுவர்களை விடுவித்தான் என்பதுதான் சேதி
 
 
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கேட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!

இரவா

unread,
Jul 14, 2008, 7:28:11 PM7/14/08
to minT...@googlegroups.com

 
இதைப்  பற்றி  வெற்றுப்  போலிகளுக்கு ஏன்  கவலை?  உண்மையான  புலவர்களும்,  முனைவர்களும்  இருக்கிறார்கள்.  அவர்கள்  பார்த்துக்  கொள்வார்கள்.
 
ஹா! ஹா!  பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
 
முழுக்க நனைந்த பின்னும் முக்காடு எதற்கு?
 
என்னைப் போலியானவன் என்று சொல்கிறீர்? அவ்வளவுதானே? சரி. அப்படியே இருக்கட்டும்.
 
நீங்கள் யார்?
 
என்னைப் போலி என்று சொல்வதற்கு உங்கள் தகுதி என்ன?
 
நீங்கள் த.ம.அ. வின் அங்கமா! ஆதாரமா? அல்லது விருந்தாளி?
 
நீங்கள் யார்?
 
தமிழுக்காக  நீங்கள்  செய்த பணி என்ன?
 
--

Tthamizth Tthenee

unread,
Jul 15, 2008, 1:11:44 AM7/15/08
to minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Jul 15, 2008, 1:23:27 AM7/15/08
to minT...@googlegroups.com
"காலங்களிலேயே மாறுதல் வந்துவிட்டதா, அல்லது தாவரங்களின் BIORHYTHM,
BIO CLOCK எனப்படும் உயிரின் முறையே மாறி விட்டதா என்பதைத் தெரிவிக்க
வேண்டும்."
 
என்று இரவா கேட்டவுடன்
ஏன் அப்படி ஒரு நிலமை இப்போது வந்ததது என்று யோசித்தேன்
அதனால் எழுந்த பாடல்தான் அது
அது எவ்வாறு சங்க இலக்கியத்தைக் கிண்டல் செய்வதாகும்
சங்க காலத்தில் பாலிய விவாகம் காந்தர்வ விவாகம் என்றெல்லாம் உண்டு
இப்போது அவைகளை அனுமதிக்க முடியுமா..?
தற்போதைய சூழ்நிலையில் இளவயதிலேயே கெட்டுப் போகிறார்களே
படிக்கிற வயதிலேயே அறிவை வ்ளர்த்துக் கொள்ளாமல் காதல் காதல் என்று அலைகிரார்களே என்று உண்மையாகவே வருந்தும்
நிலையில்தான் எழுதினேன்
 
சங்க கால வாழ்க்கை முறைகள் தறகாலவாழக்கை முறைகளுக்கு
ஒத்துவருமா.....?
 
அதுவுமிலாது சங்க கால இலக்கியத்தை கிண்டல் செய்யுமளவுக்கு
நான் அறிஞனோ புலவனோ இல்லையே
சாதாரணமாக மனதில் பட்டவற்றை மறைக்காமல் சொல்லவேண்டும் என்னும் கொள்கையுடைய  புதுக் கவி ....அல்ல அல்ல
 
பொதுக்கவி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ



 
On 7/15/08, Srivatsan R <vaid...@gmail.com> wrote:
Message has been deleted

Narayanan Kannan

unread,
Jul 15, 2008, 8:00:07 AM7/15/08
to minT...@googlegroups.com
ஸ்ரீவத்சன்:

இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நீங்கள் ரொம்ப இளையவர் என்று
தெரிகிறது. முனைவர் இரவா
பழகுவதற்கு மிகவும் இனியவர். நம் குழுமத்தின் மூத்த உருப்பினர். நாம்
எல்லோரும் நட்புடன் உறவாட வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் ஒவ்வொருவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கருத்தை, கருத்தால்
எதிர்த்துப் பழகுவோம். எல்லோருள்ளும் குடிகொண்டிருக்கும் இறைமையை நாம்
மதிக்க வேண்டும். ப்ளீஸ்...

கண்ணன்


2008/7/15 Srivatsan R <vaid...@gmail.com>:
> (அய் மச்சி! கொஞ்சமாவது மூளை இருக்கும்னு பாத்தா சுத்த
> பைத்தியக்காரத்தனமா இருக்குது இவுரு எழுதறது.)

