அகநானூறு 141-ம் பாடலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபமும்

96 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 16, 2009, 11:21:06 AM1/16/09
to மின்தமிழ்
திருக் கார்த்திகை தீபம்
http://groups.google.com/group/Piravakam/msg/bab1c76c01b783d4


http://www.thamilworld.com/forum/index.php?s=a2d19614b2940c329de8730379203ddb&showtopic=7604&pid=111596&start=0&#entry111596

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்

சன்னதியில் அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா
தீபமும் ஏற்றப்படுகிறது. விழாவுக்காக பல லட்சம் பக்தர்கள்
திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா நடந்து வருகிறது. அக்னி தலமான
இங்கு சிவன் தீப வடிவாக காட்சி தருவதை விளக்கும் முக்கிய விழா இன்று
நடக்கிறது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன்
துவங்கி நடந்து வருகிறது. தினமும் அதிகாலை மூன்று மணிக்கு கோவில் நடை
திறந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடத்தப்படுகிறது. காலை,
மாலையில் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்கார பவனிகளும் நடக்கிறது. முக்கிய
நிகழ்ச்சியான மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது. இன்று அதிகாலை 2 மணிக்கு
கோவில் நடை திறக்கப்படும். அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு
அபிஷேகம் நடக்கிறது. வைர கிரீட அலங்காரம், அம்மனுக்கு தங்க கவசம்
சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில்
ஒன்றான பரணி தீபம் கோவில் வளாகத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏற்றப்படுகிறது.
கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் ஒற்றை திரி கொண்ட தீபம் ஏற்றப்படும்.
இறைவன் பஞ்ச பூதங்களாக நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என எங்கும்
நிறைந்திருக்கிறான். அவன் ஒருவனே என்பதை உணர்த்தும் விதமாக தீபம்
ஏற்றப்படுகிறது. அதிலிருந்து பெரிய தீபம் ஏற்றப்பட்டு, ஒரு மண் பானையில்
வைத்து, இரண்டாயிரத்து 668 அடி உயரம் உள்ள மலை உச்சிக்கு பர்வதராஜ
குலத்தினர் எடுத்து செல்வர். மாலை 4 மணிக்கு மகா தீப நிகழ்ச்சிகள்
துவங்கும். கொடிமரம் அருகே உள்ள தீப தரிசன மண்டபத்தில் விநாயகர்,
முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன்,
சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார சொரூபமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு
காட்சி தருவர். மாலை 5.58 மணிக்கு ஸ்வாமி மற்றும் அம்மன் சன்னதியில்
ஏற்றப்பட்ட ஐந்து மடக்கை விளக்குகள் ஒரே நேரத்தில் எடுத்து வரப்பட்டு,
கொடி மரம் அருகே உள்ள அகண்டத்தில் குவிக்கப்பட்டு தீபம் ஏற்றப்படும்.
அப்போது, அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனுடன் அர்த்தநாரீஸ்வரராய் தோன்றி
பஞ்சமூர்த்திகள், பக்தர்கள் முன் இரண்டு நிமிடம் ஆனந்த கூத்தாடி அருள்
பாலிப்பர்.

அர்த்தநாரீஸ்வரர் மறைந்தவுடன் மாலை 6 மணிக்கு ஐந்து தீப்பந்தத்தில் தீபம்
ஏற்றப்பட்டு, உயர்த்தி காண்பிக்கப்படும். தொடர்ந்து மலை உச்சியில் மகா
தீபம் ஏற்றப்படும். கோவில் முழுவதும் தீபங்களால் ஜொலிக்கும். ஜோதி
வடிவமாக அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்த காட்சியைக்
காண பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். 15
லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக கோவில் நிர்வாகம்
தெரிவித்துள்ளது. கோயில் வளாகத்தில் நின்று அர்த்தநாரீஸ்வரர் காட்சியை
காண, பத்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு
வெளியே பக்தர்கள் வசதிக்காக, நான்கு இடங்களில் பெரிய திரைகளில் காட்சிகள்
நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலை உச்சியில் மகா தீபம்
ஏற்ற பெரிய கொப்பரை எடுத்து செல்லப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 600 கிலோ
நெய் ஊற்றலாம். மூன்றாயிரம் மீட்டர் நீளமுள்ள பருத்தி நுால் திரி தயார்
செய்யப்பட்டுள்ளது. மலை உச்சியில் தீபம் 11 நாள் வரையில் சுடர்விட்டு
எரியும் வகையில் தொடர்ந்து நெய் ஊற்றப்படும். தினமும் 350 கிலோ நெய்
பயன்படுத்தப்படும் என்று கோவில் துணை ஆணையாளர் வாசுநாதன் தெரிவித்தார்.
மொத்தம் மூவாயிரத்து 500 கிலோ நெய் மகா தீபத்துக்கு
பயன்படுத்தப்படுகிறது.

நன்றி தினமலர்..

