இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்க பதக்கம்

37 views
Skip to first unread message

vj kumar

unread,
Aug 11, 2008, 10:08:51 PM8/11/08
to minT...@googlegroups.com
இந்தியாவிற்கு ஒலிம்பிக் தங்க பதக்கம் .....பிந்த்ரா சாகசம்... நமது
தேசிய கீதம் இசைக்க மணிக்கொடி மேலோங்கி பறக்கும் பொது மெய் சிலிர்த்தது
....உள்ளம் நெகிழ்ந்தது... அவர் பதக்கம் வாங்கியமைக்கு அல்ல ..... ஏன்
இவ்வளவு தாமதம் ....சுதந்திர இந்தியாவின் முதல் தனி நபர் ஒலிம்பிக் தங்க
பதக்கம்...

மாநில அரசுகளும் மத்திய அரசும் போட்டி போட்டுக்கொண்டு பரிசுகள்
அறிவிக்கின்றனர்.... வெறும் கண்துடைப்பு ..... பிந்திராவின் தந்தை ஒரு
கோடீஸ்வரர்...அதனாலே தான் அவரால் தனது மகனின் ஆர்வத்தையும் ஆசையையும் பல
கோடி ருபாய் கொண்டு உலகத்தர பயிற்சி சாதனங்கள் வாங்கி தர
முடிந்தது...அப்போது எங்கே போனது இந்த அரசு...

அவரைபோல ஆயிரம் பேர் - ஏன் அவரை விட திறமை சாலிகள் பலரும் ஏழை
குடும்பத்தில் பிறந்து ஒலிம்பிக் கனவை கண்டு ரோட்டரத்தில் கிடக்க
கூடும்.....

இன்றைக்கு இருக்கும் விளையாட்டு துறையில் எவ்வளவு பேர் நிஜமாகவே களத்தில்
இறங்கி உள்ளனர்....பட்டினி கிடந்தவனுக்கு தான் உணவின் ருசி தெரியும்....
பந்தயத்தில் தோற்றவனுக்கு தான் வெற்றியின் வெறி வரும்... கேரளத்து தட கல
பெண்கள் - எங்கே இப்போது காணோம்.....பாலு தூக்கும் பெண்கள் எங்கே....
ஹாக்கி என்ன ஆயிற்று....

இலக்கை அடைந்த அவருக்கு பரிசு கொடுங்கள்.....இல்லை நோக்கி செல்லும் இளம்
செல்வங்களுக்கு பணம் கொடுத்து அடுத்த போட்டிக்கு தயார்
செய்யுங்கள்....இல்லையேல் பல முறை நடந்தார்போல வெறும் மார்தட்டி கொண்டு
மீண்டும் ௨0/௨0 பார்த்துவிட்டு .....அடுத்த ஒலிம்பிக் போட்டியில் பரிசு
விழுமா என்று லாட்டரி சீட்டு வங்கி வையுங்கள்...

Narayanan Kannan

unread,
Aug 11, 2008, 10:19:57 PM8/11/08
to minT...@googlegroups.com
அன்பின் விஜய்:

ஏழ்மையைக் காரணம் காட்டி இந்தியா இனிமேலும் பின் தங்க முடியாது.
இந்தியாவில் இல்லாத பணக்காரர்களா? இந்தியாவில் செலவழிக்கும் போதுதான்
தெரிகிறது, நகர விலைவாசி என்பது அமெரிக்காவை ஒத்து இருப்பது. விலையில்
மட்டும் அமெரிக்கா போல் இருந்தால் போதாது. விளையாட்டிலும் அமெரிக்கா போல்
ஆகவேண்டும்! எத்தனை மல்டி மில்லியன் கம்பெனிகள் இந்தியாவிலுண்டு. அவை ஏன்
ஸ்பான்சர் செய்வதில்லை. ஏன் பிந்திரா அப்பா போல் மற்ற பணக்கார அப்பாக்கள்
யோசிப்பதில்லை?

100 கோடி மக்கள் உள்ள ஒரு நாடு 20 பேரை ஒலிம்பிக்கிற்கு அனுப்புவது
கேவலமாக உள்ளது! சிங்கப்பூர் டீம் இதைவிடப் பெரியது!

இந்தியா தன் காலனித்துவ தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீள வேண்டும்.

சீனா இந்தியாவை விட ஏழை நாடுதான். ஆனால் இன்று ஒலிம்பிக் நடத்துகிறது,
இதுவரை தங்கப்பதக்கம் பெற்ற நாடுகளில் முதன்மையாக நிற்கிறது!

இந்தியர்களே விழித்தெழுங்கள்!!

http://emadal.blogspot.com/2008/08/blog-post_2850.html

கண்ணன்

2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>:

--
"Be the change you wish to see in the world." -Gandhi

Tthamizth Tthenee

unread,
Aug 11, 2008, 11:51:18 PM8/11/08
to minT...@googlegroups.com
நம் நாடு நம் மக்கள்
என்னும் தேசீய உணர்வு வராத வரை
இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்
 
நம் நாடு உலக அரங்கில்  தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்னும் உணர்வு ஒவ்வொரு இந்தியனுக்கும் இயற்கையாகவே இருக்க வேண்டும்\அல்லது எற்படுத்த வேண்டும்
உலக அரங்கில் விளையாடக் கூடிய  விளையாட்டு வீரர்கள், பயிற்சி செய்வதற்கு சரியான பயிற்சிக் களங்கள் அமைத்துக் கொடுப்பதிலோ, அவர்களை ஊக்கப் படுத்துவதிலோ நம் அரசாங்கம் காட்டும் மெத்தனம்தான்
அனைத்துக்கும் காரணம்
 
பல விளையாட்டு வீரர்கள் எந்த வித மானியமும் இல்லாமல் பசியும் பட்டினியுமாக தங்கள் கொள்கைக்காக போராடி வருகின்றனர்
 
அதுவும் தவிர அரசியல் தலையீட்டினால்,
தகுதி வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப் படும் முறையில்
ஏற்படுகின்ற குழப்படிகள் வேறு ஆட்டி வைக்கின்றது
 
 
அரசாங்கத்தையே குறை சொல்லுவதும் தவறு
நம் நாட்டு விளையாட்டு வீரர்களுக்காக இது வரை என்ன செய்திருக்கிரோம் நாம்
குறைந்த அளவு அவர்களை ஊக்குவிக்கும் வகையில்
பாராட்டி இருக்கிறோமா..?
அல்லது அவர்கள் பயிற்சி செய்யும் காலங்களில் அவர்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்திருக்கிறோமா
 
மட்டை விளையாட்டு வீரர்களை பார்க்க அதிக பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்கும் நாம்
, அரிதாரம் பூசி கற்பனைக் கதாபாத்திரமாக நடிக்கும் நடிகருக்கு கொடுக்கும் பனத்திலோ, மதிப்பிலோ ஒரு சதவிகிதமாவது விளையாட்டு வீரர்களுக்கு நாம் அளித்தோமா இல்லையே
 
வர வர நமக்கெல்லாம் நாட்டுப் பற்றும்
நாட்டைப் பர்றிய சிந்தனையும் குறைந்து கொண்டே வருகிறது என்பது உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 12:32:39 AM8/12/08
to minT...@googlegroups.com
2008/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> நம் நாடு நம் மக்கள்
> என்னும் தேசீய உணர்வு வராத வரை
> இது போன்ற அவலங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்
> வர வர நமக்கெல்லாம் நாட்டுப் பற்றும்
> நாட்டைப் பர்றிய சிந்தனையும் குறைந்து கொண்டே வருகிறது என்பது உண்மை
>

விளையாட்டிற்கும் தேசபக்திக்கும் சம்மந்தமில்லை தேனீயாரே! வேண்டுமானால்
ரஷ்யா, சீனா, குயுபா போன்ற கம்யூனிஸ்டு நாடுகளுக்கு அது பொருந்தலாம்
(இதில் எனக்கே மாற்றுக்கருத்துண்டு!) ஆனால் சந்தைப் பொருளாதார
முதலாளித்துவ நாடுகளில் விளையாட்டை இயக்குவதும் சந்தையே!
விளையாட்டிற்கென்று இந்தியாவில் சந்தை (மார்கெட்) இல்லை. கிரிக்கெடிற்கு
சந்தை உள்ளது. வேறு விளையாட்டிற்கு இல்லை.