Tthamizth Tthenee

unread,
Jul 15, 2008, 9:57:42 AM7/15/08
to minT...@googlegroups.com
திரு ஸ்ரீவத்சன் அவர்களே
 
திரு இரவா எழுதிய படைப்புக்களை படித்துப் பாருங்கள்
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

 
திரு இரவா அவர்கள் ஒரு நல்ல ஆய்வாளர்
மனதில்பட்டதை வெளிப்படையாக பேசுபவர்
அந்த குணம்தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த
குணம், மனதிலொன்று வைத்துக் கொண்டு
வாயால் வேறு பேசமாட்டார்
நல்ல படைப்பாளி அவர்,
மின் தமிழில் மட்டுமல்ல தமிழுக்கே
அவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்
 
எனக்கு என் மனதில் அவரைப் பற்றிய
என்ன எண்ணம் இருக்கிறதோ அதைத்தான்
எழுதி இருக்கிறேன்
மொத்தத்தில் நல்ல மனிதர்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
Message has been deleted

Tthamizth Tthenee

unread,
Jul 15, 2008, 3:11:39 PM7/15/08
to minT...@googlegroups.com
ஆஹா நல்ல நேரத்தில் மிக யதார்த்தமான
நட்புரிமையின் இதமான தடவல்
இதமாக நளினமாக,அருமையாக
தெளிவாக  தமிழ்மரபுக் கட்டளையின்
உயரிய நோக்கை சொல்ல நீங்கள் கையாண்டிருக்கும்
வழி மிகவும் அருமை...ரங்கன்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
On 7/16/08, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
அறிவுரையாக  அன்று.  அன்புரையாகக்  கொள்ளுங்கள்  ஸ்ரீவத்ஸன்.  எதற்கும்  பதிலுக்கு  பதில்  உரைப்பது என்பது   நியாயத்திற்கு  ஒத்துவரும்.   ஆனால்  பலசமயம்   நயத்திற்கு   ஒத்துவருவதில்லை.  உங்களுடைய  கோபத்தில்,  ஆவேசத்தில்,  அல்லது  உங்களுடைய   மொழியில்  சொன்னால்   plain and naive  replyயில்  தவறு  என்று   நான்  சொல்லப்போவதில்லை.  ஆனால் ஏதோ  ஒன்று  அதில்  இருந்தால்  இன்னும்  அழகாக  இருக்கும்.  அதற்கு  வருவதற்கு  முன்     ஒருசில  தெளிவுகளைப்  பேசிவிட்டு  வருவோம்.
 
முதலில்  இதைப்  போன்ற   வாக்குவாதங்களுக்கு  ஜாதி என்பது   ஒரு  அடிப்படையாக  அமைக்கப்  படுகிறது.   ஒருவேளை   ஜாதி என்ற  பிரச்சனை   இல்லாது  இருந்திருந்தால்   அப்பொழுது   மதம்,  இனம்,   குடி என்று ஏதாவது   ஒரு   விஷயத்தைப்  பிரச்சனையாக்கி     பேத  உணர்ச்சிகளையும்,  வெறுப்புக்  கலாச்சாரத்தையும்  வளர்த்துக்  கொண்டிருப்பார்கள்.    இது  இப்படித்தான்  இருக்க  வேண்டுமா?  என்றால்   ஆக்கபூர்வமான, எதிர்காலக்  கனவுகளோடு   கூடிய  கருத்தூக்கங்கள்   இல்லாத  தலைமுறைகளில்    வெறுப்புதான்   வெற்றிடத்தை   நிரப்புவதாய்    வாய்க்கிறது.  மனிதனும்  மற்ற   உணர்ச்சிகளுக்குத்  தரும்  முக்கியத்துவத்தைவிட   வெறுப்புக்குத்  தீனி  போடத்தான்  மிகுந்த  அக்கறை எடுத்துக்  கொள்கிறான்.  இந்த  வெறுப்பைக்  கடைந்து   வெப்பக்  கங்குகளை  கிளப்ப   'நாம்'    'மற்றவர்கள்' என்ற   இரண்டுதான்  மத்துகளாய்  இருந்து  கடைகின்றன.  இந்த  'நாம்'   'மற்றவர்கள்'  என்ற  பிளவுப்  பசிக்கு   ஒவ்வொரு  காலத்தில்   ஒவ்வொரு  வடிவம்  ஏற்பட்டுக்  கொண்டே  இருக்கும்.   இதைச்  செய்பவர்கள் எல்லாம்   யாரென்று  பார்த்தால்    ஆக்கபூர்வமான  உத்வேகம்,    படைப்பூக்கம்  மிக்க  மன எழுச்சி  ஏதும்  அற்றவர்கள்  இவர்கள்தான்   இருப்பார்கள்.
 
