"வாகீச கலாநிதி" கி.வா.ஜகந்நாதன்

88 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Apr 11, 2009, 5:24:51 PM4/11/09
to Min Thamizh
தமிழ்த்தாய் எல்லா அணிகலன்களையும் அணிந்து மகிழ்வோடு இருக்கிறாள் என்றால், அதற்குக் காரணம் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்தான்.

பல பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய ஒரு மாபெரும் பணியை உ.வே.சா. தனியொரு மனிதராய் இருந்து செய்துள்ளார். அந்த மாபெரும் சான்றோரின் கூடவே இருந்து தொண்டாற்றியவர்தான் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா மற்றும் கி.வா.ஜ. இருவரின் பணிகளாலும் முயற்சியாலும்தான் தமிழன்னை புதுப் பொலிவு பெற்றாள்.

கிருஷ்ணராயபுரத்தில் வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி கி.வா.ஜ. பிறந்தார். தன் இறுதி மூச்சு உள்ளவரை சொற்பொழிவு செய்து, கேட்போர் மனம் மகிழச்செய்த கி.வா.ஜ., பிறந்தவுடன் அழவே இல்லையாம். எல்லோரும் கவலை அடைந்து மருத்துவம் செய்து குழந்தையை அழ வைத்தார்களாம். அழாமல் பிறந்த அவர், பின்னாளில் எத்தனையோ பேர்களின் கண்ணீரைத் துடைத்துள்ளார்.

http://www.dinamani.com/Images/Apr09%5Cdkvijj.jpg

கி.வா.ஜ. குடும்பம் பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்குக் குடிபெயர்ந்தது. இவர், அங்குள்ள திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மோகனூரில் சிறு குன்று ஒன்று இருக்கிறது. அதற்குக் "காந்தமலை" என்று பெயர். அக்குன்றில் முருகப்பெருமான், தண்டாயுதபாணி திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்முருகப் பெருமானிடத்தில் சிறுவயது முதலே இவருக்கு ஈடுபாடு உண்டு. அப்பெருமான் மேல் பல பாடல்கள் புனைந்துள்ளார். இரவு, பகல் பாராது எப்போதும் அந்த முருகப்பெருமான் அருகிலேயே இருப்பார்.

தன் மேற்படிப்பைத் தொடர கி.வா.ஜ. மீண்டும் கிருஷ்ணராயபுரம் வந்தார். கணிதமும், இயற்பியலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். தமிழ்ப் பற்றும் தமிழறிவும் அவருக்குப் பிறப்பிலேயே இருந்தன. சிறுவயது முதல் காந்தியடிகளிடம் பற்றும் மதிப்பும் இருந்த காரணத்தால் அவர் எப்போதும் கதராடையையே அணிய ஆரம்பித்தார்.

பள்ளியில் படிக்கும் சிறு பருவத்திலேயே கவிதை பாடத் தொடங்கியவர் கி.வா.ஜ. கவிதை இலக்கணம் முழுவதுமாகத் தெரிவதற்கு முன்பே கவிதையின் ஓசையை உணர்ந்து பாடும் ஆற்றல், பன்னிரண்டாவது வயதிலேயே அவருக்கு ஏற்பட்டுவிட்டது. கி.வா.ஜ.வின் கன்னி முயற்சியில் உருவானதுதான் நடராஜரைப் பற்றி அவர் எழுதிய "போற்றிப்பத்து" என்னும் பதிகம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் ஆற்றல் பெற்றவர் கி.வா.ஜ. "ஜோதி" என்ற புனைப்பெயரில் அவ்வப்போது கவிமழை பொழிந்தவர். பழமையின் இலக்கண மரபுகளில் ஊறித் திளைத்தவராக இருந்தும், அந்தப் பழமையின் வளத்தையே உரமாக்கிப் புதிய எளிய இனிய உருவங்களில் கவிதைகளைப் பொழிந்திருக்கிறார்.

