'இடியாப்பம்' - சொல்

171 views
Skip to first unread message

N D Llogasundaram

unread,
Jul 18, 2009, 8:56:07 AM7/18/09
to abans...@gmail.com, minT...@googlegroups.com
  "இடியாப்பம்"

  மண்டலபுருடர்
  இயற்றிய
  சூடாமணி நிகண்டு

  'இடி' எனும் சொல்லுக்கு

  நெல்லிலிருந்து செய்த மாவு

  என்று பொருள் கூறுகின்றது

  "கடிகை நாழிகையே துண்டம் கதவிடுதாழே முப்பேர்
  படிறு பொய் கிளவி இரண்டாம் பகர்தலே விற்றல் பேசல்
  சுடிகையே மகுடமும் சுட்டியும் இட்டபேரே
  இடி இடிப்பேரே நென்மா ஏற்றிடும் உறுதிச் சொல்லே" 48 (6)

  எனவே 'இடி'யிலிருந்து செய்த ஆப்பம் (அப்பம்)
  இடியாப்பம் எனப்பெயர் பெற்றது எனலாம்

  'இட்டிலி'க்கும் இதன் தொடர்பு காட்ட முடியுமா?
 
  அன்புடன்
  நூதலோசு  

V, Dhivakar

unread,
Jul 19, 2009, 2:05:18 AM7/19/09
to minT...@googlegroups.com
IDLI
 
Prof. Sundaramurthi AvargL, (Ex- VC, Tamil University), when he released my Novel Vicithra Siththan at Trichy Tamil Sangham, quoted the Name of 'DHIVAKARAM'  10th century classic where Idli got a place. I have to again go through work.When the professor talks about those excellent works, all the audience including myself were hearing with most interest and totally engrossed, but could not note in our pads the exact words.
 
Scholars and the disciples of Professor here in the group can find that in DHIVAKARAM and I wiould be happy to note those words.
 
Dhivakar

N. Ganesan

unread,
Jul 19, 2009, 9:00:57 AM7/19/09
to மின்தமிழ்

On Jul 19, 1:05 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> IDLI
>
> Prof. Sundaramurthi AvargL, (Ex- VC, Tamil University), when he released my
> Novel Vicithra Siththan at Trichy Tamil Sangham, quoted the Name of
> 'DHIVAKARAM'  10th century classic where Idli got a place. I have to again
> go through work.When the professor talks about those excellent works, all
> the audience including myself were hearing with most interest and totally
> engrossed, but could not note in our pads the exact words.
>
> Scholars and the disciples of Professor here in the group can find that in
> DHIVAKARAM and I wiould be happy to note those words.
>
> Dhivakar

இ. சுந்தரமூர்த்தி சொன்ன செய்தியா? We can ask Dr. Jean-Luc Chevillard
to
see if Dhivakaram nighaNTu has iDli.

மு.வ. “இட்டளி” என்று எழுதினார். இட்லி இடுவதை ஈடு என்கிறோம்.
ஈட்டுத்துணி என்றும் சொல்கிறோம். ஆனால் கடைசி எழுத்து என்ன
என்பதில் தான் இடியப்பச் சிக்கல்.

இரா. இளங்குமரன் ஒரு புத்தகத்தில் “இட்டவி” என்று திருப்பதிக்
கல்வெட்டு இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அக் கல்வெட்டு
எண்ணைப் பிடிக்கணும். இட்டு + அவித்தல் இட்டவி.
இராமகி அவர்கள் ஒருமுறை தமிழ்.நெட்டில் இதுபற்றிய
செய்தியை இட்டதாக நினைவு. அந்த மூலமடலைத்
துழாவணும். யாருக்காவது கிடைத்தால் எனக்குக் கொடுக்கலாம்.

வ, ல மயங்குவது எளிது. பலமுறை கையெழுத்திலும், கல்வெட்டிலும்
வகர லகரங்கள் ஒரே மாதிரி இருக்கும். யாரோ பெரியவர் இட்டவியை
இட்டலி என்று விஜயநகர காலத்தில் படித்து பிரபலம் ஆக்கியிருக்கக்
கூடும்.

-------------

தோசை < தோய்தல் ‘புளித்தல்’ “தோய் தயிர்” - ஆழ்வார், கம்பன், ...

என் மாணவப் பருவத்தில் தோசை பற்றி எழுதிய 2 செய்யுள்:
http://pirakeshpathi.blogspot.com/2007/04/1-cereal-serial.html
(ஆஸ்திரேயாக்காரர் ஒருவர் உரை எழுதியும் இருக்கிறார்! )

டாக்டர் ஜேபியின் வாழ்த்து:
http://www.treasurehouseofagathiyar.net/01200/1205.htm

சூலின் நிரையினால் சுடர்முடி பணிந்து
மேலின் நிலையவர் வாழ்நெறி விளக்கும்
சாலிப் பயிர்க்கதிர் சார்ந்தவெண் அ��சியை
மாலின் வண்ணமாம் மையார் உழுந்துடன்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வட்ட நிலாவே!

~ கொங்குகிழார்

என் தோசைப் பாட்டு கொங்கு நாட்டு நூலாகிய (உவேசா குறிப்பிட்டுள்ள
செய்தி) சீவக சிந்தாமணியை ஒட்டிப் பாடியது் :)

பள்ளியில் மனப்பாடப் பகுதி:
> சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்,
> மெல்லவே கருஇருந்து, ஈன்று, மேல்அலார்
> செல்வமே போல், தலை நிறுவித், தேர்ந்த நூல்,
> கல்வி சேர் மாந்தா�ன் இறைஞ்சிக், காய்த்தவே.


--------------

இழை சூழ் அப்பம் என்று இழையப்பத்தை சங்க ஆற்றுப்படை நூல்
ஒன்றில் காண்கிறோம். இழையப்பம் இடியப்பம் சென்னை,
அதற்கு வடக்கே ஆகியிருக்கலாம். சோழன் ஆந்திரத்தில், ஒரியாவில்
சோடன் என்றாவதுபோல். நாளகிரி (நல்லமலை - கரிய மலை)
நாடகிரி என்றாகிறது. கரும்பெண்ணை - கண்ஹபெண்ணா - கிருஷ்ணவேணி
- கிருஷ்ணா நதி பிறப்பது நாளகிரியிலே.

இடியப்பம் பிழிபொறியில் சந்தில் இடிக்கப்பட்டு வருவதாலும் சொல்லப்படலாம்.

கொங்குநாட்டில் சந்தகை எனப்படும் பிழிபொறியின் சந்துகளில்
வருவதால் ஏற்பட்ட பெயர். இருவருக்கிடையே தூது போவோரைச்
சந்துநடப்போர், சந்தகர் என்பதும் உண்டு.

சந்தகை/இழையப்ப எந்திரம் - பிழிபொறி/இழைப்பொறி - விடியோ காண:
http://upload.wikimedia.org/wikipedia/commons/1/1e/IdiyappamMaking.ogg

நா. கணேசன்


>
> On 7/18/09, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > *  "இடியாப்பம்"*


>
> >   மண்டலபுருடர்
> >   இயற்றிய

> >   *சூடாமணி நிகண்டு*


>
> >   'இடி' எனும் சொல்லுக்கு
>
> >   நெல்லிலிருந்து செய்த மாவு
>
> >   என்று பொருள் கூறுகின்றது
>
> >   "கடிகை நாழிகையே துண்டம் கதவிடுதாழே முப்பேர்
> >   படிறு பொய் கிளவி இரண்டாம் பகர்தலே விற்றல் பேசல்
> >   சுடிகையே மகுடமும் சுட்டியும் இட்டபேரே

> >   *இடி* இடிப்பேரே *நென்மா* ஏற்றிடும் உறுதிச் சொல்லே" 48 (6)


>
> >   எனவே 'இடி'யிலிருந்து செய்த ஆப்பம் (அப்பம்)
> >   இடியாப்பம் எனப்பெயர் பெற்றது எனலாம்
> >   'இட்டிலி'க்கும் இதன் தொடர்பு காட்ட முடியுமா?
>
> >   அன்புடன்

> >   நூதலோசு- Hide quoted text -
>
> - Show quoted text -

devoo

unread,
Jul 19, 2009, 9:17:55 AM7/19/09
to மின்தமிழ்
மாலன்: இட்லி தமிழ்ச் சொல்லா?