இந்த  வெட்டியான  சமுதாய  அணுகுமுறைச்  சுழல்களில்   மாட்டிக்கொள்ளாமல்  இருப்பதில்  மிகுந்த   அக்கறை  உடையவர்கள்தான்   மின்தமிழில்  உள்ள  அனைவருமே.  யாரோ  முடுக்கி  விட்டதற்கு   வாயோசை எழுப்பும்   சடப்  பொறிகளாய்  ஆகக்  கூடாது  என்ற  அக்கறை   திரு  கண்ணன்,   திரு  கண்ணன்  நடராசன்,  திரு  தமிழ்த்தேனி,   திரு  திவாகர்,   திரு  வேந்தன்  அரசு     முதலிய  அனைத்து  நண்பர்களுக்கும்   உண்டு.    அதனால்தான்    ஜாதிப்  பிரச்சனையை எடுத்து என்றோ   புரோகிதர்களின்   ஆதிக்கம் என்பதைப்  பற்றிப்   பேச்சு  வரும்பொழுது   திரு  கண்ணனோ,   திரு  தமிழ்த்தேனியோ   அந்தப்  பிரச்சனையைப்  பார்க்கத்  தயங்குவதில்லை.  ஆனால்  அவர்கள்  கூறுவது, ஏன்  மின்தமிழ்   நண்பர்கள்  மிகப்பலர்  கருதுவது -   'இனிவரும்  உலகிற்கு   இளைய  தலைமுறையை  நடத்திச்  செல்ல,  இன்றைய  உலகின்   எதிர்ப்பே  இல்லாமல்    கொழிக்கும்   தீமைகளை  விவாதம்  செய்யுங்கள்.  அதைவிட்டுவிட்டு  என்றோ    இருந்த,    மீண்டும்   மீண்டும்   1500  ஆண்டுகளாக   பல  பெரியோர்களாலும்,  சமுதாய  சீர்திருத்த வாதிகளாலும்   பேசி,  சாடி,  கண்டிக்கப்பட்டு   வரலாற்றின்   தகவல்  மட்டுமேயாய்  மாறிக்கொண்டிருக்கும்   ஒன்றை  வேறு  விஷயமே  இல்லாததுபோல்   வளர்த்துக்  கொண்டிருப்பது  அருவருக்கத்  தகுந்தது'   என்பது. 
 
இன்றைய  இளைய  தலைமுறைகளை  எதிர்நோக்கி  இருக்கும்  பிரச்சனை    நிச்சயமாக   ஜாதி  இல்லை.    அதை  இளைய  தலைமுறை  உணர்ந்தாலும்,   அதை  வைத்துக்  கொண்டே   பெரும்  செல்வாக்கும்,  செல்வமும்  ஈட்டிவிட்ட   முதிய  தலைமுறைகள்    பழகிப்  போன   வாய்ப்பாட்டை   விட்டு  விலக  விரும்புவதில்லை.   உதாரணத்திற்கு    மதநம்பிக்கை என்ற  பெயரால்    மனித   குலத்திற்கே   பெருத்த   நாசத்தைச்  செய்யத்தயங்காத   தீமையைப்  பற்றிப்  பேசலாம்.  ஆனால்   முதிய  தலைமுறை  பேசாது.   காரணம்   பேசினால்    தொல்லை.  எந்த   செல்வாக்கும்,  லாபமும்  இல்லை.  நமக்கேன்  வம்பு?  பழைய  வியாபாரமே   ஓடுகிற  வரை  ஓடட்டுமே.    பதில்  விளைவு  எதுவும்  இல்லை.   மக்களும்  அறிவைப்  பயன் படுத்துவதே  இல்லை.   எனவே  வியாபாரத்திற்கு  தங்குதடையே  இல்லை.  
 