இந்தியாவில் இன்னும் சரியாக மார்கெடிங் மேனேஜ்மெண்டு சொல்லித்தருவதில்லை
போலுள்ளது. அமெரிக்காவில் பாதிக் கருப்பர்களின் கனவு விளையாட்டு வீரராக
வேண்டுமென்பதே. ஏனெனில் அங்கு "காசு" உள்ளது. விரைவில் புகழும், பணமும்
சம்பாதிக்கமுடியும்.

இந்தியாவில் மூளையுண்டு. அதை வைத்து பிற நாட்டு வளர்ச்சிக்கு இந்திய மனித
வளம் பயன்பட்டு வருகிறது. அவ்வளவுதான். இந்தியா இன்னும் தன் முழுத்திறமை
அறிந்து செயல்படவில்லை. திறமைக்கு முக்கியம் கொடுத்து, திறமையினால்
உலகப்புகழ் பெறலாம் எனும் கனவு கூட அவர்களிடம் இல்லை! வெறும்
மின்(சம்)சாரக்கனவுதான் இருக்கிறது! இந்தியா முதலில் சினிமா/மீடியா எனும்
பிசாசிடமிருந்து விடுபட வேண்டும்.

கண்ணன்

vj kumar

unread,
Aug 12, 2008, 12:49:57 AM8/12/08
to minT...@googlegroups.com
>
> விளையாட்டிற்கும் தேசபக்திக்கும் சம்மந்தமில்லை தேனீயாரே!

என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்...

நாட்டின் உடையை உடம்பில் அணிந்து அதன் கோடியை கையில் சுமந்து அதன்
பெருமையை தலையில் சுமந்து மக்களின் எதிர்பார்ப்பை மனதில் சுமந்து .....
ஒரு வாழ்வின் தவத்தை பூர்த்தி செய்து போட்டியில் வென்ற அந்த வீரன் -
பின்னர் நெஞ்சை நிமிர்த்தி தேசிய கீதம் முழங்க மணிக்கொடி முதல் இடத்தில்
பறக்கும் பொது அதை வணங்கும் உணர்வு - இந்த புவியில் எனது நாடு முதன்மை
இடம் பெற்றது என்று அவன் கொள்ளும் பெருமிதம்... அதுவே தேசபக்தி.. கோடி
பணம் அதற்க்கு ஈடு செய்யாது... பணம் குறிக்கோளாக இருந்தால் ... வெறும்
விளையாட்டு கோட்டாவில் மத்திய /மாநில வேலை கிட்டும் வரையிலும் தான் அது
ஊக்குவிக்கும்..

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 1:12:33 AM8/12/08
to minT...@googlegroups.com
நீங்கள் இன்னும் உலகைப் புரிந்து கொள்ளவில்லை ;-)
 
ஜெர்மனிக்கு எதிராக விளையாடிய துருக்கிய கால் பந்தாட்டு வீரர்களில் பாதிப் பேர் ஜெர்மனியில் தயாரானவர்களே!
 
ஒலிம்பிக்கின் பல விளையாட்டுக்கள் தனிமனிதத் திறமையை உலகிற்குக் காட்டுவதே. அங்கு தேசியம் என்பதைவிட தனிமனித உந்துதலே வெற்றிக்குக் காரணம்.
 
சமகால இந்தியன் ஓர் வெறுமையில் வாழ்கிறான். அவனுக்கென்று எந்த லட்சியக் கனவும் இல்லை. குறைந்த பட்சம் ஒரு அரசாங்க வேலை பெற்று, குடியும் குடித்தனமுமாக உலக ஜனத்தொகையைப் பெருக்கி, சூழல் பிரச்சனைகளை விரிவு படுத்தவே அவன் விரும்புகிறான். அவனுக்கு உலகமென்றால் என்ன? உலகக்னவென்று ஒன்று உண்டா? என்றெல்லாம் அறிந்து கொள்ள விடாமல் தொலைகாட்சிகள் திசை திருப்பிவிடுகின்றன.
 
விரிந்துவரும் மத்தியதர வாழ்வியல் உலகிற்கு ஏற்படுத்தப் போகும் சூழல் பாதிப்புக்கள் பற்றி அறிந்து கொள்ளாமலே அவன் விரிவடைகிறான் (300 கோடிக்கும் மேல்!). உலக அரங்கில் போட்டி போட, அதன் தன்மை அறிய அவன் இன்னும் பழகிக்கொள்ளவில்லை. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டவே அரசியல்வாதிகளும் அவனை முடக்குகின்றனர்.
 
பின் நவீனத்துவ உலகில் "தேசியம்" என்பதே கேள்விக்குறியாகி வருகிறது!
 
பராக்..பராக்!
 
கண்ணன்

2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>
>

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 1:17:18 AM8/12/08
to minT...@googlegroups.com
இல்லை திரு கன்ணன் அவர்களே
 சம்பந்தம் உண்டு
இந்தியா ஜெயித்தால் ஏன் சந்தோஷப்படுகிறோம்
தோற்றால் ஏன் துக்கப் படுகிறோம்
 
பதினோரு முட்டாள்கள் விளையாடி, பதினோராயிரமுட்டாள்கள் வேடிக்கைபார்க்கும் விளையாட்டு என்று பெர்னாட்ஷாவால் வர்ணிக்கப்பட்ட விளையாட்டுக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் கூட
கால் பந்து போன்ற விளையாட்டுக்களுக்கு கொடுப்பதில்லை நாம்
 
ஒவ்வொரு விளையாட்டு வீரனும் விளையாட ஆரம்பிக்கும் போது
தன்னுடைய தாய் நாட்டிற்காக விளையாடுகிறோம் என்னும் தேசபக்தியுடன் விளையாட ஆரம்பித்தாலே
வெற்றிபெற வேண்டும் என்னும் வேட்கை அவனுக்குள் நிறையும்
அது இல்லாத காரணத்தால்தான் நம் விலையாட்டு வீரர்கள்
பயிற்சி சரியாக எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டு
அடுத்தவனைக் குறை சொல்லுவதில் குறியாய் இருக்கிறார்கள்
 
ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் உள்ளே இருக்கும் தேச பக்தி
 அனேகமாக இந்தியர்களிடம் மிகவும் குறைவு என்பதே உண்மை
 
தேச பக்தி இல்லாத எதுவுமே, அது விளையாட்டாக இருந்தாலும் சரி
வெற்றி பெறாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 1:28:22 AM8/12/08
to minT...@googlegroups.com
2008/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

தேச பக்தி இல்லாத எதுவுமே, அது விளையாட்டாக இருந்தாலும் சரி
வெற்றி பெறாது
 
 
நான் நினைக்கின்றேன் இந்த "பக்தி" என்பதே மிகவும் மலினப்பட்டு போய்விட்டதாக!
 
இந்தியா ஜெயித்தால் பெருமிதம் கொள்ளுவதற்குக்காரணம் false ego! அவ்வளவுதான். நெஞ்சில் கையை வைத்து தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தும் போதும் நாம் பக்தியை வளர்க்கவில்லை ஈகோவை வளர்க்கிறோம் அவ்வளவுதான் !
 
