தமிழகச் சிற்ப/கோயில் விநோதங்கள்!

5,195 views
Skip to first unread message

Narayanan Kannan

unread,
Jan 11, 2008, 6:17:40 AM1/11/08
to மின்தமிழ்
நண்பர்களே:

திரு.விஜயகுமார் சுவாரசியமான ஒரு தொடரை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

இத்தொடரை இத்தலைப்பின் கீழ் இடுமாறு வேண்டுகிறேன். நாம் எல்லோரும் அவரவர்
ஆல்பத்திலிருந்து ஒன்றிரண்டு உருவி இங்கு இடுவோம்.

ஒரு இழையாக இது வரவேண்டுமெனில் இங்குள்ள "பதில்" பொத்தானை அமுக்கி
வெளியிடவும். புதிய சேதியாக இருப்பின், பொத்தானை அமுக்கியபின் காண்கின்ற
பழைய சேதியை அழித்துவிட்டு புதிதாக எழுதி, இணைக்க வேண்டியதை இணைத்து
அனுப்பவம். ஒவ்வொரு இடுகைக்கும் புதிய தலைப்பிட்டால் (never add a new
Title in the "SUBJECT". Then the chain will break. NEVER change the
title, but just "reply") இழை அறுந்து போகும். கவனம்!!

இணைப்பிலுள்ள படம் திருவாசகர் பிறந்த ஊரான திருவாத ஊர். கோயிலில்
நுழைந்தவுடன் வலப்புறம் திரும்பினால் இக்காட்சி படும். கோயில் இடிபடும்
போது விசித்திரம் வெளிவருகிறது! கவனித்துப் பாருங்கள் எப்படி இடுக்கி
போட்டு காலத்தை வென்று நிறகக் கூடிய ஸ்தரத்தன்மையை கோயில் நிர்மாணத்தில்
வழங்குகின்றனர். இது என்ன என்சிநியரிங்?

கண்ணன்

DSCN3878.JPG

Vijay kumar

unread,
Jan 11, 2008, 6:52:31 AM1/11/08
to minT...@googlegroups.com

சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்கல்லுகு தற்போது காவல்  காய்ந்த கருவேல முர்க்களே.

நீங்கள் பார்க்கும் சங்கிலி முற்றிலும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டது - அதுவும் மேல் இருக்கும் தளத்தில் இருந்து தொங்குமர செதுக்கிய அந்த மகா சிற்பியின் ஆவி தற்போது நில்லையை கண்டால் என்ன பாடு படுமோ. அய்ய்ய்ய்யோ , அக் கற் சிலையை செதுக்க அச் சிற்பி எப் படு பட்டுஇருப்பனோ,

imagine the pain passing through his veins as he delicately brought forth his years of knowledge filtered though generations by word of mouth, passing through his blistered hands, into making this poetry in stone.... அக் கல்லும் அந்த படைப்பாலியின் உழைப்பிற்கு ஆதாரமாக புவி இருக்கும் வரை நிற்க ஆவல் பூண்டு பல நூற்றாண்டுகள் நின்றும் பார்போரை நேகிழ்விதும் வந்திருக்கும் ...நடுவில் வந்தவர்கள் தெரிந்து சிதைதர்கள் - அவர்கள் விரோதிகள் - பகைவர்கள் மன்னிக்கலாம் , இம் மூடர்களோ ...இவர்களை என்ன வென்று சொல்வது - சபிப்பது . இதை பார்த்தால் சில முறை இவை இருக்கும் இடத்தில் இருந்து சிதைவதை விட எங்கோ rockfeller கண்காட்சியில் இருந்து வாழ்வதே மேல் .
097%20stone%20chain%20-%20Kanchipuram.jpg
355743949_e44ab2f946.jpg
india223.jpg
505990578_0f2ca13dd1.jpg
217603796_345240f34d.jpg

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2008, 10:36:15 AM1/11/08
to minT...@googlegroups.com

இந்த சங்கிலியை எப்படி செய்தார்கள் என்று ஒரு கருத்தரங்கமே வைக்கலாம்
 
 

 
2008/1/11 Vijay kumar <vj.ep...@gmail.com>:



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Vijay kumar

unread,
Jan 13, 2008, 9:46:25 PM1/13/08
to minT...@googlegroups.com

அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள்.

சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார்.  இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம்.

தமிழ்கத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம்.  மல்லை ஒரு புரியாத புதிர்.  அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் - பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன.

மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு.

பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்.  இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை. 

ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரததிணை பாருங்கள்.  சகாதேவ ரதம் கச ப்ரிச்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கச - யானை , ப்ரிச்டம் - முதுகு)  இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரத மேல் பாகமும் யானையின் முத்கைய்யும் ஒத்து இருப்பதை உணரலாம். இத்தனை காண்போருக்கு உணர்த்தவே அச் சிற்பங்கள் அங்கு உள்ளன. ஆஹா

gajapristam2.jpg
5ratha1.jpg
gajapristam.jpg

Vijay kumar

unread,
Jan 14, 2008, 12:02:38 AM1/14/08
to minT...@googlegroups.com

On Jan 11, 11:36 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> இந்த சங்கிலியை எப்படி செய்தார்கள் என்று ஒரு கருத்தரங்கமே வைக்கலாம்
>

நல்ல சிந்தனை தூண்டும் கேள்வி.  சங்கிலியை விடுங்கள் மல்லை குடவரை சிற்பங்களுக்கு கல்லை எப்படி பிளந்தர்கள் என்பது சுவாரசியமான ஒரு விஷயம். வெறும் சுத்தி, உளி கொண்டு இப்பெரும் சிற்பங்களையும், குடவரை கொவில்கல்லையும் எப்படி வடித்தார்கள் ..

மல்லை பாறைகளில் உளி கொண்டு செதுக்கிய துவாரங்கள் இங்கும் அங்கும் கோடுகளாக போவதை காணலாம்.  ( படங்களை இணைத்துள்ளேன்)

இந்த துவரங்களுக்குள் மரத்தால் செய்த ஆப்பு ( ஆம், நகைகதீர்கள் ) கொண்டு அடைதர்கள்.  பின்னர் இவற்றை தண்ணிர் கொண்டு நனைத்தார்கள். ஆப்பு நீரை உள்வாங்கி பேருக்கும் - அனைத்து ஆபுகளும் ஒரே சீராய் உடல் பெருக்க, பாறை பிளவு பெரும். பிளந்த பாறையின் படத்தை இணைத்துள்ளேன்.

 

41%20How%20to%20cut%20the%20stone.jpg
42%20How%20to%20cut%20the%20stone.jpg
43%20How%20to%20cut%20the%20stone.jpg

Narayanan Kannan

unread,
Jan 14, 2008, 12:53:50 AM1/14/08
to minT...@googlegroups.com
2008/1/14 Vijay kumar <vj.ep...@gmail.com>:

> மல்லை பாறைகளில் உளி கொண்டு செதுக்கிய துவாரங்கள் இங்கும் அங்கும் கோடுகளாக
> போவதை காணலாம். ( படங்களை இணைத்துள்ளேன்)
>
விஜய்!

இது கூட எளிது போல் தோன்றுகிறது, அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்களைக்
கண்ணுறும் போது. நான் எடுத்த படங்கள் இன்னும் slide வடிவில் உள்ளன.
பின்வரும் தளத்தில் எடுத்த படங்களைக் காணுங்கள்:
http://www.art-and-archaeology.com/india/ellora/

1. நாம் வெறும் மலையைக் காண்கிறோம். கலைஞன் மலைக்குள் கோயிலைக்
காண்கிறான் (மரத்தை மறைத்தது மாமது தானை!!)
2. பல மாடிக் கட்டிடங்களைக் காண்கிறான்.
3. குடையும் போது என்ன பரிமாணம், எப்படி அளவிடுதல், இது என்ன கணக்கு?
4. பாதிக் குடைந்த பின் தப்பாகப் போய்விட்டால்? அப்படி எதுவும்
பாதியில் விட்டுப் போன project தெரியவில்லை. அது என்ன precision? அது
என்ன Engineering?
5. இருண்ட குகைக்குள் சித்திர வேலைப்பாடு வேறே! இதுவும் எங்கே? கூரை
மோட்டில்? என்ன சார் இது?

இவ்வளவையும் பார்த்துவிட்டும் நாம் நம் பழமையை குப்பை என்கிறோம். அது
எப்படி ஒரு நாட்டில் ஒரு கலை மட்டும் வளர்ந்திருக்க முடியும்? இன்று
Engineering College நடத்துகிறோமெனில் பிற கலை அறிவு இருப்பதால்தானே
முடிகிறது? ஆனாலும் சித்த மருத்துவம் குப்பைதான் ஐயா!! :-)

கண்ணன்

ellora-01.jpg
ellora-02_kailasa2.jpg
ellora-02_kailasanatha.jpg
cave_temple_interior.jpg

Vijay kumar

unread,
Jan 14, 2008, 2:28:10 AM1/14/08
to minT...@googlegroups.com

அருமை. அதனுள் இருக்கும் அழியா சித்திரங்களை பற்றி நண்பர் உரை நடத்தினர். அவரிடம் அனுமதி பெற்று சீக்கிரம் இத்தளத்தில் விடுகிறேன். அது மட்டும் அல்லாமல் கைலாசனத கோவில் செத்துக்கிருக்கும் கோலம் அருமை.

அண்மையில் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் சோழ சிலைகளின் கண்காட்சி நடை பெற்றது. அங்கு ஆயிரம் வருடம் வாழ்ந்த பார்வதி சிலை ( அதை சிலை என்று கூறுவது தவறு ) உருவம் இருந்தது. ஆனால் புகை படம் எடுக்க தடை.. அச்சிலை முன் காலம் நின்றதையும் தெய்வீகம் கலையுடன் கலப்பதையும்
 கண்டேன். மெய் மறந்தேன்

சோழர்களின் அறிய படைப்பான நடராஜா ( ஆடல் வல்லான் ) தோற்றத்தை பற்றி இணையத்திலும் பிற புத்தகங்கள் மூலமும் தேடினேன்.....ஒரு அருமையான பயணம் ஆரம்பித்தது.
 
 கல்லிலும், உலோகத்திலும், வரை படமாகவும் சிதிரமாகவும்  எத்தனை கலை வடிவங்களை ஒன்று படுத்தி ஆடிக்கொண்டிருக்கும் ஆடல் வல்லானின் அனந்த கூத்தை இன்றும் பரத கலையின் வடிவம் பிரதிபலபதை காணுங்கள்.
 
Images courtesy:
 
dancer.jpg
chola bronze.jpg
gangaikonda cholapuram stone.jpg
big temple murals.jpg
bigtemple paintings sculpture.jpg

Vijay kumar

unread,
Jan 14, 2008, 2:46:07 AM1/14/08
to minT...@googlegroups.com
photo courtesy:
 
 
நடராஜர் வடிவம் பற்றியும் நாம் முன்பு கண்ட சிவ கங்காதர சிலை வடிவத்திற்கும் இருக்கும் ஒரு தொடர்பை சுட்டிக்காட்ட  மறந்துவிட்டேன் ....  உற்று நோக்கின் ஆடும் வல்லானின் கூந்தலில் கட்டுண்டு இருக்கும் கங்கையை காண முடிகிறது.  ஆணவம் அடங்கி கரம் கூப்பி இருக்கும் கங்கையை சிலையில் வடித்து இருக்கும் சோழ கலைவண்ணம் பலே
 
How the cholas made bronzes ( lost wax method) is another interesting topic....more later
nata14.jpg

venkatram dhivakar

unread,
Jan 14, 2008, 3:41:36 AM1/14/08
to minT...@googlegroups.com
பலே விஜய்! நானும் பலமுறை நடராஜர் சிற்பத்தைக் கண்டுள்ளேன். அவர் கங்கையை வெளிகொணர்ந்ததைப் போல் அவருள் இருக்கும் அவளை நீங்கள் வெளிக்கொணர்ந்துள்ளீர்கள்.
திவாகர்

 

Narayanan Kannan

unread,
Jan 14, 2008, 3:41:52 AM1/14/08
to minT...@googlegroups.com
விஜய்:

நீங்கள் கர்நாடகாவிலிருக்கும் ஹளபேடு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு
போயிருக்கிறீர்களோ?

Miniature art -என்பதின் உச்சக்கட்டம் அது!

ஸ்ரீராமனுஜர் அனுக்கிரஹத்தின் படி இக்கோயிலைக் கண்ட நூறு ஆண்டுகள்
ஆனதாம். போய் பார்த்தால்தான் தெரிகிறது, ஏனென்று!!

கண்ணன்

2008/1/14 Vijay kumar <vj.ep...@gmail.com>:

Vijay kumar

unread,
Jan 14, 2008, 4:13:25 AM1/14/08
to minT...@googlegroups.com

ஹலேபிட் கோவில் சிற்பங்கள் அபாரமானவை. எனது நண்பர் சென்ற மாதம் சென்று வந்து புகை படங்களை அனுப்பினார். எனினும் இவை கி பி 12 C ஹோய்ச்ள மன்னர்களால் செய்தவை ( பல்லவ 7 th நூற்றாண்டு , சோழர் 10  நூற்றாண்டு ) - என்பதாலும் - தமிழார் வேலைப்பாடு மிகவும் கடினமான கருங்களில் செதுக்கப் பெற்றவை - ஹலேபிட் கோவில் சோப்பு கல்லால் ஆனது என்பதாலும் பல்லவர் மற்றும் சோழ சிற்ப்பங்கள் அவற்றை விட பிரசித்தி பெறுகின்றனர்.

மற்றும் கலை நுணுக்கத்திலும் பல்லவர் கலை எழில் மிகுதி என கருதப் படிகிறது. மல்ளையில் இருக்கும் வரகா அவதார் சிற்பம் கொண்டு இந்தனை மேலும் விளக்கலாம்.

சிற்பத்தில் பூதேவியை காப்பற்றி கொணரும்  மகா விஷ்ணு மிக நளினத்துடன் தன் மடியில் இட்டு இருப்பதையும் , தேவியின் மேலாடை அங்கு நடந்த அமளியில்
சற்றே அவிழ்ந்து கீழே தேவியின் மடியில் கிடப்பதை கண்டு தேவி நன்துடன் தலை குனித்த கட்சி அருமையாக செதுக்கபடுள்ளது.

இதே கட்சியை ஹோய்சால சிற்பி செதுக்கும் கோணம் - மகா விஷ்ணுவின் பலம் மிகுந்த தோற்றத்தை கட்டுவதோடு நிறுத்தி விடுகிறது.
 
மேலும் பல இடங்களில் உள்ள இதே வடிவத்தை கிழே காணுங்கள். பல்லவ மல்லை சிற்பத்தின் அற்புத வடிவம் புகழ் பாடுங்கள்.

 


On 1/14/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
DSC02133.jpg
udayagiri005.jpg
Belur.10.jpg
varaha1 ellora.jpg
varaha+avtaar-badami.jpg

Vijay kumar

unread,
Jan 14, 2008, 4:29:07 AM1/14/08
to minT...@googlegroups.com
 
 
How the cholas made bronzes ( lost wax method) is another interesting topic....more later
 
 
hi divakar sir,
 
Not able to check the reference right now, but aparently there is a ref to the lost wax method of bronze casting in Andal's Nachiyar tirumozhi  ....the english translation is as below

‘My beautiful lover, it is as if he has put clay around me and
poured molten metal into my heart.’
 
maybe you can check and give us the correct tamil version
 
rgds
vj
 

Vijay kumar

unread,
Jan 14, 2008, 5:45:08 AM1/14/08
to minT...@googlegroups.com
 
இணைய தளத்தில் தேடி அந்த அறிய சிற்பத்தை கண்டுபிடித்துவிட்டேன். அபாரமான வேலை பாடு மிக்க சிற்பம் - கூந்தல் கட்டி முடிந்த பின்னும், சிறு இழைகள் நீண்டு வளைந்து தோல் மெது சுருளும் அழகு .... திருபங்கத்தில் நிற்கும் கோலம், கழுத்தில் நுண்ணிய வேலைப்பாடு மிக்க அணிகலன், முகத்தில் புண் முறுவல்..கை விரல்களின் நளினம். ... ஓர்ஆயிரம் ஆண்டுகள் நின்று சிரிக்கும் நிஜம்... இதை எப்படி பதுமை என்று சொல்வது, சிலை என்று பார்ப்பது.....இது தான் தெய்வீகம்.  
uma.bmp

Narayanan Kannan

unread,
Jan 14, 2008, 11:22:26 PM1/14/08
to minT...@googlegroups.com
அன்பின் விஜய்:

நீங்கள் தொடர்ந்து நமது சிற்பங்கள் பேசும் தெய்வங்கள் என்று அதன்
நுணுக்கங்களைக் காட்டிவருவது பாராட்டற்குரியது.

லலித கலைகளுள் சிற்பக்கலைதான் மிகவும் நுணுக்கமானதும், கடினமானதும் என்று
தெரிகிறது. கல்லில், மண்ணில், உலோகத்தில் கலை வண்ணம் காணுதல் எளிதல்ல.

>>ஓர்ஆயிரம் ஆண்டுகள் நின்று சிரிக்கும் நிஜம்... இதை
> எப்படி பதுமை என்று சொல்வது, சிலை என்று பார்ப்பது.....இது தான் தெய்வீகம்.
>

அசித் - material என்பதையும் நம்மவர் இருவகையாகக் காண்கின்றனர். ஒன்று
பிராகிருதம், மற்றது அப்பிராகிருதம். இறைவன் பர உலகில் இவ்வப்பிராகிருத
(சூட்சும) உடல் கொண்டு காட்சியளிப்பதாகப் பெரியோர் சொல்லியுள்ளனர்.
திடீரென்று சிலைக்கு உயிர் எப்படி வருகிறது? எப்படி ஒரு சிற்பி தன்
உயிரைக் கொடுத்து சிற்பம் வடிக்கிறான்? "சித்தினுள் அசித்தினை வைத்தாய்,
அங்கு சேரும் ஐம்பூதத்தின் வியன் உலகமைத்தாய்! எத்தனை கோடி இன்பம்
வைத்தாய்! இறைவா!!" என்று பாரதி வியப்பது இதுதான். சித்தினுள், அசித்
கலக்கும் விந்தையே சிற்ப சாஸ்திரம்.