ஆனால்   இன்றைய   இளைய  தலைமுறைகள்   எதிர்நோக்கும்  பிரச்சனை  ஊழல்,   திறமையின்மை,   உழைப்புக்கு ஏற்ற   மதிப்பில்லாத   கொடுமை,  கல்வி என்பதே    அறிவுக்குச்  சம்பந்தமில்லாத   வியாபாரம்  ஆகிவிட்ட     வேதனை,   பழமையின்    உயர்ந்த    அம்சங்களோடு   முற்றிலும்   தொடர்பு  துண்டிக்கப்  பட்டமை,  அதற்குக்  காரணமாய்   அமைந்த  வெறுப்புப் பட்டறைகள்   முதலியவையே.   இதில்    பழமையின்,  மரபு  என்ற  பெருங்கொடை,   பலவடிவம்   கொண்ட    வெறுப்புப்  பிரசாரங்களால்   இன்றைய   தலைமுறைகளுக்கும்,  இனிவரும்    தலைமுறைகளுக்கும்   தவிர்க்கப்  படுதல்  கூடாது என்ற   அக்கறையின்    காரணமாகத்தான்   திரு   கண்ணன்    போன்றவர்கள்   மின்தமிழ்,   தமிழ்  மரபு  அறக்கட்டளை   போன்றவற்றை  உண்டாக்கியதும்,  பல  சொல்லடிகள்   பட்டாலும்   விடாது    இயங்கிக்  கொண்டிருப்பதும்.  இந்தத்  தெளிவுகள்  எல்லாம்   நீங்கள்   உணர்ந்திருக்கக்  கூடும்.    மேலும்  இளைய  தலைமுறையின்  எதிர்பார்ப்பை  
எங்களை  விட   நீங்களே   மிகச்  சரியாக   உணர்ந்திருக்கவும்   வாய்ப்பு  உண்டு. 
 
எனவேதான்   ஆக்க  பூர்வமான   ஊக்கங்களையும்,    பேச்சுகளையுமே   உங்கள்  ஈடுபாடாய்க்  கொள்ளுங்கள்.   உங்களுக்கு  வழிகாட்டவேண்டிய   தலைமுறைகள்    வழிதவறிப்போன   தலைமுறைகளாய்  ஆகிவிட்டன      
என்று   கருதினாலும் உங்களுடைய   வாழ்வையும்   வாக்கையும்  எதிர்ப்புகளாலேயே   நிரப்பிக்  கொண்டு  விடாதீர்கள்.   ஏனெனில்  உங்களை எதிரியங்க   வைத்தே   குறுகிய   அடைப்புக்குள்   சுற்றிவருபவராய்  ஆக்கும்   தன்மை   இந்த  வெறுப்புச்  சூழ்நிலைகளுக்கு  உண்டு. 
 
மேலும்  ஒரு  விஷயம்.   நாம் ஏற்கனவே   பலர்  இந்த   மின்தமிழில்    நினைவுறுத்திக்  கொண்டு  வந்ததன்  படியே     இந்த   மின்தமிழ்,   அடிப்படையில்,     மரபுச்  செல்வங்களைப்  பாதுகாக்க    மேற்கொள்ள  வேண்டிய  தொலைநோக்குத்  திட்டங்கள்,  தொழில்  நுட்ப  வாய்ப்புகள்,    மரபுச்  செல்வங்களைப்  பற்றிய  அறிமுகங்கள்,  விளக்கங்கள்,  மரபின்  வழிவழிப்  பேறுகளை  அணுக  வேண்டிய   மனோபாவங்களின்  செம்மையும்  தெளிவும்   ---  இத்தகைய    அம்சங்களைக்  கருத்தாடல்களில்  முக்கியப்  படுத்துவதுதான்   ஒருவர்  விவாதத்தில்  அடையும்  வெற்றி.     இந்த  அடிப்படையில்   உங்கள்  செயல்பாடுகள்    ஆக்கமிக  அமையட்டும்.  என்ன   மிகவும்   போரடித்து விட்டேனோ? 

 
2008/7/15 Narayanan Kannan <nka...@gmail.com>:

ஸ்ரீவத்சன்:

இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நீங்கள் ரொம்ப இளையவர் என்று
தெரிகிறது. முனைவர் இரவா
பழகுவதற்கு மிகவும் இனியவர். நம் குழுமத்தின் மூத்த உருப்பினர். நாம்
எல்லோரும் நட்புடன் உறவாட வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நாம் ஒவ்வொருவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கருத்தை, கருத்தால்
எதிர்த்துப் பழகுவோம். எல்லோருள்ளும் குடிகொண்டிருக்கும் இறைமையை நாம்
மதிக்க வேண்டும். ப்ளீஸ்...

கண்ணன்



இரவா

unread,
Jul 15, 2008, 9:34:18 PM7/15/08
to minT...@googlegroups.com

கொடுத்துவைத்தவர்கள், ஓய்வெடுக்கச் செல்கிறார்கள்! அவர்களைப்போல என்னால் ஓய்வெடுக்க முடியவில்லை! காரணம்,?
 