இதையறிந்துதான் விவேகாநந்தர் இந்திய இளைஞர்களை விளையாடச் சொன்னார், தண்டால் எடுக்கச் சொன்னார்.
 
நமது தத்துவங்களே நமக்கு எதிரி என்றும் சில நேரங்களில் தோன்றுகிறது. We became too intellectual and less physical! இந்திய ஆண்களையும், பெண்களையும் பாருங்கள்! தொந்தியும் தொப்பையுமாக! India is not healthy at all!!
 
நமது மீடியா நம் குழந்தைகளை, நம்மை தொலைக்காட்சிப் பெட்டிமுன் கட்டிப் போடுகிறது. மகுடி கேட்ட பாம்பு போல் இந்தியா கிடக்கிறது. இந்தியாவைக் கைப்பற்ற வேண்டுமெனில் "மகாபாரதம்" டிவியில் வரும் நேரத்தில் போங்கள் என்று விளையாட்டாகச் சொல்வார்கள்.
 
பக்தி எனும் இயக்கம் தோன்றக் காரணமே நாம் அதீத அறிவுஜீவிகளாக போய் கொண்டு இருந்ததே! இதே சாதனத்தை மீண்டும் இந்தியாவை முடக்கிப் போட பயன்படுத்துவது முரண்நகை!
 
முதலில் குழந்தைகளை விளையாடச் சொல்லுங்கள், இலட்சியக் கனவுகளை வளர்த்துவிடுங்கள். நாடு தானே முன்னேறும்!
 
கண்ணன்
 
 
 

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 1:29:13 AM8/12/08
to minT...@googlegroups.com
சமகால இந்தியன் ஓர் வெறுமையில் வாழ்கிறான். அவனுக்கென்று எந்த லட்சியக் கனவும் இல்ல
 
லட்ஷியக் கனகளுடன் அதற்காக வறுமையையும் பொருட்படுத்தாது
பயிற்சி செய்யும் எத்தனையோ விளையாட்டு வீரர்களின் கண்ணீர்க் கதை  இங்குண்டு,  அதற்கு அரசின் மெத்தனப் போக்கும், மக்களின் தேச பக்தியிலாத நிலையும் தான் காரணம்,
எந்த நாடுகளில் தேச பக்தி ,அல்லது தேச வெறி இருக்கிறதோ,
அந்த நாடுகளில்தான்,மக்களும், விளையாட்டு வீரர்களும் ,கவனிக்கப் படுகின்றனர், நாட்டு முன்னேற்றமும், மக்களின் முன்னேற்றமும் கவனிக்கப் படுகிறது,தேசபக்தியிலாத மக்களும், அரசாங்கமும் எதிலும் வெற்றியடைய முடியாது
இதுதான் யதார்த்தமான உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 


 
2008/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>


--
மனிதமும்,உலகமும் காப்போம்
அன்புள்ள

தமிழ்த்தேனீ



--
மனிதமும்,உலகமும் காப்போம்
அன்புள்ள

தமிழ்த்தேனீ

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 1:44:45 AM8/12/08
to minT...@googlegroups.com
நமது தத்துவங்களே நமக்கு எதிரி என்றும் சில நேரங்களில் தோன்றுகிறது. We became too intellectual and less physical! இந்திய ஆண்களையும், பெண்களையும் பாருங்கள்! தொந்தியும் தொப்பையுமாக! India is not healthy at all!!
 
 
அமெரிக்காவில், ப்ரான்சில், லண்டனில், அயல்நாடுகளில்
தொந்தியும் தொப்பையுமாக நிறைய பேரை பார்த்திருக்கிறேன்
நம் நாட்டிலாவது பரவாயில்லை ஓரளவு மீண்டும் கூறைக்கக் கூடிய அளவுக்குதான் பெருக்கிறார்கள்
ஆனால் அயல் நாடுகளில் இனி சிறுப்பதற்கு வாய்ப்பே இல்லாத அளவுக்கு
பிச்சாவையும், பர்கரையும் உண்டு விட்டு கோக் குடித்துவிட்டு
பெருத்துக் கிடக்கிறார்கள்
அதற்கும் தேச பக்திக்கும் என்ன சம்பந்தம்
 
 
பக்தி எனும் இயக்கம் தோன்றக் காரணமே நாம் அதீத அறிவுஜீவிகளாக போய் கொண்டு இருந்ததே! இதே சாதனத்தை மீண்டும் இந்தியாவை முடக்கிப் போட பயன்படுத்துவது முரண்நகை!
 
 
 
 
ஓடி விளையாடு பாப்பா என்றுதான் நம்மை ஊக்குவித்திருக்கிறார்கள்
கிருஷ்ண பரமாத்மாவின் சிறு வயது விளையாட்டுகளைச் சொல்லிதான்
வளர்க்கிறார்கள், ராமனின் சிறு வயது வீரம் சொல்லி வளர்க்கிறார்கள்
பக்தி நம்மை வளர்த்ததே தவிர அழிக்கவில்லை
பக்தி இலக்கியங்களை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல்
நாம் இன்னும் நம்மை அறிவு ஜீவிகள் என்று எண்ணிக் கொண்டு
திரிகிறோம் என்பதே உண்மை
 
இறை பக்தி, தேச பக்தி, போன்றவை நம்மைப் பண்படுத்துமே தவிர
பாழ்படுத்தாது
 
இன்றும் வெற்றி பெறும் ஒவ்வொரு நாட்டினரும்
ஆனந்தக் கண்ணீர் விட்டு உடனே மேலே பார்த்து இறைவனை வணங்கி
இறைவனுக்கு நன்றி சொல்லி. பூமியை தொட்டு கன்ணில் ஒற்றிக் கொண்டு பூமிக்கு நன்றி சொல்லும் காட்சிகளள கண்டுகொண்டேதான் இருக்கிறோம்
 
வளர்ப்பிலே தவறில்லை, ஆனால் வார்ப்பிலே பல தவறுகள் ஏற்படுகின்றன
 
அவைகளைக் களைய வேண்டும்\
அத்கை விடுத்து பக்தி என்பதே  நம்மை முடக்கிப் போடும் சாதனமாக நினைப்பதை முதலில் விடவேண்டும்

vj kumar

unread,
Aug 12, 2008, 1:46:49 AM8/12/08
to minT...@googlegroups.com
>
> சமகால இந்தியன் ஓர் வெறுமையில் வாழ்கிறான். அவனுக்கென்று எந்த லட்சியக் கனவும்
> இல்லை.


சிந்திக்க வேண்டிய கருத்து... அடிமையாய் இருந்த பொது அமுத சுரபி என
நாடு தோறும் பல சிந்தனையாளர்களும் அறிஞர்களும் வெள்ளம் போல
பெற்றெடுத்த நாடு - சுதந்திரம் வந்த பிறகு முடங்கி விட்டது ஏன்.

இந்த வெறும் வயிறு தானே அன்று சிந்தனை தீயை தேசம் எங்கும்
விளைத்து.... இன்றும் பட்டினி பஞ்சம் விட்டபாடு இல்லையே ... இருப்பினும்
பகுத்தறிவு ஆன்மிகம் கலை என்று செழித்த தேசம் கனவு கூட கானா வறண்ட
நிலமானது ஏன்.

சங்கிலிகள் முடக்கினால் தான் சிந்தனை பிறக்குமோ

vj kumar

unread,
Aug 12, 2008, 2:16:58 AM8/12/08
to minT...@googlegroups.com
On 8/12/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
>
> நீங்கள் இன்னும் உலகைப் புரிந்து கொள்ளவில்லை ;-)
>
> ஜெர்மனிக்கு எதிராக விளையாடிய துருக்கிய கால் பந்தாட்டு வீரர்களில் பாதிப் பேர்
> ஜெர்மனியில் தயாரானவர்களே!