வாழ்க உங்கள் தொண்டு.

கண்ணண்

Vijay kumar

unread,
Jan 15, 2008, 12:05:29 AM1/15/08
to minT...@googlegroups.com
தமிழ் கோவில்களில் இருந்து சற்றே வெளி வருவோம். வேதங்களில் அறுபது சதவீதம் இந்திரன் பற்றியே உள்ளன. இந்திர வழிபாடு மிகவும் பழையது என்பது இதில் இருந்து அறிய முடியும். இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கிற வெள்ளை யானையும் பிரசித்தி பெற்றது. ஐராவதம் 36 தலைகள் உடையது, அவற்ற்றை சிற்ப வடிவில் காட்டுவது கடினம் என்பதால் மூன்று தலைகளுடன் காணலாம். ஆனால் இதில் சுவாரசியம் என்ன வென்றால் இது இருக்கும் இடம் கம்போடியா மற்றும் விஎத்னம். ... தாய்லாந்திலும் ஐராவதம் மிக விசேஷம். ஐராவதி என்ற  ஆறு அங்கு பாய்கிறது. 
beng malea - siam reap cambodia.jpg
indra_airavarta.jpg
what phu khmer.jpg

Vijay kumar

unread,
Jan 15, 2008, 1:56:58 AM1/15/08
to minT...@googlegroups.com

இந்த லாஸ்ட் வாக்ஸ் முறை என்றால் என்ன..

சமஸ்க்ரிதத்தில் இதனை  மது  உச்சிஷ்ட்ட  விதன என்று சில்ப சாஸ்திர நூல்கள் அழைகின்றன.

தேனீ கூடுகளில் இருந்து எடுக்கப்பட மெழுகு, கொஞ்சம் கற்பூரம் ( ஒரு விதமான கற்பூரம் - குங்கிலயும் என்று சொல்லபடுகிறது) எடுத்து எண்ணையில் மாவாக உருட்டி, சிற்பத்தை சிற்பி வடிக்கிறார்.

இந்த உருவம் எல்லா விதமான ஆபரணங்கள் முதலிய கொண்டு தோற்றத்தில் முடிவடைந்த சிற்பம் போலவே காட்சி அளிக்கும். இதனை குளிர் நீரில் முகியபின் மெழுகு உறைகிறது. இந்த மெழுகு உருவம்  கரையான் புற்றுகளில் இருந்து எடுக்கப்பட களிமன் கொண்டு மொழுகி சூரிய கதிர்களில் காயவேய்கப்ப் படுகிறது - சிறு துவரம் மணலில் செய்து,  உலையில் வைத்து இத்தனை சுடுகிறார்கள். வெப்பத்தில் மெழுகு உருகியோ அவியகோவோ வெளியேறுகிறது. இதனால் மணல் கூடு மட்டும் கிடைக்கிறது. இதனுள் உருகிய உலோகத்தை ஊற்றி காய்ந்தபின் மணல் ஓட்டை ஒடித்து சிற்பத்தை வெளி கொணர்கிறார்கள். கிடைத்த சிலை செப்பனிட்டு, மிரிதுவாக்கப்ட்டு - மீண்டும் இழைத்து பொலிவு பெறுகிறது.

இதனில் முக்கியமான விசேஷம் ஒரு சிலை வார்தபின் கூடு மீண்டும் உபயோகிக்க இயலாது. ஆங்க்லியாதில் இதனை யுநீக் ( each sculpture is unique)  என்று சொல்லலாம்.

முழு செயலாக்க முறை விளக்கும் இணைய தளம் கீழே

http://www.asia.si.edu/exhibitions/online/chola/chola.htm

On 1/14/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:

Vijay kumar

unread,
Jan 15, 2008, 3:35:38 AM1/15/08
to minT...@googlegroups.com
On 1/11/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

இந்த சங்கிலியை எப்படி செய்தார்கள் என்று ஒரு கருத்தரங்கமே வைக்கலாம்
 
 
 
தேடிப் பார்த்தேன் - சில குறிப்புகளில் இந்த வடிவத்தை கொண்டுங்கை என்று சொல்கிறார்கள். ஆனால் கொடுங்கை என்றால் மண்டபத்தின் மேல் கூரையின் அடி பாகம் என்றே நான் அறிவேன். யாரவது இத்தனை ஆராய்ந்து அய்யம் தீருங்கள்.
 

 

Vijay kumar

unread,
Jan 15, 2008, 4:26:22 AM1/15/08
to minT...@googlegroups.com
எனக்கு மிகவும் பிடித்தமான சிற்பம் பற்றி இந்த மடல். கங்கை கொண்டசொலபுரத்தில் உள்ள சண்டேச அணுக்ரகாமுர்த்தி சிலை. 
 
 முதலில் கதையை விளக்குவோம்.

சந்தேசன் மிக தீவிர சிவ பக்தன் - தந்தை தன் சிவ பூஜையில் குறிக்கிடதனால்  தண்டம் கொண்டு அவர் கால்களை முறித்தான் என்று பெரிய புராணம் சொல்ல .... தில்லையில் சண்டேசர் கையில் கோடாலியுடன் இருப்பதய் காணும் போது கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

தஞ்சை பெரிய கோவிலிலும் ராஜ் ராஜா சோழன் எடுபித்த உருவங்களில் சண்டேச மூர்த்தி சிலைகளும் உள்ளன. இதனில் நான்கு கையுடன் சண்டேசர், அசுரன் முசலகன் இரண்டு கைகளுடன், உமை, லிங்க உருவமாக மகேசன், சிவ பக்தன், கீழே விழுந்து கிடக்கும் தந்தை, கடைசியில் இரு கரம் படைத்து மகேசன் இடத்தில் மலர் மாலை வாங்கும் சண்டேசர்...என பெரிய புராண கதை படி உள்ளன.

ஆனால் நாம் காணப்போகும் சிற்பம் தஞ்சையில் இல்லை, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ளது. மூன்று முக்கிய நபர்களும்  மிக அருமையாக காட்சி அளிக்கின்றனர். பக்தி பரவசத்தில் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி பவ்யமாக மண்டி இடும் சண்டேசர், தன் பரம பக்தனின் பக்தியை தன் மலர்த்த முகத்தோடு மலர் மாலை இட்டு அன்புடன் அணைக்கும் ஈசன், இதை சகல அம்சம் பொருந்திய தேவி பார்க்கும் அறிய சிற்பம். A masterpiece.....

அகிலன் அவர்கள் எழுதிய வேங்கையின் மைந்தன் ( அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு sequel )  சகித்ய அகாடமி விருது பெற்ற சரித்திர நாவல்.  ராஜ் ராஜா சோழனின் ( வேங்கை) மைந்தன் முதலாம் ராஜேந்திர சோழனின் இலங்கை போர் மற்றும் கங்கை போர்களை மையமாக கொண்ட கதை - அவர் இச் சிற்பத்தை  ராஜேந்திரன் தன் கங்கை வெற்றியை சிவனுக்கு அர்ப்பணம் செய்யும் கட்சி என கற்பனை செய்து, சிவனே அன்புடன் ராஜேந்திரனுக்கு வெற்றி மாலை சூடு வதுபோல் சிற்பி செதுக்கி உள்ளான் என அழகு பட எழுதி உள்ளார்.

picture courtesy
varaha1 ellora.jpg

Vijay kumar

unread,
Jan 15, 2008, 4:29:08 AM1/15/08
to minT...@googlegroups.com
attaching correct photo...sorry for that
viar26.jpg

Subashini Kanagasundaram

unread,
Jan 15, 2008, 3:53:35 PM1/15/08
to minT...@googlegroups.com
தொடர் மிகச் சிறப்பாக இருக்கிறது. இம்முறை திருச்சி சென்றிருந்த போது குடவரை குகை சிற்பங்களை கண்டு மகிழ்ந்தேன். மிக அழகாக செதுக்கப்பட்ட சிற்பங்கள்.  நேரம் கிட்டும் போது எனது ஒளிப்பதிவில் இருக்கும் ஒரு சிறு பகுதியை வெளிட முயற்சிக்கிறேன். 
திருச்சிக்கு பக்கத்தில் இருக்கும் திருவாணைக்காவல் சிவாலய சிற்பங்களும் கோயில் அமைப்பும் பிரமிக்க வைக்கும் ஒன்று. இதைக் கண்ட போது திருநெல்வேலியில் பார்த்த நெல்லையப்பர் ஆலயம் நினைவுக்கு வந்தது. அதே போல  சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்தில் நான் பார்த்து பிரமித்த மற்றொரு ஆலயம் வரதராஜப் பெருமாள் கோயில்.  இதன் அருகாமையிலேயே ஒரு சிறிய பல்லவர் கால அழகிய சிவாலயம் ஒன்றும் இருக்கிறது,. பெயர் மறந்து விட்டது. இப்படி பல ஆலயங்கள் சிற்ப கலையை போற்றும் கூடங்களாகத் திகழ்கின்றன.  இதனை பதிவு செய்வது ஒரு நல்ல முயற்சி.
 
அன்புடன்
சுபா

Vijay kumar

unread,
Jan 15, 2008, 9:30:05 PM1/15/08
to minT...@googlegroups.com

காஞ்சியில் இருக்கும் பல்லவ சிவாலயம் பிரசித்தி பெற்ற அத்யந்தகாம ( king with unlimited fantasies) என்ற பெயர் உடைய  ராஜசிம பல்லவனால் கட்டப் பெற்ற கைலாயனாத கோயில். இந்த பல்லவனே மல்லை கடற்கரை கோயிலை கட்டிய பெருமைக்கு உரியவன்.

கைலாயனாத ஆலயம் முதல் மேடை வரையிலும் கருங்கல் கொண்டு செதுக்கிய அரசன் எதோ காரணத்தால் அடுத்துவரும் தளங்களை மிருதுவான கல் கொண்டு செதுக்கிய காரணத்தால் பல அறிய சிற்பங்கள் காலப்போக்கில் மிகவும் சிதைந்து விட்டன. எனினும் பல்லவருக்குகே  உரிய கலைநுட்பம் மிகுந்த  வேலை பாடுகளை, குறிப்பாக ராஜசிம்மன் பாணியில் சிங்கங்களும் பல்லவ பொக்கிஷமான சோமாஸ் ஸ்கந்த மற்றும் மகிஷாசுற மர்தினி சிற்பங்கள் மிகுதியாக காணலாம். 

இந்த இணைய தளத்தில் உள்ள அழ்கிய புகை படங்களை பாருங்கள்.

 
கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயமும் ஒரு கலை பெட்டகம். விரைவில் அங்கும் செல்ல்வோம்.

 
Kanchipuram%20-%20Kailasanatha%20temple_19.jpg
india190.jpg

Vijay kumar

unread,
Jan 15, 2008, 11:02:24 PM1/15/08
to minT...@googlegroups.com

இதர மடல்களில் ஜல்லிக்கட்டு பற்றி சுவாரசியமாக விவாதங்கள் நடப்பதை கண்டபின் எருதை அருமையாக பல்லவ சிற்பிகள் செதுக்கிய மல்லை கோவர்த்தனம் சிலைகள் நினைவுக்கு வந்தது. நிற்கும் காளை, அழகாய் அமர்திருக்கும் காளை ( தொண்டை அடியில் தொங்கும் தோலின் மடிப்புகள் அருமையாக செதுக்கி உள்ளார்கள்), பால் கறக்கும் ஆயன், தாய் பசு அன்பாய் தன் கன்றை நாக்கால் நக்கி கொடுக்கும் உணர்வு உயிரோட்டம்...

 பஞ்ச ரத கூட்டத்திலும் இருக்கும் பல்லவ சின்னமான இது ( சிங்கமாக மாறுவதற்கு முன்) உருவத்தில் பெரியதாக வடித்தாலும் அங்க அமைப்புகள் குன்றாமல் செதுக்கிய வண்ணம் அருமை.



On 1/14/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
30%20Krishna%206.jpg
KrishnaMandapam03.jpg
27%20Krishna%203.jpg
87%20Arjun%20ratha.jpg

இரவா

unread,
Jan 15, 2008, 11:59:20 PM1/15/08
to minT...@googlegroups.com

கோயில்களில் எருதுகள் நந்தி எனும் பெயரில் இடம்பெற்றதன் நோக்கமும் காரணமும் என்ன? விளக்குங்கள்.



--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Vijay kumar

unread,
Jan 16, 2008, 12:35:51 AM1/16/08
to minT...@googlegroups.com
முதல் முதலில் சிவனின் உருவ வடிவம்  Indus valley civilisation போது கிடைகிறது என்று அறிகிறேன். அங்கே சிவன் (பசுபதன்) தபசியாக சித்தரிக்கப் பட்டுள்ளான் .  அதே சித்தரிப்பில் மாடு ஒன்று இருப்பதையும் காண இயலும். .  காலப்போக்கில் நந்தி சிவ பூதகன தலைவன் என்றும் ( பிள்ளையார் அந்த பதவியை எடுப்பதற்கு முன்) படித்துள்ளேன். நந்தி பற்றி பல கதைகள் உள்ளன - எனினும் சிவ கண தலைவன் என்ர முறையில்  சிவ ஸ்தலத்தை காக்கும் நோக்கத்தோடு நந்தி சிவனின் முன் உள்ளார் என்று நான் நினைக்கிறேன். 
 
 இந்த நிலையில் ஒன்று நாம் காண வேண்டும் - மல்லை சிற்பங்களில் முருகர் சொம்ச்கந்தர் உருவில் காண இயலும் ஆனால் விநாயகரை காண இயலாது ? இது மல்லையை  ஒட்டி உள்ள புதிர்களில் ஒன்று.
 
sources :
i-shiva-big.jpg
pashupati_sm.jpg

Vijay kumar

unread,
Jan 16, 2008, 3:03:28 AM1/16/08
to minT...@googlegroups.com

காஞ்சியின் கைலாசானாதா கோவிலில் இருக்கும் மிக அற்புத சிற்பம் இது. ..   சிவ  பிக்ஷாதன சிலை.

சிவன் அழ்கிய வாளிப தோண்டி வடிவில், தன் உடமைகளை ஒரு தடியில் கட்டிக் கொண்டு, தங்கள் தவ வலிமையில்  ஆணவம் பிடித்த முனிவர்களின் கர்வம் அடக்க, அவர்களது பத்தினிகளை மயக்கும் வடிவம்.
 
அய்யனின் அழகில் மயங்கி காலில் படிந்து வணங்கும் ரிஷி பத்தினி மார்கள் இருவர், சிவனின் கலைந்த (முடியாத ) தலை அலங்காரம், விஷமச் சிரிப்பு,  கால் சற்றே வளைந்து மடங்கி ( பாதத்தில் இருக்கும் செருப்பை பாருங்கள்) மிக இயல்பாக நிற்கும் கோலம். இதை கண்டு சினம் கொண்டு ஐய்யனை அடிக்க கை உயர்த்தி நிற்கும் ரிஷி .......
 


On 1/16/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
bikshadana.jpg

Vijay kumar

unread,
Jan 17, 2008, 1:42:18 AM1/17/08
to minT...@googlegroups.com
காஞ்சியின் கைலாசானாதா கோவிலில் இருக்கும் சிவ  பிக்ஷாதன சிலையை நேற்று பார்த்தோம். அந்த கதையின் இன்னொரு பாத்திரமான விஷ்ணு மோகினி அவதார வடிவினை அதே காஞ்சியின் தேவராஜ் ( ஆம் முதலில் கல் சங்கிலி கொண்ட கல்யாண மடபம்) சுவாமி கோவில் தூணில் பார்க்கலாம். ரிஷி பத்தினிகளை சிவன் மயக்க, ரிஷிகளை மோகினி உருவத்தில் விஷ்ணு மயக்கினார். இரு கைகளிலும் மதுபானம் கொண்டு நிற்கும் மோகினி, வலது புறத்தில் அவள் அழகில் மழங்கி நிற்கும் இரு ரிஷிகள், இடது புறத்தில் இரு கைகளாலும் மது பாணத்தை பெரும் இரு ரிஷிகள் , மோகினி வடிவத்து அழகிய அணிகலன்களும், உடை அலங்காரமும் அற்புதமாக செதுக்கி உள்ளனர். தமிழ் தூணும் அல்லவா கதை பாடுகிறது.
 
Image courtesy - American Institute Of Asian Studies, photo archive...
mohini.jpg

வேந்தன் அரசு

unread,
Jan 17, 2008, 7:37:39 PM1/17/08
to minT...@googlegroups.com


2008/1/17 Vijay kumar <vj.ep...@gmail.com>:

காஞ்சியின் கைலாசானாதா கோவிலில் இருக்கும் சிவ  பிக்ஷாதன சிலையை நேற்று பார்த்தோம். அந்த கதையின் இன்னொரு பாத்திரமான விஷ்ணு மோகினி அவதார வடிவினை அதே காஞ்சியின் தேவராஜ் ( ஆம் முதலில் கல் சங்கிலி கொண்ட கல்யாண மடபம்) சுவாமி கோவில் தூணில் பார்க்கலாம். ரிஷி பத்தினிகளை சிவன் மயக்க, ரிஷிகளை மோகினி உருவத்தில் விஷ்ணு மயக்கினார். இரு கைகளிலும் மதுபானம் கொண்டு நிற்கும் மோகினி, வலது புறத்தில் அவள் அழகில் மழங்கி நிற்கும் இரு ரிஷிகள், இடது புறத்தில் இரு கைகளாலும் மது பாணத்தை பெரும் இரு ரிஷிகள் , மோகினி வடிவத்து அழகிய அணிகலன்களும், உடை அலங்காரமும் அற்புதமாக செதுக்கி உள்ளனர். தமிழ் தூணும் அல்லவா கதை பாடுகிறது.
 
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னோடு வந்து கறியோடு பெயரும

வேந்தன் அரசு

unread,
Jan 17, 2008, 7:43:39 PM1/17/08
to minT...@googlegroups.com


2008/1/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
மன்னிக்கவும்.
நான் இட விரும்பியது இந்த வரிகள்
 
 
யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன் செய் புனைகலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்க இனிது ஒழுகுமதி'
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Vijay kumar

unread,
Jan 17, 2008, 8:44:51 PM1/17/08
to minT...@googlegroups.com
Hi sirs,
 
Dr. Nagaswamy's book Roman Karur is available online below
 
check chapter 14 for literary references:
 
also an interesting news in todays hindu
 
rgds
vj

வேந்தன் அரசு

unread,
Jan 17, 2008, 9:55:30 PM1/17/08
to minT...@googlegroups.com
சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் கயவாகு, நூற்றுவகனன்ர் இருவரும் கி.மு காலத்தவர்.
 
