பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்

261 views
Skip to first unread message

annamalai sugumaran

unread,
Sep 26, 2008, 1:57:16 AM9/26/08
to minT...@googlegroups.com

பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்


பிரம்மனே ! பிரபஞ்ச நாயகனே !
பிந்துவே ! பெரு ஓசையின் (BIG BANG)  விளைவே !
எமையெல்லாம் படைத்தது ஆள்வது நீஎன்றால்
நீங்காத ஐயம் பல என்றும் உண்டு !
பசியும் பட்டினியும் கூட உன் படைப்பு தானா?
எத்தனை தொழில் செய்தாலும் துரத்தி வரும்
தொல்லைகளும் நீயே படைய்த்தயா ? பிறந்தோர்
அனைவரும் புசிதிருக்கும் வித்தையை ஏன்
படைக்க மறந்தாய்! " இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான் "  என உன்னை
வான் புகழ் வள்ளுவர் சபித்த போதும்  ஏன் வாளாயிருந்தாய்
படைத்தல் உன் பணி என்றால் உலகில் இத்தனை
நெருக்கம் ஏன் படைத்தாய் ! உன் கணக்கில் பிழையா ?
காலத்தின் இறுதியால் இந்த குழப்பமா ?
எம்மில் பலர் வாடுவதையும்
வெற்று குடங்கள் வீரமுரசு கொட்டுவதும்
நீயேன் உன் படைப்பில் அனுமதித்தாய் ?
மசால் வடை விற்பவன் மகாகவியை விட
வசதியாய் வாழ , மனிதன் படைத்த பணம்
உன் அனைத்து படைப்பையும் ஆளும் தகுதி
அடைந்தது எப்படி ? இறப்பில் தன்னே ஒற்றுமை
அடைகிறான் வாழும் போதோ ஆயிரம் வேற்றுமை
அவன் தவறால் மட்டும் இல்லாமல் தவிகிறானே !
கர்மத்தின் பம்பர சுழற்சி விசை இன்னும் உன்னிடம் தானே உள்ளது !!

 



--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY  INDIA
  MOBILE 09345419948

Narayanan Kannan

unread,
Sep 26, 2008, 4:27:43 AM9/26/08
to minT...@googlegroups.com
சுவாரசியமான அலசல்!

தோற்றுவித்தோன் (உலகு இயற்றியான்) ஓர் மனிதனா? தேவனா? இல்லை ஓர் இயக்கமா?

புறவயப்படுத்தல் (பரந்து கெடுக உலகு இயற்றியான்) ஒருவகையான தப்பித்தல்தானே?

விதி என்பது கூட ஓர் வகையான கையாலாகத்தனம்தானே?

இங்கு கோபம் யார் மீது?

உலகை சீரழிய விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மனிதன் மீதா?
இல்லை, உருவாக்கியோன் என்று இனம் தெரியாத ஒரு குறி மீதான தாக்குதலா?

மின்தமிழ் சிறப்படையவில்லை என்றால் நான் பிரம்மனைத் தாக்கமுடியுமா?

யோசிப்போம்!

க.>

2008/9/26 annamalai sugumaran <amirth...@gmail.com>:


> பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்
>
> பிரம்மனே ! பிரபஞ்ச நாயகனே !
> பிந்துவே ! பெரு ஓசையின் (BIG BANG) விளைவே !
> எமையெல்லாம் படைத்தது ஆள்வது நீஎன்றால்

வேந்தன் அரசு

unread,
Sep 26, 2008, 9:10:32 AM9/26/08
to minT...@googlegroups.com
ஆனாலும் பசி இல்லா வரம் எனக்கு வேண்டாம்

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

ARUNACHALAM BALASUBRAMANIAN

unread,
Sep 26, 2008, 2:22:36 PM9/26/08
to minT...@googlegroups.com
Good lamentation, addressed to the Creator!. I enjoyed. Thanks.

BALU

--- On Fri, 26/9/08, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote:


Be the first one to try the new Messenger 9 Beta! Click here.

annamalai sugumaran

unread,
Sep 27, 2008, 1:36:46 AM9/27/08
to minT...@googlegroups.com
தங்கள் இதை   நகைச்சுவைக்கு சொலியதகவே நினைக்கிறேன் .
 
 

தேடி நிதம் சோற்று தின்று  அதற்காகவே வாழ்நாளை போக்குவேன் என நினைத்தாயா ?என பாரதி வினவுகிறார்
மணிமேகலை முதல் வள்ளலார் வரை பசி பிணி போக்க
பாடாய் பட்டனர் .சித்தர்கள் பலரும் உண்டிசுருக்கி
அறிவொளி பெற பாடுபட்டனர் . பசியை ஞானத்திற்கு ஒரு
தடையை எண்ணினர் .
பசி ஒரு பிணிதான்  வரம் அல்ல !
வயறுதான்  முதலாளித்துவத்தின்  முதல் ஆயுதம்
பசியிலை என்னில் பயனுள்ள பல செயலாம்
வளமுள்ள நாட்டில் தான் கலைகள் வளரும்
நித்திய வறுமை மனித நேயத்தை கொன்றுவிடும் .
வயற்று பாடே பெரும் பாடாய் உள்ள அவதி
பட்டுப்பார்தால் தான் தெரியும் .
அன்புடன்
ஏ.சுகுமாரன்

நான் இதை வாதம் பண்ண எழுதவில்லை , சிந்தனைக்கு ,எனக்கும்
சான்றோர் பலர் பதில் பெறவாய்ப்பு கிடைக்கும் எனத்தான்
எழுதுகிறேன்

Narayanan Kannan

unread,
Sep 27, 2008, 1:48:09 AM9/27/08
to minT...@googlegroups.com
சுவாரசியமான சிந்தனைதான்...

பசி இருப்பதால் மனிதன் உழைக்கிறான். பசி இல்லா உலகில் ஆக்கம் இருக்காது
என்பது வேந்தரின் வாதமாக இருக்கலாம்.

ஆனால் வள்ளுவன் காலத்திலேயே தமிழ் மண்ணில் பட்டினி கிடந்தோர் நிறைய
(இல்லையெனில் அவன் ஏன் பிரம்மனுக்கு சாபம் கொடுக்க வேண்டும்?) எனில்,
எங்கோ தவறு...ஆரம்பத்திலேயே நடந்திருக்கிறது.

இதை men took a wrong turn என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

ஆனாலும் மண்ணில் எல்லோரும் வாழ வழியுண்டு. வசதியும் உண்டு. ஆனால்
மனிதனின் சுயநலம் எனும் கருவி எல்லாவற்றையும் பாழ்பண்ணிவிடுகிறது.

புல்லையும், புழுவையும், கல்லுக்குள் தேரையையும் வாழ வைக்கும் இறைவன்
நம்மையும் வாழ வைப்பான் என்று 'சும்மா' இருக்கவா முடிகிறது? "இருந்து
பார்!" என்கின்றன ஞானிகளின் சரிதம். அவ்வளவு 'தில்' நமக்கு இல்லை. சாமி
என்பதே நம் வாழ்வில் சும்மா தொட்டுக்க ஊறுகாய் போல் தானே!

இதை விடுத்து மார்க்ஸ், எங்கல்ஸ் சொல்வது போல் சமதர்ம சமுதாயம்
உருவாக்கலாமென்றால் அதுவும் தோற்றுக்கொண்டே வருகிறது.

எனக்கென்னவோ சவால் மனிதனுக்குத்தான் என்று படுகிறது. பிரம்மனைத் திட்ட
மாட்டேன் (அதுவொரு ஆள் என்று கொண்டால்).

கண்ணன்

2008/9/27 annamalai sugumaran <amirth...@gmail.com>:

karth...@gmail.com

unread,
Sep 27, 2008, 5:41:51 AM9/27/08
to மின்தமிழ்

Big Bang-இல் ஓசை இருந்திருக்குமா சுகுமாரன்?
யார் கேட்டிருப்பார்கள்?

ரெ.கா.

On Sep 26, 1:57 pm, "annamalai sugumaran" <amirthami...@gmail.com>
wrote:
> *
> *

annamalai sugumaran

unread,
Sep 27, 2008, 6:28:56 AM9/27/08
to minT...@googlegroups.com
நாத பிந்து கலாநிதி என கடவுள் குறிக்கபெருகிறார்
 big bang  பெரிய ஓசை தானே ! ஓசை இல்லாமல் எந்த செயலும் இராது .
 ஒரு நத்தை ஊர்ந்து போகும் போது கூட ஓசை வரும் என கேள்விபட்டுயேருக்கிறேன்
அதனால் தான் நாதம் என்பதை குறிக்க கூறினேன்
ஓசை கேட்க்க தான் யாரும் அப்போது இருந்திருக்க மாட்டர்கள்
மாற்த்து கருத்து இருந்தால் தெரிந்து கொள்ள நான் தயார்
அன்புடன்
-ஏ.சுகுமாரன்

annamalai sugumaran

unread,
Sep 27, 2008, 6:52:13 AM9/27/08
to minT...@googlegroups.com
நானும்  பரமனை திட்ட வில்லை ,
ஐயம் என  கூறி  சிந்தனை செய்யத்தான் சொன்னேன்
நேற்று கூட "வறுமையும் பசியும்''  என்ற  ஐ.நா வட்ட மேஜை மாநாட்டில்
இந்தியர்கள்  25 %  பேர்  ஒரு டாலருக்கு குறைவாக 
தான் சம்பளமாக பெறுகிறார்கள் என சிதம்பரம்  பேசுகிறார்
இன்றைய உலகில் மனிதனில் பாதி பேர் முழுமையாக சாப்பிட இயலவில்லை
தவறு அவன் உழைகாதது மட்டும் இல்லை , ஆப்ரிக்காவில் அவன் பிறந்ததும்
அமைரிக்காவில்  இவன் பிறந்ததும் யார் தவறு !
ஆகையால் கருணை வேணும்
அவன் உழைக்கவில்லை என உதற கூடாது
வசதி படைத்தோர் அவர் உழைப்பால் மட்டும்
அதை அடையவில்லை என்கிறேன்
மனிதன் உழைப்பது வெறும் வயித்து பாட்டிற்காக இருக்க கூடாது
மேலும் சிந்திப்போம்
அன்புடன்
ஏ.சுகுமாரன்
 


annamalai sugumaran

unread,
Sep 27, 2008, 7:36:56 AM9/27/08
to minT...@googlegroups.com

ஆதி சங்கரர் சொல்லித்தந்த நியதி படி நேதி நேதி என ஒன்று ஒன்றாய்
கழித்து வந்தால் உலகு இயற்றியான் நிச்சயமாய்  கை கால்களுடன்
காலாட்டி கொண்டிருக்கும் மனித ருபமில்லை , அதனினும் உயர்வு தான்
தேவனுமில்லை தேவ கூட்டமுமில்லை ,
இத்தனை ஜீவனின் கணக்கு
வழக்கு கையாளும் சாத்தியம் நிச்சயமாய் இல்லை .
எல்லா இய்யகமும்  காரண காரிய  நியதி படி இயற்கையான விதி தான்
தண்ணீர் காய்ச்சினால் நீராவி  அவது போல் எல்லாம் நியதிதான்
நமக்கு தான் என்ன செய்தால் என்ன வரும் என ஆராய தெரியவில்லை .
குழுவுக்கு ஒரு நியதி , தனி மனிதனுக்கு ஒரு நியதி என
எல்லாம் செட் ஆகி விட்டது , நியதியை மாற்றும்  சுட்ஷுமம்
ஞானியர்க்கே தெரியும் .
ஆனாலும் மனிதன் கடவுள் இல்லாது வாழ இயலாது 

மேலும் சிந்திப்போம்

அன்புடன்
ஏ.சுகுமாரன்

 

--


 



On 9/27/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
சுவாரசியமான சிந்தனைதான்...

,
எங்கோ தவறு...ஆரம்பத்திலேயே நடந்திருக்கிறது.

ஆனாலும் மண்ணில் எல்லோரும் வாழ வழியுண்டு. வசதியும் உண்டு. ஆனால்
மனிதனின் சுயநலம் எனும் கருவி எல்லாவற்றையும் பாழ்பண்ணிவிடுகிறது.

வேந்தன் அரசு

unread,
Sep 27, 2008, 10:11:31 AM9/27/08
to minT...@googlegroups.com


2008/9/27 annamalai sugumaran <amirth...@gmail.com>

தங்கள் இதை   நகைச்சுவைக்கு சொலியதகவே நினைக்கிறேன் .
 
 

தேடி நிதம் சோற்று தின்று 
 
அன்பின் சுகுமாரன்
 
எத்தனையோ நூல்களை வாசிக்க நேரம் இல்லாமல் வாழ்வதற்காக உழைப்பதிலேயே வாழ்நாள் வீணாகிறது என்று சொல்ல வந்தேன்

Tthamizth Tthenee

unread,
Sep 27, 2008, 10:31:34 AM9/27/08
to minT...@googlegroups.com
பசி என்பது வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா...?
உலகில் எல்லாப் பசியும் உண்டே,ஆனால் மற்ற எந்தப் பசிக்காகவும்
மனிதன் இறப்பதில்லையே,  ஏன் வயிற்றுப்பசிக்கு மட்டும் இரக்கிறான்
எண் சாண் உடலுக்கு வயிறே ப்ரதானமா...?
 
தனி ஒரு மனிதருக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்
என்ற பாரதி கூட மற்ற பசிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா,
 
காற்று இல்லாவிடில் உயிர் போய்விடும்,
நீரில்லாவிடில் உயிர் போய்விடும்,
வயிற்றுக்கு உணவில்லாமல் போனாலும் உயிர் போய்விடும்
 
ஆனால் பட்டினி சாவுகள் கணக்கெடுக்கப் படுகின்றன
ப்ராணவாயு இல்லாமல் சாவது கணக்கெடுக்கப்படவில்லை
நீரில்லாமல் சாவது கணக்கெடுக்கப்படவில்லை
 
உடலால் அழிவர் உயிரால் அழிவர் என்கிறார்கள் சித்தர்கள்
 
பசி ... வரமா ....சாபமா....?
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
2008 செப்டம்பர் 27 19:41 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Sep 27, 2008, 10:55:59 AM9/27/08
to minT...@googlegroups.com


 
2008/9/27 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

பசி என்பது வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா...?
உலகில் எல்லாப் பசியும் உண்டே,ஆனால் மற்ற எந்தப் பசிக்காகவும்
மனிதன் இறப்பதில்லையே,  ஏன் வயிற்றுப்பசிக்கு மட்டும் இரக்கிறான்
எண் சாண் உடலுக்கு வயிறே ப்ரதானமா...?
 
 
பசி காமம் எல்லாமே வரமே
 
பசி இல்லாமல் உணவின் சுவை இல்லை
 
காமம் இல்லாம்ல் வாழ்வின் சுவை இல்லை
 
இந்த பசிக்காக இரப்பது இல்லையா?
 
ரொம்பவே அப்பிராணியா இருக்கிங்க தேனிசார்.
 
தொன்று கண்களால் இரந்தோமே அந்த கருமிகளான சிறுமிகளிடம்.
 
"காதல் போயின் காதல் போயின் சாதல்" என்றார் பாட்டுக்கொரு புலவன் பாரதி
 
 
 

வேந்தன் அரசு

unread,
Sep 27, 2008, 10:57:57 AM9/27/08
to minT...@googlegroups.com
காற்று இல்லா இடத்தில் ஓசை இல்லை.
 
பெருவெடிப்பின் போது ஓசை  இருக்க வாய்ப்பு அறவே இல்லை

Narayanan Kannan

unread,
Sep 27, 2008, 7:55:59 PM9/27/08
to minT...@googlegroups.com
2008/9/27 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> காற்று இல்லா இடத்தில் ஓசை இல்லை.
>
> பெருவெடிப்பின் போது ஓசை இருக்க வாய்ப்பு அறவே இல்லை

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே

திருநெடுந்தாண்டகம் எனும் திருமங்கையின் அருளிச்செயல் இப்படி
ஆரம்பிக்கிறது. என்னைப்படாதபாடு படுத்துகிற பாசுரம். காலாட்சேபம் கேட்டு
ஆழ்பொருள் அறிய வேண்டும். நிற்க.

முன்னுருவில் அவன் மின்னுருவாய் வந்தான். BigBang எனும் பிரயோகம்
சத்தத்தை நினைவூட்டுகிறது. ஆயின் தோன்றியது ஓர் ஒளிப்பரப்பே. அது
மின்னுருவாய் இருந்தது. அப்போதுதான் அணு, அணுத்துகள் எனும் பருப்பொருள்
தோற்றமுற்றது. சத்தம் இருக்க வாய்ப்பில்லை.

பருப்பொருளுக்கு (matter) ஆதாரமான சைதன்யத்தை ஜோதி என்றே
கண்டுணர்கின்றனர் நம் பெரியோர்.

கண்ணன்

Narayanan Kannan

unread,
Sep 27, 2008, 8:02:29 PM9/27/08
to minT...@googlegroups.com
2008/9/27 annamalai sugumaran <amirth...@gmail.com>:

> தண்ணீர் காய்ச்சினால் நீராவி அவது போல் எல்லாம் நியதிதான்
> நமக்கு தான் என்ன செய்தால் என்ன வரும் என ஆராய தெரியவில்லை .
> குழுவுக்கு ஒரு நியதி , தனி மனிதனுக்கு ஒரு நியதி என
> எல்லாம் செட் ஆகி விட்டது , நியதியை மாற்றும் சுட்ஷுமம்
> ஞானியர்க்கே தெரியும் .
> ஆனாலும் மனிதன் கடவுள் இல்லாது வாழ இயலாது


ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று

karth...@gmail.com

unread,
Sep 28, 2008, 9:11:41 AM9/28/08
to மின்தமிழ்
ஓசை மட்டுமல்ல. நினைத்துப் பார்த்தால் வெளிச்சமும் இருந்திருக்க
வாய்ப்பில்லை.
பருப்பொருள் என்பது பிறகுதானே தோன்றுகிறது!

ஓசையும் இல்லாத வெளிச்சமும் இல்லாத இந்த மௌனப் இருள்வெடிப்பு
மூளையில் கலவரம் படரச் செய்கிறது.

இறைவன் பிறந்தது big bang-இற்கு முன்பா பின்பா?

ரெ.கா.

Narayanan Kannan

unread,
Sep 28, 2008, 10:04:00 AM9/28/08
to minT...@googlegroups.com
2008/9/28 karth...@gmail.com <karth...@gmail.com>:

> இறைவன் பிறந்தது big bang-இற்கு முன்பா பின்பா?


ஒன்றும் தேவும் உலகும் உயிரும்
மற்றும் யாது இல்ல
அன்று நான்முகன் தன்னோடு தேவர்
உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு
திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத்
தெய்வம் நாடுதிரே?

திருவாய்மொழி

Narayanan Kannan

unread,
Sep 28, 2008, 10:06:37 AM9/28/08
to minT...@googlegroups.com
2008/9/28 karth...@gmail.com <karth...@gmail.com>:

> இறைவன் பிறந்தது big bang-இற்கு முன்பா பின்பா?
>
> ரெ.கா.


உலகம்யாவையுமதாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையான் அவன்
தலைவன், அன்னவர்க்கே சரண், நாங்களே

கம்பன்

annamalai sugumaran

unread,
Sep 28, 2008, 1:50:09 PM9/28/08
to minT...@googlegroups.com
பிக் பாங்  நடந்தது சுமார்   14 பிலியன் ஆண்டுகளுக்கு முன் என தெரிவிக்கின்றனர் .
 அப்போது  இந்த மொத்த பிரபஞ்சமும்
சில மில்லி மீட்டர் அளவே இருந்த பிந்து ஆனவித்து  உருவில்  இருந்து ,    அதில்  ஒரு பிரபஞ்ச  வெடிப்பு  நிகழந்தது   
 அந்த  வித்து சில  மிக மிக சிறிய மைக்ரோ வினாடிகளில் விரிவடைந்து குளிர்த்து
நாம் இருக்கும் பிரபஞ்சம் உருவானது .
 இது field equations, என பட்ட theory of relativity  தந்தை ஆன  Albert Einstein ஆல் 1915 ---நிறுவபட்டது   அப்போது இருந்த ஒரே சக்தி
பிறகு பல சக்திகளாக பரிமளித்தது .
1915 ---க்கு பிறகு பலவேறு கருத்து மாறுதல்கள் நிழ்ந்துள்ளன பற்பல  ஆராய்சியளர்களால் ஏற்பட்டுள்ளது .
According to the big bang theory, the universe expanded rapidly in its first microseconds. A single force existed at the beginning of the universe, and as the universe expanded and cooled, this force separated into those we know today: gravity, electromagnetism, the strong nuclear force, and the weak nuclear force. A theory called the electroweak theory now provides a unified explanation of electromagnetism and the weak nuclear force theory. Physicists are now searching for a grand unification theory to also incorporate the strong nuclear force. String theory seeks to incorporate
the force of gravity with the other three forces.

 scientists cannot look back in time beyond that early epoch, the actual big bang is hidden from them. There is no way at present to detect the origin of the universe. Further, the big bang theory does not explain what existed before the big bang. It may be that time itself began at the big bang, so that it makes no sense to discuss what happened "before" the big bang.

But in  1964, particle physicist Peter Higgs discovered a sub-atomic particle which is now known as the Higgs boson. Scientists believe that the Higgs boson gives all matter it's mass, and thus it is considered a fundamental particle. More recently, the Higgs boson has been known by a more colorful name as the 'God Particle'. It is very interesting how the Higgs boson got this new name. The scientific community thinks that it is very surprising for this Higgs boson to get the name 'God particle.'.


    Even in the recent , largest man-made experiments in history. In the Alps along the Swiss-French border,India's contribution   is $10-billion effort in search of the universe's missing matter by smashing particles like during the Big Bang is equally impressive. Around 200 of the 2,000 scientists doing the experiment are from India
    Raja Ramanna Centre for Advanced Technology director Vinod Chandra Sahni says: "No collisions will take place  on that day . September 10 simply marks the launch wherein two beams will be sent in the tunnel, one clockwise and the other anti-clockwise.

The particle smashing at close to speed of light (about 300,000 km per second) will start on October 21. Some particles will collide, triggering new particles that could help scientists understand the universe better."

The tunnel, buried 100 metres underground, is lined with sensors and 1,600 superconducting magnets across eight sectors, which are held at an operating temperature of 271 degrees below zero — colder than outer space. The LHC accelerator, which is accurate to a nanosecond, will be used to slam particles into each other to try to recreate the conditions at the beginning of time — as in the Big Bang.
(*இவைகள் வலையில் இருந்து திரட்டபட்டவைதான் )
 ஆனால் இவை யாவும் இது வரை எதையும் உறுதியாக கூறாத   போது
நமது உபநிஷத்துக்கள் இந்த பிரபஞ்ச வெடிப்பு விரிவாக்கம்
இவைகளை பிந்து, நாதம் , கலா என முன்றாக வ்வரிதுள்ளதாக
கூறுவதாக பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ள
 'The Big Bang and the Bhagavad Gita,' R.A.S. Koacha
என்ற புத்தகத்தில் எழுதி உள்ளதாக எனக்கு நண்பர்கள் சிலர்
தகவல் அனுப்பியுரிந்தனர் .
அதில் பிரம்மா பிக் பாங்  க்கு முன்னேயும் அதற்க்கு பின்னேயும்
உள்ளதாகவும் ,
பிர என்பதற்கே சமஸ்கிருத வேர்   அளவில்லாது பெரிதாக விரிவடைதல் எனவும்
வெடிப்புக்கு பின் அது சப்த பிரமனாக ஆனதாகவும்
அந்த பிரபஞ்ச அடிப்படை நாதமே ஓம் எனும் ஓம்காரம் .
சப்த பிரமாவின் குறியேடும் அதுவே  ஆகும் எனவும்
பிரம்மா ஒன்றே என்றும் உள்ளது ,
எதுவும் புதியதாக உருவாக்கபடுவதில்லை ,
ஒன்று மற்றொன்றாக மாறுகிறது
அதன் விதையிலேயே உள்ளது தான் காரணமாய்
மாறுதல் அடைகிறது ..என பலவாறு  பிக் பாங்   நியதி பற்றி
உள்ளதாக தெரிகிறது ,
 எனவே தான் நாதம், சப்தம் என எழுதினேன் .
நானும் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கவில்லை .
ஆனாலும் கூட திரு கண்ணன்  குறிபிட்டது போல நம்
தமிழ் வேதங்களிலேயே திருநெடுந்தாண்டகம் எனும் திருமங்கையின்
பாடல்களில்

"மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை

தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லாவவே"

என்ற வரிகளும் ,

மாணிக்கவாசகரின் மாணிக்க மொழிகளில்
தத்துவ விளக்கமாக உள்ள திருவண்டப பகுதி  யில்
  
 "அண்டப பகுதியின உண்டைப பிறக்கம
அளப்பருந தனமை வளப்பெருங காட்சி
ஒன்றனுககொன்று  நின்றெழில பகரின
நூற்றொரு கோடியின மேறபட விரிந்தன"
 
என்பதாக உள்ளதுவும்
இந்த பிரபஞ்ச புதிரை
பல பல ஆண்டுகளுக்கு  முன்னேயே
தாங்கள் ஞானத்தால் பரிபூரண மாக
உணர்த்து கூறிஉள்ளது ஆச்சிரியம் அளிக்கிறது
ஒருபக்கம் வறுமை , பசியை பற்றி வள்ளுவர்
படைத்தவனை  பழிக்கிறார் , மறுபுறம் அதேகாலத்தில்
அறிவார்த்த அறிஞர் பலரும்  அறிவியல்  உண்மையை
தமிழ் உலகத்திற்கு உணர்த்த முயன்றுள்ளனர் .
இது எனது முழுமையான அறிவின் வெளிபாடு
 இல்லை , விளக்கம் இன்னம் கிடைக்கும்
என்றுதான் எழுதுகிறேன் .

அன்புடன்
-ஏ.சுகுமாரன்

Narayanan Kannan

unread,
Sep 28, 2008, 7:16:14 PM9/28/08
to minT...@googlegroups.com
2008/9/29 annamalai sugumaran <amirth...@gmail.com>:

> எதுவும் புதியதாக உருவாக்கபடுவதில்லை ,
> ஒன்று மற்றொன்றாக மாறுகிறது
> அதன் விதையிலேயே உள்ளது தான் காரணமாய்
> மாறுதல் அடைகிறது ..என பலவாறு பிக் பாங் நியதி பற்றி
> உள்ளதாக தெரிகிறது ,


தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதே

திருமழிசை ஆழ்வார்

ரெ.காவின் கேள்விக்கு இப்படியும் பதில் சொல்லிப்பார்க்கலாம்:


> இறைவன் பிறந்தது big bang-இற்கு முன்பா பின்பா?

இறைவன் இருந்தான், இருக்கிறான், இருப்பான் என்பதற்கு மனிதனே ஆதாரம். மனிதனே சாட்சி.

எப்படி?

பொருள் முதல்வாதம்:

உலகில் எல்லாம் எதேட்சையாய் நடக்கின்றன. காரண-காரியம் என்று விளக்க
வேண்டிய அவசியமில்லை. உலகு எதேட்சையாய் தோன்றியது. உலகில் உயிர்
எதேட்சையாய் தோன்றியது. உயிர்தோற்றத்தை 'இயற்கைத் தேர்வு' வழி நடத்த
இன்று பிரம்மிக்கத்தக்க complexity கொண்ட உயிர்கள் உலவுகின்றன. அப்படி
உருப்பெற்றவன்தான் மனிதன். மனிதன் சிந்திக்கிறான். சிந்தனையில் கற்பனைகள்
தோன்றுகின்றன. கற்பனையில் கடவுள் தோன்றுகின்றான். எனவே கடவுளைப்
படைத்தவன் மனிதன். எனவே கடவுள் நிச்சயமாக பெருவெடிப்பிற்கு பின் தான்
பிறந்தான். (இதுதான் விஞ்ஞானிகள் பலரின் நிலைப்பாடு).

கருத்து முதல்வாதம்

உலகில் எல்லாச் செயல்களும் காரண காரியம் கொண்டே இயங்கின்றன. ரயில்
ஓடுகிறது என்றால் ரயிலை உருவாக்கியவன் என்று ஒருவன் இருக்கவேண்டும். உலகு
இருக்கிறது என்றால் 'உலகு இயற்றியான்' ஒருவன் இருக்க வேண்டும். எனவே
இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கான காரணி ஒன்றுண்டு. அதற்குப் பெயர் இறைவன்.
எனவே இறைவன் பெருவெடிப்பிற்கு முன்னும், பின்னுமுண்டு.

இனியறிந்தேன் எம்பெருமான்! என்னை-இனியறிந்தேன்
காரணன் நீ, கற்றவை நீ, கற்பவை நீ நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான்!

(திருமழிசை)

அவனே காரணன். அவன் இருப்பதால் மனிதன் இருக்கிறான். ஒரு தொடர்சியின்
காரணமாக அவன் உள்ளான்.

சொல்லினால் தொடர்ச்சிநீ, சொலப்படும் பொருளும்நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்கநீ படைக்க வந்து தோன்றினாய்
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்ல வல்லரே?

(திருமழிசை) (இது குவாண்டம் பிஸிக்ஸ் - கற்றையியல் விளக்கம். நான்
இருப்பதால் என் தொடர்ச்சியின் மூலமாக ஆதிப்பொருளுக்குப் போதல்)

எனவே,

நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே!
நீ என்னையின்றி இலை ( திருமழிசை ஆழ்வார்)


கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Sep 28, 2008, 8:06:09 PM9/28/08
to minT...@googlegroups.com
>இருக்கிறது என்றால் 'உலகு இயற்றியான்' ஒருவன் இருக்க வேண்டும்
 
'உலகு இயற்றியான்'  இருக்கிறான் என்றால் அவனை "இயற்றியான்' ஒருவன் இருக்க வேண்டும்

--

Narayanan Kannan

unread,
Sep 28, 2008, 8:29:03 PM9/28/08
to minT...@googlegroups.com
2008/9/29 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>>இருக்கிறது என்றால் 'உலகு இயற்றியான்' ஒருவன் இருக்க வேண்டும்
>
> 'உலகு இயற்றியான்' இருக்கிறான் என்றால் அவனை "இயற்றியான்' ஒருவன் இருக்க
> வேண்டும்


என்ன சார்! வள்ளுவம் என் சமயம் என்று எழுதிக்கொண்டு வள்ளுவரையே வம்பிலே
மாட்டுகிறீர்கள் :-))

இந்த வாதத்தில் ஒரு பிழையுண்டு. இது அருதப்பழசான வாதம். இதற்கெல்லாம்
என்றோ விடை கண்டு தமிழ்ச் சமயம் எங்கோ போய்விட்டது. நீங்கள்
'அடியைப்பிடிடா பாரத பட்டா' என்று....;-)

நாராயணன் என்பது தெய்வ விளக்கம். அது வெறும் பெயரன்று. அதன் பொருள்
இருவிதமாக அமைகிறது:

நாரணன் என்பது நித்ய வஸ்துக்களின் இருப்பிடம். நித்ய வஸ்துக்கள் என்பவை
பருப்பொருள் (matter), ஆன்மா. அவனே இவற்றின் காரணி. அவை தங்குவதற்கு
இடமாக இருப்பவன்.
நாரணன் என்றால் நித்ய வஸ்துக்கள் இருப்பதற்கு ஆதரமாக உள்ளவன். அதாவது
அவற்றுள் பரந்து, அந்தர்யாமியாக இருப்பவன்.

எனவே அவனே ஆதாரம். அவனை இயற்றியவன் ஒருவன் கிடையாது. மிக ஆழமான பொருள்ள
திருவாய்மொழி கீழே (திருமழிசையே உங்களுக்கு விளக்கம் அளித்திருப்பார்
என்று நம்பினேன்)

திடவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையண்ட சுரனே

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Sep 28, 2008, 8:36:19 PM9/28/08
to minT...@googlegroups.com
>நாரணன் என்பது நித்ய வஸ்துக்களின் இருப்பிடம்
 
நித்ய வஸ்துகளை இயற்றி பின் அவற்றை தன்னுள்ளே நாரணன் இருத்திக்கொண்டானா?
 
அட அட

Narayanan Kannan

unread,
Sep 28, 2008, 8:39:45 PM9/28/08
to minT...@googlegroups.com
2008/9/29 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>>நாரணன் என்பது நித்ய வஸ்துக்களின் இருப்பிடம்
>
> நித்ய வஸ்துகளை இயற்றி பின் அவற்றை தன்னுள்ளே நாரணன் இருத்திக்கொண்டானா?
>
> அட அட
> --
> (வள்ளுவம் என் சமயம்)
>


பாயிரம் பாடிய வள்ளுவனைக்கூட துணைக்கு அழைத்துக் கொள்ளலாமே ;-)

அவர் இயற்றவில்லை சார். என்ன சார், தமிழ் கூட புரியமாட்டேன் என்கிறது உங்களுக்கு!

தன்னுள்ளே திரைத்தெழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுள்ளே திரைத்தெழுந் தடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்திறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே யடங்குகின்ற நீர்மைநின் கண் நின்றதே

வாழ்க தமிழ்!

கண்ணன்

annamalai sugumaran

unread,
Sep 28, 2008, 10:38:59 PM9/28/08
to minT...@googlegroups.com
வணக்கம் தமிழ்த்தேனீ அவர்களே ,
பசி வந்திட பத்தும் பறந்து போம் என்பது தானே முது மொழி .
அந்த பத்தில் அறிவு, மானம், காமம்  அனைத்தும்
அடங்கும் .
பசியினால் மக்கள் பணிய வைக்க பட்டனர் .
இறைவன் கொடுத்த மாற்ற வரம  அனைத்தையும்
அப்போது மனிதனால் மறைக்க ,      வயப்படுத்த முடியவில்லை
அதனால் மனிதனின் பசியை பயன் படுத்தி 
     மனிதர்கள் சுரண்ட பட்டனர் , அடிமைகள் ஆக்க பட்டனர் .
ஆனால் இப்போதோ  ஐம்பூதங்களையும்
மனிதன் தன் வயப்படுத்தி அதை கொண்டு
மனித சமுதாயத்தை சுரண்ட தொடங்கி விட்டனர்
இனி தண்ணீர் குடிக்க காசு வேண்டும்
சுவாசிக்க காசு வேண்டும்
நெருப்பு காஸ் மூலம் விற்கப்படுகிறது .
இயற்கையை மனிதன் கைப்பற்றி
தான் கண்டுபித்த பணத்தால் ஆளுகிறான் .
அன்புடன்
ஏ.சுகுமாரன்


 
On 9/27/08, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
பசி என்பது வெறும் வயிற்றுப் பசி மட்டும்தானா...?
உலகில் எல்லாப் பசியும் உண்டே,ஆனால் மற்ற எந்தப் பசிக்காகவும்
காற்று இல்லாவிடில் உயிர் போய்விடும்,
நீரில்லாவிடில் உயிர் போய்விடும்,
வயிற்றுக்கு உணவில்லாமல் போனாலும் உயிர் போய்விடும்
 
 

வேந்தன் அரசு

unread,
Sep 28, 2008, 10:52:27 PM9/28/08
to minT...@googlegroups.com


2008/9/28 Narayanan Kannan nka...@gmail.com



 
பாயிரம் பாடிய வள்ளுவனைக்கூட துணைக்கு அழைத்துக் கொள்ளலாமே ;-)

அவர் இயற்றவில்லை சார். என்ன சார், தமிழ்
 
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
 
சொன்னதும் என் ஐயன்தான்
 
2000 ஆண்டுகளுக்கு முன் நிலவை பாம்பு விழுங்குதுனு சொன்னாங்க. பூமி தட்டையா உருண்டையானு தெரியாது. அந்த காலத்து அறிவியல் வளர்ச்சிப்படி கடவுள்னு ஒன்னு இருக்குதுனு அவர் நினைத்து இருக்கலாம்
 
133 ல் 1 தான் அதூஉம் உங்களுக்காக
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி

Tthamizth Tthenee

unread,
Sep 28, 2008, 10:53:07 PM9/28/08
to minT...@googlegroups.com
வணக்கம் திரு சுகுமாரன் அவர்களே
உண்மைதான் , , மனிதன் பணத்துக்கு எல்லாவற்றையும் அடிமையாக்க நினைக்கிறான், ஆனால்  கடைசியாக விட்ட காற்றை இழுக்க முடியாமல் இறக்கிறான், தண்ணீரில் மூழ்கி வெளிவரமுடியாமல் இறக்கிறான்,
 சுழல்காற்றில் சிக்கி மடிகிறான்,,பூகம்பத்தால் உயிரிழக்கிறான்,
பெரு நெருப்பில் வீழ்ந்து வெளிவர இயலாமல் சாம்பலாகிறான், அங்கெல்லாம் தான் கண்டுபிடித்த பணத்தைக் கொடுத்து தப்பிக்க வேண்டியதுதானே
முடியாது நண்பரே, பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்த
யாராலும் முடியாது
நாம் நினைத்துக் கொள்ளலாம் பணத்தால் எல்லாவர்ரையும் கட்டுப்படுத்திவிடலாம் என்று, ஆனால் முடியாது
 
இதுதான் உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 செப்டம்பர் 29 08:08 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:

அன்புள்ள

Narayanan Kannan

unread,
Sep 29, 2008, 12:27:31 AM9/29/08
to minT...@googlegroups.com
2008/9/29 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>
> 2000 ஆண்டுகளுக்கு முன் நிலவை பாம்பு விழுங்குதுனு சொன்னாங்க. பூமி தட்டையா
> உருண்டையானு தெரியாது. அந்த காலத்து அறிவியல் வளர்ச்சிப்படி கடவுள்னு ஒன்னு
> இருக்குதுனு அவர் நினைத்து இருக்கலாம்
>

கடவுளைப் பற்றிய உங்கள் புரிதல் அவ்வளவு என்று சொல்லுங்கள். எங்கள்
வள்ளுவப் பேராசான் ஓர் பாமரன் என்று சொல்லாதீர்கள். வள்ளுவம் என் சமயம்
என்று சொல்லும் உங்களால் அது முடியலாம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு
முன்னரே எவ்வளவு நளினமான (sophisticated) ஒரு கருதுகோளை முன்வைத்துள்ளான்
தமிழன் என்று உணரும் போது என்னாலப்படி எண்ணமுடியவில்லை. சாமி கும்பிடு
இல்லாட்டக் கண்ணைக்குத்தும் என்று அவன் சொல்லவில்லை.

தீயினுட் டெறல் நீ பூவினு னாற்றநீ
கல்லினுள் மணியுநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினு ளன்பு நீ மறத்தினுள் மைந்துநீ
வேதத்து மறைநீ பூதத்து முதலுநீ
வெஞ்சுட ரொளியுநீ திங்களு ளளியுநீ
அனைத்துநீ யனைத்தினுட் பொருளுநீ

(பரிபாடல் 3/63-68)

உங்கள் வாதங்களையும் உள்ளடக்கி சொல்லிப்போந்த திருவாய்மொழியை உங்களால்
பாராட்ட முடியாமல் இருக்கலாம். என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

உளன் எனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்
உளனலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளனென, இலனென விவைகுண முடைமையில்
உளனிரு தகைமையொ டொழிவிலன் பரந்தே

வாழ்க.

கண்ணன்

karth...@gmail.com

unread,
Sep 29, 2008, 7:11:56 AM9/29/08
to மின்தமிழ்
கண்ணன், சுகுமாரன் மற்றும் அன்பர்களே,

என் கேள்வி இத்தனை அருமையான தமிழ்ப் பாக்களை இந்த
உரையாடலுக்குள் கொண்டு வந்து விட்டிருப்பது எனக்கு ரொம்ப
மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் சொல்லுங்கள். படிக்கப் படிக்கத்
தேனாக இருக்கிறது.

அது ஒரு புறம் நடக்கட்டும். ஆனால் ஏராளமான அறிவியலாளர்கள் ஏராளமாகச்
சிந்தித்து, ஏராளமாகப் பணச் செலவு செய்து ஏராளமாக ஆய்வுகள் நடத்தி
ஒன்றைக் கண்டு பிடித்து அறிவியல் பூர்வமாக வெளியிட்ட பின்னர்,
"பூ, இது என்ன? எங்கள் ஆழ்வார்கள் சொல்லியிருக்கிறார்களே" என்று
ஊதி விடுவது எனக்கு ஒப்புதலில்லை.

நமது ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள் இதனை உண்மையிலேயே
அறிந்திருந்தால்
அவற்றை விவரணையாகச் சொல்லி (in detail) நமக்கு உணர்த்தியிருக்கலாமே!
அவர்கள் சொல்லுவது, குறிப்பது நாம் பேசுகின்ற இந்த பெரு வெடிப்புத்தானா?
எனக்கு அப்படித் தோன்றவில்லை.

நீங்கள் சொல்லும் காரண காரியங்களை நீட்டினால் இந்தப் பாடல்களை வைத்து
இன்னொரு மேல்தளத்திற்கும் ஒருவர் போக முடியும். அதாவது "இந்த ஆழ்வார்கள்
இத்யாதி
பெருவெடிப்புக்கும் முன்னுள்ள நிலையையும் குறிக்கிறார்கள்; அதை
அறிவியலும்
இன்னும் கண்டுபிடிக்கவில்லை" என்பதான ஒரு வாதம்.

முடியும்தானே? இந்தப் பாடல்கள் ஒரு ecstasy மனப்பான்மையில் சொல்லும்
விஷயங்களுக்கு
நாமாக நீட்சிகளை இழுத்துக் கொண்டே போகலாம். நாளை Higgs Boson
கண்டு பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டாலும் எங்கள் ஆழ்வார்கள் சொல்லிய
விஷயம்தான் என நீட்டித்துச் சொல்லலாம். இவற்றுக்கெல்லாம் இடங்கொடுக்கும்
அளவுக்கு அந்தப்பாடல்கள் பூடகமாகவும் மர்மமாகவும் இருக்கின்றன. ஏதாகிலும்
"துகள்", "துகளின் துகள்" என்னும் சொற்கள் வசதியாக அகப்படலாம்.

எனக்கென்னமோ அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றாகப் பேசிக் குழப்பக்கூடாது
எனத் தோன்றுகிறது. தனித்தனியே வைத்துப் பேசினால் வம்பில்லை.

ரெ.கா.



On Sep 29, 7:16 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2008/9/29 annamalai sugumaran <amirthami...@gmail.com>:
>
> > எதுவும் புதியதாக உருவாக்கபடுவதில்லை ,
> > ஒன்று மற்றொன்றாக மாறுகிறது
> > அதன் விதையிலேயே உள்ளது தான் காரணமாய்
> > மாறுதல் அடைகிறது ..என பலவாறு  பிக் பாங்   நியதி பற்றி
> > உள்ளதாக தெரிகிறது ,
>

Narayanan Kannan

unread,
Sep 29, 2008, 8:02:26 AM9/29/08
to minT...@googlegroups.com
அன்பின் ரெ.கா:

உங்கள் பாணியே அலாதியானதுதானே! இப்படி ஏதாவது கேள்வி கேட்டுவிட்டு அறுவடை
செய்வதுதான் உங்களுக்கு வழக்கமாற்றே! கோலாலம்பூரில் நடந்த தமிழ் இணைய
மாநாட்டில் இப்படியொரு கேள்வி நீங்கள் கேட்கப்போய்தானே தமிழ் மரபு
அறக்கட்டளை என்ற அமைப்பே உருவானது. உங்கள் கேள்விகள் எப்போதும்
அறிவுச்சுடரைத் தூண்டுபவையே.

தன்னிலை விளக்கமாகச் சில.

எனக்கு ஆழ்வார்களை இச்சமயத்தில் தூக்கிப்பிடிக்க வேண்டுமென்றில்லை. நான்
பலமுறை சொல்லியவாறு எனக்கு சைவ சித்தாந்தத்தில், சைவ மறைகளில்
அதிகப்பரிட்சயமில்லை. எனக்குத் தெரிந்த ஆழ்வார் பாசுரங்களை முன்வைத்தேன்.
அவை தமிழ் மெய்யறிவு எனும் ஒரே காரணத்தினால். எனக்குத் தெரியும் வள்ளலார்
பிரபஞ்ச சிருஷ்டி பற்றி அளப்பரிய சேதிகளைச் சொல்லியிருப்பது. ஈடுபாடு
உள்ளவர்கள் பேச முன்வர வேண்டும் என்பதே என் ஆசை.

அறிவியலும், மெய்யியலும் வெவ்வேறா? இத்தேடலுக்குப் பின் இன்னும் இது
தெளிவாகியிருக்கிறது. பிரபஞ்ச ரகசியங்கள் நம்முள்தான் ஒளிந்திருக்கின்றன.
அதனால்தான் நாசூக்காக திருமழிசையின் பாசுரங்களைப் போட்டேன் (நானின்றி நீ
இல்லை). அன்று தொடக்கம் இன்றுவரை ஒன்றின் நீட்சியாக மற்றது என்றுதான்
வளர்ந்து வந்திருக்கிறோம். இல்லையெனில் என்றோ (4 பில்லியன்) தோன்றிய
அமீபாவிற்கும், மனிதனுக்கும் 99.9% மரபு ஒற்றுமை இருக்க சாத்தியமில்லை.
அதே போல் பெருவெடிப்பில் தோன்றிய துகள்களை இன்று நாம் அளந்து கொண்டிருக்க
வேண்டியதில்லை.

அறிவியல் மனித அறிவு கொண்டு பேருண்மையைத் தேடுகிறது. தத்துவமும் அதே
சாதனத்தைக் கொண்டுதான் உண்மையைத் தேடுகிறது. உண்மை ஒன்று என்பதால் இரண்டு
புள்ளியும் கட்டாயம் சேர்ந்தே ஆகவேண்டும். இது வெறும் சந்தர்ப்ப
வசமில்லை.

ஆன்மீகத்தில்தான் அநுபூதி என்றில்லை, அறிவியலிலும் அது உண்டே!
இல்லையெனில் ஐன்ஸ்டைன் ஒருமித்த கருத்தாக்கம் (unified field theory,
general relativity theory) பற்றிப்பேசும் போது உணர்ச்சி வசப்பட்டு,
"கடவுடளின் சிந்தனை என்னவென்று அறியும் வரை உறங்கமாட்டேன்" (ஏறக்குறைய
இப்படிப் பொருள்படும்படி) என்று சொல்லியிருக்கமாட்டார். அவரது
கண்டுபிடிப்பின் நீட்சியாக அணுகுண்டு நாகசாயியில் வெடித்த போது துடியாய்
துடித்துவிட்டார்.

என்னைப் பொருத்தவரை இந்திய மெஞ்ஞானத்தில் பேசப்படும் பல விஷயங்கள்
அறிவியலே. அத்வைதம், விசிஷ்ட்டாத்வைதம், துவைதம் எல்லாம் விஞ்ஞானிகள்
பேசும் field theory, weak forces etc. என்பவையே. தேவர்கள், அரம்பரையர்
என்பதெல்லாம் இவ்வகையான field அல்லது forces. இல்லையெனில் கற்றையியல்
விஞ்ஞானிகளில் பெரும்பாலோர் இந்திய உப்நிஷதங்களையும், கீதையையும்
மேற்கோள் காட்டவேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு ஆழ்வார்களைத் தெரியாது.
அதனால்தான் நான் அவர்களை மேற்கோள் காட்டுகிறேன் :-)

இது முடிவில்லாத தேடல்தானே ரெ.கா. தீபம் அணையாமல் காக்க வேண்டியது நம் கடமை!

உங்களைப் போல் எனக்கும் மற்றோர் கருத்துக்களை அனுபவிக்கும் சுகம் உண்டு.
இன்னும் பேசுங்கள் நண்பர்களே!

கண்ணன்

2008/9/29 karth...@gmail.com <karth...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Sep 29, 2008, 10:41:51 AM9/29/08
to minT...@googlegroups.com


2008/9/29 Narayanan Kannan nka...@gmail.com


வள்ளுவப் பேராசான் ஓர் பாமரன் என்று சொல்லாதீர்கள்.  வள்ளுவம் என் சமயம்
என்று சொல்லும் உங்களால் அது முடியலாம். ஆனால்,  2000 ஆண்டுகளுக்கு
முன்னரே எவ்வளவு நளினமான (sophisticated) ஒரு கருதுகோளை முன்வைத்துள்ளான்
கண்ணன் அது என்ன காரணத்தால் கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்கு பின் கடவுள் மனிதனோடு பேச மறுத்து விட்டான்
 
மோசஸ், ஜீசஸ், வள்ளுவன், முகம்மது ஆழ்வார்கள்,  நாயன்மார்கள்  தோன்றுவதும் நின்று போனது?

annamalai sugumaran

unread,
Sep 29, 2008, 1:39:23 PM9/29/08
to minT...@googlegroups.com

நன்றி திரு ரெ.கா. அவர்களே ,
எல்லாவித  தற்க்கால அறிவியல் கண்டுபிடிப்புகளும் சுமார் 200ஆண்டுகளாகத்தானே! .
 கலிலியோவை  நாமும் பிற நாட்டு மாணவர்களும்  அறிந்த அளவிற்கு
வராகாமிகிறரை   அவர்கள் அறிவார்களா ?
நமது சித்தர்கள் கண்ட அறிவியல் எத்தனை பேருக்கு தெரியும் ?
நம்மை பற்றி நமக்கு பெருமிதம் இல்லை ..
பிறநாட்டு அறிவியலாளர்கள் ஏராளமாகச்


சிந்தித்து, ஏராளமாகப் பணச் செலவு செய்து ஏராளமாக ஆய்வுகள் நடத்தி
ஒன்றைக் கண்டு பிடித்து அறிவியல் பூர்வமாக வெளியிட்டபின்

நாம் அட டா ! இதை எங்கள் நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு
முன்னே எழுதி வைத்து உள்ளனர்ரே எனக்கூறுகிறோம் .
ஆனால் இருப்பதை தானே கூறுகிறோம் .
இப்போது நடப்பதை ஒத்து இருப்பதால் அவைகளுக்கு அர்த்தம் நமக்கும்
இப்போது தான் புரிகிறது .
ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் காலம் மாறும் போது
உண்மைகளும் முன்னேறி முடிவுகள் மாறுகின்றன
.
நமது சித்தர்களும் ஞானியரும் இந்த பெரு வெடிப்பு பற்றி ஆராயவேண்டும்  என்று  ஆராயவில்லை .
ஆனால் மெய்ஞானம்  வரபெற்றதும் அவர்களுக்கு பிரபஞ்ச பேரறிவுடன்
ஒரு தொடர்பு ஏற்படுகிறது , ஆராயாமல்  அவர்கள் உணர்வதை
அவர்கள் வழி மொழியில் குறிப்பாக சொல்லியிருக்கிறார்கள் .
இதில் நேரடி அர்த்தம் நமக்கு புரிய கொஞ்சம் கடினம் ஆக உள்ளது .

ஆனால் இந்த பிரபஞ்சம்  தோன்றியதை பற்றிய , கடவுள்களில்
உருவைபற்றி பலரும் ஒரே மாதிரி தான் கூறியிருக்கிறார்கள் .
அருணகிரி நாதர்   "  நாத விந்து கலா நிதி  நமோ  நமோ " என்கிறார்
சித்தர்களின் தலைமை ஆன திரு மூலர்
 
"கொண்டல வ்ரைநின றிழிந்த குலக்கொடி
அண்டத்துள ஊறி இருந்து எணதிசை ஆதி
ஒன்றின பதம செயத்து ஓம என்றப்புறக
குண்டத்தின மேல அங்கி கோலிக கொண்டனே "
 
என    ஓம என்றப்புறக என்று நாதத்தில் இருந்துதான்
பிரபஞ்சம் தோன்றியதாக கூறுகிறார் .மேலும்

  " நாதத்தில விந்துவும   நாத விந்துக்களில
தீதற்றுஅகம வந்த சிவன சகதி என்னவே
போதித்து ஞானம கிரியை பிறத்தலால்
  வாதித்த விச்சையிலவந்தேழும விந்துவே  "

என துல்லிய மாக தோற்ற  உண்மையை
எடுத்துறைக்கிறார்.   
 
எனக்கு அறிவியலும்  ஆன்மிகமும் ஒன்றுதான் என படுகிறது .
ஏனெனில் உண்மை என ஒன்றுதான் இருக்கமுடியும்
ஆன்மிகமும் அறிவியலும் ஒரே ஞானம் தான் .
ஒன்றைத்தான் கூறமுடியும்  
 பார்ப்போம் வரபோகும் காலங்களில் நம்
தற்க்கால அறிவியலருடன் இவைகள் ஒத்து போகிறதா என . ?    
அன்புடன்
ஏ.சுகுமாரன்           
 

annamalai sugumaran

unread,
Sep 29, 2008, 2:00:35 PM9/29/08
to minT...@googlegroups.com

நன்றி திரு வேந்தன் அவர்களே ,

கடவுள் மனிதனை விட்டு என்றும் பிரிந்ததில்லை
கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்கு பின் மட்டுமல்ல
இன்றுவரை கேட்பவருடன் பேசிக்கொண்டுதான்
இருக்கிறார் .ஆனால் கேட்க்க தான் யாரும் தயார் இல்லை
வள்ளலார் முதல்  விசிறி சாமியார் என்று
யோகியரும் ஞானியரும் நமிடையே
இருந்து தான் வருகின்றனர்
நாம் தான் பாடல்களை தொகுப்பதை விட்டுவிட்டோம்
என கூறலாம் .. திரு முறைகள் தற்காலம்
உள்ளவர்கள் பாட முடியாது என முடிவுக்கு
வந்துவிட்டோம்
வள்ளலார் எழுதிய ஏராளமான பாடல்களையே பொய் என
நம்ப மறுத்து சிதம்பரம் நிதி மன்றத்தில் ஆறுமுக நாவலர்
வழக்கு தொடுத்தார் .
அன்றைய பக்தி செயல்கள் புரியப்பட்டு
பெரியபுராணம் என தொகுக்கப்பட்டது .
இந்த காலத்தில் இவ்வாறு யாரவது நடந்து கொண்டால்
அவர்கள் இருக்கும் இடம் நிச்சயமாக
கிழ்பாக்கம் ஆக தான் இருக்கும் .

கடவுள் மனிதனோடு பேச  மறுக்கவில்லை
நாம் தான் பேசினாலும் நம்ப மறுக்கிறோம்
கடவுளே நம்பிக்கை சம்மந்த பட்ட விஷயம் தான் .
அன்புடன்
ஏ.சுகுமாரன்           
 



On 9/29/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


2008/9/29 Narayanan Kannan nka...@gmail.com

Narayanan Kannan

unread,
Sep 29, 2008, 7:11:13 PM9/29/08
to minT...@googlegroups.com
மிக்க நன்றி சுகுமாரன். நான் சொல்ல வந்ததை வார்த்தைக்கு, வார்த்தை
அப்படியே சொல்லிவிட்டீர்கள்.

ஏன் நாம் பாரதியை விட்டு விட்டோம் அவன் ஒரு சித்தன். அவன் ஒரு ஆழ்வான்.
அவனொரு பக்தன்.

அற்புதமான "நாராயண கவசம்" செந்தமிழில் பாடிய வேங்கடகிருஷ்ணன்
நாங்குநேரியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

http://emadal.blogspot.com/2008/05/blog-post_07.html

God is dead என்று மேற்குலகு சொல்லலாம், தமிழ் மரபறிந்த நாம் சொல்லலாமா?
"சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?" என்று உறவாடி வந்த
தமிழல்லவோ நாம் பேசுவது!

கண்ணன்

2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Sep 29, 2008, 7:25:47 PM9/29/08
to minT...@googlegroups.com
மீண்டும் நன்றி.

திருமந்திரம் பேசும் பிரபஞ்சத்தோற்றம், வள்ளலாரின் திருவருட்பா பேசும்
பிரபஞ்சம் பற்றியெல்லாம் இன்னும் ஆழமாக ஆராய்ந்து அறிவியலுக்கும், நம்
மரபிற்குமுள்ள ஒற்றுமைகளை ஆங்கிலத்தில் வெளியிட வேண்டும்.

இங்கு இரண்டு ஆய்வுகளை முன்னுதாரணமாகச் சொல்லலாம். இந்த ஒற்றுமை பற்றி
மேற்குலகில் முதலில் புத்தகமாக எழுதியவர், Fritjof Capra

Preface quote from Carlos Castaneda's "The Teachings of Don Juan":

"Any path is only a path and there is no affront, to oneself or to
others, in dropping it if that is what your heart tells you. Look at
every path closely and deliberately. Try it as many times as you think
necessary. Then ask yourself, and yourself alone, one question…Does
this path have a heart? If it does, the path is good; if it doesn't
it is of no use."

(இதை விட அழகாக வேறு எப்படி, நம் பக்தி இலக்கியத்திற்கு விளக்கம் சொல்லமுடியும்?)

http://web.ionsys.com/~remedy/TAO%20OF%20PHYSICS.htm

http://en.wikipedia.org/wiki/The_Tao_of_Physics

அடுத்து Amit Goswami எழுதிய "Self Aware Universe". இவரது அழகான நேர்காணலை

Scientific Proof of the Existence of God - An interview with Amit
Goswami by Craig Hamilton

http://www.wie.org/j11/goswami.asp

இத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பத்திரிக்கை "What
is enlightment?" Magazine!

on Amit Goswami: http://en.wikipedia.org/wiki/Amit_Goswami

கண்ணன்


2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>:
>
>

Narayanan Kannan

unread,
Sep 29, 2008, 8:22:27 PM9/29/08
to minT...@googlegroups.com
2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>:

>
> "கொண்டல வ்ரைநின றிழிந்த குலக்கொடி
> அண்டத்துள ஊறி இருந்து எணதிசை ஆதி
> ஒன்றின பதம செயத்து ஓம என்றப்புறக
> குண்டத்தின மேல அங்கி கோலிக கொண்டனே "
>
> என ஓம என்றப்புறக என்று நாதத்தில் இருந்துதான்
> பிரபஞ்சம் தோன்றியதாக கூறுகிறார் .மேலும்
>

மன்னிக்க. முதலில் நானும் வேந்தனை வழி மொழிந்து பெருவெடிப்பில் ஓசை
இருந்திருக்காது என்று எழுதினேன். அது தவறு என்று இப்போது அறிந்து
கொண்டேன். பெருவெடிப்பின் போது தோன்றிய ஒலி அலைகளைக் கேட்க:

http://faculty.washington.edu/jcramer/BigBang/BBSnd100.wav

இது பற்றிய விளக்கமறிய

The Sound of the Big Bang, John G. Cramer, Professor of Physics,
University of Washington Seattle, WA 98195-1560

http://faculty.washington.edu/jcramer/BBSound.html

நமது பிரவண மந்திரத்தை ஒலிக்கச் செய்து ஒப்பு நோக்கலாம்.

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Sep 29, 2008, 10:36:48 PM9/29/08
to minT...@googlegroups.com


2008/9/29 Narayanan Kannan <nka...@gmail.com>
2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>:

 
மன்னிக்க. முதலில் நானும் வேந்தனை வழி மொழிந்து பெருவெடிப்பில் ஓசை
இருந்திருக்காது என்று எழுதினேன். அது தவறு என்று இப்போது அறிந்து
கொண்டேன்.
 
கண்ணன்.
 
 
ஊடகம் இல்லாமல் ஒலி எப்படி பரவும்?
 
ஊடகத்தில் ஏற்படும் அதிர்வுகள்தானே ஒலி.
 
பெரு வெடிப்புக்கு பின்னரே ஊடகம் தோன்றியது
 
அதனால் ஒலி இருக்க வாய்ப்பே இல்லை
 
.ஒரு குடுவையில் வெற்றிடத்தை உருவாக்கி அதனுள் ஒரு கொள்ளு பட்டாசை குடுவையின் சுவர்களுக்கு படாமல் மிதக்கவிட்டு பின் வெடிக்கசெய்து ஒலிவருதா என பாருங்கள்
 
 
 
 
 
--

Narayanan Kannan

unread,
Sep 29, 2008, 10:43:32 PM9/29/08
to minT...@googlegroups.com
வேந்தரே!

எதற்கு வம்பு? இயற்பியல் பேராசிரியர் தொடுப்பு கொடுத்துள்ளேன். ஒன்று
அவரிடம் கேளுங்கள் இல்லை தேடிப் புரிந்து கொள்ளப்பாருங்கள் :-)

சரி, அமித் கோஸ்வாமி நேர்காணல் படித்தீர்களா? ;-)

கண்ணன்

2008/9/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

வேந்தன் அரசு

unread,
Sep 29, 2008, 10:50:55 PM9/29/08
to minT...@googlegroups.com


2008/9/29 Narayanan Kannan <nka...@gmail.com>

வேந்தரே!

எதற்கு வம்பு? இயற்பியல் பேராசிரியர் தொடுப்பு கொடுத்துள்ளேன். ஒன்று
அவரிடம் கேளுங்கள் இல்லை தேடிப் புரிந்து கொள்ளப்பாருங்கள் :-)
 
 
சின்ன குழந்தை கேட்டதுன்னு அவரு உதார் விடறரார்

annamalai sugumaran

unread,
Sep 30, 2008, 1:19:21 AM9/30/08
to minT...@googlegroups.com
அன்புசால் திரு வேந்தன் அவர்களே ,
 
எந்த அதிர்வுகளும் பரவ ஒரு ஊடகம் தேவைதான் .
அது ஆடியோ வீடியோ , ரேடியோ எந்த அலை வரிசையில்
இருந்தாலும்  ஆனால் நாம் பல நேரம் கண் முடிய படியே
பார்கிறோமே , கனவு காண்கிறோமே , அதையும்
மூளை சாதா காட்சி போல் பதிவு செய்கிறதே அது
எந்த அலை வரிசை மூலம் எப்படி மூடிய கண்ணில்
எப்படி  எந்த லென்சில் தாக்கி மூலையில் பதிவு ஏற்படுத்துகிறது .
அப்படித்தான் பெரிய வெடிப்பில் முதலில் ஒலி தோன்றியது
பின் ஒளி தொட்ரியது பின் இயக்கம் தோன்றியது
எந்த ஊடகம் இல்லாததால் பரவாமல் இருந்திருக்கலாம்
அது வேறு அலை வரிசையில் கேட்காத சப்தமாக இருந்திருக்கலாம்
அதன் ரெசிடுல் (  RESIDUAL )  தான் இபோதோம் வானவெளியில்
ஓம் எனும் ஓங்காரமாய் ஒலித்து வருகிறது 

என நாத விந்து காலா நிதி குறிக்கிறது என நினைக்கிறேன்
எல்லாம் ஒரு சிந்தனைக்கு தான்
மூடிய முடிவு ஒன்றும் இல்லை .
பிரபஞ்சம் போல் நம் அறிவும் பரந்து விரியவேண்டி உள்ளது
அதற்க்கு தங்களை போன்ற சான்றோர் சத்சங்கம் தேவை
அன்புடன்
ஏ.சுகுமாரன்


 

வேந்தன் அரசு

unread,
Sep 30, 2008, 8:05:31 AM9/30/08
to minT...@googlegroups.com
 
2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>

அன்புசால் திரு வேந்தன் அவர்களே ,
 
எந்த அதிர்வுகளும் பரவ ஒரு ஊடகம் தேவைதான் .
அது ஆடியோ வீடியோ , ரேடியோ எந்த அலை வரிசையில்
இருந்தாலும்  ஆனால் நாம் பல நேரம் கண் முடிய படியே
பார்கிறோமே , கனவு காண்கிறோமே , அதையும்
மூளை சாதா காட்சி போல் பதிவு செய்கிறதே அது
எந்த அலை வரிசை
 
சுகுமாரன்
 
ரேடியோ அலைகளுக்கு ஊடகம் தேவை இல்லை.  பாழ்வெளி போதும். ஒளியும் அவ்வாறே.
 
ஆனால் ஒலிக்கு ஊடகம் தேவை.
 
பெரு வெடிப்பின் போது ஒளி தோன்றி இருக்கும். ஒலி இல்லை.
 
மூளையில் நினைவுகள்  பதிவு:
இன்னும் முற்றிலும் புரிந்துகொள்ளாத புதிரை சொல்லி இன்னொரு புதிரை புரிய வைக்கிறீர்களே!!
 
நினைவுகள் பதிவுக்கு இந்துமதம் ஒன்னும் சொல்லலையா?

Tthamizth Tthenee

unread,
Sep 30, 2008, 12:52:22 PM9/30/08
to minT...@googlegroups.com
ப்ரபஞ்சம் மனதுக்குள் கட்டுப்படுகிறது
மனம் இந்தப் ப்ரபஞ்சத்துக்குள் கட்டுப்படுகிறது
அண்டத்திலுள்ளது பிண்டத்திலுள்ளது
பிணடத்திலுள்ளது அண்டத்திலுள்ளது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 செப்டம்பர் 30 17:35 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

annamalai sugumaran

unread,
Sep 30, 2008, 10:26:29 PM9/30/08
to minT...@googlegroups.com

மாணிக்கவாசகர்,ஆழ்வார்கள் ,திருமூலர் ,அருணகிரி போன்றோர்
பாடல்கள் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை போலும் .
சரி விஷயத்து வருவோம் , நாதம் தோன்றியதா ?

  "ரேடியோ அலைகளுக்கு ஊடகம் தேவை இல்லை.  பாழ்வெளி போதும். ஒளியும் அவ்வாறே.ஆனால் ஒலிக்கு ஊடகம் தேவை.


பெரு வெடிப்பின் போது ஒளி தோன்றி இருக்கும். ஒலி இல்லை."

ஒலி , ஓளி போன்றவை இரண்டுமே ஒன்றுதான் .
ஒரே  அலை  வரிசை ( frequency) தொடரின்  பகுதிகள்
பெருவெடிப்பின் போது அதனுடன் ஓளி தோன்றியதாக
நீங்கள் ஒத்துகொள்கிறேர்கள்
ஆனால் ஆடியோ அலைவரிசை என்பது 20-20000  c/s  வரை உள்ள அலைவரிசை ( frequency)
இது பரவ இது மிக குறைவான வேகத்தில் உள்ளதால்
இதற்க்கு ஒரு காரியார் தேவை  ( carrier freqency ), அது இல்லாமல் அது
பரவ இயலாது .
ஆனால் மறற ஓளி , மற்றும் கலர் போன்றவற்றுக்கான
அலை வரிசை சற்று வேகம் கூடியதால் தானே பரவும் .
ஆனால் எந்த துடிப்பும் தீடிர் என 20000   c/s  என்ற நிலையை
அடையாது , எனவே முதலில் நாதம் தோன்றி பின் ஓளி தோன்றி
பின் அதில் செயல்கள் தோன்றியிருக்க கூடும் .
ஆனால் அதை பார்ப்பதற்கு அப்போது எந்த மனிதனும் இல்லை
எல்லாம் அனுமானம் தான் ..
இவைகளை நான் 40  வருடங்களுக்கு முன் படித்தேன்
இன்னும் கூட    இந்த பாடங்கள்    மாறாமல்  இருகிறதா என தெரியவில்லை .

மூளையில் நினைவுகள்  பதிவு:
இன்னும் முற்றிலும் புரிந்துகொள்ளாத புதிரை சொல்லி இன்னொரு புதிரை புரிய வைக்கிறீர்களே!!
நினைவுகள் பதிவுக்கு இந்துமதம் ஒன்னும் சொல்லலையா
?

நான் கூறவந்தது  கண்ணால் எப்படி நம் பார்க்கிறோம் என்பது நமது புத்தகங்களில் ,
காணும் பொருளில் இருந்து வரும் ஓளி கற்றை கண்ணின் லென்ஸ் மீது பட்டு
நரம்புகளின் வழியாக முளை காணும் பகுதிக்கு சென்று
நாம்மை அந்த பொருளின் வடிவத்தை உணரவைக்கிறது என்கிறது.
ஆனால் கண் இல்லாமலும்  பார்க்கமுடிகிறதே என்றுதான்
இன்னும் தெரிந்து கொள்ள பல உண்டு என்பதுதான்
நான் மனதின் புதிரை பற்றி கூறவில்லை
அதை தனியே அலச மிக அதிக செய்திகள்
சித்தர்கள் இலக்கியத்தில் உண்டு .
முளையின் அடியே இருந்து தேங்கிய சமஸ்காரம்
முளை ஓய்வாக மீண்டும் கனவாக   பார்த்து மகிழ்கிறது
கண்ணின் துணை இல்லாமல் .மேலும்
காது நல்ல படி இருந்தும் பிறர் கூவும் ஓசை
நமது மனம் வேருஎங்கேயோ இருக்கும் போது
நாம் குரலை உணர்வதில்லை , செயல் விளக்கம்
சரியாக இருந்தாலும் , மேலும் ஒன்று புலன்கள்
வேலை செய்ய வேண்டிஉள்ளது .
மன தொடர்பு இல்லாமல் பார்ப்பதோ  கேட்பதோ நடை பெறாது  


நினைவுகள் பதிவுக்கு இந்துமதம் ஒன்னும் சொல்லலையா

நினைவுகள் பதிவுக்கு இந்துமதம் ஏராளமாக ஞானத்தை வழ்ங்கயுள்ளது.
சமஸ்காரம் பற்றியும் மனிதனின் முன்று நிலைகள் பற்றும்
ஜாக்ரத , ஸ்வப்பன ,தூகநிலை என மூன்று நிலைகளை பற்றும் மிக விரிவாக  அலசி உள்ளது .
இப்போது பெருவெடிப்பில் சப்தம் ஒளியுடன் சேர்த்து வந்தது என்பது தான் என்கருத்து
நான் கூறியவை தப்பு என  கற்று அறிந்தோர் கூறினால்
மகிழ்வுடன்  தெரிந்து  கொள்வேன்

அன்புடன்
ஏ.சுகுமாரன்

வேந்தன் அரசு

unread,
Sep 30, 2008, 10:31:25 PM9/30/08
to minT...@googlegroups.com
சுகுமாரன்
 
இப்போ புவி சுழல்வதுடன் சூரியனை சுற்றுகிறது
திங்கள் புவியை சுற்றுகிறது
 
இதனால் ஓசை எழுகின்றதா? அது கேட்கப்படுகிறதா?

Narayanan Kannan

unread,
Sep 30, 2008, 10:41:59 PM9/30/08
to minT...@googlegroups.com
2008/10/1 annamalai sugumaran <amirth...@gmail.com>:

> முளையின் அடியே இருந்து தேங்கிய சமஸ்காரம்
> முளை ஓய்வாக மீண்டும் கனவாக பார்த்து மகிழ்கிறது
> கண்ணின் துணை இல்லாமல் .

இதுவொரு facinating field!

என்னால் தெளிவாக கலர் கனவு காணமுடியும்.
கனவில் அன்றொரு பாசுரம் (மணவாள மாமுனிகள் பற்றியது) மிகத்தெளிவாக அட்சர
சுத்தமாக யாரோ சொல்ல நான் கேட்டேன். குறித்து வைத்துக் கொள்ளவில்லையே
என்று வருந்துகிறேன்.
கனவில் என்னால் சுகந்தமான மணத்தை உணரமுடிகிறது.
கனவில் புவியீர்ப்பு சக்திக்கு உட்படாமல் பறக்க முடிகிறது.

ஆச்சர்யம் என்னவெனில் கனவில் ஐம்புலன்களும் உறங்குகின்றன என நினைத்தேன்.
அது இல்லையெனத் தெளிவாகத் தெரிகிறது. நிஜ உலகப் பருப்பொருள் ஸ்பரிசம்
இல்லாமல் கனவில் ஸ்பரிக்க முடிகிறது, காணும் பொருள் இல்லாமல் காண
முடிகிறது, நுகரும் பொருள் இல்லாமல் நுகரமுடிகிறது. குரு நேரடியாக வராமல்
உபதேசம் பெறமுடிகிறது.

ஸ்தூல உடம்பு போல் சூட்சும உடம்பொன்று உண்டு என்று கனவு தெளிவாகச்
செப்புகிறது. அப்படியெனில் இந்த சூட்சும உடம்பு எத்தகையது? அதன் வடிவம்
எதனால் ஆனது. அவை பருப்பொருளின் எத்துகள் கொண்டு நிர்மாணம் பெறுகிறது.
இதை போசான் எனலாமா? Subatomic particles எனலாமா? இதை அப்ராகிருத ஸ்வரூபம்
என்கிறது நம் மரபு.

கண்ணன்

annamalai sugumaran

unread,
Sep 30, 2008, 11:46:23 PM9/30/08
to minT...@googlegroups.com

நிச்சயமாக ஓசை எழுகிறது திரு வேந்தன் அவர்களே !
நல்லவேல்லை அது ஆடியோ அலை வரிசையில்
வாராததால் நமது காதுகள் தப்பித்தன
நாம் வாழும் உலகத்திலேயே முன்று அடுக்குகளாக
முன்று நிலை வாழ்க்கை நம்மை சுற்றி நடக்குதுன்னா
நம்புவிர்களா ? காயத்ரி இதை தான் ஓம்  பூர் , புவ , ஸ்வா
என்கிறது

அன்புடன்
ஏ.சுகுமாரன்

வேந்தன் அரசு

unread,
Oct 1, 2008, 8:04:27 AM10/1/08
to minT...@googlegroups.com


2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>

நிச்சயமாக ஓசை எழுகிறது திரு வேந்தன் அவர்களே !
நல்லவேல்லை அது ஆடியோ அலை வரிசையில்
வாராததால் நமது காதுகள் தப்பித்தன

 
ஒலி எனப்து ஆடியோ அலை வரிசைதான். இதில் வாவல், மற்றும் யானைகள் எழுப்பி பயன்படுத்துக் கேளாஒலியும் அடக்கம்
 
நீங்க சொல்லுவது மின் காந்த அலைகள்.  மின்காந்த அலைகளுக்கு ஊடகம் தேவை இல்லை
 
 

annamalai sugumaran

unread,
Oct 1, 2008, 1:23:00 PM10/1/08
to minT...@googlegroups.com
நன்றி திரு வேந்தன் அவர்களே
 
நமது காதும் ,கண்ணும் ஒரு குறிப்பிட்ட அலை
துடிப்பிற்கு  தான் டுயுன் செய்ய பட்டுள்ளது
இந்த ஆடியோ,  வீடியோ நம் தகுதிக்கு
நாம் வைத்துக்கொண்ட பெயர்தான் .
நம் தகுதி நாம் ஏற்படுத்தியது அல்ல
முன்னர் நமது இச்சையால் பிறந்தோம் இல்லை
இறுதியும் நம் வசம் இல்லை !
வாழும் வாழ்வும் பாதி நேர தூக்கம் போக
மிச்ச நேரம் வயத்துக்காக  பிறருக்கு போக
நம்ம நேரம் மிச்சம் ரொம்ப கொஞ்சம் தான் .
பிக் பாங் நிகழ்வுக்கு பிறகுதான்  மனிதன்
தோன்றியது உண்மை ,- ஒலி, ஒளி, தோன்றியதும்
சத்தியம் தான்! என்ன அலை துடிப்பில்
என்பது தெரியாது - அப்போது மனிதனும்
இல்லை  எந்த    ஜீவனும் இல்லை
எனவே ஆடியோ ,வீடியோ என்ற குழப்பமும்  இல்லை
ஆனால் மிக பழமை நாட்களிலேயே நம்ம ஆட்கள்
குறிப்பா சிலது சொல்லியிருப்பதை நாம இப்போ
பேசுகிறோம் விளக்கம் தர அவர்களும் இல்லை .
பிக் பாங் நிகழ்வுக்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு பின்
 தோன்றிய மனிதன் அவன் டேஸ்ட்க்கு பல கடவுள்களை
படைத்தது கொண்டான்  ஆனால் அவன் தோன்றுவதற்கு
முன்னேயும் கடவுள் இருந்தார் பின்னேயும் இருப்பார்
வள்ளுவர் கூட தோன்றுதல் தோன்றாமை உடையவர்
என சான்று தந்திருக்கிறார் அப்புறம் அப்பில் ஏது ?
எனவே பிக் பாங் பற்றி இத்தோடு முடித்துக்கொள்வோம்
உங்கள் அனுமதியோடு ., திரு கண்ணன் அவர்களின்
முடியுரைதான் தேவை -
 
ஆனால் நான் முதலில் கூறிய  ஐயங்கள்  மேலும்
அலச பட வேண்டும் , அடுத்த மடலில் இன்னும்
கொஞ்சம் சிந்திப்போம் .
மின் தமிழ் ஒரு அறிவார்த்த சபை என்பதை நான்
அறிவேன் சான்றோர் பலரின் சிந்தனைகள்
எனக்கு தெளிவை ஏற்படுத்தும்  என நம்பும்
அன்முடன்
ஏ.சுகுமாரன்

 

 



On 10/1/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Oct 1, 2008, 9:21:15 PM10/1/08
to minT...@googlegroups.com
2008/10/2 annamalai sugumaran <amirth...@gmail.com>:

> எனவே பிக் பாங் பற்றி இத்தோடு முடித்துக்கொள்வோம்
> உங்கள் அனுமதியோடு ., திரு கண்ணன் அவர்களின்
> முடியுரைதான் தேவை -
>

அன்பின் சுகுமாரன்:

முடிவற்ற தேடலுக்கு முடிவேது. இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

உங்கள் கவிதையின் தொடர்பான கருத்துப்பரிமாறல் பல புதிய தெளிவுகளைத்
தந்துள்ளன. நன்றி.