இராம.கி: புலவர் இளங்குமரன் மிகத் தெளிவாக இதைப் பற்றி
எழுதியிருக்கிறார். இதன் முதல் தோற்றம் இட்டவி என்பதாகவே அவர்
சொல்லுகிறார். இட்டவி பற்றிய கல்வெட்டு திருமலைக் கோவிலில் இருக்கிறது.
அதே போல தோயை என்பதே தோசை என்று ஆனது என்றும் இளங்குமரன் விளக்குவார்.


http://valavu.blogspot.com/2007/04/blog-post.html

தேவ்

devoo

unread,
Jul 19, 2009, 9:20:08 AM7/19/09
to மின்தமிழ்

devoo

unread,
Jul 19, 2009, 9:24:39 AM7/19/09
to மின்தமிழ்
இட்டவி

தற்போதுள்ள உணவுப் பொருட்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் கிடையாது, சங்ககால
இலக்கியத்தில் இட்டலிக்கு இட்டவியென்றும் தோசைக்கு தோய்வை என்றும் பெயர்.
டிபனுக்கு சிற்றுணா என்பதுதான் சரியான தமிழ்ச் சொல்.

மாஜி துணைவேந்தர் சுந்தரமூர்த்தி


http://www.nilacharal.com/tamil/current/tamil_news_329.asp

N. Ganesan

unread,
Jul 19, 2009, 9:45:56 AM7/19/09
to மின்தமிழ்

On Jul 19, 8:20 am, devoo <rde...@gmail.com> wrote:
> http://www.tamil.net/list/1999-08/msg00298.html

நன்றி தேவ்! இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.

யூனிக்கோட் குறியேற்பில்:
Re: Re: [tamil] Re: துவி சொய்
To Sadayan Shaboo <sada...@hotmail.com>
From "Dr.RM.Krishnan" <p...@giasmd01.vsnl.net.in>
Date Tue, 10 Aug 1999 21:49:54 +0500
CC "ta...@tamil.net" <ta...@tamil.net>, "Mani M. Manivannan"
<ma...@ix.netcom.com>
Delivered-To mailing list ta...@tamil.net
Mailing-List contact tamil...@tamil.net; run by ezmlm
Organization poosoft

At 8/10/99 3:16:00 AM, you wrote:

>>From: "K.M. Sulaiman" <sulai...@hotmail.com>
>>To: gan...@itmin.com
>>CC: ta...@tamil.net
>>Subject: [tamil] Re: துவி சொய்
>>Date: Tue, 10 Aug 1999 06:28:15 GMT
>
>>> >சுலைமன் தம்பி,
>>>
>>>துவி சொய்யிற்க்கு கடலை மா சேர்ப்பது புது முறையாகத் தோன்றுது.நீங்கள் கூறும் Recepie
>>>யாருடையது.இதற்கு Patent உண்டா.இதை அடுப்ங்கரைக்கு புதுமுறையென சிபர்சு செய்தால்
>>>அகப்பை காம்பினால் அடி விளுமா ? தயவு செய்து இது உங்கள் விகட அஞ்சல்களில் ஒன்று அல்லவென
>>>உறுதிப்படுதவும்.
>>>
>>>துரை கணேஷ்
>>>< >< >< >< >< >< ><
>>
>தோசொய்(ங்) என்பது மருவி தோசையாக விட்டது. இது காரணப்பெயராக இருக்கலாம். காரணம் தோ
>(ஹிந்தி) என்றால் இரண்டு சொய்(ங்) என்பது வார்க்கப்படும்போது வரும் ஒலியை குறிப்பது. தவிர ஆப்பம்
>சுடும்போது ஒரு பகுதியையே சட்டியில் வார்த்து வேக வைத்து சாப்பிடுகிறோம். தோசையின் இரு பரப்பையும்
>திருப்பிப் போட்டு வேகவைத்து சாப்பிடுவதால் அது தோ சொய் (தோசை)
>
>தவிர நாம் தற்போது விரும்பி சாப்பிடும் பிட்சா உணவு கூட ஆப்பம் வகையை சேர்ந்ததுதான் . எங்கள்
>பக்கத்தில் புது மாப்பிள்ளைக்கு காலை பசியாறலாக ஆப்பம் தருவார்கள் அந்த ஆப்பம் அளவில் பெரியதாக
>மேலே முட்டை கொஞ்சம் கொத்துகறி எல்லாம் பரப்பப் பட்டு சுடச்சுட தருவார்கள் சுவையாக இருக்கும். என்ன
>பிட்சாவில் அடிப்பகுதி தடிமனாகயிருக்கும், ஆப்பத்தில் மெலிதாகயிருக்கும். மேற்பரப்பை சுவைக்கு தக்கவாறு
>மாற்றிக் கொண்டால் பிட்சாவும் ஆப்பமும் ஒன்றே.
>
>அன்படன்
>
>ஷாபு
>
>அப்பம் தின்னவோ அலால் குழி என்னவோ ?
>

நீங்கள் கூறிய விளக்கம் (துவி சொய்) பலரும் வேடிக்கையாகச் சொல்லும் கதை.

சரியான விளக்கம்; இரா.இளங்குமரன் தமிழ் வளம்-சொல் என்ற பொத்தகத்தில்
பாவாணர்,
(செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 31, பரல் 6, பக்கம் 270 (1957 பிப்ரவரி))
-யில் எழுதியதை
மேற்கோள் காட்டி எழுதியிருந்தார்.
------------------------------------- வெட்டு

"இட்டிலி போன்றே தோசையும் தமிழகத்தில் தொன்று தொட்டு வழங்கி வரும்
சிற்றுண்டிவகையாகும். தோசை என்னுஞ் சொல் 'தோய்' என்னும் பகுதி
அடியாகப் பிறந்ததாகும். உறைதல்,திரைதல், புளித்தல், 'தோயும் வெண்
தயிர்'
(கம்பராமாயணம் நாட்டுப். 28)

இட்டிலி மாவிலும் தோசைமா மிகப் புளித்திருத்தல் வேண்டும். இல்லாக்கால்
சட்டியில் எழும்பாது. எளிதாய் வேகாது; சுவையாயும் இராது.

தோய்-தோயை-தோசை ய-ச போலி

இன்றும் நாட்டுப் புறத்தார் சிலர் தோயை என்றே வழங்குவர்."

---------------------------------------வெட்டு

கூடவே ஒரு செய்தி: இட்டிலி பற்றி இரா.இளங்குமரன் அதே பொத்தகத்தில்
எழுதியது.

---------------------------------------வெட்டு

"இதன் பெயரும் ஒரு சிக்கலாகவே இருக்கிறது.

மூ.வ. தன் கதைகளில் 'இட்டளி' என்று எழுதினார். 'இட்டு அளிப்பது' என்ற
பொருளில் கருதியிருக்கலாம். 'இடுதல்' மாவை எடுத்து'இடுதல்' என்று
கொண்டாலும் பொருந்தவில்லை.

சிலர் 'இடுதளி' என்பர். கோயிலுக்குத்'தளி' என்பது பழம் பெயர்.
கோயில்களில்
வழங்கப்படும் உணவு'தளிகை' என்பது. இவற்றைக் கருதியவர் 'இடு'தளி,
'இடும்'
'உணவு' என்னும் பொருளதாகக் கருதுவர்.

இட்டிலி இத்தனை 'ஈடு' எடுத்தேன் என்பதும் வழக்கு. ஈடு என்பது தட்டைக்
குறிக்கும்.
இட்டு வேகவைக்கும் தட்டை 'ஈடு' என்பது வழக்கில் இருப்பதால், 'ஈடுதளி'
'ஈட்டளி' ஆகலாம் என்பாரும் உளர்.

இவையெல்லாம் நெஞ்சில் பதியுமாறு ஒட்டவில்லை என்பது வெளிப்படை.

திருப்பதித் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில் 'இட்டவி' என்னும் சொல் ஆளப்
பட்டிருப்பதாகக் கல்வெட்டு அறிஞர் சி. கோவிந்தராசனார் உரைத்தார்.
'அவியல்'
அறிந்தது தானே! 'அவிதல்' அறியாததா? 'அவியுணவு' என்பதைத்
திருக்குறள் ஆளுகிறது. இட்டவியை 'அவியல்' என்றே வழங்கும் வழக்கும்
உண்டு.
இட்டு அவிப்பது 'இட்டவி' என்பது பொருந்துகிறது!
இனித் திருப்பதிக் கல்வெட்டு என்றால், அக் கல்வெட்டுஎண், அதிலுள்ள
செய்தி,
காலம் ஆகியவற்றை அறிந்தால்
- அறிவித்தால்- ஆய்வு முறையாகக் கொள்ளப் படும் அன்றோ!

"எவரும் அறிந்த பெருவழக்குடைய ஒர் உணவின் பெயரே, இத்தனை வடிவமாற்றம்,
குழப்பம் ஆகியவற்றை உடையதா?" என ஐயமுண்டாகலாம்! இதில் ஐயமென்ன?
அப்படித்தானே இருக்கிறது."
---------------------------------------வெட்டு

அன்புடன்,
இராம.கி

பி,கு. இன்னைக்கு வீட்டுலே என்ன தோசையா, இட்டவியா? கூடவே மிளகாய்ப்
பொடி வச்சிருக்கீங்களா?