சங்கத்தில் நந்தர்கள், வம்ப மோரியர்கள் குறிப்படப்படுகிறார்கள். ஆனால் குசானர்கள், குப்தர்கள், பல்லவர்கள் குறிப்பிடபப்டவில்லை
 
எனவே சங்க காலம் நந்தர்கள், வம்ப மோரியர்கள் காலத்துக்கும் குசானர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம். புத்த மதத்தை பரப்புவதில் இவர்களின் பங்கும் இருந்ததால் இவர்களும் தமிழகத்தில் அறியப்பட்டு இருக்கலாம்.
 
அக்கால கட்டத்தில் வடக்கே புகழ்பெற்ற பேரசர்கள் யாரும் இல்லாமல் போனதால் தமிழ் அரசர்கள் இமயம் பயணம் எளிதாக அல்லது வரலாற்றில் இடம்பெறாமல் சென்றிருக்க்லாம்

Narayanan Kannan

unread,
Jan 17, 2008, 11:11:28 PM1/17/08
to minT...@googlegroups.com
விஜய்:

டாக்டர் நாகசாமியின் ஆயிரக்கணக்கான தொல்பொருள் slides களை சேகரிக்க பல
ஆண்டுகளாக முயன்று வருகிறேன். அதை அவரே வெளியிட்டால் இன்னும் சௌகர்யம்!

கண்ணன்

2008/1/18 Vijay kumar <vj.ep...@gmail.com>:

--
"Be the change you wish to see in the world." -Gandhi

Be paid for surfing the internet. http://www.agloco.com/r/BBCP7818

Vijay kumar

unread,
Jan 18, 2008, 12:07:37 AM1/18/08
to minT...@googlegroups.com
அடுத்து ஒரு மிக அறிய சிலையை காணப்போகிறோம்.  திரு குடவாயில் பால்சுப்ரமனியாம் அவர்கள் இச்சிலையின் நுணுக்கங்களை தி ஹிந்து ( The Hindu)  நாளிதழில் விளக்கி உள்ளார்.
 
 
தற்போது தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிற்பம் தராசுரம் கோவிலை சார்ந்தது.

முதலில் கதை - சிவன் வீரட்டானம் எனப்படும்  சிவனின் வீரம்  வெளிப்பட்ட  ஸ்தானம்  - மொத்தம் எட்டு -  கஜசம்ஹாரம்  - மன்மதன் தகனம்  - மார்கண்டேய புராணம் ....

கஜசம்ஹாரம் சம்பந்தர்  தேவாரத்திலும் இடம் பெறுகிறது - மூன்றாம் திருமுறை பாகம் இரண்டு ... "யானையுரி பொர்த்துமகிழ்" என்ற வரிகளை காண முடியும்.... யானை - உரி ( தோல் ). பேரூர் பட்டேஸ்வரர் கோவிலிலும் மிக அழகிய பிரமாண்ட யானையுரி  போர்த்தியமூர்த்தி சிலையை காணலாம் - புகை படம் எங்கு உள்ளது என்று தேடி அடுத்த மடலில் இடுகிறேன்.

கஜாசுரன் என்ற அசுரனை வதம் செய்து ...அதுவும் எவ்வாறு ... யானை உருவில் இருந்த அசுரனின் துதிக்கை மூலம் அவனுள் சென்ற சிவபெருமான் அவன் உடலை உள்ளிருந்து கிழிக்கும் காட்சி இது. அவனுடைய தலையின் மேல் ஒரு காலை இட்டு, அவன் தொலை கரங்களால் தூக்கி போற்றிய வாறு உக்ரதாண்டவம் ஆடும் கோலம்.

ஆனால் நாம் காணவிருக்கும் இந்த கஜசம்ஹாரம் சிலை மிகவும் விநோதமானது. உடம்பை முறுக்கி ஆடும் தோற்றம் மிக கடினமான வடிவம் - அதை தத்ருபமாக செதுக்கி உள்ளான் , கை நகங்கள் யானை தொலை கிழித்து வெளிவருகின்றன, யானையின் பின்னங்கால் மற்றும் வால் சிலையின் தலை பாகத்தில் காணலாம். உக்ரமான இந்த ஆட்டத்தை காணும் உமை, தன் மடியில் இருக்கும் குழத்தை முருகன் இதை கண்டு பயமுருவானோ என்று அஞ்சி அவனை வேறு பக்கமாய் மறைக்குமாறு செதுக்கி உள்ள சிற்பியின் கற்பனை அபாரம். அதை விட விந்தை என்ன வென்றால், உமையின் இந்த நிலையை காணும் சிவன் இரு பல் வரிசை காட்டி சிரிக்கிறார் - ஆனால் அந்த மகா சிற்பி இதை எவ்வாறு செதுக்கி உள்ளான் என்று பார்க்கவேண்டும். சிவனின் முகத்தை இரு பதியாக பிரித்து, உமையை காணும் பாகம் பல் வரிசை காட்டி சிரிப்பது போலவும், மற்ற பாதி உக்ர தாண்டவம் ஆடும் சிவனின் ஆக்ரோசத்தை கட்டும் வகையில் கோரப் பல் வேலி தெரிய கோபமாக செதிக்கி தன் அற்புத கலை அறிவு / ஆற்றல் இரண்டையும் வெளி கொணர்கிறான்.  சுமார் ஐந்து அடி உயரம் உள்ள சிலையின் ஒரு ஓரத்தில் இருக்கும் உமை மற்றும் முருகனை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி சிவனின் இடது கை விரலை அங்கே காட்டி செதுக்கி உள்ள திறன் அருமையிலும் அருமை.

Image courtesy - American Institute Of Asian Studies, photo archive...

ar_009817.jpg
ar_009818.jpg

Vijay kumar

unread,
Jan 21, 2008, 6:06:54 AM1/21/08
to minT...@googlegroups.com
சென்ற மடலில் பார்த்த யானை உரி போர்த்திய மூர்த்தி சேலையின் வேறு ஒரு தோற்றம் கோயம்புத்தூர் அருகில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் காணலாம். அங்கு புகை படம் எடுக்க தடை, அதனால் இணையத்தில் தேடி  தி ஹிந்து ( The Hindu)  நாளிதழில் ( கிழ் உள்ள )அந்த அற்புத சிற்பங்களை வாசகர்கலளுக்கு அளிக்கிறேன்.
 

புகை படைகளை பார்க்கும் போது ஒன்று மனதில் கொள்ளுங்கள் - இவை அனைத்தும் வெறும் சிற்பங்கள் அல்ல - இவை ஒரே கல்லால் ஆனா தூண்களும் கூட - ஆங்கிலத்தில் மொனோளிதிக் ( monolothic sculpture) என்று அழைப்பார்கள் ... சுமார் பத்து அடி உயரம் உள்ள இவை மிக பிரமாண்ட முறையில் செதுக்க பெற்றன.  யானை உரி போர்த்திய முர்த்தி - பின்னால் சென்று பார்த்தல் - யானின் முழு தோற்றத்தையும் காணலாம்.  மற்ற சிலை தூண்களும் அற்புதம்... மூஷிக வாகனத்தின் மேல் அழாக காலை
 தூக்கி எட்டு கரங்களுடன் ஆடும் நர்தன கணபதி, பிரம்மா மற்றும் விஷ்ணு அழகாக தாளம் இட காலை தலைக்கு தூக்கி  உக்ர தாண்டவம் ஆடும் சிவன், அழகிய காலி, ஆறு முகன் அழகே மயில் மீது தன் பன்னிரண்டு கைகளுடன் அமர்ந்து இறக்கும் காட்சி, மிகவும் ஆக்ரோஷமான கையில் நீண்ட சூலாயுதத்துடன் வீரபத்ரர் 
 .. அந்த சூலத்தின் வடிவம் எதோ உலோகத்தில் வார்த்தது போல் இருக்கிறது - அதனிலும் அருமை அதை பிடித்து இருக்கும் கை விரல்களின் உயிரோட்டம் ....

இவற்றை தவிர மேலும் பல அறிய வேலைபாடு மிக்க தூண்களும் சிற்பங்களும் அங்கு உள்ளன, கோவை சென்றால் கண்டிப்பாக பேரூர் சென்று மகிழுங்கள்.
2005052700390303.jpg
2005052700390304.jpg
2005052700390305.jpg
2005052700390306.jpg
2005052700390307.jpg
2005052700390308.jpg
nataraja sabha.jpg

Vijay kumar

unread,
Jan 21, 2008, 10:54:15 PM1/21/08
to minT...@googlegroups.com
முன்பு கம்போடியா பண்டேய ஸ்ரெய் இந்திரன் சிற்பம் கண்டோம். இப்போது அதே இடத்தில் உள்ள இன்னொரு சிற்பத்தை பார்போம்.
 
 
இது நம்மை சற்று யோசிக்க வைக்கும் சிற்பம். ஏன் என்றால் இது யாரை குறிக்கிறது என்று ஒரு சர்ச்சை. கிழே உள்ள டச்சு மொழி தகவல் இதனை காறைகால் அம்மையார் என்று அடையாளம் கொல்கிறது.
 
அம்மையார் பற்றி மேலும் அறிய கீழே சொடுக்கவும்.
 
 
ஆனால் ஆடல் வல்லானின் ஆடல் தோற்றத்தை இன்னொரு எலும்பு
 வடிவம் கொண்ட ரிஷி காண்பதாக நாம் படிக்கிறோம். அவர் பிருங்கி ரிஷி. .அவர் சிவனை மட்டுமே வழி பட்டதால் சினமுற்ற உமை சிவனின் ஒரு பாதி கொண்டு அர்த்தநாரி என்ற அழகிய வடிவத்தை கொண்டால். பிருங்கி ரிஷியோ இதனையும் பொருட்படுத்தாமல் ஒரு வண்டாக உரு கொண்டு அர்த்தனாரியின்  சிவன் பக்கம் மட்டும் துளைத்துக் கொண்டு வழிபட்டார். உமை மேலும்  சினம் கொண்டு அவரது உடலில் உள்ள ஷக்தியை எடுத்து அவரது உருவத்தை எலும்புக்  கூடாக மற்றியதாய் கதை. அத் தோற்றத்தில் அவரால் நிற்க இயலவில்லை, அதை கண்ட சிவன் அவருக்கு மூன்றாவது கால் கொடுத்தார்.

கம்போடியா சிற்பத்தில் மூன்று கால் உள்ளதா என்று சரியாக தெரியவில்லை - ஆனால் எலும்பு கூடு என்று தெரிகிறது.

skelewithnatarajar.jpg

Narayanan Kannan

unread,
Jan 21, 2008, 11:25:53 PM1/21/08
to minT...@googlegroups.com
விஜய்:

இத்தொடர் பல அறிய தகவல்களைத் தந்து யோசிக்க வைக்கிறது!

அங்கோர்வாட் நம்மவர்களால் இன்னும் முழுமையாய் ஆராயப்படவில்லை. பிரெஞ்சு,
டச்சு, ஜப்பானியர்தான் இதை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஏன் இந்தியா
இதில் ஆர்வம் காட்டவில்லை? நம் மடங்களெல்லாம் காசை வைத்துக் கொண்டு என்ன
செய்கின்றன? ஒரு டூர் போய்விட்டு வந்து எதாவது எழுதினால் தேவலை :-)

அங்கோர்வாட் பிரகார நிர்மாணம் நான்கு யுகங்களின் அலகுகளை வைத்து
அமைக்கப்பட்டதாக டூர் கெயிடு சொன்னார். அதே போல் அதன் நிலைகள் (vertical
profile), பாதாள, பூலோக, வைகுந்த நிலைகள் போல் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பெருமாள் நின்ற திருக்கோலமாக இருந்திருக்க வேண்டும். இப்போது மூர்த்தி
இல்லை.

கண்ணன்

2008/1/22 Vijay kumar <vj.ep...@gmail.com>:

> அதனிலும் அருமை அதை பிடித்து இருக்கும் கை விரல்களின் உயிரோட்டம் ....இவற்றை

Vijay kumar

unread,
Jan 22, 2008, 12:00:42 AM1/22/08
to minT...@googlegroups.com

நரசிம அவதாரம் ஒரு புதிய கோலத்தில் அங்கு காணலாம். இதில் இருக்கும் இன்னொரு சிற்பமும் மிக அறிய ஒன்று... துரியோதனன் பிமனுடன் சண்டையிடும் காட்சி என்று இதனை நாம் எவ்வாறு அறிகிறோம் .... கலப்பை ஆயுதம் ஏந்தி நிற்கும் பலராமர் மூலம்......



On 1/22/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:

நன்றி கண்ணன். மிக அறிய சிற்பங்கள் அங்கு உள்ளன.

நரசிம அவதாரம் ஒரு புதிய கோலத்தில் அங்கு காணலாம். இதில் இருக்கும் இன்னொரு சிற்பமும் மிக அறிய ஒன்று... துரியோதனன் பிமனுடன் சண்டையிடும் காட்சி என்று இதனை நாம் எவ்வாறு அறிகிறோம் .... கலப்பை ஆயுதம் ஏந்தி நிற்கும் பலராமர் மூலம்......

இன்னும் வினோதங்கள் பல உள்ளன. சென்ற மாதம் இந்த தளத்தில் கண்ட செய்தி...

http://www.bible.ca/tracks/tracks-cambodia.htm

டைனாசௌர் சித்திரம் இங்கு உள்ளது.... இதை அவர்கள் நேரில் கண்டர்களா ?? பின் எப்படி இதனை வடித்தார்கள்

நமது கோவில்களில் யாழி போன்று சிற்பங்கள் கற்பனை என்றாலும் அதிலும் ஒரு புதிர்... நம் சரித்திரங்கள் போற்றும் பாலும் நீரும் கலந்த நிலையில் பாலை மட்டும் பிரித்து அருந்தும் ( நல்லதை மட்டும் எடுக்கும் உதாரணம்....) அண்ணப்பக்ஷி கற்பனையா இல்லை அழிந்த உயிரினமா ....பேரூர் கோவில் தூணில் அழகிய அண்ணப்பக்ஷி

 

narasimha.jpg
narashimha2.jpg
bhima_duryodhana.jpg

Vijay kumar

unread,
Jan 22, 2008, 12:09:56 AM1/22/08
to minT...@googlegroups.com

இன்னும் வினோதங்கள் பல உள்ளன. சென்ற மாதம் இந்த தளத்தில் கண்ட செய்தி...

http://www.bible.ca/tracks/tracks-cambodia.htm

டைனாசௌர் சித்திரம் இங்கு உள்ளது.... இதை அவர்கள் நேரில் கண்டர்களா ?? பின் எப்படி இதனை வடித்தார்கள்

நமது கோவில்களில் யாழி போன்று சிற்பங்கள் கற்பனை என்றாலும் அதிலும் ஒரு புதிர்... நம் சரித்திரங்கள் போற்றும் பாலும் நீரும் கலந்த நிலையில் பாலை மட்டும் பிரித்து அருந்தும் ( நல்லதை மட்டும் எடுக்கும் உதாரணம்....) அண்ணப்பக்ஷி கற்பனையா இல்லை அழிந்த உயிரினமா ....பேரூர் கோவில் தூணில் அழகிய அண்ணப்பக்ஷி



dino.JPG
ar_058743.jpg

Narayanan Kannan

unread,
Jan 22, 2008, 1:23:14 AM1/22/08
to minT...@googlegroups.com
Stegosaurs carving உண்மையிலேயே ஆச்சர்யம்தான்!
எப்படி?

கண்ணன்

2008/1/22 Vijay kumar <vj.ep...@gmail.com>:
>
>

Vijay kumar

unread,
Jan 22, 2008, 2:18:23 AM1/22/08
to minT...@googlegroups.com

பிரிங்கி ரிஷியின் சிலைகள் பல சிவன் கோயில்களில் காணலாம். சிலவற்றை இணைத்துள்ளேன். இவர் படாஞ்சலி முனி  மற்றும் புலி கால் முனி ( வ்யாகபதர் ) பற்றி பல சுவாரசியமான விஷயங்கள் உண்டு. நேரம் கிடைக்கும் போது இடுகிறேன்.

நன்றி

http://www.kamat.com/kalranga/mythology/7667.htm

South Indian shrines illustrated By P. V. Jagadisa Ayyar



On 1/22/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
bringhi rishi.JPG
bringi.JPG
7667.jpg

Vijay kumar

unread,
Jan 22, 2008, 2:50:04 AM1/22/08
to minT...@googlegroups.com
தைபுசம் மற்றும் சோமாஸ்ச்கந்தர் பற்றி மடல் பார்த்தேன். பல்லவ கலை தந்த மிக அற்புத படைப்பு இந்த வடிவம். இதனை அவர்கள் முதல் முதலில் கற் கோயில்களில் கற்சிலையாக வழிபடவில்லை - முதலில் இவ்வடிவம் மரத்தில் செதுக்க பெற்று கோயில் கர்பக்ரத்தில் வைத்து வழிபட்டனர். காலப்போக்கில் இவை சிதைந்து போவதை கண்டு, அவற்றை மண்டபத்தின் பின் சுவரில் செதுக்கினார்கள்.
 
இந்த அறிய தோற்றம் முதலில் எவ்வாறு இருந்தது, பின் எவ்வாறு மற்றம் கொண்டது என்று திரு Gift Siromoney அவர்கள் ஆராய்ந்து
அதை கொண்டு பல்லவ மல்லையை கட்டிய அரசன் / அரசர்கள் யார் என்று ஒரு கருத்து இட்டுள்ளார்.. கீழே காணலாம்.
 