1925ஆம் ஆண்டு சேந்தமங்கலம் சென்றார். அங்கே ஐராவத உடையார் என்ற ஜமீன்தார் இருந்தார். அவரது தெய்வ பக்தியும் அறிவாற்றலும் கி.வா.ஜ.வைக் கவர்ந்ததால் அவருடைய நண்பரானார். உடையார் ஒரு தெய்வீக ஆஸ்ரமத்தை அங்கே அமைத்திருந்தார். அந்த ஆஸ்ரமத்திலேயே கி.வா.ஜ. தங்கினார். சேந்தமங்கலத்தில் அவதூத மகான் ஒருவர் இருந்தார். அவரிடம் பக்தி கொண்டு அவரை வணங்குவார். அம்மகானது சீடர் துரியானந்த சுவாமிகளிடம் கி.வா.ஜ. நட்புக் கொண்டிருந்தார்.

சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அப்போது அவ்வூரில் இருந்த கிறிஸ்தவ சமயப் போதகர் திரோவர் துரை என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்பித்தார். அப்போதும் முருகப்பெருமான் நினைவாகவே இருந்து, பாடல்கள் புனைவார். சேந்தமங்கலத்தில் இருந்த காசி சுவாமிகள் மூலம் உ.வே.சாமிநாதய்யரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.

1927ஆம் ஆண்டு உ.வே.சா. சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். அதனால் அவர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். உ.வே.சா.விடம் முறையாகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற பேரவா நாளுக்கு நாள் கி.வா.ஜ.வுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவரது வேட்கையை நன்கு உணர்ந்திருந்த ஐராவத உடையார் 1927ஆம் ஆண்டு தைப் பூசத்துக்காக வடலூர் புறப்பட்டபோது கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சிதம்பரத்தில் உ.வே.சா.வைக்கண்டு அவரிடம் கி.வா.ஜ.வை ஒப்படைத்தார். அன்று முதல் உ.வே.சா. அமரர் ஆகும் வரை அவரது நிழல் போலவே இருந்தார்.

உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியைக் கூறினால், கி.வா.ஜ. அதை எழுத்தில் வடிப்பார். அதில் உ.வே.சா. சில திருத்தங்களைச் செய்வார். அத்திருத்தங்களுடன் கட்டுரையை மிகவும் செம்மையாகவும் சுவையாகவும் எழுதிப் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார் கி.வா.ஜ. உ.வே.சா.வின் பெரும்பாலான உரைநடை நூல்கள் எல்லாம் அவ்வாறு உருவானவையே.

கி.வா.ஜ., உ.வே.சா.விடம் தமிழை முறையாகக் கற்றுத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார். உ.வே.சா.வின் ஏடு தேடும் பணியிலும், வெளியூர்ப் பயணங்களின் போதும் கி.வா.ஜ. உடன் இருப்பார்.

1932ஆம் ஆண்டு உ.வே.சா.வின் உதவியால், கலைமகள் பத்திரிகையின் துணையாசிரியர் ஆனார். பிறகு ஆசிரியரானார். கவியரசர் பாரதியாரைப் பற்றிப் பற்பல கட்டுரைகளை "கலைமகள்" இதழில் வெளியிட்டார். அரிய தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவினார். படிப்படியாகக் "கலைமகள்" இதழை வளர்த்து அதை ஒரு தரமான நிலைக்கு உயர்த்தினார் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் கி.வா.ஜ.வின் கடுமையான உழைப்பும், ஊழியர்களிடம் அவர் காட்டிய மனிதநேயமும் தான். ஒரு இலட்சிய இதழாசிரியர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் கி.வா.ஜ.

கி.வா.ஜ. சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் விளங்கினார். தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் அவருடைய சிறுகதைத் திறனைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. அவருடைய உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் பக்தி உணர்வு அவருடைய சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுத்தோன்றும்.

1932ஆம் ஆண்டு அலமேலு என்பவரை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.

கி.வா.ஜ.வின் முதல் நூல் காந்தமலை முருகன்மேல் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். கலைமகள் ஆசிரியர் பணியுடன் தன் ஆசிரியர் உ.வே.சா.வின் ஆய்வுப்பணி, பதிப்பு, எழுத்துப் பணிகளுக்கும் வழக்கம் போலவே உதவி செய்து வந்தார்.

