தமிழுக்கு அநீதி!

82 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Oct 27, 2007, 4:56:39 AM10/27/07
to minT...@googlegroups.com
கீழ்வரும் கட்டுரையின் ஆசிரியர் திரு.ச. செந்தில்நாதன்
(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்)
 
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைத்து தமிழக அரசு ஓர் ஆணையை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருக்கிறது. மாணவர்களுக்குச் "சுமை" அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான். இயல்பான வளர்ச்சிக்கு அது குறுக்கே நிற்கிறது என்பதும் உண்மைதான். ஆனால்,
 
எந்தப் பாடத்தில் அளவைக் குறைக்க வேண்டும்,
 
எதை எடுக்க வேண்டும்
 
என்பதுதான் கேள்வி.

அரசாணையில் திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது வியப்பையும்,அதிர்ச்சியையும் அளிக்கிறது. புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்யும் பணிகளுக்காக மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவரான நாகநாதனைத் தலைவராகக் கொண்ட குழு சென்ற ஆண்டு அமைக்கப்பட்டது. பின்னர் மெட்ரிக் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தமிழ்ப் பாட நூலின் அளவைக் குறைப்பது குறித்து அரசுக்கு அறிக்கைதர பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரி தலைமையில் இன்னொரு குழு அமைக்கப்பட்டது. இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் அறிக்கை தந்திருக்கிறது.

அரசு அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பரிசீலித்து அதனை ஏற்க, பள்ளி கல்வித்துறைச் செயலர் 26-7-2007-ல் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணைப்படி குறைக்கப்பட்ட பாடத்தில் திருக்குறளும் அடங்கும்.

10-ம் வகுப்பு பாடத்தில் திருக்குறளிலிருந்து,

புகழ்,

வெகுளாமை,

இடனறிதல்,

ஊக்கமுடைமை, என நான்கு அதிகாரங்கள் இடம் பெற்றன. இவற்றுள்,

இடனறிதல்,

ஊக்கமுடைமை, ஆகிய இரு அதிகாரங்களிலும் பத்து பத்து வரிகள் - அதாவது, இருபது வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

நம்முடைய கேள்வி, இந்த இருபது வரிகள், மாணவர்களுக்கு ஒரு சுமையா?

திருக்குறளைக் கூடுதலாகப் படிப்பது நல்லதுதானே?

குறைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே அளவில் குறைந்த குறளின்மேல் ஏன் கைவைக்க வேண்டும்?

இந்த இருபது வரிகள் மாணவர்களுக்கு ஒரு சுமையா?

நீக்கப்பட்டவைகளில் ஐந்து வரிகளைக் கொண்ட குறுந்தொகைப் பாடலும் உண்டு. இந்தப் பாடல் நீக்கத்திற்கு வேண்டுமானால் ஒரு சமாதானம் சொல்ல முடியும். அதாவது, அது அகப்பாடல், காதல் சம்பந்தமான பாடல் என்று சொல்லலாம். 16 வயதிலே குறுந்தொகைக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று குழு நினைத்திருக்கலாம். ஆனால் குழு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. மாணவர்கள் ஏற்கெனவே காதல் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். திரைப்படத்திலும்,தொலைக்காட்சியிலும் காணாத காட்சியா குறுந்தொகைக் காட்சி? திரைக்காதலுக்குப் பதிலாக ஓர் ஆரோக்கியமான காதலை அவர்கள் குறுந்தொகையில் தரிசித்து விட்டுப் போகட்டுமே!

கவிஞர் தமிழ் ஒளியின் "அந்தரத்தில் மேடை அமைத்தார்'' என்ற பாடல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. பாரதி, பாரதிதாசனுக்குப்பின் தமிழுலகம் அறியப்பட வேண்டிய கவிஞர் தமிழ் ஒளி. எனவே அவர் பாடல்கள் பாடத்தில் வருவதுதான் சரியாக இருக்கும். மேலும் "அந்தரத்தில் மேடை அமைத்தார்'' என்ற கவிதை அறிவியல் வளர்ச்சியையும், மனித ஆற்றலையும் வெளிப்படுத்துவது. இதை ஏன் நீக்க வேண்டும்? இளைய தலைமுறை தமிழ் ஒளியை அறிய வேண்டாம் என்று நினைக்கிறார்களா? நீர்த்துப்போன கவிதைகளை எல்லாம் பாடப்புத்தகத்தில் நிறுத்திக்கொண்டு, அடர்த்தியான கவிதைகளை அவசர அவசரமாக நீக்குவதேன்?

உரைநடைப் பகுதியில் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் எழுதிய மனையியல் என்ற கட்டுரை எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்து,துணைப்பாடத்தில் இரண்டு கதைகள் நீக்கப்பட்டுள்ளன.

நீக்கப்பட்ட ஒரு கதை அசோகமித்திரனின் "விடிவதற்குள்" என்ற சிறு கதையாகும். சென்னை நகரில் தண்ணீர் பஞ்சத்தால், விடிவதற்குள் தண்ணீர் பிடித்து வைப்பதற்காக அலையும் ஒரு குடும்பத்தலைவியின் கதை இது. தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும்போது, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சித்திரிக்கும் கதை இது.

தண்ணீர்த் தட்டுப்பாட்டை இப்படி படம்பிடித்துக் காட்டினால், அரசு மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்ற எண்ணமோ தெரியவில்லை; நீக்கிவிட்டார்கள். இது ஒரு யதார்த்தமான கதை. ஒரு வாழ்க்கைப் பதிவு. அப்படித்தான் குழு பார்த்திருக்க வேண்டும். ஆனால் குழு அரசியல் நோக்கில் கணக்குப்போட்டு கழித்தல் வேலையைச் செய்திருக்கிறது. இப்படிப் பார்த்தால் வாழ்க்கையின் சிரமங்களைச் சித்திரிக்கும் எந்தக் கதையும் பாடப் புத்தகத்தில் இடம் பெற முடியாமல் போய்விடும்.

முற்போக்கு எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாளின் "மண்ணாசை" நீக்கப்பட்ட, இன்னொரு கதை. இந்தக் கதையின் நீக்கத்திலும் அரசியல் இருக்கிறது.

பட்டாளத்தில் வேலைபார்த்து சொந்த மண்ணுக்குத் திரும்பும் பட்டாளத்தார் தாம் கொண்டுவந்த பணத்தை எல்லாம் நிலத்தில்கொட்டி மா, பலா, கொய்யா என்று மரங்களை வளர்த்து, தன் வாழ்க்கையையே அவற்றோடு பிணைத்துக்கொள்கிறார்.

அவருடைய மகன் கொஞ்சம் தோட்டத்தை வைத்துக்கொண்டு, மீதித் தோட்டத்தை எல்லாம் மனைகளாகப் பிரித்து, புதிய நகரை உருவாக்கப்போகும் நபர்களுக்கு விற்க ஏற்பாடு செய்து, கடைசியில் தோட்டம் விற்கப்படுகிறது. பத்திரத்தைப் பதிவு செய்துவிட்டு வரும் பட்டாளத்தார், அதற்குள் மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்து, மரத்தோடு மரமாய் சரிந்து விழுகிறார். மரணப் படுக்கையில் நாள்கள் ஓடுகின்றன. மண்ணாசைதான் உயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அவருடைய மைத்துனர், தோட்டத்திற்குப்போய் மண் எடுத்து வந்து, தண்ணீரில் கரைத்து பட்டாளத்தார் வாயில் ஊற்றுகிறார். சிறிது நேரத்தில் ஒரே விக்கலோடு உயிர்போய்விடுகிறது.

இந்தக் கதையைப் பாடத்திலிருந்து விலக்குவதில் ஓர் உள்ளார்ந்த அரசியல் இருப்பதாகத் தெரிகிறது. நிலங்களைக் கையகப்படுத்தும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், பெரும் தனியார் நிறுவனங்களுக்கும் மக்கள் மத்தியில் இப்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்தச் சூழலில் "மண்ணாசை" கதையைப் படித்தால் மண்ணாசை அதிகமாகுமே என்ற எண்ணமும் இக்கதையை நீக்க ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின் குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை அமலாக்க "திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்" என்று காரணம் காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத் தோன்றுகிறது.

மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கைதான். அதற்காக மாணவர்கள் சிரமப்படும் பாடங்களில் சுமையைக் குறைக்க வேண்டுமே தவிர, சிந்திக்க வைக்கும் பாடங்களை நீக்கக்கூடாது.

தமிழக அரசு தாமதம் செய்யாமல் தன்னுடைய அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்.

நன்றி: http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20071026132651&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist

On 10/27/07, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
ஆஹா   நல்ல  உதாரணம்.   வாழ்க  தமிழ்த்   தேனீ


On 10/26/07, Thamizth Thenee <rkc...@gmail.com > wrote:
நண்பர்களே இந்தக் கட்டுறையைப் படித்தவுடன்
இதே மாதிரி அசட்டு ஆச்சான் ராமாயண காலத்திலேயும் இருந்தார்கள் என்று
ஞாபகம் வந்தது

திரு லக்ஷ்மணன் ஆதி சேஷனின் அவதாரம்
அவர் இப்போது நான் எழுதப்போகும் விஷயத்துக்குஎன்னை மன்னித்து அருள்
பாலிப்பாராக

ஸ்ரீராமன் வனவாசம் சென்றாயிற்று ,ஸ்ரம பரிகாரம் செய்து
கொண்டிருக்கின்றனர் அனைவரும்,
அப்போது ஒரு அசட்டு ஆச்சான் ஓடி வந்து ல்க்ஷ்மணன்
காதில் பரதன் சேனை பரிவாரங்களோடு வந்து கொண்டிருக்கிறான் என்று ஒரு
விபரீதக் குரலில் சொன்னான்
லக்ஷ்மணன் ஆதி சேஷனின் அம்ஸமல்லவா உடனே கோபம் தலைக்கேறியது
ஸ்ரீராமனிடம் வந்து  இதெப்படி ஞாயமாகும் நாம்தான் நாட்டையே பரதனுக்கு
கொடுத்துவிட்டு கானகமேகிவிட்டோமே இன்னும் நம்மை தொந்தரவு செய்ய பரதன்
எதற்கு இங்கு வருகிறான் ,....என்று கோபத்துடன் வினவ
ஸ்ரீராமன் ல்க்ஷ்மணனை அமைதிப்படுத்தி
நடப்பதைப் பார் ஆவேசம் கொள்ளாதே என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே
கண்ணில் பட்டது பரதனின் சிறமேற் கூப்பிய கைகளும் தொழுத தேகமும் ,அழுத
கண்களும், பரிதாபத்தின் மொத்தஉருவமாக
வந்து கொண்டிருக்கும் காட்சி

பரதன் ஸ்ரீராமனிடம் வந்து ஸ்ரீராமா ,என் மூத்த தமையனே என்னை இவ்வாறு
சோதனை செய்யலாமா,,?
என் தாய் கைகேயியின் வாக்கை தாங்கள் பெரிது பண்ணலாமா..? தாங்கள் உடனே
நாட்டுக்கு வந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொள்ளாவிடில் உயிரை
மாய்த்துக் கொள்வதைவிட வேறு வழி இல்லை என்று புலம்பினான் பரதன்
ஸ்ரீராமன் லக்ஷ்மண்ணனைத் திரும்பிப் பார்த்தான்
அதில் பல அர்த்தம் தெரிந்தது
லக்ஷ்மண்ணன் தலை குனிந்தான்
அதில் ஒரு அர்த்தம்
"  அட அஸட்டு ஆச்சான்  "
என்று அடியேன் நினைக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

On 10월26일, 오전2시20분, "srirangammohanarangan v" < ranganvm...@gmail.com>
wrote:
> உரையாசிரியர்கள் எல்லாரும் ஒரே படித்தாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும்
> ஒவ்வொரு தன்மை கொண்டவராக இருக்கின்றார்கள். அதுவும் மதநூல்களைப்
> பொறுத்தவரையில் என்றாலோ கேட்கவே வேண்டாம். ஏதோ சில
> உரையாசிரியர்களிடத்தில்தான் தாம் உரைக்கும் விஷயங்களைப் பற்றிய மிகச்
> சிறந்த அக்கறை, உள்ளபடியே பதிவு செய்தல், இடர்ப்பாடுகளை இயல்பான
> முறையில் நீக்கிக் காட்டுதல் இவையெல்லாம் இருக்கும். இந்த குணங்கள்
> எல்லாம் மிக சீர்மையுடன் திகழக் கூடிய ஒர் உரையாசிரியர்
> ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் கடைசி ஆசிரியரான ஸ்ரீமணவாள மாமுனிகள்.
> (காலம் 13, 14ஆம் நூர்றாண்டு) இவரிடத்தில் நகைச் சுவையும்
> இயல்புறக் கலந்து இருந்ததை இவருடைய சரிதையைச் சொல்லும்
> 'யதீந்திரப்ரவணப் பிரபாவம்' என்ற நூலைப் படிக்கும் பொழுது கண்டேன்.
>
> ஆழ்வார் திருநகரியினின்று அப்பொழுதுதான் ஸ்ரீரங்கத்தில் வந்து
> வசிக்கத் தொடங்யிருக்கிறார். வடமொழியும் தமிழ்மொழியும் திகழ்ந்த
> நாவர். ஸ்ரீராமானுஜரின் வேதாந்த உரையான ஸ்ரீபாஷ்யமும், நம்மாழ்வாரின்
> திராவிட வேதம் ஆகிய திருவாய்மொழியும் ஒருங்கே வல்ல நிறைமதியாளர்.
> ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு விசிஷ்டாத்வைத தர்சனத்தை வெறும் வடமொழி
> ஜாலமாக அடித்துவிடாமல், திருவாய்மொழியின் தெளிதேன் மணம் வீச
> வளர்ந்தோங்கச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் மிக்கவர். அவருடைய குருவான
> திருவாய்மொழிப்பிள்ளையும் அவருக்கு இட்ட கட்டளையும் அதுவே.
> 'திருவாய்மொழிக்கே உன் வாழ்வு' என்பதுதான். பல அறிஞர் பெருமக்கள்
> வைணவத்தில் அவரால் ஈர்க்கப்பட்டு திருவாய்மொழியின் திருமால் நெறிக்கே
> தம் நெஞ்சு பறிகொடுக்கத் தொடங்கினர்.
> ஸ்ரீரங்கம் கோவிலில் கைங்கர்யத்தில் ஈடுபடுவதும், திருவாய்மொழியை ஈடு
> வியாக்யானத்திற்கேற்ப விரித்துரைப்பதுமே வாழ்வு என்றிருந்தவருக்கு உறவினர்
> அதிகம். ஒவ்வொருவராக மரிப்பதும், அப்பொழுதெல்லாம் தம் இலட்சியப்
> பணி தடங்கல் உறுவதும் பெரும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தவே பேசாமல்
> சந்நியாசி ஆகிவிட்டார். அப்பொழுது இந்த தீட்டு ஆசாரம் உறவு என்ற
> நிர்பந்தங்கள் எதுவும் தனக்கு இராது என்று.
>
> அவருடைய உண்மையான ஈடுபாட்டைப் பார்த்து பல வித்வான்கள் தங்கள்
> குடும்பம் தங்கள் நண்பர் குடும்பம், உறவினர் குடும்பம் என்று அனைத்து
> சுற்றத்தாரையும் சேர்த்துக் கொண்டு ஜீயரை (வைணவத்தில் சந்நியாசிக்குப்
> பெயர்) பார்க்க வந்தார்களாம். அதில் முக்கிய குடும்பத்துப் பெண்மணி
> ஏற்கனவே ஜீயரின் பெருமை தெரிந்தவர். ஆச்சியார் என்ற பேருடைய அந்தப்
> பெண்மணி முன்னரே ஜீயருக்கு இவர்கள் வரும் சேதியைத் தெரிவித்தல்
> நலமாக இருக்கும் என்று எண்ணி ஜீயரிடம் சேவை புரியும் ஒருவரை
> அழைத்து விஷயத்தைச் சொல்லி கூடத்தில் சீடர்களுக்கு வகுப்பு எடுத்துக்
> கொண்டிருக்கும் ஜீயரிடம் சொல்லிவிடுமாறு கூறினாள்.
>
> அவர் என்ன நினைத்தரோ! கிடுகிடு என்று ஓடிப்போய் ஜீயரிடம் காதோடு, '
> எல்லா வித்வான்களும் திரண்டு உங்களை நோக்கி வந்துகொண்டு
> இருக்கிறார்களாம்! சீக்கிரம் மறைவிடத்திற்குப் போய்
> ஒளிந்துகொள்ளுங்கள்.' என்று பதறியிருக்கிறார். ஜீயரும் ' என்னடா இது!
> நாம் யாருக்கும் நோகும்படி எதுவும் செய்யவில்லையே. நம்மை எதிர்த்து ஏன்
> வரப்போகிறார்கள்? சரி ஏதாவது கோபதாபத்தில் நடப்பதற்குள் நாம் உள்ளே
> சென்று இருப்போம். கோபம் அடங்கியதும் வருவோம்' என்று உள்ளே போனார்.
> அவர்கள் வந்தபின்னர்தான் தெரிந்தது கோபத்தில் வரவில்லை. இவ்வளவு
> நாள் தாங்கள் எல்லாம் வடமொழிக் கல்வியே சிறப்பு என்று
> இறுமாந்திருந்தது போக இப்பொழுது திருவாய்மொழியின் ஈடுபாட்டில்
> ஜீயரின் வழிகாட்டலுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ள வந்திருக்கிறார்கள்
> என்று.
>
> விஷயம் தெரிந்து வெளியில் வந்த ஸ்ரீமணவாளமாமுனிகள், அப்பொழுதும்
> தமது கோபத்திற்கு இடம் கொடுக்காது முதலில் தனக்கு வந்து காதோடு
> எச்சரிக்கை சொன்ன பேர்வழியைக் கூப்பிட்டு, 'உன் பெயர் என்ன?' என்று
> கேட்டாராம். அதற்கு அவர் 'அடியேன் ஸ்ரீராமானுஜ தாசன்' என்றாராம்.
> அதைகேட்டு சிரித்துவிட்டு ஜீயர், ' இல்லை இல்லை உன் பெயர் இனிமேல்
> அசட்டு ஆச்சான்' என்று கூறவும் அத்தனை பேரும் சிரிப்பிலும்
> கேலியிலும் ஆழ்ந்துவிட்டார்கள்.
>
> அதாவது ஒழுங்கா ரிப்போர்ட் பண்ணத் தெரியணும். அதுவும் ஒரு கலை.
> இல்லைன்னா அசட்டு ஆச்சான்தான்.



வேந்தன் அரசு

unread,
Oct 27, 2007, 4:17:05 PM10/27/07
to minT...@googlegroups.com
<திருக்குறளின் அளவைக் குறைத்திருப்பது
ஏற்கன்வே ஒன்றே முக்கால் அடி
 
இனி ஒன்றைரை அடியோ?

 

Thamizth Thenee

unread,
Oct 28, 2007, 1:57:04 AM10/28/07
to மின்தமிழ்
திருக்குறளே சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும்
ஹைகூ வடிவம்
அதையும் குறைப்பதென்பது தமிழ் தமிழ் என்று
தமிழை வளர்க்கிறோம் என்று அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளின் உள்
நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கும்
என்பது தெள்ளத் தெளிவாகிறது
ஒரு குடும்பம் மட்டும் பிழைத்தால் போதாது
மக்கள் புறிந்து கொண்டால் நாடே பிழைக்கும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

> நன்றி:http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20071026132651&Title=Edit...


>
> On 10/27/07, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
> > ஆஹா   நல்ல  உதாரணம்.   வாழ்க  தமிழ்த்   தேனீ
>

இரவா

unread,
Oct 28, 2007, 9:44:45 AM10/28/07
to minT...@googlegroups.com
On 10/28/07, Thamizth Thenee <rkc...@gmail.com> wrote:
திருக்குறளே சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும்
ஹைகூ வடிவம்
அதையும் குறைப்பதென்பது தமிழ் தமிழ் என்று
தமிழை வளர்க்கிறோம் என்று அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளின் உள்
நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கும்
என்பது தெள்ளத் தெளிவாகிறது
ஒரு குடும்பம் மட்டும் பிழைத்தால் போதாது
மக்கள் புறிந்து கொண்டால் நாடே பிழைக்கும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

 தமிழ்ப் பாடங்கள் குறைத்ததைப் பற்றி உரியவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். விளக்கலாம். அதைவிடுத்து, ஒரு குடும்பம் மட்டும் பிழைத்தால் போதாது! மக்கள் புறிந்து கொண்டால் நாடே பிழைக்கும்! என்பது, தமிழுக்காகக் கொடுக்கும் குரல் போல இல்லை. வேறு வாடை அடிக்கிறது.

   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

ஆமாச்சு

unread,
Oct 28, 2007, 1:35:44 PM10/28/07
to மின்தமிழ்
கற்றது தமிழ், தமிழ் எம் ஏ பார்த்துட்டு வரேன் :-)

இதைப் பாருங்க : http://amachu.net/blog/?p=68 (நானும் இந்தத் துறை தான்
சாமியோவ்...)

இதையும்: http://amachu.net/blog/?p=96

அரசாங்கத்தை வலியுறுத்தலாம்! ஆனால் பாவம்.. யார் தமிழர் எனக் கண்டு
பிடிப்பதிலும், தமிழைக் காத்தது யார் எனப் போட்டிப் போடுவதிலும் அவர்கள்
நேரம் போகிறது.. பதில் கிடைக்குதான்னு நானும் விவரம் அறிந்ததிலிருந்து
கவனிச்சுட்டு வரேன்... நேர விரயம் தான் மிச்சம்..

அதை விடுங்க! தமிழுக்கு ஆதாரம் தாய், தந்தை, தாத்தா, பாட்டி...

தாயே தமிழை தள்ளி வைக்கறதைப் பார்த்தாச்சு: http://amachu.net/blog/?p=4
ரொம்ப தூரத்துல இல்லை. எங்களில்லத்தின் கீழ்தளத்தில் :-)

அவங்க பிள்ளைக்கு என்னால வேலை கொடுக்க முடியாதே.. ;-) உங்களால? தமிழால?
கையாலாகாத் தனம் அரசாங்கத்துக் கிட்டே மட்டுமில்லை..

அரசாட்சியா இருந்தா அரசாங்கத்தைக் கை காட்டிட வாய்ப்புண்டு.. நாம நம்மையே
இல்ல ஆட்சி செய்துக்கிட்டிருக்கோம்.. மக்களாட்சி... மண்ணாங்கட்டி...

"அறம் செய விரும்பு" சொல்லிக் கொடுக்க எத்தனைப் பேர் வீட்ல பாட்டி
இருக்காங்க? எல்லாம் ஏ பாஃர் ஆப்பிள் தான்...

சென்னை "தமிழ்"நாட்டின் தலைநகர்.. தூள்...

அறுபது வருஷம் ஆச்சு.. அரசியல் சாசனமே அதிகார பூர்வமா தமிழில்
இருக்கான்னுத் தெரியல.. நாட்டுல ஆட்சி இதை வச்சு நடக்குதாமுல்ல..

எல்லாரும் மறுபடியும் மறுபடியும் ஒன்னு இராமாயணத்துக்கு/ குறளுக்கு/
தேவாரத்துக்கு/ பிரபந்தத்துக்கு இத்யாதிகளுக்கு இருக்கற உரையையே இப்படி
மாத்தி அப்படி மாத்தி, தங்களோடதையும் சேர்த்து எழுதறாங்க.. ம்ம்ம்..
இல்லைன்னா இராவணன், வாலி எட்சட்ரா இப்படி..

800 களில் வட்டாரத்துக்கு பிரசவம் பார்க்க ஒரு மருத்துவச்சி இருந்தது
போய்.. ஆங்கிலம் தெரிஞ்சாத் தான்.. மருத்துவம் படிக்கலாம்.. அதைப்
படிச்சாத்தான் அங்கரிக்கப் பட்டு வைத்தியம் பார்க்கலாமுங்கற நிலை...

சரி அப்படியாச்சும் நிறைய மருத்துவர்கள் உருவாக வாய்ப்பு இருக்கான்னா..
இருக்கறது ஆறேழு கல்லூரி.. வருஷத்திற்கு வெளி வரும் டாக்டர்கள்
ஆயிரத்துக்கும் சொற்பம்.. 289 மார்க் கட் ஆஃ்ப் வாங்கினவன் 290 மார்க்
வாங்கினவனைக் காட்டிலும் திறமையில்லாதவன்னு சொல்லித் தள்ளிவிடும் தேர்வு
முறை.. நானும் ரொம்ப யோசிச்சுக்கிட்டேயிரிக்கேன் விடைக் கிடைக்கல! :-(

இவங்க எல்லாம் படிச்சு வந்துட்டாலும் இங்க வாழும் மக்களுக்காக உழைத்துக்
கொட்ட வாய்ப்புள்ளவர்கள்.. அய்யோ பாவம்.. இவங்களால அரசுக்கு வருவாய்
எதுவும் அதிகமில்லை... அந்நிய செலாவணியும் தான்.. அரசாங்க குறியே அதுலத்
தான் இப்போ இருக்கு... இப்படி இருக்கறவங்கக் கிட்டேர்ந்து எப்படி?

அதனாலையோ என்னவோ மருத்துவக்கல்லூரிகளும் பெருகல.. மருத்துவர்களும்
தான்..

உயர்வானத் தொழில் உழவுத் தொழிலுன்னு வள்ளுவர் சொன்னதெல்லாம் வயல்
வரப்புலேயே குழித் தோண்டி புதைக்க வேண்டியதுதான்...

ஆனா வெளியிலிருப்பவர்களுக்கு உழைத்துக் கொட்டும் மஹா புருஷர்கள்...டாலர்
டாலடிக்குதுல்ல.. கத்தைக் காசு வரும்.. ஆஹா.. அற்புதம்.. விளைவு 200+
பொறியியல்(?) கல்லூரிகள்.. எனக்குத் தெரிஞ்சு இந்த லிஸ்டல லேட்டா சேர்ந்த
எத்தனைக் கல்லூரிகளில் சிவில், மெக்கானிகல், கெமிக்கல் இருக்குன்னுத்
தெரியல..

பிள்ளைகளும் தமிழ் சிரமம்னு பதினோராவதுல பிரெஞ்சு, ஜெர்மன், சமஸ்கிருதம்
கத்துக்கறாங்க. இந்த மொழியெல்லாம் அத்தனாம் வகுப்புலதான் ஆரம்பப்
பாடமேங்கறதுனால எளிமையா மதிப்பெண் வாங்கலாங்கறதுனால...

இதையெல்லாம் என்ன செய்ய?

அன்புடன்,
ஆமாச்சு


ஆமாச்சு

unread,
Oct 28, 2007, 2:11:54 PM10/28/07
to மின்தமிழ்
> இணையம்: www.thamizhkkuil.net

தளம் பார்த்தேன். மகிழ்ச்சி..

Best viewed on Internet Explorer 6.0 என கீழிடப் பட்டுள்ளது.

இதனை அனைத்து உலாவிகளிலும் பார்க்க வசதியாகச் செய்யவும்...

அன்புடன்,
ஆமாச்சு

http://amachu.net


ஆமாச்சு

unread,
Oct 28, 2007, 2:13:32 PM10/28/07
to மின்தமிழ்
> இதையெல்லாம் என்ன செய்ய?

http://amachu.net/blog/?p=135

nanthan

unread,
Oct 28, 2007, 6:10:36 PM10/28/07
to minT...@googlegroups.com, இரவா
அன்புடன் இர வாசுதேவன் அவர்கட்கு
உங்கள் தமிழ்க் குயில் தளம் பார்த்தேன்; பரவசமானேன்.
சில பக்கங்களைத் தொடர்ந்து செல்ல முடியவில்லை.
எனது கணினியின் கோளாறா என்பதும் தெரியவில்லை.

நீண்ட நாட்களாக உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை.

பேராசிரியர் இராசகோபாலன் இங்கு சிட்னியில் இருக்கிறார். இரு வாரங்களில் சென்னை திரும்புகிறார்.

மீண்டும் ஓர் மடலில் சந்திப்போம்.
அன்புடன்
நந்தன்
சிட்னி
---- "இரவா" <vasude...@gmail.com> wrote:
> On 10/28/07, Thamizth Thenee <rkc...@gmail.com> wrote:
>
> திருக்குறளே சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும்
> ஹைகூ வடிவம்
> அதையும் குறைப்பதென்பது தமிழ் தமிழ் என்று
> தமிழை வளர்க்கிறோம் என்று அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளின் உள்

ram chandran

unread,
Oct 29, 2007, 1:36:28 AM10/29/07
to minT...@googlegroups.com
Dear nathan

I am not able to read the mail. The tamil fonts are
not readable. How can I read the mail. please help
me.

Thanks & Regards
V Ramachandran

--- nanthan <nan...@bigpond.com> wrote:

5, 50, 500, 5000 - Store N number of mails in your inbox. Go to http://help.yahoo.com/l/in/yahoo/mail/yahoomail/tools/tools-08.html

srirangammohanarangan v

unread,
Oct 29, 2007, 2:08:09 AM10/29/07
to minT...@googlegroups.com
தமிழ்  பாடத்திட்டத்தில்   பாடங்களைக்  குறைத்துவிட்டார்களே,   அதுவும்   திருக்குறளில்  கூட  என்பதுபற்றி  எழும்   கவலையில்  எனக்கு  கவலையோடு   சேர்ந்து   சில  எண்ணங்களும் எழுகின்றன.     முதலில்
இங்கு   ஆங்கிலப்   படிப்பு  வந்தபின்னர்தான்   தமிழுக்கே  நல்ல   காலம்  வந்தது.   இன்றும்   ஆங்கிலப்  படிப்பு   பல   பிராந்திய   மொழிகளுக்கான   ஆய்வுப்புலமாக   செயல்பட்டு  வருவது   கண்கூடு.  எனவே   தமிழில்   ஈடுபாடு  கொள்வதை   ஆங்கிலம்   தடுத்துவிடாது.   அவ்வாறு   தடுத்துக்கொள்ளும்    வல்லமை   உள்ள   ஒரே   சக்தி   தமிழர்களாகிய   நாமே. 
 
அடுத்து    முக்கியமான   செவ்விலக்கியங்கள்   பாடத்திட்டத்தில்   பங்கு  குறைக்கப்படுவது    தமிழில்  மட்டும்   கவலையல்ல.   தற்பொழுது   இங்கிலாந்திலும்    இதே   பிரச்னை.   அங்கு   ஷேக்ஸ்பியரையே   கல்வித் திட்டத்திலிருந்து   குறைத்துவிட்டார்களாம்.   ஷேக்ஸ்பியர்   இல்லாமல்   ஆங்கிலமா?    காரணம்   மாணவர்களின்  எழுதப்  படுக்கத்  தெரிந்த   அறிவு  literacy    பற்றிய   ஆய்வுகள்   அங்கு  பெரும்  கவலையை  ஏற்படுத்தியுள்ளதாம்.   அமெரிக்காவில்   கேட்கவே  வேண்டாம்.    வெறுமனே   புழக்கத்தில்   உள்ள    இங்கு  இருப்பதுபோல்   'மச்சி'    'தோடா'    போன்ற   டோல்டப்பி   சொற்கோவைகள்தான்   மாணவர்களுக்குத்   தெரிகிறதே  ஒழிய   பொருள்  குறித்த  சொற்கோவைகள்    மிகமிகக்  குறைவு  என்கிறார்கள்   அங்கு. 
நமது   தமிழ்நாட்டில்    தமிழில்   நூல் எழுதினால்    புரியமாட்டேன்  என்கிறது.   ஏதோ   பேப்பரில்   டிவியில்   வருகிற   கொச்சைக்  கலவைகள் தான்    மொழியின்  இடத்தைப்  பிடித்துக்கொண்டிருக்கின்றன. 
சரி   இணையம்  பற்றி  எடுத்தாலோ    விஷயம்  கேவலம்.   எல்லாம்   40  50  ஐ   தாண்டியவர்கள்.    தமிழில்   குழுமங்களிலோ   தளங்களிலோ   பயன்படுத்துகிற  எழுத்து   மிகக்  கொச்சையாகவும்,   அந்த எழுத்தில்   தெரியவரும்   பண்பாடு   அதைவிடக்   கொச்சையாகவும்    இருக்கிறது.    மிக  நல்ல   ஊடகத்தை,   ஆங்கிலக்  கல்வி  அளித்த    வரத்தை,    இப்படி   பயன்  படுத்துகிறோமே,  எல்லாரும்    இவ்வாறு   தமிழில்   இணையத்தில்  எழுத   தமிழ்  எழுத்தைக்   கொண்டுவர  என்ன   பாடுபட்டார்கள்  என்பது   தெரிந்த   கதைதானே!  
 
வீட்டில்   பெற்றோர்கள்    சிறுவர்களுக்கு   தமிழின்   பெருமையை   உணர்த்தும்   வகையில்  ஏதாவது   செய்கிறார்களா?    ஆகா   தமிழ்  சீரியல்   போடுகிறார்கள்!    சிறுவர்கள்   பரிட்சை  நேரம் என்றாலும்   இது  தவறுவதில்லை.    விருந்தினர்கள்   வந்தால்   அது  அவர்கள்   பாடு.    டிவி   மொழி   சீரியல்   மொழி    தமிழ்தான்  என்று   நிரூபிக்க  வேண்டியிருக்கிறது.   சிறுவர்களுக்கு   தமிழைப்  பற்றி   உணர   நாம்   வாய்ப்பே   அளிப்பதில்லை.   
 
இவ்வளவு   இருந்தாலும்   பாடத்திட்டத்தில்   குறைத்துவிட்டார்கள்  என்னும்  பொழுது   கவலையாகத்தான்   இருக்கிறது.    குற்றம்   சுமத்தும்  ஒரு   விரல்   வெளியில்   நீளும்  பொழுது   மூன்று   விரல்கள்   நம்மை  நோக்கித்தான்   நீள்கின்றன.         

 

Aravinda Lochanan

unread,
Oct 29, 2007, 3:10:43 AM10/29/07
to minT...@googlegroups.com
பொறுப்பான பதில் ரங்கன்.

செவ்விலக்கியப் பரிட்சியமில்லாமல் 'எனக்கும் தமிழ் தெரியும்' என்று
சொல்லிக் கொள்வதை விட கூவத்தில் குளித்து விடலாம்!

இணையம் தமிழை வளர்க்கும் என்ற ஆர்வத்தில்தான் நாங்கள் மின்வெளியில்
முதலில் குதித்தோம். ஆனால், 90% இணைய எழுத்து கிசு, கிசு, வம்பு, சினிமா,
தனிமனிதத் தாக்குதல், சாதியச் சண்டைகள் என்று இருக்கிறது. எல்லா
மடலாடற்குழுக்களும் இதில் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் மாட்டிக்கொண்டு
முழிக்கின்றன. நன்றாக எழுதக்கூடியவர்களும் அபவாதத்திற்குப் பயந்து
மின்வெளியை விட்டு ஓடியே விட்டனர். (மர்மக்கும்மல்கள் இங்குதான் அதிகம்).
எனவேதான் மின்தமிழில் வெட்டியான விஷயங்களை உள்ளே விடுவதில்லை. சும்மாப்
பொழுது போக்க ஆயிரம் 'வம்பு மடங்கள்' உள்ளனவே!

சினிமாவின் தாக்கம் தமிழர் வாழ்வில் மிக அதிகம். 'சினிமாவாப் பார்த்து
திருந்தாவிட்டால் சினிமாவைத் திருத்த முடியாது'

மொழி அரசியல் என்பது தமிழக வரலாறு என்று ஆகிப்போனபின் இங்கு உண்மையான
தமிழ் வளர்ச்சியைக் காண்பது துர்லபம். கல்வி என்பது நீதித்துறை போல்
சுதந்திரமாக (?) இயங்க வேண்டும். கல்வியின் தரத்தை உயர் மட்டக் கல்விக்
குழுதான் தீர்மானிக்க வேண்டும். இக்குழுவில் வெளிநாட்டுத்தமிழ்
அறிஞர்களும் இடம் பெற வேண்டும். சர்வ தேச அளவில் தமிழ்த் தரம்
தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழ் என்பது தமிழகத்திற்கும் மட்டும்
சொந்தமன்று. இன்று 22 நாடுகளில் அது புழங்குகிறது. வழி நடத்தும் பொறுப்பு
தமிழ் மண்ணிடம் உள்ளது. இதைத் தமிழகம் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஆங்கிலத்தின் தாக்கமில்லாத எந்த மொழியும் உலகில் இல்லை. எல்லா மொழிகளுமே
ஆங்கிலக் கலப்பைக் கண்டு அஞ்சுகின்றன.

தமிழர்கள் சுய உணர்வுடன் விழிப்புற வேண்டும். நல்லோர் கனவு மெய்ப்பட வேண்டும்.

அலோ!

ஆமாச்சு

unread,
Oct 30, 2007, 5:39:03 AM10/30/07
to மின்தமிழ்
>> முதலில்இங்கு ஆங்கிலப் படிப்பு வந்தபின்னர்தான் தமிழுக்கே நல்ல காலம் வந்தது.

??

ஆமாச்சு

unread,
Oct 30, 2007, 5:41:25 AM10/30/07
to மின்தமிழ்
> செவ்விலக்கியப் பரிட்சியமில்லாமல் 'எனக்கும் தமிழ் தெரியும்' என்று
> சொல்லிக் கொள்வதை விட கூவத்தில் குளித்து விடலாம்!

கட்டாயமில்லை. இலக்கியம் படைத்தோரே அதற்கு சாட்சி.

Aravinda Lochanan

unread,
Oct 30, 2007, 10:06:47 AM10/30/07
to minT...@googlegroups.com

யாரைச் சொல்கிறீர்கள்? :-)

அலோ!

Thamizth Thenee

unread,
Oct 31, 2007, 5:05:59 AM10/31/07
to மின்தமிழ்
( தமிழ் ஒளி, சோலை சுந்தரபெருமாள் போன்றவர்கள் முற்போக்குச்

சிந்தனையாளர்கள்.
> > முற்போக்கு வாசத்தை மாணவர்கள் நுகர்ந்துவிடக் கூடாது என்பதும் குழுவின்
> > குறிக்கோளாக இருந்திருக்க வேண்டும். திருக்குறளின் அளவைக் குறைப்பது என்பது
> > குழுவின் நோக்கமாக இருந்திருக்காது. தாங்கள் அரசியல்நோக்கில் எடுத்த முடிவை
> > அமலாக்க "திருக்குறளிலேயே சில குறள்களை எடுத்துவிட்டோம்" என்று காரணம்
> > காட்டுவதற்குத்தான் திருக்குறளிலும் கைவைத்திருக்கிறார்கள் என்று கருதத்
> > தோன்றுகிறது.
)
திரு இரவா அவர்களே தமிழை வளர்க்கிறோம் என்று சொல்லக் கூடியவர்கள் ,தமிழை
உண்மையிலேயே வளக்கவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள்
திருக்குறள்தான் மூத்த தமிழ் என்று மரியாதை கொடுப்பவர்கள்,
அதைக் குறைக்கக் கூடாது ,வளர்க்கவேண்டும்
என்று வருத்தப் பட்டு எழுதினேனெ தவிற குறிப்பிட்ட யாரையும் புண்படுத்தும்
உள் நோக்கம் எனக்கில்லை
உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசவில்லை
உண்மையாக எதை நினைத்தேனோ அதைத்தான் சொல்லி இருக்கிறேன்
மேலும் நான் என்னை அறிமுகம் செய்யும்போதே
பொதுக் கவி என்றுதான் சொல்லி இருக்கிறேன்
நான் சொன்னது பொதுவான கருத்து என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை
போய்ச் சேரவேண்டியவர்களுக்கு போய்ச் சேரட்டுமே
அப்போதாவது உண்மையாக தமிழை வளர்க்க
அல்லது இருக்கும் தமிழைக் குறைக்காமலாவது
இருப்பார்களா என்று பார்க்கலாம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

On 10월28일, 오후6시44분, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:

இரவா

unread,
Oct 31, 2007, 6:15:15 AM10/31/07
to minT...@googlegroups.com
அன்புடன் தமிழ்த்தேனீயார்க்கு,
 
     தமிழகத்தில் பாடங்கள் ஒரு சுமையாக இருக்கிறது! அதைக் குறைக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசிரியர் கல்வியாளர் போன்றவர்கள் நெடுங்காலமாகக் கூறிவந்துள்ள வேண்டுகோளினை ஏற்று, ஒரு குழு அமைக்கப் பட்டது. அக்குழுவின் பரிந்துரை அவ்வாறு இருக்கிறது. ஒரு குழுவில் இடம் பெற்றவர்கள் தமிழ்ப்பாடங்களை ஏன் குரைத்தார்கள் என்று தெரியவில்லை. அதன் உண்மையை உரிய இடத்தில் கேட்க முற்படுகிறேன்.
 
தங்கள் பதிலில், ஒரு குடும்பம் என்ற சொல் இடம் பெற்றிருந்ததற்காகவே நான் எழுதினேன்.
 
தமிழைப் பொறுத்தமட்டில், சங்க காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், சேர சோழ பாண்டியர் கால, நாயக்கர் காலம், வெள்ளையர் காலம் என்னும் ஆட்சியாளர்கள் எவராலும்  தமிழ் வளர்க்கப் படவில்லை. தனி நபராலும், தனியார் நிறுவனங்களாலும் மடாலயங்களாலுமே தமிழ் வளர்க்கப்பட்டு வந்துள்ளது என்று தமிழ் வளர்ச்சிப் பற்றி ஆய்வு செய்த முனைவர்.முருகேசன் அவர்கள் (சென்னைப் பல்கலைக் கழகம்),  பட்டியலிடுட்டுள்ளார்.
 
ஒவ்வொரு ஆட்சியாளர்களாலும் தமிழ் என்ன பாடு பட்டது என்பதைச் சொல்லிமாளாது.
 
தமிழ் மீது கொண்ட காதலால், தமிழைத் தவிர வேறு எதையும் படிக்க மாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ் படித்தவன் நான். நான் பெற்ற நான்கு பட்டமும் தமிழில் (100%) படித்துப் பெற்றவை. ஆனால், நான் என்ன பாடு படுகிறேன் என்று என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.
 
அதற்காக, நான் ஆட்சியாளர்களைக் குற்றஞ் சாட்டிக் கொண்டிருக்கவில்லை.
 
நமக்குப் பின், நம் மக்களாவது நன்றாகத் தமிழ் படிக்கட்டும் என்று எத்தனைப் பெற்றோர்கள் எண்ணுவார்கள், எண்ணுகிறார்கள்.
 
தளங்களிலும் குழுக்களிலும் எழுதும் எழுத்து ஆட்ட்சியாளர் பார்வைக்குச் சொல்லாது. உரிய இடத்தில் இம்மடல்களை இடலாம்.

இரவா

unread,
Oct 31, 2007, 6:34:04 AM10/31/07
to minT...@googlegroups.com
தமிழ்ப் பாடங்கள் குறைக்கப்பட்டதற்காகத் தங்கள் கருத்துகளைக் கீழ்க் காணும் தமிழக அரசு  இணையத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டுகிறேன்.
 
--

ஆமாச்சு

unread,
Nov 1, 2007, 5:48:41 AM11/1/07
to மின்தமிழ்

> யாரைச் சொல்கிறீர்கள்? :-)
>

ஒரு உதாரணம் ஞானசம்பந்தர்..

அன்புடன்
ஆமாச்சு

Aravinda Lochanan

unread,
Nov 1, 2007, 7:53:30 AM11/1/07
to minT...@googlegroups.com
On 11/1/07, ஆமாச்சு <shrira...@gmail.com> wrote:
>
> > யாரைச் சொல்கிறீர்கள்? :-)
> >
>
> ஒரு உதாரணம் ஞானசம்பந்தர்..

அப்படிப்போடு அருவாளை! :-)

ஞான சம்மந்தருக்கு செவ்விலக்கியப் பரிட்சயமில்லை என்று வேறு யாரிடமாவது
சொல்லிவிடாதீர்கள்! [பருமொழி இடுகையை இன்னொருமுறை வாசியுங்கள்.
புரிந்துவிடும்!]

அலோ!

Thamizth Thenee

unread,
Nov 2, 2007, 12:03:12 AM11/2/07
to மின்தமிழ்
ஆமாச்சு அவர்களே நம் நாட்டில் தமிழர்களும் தமிழும் படும் பாட்டினைப்
பாருங்கள்
ஒரு தாய் கவனிக்காத குழந்தை,
ஒரு விவசாயி கவனிக்காத நிலம்
ஒரு முதலாளி கவனிக்காத தொழிற்சாலை
இவை அனைத்தும் வளர்ந்ததாக சரித்திரமே இல்லை
நம் தமிழ் மொழிக்கு,நம் மக்களுக்கு
தாய் நம் அரசாங்கம் ,ஆகவே இந்த அரசாங்கம் என்னும் தாய் நாமைக் கவனிக்க
வேண்டும்
கீழுள்ள கட்டுறையின் நோக்கமே அதுதான்

அன்புடன்
தமிழ்த்தேனீ
31/11/2007


தமிழ் நண்பர்களே தேர்தல் வரப் போகிறது
அதற்காக வாக்குப் பதிவாளர் அட்டை
தயாரிக்கிறது அரசாங்கம்
இது வரை மூன்று முறை வீட்டுக்கு
வந்து புகைப்படம் வாங்கிக் கொண்டு போனார்கள்
ஆனால் என் மருமகளுடைய வாக்காளர் அட்டையில்
வேறு யாருடைய புகைப்படமோ ஒட்டி கொடுத்தார்கள்,
அதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்தேன்
,மீண்டும் வேறு ஒரு புகைப்படம் வேண்டுமென
கேட்டார்கள் கொடுத்து அனுப்பினேன்
ஆண்பால் பெயர் கொண்ட வாக்காளர் அட்டையில்
பெண்ணின் புகைப்படம் படம், பெண்பால் பெயர் கொண்ட வாக்காளர் அட்டையில்
ஆணின் புகைப்படம், முதியோர் வாக்காளர் அட்டையில் இளைஞ்ஞர்களின்
புகைப்படம்,எப்படி இவ்வளவு தவறுகள்
நிகழ்கிறது,இதெற்கெல்லாம் யார் காரணம் ....!!?

ஏற்கெனெவே நாங்கள் அனைவரும் எங்கள் வீட்டிலிருந்து
அவர்கள் அழைப்பை ஏற்று ஒரு பள்ளிக்கு சென்று
பணியில், கல்லூரிகளில் விடுப்பு எடுத்துக் கொண்டு
வரிசையில் வெய்யிலில் கால் கடுக்க நின்று
புகைப்படம் எடுத்துக் கொண்டோம்
அது என்னவாயிற்று என்றே தெரியவில்லை
அதற்குப் பிறகு இவ்வளவும் நிகழ்ந்து,மீண்டும்
ஒரு அறிவிப்பு காகிதம் கொடுத்திருக்கிறார்கள்
அதில் மீண்டும் பொது மக்கள் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து,
முகவ்ரி ஆதாரத்துடன் வர வேண்டும் என்று
குறிப்பிட்டு இருக்கிறார்கள்,அதுவும் பற்றாக் குறைக்கு
,குறிப்பிட்ட தினத்திலிருந்து ,ஏழு தினங்களுக்குள் வராவிட்டால்
பெயரை நீக்க ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது
என்றும் கேட்கிறார்கள்…!!!!!!?

தேர்தலில் நிற்கும் அவர்களுக்கு வாக்களிக்க
ஒரு வாக்காளர் அட்டை பொதுமக்கள்
வாங்கிக் கொள்ள இத்தனை பாடு படவேண்டுமா....?
பாவம் வயதான மக்கள்,
உதவி செய்து அழைத்துக் கொண்டு
போகக்கூட ஆளில்லாத மக்கள்,
பாவம் விடுப்பு எடுக்க வழியில்லாத
பணி செய்வோர்,
பள்ளிக்கூடங்கள் ,மருத்துவ மனைகள்
இன்னும் அவசரகால உதவித் துறையில்
வேலை செய்வோர் அத்துணை பேரும் பாவம்
சரி நம் தலைஎழுத்து என்று மனதைத் தேற்றிக் கொண்டு
அவர்கள் கொடுத்த கடிதத்தை படித்துப் பார்த்தேன்

நம் அரசாங்கத்தில் தமிழை வளர்க்கப் ,
எத்தனையோ நல்ல முயற்ச்சிகள் எடுக்கிறார்கள்
தமிழ் நாடு ,தமிழ் மக்கள்,தமிழ் நம் தாய் மொழி
அப்படிப்பட்ட நிலையில்


அவர்கள் கொடுத்த கடிதத்தில்
இருக்கும் வாசகம் பார்த்து அதிர்ந்தேன்

,முதல் வாக்கியமே
தாங்கள் சாதாரணமாக வசித்து வருவது அற்றுப் போய்விட்டது என்ற
அடிப்படையில்
உங்கள் பெயர் நீக்க கருதப்பட்டுள்ளது
எனவே தற்போது 1950 ஆம் ஆண்டு
மக்கள் பிரநிதிநித்துவ சட்டம் விதி22(சி)-யின் கீழ் வழங்கப்பட்டுள்ள
அதிகாரங்கனைக் கொண்டுமேற் சொன்னவாறு உங்கள் பெயரை நீக்க
ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு,
கீழே குறிப்பிட்டுள்ள தேதியிலிருந்து ஏழு தினங்களுக்குள் தங்களுடைய
பதில் எனக்கு வந்து சேர வேண்டும்.


ஏன் இப்படி யாருடைய தவறு ,யாருடைய அலட்ஷியம்
நம்மை இத்தனை பாடு படுத்துகிறது
எனக்குப் புறியவே இல்லை
உங்களுக்காவது புறிகிறதா என்று பாருங்கள்

அவர்கள் கொடுத்த கடிதத்தின் நகல் எடுத்து அனுப்பி இருக்கிறேன்,
இணைக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ


On 10월28일, 오후10시35분, ஆமாச்சு <shriramad...@gmail.com> wrote:
> கற்றது தமிழ், தமிழ் எம் ஏ பார்த்துட்டு வரேன் :-)
>

> இதைப் பாருங்க :http://amachu.net/blog/?p=68(நானும் இந்தத் துறை தான்

ஆமாச்சு

unread,
Nov 2, 2007, 12:16:49 AM11/2/07
to மின்தமிழ்
On Nov 1, 4:53 pm, "Aravinda Lochanan" <en.amud...@gmail.com> wrote:
>
> அப்படிப்போடு அருவாளை! :-)
>
> ஞான சம்மந்தருக்கு செவ்விலக்கியப் பரிட்சயமில்லை என்று வேறு யாரிடமாவது
> சொல்லிவிடாதீர்கள்! [பருமொழி இடுகையை இன்னொருமுறை வாசியுங்கள்.
> புரிந்துவிடும்!]

திரு - குரு இரண்டு ஞானசம்பந்தர் உண்டு

தருமையாதீன தோற்றுவித்தவர்..

பலர் கற்றுத் தேர்வார்கள்..

சிலர் கற்பிக்கவேப் பிறப்பார்கள்..

இவர்கள் இத்தகையோர்..

ஆமாச்சு

unread,
Nov 2, 2007, 3:17:59 AM11/2/07
to மின்தமிழ்
On Nov 2, 9:03 am, Thamizth Thenee <rkc1...@gmail.com> wrote:
> நம் தமிழ் மொழிக்கு,நம் மக்களுக்கு
> தாய் நம் அரசாங்கம் ,ஆகவே இந்த அரசாங்கம் என்னும் தாய் நாமைக் கவனிக்க
> வேண்டும்

அது நாம் தான் ;-)

மதுரை, உறையூர், தஞ்சை எல்லாம் போய் என இருந்து இன்று மொத்தமும்
சென்னைக்குக் கீழ் வந்து.. இது எல்லாத்துக்கும் மேல மொத்த பாரத்தை
பாரதத்தின் மேல போட்டு மையப் படுத்தி நம்மல நாமலே கஷடப்படுத்திக்
கிட்டிருப்போம்..

போன வாரம் கிராமத்துக்கு போயிருந்தேன்.. அறுபது வருஷம் கழித்து
தெருவுக்கு தார் சாலை வந்திருக்கு.. பாருங்க நான் வருமான வரி கட்டறேன்..
என்ன மாதிரி நிறைய பேர்.. விவசாயமும் நெசவும் எங்க கிராமத்து வருமானம்..
இதன் பொருட்டு இவ்வணிகர்களும் ஆடிட்டரை வச்சு சரி செஞ்சது போக நிச்சயம்
ஏதோ கட்டுவாங்க.. இந்ந வருமானத்தை எங்க கிராமத்துக்கே செலவு செய்திருந்தா
எத்தனையோ வருடத்துக்கு முன்னாடி ரோடு போட்டிருக்கலாம்..

நாங்க தமிழக அரசைக் கேட்க.. அது மத்திய அரசை நோக்க.. மார்ச் 31 சிதம்பரம்
பொட்டியத் தொறந்து என்ன சொல்றாருன்னு வாய் பிளந்து வருடா வருடம் பார்க்க
வேண்டியிருக்கு..

நான் சொல்றது சரியான்னு தெரியாது.. பெருசா எகனாமிக்ஸ் படிக்கல.. ஆனால்
உணர்ந்தது உரைத்தேன்.. நான் கட்டும் வரி என் கிராமத்துக்குப் போய்ச்
சேருமா?

இரவா

unread,
Nov 2, 2007, 5:07:04 AM11/2/07
to minT...@googlegroups.com
வருமான வரி வாங்குவது, நடுவணரசு. நில வரி வாங்குவது மாநில அரசு. வீட்டு வரி வாங்குவது ஊராட்சி.  இதில், எந்த வரியைக் கொண்டு உங்கள் ஊருக்குச் சாலை போடுவது?
 
ஓவ்வொருவரும் உங்களைப் போலவே கேட்கவாரம்பித்தால், உங்கள் கிராமம் மட்டுமல்ல, ஊரிலுள்ள எந்த கிராமமும் முன்னேறாது. அந்தந்த கிராமத்தின் வருவாயைக் கொண்டு எந்த கிராமத்தையும் முன்னேற்ற முடியாது.
 
நகரவாசிகள் கோடிக்கணக்கில் கட்டுகின்றார்களே, அந்த வருவாயிலிருந்து தான் கிராமங்களை முன்னேற்ற முடியும்.
 
இது நாள் வரை உங்கள் கிராம முன்னேற்றம் தடைப்பட்டிருந்தது ஏன் என்று சிந்தித்தோமென்றால், கிராமமுன்னேற்றத்திற்காக ஒதுக்கப் படுகின்ற தொகையில் பெரும்பகுதியை, ஊராட்சி மன்றத்தலைவர் தன் கிராமத்திற்கோ அல்லது வேறு கிராமத்திற்கோ செலவு செய்திருக்கலாம்.
 
ஆண்டு தோறும் கிராம வளர்ச்சிக்காக ஒதுக்கப் படுகின்ற தொகை அதிகம். அது எங்கே போகிறது என்று விபரம் தெரிந்தவர்கள் கண்காணித்துச் செயல்படுத்தத் தூண்ட வேண்டும். அல்லது தட்டிக் கேட்க வேண்டும்.
 
உதாரமாக, ஆண்டுதோறும் மலையின மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப் படுகின்ற கோடிகள், என்ன ஆகிறது என்றே தெரியாது. அத்தொகை மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு அருகிலுள்ள கிராமம், நகரம் ஆகிய வளர்ச்சிக்குச் சென்று விடும். சிலர் வாய்க்குள்ளும் போய்விடும்.

 

ஆமாச்சு

unread,
Nov 2, 2007, 6:22:45 AM11/2/07
to மின்தமிழ்
On Nov 2, 2:07 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> வருமான வரி வாங்குவது, நடுவணரசு. நில வரி வாங்குவது மாநில அரசு. வீட்டு வரி
> வாங்குவது ஊராட்சி. இதில், எந்த வரியைக் கொண்டு உங்கள் ஊருக்குச் சாலை
> போடுவது?
> ஓவ்வொருவரும் உங்களைப் போலவே கேட்கவாரம்பித்தால், உங்கள் கிராமம் மட்டுமல்ல,
> ஊரிலுள்ள எந்த கிராமமும் முன்னேறாது. அந்தந்த கிராமத்தின் வருவாயைக் கொண்டு
> எந்த கிராமத்தையும் முன்னேற்ற முடியாது.
>

தாங்கள் நான் சொல்ல வருவதை புரிந்துக் கொள்ளவில்லை அல்லது நான் சரியாக
விளக்கவில்லை! மையப் படுத்துவதில் உள்ள சிக்கலைச் சொன்னேன். state list,
central list, concurrent list மூன்றும் உண்டே!

பொறுப்பை, பாரத்தை ஒரு அமைப்பின் மீது மையப் படுத்துவதால் ஏற்படும் சுமை
பெரிதாகத் தோன்றுகிறது. தமிழ் தேனி அரசை(யே) காட்டியதால் அதிலுள்ள
சிக்கலை விளக்க முற்பட்டேன்.

> நகரவாசிகள் கோடிக்கணக்கில் கட்டுகின்றார்களே, அந்த வருவாயிலிருந்து தான்
> கிராமங்களை முன்னேற்ற முடியும்.
>

கொஞ்சம் முரண்படுகிறேன்.

ஆனால் இத்தலைப்பு இத்தறிக்கு இது பொருந்தாது. இதனைத் துவக்கியது அரசை
மட்டும் பொறுப்பாக்குவது கூடாது எனச் சொல்லவே.

ஆனால் இது குறித்து ஆராய http://dharampal.net உகந்த தளமாக
பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்,
ஆமாச்சு.

Thamizth Thenee

unread,
Nov 2, 2007, 11:53:43 PM11/2/07
to மின்தமிழ்
திரு ஆமாச்சு அவர்களே அரசைக் குறை சொல்லுவது என் நோக்கமல்ல, ஆனால் நம்மை
ஆளும் அவர்கள் நமக்கு செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்பில் என்ன தவறு
இருக்க முடியும்,,,?

உண்மையாகச் சொன்னால் பல திட்டங்கள் அரசு போட்டாலும் அவை நிறைவேற்றப்
படும்போது ,ஏற்படும் சிக்கல்களையும்
அதற்குறிய அதிகாரிகள்,உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் ,அல்லது
அத்திட்டத்தின் அவ்வப்போதைய நிலைமையை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்
எத்தனை திட்டங்கள் ஒப்புதல் ஆணை போடப்பட்ட பின்னரும் காகித
வடிவிலே ,நிறைவேற்றப் படாமல் உள்ளது ,
அல்லது கால தாமதம் ஆகிறது,
அடியேனும் 60 ஆண்டு காலமாக அரசின் செயல் பாடுகளைக் கவனித்து
வருபவன் ,பொதுமக்களில் ஒருவன் என்கிற முறையில்
அதனால்தான் சொல்லுகிறேன்
மக்கள் நலத்திட்டங்கள் மக்கலை சென்றடைகிறதா முறையாக
என்று பார்ப்பதும் அர்சின் வேலைதான்
தரை மட்டமான ஜப்பான் நிமிர்ந்துவிட்டது, பாலைவனம்க்க இருந்த நாடுகள்
பசுமைய்யய் விட்டன,
ஆனால் பசுமையாய் சுபிக்ஷ்மாய் இருந்த நம்நாடு
இப்போது சரியான தார்ச்சாலைகள்,கூட இல்லாமல்
எஅத ஒரு வசதியும் இல்லாமல் ,வரி மொத்தம் கட்டினாலும் அந்த வரிப்பணத்தில்
பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல்,மேலும் பொது மக்களை
துன்புறுத்துகிற விதமாகவே போடப்படும் சட்டங்கள்,உதாரணத்துக்கு தலைக்
கவசம்,மக்கள் மேல் உன்மையிலேயே அக்கறை இருக்குமானால் சட்டங்களை
தீர்மானமாக போடவேண்டும் ,அவற்றை கடைப் பிடிக்க மக்களை
ஊக்குவிக்கவேண்டும்,அதை விடுத்து உறுதியே இல்லாமல்,
போடவேண்டும் ,போடலாம் ,போட்டாலும் போடலாம் போடாவிட்டாலும் பரவாஇல்லை
என்றெல்லாம் சட்டம் போட்டுவிட்டு,அதை சாதகமாக காவல்துறையினர் உபயோகிப்பதை
தடுக்க வேண்டும்,இப்போது காவல் துறையினர் அவர்களுக்கு இஷ்டம் இருந்தால்
கண்டுகொள்ள மாட்டார்கள்,அவர்களுக்கு
தேவையானால் சட்டத்தை நீட்டுவார்கள் என்னும் நிலை உள்ளது
எல்லா நாட்டிலும் வருமான வரி வாங்குகிறார்கள்,இல்லையென்று
சொல்லவில்லை,ஆனால் அரசு வாங்கும் வருமான வரியில் சில சதவிகிதமாவது மக்கள்
நலனுக்குப் போகிறது,நம் நாட்டில் அப்படி நடக்கவில்லையோ என்கிற என்
ஆதங்கம் உண்மைதான்
ஆளுபவர் நேர்மையில் திடமாக இருந்தால்
அனைத்து திட்டங்களும் சரியாக செயல் படும் ,அல்லது
நேர்மை தவறும் இடங்களை சரி செய்து நல்ல திட்டங்களை
மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டியது அரசின் கடமையே
ஆகவே நடத்துனரைத்தான் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது
பொறுப்பாளர்களைத் தானே கேட்க முடியும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

> ஆனால் இது குறித்து ஆராயhttp://dharampal.netஉகந்த தளமாக

Aravinda Lochanan

unread,
Nov 3, 2007, 1:38:45 AM11/3/07
to minT...@googlegroups.com
On 11/3/07, Thamizth Thenee <rkc...@gmail.com> wrote:
> தரை மட்டமான ஜப்பான் நிமிர்ந்துவிட்டது, பாலைவனம்க்க இருந்த நாடுகள்
> பசுமைய்யய் விட்டன,
> ஆனால் பசுமையாய் சுபிக்ஷ்மாய் இருந்த நம்நாடு
> இப்போது சரியான தார்ச்சாலைகள்,கூட இல்லாமல்
> எஅத ஒரு வசதியும் இல்லாமல் ,வரி மொத்தம் கட்டினாலும் அந்த வரிப்பணத்தில்
> பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல்,


http://www.kumudam.com

தளத்தில் "லகலகலக" எனும் வரிசையில் என்.எஸ்.கிருஷ்ணன் - மதுரம் அளிக்கும்
ஒரு துண்டு இருக்கிறது. கட்டாயம் எல்லோரும் பார்க்க வேண்டும். (பதிவர்கள்
மட்டுமே பார்க்கமுடியும், எனவே பதிந்து கொள்ளுங்கள்) சுதந்திரம் என்பது
ஒன்று சுபீக்ஷம் என்பதொன்று. 50க்கும் 60க்கும் இடையில் வரக்கூடிய
சுபீக்ஷத்தைக் கனவு காண்கிறார். இந்தியா பலதுறைகளில் தன்னிறைவு
கொண்டுள்ளது. ஆயினும் என்.எஸ்.கிருஷ்ணனின் பல் கனவுகள் இன்னும் கனவாகவே
உள்ளன.

அலோ!

Thamizth Thenee

unread,
Nov 4, 2007, 1:44:26 AM11/4/07
to மின்தமிழ்
திரு இரவா அவர்களே
நாம் திருக்குறளைப்பற்றி
மடல் எழுதிக் கொண்டிருக்கும் போதே
மனதில் தோன்றிய இந்தக் கவிதையை
எழுதினேன்
படித்துப் பாருங்கள்

முப்பால் தமிழ்ப்பால் முனைப்பால்
ஈரடிக் குறள்பால் வைத்தான்
ஓரடியோ, ஈரடியோ உலகிற்கே
தேனடிகள் வைய்யகமே போற்றடிகள்
வள்ளுவன் தான் அடிகள்
பல்லடிகள் ஆய்ந்தெடுத்து தேடித்தேடி
ஆழ்ந்தெடுத்து ஆய்வுதனை தோய்ந்தெடுத்து
இட்டு வைத்தான் ஈரடியாய்
ஓரடியாய் பூமிதனை,மாற்றடியாய் வான்வெளியில்
மூவடியாய் வாமனனே தேர்ந்தெடுத்தான்
மஹாபலியின் தலைமேல்
ஈரடியால் உலகளக்க முடியாதா வாமனனால்
இரடியால் வள்ளுவன் தான் உலகளக்க
ஒரு சந்தர்ப்பம் அளிக்கத்தானே தானே
மூவடியை தேர்ந்தெடுத்தான் வாமனனும்
வள்ளுவனோ ஈரடியால் ஈரேழுலகும்
சுலபமாய் அளந்திட்டான், சுருக்கமாய் முடித்திட்டான்
தலையாய சீரடிகள் வள்ளுவனின் ஈரடிகள்
அறத்துப் பால், பொருட்பால்,காமத்துப் பாலென்று
முப்பால் வைத்தான் தமிழ் முனைப்பால் வைத்தான்
முதற்பால், புறந்தள்ளி , இடைப்பால் அகந்தள்ளி
கடைப்பால்என்னும் காமத்துப்பால்-மட்டுமதை
முனைப்பால் கொண்டு முயங்கும், மாதரரே
முதற்பால் முதலில் கொள்வீர்,
நிலையில்லாப் பால் இடைப்பால்
உழைப்பால் வரும்,போகும்
கடைப்பால் காமத்துப்பால்,கடையில் வரும்
முதற்பால் இடைப்பால் ஏற்றமோடு
நாம் கொண்டால்
தானே வரும் களிப்பால் ,
கடைப்பால் காமத்துப்பால்


அன்புடன்
தமிழ்த்தேனீ


On Oct 31, 3:15 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:

> > ஆயம்: thami...@googlegroups.com- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -

இரவா

unread,
Nov 4, 2007, 2:15:26 AM11/4/07
to minT...@googlegroups.com
அப்பப்பா! அனைத்துவகைப் பாலும் அணிவகுத்துள்ளன.  இதுபோதில், "வள்ளுவத்தின் வீழ்ச்சி" என்றொரு நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
வள்ளுவம், ஆசீவக நூல் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஞான  நூல் என்றும் உடலியல் நூல் என்றும் கூறுகின்றனர். அத்தரவுகளைத் திரட்டிக் கொண்டிருக்கின்றேன்.
விரைவில், வியப்பான செய்திகள் வெளிவரும்.

--

Thamizth Thenee

unread,
Nov 4, 2007, 4:19:09 AM11/4/07
to மின்தமிழ்
இ ர வாசுதேவன் அவர்களே
உங்கள் தமிழ்குயில் பக்கம் பார்த்தேன்
அடடா எவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறிர்கள்
உங்கள் பாக்கம் பார்க்கும் போது
மிகவும் பெருமையாக இருக்கிறது
உங்கள் வாழ்க்கை நடைமுறை கூட
மிகவும் நேர்மையாக,நல்ல குறிக்கோளுடன்
அமைத்துக் கொண்ட விதம் என்னக் கவர்ந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ

On Nov 2, 2:07 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:

> வருமான வரி வாங்குவது, நடுவணரசு. நில வரி வாங்குவது மாநில அரசு. வீட்டு வரி
> வாங்குவது ஊராட்சி.  இதில், எந்த வரியைக் கொண்டு உங்கள் ஊருக்குச் சாலை
> போடுவது?
>
> ஓவ்வொருவரும் உங்களைப் போலவே கேட்கவாரம்பித்தால், உங்கள் கிராமம் மட்டுமல்ல,
> ஊரிலுள்ள எந்த கிராமமும் முன்னேறாது. அந்தந்த கிராமத்தின் வருவாயைக் கொண்டு
> எந்த கிராமத்தையும் முன்னேற்ற முடியாது.
>
> நகரவாசிகள் கோடிக்கணக்கில் கட்டுகின்றார்களே, அந்த வருவாயிலிருந்து தான்
> கிராமங்களை முன்னேற்ற முடியும்.
>
> இது நாள் வரை உங்கள் கிராம முன்னேற்றம் தடைப்பட்டிருந்தது ஏன் என்று
> சிந்தித்தோமென்றால், கிராமமுன்னேற்றத்திற்காக ஒதுக்கப் படுகின்ற தொகையில்
> பெரும்பகுதியை, ஊராட்சி மன்றத்தலைவர் தன் கிராமத்திற்கோ அல்லது வேறு
> கிராமத்திற்கோ செலவு செய்திருக்கலாம்.
>
> ஆண்டு தோறும் கிராம வளர்ச்சிக்காக ஒதுக்கப் படுகின்ற தொகை அதிகம். அது எங்கே
> போகிறது என்று விபரம் தெரிந்தவர்கள் கண்காணித்துச் செயல்படுத்தத் தூண்ட
> வேண்டும். அல்லது தட்டிக் கேட்க வேண்டும்.
>
> உதாரமாக, ஆண்டுதோறும் மலையின மக்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப் படுகின்ற
> கோடிகள், என்ன ஆகிறது என்றே தெரியாது. அத்தொகை மலைவாழ் மக்கள் வாழும் பகுதிக்கு
> அருகிலுள்ள கிராமம், நகரம் ஆகிய வளர்ச்சிக்குச் சென்று விடும். சிலர்
> வாய்க்குள்ளும் போய்விடும்.
>

> On 11/2/07, ஆமாச்சு <shriramad...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > On Nov 2, 9:03 am, Thamizth Thenee <rkc1...@gmail.com> wrote:
> > > நம் தமிழ்  மொழிக்கு,நம் மக்களுக்கு
> > > தாய் நம் அரசாங்கம் ,ஆகவே இந்த அரசாங்கம் என்னும் தாய் நாமைக் கவனிக்க
> > > வேண்டும்
>
> > அது நாம் தான் ;-)
>
> > மதுரை, உறையூர், தஞ்சை எல்லாம் போய் என இருந்து இன்று மொத்தமும்
> > சென்னைக்குக் கீழ் வந்து.. இது எல்லாத்துக்கும் மேல மொத்த பாரத்தை
> > பாரதத்தின் மேல போட்டு மையப் படுத்தி நம்மல நாமலே கஷடப்படுத்திக்
> > கிட்டிருப்போம்..
>
> > போன வாரம் கிராமத்துக்கு போயிருந்தேன்.. அறுபது வருஷம் கழித்து
> > தெருவுக்கு தார் சாலை வந்திருக்கு.. பாருங்க நான் வருமான வரி கட்டறேன்..
> > என்ன மாதிரி நிறைய பேர்.. விவசாயமும் நெசவும் எங்க கிராமத்து வருமானம்..
> > இதன் பொருட்டு இவ்வணிகர்களும் ஆடிட்டரை வச்சு சரி செஞ்சது போக நிச்சயம்
> > ஏதோ கட்டுவாங்க.. இந்ந வருமானத்தை எங்க கிராமத்துக்கே செலவு செய்திருந்தா
> > எத்தனையோ வருடத்துக்கு முன்னாடி ரோடு போட்டிருக்கலாம்..
>
> > நாங்க தமிழக அரசைக் கேட்க.. அது மத்திய அரசை நோக்க.. மார்ச் 31 சிதம்பரம்
> > பொட்டியத் தொறந்து என்ன சொல்றாருன்னு வாய் பிளந்து வருடா வருடம் பார்க்க
> > வேண்டியிருக்கு..
>
> > நான் சொல்றது சரியான்னு தெரியாது.. பெருசா எகனாமிக்ஸ் படிக்கல.. ஆனால்
> > உணர்ந்தது உரைத்தேன்.. நான் கட்டும் வரி என் கிராமத்துக்குப் போய்ச்
> > சேருமா?
>
> > அன்புடன்,
> > ஆமாச்சு
>

> --


>    இருக்கும் வரை தமிழ் அணையில்
>                   அன்புடன்

>                       இரவா
>
> வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
> இணையம்:  www.thamizhkkuil.net

இரவா

unread,
Nov 4, 2007, 6:39:20 AM11/4/07
to minT...@googlegroups.com
தமிழ்த் தேனீ


முப்போதும்  என் தாய் மடியில், தான்.


On 11/4/07, Thamizth Thenee <rkc...@gmail.com > wrote:
இ ர வாசுதேவன் அவர்களே
உங்கள் தமிழ்குயில் பக்கம் பார்த்தேன்
அடடா எவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறிர்கள்
உங்கள் பாக்கம் பார்க்கும் போது
மிகவும் பெருமையாக இருக்கிறது
உங்கள் வாழ்க்கை நடைமுறை கூட
மிகவும் நேர்மையாக,நல்ல குறிக்கோளுடன்
அமைத்துக் கொண்ட விதம் என்னக் கவர்ந்தது

அன்புடன்
தமிழ்த்தேனீ


ranga...@gmail.com

unread,
Nov 4, 2007, 3:42:58 PM11/4/07
to மின்தமிழ்
தமிழ்த்தேனீ சரியாகச் சொன்னார். புலவர் தமது இறுக்கமான
மௌனத்தை கைவிட்டு அதிகம் எழுதவேண்டும். இறவா நூல்கள் தருக!

> > ஆயம்: thamiza...@googlegroups.com- Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

Aravinda Lochanan

unread,
Nov 4, 2007, 8:01:16 PM11/4/07
to minT...@googlegroups.com
அடியளந்த பெருமாள்தான்
ஆதிமுதல் "குறள்"
சென்று இங்கு செப்பும்
வள்ளுவனின் "குறள்"
அடியொட்டி வந்ததுவே!*

அலோ!

* தாமரைக் கண்ணான் உலகு - வள்ளுவன்

On 11/4/07, Thamizth Thenee <rkc...@gmail.com> wrote:

Thamizth Thenee

unread,
Nov 5, 2007, 10:04:41 AM11/5/07
to மின்தமிழ்
ஈரடிக் குறள் பற்றி நாம் பேசும்போது
எனக்கு உதயமான சில
தமிழ் வரிகள்
இங்கு இடுகிறேன்

படித்துப் பாருங்கள்

முப்பால் தமிழ்ப்பால் முனைப்பால்
ஈரடிக் குறள்பால் வைத்தான்
ஓரடியோ, ஈரடியோ உலகிற்கே
தேனடிகள் வைய்யகமே போற்றடிகள்
வள்ளுவன் தான் அடிகள்
பல்லடிகள் ஆய்ந்தெடுத்து தேடித்தேடி
ஆழ்ந்தெடுத்து ஆய்வுதனை தோய்ந்தெடுத்து
இட்டு வைத்தான் ஈரடியாய்

ஓரடியாய் பூமிதனை,மாற்றடியாய் வான்வெளியில்
மூவடியாய் வாமனனே தேர்ந்தெடுத்தான்
மஹாபலியின் தலைமேல்
ஈரடியால் உலகளக்க முடியாதா வாமனனால்
இரடியால் வள்ளுவன் தான் உலகளக்க
ஒரு சந்தர்ப்பம் அளிக்கத்தானே தானே
மூவடியை தேர்ந்தெடுத்தான் வாமனனும்
வள்ளுவனோ ஈரடியால் ஈரேழுலகும்

சுலபமாய் அளந்திட்டான், சுருக்கமாய் முடித்திட்டான்
தலையாய சீரடிகள் வள்ளுவனின் ஈரடிகள்
அறத்துப் பால், பொருட்பால்,காமத்துப் பாலென்று
முப்பால் வைத்தான் தமிழ் முனைப்பால் வைத்தான்
முதற்பால், புறந்தள்ளி , இடைப்பால் அகந்தள்ளி
கடைப்பால்என்னும் காமத்துப்பால்-மட்டுமதை
முனைப்பால் கொண்டு முயங்கும், மாதரரே
முதற்பால் முதலில் கொள்வீர்,
நிலையில்லாப் பால் இடைப்பால்
உழைப்பால் வரும்,போகும்
கடைப்பால் காமத்துப்பால்,கடையில் வரும்
முதற்பால் இடைப்பால் ஏற்றமோடு
நாம் கொண்டால்
தானே வரும் களிப்பால் ,

கடைப்பால் காமத்துப்பால்


அன்புடன்
தமிழ்த்தேனீ

> > ஆமாச்சு.- Hide quoted text -

Thamizth Thenee

unread,
Nov 5, 2007, 10:53:08 AM11/5/07
to மின்தமிழ்
ஒரு முறை
அப்போது மத்திய அமைச்சராக இருந்த
திரு பாய் அவர்கள் ஒரு
விளக்கம் அளித்தார்
நம் நாட்டில், அரசு வாங்கும் வரிப்பணத்தில்
20% செலவழித்தாலே நம் நாடு எவ்வளவு சுபிக்ஷமாக இருக்கும்
என்று
அதைப் படித்தால் தெரியும் நம் வரிப்பணம்
எப்படி வீணாகிறதென்று
அது மட்டுமல்ல வருமான வரி அலுவலகத்துக்கு
ஆகும் செலவை விட வரிப்பணம்
மிகவும் சொற்பமாகத்தான் வருகிறது
என்றும் சொன்னார்
அது மட்டுமல்ல வருமான வரித் துறையே தேவை
இல்லை என்றும் சொன்னார்

அன்புடன்
தமிழ்த்தேனீ

Thamizth Thenee

unread,
Nov 6, 2007, 6:20:38 AM11/6/07
to மின்தமிழ்
திரு ஆமாச்சு அவர்களே

ஆகவே இந்த அரசாங்கம் என்னும் தாய்
நம்மைக் கவனிக்க வேண்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

ஆமாச்சு

unread,
Nov 6, 2007, 6:59:49 AM11/6/07
to மின்தமிழ்
>On Nov 6, 4:20 pm, Thamizth Thenee <rkc1...@gmail.com> wrote:
> திரு ஆமாச்சு அவர்களே
> ஆகவே இந்த அரசாங்கம் என்னும் தாய்
> நம்மைக் கவனிக்க வேண்டும்
>

சிறிய அளவிலான நிர்வாக அமைப்பு, அது கிராமமோ நகரமோ, தமது தேவைகள் இது என
தாமே தீர்மானித்து, அதற்கென இயற்றி, ஈட்டி, காத்துக் கொள்ளும் முறை நாம்
விரும்பும் முறை.

தேவைகள் இந்நிர்வாக அமைப்புகளைத் தாண்டும் போது அதனை ஒருங்கிணைத்து
பூர்த்தி செய்து தருவது தாங்கள் சொல்லும் அரசின் பணி.

அந்த அரசும் நாம் தான்..

அன்புடன்,
ஆமாச்சு

http://amachu.net


kg

unread,
Nov 17, 2007, 7:50:58 AM11/17/07
to மின்தமிழ்
தமிழின் மீது பழி சுமத்துவது என்பது அனைவருக்கும் அல்வா சாப்பிடுவது போல
உள்ளது.
கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ) திரைப்படத்தில் கூட இதே அபத்தம் தான்.

> தமிழ் மீது கொண்ட காதலால், தமிழைத் தவிர வேறு எதையும் படிக்க மாட்டேன் என்று
> கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ் படித்தவன் நான். நான் பெற்ற நான்கு பட்டமும்
> தமிழில் (100%) படித்துப் பெற்றவை. ஆனால், நான் என்ன பாடு படுகிறேன் என்று
> என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.

தமிழைக் கற்றதால் பாடு படுவது என்பது ஏற்புடையதல்ல.
ஏனெனில் தமிழ் என்று இல்லை, எதைப் படித்தாலும் பாடு படுவது என்பது
கற்றவரைப் பொருத்தது.
இன்று பொறியியல் படித்துவிட்டு படாத பாடு படுபவர்களைக் கூட காணலாம்.
வாய்ப்புக்கள் இவ்வுலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றன, அவற்றை நாம் எவ்வாறு/
எவ்வளவு
விரைவாக அடையாளம் கண்டு், அவற்றை எப்படி முறையாகப் பயன்படுத்துகிறோம்
என்பதில்
தான் நமது முன்னேற்றம் உள்ளது.
கல்வி ஒரு தவம், நீங்கள் எதைக் கற்றீர்கள் என்பது பிரச்சனையல்ல, எப்படிக்
கற்றீர்கள் என்பதே வெற்றியைத் தீர்மானிக்கிறது. எதைப் படித்தாலும் (எந்த
துறையானாலும்) ஆழ்ந்து ஆராய்ந்து அதில் முழுமையாக புலமை பெற
முயற்சியுங்கள். பிறகு வெற்றி உங்களுக்கே!

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

பழி தமிழ் மீதல்ல, தமிழ் படிப்பவர்கள் மீதே.
(1.)தமிழ் படிப்பவர்கள் தமிழை ஊன்றிக் கற்பதில்லை.
இன்று பல்கலைக்கழக-கல்லூரி அளவில் தமிழ் கற்கும் இளைஞர்களில் எத்தனை பேர்
தமிழ் இலக்கியத்தைக் கற்கிறார்கள்?
அதில் எத்தனை பேர் தமிழ் இலக்கியத்தின் ஏதாவது ஒரு நூலில் "நான்
ஸ்பெஷலிஸ்ட் " என்று கூறும்
அளவில் இருக்கிறார்கள்?
உதாரணமாக புறநானூற்றில் இவர் வல்லவர்,
நற்றிணையில் அவர் வல்லவர் என்று சுட்டும் அளவில் எத்தனை பேர்
தமிழ்நாட்டில் உள்ளனர்.
அட அதை விடுங்கள்,
இன்று தமிழ்ப் பேராசிரியர்களில் எத்தனை பேர் சரியான இலக்கண விதிகள்
தெரிந்தவர்கள்?
எத்தனை பேர் கடிதம் எழுதும் போது ஒற்று மிகும் மிகாது எனத் தெரியாமல்
தடுமாறுகின்றனர்?
லகர,ளகர,ழகர சிக்கல்கள் / ரகர, றகர சிக்கல்கள் / னகர/ணகர/தந்நகர
சிக்கல்கள்
- ஆக பல சிக்கல்கள் அடித்தளத்திலேயே உள்ளனவே!
இன்னும் நிறைய கூறலாம்.

(2.)தமிழ் படிப்பவர்கள் பிற மொழிகளைக் கற்பதில்லை
> தமிழ் மீது கொண்ட காதலால், தமிழைத் தவிர வேறு எதையும் படிக்க மாட்டேன் என்று
> கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ் படித்தவன் நான்.
மற்ற மொழிகளைக் கற்றால் தமிழ் அழிந்துவிடும் என்பது ஏற்புடயதன்று.
மற்ற மொழிகளைக் கற்க யார் உங்களுக்குத் தடைவிதித்தார்கள்?
பாடத்திட்டத்தில் மற்ற மொழிகளைக்கற்க வாய்ப்பில்லையென்றால் என்ன?
பாடத்திட்டத்தின் மீதும் கல்விமுறையின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் பழி
போட்டு தப்பிக்கக் கூடாது.
முயற்சித்தால் நாமே பிற மொழிகளைக்கற்கலாம்.

"தெய்வத்தான் ஆகாதெ னினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்"

நம் இளைஞர்கள் தமிழுடன் ஏதாவது மற்றொரு மொழியிலும் புலமை பெற
முயற்சிப்பதில்லை.
இன்றும் கூட ஆங்கிலம் தெரியாத தமிழ்ப் பேராசிரியர்கள் கல்லூரிகளில்
இருப்பதைக் காணலாம்.இதை தவறு என்று கூறவில்லை. தமிழ் மட்டும் என்பதைத்
தவிருங்கள்.
நமது தமிழின் பழம்பெருமைகளை நாமே பேசுவதால் தமிழுக்கோ, நமக்கோ எவ்வித
உயர்வும் கிடைக்க வழியில்லை. இவற்றில் நேரத்தை வீணாக்காமல்,
தமிழிலக்கியத்தின் அருமை பெருமைகளை உலகறியச்செய்ய வேண்டும்.
அது மற்ற மொழிகளில் புலமைப் பெற்றால் தான் முடியும்.
இன்று மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து மற்ற
மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு
செய்யும் பணிக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது.
நீதித்துறை, தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பிற அரசு சாரா
அமைப்புக்கள்
ஆகியவற்றில் மொழிபெயர்ப்பாளர்களின் தேவை இருக்கிறது.
ஆனால் மொழிபெயர்ப்பு செய்யும் தகுதி வாய்ந்த தரமான மனித வளம் மிகக்
குறைவாக உள்ளது.
இதனை உருவாக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறைக்கு மட்டுமின்றி அனைத்து
தமிழர்க்கும் உண்டு. பிற மொழிக் கல்வி இன்றியமையாதது. ஆனால் இங்கு
நிலவும் ஆங்கில மோகம் மிகவும் ஆபத்தானது. தமிழாசிரியர்களே ஆங்கில மோகம்
கொண்டு தங்கள் பிள்ளைகளை "கான்வெண்ட்" களில் படிக்க வைக்கின்றனர். அதனைப்
பெருமையாகவும் கருதுகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பள்ளிப்
பருவத்திலேயே பிற மொழிகளைக் கற்பிக்க முயல வேண்டும். அதைப் போல
#பிற மொழிக் கலப்பின்றி தமிழில் உரையாடும் பயிற்சி
#பிழையின்றி தமிழ் எழுத/பேச பயிற்சி அளித்தல் வேண்டும்
இவை நல்ல பலனை அளிக்கும்.

தமிழை முறையாகப் பயிலாமல்,
"எனக்கு தமிழ் மட்டும் தெரியும்"
" தமிழ் படித்தேன் வேலை கிடைக்கவில்லை"
" தமிழ் படித்தேன் பாடு படுகிறேன்"
" தமிழ் படித்தவன் 2000 ரூவா சம்பாதிக்கிறான்
கம்ப்யூட்டர் படித்தவன் 2,00,000 ரூவா சம்பாதிக்கிறான்"
போன்ற பேச்சுக்களைத் தவிருங்கள்.

ஆமாச்சு

unread,
Nov 17, 2007, 10:26:43 AM11/17/07
to மின்தமிழ்
On Nov 17, 5:50 pm, kg <kalaig...@gmail.com> wrote:
> தமிழின் மீது பழி சுமத்துவது என்பது அனைவருக்கும் அல்வா சாப்பிடுவது போல
> உள்ளது.
> கற்றது தமிழ் (தமிழ் எம்.ஏ) திரைப்படத்தில் கூட இதே அபத்தம் தான்.
>

படத்தை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம். கொஞ்சம் சொதப்பிட்டாங்க!
நாசூக்கா சொல்ல வேண்டிய விஷயம் இன்னும் நிறைய இருக்கு.

> தமிழைக் கற்றதால் பாடு படுவது என்பது ஏற்புடையதல்ல.

ஆம். உண்மைதான். தமிழகத்தில் கண்டிப்பாக அப்படியொரு நிலை இருக்கக்
கூடாது. மற்ற மாநிலங்களில்/ நாடுகளில் இருக்கலாம்.

> இன்று பொறியியல் படித்துவிட்டு படாத பாடு படுபவர்களைக் கூட காணலாம்.

ம்ம்ம்.. இதற்கு காரணம் யார்? இது தான் ஜனங்களின் விருப்பமாக இருக்க
வேண்டும் எனச் சிந்திக்கும் சில மூளைகள்! தங்களின் டர்ன ஓவர்
காலாண்டுக்கு காலாண்டு கூட வேண்டும் என்பதற்காக.

ஒரு தொழிலை உயர்த்தியும் ஒரு தொழிலை சாதாரணமாகவும் யார் பிரதிபலிக்கச்
செய்கிறார்கள்? உயர்த்தி பிரதிபலிக்கப் படும் தொழில்களை நோக்கி மக்களை
விருப்பமுள்ளவர்களாக்கி ஓட வைத்தி ஒசாமா குண்டு போட்டதும்
வீட்டுக்கனுப்புவது யார்?

> வாய்ப்புக்கள் இவ்வுலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றன, அவற்றை நாம் > எவ்வாறு/ எவ்வளவு
> விரைவாக அடையாளம் கண்டு், அவற்றை எப்படி முறையாகப் பயன்படுத்துகிறோம் > என்பதில்> தான் நமது முன்னேற்றம் உள்ளது.

ஒருவரைத் தோற்கடித்து ஒருவர் முன்னேற்றம் அடையும் மார்க்கம் தான் இதில்
உள்ளது. வலிமையுள்ளவன் தான் வாழவானென்றால் மற்றவர் கதி? சோம்பேரிகளைக்
குறிப்பிடவில்லை.

வலிமையுள்ளவன் ஏன் இன்னொருவனைத் தோற்கடிக்க வேண்டும். வாழவைக்கலாமே!

> கல்வி ஒரு தவம், நீங்கள் எதைக் கற்றீர்கள் என்பது பிரச்சனையல்ல, எப்படிக்
> கற்றீர்கள் என்பதே வெற்றியைத் தீர்மானிக்கிறது. எதைப் படித்தாலும் (எந்த
> துறையானாலும்) ஆழ்ந்து ஆராய்ந்து அதில் முழுமையாக புலமை பெற
> முயற்சியுங்கள். பிறகு வெற்றி உங்களுக்கே!

யாரை வெற்றிக் கொள்ள வேண்டும்?

> பழி தமிழ் மீதல்ல, தமிழ் படிப்பவர்கள் மீதே.
> (1.)தமிழ் படிப்பவர்கள் தமிழை ஊன்றிக் கற்பதில்லை.
> இன்று பல்கலைக்கழக-கல்லூரி அளவில் தமிழ் கற்கும் இளைஞர்களில் எத்தனை பேர்
> தமிழ் இலக்கியத்தைக் கற்கிறார்கள்?
> அதில் எத்தனை பேர் தமிழ் இலக்கியத்தின் ஏதாவது ஒரு நூலில் "நான்
> ஸ்பெஷலிஸ்ட் " என்று கூறும்
> அளவில் இருக்கிறார்கள்?
> உதாரணமாக புறநானூற்றில் இவர் வல்லவர்,
> நற்றிணையில் அவர் வல்லவர் என்று சுட்டும் அளவில் எத்தனை பேர்
> தமிழ்நாட்டில் உள்ளனர்.

அந்தத் துறையில் நான் இல்லை. ஆனா படிப்புன்னா பரிட்சைய பாஸ் பண்றதுன்னு
பள்ளியிலிருந்து எல்லா இடத்துக்கும் பரவி வருகிறது என்பதில் உண்மை
உள்ளது.

முன்பு தமிழ் சான்றோரைத் தேடிச் சென்று தமிழ் படிக்கும் பழக்கம்
இருந்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடன் உ வேசா கற்றார் இப்படி.

அத்தகைய முறைக்கு இன்று அங்கீகாரம் உண்டா?

> அட அதை விடுங்கள்,
> இன்று தமிழ்ப் பேராசிரியர்களில் எத்தனை பேர் சரியான இலக்கண விதிகள்
> தெரிந்தவர்கள்?

எங்க அப்பா ;-)

> மற்ற மொழிகளைக் கற்றால் தமிழ் அழிந்துவிடும் என்பது ஏற்புடயதன்று.

உண்மைதான். கம்பரிலிருந்து, மறைமலை அடிகள் என முந்தைய தலைமுறைகளில்
பெரும்பாலானோர் வடமொழிப் புலமையும் கொண்டோர் தான்.

ஆனால் செங்குன்றத்தை - ரெட் ஹில்ஸ் என்றும், கிழக்கை ஈஸ்ட் என்றும்
கதைத்துக் கொண்டிருந்தால்?

> நம் இளைஞர்கள் தமிழுடன் ஏதாவது மற்றொரு மொழியிலும் புலமை பெற
> முயற்சிப்பதில்லை.

தமிழைக் கற்கன்னு சொன்னா பொருந்தும் :-) முன்னாடி அப்படித் தான்
சொல்லியிருந்தீங்கப் போல!


> அது மற்ற மொழிகளில் புலமைப் பெற்றால் தான் முடியும்.
> இன்று மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து மற்ற
> மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு
> செய்யும் பணிக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது.
> நீதித்துறை, தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பிற அரசு சாரா
> அமைப்புக்கள்
> ஆகியவற்றில் மொழிபெயர்ப்பாளர்களின் தேவை இருக்கிறது.

அப்படியா :-) இணைப்புகள் தாருங்களேன்?

> ஆனால் மொழிபெயர்ப்பு செய்யும் தகுதி வாய்ந்த தரமான மனித வளம் மிகக் > குறைவாக உள்ளது.

உண்மை. எங்கிட்ட ஒரு மூவாயிரம் ஆங்கிலப் பக்கம் இருக்கு :-(

> இதனை உருவாக்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறைக்கு மட்டுமின்றி அனைத்து
> தமிழர்க்கும் உண்டு.

ரொம்பச் சரி

>பிற மொழிக் கல்வி இன்றியமையாதது.

உண்மை. ஆனால் தமிழகத்தில் வாழ்வாதாரம் என்பது அவலநிலை.

>ஆனால் இங்கு
> நிலவும் ஆங்கில மோகம் மிகவும் ஆபத்தானது. தமிழாசிரியர்களே ஆங்கில மோகம்
> கொண்டு தங்கள் பிள்ளைகளை "கான்வெண்ட்" களில் படிக்க வைக்கின்றனர். அதனைப்
> பெருமையாகவும் கருதுகின்றனர்.

பள்ளிக் கூட்த்துக்கெல்லாம் அனுப்பாதீங்க. உங்களுக்கு என்ன தெரியுமோ
அதைத் தான் சொல்லித் தராங்க. உங்க பிள்ளைக்கு நீங்களே சொல்லிக் கொடுத்து
பத்தாவது பிரைவேட்டா பாஸ் பண்ண வைங்க.

அபற்றம் சிறப்பு பயிற்சிக்குப் பார்த்துக்கலாம். :-) சும்மா சோக்கு!

> தமிழை முறையாகப் பயிலாமல்,
> "எனக்கு தமிழ் மட்டும் தெரியும்"
> " தமிழ் படித்தேன் வேலை கிடைக்கவில்லை"
> " தமிழ் படித்தேன் பாடு படுகிறேன்"
> " தமிழ் படித்தவன் 2000 ரூவா சம்பாதிக்கிறான்
> கம்ப்யூட்டர் படித்தவன் 2,00,000 ரூவா சம்பாதிக்கிறான்"

தமிழ் நாட்டில் இது நிச்சயம் அவல நிலை தான்.

இரவா

unread,
Nov 17, 2007, 10:56:38 AM11/17/07
to minT...@googlegroups.com
இந்த பதில் எனக்கா?

தமிழ் படித்தவன், தன்னைப் பாதுகாக்க இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டு மொழி பெயர்ப்பு வேலை செய்ய வேண்டுமா?

நான் படித்தது, பிழைக்க இல்லை. வாழ.
நான் பாடுபடுகிறேன் என்று சொன்னது, வேலை தேடியோ பிழைப்பைத் தேடியோ அல்ல.

என்னை எத்தனை பேர் கேலியும் கிண்டலும் செய்தார்கள், செய்கிறார்கள்! என்பதைக் குறிப்பிடவே.

தமிழ் மருத்துவத்தை  முமையாக ஆய்வு செய்தவன், நான். அது மைய மாநில அரச்சுக்குத் தெரியும்.

மருத்துவ ஆய்வுக்கோ மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கோ நான் தேவைப் படமாட்டேனா?

ஆங்கிலம் படித்து ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதித்து வாழவேண்டும் என்னும் ஆசை எனக்கில்லை.

எனக்குத் தேவையுமில்லை.

எனக்கு நன்றாகத் தமிழ் தெரியும். தமிழ் இலக்கியம் எல்லாம் தெரியும். கேட்போர்க்குச் சொல்லிக் கொடுக்கவும் தெரியும். அதைத்தான் செய்துகொண்டுமிருக்கிறேன்.

தமிழால் கற்ற கல்வி எவர்முன்பும் இரந்து நிற்க எண்ணாது.
--

Tirumurti Vasudevan

unread,
Nov 17, 2007, 11:02:18 AM11/17/07
to minT...@googlegroups.com
On Nov 17, 2007 8:56 PM, ஆமாச்சு <shrira...@gmail.com> wrote:

> தமிழைக் கற்றதால் பாடு படுவது என்பது ஏற்புடையதல்ல.

ஆம். உண்மைதான். தமிழகத்தில் கண்டிப்பாக அப்படியொரு நிலை இருக்கக்
கூடாது. மற்ற மாநிலங்களில்/ நாடுகளில் இருக்கலாம்.
....