 
முதலில் உமை சிவனை பார்த்தபடி அமர்த்து இருப்பதை காணலாம், மெதுவாக உமை உருவம் வழிபடுவோர் பக்கம் திரும்புவதும், அதை இயல்பாக காட்ட உமையின் இடது கரம் மேடையில் முட்டு கொடுக்குமாறு செய்தனர், அவ்வாறே உடை மற்றும் அணிகலன்கள் அதிகரிப்பதையும் காணலாம். சிவனும் தன் கால்களை மாற்றி அமருமாறு (to achive a balance in the composition ) செய்துள்ள வடிவம் மிக அருமை. மேலும் மேலே  பறக்கும் கணங்களுக்கு பதில் விஷ்ணுவும் பிரமனும் காணலாம். மல்லையில் எங்கும் சோமாஸ் ச்கந்தர் உருவம் தான். 
 
நிறையே நபர்கள் மல்லை செல்லும் போது மல்லைக்கு சற்று முன் இருக்கும் புலி குகை என அழைக்கப்படும் சலுவன்குப்பம் ( சலுவன் என்பவன் ஒரு விஜய நகரத்து அரசன் - சாளுவ நரசிமன்
) குடவரை கோயிலை பார்க்க மரகின்றன்ர். ( இதை பற்றி அடுத்த மடலில் பார்போம்)

பல்லவர் இவ்வாறு மிக அழகன உருவத்தை படைத்தனர். அதனை நம் சோழர் கலையின் உச்சிக்கே எடுத்து சென்றனர் - கல்லில் அல்ல ....உலோகத்தில்

somaskandaII.jpg
somaskanda.jpg
mallaisoma.jpg
somashoretem.jpg
thondai4.jpg
d20649.jpg

venkatram dhivakar

unread,
Jan 22, 2008, 4:25:40 AM1/22/08
to minT...@googlegroups.com
விஜய்,
சாளுவநரசிம்மனுக்கு இன்னொரு பெயர் 'செல்லப்பன்'. இந்த அரசன் முயற்சியால்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் எழுப்பப்பட்டது என்று
சரித்திர ஆராய்ச்சியாளர் 'பர்ட்டன் ஸ்டெய்ன்' தனது 'விஜயநகர' புத்தகத்தில் எழுதியிருக்கிறார். சாளுவநரசிம்மன் மதுரையில் settlement செய்யச் சென்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரும் சென்றாராம். அந்தக் கோயில் பாழடைந்து கிடந்தகாட்சியும், ஆண்டாள் சின்னஞ்சிறுமியாய் அந்த ஊரில் சோகமாக நடமாடுவது போலவும் (ஊகித்திருக்கலாம்) கண்டதாகவும், அதன் பிறகே அங்கு பெரிய கோபுரமும், கோயில் மராமத்து பணிகளும் செய்தார்.
 
இந்த சாளுவநரசிம்மன் பெயர் ஏன் சரித்திரத்தில் சரியாக இடம்பெறவில்லை என்று தெரியவில்லை. ஏறத்தாழ ஒரு சக்ரவர்த்தியாகவே - திருப்பதியை அடுத்த சந்திரகிரி கோட்டையை - தலைமை இடமாக கொண்டு (கி.பி. 1480-90/1505) ஆட்சி செய்திருக்கிறார்.
 
சரி.. பிரமன் (பிரும்மா) சடாமுடி கொண்டவராமே! தஞ்சைக் கோயில் சிற்பம் உள்ளதாக கு.பா எழுதியுள்ளார். லகுளீசர் என்ற காசி பண்டிதர் சொல்லியபடி ராஜ ராஜன் அமைத்த சிற்பம் அது.. கிடைத்தால் இங்கு போடலாமே!
 
திவாகர்
 

Vijay kumar

unread,
Jan 22, 2008, 4:58:58 AM1/22/08
to minT...@googlegroups.com

ஆம் திவாகர் சார், இது போன்று சரித்திரம் மறந்த மாமனிதர்களில் இருவர் நினைவுக்கு வருகின்றனர். ஒருவர் சோழர் வழி வந்த செம்பியன் மாதேவி மற்றொருவர் பல்லவ வழி காடவ கொபெருஞ்சிங்கன்....இருவரும் தனி முயற்சியால் பல்வேறு கோயில்களை கட்டினர். எனினும் அவர்களை நாம் மறந்து விட்டோம்.

பிரம்மா சிலை பற்றி தங்களுக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன்

venkatram dhivakar

unread,
Jan 22, 2008, 5:27:01 AM1/22/08
to minT...@googlegroups.com
சாளுவ நரசிம்மன் - கோப்பெருஞ்சிங்கன்
 
இருவருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது.
 
இருவருமே பல்லவநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
 
எப்படி நரசிம்மர் ஒரு சக்கரவர்த்தியாக ஒரு சில ஆண்டுகள் தென்னிந்தியாவில் ஆட்சி செய்தாரோ அதே போல கோப்பெருஞ்சிங்கனும் ஒருசில ஆண்டுகள் சேந்தமங்கலத்தில் இருந்துகொண்டே சக்கரவர்த்தியாக ஆட்சி செய்திருக்கிறான் (சோழசக்கரவர்த்தியையே சிறையெடுத்தவன்). இருவருமே கோயில் திருப்பணிகளில் முழுமையாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பல கோயில்கள் இவர்களால் சீரமைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் நரசிம்மர் புகழ் பேசும் என்றால் தில்லை கோபுரங்கள் சிங்கனின் புகழ் பேசும். இருவருமே அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் கூட! (ஏனெனில் இவர்கள் வாரிசுகள் இவர்களைப் போல வளரவில்லை.)
 
இருவருக்கும் கால வித்தியாஸம் ஏறத்தாழ 200 ஆண்டுகள். ஆனாலும் நரசிம்மர் தீவிரவைணவர். சிங்கன் படுசைவன். கோபெருஞ்சிங்கனைத் தமிழராக மற்ற அரசர்கள் பாவித்தனர். சாளுவநரசிம்மரை வடுகராக மற்றவர்கள் பார்த்தார்கள்.
 
இப்போதும் திருப்பதி-பெங்களூரு வழித்தடத்தில் திருப்பதியை தாண்டின உடனேயே ஒரு பாழடைந்த கோட்டை தென்படும். அங்கிருந்துதான் நரசிம்மர் தென்னிந்தியாவையே ஒரு ஆட்டு ஆடுவித்தார்.

Vijay kumar

unread,
Jan 22, 2008, 5:44:23 AM1/22/08
to minT...@googlegroups.com
கம்போடியா பற்றி பேசும்போது ஒரு அறிய இடம் நினைவுக்கு வருகிறது. இது கபால் ச்பியாயன் ( kabal spean) .... இதை ஆயிரம் லிகம் கொண்ட ஆறு என்று அழைகின்றனர். river of a thousand lingas.
 
ஏன் ??

படங்களை சற்று பாருங்கள்.

ஆற்றின் மடியில் நீரோட்டத்தில் என்னாலும் குளிர்ந்த நீறாடும் லிங்கங்கள். அருமையான பிரம்மா .... ஆறு துள்ளி விழும்  சிறு நீர்விழ்சியின் பாறையில் படுத்த கோலத்தில் விஷ்ணு காலில் லக்ஷ்மி நாபியில் இருந்து எழும் தாமரையில் பிரம்மா ... அவர்களை அடுத்து  நந்தியில் அம்மை அப்பன். ....பாறைகள் அனைத்துமே லிங்க வடிவில் .....

 வருத்தப் பட வேண்டிய விஷயம் ஒன்று ... கலை பொருள் திருடர்கள் சமிபத்தில் இந்த அறிய சிற்பங்களை சிதைத்து திருடிசென்றுள்ளனர். அதிலும் கொடுமை என்ன வென்றால் இது வேவ்வேறு நாள்களில் தொடர்ந்து நடை பெற்றுள்ளது .... படம் பிடித்தும் கூட காப்பாற்ற இயலவில்லை. ....

brahma.jpg
shiva.jpg
08.jpg
1000.jpg
Kbal%20Spean%202.jpg
recvis01.jpg
vandal1.jpg
vandal2.jpg

kra narasiah

unread,
Jan 22, 2008, 9:59:15 AM1/22/08
to minT...@googlegroups.com
I must admit I have missed them or for that matter I
might have thought the figure is that of Varaha!
Kudos Vijaya Kumar.
But how did they know?
Handed down by generations? The animal world as known
to the sculptors ancestors might have been handed down
through sketches - many links are missing in our
ancient history. It is worthwhile to consider these
things deeply.
Thanks to Vijaya Kumar once again
narasiah

____________________________________________________________________________________
Never miss a thing. Make Yahoo your home page.
http://www.yahoo.com/r/hs

Tirumurti Vasudevan

unread,
Jan 22, 2008, 10:13:17 AM1/22/08
to minT...@googlegroups.com
ஹலபேடுவில் ஒரு சிற்பம். சத்தியமாக அது பல ஏவு கணைகளை வீசும் பொறி (multi
missile launcher)

திவா

vj.ep...@gmail.com

unread,
Jan 22, 2008, 10:36:27 AM1/22/08
to மின்தமிழ்
hi sir

I had posted this in another forum and they claimed it resembled the
tapir - but the tapir has an elongated nose and a short tail - whereas
the animal represented here has the distinct armour on its tail
( plates) as well. but its very very unusual - the only possible link
could be some primitve cave paintings or a fully preserved fossil!!!
also maybe when someone goes down there, need to check this as well -
these days with advanced computer imagery anything could be a spoof.
( but this one was too convincing)

rgds
vj
p.s Please check my post for the original site referred. they deserve
the praise for this..a lot more images as well.

On Jan 22, 6:59 am, kra narasiah <naras...@yahoo.com> wrote:
> I must admit I have missed them or for that matter I
> might have thought the figure is that of Varaha!
> Kudos Vijaya Kumar.
> But how did they know?  
> Handed down by generations? The animal world as known
> to the sculptors ancestors might have been handed down
> through sketches - many links are missing in our
> ancient history. It is worthwhile to consider these
> things deeply.
> Thanks to Vijaya Kumar once again
> narasiah
> --- Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > Stegosaurs carving உண்மையிலேயே
> > ஆச்சர்யம்தான்!
> > எப்படி?
>
> > கண்ணன்
>
> > 2008/1/22 Vijay kumar <vj.epist...@gmail.com>:
>
> > > இன்னும்
> > வினோதங்கள் பல
> > உள்ளன. சென்ற மாதம்
> > இந்த தளத்தில் கண்ட
> > செய்தி...
>
> > >http://www.bible.ca/tracks/tracks-cambodia.htm
>
> > > டைனாசௌர்
> > சித்திரம் இங்கு
> > உள்ளது.... இதை
> > அவர்கள் நேரில்
> > கண்டர்களா ?? பின்
> > > எப்படி இதனை
> > வடித்தார்கள்
>
>       ___________________________________________________________________________­_________
> Never miss a thing.  Make Yahoo your home page.http://www.yahoo.com/r/hs- Hide quoted text -
>
> - Show quoted text -

Narayanan Kannan

unread,
Jan 22, 2008, 7:56:25 PM1/22/08
to minT...@googlegroups.com
Dear Vijay, Divakar, Narasiah:
 
This is indeed a mysterious antique. The reason is that Human species never evolved to witness how a dinosaur looked like. So community memory theory won't fit in. It is still only in fiction that man and dinosaurs lived together (I saw a recent English picture (British) on such a theme. btw. Kannadasan has written a novel on that topic as well -kadal koNda thennAdu). They belong to different eras.
 
Having said that this dipiction of stegosaurs, so true to fossil evidences raises several questions. It is highly possible that a distant ancestor of Dinosaur could have roamed (despite a small size) Borneo forests before being extinct (how?).
 
In a simple interpretation, this might represent a type of reptile, a sort of lizard similar to Stegoaurs roamed/still roaming in Asia.
 
To answer another question of Vijay on Annapatchi, there is no documented evidence of such a bird. It is only a mystical bird of human imagination.
 
Kannan
 

Vijay kumar

unread,
Jan 22, 2008, 11:04:17 PM1/22/08
to minT...@googlegroups.com

வஜ்ரா பாணி - இந்திரனின் வஜ்ராயுதம் .....zeus's thunder bolt.... நிறைய இருக்கிறது பிறகு பார்போம்.

பேலூர் ஹலேபிட் சிற்பங்களில் இரண்டு சில கேள்விகளை எழுப்புகின்றன ...

ஒன்று நாம் வில்வித்தை கதைகளில் ( கர்ணன் ) மிகவும் படிக்கும் மச்ச யந்திரம்.

இன்னொன்று ஆடும் பாவை ஆனால் அவள் கால் அடியில் இருக்கும் கருந்தேள் ....எது எதனை குறிக்கிறது.

dancer+scorpion.jpg
machyantiram.jpg

Narayanan Kannan

unread,
Jan 22, 2008, 11:25:55 PM1/22/08
to minT...@googlegroups.com
2008/1/23 Vijay kumar vj.ep...@gmail.com:

இன்னொன்று ஆடும் பாவை ஆனால் அவள் கால் அடியில் இருக்கும் கருந்தேள் ....எது எதனை குறிக்கிறது.

 
May be it is a Zodiac sign? Scorpio?
 
Kannan

Vijay kumar

unread,
Jan 23, 2008, 12:53:01 AM1/23/08
to minT...@googlegroups.com
This sculpture forms a series of dancing girl images - none of the others show such iconography.
 
Similarly, am unable to explain these discreet lizards in many temples at odd places....
 
why do the carvings of these lizards crop up in unusual places...these
are not etched /carved but sculpted. hence cannot say that these were
the work of some bored craftsmen.
 
Image courtesy:
On 1/23/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
koviloor.jpg
bigtemple.jpg

Narayanan Kannan

unread,
Jan 23, 2008, 1:30:26 AM1/23/08
to minT...@googlegroups.com
2008/1/23 Vijay kumar <vj.ep...@gmail.com>:

> Similarly, am unable to explain these discreet lizards in many temples at
> odd places....
>
> why do the carvings of these lizards crop up in unusual places...these
> are not etched /carved but sculpted. hence cannot say that these were
> the work of some bored craftsmen.
>

விஜய்:

இது எளிது!
இது கௌளி. அதாவது நாம் ஏதாவது நினைத்துக் கொண்டிருக்கும் போது கௌளி
(பல்லி) கெலித்தது (சப்தமிட்டது) என்றால் அந்த எண்ணம் பலிக்கும்.
தப்புத்தண்டாவாக நினைத்துக் கொண்டிருக்கும் போது கெலித்துவிட்டது எனில்,
உடனே நான் பதிலுக்கு அதே போல் சப்தமிட்டுவிட்டால், அதன் பலன்
மறுதலிக்கப்படும்!!
ஆகா!! நீங்கள் இதைச் செய்ததில்லையா? பள்ளி நாட்களில் இதுதான் வேலை. பல்லி
முட்டைக்கு இன்னொரு பயன்பாடு சொல்வார்கள் கிராமத்தில். அதையெல்லாம்
எழுதமுடியாது :-)
இவையெல்லாம் பழம் நம்பிக்கைகள். இதன் தோற்றம் என்னவென்று தெரியவில்லை.
இப்போதெல்லாம் வீடுகளில் பல்லி உலாவுகிறதாவென்று தெரியவில்லை. உபயோகமுள்ள
பிராணி.

கண்ணன்

Narayanan Kannan

unread,
Jan 23, 2008, 1:38:04 AM1/23/08
to minT...@googlegroups.com
Vijay:

You set a model for others in archiving with proper citation.
Excellent information.
I wonder when I will have time placing these photos in our "Image
Heritage" blogs. I need a co-blogger to assist me. Anybody with some
time?

Kannan

2008/1/23 Vijay kumar <vj.ep...@gmail.com>:

Vijay kumar

unread,
Jan 23, 2008, 3:13:35 AM1/23/08
to minT...@googlegroups.com
எங்கோ கம்போடியா வில் சிதைந்த சிற்பங்களை கண்டு கண்ணிர்விடும் நாம், நம் நாட்டில் உள்ள கோயில்களுக்கு என்ன செய்கிறோம். 
 
REACH Foundation  என்ற பெயரில் சில நல்ல உள்ளங்கள் கோவில் உழ்வார பணியை செவ்வனே செய்து வருகின்றனர். சற்று அவர்கள் செய்யும் சேவையை கீழே காணுங்கள்.
 
 
 மனம் இருந்தால் அவர்களது தொண்டில் பங்கு பெறுங்கள் - காசு பணம் தர இயலவில்லை என்றால் மாதத்தில் ஒரு நாள் உடல் உழைப்பை தாருங்கள்.

அறிய / அற்புத  கோபுரம் - அஜிஞ்சிவாக்கம் ... beauty in even such a sad state..its making a statement.

புது கும்முடி பூண்டி - அற்புத ப்ரான்ஸ் ( bronze)  சிலைகள் - ஐயோ நெஞ்சம் வெடிக்கிறது - இந்த அவல நிலையை பார்த்தால். முன்பு எழுதினேன் - அது போல் இவை இங்கு இருந்து சிதைவதை விட எங்கோ அமெரிக / ஐரோப்ப கண்காட்சியகங்களில் இருந்து வாழ்வதே மேல்.

 


 
On 1/23/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
Nataraja.0.jpg
shiva%20bronze.0.jpg
temple%20tower.jpg
kali%20at%20the%20tower.0.jpg
beautiful%20tower%20top.0.jpg
shiva%20lingam.0.jpg

Narayanan Kannan

unread,
Jan 23, 2008, 3:29:16 AM1/23/08
to minT...@googlegroups.com
விஜய்:

உங்கள் ஈடுபாடு எலோரையும் இழுக்கட்டும்.

தமிழகம் பொக்கிஷம். அங்கு பாரதி சொல்வது போல் "புகழ் மண்டிக்
கிடக்கிறது"! எதுவுமே மண்டினால் புகழ் இழந்து விடுகிறது. நமது
கோயில்களிம் அதற்கு விதிவிலக்கல்ல. கடவுளே நாளைக்கு கண்ணில்
பட்டிவிட்டால் மதிப்பு இழந்துவிடுவார்! அதுதான் மனித இருப்பியல்!

