அண்டகோளத்து...

13 views
Skip to first unread message

Tirumurti Vasudevan

unread,
Feb 14, 2008, 2:52:07 AM2/14/08
to minT...@googlegroups.com

ஸ்ரீ:

அண்டகோள மெய்ப்பொருள்

ஸேது சம்ஸ்தான மகாவித்வானும்

பாஷா கவி சேகரரும்

அண்ணாமலை சருவகலாசாலை தமிழாராய்ச்சியாளருமான

ரா.இராகவையங்கார் எழுதியது

சென்னை திருவல்லிக்கேணி வேத வேதாந்த மகாசபையாரால் வெளியிடப்பட்டது. -1934 விலை 4 அணா

ஸ்ரீமதே ராமானுஜாயநம:

முகவுரை

"அண்டகோளத்தாரணு" என்ற பாசுரம் "ஆழ்வார் சங்கத்தாருக்கு எழுதிய அகவல்" என்ற தலைப்புடன், ஆழ்வார்திருநகரித் தாயவலந்தீர்த்தான் கவிராயரவர்கள் வீட்டிற்கிடைத்த ஒற்றையேட்டில் முதன்முதலாக என்னாற்காணப்பட்டது. அதனை மதுரை தமிழ் சங்கத்து செந்தமிழ் பத்திரிகை தொகுதி 3 பக்கம் 405இல் வெளியிட்டுள்ளேன். அப்பாசுரத்துக்கு அக்கால பொருள் காண்டல் அரிதாயிருந்தமையால் 'இதன் பொருள் இப்போது நன்கு விளங்கவில்லை' என்ற குறிப்பும் ஆங்கு தரப்பட்டுள்ளது. அப்பாசுரத்தைப்பற்றி நெடுங்காலம் யான் சிந்தித்து வந்ததில் சிலவாண்டுகளுக்கு முன் அதன் உண்மைப்பொருள் இஃதென்று உணரலாயினேன்.

அப்பாசுரத்தின் சொற்றொடர் பொலிவினையும் அதனுளடக்கிய அரிய பெரிய வடமொழிப் பொருளின் மாட்சியையும் நோக்குமிடத்து அந்து ஆழ்வார் அருளி செயலாதற்குரிய எல்லா தகுதியும் வாய்ந்தது என்று சொல்லத்தடையில்லை. சங்கப்புலவர்கள் தம்மை பெரிதும் மதிக்கும்படி ஆழ்வார் செய்வித்த செய்தியை குரு பரம்பரை நூல்களும் "அண்டகோளத்தாரென்னு மாரியத்தமிழாலன்று தண்டமிழ்சங்கம் வென்ற சடகோபர்" (கடவுள் வணக்கம் 13) என இற்றைக்குச் சில நூற்றாண்டுகட்கு முற்பட்டவராக தெரியும் கூடற்புராண் ஆசிரியரும் கூறுவது ஆழ்வார் அருளியதே இப்பாசுரம் என்பதை வலியுறுத்தல் காணலாம்.


இவ்வரிய பெரியா பாசுரத்தை யான் பலகாலும் சிந்தித்து கண்ட கருத்துக்களை இப்புத்தகத்தில் விளங்க விரித்துள்ளேன். என்னால் விரிய உபந்யஸிக்கபெற்ற இப்பாசுரார்த்தத்தை கேட்டு மகிழ்ந்த சென்னை திருவல்லிக்கேணி வேத வேதாந்த மகாசபையார் இதனை பலரும் அறிய வெளியிட விரும்பியவாறு அச்சபையின் பிரசுரமாக இஃது இப்போது வெளியிடப்பெறுகின்றது. இதனை அச்சிடற்குரிய பொருளை முன்வந்துதவிய சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சந்நிதி டிரஸ்டிகளில் ஒருவரான ராவ் பகதூர் ஸ்ரீமான். வி. ரங்கநாதம் செட்டியார் அவர்கட்கும், அம்மஹா சபையார்க்கும் என் மனமார்ந்த பெரு நன்றி உரியதாகும்.