கேஜி யும் ஆமாச்சுவும் எழுதியவற்றில் பெரும்பாலும் ஒத்துப்போகிறேன்.
தமிழ் பற்று -சரி
தமிழ் வெறி - சரியல்ல.

சம்பாதிக்க ஏதேனும் கற்று தமிழை அறிவுக்காக கற்கலாம். அப்போது தேர்வுக்காக இல்லாமல் இன்னும் சிறப்பாகவே கற்போம்!
பெரும்பாலான பத்திரிகைகளிலேயே இலக்கணப்பிழைகள் பார்க்கிறேன், குறிப்பாக ஒருமை பன்மை மயக்கம்...

திவா
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

ஆமாச்சு

unread,
Nov 17, 2007, 11:04:05 AM11/17/07
to மின்தமிழ்
> தமிழால் கற்ற கல்வி எவர்முன்பும் இரந்து நிற்க எண்ணாது.
>

ஆம்.

kg

unread,
Nov 18, 2007, 2:41:24 AM11/18/07
to மின்தமிழ்
> ஒருவரைத் தோற்கடித்து ஒருவர் முன்னேற்றம் அடையும் மார்க்கம் தான் இதில்
> உள்ளது. வலிமையுள்ளவன் தான் வாழவானென்றால் மற்றவர் கதி? சோம்பேரிகளைக்
> குறிப்பிடவில்லை.
> வலிமையுள்ளவன் ஏன் இன்னொருவனைத் தோற்கடிக்க வேண்டும். வாழவைக்கலாமே!
> யாரை வெற்றிக் கொள்ள வேண்டும்?
என் கூற்றுக்கு இது சற்றும் பொருந்தாது. நீங்கள் கூறுவது டார்வினிஸம்.
ஆனால் நான் கூறுவது, "நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்"
என்பதே.
இதன் பொருள் அனைவருக்கும் விளங்குமென நினைக்கிறேன்.
நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற்றால்/முன்னேறினால் மற்றொருவர்
தோற்கடிக்கப்படுவார் என்பது தவறு.
பக்கத்து வீட்டுக்காரருக்கு "ப்ரொமோசன்" கிடைச்சா உடனே நாம்
தோற்றுவிட்டதாகுமா?
மற்றொருவரை தோற்கடிக்க முயற்சி செய்யுங்கள் என்று நான் கூறவில்லை, அதற்கு
இது குத்துச் சண்டையுமல்ல.

> தமிழைக் கற்கன்னு சொன்னா பொருந்தும் :-) முன்னாடி அப்படித் தான்
> சொல்லியிருந்தீங்கப் போல!

அப்படிச் சொல்லலியே!
எதைக் கற்றாலும் கசடற கற்க என்பதே அடியேன் கருத்து.

> அப்படியா :-) இணைப்புகள் தாருங்களேன்?
> உண்மை. ஆனால் தமிழகத்தில் வாழ்வாதாரம் என்பது அவலநிலை.

http://www.anukriti.net/
இங்கே கல்லூரி செல்லும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.350/-க்கு செல்போன்
ரீசார்ஜ் பண்ண மட்டும் வாழ்வாதாரம் இருக்கே...இதெப்படி?!

>இந்த பதில் எனக்கா?
இந்த பதில் உங்களுக்கென்று இல்லை,
தமிழ் படித்தால் படாத பாடு பட வேண்டியிருக்கும் என்ற கருத்தைக் கொண்டுள்ள
அனைவருக்கும் பொருந்தும்.

> தமிழ் மீது கொண்ட காதலால், தமிழைத் தவிர வேறு எதையும் படிக்க மாட்டேன் என்று
> கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ் படித்தவன் நான். நான் பெற்ற நான்கு பட்டமும்
> தமிழில் (100%) படித்துப் பெற்றவை. ஆனால், நான் என்ன பாடு படுகிறேன் என்று
> என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.
> நான் பாடுபடுகிறேன் என்று சொன்னது, வேலை தேடியோ பிழைப்பைத் தேடியோ அல்ல.
> என்னை எத்தனை பேர் கேலியும் கிண்டலும் செய்தார்கள், செய்கிறார்கள்! என்பதைக்
> குறிப்பிடவே.

பிறரின் கிண்டல், கேலி போன்றவற்றைத் தாங்கும் நெஞ்சுரம் தமிழ் அளிக்கும்.

> தமிழ் மருத்துவத்தை முமையாக ஆய்வு செய்தவன், நான். அது மைய மாநில அரச்சுக்குத்
> தெரியும்.
> மருத்துவ ஆய்வுக்கோ மருத்துவப் பல்கலைக் கழகத்திற்கோ நான் தேவைப் படமாட்டேனா?
> எனக்கு நன்றாகத் தமிழ் தெரியும். தமிழ் இலக்கியம் எல்லாம் தெரியும்.
> கேட்போர்க்குச் சொல்லிக் கொடுக்கவும் தெரியும். அதைத்தான்
> செய்துகொண்டுமிருக்கிறேன்.
> தமிழால் கற்ற கல்வி எவர்முன்பும் இரந்து நிற்க எண்ணாது.

மிக்க மகிழ்ச்சி.
கிண்டல், கேலி போன்றவற்றைப் புறந்தள்ளி செயற்கரிய செயல்கள் பல புரிவதால்
தானே இன்று பலர் புகழும் நிலைக்கு உயர்ந்துள்ளீர்கள்.

> தமிழ் படித்தவன், தன்னைப் பாதுகாக்க இன்னொரு மொழியைக் கற்றுக்கொண்டு மொழி
> பெயர்ப்பு வேலை செய்ய வேண்டுமா?
> நான் படித்தது, பிழைக்க இல்லை. வாழ.

ஏன் இப்படி சிந்திக்கிறீர்கள்?
மொழிபெயர்ப்பு செய்தல் கேவலமா?
தமிழ் இலக்கியங்களின் தொன்மை, சிறப்பு ஆகியவற்றை நமக்கு நாமே மேடைகளில் /
கருத்தரங்குகளில் முழங்குவதில் என்ன பயன்? உலக அரங்கில் இவற்றைக் கொண்டு
சேர்க்க வேண்டாமா?
தமிழ் படித்தவன், தமிழைப் பாதுகாக்க/ தமிழின் பெருமையை உலகறியச் செய்ய
மற்ற மொழியைக் கற்பதில் என்ன தவறு?
இதில் வீரமாமுனிவர், ஏ.கே.இராமானுஜன், கமில் சுவலபிள் போன்ற அறிஞர்களின்
தமிழ்த் தொண்டு ஈடு இணையற்றது.
இதை நீங்கள்
தமிழுக்குச் செய்யும் தொண்டு அல்லது வாழ்வு அல்லது பிழைப்பு
என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
இதை உங்களுக்காகச் சொல்லவில்லை தமிழ் படித்தால் படாத பாடு பட (கிண்டல்,
கேலி உட்பட) வேண்டியிருக்கும் என்ற கருத்தைக் கொண்டுள்ள அனைவருக்காகவும்
சொல்கிறேன்.

ஆமாச்சு

unread,
Nov 18, 2007, 10:43:10 AM11/18/07
to மின்தமிழ்
On Nov 18, 12:41 pm, kg <kalaig...@gmail.com> wrote:
>
> என் கூற்றுக்கு இது சற்றும் பொருந்தாது. நீங்கள் கூறுவது டார்வினிஸம்.
> ஆனால் நான் கூறுவது, "நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும்"
> என்பதே.
> இதன் பொருள் அனைவருக்கும் விளங்குமென நினைக்கிறேன்.
>

தொடர்பு உண்டு. இந்த அர்த்தத்தில் நீங்க சொல்லனா சந்தோஷம். ஆனா,
தமிழகத்தில் வல்லவன் - ஆங்கிலம் தெரிந்தவன். வாழ வழியில்லாதவன் -
தமிழையோ, தமிழிலோ கற்றவன்?

இப்போ நான் உங்க கிட்ட மடலாடல? நான் சொல்லுறது உங்களுக்கு புரியல? உங்க
செல் பேசி எண் எங்கிட்ட இருந்தா நான் உங்க கூட பேசினா அது உங்களுக்கு
புரியுமா புரியாதா? இதுக்கு பேரு கம்யூனிகேஷனா கன்பிஃயூசனா?

நாட்டுல சொல்றாங்க, நான் ஆங்கிலத்தில பேசினாத் தான் கம்யூனிகேட்டே
பண்றேன்னாம். வல்லவன் யாராகரான் - ஆங்கிலம் தெரிஞ்வன். வக்கில்லாதவன்
தமிழோ தமிழிலோ படிச்சவனாம்!

> நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற்றால்/முன்னேறினால் மற்றொருவர்
> தோற்கடிக்கப்படுவார் என்பது தவறு.
> பக்கத்து வீட்டுக்காரருக்கு "ப்ரொமோசன்" கிடைச்சா உடனே நாம்
> தோற்றுவிட்டதாகுமா?
> மற்றொருவரை தோற்கடிக்க முயற்சி செய்யுங்கள் என்று நான் கூறவில்லை, அதற்கு
> இது குத்துச் சண்டையுமல்ல.

பக்கத்து வீட்டுக் காரர் பத்தி சொல்லலீங்க. நானும் என் நண்பனும்
சேர்ந்து படிச்சோம். எனக்கு அவன் சொல்லிக் கொடுத்தான் நான் அவனுக்கு
சொல்லிக் கொடுத்தேன். எனக்கு அவன் சொல்லிக் கொடுப்பான் நான் அவனுக்கு
சொல்லிக் கொடுப்பேன்.

ஒருநாள் இன்டர்வியூன்னு சொன்னாங்க. ரெண்டு பேரும் அட்டண்டு பண்ணினோம்.
பாருங்க நான் டவுன்ல வளர்ந்தவன். கொஞ்சம் இங்கிபீஸுத் "நல்லா" தெரியும்.
அவன் அப்படி இல்லை. ஆங்கிலம் தெரிஞ்சாலும் தன்னோட கருத்துக்களை சொல்லும்
போது தமிழில் பளிச்சுன்னு சொல்றது அவனோட நேர்த்தி.

இன்டரவியூல நான் செலக்டட். அதாவது எனது "வெற்றி". அவன்? ஒரே இடத்துல
எனது நண்பனை வென்றுவிட்டு நான் முன்னேறுகிறேனா? நான் வெற்றிப் பெற்றதா
மகிழச்சி கொள்வதா? என் நண்பன் தோல்வி அடைஞ்சதா கவலைக் கொள்வதா?

எனக்கு தெரியும் அவனுக்கு திறமை இருக்குன்னு. என்னால அவனுக்கு ஒன்னும்
செய்ய முடியாத கையாலாகாத் தனம். என்ன செய்ய?

நான் வேலைப் பார்க்கறேன். அவன்? இது நாட்டுல நடக்குதா இல்லையா?

மறுபடியும் சொல்றேன் கும்மிடிப் பூண்டிக்கு வடக்கேயும், கன்யாகுமரிக்கு
தெற்கேயும், நாகைக்கு கிழக்கேயும், நீலகிரிக்கு மேற்கேயும் இப்படி ஒரு
நிலை இருப்பது குறித்து எமக்கு அணு அளவும் வருத்தமில்லை.

இடைப் பட்ட தேசம்?

> > தமிழைக் கற்கன்னு சொன்னா பொருந்தும் :-) முன்னாடி அப்படித் தான்
> > சொல்லியிருந்தீங்கப் போல!
>
> அப்படிச் சொல்லலியே!
> எதைக் கற்றாலும் கசடற கற்க என்பதே அடியேன் கருத்து.
>

நல்லது. மகிழ்ச்சி.

> > அப்படியா :-) இணைப்புகள் தாருங்களேன்?
> > உண்மை. ஆனால் தமிழகத்தில் வாழ்வாதாரம் என்பது அவலநிலை.
>
> http://www.anukriti.net/
> இங்கே கல்லூரி செல்லும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.350/-க்கு செல்போன்
> ரீசார்ஜ் பண்ண மட்டும் வாழ்வாதாரம் இருக்கே...இதெப்படி?!
>

1) விஷயம் இந்த தளம் விண்டோஸ் எக்ஸுபுளோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்
பட்டுள்ளது. அதை வேற பெருமையா அடியில் போட்டிருக்காங்க!

2) நாளுக்கு முன்னூற்று ஐம்பது கொடுத்திட்டு, எல்லார் உழைப்பையும்
வாங்கிட்டு காபிரைட் எங்களுக்குன்னு சொல்ற மாதிரி தெரியுது. சரி பட்டு
வராது.

> தமிழ் படித்தவன், தமிழைப் பாதுகாக்க/ தமிழின் பெருமையை உலகறியச் >செய்ய
> மற்ற மொழியைக் கற்பதில் என்ன தவறு?

தமிழ் நூல் ஆங்கிலத்துக்குப் போனா அது ஆங்கிலத்தின் வளர்ச்சி. தமிழுக்கு
நல்ல பெயர். நல்ல நூல் நம்ம நம்ம கிட்ட இருந்தா அதை அவங்களே அதைத் தேடி
மொழிபெயர்ப்பார்கள். குறள், திருவாசகம் மாதிரி.

ஒரு தமிழ் மருத்துவர் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிச்சா அதைப் பற்றி
தமிழில் எழுதினா தானா மத்தவங்க வந்து அதை மொழி பெயர்ப்பார்கள்.

நம்மளோட இன்றையத் தேவை ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் உள்ள "நல்ல"
விஷயங்களை இங்க கொண்டு சேர்ப்பது. பாரதி வார்த்தைல சொல்லணும்னா, எட்டுத்
திக்கும் இருக்கும் தமிழர்கள் கலைச் செல்வங்கள் கொணரந்திங்கு சேர்ப்பது.

இரவா

unread,
Nov 18, 2007, 11:37:10 AM11/18/07
to minT...@googlegroups.com
இது, எனது ஆய்வு நூலைப் பற்றிய மதிப்பீடு. ஆங்கிலம் படித்த தமிழர்கள், இந்நூலை ஆங்கிலத்தில் அல்லது வேறு மேலை மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லுங்கள்! பார்க்கலாம். குழுவில் மடலாடலில் விடுக்கின்ற உதாரெல்லாம் அப்பொது தெரியும்.
 
 
 
தமிழில் மருத்துவ இலக்கியங்கள் - ஓர் ஆய்வு

சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டத்துக்காகப் புலவர் இர. வாசுதேவன் எழுதிய ஆய்வுரை இந்நூல்.

தொடக்கத்திலேயே ஓருண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அதாவது தமிழ் மருத்துவம் எனக் கருதப்படும் சித்த மருத்துவம் பற்றிய இலக்கியங்கள் குறித்த ஆய்வு என்பதோடு மட்டுமமையாமல் சித்த மருத்துவத்தின் பல்வேறு கூறுகளை இந்நூல் விளக்குகிறது. பல வகைகளில் இதனை இருபத்து ஓராம் நூற்றாண்டில் எழுந்த சித்தமருத்துவ முதல் நூல் எனக் கருதலாம்.

தமிழில் "சித்தர்" என்னும் சொல் ஏறத்தாழ 15 நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வந்துள்ளது. சித்தர் என்ற சொல்லுக்கு இயற்கை இகந்த செயல்பாடு, அற்புதம், மனநிறைவு, திடமனம் எனப் பல பொருள் உண்டு. அதாவது மனிதன் புறத்தே உள்ள பொருள்களை மட்டுமல்லாமல் தன் அகத்தே உள்ள மனத்தையும் அடக்கிக் கட்டுப்படுத்தி, மனித சக்திக்கு அப்பாற் பட்ட செயல்களைச் செய்து முடிப்பவர். தமிழில் "அபிதான சிந்தாமணி" கூறுவது போல முதலில் நவசித்தர்கள் இருந்தார்கள். பின்பு பதினெட்டு சித்தர்கள் ஆனார்கள். காலப் போக்கில் நூற்றுக்கணக்கானோர் சேர்க்கப்பட்டனர். இராமலிங்கர், மகாகவி பாரதியாரும் சித்தர் எனக் கருதப் பெற்றனர்.

தமிழகத்தில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் புகமுடியாத மலைகளில், குகைகளில், கானகங்களில் சித்தர்கள் வாழ்ந்திருந்ததாக தவமிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே பொதுவாகச் "சித்தர்கணம்" என்னும் சொல்லாட்சி தமிழில் இடம்பெற்றது. வித்தகச் சித்தர் கணத்துக்கு வாய்த்த அளப்பரிய வலிமை பற்றித் தாயுமானவர் பல பாடல்களில் எடுத்துச் சொல்லியுள்ளார்.

சித்தர் எனப்படுவோர் இந்திய நாடு கண்ட சமணம், பௌத்தம், சைவம் என்னும் சமயங்களில் சிறப்பான இடம் பெற்றுள்ளனர். புத்தர் "சித்தர்" எனப்பட்டார். சமண சமயத்தில் துறவில் மிக உயர்ந்த நிலை அடைந்தவர்களைச் சித்தர், ஆரூகதர்கள், பரமேட்டிகள் என்றனர். சைவத்தில் சிவனைச் சித்தன் எனக் குறிப்பிடுவதும் உண்டு. எனவே "சித்தர் சிந்தனை" இந்தியர், தமிழர்களுக்குப் பொதுவானது எனலாம். இதற்கு நிகராக இஸ்லாமில் சூபி இயக்கமும் கிருத்துவத்தில் மெய்ஞானிகளும் இருந்ததாகக் கூறுவர்.

சித்தர்கள் நம் நாட்டில் குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரை மூவகையாகப் பிரித்து பார்க்கப்படுகின்றனர். முதலாவதாக, இறை நம்பிக்கையில் ஊறித் திளைத்து மனநிறைவு பெற்றவர்கள். இரண்டாவதாக சித்தத்தைச் சிவன் பால் செலுத்திய போதிலும் இயற்கையை எதிர்த்துப் போராடி இயற்கையை வசப்படுத்தி மனித சமூகத்தின் நல்வாழ்வுக்காக இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தியவர்கள். மூன்றாவது இயற்கையை எதிர்த்துப் போராடும் போது கடவுள் நம்பிக்கையில் ஈடுபடாது பொருள் முதல்வாதிகளாக இலங்கியவர்கள்.

இம்முப்பிரிவுகளிலும் மருத்துவர்கள் உண்டு. இந்தப் பாகுபாட்டினை மிக விரிவாக ஆராய்ந்து விளக்கமாக எடுத்துக் கூறுவது இந்நூல். மரபு வழிப்பட்ட இறுக்கமான வைணவமும், சைவமும் அதாவது விசிட்டாத்வைதமும் சைவச்சித்தாந்தமும் சித்தர்களை ஏற்றுக் கொண்டதில்லை. வைதிக சமயங்கள் இவர்களைப் புறத்தவர்களாக, மரபு வழுவியவர்களாக ஒதுக்கி வைத்து வந்துள்ளன. இருப்பினும், புத்தசமயம் வைதிக சமயங்களை ஊடுருவியதோடு அவை மக்களிடையே செல்வாக்குக்குப் பெறச் "சித்த சிந்தனை உணர்வு" காரணம் என்னும் உண்மையைப் பல கோணங்களிலிருந்தும், பல நிலைகளிலிருந்தும் ஆராய்ந்து ஆசிரியர் நிலை நாட்டுவது பாராட்டத்தக்கது.

உலகாயதம் எவ்வாறு சாதாரண மக்களுடைய நல்வாழ்வுக்குத் தேவையான வேளாண்மை அரசமைவு, மக்களாட்சி என்னும் ஜனநாயக மரபுகள் வளரத் துணை செய்ததோ அது போலவே சித்த மருத்துவமும் மக்களுடைய நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றி வந்துள்ளது. பல்லவர், சோழர் காலத்தில் இருந்த ஏராளமான கல்வெட்டுகள் இதனை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றன என்பதனைக் காட்டுகிறார்.

குறிப்பாக "அகத்தியர், பரிபூரணம்" என்னும் மருத்துவ நூல், சித்த மருத்துவம் மேலோர், கீழோர், செல்வர் - வறியவர் என்னும் சமூக வேற்றுமைகளை, குறிப்பாக நால்வருணப் பாகுபாட்டைப் புறம் தள்ளிப் பாமரமக்களுக்காகச் சித்த மருத்துவம் நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதையும் செல்வர் பணம் கொடுத்து மருத்துவம் செய்து கொள்ளும் வசதி படைத்தவர்கள், ஆனால் கீழ்த்தட்டு மக்கள் வறிய நிலையில் இருப்பதால் அவர்களுக்குச் சித்த மருத்துவம் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த நோக்கத்தின் அடிப்படையை உணர்த்தும் பொருட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்கந்தோறும் அரிய செய்திகளும், விவரங்களும் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.

மருத்துவத்தின் தேவை சித்த மருத்துவத்தின் சிறப்பு, உடல்நலம் பேண அடிப்படைத் தேவைகள், நோயற்ற வாழ்வு, நோய்வரின் நோய்நாடி, அதுதணிக்கும் வாய் நாடிச் செய்ய வேண்டிய மருத்துவம், உணவே மருத்துவம், மருந்தே உணவு என்னும் கோட்பாடு, தாவரங்களும் உயிரினங்களும் உலோகங்களும் அதாவது பஞ்ச பூதங்கள் எல்லாம் மனித நலன்களுக்காகப் பயன்படுமாற்றல் ஆகிய எல்லாவற்றையும் மிக அருமையாகத் திரட்டித் தந்துள்ளார் ஆசிரியர்.

சித்த மருத்துவம் எப்படித் தமிழ் நாட்டில் வளர்ந்து வந்துள்ளது என்பதையும் முரண்பாடுகள் - அறுசுவை உணவு, நட்பு, பகை என்பனவற்றையும் அதாவது பொருளை முதலாவதாகக் காணும் கோட்பாட்டில் உணவே மருந்து - மருந்தே உணவு என்னும் அடிப்படையில் பல செய்திகளை நூல் எடுத்துச் சொல்லுகிறது. பல்லவர் காலம் தொடங்கி விஜயநகர மன்னர் காலம்வரை அன்று நிலைத்திருந்த அரசுகள் சித்த மருத்துவத்தை ஊக்குவித்துப் பராமரித்து வந்ததைக் கல்வெட்டு சான்றுகளுடன் நிறுவுவதோடு தஞ்சை மராட்டிய வேந்தரான சரபோஜி வைத்திய நூல்கள் திரட்டுவதற்காக எடுத்து கொண்ட முயற்சிகளைச் சிறப்பாக எடுத்துச் சொல்லுகிறார். மரணமிலாப் பெருவாழ்வு திருமூலர் காலம் தொடங்கி இராமலிங்க அடிகளார் காலம் வரை பேசப்பட்டு வந்துள்ளது. சித்த மருத்துவத்தை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதனைத் தமிழிலுள்ள சித்த மருத்துவ நூல்கள் துணையுடன் ஆசிரியர் சுவைப்பட எடுத்துச் சொல்லியுள்ளார்.

ஐம்பூதங்களை மருந்தாக மாற்றுதல், நாடி வழி வாதம் பித்தம், ஐயம், நோய் தேர்வு செய்தல், வாயுக்கள் தாதுக்கள் இடையே உள்ள தாக்குறவு, நாடி நோய்க்குறிகளை காட்டும் முறைமை, மருத்துவத்தில் சுவை பெறும் நிலைமை, மருந்துத்தேர்வு, உறுப்புகளும் அவற்றுக்கான தனி மருந்துகளும், நிலத்தையொட்டிய பாத்திரங்கள், நோய் நீராடல், உண்கலம், நோய், ஆடை, அகமருந்து, புறமருந்து, அவை செய்யும் முறை என்பன பற்றியெல்லாம் ஆசிரியர் ஆய்ந்து தரும் உண்மைகள்-இன்று வாழும் மக்களுக்கும் தேவைப்படும் செய்திகள் ஆகும். எடுத்துக்காட்டாக இரத்தத்தை உண்டாக்கத் துவர்ப்பு, எலும்பை வளர்க்க உப்பு, தசையை வளர்க்க இனிப்பு, கொழுப்பை உண்டாக்கப் புளிப்பு, நரம்பை வலுவாக்கக் கசப்பு, சுரப்பிகளைச் சீராக்கக் காரம் தேவை என்பன போன்ற செய்திகளை விரிவாகக் கூறியுள்ளார். இத்தகைய பகுப்பாய்வு இன்றைய பல்வேறு பல் மருத்துவ முறைகளிலும் ஏற்கப்பட்டு வருகிறது.

நஞ்சையும் மருந்தாக்குவது சித்த மருத்துவம். மூலிகைகள், அவற்றின் சிறப்பு, மருத்துவப் பயன்கள், மருந்து செய்தல், புடம் போடுதலின் சிறப்பு, அதற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருள்கள், எரிபொருள்களால் செய்யப்படும் மருந்துகள், மருந்து வகைகள், அவை பயன்படும் காலம் (வயது) என்பன பற்றியெல்லாம் தெளிவாக ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார். பல சித்த மருத்துவ நூல்கள் கூறும் செய்திகள் பல இந்த நூலில் சுருக்கமாக எடுத்துக் கூறப்படுகின்றன. இது பாராட்டப் படவேண்டியதாகும். நூலின் சிறப்பான பகுதி சித்தர்கள் மனித சமுதாய நலன் மேம்பட ஆற்றிய தொண்டு பணி பற்றியதாகும். சித்த மருத்துவத்தில் பரிணாம வளர்ச்சி - காலம் தோறும் படிப்படியாக அது வளர்ந்தடைந்த நிலைமையைத் திருமூலர் காலம் முதல் இன்றளவும் அவை பெற்ற மாற்றங்கள் உள்ளிட பல செய்திகளை விரிவாக எடுத்துக் கூறுகிறது. தமிழ் இலக்கியத்தில் சித்தர் நெறி பெறும் பங்கு - சித்துகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா, அதாவது, இயற்கை கடந்த செயல் தன்மையாலும், இடத்தாலும் வேறுபடுவதால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என்பதனை இலக்கியச் சான்றுகளுடன் நிறுவ முற்படுகிறார்.

மரணமில்லாப் பெருவாழ்வை வலியுறுத்தும் சித்த மருத்துவம் செத்தாரை எழுப்புதல் பற்றியும் கூறுகிறது. அதே போது வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சித்தர்கள் சாதி, சமயம் கடந்தவர்கள் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தவர்கள். சித்தர்கள் வகுத்த நெறி வேதங்கள் ஆகா. மக்களுக்கான நல்வாழ்வு, இலக்கியம், ஆனால் பல இடங்களில் சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தும் இலக்கியம் என்பதனைத் தெளிவுபட எடுத்துக் கூறுகிறார். வரலாற்று அடிப்படையில் நோக்குவோமானால், சித்த மருத்துவம் அடித்தட்டு மக்களுடைய தொழிலாக, பணியாக இருந்து வந்துள்ள பான்மையை அறியலாம். அலோபதி முறை மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே பெரும் வாய்ப்புத் தருவதாக வளர்ந்து வந்துள்ளது. ஆனால் உலக மயமாக்கல் என்னும் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் சித்த மருத்துவ நோக்கமும் தன்மையும் மாறிவிடுவதற்கான வாய்ப்புண்டு. இது தவிர்க்கப்பட வேண்டும்.

கடந்த நூற்றாண்டில் சாம்பசிவம் பிள்ளை என்னும் அறிஞர் தொகுத்த சித்த மருத்துவக் களஞ்சியம் முன்னோடி நூல், முனைவர் வாசுதேவன் படைத்துள்ள இவ்வாய்வு நூல் வரும் தலைமுறையினருக்கு அறிவுக் கருவூலமாகச் சித்த மருத்துவர்க்கும் மாணாக்கர்களுக்கும் வழிகாட்டியாக அமையும். வாசகர்களுக்கு இவ் உண்மை புலனாகும்.
 
                                                                                            - ஆர். பார்த்தசாரதி

தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
- ஓர் ஆய்வு

ஆசிரியர் : முனைவர் இர. வாசுதேவன்,
வெளியீடு : பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர்,
சென்னை - 4, விலை : ரூ. 240.00


 

வேந்தன் அரசு

unread,
Nov 18, 2007, 12:10:12 PM11/18/07
to minT...@googlegroups.com
On Nov 18, 2007 11:37 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
இது, எனது ஆய்வு நூலைப் பற்றிய மதிப்பீடு. ஆங்கிலம் படித்த தமிழர்கள், இந்நூலை ஆங்கிலத்தில் அல்லது வேறு மேலை மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழை உலகம் முழுவதற்கும் கொண்டு செல்லுங்கள்! பார்க்கலாம். குழுவில் மடலாடலில் விடுக்கின்ற உதாரெல்லாம் அப்பொது தெரியும்.
 
 
 
இரவா
 
தாகூர் தன் கீதாஞ்சலியை வங்க மொழியில் எழுதினார். பின்னார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். நோபல் பரிசு பெற்றார்.
 
ஆங்கிலம் தெரியாமல் இருந்து இருந்தால்?
 
 
தூய தமிழ் உரையாட வேண்டும் என்றாலும் வடமொழி அறிவு வேண்டும்.
 
இல்லேனா அது சுத்த தமிழாக தான் இருக்கும்
 
 
 
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

ஆமாச்சு

unread,
Nov 18, 2007, 12:43:34 PM11/18/07
to மின்தமிழ்
ஐயா,

திருமூலர் சித்தர்களில் ஒருவர் தானே?

திருவாவடுதுறை ஆதீனம் சமீபத்தில் திருமந்திரத்துக்கு அப்பாற்பட்டு
"திருமந்திர வைத்தியப் பகுதி" எனும் நூலொன்றினைப் பதிப்பித்திருந்தனர்.

இது குறித்து தங்கள் கருத்து?

இரவா

unread,
Nov 18, 2007, 11:50:16 PM11/18/07
to minT...@googlegroups.com
 
 
 
இரவா
 
தாகூர் தன் கீதாஞ்சலியை வங்க மொழியில் எழுதினார். பின்னார் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். நோபல் பரிசு பெற்றார்.
 
ஆங்கிலம் தெரியாமல் இருந்து இருந்தால்?
 
 
தூய தமிழ் உரையாட வேண்டும் என்றாலும் வடமொழி அறிவு வேண்டும்.
 
இல்லேனா அது சுத்த தமிழாக தான் இருக்கும்
 
 
உங்களுக்கு வேண்டியதைக் கற்றுக் கொள்ளுங்கள். நான், பேசவும் எழுதவும் எனக்கு வேண்டிய மொழியைக் கற்றுள்ளேன்.
 
தாகூர் ஆங்கிலம் கற்று, தனது கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, நோபிள் பெற்றது எல்லாம் எனக்குத் தெரியும்.
நோபிள் எப்படிக் கிடைத்தது என்றும் தெரியும்.
 
எனக்கு நோபிள் கொடுக்க வேண்டாம். நோ  பில்  என்றாலே போது.
 
எவரின் உதயையும் பெறாமல், ஆய்வு செய்து நூலாக வெளியிட பல இலட்சம்  செலவாயிற்று. அதெல்லாம் தெரியாது. அதனால் என்ன பயன் என்பதெல்லம் தெரியாது.
 
எனக்கு ஆங்கிலம் தெரிகிறதா? இல்லையா? என்பது, இரயில் பயணிகள் பேசும் பேச்சு.
 
அவன் அது செய்தான் இவன் இது செய்தான் என்று சொல்வதை விடுத்து, நீங்கள் செய்ததைச் சொல்லுங்கள்.
 
தமிழில் உரையாட வடமொழி வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளீர்கள்.
 
அதுவே என்னைக் கேளி செய்வதாகும்.  
 
அந்த நிலை தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழியாடர்களிடம் கூறலாம்.
 
எனக்கு ஒரு அடையாளம், ஒரு வாழ்வியல் முறை இருக்கிறது.
 
தமிழ் படித்தவன், மற்றவர்களால், (அவர்கள் தமிழர்கள் தான்) தனிமைப் படுத்தப் படுகிறான் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.
 
எவராலும் எனக்கு எந்தத் தேவையும் நிறைவடையப் போவதில்லை! அது எனக்குத் தேவையுமில்லை.
 
 
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
 
 

--

வேந்தன் அரசு

unread,
Nov 19, 2007, 8:33:54 AM11/19/07
to minT...@googlegroups.com
On Nov 18, 2007 11:50 PM, இரவா <vasude...@gmail.com> wrote:

 
 
எவராலும் எனக்கு எந்தத் தேவையும் நிறைவடையப் போவதில்லை! அது எனக்குத் தேவையுமில்லை.
 
 
மூக்குக்கு மேல் கோவம் வருவது மட்டும் ரொம்ப தேவை
 
 
தமிழ் மட்டும் படித்தவானாக இருந்தால் இன்று தமிழில் தட்டச்சும்   இகலப்பை படைக்க முடியமா?  ஆல்துஇ தமிழ் தேடுபொறிதான் ஆக்க முடியுமா?
 
 

--

இரவா

unread,
Nov 19, 2007, 9:25:25 AM11/19/07
to minT...@googlegroups.com
திருமூலர், சித்தர்களில் முதன்மையானவர். தென்னகத்தில் சித்த நெறியை மேற்கொண்டவரும் இவரே. சித்தர் மரபு என்றால் அது திருமூலர் மரபையே குறிப்பதாகும்.

திருவாவடுதுறை ஆதீனம், கருத்திருமந்திரம் என்றொரு நூலைப் பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. அதன் மறுபதிப்பே இதுபோதில் வெளிவந்திருக்கலாம். அந்நூல், கரு உற்பத்தி, ஆறு ஆதாரங்கள், நாடிகள் போன்ற செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது.

மேலும், திருமந்திரம் 3000 என்பது ஒரு முழுமையான நூலில்லை. திருமூலர் 8000 என்பதே முழுமையானது. அந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவை 21 நூல்களாகப் பிரித்து வைத்துள்ளனர். பல நூல் சுவடியாகவே இருக்கின்றன.
--

இரவா

unread,
Nov 19, 2007, 9:33:01 AM11/19/07
to minT...@googlegroups.com
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா?  ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.

அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.

பெருமை கொள்ள அதிலொன்றுமில்லை!

நா.கண்ணன்

unread,
Nov 20, 2007, 8:30:22 PM11/20/07
to மின்தமிழ்
அன்பின் இரவா:

இக்கட்டுரையை புத்தக அறிமுகம் என்று விக்கிபீடியாவில் போடலாமே? உங்கள்
புத்தகமுகப்பு படம் இருக்கிறதா?

வைணவம் சித்தர் மரபிற்கு எதிரானது அல்லவே. திருமழிசை ஆழ்வார் சித்தர்
போல் வாழ்ந்தவர்தானே. மேலும் ஆழ்வார்கள் 12 பேரும் ஒருமித்த கருத்தோடு
'திருமால் அடியார்களுக்குள்' சாதி வேற்றுமை பார்த்தல் தாயின் கற்பை
சோதிப்பது போல் என்று சொல்லிப் போனதால் வைணவத்தில் 'சித்தர் மரபு' என்று
தனியாக இல்லாமல் போயிற்று என்று சொல்வார் பேரா.தொ.பரமசிவன்.

நா.கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Nov 20, 2007, 11:05:02 PM11/20/07
to minT...@googlegroups.com
On Nov 19, 2007 9:33 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா?  ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.

அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.
 
உங்கள் கணினியில் இருந்து ஈ கலப்பைக்கு போகி கொண்டாடி விடுங்கள்.
 

இரவா

unread,
Nov 21, 2007, 11:11:06 AM11/21/07
to minT...@googlegroups.com
On 11/21/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


On Nov 19, 2007 9:33 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா?  ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.

அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.
 
உங்கள் கணினியில் இருந்து ஈ கலப்பைக்கு போகி கொண்டாடி விடுங்கள்.
 
 
எனது காணினியிலிருந்து கலப்பையை நீக்கிவிட்டால், தமிழ் ததழ்ந்து விடுமா?
நீக்காமல், உங்கள் ளொள்ளுக்குப் பதில் எழுதிவிட்டால் தமிழ் வலர்ந்து விடுமா?
 
கலப்பை ஒரு எழுதி!
அவ்வளவு தான். எழுதியை வைத்துக் கொண்டால் காவியம் பாடி விடமுடியுமா? கலப்பையை வைத்துக் கொண்டால் உழுது பயிர் வளர்த்து, நெற்களஞ்சியத்தை நிறைத்துவிடமுடியுமா?

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

kg

unread,
Nov 22, 2007, 4:44:54 AM11/22/07
to மின்தமிழ்
> 1) விஷயம் இந்த தளம் விண்டோஸ் எக்ஸுபுளோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்
> பட்டுள்ளது. அதை வேற பெருமையா அடியில் போட்டிருக்காங்க!
விண்டோஸ் எக்ஸுபுளோரரா? நல்லா பாருங்க:
Best viewed with Netscape Navigator 4.0 or Microsoft Internet
Explorer 4.0 (800 X 600 screen resolution)
நெட்ஸ்கேப் நேவிகேட்டர் அல்லது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்னு தானே
போட்டிருக்கு!
இதைப் பெருமைக்காகப் போட்டிருக்கிறார்கள் என்பது தவறு.

நம்ம முனைவர். இரவா கூட "Best viewed on Internet Explorer 6.0 or
above "-ன்னுதான் போட்டிருக்கிறார்கள்
பார்க்க இணைப்பு: http://www.thamizhkkuil.net/

இவ்ளோ பேசுறீங்களே குனு ஓப்பன் சோர்ஸ் அது இதுனு,
இந்தப் http://www.thamizhkkuil.net/profile.html பக்கத்தை உங்ககிட்ட
ஃபயர்ஃபாக்ஸ் இருந்தா அதில திறந்து பாருங்க.
பிரச்சனை என்னன்னு புரியுதா? ஏதாவது படிக்க முடியுதா? முடிந்தால் இதை சரி
செய்யுங்களேன்.
அதையே அவர் தளத்தில் உள்ள "Best viewed on Internet Explorer 6.0 or
above " என்ற தகவலின்படி இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் திறந்து பாருங்க.
இப்ப எப்டி இருக்கு.
தனது தளத்தின் பார்வையாளருக்கு "இப்பக்கம் இந்த உலாவியை குறிக்கோளாகக்
கொண்டு வடிவமைக்கப்பட்டது (அ) இதில் பார்த்தால் நன்றாக இருக்கும்" என்று
தகவல் அளிக்கப்படுகிறது.
இது ஒரு தகவல். அவ்வளவு தான். இதில் பெருமை கொள்ளவோ சிறுமை கொள்ளவோ
ஏதுமில்லை.
நான் ஃபயர்ஃபாக்ஸ் 2.0.0.9 (புதிய) பதிப்பைத் தான் பயன்படுத்துகிறேன் .
ஆனால் சில தளங்கள் Internet Explorer ருக்காக வடிவமைக்கப் பட்டிருக்கும்
அதைப் பார்க்க Internet Explorer தான்

பயன்படுத்துகிறேன். இதற்காக வசைபாடத் தேவையில்லை.

> தமிழ் நூல் ஆங்கிலத்துக்குப் போனா அது ஆங்கிலத்தின் வளர்ச்சி. தமிழுக்கு
> நல்ல பெயர். நல்ல நூல் நம்ம நம்ம கிட்ட இருந்தா அதை அவங்களே அதைத் தேடி
> மொழிபெயர்ப்பார்கள். குறள், திருவாசகம் மாதிரி.

தமிழ் நூல் ஆங்கிலத்துக்கு மட்டும் போனா பத்தாது.
குறள், திருவாசகம் மட்டும் பழந்தமிழ் நூல்களல்ல.

// நல்ல நூல் நம்ம நம்ம கிட்ட இருந்தா அதை அவங்களே அதைத் தேடி
மொழிபெயர்ப்பார்கள். //
அப்ப நம்மகிட்ட நல்ல நூல்கள் இல்லைங்கறீங்க.
என்ன கொடுமை சார் இது?
அப்ப ஏன் பழந்தமிழ் இலக்கியங்கள் இன்னும் முழுமையாக அனைத்தும்
மொழிபெயர்க்கப்படவில்லை?
அவை நல்ல நூல்கள் இல்லையா?

//அதை அவங்களே அதைத் தேடி மொழிபெயர்ப்பார்கள்//
அப்படில்லாம் அவங்களே வந்து செய்வாங்கன்னு பகல் கனவு காணாதீங்க.
உங்களுடைய பண்பாட்டின் பழந்தமிழ் இலக்கியத்தை உலகறியச் செய்யும் ஆர்வம்/
பொறுப்பு உங்களுக்கே இல்லேன்னா மற்ற மொழிக்காரங்களுக்கு எப்படி
இருக்கும்?
எப்படி அவங்க செய்வாங்கன்னு எதிர்பார்க்கிறீர்கள்?
நம்மகிட்ட என்ன இருக்குன்னு நாம தான் உலகிற்குக் கூறவேண்டும்.

பழந்தமிழிலக்கிய இலக்கிய நூல்கள் அனைத்தும் நமது பாரம்பரியச் சொத்து.
அவற்றில் எத்தனை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
எத்தனை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
எத்தனை உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன?
பெரும்பாலான பழந்தமிழிலக்கிய நூல்கள் மொழிபெயர்க்கப்படாமல் தான் உள்ளன.

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஐரோப்பாவில் கூட இப்படித் தான்
ப்ரெஞ்சுக்காரர்களும், செர்மானியர்களும் இருந்தாங்க. தங்கள் மொழியும்
இலக்கியமும் தான் பெரிதுன்னு எல்லாத்தையும் அவங்க மொழியில மட்டும்
எழுதினாங்க.
ஆனால் தங்கள் படைப்பை உலகறியச்செய்ய மொழிபெயர்ப்பு மிக அவசியம்
என்றுணர்ந்து இன்று தங்களது பெரும்பாலான படைப்புக்களை
மொழிபெயர்த்துவிட்டனர்.

வேந்தன் அரசு

unread,
Nov 22, 2007, 2:39:34 PM11/22/07
to minT...@googlegroups.com
On Nov 21, 2007 11:11 AM, இரவா <vasude...@gmail.com> wrote:


On 11/21/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


On Nov 19, 2007 9:33 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா?  ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.

அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.
 
உங்கள் கணினியில் இருந்து ஈ கலப்பைக்கு போகி கொண்டாடி விடுங்கள்.
 
 
எனது காணினியிலிருந்து கலப்பையை நீக்கிவிட்டால், தமிழ் ததழ்ந்து விடுமா?
நீக்காமல், உங்கள் ளொள்ளுக்குப் பதில் எழுதிவிட்டால் தமிழ் வலர்ந்து விடுமா?
 
கலப்பை ஒரு எழுதி!
அவ்வளவு தான். எழுதியை வைத்துக் கொண்டால் காவியம் பாடி விடமுடியுமா? கலப்பையை வைத்துக் கொண்டால் உழுது பயிர் வளர்த்து, நெற்களஞ்சியத்தை நிறைத்துவிடமுடியுமா?
 
இரவா,
 
நீங்கள் காவியம் பாடி விட்டால் தமிழ் வளர்ந்து விடுமா?  ஓலைச் சுவடியில் எழுதி விட்டத்தில் செருகிகொள்ளுங்கள்.
 
குழுமம் இணையம் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லை.
 
நியூட்டனின் இயக்க விதிகளை கொஞ்சம் விளக்கவும்.
 
 

srirangammohanarangan v

unread,
Nov 22, 2007, 2:57:27 PM11/22/07
to minT...@googlegroups.com
இது  என்ன   திருவிளையாடல்   பாண்டியன்   சபை  போல   போய்க்கொண்டே  இருக்கிறது !!   ஆயிரம்  பொற்காசுகள்  எப்பொழுதுதான்   வரப்போகிறதோ 

Kannan Natarajan

unread,
Nov 22, 2007, 3:12:52 PM11/22/07
to minT...@googlegroups.com
தமிழுக்கு அநீதியா! அல்லது தமிழை எளிதாக குறிப்பறிய உருவாகிவுள்ள மென்பொருள்களுக்கு அநீதியா! நடைபெறும் கலந்துரையாடல்,எவ்வகையில் தமிழுக்கு நீதியைப் பயக்கும்?
 
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்;நிரந்துஇனிது,
சொக்குதுல் வல்லார்ப் பெறின். 648 - தெய்வப்புலவர்
 
சொல்லக் கருதிய செயல்களை,வரிசைப்படக் கோத்துக்,கேட்பவர்க்கு(படிப்போருக்கும்) இன்பம் உண்டாகுமாறு சொல்லும் வல்லவரைப் பெற்றால்,உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்ளும்!
 
கண்ணன் நடராசன்

srirangammohanarangan v

unread,
Nov 22, 2007, 3:24:12 PM11/22/07
to minT...@googlegroups.com
'வன்பொருளைப்  பற்றி  மென்மையாகப்  பேசுவதும்  மென்பொருளைப்  பற்றி   வன்மையாகப்  பேசுவதும்   புலவர்களின்   விருப்பம்.   பொறுத்திருந்து   பாரும் ! '--என்று  சொல்லிவிடப்போகிறார்கள் !!

 

nanthan

unread,
Nov 22, 2007, 4:15:26 PM11/22/07
to minT...@googlegroups.com, Kannan Natarajan
அன்புடையீர்
கண்ணனின் மடல் பார்த்ததும் தான் இதுவரை வாளாவிருந்தேனே என வருந்தினேன்.
நண்பர்கள் இரவாவும், வேந்தன் அரசும் (இராஜேந்திரன்?) இப்படியெல்லாம் எழுதலாமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் சுவை ததும்ப அவர்களுக்கிடயேயான மடல்களைப் படித்துப் படித்து இன்புற்றவன் நான்.
அச்சுவை எங்கே?
சங்க இலக்கியங்களும், காப்பியங்களும் கூறும் உன்னத செய்திகளை அற்புதமான விரைவுணவாக ஆக்கியளித்த பெருமக்கள் அல்லவா அவர்கள்.
இந்நிலை தொடரின் எத்துணை இன்பம் இவ்வுலகு பெறும்.

மோதல் தவிர்த்து முழுதாய் தமிழ் இலக்கியத்தில் மூழ்கி எழுக.

நிலன்நாவில் திரிதரும் நீள்மாடக்கூடலார்
புலன்நாவில் புதிது பிறந்துண்ணும் பொழுதன்றோ....

என்ற கலித்தொகைப் பாடலுக்கு பொருள் தந்த பெருமக்களே
புலன்நாவில் புதிது பிறப்பதெப்போ?

அன்புடன்
நந்தன்
சிட்னி

வேந்தன் அரசு

unread,
Nov 22, 2007, 8:17:11 PM11/22/07
to minT...@googlegroups.com
ஆஹா!!
 
திரு நந்தன்
 
இரவாவை சீண்டுவது எனக்கு சந்தனத்தை உரசுவதுபோல்.
 

 
On Nov 22, 2007 4:15 PM, nanthan <nan...@bigpond.com> wrote:
அன்புடையீர்
கண்ணனின் மடல் பார்த்ததும் தான் இதுவரை வாளாவிருந்தேனே என வருந்தினேன்.
 
 
--

இரவா

unread,
Nov 23, 2007, 12:07:21 AM11/23/07
to minT...@googlegroups.com
ஆமாம்! சந்தனம் மனக்கும் என்பதற்காக உரசுவீர்கள். இறுதியில், சந்தனம் தன் தனத்தால் தன்னையே தேய்த்து கொள்ளும். (என் விரல் தான்)
 
கலப்பை (கலம் + பை) யாளராக நாம் இருக்கும் வரை , வேந்தன் போன்ற கொள் முதலாளர்கள் கொள் முதல் செய்வார்கள்

 

இரவா

unread,
Nov 23, 2007, 12:13:06 AM11/23/07
to minT...@googlegroups.com
நாங்கள் பாடி ஓலையில் சுருட்டி வைத்தைத் தேடி எடுத்துச் சென்றவர்கள் எல்லாம் என்னாட்டிற்கு நன்றியைக் கூட சொன்னதில்லை.
 
 

 

Thiruvengada Mani T K

unread,
Nov 23, 2007, 2:18:34 AM11/23/07
to minT...@googlegroups.com
இதே திருவிளையாடல் உதாரணத்தைதான் நானும் எழுத வேண்டும் என நினைத்தேன்.  அரங்கத்தார் எழுதி விட்டார். போதுமே இந்த சச்சரவு. வேந்தன் அரசுக்கும் இரவாவுக்கும் அப்படி யென்ன மனக்கசப்பு. இருவரும் அவரவர் வழியில் சிறந்தவர்கள். தமிழுக்குத் தொண்டாற்ற வந்த பின் தங்களுக்குள் சீண்டல் எதற்கு. சுவையாக இருந்த விவாதம் அலுக்கத் தொடங்கி விட்டது. அரங்கத்தார் அறிவுரையைக் கேளுங்கள்.
முனைவர். திருவேங்கட மணி.

----- Original Message ----
From: srirangammohanarangan v <ranga...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, November 23, 2007 1:27:27 AM
Subject: [MinTamil] Re: தமிழுக்கு அநீதி!

இது  என்ன   திருவிளையாடல்   பாண்டியன்   சபை  போல   போய்க்கொண்டே  இருக்கிறது !!   ஆயிரம்  பொற்காசுகள்  எப்பொழுதுதான்   வரப்போகிறதோ 

On 11/23/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


On Nov 21, 2007 11:11 AM, இரவா <vasude...@gmail.com> wrote:


On 11/21/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com > wrote:


On Nov 19, 2007 9:33 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
கலப்பைக் கட்டை என்று இன்றும் கிராமத்தில் வழக்குவதுண்டு. ஏன் தெரியுமா?  ஏர் ஓட்ட கற்றுக் கொள்ள கரம்பில் ஓட்டிப் பழகுவதற்கு மட்டுமே பயன் படும்.

அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.
 
உங்கள் கணினியில் இருந்து ஈ கலப்பைக்கு போகி கொண்டாடி விடுங்கள்.
 
 
எனது காணினியிலிருந்து கலப்பையை நீக்கிவிட்டால், தமிழ் ததழ்ந்து விடுமா?
நீக்காமல், உங்கள் ளொள்ளுக்குப் பதில் எழுதிவிட்டால் தமிழ் வலர்ந்து விடுமா?
 
கலப்பை ஒரு எழுதி!
அவ்வளவு தான். எழுதியை வைத்துக் கொண்டால் காவியம் பாடி விடமுடியுமா? கலப்பையை வைத்துக் கொண்டால் உழுது பயிர் வளர்த்து, நெற்களஞ்சியத்தை நிறைத்துவிடமுடியுமா?
 
இரவா,
 
நீங்கள் காவியம் பாடி விட்டால் தமிழ் வளர்ந்து விடுமா?  ஓலைச் சுவடியில் எழுதி விட்டத்தில் செருகிகொள்ளுங்கள்.
 
குழுமம் இணையம் எல்லாம் உங்களுக்கு தேவை இல்லை.
 
நியூட்டனின் இயக்க விதிகளை கொஞ்சம் விளக்கவும்.
 
 




Get easy, one-click access to your favorites. Make Yahoo! your homepage.

வேந்தன் அரசு

unread,
Nov 23, 2007, 8:41:59 AM11/23/07
to minT...@googlegroups.com
On Nov 23, 2007 12:13 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
நாங்கள் பாடி ஓலையில் சுருட்டி வைத்தைத் தேடி எடுத்துச் சென்றவர்கள் எல்லாம் என்னாட்டிற்கு நன்றியைக் கூட சொன்னதில்லை.
 
இரவா,
 
அவரக்ள் எடுத்துச்சென்ற ஒரு ஓலையில் மட்டும்தான் எழுதி வைத்திருந்தீர்களா?  வேறு இல்லையா? அதை பதிப்பிக்க்லாம்
 
தமிழ் வளருது என்றால்  அணுவை பற்றியும் அண்டத்தை பற்றியும் தமிழில் கற்றுத் தெளிய வழி வேண்டும்
 
எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். 
 
அணு என்பன் தன்மை யாது?
 
நீங்க சொல்லவில்லை எனில் நான் சொல்வேன்(:

srirangammohanarangan v

unread,
Nov 23, 2007, 9:08:22 AM11/23/07
to minT...@googlegroups.com
அய்யய்யோ   நான்   அறிவுரையெல்லாம்   சொல்லலீங்கோ !    புலவர்களிடம் என்னை   மாட்டிவிட்டுடாதீங்கோ  !!

இரவா

unread,
Nov 23, 2007, 11:37:17 AM11/23/07
to minT...@googlegroups.com
வேந்தன்
 
பந்திக்கு மட்டும் முந்துதல் கூடாது! அரங்கிலும் முந்த வேண்டும். உங்களுக்குத்  தெரியும் என்றால் சொல்லவேண்டியது  தானே? என்னை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
 
நான் சொல்வேன், நீங்கள் சொன்ன பிறகு!

 
On 11/23/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

இரவா

unread,
Nov 23, 2007, 11:43:52 AM11/23/07
to minT...@googlegroups.com
பனை ஓலை ஒன்றல்ல, ஓராயிரமல்ல! ஒன்பது இலட்சம்  ஓலை கிடைத்துள்ளது.  யார் பதிப்பது? யார் செலவு செய்வது?
 
இரண்டு திங்களுக்கு முன்பு  நாகர்கோயிலுக்கு  ஓலையைத் தேடிப் போனேன். அங்கே ஒரு ஆச்சரியம்! இராவணன் இயற்றிய ஒரு நூல் கண்டேன்.  இது நாள் வரை அதுபோல்  கேட்டதுகூட  கிடையாது.  அதை தமிழில் கொண்டுவர  நினைக்கிறேன்.  யார் செலவு செய்வார்?

 
On 11/23/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

வேந்தன் அரசு

unread,
Nov 23, 2007, 11:45:24 AM11/23/07
to minT...@googlegroups.com
On Nov 23, 2007 11:37 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
வேந்தன்
 
பந்திக்கு மட்டும் முந்துதல் கூடாது! அரங்கிலும் முந்த வேண்டும். உங்களுக்குத்  தெரியும் என்றால் சொல்லவேண்டியது  தானே? என்னை ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
 
நான் சொல்வேன், நீங்கள் சொன்ன பிறகு!
 
ஹீ ஹீ எல்லாரும் சண்டை வேண்டாம்னு புத்திமதி சொல்றாங்க. நான் அம்பேல்


 
On 11/23/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


On Nov 23, 2007 12:13 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
நாங்கள் பாடி ஓலையில் சுருட்டி வைத்தைத் தேடி எடுத்துச் சென்றவர்கள் எல்லாம் என்னாட்டிற்கு நன்றியைக் கூட சொன்னதில்லை.
 
இரவா,
 
அவரக்ள் எடுத்துச்சென்ற ஒரு ஓலையில் மட்டும்தான் எழுதி வைத்திருந்தீர்களா?  வேறு இல்லையா? அதை பதிப்பிக்க்லாம்
 
தமிழ் வளருது என்றால்  அணுவை பற்றியும் அண்டத்தை பற்றியும் தமிழில் கற்றுத் தெளிய வழி வேண்டும்
 
எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். 
 
அணு என்பன் தன்மை யாது?
 
நீங்க சொல்லவில்லை எனில் நான் சொல்வேன்(:

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)


                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:   www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com


இரவா

unread,
Nov 23, 2007, 11:46:48 AM11/23/07
to minT...@googlegroups.com
திருவரங்கர்  எதற்கோ  அடி போடுகிறார்!  அது எந்த  அரங்கில்  நடக்கும்?மோ!.



                  அன்புடன்                                          

வேந்தன் அரசு

unread,
Nov 23, 2007, 11:47:38 AM11/23/07
to minT...@googlegroups.com
On Nov 23, 2007 11:43 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
பனை ஓலை ஒன்றல்ல, ஓராயிரமல்ல! ஒன்பது இலட்சம்  ஓலை கிடைத்துள்ளது.  யார் பதிப்பது? யார் செலவு செய்வது?
 
இரண்டு திங்களுக்கு முன்பு  நாகர்கோயிலுக்கு  ஓலையைத் தேடிப் போனேன். அங்கே ஒரு ஆச்சரியம்! இராவணன் இயற்றிய ஒரு நூல் கண்டேன்.  இது நாள் வரை அதுபோல்  கேட்டதுகூட  கிடையாது.  அதை தமிழில் கொண்டுவர  நினைக்கிறேன்.  யார் செலவு செய்வார்? 
 
கலைஞர் கிட்டே மானியம் கேளுங்கள். அவர்தான் தமிழ் வளர்க்கும் ஒரு மாமனிதர்.
 
செம்மொழி கொண்ட சோழன்.

இரவா

unread,
Nov 23, 2007, 11:48:59 AM11/23/07
to minT...@googlegroups.com
இதற்குப்  பெயர்  அம்பேல் இல்லை! எனக்குத் தெரியும்.  உங்கள் நடவடிக்கை.
--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          

இரவா

unread,
Nov 23, 2007, 11:52:04 AM11/23/07
to minT...@googlegroups.com
நீங்கள்  வாங்கித்  தாருங்களேன்.  அதையும் நானே  செய்ய  வேண்டுமென்றால்  நீங்கள் எதற்கு  இருக்கிறீர்கள்?  வேடிக்கைபார்க்கவா?

On 11/23/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

ஆமாச்சு

unread,
Nov 24, 2007, 3:05:24 AM11/24/07
to மின்தமிழ்
On Nov 22, 2:44 pm, kg <kalaig...@gmail.com> wrote:

> நம்ம முனைவர். இரவா கூட "Best viewed on Internet Explorer 6.0 or
> above "-ன்னுதான் போட்டிருக்கிறார்கள்
> பார்க்க இணைப்பு:http://www.thamizhkkuil.net/

இதை அவர் தளத்தை பாரத்த உமனே சுட்டியிருந்தேன் . தறியினைத் தேடிக்
கொள்ளவும்.

>
> தமிழ் நூல் ஆங்கிலத்துக்கு மட்டும் போனா பத்தாது.
> குறள், திருவாசகம் மட்டும் பழந்தமிழ் நூல்களல்ல.
>

நல்லது.

> // நல்ல நூல் நம்ம நம்ம கிட்ட இருந்தா அதை அவங்களே அதைத் தேடி
> மொழிபெயர்ப்பார்கள். //
> அப்ப நம்மகிட்ட நல்ல நூல்கள் இல்லைங்கறீங்க.
> என்ன கொடுமை சார் இது?

"புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" என்பதை விட்டுட்டு "பொய்
சொல்லாமுன்னு" வள்ளுவரே சொல்லியிருக்கருன்னு சொல்றாப்ல இருக்கு.

நான் முழுசா சொன்னது இதுதான்,

///
தமிழ் நூல் ஆங்கிலத்துக்குப் போனா அது ஆங்கிலத்தின் வளர்ச்சி. தமிழுக்கு
நல்ல பெயர். நல்ல நூல் நம்ம நம்ம கிட்ட இருந்தா அதை அவங்களே அதைத் தேடி
மொழிபெயர்ப்பார்கள். குறள், திருவாசகம் மாதிரி.

ஒரு தமிழ் மருத்துவர் ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிச்சா அதைப் பற்றி
தமிழில் எழுதினா தானா மத்தவங்க வந்து அதை மொழி பெயர்ப்பார்கள்.

நம்மளோட இன்றையத் தேவை ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் உள்ள "நல்ல"
விஷயங்களை இங்க கொண்டு சேர்ப்பது. பாரதி வார்த்தைல சொல்லணும்னா, எட்டுத்
திக்கும் இருக்கும் தமிழர்கள் கலைச் செல்வங்கள் கொணரந்திங்கு சேர்ப்பது.
///

இதில் மற்றவர் தாமாக வந்து மொழிபெயர்த்த நூல்களின் உதாரணமும்
சுட்டப்பட்டுள்ளது.

மத்தபடி நீங்க சொல்றது,

உடம்புலேர்ந்து கைய மட்டும் பிச்சிட்டு இதுல உயிரெங்கன்னு கேக்கறாப்ல
இருக்கு!

அன்புடன்
ஆமாச்சு

kg

unread,
Nov 24, 2007, 9:22:01 AM11/24/07
to மின்தமிழ்
// > இதை அவர் தளத்தை பாரத்த உமனே சுட்டியிருந்தேன் . தறியினைத் தேடிக்
> கொள்ளவும். //

தறியா? எதுக்கு?
பொதுவாக எனக்கு எந்த இணையதளத்திலும், அதிலுள்ள தகவல் தான் தேவை.
அத்தளம் எந்த உலாவிக்காக வடிவமைக்கப்பட்டால் எனக்கென்ன?
தகவல் முறையாகக் கிடைத்தால் போதுமே.
(எனக்குன்னு இல்லை எல்லாருக்குமே இது தான் நோக்கமா இருக்கும்னு
நினைக்கிறேன்)

சரி, இந்தப் http://www.thamizhkkuil.net/profile.html பக்கத்தை
ஃபயர்ஃபாக்ஸ்-ல திறந்து பாத்தீங்களா?

// > மத்தபடி நீங்க சொல்றது,
> உடம்புலேர்ந்து கைய மட்டும் பிச்சிட்டு இதுல உயிரெங்கன்னு கேக்கறாப்ல
> இருக்கு! //

நான் சொன்னதுல,
எது உடம்பு? எது உயிர்? எது கை?
கொஞ்சம் விளங்கறாப்ல சொன்னா தேவல...

இரவா

unread,
Nov 26, 2007, 9:14:25 AM11/26/07
to minT...@googlegroups.com
அன்பு   முனைவர்  கண்ணன்
 
இத்துடன்  எனது  இரண்டு  நூல்களின்  அட்டைப் படத்தை அனுப்பியுள்ளேன்.
 

ஆய்வு நூலை

, பூங்கொடி பதிப்பகமும், திருமந்திரத்தைக் கிழக்குப் பதிப்பகமும் வெளியிட்டுள்ளன .

 
On 11/21/07, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:
அன்பின் இரவா:

இக்கட்டுரையை புத்தக அறிமுகம் என்று விக்கிபீடியாவில் போடலாமே? உங்கள்
புத்தகமுகப்பு படம் இருக்கிறதா?

வைணவம் சித்தர் மரபிற்கு எதிரானது அல்லவே. திருமழிசை ஆழ்வார் சித்தர்
போல் வாழ்ந்தவர்தானே. மேலும் ஆழ்வார்கள் 12 பேரும் ஒருமித்த கருத்தோடு
'திருமால் அடியார்களுக்குள்' சாதி வேற்றுமை பார்த்தல் தாயின் கற்பை
சோதிப்பது போல் என்று சொல்லிப் போனதால் வைணவத்தில் 'சித்தர் மரபு' என்று
தனியாக இல்லாமல் போயிற்று என்று சொல்வார் பேரா.தொ.பரமசிவன்.

நா.கண்ணன்

On Nov 19, 1:37am, "இரவா" < vasudevan...@gmail.com> wrote:
>>
> இம்முப்பிரிவுகளிலும் மருத்துவர்கள் உண்டு. இந்தப் பாகுபாட்டினை மிக விரிவாக
> ஆராய்ந்து விளக்கமாக எடுத்துக் கூறுவது இந்நூல். மரபு வழிப்பட்ட இறுக்கமான
> வைணவமும், சைவமும் அதாவது விசிட்டாத்வைதமும் சைவச்சித்தாந்தமும் சித்தர்களை
> ஏற்றுக் கொண்டதில்லை. வைதிக சமயங்கள் இவர்களைப் புறத்தவர்களாக, மரபு
> வழுவியவர்களாக ஒதுக்கி வைத்து வந்துள்ளன. இருப்பினும், புத்தசமயம் வைதிக
> சமயங்களை ஊடுருவியதோடு அவை மக்களிடையே செல்வாக்குக்குப் பெறச் "சித்த சிந்தனை
> உணர்வு" காரணம் என்னும் உண்மையைப் பல கோணங்களிலிருந்தும், பல நிலைகளிலிருந்தும்
> ஆராய்ந்து ஆசிரியர் நிலை நாட்டுவது பாராட்டத்தக்கது.
>


IMG_1011.jpg
IMG_1009.jpg

kg

unread,
Nov 26, 2007, 6:37:52 AM11/26/07
to மின்தமிழ்
'கற்றது தமிழ்' பற்றி வலைப்பதிவு ஒன்றில் அண்மையில் படித்தேன்
நீங்களும் படிப்பதற்காக இணைப்பு இதோ: http://pktpariarasu.blogspot.com/2007/11/2.html
மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த சில செய்திகளும் தந்துள்ளார்,
அவை:
http://pktpariarasu.blogspot.com/2007/11/3.html
http://pktpariarasu.blogspot.com/2007/11/4.html

இப்ப நம்ம கலப்பைப் பஞ்சாயத்துக்கு வருவோம்.

//
> > On Nov 19, 2007 9:33 AM, இரவா <vasudevan...@gmail.com> wrote:
> > > அதைப்போல, இ-கலப்பையைக் கண்டு பிடித்ததால், தமிழ் வளர்ந்து விடவில்லை.

> எனது காணினியிலிருந்து கலப்பையை நீக்கிவிட்டால், தமிழ் ததழ்ந்து விடுமா?
> நீக்காமல், உங்கள் ளொள்ளுக்குப் பதில் எழுதிவிட்டால் தமிழ் வலர்ந்து விடுமா?

> கலப்பை ஒரு எழுதி!
> அவ்வளவு தான். எழுதியை வைத்துக் கொண்டால் காவியம் பாடி விடமுடியுமா? கலப்பையை
> வைத்துக் கொண்டால் உழுது பயிர் வளர்த்து, நெற்களஞ்சியத்தை நிறைத்துவிடமுடியுமா?
//

கலப்பைக்கு களங்கமா?
இது தான் காலக்கொடுமைங்கறது.
உங்கள் சண்டையில் எ-கலப்பையைச் சிறுமைப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
இன்று பெரும்பாலான தமிழர்கள் தமிழில் எழுத உற்ற துணையாக இருப்பது எ-
கலப்பை (இ-கலப்பை அல்லது ஈ-கலப்பை).
தமிழா திரு.சு.முகுந்தராஜ் அவர்களின் பெருமுயற்சியால் உருவானது தான் இந்த
எ-கலப்பை.http://thamizha.com/modules/news/
தமிழா குழுவினர் செயற்கரிய பல செயல்களை தமிழ்க்கணினி மென்பொருள் துறையில்
ஆற்றி வருவது அனைவரும் அறிந்ததே. http://blog.thamizha.com/
இதற்காக அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் உருவாக்கிய
மென்பொருளை இப்படிச் சிறுமைப்படுத்திப் பேசுவது சரியல்ல. உங்களுக்குப்
பிடிக்கவில்லையெனில் உங்கள் கணினியிலிருந்து இப்பொழுதே நீக்கி
விடுங்களேன்.

இன்று பெரும்பாலான தமிழ் இணையதளங்கள், வலைப்பதிவுகள்,மின்னஞ்சல்கள் எ-
கலப்பையைப் பயன்படுத்தி தமிழில்உருவக்கப்படுகின்றன.
விக்கிபீடியாவில் பலர் தமிழ்க் கட்டுரைகளை எ-கலப்பையைப் பயன்படுத்தியே
உருவக்குகின்றனர்.

கலப்பை ஒரு எழுதி தான், அதை வைத்து நெற்களஞ்சியத்தை நிறைக்காவிட்டாலும்,
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை தமிழால் நிறைக்க எ-கலப்பை தானே
உதவுகிறது?

தமிழ் வளரவில்லையா? இப்டி எழுதுனா எப்டி தமிழ் வளரும்?

// தமிழ் வலர்ந்து //
// பாடத்தை குரைத்தனர் //
// காணினி //
// தமிழ்மரபு அறக்கட்டளை அறிஞ்ஜர்களின்சென்னை சந்திப்பு <-- அறிஞ்ஜர் //

கொடுமை கொடுமைன்னு மின்தமிழுக்கு வந்தா....
இங்கே முனைவர்களே இப்டி தமிழ்க் கொலை செய்தால்...
நல்லகாலம் முருகா!
'மின்தமிழ்'-ங்கறத யாரும் 'மிண்தமிள்'-னு எழுதல!!

இரவா

unread,
Nov 27, 2007, 11:46:52 AM11/27/07
to minT...@googlegroups.com


On 11/26/07, kg <kala...@gmail.com> wrote:
 
இப்ப நம்ம கலப்பைப் பஞ்சாயத்துக்கு வருவோம்.
 
 

கலப்பைக்கு களங்கமா?
இது தான் காலக்கொடுமைங்கறது.
உங்கள் சண்டையில் எ-கலப்பையைச் சிறுமைப்படுத்துவது எவ்விதத்தில் நியாயம்?
இன்று பெரும்பாலான தமிழர்கள் தமிழில் எழுத உற்ற துணையாக இருப்பது எ-
கலப்பை (இ-கலப்பை அல்லது ஈ-கலப்பை).
தமிழா திரு.சு.முகுந்தராஜ் அவர்களின் பெருமுயற்சியால் உருவானது தான் இந்த
எ-கலப்பை.http://thamizha.com/modules/news/
தமிழா குழுவினர் செயற்கரிய பல செயல்களை தமிழ்க்கணினி மென்பொருள் துறையில்
ஆற்றி வருவது அனைவரும் அறிந்ததே. http://blog.thamizha.com/
இதற்காக அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் உருவாக்கிய
மென்பொருளை இப்படிச் சிறுமைப்படுத்திப் பேசுவது சரியல்ல. உங்களுக்குப்
பிடிக்கவில்லையெனில் உங்கள் கணினியிலிருந்து இப்பொழுதே நீக்கி
விடுங்களேன்.

இன்று பெரும்பாலான தமிழ் இணையதளங்கள், வலைப்பதிவுகள்,மின்னஞ்சல்கள் எ-
கலப்பையைப் பயன்படுத்தி தமிழில்உருவக்கப்படுகின்றன.
விக்கிபீடியாவில் பலர் தமிழ்க் கட்டுரைகளை எ-கலப்பையைப் பயன்படுத்தியே
உருவக்குகின்றனர்.

கலப்பை ஒரு எழுதி தான், அதை வைத்து நெற்களஞ்சியத்தை நிறைக்காவிட்டாலும்,
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை தமிழால் நிறைக்க எ-கலப்பை தானே
உதவுகிறது?
 
கலப்பையை உருவாக்கியது பற்றியோ கலப்பையைப் பற்றியோ யாரும்  தவறாகக் கூறவில்லை.  நீங்கள் திசையை மாற்றாதீர்கள்.

தமிழ் வளரவில்லையா?  இப்டி எழுதுனா எப்டி தமிழ் வளரும்?

// தமிழ் வலர்ந்து //
// பாடத்தை குரைத்தனர் //
// காணினி //
// தமிழ்மரபு அறக்கட்டளை அறிஞ்ஜர்களின்சென்னை சந்திப்பு <-- அறிஞ்ஜர் //

கொடுமை கொடுமைன்னு மின்தமிழுக்கு வந்தா....
இங்கே முனைவர்களே இப்டி தமிழ்க் கொலை செய்தால்...
நல்லகாலம் முருகா!
'மின்தமிழ்'-ங்கறத யாரும் 'மிண்தமிள்'-னு எழுதல!!
 
உங்களிடம் கலப்பையால்,  அரிய படைப்பை அளியுங்கள்.தமிழை வளத்தை அதிகமாக்குங்கள்.
 
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே! அந்த வேலைக் கையில் வைத்துக் கொந்திருந்தால் வீரர்  ஆகிவிடமுடியாது. அதைப் போன்று இ-கலப்பையைக் கணினிக்குள் வைத்துக் கொண்டிருந்தால், தமிழ் வளராது.  சாதனை செய்ய வாருங்கள் என்று கூறினோம்.
 
நீங்கள் கண்டுபிடித்தது போல், கலப்பையை யாரும்  குறைகூறவில்லை.
 
எழுத்தில் பிழை வருகிறதென்றால், எழுதுகின்றவர்களுக்குத் தமிழ் தெரியாது என்று பொருளா?
 
கணினி இயக்கம்  தெரியாவிட்டாலும், கடல் கடந்து சென்ற தமிழ்மக்களுக்கு ஏதேனும் விருந்தளிக்கலாம் என்று எழுதுகிறோம்.
 
சடுகுடு ஆடு  என்றால் சடுகுடு தான்  ஆடுவோம்!
--~--~---------~--~----~------------~-------~--~----~
 
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          

வேந்தன் அரசு

unread,
Nov 27, 2007, 12:16:17 PM11/27/07
to minT...@googlegroups.com
On Nov 27, 2007 11:46 AM, இரவா <vasude...@gmail.com> wrote:

 
உங்களிடம் கலப்பையால்,  அரிய படைப்பை அளியுங்கள்.தமிழை வளத்தை அதிகமாக்குங்கள்.
 
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
 
இரவா
 
கொல்லர்கள் கூட களம் போகிறார்கள்
 
 
 
 
இந்த தளத்தில் எல்லோரும் கொல்லர்களே

இரவா

unread,
Nov 27, 2007, 7:53:37 PM11/27/07
to minT...@googlegroups.com
வேந்தன்

நீங்கள் எதற்கும் போக மாட்டீர்களே!  அதற்குப் பெயர் ஒன்றிருக்குமே அப்பெயர் என்ன?


 
 உங்களிடம் கலப்பையால்,  அரிய படைப்பை அளியுங்கள்.தமிழ் வளத்தை அதிகமாக்குங்கள்.
 
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
 
இரவா
 
கொல்லர்கள் கூட களம் போகிறார்கள்
 
 
 
 
இந்த தளத்தில் எல்லோரும் கொல்லர்களே
 
 


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)





--

வேந்தன் அரசு

unread,
Nov 28, 2007, 7:28:04 AM11/28/07
to minT...@googlegroups.com
On Nov 27, 2007 7:53 PM, இரவா <vasude...@gmail.com> wrote:
வேந்தன்

நீங்கள் எதற்கும் போக மாட்டீர்களே!  அதற்குப் பெயர் ஒன்றிருக்குமே அப்பெயர் என்ன?
 
இரவா
 
போட்டி எனக்கும் உங்களுக்கும் அல்லவே
 
உங்களது பங்கு அனுமன் அளவு
என்னது அணில் அளவும் இல்லை

இரவா

unread,
Nov 28, 2007, 11:10:44 AM11/28/07
to minT...@googlegroups.com
 
அனுமனுக்கு ஒரு அளவு இருந்தால் அணிலுக்கும் ஒரு அளவு இருக்குமே!
அந்த அளவைச் செய்யலாமே!

 

வேந்தன் அரசு

unread,
Nov 28, 2007, 12:18:27 PM11/28/07
to minT...@googlegroups.com
On Nov 28, 2007 11:10 AM, இரவா <vasude...@gmail.com> wrote:
 
அனுமனுக்கு ஒரு அளவு இருந்தால் அணிலுக்கும் ஒரு அளவு இருக்குமே!
அந்த அளவைச் செய்யலாமே!
 
தாராளமாக.

kg

unread,
Nov 29, 2007, 9:01:58 AM11/29/07
to மின்தமிழ்
On Nov 27, 9:46 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> > கலப்பை ஒரு எழுதி தான், அதை வைத்து நெற்களஞ்சியத்தை நிறைக்காவிட்டாலும்,
> > கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை தமிழால் நிறைக்க எ-கலப்பை தானே
> > உதவுகிறது?
//
> கலப்பையை உருவாக்கியது பற்றியோ கலப்பையைப் பற்றியோ யாரும் தவறாகக் கூறவில்லை.
> நீங்கள் திசையை மாற்றாதீர்கள். //

நான் திசையை மாற்றலைங்க.
மாமலை பிளக்கும் சிற்றுளி தான் இந்த கலப்பை.
இதனை பயன்படுத்தி நீங்களும் வளரலாம், தமிழையும் வளர்க்கலாம்.
இணையத்தில் தமிழ் வளர்ச்சியில் கலப்பைக்கு ஒரு முக்கியப்பங்கு உண்டு.
கலப்பையைப் பற்றி தவறாகக் கூறவில்லையெனில் மகிழ்ச்சி.
தமிழ் மட்டும் படித்திருந்தால் கலப்பை உருவாகியிருக்க வாய்ப்பில்லை தானே?
இங்கே வேலை வடித்துக்கொடுத்தது கொல்லர் இல்லைங்க வீரர் தானுங்க அதுவும்
கூலி எதுவும் வாங்காம.

//
> இ-கலப்பையைக் கணினிக்குள் வைத்துக் கொண்டிருந்தால், தமிழ் வளராது. சாதனை செய்ய
> வாருங்கள் என்று கூறினோம். //

கணினிக்குள் கலப்பையை யாரும் சும்மா வைத்துக் கொண்டிருக்கவில்லை.

//
> எழுத்தில் பிழை வருகிறதென்றால், எழுதுகின்றவர்களுக்குத் தமிழ் தெரியாது என்று
> பொருளா? //

தமிழ்/தமிழில் படித்த ஒரு முனைவர் இப்படி கேட்டால் நான் என்ன சொல்ல?
அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் வரும் "காவிதைப் போட்டி" காட்சி தான்
ஞாபகத்துக்கு வருகிறது.
நீங்கள் மற்ற துறை சார்ந்தவரெனில் உங்கள் எழுத்தில் பிழை வரு'வதை'
ஏற்கலாம்.
ஆனால் தாங்கள் முன்பு கூறியது நினைவில் நிற்கிறதே:

// --
> தமிழ் மீது கொண்ட காதலால், தமிழைத் தவிர வேறு எதையும் படிக்க மாட்டேன் என்று
> கங்கணம் கட்டிக் கொண்டு தமிழ் படித்தவன் நான். நான் பெற்ற நான்கு பட்டமும்
> தமிழில் (100%) படித்துப் பெற்றவை. ஆனால், நான் என்ன பாடு படுகிறேன் என்று
> என்னை அறிந்தவர்கள் அறிவார்கள்.
-- //

இவ்வாறாக தமிழ் மீது கொண்ட காதலால், கசடற தமிழ் கற்ற நீங்கள் இப்படி
தமிழில் தவறுடன் எழுதும் பொழுது வேதனையாக உள்ளது. இனி மின்னஞ்சல்
அனுப்பும் முன் ஒருமுறைக்கு இருமுறை படித்தபின் அனுப்புங்கள், தட்டச்சும்
பொழுது ஏற்பட்ட 'பிழை' என்று கூறிப் பிழைக்காதீர்கள்.

//
> கணினி இயக்கம் தெரியாவிட்டாலும், கடல் கடந்து சென்ற தமிழ்மக்களுக்கு ஏதேனும்
> விருந்தளிக்கலாம் என்று எழுதுகிறோம். //

விருந்தா?
தாராளமா குடுங்க, ஆனா பிழையற்ற நற்றமிழ் விருந்து வேணுமுங்க
குடுப்பீங்களா?

அப்புறம் ஒரு முக்கியமான மேட்டருங்க,
மின்மடல் குழுவில் உதார்னு எதைச் சொல்றீங்கன்னு தெரியலை?
// --
On Nov 18, 9:37 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> இது, எனது ஆய்வு நூலைப் பற்றிய மதிப்பீடு. ஆங்கிலம் படித்த தமிழர்கள், இந்நூலை
> ஆங்கிலத்தில் அல்லது வேறு மேலை மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டு தமிழை உலகம்
> முழுவதற்கும் கொண்டு செல்லுங்கள்! பார்க்கலாம். குழுவில் மடலாடலில் விடுக்கின்ற
> உதாரெல்லாம் அப்பொது தெரியும். தமிழில் மருத்துவ இலக்கியங்கள் - ஓர்
> ஆய்வு
-- //

இதுக்குப் பேரு தான் "நோகாம நொங்கு திங்கறது"ங்கறதோ?
நீங்க இப்படி சவால் விடுவது போல் உங்க ஆய்வுநூலை 'ஓசி'யில மொழிபெயர்த்து
உலகம் முழுதும் கொண்டுசெல்ல முடியுமான்னு பார்க்கிறீர்கள். ஆமாம், ஒரு A4
பக்கத்தை மொழிபெயர்க்க தோராயமாக இரண்டு அமெரிக்க டாலர் ஆகுமுங்க.

உங்களுக்கு தமிழ் தவிர வேறு மொழி (அல்லது ஆங்கிலம்) தெரியுதா
இல்லையாங்கறது பிரச்சினை இல்லை. தமிழ் கற்கும் இன்றைய இளம்
தலைமுறையினருக்கு சரியான வழிகாட்டுதல் இன்றியமையாதது. அவர்கள் பாரதி போல
ஒன்றுக்குமேற்பட்ட மொழியறிவு பெற வேண்டும். நானும் இளைஞர்களை பாரதியின்
வழியில் சாதனை செய்ய வாருங்கள் என்று தான் கூறுகிறேன். குறைந்தது தமிழ்
எழுத்துப்பிழை இலக்கணப் பிழையின்றி எழுதவும் பேசவும் தெரிய வேண்டும்.

// > சடுகுடு ஆடு என்றால் சடுகுடு தான் ஆடுவோம்! //

உங்களை 'சடுகுடு' ஆட நான் சொல்லலைங்கோ!

இரவா

unread,
Nov 29, 2007, 12:36:47 PM11/29/07
to minT...@googlegroups.com
ஒரு ஆளவுக்கு மேல் என்னால் வெட்டிப்  பேச்சு பேச  முடியாது. ஒரு கட்டுரையைத் தட்டச்ச பலமணி நேரமாகிறது. பயனுள்ளதைப்  பேசுங்கள். எழுதுங்கள்.
 
ஒரு முறை சொன்னதற்கு ஒன்பது பதில்கள் பயனற்றவை.

வேந்தன் அரசு

unread,
Nov 29, 2007, 3:50:45 PM11/29/07
to minT...@googlegroups.com
On Nov 29, 2007 12:36 PM, இரவா <vasude...@gmail.com> wrote:
ஒரு ஆளவுக்கு மேல் என்னால் வெட்டிப்  பேச்சு பேச  முடியாது. ஒரு கட்டுரையைத் தட்டச்ச பலமணி நேரமாகிறது. பயனுள்ளதைப்  பேசுங்கள். எழுதுங்கள்.
 
இரவா
 
விரைவில் நீங்க ஒப்புவிக்க அது கணினியில் எழுத்தாக கொட்டுகிற (சொற்) கலப்பை நாங்க கண்டு பிடிப்போம்

இரவா

unread,
Nov 29, 2007, 6:58:56 PM11/29/07
to minT...@googlegroups.com
கலப்பை என்று தடித்த  ஊனுடம்பினரைக்  குறிப்பிடலாம். 
 
எங்கள்
 
உழவினார் கை மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என் பார்க்கு  நிலை.
 
நீங்கள் எதை வ்ஏந்துமானாலும் கண்டு பிடிங்க! நாங்க ஒப்புவிச்சாதானே? அதற்கும் ஒரு கருவி கண்டு பிடியுங்களேன்.

 
--

kg

unread,
Nov 29, 2007, 11:52:57 PM11/29/07
to மின்தமிழ்
நீங்கள் தான் இப்போது திசையை மாற்றுகிறீர்கள்.
உங்களை வெட்டிப்பேச்சு பேச சொல்லவில்லை, பொறுப்பான பதிலைத்தான்
எதிர்பார்க்கிறோம்.

On Nov 29, 10:36 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> ஒரு ஆளவுக்கு மேல் என்னால் வெட்டிப் பேச்சு பேச முடியாது. ஒரு கட்டுரையைத்
> தட்டச்ச பலமணி நேரமாகிறது. பயனுள்ளதைப் பேசுங்கள். எழுதுங்கள்.
> ஒரு முறை சொன்னதற்கு ஒன்பது பதில்கள் பயனற்றவை.

முனைவரே, இப்படி பொறுப்பற்ற பதில் கூறி 'எஸ்கேப்' ஆகுதல் தகுமோ?
உங்கள் மடல்களில் பிழைகள் உள்ளன என்றோம்.
இனி தமிழைப் பிழையின்றி எழுதுங்கள் என்றோம்.
தங்களுக்கு பொறுமையும், உண்மையை ஏற்கும் மனப்பக்குவமும் உண்டென்றல்லவா
நினைத்தேன்.
// -- ஒரு ஆளவுக்கு மேல் -- //
அது என்ன "ஆளவு"? தட்டச்சும் போது ஏற்பட்ட பிழையோ?
இதற்குமுன் நான் அனுப்பிய மடலை இன்னொரு முறை படியுங்கள்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.
சரி, 'பிழை'த்துப்போங்கள்.

நா.கண்ணன்

unread,
Nov 30, 2007, 3:25:08 AM11/30/07
to மின்தமிழ்
On Nov 30, 1:52 pm, kg <kalaig...@gmail.com> wrote:
> அது என்ன "ஆளவு"? தட்டச்சும் போது ஏற்பட்ட பிழையோ?


I agree. Let's be carefull in typing Tamil. Typos are extremely
important while reproducing old books in MinTamil. Avoid 'printer's
devil'.

Kannan

இரவா

unread,
Nov 30, 2007, 4:17:35 AM11/30/07
to minT...@googlegroups.com
அளவு  எவ்வாறு  ஆளவு  ஆகிறது?
 
அ வுக்கு a அமுக்கிவிட்டு அடுத்து ள வுக்கு Shift ஐ அமுக்கி L ஐ அமுக்கினால் அ வுக்கும் சேர்த்து shift a ,  A ஆகிறது. விரைவாகக்  கொண்டு என்று தட்டினால்,  கொந்து  என்று வருகிறது. இவையெல்லாம் GMail,  google chat போன்றவற்றில் நடக்கின்றன. திரையைப் பார்த்துக் கொண்டு தட்டும் தட்டச்சாளர்களுக்கு இது நிகழாது.
 
என்னைப் போன்றவர்களுக்கே நிகழும். மேலும், ஒரு இழையில், அதிக மடல்கள் கொண்டதாக இருந்தால், இப்பிழைகள் அதிகம் நிகழுகின்றன.
 
இவற்றுக்கெல்லாம் காரணம், கூகுள், அடுத்து  இ-கலப்பை. என்பது உங்களில் யாருக்கும் தெரியாதா?  notebad அல்லது wordpad இல் தட்டச்சு செய்து ஒட்டி அனுப்புகின்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
 
என்னைத் திருத்த எழுகின்ற வேகம், கூகுளை, கலப்பையைத் திருத்த எழுந்திருக்க வேண்டும். இந்நேரம் அவை திருந்தியிருக்க வேண்டும்.
 
வேந்தரும், kg யும், kaNNanum ஏதாவது செய்ய முயன்றால்,  தட்டச்சும் போது  எழுகின்ற பிழை ஒழியும்.
 

 
--

kg

unread,
Dec 1, 2007, 3:54:22 AM12/1/07
to மின்தமிழ்
தமிழ்மணத்தின் விவாதகளத்தில் தமிழ் எம்.ஏ குறித்து ஓசை செல்லாவின்
விவாதம்
"கற்றது தமிழா இருந்தா டீகடை வைத்தால் ஆகாதா?" http://vivaatham.thamizmanam.com/archives/59
என்ற பதிவில் உள்ளது. its interesting, mintamilians may read it.
முடிந்தால் இதையும் http://vasanthamravi.blogspot.com/2007/11/blog-post_28.html
படிங்க.

//
On Nov 30, 2:17 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
> இவற்றுக்கெல்லாம் காரணம், கூகுள், அடுத்து இ-கலப்பை. என்பது
> உங்களில் யாருக்கும் தெரியாதா? notebad அல்லது wordpad இல் தட்டச்சு செய்து
> ஒட்டி அனுப்புகின்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
> என்னைத் திருத்த எழுகின்ற வேகம், கூகுளை, கலப்பையைத் திருத்த எழுந்திருக்க
> வேண்டும். இந்நேரம் அவை திருந்தியிருக்க வேண்டும்.
> வேந்தரும், kg யும், kaNNanum ஏதாவது செய்ய முயன்றால், தட்டச்சும் போது
> எழுகின்ற பிழை ஒழியும்.
//

முனைவரே, எங்கள் வேகம் உங்களைத் திருத்துவதற்காக அல்ல. அது எமது
நோக்கமுமல்ல.

நோட்பேடில் அடித்து அனுப்பினால் பிழையின்றி நன்றாக
வருமென்றறிந்திருக்கிறீர்களே.
பின் ஏன் அப்படிச்செய்யாமல் கூகுளையும்/கலப்பையையும் குறைகூறுகிறீர்கள்.
எனினும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல்
அனுப்பினாலல்லவா இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை மேற்கொள்வர் /
குறைகளைக் களைவர்?

உங்களுக்காக மற்றொரு வழியையும் கூறுகிறேன் நீங்கள் ஃபயர்ஃபாக்ஸ்
உலாவியைப் பயன்படுத்தும் பட்சத்தில் ஃபயர்ஃபாக்ஸுக்கான தமிழ்விசை என்னும்
நீட்சி ஒன்று இருக்கிறது https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994
இதனைப்பயன்படுத்திக்கூட நீங்கள் தட்டச்சலாம்.
முயற்சி செய்து பாருங்களேன்.

நீங்க மட்டுமில்ல, நாங்களும் தான் தமிழைக் காதலிக்கிறோமுங்க!

இரவா

unread,
Dec 1, 2007, 6:17:06 AM12/1/07
to minT...@googlegroups.com
 
நீங்க மட்டுமில்ல, நாங்களும் தான் தமிழைக் காதலிக்கிறோமுங்க!
 
தெரிகிறது! நன்றாகத் தெரிகிறது. நீங்களும் தமிழைக் காதலிக்கிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது. காதலிக்கவாரம்பித்தால் கண்ணும் தெரியாது! ஒரு மண்ணும் தெரியாது என்பதும் தெரிகிறது.
 

--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          

Kannan Natarajan

unread,
Dec 1, 2007, 6:52:10 AM12/1/07
to minT...@googlegroups.com
நீங்க மட்டுமில்ல, நாங்களும் தான் தமிழைக் காதலிக்கிறோமுங்க!
 
தெரிகிறது! நன்றாகத் தெரிகிறது. நீங்களும் தமிழைக் காதலிக்கிறீர்கள் என்று நன்றாகத் தெரிகிறது. காதலிக்கவாரம்பித்தால் கண்ணும் தெரியாது! ஒரு மண்ணும் தெரியாது என்பதும் தெரிகிறது.
 
 
மேலுள்ள எழுத்துக்களால் தெரிவது இரவாவின் நாவன்மையா அல்லது நா-வண்மையா!
 

"வைய மெங்கும் பெருமை பெற்ற
வண்மை மிக்க தமிழகம்
 வந்து பூமி (தமிழ்) தானம் வாங்க
         வரவு சொல்லி வாழ்த்துவோம்."
 
                - பூமிதான யாத்திரை - நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
 
தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

இரவா

unread,
Dec 1, 2007, 7:18:40 AM12/1/07
to minT...@googlegroups.com
வன்மையுமல்ல! வண்மையுமல்ல! அண்மையில் பெற்ற உண்மை.

Kannan Natarajan

unread,
Feb 27, 2008, 6:20:30 PM2/27/08
to minT...@googlegroups.com
வணக்கம்,
 
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஆண்டு இறுதியில் பொதுத் தேர்வு எழுதும்போது, வினாத்தாளைப் படிப்பதற்காகக் கூடுதலாக 10 நிமிஷங்கள் அனுமதிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த செய்தியைச் சிலர் படித்தோ அல்லது கேட்டோ இருப்பீர். அச்செய்தியைத் தொடர்ந்து தினமணியில் வந்துள்ள தலையங்க கட்டுரை சிந்திக்க வைக்கிறது.
 
 
அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள இரண்டு பத்திகளை இங்கு இடுகிறேன். மேலும் அக்கட்டுரையைப் படிக்க http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080227090422&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist=
 
ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்க்க 130 பள்ளிக்கூடங்களில் மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர்(பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு) அறிவித்திருக்கிறார். இதுவும் நல்ல நடவடிக்கையே. இந்த எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் ஆசிரியர்களுக்கும் இதில் நல்ல பயிற்சியை அளிப்பது கட்டாயம்.

அதே சமயம், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களே எழுத்துப் பிழைகளுடனும் வாக்கியப் பிழைகளுடனும் எழுதுவதைப் பார்த்தால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. தமிழைப் பிழையில்லாமல் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தனியாக மதிப்பெண்களைத் தந்து, தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சிபெற அதைக் கட்டாயமாக்க வேண்டும். (நன்றி: தினமணி)

Tthamizth Tthenee

unread,
Feb 29, 2008, 8:48:57 AM2/29/08
to minT...@googlegroups.com
உயர் திரு கண்ணன் நடராஜன் அவர்களே
உண்மையிலேயே தமிழை சரியாக எழுத படிக்கத்
தெரியாத தமிழர்களை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது,

தமிழைப் பிழையில்லாமல் படிப்பதற்கும், எழுதுவதற்கும் தனியாக
மதிப்பெண்களைத் தந்து, தமிழ்ப் பாடத்தில் தேர்ச்சிபெற அதைக் கட்டாயமாக்க
வேண்டும் என்பது சரியான நடவடிக்கை
தொலைக் காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தமிழைக் கொலை செய்கிறார்கள்
இவர்களை எதிர்த்து நற்றமிழை சரியாக உச்சரிக்க
கற்றுக் கொடுத்து நல்ல தேன் தமிழை காது குளிர கேட்கவேண்டும், என்னுடைய
உபாத்யாயர் கம்பீர நாயனார் சொல்லுவார் , அவர் உச்சரிக்கும் போது
அவருக்கும்,,தமிழுக்கும்
என் எங்கள் வகுப்புக்கும், எங்கள் பள்ளிக்கே கம்பீரமாக,இருக்கும்
நான் ஐந்ட்டாம்ம் வகுப்பு படிக்கும்போது அவர் கற்றுக் கொடுத்த தமிழ்தான்
இன்றளவும் எனக்கு தமிழின் மேல் நேசம் வளரக் காரணம்
நாங்கள் படிக்கும் போது , தமிழ் 1, தமிழ் 2 என்று இரு தமிழ் வகுப்புகள் உண்டு
தமிழ் 1 வகுப்புக்கு ,கம்பீர நாயனார்
தமிழ் 2 வகுப்புக்கு கிருஷ்ணமாச்சாரி
என்று ஒரு உபாத்யாயர்
இந்த இரு உபாத்யாயர்களும் ஏற்றி வைத்த விளக்குதான்
என்னுடைய தமிழ் ஆர்வம்

தமிழை உச்சரிக்கும் போது மிக எச்சரிக்கையாக உச்சரிக்க வேண்டும்
தமிழ் மொழிபோல் இனிமையான மொழியும் இல்லை,
உபயோகிக்க ஆபத்தான மொழியும் இல்லை,ஏனென்றால்
கொஞ்சம் மாற்றி உச்சரித்தாலும் பொருள் மாறிவிடும் அபாயம் வேறு எந்த
மொழியிலும் குறைவான அளவே
ஆனால் தமிழ் அப்படியல்ல
சரியான உச்சரிப்பால் குறைவான வார்த்தைகளை உபயோகப் படுத்தி , நிறைவான ,
மற்றும் தேவையான இடத்திற்கு தக்க
பொருள் அழகாக வரும்படி பேசமுடியக் கூடிய மிக பொருள் பொதிந்த செம்மொழி
தமிழே என்பது உங்களுக்கே தெரியும்
அரசு இப்போதாவது இது போன்ற நல்ல நடவடிக்கைகளை
எடுப்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ

வேந்தன் அரசு

unread,
Feb 29, 2008, 10:10:32 PM2/29/08
to minT...@googlegroups.com
விஜய் தொலைக்காட்சியில் "தமிழ் பேச்சு" என்று ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்ப உள்ளார்கள்
 
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Tthamizth Tthenee

unread,
Feb 29, 2008, 11:25:41 PM2/29/08
to minT...@googlegroups.com
(ஐந்ட்டாம்ம்----) மன்னிக்கவும் கணிணி செய்த சதியால்

ஐந்தாம் என்பது ஐந்ட்டாம்ம் என்று வந்து விட்டது
------------- ------------------------
விஜய் தொலைக்காட்சியில் தமிழ் பேச்சு நிகழ்ச்சியைப் பார்ப்போம் மகிழ்வோம்


அன்புடன்
தமிழ்த்தேனீ

Reply all
Reply to author
Forward
0 new messages