DEV RAJ

unread,
Jul 19, 2009, 9:47:58 AM7/19/09
to minT...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>
Date: 2009/7/19
Subject: tivAkaram entry (Re: [MinTamil] Re: 'இடியாப்பம்' - சொல்
To: "N. Ganesan" <naa.g...@gmail.com>, venkdh...@gmail.com, Srinivasakrishnan ln <lns2...@gmail.com>, Subashini Tremmel <ksuba...@gmail.com>, rde...@gmail.com


Dear NG,

I don't have the time to read all the messages in the thread
to see whether a reference has been given
(I am preparing for my next trip to India)

This page (see attached file) from the first volume (dated 1990)
of the critical edition of திவாகரம்
might answer your question

See the entry 1109

Best wishes

-- Jean-Luc Chevillard (Paris)

<http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/>

P.S. I am not sure it is a good idea to send such a file as an attachment
to the whole groupe, which is why I send it to only a few people.

N. Ganesan a écrit :
ciRRuNTi_(tivAkaram_1109).pdf

N. Ganesan

unread,
Jul 19, 2009, 10:21:02 AM7/19/09
to மின்தமிழ்

நன்றி, திரு. செவ்வியார் அவர்களுக்கு


On Jul 19, 8:47 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> ---------- Forwarded message ----------
> From: Jean-Luc Chevillard <jeanluc.chevill...@gmail.com>
> Date: 2009/7/19
> Subject: tivAkaram entry (Re: [MinTamil] Re: 'இடியாப்பம்' - சொல்

> To: "N. Ganesan" <naa.gane...@gmail.com>, venkdhiva...@gmail.com,
> Srinivasakrishnan ln <lns25...@gmail.com>, Subashini Tremmel <
> ksubash...@gmail.com>, rde...@gmail.com
>
> Dear NG,
>

Neduchezhian T. Chezhian

unread,
Jul 19, 2009, 6:56:50 AM7/19/09
to minT...@googlegroups.com
அன்பு நண்பரே, வணக்கம்.
இடியாப்பம் அறிந்தீர், இட்டிலி அறிய உங்கள் மனம் ஆர்வபடுகிறது. வாழ்த்துகள். நன்றி.
அரிசி மாவையும் உளுந்தமாவையும் அரைத்து வைத்து, அதை புளிக்க வைத்து, புளிக்க வைத்த மாவை இட்டு அவிப்பதால் இட்டவி என்பதுதான் பிற்காலத்தில் இட்டிலி என்றும் தற்போது இட்லி என்றும் அழைக்கப்படுகின்றது. இட்டவி என்பதே பொருத்தமான சொல்.
வாழ்க நின் தமிழ்ப் பற்று. வளர்க நின் தமிழ் உணர்வு.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெ.

18 ஜூலை, 2009 6:26 pm அன்று, N D Llogasundaram <selvi...@gmail.com> எழுதியது:



--
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்

Kamala Devi

unread,
Jul 19, 2009, 7:54:48 PM7/19/09
to minT...@googlegroups.com
தேவ் சார்,
தமிழலங்காரம் எனும் பழைய, எந்த நூற்றாண்டு நூல் என்று தெரியவில்லை. முதல் பக்கமெல்லாம் காணோம்.
ஆசிரியரின் பெயரும் காணோம். அந்நூலில் 878ம் பக்கம் தந்துள்ள தகவல்--
இட்டலிக்கு  இட்டவி என்றும் பெயருண்டு.ஆனால் இட்டாவி என்பதுதான் சரியான சொல்----
காளஞ்சி முனிவர் காலையாகாரத்துக்கு , யாகத்திலிருந்து விழித்ததும்,ஞானதிருஷ்டியாலேயே
உணர்ந்து உண்டாக்கிய உணவாம்------etc
கமலம்


From: devoo <rde...@gmail.com>
Subject: [MinTamil] Re: 'இடியாப்பம்' - சொல்
இட்டவி
தற்போதுள்ள உணவுப் பொருட்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் கிடையாது, சங்ககால
இலக்கியத்தில் இட்டலிக்கு இட்டவியென்றும் தோசைக்கு தோய்வை என்றும் பெயர்.
டிபனுக்கு சிற்றுணா என்பதுதான் சரியான தமிழ்ச் சொல்.
மாஜி துணைவேந்தர் சுந்தரமூர்த்தி





New Email addresses available on Yahoo!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!
Message has been deleted

N. Ganesan

unread,
Jul 19, 2009, 8:16:12 PM7/19/09
to mint...@googlegroups.com

On Jul 19, 6:54 pm, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:

> தேவ் சார்,
> தமிழலங்காரம் எனும் பழைய, எந்த நூற்றாண்டு நூல் என்று தெரியவில்லை. முதல் பக்கமெல்லாம் காணோம்.
> ஆசிரியரின் பெயரும் காணோம். அந்நூலில் 878ம் பக்கம் தந்துள்ள தகவல்--
> இட்டலிக்கு  இட்டவி என்றும் பெயருண்டு.ஆனால் இட்டாவி என்பதுதான் சரியான சொல்----
> காளஞ்சி முனிவர் காலையாகாரத்துக்கு , யாகத்திலிருந்து விழித்ததும்,ஞானதிருஷ்டியாலேயே
> உணர்ந்து உண்டாக்கிய உணவாம்------etc
> கமலம்

மிக நல்ல சான்று! பாவாணருக்கு முன்னரே இட்டவி பற்றித்
தமிழில் அச்சுநூலில் பேசப்பட்டிருக்கிறது என்று காட்டிய
நிங்ஙளுக்குப் பூச்செண்டு!

தமிழலங்காரம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1840 - 1899) பாடியது:
http://www.treasurehouseofagathiyar.net/24800/24866.htm
வண்ணச்சரபம் ஒரு லட்சம் பாடல்கள் பாடியவர்.

தேவ் ஊர்க்காரர்தான். பொதியமலைச் சாரல்.
வண்ணச்சரபத்தின் புலவர்புராணம் முதல்படலம்
பொதியாசலப் படலம், மிக அழகான பாடல்கள்.

நா. கணேசன்

> ________________________________
> From: devoo <rde...@gmail.com>
> Subject: [MinTamil] Re: 'இடியாப்பம்' - சொல்
> இட்டவி
> தற்போதுள்ள உணவுப் பொருட்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் கிடையாது, சங்ககால
> இலக்கியத்தில் இட்டலிக்கு இட்டவியென்றும் தோசைக்கு தோய்வை என்றும் பெயர்.
> டிபனுக்கு சிற்றுணா என்பதுதான் சரியான தமிழ்ச் சொல்.
> மாஜி துணைவேந்தர் சுந்தரமூர்த்தி

>       Start chatting with friends on the all-new Yahoo! Pingbox today! It's easy to create your personal chat space on your blogs.http://sg.messenger.yahoo.com/pingbox- Hide quoted text -

Kamala Devi

unread,
Jul 19, 2009, 9:09:44 PM7/19/09
to minT...@googlegroups.com
அன்பின் கணேசன்
வெறும் வாய்ச்சாலத்துக்கு எழுதியதல்ல.சத்யமாயிட்டும் ஆய்வாளர்களின் மேற்கோள்கள் என்று வருவதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதில் எனக்கு மிகுந்த வருத்தமுண்டு.ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. தமிழில் திரமிளம் என்ற சொல்லாய்வைப்பற்றி, ஞானும் டாக்டர் வசந்தனும் நிரம்ப விவாதித்துள்ளோம்.
சான்று நூலைக்காண்பித்ததும், அவரது ஆய்வுக்கட்டுரையையே மாற்றி எழுதினார்.
ஆய்வேடுகளுக்கும் செப்பேடுகளுக்கும் இடையே  வரும் தகவல்கள் கூடஎவ்வளவு வேறுபடுகிறது  தெரியுமா?
அண்மையில் தொல்காப்பியத்தின் பழமை குறித்து, தொல்காப்பியனார் இலக்கணம் படித்தபோது கிட்டிய தகவல்கள்
பிரமிப்பூட்டுபவை.தொல்காப்பியனார் காலம், தொல்காப்பியனார் சமயம் பற்றி, பல விஷயங்கள் , ஏனோ தானோ என்று
கற்றுக்குட்டிகளெல்லாம் பேசுவதை ஜீரணிக்க முடியவில்லை.
முன்னைய தமிழறிஞர்கள்  சத்யமாயிட்டும் அறிஞர்களே.சம்சயமில்லை
கமலம்



> தமிழலங்காரம் எனும் பழைய, எந்த நூற்றாண்டு நூல் என்று தெரியவில்லை. முதல் பக்கமெல்லாம் காணோம்.
> ஆசிரியரின் பெயரும் காணோம். அந்நூலில் 878ம் பக்கம் தந்துள்ள தகவல்--
> இட்டலிக்கு  இட்டவி என்றும் பெயருண்டு.ஆனால் இட்டாவி என்பதுதான் சரியான சொல்----
> காளஞ்சி முனிவர் காலையாகாரத்துக்கு , யாகத்திலிருந்து விழித்ததும்,ஞானதிருஷ்டியாலேயே
> உணர்ந்து உண்டாக்கிய உணவாம்------etc
> கமலம்

மிக நல்ல சான்று! பாவாணருக்கு முன்னரே இட்டவி பற்றித்
தமிழில் அச்சுநூலில் பேசப்பட்டிருக்கிறது என்று காட்டிய
நிங்ஙளுக்குப் பூச்செண்டு!
தமிழலங்காரம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1840 - 1899) பாடியது:
http://www.treasurehouseofagathiyar.net/24800/24866.htm
வண்ணச்சரபம் ஒரு லட்சம் பாடல்கள் பாடியவர்.
தேவ் ஊர்க்காரர்தான். பொதியமலைச் சாரல்.
வண்ணச்சரபத்தின் புலவர்புராணம் முதல்படலம்
பொதியாசலப் படலம், மிக அழகான பாடல்கள்.
நா. கணேசன்




V, Dhivakar

unread,
Jul 20, 2009, 12:04:58 AM7/20/09
to minT...@googlegroups.com
My sincere Thanks to you, Sir!
 
Dhivakar

 

N. Ganesan

unread,
Jul 20, 2009, 12:23:31 AM7/20/09
to மின்தமிழ்

On Jul 19, 6:54 pm, Kamala Devi <saahith...@yahoo.com.sg> wrote:

> தேவ் சார்,
> தமிழலங்காரம் எனும் பழைய, எந்த நூற்றாண்டு நூல் என்று தெரியவில்லை. முதல் பக்கமெல்லாம் காணோம்.
> ஆசிரியரின் பெயரும் காணோம். அந்நூலில் 878ம் பக்கம் தந்துள்ள தகவல்--
> இட்டலிக்கு  இட்டவி என்றும் பெயருண்டு.ஆனால் இட்டாவி என்பதுதான் சரியான சொல்----
> காளஞ்சி முனிவர் காலையாகாரத்துக்கு , யாகத்திலிருந்து விழித்ததும்,ஞானதிருஷ்டியாலேயே
> உணர்ந்து உண்டாக்கிய உணவாம்------etc
> கமலம்

வண்ணச்சரபத்தின் தமிழலங்காரமா என்று பார்க்கலாம். 1915-ல் முதல் அச்சு,
20 பக்.
2வது 1964, 38 பக்.

878ஆம் பக்கம் என்பதுதான் விளங்கவில்லை. அவரது நூல்கள் பலவின் தொகுப்பா?
அந்தப் பக்கத்தை ஃசிராக்ஸ் (அ) ஸ்கான் அனுப்ப முடியுமா?

நா. கணேசன்

V, Dhivakar

unread,
Jul 20, 2009, 3:26:13 AM7/20/09
to minT...@googlegroups.com
>>>>நாளகிரி (நல்லமலை - கரிய மலை)
நாடகிரி என்றாகிறது. கரும்பெண்ணை - கண்ஹபெண்ணா - கிருஷ்ணவேணி
- கிருஷ்ணா நதி பிறப்பது நாளகிரியிலே.<<<< நா.க.
 
நல்லமலை என்பது குண்டூர் மாவட்டம் மேற்கு எல்லையிலிருந்து கர்நூல், கடப்பா, பிரகாசம் மேற்கு மாவட்டங்களில் உள்ள அடர்த்தியான காட்டு-மலைப் பகுதியைச் சொல்வார்கள். ஸ்ரீசைல மலை, மற்றும் அஹோபிலம், மகாநந்தி போன்ற புண்ணியஸ்தலங்கள் இந்த நல்லமலைக் காடுகளுக்குள்தான் இருக்கிறது.
 
நல்லமலை என்று இந்தப் பகுதிக்கு ஏன் பெயர் வந்தது? காரணம் இப்படி இருக்கலாம். தமிழகத்தின் வட எல்லையாக வேங்கடத்தைக் கருதினாலும், (சங்கப் பாடல்களில் வேங்கடம் என்றால் பாலை என்றே சித்தரிக்கப்படுகிறது), திருவேங்கடம் சற்று பச்சைவனப் பகுதிதான். ஆனால் சரியான திசையில் வட எல்லையாக நாம் இப்போது இருக்கும் சொர்ணமுகி நதியைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். சொர்ணமுகி நதியின் வடக்கே பார்த்தோமானால், கருப்பு நிற மலைகள் பரவலாகவும் திசை நோக்கில் பார்க்கையில் கிழக்கிலிருந்து மேற்கே படர்ந்தாற்போல தெரியும்.
 
கூடூர் ரயில் நிலையத்திலிருந்து பகல் பொழுது காளஹஸ்தி மற்றும் திருப்பதி பயணப்படுவோர் இப்போதும் இந்த கருப்பு மலைத் தொடர்களை பார்க்கலாம். (பாதி உடைத்தாகி விட்டது, மீதியையும் சீக்கிரம் உடைத்துவிடுவதற்குள் பார்க்கவும்)  இந்த மலைத் தொடர்களின் வடக்குப் பிரதேசம் முழுவதும் நல்லமலை பிரதேசம் என்றே ஆதி காலம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்போதும் இந்தப் பிரதேசம் (பாதி காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன என்றாலும்) தெலுங்கு மொழியில் கூட நல்லமலை பிரதேசம்தான். அடர்த்தியான காடுகளில் இப்போது நக்சல் தொந்தரவு அதிகம்.
 
கிருஷ்ணைக்கும் நல்லமலைக்கும் உள்ள ஒரே சம்மந்தம், நதியார் இந்தக் காடு-மலைக்குள் புகுந்து வருவதுதான். கிருஷ்ணை என்றால் கருப்பு என்ற பொருள் வடமொழியில் இருந்தாலும், இந்த நதிதேவதைக்கும் கருப்புக்கும் உள்ள சம்பந்தம் இது ஒன்றுதான் என்று நினைக்கிறேன். மற்றபடி மேற்குத் தொடர்ச்சி மலையில் மகாபலேஸ்வரத்தின் பசுவின் வாய் வாயிலாக தோன்றி வெளியே வருவதாக கிருஷ்ணை நதியைச் சொல்வர். வேணி என்றால் பெண்தான். அதற்காக கருப்புப் பெண்ணல்ல அவள். வெள்ளை வெளேரென்று துள்ளிக் குதித்து ஓடி வருவதை நாகார்ஜுனசாகர்-ஸ்ரீசைலம் இடைப் பகுதியில் பார்க்கவேண்டும். கொள்ளை அழகு.
 
திவாகர்

Hari Krishnan

unread,
Jul 20, 2009, 3:45:05 AM7/20/09
to minT...@googlegroups.com


2009/7/20 V, Dhivakar <venkdh...@gmail.com>

நல்லமலை என்று இந்தப் பகுதிக்கு ஏன் பெயர் வந்தது? காரணம் இப்படி இருக்கலாம். தமிழகத்தின் வட எல்லையாக வேங்கடத்தைக் கருதினாலும், (சங்கப் பாடல்களில் வேங்கடம் என்றால் பாலை என்றே சித்தரிக்கப்படுகிறது), திருவேங்கடம் சற்று பச்சைவனப் பகுதிதான். ஆனால் சரியான திசையில் வட எல்லையாக நாம் இப்போது இருக்கும் சொர்ணமுகி நதியைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும். சொர்ணமுகி நதியின் வடக்கே பார்த்தோமானால், கருப்பு நிற மலைகள் பரவலாகவும் திசை நோக்கில் பார்க்கையில் கிழக்கிலிருந்து மேற்கே படர்ந்தாற்போல தெரியும்.
 

சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் வந்த ஏதோ ஒரு தெலுங்குப்பட பாடல் நினைவுக்கு வருகிறது.

கோவுலு தெல்லனா கோபைய நல்லனா கோதுள்ளி எர்ரணா எந்துவலனா (சரியாக எழுதியிருக்கிறேனா என்பது தெரியாது).  கோபைய நல்லனா என்றால் கோபாலன் கருப்பு என்பது புரிகிறது.  ஆகவே நல்ல என்பதற்கு கருப்பு என்று பொருள் இருக்கிறது என்பதும் உறுதியாகிறது. :-)

--
அன்புடன்,
ஹரிகி.

V, Dhivakar

unread,
Jul 20, 2009, 4:46:54 AM7/20/09
to minT...@googlegroups.com
இந்தப் படப் பாடல் ஷூட் செய்த போது அதில் அடியேனும் பங்கு பெற்றேன்..(பின்புலம்) படம்: சப்தபதி, இயக்கம் : விசுவநாத். இடம் : அதே நல்லமலைக் காடுகளின் வடக்கு எல்லையான கிருஷ்ணா நதிக்கரையும், அமராவதி வயல்களும்.
 
ஹரிகி தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் அருமையாக எழுதுகிறார். சரியான வார்த்தைதான்.
 
திவாகர்

 

Raja sankar

unread,
Jul 20, 2009, 4:57:51 AM7/20/09
to minT...@googlegroups.com
கொங்கு நாட்டில் "கம்பு இடித்து மூடுவது" என்று கம்பஞ்சோறு செய்வதை குறிப்பிடுவார்கள். உணவை மூடிவைத்து செய்ததாலா இல்லை செய்தபின் "வேடு கட்டுதல்(பாத்திரத்தின் வாயை சுற்றி மெல்லிய துணி கட்டுதல்)" என்பதலா என்று தெரியவில்லை.

இடித்து வருகின்ற மாவும் பொடித்து வருகின்ற மாவும் வேறுபாடு கொண்டவை என்று நினைக்கிறேன். நெல்லில் இருந்து அரிசியாக்கும் உரலுக்கு குந்தாயம் என்று பெயர்.

மேலும் மாவு எனும் பதம் எப்போது புழக்கத்தில் வந்தது என்று யாரேனும் அறிவீர்களா?


ராஜசங்கர்

2009/7/18 N D Llogasundaram <selvi...@gmail.com>

N. Ganesan

unread,
Jul 20, 2009, 7:32:24 AM7/20/09
to மின்தமிழ்

On Jul 20, 2:26 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:

> கிருஷ்ணைக்கும் நல்லமலைக்கும் உள்ள ஒரே சம்மந்தம், நதியார் இந்தக்
> காடு-மலைக்குள் புகுந்து வருவதுதான். கிருஷ்ணை என்றால் கருப்பு என்ற பொருள்
> வடமொழியில் இருந்தாலும், இந்த நதிதேவதைக்கும் கருப்புக்கும் உள்ள சம்பந்தம் இது
> ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.

In Buddhist jAtakas, the Krishna river that is born in the Nallamalai
mountain range
is called KaNha-peNNaa river. That's the earliest attestation of this
river name in Indian literature.
(Cf. B. C. Law, Rivers and Mountains of India).

KaNha is kirushNa in Sanskrit, so, a name like nalla-peNNai of
Nallamalai > kaNhapeNNaa > kaNhavENaa
and then sanskritised as krushNa-vENI. Nowadays, the last part, peNNai
> vENI gets dropped.

N. Ganesan

N. Ganesan

unread,
Jul 20, 2009, 7:48:00 AM7/20/09
to மின்தமிழ்

On Jul 20, 3:57 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:

> மேலும் மாவு எனும் பதம் எப்போது புழக்கத்தில் வந்தது என்று யாரேனும்
> அறிவீர்களா?
>

ஒரு 10,000 வருஷம் இருக்கும்.

மா என்பதுதான் பழசு. மாவு, நாவு, பாவு, ...

நா - நாவு/நாக்கு (இதில் இருந்தே நாய்)

பா - பரவுதலால் (viscosity).
தேம்பா என்றே கொங்கில் தேம்பாவை/தேம்பாவைச் சொல்வதுண்டு,

-----------

குந்தாயம் - குந்தாணி என்பதும் உண்டு. குந்தாழி.
குந்தம் - உலக்கை.

சோழ சக்கிரவர்த்திகளுக்கு குலத்தில் முதல்வன் முசுகுந்தன் (சிலம்பு).
முசுகுந்தன் - வேல் கையில் பிடித்திருக்கும் முசு (கருங்குரங்கு).
சோழ மண்டிலத்தின் பழைய கோவில்களில் (திருவாரூர்)
முசுகுந்தச் சக்கிரவர்த்தியைக் குரங்காகச் சித்திரம் வரைந்திருக்கும்.

ஏற்கெனவே, காவேரியின் கரையில் உள்ள பூந்துறைப் புராணச் செய்தியை
எழுதினேன். குரங்குகள் “மனிதர்கள் நம் சந்ததியார்” என்று
மரக்கிளைகளில் பேசிக் கொள்கின்றன.

டார்வின் தியரிக்கு முன்னோடிகளோ இக் ”கவிகள்”?

நா. கணேசன்

V, Dhivakar

unread,
Jul 20, 2009, 7:52:50 AM7/20/09
to minT...@googlegroups.com
Please do not mistake my comments. Why should not we accept what we are seeying from our own eyes and our own proofs from our books and our own scholars. Nalla Malai Mountain Range has limited connection with Krishna River, that too after the river entering into Andhra Pradesh. The Bijapur hills range where in Narainpur, a very big dam (almatta ?) was constructed for Krishna, is not called Nallamalai range. Those are all called 'western ghats' only. Nallamalai is not only Hilly track but also forest plain range in Rayalaseema region. And it was restricted to only Andhra Pradesh. The River Krishna originates from Mahabaleshwar in Maharashtra near Sangli, in the western part.
 
Nallamalai river - may be Pennaar. But that is small river, originating from Nandhi Hills (i will check up this too) compares to Krishna.
 
Dhivakar

 

N. Ganesan

unread,
Jul 20, 2009, 8:18:40 AM7/20/09
to மின்தமிழ்

On Jul 20, 6:52 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> Please do not mistake my comments. Why should not we accept what we are
> seeying from our own eyes and our own proofs from our books and our own
> scholars. Nalla Malai Mountain Range has limited connection with Krishna
> River, that too after the river entering into Andhra Pradesh. The Bijapur
> hills range where in Narainpur, a very big dam (almatta ?) was constructed
> for Krishna, is not called Nallamalai range. Those are all called 'western
> ghats' only. Nallamalai is not only Hilly track but also forest plain range
> in Rayalaseema region. And it was restricted to only Andhra Pradesh. The
> River Krishna originates from Mahabaleshwar in Maharashtra near Sangli, in
> the western part.
>
> Nallamalai river - may be Pennaar. But that is small river, originating from
> Nandhi Hills (i will check up this too) compares to Krishna.
>

Thanks for the info. We'll work on this more.

There is an nscription in Prakrit of Satavahanas (2nd century).
H. Luders writes as NoDagirishvara temple,
Iravatham Mahadevan told me: we really need to check the
inscription in situ as it could well be: NaaDagirishvara.
(nO and nA - the variation is not much, and in hand writing
the difference could easily vanish. We just saw iTTavi : iTTali
as orthographic difference between vi & li is miniscule).

nALagiri > nADagiri is natural (ChoLa > ChODa as in ChoDaganga deva).

nALagiri "black mountain" is an elephant name in Perunkathai.
In Buddha caritam, an elephant nALagiri/nADagiri is sent to
kill him.

I think this all comes Dravidian languages' nAL-/nalla- "black".

anbudan,
Ganesan

> Dhivakar

V, Dhivakar

unread,
Jul 20, 2009, 8:25:42 AM7/20/09
to minT...@googlegroups.com
I enquired another scholar who has said Krishnaveni means 'Karungkoonthal'. Since the river has come from the feet of Achuthan she was named as Krishnaveni (Achutha charana tharangini). Veni means Koondhal (niir mali vENian).
 
D

 

N. Ganesan

unread,
Jul 20, 2009, 8:31:01 AM7/20/09
to மின்தமிழ்

On Jul 20, 7:25 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> I enquired another scholar who has said Krishnaveni means 'Karungkoonthal'.
> Since the river has come from the feet of Achuthan she was named as
> Krishnaveni (Achutha charana tharangini). Veni means Koondhal (niir mali
> vENian).
>
> D

இதற்குத் தான் பழைய புத்தகங்களில் அந் நதிப் பேரைப்
பார்க்கவேண்டியுள்ளது.
கண்ண-பெண்ணை (கரும்பெண்ணை) என்பது மிகப் பழைய
பௌத்த புத்தகங்களில் இருப்பதால் பகரம் வகரமாகத் திரிந்தது
என்பதே பொருந்தும்.

வேணி - கூந்தல் எல்லாம் பிற்பாடு எழுந்த ’ஸான்ஸ்க்ரிட்டைசேஷன்’.


>
> On 7/20/09, V, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
>
>
>
> > Please do not mistake my comments. Why should not we accept what we are
> > seeying from our own eyes and our own proofs from our books and our own
> > scholars. Nalla Malai Mountain Range has limited connection with Krishna
> > River, that too after the river entering into Andhra Pradesh. The Bijapur
> > hills range where in Narainpur, a very big dam (almatta ?) was constructed
> > for Krishna, is not called Nallamalai range. Those are all called 'western
> > ghats' only. Nallamalai is not only Hilly track but also forest plain range
> > in Rayalaseema region. And it was restricted to only Andhra Pradesh. The
> > River Krishna originates from Mahabaleshwar in Maharashtra near Sangli, in
> > the western part.
>
> > Nallamalai river - may be Pennaar. But that is small river, originating
> > from Nandhi Hills (i will check up this too) compares to Krishna.
>
> > Dhivakar
>

N. Ganesan

unread,
Jul 20, 2009, 8:32:38 AM7/20/09
to மின்தமிழ்

Diwakar,

I am interested in references about Wootz steel.

K. Gopalachari, Early history of the Andhra country,
1941 refers to an inscription edited by H. Luders.
The inscription mentions a temple dedicated to
nODagirIzvarasvAmin by the Satavahana king,
Ehu Santamula. Gopalachari says the "ehu" is
the dravidian word for steel which is "eHku"
in sangam texts, where H is the special tamil
letter called aaytam.

N. Ganesan

V, Dhivakar

unread,
Jul 20, 2009, 8:39:37 AM7/20/09
to minT...@googlegroups.com
தேடுவோம்.
அதற்கு முன்
ஐராவதம் அவர்கள் சொன்னதுதான். கிருஷ்ணை நதி வேதகாலத்தில் இல்லாமல் பிறகு உருவான நதியாக இருக்கலாம். ஏனெனின் வேதியர்கள் சங்கல்பம் சொல்லும்போது இந்த நதியின் பெயர் இல்லையாம்.
 
நன்றி கணேசரே!
 
தி

 
On 7/20/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

V, Dhivakar

unread,
Jul 20, 2009, 8:54:35 AM7/20/09
to minT...@googlegroups.com
quite interesting. But Sathavahana's period - Last two centuries of BCs,  they were Sanaadhi's later two centuries, they were converted to Bhuddhism by Saint Nagarjunacharya, whose name was very famous. Even now Nagarjuna Sagar Dam was named after him. While this Dam was constructed, the engineers found lot of inscriptions and statues in the Dam area. Most were destroyed by the contractors but some were kept in a Museum in Nagarjuna Sagar town. Lot of Bhuddhist monument are available there. This was called Vijayapuri in those days and capital of Sathavahanas. Later they shifted to Amaravathi, here once Bhuddha came and preached Kalachakra.
 
I will check with my records about your reference and temple. But as you said, the dravidian culture swayed over all parts of Andhra Pradesh since early part of civilisation.
 
There were references about steel and iron at Bastar District in Chattisgarh (North of Godavari river and border of Andhra Pradesh). There were hectic competition between Kings to take away the Iron ore from the area. The place was called Sakkara Kottam. British later established mines and later handed over to our Indian Government. Presently NMDC had several mines in this area.
 
D

 
On 7/20/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Jul 20, 2009, 9:08:53 AM7/20/09
to மின்தமிழ்


On Jul 20, 7:54 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> quite interesting. But Sathavahana's period - Last two centuries of
> BCs,  they were Sanaadhi's later two centuries, they were converted to
> Bhuddhism by Saint Nagarjunacharya, whose name was very famous. Even now
> Nagarjuna Sagar Dam was named after him. While this Dam was constructed, the
> engineers found lot of inscriptions and statues in the Dam area. Most were
> destroyed by the contractors but some were kept in a Museum in Nagarjuna
> Sagar town. Lot of Bhuddhist monument are available there. This was called
> Vijayapuri in those days and capital of Sathavahanas. Later they shifted to
> Amaravathi, here once Bhuddha came and preached Kalachakra.
>
> I will check with my records about your reference and temple. But as you
> said, the dravidian culture swayed over all parts of Andhra Pradesh since
> early part of civilisation.
>

Buddha, Buddhist, Buddhism, etc.,
it all comes from buddhi "wisdom".
Bodhi tree (skt. azvattha, tam. araicu, ficus religiosa) comes from
Buddha too.

Shiva-bodhi tree is banyan (tam. aal named after the aerial roots
"vaTam",
ficus indica), as mentioned in Tirumantiram.

Two most important fig trees of India.

NG

> There were references about steel and iron at Bastar District in Chattisgarh
> (North of Godavari river and border of Andhra Pradesh). There were hectic
> competition between Kings to take away the Iron ore from the area. The place
> was called Sakkara Kottam. British later established mines and later handed
> over to our Indian Government. Presently NMDC had several mines in this
> area.
>
> D
>
> On 7/20/09, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > Diwakar,
>
> > I am interested in references about Wootz steel.
>
> > K. Gopalachari, Early history of the Andhra country,
> > 1941 refers to an inscription edited by H. Luders.
> > The inscription mentions a temple dedicated to
> > nODagirIzvarasvAmin by the Satavahana king,
> > Ehu Santamula. Gopalachari says the "ehu" is
> > the dravidian word for steel which is "eHku"
> > in sangam texts, where H is the special tamil
> > letter called aaytam.
>
> > N. Ganesan- Hide quoted text -

N. Ganesan

unread,
Jul 20, 2009, 9:14:59 AM7/20/09
to மின்தமிழ்

On Jul 20, 2:45 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2009/7/20 V, Dhivakar <venkdhiva...@gmail.com>

பாடல் இதுதான்:
http://www.youtube.com/watch?v=i3mLQoBpJyE
http://www.youtube.com/watch?v=Qh_3Qni9NnQ
http://www.youtube.com/watch?v=eFT240kKBYU

கண்ணய்யா நல்லனி கண்ணய்யா
http://www.youtube.com/watch?v=m1rbuLbchOM
(கண்ணையன் கறுத்த கண்ணையன்
என்று பொருளா?)

---------

நல்ல என்றால் “கருமை” என்று தெலுங்கில்
உள்ளது போலத் தமிழில் உள்ளதா?

அல் ‘இரவு’ < நள்-/நல்-
நண்டு (நள் + துகர விகுதி).
அலவன்/நலவன் < நளவன் “நண்டு’

நல்லபாம்பு, வடமொழியில் க்ருஷ்ணசர்ப்பம் = கரும்பாம்பு

எள்ளு < நெள்ளு < நள்ளு.
நல்லெண்ணெய் < நள்ளு/நெள்ளு தரும் நெய்.

இன்னும் தெலுங்கர்கள் இரவில் திருமணம்
நடத்துகிறார்கள் அல்லவா?
சிலப்பதிகாரத்தில் இரவிலே கோவலநன் - கண்ணகி
திருமணம் நடப்பதாய்ப் பாடப்பட்டுள்ளது.
அதில் நள்-/நாள்- என்ற குறிப்புள்ளதா
என்று பார்க்கணும்.

நாள் என்றால் இரவு (அ) கருமை என்ற பொருள்
சங்க இலக்கியத்தில் பல இடங்களில் உண்டு.
தொகுக்கணும்.

நாரணன் நாளணன் தொடர்பிருக்கும்.
ஏன் தமிழர்களுக்குப் பெயர் நாளப்பன்/நாளணன்
என்று விளங்கும் :) நாரணன்/நாரணன் (Cf. காரி/காளி).
http://groups.google.com/group/thamizayam/msg/1c7f0cb69f4c9daa

நா. கணேசன்

Message has been deleted
Message has been deleted

devoo

unread,
Jul 20, 2009, 9:31:09 AM7/20/09
to மின்தமிழ்
Jul 20, 5:39 pm, "V, Dhivakar"
//ஏனெனின் வேதியர்கள் சங்கல்பம் சொல்லும்போது இந்த நதியின் பெயர்
இல்லையாம்.//

மஹாநதி, ப்ரம்மபுத்ரா போன்ற பேராறுகளின் பெயர்கள் கூட
ஸங்கல்பத்தில் கிடையாது; பின்னால் தோன்றிய நதிகள்
என்று முடிவுகட்டலாமா ?

தேவ்


V, Dhivakar

unread,
Jul 20, 2009, 9:31:25 AM7/20/09
to minT...@googlegroups.com
Early history of the Andhra country,
> > 1941 refers to an inscription edited by H. Luders.
> > The inscription mentions a temple dedicated to
> > nODagirIzvarasvAmin by the Satavahana king,
> > Ehu Santamula. Gopalachari says the "ehu" is
> > the dravidian word for steel which is "eHku"
> > in sangam texts, where H is the special tamil
> > letter called aaytam.
This Temple has similarity with the present Alampur (Kurnool District) Shiva Temple. The Rulers of the area, the king's race
were called Ikshavaku in Sathavahana's later period. In Tamil they are called as IKKUVAAGU. (There were not much difference in
Ikku and Egghu) And there was a king name in Ikkuvaagu's race as Santhmulan. But There were no mention of his name that this King
constructed this particular Temple) There was an Incription of Ikshavaku in prakrit found in Guntur District, about this temple. This was the only one inscription found so far in the Krishna river area, as rest are copper plates and grants. May be this was the inscription you are mentioning above. The Temple is as old as Srisailam. This is actually situated in the Tunghabadhra fag end. Then the River joining with Krishna.
 
I will get you more details soon. I must thank you first to make me think for more such informations
 
Dhivakar

N. Ganesan

unread,
Jul 20, 2009, 9:36:14 AM7/20/09
to மின்தமிழ்


On Jul 20, 8:31 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> Early history of the Andhra country,> > 1941 refers to an inscription edited by H. Luders.
> > > The inscription mentions a temple dedicated to
> > > nODagirIzvarasvAmin by the Satavahana king,
> > > Ehu Santamula. Gopalachari says the "ehu" is
> > > the dravidian word for steel which is "eHku"
> > > in sangam texts, where H is the special tamil
> > > letter called aaytam.
>
> This Temple has similarity with the present Alampur (Kurnool District) Shiva
> Temple. The Rulers of the area, the king's race
> were called Ikshavaku in Sathavahana's later period. In Tamil they are
> called as IKKUVAAGU. (There were not much difference in
> Ikku and Egghu) And there was a king name in Ikkuvaagu's race as Santhmulan.
> But There were no mention of his name that this King
> constructed this particular Temple) There was an Incription of Ikshavaku in
> prakrit found in Guntur District, about this temple. This was the only one
> inscription found so far in the Krishna river area, as rest are copper
> plates and grants. May be this was the inscription you are mentioning above.
> The Temple is as old as Srisailam. This is actually situated in the
> Tunghabadhra fag end. Then the River joining with Krishna.
>
> I will get you more details soon. I must thank you first to make me think
> for more such informations
>

(1) This is *NOT* Alampur at all.

(2) Ikshvaaku - ikShu is Saaka name. 'Saakas are invaders
from persia. Buddha was of the 'Saakya clan.
One of the most important features of the 'Saaka Iranians
is their marriage customs. They married parallel-cousins
(periyappaa poNNu & paiyan. father's brothers kids)

(3) where as Dravidians (e.g., Telugus) custom is to
marry cross-cousins (athai or maamaa or akkaa poNNu).

Ikshvaaku - ikSa is Sanskrit or Persian origin.

Ehku is Tamil/Dravidian title.

NG

V, Dhivakar

unread,
Jul 20, 2009, 9:37:10 AM7/20/09
to minT...@googlegroups.com
நல்ல பாம்பு என்றால் கருநிறப் பாம்பன்றோ? கருநாகம்.
நளன் - கருமையாகிப் போனதால் அந்தப் பெயர் பெற்றானா.. அல்லது அதற்கு முன்னமேயே இந்தப் பெயர் இருந்ததா..
கருப்பு எள்ளிலிருந்து எண்ணெய் வருவதால் நல்லெண்ணெய் ஆனதோ..
 
கொஞ்சம் விவரியுங்களேன்..
 
தி


 
On 7/20/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
On Jul 20, 2:45 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:

> சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் வந்த ஏதோ ஒரு தெலுங்குப்பட
> பாடல் நினைவுக்கு வருகிறது.
> கோவுலு தெல்லனா கோபைய நல்லனா கோதுள்ளி எர்ரணா எந்துவலனா
> (சரியாக எழுதியிருக்கிறேனா என்பது தெரியாது).  கோபைய நல்லனா
> என்றால் கோபாலன் கருப்பு என்பது புரிகிறது.  ஆகவே நல்ல என்பதற்கு
> கருப்பு என்று பொருள் இருக்கிறது என்பதும் உறுதியாகிறது. :-)

http://www.dishant.com/lyrics/telugu-song-Govullu-Tellana-music-sapta...
Govullu Tellana Lyrics
Govulu tellana gopayya nallana godhooli errana enduvalana
govullu tellana gopayya nallana godhooli errana enduvalana
godhooli errana enduvalana

tellaavu kadupulo karraavulundavaa
endukundav
karraavu kadupuna erraavu puttadaa
emo
tellaavu kadupulo karraavulundavaa
karraavu kadupuna erraavu puttadaa
gopayya aadunna gopemma eedunna
godhooli kunkumai gopemma kantadaa
aa poddu podichenaa
ee poddu gadichenaa
enduvalana ante anduvalana
enduvalana ante daivaghatana

pillanagroviki niluvella gaayaalu
paapam
allanamoviki taakite geyaalu
aa aa aa aa
pillanagroviki niluvella gaayaalu
allanamoviki taakite geyaalu
aa murali moogainaa aa pedavi modainaa
aa gunde gontulo ee paaTa nindadaa
ee kadimi poosenaa
aa kalimi choosenaa

Submitted by Pradeepthi


பாடல் இதுதான்:
http://www.youtube.com/watch?v=i3mLQoBpJyE
http://www.youtube.com/watch?v=Qh_3Qni9NnQ
http://www.youtube.com/watch?v=eFT240kKBYU

கண்ணய்யா நல்லனி கண்ணய்யா
http://www.youtube.com/watch?v=m1rbuLbchOM
(கண்ணையன் கறுத்த கண்ணையன்
என்று பொருளா?)

---------

நல்ல என்றால் “கருமை” என்று தெலுங்கில்
உள்ளது போலத் தமிழில் உள்ளதா?

அல் ‘இரவு’ < நள்-/நல்-
நண்டு (நள் + துகர விகுதி).
அலவன்/நலவன் < நளவன் “நண்டு’

நல்லபாம்பு, வடமொழியில் க்ருஷ்ணசர்ப்பம் = கரும்பாம்பு

எள்ளு < நெள்ளு < நள்ளு.
நல்லெண்ணெய் < நள்ளு/நெள்ளு தரும் நெய்.

இன்னும் தெலுங்கர்கள் இரவில் திருமணம்
நடத்துகிறார்கள் அல்லவா?
சிலப்பதிகாரத்தில் இரவிலே கோவலன் - கண்ணகி

N. Ganesan

unread,
Jul 20, 2009, 9:38:20 AM7/20/09
to மின்தமிழ்

நதிகள் லட்சக்கணக்கான வருஷங்கள் ஆனவை.

ஆனால், ஸங்கல்பம் சொல்லும் மந்திரங்களை பாடினோருக்கு
அவை முக்யமற்ற நதிகள். அக்கரைகளில் அவர்கள்
குடியேறாக் காலத்தில் எழுந்த சுலோகங்கள்.

கணேசன்

V, Dhivakar

unread,
Jul 20, 2009, 9:48:05 AM7/20/09
to minT...@googlegroups.com
I am not talking Manu' race whose grand son is called Ikshavaaku.
 
There was ALSO a race called ikshavaaku who ruled Sathavahana's land during first three centuries of Christian Era.
 
D

 
On 7/20/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

devoo

unread,
Jul 20, 2009, 9:49:28 AM7/20/09
to மின்தமிழ்
Jul 20, 6:38 pm, "N. Ganesan" ?
அக்கரைகளில் அவர்கள் குடியேறாக் காலத்தில் எழுந்த சுலோகங்கள்.//

ஒப்புக்கொள்கிறேன்.

//கிருஷ்ணை நதி வேதகாலத்தில் இல்லாமல் பிறகு உருவான
நதியாக இருக்கலாம்.//

என் கேள்வி இக்கருத்தை ஒட்டி எழுந்தது.

தேவ்

devoo

unread,
Jul 20, 2009, 10:51:38 AM7/20/09
to மின்தமிழ்
இடியாப்பம் வாழ்க!

இனிய தெலுகுப் பாடல்களைக் கேட்க முடிந்தது.
பசு மந்தை எத்தனை அழகு!
’கண்ணா, நல்லனி கண்ணய்யா’ - ‘கண்ணா, கருமை நிறக்கண்ணா’ (நானும் ஒரு
பெண்) பாடலின் மொழிமாற்றம்.

கணேசருக்கு நன்றி.

தேவ்

kra narasiah

unread,
Jul 20, 2009, 11:50:03 AM7/20/09
to minT...@googlegroups.com
I have written about Kodumanal in my Kadal Vazhi Vanikam. Wootz is the steel that was produced here and exported to west in late centuries of BCE and early centuries of CE. Wootz is from Ukku a word for steel or casting. Lot of material is now available on this subject, thanks to Rajan's find in the sixties.
Narasiah


--- On Mon, 7/20/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

Geetha Sambasivam

unread,
Jul 21, 2009, 2:11:47 AM7/21/09
to minT...@googlegroups.com
முற்பிறவியை மறவாமல் இருக்கக் குரங்கு முகத்தைக் கேட்டுப் பெற்றான் முசுகுந்தன் எனப் புராணங்கள் கூறும்.

2009/7/20 N. Ganesan <naa.g...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jul 21, 2009, 2:15:12 AM7/21/09
to minT...@googlegroups.com
//(திருவாரூர்)
முசுகுந்தச் சக்கிரவர்த்தியைக் குரங்காகச் சித்திரம் வரைந்திருக்கும்.//

சப்த விடங்கத் தலங்களிலும் உள்ள ஒரே மாதிரி மூர்த்தம் முசுகுந்தன் கேட்டுப் பெற்றது. அதில் வீதி விடங்கர் திருவாரூர்.

2009/7/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>

V, Dhivakar

unread,
Jul 21, 2009, 2:17:50 AM7/21/09
to minT...@googlegroups.com
மேலும் மாவு எனும் பதம் எப்போது புழக்கத்தில் வந்தது என்று யாரேனும் அறிவீர்களா?

 
 
This is also interesting point.
மாவு எப்போது வந்தது என்பது தேடிக் கண்டு பிடிப்பதற்கு முன், மாவு 'பிண்டி' என அழைக்கப்படுவதாக 'திவாகரநிகண்டு' (நன்றி! செவ்வியார் மற்றும் நா.க )குறிப்பு சொல்கிறது.
 
ஆனால் தெலுங்கில் மாவு இன்னமும் 'பிண்டி' என்றே அழைக்கப்படுகிறது, பழைய (வழக்கத்தில் மறைந்துபோன) தமிழ்ப் பதம் இப்போது தெலுங்கில் சரள பாஷை.
 
திவாகர்


 
On 7/20/09, Raja sankar <errajasa...@gmail.com> wrote:
கொங்கு நாட்டில் "கம்பு இடித்து மூடுவது" என்று கம்பஞ்சோறு செய்வதை குறிப்பிடுவார்கள். உணவை மூடிவைத்து செய்ததாலா இல்லை செய்தபின் "வேடு கட்டுதல்(பாத்திரத்தின் வாயை சுற்றி மெல்லிய துணி கட்டுதல்)" என்பதலா என்று தெரியவில்லை.

இடித்து வருகின்ற மாவும் பொடித்து வருகின்ற மாவும் வேறுபாடு கொண்டவை என்று நினைக்கிறேன். நெல்லில் இருந்து அரிசியாக்கும் உரலுக்கு குந்தாயம் என்று பெயர்.


N. Ganesan

unread,
Jul 21, 2009, 8:00:49 AM7/21/09
to மின்தமிழ்

On Jul 21, 1:17 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> மேலும் மாவு எனும் பதம் எப்போது புழக்கத்தில் வந்தது என்று யாரேனும்
> அறிவீர்களா?
>
> This is also interesting point.
> மாவு எப்போது வந்தது என்பது தேடிக் கண்டு பிடிப்பதற்கு முன், மாவு 'பிண்டி' என
> அழைக்கப்படுவதாக 'திவாகரநிகண்டு' (நன்றி! செவ்வியார் மற்றும் நா.க )குறிப்பு
> சொல்கிறது.
>
> ஆனால் தெலுங்கில் மாவு இன்னமும் 'பிண்டி' என்றே அழைக்கப்படுகிறது, பழைய
> (வழக்கத்தில் மறைந்துபோன) தமிழ்ப் பதம் இப்போது தெலுங்கில் சரள பாஷை.
>

’பிண்டம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல் இந்தப் பழைய ‘பிண்டி’ தான்.
தர்ப்பணத்தில் பிதிரர்களை உத்தேசித்துக் கொடுக்கும் பிண்டம்
பிண்டம்/பிண்டி. பிடி- என்ற வினையடிப் பிறந்த சொல்.
திரளை ஆக்குதல் = பிண்டித்து வைத்த உண்டியை (தொல். பொ. 63, உரை).
பிண்டு ஆலம் வித்தின் (திருமந். 3025).
உருத் தோன்றாத கருப் பிண்டம்.
முதிராக் கருப் பிண்டம்
சிறு உண்டைகளை உடைய அசோக மரம் மகாவீரர் தியானம் செய்த
மரம் - அதனைப் பிண்டி என்றே தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிக்கும்.

பிண்டி/பிண்டம் பழைய திராவிடச் சொல், சம்ஸ்கிருதம் ஆன சொல்.

-------

இன்னொரு பழைய தமிழ்ச் சொல் வடமொழிகளில் பரவலாகப் புழங்குவது: பலி.
பொலி பலி ஆகியுள்ளது. இன்றும் பேச்சு வழக்கில் (சினிமாவில், எழுத்தில்,
கதை, நாவல்களில், ...) பலியின் மூலவடிவை பொலி காணலாம்.

சம்ஸ்கிருதத்தில் குறில் ஒகரம் இல்லை, எனவே அகரமாக்கும்.
கொக்கு/கொங்- (வளைந்தது) > கங்கம் (கொக்கு).
அதுபோலே,
பொலி பலி ஆக மருவியது (வடமொழிகளில் ”பொ” எழுத்தும், ஒலிப்பும் இல்லை.
“போ” தான் உண்டு).

http://www.google.com/#hl=en&q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F&aq=f&oq=&aqi=&fp=Xmf0jJ9P_V0

http://www.google.com/search?hl=en&q=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F&aq=f&oq=&aqi=

http://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_9905.html
பதினோரு ஆடுகளைப் பொலி போட்டு எல்லாம் தயாரா

http://yesuvadian.blogspot.com/2009/03/blog-post_30.html
//
அதற்குள் நண்பன்சொல்லிய குல தெய்வம் ஞாபகம் வரவும் ரசிப்பை நிறுத்தினேன்,
//
ஆமா நிறுத்துங்க இல்லேன்னா பொலி போட்டுருவாங்க :)

http://enkathaiulagam.blogspot.com/2005/11/48-3_113324679619231234.html
”பெரிய நகைச்சுவை மன்னன். அவர் சொல்லட்டுமே.. நீ ஏதாச்சும் இதுக்குமேல
பேசுன? மவனே இங்கயே பொலி போட்ருவேன்.. ”

”பொலி போட்டுடுவேன்” என்று தமிழ் சினிமாக்களில், எந்தப் படங்களில்
வருகிறது என்று பார்த்தால் நல்லது. வடிவேல், ...

கணேசன்

> திவாகர்


>
> On 7/20/09, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
>
>
>
> > கொங்கு நாட்டில் "கம்பு இடித்து மூடுவது" என்று கம்பஞ்சோறு செய்வதை
> > குறிப்பிடுவார்கள். உணவை மூடிவைத்து செய்ததாலா இல்லை செய்தபின் "வேடு
> > கட்டுதல்(பாத்திரத்தின் வாயை சுற்றி மெல்லிய துணி கட்டுதல்)" என்பதலா என்று
> > தெரியவில்லை.
>
> > இடித்து வருகின்ற மாவும் பொடித்து வருகின்ற மாவும் வேறுபாடு கொண்டவை என்று
> > நினைக்கிறேன். நெல்லில் இருந்து அரிசியாக்கும் உரலுக்கு குந்தாயம் என்று பெயர்.
>
> > ராஜசங்கர்
>

> > 2009/7/18 N D Llogasundaram <selvindl...@gmail.com>

devoo

unread,
Jul 21, 2009, 8:15:05 AM7/21/09
to மின்தமிழ்
Jul 21, 5:00 pm, "N. Ganesan"

கொக்கு/கொங்- (வளைந்தது) > கங்கம் (கொக்கு)//

கங்கம் கொக்கைக் குறிக்காது; கழுகைக் குறிக்கும் சொல்.
கழுகு மலை - கங்க சைலம்.

தேவ்

N. Ganesan

unread,
Jul 21, 2009, 8:20:34 AM7/21/09
to மின்தமிழ்

Thanks, dictionaries (Monier-Williams) give it as "heron". I thought
heron is a "kokku" (perhaps wrong).
http://images.google.com/images?hl=en&q=heron&btnG=Search+Images&gbv=2&aq=f&oq=

Kind regards
Ganesan

Reply all
Reply to author
Forward
0 new messages