இதை தானே நாங்கள் சொல்கிறோம்....பிந்திராவின் தந்தை அவருக்கு என
உலகத்தரம் வாய்ந்த பயிற்சி கூடம் அமைத்து கொடுத்தார்....விளைவு உங்கள்
எதிரில்....இப்படி அரசு அல்லது தனியார் துறை நிறுவனங்கள் செய்து
கொடுத்தால் நிலைமை மாறும். இருவரிடமும் இப்போது பணம் நிறைய்ய உண்டு -
அரசு செய்தால் நடுவில் உள்ள முதலைகள் உண்டபின் ஒன்றும் மிஞ்சாது
...அதனால் தனியார் துறையே ஒரே வழி

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 2:21:46 AM8/12/08
to minT...@googlegroups.com
நூற்றுக்கு நூறு!
 
 
தனி மனித பாங்கு (attitude) மாற வேண்டும்,
தனியார் துறை ஈடுபட வேண்டும்,
அரசு இடஞ்சல் செய்யாமல் இருக்க வேண்டும்!
 
கண்ணன்

2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>
On 8/12/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
>

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 2:27:54 AM8/12/08
to minT...@googlegroups.com
2008/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

 
ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் உள்ளே இருக்கும் தேச பக்தி
 அனேகமாக இந்தியர்களிடம் மிகவும் குறைவு என்பதே உண்மை
 
தேச பக்தி இல்லாத எதுவுமே, அது விளையாட்டாக இருந்தாலும் சரி
வெற்றி பெறாது
 
 
இந்தச் சேதியை வாசியுங்கள்!
 
 
இந்த அமெரிக்க வீரன் தனது சாதனைகளையே முறியடித்துக் கொண்டிருக்கிறான்! இதற்குக் காரணம் தனி மனித இலட்சியமே தவிர தேசபக்தி இல்லை!!
 
இந்தியா இன்னும் போக வீண்டிய தூரம் அதிகம். இப்போதாவது விழித்துக் கொண்டால் சரி.
 
சும்மா வில்லுக்கு விஜயன்னு கதை சொல்லிப் பயனில்லை. வில்லுக்கு விஜயனில்லை! கொரியன்!! :-))
 
கண்ணன்

jaa...@gmail.com

unread,
Aug 12, 2008, 3:43:39 AM8/12/08
to மின்தமிழ்
>வெறும்
மின்(சம்)சாரக்கனவுதான் இருக்கிறது! இந்தியா முதலில் சினிமா/மீடியா எனும்
பிசாசிடமிருந்து விடுபட வேண்டும்.

இது மிகச் சரியான வாதமெனப் படுகிறது. போதாக்குறைக்கு தோன்றும்
தொலைக்காட்சிகளும், அதே துறைக்கே ஆர்வப்படுத்தி அழைக்கின்றன. கருத்திற்
கொள்ள வேண்டிய கூற்று கண்ணனினுடையது.

On Aug 12, 6:32 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2008/8/12 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 3:56:35 AM8/12/08
to minT...@googlegroups.com
இந்தியா முதலில் சினிமா/மீடியா எனும்
பிசாசிடமிருந்து விடுபட வேண்டும்.
 
உண்மைதான் ஆனால் விளையாட்டு  ஆர்வலர்கள்
விளையாட்டுக்கு முதல் இடம் கொடுக்கிறார்கள்
மற்றவற்றிர்க்கு அடுத்த இடம்தான் கொடுக்கிறார்கள்
அது சரி நாமோ, அரசாங்கமோ விளையாட்டுக்கு
என்ன மதிப்பு கொடுக்கிறோம் என்பதே என் கேள்வி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2008/8/12 <jaa...@gmail.com>

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 4:02:41 AM8/12/08
to minT...@googlegroups.com
2008/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

இந்தியா முதலில் சினிமா/மீடியா எனும்
பிசாசிடமிருந்து விடுபட வேண்டும்.
 
உண்மைதான் ஆனால் விளையாட்டு  ஆர்வலர்கள்
விளையாட்டுக்கு முதல் இடம் கொடுக்கிறார்கள்
மற்றவற்றிர்க்கு அடுத்த இடம்தான் கொடுக்கிறார்கள்
அது சரி நாமோ, அரசாங்கமோ விளையாட்டுக்கு
என்ன மதிப்பு கொடுக்கிறோம் என்பதே என் கேள்வி
 
கடைசியாக பாயிண்டுக்கு வந்திட்டீங்க!
 
100 கோடி மக்களுள்ள இந்தியா நிற்க வேண்டிய இடமெங்கே?
இப்படி ஒரே ஒரு ஆளு ஒரு தங்கப்பதக்கம் வாங்கியவுடன் "மானம் காத்தான் பிந்திரா" என்று விழாவெடுக்கும் இந்தியா எங்கே?
 
இந்தியாவில் இனிமேல் யாரும் மேற்கோள் காட்டக்கூடாது, அதைச் செய்ய வேண்டுமென்று சட்டம் வந்தால் திருந்திவிடும் :-))
 
காந்தி சொன்னார்: "Be the change you wish to see in the world."  (அட! இதுவும் மேற்கோள்தான். ஆனால் அதைக் கடைப்பிடிக்கிறேன்)
 
கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 4:06:45 AM8/12/08
to minT...@googlegroups.com
மேற்கோள் காட்டுவது தவறல்ல
அது மேன்மையைத் தர வேண்டி
 
அன்புடன் 
தமிழ்த்தேனீ 

2008/8/12 Narayanan Kannan <nka...@gmail.com>

vj kumar

unread,
Aug 12, 2008, 4:31:47 AM8/12/08
to minT...@googlegroups.com
>
> இந்தச் சேதியை வாசியுங்கள்!
>
> http://sports.yahoo.com/olympics/beijing/swimming/news?slug=ap-swm-swimming&prov=ap&type=lgns
>
> இந்த அமெரிக்க வீரன் தனது சாதனைகளையே முறியடித்துக் கொண்டிருக்கிறான்! இதற்குக்
> காரணம் தனி மனித இலட்சியமே தவிர தேசபக்தி இல்லை!!
>

அப்போது ஒலிம்பிக் தர பட்டியலில் அவரது பெயர் மட்டும் தானே வர வேண்டும்
...அவரது நாடு ஏன் வருகிறது .... மேலும் பதக்கம் அளிக்கும் பொது எதற்கு
நாட்டின் கோடியை உயர்த்துகின்றனர்... அது தனி மனித லட்சியம் .... தனது
நாட்டின் குடி / கோடி உயர.....

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 4:37:29 AM8/12/08
to minT...@googlegroups.com
ஒவ்வொரு தனிமனிதரின் லட்ஷியமும் தன்னையும் உயர்த்திக் கொண்டு
நாட்டையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும்
என்பதே லட்ஷியம்
எங்கு தனி மனித அலட்ஷியம் இருக்கிறதோ
அந்த நாடும் முன்னேறாது, மக்களும் முன்னேற மாட்டார்கள்
தாயை மதிக்காதவனால் தாய்நாட்டை மதிக்க முடியாது
சொந்த மண்ணை 
மதிக்காதவனால் சொர்கத்தையும் மதிக்க முடியாது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 


 
2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>
>

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 4:38:55 AM8/12/08
to minT...@googlegroups.com
2008/8/12 vj kumar <vj.ep...@gmail.com>
மனிதன் வெறும் உயிரி மட்டுமல்ல. அவன் ஒரு சமூக ஜீவியும் கூட. முதலில் அவனுக்குப் பெயர் அடையாளமாகிறது. பின் குடும்பம் அடையாளமாகிறது. பின் ஜாதி அடையாளமாகிறது. பின் சமூகம் அடையாளமாகிறது. பின் இனம் அடையாளமாகிறது. பின் மொழி அடையாளமாகிறது. பின் தேசம் அடையாளமாகிறது.
 