இங்ஙனம்

ரா.இராகவையங்கார்

ஸ்ரீமதே ராமானுஜாயநம:

அண்டகோளமெய்ப்பொருள்


தற்சிறப்பு பாயிரம்


சீரண்ட கோளத் திருப்பாட் டுரையிதென

யாரும் தெளிய வியம்புகேன் -பாரிற்

றெருள்காட்டும் வேதச் செழுந்தமிழ்நா வீறன்

அருள்காட்ட மெய்ம்மை யறிந்து


அண்ட கோளத் தாரணு வாகிப்
பிண்டம் பூத்த பேரெழி லொருமை
யீருயிர் மருங்கி னாருயிர் தொகுத்து
நித்திலத் தன்ன வெண்மணற் பரப்பில்
5 வேரும் வித்து மின்றித் தானே
தன்னிலை யறியாத் தொன்மிகு பெருமர
மூவழி முப்பழ முறைமுறை தருதலி
னென்றுண் டொண்சுவை தருவது மற்றது
கல்லி னெழுந்து கடலினழுந்தி
10 யறுகாற் குறவனீரற விளைக்குஞ்
செறிபொழிற் குப்பை தருகட் பொன்றுவித்
தறுகோட்டாமா விளைக்கு நாட
னவனே தலையிலி யவன்மகண் முலையிலி
தானு மீனா ளீனவும் படாஅ
15 ளெழுவர் மூவர் சிறுவரைப் பயந்தன
ளவளிவ ளுவளென வறிதல்
துவளறு காட்சிப் புலவரது கடனே.


(தொடரும்)
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/ http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Narayanan Kannan

unread,
Feb 14, 2008, 3:15:59 AM2/14/08
to minT...@googlegroups.com
ஆகா! ஆகா!!
 
வாழ்க.
 
கண்ணன்

2008/2/14 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

ஸ்ரீ:

அண்டகோள மெய்ப்பொருள்

ஸேது சம்ஸ்தான மகாவித்வானும்

பாஷா கவி சேகரரும்

அண்ணாமலை சருவகலாசாலை தமிழாராய்ச்சியாளருமான

ரா.இராகவையங்கார் எழுதியது

 


(தொடரும்)

naa.g...@gmail.com

unread,
Feb 17, 2008, 8:51:39 AM2/17/08
to மின்தமிழ், K Kalyan, Kumar Mallikarjunan


On Feb 14, 1:52 am, "Tirumurti Vasudevan" <agnih...@gmail.com> wrote:
> ஸ்ரீ:
>
> அண்டகோள மெய்ப்பொருள்
>
> ஸேது சம்ஸ்தான மகாவித்வானும்
>
> பாஷா கவி சேகரரும்
>
> அண்ணாமலை சருவகலாசாலை தமிழாராய்ச்சியாளருமான
>
> ரா.இராகவையங்கார் எழுதியது

நம்மாழ்வார் கவிதை - தமிழ்ச் சங்கத்தில் பரிசுபெற்ற அகவல்.
http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html

4000த்தின் ஈடு போல, வியாக்கியானம் செய்தவர் ரா.ரா. அவர்கள்.
நான் பல்லாண்டுகளாக என் நூல்நிலையத்தில் பேணிவரும் நூல்களில் இதுவும்
ஒன்று.
முனைவர் நா. கண்ணன் விரும்பியபடி பிடிஎப் கோப்பாக்கி அளித்தேன்.

இந்த அகவலுக்குப் பண்டை உரை கிடைக்கவில்லை. ஆனால், சங்கப் பாடல்கள்
சிலவற்றை, சிலவரிகளை ஓலைகலில் இருந்து உவேசா போன்றோருக்கு
அளித்த ரா. ரா. வடமொழி-தென்மொழி உதாரணங்காட்டி உரை செய்திருக்கிறார்.

இதற்கு, மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவான் திரு. நாராயணையங்கார் செய்த
உரை ஒன்றும் அச்சாகியுள்ளதாக அறிகிறேன். (இன்னும்) பார்த்ததில்லை.
யாராவது கண்டால், தையும் இங்கே தர வேண்டுகிறேன்.

பழந்தமிழில், பண்டை இலக்கியங்களின் மரபுகளில் ஆர்வமுடைய சிலருக்கு
என்றும்
இந்நூல் பயனளிக்கும்.

--------------

கருத்துகள் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, கால ஓட்டத்தில் மாறும்.
ஆனால், பழைய புத்தகங்களைக் காப்பது ஓர் அரிய தொண்டு.
நம் சமூகத்தின் படிநிலைகளை, பரிமாணங்களைக் காட்டவல்லவை பழைய நூல்களே.

அச்சில் 100,000 புத்தமாவது 19-ஆம் நூற்றாண்டில் தமிழில்
தோன்றியிருக்கும்.
முடிந்தவற்றைக் காத்திட இளைஞர்கள் முன்வந்தால் தொழில்நுட்பம் தயாராக
உள்ளது.

-------------------------

திரு. வாசு இந்நூலைத் தட்டெழுதித் தந்தால் அவர் உதவியைக் குறிப்பிட்டு
மதுரை முன்னியத்தில் (http://www.projectmadurai.org) வைத்துவிடலாம்.