எனினும், தமிழகத்துத் தமிழர்களும், வெளிவாழ் தமிழர்களும் கைகோர்த்தால்
நிலமையை விரைவில் சீர் திருத்திவிடலாம். இது குறித்த என் சிந்தனைகளைக்
கீழ்சுட்டியில் கொடுத்துள்ளேன்.

http://www.e-mozi.com/articles/adopTemp.html


இந்த உழவாரப்பணிக்குழுவுடன் முதலில் நம் தொண்டை ஆரம்பிக்கலாம். ஆனால்
"காக்க வேண்டிய" அரசு இடையில் வந்து குழப்பினால் என்ன செய்வது என்றும்
யோசனை. அதை விடுவோம். எங்களூர் திருப்பூவணம் சென்ற போது வெளிப்
பிரகாரத்தில் பல பிள்ளைகளுக்கு தேவாரம் சொல்லிக்கொடுக்கும் ஒரு குழுவைக்
கண்டேன். நமது கோயில்களில் இதை ஆதரிக்க வேண்டும். இது போல் எத்தனையோ
யோசனைகள்.

ஆர்வமுள்ளோர் எழுதுகிறார்களா பார்ப்போம்!

கண்ணன்

2008/1/23 Vijay kumar <vj.ep...@gmail.com>:

vj.ep...@gmail.com

unread,
Jan 23, 2008, 3:41:47 AM1/23/08
to மின்தமிழ்

Thanks for your kind words - i was literally in tears when i saw these
bronzes.. especially the one with the termites behind. these are
priceless works that have withstood the ravages of time. That they are
still there is itself a testimoney to the technological brilliance of
the craftmen - the serene smile on the nataraja and the beauty of the
composition is sublime - even in the pathetic state they seem to exude
a surreal charm. if only we knew / realise the greatness of the land
from which we hail .......



On Jan 23, 4:29 pm, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> விஜய்:
>
> உங்கள் ஈடுபாடு எலோரையும் இழுக்கட்டும்.
>
> தமிழகம் பொக்கிஷம். அங்கு பாரதி சொல்வது போல் "புகழ் மண்டிக்
> கிடக்கிறது"! எதுவுமே மண்டினால் புகழ் இழந்து விடுகிறது. நமது
> கோயில்களிம் அதற்கு விதிவிலக்கல்ல. கடவுளே நாளைக்கு கண்ணில்
> பட்டிவிட்டால் மதிப்பு இழந்துவிடுவார்! அதுதான் மனித இருப்பியல்!
>
> எனினும், தமிழகத்துத் தமிழர்களும், வெளிவாழ் தமிழர்களும் கைகோர்த்தால்
> நிலமையை விரைவில் சீர் திருத்திவிடலாம். இது குறித்த என் சிந்தனைகளைக்
> கீழ்சுட்டியில் கொடுத்துள்ளேன்.
>
> http://www.e-mozi.com/articles/adopTemp.html
>
> இந்த உழவாரப்பணிக்குழுவுடன் முதலில் நம் தொண்டை ஆரம்பிக்கலாம். ஆனால்
> "காக்க வேண்டிய" அரசு இடையில் வந்து குழப்பினால் என்ன செய்வது என்றும்
> யோசனை. அதை விடுவோம். எங்களூர் திருப்பூவணம் சென்ற போது வெளிப்
> பிரகாரத்தில் பல பிள்ளைகளுக்கு தேவாரம் சொல்லிக்கொடுக்கும் ஒரு குழுவைக்
> கண்டேன். நமது கோயில்களில் இதை ஆதரிக்க வேண்டும். இது போல் எத்தனையோ
> யோசனைகள்.
>
> ஆர்வமுள்ளோர் எழுதுகிறார்களா பார்ப்போம்!
>
> கண்ணன்
>
> 2008/1/23 Vijay kumar <vj.epist...@gmail.com>:
>
>
>
> > எங்கோ கம்போடியா வில் சிதைந்த சிற்பங்களை கண்டு கண்ணிர்விடும் நாம், நம்
> > நாட்டில் உள்ள கோயில்களுக்கு என்ன செய்கிறோம்.
>
> > REACH Foundation  என்ற பெயரில் சில நல்ல உள்ளங்கள் கோவில் உழ்வார பணியை
> > செவ்வனே செய்து வருகின்றனர். சற்று அவர்கள் செய்யும் சேவையை கீழே காணுங்கள்.
>
> >http://groups.yahoo.com/group/temple_cleaners/
> >http://templesrevival.blogspot.com/2006_08_01_archive.html
>
> >  மனம் இருந்தால் அவர்களது தொண்டில் பங்கு பெறுங்கள் - காசு பணம் தர இயலவில்லை
> > என்றால் மாதத்தில் ஒரு நாள் உடல் உழைப்பை தாருங்கள்.
>
> > அறிய / அற்புத  கோபுரம் - அஜிஞ்சிவாக்கம் ... beauty in even such a sad
> > state..its making a statement.- Hide quoted text -

Vijay kumar

unread,
Jan 23, 2008, 3:50:32 AM1/23/08
to minT...@googlegroups.com
Reposting a few initial mails - that came under a different heading - so that the chain is not lost...
 
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஊடல் கூடல் காதல் ... சிவபெருமானின் அழ்கிய சிற்ப வடிவம் ஒன்றை சமிபத்தில் கோவில் உழாவாரப்பணி குழுவில் கண்டேன்.
 
 
சிவகங்காதரா  என்னும் இந்த அற்புத சிற்ப வடிவம் - இத்தனை கங்கை கொண்ட சோழபுரதிலும் காணலாம். திருச்சி மலை கோட்டையில் உள்ள பல்லவ மகேந்திரனின் புகழ் பெற்ற சிற்பமும் இவ்வடிவமே.

தன் வளகறதால்  தனது ஜடையில் இரு ரோமங்களை சிவன் நீட்ட அதில் கங்கை இறங்கும் அற்புத சிற்ப வடிவம்  - ஆனால் நமது சிர்பியோ ஒரு படி முன்னேறி, இதை காணும் உமை பொறுக்காமல் சினத்துடன் அவிடத்தை விட்டு விலக ஒரு கால் வைக்க, தன் மற்ற இரு கரங்களாலும் சிவபெருமான் ஆசுவாசப்படுத்த முயல்வது போல், அற்புத கற்பனையுடன் செதுக்கி உள்ள அக்காட்சி அருமை.

- Show quoted text -
2 attachmentsDownload all attachments View all images
gkc2.jpg
46K View Download
DSC00400.jpg
53K View Download

Narayanan Kannan

unread,
Jan 23, 2008, 4:04:43 AM1/23/08
to minT...@googlegroups.com
விஜய்:

ஐம்பொன் சிலை வார்ப்பு என்பது பூடகமான கலை. சோழர்கால உலோகக் கலப்பு இன்று
கூட வேதியியல் அறிஞர்களுக்கு பிரம்மிப்பூட்டுகிறது.

நமது கோயில் நிர்மாணம் என்பது எப்படி சாத்தியமாயிற்று, அதுவும் ஒரு கல்-
அதுவே நிலைக்கல், அதுவே கலை வெளிப்பாடு! இதில் சேதாரம் இல்லாமல் எப்படிச்
செய்ய முடிந்தது. கருங்கல்லை இஷ்டம் போல் waste செய்ய முடியாது. யார்
கொண்டு வருவது. அரசன் பிரம்படி கிடைக்கும் (சிவனாருக்கே
கிடைக்கவில்லையா!)
அங்கோர் வாட் கோயில் நிர்மாணம் மிகவும் வேறு படுகிறது. அதுவும் அதிசயமே!

தொடர்ந்து இந்தியாவில் வெளிநாட்டார் ஊடுருவல் நம் கோயில்களை சிதைத்தும்,
அதன் மீதுள்ள அபிமானத்தை சிதைத்தும் விட்டன.

சுயமரியாதை இயக்கம் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் போக்கிவிட்டது.
ஒன்று வந்தால் ஒன்று போய்விடுகிறது.!!

முன்பு நமது வாழ்வு கோயிலைச் சுற்றி இருந்தது. இதனால்தான் இந்தோ-ஐரோப்பிய
கலாச்சாரங்களில் கோயில் ஊரின் நடுவே இருக்கும். ஆனால் இப்போது அது
subaltern நிலைக்கு போய்விட்டது!

கலை உணர்வு முன்பு இருந்தது. அது வளர்த்தெடுக்கப்பட்டது. இப்போது காசு,
காசு என்று அலையவேதான் நேரமிருக்கிறது. ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்வதுபோல்
கலையுணர்வு மரத்துப்போன ஒரு நிலை. நமக்கு எப்போது கண்ணீர் வருகிறது? நம்
நெஞ்சுக்கு மிக அருகிலிருக்கும் ஒன்று நம்மை விட்டுப் போகும் போதுதான்!
நம் கோயில்கள் நம் நெஞ்சை விட்டுப் போய்விட்டன. போலிப் பூசாரிகளும், போலி
பக்தர்களும்தான் கூடிவிட்டனர். இவர்களால் உப்யோகத்தைவிட உபத்திரவமே
அதிகம்.

இப்படி...

கண்ணன்

2008/1/23 vj.ep...@gmail.com <vj.ep...@gmail.com>:

Vijay kumar

unread,
Jan 23, 2008, 4:07:19 AM1/23/08
to minT...@googlegroups.com
தொடர்ந்து  சோககீதம் படாமல் கொஞ்சம் இன்பமான காட்சிகளை காண்போம்.
 
பராமரிக்கப்படும் கோவிலின் எழில் .....
 
சுசிந்திரம் கோவில் கோபுரம் -
 
அற்புத வேலைபாடு மிக்க கோபுரம் - ஆஹா அருமையான பாற்கடலை கடையும் காட்சி - மூஷிக வாகன கணபதி, ..... இவர் யார் - இருபத்தைந்து தலைகள் - எத்தனை கைகள் - அனைத்திலும் விதவிதமான அழுதங்கள்...
 


 
On 1/23/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
IMG_1183.jpg
IMG_1186.jpg
IMG_1187.jpg
IMG_1188.jpg
IMG_1189.jpg
IMG_1196.jpg

venkatram dhivakar

unread,
Jan 23, 2008, 4:28:22 AM1/23/08
to minT...@googlegroups.com
விஜய்,
அது ஒரு பேச்சுக்கு இருபத்தைந்து தலை என்று வடிவமைக்கப்பட்டுள்ளதோ என்னவோ.. கீழே இரண்டு சிம்மங்கள் உள்ளதைக் கொண்டு பார்த்தால் ஆயிரம் கண்ணுடைய தேவியாக இருக்கலாம். தேவியைத்தான் ஆயிரம் கண்ணுடையாள், ஆயிரம் கரமுடையாள் என்று சொல்வார்கள்.
 
ஆனாலும் அற்புதமான வடிவமைப்பு
திவாகர் 

 

Vijay kumar

unread,
Jan 23, 2008, 4:38:28 AM1/23/08
to minT...@googlegroups.com
நாம் முன்பு பார்த்த நந்தி பற்றிய வாதத்தில் பார்த்த இண்டஸ் யோகி மற்றும் நந்தி சிலைகளை தேடும் போது இந்து அறிய வடிவம் கிடைத்தது - பட்டேஸ்வரத்தில் உள்ள இந்த நந்தி சிலை - மனித வடிவம் - கொம்புகள் மட்டும் எக்ஸ்ட்ரா

On 1/16/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
முதல் முதலில் சிவனின் உருவ வடிவம்  Indus valley civilisation போது கிடைகிறது என்று அறிகிறேன். அங்கே சிவன் (பசுபதன்) தபசியாக சித்தரிக்கப் பட்டுள்ளான் .  அதே சித்தரிப்பில் மாடு ஒன்று இருப்பதையும் காண இயலும். .  காலப்போக்கில் நந்தி சிவ பூதகன தலைவன் என்றும் ( பிள்ளையார் அந்த பதவியை எடுப்பதற்கு முன்) படித்துள்ளேன். நந்தி பற்றி பல கதைகள் உள்ளன - எனினும் சிவ கண தலைவன் என்ர முறையில்  சிவ ஸ்தலத்தை காக்கும் நோக்கத்தோடு நந்தி சிவனின் முன் உள்ளார் என்று நான் நினைக்கிறேன். 
 
 இந்த நிலையில் ஒன்று நாம் காண வேண்டும் - மல்லை சிற்பங்களில் முருகர் சொம்ச்கந்தர் உருவில் காண இயலும் ஆனால் விநாயகரை காண இயலாது ? இது மல்லையை  ஒட்டி உள்ள புதிர்களில் ஒன்று.
 
sources :
On 1/16/08, இரவா <vasude...@gmail.com > wrote:

கோயில்களில் எருதுகள் நந்தி எனும் பெயரில் இடம்பெற்றதன் நோக்கமும் காரணமும் என்ன? விளக்குங்கள்.


On 1/16/08, Vijay kumar < vj.ep...@gmail.com > wrote:

இதர மடல்களில் ஜல்லிக்கட்டு பற்றி சுவாரசியமாக விவாதங்கள் நடப்பதை கண்டபின் எருதை அருமையாக பல்லவ சிற்பிகள் செதுக்கிய மல்லை கோவர்த்தனம் சிலைகள் நினைவுக்கு வந்தது. நிற்கும் காளை, அழகாய் அமர்திருக்கும் காளை ( தொண்டை அடியில் தொங்கும் தோலின் மடிப்புகள் அருமையாக செதுக்கி உள்ளார்கள்), பால் கறக்கும் ஆயன், தாய் பசு அன்பாய் தன் கன்றை நாக்கால் நக்கி கொடுக்கும் உணர்வு உயிரோட்டம்...

 பஞ்ச ரத கூட்டத்திலும் இருக்கும் பல்லவ சின்னமான இது ( சிங்கமாக மாறுவதற்கு முன்) உருவத்தில் பெரியதாக வடித்தாலும் அங்க அமைப்புகள் குன்றாமல் செதுக்கிய வண்ணம் அருமை.



On 1/14/08, Vijay kumar < vj.ep...@gmail.com > wrote:

அடுத்த முறை இவிடங்கலுக்கு செல்லும் போது இவற்றை மனதில் கொண்டு செல்லுங்கள்.

சென்னையிலும் அதனை அடுத்த இடங்களிலும் பல அறிய கோவில்கள் உள்ளன. அவற்றை வெறும் தெய்வ வழிபாடு இடங்களாக மட்டும் கருதாமல், கலை வளர்க்கும் பெட்டகங்களாகவே அந்நாளில் தமிழ்ர்கள் கருதினார்.  இதற்க்கு சான்றுகள் பல உண்டு. அவற்றை வரும் வாரங்களில் பார்போம்.

தமிழ்கத்தில் கோவில் கலை தோற்றத்தில் மிக முக்கிய இடம் பிடிக்கும் மல்லைக்கு இப்போது செல்வோம்.  மல்லை ஒரு புரியாத புதிர்.  அவற்றை பட்டியலிட்டால் ஒரு புத்தகமாக வெளியிடலாம் - பல விவாதங்கள் இன்னுமும் நடை பெற்றுக்கொண்டு உள்ளன.

மல்லை யின் சிற்பியின் ( அமரர் கல்கி உருவாக்கிய சிவகாமியின் சபதம் போற்றும் ஆயனர் நினைவுக்கு வருகிறார்) அறிவுக் கூர்மை மற்றும் சிற்ப கலை நுட்பத்தை விளக்கும் சிற்பங்கள் ஏராளம். அதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு.

பஞ்ச பாண்டவ ரதம் என்று இன்று பெயர் பெற்றுள்ள ரதங்களை சென்னைவாசிகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட இடம்.  இங்கே நிற்கும் யானை சிற்பம் மிகவும் அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது நிஜ யானை நிற்பது போல மிகவும் தத்ருபமாக செதுக்கி உள்ள அழகு அருமை. 

ஆனால் எதற்காக அந்த யானை அங்கு செதுக்க பட்டுள்ளது. இதை விளக்க அதனை ஒட்டி உள்ள சகாதேவ ரததிணை பாருங்கள்.  சகாதேவ ரதம் கச ப்ரிச்டம் என்னும் வடிவம் பெற்றது. ( கச - யானை , ப்ரிச்டம் - முதுகு)  இப்போது இணைத்துள்ள படங்களை பாருங்கள். ரத மேல் பாகமும் யானையின் முத்கைய்யும் ஒத்து இருப்பதை உணரலாம். இத்தனை காண்போருக்கு உணர்த்தவே அச் சிற்பங்கள் அங்கு உள்ளன. ஆஹா



On 1/11/08, வேந்தன் அரசு < raju.ra...@gmail.com > wrote:

இந்த சங்கிலியை எப்படி செய்தார்கள் என்று ஒரு கருத்தரங்கமே வைக்கலாம்
 
 

 
2008/1/11 Vijay kumar < vj.ep...@gmail.com>:

சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள காஞ்சிபுரத்தின் புராதன கோயில்களில் ஒன்றான தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப சிற்ப வேலைபாடு இது. ஆனால் பராமரிப்பு இல்லாமையால் இந்த அறிய பொக்கிஷம் கேட்பார் அற்று கிடக்கிறது. விலை மதிப்பில்லா சிற்பங்கல்லுகு தற்போது காவல்  காய்ந்த கருவேல முர்க்களே.

நீங்கள் பார்க்கும் சங்கிலி முற்றிலும் ஒரே கல்லில் செதுக்கப் பட்டது - அதுவும் மேல் இருக்கும் தளத்தில் இருந்து தொங்குமர செதுக்கிய அந்த மகா சிற்பியின் ஆவி தற்போது நில்லையை கண்டால் என்ன பாடு படுமோ. அய்ய்ய்ய்யோ , அக் கற் சிலையை செதுக்க அச் சிற்பி எப் படு பட்டுஇருப்பனோ,

imagine the pain passing through his veins as he delicately brought forth his years of knowledge filtered though generations by word of mouth, passing through his blistered hands, into making this poetry in stone.... அக் கல்லும் அந்த படைப்பாலியின் உழைப்பிற்கு ஆதாரமாக புவி இருக்கும் வரை நிற்க ஆவல் பூண்டு பல நூற்றாண்டுகள் நின்றும் பார்போரை நேகிழ்விதும் வந்திருக்கும் ...நடுவில் வந்தவர்கள் தெரிந்து சிதைதர்கள் - அவர்கள் விரோதிகள் - பகைவர்கள் மன்னிக்கலாம் , இம் மூடர்களோ ...இவர்களை என்ன வென்று சொல்வது - சபிப்பது . இதை பார்த்தால் சில முறை இவை இருக்கும் இடத்தில் இருந்து சிதைவதை விட எங்கோ rockfeller கண்காட்சியில் இருந்து வாழ்வதே மேல் .