வாழ்க்கையின் நீளம் எவ்வளவு என்று தெரிவில்லை! வாழ்ந்த நாளில் என்ன செய்தோம்? என்று, கணக்கு பார்க்கும் போது ஒன்றுமில்லை! என்று, உள்மனம் உரைக்கிறது.
 
எனக்குப்பின்னுள்ளோர் என்னைப் பற்றிப் பேச (அல்லது ஏச ) ஏதேனும் செய்து செல்லவேண்டுமே என்று மனத்துள் எழுந்த  பேராசையினால், ஓய்வெடுக்க முடியாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
 
அந்த ஓட்டமே எனக்கு இன்பத்தைத் தருவதாக இருக்கிறது.
 
ஆகவே, நான் இன்பத்தைத் தேடிச் செல்கிறேன்.
 
வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் நாள் முதல் 15 நாள் வரை நாகர், குமரி பகுதிகளில் உள்ள மூலிகைத் தாவரங்களை ஆய்வு செய்யவும் படம் எடுக்கவும் செல்கிறேன்.
 
5 ஆம் தேதி அன்று மாலை நாகர்கோயிலில் குமரி மாவட்ட மருத்துவர் பெருங்குழுவில் பேருரை நிகழ்த்துகிறேன்.
 
அப்பகுதியிலுள்ள நண்பர்கள் எனது ஆய்வுக்கு உதவ முடியும் எனக்கருதுவோர்,   9444892216 என்னும் அலைபேசியில் தொடர்பு கொண்டு துணை புரியலாம்.
 
வாழ்க! தமிழர் குழாம்.
 

வேந்தன் அரசு

unread,
Jul 15, 2008, 11:05:53 PM7/15/08
to minT...@googlegroups.com


2008/7/15 இரவா vasude...@gmail.com:

 
 
வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் நாள் முதல் 15 நாள் வரை நாகர், குமரி பகுதிகளில் உள்ள மூலிகைத் தாவரங்களை ஆய்வு செய்யவும் படம் எடுக்கவும் செல்கிறேன்.
 
5 ஆம் தேதி அன்று மாலை நாகர்கோயிலில் குமரி மாவட்ட மருத்துவர் பெருங்குழுவில் பேருரை நிகழ்த்துகிறேன்.
 
 
வாழ்த்துகள். சிறக்க நும் பணி.

Narayanan Kannan

unread,
Jul 15, 2008, 11:20:55 PM7/15/08
to minT...@googlegroups.com
Dear Irava:

vAzhthukkaL.

I'm writing this from Incheon Airport, hence in English.

All the best for your tour! Try to meet Mr.Kumaran in a college close
to Nagarkoil. He showed me several palm leaf MS during my field trip.

Kannan


--
"Be the change you wish to see in the world." -Gandhi

இரவா

unread,
Jul 16, 2008, 12:57:46 AM7/16/08
to minT...@googlegroups.com
> vAzhthukkaL.
>
> I'm writing this from Incheon Airport, hence in English.
>
> All the best for your tour! Try to meet Mr.Kumaran in a college close
> to Nagarkoil. He showed me several palm leaf MS during my field trip.


Kannan

இப்படிச் சொன்னால் எப்படி?

விபரங்கள் முகவரி, அலை எண் எதையாவது வேண்டாமா?

Tthamizth Tthenee

unread,
Jul 16, 2008, 1:30:38 AM7/16/08
to minT...@googlegroups.com
திரு இரவா அவர்களே
உங்கள் மூலிகை அராய்ச்சிப் பயணம்
வெற்றிகரமாக அமைய உங்கள் உழைப்பையும்
இறைவன் அருளையும் நம்புங்கள்
உங்கள் ஆராய்ச்சிப் பயணம் இனிதே நடக்கட்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Srivatsan R

unread,
Jul 16, 2008, 4:30:00 AM7/16/08
to minT...@googlegroups.com
திரு  கண்ணன்,  அதெல்லாம்  கவலைப்  படாதீங்க.   யாருக்கும்  உள்ள  மதிப்பைக்  குறைக்கும் எண்ணம்  இல்லை.  ஆனால்  கேள்வி  கேட்பவரின்    தொனி,  கருத்து  இரண்டுக்கும்   சேர்த்துத்  தரப்படும்   பதிலுக்கு,   கேள்வி எழுப்பியவர்,    பதில்  தந்தவரைவிட   அதிக  பொறுப்பாளியாகிறார் அல்லவா?.  எனினும்   உங்கள்  அன்பான   அறிவுரைக்கு,   ஸ்ரீரங்கம்   சாரின்   தெளிவான   அன்புரைக்கு   நன்றி.   கொஞ்சம்  பிசி.  அதனல்தன்   உடனே   பதிலிட  தாமதம்.