நன்றி. வாழ்க வளமுடன்!

அன்புடன்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
> My blogs:(all in Tamil)http://anmikam4dumbme.blogspot.com/http://nallaseithi.blogspot.com/http://kathaikathaiyaam.blogspot.com/

Narayanan Kannan

unread,
Feb 17, 2008, 9:30:24 PM2/17/08
to minT...@googlegroups.com



அச்சில் 100,000 புத்தமாவது 19-ஆம் நூற்றாண்டில் தமிழில்
தோன்றியிருக்கும்.
முடிந்தவற்றைக் காத்திட இளைஞர்கள் முன்வந்தால் தொழில்நுட்பம் தயாராக
உள்ளது.
 
 
அன்பின் முனைவர் நா.கணேசன்:
 
இதில் பத்தில் ஒரு பங்கு உங்கள் சேகரத்தில் உள்ளதே! உங்கள் அமெரிக்க நூலகத்தைக் கண்ணுற்றோர் போற்றிப் புகழ்ந்துள்ளதைக் கேட்டதுண்டு. அதிலிருந்து மாதம் ஒரு நூல் என்று தாங்கள் மின்கோப்பு (PDF) அனுப்பினால் கூடப் போதும். அவைகளை மின்னுலகில் நிரந்தரமாக்கிவிடலாம். உங்களுக்கென்றே ஒரு சிறப்புத் தொகுதியைத் திறக்கத்தயார்.
 
நாங்க ரெடி! நீங்க ரெடியா? :-)
 
எதிர்பார்ப்புடன்
நா.கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Feb 18, 2008, 11:53:05 AM2/18/08
to minT...@googlegroups.com

(தொடர்ச்சி)

இது 'மயர்வற மதிகலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற் குழாஞ்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம் என்பது கூடலழகர்புராணத்தில் "அண்டகோ ளத்தாரென்னு மாரியத்தழிழ்ச் சங்கம் வென்ற சடகோபர்" என வருங்கடவுள் வணக்கப்பாடலால் (13) துணியலாகும்.


இதன் பொருள்:

  1. அண்ட கோளத்து ஆரணு ஆகி என்பது அண்டகோளத்து அரிய அணு வளர்ந்தது என்றவாறு.

ஆகல்-வளர்த்தல் " பரிணிமித்தல்; வளர்வதற்கு காரணமாகிய ஊழினை "ஆகலூழ்" (திருக்குறள்-372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு என்றார். பரமாணு இரண்டு கொண்டது என்பது வடநூற் கொள்கை(பாகவதம்). அண்ட கோளத்து ஆரணு -அண்ட கோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின் வித்து ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சத்தின் இறுதிநிலை (இதுவே படைப்புக்கு முன்னிலையுமாகும்) பரமாணுவே என்பதையும் ஸ்ரீ பாகவதம் 3 ஆம் ஸ்கந்தம் (கக-) "பிரபஞ்சத்தின் இறுதியமிசம் பரமாணு என்றறியபடுவது" என விளக்கியவாற்றான் உணர்க. மேற்படி 3 ஆம் ஸகந்தம் கக ஆம் அத்தியாய முடிவில், "ஐம்பது கோடி யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்படங்கு அதிகமுள்ள விசேஷண முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்ட கோசமும் இன்னும் மற்றுமுள்ள பல்கோடியண்டங்களும் எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக் காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும் மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் சொரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரம்மம் எனவுங்கூறுகின்றனர்" என வருதலான் இதலுண்மை நன்கறியப்படும். பலகோடி அண்டகோள வரிசைகளும் பர தெய்வத்தினிடம் பரமாணுவாக ஒடுங்கிக்கிடந்து பின் அவன் ஸங்கல்பத்தாற் பரிணமித்து அவ்வண்ட வரிசையாதலையே இங்குக் குறித்தா ரென்பது ஜகத்காரணமாகப் பரப்பிரமத்தை கூறுதல் கொண்டு எளிதிலறியப்படும். ஆகி என்று பரிணமித்தல் கூறுதலான். இவ்வாரணு உயிரணு ஆகாமை நன்கறியலாகும். பிரபஞ்சமாகிய பரமாணுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக. 'அண்டகோளத்து ஆரணு' என்புழி அத்துச்சாரியை "காமத்துக் காழில்கணி" (திருக்குறள் -1191) என்புழியைப்போல அல்வழிச்சாரியையாகக்கொண்டு அன்டகோளமாகிய அரிய அணு எனினும் இழுக்காது, ஆகிப்பூத்த மரம் என இயையும்.


(தொடரும்)

----

ஆமாம் க்வார்க் 6 தானே?