On 1/11/08, Narayanan Kannan <nka...@gmail.com > wrote:
நண்பர்களே:

திரு.விஜயகுமார் சுவாரசியமான ஒரு தொடரை ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

இத்தொடரை இத்தலைப்பின் கீழ் இடுமாறு வேண்டுகிறேன். நாம் எல்லோரும் அவரவர்
ஆல்பத்திலிருந்து ஒன்றிரண்டு உருவி இங்கு இடுவோம்.

ஒரு இழையாக இது வரவேண்டுமெனில் இங்குள்ள "பதில்" பொத்தானை அமுக்கி
வெளியிடவும். புதிய சேதியாக இருப்பின், பொத்தானை அமுக்கியபின் காண்கின்ற
பழைய சேதியை அழித்துவிட்டு புதிதாக எழுதி, இணைக்க வேண்டியதை இணைத்து
அனுப்பவம். ஒவ்வொரு இடுகைக்கும் புதிய தலைப்பிட்டால் (never add a new
Title in the "SUBJECT". Then the chain will break. NEVER change the
title, but just "reply") இழை அறுந்து போகும். கவனம்!!

இணைப்பிலுள்ள படம் திருவாசகர் பிறந்த ஊரான திருவாத ஊர். கோயிலில்
நுழைந்தவுடன் வலப்புறம் திரும்பினால் இக்காட்சி படும். கோயில் இடிபடும்
போது விசித்திரம் வெளிவருகிறது! கவனித்துப் பாருங்கள் எப்படி இடுக்கி
போட்டு காலத்தை வென்று நிறகக் கூடிய ஸ்தரத்தன்மையை கோயில் நிர்மாணத்தில்
வழங்குகின்றனர். இது என்ன என்சிநியரிங்?

கண்ணன்





 



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ: http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com



nandhi patteswaram.jpg

Narayanan Kannan

unread,
Jan 23, 2008, 5:33:51 AM1/23/08
to minT...@googlegroups.com
திவாகர்:

அச்சிலையின் கால் பக்தியில் கைலாசம் தெரிகிறது. ஆனால் மயிலும் தெரிகிறது!

மால் மருகன், மாமா போல் விஸ்வரூபம் தருகிறானா? (பெருமாளே! அருணகிரியைக் கேளும் :-)
இல்லை சிவனே அதைத் தருகிறானா?
எல்லாத் தெய்வங்களின் ஆயுதங்களும் உள்ளன.
கண்ணில் பட்டது சங்கும், சக்கரமும்தான் :-)

கண்ணன்

2008/1/23 venkatram dhivakar <venkdh...@gmail.com>:

--

kra narasiah

unread,
Jan 23, 2008, 6:09:36 AM1/23/08
to minT...@googlegroups.com
Hats off to Vijay who is doing an excellent job. I wish I cud help you but as you know my knowledge about bloggong is as much as my late grandmother's knowledge of protoplasm! (or whatever it is!)
narasiah

----- Original Message ----
From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Wednesday, January 23, 2008 12:08:04 PM
Subject: [MinTamil] Re: தமிழகச் சிற்ப/கோயில் விநோதங்கள்!


Vijay:

You set a model for others in archiving with proper citation.
Excellent information.
I wonder when I will have time placing these photos in our "Image
Heritage" blogs. I need a co-blogger to assist me. Anybody with some
time?

Kannan

2008/1/23 Vijay kumar <vj.ep...@gmail.com>:
> This sculpture forms a series of dancing girl images - none of the others
> show such iconography.
>
> Similarly, am unable to explain these discreet lizards in many temples at
> odd places....

____________________________________________________________________________________

Vijay kumar

unread,
Jan 23, 2008, 6:32:11 AM1/23/08
to minT...@googlegroups.com
ஊக்கம் ஊட்டிய அனைவருக்கும் நன்றி. உங்கள் மடல்கள் என்னை தொடர்ந்து எழுத தூண்டுகின்றன.
 
நாம் முதலில் பார்த்த காஞ்சி தேவரஜச்வாமி அலையத்தின் கல்யாண மண்டப கல் சங்கிலியின் வேறு படங்கள் கிடைத்தன.
 
மேல் கூரையில் உள்ள வேலைபாடு அற்புதம் - பார்ப்பதற்கு மாற வேலைபாடு போலவே உள்ளது - இதே போல் தஞ்சை பெரிய கோவிலிலும் உண்டு - தேடி இங்கு இடுகிறேன்
 
என்ன கொடுமை - மாற்ற கோணங்களில் இருக்கும் சில சிதைந்து விட்டன.

வாசகர்களுக்கு இன்னும் ஒரு புதிர். இந்த கல் தூணில் இருக்கும் காட்சி - விஸ்வாமித்ரா முனிவரை மேனகை கவரும் காட்சியா இது - கீழே இருக்கும் வில் ஏந்திய   புருஷன்  காமதேவன் மற்றும் அவன் அருகில் ரதி  தேவி..... விவாதம் தொடறட்டும்

மற்றும் ஒரு தூணில் அழ்கிய திருவிக்ரம சிலை.... நுணுக்கமான வேலைப்பாடு - ஆபரணங்கள், அணிகலன்கள் - உடை அலங்காரம்.
 
அற்புத மண்டபம் - சென்னை வாசிகள் யாராவது காஞ்சி சென்றால் கண்டிப்பாக சென்று படம் எடுத்து இடவும்.
 
visawamitra.jpg
trivikrama.jpg
sadborken.jpg
beautifullawood.jpg

venkatram dhivakar

unread,
Jan 23, 2008, 6:53:24 AM1/23/08
to minT...@googlegroups.com
கண்ணன்,
நான் காளியை நினைத்தேன். தேவியாகத் தெரிந்தாள். நீங்கள் கண்ணனை நினைத்தீர்கள். சங்கும் சக்கரத்தோடும் காட்சி கொடுத்தான். அவ்வளவுதான்.
 
கைலாய யாத்திரை செய்பவர்கள் கைலாய மலையின் தரிசனத்தின் போது அவர்களின் நினைப்புக்குத் தகுந்தவாறு அந்தப் புனித மலை காட்சியளிப்பதாகச் சொல்வர். என்னுடைய அருமை நண்பர் கயிலைச் செல்வர் சிவத்திரு சேதுரத்தினம் அவர்களுக்கு கயிலை மலை விநாயகர் போல காட்சி அளித்ததாம்.
 
'இறுக்கும் இறை இருத்துண்ண எவ்வுலகுக்கும் தன் மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாய் அத்தெய்வநாயகன் தானே'
 
திவாகர்

Vijay kumar

unread,
Jan 23, 2008, 7:30:40 AM1/23/08
to minT...@googlegroups.com
 போலிப் பூசாரிகளும், போலி
பக்தர்களும்தான் கூடிவிட்டனர். இவர்களால் உப்யோகத்தைவிட உபத்திரவமே
அதிகம்.
நன்றாக சொன்னிர்கள் கண்ணன். இப்போதெல்லாம் சன்யாசி / சாமியார் என்றாலே விவேக் மும்தாஜ் மாதிரி பாவாடையுடன் பரவச நிலையில் ஆடுவது தான் நினைவுக்கு வருகிறது .... காஞ்சி பெரிய பெரியவர் இருந்த போது இருந்த தெய்வீகம் எங்கே தேஜஸ் எங்கே ......

2008/1/23 Narayanan Kannan <nka...@gmail.com>:

Tirumurti Vasudevan

unread,
Jan 23, 2008, 10:02:23 AM1/23/08
to minT...@googlegroups.com
ஒண்ணும் பிரம்ம வித்தையில்லையே.
என்ன செய்ய விருப்பம் என்று சொல்லுங்கள். வழி முறை சொல்ல இங்கே பலர் இருக்கிறோம்.
திவா

On Jan 23, 2008 4:39 PM, kra narasiah <nara...@yahoo.com> wrote:
>
> Hats off to Vijay who is doing an excellent job. I wish I cud help you but as you know my knowledge about bloggong is as much as my late grandmother's knowledge of protoplasm! (or whatever it is!)
> narasiah


--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Narayanan Kannan

unread,
Jan 23, 2008, 6:09:32 PM1/23/08
to minT...@googlegroups.com
அஹோ! வாரும் பிள்ளாய் :-)

நீங்கள் இருவருமே உதவலாம். "Image Heritage" Blog-ல் எப்படிப் படங்களைக்
கோர்ப்பது என்று தனிமடல் எழுதுகிறேன். இது Blogger போலில்லாமல் கொஞ்சம்
வித்தியாசமானது. (ஆயினும் அடிப்படை ஒன்றுதான்). உங்கள் தொலைபேசி எண்களைத்
தாருங்கள். வாரக்கடைசியில் அழைக்கிறேன் (தனிமடலில் அனுப்புங்கள் -PRIVATE
என்று தலைப்பிட்டு).

நன்றி.

கண்ணன்

2008/1/24 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

--

Vijay kumar

unread,
Jan 24, 2008, 1:14:18 AM1/24/08
to minT...@googlegroups.com

கோவில் பராமரிப்பு பற்றி நம் விவாதம் தொடர்வதால் ... எரிகிற நெருப்பில் என்னை ஊற்றுமறு கீழே உள்ள ஸ்ரீரங்கம் ( இவை பழைய படங்கள்) கோபுரம் படங்களை இணைகிறேன். பழைய படமயினும், குற்றம் குற்றமே ..... கோவில் வாயிலில் சாணி மொழுகி விடுவர், ஆனால் இங்கோ ........ அற்புத வேலைபாட்டிற்கு கிடைத்த சன்மானம் வராட்டி அணிவகுப்பும், விறகு கட்டை குவிப்பும்.

கல் சங்கிலி காஞ்சியில் பார்த்தோம். இப்போது கல் ஜாலி - அதுவும் ஒன்றோடு ஒன்று பிணையும் சுவச்திக் சின்னங்கள்.  இது என்ன தெய்விக சின்னன்களோடு அரசியல் கலக்கிறது. ..கூர்ந்து கவனியுங்கள் - உதைய சூரியன், நாமத்தின் மேல் இரட்டை இலை......
 
image courtesy : American institute of indian studies
risingsun.jpg
naamam2leaves.jpg
firewoodstack.jpg
bullshit.jpg
ar_047661.jpg

Narayanan Kannan

unread,
Jan 24, 2008, 1:26:18 AM1/24/08
to minT...@googlegroups.com
My God!!

வாய் பேச முடியவில்லை! இந்தியாவில் மனித உயிருக்குத்தான் மதிப்பில்லை
(எத்தனை சாவுகள் போக்குவரத்தால், வன்முறைகளால்) என்று எண்ணியிருந்தேன்.
கடவுளுக்கும் மதிப்பில்லை என்று தெரிகிறது! இனிமேல் முட்டிக் கொள்ள
கோயில் சுவர் கூட கிடைககாது போலும் (சாணியில் யார் முட்டுவர்?
முட்டினாலும் நஷ்ட ஈடு கேட்டு விராட்டி மாது வந்துவிடுவார்!!)

மதுரையில் கோயில் சுவரில் ஒண்ணுக்கு அடிக்கிறார்கள் என்று சின்னச் சின்ன
விக்கிரங்களை வெளியே வைத்து ஒரு கோயில் தன்மானத்தைக் காத்துக் கொண்டதை
கண்டிருக்கிறேன்!

கோயில் உள்மதிலில் முதலில் திருமண் போடுவதே தவறு! அப்படி என்ன ஒரு
insecurity? இவர்கள் வழிகாட்டலில் இப்போது இரட்டை இலை, ஒற்றைச் சூரியன்!
பலே! பலே!

கிருஷ்ணப் பிரேமி ஒரு உபன்யாசத்தில் சொன்னார் கோயில் மடப்பள்ளியிலிருந்து
கட்சி பார்ட்டிக்கு உணவு போவதாக!!

இம்மாதிரியெல்லாம் நடக்குமென்றுதான் Temple Managent (கோயில் ஒழுகு)
என்று இராமானுஜர் புத்தகம் எழுதிவைத்தார். அப்படியிருந்துமா? இது அரங்கன்
கோயிலிலா? எந்த சந்நிதி?

கண்ணன்

2008/1/24 Vijay kumar <vj.ep...@gmail.com>:

Vijay kumar

unread,
Jan 24, 2008, 1:32:50 AM1/24/08
to minT...@googlegroups.com
East gopuram/ Kaliyugaraman gopuram

Vijay kumar

unread,
Jan 24, 2008, 4:14:31 AM1/24/08
to minT...@googlegroups.com

இந்த தொடர் வேண்டும் என்றே கோவிலின் முக்கிய சிற்பங்களை விட்டு வெளியில் இருக்கும் சிறு சிற்பங்கள் மற்றும் தூண்களில் கவனம் செலுத்துகிறது. ஏனெனில் அடுத்த முறை நீங்கள் கோவிலுக்கு செல்லும் போது கற்பகரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், இதர நுண்ணிய வேலைபாடையும் கவனிய வேண்டும் என்பதற்காகவே.....

உதாரணத்திற்கு வெளி பிரகாரத்தில் உள்ள சிவ லிங்கம் , ஆழ்வார் மற்றும் நாயனார் சிலைகளை யாரும் கவனிப்பதில்லை.
 
கீழே உள்ள சிலை ஸ்ரீரங்கம் ( அரங்கன் கோவில் அல்ல ஜம்புகேசவ கோவில் ) கோவிலில் இருக்கிறது. வெறும் லிங்கோத்பவர் என்று முதல் பார்வையில் மூடிவிடாதீர்கள். மேலும் கீழும் சற்று உன்னிப்பாக பார்க்கவும். லிங்க புராணம் - கதை - பிரம்மா மற்றும் விஷ்ணு இருவருக்கும் முன் தோன்றிய லிங்க ஸ்வரூபம் - அகந்தையில் அதனை அய்யன் என்று அடயாளம் கொள்ளாமல், இருவரும் போட்டி இட்டு - ஆதி அண்டம் இல்ல ஸ்வரூபனின் அடியை கண்டு அறிய வராக அவதாரம் எடுக்கும் விஷ்ணு,  swan ( whats the right word in tamil) வடிவம் எடுத்து தலையை காண பறக்கும் பிரம்மா .... இருவரும் மிக அருமையாக செதுக்க பட்டுள்ளனர்...முடிவில் லிங்க ச்வரூபனாக அய்யன்....அருமை..
lingothbavar.jpg

Shaji

unread,
Jan 24, 2008, 3:53:37 AM1/24/08
to மின்தமிழ்
lizards appearing at odd places is not all that odd...
in reality, you will really see the lizards at the unusual
places...unless when it falls off, who has ever see a lizard the way
you get to see a cockroach (I mean, anywhere!!!)
I dont remember seeing a lizard ever in the middle of stairs, where
as, in the corners, yes, quite often.


And, yes, still you get to find lizards inside the houses (atleast in
Chennai, where I live).

A good topic you have chosen Vijay, lot of insights. Thanks.

Shaji



On Jan 23, 11:30 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2008/1/23 Vijay kumar <vj.epist...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Jan 24, 2008, 4:22:47 AM1/24/08
to minT...@googlegroups.com
2008/1/24 Vijay kumar <vj.ep...@gmail.com>:

>
> கீழே உள்ள சிலை ஸ்ரீரங்கம் ( அரங்கன் கோவில் அல்ல ஜம்புகேசவ கோவில் ) கோவிலில்
> இருக்கிறது. வெறும் லிங்கோத்பவர் என்று முதல் பார்வையில் மூடிவிடாதீர்கள்.
> மேலும் கீழும் சற்று உன்னிப்பாக பார்க்கவும். லிங்க புராணம் - கதை - பிரம்மா
> மற்றும் விஷ்ணு இருவருக்கும் முன் தோன்றிய லிங்க ஸ்வரூபம் - அகந்தையில் அதனை
> அய்யன் என்று அடயாளம் கொள்ளாமல், இருவரும் போட்டி இட்டு - ஆதி அண்டம் இல்ல
> ஸ்வரூபனின் அடியை கண்டு அறிய வராக அவதாரம் எடுக்கும் விஷ்ணு, swan ( whats the
> right word in tamil) வடிவம் எடுத்து தலையை காண பறக்கும் பிரம்மா .... இருவரும்
> மிக அருமையாக செதுக்க பட்டுள்ளனர்...முடிவில் லிங்க ச்வரூபனாக
> அய்யன்....அருமை..
>

ஸ்ரீரங்கத்தில் இந்தக் கதையைச் சொல்ல கொஞ்சம் தைர்யம்தான் வேண்டும் :-) ;-)

(மேலே தொண்டரடிபொடியிடம் கேட்டுக்கொள்ளவும்;-)

கண்ணன்

Vijay kumar

unread,
Jan 24, 2008, 4:26:07 AM1/24/08
to minT...@googlegroups.com
hi Shaji
 
thanks for the comments. why i thought this fit for mention is that these lizards ( repeating earlier words)  are not etched or carved into the stone but sculpted. imagine yourself as a sculpture, when you are smoothening out the stone block - as both the cases show - there are blocks which are sculpted else where and placed into the location - that's where their significance comes into play - sculpting a smooth face is much easier than to sculpt a lizard on top of it - maybe since the temples were filled with inscriptions of the kings singing their praise - maybe the sculpture wanted to leave his own signature in a discreet way.....being a software guy maybe you may draw parallels in your industry when programmers aparently leave their secret trademark/signatures behind...
 
vj

 

Narayanan Kannan

unread,
Jan 24, 2008, 4:39:49 AM1/24/08
to minT...@googlegroups.com
2008/1/24 Vijay kumar <vj.ep...@gmail.com>:

> hi Shaji
>
> thanks for the comments. why i thought this fit for mention is that these
> lizards ( repeating earlier words) are not etched or carved into the stone
> but sculpted. imagine yourself as a sculpture, when you are smoothening out
> the stone block - as both the cases show - there are blocks which are
> sculpted else where and placed into the location - that's where their
> significance comes into play - sculpting a smooth face is much easier than
> to sculpt a lizard on top of it - maybe since the temples were filled with
> inscriptions of the kings singing their praise - maybe the sculpture wanted
> to leave his own signature in a discreet way.....being a software guy maybe
> you may draw parallels in your industry when programmers aparently leave
> their secret trademark/signatures behind...
>


Vijay:

It looks like that from a 21st century point of view but the finest
tradition of India leaves no signature. J.Krishnamurthi calls it "the
flight of the eagle" which leaves no trail behind. There is so much
charm in annonimity than leaving a signature!