  • வாகீசகலாநிதி
  • திருமுருகாற்றுப்படை அரசு
  • தமிழ்க்கவி பூஷணம்
  • உபன்யாசகேசரி
  • செந்தமிழ்ச்செல்வர்
  • தமிழ்ப்பெரும்புலவர்
  • திருநெறித்தவமணி
ஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளும் சமயங்களும் வழங்கி அவரைச் சிறப்பித்துள்ளன.

உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகும் சோர்வில்லாமல் தமிழ்த் தொண்டு செய்து வந்தார். கி.வா.ஜ. சுமார் 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உ.வே.சா.வின் பிற்காலச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்தி செய்தார். கோபம் என்பதே வராத குணக்குன்று கி.வா.ஜ. தமிழ் தொடர்பாக யார் எப்போது, எவ்விதமான சந்தேகம் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமலும் சலித்துக் கொள்ளாமலும் அவர்களின் ஐயங்களைத் தீர்ப்பார்.

கி.வா.ஜ. சிறந்த உரையாசிரியராகவும், சீரிய திறனாய்வாளராகவும் விளங்கினார். ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில் அவர் உருவாக்கிய "தமிழ்க் காப்பியங்கள்" என்னும் நூலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் "கல்கி" நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக அவர் ஆற்றிய "தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்" என்னும் நூலும் அவருடைய ஆய்வுத் திறனுக்குக் கட்டியம் கூறுவனவாகும்.

பொதுவாக, எழுத்தில் வல்லவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை; அதேபோல், பேச்சில் வல்லவர்கள் எழுத்தில் வல்லவர்களாக இருப்பதில்லை. கி.வா.ஜ.வோ எழுத்து, பேச்சு ஆகிய இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார். எப்போதும் படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பார். தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் இவரது புகழ் பரவியது. நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் பேசுவதில் வல்லவர். இவ்வுலகில் இருந்து மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்புவரை, மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியதைப் பொருள்படுத்தாமல் பெரியபுராணத்துக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.

மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தும் மிக அரிய தமிழ்ப் பணிகள் செய்தும், ஓய்வு என்பதையே அறியாத சான்றோராகிய வாகீச கலாநிதி கி.வா.ஜ. 1988ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார். கி.வா.ஜ. என்ற இந்தத் தமிழ்ப் பரம்பரையின் சகாப்தம் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.

க.துரியானந்தம்

நன்றி: தமிழ்மணி (தினமணி)

N. Ganesan

unread,
Apr 11, 2009, 5:56:36 PM4/11/09
to மின்தமிழ்

On Apr 11, 4:24 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:

> கி.வா.ஜ. குடும்பம் பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்குக்
> குடிபெயர்ந்தது.

காவேரியின் ஒருகரையில் உள்ள கிராமம் கிருஷ்ணராயபுரம்,
பாலம் தாண்டினால் எதிர்க்கரையில் மோகனூர்.

மோகு - ஒருவகை மரம். மோகூர்ப் பழையன்.
இவர்களின் கோட்டை பழயகோட்டை.

கலைமகள் 1970-ல் எழுத்துச் சீர்மையை ஆதரவு நல்கி
கி.வா.ஜ ஒரு கட்டுரை வரைந்தார்கள். அந்தக் கட்டுரையை
இங்கே யாராவது சென்னை அன்பர்கள் ஸ்கான் செய்து
இங்கே இடமுடியுமா? கோடி புண்ணியம்!

உகர, ஊகாரங்கள் ஏறிய உயிர்மெய் உடைத்து எழுதுதல் தமிழுக்கு நன்று என்று -
உவேசா மாணவர் கிவாஜ, பெரியார் ஈவேரா - இருவரும்
ஒத்துச் சொன்ன செய்தி எதிர்காலத் தமிழருக்கான அறிவுரை
இதுவாகத் தான் இருக்கும் :-)

இன்று விஞ்ஞானம், மின்தமிழில் இதைச் சாதிக்கிறது:

உ/ஊ-களின் உயிர்மெய் உடைப்பு,
கிரந்த எழுத்தின் உபயோகம் போல.
பிரியப்படுவோர் பாவிக்க வழிவகை செய்தல்
வேண்டும்.