2008/7/15 Narayanan Kannan <nka...@gmail.com>:

Tirumurti Vasudevan

unread,
Jul 16, 2008, 6:22:40 AM7/16/08
to minT...@googlegroups.com
ஐயா பருவங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அவை நிகழும் மாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி (!) 25, 800 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சுற்று வந்துவிடும். அதனால் கோடை கொஞ்சம் கொஞ்சமாக முந்திய மாதத்துக்கு வரும். ( விளக்குவது சற்று கடினம். மேலும் நேரம் இல்லை)
இங்கே பாருங்கள்:
http://en.wikipedia.org/wiki/Precession
இதனால் ஆழ்ந்து ஆரய்ந்தால் பாடல் இயற்றிய ஆண்டைக்கூட கண்டு பிடிக்க வாய்ப்பு உள்ளது.

திவா

2008/7/14 இரவா <vasude...@gmail.com>:



பருவ காலங்களிலேயே மாறுதல் வந்துவிட்டதா, அல்லது தாவரங்களின் BIORHYTHM,
BIO CLOCK எனப்படும் உயிரின் முறையே மாறி விட்டதா என்பதைத் தெரிவிக்க
வேண்டும்.

--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Srivatsan

unread,
Jul 16, 2008, 10:05:50 AM7/16/08
to மின்தமிழ்
சார் உங்கள் வலைத்தளத்தையும், பிளாக்கையும் பார்த்தேன். என்ன
எழுதியிருக்கப் போகிறார் இவர் என்றுதான் முதலில் நினைத்தேன்.
ஆனால் என் சலிப்பை மாற்றி வியப்பு தரும் அளவில் உங்கள் வலைகள்
உள்ளன. அதில் மருத்துவம் பற்றி பெருவாரியாக நீங்கள்
எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலை அமைப்பும் மிக அழகாக
அமைத்திருக்கிறீர்கள். தாங்கள் எந்த மனத்தொய்வும் அடைந்து விடாமல்
மேலும் ஆக்கபூர்வமான பணிகளில் சிறக்க என்னுடைய well wishings.
(தமிழ் வார்த்தை பொருத்தமாக தெரியவில்லை)
இனவெறுப்பூட்டும் கருத்துகளை எழுதுவதும், யாரோ எழுதியவற்றை வந்து
இடுவதும் மின்தமிழில் உங்களை பற்றிய சலிப்பை ஏற்படுத்தியது.
ஆனால் உங்கள் வலைப்பக்கங்கள் வியப்பை தருகின்றன. உங்களிடம்
சிறந்தவை இருக்க அல்லவை ஏன்?


On Jul 16, 6:34 am, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> வாழ்க்கையின் நீளம் எவ்வளவு என்று தெரிவில்லை! வாழ்ந்த நாளில் என்ன செய்தோம்?
> என்று, கணக்கு பார்க்கும் போது ஒன்றுமில்லை! என்று, உள்மனம் உரைக்கிறது.
>
> எனக்குப்பின்னுள்ளோர் என்னைப் பற்றிப் பேச (அல்லது ஏச ) ஏதேனும் செய்து
> செல்லவேண்டுமே என்று மனத்துள் எழுந்த  பேராசையினால், ஓய்வெடுக்க முடியாமல்
> ஓடிக்கொண்டிருக்கிறேன்.
>

இரவா

unread,
Jul 16, 2008, 1:33:48 PM7/16/08
to minT...@googlegroups.com
அன்பு திருமூர்த்தி அவர்களே
 
வானியல் பற்றி  என்னால் அதிகம் பெச இயலாது. காரணம், அதி நான் சுழியம் (முட்டை) ஆனால், வானியலோடு நமது உடலும் உலகின் தாவரங்களும் நெருக்கமான தொடர்புடையவையாக இருக்கின்றன வென்று அறிவேன்.
 
உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை இருக்கும்.
 
அமாவாசை அன்று ஒரு இலையும் இருக்காது. பௌர்ணமியில் கொடிமுனைவரை இலைகள் இருக்கும். இதற்கும் சந்திரனுக்கும் என்ன உறவு? ஆராய முடியுமா?