Kannan

Tirumurti Vasudevan

unread,
Jan 24, 2008, 4:41:01 AM1/24/08
to minT...@googlegroups.com
இன்றைய தி ஹிந்துவில் பால் சுரக்கும் பசு போல வாய்காலில் ஒரு சிற்பம்
அமைத்து நீர் அதன் வழியாக வருவது போல அமைத்து உள்ளதை படம் வெளியிட்டு
இருந்தார்கள்.

திவா

2008/1/24 Vijay kumar <vj.ep...@gmail.com>:

Vijay kumar

unread,
Jan 24, 2008, 4:54:40 AM1/24/08
to minT...@googlegroups.com
 

PUDUKOTTAI: A cow offering worship to Lord Shiva with milk is one of the important mythological incidents, associated with the idols of 'Swayambu Lingams.' It is also believed that Goddess Parvathi assumes the form of a cow to offer similar worship to an idol of Lord Shiva.

A rare form of a cow supporting this legend has been unearthed from the tank of Sri Siganathar temple at Kudumiyanmalai, also known as Tirunalakundram, about 30 km from here. A long canal, made of stone, facilitating the flow of water from the temple, ends up at the tank.

The image had been designed such that water flowing through the canal, passes through the udders of the animal, indicating its offer of worship with milk, says epigraphist Kudavayil Balasubramanian.

What is more interesting is the culling out of a hole right below the udders of the animal, testifying to the 'ksheerabishekam' or offering worship with milk. He says that the sculpture dates back to the Pallavarayar era.



 
2008012459820801.jpg

Vijay kumar

unread,
Jan 24, 2008, 6:01:06 AM1/24/08
to minT...@googlegroups.com
அடுத்து நாம் பார்க்கும் சிற்ப கொத்து தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது. பெரிய கோவில் என்றவுடன் பெரிய கோபுரம் ஆள் உயர சிலை என்று கற்பனை வேண்டா - நமக்கே உரிய பாணியில் இங்கும் ஆராய்வோம்.
 
வள்ளி கல்யாணம் கதை - மிக அழகாக சித்தரிக்க பட்டுள்ளது .....

வள்ளி வயலில் ( கம்பு வயலோ? ) சாரம் கட்டி பறவைகள் வராமல் காவல் காக்க.. கையில் என்ன?? உண்டிகோல் போல் இல்லாமல் ஒரு கையால் சுற்றி கல் எரியும் sling .... கீழே வயோதிட வேடத்தில் குமரன்.

ஆணை வடிவில் தமையன் உதவ, பயந்து தாத்தாவின் பின் ஒளிந்து நிற்கும் வள்ளி. சந்தர்பத்தை பயன்படுத்தி அணைக்கும் தாத்தா......super

 

vallitirumanam.jpg

Vijay kumar

unread,
Jan 24, 2008, 10:55:09 PM1/24/08
to minT...@googlegroups.com

நாம் முன்பு சுசிந்திரம் கோபுரத்தில் பார் கடல் கடையும் காட்சி கண்டோம். இதே காட்சி கம்போடியா அங்கோர் வாட்டிலும் உள்ளது. இதனை பற்றி திரு Jaybee அய்யா's அற்புத மடல் முன்பு ( இராவணன் கைலாயத்தை அசைக்கும் காட்சி ... ) பார்த்தோம்.

சமீபத்தில் தாய்லாந்தில் புதிய விமான நிலையம் துவங்கியது - அதன் பெயர்  சுவர்ணபூம். உள்ளே நுழையும் போதே பிரமாண்ட சிலை.....churning of the the milky ocean...

இந்திரன் பற்றிய வேறொரு மடலில் தாய்லாந்தில் ஐராவதம் மிக விசேஷம் என்று கூறினேன். அங்கே ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது - பெயர் ... இரவாடி முசிஎம் ... வெளியில் மிக பிரமாண்ட சிலை ....ஐராவதம் .....இந்த சிற்பம் மூன்று தலைகளுடன் சுமார் 29 மிட்டர் உயரமும் 39 மிட்டர் அகலமும் உடையது. மேடையை சேர்த்தல் உயரம் 44 மிட்டர்



On 1/23/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
irawatham.jpg
1139979727_a0f4a82737.jpg
1139982255_3250471324.jpg
Image000.jpg

Vijay kumar

unread,
Jan 24, 2008, 11:32:45 PM1/24/08
to minT...@googlegroups.com

இதே ஸ்ரீரங்கம் ஜம்புகேசவர் கோவில் வெளி கோபுரத்தில் உள்ள இந்த அழகிய கண்ணப்பர் கதை விளக்கும் சிற்பம் .

கண்ணப்பர் தன் ஒரு கண்ணை எடுத்தாரா இல்லை இரு கண்களையும் எடுத்தாரா - தன் காலை எடுத்து லிங்கத்தின் மேல் கண்ணின்  இடம் தெரிய வைத்தரா ..... இந்த ஆராய்ச்சி பற்றி வரலாறு.காம் மடல் கிழே
கோவிலில் காலனி அணிவது தவறு - ஆனால் சிற்பமே செருப்புடன் இருந்தால் ... முன்பு நாம் காஞ்சியில் கண்ட சிவா பிக்ஷாதன சிற்பத்தில் சிவன் செருப்பு அணிந்து இருப்பதை கண்டோம். இதோ தாராசுரம் கோவிலில் கண்ணப்பர் அணியும் வார் செருப்பு..
 
வேறு சில கண்ணப்பர் சிலை சிற்பம் வரைபடம் இணைக்கிறேன்
 
கண்ணப்ப நாயனார் கதை மற்றும் தேவார குறிப்புகளை அறிய கீழே சொடுக்கவும்
 
image courtesy -

http://www.shaivam.org/nakannap.html

http://www.shaivam.org/nakannap_ref.html

http://arvindneela.blogspot.com/2005/10/blog-post_08.html

திருவாசகம்: கண்ணப்பன் ஒப்பதோர்

கண்ணப்ப னொப்பதோ

ரன்பின்மை கண்டபின்

னென்னப்ப னென்னொப்பி

லென்னையுமாட் கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை

வாவென்ற வான்கருணைச்

சுண்ணப் பொன்நீற்றற்கே

சென்றூதாய்! கோத்தும்பீ!

--------------------------------------------------------------------------------

[

கண்ணப்ப நாயனார் தூண் சிற்பம்; விஷ்ணு கோவில் உட்பிராகாரம், பறக்கை கிராமம், கன்னியாகுமரி மாவட்டம்]

On 1/24/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
kannapar.jpg
kannapanayanar.jpg
slipper.jpg
kannapar.jpg
nakannap_i.jpg
kannapar tiruvengadu.jpg

Narayanan Kannan

unread,
Jan 24, 2008, 11:38:40 PM1/24/08
to minT...@googlegroups.com
விஜய்:

திருப்பாற்கடல் கடையும் காட்சி மிக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது.
நான்முகன் கோயிலுக்குப் போகும் வழியில் இரண்டு புறங்களிலும் இக்காட்சி.
இது போன்ற முயற்சியை எந்த இந்தியச் சிற்பியும் மேற்கொள்ளவில்லை. பல
கோணங்களில் அங்கோர்வாட் கோயில் நிர்மாணம் இந்திய அமைப்பிலிருந்து
வேறுபடுகிறது. அங்குள்ள நான்முகன் கூட திருமாலின் விஸ்வரூப
பிரம்மாண்டத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். நமது கலைஞர்கள், அறிஞர் குழு
அங்கு சென்று ஒரு விவரமான ரிபோர்ட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பல
சந்தேகங்கள் தெளியும்.

கண்ணன்

2008/1/25 Vijay kumar <vj.ep...@gmail.com>:

DSCN4780.JPG

Vijay kumar

unread,
Jan 25, 2008, 1:58:36 AM1/25/08
to minT...@googlegroups.com
இந்த அறிய தூணில் உள்ள சிற்பம் ( மதுரை கோவில் என்று நினைக்கிறேன் - மறதிக்கு மண்ணிக்கவும்) - இந்த கதை தெரிய இராமாயணம் அறிய வேண்டும்.
 
இராவணனின் மகனான மாயை அனைத்தும் அறிந்த இந்த்ரஜித் ஏவிய பானத்தில் வீழ்ந்த இலக்குமணன் உயிர் பிழைக்க சஞ்சிவினி தேவை என்று மருத்துவர் கூற - ஹனுமான் சென்று பர்வதத்தை பெயர்த்து கொணர்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
 
ஆனால் அவன் அங்கு செல்லும் காரியம் நிறைவேறாமல் இருக்கு இராவணன் தனது மாமன் காலமேணி என்கிற அசுரனை அங்கு அனுப்புகிறான். அவன் அங்கு ஒரு ரிஷி வேடம் பூண்டு, ஹனுமான் வரும் போது அவனை ஆசி புரியும் பாணியில் அருகில் இருக்கும் குளத்தில் நீறாடி விட்டு வருமாறு கூற, அனுமனும் அவ்வாறே அங்கு செல்ல - குளத்தில் கால் வைத்துமே ஒரு பெரிய முதலை அவனை விழுங்கியது - ஹனுமான் அதன் வயிற்றை கிழித்து வெளி வந்தான். அப்போது முதலை மடிந்து ஒரு தேவதை உரு பெற்றது - தக்ஷன் சாபத்தினால் தான் முதலை வடிவம் பெற்றதாகவும் - தன் இயற் பெயர் தண்யமாலி  என்றும் - விமோசனம் தந்த ஹனுமனை வணங்கி அசியுற்றால்  - உள்ளே இருப்பது ரிஷி அல்ல அசுரன் என்ற உண்மையையும்  கூற, ஆத்திரம் உற்ற ஹனுமான், அசுரன் கால் பிடித்தி தலைக்கு மேல் சுற்றி விசினான் - அசுரன் அங்கிருந்த இலங்கை இராவணன் சபையில் வந்து விழுந்து மாண்டான்.

இந்த கதை கட்டும் சிற்ப்பங்கள் - உற்று கவனியுங்கள் - படத்தின் வலது புறம் மேல் பாதி - முனிவர்  வேடத்தில் அசுரன்  விரல் நீட்டி குலத்தை கட்டும் காட்சி, இடது புறத்தில்  ஹனுமான் முதலை வயிற்றை கிழித்து வெளி வரும் காட்சி, அதே காட்சியில் தேவதை ரூபம், வலது புறம் கீழே - பொலி சாமியாரை உதைக்கும் ஹனுமான்.. 

hanumancroc.jpg

kra narasiah

unread,
Jan 25, 2008, 7:42:40 AM1/25/08
to minT...@googlegroups.com
Not in Madurai to my knowledge
narasiah


Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now.

Vijay kumar

unread,
Jan 27, 2008, 10:41:12 PM1/27/08
to minT...@googlegroups.com
>

ஸ்ரீரங்கத்தில் இந்தக் கதையைச் சொல்ல கொஞ்சம் தைர்யம்தான் வேண்டும் :-) ;-)

(மேலே தொண்டரடிபொடியிடம் கேட்டுக்கொள்ளவும்;-)

கண்ணன்
 
 

நன்றி கண்ணன்,

உங்கள் வாதம் கல்கியின் பொன்னியின் செல்வனின் வரும்  ஆழ்வார் கடியானை நினைவுட்டுகிறது. சதா சைவர்களை சண்டைக்கு இழுக்கும் அந்த வீர வைணவன் பாத்திரத்தை கல்கி அழகாக படைத்தது இருப்பார்.

கச்சபெஷ்வரர் ( கச்ச - ஆமை சமஸ்கிரதம்) என ஒரு சிலை உண்டு. திருமால் மந்தர மலை ( திரு பாற்கடலை கடைய உதவிய மத்து) பாரம் சுமக்க சிவபெருமானை வேண்டி பலம் பெற்றார் என்று கதை. அந்த சிற்பங்கள் கிழே காணலாம்.  சிவ லிங்கத்தை வழிபடும் குர்மா அவதாரம் பூண்ட பெருமாள் ....

thanks

http://www.hindu.com/fr/2005/04/08/stories/2005040800100300.htm

http://www.cbmphoto.co.uk/States/TNkanchi.html


 


 
LN06.jpg
2005040800100302.jpg

Vijay kumar

unread,
Jan 27, 2008, 11:31:05 PM1/27/08
to minT...@googlegroups.com
நாம் முன்பு பார்த்த யானையுரி போர்த்திய மூர்த்தி ( தாராசுரம் - தஞ்சை அருங்காட்சியகம் ) - அதே சிலையின் வடிவம் சிதம்பரத்திலும் உள்ளது. இதோ இணைத்துள்ளேன்.

On 1/18/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
அடுத்து ஒரு மிக அறிய சிலையை காணப்போகிறோம்.  திரு குடவாயில் பால்சுப்ரமனியாம் அவர்கள் இச்சிலையின் நுணுக்கங்களை தி ஹிந்து ( The Hindu)  நாளிதழில் விளக்கி உள்ளார்.
 
 
தற்போது தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ள இச்சிற்பம் தராசுரம் கோவிலை சார்ந்தது.

முதலில் கதை - சிவன் வீரட்டானம் எனப்படும்  சிவனின் வீரம்  வெளிப்பட்ட  ஸ்தானம்  - மொத்தம் எட்டு -  கஜசம்ஹாரம்  - மன்மதன் தகனம்  - மார்கண்டேய புராணம் ....

கஜசம்ஹாரம் சம்பந்தர்  தேவாரத்திலும் இடம் பெறுகிறது - மூன்றாம் திருமுறை பாகம் இரண்டு ... "யானையுரி பொர்த்துமகிழ்" என்ற வரிகளை காண முடியும்.... யானை - உரி ( தோல் ). பேரூர் பட்டேஸ்வரர் கோவிலிலும் மிக அழகிய பிரமாண்ட யானையுரி  போர்த்தியமூர்த்தி சிலையை காணலாம் - புகை படம் எங்கு உள்ளது என்று தேடி அடுத்த மடலில் இடுகிறேன்.

கஜாசுரன் என்ற அசுரனை வதம் செய்து ...அதுவும் எவ்வாறு ... யானை உருவில் இருந்த அசுரனின் துதிக்கை மூலம் அவனுள் சென்ற சிவபெருமான் அவன் உடலை உள்ளிருந்து கிழிக்கும் காட்சி இது. அவனுடைய தலையின் மேல் ஒரு காலை இட்டு, அவன் தொலை கரங்களால் தூக்கி போற்றிய வாறு உக்ரதாண்டவம் ஆடும் கோலம்.

ஆனால் நாம் காணவிருக்கும் இந்த கஜசம்ஹாரம் சிலை மிகவும் விநோதமானது. உடம்பை முறுக்கி ஆடும் தோற்றம் மிக கடினமான வடிவம் - அதை தத்ருபமாக செதுக்கி உள்ளான் , கை நகங்கள் யானை தொலை கிழித்து வெளிவருகின்றன, யானையின் பின்னங்கால் மற்றும் வால் சிலையின் தலை பாகத்தில் காணலாம். உக்ரமான இந்த ஆட்டத்தை காணும் உமை, தன் மடியில் இருக்கும் குழத்தை முருகன் இதை கண்டு பயமுருவானோ என்று அஞ்சி அவனை வேறு பக்கமாய் மறைக்குமாறு செதுக்கி உள்ள சிற்பியின் கற்பனை அபாரம். அதை விட விந்தை என்ன வென்றால், உமையின் இந்த நிலையை காணும் சிவன் இரு பல் வரிசை காட்டி சிரிக்கிறார் - ஆனால் அந்த மகா சிற்பி இதை எவ்வாறு செதுக்கி உள்ளான் என்று பார்க்கவேண்டும். சிவனின் முகத்தை இரு பதியாக பிரித்து, உமையை காணும் பாகம் பல் வரிசை காட்டி சிரிப்பது போலவும், மற்ற பாதி உக்ர தாண்டவம் ஆடும் சிவனின் ஆக்ரோசத்தை கட்டும் வகையில் கோரப் பல் வேலி தெரிய கோபமாக செதிக்கி தன் அற்புத கலை அறிவு / ஆற்றல் இரண்டையும் வெளி கொணர்கிறான்.  சுமார் ஐந்து அடி உயரம் உள்ள சிலையின் ஒரு ஓரத்தில் இருக்கும் உமை மற்றும் முருகனை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி சிவனின் இடது கை விரலை அங்கே காட்டி செதுக்கி உள்ள திறன் அருமையிலும் அருமை.

Image courtesy - American Institute Of Asian Studies, photo archive...
yaanaiuri.jpg

Narayanan Kannan

unread,
Jan 27, 2008, 11:39:00 PM1/27/08
to minT...@googlegroups.com
On 1/28/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
> நன்றி கண்ணன்,
>
> உங்கள் வாதம் கல்கியின் பொன்னியின் செல்வனின் வரும் ஆழ்வார் கடியானை
> நினைவுட்டுகிறது. சதா சைவர்களை சண்டைக்கு இழுக்கும் அந்த வீர வைணவன்
> பாத்திரத்தை கல்கி அழகாக படைத்தது இருப்பார்.
>
> கச்சபெஷ்வரர் ( கச்ச - ஆமை சமஸ்கிரதம்) என ஒரு சிலை உண்டு. திருமால் மந்தர மலை
> ( திரு பாற்கடலை கடைய உதவிய மத்து) பாரம் சுமக்க சிவபெருமானை வேண்டி பலம்
> பெற்றார் என்று கதை. அந்த சிற்பங்கள் கிழே காணலாம். சிவ லிங்கத்தை வழிபடும்
> குர்மா அவதாரம் பூண்ட பெருமாள் ....
>

ஆழ்வார்க்கடியனாதல் அரிது ;-)
கல்கி செய்த விஷமம் என்று தோன்றுகிறது ;-)
நீங்கள் சொல்லும் கதையெல்லாம் புதுக்கதையாக இருக்கிறது, அதுதான். எந்தப்
புராணமென்றும் தெரிந்தால் நலம் (இது தொடருக்கு அவசியமில்லைதான். ஆனால்,
ஒன்றைப் பலமுறை சொன்னால் அதுவே உண்மையாகிவிடும். அவ்வளவுதான்!)