வேண்டுவோர் பயன்படுத்த வழிகள்
அமைத்துத் தரல் வேண்டும். குழந்தைகளுக்குச்
சொல்லித் தரும்போது எளிமையாய்
ஒரு மேட்ரிக்ஸ் வடிவில் தமிழ் எழுத்துக்களைக்
கற்றுக் கொள்கின்றனர்.

இரண்டு குறள்கள் சீர்மையில் கொடுக்கிறேன்.
http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf
கொடுமுடியார் கட்டுரை முடிபுரையில்
காட்டிய குறள்களையே இங்கும் பயன்படுத்துகிறேன்.

சீர்மை எழுத்துக்களுக்கு எழுத்துருக்கள், எடுகோட்டு
(ஆன்லைன்) எழுதிகள், வலைத்திரட்டிகள் தரணும்.
இதில் ஈடுபட்டுள்ளேன்.

Fonts with Cheermai glyph, whatever the glyph shape, may be
used in webpages. Suppose if the cheermai fonts are not
there in a computer, the fallback option can show like:

செய்தக்க அல்ல செயக்கெட‌ுஞ் செய்தக்க
செய்யாமை யான‌ுங் கெ‌ட‌ும்.

கொக்கொக்க க‌ூம்ப‌ும் பர‌ுவத்த‌ு மற்றதன்
க‌ுத்தொக்க சீர்த்த இடத்த‌ு.

ஜு, ஹு, ஷு, ஶ‌ு, ஸு, மற்றும்
ஜூ, ஹூ, ஷூ, ஶூ, ஸூ போல்
தமிழ் உ/ஊ-இன் உயிர்மெய்கள்
மேற்கோள் குறள்களில் காட்டுகிறதா?

க‌ு ங‌ு ச‌ு ஞ‌ு ட‌ு ண‌ு த‌ு ந‌ு ப‌ு ம‌ு ய‌ு ர‌ு ல‌ு வ‌ு ழ‌ு ள‌ு ற‌ு
ன‌ு

க‌ூ ங‌ூ ச‌ூ ஞ‌ூ ட‌ூ ண‌ூ த‌ூ ந‌ூ ப‌ூ ம‌ூ ய‌ூ ர‌ூ ற‌ூ வ‌ூ ழ‌ூ ள‌ூ ற‌ூ
ன‌ூ

நா. கணேசன்

மேற்கொண்டு சிந்திக்க!
http://groups.google.com/group/tamil_ulagam/msg/88b9c184513a0dc0

Kannan Natarajan

unread,
Apr 11, 2009, 6:02:55 PM4/11/09
to minT...@googlegroups.com
> பிரியப்படுவோர் பாவிக்க வழிவகை செய்தல் வேண்டும்.

பிரியம் - வடமொழி வேர் கொண்டது. அதுபோல, பாவிக்க - வடமொழி வேரா?

தமிழன்பகலா.
கண்ணன் நடராசன்

N. Ganesan

unread,
Apr 11, 2009, 6:08:44 PM4/11/09
to மின்தமிழ்

On Apr 11, 5:02 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > பிரியப்படுவோர் பாவிக்க வழிவகை செய்தல் வேண்டும்.
>
> பிரியம் - வடமொழி வேர் கொண்டது. அதுபோல, பாவிக்க - வடமொழி வேரா?
>

bhAvanai.

Kannan Natarajan

unread,
Apr 11, 2009, 6:34:30 PM4/11/09
to minT...@googlegroups.com
> பாவிக்க - வடமொழி வேரா?

bhAvanai.

Bhava
is the Sanskrit and Pāli word for "becoming" in the sense of 'ongoing worldly existence', from the root bhū "to become".

Tirumurti Vasudevan

unread,
Apr 11, 2009, 10:07:30 PM4/11/09
to minT...@googlegroups.com
ஐயா ஆன்லைன் எப்படி எடுகோட்டு ஆயிற்று?
லீனக்ஸ் மொழி பெயர்பில் ஈடு பட்டு இருப்பதால் கேட்கிறேன்.
ஆதே போல் ஆஃப்லைன் க்கு?
திவா

12 ஏப்ரல், 2009 3:26 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

எடுகோட்டு
(ஆன்லைன்) எழுதிகள், வலைத்திரட்டிகள்



--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

N. Ganesan

unread,
Apr 11, 2009, 10:28:18 PM4/11/09
to மின்தமிழ்

On Apr 11, 9:07 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> ஐயா ஆன்லைன் எப்படி எடுகோட்டு ஆயிற்று?
> லீனக்ஸ் மொழி பெயர்பில் ஈடு பட்டு இருப்பதால் கேட்கிறேன்.