Narayanan Kannan

unread,
Feb 18, 2008, 7:42:36 PM2/18/08
to minT...@googlegroups.com
அன்பின் தி.வா:

பாராட்டுக்கள். முன்னுதாரணமாக இக்காரியம் செய்கிறீர்கள்.

1. இதன் மூலம் படிமமாக இருக்கும் தமிழ் எழுத்து தேடு களம் காணும்
வாய்ப்பைப் பெறுகிறது (from image text to electronic text which is
searchable)
2. இப்படி வெளியிடுவதன் மூலம் ஒரு பண்டை நூல் சமகால விமர்சனத்தை உடனே
பெரும் வாய்ப்புக் கொள்கிறது.
3. எழுத்துப் பிழை இருந்தால் அதை இம்முறையால் திருத்தியளிக்க முடியும்
(proof reading)
4. படவடிவிலிருக்கும் ஒரு பொத்தகம் மின்னச்சாக மாறும் போது அதை 'மதுரைத்
திட்டத்தில்" வைத்துப் பாதுகாக்க முடிகிறது.

என் விமர்சனம் கீழே:


2008/2/19 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:


>
>
> (தொடர்ச்சி)
>
> இது 'மயர்வற மதிகலம்' அருளப்பெற்ற நம்மாழ்வார் தங்காலத்துக் கூடலிற்
> குழாஞ்கொண்டு தமிழாராய்ந்த நல்லிசைப்புலவர்க்கு எழுதியருளிய திருப்பாசுரம்
> என்பது கூடலழகர்புராணத்தில் "அண்டகோ ளத்தாரென்னு மாரியத்தழிழ்ச் சங்கம் வென்ற
> சடகோபர்" என வருங்கடவுள் வணக்கப்பாடலால் (13) துணியலாகும்.
>

"மயர்வற மதிநலம்" என்று இருக்க வேண்டும்.

அவர் பக்தியின் கலமாக இருந்தாலும் :-) 'மதி' என்பதை 'பக்தி' என்றே
உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர்.

"ஆரியத் தமிழ்" என்ற ஒரு சொல்லாட்சி இங்கு காணத்தக்கது. கூடற்புராணம்
நம்மாழ்வாருக்குப் பின்னால் வந்திருக்க வேண்டும். சங்கம் வளர்த்த பெருமை
மதுரைக்கு உண்டு. அங்கு சீர் பெற்று இருந்த தமிழை "ஆரியத் தமிழ்"
என்கிறார் ஆசிரியர். இதே பொருளில்தான் பாரதியும் 'ஆரியம்' எனும் பதத்தைக்
கையாள்கிறான். அவன் இந்தியர்களை ஆரிய மைந்தர் எனும் போது "உயர்வுடைய,
சீர்மையுடைய, பெருமையுடைய' எனும் பொருளிலேயே அர்த்தம் கொள்ளவேண்டும்.
நம்மவர் ஆரியம் எனும் சொல்லை ஒரு 'இனம்' எனும் பொருளில் கையாளவில்லை. அது
பின்னாளில் அரசியல் காரணங்களுக்காக அனர்த்தமாகிப் போனது.

> ஆகல்-வளர்த்தல் " பரிணிமித்தல்; வளர்வதற்கு காரணமாகிய ஊழினை "ஆகலூழ்"
> (திருக்குறள்-372) என்பதனாலறிக. பின்னும் பிரிக்கப்படாத பரமாணு என்பதறிய ஆரணு
> என்றார்.


பரிணாமம் பற்றி இந்தியர்கள் டார்வின் சொல்வதற்கு முன்னமே, பல
நூற்றாண்டுகளுக்கு முன்னமே, தெளிவான கொள்கை கொண்டிருந்தனர் என்பது
காணற்தக்கது.


>பரமாணு இரண்டு கொண்டது என்பது வடநூற் கொள்கை(பாகவதம்). அண்ட கோளத்து
> ஆரணு -அண்ட கோளமாகிய பிரபஞ்சத்தின் இறுதியம்சமாகிய பரமாணு. அஃது ஆகி என்றது
> அஃது அண்டகோளமாக வளர்ந்து எ-று. ஆலின் வித்து வளர்ந்து என்றால் ஆலின் வித்து

> ஆலாக வளர்ந்து என்று பொருளாதல் போல இதனையும் கொள்க. பிரபஞ்சமாகிய


> பரமாணுக்குப் பரிணாமம் உள்ளதல்லது, அணுவாகிய ஆத்மாவிற்கு அஃதில்லாமை தெளிக.

இந்தியர்கள் பரிணாமம் என்பதை இருவகையாகக் காண்கின்றனர். பொருளியற்
பரிணாமம் (material evolution). இது டார்வின் சொல்லும் கூர்தலியற் கொள்கை
போன்றது. மற்றது பரிணானமடையாத மூல அணு. இதை ஆன்மா என்கின்றனர். இங்குதான்
மேற்கத்திய ஞானத்திலிருந்து இந்திய ஞானம் வேறுபடுகிறது. அவர்கள் ஒரேயொரு
பரிணாமம்தான் உண்டு என்கின்றனர். தற்போதைய புரிதலில் "creative
itelligence theory' என்பது வலுவாகிவருகிறது. இது நம் கொள்கையுடன்
ஒத்துப் போகும்.


> "ஐம்பது கோடி யோசனை அகலமுள்ளதும் மேன்மேலும் பதின்படங்கு அதிகமுள்ள விசேஷண
> முதலியவற்றால் வெளியிற் சூழ்ந்ததுமாகிய இவ்வண்ட கோசமும் இன்னும் மற்றுமுள்ள
> பல்கோடியண்டங்களும்

இக்கருத்து சமகால cosmological discovery யுடன் ஒத்துப் போகிறது. ஒரு
அண்டத்தின் ஊடாக இன்னொரு அண்டம் கிளைக்கிறது என்கிறது அறிவியல் (cluster
hypothesis). இக்கால அறிவியல் அண்டம் தோன்றிய கால அளவைச் சொல்கிறது,
ஆனால் விஸ்தீரணத்தைச் சொல்வதில்லை. இந்திய ஆய்வு இரண்டையும் சொல்கிறது.

>எந்த வஸ்துவினிடம் பிரவேசித்துப் பரமாணுவாகக்
> காணப்படுகின்றனவோ அந்த வஸ்துவைக் காரணங்கட்கெல்லாம் காரணமெனவும், புருஷனும்
> மஹாத்மாவுமாகிய விஷ்ணுவின் சொரூபமெனவும், அக்ஷரமாகிய பரப்பிரம்மம்
> எனவுங்கூறுகின்றனர்"

அக்ஷரபிரம்மம் என்பது சுவாரசியமான சொல்லாட்சி. "ஆதியில் வார்த்தை
இருந்தது" எனும் விவிலிய நோக்கைக் காண்க. இதையே திருமழிசையும்,

"நற்றமிழை வித்தியின் உள்ளத்தில் நீ விதைத்தாய்
கற்ற மொழியாகக் கலந்து"

என்கிறார். இதனால்தானோ என்னவோ தமிழர்கள் மொழியின் மீது அதீத பக்தி கொள்கின்றனர்.

கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Feb 25, 2008, 6:47:29 AM2/25/08
to minT...@googlegroups.com
2.பிண்டம் பூத்த பேரெழிலொருமை என்பது சராசரரூபமான பிராணிகள்
மலர்தற்குக்காரணமான பெருமையோடு கூடிய நலத்தையும் ஏகத்வத்தையுமுடைய எ-று.
ஆகிப்பூத்த பேரெழில் ஒருமை மரம் என இயைக்க. பூத்த மரம் என்பது
பூத்தற்குக்காரணமான மரம் என்றவாறு; "தாழ்ந்த இயல்பின்மை"
(திருக்குறள்-903) நிற்புகழந்த யாக்கை (பதிற்றுப்பத்து,44,8)
என்புழிப்போல. பிண்டம்- சராசரப்பிராணிகளின் தொகுதி. இவ்வாழ்வார்
பரதெய்வத்தைத் தொன்மிகுபெருமரம் என்று வ்ருக்ஷமாக
உருவகப்படுத்துகிறாராதலின், அதற்கியைய வ்ருக்ஷகாரியத்தாற் பூத்த என்று
ஏகதேசரூபகமுகத்தாற் பிராணிஸமுதாயத்தை மலர்களாக்கினர். ஸ்ரீ ஸஹஸ்ர
நாமத்தில் "புஷ்பஹாஸ:" என்னுந்திருநாமத்திற்கு ஸ்ரீசங்கர பகவதபாதர்
"பூவரும்பு மலர்வதுபோலப் பிரபஞ்சரூபமாக மலர்பவன்" என்று பொருள் கூறினார்.
இதனாற் பூத்தது பிரபஞ்சமென்று துணியலாகும். பெருமை-பரமாணுவை அண்டபிண்ட
ரூபமான பிரபஞ்சமாக்கிச் செயற்கரிய செய்யும் ஸங்கல்ப விசிஷ்டனாதற்றன்மை.
இதனாற் பர தெய்வத்தின் ஸங்கல்பவிசிஷ்டவேஷமே உலகிற்கு நிமித்தகாரணமாதல்
காட்டியவாறாம். எழில் - ஞானசக்தியாதி எல்லா நலங்களும்: "எழிலலந்தங்
கெண்ணற் கரியானை" (மூன்றாந்திரு. 3) என்று பணிப்பர். ["பூ நலம்"(பரிபாடல்
-16) என்புழிப் பரிமேலழகர் பூவினாகிய அழகு எனப்பொருள் கூறலானுமுணர்க.]
இதனாற் பரதெய்வத்தின் ஞான சக்தியாதி விசிஷ்டவேஷமே உலகிற்கு
ஸஹகாரிகாரணமாதல் காட்டியவாறாம். ஒருமை- அவ்வண்ட பிண்ட ரூபமான
பிரபஞ்சத்தோடு கலந்தொன்றாயுள்ள தன்மை. இதனாற் பரதெய்வத்தின் சிதசித்
விசிஷ்டவேஷமே உலகிற்கு உபாதான காரணமாதல் காட்டியவாறாம். இஞ்ஞனம் திரிவித
காரணமும் பரதெய்வமேயாகுமென்பது தோன்றப் பேரெழிலொருமையால் விசேடித்தார்.
பூத்த மரம்என்புழிப் பூத்த பெருமையும் எழிலும் ஒருமையும் மரத்தின்கண்ணே
நிலைபெறுதலெளிதி லுணரத் தகும். மரத்தின் அவலயமாகிய கொம்பு, இலை, பூ,
காய், கனி முதலிய எவையும் மரத்தின்வேறாகாத் தன்மையால் ஒருமை
நன்கரியலாகும். இவ்வொருமையினையே கம்பநாடார்
"அம்போ ருகனா ரானா ரறியார்
எம்போ வியரெண்ணுறினென் பலவாம்
கொம்போ டடைபூக் கனிகா யெளினும்
வம்போ மரமென் றெனும்வா சகமே"
(இராமா. இரணியன் வதை, 111)
என்பதனால் இனிது விளக்கினார். இவர்க்கு இவ்வாழ்வாருடைய இத்திருப்பாட்டு
நோக்கென்பதும் பொருந்தும், "சங்கக் குவடிறக் குத்திய மாறப்
பெயர்க்கொலையானை" எனச் சடகோபரந்தாதியில் ஆழ்வார் சங்கம் வென்றருளிய
செய்தியினை வெளியிடுதலான் இஃது உணரலாம். ஸ்ரீ பாகவதம் "தருவினடியில் நீர்
விடுவது அதன் கொம்பு கிளைகட்கு எங்ஙனமாகுமோ, அங்ஙனமே விஷ்ணுவின் ஆராதனம்
எல்லாப்பிராணிகட்கும் பயன்படுவது" (அத் -ரு-ச-கூ) என்று கூறுதலான்,
மரமும் கிளைகளும் போலப் பரதெய்வமும் பிராணிகளு முண்மை நன்கறிந்துகொள்க.
இந்த பாகவதத்ட்தாற்கருதிய ஒருமையையே ஆழ்வார் திருவுள்லம்
பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனானும்,
அம்மலர்களை யுண்டாக்கி பரிபாலிக்கு நிலையில் மலரின்வேறாகாத மரமாகப்
பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துஇயலாம். இவ்வொருமையை
ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுளதாவதல்லது ஸ்வரூபஐக்யமாகாமை
உய்த்துணர்ந்து கொள்க.
"பாரிடமாவானுந்தான்" (சஉ) என்னும் பெரியதிருவந்தாத்தித் தொடர்க்குப்
பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் "ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸ்ம்பந்தத்தால்
ஐக்யம்; ஸ்வரூபத: அன்று" என் றுரைத்தவாற்றான் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது
நிறைவேற்றவே எங்குங்கலந்துரைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ப.

srirangammohanarangan v

unread,
Feb 25, 2008, 9:03:24 AM2/25/08
to minT...@googlegroups.com
அடி சக்கைனன்னாம்!   திருமூர்த்தி  சார்  இவ்வளவு  பேசுவாரா?  ஏதோ  ஒன்றும்  அறியேன் என்று  இவ்வளவு  நாள் ஏமாற்றிவிட்டாரே!

2008/2/25 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

Tirumurti Vasudevan

unread,
Feb 25, 2008, 10:49:46 AM2/25/08
to minT...@googlegroups.com
ஐயா!
நான் அந்த பிடிஎஃப் இல் இருப்பதை அப்படியே எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
நடை கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதால் கொஞ்சம் ஊன்றி படித்து புரிந்து
கொள்ள வேண்டியது இன்னும் பாக்கி இருக்கு!

திவா

2008/2/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>:


> அடி சக்கைனன்னாம்! திருமூர்த்தி சார் இவ்வளவு பேசுவாரா? ஏதோ ஒன்றும்
> அறியேன் என்று இவ்வளவு நாள் ஏமாற்றிவிட்டாரே!
>

--
My blogs:(all in Tamil)

http://nallaseithi.blogspot.com/

Narayanan Kannan

unread,
Feb 25, 2008, 5:33:39 PM2/25/08
to minT...@googlegroups.com
அன்பின் திவா:
2008/2/25 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
> > இந்த  பாகவதத்ட்தாற்கருதிய ஒருமையையே ஆழ்வார் திருவுள்லம்
 
பாகவதத்தாற்கரிய = என்று இருக்க வேண்டுமோ?
திருவுள்ளம் என்றுருக்க வேண்டும்.
 
 
> பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனானும்,
> அம்மலர்களை யுண்டாக்கி பரிபாலிக்கு நிலையில் மலரின்வேறாகாத மரமாகப்
> பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துஇயலாம். இவ்வொருமையை
 
 
குறிப்பிட்ட பகுதி சரியா? பிழை இருப்பின் திருத்துக.
 
 
> ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுளதாவதல்லது ஸ்வரூபஐக்யமாகாமை
> உய்த்துணர்ந்து கொள்க.
> "பாரிடமாவானுந்தான்" (சஉ) என்னும் பெரியதிருவந்தாத்தித் தொடர்க்குப்
> பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் "ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸ்ம்பந்தத்தால்
> ஐக்யம்; ஸ்வரூபத: அன்று" என் றுரைத்தவாற்றான் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது
> நிறைவேற்றவே எங்குங்கலந்துரைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ப.
>
 
avoid (remove) white space in the underlined sentence.
 
 
அற்புதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அப்படியே வைணவ உரையாசிரியர்கள் பாணியில் அட்சரம், அட்சரமாகப் பிரித்து விரிவுரை காண்கிறார். சம்சார சாகரத்தை மேலிருந்து கீழாகத்தொங்கும் ஒரு மரமாகக் கண்ணன் கீதையில் உருவகிக்கிறான். வேர் விண்ணில் இருப்பதால் இம்மரம் தலை கீழ்த் தோற்றம் கொள்கிறது. அக்கருத்து அப்படியே இங்கு பிரதிபலிக்கிறது. மேலும் நம்மாழ்வாரின் இப்பாடல் அமைப்பு (style) அவரது திருவாய்மொழியிலிருந்து வேறுபடுகிறது. சாதாரணமாக ஒரு கட்டுரை பத்திரிக்கைக்கு எழுதுவதற்கும், அதையே ஆய்வுக் கட்டுரையாக ஒரு கருத்தரங்கிலோ, ஆய்வு சஞ்சிகையிலோ எழுதுவதற்கும் நடை வித்தியாசமுண்டு. அதுபோல் இங்கு துல்லியமாக அவரது நடை வேறுபடுகிறது. ஏதோ 'சங்ககாலப் புலவன்' எழுதிய நடையில் இருப்பது போல்...? இவர் சங்ககாலத்தவரோ என்னவோ? நம்மவர்கள் ஆழ்வார்கள் எல்லோரையும் ஒரு சின்ன அடைப்புக்குள் போட்டுவிடுகின்றனர்!
 
அம்போ ருகனா ரானா ரறியார்
எம்போ வியரெண்ணுறினென் பலவாம்
கொம்போ டடைபூக் கனிகா யெளினும்
வம்போ மரமென் றெனும்வா சகமே
 
இப்பாடலை யாராவது விள்ளக்க முடியுமோ? அதே போல்,
 
சங்கக் குவடிறக் குத்திய மாறப்
பெயர்க்கொலையானை
 
ஈவரிகளையும் விளக்கக் கோருகிறேன்.
 
கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Feb 25, 2008, 6:52:32 PM2/25/08
to minT...@googlegroups.com
2008/2/26 Narayanan Kannan <nka...@gmail.com>:

> அன்பின் திவா:
>
>
> 2008/2/25 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
> > > இந்த பாகவதத்ட்தாற்கருதிய ஒருமையையே ஆழ்வார் திருவுள்லம்
>
> பாகவதத்தாற்கரிய = என்று இருக்க வேண்டுமோ?
> திருவுள்ளம் என்றுருக்க வேண்டும்.


சரிதான். திருத்தி விடுகிறேன்

> > பற்றினாரென்பது, பூத்த என்னும் வினையாற் பிண்டங்களை மலர்களாக்கியதனானும்,
> > அம்மலர்களை யுண்டாக்கி பரிபாலிக்கு நிலையில் மலரின்வேறாகாத மரமாகப்
> > பரதெய்வத்தை உருவகப்படுத்தியதனாலும் இனிது துஇயலாம். இவ்வொருமையை

இனிது துணியலாம் என்று இருக்க வேண்டும்.

> குறிப்பிட்ட பகுதி சரியா? பிழை இருப்பின் திருத்துக.
>
>
>
> > ரக்ஷ்யரக்ஷகபாவாதி ஸம்பந்தத்தாலுளதாவதல்லது ஸ்வரூபஐக்யமாகாமை
> > உய்த்துணர்ந்து கொள்க.
> > "பாரிடமாவானுந்தான்" (சஉ) என்னும் பெரியதிருவந்தாத்தித் தொடர்க்குப்
> > பெரியவாச்சான் பிள்ளையாசிரியர் "ரக்ஷ்ய ரக்ஷக பாவாதி ஸ்ம்பந்தத்தால்
> > ஐக்யம்; ஸ்வரூபத: அன்று" என் றுரைத்தவாற்றான் உணர்க. ரக்ஷகத்வத்தை இனிது
> > நிறைவேற்றவே எங்குங்கலந்துரைதலை மேற்கொண்டனன் இறைவன் என்ப.
> >
>
> avoid (remove) white space in the underlined sentence.

பிரச்சினை என்னவென்றால் மூலத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதை
மாற்றலாமா அப்படியே இருக்க வேண்டுமா என்று முடிவு செய்ய முடியவில்லை.
கூடியவரை அப்படியேதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வழி காட்டுக.

அவ்வப்போது மின்பராமரிப்புக்கு மின் நிறுத்தமும், பின் மின் வெட்டும்
இரண்டும் இல்லாதபோது மின் தடையும் இருப்பதால் அவசர அவசரமாக அனுப்ப வேண்டி
இருந்தது. ஆகவே சரி பார்க்க இயலவில்லை. மன்னிக்க.

திவா


--
My blogs:(all in Tamil)

http://nallaseithi.blogspot.com/

Narayanan Kannan

unread,
Feb 25, 2008, 7:12:08 PM2/25/08
to minT...@googlegroups.com
அன்பின் திவா:

2008/2/26 Tirumurti Vasudevan agni...@gmail.com:

 
பிரச்சினை என்னவென்றால் மூலத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதை
மாற்றலாமா அப்படியே இருக்க வேண்டுமா என்று  முடிவு செய்ய முடியவில்லை.
கூடியவரை அப்படியேதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். வழி காட்டுக.
 
நான் நினைக்கிறேன் இச்சிறுபிழைகளை நாம் திருத்தலாம். கவிதையில் "பாட பேதமோ" இல்லை உரையின் பொருளே மாறிப் போகும்படியான பிழையோ எழுந்தால்தான் கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் இங்கு காண்பது அச்சுக்கோர்ப்பரின் பிழை என்று நம்புகிறேன்.
 
>>>
அவ்வப்போது மின்பராமரிப்புக்கு மின் நிறுத்தமும், பின் மின் வெட்டும்
இரண்டும் இல்லாதபோது மின் தடையும் இருப்பதால் அவசர அவசரமாக அனுப்ப வேண்டி
இருந்தது. ஆகவே சரி பார்க்க இயலவில்லை. மன்னிக்க.
>>
 
பெரிய வார்த்தையெல்லாம் போடாதீர்கள். நான் அடியார்க்கு அடியேன். பிழை காணும் தகுதி எனக்கு இல்லை. ஆயின் இந்த மின்னாக்கத்தின் நோக்கம் நாம் சேர்ந்து proof read பண்ணுவதுதான். இதைப் போல் மதுரைத் திட்டத்தில் கூடச் செய்யலாம். நம்மில் பலர் ஆழ்ந்த தமிழ்ப் புலமை கொண்டோர் உளர். அவர்களும் இந்தத் தொண்டில் பங்கு கொள்ள வேண்டும் என்று உற்சாகப்படுத்தவே நான் இப்படிச் செயல்படுகிறேன்.
 
நான் முன்பே சொன்ன வண்ணம் நீங்கள் முன்னுதாரணமாக ஒன்றைச் செய்கிறீர்கள். அதற்காக நேரம் ஒதுக்குதல், சிரமப்படுதல் தமிழ்ப் பாரம்பரியத்தின் மீது தங்களுக்குள்ள அக்கறையைச் சுட்டுகிறது.
 
கண்ணன்
 
Reply all
Reply to author
Forward
0 new messages