கண்ணன்

Vijay kumar

unread,
Jan 28, 2008, 3:17:07 AM1/28/08
to minT...@googlegroups.com
ராமாயண கதைகளில் ஹனுமான் செய்த அற்புதங்களில் ஒன்றை முன்பு பார்த்தோம்.
 
சிறியவர் முதல் பெரியவர் வரை மகிழவைக்கும் அவரது  இன்னும்  ஒரு சாதனை புகழ் பெற்ற  ஹம்பி விட்டலா கோவில் தூணில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தூண்கள் வேறு உண்டு - அவை  தட்டினால்  சப்த  ஸ்வரங்களை எழுப்பும்.
 
எனினும் நாம் காணும் தூண் வேறு  - ஹனுமான் லங்கேஸ்வரனை சந்திக்கும் போது அவருக்கு அரியணை கொடுக்கப்படவில்லை. அதனால் தன் வாலையே வளர செய்து சுருட்டி அரியணை அமைத்தார். இந்த கதையை  விளக்கும் காட்சி - தூணின் ஒரு பக்கம் ஹனுமான் தான் உருவாக்கிய ஆசனத்தில் அமர மற்றொரு பாதியில்  லன்கேஸ்வரன் இருப்பதை காணலாம். 
 
tailthrone.jpg

Vijay kumar

unread,
Jan 28, 2008, 3:43:38 AM1/28/08
to minT...@googlegroups.com
One more interesting mystery from angkor
 
அங்கோர் சிற்பங்கள் மற்றும் அந்த கோவில் அமைக்கப்பட விதம்  பற்றி பல ஆய்வுகள் மற்றும் குறிப்புகள் உள்ளன.
 
இந்த தளத்தில் அங்க்கொரில்  உள்ள ஒரு அறிய  relief sculpture பற்றி சில மாதங்களுக்கு முன் படித்தேன்.
 
 
பீஷ்மர் அம்பு படுக்கையில் குருக்க்ஷேற்றதில் தன் முடிவை தானே முடிவு செய்து படுத்திருக்கும் காட்சி. இந்த தளத்தில் கொடுக்கப்படும் தகவல் மிகவும் ச்வாரசியமானது . பிதாமகர் தன் மறைவுக்கு குறித்த நன்னாள் உத்தரயான புண்ய நாள் - The setting sun falls on the image of Bhishma close to the winter solistice day- இதே நாளில் மறையும் சூரிய கதிர்கள் இந்த இடத்தில் விழுகின்றன என்று படம் பிடித்து காட்டுகிறார் - இது தற்செயலாக நடப்பதா இல்லை கணித்து செதுக்கியதா.
 
solistices and human worship go back a long way ....but thats not part of this sereis...
 
bhishma3.jpg

Vijay kumar

unread,
Jan 28, 2008, 6:32:31 AM1/28/08
to minT...@googlegroups.com
ஹைசால மன்னர்கள் ( அவர்கள் பெயரே ஒரு புதிர் - அதை பின்னால் பார்ப்போம்) பல கோவில்கள் நிறுவினர். அவற்றில் இன்னும் பார்வையில் வராத தலகாடு ( talakad)  கோவில் தூண் ஒன்றை பார்போம்.

இது சிற்பியின் அபார திறமை வேலிகொனரும் - ஒரு மாடா அல்லது மூன்று மாடுகளா.  ஒன்று லிங்கத்திற்கு பால் கொடுக்கிறது, ஒன்று லிங்கத்தை நக்குகிறது, ஒன்று தலை தூக்கி நிற்கிறது. இன்னொரு தூணில் இரண்டு மாடுகள்

முன்பு நாம் தராசுரம் சிர்ப்பதில் மாடும் யானையும் இணைவதை கண்டோம், மதுரை கோவிலிலும் உள்ளது - ஓவியமாக அங்கு காணலாம்.

thanks - Ritish Swamy
trick talakadu.jpg
trick3talagdu..jpg
maduri2.jpg

venkatram dhivakar

unread,
Jan 28, 2008, 7:07:32 AM1/28/08
to minT...@googlegroups.com
போசள மன்னர்கள் என தமிழில் அழைக்கப்படுகிறார்கள் விஜய்!
திவாகர்

 
On 1/28/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Jan 28, 2008, 7:51:11 AM1/28/08
to minT...@googlegroups.com
விஜய்:

உங்களுக்கு மைக்கேல் அஞ்சலோவின் Vitruvian Man தெரிந்திருக்கலாம்.
நம்மாளு அவருக்கு முன்னாலேயே ஒரு Vitruvian cow செய்திருக்கிறான்
பாருங்கள்! அதுவல்லவோ கலை! சபாஷ்!

கண்ணன்

vitruvian cow.jpg
vitruvian man.jpg

Tthamizth Tthenee

unread,
Jan 28, 2008, 8:48:42 AM1/28/08
to minT...@googlegroups.com
பீஷ்மர் சரப் படுக்கையில் படுத்திருந்த கோலத்தில் அவர் உடலில் ஆங்காங்கே
குத்திக் கொண்டிருந்த சரங்களின் கூர்முனைகள்
பீஷ்மரின் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தெரியாமலிருப்பதற்காகவும்,
 
அவர் எப்போது நினைக்கிறாரோ அப்போதுதான் அவர் உயிர் பிரியும் என அவர் பெற்ற வரத்தை அவர் உபயோகித்து உத்ராயண புண்ணிய கால ஆரம்பம் வரையில் அவர் உயிரை பிடித்து வைத்திருந்த சக்தியாகவும்
அக்கு பன்ச்சர் தற்காலத்தில் அறியப்படும்  முறையை அப்போதே செயல் படுத்தினர் என்பர்
பெரியவர்கள்,
இது போன்ற விஷயங்களை ஆராய்ந்தால்
பல கலைகள் நம் நாட்டு முன்னோர்களுக்கே
சொந்தமானது என்று நிருபிக்கலாம்
 
ஆனால் நாம் எல்லாவற்றையுமே கட்டுக்கதை என்று சொல்லித் திரியும்  வீணர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு எதையுமே ஆராயாமல்
வீணடிக்கிறோம்,பழங் கலைகளை அறியாமல்
இருக்கிறோம் என்பது எனது கருத்து
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/1/28 Vijay kumar <vj.ep...@gmail.com>:

Vijay kumar

unread,
Jan 28, 2008, 9:27:10 AM1/28/08
to minT...@googlegroups.com

திவாகர் சார்,

நீங்கள் அறியாதா....இது நான் கேட்டு அறிந்தது. எந்த அளவுக்கு உண்மை என்று தங்களை போன்றவர்கள் தான் கூற வேண்டும். 

சலா என்ற இளைஞர் சுதாத்தா என்ற சமண துறவி சொல்லிகொடுத்த வாரு எதிர் கொண்ட புலியை தாக்க புலி மடிந்தது. இந்த சம்பவம் நடந்த இடம் சொசெவுர்,. இந்த குறிப்பு விஷ்ணு வர்தன ராஜாவின் பேலூர் கல்வெட்டில் இருக்கிறது. ஹோய் என்பது பழைய கன்னடத்தில் அடி என்றும் அது அடித்த சாலனின் பெயருடன் சேர்ந்து ஹோய்ச்ள என்று வந்தது. இந்த கதையையே அவர்கள் தங்கள் சோழர் மிது கண்ட வெற்றியாக ( முதலாம் குலோத்துங்கன் காலம் - விட்டால போர் ) பாவித்து அவர்கள் தங்கள் சின்னமாக பெற்றனர். சின்னம் இணைத்துள்ளேன். இதே போல் சோழர் காலத்து யானையை வெல்லும் புலி சிற்ப்பங்கள் மற்றும் சோழர் காசு - பாண்டிய, சேர வெற்றி குறிக்கும் படைகளை விரைவில் இடுகிறேன்.


2008/1/28 venkatram dhivakar <venkdh...@gmail.com>:
400px-Hoysala_emblem.jpg

Narayanan Kannan

unread,
Jan 28, 2008, 9:48:44 AM1/28/08
to minT...@googlegroups.com
இந்த சிங்கம் (புலியா?) சிற்பம் ஒரு சுவாரசியமான விஷயம். இந்தச் சிங்கம்
கொஞ்சம் சீனச்சிங்கம் (சிற்பம்) போல் உள்ளது. பட்டுப்பாதை வழி சீன-இந்திய
கலாச்சார உறவுகள் உற்று நோக்கத்தக்கன!

கண்ணன்

2008/1/28 Vijay kumar <vj.ep...@gmail.com>:


>
>
> திவாகர் சார்,
>
> நீங்கள் அறியாதா....இது நான் கேட்டு அறிந்தது. எந்த அளவுக்கு உண்மை என்று

> தஙசுவாரசியளை போன்றவர்கள் தான் கூற வேண்டும்.

--
"Be the change you wish to see in the world." -Gandhi

Be paid for surfing the internet. http://www.agloco.com/r/BBCP7818

kra narasiah

unread,
Jan 28, 2008, 10:22:43 AM1/28/08
to minT...@googlegroups.com
According to Kannada folklore, a young man named Sala, as told by his Jain guru, Sudatta, struck a tiger dead near the temple of Godess Vasanthika, at Soseravur "hoy" in early kannad is "Strike" Hence the name of the dynasty became Hoysalas Hoysala emblem depicts the fight between sala and tiger.
This denotes also (according to Belur inscription) the victory of King Vishnuvardhana over the Cholas(cholas-tiger)
So your version is right Vijya Kumar
 
narasiah 

----- Original Message ----
From: Vijay kumar <vj.ep...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Monday, January 28, 2008 7:57:10 PM
Subject: [MinTamil] Re: தமிழகச் சிற்ப/கோயில் விநோதங்கள்!

திவாகர் சார்,

நீங்கள் அறியாதா....இது நான் கேட்டு அறிந்தது. எந்த அளவுக்கு உண்மை என்று தங்களை போன்றவர்கள் தான் கூற வேண்டும். 

சலா என்ற இளைஞர் சுதாத்தா என்ற சமண துறவி சொல்லிகொடுத்த வாரு எதிர் கொண்ட புலியை தாக்க புலி மடிந்தது. இந்த சம்பவம் நடந்த இடம் சொசெவுர்,. இந்த குறிப்பு விஷ்ணு வர்தன ராஜாவின் பேலூர் கல்வெட்டில் இருக்கிறது. ஹோய் என்பது பழைய கன்னடத்தில் அடி என்றும் அது அடித்த சாலனின் பெயருடன் சேர்ந்து ஹோய்ச்ள என்று வந்தது. இந்த கதையையே அவர்கள் தங்கள் சோழர் மிது கண்ட வெற்றியாக ( முதலாம் குலோத்துங்கன் காலம் - விட்டால போர் ) பாவித்து அவர்கள் தங்கள் சின்னமாக பெற்றனர். சின்னம் இணைத்துள்ளேன். இதே போல் சோழர் காலத்து யானையை வெல்லும் புலி சிற்ப்பங்கள் மற்றும் சோழர் காசு - பாண்டிய, சேர வெற்றி குறிக்கும் படைகளை விரைவில் இடுகிறேன்.


2008/1/28 venkatram dhivakar <venkdh...@gmail.com>:
போசள மன்னர்கள் என தமிழில் அழைக்கப்படுகிறார்கள் விஜய்!
திவாகர்

 
On 1/28/08, Vijay kumar <vj.ep...@gmail.com> wrote:
ஹைசால மன்னர்கள் ( அவர்கள் பெயரே ஒரு புதிர் - அதை பின்னால் பார்ப்போம்) பல கோவில்கள் நிறுவினர். அவற்றில் இன்னும் பார்வையில் வராத தலகாடு ( talakad)  கோவில் தூண் ஒன்றை பார்போம்.

இது சிற்பியின் அபார திறமை வேலிகொனரும் - ஒரு மாடா அல்லது மூன்று மாடுகளா.  ஒன்று லிங்கத்திற்கு பால் கொடுக்கிறது, ஒன்று லிங்கத்தை நக்குகிறது, ஒன்று தலை தூக்கி நிற்கிறது. இன்னொரு தூணில் இரண்டு மாடுகள்

முன்பு நாம் தராசுரம் சிர்ப்பதில் மாடும் யானையும் இணைவதை கண்டோம், மதுரை கோவிலிலும் உள்ளது - ஓவியமாக அங்கு காணலாம்.

thanks - Ritish Swamy



Vijay kumar

unread,
Jan 28, 2008, 8:38:21 PM1/28/08
to minT...@googlegroups.com

நாம் முன்பு ஆடல் வல்லானின் ஆடல் தோற்றத்தை நேரில் கண்ட பிருங்கி ரிஷியை கண்டோம்.
 
இப்போது சிதம்பரம் புலியூர் என்ற பெயர் கொல்ல காரணமாய் இருக்கும் வ்யாக பாதர் ( புலி கால் முனி ) என்ற அற்புத பக்தரை பார்க்கிறோம்.
 
சிவனுக்கு அன்புடன் பூ பறித்து இட செல்லும் இம்முனிவர் வண்டுகள் அவற்றை முன்னரே மொய்க்க, வண்டுகளுக்கு முன் சூரியன்  எழும் முன்னரே  சென்று மலர்களை பறிக்க முயன்றார் - பணியில் கால் வழுக்கியது , மற்றும் இருட்டில் கண் சரியாக தெரியவில்லை - ஆதலால் ஐயனிடம் வேண்டி புலியின் கால்களையும் கண்களையும் வரமாக பெற்றார். 
 
இது இவரது சிற்பம் மற்றும் சிலை. ( தஞ்சை ) 
pulikaalmuni.jpg
vyagrap.jpg

Vijay kumar

unread,
Jan 28, 2008, 9:00:26 PM1/28/08
to minT...@googlegroups.com
an interesting reference to the image of ravana shaking Mount Kailash in a new find...
 


---------- Forwarded message ----------
From: Vijay kumar <vj.ep...@gmail.com>
Date: Jan 11, 2008 6:45 PM
Subject: சிற்பக் கலை அழ்கு
To: minT...@googlegroups.com

 
ராமாயணத்தின் தாக்கம் எங்கெல்லாம் சென்றுள்ளது என்பதற்கு ஒரு அறிய எடுத்துக்காட்டு. .... இராவணன் கைலாயத்தை பெயர்க்க முனைதான். அப்போது உமை பயந்து சிவனின் மடியில் தாவி அமர்கிறாள். அப்போது கைலாய பர்வதத்தில் உள்ள மிருகங்கள் எல்லாம் அலறி ஓடின.  அப்புறம் என்ன ஆயிற்று ...இந்த கதையை Dr Jaybee ஐயா அவர்கள் விளக்கம் இங்கே உள்ளது. ( முழுவதுமாக படியுங்கள்).
 

இந்த கதையின் சிற்ப வடிவத்தை பல இடங்களில் காணலாம். குறிப்பாக அங்கோர் பண்டேஅஸ்ரெய் சிற்பத்தை காணுங்கள். பத்து தலைகளை புது விதமாக செதுக்கி உள்ளனர், இராவணனை ஒட்டி பயந்து ஒதுங்கும் சிங்கங்களை கான முடிகிறது. உமையும் பயத்தில் ஐயனின் மடியில் அமர்த்து கீழே எட்டி பார்க்கும் கோணம் மிக அருமை.  சிவபெருமான் தன் வலது காலால் பர்வதத்தை கீழே அழுத்தும் வண்ணம் சிறப்பாக செதுக்கப் பட்டுள்ளது.

இரண்டாம் வரிசையில் ஆணைமுகனும் கருடனையும் காணலாம்.
 
அங்கோர், எல்லோரா, தராசுரம், பட்டடக்கள், மல்லை, பேலூர், எலீபெண்ட என்று பல இடங்களில் உள்ள இதே கரு உடைய சிலைகளை இணைத்துள்ளேன்.

 
ravanuprootingkailash.jpg
800px-Ellora_cave29_Shiva-Parvati-Ravana.jpg
belur.JPG
darasuram.jpg
Elephanta_Ravana.jpg
pattadakkal.jpg
mallai okkaneswara.JPG

Vijay kumar

unread,
Jan 28, 2008, 9:20:13 PM1/28/08
to minT...@googlegroups.com
நேற்று ஹோய்சளர் சிற்பம் கண்டோம். அதில் அவர்கள் சோழர் மீது கொண்ட வெற்றியை காட்டினர்.  இவ்வாறு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.
 
எனினும் எனக்கு மிகவும் பிடித்து சோழர் - தமிழனுக்கே உரிய நக்கல் நையாண்டி தனத்தை சோழர் நாணயத்தில் நாம் காணலாம்.
 
தங்கள் ஆட்சியில்  ( உத்தம சோழ, ராஜா ராஜா சோழ மற்றும் ராஜேந்திர சோழ முதல் ....) பாண்டிய மற்றும் சேர அரசர்களை வென்று மும்முடி சோழர் என்ற பெயர் கொண்ட சோழ அரசர்கள் தங்கள் வெற்றியை காட்டிய விதம் அருமை.
 
கிழே உள்ள நாணயத்தை உன்னிப்பாக கவனியுங்கள் - அரியணையில் கம்பிரமாக அமர்திருக்கும் புலி, மேல் நோக்கி ( இறந்த ) இரண்டு  மீன்கள்  ( பாண்டிய ) , ஒரு வில் ( சேர).  ஆஹா மக்கள் இடையே புழங்கிய இந்த நாணயங்களை பார்க்கும் போதெல்லாம் வெட்கி தலை குனியும் அந்த உணர்வே  பாண்டிய போராளிகளின்  விடா முயற்சியால் சோழ வம்சத்தை நசுக்கியது. 
 
thanks:
 
chola_yuddamalla_au_o.jpg

kra narasiah

unread,
Jan 28, 2008, 11:08:03 PM1/28/08
to minT...@googlegroups.com
Really great pics
keep it up.
Narasiah

----- Original Message ----
From: Vijay kumar <vj.ep...@gmail.com>
To: minT...@googlegroups.com

அங்கோர், எல்லோரா, தராசுரம், பட்டடக்கள், மல்லை, பேலூர், எலீபெண்ட என்று பல இடங்களில் உள்ள இதே கரு உடைய சிலைகளை இணைத்துள்ளேன்.

 


It is loading more messages.
0 new messages