இராமகி ஐயா மடலில் பார்த்தேன், பயன்படுத்தினேன்.
லைன் என்பது கோடு. ஆன் என்பது எடுத்தல்/எடுப்பு.

தமிழ்மூலம் உள்ள சொற்கள் சிறப்பாக இருக்கும்.
ஆனால், மானேஜர் என்பது மானகர் என்பது ஒலிபொருத்தம்,
பொருட்பொருத்தம் உண்டா என்பதறியேன்.

> ஆதே போல் ஆஃப்லைன் க்கு?

படுகோட்டு நிலை.

> திவா
>
> 12 ஏப்ரல், 2009 3:26 am அன்று, N. Ganesan <naa.gane...@gmail.com> எழுதியது:


>
> > எடுகோட்டு
> > (ஆன்லைன்) எழுதிகள், வலைத்திரட்டிகள்
>
> --

> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/

Tirumurti Vasudevan

unread,
Apr 11, 2009, 10:36:16 PM4/11/09
to minT...@googlegroups.com

ஐயா,
இங்கே ஆன்லைன் என்பது இணைத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை அல்லவா குறிக்கிறது? கோடுக்கு இதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இது டெலிபோன் லைனில் ஆரம்பித்து caller on line என்று பயன்பாட்டை தொடர்ந்து வந்துள்ளது. அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பதில் என்ன பயன். அது பொருளை உணர்த்தவில்லை.
வலை இணைப்பில், வலை இணைப்பு விலகி என்று நான் எழுதுகிறேன்.
மேலும் பொருத்தமான சொற்கள் இருப்பின் பரிந்துரைக்கவும்.
நன்றி.

தி.வா

12 ஏப்ரல், 2009 7:58 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

இராமகி ஐயா மடலில் பார்த்தேன், பயன்படுத்தினேன்.
லைன் என்பது கோடு. ஆன் என்பது எடுத்தல்/எடுப்பு.

தமிழ்மூலம் உள்ள சொற்கள் சிறப்பாக இருக்கும்.

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!

kra narasiah

unread,
Apr 11, 2009, 10:46:57 PM4/11/09
to minT...@googlegroups.com

உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது
--- On Sat, 4/11/09, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:

kra narasiah

unread,
Apr 11, 2009, 10:51:33 PM4/11/09
to minT...@googlegroups.com
 
உற்றவ்ர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது

--- On Sat, 4/11/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

From: N. Ganesan <naa.g...@gmail.com>
Subject: [MinTamil] Re: "வாகீச கலாநிதி" கி.வா.ஜகந்நாதன்
To: "மின்தமிழ்" <minT...@googlegroups.com>
Date: Saturday, April 11, 2009, 5:08 PM



On Apr 11, 5:02 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> > பிரியப்படுவோர் பாவிக்க வழிவகை செய்தல் வேண்டும்.
>
> பிரியம் - வடமொழி வேர் கொண்டது. அதுபோல, பாவிக்க - வடமொழி வேரா?
>

bhAvanai.

kra narasiah

unread,
Apr 11, 2009, 10:54:28 PM4/11/09
to minT...@googlegroups.com
உற்றவ்ர்க்கு உதவும் பெருமானை,
ஊர்வது ஒன்று உடையான் உம்பர் கோனை
ப்ற்றினார்க்கு என்றும் ப்ற்றவன் தன்னை
பாவிப்பார் மனம் பாவிக்கொண்டானை. .
நரசய்யா

--- On Sat, 4/11/09, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:

From: Kannan Natarajan <thar...@gmail.com>
Subject: [MinTamil] "வாகீச கலாநிதி" கி.வா.ஜகந்நாதன்
To: minT...@googlegroups.com
Date: Saturday, April 11, 2009, 5:34 PM

> பாவிக்க - வடமொழி வேரா?

bhAvanai.

Bhava
is the Sanskrit and Pāli word for "becoming" in the sense of 'ongoing worldly existence', from the root bhū "to become".

devoo

unread,
Apr 11, 2009, 11:42:46 PM4/11/09
to மின்தமிழ்
Apr 12, 2:56 am, "N. Ganesan"

*மோகு - ஒருவகை மரம்.*

மதுரைக்கு அருகில் உள்ள ‘திருமோகூர்’ என்னும் ஊர்ப்பெயரும் இதே
அடிப்படையில் தோன்றியதா?

மோகு, அழிஞ்சில், தில்லை, உன்னம் போன்ற அரியவகை மரங்களின் புகைப்படம்
கிடைக்குமா ?

தேவ்

rama...@amachu.net

unread,
Apr 12, 2009, 12:04:58 AM4/12/09
to minT...@googlegroups.com
>
>
> On Apr 11, 9:07 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
>> ஐயா ஆன்லைன் எப்படி
>> எடுகோட்டு ஆயிற்று?
>> லீனக்ஸ் மொழி பெயர்பில் ஈடு
>> பட்டு இருப்பதால்
>> கேட்கிறேன்.
>
> இராமகி ஐயா மடலில்
> பார்த்தேன்,
> பயன்படுத்தினேன்.
> லைன் என்பது கோடு. ஆன் என்பது
> எடுத்தல்/எடுப்பு.
>

தொடர்பில் இருக்கிறார்

> தமிழ்மூலம் உள்ள சொற்கள்
> சிறப்பாக இருக்கும்.
> ஆனால், மானேஜர் என்பது
> மானகர் என்பது
> ஒலிபொருத்தம்,
> பொருட்பொருத்தம் உண்டா
> என்பதறியேன்.
>
>> ஆதே போல் ஆஃப்லைன் க்கு?
>
> படுகோட்டு நிலை.
>

தொடர்பில் இல்லை

--

ஆமாச்சு


N. Ganesan

unread,
Apr 12, 2009, 1:12:34 AM4/12/09
to மின்தமிழ்

ஆன்லைன் - இணைப்புள்ள
ஆஃப்லைன் - இணைப்பற்ற

> --
>
> ஆமாச்சு

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 12, 2009, 1:04:41 PM4/12/09
to மின்தமிழ்
திருமோகூர் என்பது வடமொழியில் மோகன க்ஷேத்ரம் என்பதிலிருந்து வந்தது.
அமுதம் எடுக்க பாற்கடலைக் கடைந்த காலத்தில், பெருமாள் இங்கே தான் மோகினி
அவதாரம் எடுத்ததாகச் சொல்லப் படுகிறது, மோகன க்ஷேத்ரம் என்பது தமிழில்
திருமோகூர் ஆனது. இங்கே எழுந்தருளியிருக்கும் தாயார் மோகனவல்லித் தாயார்
என்று வணங்கப்படுகிறாள்.

"நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமைசெய்யும் வல் அசுரரை அஞ்சிச்சென்று அடைந்தால்,
காமரூபம் கொண்டு, எழுந்து, அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று, எண்ணுமின், ஏத்துமின், நமர்காள்"

இது நம்மாழ்வார், இத்தலப் பெருமாளுக்குப் பாடிய பாசுரம்.

Tthamizth Tthenee

unread,
Apr 12, 2009, 10:17:55 PM4/12/09
to minT...@googlegroups.com
ஆதே போல் ஆஃப்லைன் க்கு?
 
விடுகோட்டு நிலை என்றும் சொல்லலாமோ
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/4/12 N. Ganesan <naa.g...@gmail.com>

ஆதே போல் ஆஃப்லைன் க்கு?