--------------

http://74.125.95.132/search?q=cache:MdOtD6xgCZcJ:www.thinaboomi.com/novee27/426tvm.htm+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4&hl=en&ct=clnk&cd=7&gl=us
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா
பரணி மற்றும் மகா தீபத்திற்கு 24 ஆயிரம் இலவச பாஸ் வழங்க
முடிவு

திருவண்ணாமலை, நவ்27_

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4 ந் தேதி
கொடியேற்றத்துடன் தொடங்கி 17 ந் தேதி வரை விழா தொடர்ந்து நடைபெறவுள்ளது்
இதையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுவதுபோல இந்தாண்டு பரணி மற்றும் மகா
தீபத்திற்கான இலவச தரிசனத்திற்கு 24 ஆயிரம் இலவச பாஸ் அட்டைகள் அச்சிட்டு
வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது்

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா
டிசம்பர் 4 ந் தேதி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் பஞ்சமூர்த்திகளின்
வீதிஉலா, தேரோட்டம் என கோலாகலமாக நடைபெறவுள்ளது் 10 ம் நாள் விழாவான
டிசம்பர் 13 ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்குள் பரணி தீபமும், மாலை
6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது்

இவ்விழாவை முன்னிட்டு முதல் 9 நாள் விழா நாட்களில் பக்தர்கள் 24 மணி
நேரமும் அண்ணாமலையார் கோயிலுக்குள் இலவசமாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது் ரூ்20, ரூ்50 சிறப்பு கட்டண டிக்கெட் பெற்றும் தனி
வரிசையில் சென்று சாமி தரிசனமும் செய்யலாம்்

டிசம்பர் 13 ந் தேதி மாலையில் மாலை உச்சியில் ஏற்றப்படும் மகா
தீபத்தையொட்டி அண்ணாமலையார் கோயில் கொடிமரம் முன்பு பஞ்சமூர்த்திகளின்
அலங்கார ரூப தரிசனமும் அதைத் தொடர்ந்து பார்வதி தேவிக்கு தன் உடலில்
சரிபாதியை (இடப்பாகம்) அளித்து அர்த்த நாரீஸ்வரராய் காட்சிதந்து ஆனந்த
௯த்தாடும் நிகழ்ச்சியும் நடைபெறும்்

அர்த்த நாரீஸ்வரர் பக்தர்கள் முன்பு ஒரு நிமிடம் தோன்றி காட்சி தந்து
மறைந்த அடுத்த நொடிபொழுதில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம்
ஏற்றப்படும்் அதாவது கோயிலுக்குள் அர்த்த நாரீஸ்வரராய் காட்சிதரும்
இறைவன் மலை உச்சியில் ஜோதி வடிவாய் உலக உயிர்களுக்கு காட்சி தருவார்்

இந்த மகாதீப தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் இலவசமாகவும் இலவச பாஸ்
மூலமாகவும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதோடு ரூ்50,ரூ்500 சிறப்பு
டிக்கெட் பெற்று அதற்கான தனி வழியில் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல
அனுமதிக்கப்பட்டு வந்தனர்்

இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவில் மகாதீபம் தரிசன சிறப்புகட்டனமாக
ரூ்500 யை ரூ்600 ஆக உயர்த்தியுள்ளனர்் இந்த ரூ்600 டிக்கெட் பெறும்
பக்தர்கள் திருமாள பத்தி என்ற மண்டபத்தின் மேல்தளத்தில் இருந்து மகா
தீபம் தரிசனம் அமர்ந்து காணவும்் இதற்கான சிறப்பு வழிகளும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது் இந்த சிறப்பு டிக்கெட் மொத்தம் 500 பேருக்கு மட்டுமே
வழங்கப்படவுள்ளது்

இலவச பாஸ் அட்டையை பொறுத்தவரை இந்தாண்டு பரணி தீப தரிசனத்திற்கு 12
ஆயிரம் அட்டைகளும், மகாதீபம் தரிசனத்திற்கு 12 ஆயிரம் அட்டைகளும் ஆக
மொத்தம் 24 ஆயிரம் அட்டைகள் அச்சிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது்

இந்த இலவச பாஸ் போலியாக யாரும் அச்சிடாமல் தவிர்ப்பதற்காக பல வண்ணங்களில்
இந்த பாஸ் அச்சிடப்பட்டு அதற்கான எண்ணும் வழங்கப்படுகிறது் மேலும்
பத்திரிகையாளர்களுக்கு இலவச பாஸ் வழங்கவும் அச்சிடப்பட்டு வருகிறது் இந்த
பணிகள் ரகசியமாக நடைபெறுவதோடு இதனை கண்காணிக்கவும் அலுவலர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்்


-------------------------------


http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=9141&cls=row3&ncat=TN
விண்ணை முட்டும் 'அரோகரா' கோஷத்துடன் திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம்

டிசம்பர் 12,2008,00:0

திருவண்ணமலை:திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில், மகாதீபம்
நேற்று மாலை ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்களின் "அரோகரா'
கோஷத்தால், திருவண்ணாமலை குலுங்கியது.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்
கோவிலில் கார்த்திகைத் தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து
வந்தது. பஞ்சபூதங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில், சிவ பெருமான் தீப
வடிவமாக காட்சிதரும் கார்த்திகை மகாதீபத் திருவிழா நேற்று கோலாகலமாக
நடந்தது.


தீபத் திருவிழாவில், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
இதனை யொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு மூலவர்
அருணாச்சலேஸ்வரருக்கும், உண் ணாமுலையம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம்
நடந்தது. கோவிலில் உள்ள அர்த்த மண்ட பத்தில் பரணி நட்சத்திரத்தில்
யாகசாலை பூஜைகள் நடந்தன.ஐந்து மடக்குகளில் நெய் ஊற்றி பஞ்சாக்கினி
பூஜைகள் நடந்தன. பின் அருணாச்சலேஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்தது. பின்,
கோவிலில் உள்ள சன்னிதிகளில் வைக்கப்பட்டிருந்த ஐந்து மடக்குளிலும் தீபம்
ஏற்றப்பட்டது.


பஞ்ச பூதங்களான நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று என அனைத்து
இடங்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறார், அவர் ஒருவரே என்பதை
உணர்த்தும் வகையில் ஒரே மடக்கில் பரணி தீபம் ஏற்றப்பட்டு பிரகாரத்தில்
வலம் வந்தது. கொடிமரத்தடியில் கூடியிருந்த பக்தர்களுக்கு பரணி ஜோதி தீப
தரிசனம் காண்பிக்கப்பட்டது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம்
ஏற்றும் நிகழ்ச்சி நேற்று மாலையில் நடந்தது.


முன்னதாக மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கும்,
அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடந்தன. பஞ்சமூர்த்திகள் சர்வ
அலங்காரத்தில் கொடிமரம் அருகே உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி
பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். சன்னிதி களில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த
ஐந்து மடக்கு விளக்குகளும் ஒரே நேரத்தில் வெளியே எடுத்து வரப்பட்டு
கொடிமரம் அருகே மாலை 6 மணிக்கு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. சிவபெருமான்
அர்த்தநாரீஸ்வரராய் தோன்றி பஞ்ச மூர்த்திகள் முன் ஆனந்தக் கூத்தாடும்
நிகழ்ச்சி நடந்தது. அவர் கோவிலுக்குள் மறைந்தவுடன், தீப்பந்தம் ஏத்தி
உயர்த்திக் காண்பிக்கப்பட்டது.


அதே நேரத்தில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஜோதி வடிவாக
அருணாச்சலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லட்சக்கணக்கான
பக்தர்கள் பக் திப் பரவசத்துடன் மகா ஜோதியைத் தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் விண்ணை முட்டும் பக்திக் கோஷத்துடன் வாண வேடிக்கை நடத்தினர்.
தீபத் திருவிழாவிற்காக தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா
உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடு களில் இருந்தும் சில
நாட்களுக்கு முன்பே திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து விட்டனர்.


நேற்று முன்தினம் காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்லத்
துவங்கினர். தீபத் திருவிழாவையொட்டி போலீசார் விரிவான பாதுகாப்பு
ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு,
கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

----------------------------

N. Ganesan

unread,
Jan 16, 2009, 2:55:10 PM1/16/09
to மின்தமிழ்
I am reading akanAn2Uru poem 141 where there
are some astronomical references to
"Kaartttikai viLakkITu" festival. This festival
is one of the most important in Tamil 'Saiva
calender, and is two-weeks after Deepavali.
In general, 'suura samhaaram fetsival in Murukan
temples also happens in between the two.

Here is my preliminary take on the meaning
of aka. 141. Some notes are posted at,
http://nganesan.blogspot.com/2009/01/akam-141-karthikai-deepam.html

A beautiful sangam poem with astronomical allusions
to three most important festivals in Tamil 'Saiva calender
year cycle: (a) Deepavali, where the divine couple start
the dice game (b) 'Siva parakrama episodes follow
culminating in Lingodbhava utsavam in Tiruvannamalai
and (c) 'Suura samhaaram by the divine couple's
child, Murukan.

N. Ganesan

N. Ganesan

unread,
Jan 17, 2009, 8:50:54 AM1/17/09
to
திரு அண்ணாமலை ஈசன் கார்த்திகை தீபத் திருவிழா 15-20
லட்சம் மக்கள் ஆண்டுதோறும் கூடிக் கொண்டாடுகின்றனர்.

அவ்விழா சங்க இலக்கியமான அகநானூற்றில் 2 பாடலில்
குறிப்பிடப் படுகிறது - "பழவிறல் மூதூர்" விழா என.
பழவிறல் - "தொல் கார்த்திகை நாளன்று" ஜோதி லிங்க
வடிவில் அரியும் அரனும் அடி முடி காணாமல்
மகாதேவன் ஈசனைத் தொழுத சிவ பராக்கிரமச் செயல்.

http://nganesan.blogspot.com/2009/01/akam-141-karthikai-deepam.html
இப்பதிவு கவி மதுரபாரதி போன்ற அருணை அன்பர்களை
நினைந்து எழுதியது.

updated this url with pictures.

Happy weekend!
N. Ganesan

Reply all
Reply to author
Forward
0 new messages