 
2008/7/16, Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

Tirumurti Vasudevan

unread,
Jul 16, 2008, 9:42:09 PM7/16/08
to minT...@googlegroups.com
புதிய தகவல் இராவா!
தேடுகிறேன். செடியின் தாவரவியல் பெயர் தெரியுமோ?
ந்ன்றி!
திவா

2008/7/16 இரவா <vasude...@gmail.com>:
...

 
உதாரணமாக, "சந்திரக்கொடி" சந்ரலத என்று வடமொழியாளர் கூறுவர். அக்கொடி கிளைக்காமல் நேராக ஓடும். கொடியில் ஒன்று ஒன்றாக இலைகள் கொடியின் முனைவரை இருக்கும்.
 .....

இரவா

unread,
Jul 17, 2008, 1:33:57 AM7/17/08
to minT...@googlegroups.com
நான் செடியைப் பார்த்தேன். அதன் பெயர் ஏதேனும் ஏடுகளில் இருக்கின்றனவா
என்று தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

எல்லாவித தாவரங்களுக்கும் இனப்பெயர் அறியமுடியுமா என்று தெரியவில்லை.

முயற்சி செய்வோம். கிடைக்கலாம்.

2008/7/17, Tirumurti Vasudevan <agni...@gmail.com>:


--

இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்

Thiruvengada Mani T K

unread,
Jul 17, 2008, 2:05:22 AM7/17/08
to minT...@googlegroups.com
அன்பின் முனைவர் இரவா & திவா:
நீங்கள் சொல்வது இத்தாவரமா பாருங்கள். எங்கள் பட்டியலில் சந்திரா என்று துவங்கும் தாவரங்கள் மிகச்சிலவே.
"செடியைப் பார்த்தேன்" என்கிறீர்கள். படமிருந்தால் அனுப்புங்கள் ஒப்பிட்டு நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.
என் முனைவர் ஆய்வு "Expert System on Indian Medicinal Plants" என்ற தலைப்பில் தான். அநேகமாக எல்லா மூலிகைகளின் தகவல்களும் எங்கள் நூலகத்தில் இருக்கக் கூடும். மின் தமிழில் மூலிகைகளின் தகவல்கள் பற்றி உதவ நான் இருக்கிறேன்.
நன்றி மிக
முனைவர் தி.க.திருவேங்கடமணி
நூலகர், சென்னைப் பல்கலைக்கழகத் தாவரவியல் உயர்கல்வி மையம், சென்னை

 

 

Kaempferia galanga L. (Zingiberaceae)

Vernacular Name: San: Chandramulika, sugandhavacha; Eng: East Indies galingale; Bin:

Chandramula; Beng: Chandumula; Tel: Kachoram; Tam: Kacholam, kacholakilangu; Kan:

Kachchura; Mal: Katjulam, kacholam.

Description: Perennial herbaceous plant, Rhizome includes little ovate tubers. Leaves: 2-3

with broad blade, spreading flat on the ground, appearing annually in rainy season, hairy

beneath, Flowers white tinged with violet, sessile, arising from the axil.


Tthamizth Tthenee

unread,
Jul 17, 2008, 2:20:48 AM7/17/08
to minT...@googlegroups.com
பொதுவாகவே வானிலைக்கும்  பூமியிலுள்ள தாவரங்களுக்கும்
ஒரு பொதுவான தொடர்பு உண்டு என்று பெரியவ்ர்கள்
சொல்லுவார்கள்
 
மின்னல் அடிக்கும் போது தாழம்பூ மடல் விரியும் ,
பூ பூக்கும் என்றும்,
மூங்கில் முளை விட்டு வேகமாக வளரும் என்றும் சொல்லுவார்கள்
அது மட்டுமல்ல மூலிகைகள் எனப்படும் சில செடி வகைகள்
இரவில் நிலவு இருக்கும்போது ஒளிவிடும், அப்போது அதைப் பார்க்கும்
இயற்கை வைத்தியர்கள் அந்த இடத்தில் ஒரு அடையாளம்
வைத்துவிட்டு திரும்புவர், மறு நாள் அங்கு சென்று அச்செடியை எடுப்பர்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்
நிலவில்லாத நேரங்களில் அச்செடிகள் ஒளிவிடுவதில்லை
ஆகவே பகலில் அவைகளைக் கண்டு பிடிப்பது கடினம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 

Kannan Natarajan

unread,
Jul 17, 2008, 2:43:15 AM7/17/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
சந்திரன்,கதிரவன் சம்பந்தமான தாவர அறிவியலுக்கு "கோரொனோ உயிரியல்"(Chrono Biology - http://en.wikipedia.org/wiki/Chronobiology) என்று பெயர். வங்காளரான அமரர் ஜெ.சி.போஸின்(பெளதிக நூல் வல்லுநர்) அய்வுகள் வடநாட்டில் உள்ள சில அரிய தாவரங்களின் செயல்திறன்கள் நுட்பங்களாகும். தட்பவெப்பநிலைகளுக்கு,சந்திர,சூரிய ஒளியின் நிலைமைக்கேற்ப தழுவல் ஆகியவைகள். அவரின் அத்தனி நூலின் தொகுத்துரையை, இக்குழுமத்தில் தாவரவியல் அறிஞர் எவரேனும் வழங்கினால், இக்கலந்துரையாடல் மேலும் சிறப்படையும்.
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

இரவா

unread,
Jul 17, 2008, 3:17:33 AM7/17/08
to minT...@googlegroups.com, thami...@googlegroups.com
செல்லரித்த்து மூளையினை
புல்லரித்த்து மேனியினை
புள்விழித்திடும் வேளையிலே
முள்முளைத்திடும் ஞானப் பெண்ணே!

கள்வடிந்திடும் காரிருளில்
உள்ளிருப்பது என்னவென்று
சொல்வகுப்பவர் யாருமென்று
சொல்லுசொல்லடி ஞானப்பெண்ணே!

இரவா

unread,
Jul 17, 2008, 3:20:24 AM7/17/08
to minT...@googlegroups.com
ஆகா! அரிய தகவல். அறிய வேண்டிய தகவல். இந்நூல் எங்கே கிடைக்கும் என்று
சொன்னாலும் போதும். அது ஆகாயமாக இருந்தாலும் கொண்ணர்ந்து விடுவேன்.


2008/7/17, Kannan Natarajan <thar...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Jul 17, 2008, 3:26:19 AM7/17/08
to minT...@googlegroups.com
திரு  ஜெ  ஸி  போஸின்   பல  நூல்களைப்  படித்திருக்கிறேன்.  என்னிடமே  சில  இருந்ததாக  ஞாபகம்.  பார்க்கிறேன்.   இருந்தால்  உமக்கே.   பாரதீய  வித்யா  பவனின்   பழைய  பதிப்பு என்று   நினைவு.  

2008/7/17 இரவா <vasude...@gmail.com>:
--~--~---------~--~----~------------~-------~--~----~

இரவா

unread,
Jul 17, 2008, 5:33:52 AM7/17/08
to minT...@googlegroups.com
கேளார்க்கும் வேட்ப அளிப்பதாம் நூல்

2008/7/17, srirangammohanarangan v <ranga...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Jul 17, 2008, 3:52:57 PM7/17/08
to minT...@googlegroups.com
இரவா! திட்டமிடாமல் செயல்படுதல் என்பதும் தமிழர்தம் குறை. நீங்கள்
திடுதிப்பென்று உங்கள் பயணத்தைப் பற்றி சொல்லுகிறீர்கள். விமானநிலையில்
இருந்து கொண்டு இவ்வளவுதான் தகவல் சொல்லமுடியும். திரு.குமரன் தந்த
விசிடிங் கார்டு வீட்டில் இருக்கிறது. வாயில் இருக்கிறது வழி என்று
சொல்லுகிறார்கள். கண்டுபிடித்துவிடுங்கள்! :-)

கண்ணன்

On 7/16/08, இரவா <vasude...@gmail.com> wrote:

இரவா

unread,
Jul 17, 2008, 9:26:06 PM7/17/08
to minT...@googlegroups.com
கண்ணன்
 
அது என்ன திட்டமிடாமல் செயல்படுதல் "தமிழிர்" தம் குறை?
 
நாகர் கோயிலுக்குச் செல்ல நான்கு வருடத்திற்கு முன்னே போறேன்! போறேன்! என்று கொட்டிக் கொண்டாயிருக்க முடியும்.

 
 இரவா! திட்டமிடாமல் செயல்படுதல் என்பதும் தமிழர்தம் குறை.
திரு.குமரன் தந்த

விசிடிங் கார்டு வீட்டில் இருக்கிறது.
 
குமரா! குமரா! குமாரா! குமாரா! என்று நாகர் வீதியில் நின்று கூவிப்பார்க்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages