துன்பம்

11 views
Skip to first unread message

sathish.oxygen

unread,
Jan 10, 2008, 7:19:55 AM1/10/08
to Tamil2...@googlegroups.com, minT...@googlegroups.com
 
இறைச்சிக் கடையைக் கடக்கும்பொழுது
கூடுதலாகத் துடிக்கிறது இதயம்
மலரைக் கிள்ளும்பொழுது
கூசுகிறது எலும்பு
விபத்துக் களத்தின் உறைந்த ரத்தம்
துயிலிரவைக் கலைக்கிறது
ஒழுகும் தர்மங்கள்மீது அசூயை ஊட்டுகிறது
வதைபடும் கைதியின் நொய்ந்த உடல்
வரவர
பொறுக்க முடியாமலாகிவிட்டது
மனசாட்சியின் அழுகை.


- மகுடேஸ்வரன்


--
-----------------------------------------------------------------------------------------------------------
நினைவுகளை சுவாசித்தலும்... சுவாசித்தல் நிமித்தமும்..

ஆக்சிஜன்  --> http://oxygen-sathish.blogspot.com

-----------------------------------------------------------------------------------------------------------

Thanks

Sathish K
------------------------------------------------------------------
Logic can be replaced by better logic.
But faith cannot be replaced by better faith.
-----------------------------------------------------------------

Vijay kumar

unread,
Jan 11, 2008, 12:46:31 AM1/11/08
to minT...@googlegroups.com

பல ஆண்டுகளுக்கு முன் விலையாட்டை ஆரம்பித்த ஒரு பரிமரர்ர்ரத்தின்  போது நண்பர் ஒருவருக்கு ஒரு போட்டி வைத்தோம். விதம் விதமான சூழ்நிலைகளில் கவிதை படிப்பது.. அப்போது கொடுத்த ஒரு நிலை - காதலில் தோல்வி உற்ற வாலிபன் ஒருவனது குமுறல் - தனது உயிர் காதலியின் திருமணத்தன்று ... அங்கு அவர்களுக்கு முதல் இரவு, இங்கு இவனோ ....


கட்டில் சூட்டோடு ஒரு காதல் வேகுதுங்க
ஏன் கண்மணி பரிமாற, அங்கு எவனோ பசியாற

Narayanan Kannan

unread,
Jan 11, 2008, 12:54:35 AM1/11/08
to minT...@googlegroups.com
2008/1/11 Vijay kumar <vj.ep...@gmail.com>:

> கட்டில் சூட்டோடு ஒரு காதல் வேகுதுங்க
> ஏன் கண்மணி பரிமாற, அங்கு எவனோ பசியாற
> >


காதல் கட்டிலோடு முடிந்துவிடுகிறது என்பது ஒரு புரிதல்.
கூட இருக்கும் போதுதான் காதல் என்பது கூட ஒரு புரிதல்தான்.

கமல் போல் சொல்ல வேண்டுமெனில் "அது இதையும் தாண்டிப் புனிதமானது!" :-)

கண்ணன்

Vijay kumar

unread,
Jan 11, 2008, 2:00:52 AM1/11/08
to minT...@googlegroups.com
ஊடல் கூடல் காதல் ... சிவபெருமானின் அழ்கிய சிற்ப வடிவம் ஒன்றை சமிபத்தில் கோவில் உழாவாரப்பணி குழுவில் கண்டேன்.
 
 
சிவகங்காதரா  என்னும் இந்த அற்புத சிற்ப வடிவம் - இத்தனை கங்கை கொண்ட சோழபுரதிலும் காணலாம். திருச்சி மலை கோட்டையில் உள்ள பல்லவ மகேந்திரனின் புகழ் பெற்ற சிற்பமும் இவ்வடிவமே.

தன் வளகறதால்  தனது ஜடையில் இரு ரோமங்களை சிவன் நீட்ட அதில் கங்கை இறங்கும் அற்புத சிற்ப வடிவம்  - ஆனால் நமது சிர்பியோ ஒரு படி முன்னேறி, இதை காணும் உமை பொறுக்காமல் சினத்துடன் அவிடத்தை விட்டு விலக ஒரு கால் வைக்க, தன் மற்ற இரு கரங்களாலும் சிவபெருமான் ஆசுவாசப்படுத்த முயல்வது போல், அற்புத கற்பனையுடன் செதுக்கி உள்ள அக்காட்சி அருமை.

gkc2.jpg
DSC00400.jpg

Narayanan Kannan

unread,
Jan 11, 2008, 2:26:39 AM1/11/08
to minT...@googlegroups.com
மிக்க நன்றி நண்பரே!

1.
இப்படங்களை உங்கள் விளக்கத்துடன் நமது வலைப்பதிவில் போடலாமா?
http://www.tamilheritage.org/blogcms/fotoblog.php

2.
இத்தனை இடிபாடுகளுக்கிடையிலும் ஸ்வாமியும், அம்பாளும் படு சுத்தமாக
இருக்கிறார்கள்! ஆச்சர்யம்தான்!
எனக்கு தஞ்சைத் தரணியில் பயணப்படும் போதெல்லாம், இதே உணர்வு.
இக்கோயில்களைக் கட்ட என்னவொரு சமூகத்திறன் உட்போகியிருக்க வேண்டும்!
எத்தனை மணி நேர மனித உழைப்பு! இதைப் போல் இப்போது கட்டமுடியுமா? இதை
ஒழுங்காகப் பராமரிக்கும் குணம் கூட நமக்கு இல்லாமல் போய்விட்டதே! என்
ஆதங்கத்தை வெளியிட்டு ஒரு திட்டம் தீட்டினேன்.

"ஆஸ்திக்கு ஒரு ஆலயம் ஆசைக்கு ஒரு அம்பலம்". நேரமிருந்தால் போய்
வாசியுங்கள். நாதியற்று இருக்கும் நம் கோயில்களுக்கு ஏதாவது செய்தே
ஆகவேண்டும்!
"வல்லமை தாராயோ!"

http://www.e-mozi.com/articles/adopTemp.html

3.
இது போன்ற இடிபாடுகளுடனுள்ள கம்போடிய இந்துக் கோயில் (இணைப்பு). இங்கும்
வழிபாடு நடக்கிறது. இதன் வீடியோவை இங்கு காணலாம்
http://www.youtube.com/watch?v=xZ2FAUSb_y8

அதன் இசை நமது ஜலதரங்கம் போலில்லை?

கண்ணன்


2008/1/11 Vijay kumar <vj.ep...@gmail.com>:

DSCF1475.JPG

Vijay kumar

unread,
Jan 11, 2008, 3:13:07 AM1/11/08
to minT...@googlegroups.com

எழுத்து பிழைகளை நீக்கி தாரளமாக இடுங்கள். இது போன்ற பல அறிய பொக்கிஷங்கள் உள்ளன. இதனை தன்னலம்கருதாமல் ஆராயும் தமிழ் அறிஞர்கள் பலர் உள்ளனர். திரு குடவாயில் பலசுப்ரமனியாம் அவர்கள் கடந்த மாதம் சிங்கப்பூர் வந்த போது தாராசுரம் கோவில் சிற்பம் ஒன்றை விளக்கினர்.

பெரிய புராண கதை ஒன்றை குறிக்கும் சிற்பம் அது. கதை கீழ்வருமாறு

மிக ஏழ்மையான குடும்பம். ஆனால் தமிழருக்கே உரிய பாணியில் விருந்தோம்பல் வழுவா நெறி படைத்தவர். தன் துணைவியாருடன் எளிய முறையில் வாழ் நடத்தி வந்தனர். சிவா பெருமானுக்கே உரிய பாணியில் அவர்களை சோதிக்க இடி மழை மிக்க ஒரு நாள் துறவி வேஷம் புனைந்து அவர் குடிசைக்கு யாசகம் கேட்டு வருகிறார். வீட்டில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை, என்ன செய்வது என்று அறியாமல் அவர்  திகைக்க, அம்மணியோ ( பெண் அல்லவா - புத்தி கூர்மை) காலையில் விதைத்த நெல்லை கூடை கொடுத்து வயலில் இருந்து அரித்து எடுத்து வருமாறு கூற, அவ்வாறே அவரும் சென்று எடுத்து வருகிறார். அம்மணி அதை சமைத்து - பரிமாற - அதுவும் எவ்வாறு - வந்தவர் பலகாமனையில் அமர, உணவை முக்காலியில் வெண் துணி போர்த்தி, தட்டு இட்டு, குருத்து வாழை இலை அதன் மேல் இட்டு அன்னம் படைகிறாள். சிவா பெருமான் ஒரு பிடி அன்னம் எடுத்து உண்ட

ஆனந்தத்தில் ஜோதி ஆகா மாறி ஒரு நொடி மறைந்து பின் உமை உடன் நந்திகேசவன் மேல் காட்சி அளிக்கிறார்.

இதனை ஒரு சிறு சிற்ப வடிவில் காட்டி உள்ள அச்சிற்பியின் ஆழ்த்த அறிவாற்றலும், கலை நுட்பமும் வெளி படுகின்றது. எத்துனை சிறியது என்பதற்கு அதற்கு ஒத்தார் போல் உள்ள வாலி வாதம் சிற்பத்தின் முன் உள்ள எழுதுகோலின் மூலம் அறியலாம். சிற்பத்தை காணுங்கள் - கதையை மூன்று பாகமாக பிரித்து - ( இடமிருந்த வலம் வருக) - முதல் பாகம் - சிரத்தின் மேல் கூடையில் விதை நெல், வாங்கும் இல்லத்தரசி. உணவு பரிமாறும் கட்சி - சிவனின் தலையில் சிறிய ஜோதி - அதற்கு அடுத்து சற்றே பெரிய ஜோதி - அப்புறம் பெரிய பிழம்பு. கடை காட்சி - அம்மை அப்பன் நதியின் மேல். ஆஹா.....



On 1/11/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
bopa13.jpg
vpans1.jpg

Narayanan Kannan

unread,
Jan 11, 2008, 3:22:38 AM1/11/08
to minT...@googlegroups.com
நன்றி விஜயகுமார்:

இது போன்ற படக்கதைகளைத் தேடித்தாருங்கள். வெளியிடுகிறோம். இது Photo
journal with a difference! நம் பண்பாட்டுக்கதைகள்.

முதல் படங்களை இட்டுள்ளேன். மற்றவை பின்.
http://www.tamilheritage.org/blogcms/fotoblog.php

கண்ணன்

2008/1/11 Vijay kumar <vj.ep...@gmail.com>:
>
>

Vijay kumar

unread,
Jan 11, 2008, 4:14:34 AM1/11/08
to minT...@googlegroups.com

படங்களின் பட்டியலில் சிறு மாற்றங்கள் தேவை. தனி மடல் அனுப்பி உள்ளேன்.

தமிழ் நாட்டில் பல்லவர் மற்றும் சொழார் கால சிற்பங்களை பற்றி எழுத ஒரு ஆயுள் போதாது, அறிஞர் பலர் ஆராய்ந்து தொகுப்புகள் வெளியிட்டுள்ளனர். எனினும் அவையும் நமது கோவில் மற்றும் பிற அறிய கலை பொருட்களோடு  கல்லூரி நூலங்கங்களிலும் அரசு அருங் காட்சியகங்களிலும் செல்லரித்து சிதைந்து போய்விட்டன. மல்லை போன்ற இணை இல்லா படைப்புகள் இருந்தும், இக்  காலத்து இளைஞர் கூட்டமோ மல்லைக்கு வேறு விசெஷங்கல்லுகு அல்லவா செல்லுகின்றனர்.

இந்த அறிய சிற்பமும்  தாராசுரத்தில்  உள்ளது. ஒரே சிலையில் இரு மிருகங்கள். எருதின் தலையை சற்றே மறைத்து நோக்கினால் யானை தெர்யும், யானையின் தலையை மறைத்தல் எருது......



On 1/11/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
cpp34.jpg

Tirumurti Vasudevan

unread,
Jan 11, 2008, 4:24:29 AM1/11/08
to minT...@googlegroups.com
முன்னர் அனுப்பிய இரு படங்களில் ஒன்று வாலி வதம் போல உள்ளது.

திவா

2008/1/11 Vijay kumar <vj.ep...@gmail.com>:


>
>
> படங்களின் பட்டியலில் சிறு மாற்றங்கள் தேவை. தனி மடல் அனுப்பி உள்ளேன்.
>

--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Vijay kumar

unread,
Jan 11, 2008, 4:31:42 AM1/11/08
to minT...@googlegroups.com

ஆம். இவை அளவில் மிக சிறிய சிற்பங்கள் என்பதை குறிக்கவே பெரிய புராண கதை சிற்பத்தை ஒத்த வாலி வதம் சிற்பத்தை காட்டி உள்ளேன். வாலி வதம் சிற்பத்தின் முன் உள்ள ஹீரோ பேனாவின் அளவை வைத்து சிற்பத்தின் நுணுக்கத்தை அறியலாம்.

Vijay kumar

unread,
Jan 11, 2008, 5:11:31 AM1/11/08
to minT...@googlegroups.com

தராசுரம் கோயில் ஒரு அறிய கலை பொக்கிஷம்.

இந்த சிலைகளை காணுங்கள். முருகன் மற்றும் வள்ளி தெய்வானை சிலைகள் இவை.

இவற்றின் அறிய அம்சம் இவற்றின் மூக்குத்தி மற்றும் காதணிகள் அணிய வழி செய்யும் துவாரங்கள். இன்றைய பாணியில் மேல் காதில் துவரம் மற்றும் மூக்குத்தி. மிக சிறிய துவாரத்தை ( ஒரு புல்லோ சிறு குச்சி மட்டுமே உள்ளே செலுத்த இயலும்) அச் சிற்பி எவ்வாறு அமைத்தான் என்பது ஒரு புதிர்.

muruga1.jpg
muruga2.jpg

venkatram dhivakar

unread,
Jan 11, 2008, 5:13:17 AM1/11/08
to minT...@googlegroups.com
அருமை விஜய்! தொடருங்கள்!!
 
திவாகர்

 

venkatram dhivakar

unread,
Jan 11, 2008, 5:15:18 AM1/11/08
to minT...@googlegroups.com
துன்பம் என்ற தலைப்பு கொடுத்துவிட்டு இன்பமாகவல்லவா தொடர்கிறது!!!
 
கண்ணன், தலைப்பைத் தனி இழையாக இட முடியாதா?
 
திவாகர்

 

meena muthu

unread,
Jan 11, 2008, 6:21:42 AM1/11/08
to minT...@googlegroups.com
அற்புதமாக இருக்கிறது விஜய்!!

2008/1/11 Vijay kumar <vj.ep...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2008, 9:49:38 AM1/11/08
to minT...@googlegroups.com


2008/1/11 Vijay kumar <vj.ep...@gmail.com>:


ஆம். இவை அளவில் மிக சிறிய சிற்பங்கள் என்பதை குறிக்கவே பெரிய புராண கதை சிற்பத்தை ஒத்த வாலி வதம் சிற்பத்தை காட்டி உள்ளேன். வாலி வதம் சிற்பத்தின் முன் உள்ள ஹீரோ பேனாவின் அளவை வைத்து சிற்பத்தின் நுணுக்கத்தை அறியலாம்.
 
அருமையான் தோது/.
சிற்பம் எத்த்னை பெரியது/சிறியது விளம்பும்.
 
 
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
Reply all
Reply to author
Forward
0 new messages