இத்தனை அடையாளங்களுக்கும் அடிப்படை உயிரி இருப்பதே. முதலில் அது நினைக்க வேண்டும் "ஒலிம்பிக் ஒரு லட்சியக் கனவென்று". பின்னால், பின்னால் சொன்ன எல்லாம் கூடவே வரும்!!
 
பெண்கள் வாலிபால், அமெரிக்கக் கோச் ஒரு கொரியர்.
கனடா நாட்டு பல வீரர்கள் சீக்கியர்கள்.
 
இங்கெல்லாம் அடையாளங்கள் மாறுகின்றன..
 
க.

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 4:43:10 AM8/12/08
to minT...@googlegroups.com
பெண்கள் வாலிபால், அமெரிக்கக் கோச் ஒரு கொரியர்.
கனடா நாட்டு பல வீரர்கள் சீக்கியர்கள்
 
அடையாளங்கள் மாறுவதே இல்லை என்றுதான் நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்
இங்கும்  அந்தக் கொரியரின் தேசம் பெருமை அடைகிறது
சீக்கியரின் தேசமும்பெருமை அடைகிறது
உங்கலைப் போன்ற அறிஞ்ஞர்களால் சுட்டிக் காட்டப் படுகிறது பெருமையாக
அடையாளங்கள் எங்கு போனாலும் அழிவதில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/8/12 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 4:52:08 AM8/12/08
to minT...@googlegroups.com
2008/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

பெண்கள் வாலிபால், அமெரிக்கக் கோச் ஒரு கொரியர்.
கனடா நாட்டு பல வீரர்கள் சீக்கியர்கள்
 
அடையாளங்கள் மாறுவதே இல்லை என்றுதான் நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்
இங்கும்  அந்தக் கொரியரின் தேசம் பெருமை அடைகிறது
சீக்கியரின் தேசமும்பெருமை அடைகிறது
உங்கலைப் போன்ற அறிஞ்ஞர்களால் சுட்டிக் காட்டப் படுகிறது பெருமையாக
அடையாளங்கள் எங்கு போனாலும் அழிவதில்லை
 
 
இல்லையென்று சொல்லவரவில்லை! இந்த அடையாளத்தை விடமுடியாததுதான் மானுடத்தின் பிரச்சனையே :-)
 
ஆனால், உங்கள் பிள்ளையிடம் சொல்லிப்பாருங்கள், "பாரத தேசத்திற்காக நீ கால்பந்து விளையாட வேண்டுமென்று!" ஒன்றுமே புரியாமல் முழிப்பான் (சிறுவன் என்று கொள்க). சாதரணமாக காசு புழக்கத்தில் கூட 10,000 ரூபாய் வரை அதன் மதிப்பைப் புரிந்து கொள்ள முடியும். கோடி ரூபாய் என்றால் மனதிற்கு பிடிபடாது. எத்தனை முட்டைகள்!! தேசம், நாடு என்பது பெரிய அலகு!
 
அன்னையை வணங்கப் பழகினால்தான் அம்பாளை வணங்கமுடியும்!
 
அதுபோல், வீட்டில் விளையாட்டைத் தொடங்க வேண்டும். இன்றளவும் பிரேசில் நாட்டின் கால்பந்து உலகத்தரத்தில் இருப்பதன் காரணம் அது வீட்டில் தொடங்குகிறது. தேசபக்தியெல்லாம் அப்போது உதவாது! (அது பின்னால் வருகிறது. ஒருமுறை தோற்றுவிட்டு வந்த ஒரு விளையாட்டு வீரனை நாடு வந்தவுடன் சுட்டுக் கொன்றுவிட்டனர்! தேசியம் செய்யும் கொடுமை இது!)
 
க.
 
 

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 4:56:56 AM8/12/08
to minT...@googlegroups.com
வீடுயர நாடுயரும்
ஒப்புக் கொள்ளுகிரேன்
 
நம் பழக்க வழக்கங்கள் ,விளையாட்டுக்கள்
தற்போது அருகிவிட்டன
இந்தக் காலத்து பிள்ளைகளைப் பார்க்கும் போது
அனுதாபம் வருகிரது.அவர்கள் பொதி சுமக்கும்
யந்திரமாகி விட்டனர்
கள்ளம் கபடமற்று நம்மைப் போல விளையாட அவர்கலுக்கு நேரமே கிடைப்பதில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/8/12 Narayanan Kannan <nka...@gmail.com>
2008/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Aug 12, 2008, 8:33:46 AM8/12/08
to minT...@googlegroups.com


2008/8/12 Narayanan Kannan nka...@gmail.com
 
முதலில் குழந்தைகளை விளையாடச் சொல்லுங்கள், இலட்சியக் கனவுகளை வளர்த்துவிடுங்கள். நாடு தானே முன்னேறும்!
 
 
முதலில் பெற்றோர்கள் விளையாடுங்கள்.
கன்றுகள் பின்னால் தொடரும்
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

வேந்தன் அரசு

unread,
Aug 12, 2008, 8:42:55 AM8/12/08
to minT...@googlegroups.com


2008/8/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

வீடுயர நாடுயரும்
ஒப்புக் கொள்ளுகிரேன்
 
நம் பழக்க வழக்கங்கள் ,விளையாட்டுக்கள்
தற்போது அருகிவிட்டன
இந்தக் காலத்து பிள்ளைகளைப் பார்க்கும் போது
அனுதாபம் வருகிரது.அவர்கள் பொதி சுமக்கும்
யந்திரமாகி விட்டனர்
 
இதன் முதல் காரணம்
அடுத்து ஆடுகளங்கள் இல்லை
 
அடுத்து இந்தியாவின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் அமைச்சர் எவனும் இல்லை
 
தயானிதி மாறனை விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் ஆக்கினால் 2020 ல் இந்தியா பல தங்கங்களை அள்ளும்
 
பசுமை புரட்சிக்கு ஒரு தமிழன் போல்
மஞ்சள் புரட்சிக்கும் ஒரு தமிழன் வரவேண்டும்நம் உடல்வாகுவுக்கு சீனா எந்த துறைகளில் தங்கம் வெல்லுகிறதோ அதே துறைகளில் நாமும் கலந்து கொள்ளவேண்டும்.
 
அமெரிக்கா எடை தூக்குதலில் ஒரு தங்கமும் வெல்ல வில்லை. அவர்கள் உடவாகு மூங்கில் போல்.
 
 நமது புளியங்கொம்பு போல்
 

Tthamizth Tthenee

unread,
Aug 12, 2008, 9:53:43 AM8/12/08
to minT...@googlegroups.com
உண்மை
இதனை இதனால் இவண் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/8/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Aug 12, 2008, 12:32:33 PM8/12/08
to minT...@googlegroups.com
ஒரு இந்தியருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. வெள்ளி கிட்ட வேண்டிய வாய்ப்பு இவரின் சுமாரான மரக்குதிரை ஆட்டதால் வெண்கலமே வாய்த்தது
 
ராஜ் பவ்சார்
 

jaa...@gmail.com

unread,
Aug 12, 2008, 8:53:00 PM8/12/08
to மின்தமிழ்
கண்ணன்!
இங்கு சுவிற்சர்லாந்தில் ஒரு இளைஞனிடம் இந்த தேசபக்தி குறித்த பதில்
சற்று வித்தியாசமாக இருந்தது.அவனுக்கு எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே
எழுத்தில் தருகின்றேன்.

அண்ணை சுவிஸ் எனும் இந்த நாட்டின் முன்னேற்றம் எதுவென்று
நினைக்கின்றீர்கள்?

தெரியேல்ல சொல்லும் தம்பி

இங்கு 17 வயதுவரைக்கும் இருக்கும் பிள்ளைகளைக் கவனித்திருக்கின்றீர்களா?

ஓம் கவனித்திருக்கின்றேன். சரியான துடியாட்டமாக ( எங்கட பேச்சுத் தமிழில்
சொல்வதானால் குழப்படி)இருப்பார்கள்.

அதே குழப்படிகாறப் பெடியன 18 வயதுக்குப் பிறகு பார்த்திருக்கிறியளா?

ம்..ம்.. பாத்திருக்கின்றேன். ஆனால் முன்பிருந்ததற்கு நேரெதிராக
இருக்கின்றான்.

என்ன காரணம் தெரியுமா?

இல்லை நான் இதுவரை யோசிக்கவில்லை.

18வயதில் அவனக்கு வழங்கப்படும் கட்டாய இராணுவ சேவைப்பயிற்சி அடிப்படை
அவனை தேசத்துக்குரியவன் என்ற பொறுப்பை அவனிடத்தில் விதைக்கின்றது. அதை
ஆழமாகப் புரிந்து கொள்ளும் வகையில் நாட்டின் நற் பிரசையாக
பயிற்றப்படுகின்றான்.

ம்....யோசிக்க வேண்டிய விடயம்தான்.

இதன்பிறகு அவன் சொன்ன வேறுபாட்டை உன்னிப்பாகக் கவனித்தேன். அவன்
சொன்னது உண்மையாகவே பட்டது. அந்தப் பயிற்சிக்குப் பின் அவனது ஒழுக்க
உயர்வு நாடு சார்ந்தும் உருவாக்கம் பெறுகிறது. அதுதான் "குடி உயரக் கோன்
உயர்வானோ...?"

அன்புடன்
மலைநாடான்
On Aug 12, 7:28 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2008/8/12 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>
>

Narayanan Kannan

unread,
Aug 12, 2008, 9:06:30 PM8/12/08
to minT...@googlegroups.com
அன்பின் மலைநாடன்:

ஜெர்மனியிலும் இது உண்டு! ஆனால் அங்கு இந்த மாற்றத்தைக் காணவியலாது.
அவர்கள் போர் என்றாலே நொந்து நூலாய் போயிருக்கிறார்கள். அங்கு தேவாலயப்
போக்குவரத்தும் குறைவு (வட ஜெர்மனியில் முக்கியமாக). போர் எல்லாவற்ரையும்
மாற்றி இருக்கிறது!

சுவிஸ் இதுவரை எந்தப் போரிலும் கலந்து கொள்ளாத நாடு. அதனால் இருக்கலாம்.
ஸ்வீடன் நாட்டாரிடம் கேட்டால் வேறு கதை சொல்வர் (உலகிலேயே மிகவும்
அகிம்சை உள்ள நாடு அது).

கொரியாவிலும் இந்தக் கட்டாய இராணுவப் பயிற்சியுண்டு.

இராணுவப் பயிற்சி பலருக்கு பொறுப்பையும், நல்லலொழுக்கத்தையும் தரலாம்.
ஆனால் அடிப்படையாக இராணுவப் பயிற்சி என்பது கொலையாளிகளை உருவாக்கும்
பட்டறை. சம்மந்தமே சம்மந்தமில்லாமல் அமெரிக்க இராணுவ வீரர்கள்
வியட்நாமிலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் கொலையுண்டனர். பொதுமக்கள்
இப்போது யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

இராணுவப் பயிற்சி என்பதன் உளவியல் அடிப்படை "அடுத்தவனை நம்பாதே!" என்பது.
எனது இஸ்ரேல் நண்பன் சொல்வான் "எதிராளி என்னை மதிய உணவிற்கென்று
திட்டமிட்டால் நான் காலை உணவிற்கு அவனைப் பலியாக்கிவிடுவேன்" என்று. இந்த
மனப்பான்மைதான் நான்காம் உலகப்போருக்கான அடித்தளம் (கவனம்..கவனம்...)

தேசியம் என்பதற்கு வேறொரு கோணமுண்டு. தேசபக்தி என்ற சொல்லாடல்
'சுதந்திரம் வேண்டி தேசபக்தி கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் மட்டும்
பொருள் கொள்கிறது. மற்றபடி தேசிய உணர்வு என்பது மனிதனைப் பிரித்து
அல்லல்பட வைக்கும் உணர்வு.

நான் காந்தி வழி. இக்கருத்தில் பலர் உடன்படாமல் இருக்கலாம்.

அன்பே சிவம்.

கண்ணன்

2008/8/13 <jaa...@gmail.com>:

--
"Be the change you wish to see in the world." -Gandhi

தாரகை

unread,
Aug 13, 2008, 4:51:27 PM8/13/08
to மின்தமிழ்
தங்கப் பதக்கத்துக்குப் பின்னே...

இந்தியாவின் 108 வருடக் கனவு நனவாகி இருப்பதை நாம் பதிவு செய்யாமல்
இருந்தால் அதைத் தமிழ்கூறு நல்லுலகம் மன்னிக்காது. 29 வது ஒலிம்பிக்
போட்டி இந்திய சரித்திரத்தில் ஓர் அழுத்தமான நினைவாக, பொன்னெழுத்துப்
பதிவாக நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை. 1980ல் மாஸ்கோவில் நடந்த
ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை வென்ற பிறகு,
இப்போதுதான் மீண்டும் இந்தியா தங்கப்பதக்கம் வென்றிருக்கிறது. அந்த
வகையில் அபிநவ் பிந்த்ராவின் சாதனை ஒவ்வோர் இந்தியனையும் மகிழ்ச்சி
வெள்ளத்தில் ஆழ்த்தி இருப்பதில் வியப்பில்லை.

அபிநவ் பிந்த்ராவின் துணிவும், தன்னம்பிக்கையும், உறுதியும் ஆச்சரியப்பட
வைக்கிறது. ஒரு வருடம் முன்பு அந்த இளைஞனுக்கு ஏற்பட்ட முதுகு வலியையும்
பொருள்படுத்தாமல், ஜெர்மனிக்குச் சென்று இடைவிடாத பயிற்சி பெற்று
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் என்றால் அது அவரது
உழைப்புக்கும் உறுதிக்கும் கிடைத்த வெற்றி என்றுதான் கூற வேண்டும்.

உலக அரங்கில் 17வது இடத்தில் இருந்த பிந்த்ரா, முதல் இடத்தில் இருந்த
ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற சீனாவின் ஜு கினானையும்,
பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினெனையும் பின்னால் தள்ளி உலக சாதனை
படைத்திருக்கிறார். 1900 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா கலந்து
கொண்டாலும், தனிநபர் தங்கப் பதக்கம் பெற்றிருப்பது இப்போதுதான் என்பது
நிச்சயமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்.

துப்பாக்கி சுடுவதில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாகவே உலக அரங்கில்
முன்னேறி வருகிறது. காமன்வெல்த் போட்டிகளில் ராஜ்யவர்தன்சிங்
ராத்தோரும், கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அபிநவ் பிந்த்ரா
மற்றும் மானவ்ஜித்சிங் சாந்துவும், ஆசிய விளையாட்டுப் போட்டியில்
ஜஸ்பால் ராணாவும் துப்பாக்கி சுடுவதில் சாதனைகள் புரிந்து
வந்திருக்கிறார்கள். ஆயினும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை
படைப்பது என்பது நிச்சயம் கனவாகத்தான் இருந்தது.

நம்மால் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதை
நிரூபித்தாகி விட்டது. ஆனால் இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால், பழம்பெருமை
பேசுவதுடன் நின்று விடலாகாது என்பதுதான் நாம் அழுத்தமாக எடுத்துக்கொள்ள
வேண்டிய சூளுரை. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா
போன்ற பல்வேறு தட்பவெப்ப நிலையை உடைய ஒரு நாடு, ஒரு தங்கப் பதக்கத்தை
வென்றதுடன் திருப்தி அடைந்தால் எப்படி?

சீனாவுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் அழுகையே வருகிறது. நாம்
இப்போதைய ஒலிம்பிக் போட்டியில் ஒரு பதக்கத்தைப் பெற்றிருக்கும்
வேளையில் சீனா இதுவரை குவித்திருக்கும் தங்கப் பதக்கங்கள் 17. இதே
வேகத்தில் போனால் மொத்தப் பதக்கங்களின் பட்டியலில் அமெரிக்காவை சீனா
விஞ்சிவிடும் என்று தோன்றுகிறது. 1984-ஆம் ஆண்டு ஒலிம்பிக்
போட்டிகளில்தான் சீனா தனது முதன்முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.
இப்போது முதலிடத்துக்குப் போட்டி போடும் அளவுக்கு
வளர்ந்துவிட்டிருக்கிறது. அதற்குக் காரணம், துப்பாக்கி சுடுதல், பளு
தூக்குதல் போன்ற அதிகமாக போட்டியில்லாத பல விளையாட்டுகளை அடையாளம்
கண்டு, அதில் தனது வீரர்களுக்கு முனைப்புடன் பயிற்சி அளிக்கிறது சீனா.
விளைவு? சீனா தங்கப் பதக்கப் பட்டியலில் முதலிடத்துக்குப் போட்டிபோட
முடிகிறது.

கடந்த 2004 ஒலிம்பிக் போட்டியில், இதுவரை இந்தியா வாங்கியிருக்கும்
மொத்த ஒலிம்பிக் பதக்கங்களைவிட அதிகப் பதக்கங்களை 17 நாடுகள்
பெற்றிருந்தன. இதற்குக் காரணம் இந்தியாவில் திறமைசாலிகள் இல்லை என்பதல்ல
பொருள். திறமைசாலிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு முறையான பயிற்சி
அளிக்கப்படவில்லை என்பதுதான் அர்த்தம்.

நமது ரிக்ஷா ஓட்டுநர்களுக்கு முறையாகப் பயிற்சி அளித்தால், உலக அளவில்
சிறந்த சைக்கிள் ஓட்டும் வீரர்களாக முடியாதா? கேரள மாநிலம் தலைச்சேரி,
கண்ணூரைச் சேர்ந்த சர்க்கஸ் வீராங்கனைகள் முறையான பயிற்சி இருந்தால்
ஜிம்னாஸ்டிக்ஸ் பதக்கம் வெல்ல மாட்டார்களா? நமது இந்திய மீனவர்களில்
தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்தால் உலக அரங்கில் படகுப்
போட்டியிலும், நீச்சலிலும் பரிசுகளைக் குவிக்க மாட்டார்களா?

அரசுக்கு இதைப் பற்றிய அக்கறை வேண்டும். அதிகாரிகள் விளையாட்டுப் பயிற்சி
மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளாமல் இந்தியாவை உலக அரங்கில்
வெற்றியடையச் செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட வேண்டும்.
திறமைசாலிகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் போக்கு பொதுநல
விரும்பிகளிடமும், ஊடகங்களிடையேயும் வளர வேண்டும்.

இந்தியா வளர்ச்சி அடைகிறது, பொருளாதார ரீதியாக முன்னேறுகிறோம் என்று
மார்தட்டிக் கொள்வதால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்று வளர்ச்சி
அடைந்த நாடாகிவிட முடியாது. ஒருவகையில் ஒலிம்பிக் பதக்கங்களும் உலக
அரங்கில் நமது அந்தஸ்தையும் வளர்ச்சியையும் நிர்ணயிக்கின்றன என்பதை
மறந்து விடக்கூடாது. அபிநவ் பிந்த்ராவின் வெற்றி அதற்கு வழிகோலுமாக!

நன்றி: தினமணி

வேந்தன் அரசு

unread,
Aug 13, 2008, 5:04:35 PM8/13/08
to minT...@googlegroups.com
வாலடர் தேவாரம் போன்ற மீசை வச்ச ஆம்பிளைகளால் கூட தமிழகத்தை முன்னேற்றுவிக்க முடியாது
 
பெரும்பாலான அமெரிக்க வீரர்கள் பல்கலைகழக் மாணவர்கள்.  இங்கே, பல்கலை கழகங்கள் விளையாட்டை ஊக்குவிக்கின்றன.
 
நான் எம் .எஸ்சி நேர்முகத்தில் என்னுடைய விளையாட்டு சான்றிதழ்களை பார்க்கிறீகளா என்று கேட்டேன்
 
பேராசிரியர், " I am not a sport man" என்றதோடு எனக்கு இடமும் கிடைக்கலே. விளையாட்டு வீரர்களால் தேர்வு முடிவுகளில் சறுக்கல் ஏற்படும் என்ற நம்பிக்கை அவருக்கு.

Kannan Natarajan

unread,
Aug 13, 2008, 5:17:53 PM8/13/08
to minT...@googlegroups.com
கனிந்தது கனவு; திறந்தது புதிய பாதை!
 
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதன் மூலம், உலக அரங்கில் இந்தியாவுக்குப் புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளார் அபிநவ் பிந்த்ரா. பல காலமாகக் கண்டு வந்த கனவு, இன்று நனவாகியிருக்கிறது.

பிந்த்ராவுக்கு கோடிகளும், லட்சங்களும் குவிந்து வருகின்றன. தொழில்முறையில் விளையாட்டை மேற்கொள்ள விரும்பும் எண்ணற்ற இந்திய இளைஞர்களுக்கு பிந்த்ராவின் வெற்றி, நிச்சயம் உற்சாக டானிக்காக இருக்கும்.

அபிநவைப் போன்ற ஏராளமான இளைஞர்கள் "உறுதி கொண்ட நெஞ்சும், தினவு பெற்ற தோளுமாக," வெற்றி இலக்கை நோக்கிக் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆனால் உழைப்புக்கேற்ற உடல் உரம் இன்றி, களத்தில் இறங்கியவுடனேயே தோல்வியைத் தழுவுகிறார்கள்.

நம் விளையாட்டு வீரர்களின் தோல்வியில் மாபெரும் பங்கு வகிப்பது, உணவுப் பழக்கம். சத்துணவு இன்மையால் உடல் தளர்ந்து, உற்சாகம் குன்றி, தோல்வியைத் தழுவும் வீரர்கள் ஏராளம்.

விளையாட்டில் சாதனை படைத்தபிறகு வீரர்களுக்கு பணத்தையும், பரிசையும் அள்ளிக் கொடுக்கும் அரசு, அவர்களின் ஆரம்பகாலப் பயிற்சிக்கும், உணவுக்கும் ஒரு பைசாகூட கொடுப்பதில்லை என்பதே நிஜம்.

ஒரு மாணவனிடம் குறிப்பிட்ட விளையாட்டின் மீது ஆர்வமும், திறமையும் மறைந்திருந்தால், அதை வெளிக் கொண்டு வருபவர்கள் பெரும்பாலும் பெற்றோரே. தங்கள் கை காசைப் போட்டு பிள்ளைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முயற்சிப்பவர்களும் பெற்றோரே.

பள்ளியிலோ, கல்லூரியிலோ வாய்ப்புகள் கிடைத்தால், அதைப் பிடித்து முன்னேறும் இளைஞர்களே அதிகம்.

மாவட்ட, மாநில அளவில் சாதனை படைக்கும் விளையாட்டு வீரர்களில் பெரும்பாலானவர்கள், சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.