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Tthamizth Tthenee

unread,
Apr 12, 2009, 10:21:57 PM4/12/09
to minT...@googlegroups.com
மோகன க்ஷேத்ரம் ஆன மோக்ஷத்துக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பெருமாள்
 
என்று  கூறுவர் அதனால்தான் ஆழ்வார்
 
திருமோகூர்
நாமமே நவின்று, எண்ணுமின், ஏத்துமின், நமர்காள்"  என்று பாடினாரோ
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2009/4/12 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

மோகன க்ஷேத்ரம்

Kannan Natarajan

unread,
Apr 12, 2009, 10:38:47 PM4/12/09
to minT...@googlegroups.com
Online - உடன்நிகழ்; Offline - பின்தொடர்

ஆதாரம்:- வளர்தமிழ் மன்றத்தின் கணிப்பொறி கலைச்சொல் அகராதி - http://www.scribd.com/doc/2421484/Tamil-Technical-Computer-Dictionary

Kannan Natarajan

unread,
Oct 22, 2011, 11:30:26 PM10/22/11
to Min Thamizh
சமயோஜிதம் என்பதற்கும் சிலேடையாகப் பேசுவது என்பதற்கும் யாரை உதாரணம் காட்டுவது என்பதில் தயக்கமே இருக்க வழியில்லை.

"கலைமகள்" இதழின் ஆசிரியர் என்பதைவிட, "தமிழ்த்தாத்தா" உ.வே.சாமிநாதையரின் நேரடி மாணவர் என்பதைப் பெருமையாகக் கருதும் கி.வா.ஜகந்நாதன்தான் அவர்.

"சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ" என்றொரு புத்தகம். கி.வா.ஜ.வின் சிலேடைகளை அவரது மருமகன் இராம.சுப்ரமணியனும், அல்லையன்ஸ் சீனிவாசனும், சங்கரிபுத்திரனும் இணைந்து தொகுத்திருக்கிறார்கள்.

"சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ" என்பதைவிட "சிந்திக்க வைக்கிறார் கி.வா.ஜ." என்று பெயர் வைத்திருக்கலாமோ என்று யோசிக்க வைக்கின்றன அந்தப் புத்தகத்தில் இருந்த தகவல்கள்.

கி.வா.ஜ.வும், நண்பரும் ஒரு வீட்டிற்குப் போயிருந்தனர். அங்கே இருந்த குழந்தையின் நடையையும், தோற்றத்தையும் பார்த்து, அது ஆணா, பெண்ணா என்று இனம் காணமுடியவில்லை.

"இந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரியவில்லையே'' என்று திகைத்த நண்பரிடம், கி.வா.ஜ. அலட்டிக் கொள்ளாமல் சொன்னார், "ஆடையை விலக்கினால் பால் தெரியும்!'

"கலைமகள்" காரியாலயத்தில் ஒரு நாள் அச்சுக் கோப்பவர் பிழை திருத்துவதற்குப் "புரூஃப்" கொண்டுவந்தார். அருகிலிருந்த துணையாசிரியர், "என்னப்பா இப்படி மையைத் தடவிக் கொண்டு வந்திருக்கிறாய்?'' என்று கேட்டார். அதற்கு ஆசிரியர் கி.வா.ஜ. சொன்ன சமாதானம் - "என்னுடைய எழுத்தைக் கண்ணைப் போலக் கருதுகிறார். அதனால்தான் மைதீட்டி மகிழ்ந்திருக்கிறார்''.

"சேரமன்னன் ஒளவையாருக்குத் தங்கத்தால் செய்யப்பட்ட "ஆடு" ஒன்றைப் பரிசளித்தான். பரிசைப் பெற்ற ஒளவைப் பிராட்டி சொன்னார் - "சேரா, உன்னாடு பொன்னாடு! சேரா, உன் ஆடு பொன் ஆடு!''

இப்படி பல சுவாரஸ்யமான துணுக்குகள்.


கலாரசிகன்

நன்றி:- தினமணி

Geetha Sambasivam

unread,
Oct 23, 2011, 6:18:51 AM10/23/11
to mint...@googlegroups.com
நன்றி. 

2011/10/22 Kannan Natarajan <thar...@gmail.com>
சமயோஜிதம் என்பதற்கும் சிலேடையாகப் பேசுவது என்பதற்கும் யாரை உதாரணம் காட்டுவது என்பதில் தயக்கமே இருக்க வழியில்லை.

"கலாரசிகன்


நன்றி:- தினமணி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages