Re: [MinTamil] புலம் பெயர்ந்தவர்களைச் சுற்றியமர்ந்து ஆவலாய்...

49 views
Skip to first unread message
Message has been deleted

Tthamizth Tthenee

unread,
Apr 30, 2008, 12:43:55 PM4/30/08
to minT...@googlegroups.com
ஆஹா அருமையான சிந்தனை
 
என் மகனும் வெளி நாட்டில்தான் இருக்கிறான்,
நீங்கல் சொல்வது போல பிழைப்புக்காகவோ,அல்லது
நிர்பந்தம் காரணமாகவோ சொந்த மண்ணை விட்டு
வேரிடத்தில் வாழ்பவர்களின் மன நிலை, மிகவும் கொடுமையானது,அதர்கு நிறைய காரணங்கள் உண்டு
நம்முடைய நாட்டில் சரியான தகுதி ஊணர்தல் இல்லாத காரணத்தால், படித்த படிப்புக்கு இங்கு கிடைக்கும் வசதிகளுக்கு மேலே அதிகப்படியாக கிடைக்கும் உபரி வசதிகளுக்காக,
அல்லது உபரி வருமானத்துக்காக அயல் நாட்டில் சென்று
இயல்பாக வாழும் அத்துணை,உறவுகள், இன்பங்கள்,
அத்தனையும் விட்டு விட்டு  உலகத்தின் ஏதோ ஒரு மூலையில்
 திருமணம் ஆகும் வறையில் எப்படியோ மனதைக் கட்டுப் படுத்திக் கொண்டு காலம் தள்ளி விட்டு, திருமணம் ஆன பின்னர்,
மனைவிக்காகவோ,அல்லது குழந்தைகாளின் எதிர்காலம் கருதியோ, அந்த அயல்நாட்டின் நாகரீகத்திலும் முழுமையாக ஈடுபடமுடியாமல், அடிப்படை நாகரீகமான நம் நாட்டின் நாகரீகத்தையும் விடமுடியாமல்,படும் அவதிகள் ஏராளம்
இது ஒரு வகையில் மிகவும் கொடுமையே,
இன்னொரு பக்கத்தில் வெளி நாட்டுக்கு சென்று சம்பாதிக்கும்
பலர்  த்ன்னுடைய தாய் நாட்டுக்கு திரும்பும் போது
அவர்கல் கொண்டு வரும் அயல் நாட்டுப் பொருட்களின்
வரவை அதிகமாக எதிர் பார்க்கும் உறவினர்கள்
உண்மையான அன்புக்கு ஏங்கி அவர்கள் வருகிறார்கள்
என்பதை மறந்து விடும் அவலம் மிகவும் கொடுமை
 
அதே போல அயல்நாட்டில் குடியேறி அங்கும் சொந்த நாட்டிலும்
கால் பதிக்க முடியாமல் அவதிப்படும்  புலம் பெயர்ந்தோரின் நிலைமை இதை விடக் கொடியது
 
திரு ரங்கன் சொல்வது போல  திரு கண்ணன் போன்றவர்கள்
அவர்களின் தாபங்களை மனம் திறந்தால் 
இன்னும் நன்றாக உணர முடியும் என்பது உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
On 4/30/08, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
புலம்பெயர்ந்தோரின்  நிலை,  வாழ்க்கை,  அவர்களின்  அனுபவம்  அனைத்துமே  ஒருவித  இரட்டை  நிலப்பண்பு  கொண்டதாய்  விளங்குவது. ஏதோ  அவ்வப்பொழுது  உறவினர்  இருப்பதால்  சென்று  வருவோரின்  நிலை  வேறு. அவர்கள் எத்தனை  நாட்கள்  தங்கினாலும்  சொந்த  ஊரில்தான்  'வசிக்கிறார்கள்' என்று  கூட  சொல்லலாம்.  ஆனால் சிறுவயதிலோ,  அல்லது  ஒரு  காலகட்டத்தில்  நிரந்தரமாகவோ  சென்று  'அங்கேயே'  தங்கிவிட்டவர்கள்தாம்  புலம் பெயர்ந்தவர்கள் என்று  சொல்லுக்கு  நேர்  பொருளாய்  வரக்கூடியவர்கள்.  இதில்  அரசியல்,  சமுதாய  சூழ்நிலைகளால்  அகதிகளாய்  வெளிநாட்டிற்குச்  சென்று  தங்கியவர்கள் என்பவரைத் தனிவகையாகத்தான்  சிறப்புறச்  சொல்லவேண்டும்.  மற்றவர்களுக்கு ஏக்கங்கள்  மட்டுமே  பிரச்சனை என்றால்  இவர்களுக்கு   ஆறியும்  ஆறாதும்  இருக்கும்  வடுக்களும் ஏக்கங்களோடு  சேர்ந்து  பெரும்  சுமை.
 
பிறந்த  நிலம்,  அடைந்த  நிலம் என்ற  பிளவு  புலம்  பெயர்ந்தோரின்  உள  இயலின்  நில  அம்சத்தில்  ஊடுறக்கலந்தது என்று  சொல்லவேண்டும். இந்த  இடத்தில்  'நிலம்' என்பது  வெறும்  மண்திணிந்த  நிலனைப்  பற்றி  மட்டும்  குறிப்பிடுவது  அன்று. ஏன்?  மண் என்ற  அம்சம்  மிக  மங்கலாகப்  போகும்  அளவிற்கு  'பண்பாடு  திணிந்த  நிலன்',  'மரபு  திணிந்த  நிலன்',  'வரலாறும்  சமுதாயமும்  நினைவுகளும்  திணிந்த  நிலன்'  என்ற  நிலாம்சங்கள்  முன்னர்  வந்து  நின்று விடுகின்றன.  பிழைப்புக்காக  வெளிநாடு  சென்றவர்கள் ஏதேனும்  ஒரு  கணத்திலாவது  தங்கள்  பெரும்  சம்பாத்தியமும்  அர்த்தம்  அற்றுப்  போய்விடுவதாக   உணர்வர்.  சரி  மீண்டும்  சொந்த  நாட்டிற்கே  போய்விட்டால் என்ன என்று  நினைத்தால்  புது  நிலத்தின்  அம்சங்கள்  அப்பொழுதுதான்  தங்கள்  முக்கியத்துவத்தை  விளக்கி  நிலைநாட்டுவது  போல்  தெரியும்.  இல்லை  நிச்சயம்  போகமுடியாது.  மிக நிஜமாக  இருக்கக்  கூடிய  தங்கள்  'சொந்த  நிலம்' ஏதோ  ஒரு  விதத்தில்  மெய்யான  மண்பரப்பிலிருந்து  விலகி  நிற்கிறது.  இந்த  'ஏக்க  பூர்வமான  நிலத்திற்கும்',  விமானம்  கொண்டு  சேர்க்கும்  வரைபட  நிலப்பரப்பிற்கும்  இடையில் ஏற்படும்  இந்தப்  பிளவு,  இது  இரண்டின்  கலவையாக  சமயத்தில்  'கானல்  சோலையாகக்'   கண்ணில் தட்டுப்படவும்  செய்யும்.  இருந்தாலும் ஏக்கத்தால்  ஆன  இந்த  'சொந்த  நிலம்'  ஒருகாலத்தில்  வாழ்வில் ஏற்பட்ட  அனுபவத்தின்  விளைவுதானே?  பின்  கானலாகி  வெறும்  தோற்றமயக்கமாய்  முடிந்துவிட  முடியாதே.  இந்தப்  பிளவு  இடத்தை  இட்டு  நிரப்ப  இப்பொழுது  நல்ல  வேளையாக  ஒரு  சௌகரியம்  வந்திருக்கிறது.  அதுதான்  'மின்கானல்  மனப்பிரதேசம்' என்று  சொல்லக்கூடிய  'சைபர்  ஸ்பேஸ்'. ஏதோ  பரவாயில்லை என்ற  ஒரு  ஒட்டுவேலை  இப்பொழுது  சாத்தியம்தான்.

இந்த  சமயத்தில்  நினைவுக்கு  வருவோர் எனது உறவினர்கள்  பலர்.  நம்முடைய  கலாச்சாரத்தை  நாடி  அவர்கள்  கொள்ளும்  ஆர்வங்கள்  ஆச்சரியமாக  இருக்கும். ஏன்?  இவ்வளவு  சாதாரண  விஷயத்திற்கு  இப்படி  பரவசப்  பட்டுப்  போகிறார்கள் என்று.  அப்பொழுதுதான்  புரியவரும்  ஆஹா  இவர்கள்  தங்கள்  பூமியில்  பாவத்துடிக்கும்,  பூசாரத்தை  கிரஹிக்கத்  துடிக்கும்  வேர்களை  தங்கள்  கண்ணிலும்,  காதிலும்,  நாவிலும்  கொண்டு  தவிப்பவர்கள். இதை எழுதும்  இக்கணத்தில்  உருண்டு  வரும் என்  கண்ணீரைத்  துடைத்துக்கொள்ளத்தான்  வேண்டியிருக்கிறது.  இவர்கள்  ஒரு  விதத்தில்  அசோகவனத்துச்  சீதையாகத்  தான் எனக்கு  காட்சியளிக்கிறார்கள்.  புலம்  பெயர்ந்த  இத்தகையோரில்  கண்ணன்  குறிப்பிட்டுச்  சொல்லப்பட  வேண்டியவர்.  சச்சிதானந்தம்  வீட்டில்  சந்தித்தேன்.  சச்சியின்  போன்  கிரிப்டிக்காக  ஒலித்தது.  'அப்பா,  நீ  சந்திக்க  வேண்டிய  மனிதர்  இங்க என்  வீட்டில  வந்துருக்காருப்பா.  நம்மாழ்வார்னா  உசிரு.  உனக்கு  அதுக்கு  மேல  சொல்லவேண்டியதில்ல. எங்க  இருக்க எப்ப  வர?  காத்திருக்கச்  சொல்லியிருக்கேன்.'  சென்னை  பல்கலைக்கழக  நூலக  அடுக்குகளிலிருந்து  அந்தப்  பழைய  நூல்களின்  வாசனையை  விட்டுப்பிரிய  மனமில்லாமல்  சென்று  பார்த்தேன்.  பிறகு  நெடுநாள்  கழித்து  நான் எதேச்சையாக  கம்யூட்டர்  வாங்கி,  மின்னுலகில்  நுழைந்து  திரிந்து  பார்க்கும்  போழுது  'அப்பாடா!  புலம்  பெயர்ந்தவர்களுக்கு எத்தகைய   தண்ணீர்த்தொட்டியைத்  திறந்துவைத்துள்ளார்  இந்த  மனிதன். என்ன  காரணம்?  தான்  பட்ட  அந்த ஏக்கம்,  மருகிப்போகும்  தன்மை,  வாட்டம்  மற்ற  புலம்பெயர்ந்தோருக்கும்  சேர்த்து  தணித்து  வைப்போமே என்ற  ஒப்புரவு  தானே?   சரி  நீண்டு  கொண்டே  போகிறது. ஏன்  இந்தக்  கண்ணன்  போன்றோர்,  தங்களுடைய  அனுபவங்களை,  தாபங்களைப்  பற்றியெல்லாம்  இதில் எழுதக்  கூடாது?  கேட்பதற்கு  நாம்  தயார் என்றால்  அவர்கள்  சொல்லமாட்டார்களா?  வெளிதேசம்  போய்வந்தவரைச்  சுற்றி  ஒரு  கூட்டம்  பண்டைய  நாளில்  கிராமப்  புறங்களில்,  camp  fire  மூட்டி  உட்கார்ந்துகொள்வார்களாமே?  அது  போல்  கேட்க  நாம்  ரெடி.  நீங்க  ரெடியா?      


Narayanan Kannan

unread,
Apr 30, 2008, 7:56:13 PM4/30/08
to minT...@googlegroups.com
அன்பின் ரங்கன், தேனீ:

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. தேனீயார் சொல்வது போல் மிக அருமையான
சிந்தனைகளை உதிர்த்து இருக்கிறார் ரங்கன்.

பல நாடுகள் சுற்றி பட்டறிவில் தோன்றும் சிந்தனைச் சுடர்களை எண்ணி ஒரு சுய
ஷொட்டுப் போட்டுக் கொள்ளும் போது நாலு ஊர் கூடத் தாண்டாமல், உள்ளூரில்
இருந்து கொண்டு, "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" எனும் மகான்களை எண்ணி
எப்போதும் வியக்கிறேன். எங்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடும் அந்தப்
பான்மை என்னே? சட்டென பிஜி மக்களுக்காகக் கண்ணீர் விட்ட பாரதிதான்
நினைவிற்கு வருகிறான்.

எப்படி ஐயா! இப்படிப் புலம் பெயர் வாழ்வின் திரிசங்கு நிலமையை அப்படியே
படம் பிடித்துக் காட்டுகிறீர்? இதற்கு extra sensitivity வேண்டும்.
அற்புதம்! ஒரு நல்ல இழைக்கான ஆரம்பம் இது. "புலம் பெயர்ந்தோர் புலம்பல்"
:-)

அசோகவனத்துச் சீதை! என்ன அற்புதமான உவமை! அங்கு சீதை மாயமானுக்காக புலம்
பெயர்ந்தாள். இங்கும் அதுதான் :-) அங்கு அவள் இராமனுக்காக ஏங்கினாள்.
இங்கு நாங்களும் ஒரு 'மெய்நிகர் இந்தியாவிற்காக' ஏங்குகிறோம். ஆனால் அது
நிஜமாகாமல் நிழல் நிஜமாக இருப்பது, அசோகவனத்தை குத்தகைக்கு எடுக்க
வேண்டிய நிலைக்கு தள்ளிவிடுகிறது! பலர் இப்படி வாழ்நாள் குத்தகைக்கு
எடுத்து அவதிப்படுகின்றனர். எனக்குத் தெரிந்த பல அமெரிக்க நண்பர்கள்.
பச்சை அட்டை வரை வருகிறார்கள். இந்தியக் குடியுரிமையை விட்டுக்
கொடுப்பதில்லை. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒருகால்.இது விரிவாக அலச
வேண்டிய தலைப்பு. இத்துடன் குமரன் மாஸ்டர் தரும் மண்ணின் குரல்
பகுதிகளையும் சேர்த்துக் கொண்டு அலசலாம்.

எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதிக்கு "நிழல்வெளி மாந்தர்" என்றே
தலைப்பிட்டேன். இப்போது இப்படியொரு கூட்டம் கிளம்பியிருக்கிறது.
இவர்களுக்கு மெய்நிகர் வாழ்வு என்பதே மெய்யான வாழ்வாக மாறிப்போனது! அதன்
தலமைக் குடிமகன் நான் :-) நிழல்வெளி இல்லையேல் வாடிப்போயிருப்பேன்!

நான் சச்சிதானந்ததிற்கு நன்றி சொல்ல வேண்டும். சென்னை போன்ற கோடி மக்கள்
வாழும் ஊரில் ஒரு ரத்தினத்தைக் கண்டு பிடிப்பது கடினம். அந்த வேலையைச்
சுளுவில்லாமல் செய்துவிட்டார் மனிதர். ரங்கன் கூட இருப்பது மரபு கூட
இருப்பது போன்றதோர் உணர்வு!

எங்கள் நிலமையை விளக்கும் வண்ணமே நிழல்வெளி செயல்படுவதும் ஆச்சர்யமே.
உதாரணமாக நான் கொரியாவை விட்டுக் கிளம்பும் முன் உங்களுடன் பேசினேன். அது
ஒரு எதிர்காலம், பிற்காலத்துடன் பேசும் பேச்சு. ஒரே நாளில் ஆயிரம்
மைல்கள் கடந்து பெரு போன்பின் பேசினேன், அப்போது கடந்த காலம்,
எதிர்காலத்துடன் பேசும் பேச்சாக அது மாறிப் போனது! எங்கள் வாழ்வும்
இப்படித்தான். கடந்த காலமான இந்தியா, எதிர்காலமான மேலைத்தைய வாழ்வு
இதற்கிடையில் உழல்கிறது. இவ்விரண்டு புலங்களையும் இணைப்பது போல் மரபு
தொடு கயிறு அளிக்கிறது!!

கண்ணன் போன்ற பலரும் இங்குண்டு. எல்லோரையும் இங்கு பங்களிக்க அழைக்கிறேன்!

கண்ணன்

2008/5/1 srirangammohanarangan v <ranga...@gmail.com>:


>இவர்களுக்கு ஆறியும் ஆறாதும் இருக்கும் வடுக்களும் ஏக்கங்களோடு
> சேர்ந்து பெரும் சுமை.

>'பண்பாடு திணிந்த நிலன்', 'மரபு திணிந்த நிலன்', 'வரலாறும்
சமுதாயமும் >நினைவுகளும் திணிந்த நிலன்'

>இந்த 'ஏக்க பூர்வமான நிலத்திற்கும்', விமானம் கொண்டு சேர்க்கும்


வரைபட >நிலப்பரப்பிற்கும் இடையில் ஏற்படும் இந்தப் பிளவு,

> 'மின்கானல் மனப்பிரதேசம்' என்று சொல்லக்கூடிய 'சைபர் ஸ்பேஸ்'.

> இதை எழுதும் இக்கணத்தில் உருண்டு வரும் என் கண்ணீரைத்


> துடைத்துக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இவர்கள் ஒரு விதத்தில் >அசோகவனத்துச் சீதை

>சச்சிதானந்தம் வீட்டில் சந்தித்தேன். சச்சியின் போன் கிரிப்டிக்காக

srirangammohanarangan v

unread,
May 1, 2008, 1:14:13 PM5/1/08
to minT...@googlegroups.com
ஆம்   புலம் பெயர்ந்தோர் என்று  பலர்  இருக்கின்றனர்,  இந்த  மின்தமிழிலேயே.  உண்மை.  ஆனால்  அவர்கள் எல்லாம்   நாம்   பட்ட  பாட்டை எதற்கு  பொதுவெளியில்  ஆற்றுவது?  நம்மோடு  போகட்டும் என  நினைக்கலாம்.  தம்  சொந்த  விஷயம் என  நினைத்து  அதன்  கீழ்  வருவது  தனி.   ஆனால்  எந்த  பாட்டிலும்,  அவஸ்தையிலும்  ஒரு  பொதுமையும்  இருக்குமே  அதைப்பற்றிக்  கூறலாம். ஏனென்றால்  இது  யாவருக்குமே  ஒரு    உள்ளம்,  சமுதாயம்,  வாழ்நிலை  இவை  சம்பந்தப்பட்ட  ஒரு  புது  அனுபவ வரிசைதான்.  சிறிது  நின்று  நிதானித்துப்  பார்த்தால்  பெரும்  அக்கறைக்குரிய  விஷயமாகப்  படுகிறது.   உண்மையில்  எட்வர்ட்  செயித்  போன்றோர்   ஓரளவுக்கு   தங்கள்   கவனத்தை  இந்த  இருநிலப்  பகுப்புண்ட  மனத்தன்மையின்  பால்  செலுத்தியிருக்கின்றனர்.  ஆயினும்   இதில்  பல  ஸ்ருதி  பேதங்கள்  உள்ளன.   உதாரணமாக  'புலம்  பெயர்ந்தவர்' என்ற  பெயரே  ஏதோ   ஒரு  நாடு  விட்டு  ஒரு  நாடு  அகதிகளாய்ப்  போகநேர்ந்தவரை  மட்டும்  குறிப்பது என்ற எண்ணம்  வரக்கூடும்.   ஆனால்   இந்த  சொற்றொடர்   விரிந்த  பொருள்  உடையது என்று  நினைக்கிறேன்.   திருத்தமோ,  ஒப்புதலோ  அளிக்க  நினைப்பவர்கள்  அளிக்கலாம்.  இந்த  சமயத்தில்  என்ன  காரணத்தாலோ   அந்தப்  பழைய  பாட்டு  நினைவுக்கு  வருகிறது.  ' எந்த  ஊர் என்றவனே 
இருந்த  ஊரைச்  சொல்லவா '.  இந்த  இடத்தில்  ஆழ்வாரும்,  ஆசாரியரும்   சொன்ன  சில  வார்த்தைகள்  நினைவுக்கு  வருகின்றன.  இப்படி எழுத  சிறிது  அச்சமாய்  இருக்கிறது. ஏனென்றால்   இவ்வாறு  எழுதினால்  உடனே   விஷயத்தின்  போக்கு  ஏதோ  பஜனைமடம்  போல்  சாயம்  பூசிக்கொள்கிறது.  உடனே  ஆஹா  பெருமாள்  உம்மாச்சி  ஆ  ஊ என்ற  கர்புர்கள்    நினைவில்  பதிந்தவண்ணமெல்லாம் எழுந்து   முன்நிற்கின்றன.  சரி  அதையெல்லாம்  தவிர்த்து  நான்  காட்டும் எடுத்துக்காட்டைப்  புரிந்துகொள்ளுங்கள்.  நீங்கள்  அப்படியெல்லாம்  சார்பாகச்  சரிந்துகொள்ள  மாட்டீர்கள் என்ற  நம்பிக்கை.   அதாவது  ஆழ்வார்  சொல்கிறார்,  கடவுள்  இங்கு  வந்து  பிறக்கும்போது  'ஆதியம்  சோதியுருவை  அங்கு  வைத்து  இங்கு  பிறக்கிறான்' என்று.  அப்பொழுது  அவனுக்கும்   இருநிலப்  பகுப்பான  மனத்தன்மை  இருக்குமோ?    பராசர  பட்டர்  சொல்கிறார்,   'விண்ணுக்கும்  மண்ணுக்கும்  ஒரு  சுழல்  படிக்கட்டு  கட்டிவிடுவேன்' என்று.  இந்த  மனத்தன்மை   நிறைவு எய்த  அதுதான்  வழியோ?
சரி  அது  போகட்டும்  நமது  கண்டம்  விட்டு  கண்டம்  பிரச்னைக்கு  வருவோம்.  அந்த  அகண்டம்  பற்றியெல்லாம்   இப்பொழுது எதற்கு  அகட  விகடம்?
2008/5/1 Narayanan Kannan <nka...@gmail.com>:
அன்பின் ரங்கன், தேனீ:

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. தேனீயார் சொல்வது போல் மிக அருமையான
சிந்தனைகளை உதிர்த்து இருக்கிறார் ரங்கன்.

Tthamizth Tthenee

unread,
May 1, 2008, 1:36:52 PM5/1/08
to minT...@googlegroups.com
ஒருவனைப் பற்றி ஓரகத்திரு என்று சொல்லுவார்கள்
எப்போது நம்மால் அதையே செய்ய முடியவில்லையோ
அதுவே புலம் பெயர்ந்ததுதானே...!
 
புலம் பெயர்ந்தால் என்ன.......
புலன் பெயர்ந்தால் என்ன இரண்டுமே
பெயர்தல் தானே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Narayanan Kannan

unread,
May 1, 2008, 8:22:03 PM5/1/08
to minT...@googlegroups.com
மோகமுள் 1

எப்போது எனக்கு வெளிநாடு போக வேண்டுமென்ற ஆசை வந்தது?

நிச்சயமாக பள்ளிப் பருவத்தில் இல்லை. சிறு கிராம வாழ்க்கை. தாய் வீட்டை
விட்டு நாலு இடத்திற்குப் போக மாட்டார்கள். தந்தை இரண்டு மாவட்டங்களுக்கு
மேல் பயணப்பட்டிருக்க மாட்டார்? இச்சூழலில் வெளிநாட்டு பற்றிய கனவெல்லாம்
இல்லை. ஆயினும் அப்போது சிங்கப்பூர் பற்றிய கதைகள் வந்து சேரும். அது
சொர்க்கபுரி என்பது போன்ற பேச்சு. பர்மாவிலிருந்து ஒரு குடும்பம்
வந்திறங்கி சமூக சேவைகள் செய்து கொண்டு இருந்தது. பர்மாக்கார அம்மா என்ற
அந்த நெடிதுயர்ந்த மாது, மிக அழகான வெள்ளை கதராடையில் இன்னும் கண் முன்
ஆச்சர்யமாக நிற்கிறார்.

இச்சூழலிருந்து, தாய் தந்தையரை ஊரில் இழந்துவிட்டு அக்காவுடன் மதுரை வந்த
போது அது ஏதோ நியூயார்க் போல இருந்தது. முதன் முறையாக உதட்டளவில்
ஆங்கிலம் பேசும் மாணவர்களை அமெரிக்கன் கல்லூரியில்தான் சந்தித்தேன்.
ஆங்கிலம் சொல்லித்தந்த வசந்தன் அப்படியே ஒரு ஆங்கிலேயன் போல் நடந்து
கொள்வார். அவரது உச்சரிப்பு, நடை, உடை பாவனை, ஆங்கிலக் கல்வி இவை முதன்
முறையாக வெளிநாட்டு மோகத்தை என்னுள் விதைத்தது.

(தொடரும்)

Chandra sekaran

unread,
May 2, 2008, 10:46:43 AM5/2/08
to minT...@googlegroups.com
A poetry I wrote for some competition some months before, about Pulam peyarndha Thamizhar!!
I am attaching another document with few more poems which also sings this plight.
 
You can view it if you set your browser settings to View|encoding|unicode(utf-8)
 
சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்!

பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே
 அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்டு கண்ணுறங்கு..!
 அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே
 அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்?

ஆண்: இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே
 இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி
 இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான்
 இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்!

பெண்: உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு
 உய்யாரமாயுலவ உயர்தர பிளைமூத்தூ!
 உக்கார்ந்து சாப்பிடவே உயர்ந்த ரகம் நாக்காலி
 உலகம் மறந்திடவே ஒரு சாண் சொகுசு மெத்தை

ஆண்: உண்மையை நானுரைச்சா, உன் தூக்கம் போகுமடி
 உசுரிருந்தும் இல்லாதான் போல ஒரு வாழ்க்கையடி
 உள்ள தள்ளும் உணவெல்லாம் உழைச்சு நான் பணிசெய்ய
 உன்ன காண வாரையிலே, உன்னதப் பொன் சேர்த்திடவே..

பெண்: புள்ள பேரு வெக்கையிலே, சோறூட்டும் போதினிலே
 அள்ளிக் கொஞ்ச வாராம அய்ய என்ன வேலையதோ
 தெள்ளுதமிழ் பேசுதய்யா, மழலை மழை பெய்யுதய்யா
 கொள்ளையழகு காணவாச்சும் எப்போநீ வாரீக?

ஆண்: காலையெது மாலையெது எக்கணமும் தெரியாம
 வேலையொண்ணே வேதமென வேதனைகள் நான்மறந்து
 லீலைசெய்யும் மாயமது கைநிறையக்காசிருந்தா
 சோலையாகும் நம்வாழ்வு சொல்லிடுவேன் சத்தியமா

பெண்: காசுமட்டும் போதாது கடுதாசு நிதம் போடுமய்யா
 காதல்மட்டும் மாராம கவலைகள் ஏறாம
 கானலிலே கால் பரப்ப கனிவுடனே போனமாமன்
 கணநொடியில் வந்திடுவான் கண்மணியே கண்ணுறங்கு

ஆண்: ஊர்பேச்சு கேக்காத, உடன்பிறந்தார் ஏசாத
 உண்மையன்பு உள்ளமட்டும் உலகமது நம்ம கையில்
 உயிர் உனையே உள்ளவெச்சு உமிழ்நீர் பருகிவர்றேன்
 உடன் இருக்க ஓடிவர்றேன், பாப்பாகிட்டச் சொல்லிவெய்யி!
 
Regards
Chandrasekaran

--
Regards
Chandrasekaran

To save culture & heritage visit:
www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com

to do your bit to uplift the society visit
www.dreamindia2020.org

and Tamil readers visit my blogs

http://maraboorjc.blogspot.com
http://sirichuvai.blogspot.com
poems for pulampeyarndhathamizhar.doc

srirangammohanarangan v

unread,
May 2, 2008, 11:36:18 AM5/2/08
to minT...@googlegroups.com
கண்ணன்,!  சந்திரசேகர்!   அருமையான   நினைவுகளும்  பாடல்களும்.  ஆஹா   'தெள்ளுதமிழ்ப்  பேசுதையா'   மழலையைச்  சொன்ன  விதமே   கோடி  பெறும்.
 
ஆமாம்  கண்ணன் ஏன்  சந்திரசேகரின்  இடுகையை  ஸ்பேம் என்று   பிரிக்கிறது  கூகிள்  தெரியவில்லை. 
 
ஐயா  உங்கள்  நினைவின்  ஆலாபனைகளைக்  கேட்க எங்கள்  ஆர்வம்  முந்திக்கொண்டே இருக்கும்.

2008/5/2 Narayanan Kannan <nka...@gmail.com>:

Narayanan Kannan

unread,
May 2, 2008, 10:25:22 PM5/2/08
to minT...@googlegroups.com
மோகமுள் 2

ஆங்கிலச் சூழல் அறவே இல்லாத கிராமத்து வாழ்வில் கடல் கடந்து போகும்
ஆசைகள் துளிர்விட்டிருக்குமோ? என்று இத்தொடர் எழுதும் போது யோசித்துப்
பார்க்கிறேன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது உண்மைதான்.
நான் அறிவியல் மாணவன் என்பது அப்போதே தெரிந்துவிட்டது. ஆயினும்
மானுடவியல் படிக்கும் போது பூகோளம், சரித்திரம் என்னைக் கவர்ந்தன.
குறிப்பாக ஜப்பான், ஜெர்மனி என்ற இரு நாடுகள் முற்றும் அழிவுற்ற பின்னும்
பீனிக்ஸ் பறவை போல் சாம்பலிலிருந்து உயிர் பெற்றுக் கிளம்பி உலகை
அதிசயக்க வைத்தது பள்ளி மாணவனான என்னையும் அதிசயக்க வைத்தது. பம்பரம்
சுற்றி, சடுகுடு விளையாடிக் கொண்டிருந்த அந்த மாணவனுக்கு இவ்விரு
நாடுகளும் அவனது இரண்டாம் அகமாகப் போகின்றது என்பது அப்போது தெரியாது.
ஆயினும் குழந்தையிலிருந்து பயணப்பட வேண்டுமென்பதில் கண்ணனுக்கு
விருப்பமே. அப்பா, அம்மா எங்காவது வெளியூர் போகிறார்கள் என்றால் கூட
வருவேன் என்று அடம் பிடிப்பதில் முதல் ஆள் இவன்தான். 6 குழந்தைகள் உள்ள
வீட்டில் போட்டி அதிகம்தான். ஆயினும் இவன் ஆண் பிள்ளை என்ற ஒரே
காரணத்திற்காக பெரும்பாலான பயணங்களில் இவனுக்கு இடம் கிடைக்கும். பின்
பள்ளியிலிருந்து சுற்றுலா என்றால் எப்படியாவது காசு வாங்கிக்
கட்டிவிடுவான்! எனவே அப்போதே தொலை தூரப் பயணம் தொடங்கி விட்டது :-)
எத்தனைமுறை மதுரை, அழகர்கோயில், திருப்பதி போயிருப்பான் என்று தெரியாது.
இவை தொலைதூரமா? என்று கேட்கக் கூடாது. ஒரு சிறுவனின் கண்ணோட்டத்தில்
ஓரிரவுப் பயணம் என்பது தொலைதூரமே! ஆக, இப்படி காலில் சக்கரத்தைக் கட்டிக்
கொண்டு அலைதல் அன்றே தொடங்கிவிட்டது என்றுதான் தோன்றுகிறது!

ஆயினும் அதற்கொரு உருவம் கொடுத்து ஆசையை வளர்த்துவிட்டது அமெரிக்கன்
கல்லூரிதான். வசந்தனுக்குப் பிறகு மிஸ்டர் பூன் எனும் அமெரிக்கர்
ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தார். அவரும், அவரது இளம் மனைவியும் நாங்கள்
தங்கிருந்த கோசாகுளம் புதூரில்தான் குடியிருந்தனர். எனவே மாலை நேரங்களில்
அவருடன் உறையாடுவதுண்டு. அப்போதிலிருந்து இந்த அமெரிக்க ஆங்கிலப்
பலுப்பல் என்னிடம் ஒட்டிக் கொண்டுவிட்டது. இப்போது கூட பலர் என்னிடம்
கேட்பர் நீங்கள் அமெரிக்காவில் வசித்ததுண்டோ? என்று. பேரா.ரீஸ் என்பவர்
அறிவியல்துறைத் தலைவர். அவர் மாணவர்களை எப்போதாவது அழைத்து வீட்டில்
உபசரிப்பதுண்டு. முதுகலைத்துறை பேராசிரியர் பெர்லின் அப்போதுதான்
அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவரது பேச்சு, சகஜமாகப் பழகும்
மனோபாவம் இவையெல்லாம் வெளிநாடு போனால் ஒரு நளினத்துவம் வந்து சேரும் என்ற
ஆசையை வளர்த்தன. முதுகலைப் பாடம் சொல்லிக் கொடுத்த பல ஆசிரியர்கள்
நாங்களறிய அமெரிக்கா குடிபோனது இன்னும் ஆசையை வளர்த்தது! இது தவிர
மலேசியாவிலிருந்து ஒரு பையன் அங்கு வந்து படித்துக் கொண்டிருந்தான். அவன்
ஆங்கிலம் நன்றாக இருக்கும். கல்லூரி இதழுக்கு ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை
எழுதிக் கொடுத்தேன். ஜெனிடிக் எஞ்சினியரிங் பற்றி "வாடகையுறும் கருப்பை"
என்பது தலைப்பு. அவன் அதைத் திருத்தி மெருகேற்றித் தந்தான்.எனக்கு
ஒருமுறை பரிசாக மலேசியாவிலிருந்து வாங்கி வந்த கலர்பேனாக்கள் அடங்கிட
செட் ஒன்று தந்தான்.அதை நீண்ட நாட்கள் வைத்து உபயோகித்துக்
கொண்டிருந்தேன். கிராமத்து வாழ்வில் கூட, சிங்கப்பூர் செண்ட் கொண்டு
வந்து விற்கும் ஒரு வியாபாரி வீட்டிற்கு வருவார். அம்மா இவரிடம் செண்ட்
வாங்கி டிரங் பெட்டியில் போட்டு வைப்பாள். நாள், கிழமை என்று புத்தாடை
(பட்டு) எடுக்கும் போது வாசனை தூக்கும்.

இவையெல்லாம் மோக காரணங்கள் என்று புலப்படுகின்றன. இந்த ஆசை அன்று
வளரவில்லையெனில் படித்துவிட்டு ஏதாவது கவர்ண்மெண்ட் உத்தியோகத்தில்
இந்நேரம் நிலைத்திருப்பேன்! இப்படியொரு மின்தமிழ் குழுமம்
ஏற்பட்டிருக்காது. இப்படி உட்கார்ந்து கதை சொல்லிக் கொண்டிருக்க
மாட்டேன்!

(தொடரும்)

Narayanan Kannan

unread,
May 3, 2008, 4:12:27 AM5/3/08
to minT...@googlegroups.com
மோகமுள் 3

சில நேரங்களில் நமது ஊழ் நம்மைத் துரத்துவது போல் தோன்றுகிறது.

அமெரிக்கன் கல்லூரி ஆசையைக் கிளறிவிட்டாலும், கிராமத்துப் பின்னணியுள்ள
எனக்கு எப்படி வெளிநாடு போவது என்று தெரியாமலிருந்தது. இளம்கலையில்
பல்கலைக் கழக அளவில் ரேங்க் வாங்கி முதல் வகுப்பில் தேர்வுற்றதால்
முதுகலைப் படிப்பிற்கும் அமெரிக்கன் கல்லூரியையே தேர்வு செய்யுமாறு எனது
பேராசிரியர் தனிக்கடிதம் எழுதியிருந்தார். அவர் கணக்கு என்ன என்பது
பின்னால்தான் தெரிந்தது. ஆயினும் ஒரு கிராமத்துப்பயல் ஆங்கிலம் பயிலும்
அமெரிக்கன் கல்லூரியில் வந்து தூள் கிளப்புகிறான் என்பதில் சக மாணவர்கள்
சிலருக்குப் பொறாமை. பி.யு.சியில் (இப்போது கிடையாது) முதல் வகுப்பில்
தேர்வுற்றவுடன் ஜெயராமன் என்ற சக மாணவன் இளக்காரமாக "நீ" கூட முதல்
வகுப்பில் தேறிவிட்டாய் என்றான். திருப்புவனம் பள்ளியின் முதல் மாணவனாக
இரண்டாமவனுக்கு 40 மார்க் வித்தியாசத்தில் தேர்வுற்று வெற்றி வாகை சூடி
வந்த அக்கிராமத்துச் சிறுவனுக்கு இது முகத்தில் அறைந்தது போல்
மட்டுமில்லாமல், "இருங்கடா! உங்களுக்கு என் திறமையைக் காட்டுகிறேன்! "
என்ற சவாலாகவும் அமைந்துவிட்டது. இதே ஜெயராமனை பல வருடங்களுக்குப் பின்
மதுரையில் சந்தித்தேன். அப்போது உலகில் பாதி சுற்றிவிட்டு வந்திருந்தேன்.
அவன் ஒரு பள்ளியில் ஆசிரியனாக உட்கார்ந்திருந்தான். என்னைப் பற்றிக்
கேள்விப்படிருந்தான். பழயதை அப்படியே மறந்துவிட்ட அவன், சக
உத்தோகஸ்தர்களிடம் "என் நண்பன். அமெரிக்காவில் இருக்கிறான்" என்று
பெருமையாக சொல்லிக் கொண்டான். இதற்காகத்தானோ இத்தனை சிரமங்கள் பட்டதும்?

முதுகலை பட்டத்திற்கு எங்களில் பலர் வெவ்வேறு கல்லூரிகளுக்குச்
சென்றுவிட்டனர். ஆயினும், என் பேராசியர் வேண்டுகோளின் படி அமெரிக்கன்
கல்லூரிக்கே மீண்டும் போவதென்று தீர்மானித்தேன். ஏனெனில் கல்லூரியில்
கிடைத்த ஊட்டத்தொகையில் (ஷகாலர்ஷிப்) எனக்கு அப்போது ஒரு புத்தம் புதிய
ஹெர்குலிஸ் சைக்கிள் கிடைத்தது. அதில் கல்லூரிக்கு வருவதில் பரம ஆனந்தம்.
ஏதோ மெர்சிடிஸ் காரில் போவது போல் ஒரு பரவசம்.

முதுகலையில் பல பிரச்சனைகள். இரண்டு பேராசிரியர்களுக்குள் அரசியல்.
இளம்கலைத்துறை பேராசிரியர் மூத்தவர். வைஸ் பிரின்ஸ்பாலாக வேறு
ஆகிவிட்டார். இந்த இருவருக்குமிடையில் நான் மாட்டிக்கொண்டேன்.
இதற்கிடையில் அது கோஎஜுகேஷன் வேறா...கவிதை அது பாட்டுக்கு ஊறுகிறது.
ஹார்மோன்கள் என்னையே முழுத்தஞ்சம் அடைந்துவிட்டன. என்னைவிட நான்
ஒழுங்காகப் படித்து முன்னேற வேண்டுமே என்பதில் என் பேராசிரியர்
ஆப்ரகாமிற்கு ஆதங்கம், அக்கறை (நான் தாயில்லாப்பிள்ளை என்ற அனுதாபம்).
இதற்கிடையில் அக்காமார்களுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டு இருந்தது.
முன்பொருகாலத்தில் ஆண் மகன் என்பது எப்படி எனக்கு சாதகமாக இருந்ததோ,
இப்போது அதுவே எனக்கு, என் படிப்பிற்குப் பாதகமாக இருந்தது. "என்ன
படிப்பு, படிப்பு என்று? ஏதாவது வேலைக்குப் போய் நாலுகாசு
சம்பாதிக்காமல்?" என்ற பிடுங்கல். எப்படியோ இதற்கிடையில் மீண்டும்
பல்கலைக்கழக ரேங்கில் தேர்வுற்றேன். ஆனால் இதில் சில இழப்புகள் இருந்தன.
என்ன கொஞ்சம் காதல் செய்து பார்த்திருக்கலாம்! ஒரு அனுபவமும் இல்லாமல்,
கல்யாணம் வரை காலத்தை ஓட்ட வேண்டியதாகிப் போனது :-)) பேராசிரியர்களின்
அரசியலில் பிராக்டிகல் தேர்வில் நான் பெற்றிருக்க வேண்டிய உயர் மதிப்பெண்
போய்விட்டது!

அதைவிட மோசம், இந்தப் பேராசிரியர் என் நிலையை நன்கு பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டார். முதுகலை முடித்ததும் கல்லூரியிலேயே வேலை போட்டுக்
கொடுத்தார். வீட்டில் எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால், நான் ஆபிரகாமிற்கு
கொத்தடிமையானது எனக்கும், சாம் ஜியார்ஜ் (தருமி) தான் தெரியும். ஒரு
வேலைக்காரனை விட கீழ்த்தரமான வேலையெல்லாம் செய்ய வேண்டியிருந்தது.
ஒருமுறை ஞாயிறன்று கல்லூரி வாசலில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்களின்
பெயரைக் குறித்துக் கொண்டு வருமாறு கட்டளை. அழுகாத குறை. ஏன்? எனக்கு
அப்பேராசிரியரிடம் முழு loyalty இருக்கா என்பதைச் சோதனை செய்கிறாராம்.

இங்குதான் ஊழ் வினை வந்து உந்தியிருக்கிறது. நான் வெறும் அமெரிக்கன்
கல்லூரிப் பேராசிரியனாகப் போவதல்ல என்விதி! பின் எப்படி என்னை அங்கு ஒட்ட
வைக்கும்? கூண்டில் அடைத்த கிளி வெளியே பரக்கத் துடிப்பது போல்
துடித்தேன். அப்போது தருமிதான் என் சகலை. நான் படும் அவதி பார்த்து
எப்படியாவது மேல் ஆய்விற்குச் சென்று இந்த நாட்டைவிட்டு ஓடிவிடு என்று
உற்சாகப்படுத்தினார். அப்படியான வாய்ப்பும் வந்தது!

(தொடரும்)

Narayanan Kannan

unread,
May 3, 2008, 4:15:17 AM5/3/08
to minT...@googlegroups.com
மோகமுள் 3

உற்சாகப்படுத்தினார். அப்படியான வாய்ப்பும் வந்தது!

(தொடரும்)

Chandra sekaran

unread,
May 3, 2008, 5:33:25 AM5/3/08
to minT...@googlegroups.com
Thanks Mr. Mohanarangan,

venkatram dhivakar

unread,
May 3, 2008, 5:54:27 AM5/3/08
to minT...@googlegroups.com
சந்திரா, ரங்கன்,
கண்ணதாசன் ஒருமுறை மலேயா சென்றபோது அங்கு பாறை சிதைந்து அடிபட்டு மடிந்துபோன பல தமிழ்க் குடும்பங்களுக்காக ஆறுதலாக ஒரு பாடல் எழுதி கண்ணீரை வரவழைத்தார்.
 
சந்திராவின் கவிதையும் அதே விதத்தில் 
 
திவாகர்

 

srirangammohanarangan v

unread,
May 3, 2008, 6:56:49 AM5/3/08
to minT...@googlegroups.com
சார் எத்துணையோ  பேர்  வெளிநாடுகளுக்குப்  போய்  அங்கு  பெறும்  அனுபவங்களைச்  சொல்லியிருப்பார்கள்.  அவை  சுவையானவைதான்.  ஆனால்  புலம்  பெயர்ந்தோரின்  அனுபவங்கள்  அவஸ்தைகள் என்பன  வித்தியாஸமானது.  அதாவது  அந்நியம்   அன்றாடமாகி  சொந்தம்  அயலாகிப்  போன  கதை.  அதில் எழும்   ஆனந்தத்திலும்  ஒரு   குறை  இருந்துகொண்டே  இருக்கும்.   ஒரு  ஓட்டையைச்  சுற்றி  பட்டுத்துணி  கட்டினால்  போல்.  அது  ஓட்டைதானா  அப்படியென்றால்  அடைத்துவிடலாம்.  ஆனால்   அடைப்பதற்கான  பள்ளம்  அங்கு  இருக்காது.  அது  ஒரு  வித்தியாஸமான  விட்டுப்போன  இடைவெளி. எதைக்கொண்டு  முடிச்சு  போடுவது?
முதல்  தலைமுறையினர்  பாடு  ஒரு  பக்கம் என்றால்  அவர்க்கு  அடுத்த  அடுத்த  தலைமுறைகள்   தங்கள்  சொந்த  நாடு எது  என்று  கேட்கும்  போது,  நான்  ஒரு  ஆங்கிலேயன்,  நான்  ஒரு  ஐரிஷ்,  நான்  ஒரு  ஸ்காட்,  நான்  ஒரு  கெல்ட்,  நான்  ஒரு  அமெரிக்கன்,  நான்  ஒரு  ஸ்பானிஷ்,  நான்  ஒரு  ஃபிரெஞ்ச், என்றெல்லாம்  கூறும்  பொழுது  நான்  ஒரு   மூன்று  தலைமுறைக்கு  முன்  இங்கு  வந்து  தங்கிய  இந்தியன் என்று  சொல்லியாக  வேண்டும்.  அப்பொழுது  உன்  நாட்டை  நீ  பார்த்திருக்கின்றாயா? என்ற  கேள்வி  வரும்.  சரி  இவர்கள் எல்லாம்   வழிவழியாக  இங்கு  தாங்கள்  வாழ்ந்த  வரலாற்றைக்  கூறுகின்றார்களே,  அதுபோல்  நாமும்  நமது  கிராமத்தில்  இருந்தால்  இந்நேரம்   வரலாறும்   இயற்கையும்  நம்மோடு  சொந்த  ஸ்வாதீனமாக  இருக்குமே.   சரி  அதற்கென்று   போகலாம் என்றால்   சொந்த  நாட்டைப்  பரிச்சயப்  படுத்திக்  கொள்ளவே   தனியாகப்  படிக்கவேண்டும்.  முன்னோட்டம்   விட்டுப்  பார்க்க  வேண்டும்.  அப்படியே  துணிந்து  வந்து  தங்கினாலும்   அயலாகிப்  போன  சொந்தம்  அந்யோந்யம்  ஆகிவிடும் என்ற   உத்திரவாதம்  இல்லை.  முதல்  தலைமுறையே  இளமைக்கால  நினைவுகளை  வைத்து  மீட்டும்  ஒட்டவைத்துக்  கொள்வது  கடினம் என்றால்  அடுத்த  தலைமுறைகளைப்  பற்றிக்  கேட்பானேன்.  ஆனால்  இவர்கள்  யாரைச்  சேர்ந்தவர்கள் என்ற  அடையாளக்  கேள்வி  நிச்சயம்   அந்தரங்கமாகவோ   வெளிப்பட்டோ எழுந்துகொண்டுதான்  இருக்கும்.  இந்த  யாருமற்ற  தரையில்  கால்பாவாது  நிற்கும்  அவஸ்தை  சங்கடமானது. 

2008/5/3 venkatram dhivakar <venkdh...@gmail.com>:

Subashini Tremmel

unread,
May 3, 2008, 7:58:45 AM5/3/08
to minT...@googlegroups.com
நண்பர்களே,
சுவைமான கலந்துரையாடல் இது. புலம் பெயர்ந்து வாழ்கின்ற நானும் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டாலும் தற்போதைய அவசர வேலைகளினால் முழுமையாக பங்களிக்க முடியாத சூழலில் இருக்கிறேன்.
 
>> சரி  அதற்கென்று   போகலாம் என்றால்   சொந்த  நாட்டைப்  பரிச்சயப்  படுத்திக்  கொள்ளவே   தனியாகப்  படிக்கவேண்டும்.  முன்னோட்டம்   விட்டுப்  பார்க்க  வேண்டும்.  அப்படியே  துணிந்து  வந்து  தங்கினாலும்   அயலாகிப்  போன  சொந்தம்  அந்யோந்யம்  ஆகிவிடும் என்ற   உத்திரவாதம்  இல்லை. 
 
திரு மோகனரங்கன் அவர்களே, உங்களைப் போல அழகாக என்னால் வார்த்தைளளை வடிக்க முடியாது. ஆனால் என் மனதில் உள்ள விஷயத்தையும் அப்படியே உங்கள் வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன.
 
பல முறை நானும் இதைப் பற்றி யோசிப்பதுண்டு. புதிய நாட்டில் வாழ்வது, வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வது என்பது ஒரு புறம் இருந்தாலும் சொந்த நாட்டில் உள்ள உறவுகளின் தொடர்பு விட்டு போகாமல் பாதுகாப்பதே ஒரு பெரிய கலை.
 
மண்ணின் குரல் பகுதியில் ஜெர்மனியில் வாழும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட திரு குமரன் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் பேச்சை நீங்கள் கேட்டிருக்கலாம். ஒவ்வொரு முறையும் அவரது 12 நிமிட பேச்சினை பதிவு செய்யும் போது மனதிற்கு வேதனையைத் தருவதாகத் தான் அவரது பேச்சின் உள்ளடக்கம் அமைந்திருக்கும். (மண்னின் குரல் வலைப்பக்கமும் தற்போது பிரச்சனையில் உள்ளது)
 
தொழில், கல்வி மற்றும் ஆய்வுக்காக வந்து, வந்த நாட்டிலேயே தங்கி விடுவோரின் நிலையை விட வாழ்வைத் தேடி புலம் பெயர்ந்த நமது தமிழர்களின் நிலையை அறியும் போது இப்படியும் நடந்திருக்ககூடுமா என்று வேதனை தோன்றும்.
 
என்னைப் பொறுத்த வரையில்  ஜெர்மனி வாழ் இலங்கைத்தமிழர்களும், கணினியும்-இணையமும்  இல்லாவிட்டால் எப்போதோ நானும் மலேசியா திரும்பியிருப்பேன். ..:-)
 
அன்புடன்
சுபா

Narayanan Kannan

unread,
May 3, 2008, 8:27:58 AM5/3/08
to minT...@googlegroups.com
2008/5/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

>தங்கள் சொந்த நாடு எது என்று கேட்கும் போது, நான் ஒரு
> ஆங்கிலேயன், நான் ஒரு ஐரிஷ், நான் ஒரு ஸ்காட், நான் ஒரு கெல்ட், நான்
> ஒரு அமெரிக்கன், நான் ஒரு ஸ்பானிஷ், நான் ஒரு ஃபிரெஞ்ச், என்றெல்லாம்
> கூறும் பொழுது நான் ஒரு மூன்று தலைமுறைக்கு முன் இங்கு வந்து தங்கிய
> இந்தியன் என்று சொல்லியாக வேண்டும்.

ரங்கன்:

இதை இப்படிப் பாருங்களேன்.

அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ள ஐரிஷ், போலிஷ், இங்க்லிஷ், ஷ்காட்டிஷ்
எல்லோரும் இரண்டு தலைமுறையில் ஒரே கலவையாகிவிடுகின்றனர். எல்லாம் ஒரே
வெள்ளையினம். ஆனால் ஆசிய இடப்பெயர்வில் அது நடக்க வாய்ப்பில்லை. நம்மவர்
கருப்பு. சீனன் மஞ்சள், மலாய் பளுப்பு. ஒன்றுக்கொன்று கலக்காது. கலாச்சார
வேறுபாடுகள் வேறு. எனவே மூன்றாம் தலைமுறையாக இருந்தாலும் மலேசியாவில்
"ஊருக்கு போயிருக்காங்க" என்றால் அது இந்தியாவிற்கு என்று பொருள்.

இது பற்றி என்னைவிட கிருஷ்ணன், சுபா போன்றோரால் இன்னும் நன்றாக விளக்கவியலும்.

கண்ணன்

Narayanan Kannan

unread,
May 3, 2008, 10:13:54 PM5/3/08
to minT...@googlegroups.com
மோகமுள் 4

புலப்பெயர்வு எப்படியும் நிகழலலாம். சிலருக்கு அது திட்டமிட்ட
புலப்பெயர்வாக அமைகிறது. சிலருக்கு அது எந்தத் திட்டமிடுதலுமென்றி
திடுதிப்பென்று நிகழ்ந்துவிடலாம். நண்பர்.பொ.கருணாகரமூர்த்தி எழுதிய "ஒரு
அகதி உருவாகும் கதை" இதை அற்புதமாகப் படம் பிடிக்கிறது. போர்ச்சூழல்
காரணமாக வெளியேறத்துடிக்கும் ஒருவன் படாதபாடு பட்டு, ஏஜெண்டிடம் காசு
கொடுத்து சிங்கப்பூர் வந்து, பின் பிராங்போர்ட் வந்து அகதி நிலை
கிடைக்காமல் மீண்டும் கொழும்பிற்கு வந்து அங்கு அகதி போல் காவல்
கண்காணிப்பில் இருப்பதாகக் கதை! பாவம் அவருக்கு யாழ்பாணத்திலிருந்து
கொழும்பிற்கான புலம்பெயர்வு பாதி உலகம் சுற்றி நடந்துவிடுகிறது. நண்பர்
சுசீந்திரனுடன் பெர்லின் சுற்றிப்பார்த்தால் அங்குள்ள மத்திய பூங்கா
வரும்போது "இங்கேதான் கிடத்தியிருந்தார்கள்" என்று பூங்காவில் ஒரு
மூலையைக் காட்டுவார். அங்குதான் அகதிகளை முதலில் சேகரித்து
வைத்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் இப்போது ஜெர்மன் குடிமகன்களாக நன்றாக
வாழ்கிறார்கள். இப்புலப்பெயர்வு ஜெர்மன் மக்களுக்குமே ஒரு புதிய பாடம்!
இப்படி கூட்டம், கூட்டமாக அகதிகள் வருவதைப் பார்த்த பின் ஜெர்மன்
தெருக்களில் ஒரு போஸ்டர் உருவானது? "அயலான் என்று நாம் யாரைச் சொல்வது?
நாம் வெளிநாடு போகும் போது அங்கு நாம் அயலான்தானே? நாம் உண்ணும் உணவில்
பாதிக்கு மேல் இந்த 'அயலான்' உழைப்பால் வருகிறது! எனவே உள்வட்டம்,
வெளிவட்டம் என்பதை மறப்போம்!" என்பதே சேதி! பூங்குன்றன் இதையறிந்தே
"யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்று சொல்லிவிட்டார் (what a powerful
statement for a village folk!).

என் வாழ்வைப் பார்த்தால் அது ஒரு வகையில் திட்டமிடுதலும், ஒரு வகையில்
விதி வசத்திலும், ஒரு வகையில் சமூகப் புறக்கணிப்பும் காரணங்களாக அமைவதைக்
காண்கிறேன்.

அமெரிக்கன் கல்லூரியை விட்டு வெளியே வந்தால்தான் நான் பயித்தியமாகாமல்
இருப்பேன் எனும் நிலை வந்துவிட்டது. ஜே.சி.பி.ஆபிரகாம் செய்யும்
கொடுங்கோன்மையில் இரவெல்லாம் அரண்டு போய் கத்துவேனாம்! அக்கா
சொல்வார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டும் அவருக்கு என் நிலமை சார்புடையது
என்று தோன்றிவிட்டது. அதாவது நான் அவர் கட்சியில்லை என்ற பயம். அவர்
தன்னை ஏதோ சிவபெருமான் என்று நினைத்துக் கொண்டு, சுந்தரரிடம் கொத்தடிமை
ஓலை காட்டியது போல் நினைத்துவிட்டார். சுத்தமான கொத்தடிமையாக இருக்க
வேண்டுமென்று நினைத்தார். அப்போது என்னை பயித்தியமாகாமல் வாழ வைத்தது,
தமிழ்! ஆச்சர்யமாக இல்லை? ஆம்! அப்போதுதான் மீராவின்
"கவிதை+கற்பனை=காகிதம்" என்ற கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. என் நண்பன்
தாமரைச் செல்வன் நிறைய புதுக்கவிதைப் புத்தகங்கள் வாசிக்கத்தந்ததால்
கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தேன். அறிவியல் புலத்தில் கவிதையா?
நல்லவேளையாக சாம் ஜியார்ஜ் கிடைத்தார். அவருக்கும் புதுக்கவிதையில்
ஈடுபாடு இருந்தது. அவருடன் சேர்ந்தே இருப்பேன். ஆனால் அவர் வேறொரு கட்சி!
அதுவே எனக்கு வினையாகிப் போனது! ஆபிரகாம் முடிவு கட்டிவிட்டார், நாங்கள்
ஏதோ தினம் திட்டமிட்டு அவரைக் கவிற்கப் போகிறோம் என்று. மனிதருக்கு
வாழ்வில் நம்பிக்கையே இல்லை. கல்யாணமாகாத தனி மனிதர். பிடிப்பு ஏதும்
கிடையாது. கடவுள் நம்பிக்கைக் கிடையாது. பற்று கோல் என்று குடும்பமோ,
மனைவியோ, கடவுளோ இல்லாத போது மனிதன் மிகவும் தனிமைப் பட்டு போய் தவிக்கத்
தொடங்குகிறான். எல்லா நிகழ்வையும் அவரே கண்காணித்து தன்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற கெடுபிடி! அது அவரை
எப்போதும் ஒரு கொதிநிலையில் வைத்திருந்தது. யாரையும் அவர் நம்பியதே
இல்லை. என்ன அவஸ்தை! இந்த அவஸ்தையில் அவர் கள்ளமறியா என்னைப்
படுத்தியதுதான் கொடுமை. இவர் இருந்த நிலையையும், நம்மாவார் இருந்த
நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நம்மாழ்வார் "ஆள்கிறான் ஆழியான்
ஆரால் குறையுடையோம்" என்று வாழ்ந்தவர். எல்லோரையும் நாரண அம்சமென்று
நம்பினார். பரமனின் ஆட்சி முழுமையாய் மன்னுலகில் நடப்பதாய் நம்பினார்.
அவர் நிம்மதியாக இருந்தார். உடன் இருந்தோரையும் நிம்மதியாக
இருக்கவிட்டார். எவ்வளவு வித்தியாசம். இந்த நாத்திகர் என்னைப் படுத்திய
பாடுதான் இப்போது என்னை முழு ஆத்திகனாக மாற்றிவிட்டதோ?

(தொடரும்)

srirangammohanarangan v

unread,
May 3, 2008, 11:32:15 PM5/3/08
to minT...@googlegroups.com
சுபா   நினைத்தேன் என்னடா இது.  சுபா  ஒன்றும் எழுதவில்லையே என்று.  வந்துவிட்டீர்கள்.  நன்று.  ஒரு  சின்ன  வேண்டுகோள்.    புலம்  பெயர்ந்தவர்கள் என்றால்
அகதிகள் என்ற  சமன்பாட்டை (அது  தோற்றமே என்றாலும்)  சிறிது  மாற்றவேண்டும். ஏனென்றால்   உண்மையில்  அகதிகள்  'புலம்பெயர்விக்கப்பட்டவர்கள்'.  பெரும்பாலும்  தாங்களாகவே  புலம்  பெயர்ந்தவர்கள் என்று  சொல்லமுடியாது.  அதுவுமின்றி  அவர்கள்  தாங்கும்  மனச்சுமை  கடினம்  கூடுதல்.  வேலை,  குடும்பத்தைக்  காப்பாற்றல்,  அதிக  வருவாய்,  உள்ளூரில்  வேலை  நெருக்கடியான  நேரத்தில்  கிடைக்காது  போனமை,    ஒரு  ஆர்வம்,   இப்படி  தன்னிச்சையின்  பாற்படும்  பல்வித  காரணங்களால்   தாமாகவே  புலம்  பெயர்ந்து,  நிலைத்து  பின்  தொடரவோ  மீளவோ  ஊசலாடும்  மனநிலை   இப்பொழுதைக்கு  நேர்  கவனத்தில்  கொண்டால்  சில  நுண்தகவல்கள்   மனோபாவங்கள்,  இதயபூர்வமான  இக்கட்டுகள்  பரிமாறிக்கொள்ள  வாய்ப்பு ஏற்படும்  என்று  நினைக்கிறேன்.  எனினும்  இந்த  விஷயத்தில்   நீங்கள் எல்லாம்  தான்  எங்களைவிட  நன்கு  உணர்ந்தவர்கள்.  சும்மா  அலட்டிக்கொள்ளாமல்  உள்மனசை  அப்படியே  நெகிழ்த்துவிடுங்கள்.  உள்ளம் என்ற  ஆனிரை  உட்கார்ந்து  அசைபோடும்  நேரமும்  உண்டல்லவா?

2008/5/3 Subashini Tremmel ksuba...@gmail.com:

Chandra sekaran

unread,
May 4, 2008, 11:01:40 AM5/4/08
to minT...@googlegroups.com
Pulam peyarndha Thamizhar palarin vaazhthukkalukku nandri. Even though I got job opportunities abroad, I could not leave my social work (temple renovation) and my work in Chennai , so am happy that I can bring solace to all my friends abraod.

Narayanan Kannan

unread,
May 4, 2008, 9:08:47 PM5/4/08
to minT...@googlegroups.com
மோகமுள் 5

புலம்பெயர்தல் என்பது எல்லோர் வாழ்விலும், ஏன் எல்லா ஜீவராசிகள்
வாழ்விலும் நடக்கின்றது. ரஷ்யாவிலிருக்கும் பறவைகள் வலசையாகி
வேடந்தாங்கலில் வந்து நிற்கின்றன. கம்பளிப் பூச்சி என்று இருந்து, பின்
கூட்டுப்புழுவாகி, பட்டுப்பூச்சியாய் புலம் மாறுகிறது! ஏன் "ஆதியம்
சோதியுருவை அங்கு வைத்து" மனிதருக்காய் பாடாதன பட்டு இறைவனே புலம்
பெயர்கின்றான். மனிதப் பரிணாமம் பற்றிய ஒரு ஆவணப்படம் பார்த்தேன். மனித
இனம் தோற்றமுற்ற காலத்தில் சூழல் மாற்றத்தால் மொத்த இனமும் ஏறக்குறைய
அழிந்துவிட்டதாம். ஒரு ஆயிரம் பேர் கொண்ட குழு ஆப்பிரிக்காவிலிருந்து
தப்பிப் பிழைத்து, புலம் பெயர்ந்து உலகு பூராப் பரவியதாம்! நிறம் வைத்து
நாம் பேதம் பேசினாலும் நம் எல்லோருள்ளும் உள்ளது கருப்பு இனமே!
இதையறிந்துதானோ நம் முன்னோர்கள் உலகநாதனான இறைவனைக் கருப்பனாகக்
காட்டினர். ஆண்டாள் சொல்கிறாள் "கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி
பழகிக்கிடப்பேனே!" என்று!

ஆனாலும் மனிதர்கள், தற்போதைய வாழ்முறையில் இடம் பெயர வேண்டிய
அவசியமில்லை. வறண்டு போன கரிசல்காடு என்றாலும் அங்கேயே வாழ்ந்து மடியும்
ஜனங்களைக் கவிதையாய் இனம் காட்டுகிறார் கி.இராஜநாராயணன். நான்
திருப்புவனத்தை விட்டு ஜெர்மன் கீல் நகரத்திற்குப் போய் வாழும் போது
அங்கொரு ஜெர்மன்காரன் அவன் வட்டத்தைவிட்டு வெளியே போனதே இல்லையென்று
பெருமையாகச் சொன்னான். ஆச்சர்யமாக இருந்தது. சுற்றுலாத்துறை
வளர்ச்சியுற்ற ஜெர்மனியில் எப்படியும் பக்கத்து நாட்டிற்காவது போகும்
ஜனங்கள்தான் அதிகம். ஆனால் இவன் அந்த ஆசையைக் கூடக் கட்டுப்படுத்திவிட்டு
schleswig holstein எனும் வட்டம் தாண்டிப் போகவில்லை என்பது ஆச்சர்யம்.
சிலர் பிள்ளையார் மாதிரி! அம்மா, அப்பாவைச் சுற்றி வந்துவிட்டு, 'இதுதான்
உலகம்' என்று இருந்துவிடுவர். சிலர் முருகன் மாதிரி. ஊரெல்லாம் சுற்றிப்
பார்த்துவிட்டு, உலகம் என்பது இறைவனின் சிருஷ்டி அவனருள் எங்கும்
பாய்கிறது என்று கண்டு ஆனந்தப்படுவர்.

மதுரையை விட்டுக் கிளம்பியே ஆக வேண்டுமென்று முடிவு எடுத்துவிட்டேன்.
ஆனால் சிங்கப்பூர், மலேசியா என்று போய் வர மாமா, மச்சான் கிடையாது.
அமெரிக்காவில் போய் Ph.D வாங்கலாமென்றால் அதற்கான அடிப்படை வசதிகூடக்
கிடையாது. எனவே எப்படியாவது இந்தியாவில் ஒரு Ph.D வாங்கிவிட்டு, பின்
post-doc கோதாவில் வெளிநாடு போய்விடலாம் என்பது திட்டம். ஆனால்
இந்தியாவில் Ph.D வாங்குவதிலுள்ள கஷ்டம் நுழைந்த பின்தான் தெரிந்தது.
மதுரைப் பல்கலைக் கழகத்தின் உயிரியல் துறை மிகப் பிரபலமாக இருந்த காலம்.
பேரா.கிருஷ்ணசாமி திறமையான விஞ்ஞானிகளை உலகெங்கிலுமிருந்து அழைத்து வந்து
ஒரு மாடல் துறையை நிருவியிருந்தார். சரி, இங்கு போனால் வெளிநாட்டிற்கான
டிக்கட் கிடைத்துவிடுமென்று நுழைந்தேன்.

ஆனால் என் எதிர்பார்ப்பிற்கு நேர் விரோதமாக அங்கு துறைகள் செயல்பட்டன.
யாரிடம் செல்லாமென யோசனை கேட்க நண்பனிடம் சென்றால் அவன் உள்வட்ட
அரசியலைக் காட்டினான். முதலில் நீ என்ன ஜாதி என்று தெரிந்து கொள். அங்கு
ஐயர் துறை உண்டு, செட்டியார் துறை உண்டு, பிள்ளைமார் துறை உண்டு, நாடார்
துறை உண்டு. அதற்கேற்றவாறு போய் சேர்ந்து கொள் என்றான்! இங்குதான்
இப்படியோ என்றால் 'வேதியியல் துறை' இதற்கு மேல் இருந்தது!
எல்லாத்துறைகளிலும் தேர்விற்கான வரைவிலக்கணமாக ஜாதி மறைந்திருந்தது!
ஜாதியின் தோற்றத்திற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதற்கு ஆன்மீகப்
பரிமாணம் கூட இருக்கலாம். ஆனால் ஜாதீயத்தின் கட்டுப்பாட்டில் எல்லாம்
அடங்க வேண்டும் எனும் ஒரு இந்திய நிலை ஆரோக்கியமானதில்லை. இந்தியாவின்
மிக உயர்ந்த கல்விப்பீடம்! கல்வியில் மிக உயர்ந்த பட்டம் வழங்கும்
துறைகள்! மதிவிகல்பத்தால் ஜாதி அடிப்படையில் இயங்கியது வருத்தமளித்தது.
"நம்ம ஜாதிக்காரனா இருந்தா சொன்ன படி கேட்பான்" எனும் கொத்தடிமை தொழில்
வளர்க்கும் மனோபாவம். ஆண்டான் - அடிமை எனும் வேளாண் தொழில் சார்ந்த சமூக
அமைப்பு அப்படியே கல்வி நிருவனங்களுக்கும் வந்து சேர்ந்தது அதிர்ச்சியாக
இருந்தது! இந்தக் கொத்தடிமை முறை இன்றுவரை பல்கலைக் கழகங்களில் நடந்து
வருகிறது. அன்றைய குருகுலத்தில் மாணாக்கன் ஆசிரியரின் கோமணத்தைத்
துவைத்துப் போடுவான். ஏறக்குறைய அதே தொழில் தர்மம் இன்றும் நடைமுறையில்
இருப்பது இந்த நாடு எத்தனை நூற்றாண்டுகளானாலும் மாறாது என்று தோன்றியது!
நான் அங்கு பட்ட அனுபவங்களை "கற்க கசடற!" எனும் குறுநாவலாக எழுதி
வெளியிட்டேன்!

இந்தியாவிலிருந்து கொண்டு கட்டற்ற முழு சுதந்திரம் வேண்டுபவன், ஒன்று
சந்நியாசியாகப் போக வேண்டும், இல்லைப் புலம் பெயர வேண்டும். என் புலம்
பெயர்விற்கு என் சுதந்திர வேட்கை கூட ஒரு காரணம் என்று புலப்படுகிறது!

(தொடரும்)

Message has been deleted

srirangammohanarangan v

unread,
May 7, 2008, 11:13:32 AM5/7/08
to minT...@googlegroups.com
சந்திரசேகர்  சார்,  உங்கள்  கருத்துகளும்  கவிதைகளும்   தமிழ் எழுத்தில்  மேலும்  காண  ஆவல்.

Chandra sekaran

unread,
May 7, 2008, 9:32:24 PM5/7/08
to minT...@googlegroups.com


2008/5/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

சந்திரசேகர்  சார்,  உங்கள்  கருத்துகளும்  கவிதைகளும்   தமிழ் எழுத்தில்  மேலும்  காண  ஆவல்.
Dear  Mohanarengan sir,
pls see the last two web links in my signature for viewing more of my Tamil writings :)
--

Narayanan Kannan

unread,
May 7, 2008, 9:40:19 PM5/7/08
to minT...@googlegroups.com
2008/5/8 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
>
>ஒரு சின்ன தகவ்ல். கண்ணன் என்னும்
> கருந்தெய்வம் என்பதில் கருந்தெய்வம் என்பது கருப்பு தெய்வம் என்றன்று.
> கருமை -- பெருமை என்னும் பொருளில்.


ஓ! நம்ம கருப்பணசாமி பெருமையுடைய ஆள் என்கிறாளா ஆண்டாள்! சரிதான்!

நாச்சியார் திருமொழிக்கு நவீன தமிழில் யாராவது உரை எழுதினால் தேவலை!

கண்ணன்

Narayanan Kannan

unread,
May 8, 2008, 9:02:57 AM5/8/08
to minT...@googlegroups.com
மோகமுள் 6

இந்திய அறிவியல் புலம் என்பது உலகில் எந்த நாட்டிற்கும் சளைத்தல்ல.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளும் ஆகச் சிறந்தவையே! இந்தியா
சுதந்திரமடைந்த பின் கல்வியில் அதிக கவனம் செலுத்தியது. அதன் பலன் 50
ஆண்டுகளில் இந்தியா உலகிலேயே அதிக தொழில் நுட்ப வினைஞர்கள் கொண்ட
நாடுகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டது. மதுரைப்
பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை உலகத்தரமான ஆய்வகமாக உருவாகிவரும்
தருணம். அதன் உருவாக்கத்தில் சுமார் 7 ஆண்டுகள் பங்கு வகித்தது என்னை ஓர்
சிறந்த ஆய்வாளனாக மாற்றிக் கொள்ள உதவியது.

அமெரிக்கன் கல்லூரி என்னைத் தயார் செய்திருந்தது. ஒரு ஆய்வாளனுக்குத்
தேவையான ஆர்வம், கேள்விகள், புலனாயும் நுண்ணறிவு போன்றவற்றில். உண்மையில்
இளம் கலை, முதுகலை படிக்கும் போதே சூழலியல் ஆய்வு தொடங்கிவிட்டது.
அப்போது ஒன்றாகப் படித்த நாங்கள் நால்வர் இன்று உலகின் தரம் மிகுந்த
ஆய்வகங்களில் வேலை செய்கிறோம். அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்த்த
காலத்தில் என்னிடம் பயின்ற மாணவர்களில் இருவர் பின்னால் மதுரைப் பல்கலைக்
கழகம் வந்து ஆய்வு செய்து வெளிநாடு போய்விட்டனர். ஆக, சதவிகிதக் கணக்குப்
போட்டால் ஒரு சில வருடங்களில் அமெரிக்கன் கல்லூரியில் படித்த 10 பேர்கள்
விஞ்ஞானிகளாக மாறியிருந்தனர். இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
என்று காட்டுகிறது.

அமெரிக்கன் கல்லூரி என் கனவுகளை வளர்த்தாலும் மதுரைப் பல்கலைக் கழகம்தான்
வெளிநாட்டில் வாழுவதற்கான நளினத்தை, தொழிநுட்பத் திறனை என்னுள்
உருவாக்கியது. ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு விலை இருக்கிறது. எவ்வளவுதான்
முன்நுனி ஆய்வு செய்தாலும் செய்பவர் இந்தியராக இருக்கும் போது
பயிற்சிக்கான கூலி இந்திய முறையிலேயே வாங்கப்பட்டது. அங்கு வந்த யாரும்
மூன்று வருடத்தில் பட்டத்தை முடித்தோம் போனோம் என்றில்லை. ஜவ்வாக இழுத்து
5 அல்லது 7 வருடங்கள் கொண்டு வந்தனர் ஆய்வகத் தலைவர்கள். காரணம் இவ்வளவு
திறமையான தொழிலாளர்கள், இவ்வளவு குறைந்த கூலிக்கு வேறெங்கும் கிடைக்க
மாட்டார்கள் என்ற நிலை. அதை மிக நன்றாகவே எல்லாத்துறையும்
பயன்படுத்தியது. அங்கிருந்த காலத்தில் அய்வாளர் சங்கமொன்று அமைக்கப்
பார்த்தோம். எங்கள் கோரிக்கைக்களை முன் வைக்க. ஒரு சில வருடங்கள்
இருந்துவிட்டு அடங்கிவிட்டது. சமீபத்தில் இந்தியா போயிருந்த போது இதே
கொத்தடிமைத் தொழில் இன்னும் பல்கலைக் கழகங்களில் நடந்துவருவதைக் காண
முடிந்தது. இதனாலேயே வெளிநாடு போகும் போதும் தப்பித்தவறி ஒரு இந்தியனிடமோ
அல்லது யூதனிடமோ வேலைக்கு (as postdocs) போகக்கூடாது என்பது எங்களுக்கு
வழங்கப்பட்ட மூத்த மாணவர் அறிவுரை.

என் கதை இன்னும் குழப்பமாக ஆகியது. காரணம், எனக்கு பொது மக்கள் கல்வியில்
என்றும் ஆர்வமுண்டு. ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் சமூகப் பொறுப்பென்று
ஒன்றுண்டு என்று நம்பினேன். எனவே கற்ற கல்வியை பொது மக்களுக்கு எடுத்துச்
செல்வதில் ஆர்வமிருந்தது. அப்போது அங்கொரு அறிவியல் மையம் உருவாக்கும்
திட்டம் வந்தது. உயிர்வேதியியல் துறை அதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டது.
எனக்கு அதில் ஆர்வம் வர அந்த மையத்திற்கான பல அறிவியல் செயற்பாட்டு
முன்மாதிகளை தயார் செய்தேன். என் ஆர்வத்தையும், என் திறமையையும்
பார்த்ததோடு அந்த மையத்தை குறைந்த கூலிக்கு நடத்த வேறு யார் கிடைப்பர்
என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார் துறைத்தலைவர். எனவே எனக்கு அங்கொரு
டெக்னீசியன் வேலை போட்டுத் தருவதாகவும், அங்கே செட்டில் ஆகிவிடுமாறும்
சொன்னார். அவர் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று அந்த மையம் (இன்னும்
இருக்கிறதா என்ன?) உள்ள இடத்தில் ஒரு இரண்டாம் தர உத்யோகனாக
இருந்திருப்பேன். ஆனால், நம் விதி நமக்குத் தெரிந்துதானே உள்ளது.
கட்டிப்பாக முடியாது என்று சொல்லிவிட்டேன்.

அடுத்து, எனது பூச்சிமருந்து ஆய்வு துறைக்கு நிரம்ப வருமானத்தைக்
கொண்டுவரத் தொடங்கியது. நான் பேராசிரியனாக ஆகுமுன்பே என்னிடம் இரண்டு
டெக்னீசியன், நான்கு ஆய்வு மாணவர்கள் வேலை செய்தனர். தனியாக ஆய்வகம்
ஒன்றை நடத்திக் கொண்டிருந்தேன். இத்தனை திறமை இருந்தும் எனக்கொரு
பட்டத்தை விரைவில் வாங்கிக் கொடுத்து, ஒரு இளம் பேராசிரியனாக ஆக்கிப்
பார்க்க துறைத்தலைவருக்கு ஆசை வரவில்லை. அவரது புத்தி என்னை,
குறைகூலிக்கு வேலையில் வைத்திருப்பதிலே கவனமாக இருந்தது. ஒரு நிலையில்,
இந்த மாயக்கூட்டிற்குள்ளிருந்து வெளியேறிவிட வேண்டுமென்று தோன்றிவிட்டது.
கிராமத்தில் பெரியோருக்கு பணிந்து வாழப்பழக்கிவிட்ட எனக்கு, என்
எண்ணத்தை, என் ஆசையை உரத்து சொல்லத் தெரியவில்லை. பெற்றோரற்ற எனக்கு
துறைத்தலைவர் தந்தை போல் என் எதிர்கால வளத்தைக் கருத்தில் கொள்வார்
என்றொரு அர்த்தமற்ற நம்பிக்கை இருந்தது. யாரும் தந்தை போல் நடந்து
கொள்ளவில்லை. ஆப்பிரிக்கக் காடுகளில் வலுவுள்ளவையே பிழைத்து நிற்கும்
என்று சொல்லுகிறார் போலே பல்கலைக் கழகம் எனுமோரு கல்வி வனாந்திரத்தில்
வலுவுள்ள ஆய்வாளனாக மாற முயன்று கொண்டிருந்தேன். எப்படியோ ஆய்வேடு தயார்
செய்து கொடுத்த போது நிர்வாக அளவில் ஜாதீயம் அந்த ஆய்வேடு பரீசலனை பெற்று
பட்டம் வந்துவிடுவதை எவ்வளவு தாமதப் படுத்த முடியுமோ அவ்வளவு
தாமதப்படுத்தியது!

எத்தனை சோதனைகள்! வெளிநாடு போக வேண்டுமென்ற ஆசை இருந்தால் மட்டும்
போதாது, இவ்வளவும் படுவதற்கான மன வலுவும் இருக்க வேண்டும். இது ஒரு
பக்கம். வெளிநாடு நம்மை உடனே ஏற்றுக் கொள்கிறதா? என்றால், அது கஷ்ட
ஜாதகத்தின் அடுத்த பக்கம்!

(தொடரும்)

Message has been deleted

Narayanan Kannan

unread,
May 8, 2008, 9:15:34 PM5/8/08
to minT...@googlegroups.com
மோகமுள் 7

அபுதுல் ஹமீது சுவாரசியமாக கையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்
தாவரவியல் ஆய்வாளர். சீனியர்.

"என்ன சார்? அப்படி கையில இருக்குன்னு பாக்கறீங்க?" என்றேன் நான்.

நானும் கைரோவின் பாமிஸ்ட்ரி படித்திருக்கிறேன். பெரும்பாலும் பெண்களின்
கையைப் பிடிப்பதற்கு அது உதவியது :-)

"ஏய் கண்ணா! இங்க வா! இந்த ரேகை சரியா இருக்கா பாரு!" அப்படின்னாரு ஹமீது.

"நல்லா இருக்கே! என்ன விஷயம்?" இது நான்.

"நல்லதாய் போச்சு! அப்ப நான் அமெரிக்கா போய்விடுவேன்" என்றார்.

"என்ன சார்! அமெரிக்கா போவதெல்லாம் கையிலே எழுதியிருக்கா என்ன?"

"டேய்! மாங்காமடையா! இந்த ரேகை வந்துடுச்சுன்னா, வெளிநாட்டுப் பயணம்ன்னு
அர்த்தம். சாஸ்திரி சொன்னான்!" என்றார்.

சாஸ்திரி ஆந்திர மாணவன். சாயிபாபா போன்ற முடி. அவன் இன்று பெர்க்கிலி
பல்கலைக் கழகத்தில் இருக்கிறான். அவனுக்கு இந்த ரேகை வந்துதான் போனானா?
என்று நான் கண்டறியவில்லை. ஆனால், இது அந்தக் காலக்கட்டத்தில் எங்களின்
மனோநிலையைப் படம் பிடிக்கிறது. ஹமீதோ முஸ்லிம். ஆனாலும் பலமாக
நம்புகிறார். ஒரு கைரேகை அவரை வெளிநாடு இட்டுச் செல்லுமென்று. இந்த
வியாதி விரைவில் எங்கள் ஹாஸ்டல் முழுவதும் பரவிவிட்டது. இந்த வியாதி
உயிரியல்துறை ஆய்வாளர்களை மட்டும் பற்றியது. தமிழ்த்துறை, கணிதத்துறை
போன்ற பிற துறைகள் பக்கம் கூட போகவில்லை.

எல்லோருக்கும் அமெரிக்கா போக வேண்டும். அதுவே கனவு. 70-80 களில்
அமெரிக்கா நன்றாகவே இருந்தது (வியட்நாம் போருக்குப் பின்னும்). பலரின்
கனவு இலட்சியமாக இருந்தது. ஆனால் அமெரிக்கன் விசா கிடைப்பது, அதுவும்
இந்தியர்களுக்கு, குதிரைக் கொம்பாக இருந்தது. பல ஆய்வாளர்களுக்கு
அமெரிக்காவில் வேலை (as postdocs) கிடைத்தும், potential immigrant என்ற
கோதாவில் விசா ரத்தானதுண்டு. இந்தியாவில் நில புலன் இருக்க வேண்டும்,
இந்தியா திரும்பிவிடுவேன் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு ஊர்ஜிதப்படுத்த
வேண்டும். இது நடக்கவில்லையெனில் விசா ரத்தாகிவிடும். ஒருமுறை ரத்தானால்
சில வருடங்கள் கழித்தே மீண்டும் தாக்கல் செய்ய முடியும். ரத்தான
மாணவர்கள் மிகவும் மனது ஒடிந்து போய்விடுவார்கள். பார்க்கவே பரிதாபமாக
இருக்கும்.

எனவே இப்போது எனக்கு இரண்டு கவலைகள், இல்லை மூன்று,

1.முதலில் இந்தப் பல்கலைக் கழக நிர்வாகம் நான் பார்வேர்டா, பேக்வேர்டா,
ஷெடியூல்ட்டா என்றெல்லாம் பார்க்காமல் எனது ஆய்வேடை வெளிநாட்டிற்கு உரிய
காலத்தில் அனுப்பி பட்டம் கிடைக்க வழி செய்ய வேண்டும்,

2. அமெரிக்காவில் பின் - முனைவர் ஆய்வாளர் வேலை கிடைக்க வேண்டும்,

3. வேலை கிடைப்பதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கன் விசா கிடைக்க வேண்டும்!

அப்போது எனக்கு கல்யாணம் வேறு ஆகியிருந்தது. என் திரிசங்கு நிலையறிந்தும்
என் மாமனாருக்கு என் மீது அசாத்திய நம்பிக்கை இருந்தது. ஆனால் உத்யோகம்
ஒன்றுமில்லாமல், ஒரு கனவை மட்டும் பிடித்துக்கொண்டிருக்கும் ஒருவருக்கு
தன் பெண்ணைக் கொடுப்பதா என்று என் மாமியாருக்குக் கவலை. என்
மனைவிக்கும்தான். பேசாமல் இந்தியாவில் ஏதாவதொரு வேலை வாங்கிக் கொண்டு
இருந்துவிட வேண்டியதுதானே! குடும்ப பாரம் வந்தவுடன், மெல்ல, மெல்ல என்
வெளிநாட்டுக் கனவு இரண்டாவது இடத்திற்குப் போகத்தொடங்கியது! சரி,
உள்ளூரிலேயே வேலை வாங்குவோம் என்று சொல்லி மும்பாயில் பல கம்பெனிகளுக்கு
மனுப் போட்டேன். ஒரு கம்பெனியில் வேலையும் கிடைத்துவிட்டது.

கனவு வென்றதா? இல்லை வாழ்வின் அவசியம் வென்றதா?

(மீதம் வெள்ளித்திரையில்...ஹா...ஹா!!)

Krishnan

unread,
May 9, 2008, 2:06:07 AM5/9/08
to minT...@googlegroups.com
«ýÒûÇ ¾¢Õ. ¸ñ½ý «Å÷¸ÙìÌ,
§Á¡¸Óû - ͨÅ¡¸ ¿¡Åø §À¡ø ¾Ç¢÷ ¿¨¼Â¢ðÎ §À¡¸¢ÈÐ.
²ý þÐŨà º¢Ú¸¨¾ - ¦¿Îí¸¨¾ ±Ø¾Å¢ø¨Ä.

>"டேய்! மாங்காமடையா! இந்த ரேகை வந்துடுச்சுன்னா...<
«ö¡, ±ÉìÌ ¿£ñ¼ ¿¡ð¸Ç¡¸ þÕ ³ÂÓñÎ.
«Ð ±ýÉ...., மாங்காமடையா!
«ýÒ¼ý,
¸¢Õ‰½ý
º¢í¨¸

Narayanan Kannan

unread,
May 9, 2008, 2:22:15 AM5/9/08
to minT...@googlegroups.com
அன்பின் கிருஷ்ணன்:

மிக்க நன்றி. இன்று காலையில் எனக்குக் கூடத் தோன்றியது. ஏன் இதை நாவலாக
எழுதக்கூடாது என்று? எழுதுவேன், ஒரு நாள்.

சிறுகதைகள் நிறைய எழுதியுள்ளேன். குறுநாவலும் எழுதியுள்ளேன். முழுநாவல்
எழுதவில்லை. காரணம், நேரமின்மைதான். சுஜாதா, ரெ.கா போன்றோர் வேலை ஓய்வு
பெற்ற பின்னர்தானே நிறைய நாவல்கள் எழுதினர். ஒரு நாவல் என்பது ஒரு யோகம்.
அந்தக் காலத்திற்கு நாம் பயணப்பட வேண்டும். அப்போதிருந்த இம்சைகளை
மீண்டும் அனுபவிக்க வேண்டும் இதற்கெல்லாம் நிரம்ப நேரம் வேண்டும்.
இருக்கிற பளுவில் இப்படி திடீரென்று depress ஆகிவிட்டால் என்ன செய்வது?
:-)

வேடிக்கை என்னவெனில், ரங்கன் இப்படி உசிப்பிவிடும்வரை என் வாழ்வில் ஒரு
pattern இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இதுவொரு இடர் தாண்டும்
ஓட்டப்பந்தயம் போல இப்போது படுகிறது. அத்தனை இடர்களையும் தாண்டி வெளியே
வந்திருக்கிறேன். இச்சிறு தொடர் ஒரு outline மாதிரி. எனக்கே குறிப்பு
எடுத்துக் கொள்வது போல். பின்னால் உள்ள படுதா பெரிது. நாவலாக நிச்சயம்
எழுதலாம். முன்பு நான் யோசித்துண்டு என் வாழ்வில் மிக கஷ்டமான காலங்கள்
என்று சில உண்டு. அதை பல்வேறு கோணங்களில் வைத்து ஆராய்ந்து
பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு நாவல் அல்லது ஒரு பாகம். ஒவ்வொரு
கோணத்தில். இம்முயற்சிகள் ரொம்ப ஆரோக்கியமானவை. நிகழ்விலிருந்து நம்மை
அந்நியப்படுத்தி ஒரு வாசகனாக ஆக்கிவிடுகின்றன. இப்படித்தான் நான் குதிரை
தாண்டி வந்திருக்கிறேன்.

மாங்கா மடையா! என்றால் என்னவென்று எனக்கும் தெரியாது. மடையனுக்கும்
மாங்காவிற்கும் என்ன சம்மந்தம். சென்னைவாசிகளுக்கே வெளிச்சம்!

கண்ணன்


>>>
அன்புள்ள திரு. கண்ணன் அவர்களுக்கு,
மோகமுள் - சுவையாக நாவல் போல் தளிர் நடையிட்டு போகிறது.
ஏன் இதுவரை சிறுகதை - நெடுங்கதை எழுதவில்லை.

>"டேய்! மாங்காமடையா! இந்த ரேகை வந்துடுச்சுன்னா...<

அய்யா, எனக்கு நீண்ட நாட்களாக இரு ஐயமுண்டு.
அது என்ன...., மாங்காமடையா!
அன்புடன்,
கிருஷ்ணன்
சிங்கை

Krishnan

unread,
May 9, 2008, 2:37:58 AM5/9/08
to minT...@googlegroups.com
«ýÒûÇ ¾¢Õ,¸ñ½ý «Å÷¸ÙìÌ,
Žì¸õ
>ஒரு நாவல் என்பது ஒரு யோகம்.அந்தக் காலத்திற்கு நாம் பயணப்பட வேண்டும்.

>அப்போதிருந்த இம்சைகளை மீண்டும் அனுபவிக்க வேண்டும் இதற்கெல்லாம்
>நிரம்ப நேரம் வேண்டும்,
¯ñ¨Á¾¡ý. Ò¸ú ¦ÀüÈ ¾Á¢ú ±Øò¾¡û÷¸û ±øÄ¡õ ¿¡Åø¸¨Ç
´Õ §ÅûŢ¡¸ ±ñ½¢¾¡ý ±Ø¾¢ÔûÇ¡÷¸û.¬¨¸Â¡ø «¨Å¸û
þýÚõ ¸¡Äõ ¸¼óÐ ¿¢ýÚ ¿¢¨Äò¾¢Õ츢ÈÐ.

µ÷ ¬ñÎìÌ Óý ¿ÁÐ ¦Ã.¸¡ «Å÷¸û Á§Äº¢Â Àò¾¢Ã¢ì¨¸Â¢ø
¦¾¡¼Ã¡¸ ´Õ ¿¡Åø ±Ø¾¢Â¢Õó¾¡÷.

¸¨¾ þì¸¡Ä ¿¡¸Ã£¸ò¾¢¨ÉôÀüÈ¢Ôõ - ÒüÚ §¿¡Â¢ø «Å¾¢ôÀÎõ
´Õ ¾ó¨¾ ¸¾¡À¡ò¾¢Ãò¾¢¨ÉÔõ À¨¼ò¾¢Õó¾¡÷.
ÒüÚ §¿¡Â¢ý «Å¾¢, ¦¸¡Î¨Á, §¿¡Â¢ý ¾ý¨Á «¾É¡ø ÀÎõ ÐýÀõ
ÐÂ÷ Á¢¸ «üÒ¾Á¡¸ Å¢Åâò¾¢Õó¾¡÷. ¿ÁìÌ þýÛõ ÁÈì¸ÓÊ¡¾
¿¡Åø. ¿¡§Á «ó§¿¡Â¡ø «Å¾¢ôÀÎÅÐ §À¡ø þÕó¾Ð
'¦¿ïº¢ø ´Õ Óû' §À¡Ä

«ó¿¡Å¨Ä ܼ ¾¢Õ.¦Ã.¸¡ ´Õ §ÅûŢ¡¸,§Â¡¸Á¡¸ò¾¡ý
±Ø¾¢Â¢Õó¾¡÷.
«ý¦À¡Î,
¸¢Õ‰½ý,
º¢í¨¸

----- Original Message -----
From: "Narayanan Kannan" <nka...@gmail.com>
To: <minT...@googlegroups.com>
Sent: Friday, May 09, 2008 2:22 PM
Subject: [MinTamil] Re: புலம் பெயர்ந்தவர்களைச் சுற்றியமர்ந்து ஆவலாய்...

Narayanan Kannan

unread,
May 9, 2008, 9:58:48 PM5/9/08
to minT...@googlegroups.com
மோகமுள் 8

தகவல் தொழில் வளர்ச்சியில் இந்தியா பங்கேற்ற பின் வெளிநாடு போவதென்பது
குதிரைக் கொம்பு இல்லையென்றாகிவிட்டது. அன்று கொரியாவில் ஒரு நாலு
தமிழர்களைப் பார்த்தேன். அதில் இரண்டு பேர் அமெரிக்காவில் வேலைக்குச்
சென்றிருக்கிறார்கள். கொரியன் கம்பெனி அவர்களை அனுப்பியிருக்கிறது.
அதிலொருவர் நியூயார்க் வந்தீர்களானால் இந்தப் பிள்ளையார் கோயிலுக்குப்
போய் வாருங்கள் என்று விசிட்டிங் கார்டு கொடுக்கிறார். இவர்களுக்கெல்லாம்
அமெரிக்காவில் தங்கிவிட வேண்டுமென்ற ஆசையே இல்லை. சும்மா போய் கொஞ்ச நாள்
இருந்துவிட்டு வந்து விட வேண்டும், அவ்வளவுதான்.

ஆனால் அன்றைய எங்கள் கனவு வேறாக இருந்தது. அமெரிக்கா செல்ல வேண்டும்.
நிறைய சம்பாதிக்க வேண்டும், அங்கிருக்கும் போது கல்யாணம் செய்து கொள்ள
வேண்டும். அங்கேயே குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நமது
அடுத்த சந்ததி அமெரிக்கர்களாகிவிடும்! என்பதே ஆசை. ம.ப.கழகத்தில்
அமெரிக்காவிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களும் இருந்தார்கள். இவர்கள்
அவ்வளவு சௌகர்யங்களையும் விட்டு மீண்டும் முன்னேறாத இந்தியாவிற்கு வந்த
போது அவர்கள் கூறிய காரணம் புதுமையாய் இருந்தது. குழந்தைகள் பதின்ம வயது
வந்தவுடன் இந்தியா வந்துவிடுவது நல்லது. ஏனெனில் அமெரிக்கா கொடுக்கும்
பாலியல் சுதந்திரத்தை நம்மால் சகித்துக் கொண்டு நம் குழந்தைகளுக்குக்
கொடுக்கமுடியாது என்பதே அக்காரணம். பாவம், அங்கிருந்து வந்த குழந்தைகள்
இந்தியாவில் காலூன்றப்படும் பாடு மிகவும் கஷ்டமாக இருந்தது. எங்கள்
பேராசிரியரின் பையன் ஏறக்குறைய மெண்ட்டல் ஆகிவிட்டான் இங்கு வந்து. இந்த
உஷ்ண சூழல், மாணவர்களிடையே உள்ள போட்டி, பொறாமை இவை தாங்கக்கூடியதாக
இல்லை என்பதே காரணம்.

ஆயினும் இவையெல்லாம் எங்களுக்கு உறைக்கவில்லை, 'அட! கல்யாணமாகி குழந்தை
பெற்ற பின்தானே இந்தக் கஷ்டம்? வரும் போது பார்த்துக் கொள்ளலாம்!' என்பதே
எங்கள் பதிலாக இருந்தது! சிவா சொல்லுவான், "என் ஆசையெல்லாம், அமெரிக்கா
போய் 5 லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டு மீண்டும் இந்தியா வந்து கல்யாணம்
செய்து கொண்டு கூட்டும் குடித்தனமுமாக இருந்துவிட வேண்டும் என்பதே"
என்று. ஆனால் முன்பொரு கட்டுரையில் சுஜாதா எழுதிய மாதிரி அமெரிக்கா
சென்று விட்டு 5 லட்ச ரூபாயுடன் (அப்போது அது பெரிய பணம்)
திரும்பியவர்கள் யாருமில்லை. அதுவொரு அடமான சமூகம். கிரெடிட் கார்ட்
கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். வட்டிக்குக் கடன் அடைக்க பின்
வாழ்நாள் முழுவதும் அங்கே கிடக்க வேண்டியதுதான்.

இதுவெல்லாம் ஒரு பொருட்டாக எங்களைத் தடுக்கவில்லை. அமெரிக்காவிலிருந்து
ஒன்றும் பதில் இல்லை. பார்த்தான் கிரி, பேசாமல் அமெரிக்கா
பறந்துவிட்டான். மூன்று மாத விடுமுறையில் ஒவ்வொரு ஆய்வகமாக போய் கதவைத்
தட்டி, ஏதோவொன்றில் வேலை வாங்கிவிட்டான். சபாஷ் கிரி!

ஓடு, ஓடு, ஓடெடுத்து பிச்சையெடுத்தாலும் ஓடு, ஓடு, அமெரிக்காவிற்கு
என்பதே அங்கு தாரக மந்திரமாக இருந்தது. இந்தக் கும்பலில் இருக்கும்
பேராசிரியர்கள் மட்டும் என்ன வாழ்ந்ததாம்? நான் அமெரிக்கப் பல்கலைக்
கழகங்களுக்கு அனுப்பிய கடிதங்களிலிருந்து பரிந்துரை கேட்டு வரும்
கடிதங்களுக்குப் பதிலாக என்னைப் பரிந்துரைக்காமல் தன்னைப் பரிந்துரைத்து
என் பேராசிரியர் அமெரிக்கா சென்றுவிட்டார். இதை அவர் என்னிடம் சொல்லவே
இல்லை. அவர் போன பின் அவர் அறையை ஒழுங்கு பண்ணப் போனபோதுதான் குட்டு
வெளிப்பட்டது. எப்படி இருந்திருக்கும் என் மனது? அதுவொரு ஆரண்யம். அங்கு
சுயவாழ்வுதான் முதல். அடுத்தவன் வாய்ப்பைப் பிடுங்குதல் தர்மம்.
வலுத்தவன் வெல்லுவதல் வழக்கம். சோணிகளும், பண்பாளர்களும் காலம் பூராக்
காத்துக் கிடக்க வேண்டியதுதான். இதை 7 வருடங்களுக்குப் பின்தான் நான்
உணர்ந்தேன். ஆனால் அதற்குள் எனக்குக் கல்யாணமாகியிருந்தது. எப்படியும்
இந்தியாவில் குழந்தை பெற்றுக் கொள்வதில்லையென்று உறுதியாக இருந்தேன்.
அடைந்தால் அமெரிக்கா, அடையாவிட்டாலும் அமெரிக்கக் கனவிலாவது வாழ வேண்டும்
என்பதே ஆதர்சமாக இருந்தது. கடைசியில் நான் அமெரிக்கா போகவில்லை. கனவு
மட்டும் இன்னும் போவதாயில்லை!

(தொடரும்)

Thiruvengada Mani T K

unread,
May 10, 2008, 2:40:53 AM5/10/08
to minT...@googlegroups.com
அன்பின் கண்ணன் அவர்களே!
 
"மோகமுள்" மிக அருமையாகப் போய்க்கொண்டிருக்கிறது. அருமையான மலரும் நினைவுகள். நீங்கள் சொல்வது போல "ஒரு நாவல் என்பது ஒரு யோகம். அந்தக் காலத்திற்கு நாம் பயணப்பட வேண்டும். அப்போதிருந்த இம்சைகளை மீண்டும் அனுபவிக்க வேண்டும் இதற்கெல்லாம் நிரம்ப நேரம் வேண்டும்." என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் உங்களைப் போன்றோரின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பெரும் படிப்பினை. வாழ்வில் உயர்வு என்பது உழைப்பாலும் பெருமுயற்சியாலுமே சாத்தியம் என்பதை இக்கால இளைஞர் அறிய இவை போன்ற அனுபவங்கள் அவசியம் அறியப்பட வேண்டும்.
    எனவே தங்களின்  வேலைச்சுமைக்கிடையிலும் அவசியம் இதைத் தொடருங்கள். இறையருள் துணைநின்று மனவலிமையைக் கொடுக்கும்.
அன்புடன்
திருவேங்கடமணி.
 
பி.கு. : என் அஞசல் வழிக் கல்வி மாணவருக்கான பயிற்றுவித்தல் நேற்றோடு முடிந்தது. தந்தையின் புத்தகங்களை வரிசைப்படுத்திப் பட்டியலிடும் வேலையைத் திங்கள் முதல் தொடங்குவேன். எங்கே பட்டியல் கேட்டவுடன் காணாமல் போய்விட்டார் என்று சுபா எண்ணியிருப்பார். பல பிரச்சனைகளில் அவர் தரும் பதில்களைப் பார்க்கிறேன். அவற்றில் உள்ள தெளிவும், திடமும் என்னை வியக்க வைக்கின்றன. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

----- Original Message ----
From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, May 9, 2008 6:45:34 AM
Subject: [MinTamil] Re: புலம் பெயர்ந்தவர்களைச் சுற்றியமர்ந்து ஆவலாய்...

மோகமுள் 7

அபுதுல் ஹமீது சுவாரசியமாக கையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்தாவரவியல் ஆய்வாளர். சீனியர்.

"


Be a better friend, newshound, and know-it-all with Yahoo! Mobile. Try it now.

Narayanan Kannan

unread,
May 10, 2008, 2:54:19 AM5/10/08
to minT...@googlegroups.com
அன்பின் முனைவர் வேங்கடமணி:

மிக்க நன்றி.

சுயசரிதம் எழுதும் போது பயமாக இருக்கிறது. என்னை நான் அந்நியப்படுத்திக்
கொள்ளலாம். நான் சுட்டுபவர் தன்னை இப்படி அந்நியப்படுத்திக்
கொள்வதில்லையே :-)

என்னைப் படுத்திய இரு பேராசிரியர்களும் இன்று இல்லை. ஆனால் அவர்கள்
வாழ்வில் மிகவும் சிரமப்பட்டது பின்னால் தெரிய வந்தது. பிரதிவாதி
பயங்கரம் அண்ணா சொல்வதுபோல் ஒரு குரு என்பவன் சீடனின் இதமறிய வேண்டும்.
அவர்கள் கையறு நிலையை தங்கள் சுயலாபத்திற்குப் பயன்படுத்திக்
கொள்ளக்கூடாது. இவ்வளவு பட்ட பின்பு ஒன்று தெளிவாய் தெரிகிறது 'கன்மவினை'
என்பது சத்யம். நாம் செய்கின்ற தீவினைகள் நம்மைக் கட்டாயம் தாக்கும்.
இன்று இல்லையாவிடினும் ஒரு நாள். இதுவொரு சூட்சுமமான கர்ம விளக்கம். இந்த
சுழற்சி விதியை வைத்துக் கொண்டுதான் மாயோன் தன் காரியத்தை நடத்துகிறான்.
அவன் தாள் பணிந்து இந்த வினைச் சுழற்சியை அறுத்தால் உண்டு. இன்று
லாபமென்று கருதி சந்தோஷப்படும் அற்பர்களெல்லாம் ஒரு நாள் வருந்துவர்.

அந்நியப்பட்டு பார்க்கும் போது சுயமுயற்சியும் (free will), ஊழ்வினையும்
கைகோர்த்து நடப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இத்தொடர் எனக்கே ஒரு பயிற்சி,
ஒரு கல்வி, ஒரு புரிதல். பலரும் இம்மாதிரி முயல வேண்டும். அது நம்மை நாமே
புரிந்து கொள்ள உதவும்.

கண்ணன்

2008/5/10 Thiruvengada Mani T K <thiruv...@yahoo.com>:

--
"Be the change you wish to see in the world." -Gandhi

Tthamizth Tthenee

unread,
May 10, 2008, 3:20:42 AM5/10/08
to minT...@googlegroups.com
அன்புள்ள  கண்ணன் அவர்களே
நீங்கள் எழுதும் இத் தொடர் ,மிகவும் பயனுள்ள
அருமையான தொடர்
 
1.அனுபவம் என்னும் பாடம் அவரவர்களால்
அனுபவித்து உணரப் பட வேண்டிய ஒன்று
 
2.மேலும் மற்றவர்களின் அனுபவங்களை அறிந்து கொண்டு ,அதன் மூலமமக பாடம் கற்றுக் கொள்வது
 
3.நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சிறு அனுபவமும் நம்மைப் பண்படுத்திக் கொண்டே வரவேண்டும்
 
கூடிய வரையில் ஒரு முறை செய்த தவறை மறு முறை செய்யாமல் இருக்க முயன்றாலே
நம் அனுபவம் நமக்கு நிறைய உதவுகிறது
என்று பொருள்
 
மிக அருமையாக இருக்கிறது  தொடருங்கள்
எங்களுக்கும் சில பாடங்கள் கிடைக்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2008/5/10 Narayanan Kannan <nka...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
May 10, 2008, 8:13:23 AM5/10/08
to minT...@googlegroups.com


2008/5/9 Narayanan Kannan <nka...@gmail.com>:
மோகமுள் 8


 அங்கு
சுயவாழ்வுதான் முதல். அடுத்தவன் வாய்ப்பைப் பிடுங்குதல் தர்மம்.
வலுத்தவன் வெல்லுவதல் வழக்கம். சோணிகளும், பண்பாளர்களும் காலம் பூராக்
காத்துக் கிடக்க வேண்டியதுதான்.
 
 
கண்ணன்,
 நீங்க அங்கிருந்து அங்கு என்று எழுதினால் நாங்கள் இங்கிருந்து இங்கு என நினைத்துக்கொள்வோம். எனவே பெயர் சொல்லி எழுதவும்.
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Narayanan Kannan

unread,
May 10, 2008, 8:30:54 AM5/10/08
to minT...@googlegroups.com
2008/5/10 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
>
> 2008/5/9 Narayanan Kannan <nka...@gmail.com>:
>>
>> மோகமுள் 8
>>
>> அங்கு
>> சுயவாழ்வுதான் முதல். அடுத்தவன் வாய்ப்பைப் பிடுங்குதல் தர்மம்.
>> வலுத்தவன் வெல்லுவதல் வழக்கம். சோணிகளும், பண்பாளர்களும் காலம் பூராக்
>> காத்துக் கிடக்க வேண்டியதுதான்.


ஐயோ! ஒவ்வொருமுறையும் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகன்னு
எழுதறதுக்குள்ளே!! அங்கு என்றால் அங்குதான் :-))

Narayanan Kannan

unread,
May 10, 2008, 8:36:56 AM5/10/08
to minT...@googlegroups.com
தேனீயாரே!

மிக்க நன்றி. எங்கே இவ்வளவு நாளா ஆளைக்கானோம்?

உண்மையில் இன்னொரு இடுகை போட்டுவிட்டு படுக்கப் போகலாமென்று எண்ணம். என்ன
இப்படி இந்த நேரத்திலே எல்லோரும்? :-)

மற்றவர்களும் தங்கள் அனுபவத்தைச் சொல்ல இடம் கொடுக்க வேண்டும்.

எல்லே சுவாமிநாதன் இங்கு இருக்கிறார். அவரை நான் முதல் நாள் கண்டபோது
பஸ்ஸில் போய்க்கொண்டே அவரது எல்லே முதல் அனுபவங்களை விவரித்தார்
பாருங்கள். சிரித்து மாளலை. எல்லோரும் என்னைப் பயித்தியம் என்று
எண்ணியிருப்பர். அவருக்கு தன் அனுபவங்களை நகைச்சுவையோடு சொல்லத்தெரியும்!

இதே அமெரிக்கா போகும்வரை 'down town' என்றால் இறக்கத்திலிருக்கும் நகரம்
என்றே எண்ணியிருந்த என் தோழர்..இப்படி..

கண்ணன்

2008/5/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
May 10, 2008, 11:14:12 AM5/10/08
to minT...@googlegroups.com
கண்ணன்   பிரதிவாதிபயங்கரம் அண்ணா  இல்லை.  ஸ்ரீவசனபூஷணம்.   'தொடர்'  வது  அருமை

2008/5/10 Narayanan Kannan nka...@gmail.com:
Message has been deleted

Tthamizth Tthenee

unread,
May 10, 2008, 12:11:31 PM5/10/08
to minT...@googlegroups.com
அதானே எல்லோரும் எழுதலாமே
 
 
என்னுடைய கணினி கொஞ்ஜம் ஒத்துழைக்க மறுத்தது  சில நாட்களாய்-அதுதான்
கொஞ்ஜ நாட்களாய் எழுத முடியவில்லை
மேலும் சமீபத்தில் திருமணமான  கடைக் குட்டியும் ,மாப்பில்ளையும் துபாயிலிருந்து வந்து விட்டார்கள், மேலும்  நான் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை வன்ணம் பூசலாம் என்று ஆரம்பித்தேன்
வழக்கபடி வாக்குறுதிகளை அள்ளித்தந்த
வண்ணம் பூசும் நபர்  வேலல ஆரம்பித்த இரண்டாம் நாளிலிருந்து வராமல் என்னை
எல்லாப் பொருட்களையும் கூடத்தில் வைத்துக் கொண்டு, ரயில்வே ப்ளாட்பாரத்தில் இருப்பது போன்ற நிலைமையை உருவாக்கி விட்டார்
 
 
இன்றுதான் கொஞ்ஜம் மூச்சு விடுகிறேன்
என் கணிணியும்  செயல்பட ஆரம்பித்திருக்கிறது
 
அடுக்கு மாடிக் குடியிருப்பில் வண்ணம் பூசுதல் எப்படி என்று ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறேன்
என் அனுபவங்களைப் படித்துவிட்டு
அவதிப் படாமல் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு
வன்ணம் பூசுவதெப்படி என்று கற்றுக் கொள்ளலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2008/5/10 srirangammohanarangan v <ranga...@gmail.com>:
ஆமாம்  இது என்ன   கண்ணன்  மட்டும் எழுதுவது.  மற்ற எல்லாரும்   குத்துக்காலிட்டுக்  கேட்டுக்கொண்டிருப்பது என்பது.   இவ்வளவுதானா  புலம் பெயர்ந்த  தமிழர்கள்  இருக்கிறார்கள்   மின்தமிழில். ஏன் எல்லோருக்கும்  தயக்கம்?   சொந்தக்  கதை என்று  பின்வாங்குகிறார்களோ?   ஐயா  நீங்கள் எதை  கட்  செய்யவேண்டும் என்று  நினைக்கிறீர்களோ  அதையெல்லாம்  கட்  செய்துகொள்ளுங்கள்.  ஆனால்  புலம்  பெயர்ந்த  வாழ்வின்  இந்த  இருநிலப்  பிணக்கம்  கொண்ட  மனவியல்  முக்கியமான  விஷயம்.  இப்பொழுது  உணர  மாட்டீர்கள்.   துணிந்து   சும்மா  தோன்றுவதை  எழுதத்  தொடங்குங்கள்.  பின்பு  நீங்களே  உணர்வீர்கள், 'அம்மாடி!  இது  இவ்வளவு  பெரும்  துறையா' என்று.   நீங்கள்  சொல்வதைக்  கேட்க  நாங்கள்தான்   சுற்றியமர்ந்திருக்கிறோமே   அப்பறம்  நீங்களும்  கேட்க எங்களோடு  வந்து  உட்கார்ந்துவிட்டால்  இந்த  அனுபவங்கள் எப்படி   புறவயப்படும்? என்ன  தயக்கம்?  சுபா என்னதான்  செய்கிறார்?  இன்னும்  யார்  யார் என்று  ஒரு   நிரல்  தயாரித்து  எழுத  ஊக்கவேண்டியதுதானே?  தானும்   வழிகாட்டியாக  நடந்துகொண்டே?

2008/5/10 Narayanan Kannan <nka...@gmail.com>:

Narayanan Kannan

unread,
May 10, 2008, 8:26:33 PM5/10/08
to minT...@googlegroups.com
2008/5/11 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> வழக்கபடி வாக்குறுதிகளை அள்ளித்தந்த
> வண்ணம் பூசும் நபர் வேலல ஆரம்பித்த இரண்டாம் நாளிலிருந்து வராமல் என்னை
> எல்லாப் பொருட்களையும் கூடத்தில் வைத்துக் கொண்டு, ரயில்வே ப்ளாட்பாரத்தில்
> இருப்பது போன்ற நிலைமையை உருவாக்கி விட்டார்
>
ஹா!.ஹா! I can imagine :-)

புலம்பெயர் வாழ்வின் மிகமுக்கியக்கூறு, நம்மில் பலருக்குத் தெரியாத கூறு
"தனது காலில் தான் நிற்பது" என்பது. ஜெர்மனியில் ஒவ்வொருமுறையும்
வீடுமாறும் போது நாமே வீட்டிற்கு வெள்ளை (வர்ணம்) பூச வேண்டும். சில
வீடுகளில், காலி செய்யும் போது கட்டாயம் வீட்டிற்கு வெள்ளை பூசிய பின்பே
காலி பண்ண வைப்பார்கள். இது எப்படி இருக்கு!

கண்ணன்

Narayanan Kannan

unread,
May 10, 2008, 9:38:33 PM5/10/08
to minT...@googlegroups.com
மோகமுள் 9

நாம் ஆசைப்படுவதெல்லாம் நடக்கிறது. ஆனால், இறைவனின் காலக்கணக்கு என்று
ஒன்று. அது எப்போதும் மனித காலக்காணக்குடன் இணைந்து போகுமென்றில்லை.
எப்போது எது இவன் ஆசைக்குத் தகுந்த நேரமோ அப்போது இவன் ஆசையை நிறைவேற்றி
வைப்பது அவன் வழக்கம். பெரும்பாலும் அவசரக்குடுக்கைகளான நாம் அதற்குள்
பதறிப்போய் இறைவன் இல்லவே இல்லை என்றோ இருந்தாலும் முட்டாள் சாமி என்றோ
முடிவு கட்டிவிடுகிறோம்.

அமெரிக்கக் கனவுடன் ம.கா.ப.கழகத்தில் உலா வந்த காலத்தில் வருடத்திற்கு
குறைந்தது 50 கடிந்தங்களாவது அமெரிக்காவிற்கு வேலை தேடிப் போடுவதுண்டு.
வெளிநாட்டுக் கடிதமெனில் காசு கூட. வருகின்ற சொல்ப நிதி
(ஸ்காலர்ஷிப்)யில் பாதிப்பணம் இதற்கே போய்விடும். கல்யாணமான பிறகும்
இப்படி செலவழிக்க முடியுமா என்ன? எனவே, அமெரிக்கக்கனவு நினைவாகாமலே
நின்று போனது. இதற்கிடையில் மும்பாயில் வேலைக்கான இண்டர்வியூ
வந்திருந்தது. முதல்முறையாக மும்பாய் பயணப்பட்டேன். திருப்புவனம்
கிராமத்தானுக்கு மதுரையே நியூயார்க் என்றால் மும்பாய்
எப்படியிருந்திருக்குமென்று யோசித்துக் கொள்ளுங்கள். அதன் நெடிதுயர்ந்த
கட்டிடங்கள், தேனீ போன்ற சுறு, சுறுப்பான வாழ்க்கை, டாக்சியில் ஏறி
மீட்டருக்குக் காசு கொடுப்பது, நேரத்திற்கு வரும் இரயில் என்று எத்தனையோ
ஆச்சர்யங்கள் காத்திருந்தன. இண்டர்வியூ நல்லபடி முடிந்தது. எனக்குத்தான்
டிகிரி வரவில்லையெனினும் ஆய்வு அனுபவம் வந்துவிட்டதே. கம்பெனிகள்
டிகிரியைவிட அனுபவத்தையே கருத்தாகக் கொண்டன. அதுவும் மும்பாயின்
முற்போக்கு கிராமத்துப் போக்கிலிருந்து மிகவும் மாறுபட்டு இருந்தது.
அப்போது லிரில் என்றொரு சோப்பு. அதற்கு போஸ் கொடுக்கும் அழகி. அவள் ஒரு
மலைச்சாராலில், நீர்வீழ்ச்சியில் குளிக்கும் அழகு அப்போது இளைஞர்கள்
உள்ளத்தைக் கவர்ந்த ஒன்று. நான் இண்டர்வியூவிற்கு போயிருந்த கம்பெனிக்
கட்டிடத்தில்தான் இந்த லிரில் அலுவலகமும் இருந்தது. லிஃப்டில் ஏறும் போதே
உள்ளே இந்த அழகியின் ஆளுயரப்படம். ஏதோ அவளோட கூடத் தனியாக லிஃப்டில்
போவது போன்ற அனுபவம். மும்பாய், மும்பாய்தான்! வெளிநாட்டுக் கனவையெல்லாம்
மூட்டை கட்டி வைத்துவிட்டு மும்பாயில் குடியேற முடிவு செய்துவிட்டேன்.

மும்பாய் போவதற்கு முன் என் மனைவியின் மாமா பிள்ளை வீட்டிற்கு
வந்திருந்தான். அவர்கள் பூர்வீகமாக திருச்சூர் சமஸ்தானத்தில் உயர்
பதவியில் இருந்தவர்கள். எனவே அவனுக்கு மலையாள தேசம் நன்கு பரிட்சயமான
ஒன்று. என்னை ஒரு கேரள கிராமத்திற்கு அழைத்துச் சென்றான். ஒரு அம்பாள்
கோயில். அங்குள்ள நம்பூதிரியிடம் பிரஷ்னம் பார்ப்போம் என்று சொன்னான்.
பிரஷ்னம் என்பதொரு ஆச்சர்யமான ஆரூடக்கலை. நாம் போகும் நேரத்தின் சூட்சும
குறிகளை வைத்து எதிர்காலத்தைச் சொல்வது! அவர் சோளி போட்டுப்
பார்த்துவிட்டு நான் வெளிநாடு போவேன் என்று சொல்லிவிட்டார்!

ப்ரஷ்னம் பலித்துத்தான் விட்டது! இறைவனிடம் நான் போட்ட அப்ளிகேசன் ஒன்று
இருக்கே. அது பாட்டுக்கு அவர் கணக்கில் தேர்வாகியிருந்திருக்கிறது. அதை
அவன் செய்விக்கும் முறையே அலாதி. நீ ஏன் மேற்கே போறேன், போறேன்னு
தவிக்கிறாய், கிழக்கே போ! என்பது அவன் ஆணை! ஆம், ஜப்பானில் எனக்கு வேலை
கிடைத்துவிட்டது. அதுவும் எப்படி? இந்த ம.ப.கழகத்தில் ஆராய்ச்சி செய்து
முடித்துக் கிழிக்குமுன் என்னுடன் இளம்கலை படித்த மதுரை நண்பன் அண்ணாமலை
போய் Ph.D முடித்துவிட்டு, ஒரு வருடம் ஜப்பான் போய்விட்டு Scientific
Pool Officer-ஆக எங்கள் ஆய்வகத்திற்கு வந்து சேர்ந்தான். நான் இருக்கின்ற
நிலையப் பார்த்துவிட்டு, இனிமேலும் நீ இங்கு இருந்தால் கனி, கனிந்து
அழுகிப் போவது போலாகிவிடும். நீ எப்போதோ ஆய்வில் கனிந்துவிட்டாய்,
பேசாமல் ஜப்பான் போய்விடு அங்கு உன்துறையில் பெரிய ஆராய்ச்சி நடக்கிறது
என்று சொல்லி என்னை பரிந்துரைத்து ஜப்பானுக்கு எழுதிவிட்டான்.
அவர்களுக்கும் என் பின்னணி பிடித்திருந்தது. உடனே வரச் சொல்லி கடிதம்
வந்துவிட்டது. நீண்ட கார் காலத்திற்குப் பின் சூரியோதயம் போல் என்
வாழ்விலும் ஒளி வந்தது!

ஆனால் எனக்கு வந்த அமெரிக்க வாய்ப்பை தனதாக்கிக் கொண்ட பேராசிரியருக்கு
என்னை விடுவிக்க மனசே இல்லை. எனவே எனது ஆய்வேடு பரிசீலிக்கப்படாமல்
இன்னும் தாமதமாகிக் கொண்டே போனது. என் முன் இரண்டு கேள்விகள்.

1. வந்திருக்கின்ற மும்பாய் வேலையை விட்டு விடுவதா? இல்லை ஏற்றுக் கொள்வதா?

2. Ph.D degree வரும்வரை இந்தியாவிலேயே இருப்பதா?

நான் என்ன முடிவு எடுத்திருப்பேன் என்பது இத்தொடர் எழுதும் என் கொரிய
சூழலே விளக்கியிருக்கும் என்று நம்புகிறேன். மதுரைக்கும் ஒரு கும்பிடு,
ஜாதீயச் சழக்கில் மாட்டிக் கொண்டு உண்மையான திறமையை மதிக்காத என்
ப.கழகத்திற்கும் ஒரு கும்பிடு, மாணவர்களின் வாய்ப்பையெல்லாம் தமதாக்கிக்
கொள்ளும் கொத்தடிமைத் துறைத் தலைவர்களுக்கும் ஒரு கும்பிடு என்று
போட்டுவிட்டு விமானம் ஏறிவிட்டேன்.

சென்னை விமான நிலையத்தில் முதன் முறையாக எஸ்கலேட்டரில் ஏறியது பசுமையாய்
நினைவிலிருக்கிறது. அவ்வளவு மகிழ்ச்சி. என் மாமனாருக்குத்தான் ரொம்ப
சந்தோஷம். மாப்பிள்ளை சொன்ன மாதிரி வெளிநாடு போய்விட்டார் என்று.
மாமிக்கு, பக்கத்துலே எங்காவது சிங்கப்பூர் மலேசியா என்று போகக்கூடாதோ?
ஜப்பான் போக வேண்டுமா? என்ற கேள்வி. அப்போதே மாமனாருக்கு இருமுறை
ஹார்டட்டாக் வந்து தப்பிப் பிழைத்திருந்தார். பெண்ணை இப்படித் தொலை தூரம்
அனுப்ப வேண்டுமே என்ற கவலை. அப்போது யார் கவலையையும் சட்டை செய்யும்
மனோநிலை இல்லை எனக்கு. என்னை அவமானப்படுத்திய எல்லோருக்கும் என்
திறமையைக் காட்ட வேண்டுமென்ற வெறி.

விமானம் சென்னை, கொல்கொத்தா, பேங்க்காக், ஓசாகா, மட்சுயாமா என்று பறந்து
கொண்டே இருந்தது.

(முதல் பாகம் முற்றும்)

srirangammohanarangan v

unread,
May 11, 2008, 12:25:49 PM5/11/08
to minT...@googlegroups.com
கண்ணன்  தொடர்  நன்றாகத்தான்  போகிறது.  ஆனால்  முள்ளை  எடுத்து  அதன்  நுனியை  ஆய்வு  செய்வது  என்பது  இதில்  முக்கியம்.  கண்ணன்   அந்த  முள்  செடி  கொடி  மரம் எல்லாம்  சேர்த்து  ஒரு  தோட்டத்தையே  இறக்குமதி  செய்கிறார்  பாகம்  பாகமாக.   மெள்ள  வந்து  சேரட்டும்  அவசரமில்லை.
 
புலம்  பெயரும்  ஆசை என்பது  வேறு.   புலம்  பெயர்ந்தோரின்   மனநிலையில்  இருநிலத்தன்மை என்பது   வேறு.  ஆரம்ப  மோகம்  கலைந்து  யதார்த்தம்   உறைத்த  பின்பு,  சௌகரியத்தின்  மலர்ச்  சங்கிலியை  அறுக்கமுடியாமை.  சொந்த  மண்வாசனை  கிளப்பும் ஏக்கம்.  இந்த  அவஸ்தை   முள்குத்தாமல்  முள்மேல்  நிற்கும்  நிலை.   இந்த  நிலைக்கு  வரும்  முன்னரே   ஒருவருடைய  சுயம்  பெறும்பாலும்  மூளியாகிவிடும். ஏனென்றால்   வந்த  இடத்தில்  நல்ல  பேர் எடுக்க  வேண்டும்.  'புக்ககத்தின்'  எதிர்பார்ப்புக்குத்  தகுந்தாற்போல்  நடந்துகொள்ளவேண்டும்.   'பிறந்தகம்'  அவ்வளவு  ஒன்றும்  சொல்லும்படியாக  செல்வச்  செழிப்பு  இல்லை.  வத  வத என்று  மக்கள்.  கீக்கிடம்.  அழுக்கு.   நாகரிகம்  தெரியாத  மக்கள்.  அங்கு  உழைத்த  உழைப்புக்கு  அப்பாடா  இங்கு  புக்ககத்தில்   40  பங்கு  அதிகமாக  அல்லவோ  ஊதியம்!  என்ன  'புக்ககம்'  பிறந்தகம் என்று   மணமாகிப்  போகும் பெண்மொழியில்  பேசுகிறேன் என்று  பார்க்கிறீர்களா?    காலம்  காலமாக   இங்கேயே  நாம்  பெண்களுக்குத்தான்   ஒருவிதத்தில்  'புலம்  பெயர்  வாழ்வின்  மனநிலை'யைத்  தந்துவந்திருக்கிறோமே.    வீட்டுக்கு  வருகின்ற  பெண்ணின்   இயற்பெயரைக்  கூட  மாற்றிவைக்கிறோம்.  அப்புறம்   என்ன?   மணமாகிப்  போகும்  பெண்ணின்  சுயமே  மூளியாக்கப்  படும்பொழுது   டாலர்  தேசமோ   பௌண்ட்  தேசமோ  யூரோ  தேசமோ   நாடிப்போய்  புலம்  பெயர்ந்தோரின்  நிலையில்   சுயம் எத்தனை   சதவிகிதம்  தங்கும்? எல்லாம்   அட்ஜஸ்ட்,  காம்ப்ரொமைஸ்  சூழ்நிலைகள் என்னும்  போது.   அதுவுமின்றி  முகமற்ற   ஒரு  பெரும்  உருவத்திடம்  நல்ல  பெயர்  வாங்க  வேண்டுமே!   தான்  அங்கு  ஏற்றுக்  கொளப்படுகிறோம் என்பதை  விட   கான்ஸ்பிகுவஸாக   இருந்துவிடக்  கூடாதே! 
மாறு  மாறு   வாழ்க்கையே  மாற்றம்.   ஓடும்  புனலூடு  ஓடு.   hey   you  look  just  like  an  american  yea,  an  englishman  yea   a  german  yea  a  french  yea   என்ற   வியங்கோள்   வரும்  அளவிற்கு  மாறு.  சுயமா?   பைசாவிற்குப்  பிரயோஜனப்  பட்டதா என்ன  இந்த  சுயம்?

2008/5/11 Narayanan Kannan <nka...@gmail.com>:
மோகமுள் 9
 

meena muthu

unread,
May 11, 2008, 11:42:03 PM5/11/08
to minT...@googlegroups.com
படிக்க படிக்க! பலதரப்பட்ட உணர்வுகள்..!மாறி மாறி வந்து மோதுகின்றன!
ம்ம்.. கண்ணனால் மட்டுமே இப்படி எழுத முடியும்!!
 
சொல்ல முடியாததோர் உணர்வில்  கண்கள் பனிக்கின்றன!
 
தொடருங்கள் கண்ணன்

மீனா
 
(நீ.....ண்ட நாட்களுக்கப்புறம் சிறிது நேரம் கிடைத்து வந்ததில் முழுதுமாக அத்தனையும் படித்தேன் :)
 
2008/5/10 Narayanan Kannan <nka...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 12, 2008, 9:04:55 AM5/12/08
to minT...@googlegroups.com
"  புலம்பெயர் வாழ்வின் மிகமுக்கியக்கூறு, நம்மில் பலருக்குத் தெரியாத கூறு
"தனது காலில் தான் நிற்பது" என்பது.  "
 
ஐய்யா நானுமமென் சொந்தக் காலிலேதான்
நிற்கிறேன், அவ்வளவு ஏன்
 
சுவற்றுக்கு வர்ணம் பூச வந்த அவர்கள் செய்த
கோலத்தைப் பார்த்து முக்கால் வாசி வேலைகளை நானும் என் மனைவியும் செய்து விட்டோம்
 
நான் என்னுடைய மகனுக்கோ, மகளுக்கோ
தொலைபேசியில் தொடர்பு கொண்டால்
அவர்கள் உடனே அப்பா நான்
" கஸ்டமர் காலில் இருக்க்கிறேன் "
சிரிது நேரம்கழித்து நானே அழைக்கீறேன் என்பார்கள்
 
நான் அவர்களிடம் உங்களை நன்றாகப் படிக்க வைத்து உங்கள் சொந்தக் காலில் நிற்பீர்கள்
என்று நினைத்து வேலைக்கு அனுப்பினால்
 
ஏன் எப்போது பார்த்தாலும் கஸ்டமர் காலில்
நிற்கிரீர்கள் என்று விளையாட்டாக கேட்பதுண்டு
 
அதேபோல நாங்கள் எங்கள் சொந்தக் காலில் நிற்க முயன்றாலும் இங்கே முடியாது
எந்தப் பொருள் வாங்கினாலும் அது எதனோடும் சேர்வதில்லை
 
அப்படிப்பட்ட தயாரிப்பை இங்கு அளிக்கிறார்கள்
அமெரிக்காவில்  என்னுடைய மகன் வீட்டில் கட்டில்,  மேஜை  அனைத்தும் வாங்கினோம்
அவை அனைத்தையுமே நான்தான் வரைபடத்தில் கொடுத்தபடி முடுக்கிக்கொடுத்தேன்
ஆனால் எல்லாம் சரியாகப் பொருந்தியது
இங்கு ஒன்றுக் கொன்று பொருந்தவில்லை
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/5/12 meena muthu <ranga...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
May 12, 2008, 12:18:43 PM5/12/08
to minT...@googlegroups.com


2008/5/12 Tthamizth Tthenee rkc...@gmail.com:

 
ஆனால் எல்லாம் சரியாகப் பொருந்தியது
இங்கு ஒன்றுக் கொன்று பொருந்தவில்லை
 
அப்படி இருந்தும் தாயகத்தில் மணமுறிவு ரொம்ப குறைவுதானே.

Tthamizth Tthenee

unread,
May 12, 2008, 12:22:19 PM5/12/08
to minT...@googlegroups.com
ஹஹஹஹஹஹாஆஆஆஅ
ஆமாம் தாயகத்தில் மண முறிவு குறைவென்று
யார் சொன்னது....?
 
இங்கு மணமுறிவும் அதிகம், மன முறிவும் அதிகம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/5/12 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

Narayanan Kannan

unread,
May 16, 2008, 11:25:21 PM5/16/08
to minT...@googlegroups.com
நண்பர்களே:

கீழேயுள்ள கதை புனைவு என்றே நம்புகிறேன்! ஆயினும் சாத்தியமான ஒன்று என்றே
தோன்றுகிறது.

கண்ணன்.

ONE BEDROOM FLAT...


WRITTEN BY AN INDIAN SOFTWARE ENGINEER..
A
Bitter Reality

As the dream of most parents I had acquired a degree in
Software Engineering and joined a company based in USA, the
land of braves and opportunity. When I arrived in the USA , it
was as if a dream had come true.


Here at last I was in the place where I want to be. I decided I
would be staying in this country for about Five years in which
time I would have earned enough money to settle down in India .

My father was a government employee and after his retirement,
the only asset he could acquire was a decent one bedroom flat.


I wanted to do some thing more than him. I started feeling
homesick and lonely as the time passed. I used to call home and
speak to my parents every week using cheap international phone
cards. Two years passed, two years of Burgers at McDonald's and
pizzas and discos and 2 years watching the foreign exchange
rate getting happy whenever the Rupee value went down..

Finally I decided to get married. Told my parents that I have
only 10 days of holidays and everything must be done within
these 10 days. I got my ticket booked in the cheapest flight.
Was jubilant and was actually enjoying hopping for gifts for
all my friends back home. If I miss anyone then there will be
talks. After reaching home I spent home one week going through
all the photographs of girls and as the time was getting
shorter I was forced to select one candidate.


In-laws told me, to my surprise, that I would have to get
married in 2-3 days, as I will not get anymore holidays. After
the marriage, it was time to return to USA , after giving some
money to my parents and telling the neighbors to look after
them, we returned to USA .


My wife enjoyed this country for about two months and then she
started feeling lonely. The frequency of calling India
increased to twice in a week sometimes 3 times a week. Our
savings started diminishing.

After two more years we started to
have kids. Two lovely kids, a boy and a girl, were gifted to us
by the almighty. Every time I spoke to my parents, they asked
me to come to India so that they can see their grand-children.


Every year I decide to go to India … But part work part
monetary conditions prevented it. Years went by and visiting
India was a distant dream. Then suddenly one day I got a
message that my parents were seriously sick. I tried but I
couldn't get any holidays and thus could not go to India ... The
next message I got was my parents had passed away and as there
was no one to do the last rights the society members had done
whatever they could. I was depressed. My parents had passed
away without seeing their grand children.


After couple more years passed away, much to my children's
dislike and my wife's joy we returned to India to settle down.
I started to look for a suitable property, but to my dismay my
savings were short and the property prices had gone up during
all these years. I had to return to the USA ...


My wife refused to come back with me and my children refused to
stay in India ... My 2 children and I returned to USA after
promising my wife I would be back for good after two years.

Time passed by, my daughter decided to get married to an
American and my son was happy living in USA ... I decided that
had enough and wound-up every thing and returned to India ... I
had just enough money to buy a decent 02 bedroom flat in a
well-developed locality..


Now I am 60 years old and the only time I go out of the flat is
for the routine visit to the nearby temple. My faithful wife
has also left me and gone to the holy abode.

Sometimes

I wondered was it worth all this?

My father, even after staying in India ,

Had a house to his name and I too have
the same nothing more.

I lost my parents and children for just ONE EXTRA BEDROOM.

Looking out from the window I see a lot of children dancing.
This damned cable TV has spoiled our new generation and these
children are losing their values and culture because of it. I
get occasional cards from my children asking I am alright. Well
at least they remember me.


Now perhaps after I die it will be the neighbors again who will
be performing my last rights, God Bless them.

But the question
still
remains 'was all this worth it?'

I am still searching for an answer..................!!!

START THINKING

IS IT JUST FOR ONE EXTRA BEDROOM???

kra narasiah

unread,
May 17, 2008, 9:25:05 AM5/17/08
to minT...@googlegroups.com

This story is almost true. To write a story on single parent problem I visited an orphanage in South Madras,  and gathered some details of inmates. There I met an elderly gentleman who was watiting for his departure from the earth. He told me that only the other day his friend had passed away a loner when his son was in the US. When he passed away the rites were performed by the Ashram people. They recieved sizable amount from the son for performong rites with a note that he was unable to come. But the Ashram people were happy as the amount was more than required for the rites and the reminder much needed for the upkeep of the Ashram. The caretaker told me something which gave me the seed for my award winning short story "Oruththi mahan"

"The son anyway had not visited the father all these years; if he had come after the death of teh father, it would have been infructuous expenditure for him. That made him send a sizable amount which can help others too. Why bicker about his not coming? I think it was the right thing that he did"

How true!

Narasiah



----- Original Message ----
From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Saturday, May 17, 2008 8:55:21 AM
Subject: [MinTamil] Re: புலம் பெயர்ந்தவர்களைச் சுற்றியமர்ந்து ஆவலாய்...

Narayanan Kannan

unread,
May 17, 2008, 10:08:20 AM5/17/08
to minT...@googlegroups.com
புலம் பெயர்தலின் இன்னொரு முக்கிய கூறு "உறவினர்" பரிமாற்றம் என்பது.
தூரமும், பொருளாதாரமும் உறவினர்களைப் பிரித்துவிடும் போது தன்னுள்
தன்னைத் தேடலும், உறவிற்கெல்லாம் உறவாய் இருக்கின்ற இறைவனின் இருப்பைக்
கண்டறிதலும் நடைபெறுகிறது. இதுவொரு முக்கிய காரணம் வெளிநாடுகளில் நம்
கோயில்கள் பெருகிவருதல். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் குடும்ப அன்பு என்பது
உறவினரிடம் மட்டுமே காணவெண்டுமென்ற கட்டாயமில்லை என்ற புரிதல். அன்பும்,
பாசமும் உண்மையில் உலகெங்கும் மண்டித்தான் கிடக்கிறது. நமக்குத்தான்
பார்க்கத்தெரிவதில்லை என்ற தெளிவு. பயன்? அங்கு நண்பர்களும், பிறரும்
வாழ்வின் முக்கிய கூறாகிப் போதல். அல்லது வெளிநாட்டினருடன், அவர்கள் இன,
சமய பேதமறியாமல் கலந்துவிடுதல்.

நஷ்டமாக ஒரு குடும்ப உறவு போகிறது.
வரவாக பல புதிய உறவுகள் தளிக்கின்றன.

நஷ்டமாக 'சுய அடையாளத்தின்' ஒரு கூறு காணாமல் போகிறது.
வரவாக புதிய பல அடையாளங்கள் வந்து சேருகின்றன.

இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களின் வரவும், செலவும் அவர்கள்
சொன்னால்தான் தெரியும்!

கண்ணன்

2008/5/17 kra narasiah <nara...@yahoo.com>:

Tthamizth Tthenee

unread,
May 17, 2008, 10:31:41 AM5/17/08
to minT...@googlegroups.com
அது மட்டுமல்ல
 
நாம் எவ்விடத்தில் இருக்கிறோமோ அவ்விடத்தில் உள்ள
(எந்த மதம், ஜாதி ,இனம், மொழி,கலாச்சாரத்தை
 சேர்ந்தவர்களாக இருந்தாலும்)
அவர்களோடு இணைந்து,கலந்து, பழகி சுற்றங்களை
வளர்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில்
அனைத்து தரப்பு மக்களும் இருப்பதால் அங்கு
தேசீய,உலக அளவிலும் சமத்துவம் கடைப்பிடித்தாக 
வேண்டிய சூழ் நிலை உருவாகிறது 
ஏனென்றால்
 
நான் அடிக்கடி சொல்லுவேன்
நாம் இருக்கும் இடத்தில் திடீரென்று நாம் கீழே விழுந்து விட்டால்
உடனே கை கொடுத்து தூக்க  நம் உறவினர்கள்
 எங்கிருந்தோ ஓடி வர முடியாது,
அங்கு பக்கத்தில் இருக்கும் நபர்தான் நமக்கு உதவ வேண்டும்
அதற்குப் பிறகுதான் ,உறவினர்களுக்கு செய்தி போய்,
அவர்கள் அங்கு வருவார்கள்,
ஆகவே புலம் பெயர்தல் மிக நல்ல பாடமும் கூட,
மாற்றங்களுக்கு உட்பட்டதுதான் வாழ்க்கை ,
யார் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களோ
அவர்கள் ஓரங்கட்டப்படுவர் என்பதே உணமை
,அதுபோல இப்போது புலம்பெயர்தல் கட்டாயமாகிவிட்டது
ஆகவே நாம் இன்னும் மக்களோடு கலந்து பழகி சமத்துவத்தை
 வளர்த்துக்கொள்ளுவது அவசியமாகிவிட்டது
 
ஒரே வீட்டில் இருந்தாலும் அன்பும் ,பாசமும்
உரிமையும் ,நேசமும்,இல்லாவிடில் புலம்பெயர்ந்தது
போலதான் வாழ்க்கை இருக்கும்
அதைவிட தொலைவுகளுக்கப்பால் உறவுகளை
வளர்த்துக் கொள்வோம்,அதுதான் வருங்காலத்துக்கு சரியான பாதை
 
புலம் பெயர்வோம் .........புலன் பெயராமல் இருந்தால் நலம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 

srirangammohanarangan v

unread,
May 17, 2008, 1:43:20 PM5/17/08
to minT...@googlegroups.com

கண்ணிரண்டும்  விற்றுச்  சித்திரம்  வாங்கினால்  கைகொட்டிச்  சிரியாரோ?

Tthamizth Tthenee

unread,
May 17, 2008, 1:47:01 PM5/17/08
to minT...@googlegroups.com

இரு கண்ணிழந்தும் பழக்கத்தில் சித்திரம் வரைந்தால்
அதை திறமையென்று எண்ணி கை தட்டி மகிழ மாட்டாரா...?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

srirangammohanarangan v

unread,
May 17, 2008, 1:52:44 PM5/17/08
to minT...@googlegroups.com
எப்படியோ   பைசா  விழும்.  மகிழலாம்.  பைசாதானே  முக்கியம்.

2008/5/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
--~--~---------~--~----~------------~-------~--~----~

Tthamizth Tthenee

unread,
May 17, 2008, 2:05:57 PM5/17/08
to minT...@googlegroups.com
உண்மைதானே  பைசா விழுந்தால் எதையும் செய்யலாம் என்கிற மனோபாவம்தானே இப்போது உள்ளது,
பைசா இருந்தால் இழந்த கண்ணையும் மீட்டுவிடலாமே
 
அயல் நாடுகளுக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு
இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள்,தங்கள் குழந்தைகளின் வளமான வாழ்வுக்காக தாங்கள் மட்டும்  வயதான காலத்தில்
உதவிக்கு கூட ஆளில்லாமல், மேலும் தங்கள் குழந்தைகள்
வழி தவறிப் போய்விடாமல் இருக்க வேண்டுமே என்று தினம் தினம் கவலைப் பட்டுக் கொண்டு இருப்பது கொடுமைதான்
என்ன செய்வது நம் நாட்டில் தகுதிக்கோ, திறமைக்கோ,
படிப்புக்கோ எதற்கும்  மதிப்பில்லாமல் இருக்கும் நிலைமைதான்
குழந்தைகளின் புலம் பெயர்தலுக்கு காரணம், அயல் நாடுகளிலும்
ஊழல் இருக்கிறது,ஆனால் மக்களின் அடிப்படை தேவைகளை நிரைவேற்றி விட்டு  அவர்கல் ஊழல் செய்கிரார்கள்,இங்கு அப்படி இல்லையே, இன்னும் அடிப்படை தேவைகள் கூட நிரைவேற்றிக் கொள்ள முடியாமல் இருக்கும் மத்தியதர வகுப்பினருக்கு,
பாசமான பிள்ளைகளின் பிரிவுகூட தவிர்க்க முடியாததாகிவிட்டது,
இப்போதைய பிள்ளைகளும் பறக்கத் துடிக்கிறார்கள்
அவர்களின் வருங்காலமாவது வலமாக இருக்கட்டும் என்று
புலம் பெயர்தலை ஒப்புக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் இருக்கிறார்கள்,
 
என்ன செய்வது நம் நாட்டின் தலையெழுத்தை யார் மார்றப் போகிறாரோ....
எல்லாப் புலம் பெயர்தலும் வேறு வழியில்லாமல்தான் நடக்கிறது
அதற்கு தீர்வு கண்டு பிடித்தால், ஒரு வேளை பைசாவை விட
பாசம் வல்மை பெருமோ என்னவோ...
 
 
அன்புடன்
தமித்தேனீ

வேந்தன் அரசு

unread,
May 17, 2008, 2:18:00 PM5/17/08
to minT...@googlegroups.com


2008/5/17 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:


இரு கண்ணிழந்தும் பழக்கத்தில் சித்திரம் வரைந்தால்
அதை திறமையென்று எண்ணி கை தட்டி மகிழ மாட்டாரா...?
 
 
 தேனிக்கு கண் தேவை இல்லை மூக்கு போதுமே
 
 

வேந்தன் அரசு

unread,
May 17, 2008, 2:20:59 PM5/17/08
to minT...@googlegroups.com
அமெரிக்காவுக்கு பண்ம் சம்பாதிப்பது என்ற ஒரே நோக்கில் வந்தால் சேர்த்த பணத்த்தில் ஊரில் பல மாடிகள் கட்டலாம்
 
ஆனால் இங்கேயும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு......
 
புட்டு  இருக்கவும் வேண்டும் திங்கவும் வேண்டும்நா முடியுமா?

Narayanan Kannan

unread,
May 17, 2008, 7:49:42 PM5/17/08
to minT...@googlegroups.com
மிக அருமையான கருத்துக்கள் தேனீயாரே!

குழந்தைகளின் நலன், அவர்கள் நல் வாழ்வு என்பதற்காக தங்கள் நலனை இரண்டாம்
பட்சமாகக் கருதும் ஓர் அரிய மனப்பான்மை இந்தியர்களிடம் இருக்கிறது. இங்கு
(கொரியாவில்) வேலை பார்க்கும் 90% இந்தியர்கள் குடும்பங்களை விட்டுத்
தனியாகவே இருக்கின்றனர். காரணம் குழந்தைகளின் கல்வி (இங்கு சரியான ஆங்கில
வழி கல்வி கிடைப்பதில்லை).

இந்தியக் கல்விமுறையைக் கட்டாயம் சீர் செய்ய வேண்டும். இல்லையெனில்
இன்னும் நிறைய மூளைச் சரிவு (brai drain) இருக்கும்.

இந்திய அரசியல்வாதிகளின் கிட்டப்பார்வை மாற வேண்டும். மெர்சிடிஸ் கார்
வைத்துக் கொண்டு என்ன பயன்? அதை ஓட்டுவதற்கு முறையான சாலை இல்லையெனில்!

கண்ணன்

2008/5/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 17, 2008, 10:25:07 PM5/17/08
to minT...@googlegroups.com
என்ன  வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்
 
என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன
 
இருக்கும் வளங்களையெல்லாம் வகைப்படுத்தி,
இருக்கும் அருமையான அழகான இடங்களை தூய்மைப் படுத்தி
இருக்கும் பொக்கிஷங்களைப் பாதுகாத்து
நாட்டை சுத்தமாக்கி வைத்துக் கொண்டாலே
வெளீநாட்டினர் சுற்றுப் ப்ரயாணமாய் வந்து
நம்முடைய இட்லி சாம்பாரையும், கோயில் புளியோதரையையும்
சாப்பிட்டுவிட்டு, நம்முடைய புராதனமான கலைப் பொக்கிஷங்களை
பார்த்து வியந்து ,நம்முடைய கலாச்சார பழமைகளை அனுபவித்து
நம் நாட்டிற்கு பணத்தை அள்ளித் தரத்தயாராய் இருக்கிரார்கள்,
 
அயல் நாட்டுப் பணம் இங்கு தானாய் வந்து குவியும்
அதை விடுத்து எந்த ஒரு சீர்மையையும் செயாமல்
நாட்டை அழகு படுத்தாமல், வலங்களைப் பெருக்காமல்
வரும்  அயல் நாட்டினரிடமிருந்து கொள்ளையடிக்க
திருடர்களையும் ,தவராக வழிகாட்ட பலதரப்பட்ட
ஏமாற்றுக் காரர்களையும் உருவாக்கி வைத்திருக்கிறது,
அரசாங்கம்,
 
சரியான திட்டமிடுதலோடு கூடிய வழி முறைகளைப் பின்பற்றி
கடுமையான சட்டங்கள் இயற்றி அவைகளை  தாங்களும் பின்பற்றி
மக்களையும் பின்பற்றவைத்து, நாட்டிற்கு சுபிக்க்ஷம் ஏறபடுத்தவேண்டும்
என்கிற ஒரே குறிக் கோளோடு செயல் பட்டால், நிச்சயம்
நம் நாடு உயரும் , என்னுடைய வாழ்விலே நம் நாடு ஓரளவு சுபிக்ஷமாக இருந்ததைப் பார்த்தவன்,அனுபவித்தவன், நான்
 
என்னுடைய சிறு வயதில் நாங்கள் மளிகை வாங்கும்
செட்டியார்  " கொசுரு" என்கிற பெயரில் ஒரு பெரிய காகிதத்தில்
முந்திரி, திராட்ஷை, பாதாம் ,கல்கண்டு என்று மொத்தத்தையும்
அள்ளிப் போட்டு  பெரிய பொட்டலமாக கட்டி எனக்கு அளிப்பார்
 
அன்று அவர் கொசுறு என்று கொடுத்ததின்
இன்றைய மதிப்பு எவ்வளவு தெரியுமா...கிட்டத்தட்ட  1000 ரூபாய்
 
மதிப்பீட்டுக் கொள்ளுங்கள் நாடு உயர்ந்திருக்கிறதா,இல்லை
 இன்னும் கீழே போயிருக்கிறதா   என்று
 
சரியான திட்டங்களை வார்த்தை அளவிலே மக்களுக்கு
வாக்குறுதிகளாக அள்ளிவிட்டுவிட்டு எந்த உருப்படியான
திட்டங்களையும் செயல் படுத்தாத நம்நாட்டு செயல் முறை
இன்னும் நம் நாட்டை சீரழிக்கஉதவுமே தவிர  முன்னேற்ற உதவாது
 
எத்துணையோ வழி முறைகள் இருக்க,அத்தனையும்
சரியாக செயல் படுத்தாமல்
 
நம் நாட்டிற்கு  மதுவினால்தான் அதிக வருமானம்
வருகிறது என்கிர ஒரு மாயையை ஏற்படுத்தி
மக்களை மதுவுக்கு அடிமையாக்கி
அவர்கள் தங்கள் வேலைகளை, கடமைகளைக் கூட
சரியாக செய்யவிடாமல் இன்னும் சீரழித்து அவர்களை
அறிவு பூர்வமாகவும் ,பொருளாதாரத்திலும் முன்னேறவிடாமல்
அடித்தட்டு மக்களாகவே வைத்திருந்து, அடிப்படை தேவகளைப்
பூர்த்தி செய்யாமல், இலவசப் பொருட்களை இனாமாக தந்து
தங்களுக்கு சாதகமான வாக்கு வங்கியாகவே வைத்திருக்கும்
நம் நாட்டு பெரியவர்கள் தங்கள் பாதையை மாற்றி
நாட்டின் நலத்தை எண்ணிப்பார்த்து நாட்டுக்காக உண்மையாக
செயல் பட ஆரம்பித்தால் நம் நாட்டை விட உயர்ந்த நாடு
இப்,பூவுலகிலேயே இல்லை என்பது திண்ணம்
அந்த நாட்டுப் பற்று மீண்டும் வந்தால்தான்
நம் நாட்டுக்கு  சுபிக்க்ஷம் வரும்,
 
நான் எழுதிய "  மீண்டும் சுதந்திரம்"
என்னும் கவிதையில் மிகவும் வருத்தப் பட்டு
நான் எழுதிய வரிகளில்
சிலவற்றை மட்டும் இங்கே போடுகிறேன்
 
 
"அன்று அன்னியரிடம் அடிமைப் பட்டோம்
அடிமைகளாய் நாம் சிறுமைப் பட்டோம்
அன்று அன்னியரிடமிருந்து மீண்டோம்
அத்துணை தியாகத்தையும் பலி கொடுத்து
 
"இன்று நம்மவரிடமே அடிமைப் பட்டோம்
என்று மீள்வோம் நம்மவரிடமிருந்து....?  "
 
நம் பாரதம் சுபிக்க்ஷ பூமி
 
அது இன்னும் சுபிக்ஷமாய் மாற
நாம் மீண்டும்  ஒரு சுதந்திரப் போராட்டத்தை துவக்க வேண்டிய  கட்டாயத்தில் இருக்கிறோம்
 
சுயநலத்தை விடுத்து   நாட்டைப் பற்றி சிந்திப்போம்
 
எல்லாம் நலமாகும்., புலம் பெயர்தலும் 
அடியோடு ஒழிந்து போகும்
 
அடித்தட்டு மக்களும்உயர்வார்கள்
நாடும் உயரும்,
 
எல்லா விதத்திலும் நம் நாடு மிக உயர்ந்த நாடாக
மாறி உலகத்தையே நாம் அன்பால், தருமத்தால்,
பாசத்தால், சகோதரத்துவத்தால் ஆளக்கூடிய நாள் கூடிய சீக்கிறம் வரவேண்டும்
 
வந்தே மாதரம்,பாரதமாதாக்கு ஜெய்
மலரட்டும் பூரண சுபிக்க்ஷ இந்தியா
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 

srirangammohanarangan v

unread,
May 17, 2008, 10:49:56 PM5/17/08
to minT...@googlegroups.com
சபாஷ்  தேனீ   'கொசுறு' என்பதை  வைத்தே  நாட்டு  வளத்தை   அளந்துவிட்டீரே!

2008/5/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Narayanan Kannan

unread,
May 17, 2008, 11:29:27 PM5/17/08
to minT...@googlegroups.com
அருமை! ரங்கன் சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.

கண்ணன்

2008/5/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
May 17, 2008, 11:34:56 PM5/17/08
to minT...@googlegroups.com
அன்றைய  கொசுறின்  விலை  இன்று  1000  ரூ.  இயற்கை  கொசுறாக  அளித்த   நீர்  புட்டியாகி  இன்று  விலைக்கு  விற்பனை!!!   தமிழ்த்தேனியாரே!   இந்த  விரசத்திற்கு என்ன  சொல்வீர்?

2008/5/18 Narayanan Kannan <nka...@gmail.com>:

Narayanan Kannan

unread,
May 17, 2008, 11:42:08 PM5/17/08
to minT...@googlegroups.com
"தண்ணீரைத் தங்கம் போல் நினை"

என்பது புதுமொழி!

ஜெர்மனியில் இறங்கிய இரண்டாவது வாரம். அதுவொரு கோடைப் பொழுது! கோடையில்
இருமுறை குளிப்பது என் வழக்கம். வீட்டுக்கார அம்மா என்னிடம் உங்கள் மாடி
வீட்டு தண்ணீர் மீட்டர் கூடுதலாக ஓடுகிறதே, என்ன செய்கிறீர்கள்? என்று
கேட்டாள். குளிக்கிறோம் என்று சொன்னோம்! நன்னீரை இப்படி
வீணாக்குகிறீர்களே? சேமித்துப் பழகுங்கள்! என்றாள். இவ்வளவிற்கும்
ஜெர்மனியில் நீர்ப் பஞ்சம் கிடையாது. மாதம் மும்மாரி ஏன்? 10 மாரிகூடப்
பெய்கிறது. ஆயினும் நன்னீர் என்பது காக்க வேண்டிய பொருள் என்ற கல்வியறிவு
அங்குள்ளது.

"நீரின்றி அமையாது உலகு" எனும் அரிய சொல்லைத் தமிழன் சொல்லியிருந்தாலும்,
வாழ்வு முறையில் அதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.

இந்தியாவின் பெரிய குறை, உள்ள தத்துவங்களுக்கும் மக்களுக்கும் எந்த
சம்மந்தமும் இல்லாமல் இருப்பது? எங்கே கோட்டை விட்டோம் நம் அறிவை?

கண்ணன்

2008/5/18 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 18, 2008, 5:19:34 AM5/18/08
to minT...@googlegroups.com
அன்பு கண்ணன் அவர்களே
 
மக்களுக்கு அடிப்படைத் தேவைகளாகிய
உண்ண உணவு , உடுக்க உடை, குடிக்கத் தண்ணீர்
இவை மூன்றும் அவசியமானது
இதில் மூன்றுமே ப்ரதானம்
 
இந்த பரதான தேவைகளை நிறைவேற்ற முடியாத நம் தலைவர்கள்...       குளிர் பானங்களைத் தயாரிக்கும்  நிருவனங்களுக்கு மட்டும்  தண்ணீர் தருவதும் , மக்களுக்கு 25 லிட்டர் தண்ணீர் நல்ல குடி தன்ணீர்
வேண்டுமென்றால்  லிட்டர் 25 ரூபாய்க்கு கண்ணெதிரே விற்கிறார்கள் ,நாங்கலும் வாங்கிக் குடிக்கிறோம்
என்ன செய்வது,........
எனக்குத் தெரிந்து நம் நாட்டிலும் ஒரு லிட்டர் பெட்ரோல்
25 ரூபாய்க்கு விற்றிருக்கிறது
இப்போது தண்ணீர் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு விற்கிறது
 
இவை போன்ற பெரிய பெரிய திட்டங்களைக் கோட்டை விட்டு விட்டு,  சிலை அவமதிப்பு ,பெயர் மாற்றம்,
போன்ற தேவை இல்லாத விஷயங்களுக்கு அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்
 
பள்ளிக்கூடங்கள் அருகிலேயே டாஸ்மார்க் மதுக்கடைகள்
ஹூம் நாடு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

 
On 5/18/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
May 18, 2008, 5:57:45 AM5/18/08
to minT...@googlegroups.com
2008/5/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

>
> பள்ளிக்கூடங்கள் அருகிலேயே டாஸ்மார்க் மதுக்கடைகள்
> ஹூம் நாடு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது
>

மது அருந்துவது தவறல்ல. அது பெரியவர்களின் விருப்பம், சுதந்திரம்.
ஜெர்மனியில் பியர், ஒயின் என்பது ஒரு கலாச்சாரக் கூறு. ஆனால் அங்கு
யாரும் குடித்துவிட்டு கலாட்டா செய்வதில்லை. நம்மவர் குடியை ஒரு சாக்காக
வைத்து செய்யும் அல்ப பயமுறுத்தல். ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.
காலச்சுவடு நடத்திய 'தமிழினி 2000' மாநாடு. இம்மாநாட்டை சாதி
அடிப்படையில் அசிங்கப்படுத்த ஆ.மார்க்ஸ் சீடர்கள் காத்திருந்தனர். புகலிட
இலக்கியம் பற்றிய ஒரு கலந்துரையாடல் அரங்கத்தின் வெளியே நடந்து
கொண்டிருந்தது. அப்போது ஒருவர் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்ய
முயன்றார். எங்கள் நண்பர் சுசீந்திரன் அவர் சட்டையை பிடித்து உலுக்கி,
"டேய் நான் புலி! சுட்டுப்புடுவேன்!" என்று சொன்னார். இந்தக் குடிகாரர்
ஆட்டம் விடுதலைப் புலி என்ற பேச்சுக் கேட்டவுடன் பொட்டிப் பாம்பாய்
அடங்கிவிட்டது! இதை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது. அவ்வளவுதான்
நம்ம டம்பம்!

ஒருமுறை, ஆதம்பாக்கத்தில் ஒரு ஒயின் ஷாப் முன்னால் ஒருவர் அவசர, அவசரமாக
சாராயம் வாங்கி ஒரே மடக்கில் குடித்துக் கொண்டிருந்தார். என் விஞ்ஞானி
புத்தி சும்மா இருக்கவில்லை. அவரிடம் போய் "ஏனைய்யா! இப்படி மடக்கு,
மடக்குன்னு குடிக்கிற. குடல் வெந்து போகும். மெதுவா ஆற, அமரக் குடி! "
என்றேன். அவன் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு. "வீட்டுக்கு போறதுக்கு
முன்னாடி ஏதோ கிக் வந்தா சரி, வீட்டுக்காரியைப் பார்த்தவுடன் எப்படியும்
போகத்தானே போகிறது!" என்றானே பார்க்கலாம்!

இந்தியாவில் எதை எப்படிச் செய்வதென்று தெரிவதில்லை! ஜெர்மனியில் 10
மணிக்கு மேல்தான் செக்ஸ் காட்சிகளுள்ள படங்கள் திரையிடப்படும். இந்திய
சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை "semi porno movies". அதை குடும்பம்
குடித்தனத்தோடு பார்த்து ரசிக்கிறோம், காலையிலிருந்து நடு இரவு வரை. மது
என்பது ஒரு "mood enhancer" அதை ஏதோ இளநீர் போல் அருந்திவிட்டு நடு
ரோட்டில் சலம்புகிறோம்!

இந்தியா இன்னும் போக வேண்டிய தூரம் அதிகமுள்ளது!

கண்ணன்

srirangammohanarangan v

unread,
May 18, 2008, 6:28:48 AM5/18/08
to minT...@googlegroups.com

சுயங்கெட்டவன்  தேடும்  முதல்  புகல்  குடி

Narayanan Kannan

unread,
May 18, 2008, 8:08:51 AM5/18/08
to minT...@googlegroups.com
On Sun, May 18, 2008 at 7:28 PM, srirangammohanarangan v
<ranga...@gmail.com> wrote:
> சுயங்கெட்டவன் தேடும் முதல் புகல் குடி
>

இதுவொரு நல்ல இந்தியப்பார்வை. ஆரோக்கியமானதும் கூட :-)

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
May 18, 2008, 11:23:40 AM5/18/08
to minT...@googlegroups.com
சுயம் உள்ளவர்களும் இருக்கிறார்களா
 
பரவாயில்லையே....!!!!!
 
அணுவை சத கூரிட்டு அதில் தேடினாலும்
சுயம் கிடைக்கவில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 5/18/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
May 18, 2008, 6:52:49 PM5/18/08
to minT...@googlegroups.com
2008/5/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> சுயம் உள்ளவர்களும் இருக்கிறார்களா
>
> பரவாயில்லையே....!!!!!


சபாஷ்! :-)

அதனால்தானோ, பெரியார் "சுய" மரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார்?

முதலில் "சுயத்தை"த் தேடு!
பின் அதற்குரிய "மரியாதையை"த் தேடு!

என்று :-)

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
May 18, 2008, 11:29:58 PM5/18/08
to minT...@googlegroups.com
கிருஷ்ணன்,  புலம் பெயர்ந்து சுயம் இழந்தான்
ராமன் புலம் பெயர்ந்து சுயம் இழந்தான்
அத்துணை தெய்வங்களும்  இருக்கும் இடத்தை விட்டு
புலம் பெயர்ந்துதான் (வாழவைக்கவோ, வீழவைக்கவோ)
சுயம் இழந்தனர்
தெய்வங்களே புலம் பெயர்ந்துதான் ஆகவேண்டும், சுயம் இழந்துதான் ஆகவேண்டும் என்று நிருபித்திருக்கின்றன
,சாதாரணமனிதர்கள்  நாம் எம்மாத்திரம்....?
 
 
புலம் பெயர்வோம் ,ஆனால் நாம் நாமாக இருக்க,
 கூடிய வரையில் முயல்வோம், சுயம் காப்போம்
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

Narayanan Kannan

unread,
May 18, 2008, 11:41:36 PM5/18/08
to minT...@googlegroups.com
ஆகா! ரங்கனுக்கு பாயிண்டு கிடைத்துவிட்டது?

அவர் அடுத்து கேட்கப்போகும் கேள்வி: சுயம் என்றால் என்ன?

கண்ணன்

2008/5/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Narayanan Kannan

unread,
May 19, 2008, 12:27:18 AM5/19/08
to minT...@googlegroups.com
பொதுவாக:

சுயம் என்றால் என்ன?
அதை இழக்கமுடியுமா? (புத்தன் சொல்கிறான், சுயம் என்பது
தோற்றப்பிழையென்று. பிழையை இழக்கவியலுமா?)
சுயமென்றால் நம் நினைவுகளா?
பண்பாட்டுப் பழக்க வழக்கங்களா?
இல்லை நம் தாய் மொழியா?
இல்லை நம் பால் சார்ந்த உணர்வுகளா (will a transsexual loose his/her
'suyam' after an operation)?
முற்பிறவி பலாபலன்களா? (போன பிறவியில் கழுதையாய் இருந்துவிட்டு,
இப்பிறவியில் மனிதனாய் பிறந்துவிட்டால் இழந்த "சுயம்' எது?)
இராமன் இழந்த சுயம் என்ன?
கிருஷ்ணன் இழந்த சுயம் என்ன?

கண்ணன்

பிகு: இவையெல்லாம் ரங்கன்தான் கேட்கவேண்டுமென்றில்லை பாருங்கள் :-))

2008/5/19 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
May 19, 2008, 11:05:18 AM5/19/08
to minT...@googlegroups.com
எல்லா  கேள்விகளையும்  நீங்களே  கேக்குறீங்க.  பழி  மாத்திரம் என்  தலையிலயா?  நானோ எளியேன்.  புலம்  பெயர்ந்தோர்களின்  மனநிலை  குறித்து   புரிந்துகொள்ள  முயற்சி  செய்கிறேன்.
 
'சுயத்தை  மறைத்தது  சௌகரியம்  தானே
சுயத்தில்  மறைந்தது  சௌகரிய  மாமே!' 
 
என்று  திருமந்திரத்தில்  திருமூலர்   வாக்கில்  படித்த  நினைவு.   தேடிக்கொண்டிருக்கிறேன்   ஒரு  பிரதியிலும்  இல்லை.   கிடைத்தால்  சொல்லுங்கள்.

Narayanan Kannan

unread,
May 19, 2008, 9:00:27 PM5/19/08
to minT...@googlegroups.com
ரங்கன்:

இது சுவாரசியமாகத்தான் இருக்கிறது! புலம்பெயர் உளநிலை என ஆரம்பித்து
"புலம் பெயர்ந்தோர் உளநிலை - உள்ளூர் பார்வையில்" என்றாகிவிட்டது :-)
என்ன சார்! பொறாமையா இருக்கா? :-)

சௌகர்யம் நாடாத உயிரேது? யாருக்கும் சாமியாராகப் போகும் மனோநிலை
வரவில்லையே! சாமியார் ஆனாலும் சுகம் தேடும் உள்ளத்தை தி.ஜானகிராமன் ஒரு
கதையில் அழகாகச் சொல்லுவார்.

விலங்குகள் உயிரைக் கொடுத்து வலசை போகின்றன (ஆயிரக்கணக்கான மைல்கள்
non-stop). ஏன்? சௌகர்யத்திற்காகத்தான்.

இறந்த பின் வைகுந்தம், கைலாசம் என்பதும் கூட ஒரு சௌகர்யத்திற்காகத்தான்.

யாருக்கும் அலெக்சாண்டர் கூப்பிட்டு கிரேக்கம் போகாத சாதுவின் மனோநிலை
வருவதில்லையே!

மனித புலப்பெயர்தலை இப்படிப் பாருங்கள். உலக ஜனத்தொகையின் விகிதத்தைக்
கணக்கிட்டால். உலகில் நடமாடும் மனிதர்களில் ஐந்திலொருவர் சீனராகவும்,
ஏழிலொருவர் இந்தியராகவும் இருப்பர். அது இப்போது உலகில் எங்கு போனாலும்
நிரூபணமாகத் தெரிகிறது!

கண்ணன்

2008/5/20 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
May 20, 2008, 10:27:54 AM5/20/08
to minT...@googlegroups.com
சரியாகச்  சொன்னீர்கள்.  உள்ளூரைப்  பற்றி  புலம்  பெயர்ந்தோருக்கு  கருத்துகளும்,  விமரிசனங்களும்  இருப்பதுபோல்   புலம்  பெயர்ந்தோரைப்பற்றி  உள்ளூரின்  பார்வை  ஒன்று  இருக்கிறது.  இப்பொழுதைக்கு  அதை  ஆரம்பிக்க  வேண்டாம் என்று  நினைத்தேன்.  நீங்களாகவே  அடியெடுத்துக்  கொடுத்துவிட்டீர்கள்.  பல  பார்வைகள்  சேர்ந்து  ஒரு  தரிசனம்  வரட்டுமே, என்ன  நான்  சொல்வது!

2008/5/20 Narayanan Kannan <nka...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
May 20, 2008, 10:39:01 AM5/20/08
to minT...@googlegroups.com
என்ன ஒரு தீர்க்கதரிசனம்....!!!!!!!!!!
ரங்கன் அவர்களே நீங்கள் நிச்சயமாக
ஒரு தீர்க்க தரிசி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
Reply all
Reply to author
Forward
0 new messages