சத்தான உணவோ, தேர்ந்த பயிற்சியாளர்களோ இல்லாமல் மொட்டிலேயே கருகிப் போகும் வீரர்கள் பலர்.கொண்டைக் கடலைக்குக்கூட வழியில்லாமல், சாதாரண அரிசிச் சாப்பாட்டைச் சாப்பிட்டு பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீரர்கள், வீராங்கனைகள் ஏராளம்.

  • செஸ்,

  • துப்பாக்கி சுடுதல்,

  • நீச்சல்,
  • டென்னிஸ்

உள்ளிட்ட தனிநபர் விளையாட்டுகளில், பயிற்சி பெற்ற, திறமைவாய்ந்த பயிற்சியாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. நல்ல "கோச்" கிடைக்க வேண்டும் என்றால் வேறு மாநிலத்துக்கோ, மாவட்டத்துக்கோ செல்ல வேண்டியுள்ளது. நிறையப் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

நடுத்தர விளையாட்டு வீரனால் பயிற்சிக்காகப் பெருந்தொகையைச் செலவிட முடிவதில்லை. உயிர் சுருங்கி, உடல் நோக கடும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஜொலிக்கும் வீரர்களுக்கு, மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோதான் வெற்றி கிடைக்கிறது. சர்வதேச அளவில் சாதனை படைக்கும் அளவுக்கு அவர்களின் உடலில் வலு இருப்பதில்லை.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு, களத்திலிருந்தே விலகி வெற்றிக் கனவை தொலைத்துவிடுகிறார்கள். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்குப் பிறகு பயிற்சியாளர்களாக மாறிவிடுகிறார்கள்.

எல்லாத் தடையையும் தாண்டி, சர்வதேச அளவில் பிரகாசிப்பவர்கள் அபிநவ், விஸ்வநாதன் ஆனந்த், சானியா போன்று விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.

வெற்றிக்குப் பிறகு விளையாட்டு வீரர்களுக்கு பணமாகவும், பொருளாகவும் வாரி இறைக்கும் மத்திய, மாநில அரசுகள், விதையிலேயே வேரூன்ற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன்?

பழ மரத்தை நாடி வரும் பறவைகள்போல், வெற்றிக்குப் பிறகு ஏராளமான வாய்ப்புகள் தேடி வருவது இயல்புதானே. விதையிலிருந்து வேரூன்றி, செடியாகி மரமாவதுதான் கடினம்.

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமையைக் கண்டறிந்து உற்சாகமூட்டி, ஊக்குவிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் அக்கறை காட்டவேண்டும். தகுதியான வீரர்களின் உணவு, பயிற்சி, போட்டிகளில் பங்கேற்பதற்காகும் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.

இந்திய விளையாட்டு வீரர்களின் வெற்றி பகல் கனவாகப் போனதற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், கல்வி. விளையாட்டா, கல்வியா என்ற கேள்விக்கு, கல்வியே பிரதானம் என்பதே பெரும்பாலானோரின், நடுத்தர வர்க்க இந்தியர்களின் பதிலாக இருக்கிறது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் இளம் விளையாட்டு வீரர்கள், பயிற்சிக்காக கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. அதனால் மற்ற மாணவர்களைப் போல தினமும் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று படிக்க முடிவதில்லை. தினசரி சேரும் பாடச்சுமை அழுத்த, தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடுகிறது. அல்லது சராசரி மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற நேரிடுகிறது.

இந்தத் தோல்வியை, சராசரி இந்தியப் பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பொருளாதார ரீதியாகக் காலூன்ற "விளையாட்டைவிட படிப்பே மேல்' என்ற எண்ணமே பெரும்பாலான பெற்றோர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது. அதனாலேயே விளையாட்டில் திறமையும், ஆர்வமும் இருக்கும் வீரர்களில் பலர், படிப்புடன் ஒதுங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட வீரர்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டியது அரசின் கடமை. விளையாட்டு வீரர்களுக்கென தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்வதும், அவர்களின் வசதிக்கேற்ப தேர்வு எழுத அனுமதிப்பதும் அவசியம்.

இதற்காக அந்த வீரர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினருடன் பேசி, உரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிப்பதற்கு ஆகும் செலவு, ஆசிரியர்களுக்கான கூடுதல் ஊதியம் போன்றவற்றை அளிக்கவும் அரசு முன்வரவேண்டும்.

இரும்புபோல் உடலும், சாதனை படைக்கத் துடிக்கும் நெஞ்சமும் கொண்டவர்கள் நம் இளைஞர்கள். வறுமையும், வசதியின்மையும் அவர்களின் ஆர்வத்தை எந்தவிதத்திலும் அணைபோட அனுமதிக்கக்கூடாது.

 
இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள வெற்றியை, புதிய பாதைக்கான வாசலாக ஆட்சியாளர்கள் கருத வேண்டும். விளையாட்டுத் துறைக்காக கூடுதல் தொகையை ஒதுக்கி வீரர்களின் வாழ்க்கையை பிரகாசமாக்க வேண்டும்.
 
ஜி. மீனாட்சி
 
நன்றி: தினமணி

Narayanan Kannan

unread,
Aug 14, 2008, 10:49:43 PM8/14/08
to minT...@googlegroups.com
On 8/13/08, jaa...@gmail.com <jaa...@gmail.com> wrote:
கண்ணன்!
இங்கு சுவிற்சர்லாந்தில் ஒரு இளைஞனிடம் இந்த தேசபக்தி குறித்த பதில்
சற்று வித்தியாசமாக இருந்தது.அவனுக்கு எனக்கும் நடந்த உரையாடலை அப்படியே
எழுத்தில் தருகின்றேன்.
 
 
 
"இரண்டு அல்லது பல நாடுகளில் வாழும் குடியுரிமை அளித்தல், தன்னார்வத்துடனனான ஒருமித்த பண்பாட்டு பரிமாற்றம் ஆகியவாற்றினால் அந்த உலக ஒற்றுமை பலப்பட வேண்டும். தேசியம் தன்னளவில் நிறைகொண்டுவிட்ட, தனது தீவிரவாதத் தன்மையை இழந்துவிட்ட ஒன்றாகவும், இதற்கு மேல் தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத் தன்மை அற்றதாகிவிட்டது. இதற்கு மேல் நாம் அனைவரும் மானுடரே எனும் புத்துணர்வு மனித குலத்தை வழிநடத்தும்"
 
தேசியம் பற்றிய அரவிந்தரின் இக்கூற்று அப்படியே என் உள்ளுணர்வைப் பிரதிபலிக்கிறது.
 
சுவிஸ், ஸ்வீடன் பேசும் தேசியம் இத்தகையதாக இருக்கலாம். தீவிரவாதத்தன்மை இழந்த, சுதந்திரத்தை மதிக்கும் தேசியம் இனிவரும் காலங்களில் ஒளிவிடும் என்பது அரவிந்தரின் கணிப்பு.
 
கண்ணன்

 

vj kumar

unread,
Aug 17, 2008, 10:54:47 PM8/17/08
to minT...@googlegroups.com
Athens 2004.

http://www.rediff.com/sports/2004/aug/30oly-ind.htm

நான்கு வருடங்கள் ...மற்ற நாடுகள் பயிற்சிக்கும் வெற்றி வாகை அடையும்
முறை பற்றியும் சிந்தனை கொண்டு இருப்பார்கள்....நம்மர்வர்களோ சென்ற
முறையை விட நல்ல சாக்கு போக்கு சொல்ல கற்றுகொண்டிருப்பார்களோ ????

எதோ ஒரு தங்கம் கிட்டியது....குத்து சண்டையில் வெண்கலம் கிடைக்குமா ??

இந்த முறை என்ன நொண்டி சாக்கு பட்டியல் வருமோ ?

Reply all
Reply to author
Forward
0 new messages