கடவுள் என்பது கவிதை. கவிதா மனோபாவம் உள்ளவர்களுக்கு கவிதை ரசிக்கிறது.
ருசி உள்ளவர்களுடன் கவிதையப் பகிர்ந்து கொள்ளலாம். ருசி இல்லாதவரைத்
தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவதே மேல். பசி உள்ளவனிடம் உணவு கொடுத்தால்
செல்லும்.

கடவுளைப் புரிந்து கொள்ளுதல் என்பது ஒரு விஷயம். கடவுளை வைத்து
எழுத்துள்ள பிரம்மாண்டமான மதம் எனும் ஸ்தாபனத்தைப் புரிந்து கொள்ளுதல்
என்பது ஒரு விஷயம். பலரது வெறுப்பு 'மதம்' எனும் ஸ்தாபனத்திலுள்ள
குறைபாடுகளால் எழுகிறது. முதலில் இருப்பது தத்துவம். இரண்டாவது
சமூகவியல். குழம்பிக்கொள்ளக்கூடாது. பலருக்கு இக்குழப்பம் தீர்ந்த
பாடில்லை.

அறிவியலுக்கும், மதம் எனும் ஸ்தாபனத்திற்கும் அன்றிலிருந்து 'லடாய்'தான்.
ஆனால், தத்துவம் என்ற அளவில் கடவுளைப் புரிந்து கொள்ளுவதில் அறிவியலுக்கு
என்றும் அடங்காப் பசியுண்டு. ஏனெனில் முனைவர் பட்டம் என்பது Doctor of
Philosophy தான். எனவே அறிவியல் அனைத்தும் பிரம்ம தத்துவத்தை நோக்கியே
பயணிக்கின்றன. இதில் கிழக்கு-மேற்கு என்ற பேதமில்லை. பருப்பொருள் மூலம்
தேடினாலும் (material search), ஆன்மவியல் மூலம் தேடினாலும் (spiritual
search) அடையும் இடம் ஒன்றுதான். இதை மிகத்தெளிவாக பதி, பசு, பாசமென்று
சைவ சித்தாந்தமும், ஈஸ்வரன், சித், அசித் என்று ஸ்ரீவைஷ்ணவமும் கண்டு
கொண்டுள்ளன. சித்தும், அசித்தும் 'அவன்' அங்கங்களே. எனவே அறிவியல் ஒரு
நாள் அங்கு வந்து சேரும். வந்து கொண்டு இருப்பது காணக்கிடைக்கிறது.

அடுத்து சிவ, வைஷ்ணவ பேதம். சின்ன மேற்கோள் காட்டினால் கூட
பொறுத்துக்கொள்ள முடியாத அளவு சில தமிழ் மனம் இப்பேதத்தில்
ஊறிக்கிடக்கிறது. தமிழ் மெய்யறிவு என்பது ஒன்றுதான். நாம் வணங்கும்
துறைகளை பல, பலவாக்கி வைத்திருப்பதும் அவன் மீது வேட்கை விளைவிக்கவே
என்று சொல்கிறார் நம்மாழ்வார். இதே கருத்தை சுவாமி விவேகாநந்தரும்
சொல்கிறார். நமக்குள்ள புரிதல் நிலைக்கு இன்னும் நிறைய 'துறை'கள்
வரவேண்டுமென்று.

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே. (இயற்பா)

வள்ளலார் தமது திருவருட்பாவில் 'பித்து ஏறும் வண்ணம் பிளவு பட்ட
மனமுடையோருக்கு அவன் காட்சி அரிது" என்று சொல்கிறார்.

தத்துவ பதியே தத்துவம் கடந்த
தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்தசன் மார்க்கர்
தமக்குளே சார்ந்தநற் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப்
பெறல்அரி தாகிய பேறே
புத்தமு தளித்தென் உளத்திலே கலந்து
பொதுநடம் புரிகின்ற பொருளே

கடவுள் என்பதோர் புரிதல். ஒரு தேடலின் தெளிவு. ஓர் கவிதை.

இப்புரிதல் என்பது அவரவர் பக்குவம், மனோபாவம் சார்ந்தது. கவிதை சிலருக்கு
அவசியமாகப்படலாம். கவிதை இல்லாமலே வாழ்தலும் சாத்தியமே.

உங்களையெல்லாம் நான் மனதார நேசிக்கிறேன். "நெஞ்சு நிறைய நேசம் வைத்தால்
குறை தெரியாது" என்பார்கள்.

annamalai sugumaran

unread,
Oct 1, 2008, 11:53:59 PM10/1/08
to minT...@googlegroups.com
வள்ளுவர் கூட தோன்றுதல் தோன்றாமை உடையவர்
என சான்று தந்திருக்கிறார் அப்புறம் அப்பில் ஏது ?
 
தவறு நடந்து விட்டது ! தோன்றுதல் தோன்றாமை  பற்றி
திருவாசகத்தில் தான் உள்ளது .
ஆனால்   கற்றதனலய பயனென்கொல் ?வாலறிவன்
பற்றி அறியாவிட்டால் என்றுதான் சான்று தருகிறார் .
இத்தனை காலம் தாங்கள்  அறிவைதூண்டும் பல
கேள்விகள் கேட்டு தெளிவு பெற உதவிசெய்தீர்கள் .

மிக்க நன்றி 
அன்புடன்
ஏ.சுகுமாரன்
 


--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY  INDIA
  MOBILE 09345419948



--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY  INDIA
  MOBILE 09345419948

annamalai sugumaran

unread,
Oct 6, 2008, 9:17:09 AM10/6/08
to minT...@googlegroups.com
பிக் பாங் பற்றிய சர்ச்சை விஞ்ஞானிகளின்
பதிலை அதிகம் சார்த்து
 மேலும் மேலும் சென்றதால் நான்
தற்காலிகமாக ஓர் ஒய்வு கேட்டேன் .
ஆனால் இன்னும் தேடல் ஒரு முடிவுக்கு வரவில்லை இன்னும்
சொல்லப் போனால் நாம் ஆரமிக்கவே இல்லை .
வள்ளுவர் கூறினார்
"ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து "
இதில் கல்வி ஒன்று மட்டுமே ஏழு பிறப்போ , எழுகின்ற பிறப்போ
அதிலும் தொடரும் என்கிறார் .
கல்வி என்பது உண்மையான் ஞானம் , தனக்கு உதவும்
அறிவு  அது , அது ஏட்டு சுரைக்காய்  அல்ல , நாம் பிறந்ததின்
காரணத்திற்கு உதவும் அறிவு , நம்மை ஒரு நிலை உயர்த்தும் அறிவு .
அந்த அறிவு ஏழு பிறப்பு என குறிப்பிட்டு வள்ளுவர் கூறியிருக்க மாட்டார்
அது எழுகின்ற பிறப்பாக கொண்டாலும் நாம் மறுபிறப்பை
ஒப்புக்கொண்டாகவேண்டும் .
 இதில் ஒரு வேறு கருத்தும் இருக்கிறது
நாம் இது வரை பரிணாம வளர்ச்சியில் ஏழு நிலைகளை
தாண்டி வந்ததாக கருதப்படுகிறது  
 
"மாவேழ் சனனம் கெட மாயைவிடா
மூ வேடனை என்று முடிதிடுமோ "  என்று

அருணகிரி நாதர் கந்தரனுபூதியில்  ஏழு பரிணாம  நிலை பற்றி
கூறுகிறார்
பரிணாம வகைகளும் அதில் உள்ள கரு வேறுபாடுகளும்

தாவரம்          19  லக்ஷம் கரு வேறுபாடுகள்
நீர் வாழ்வன     10   லக்ஷம் கரு வேறுபாடுகள்
ஊர்வன          15    லக்ஷம் கரு வேறுபாடுகள்
பறவைகள்       10     லக்ஷம் கரு வேறுபாடுகள்
விலங்கு          10      லக்ஷம் கரு வேறுபாடுகள்
மனிதர்             9     லக்ஷம் கரு வேறுபாடுகள்
தேவர்              11      லக்ஷம் கரு வேறுபாடுகள்

இதில் மிகவிந்தையானது மனிதரில் இத்தனை
ரகங்களா? என்பது தான் , மனிதரில் நாய் , மனிதரில் நரி ,
மனிதரில் புலி என பல்வேறு வகைகள் இன்னும்
தன் பரிணாம வாசனை போகாத மனிதர்கள்
அவர்கள் மனிதரில் மனிதனாகி மனிதரில் தேவராக
எத்தனை எத்தனை பிறவிகள் வேண்டுமோ .?
ஞானம் விட்டுபோகமல் இருந்தால் தன் இது சாத்தியம்
அதுவும் நமது வளர்ச்சி முன் நோக்கியே இருக்கவேண்டும்
வாசனையால் ஆசை மிகுதியால் சற்றே பின்னோக்கினால்
மேலும் கூடும் வரும் பிறவி ..
திரு கண்ணன் அவர்கள் கூறிய படி  Amit Goswami  எழுதிய "Self Aware Universe" சுருக்கத்தை படித்தேன் .
அவர் கூறுகிறார் human beings may not be the end of it, human beings certainly right now seem to be an epitome, but this may not be the final epitome. I think we have a long way to go and there is a
long evolution to occur yet
மனித பிறவியின் பயனே ஒரு நிலை உயருவதே .
இது ஒரு தேவனாகும் முயற்சி எனக்கூறுவார்கள்
நாமும் சற்று உயர சிந்திப்போம்
அன்புடன்
-ஏ.சுகுமாரன்



Narayanan Kannan

unread,
Oct 6, 2008, 10:36:05 PM10/6/08
to minT...@googlegroups.com
>
> தாவரம் 19 லக்ஷம் கரு வேறுபாடுகள்
> நீர் வாழ்வன 10 லக்ஷம் கரு வேறுபாடுகள்
> ஊர்வன 15 லக்ஷம் கரு வேறுபாடுகள்
> பறவைகள் 10 லக்ஷம் கரு வேறுபாடுகள்
> விலங்கு 10 லக்ஷம் கரு வேறுபாடுகள்
> மனிதர் 9 லக்ஷம் கரு வேறுபாடுகள்
> தேவர் 11 லக்ஷம் கரு வேறுபாடுகள்
>
> இதில் மிகவிந்தையானது மனிதரில் இத்தனை
> ரகங்களா? என்பது தான் , மனிதரில் நாய் , மனிதரில் நரி ,
> மனிதரில் புலி என பல்வேறு வகைகள் இன்னும்
> தன் பரிணாம வாசனை போகாத மனிதர்கள்
> அவர்கள் மனிதரில் மனிதனாகி மனிதரில் தேவராக
> எத்தனை எத்தனை பிறவிகள் வேண்டுமோ .?

இது பற்றி யோசிக்க வேண்டும்!

இந்த பூர்வஜென்ம "வாசனை" என்றால் என்ன? This is a unique Indian way of
looking at life. Is it memory? Can memory lost even after death? If so
how? Or it is just explaning the variations we see in a species. In
fact, in Darwinian evolution, Variation is the basis of evolution. If
there is no variation then there is no evolution. But biologists
explain variation on the basis of genetics. But Indian scholars
differe in this. They explain it based on memory! Is it a real science
or just metaphysical hypothesis? Only time will tell?

கண்ணன்

karth...@gmail.com

unread,
Oct 7, 2008, 9:29:58 AM10/7/08
to மின்தமிழ்

அன்புள்ள சுகுமாரன்,

எனது எண்ணங்கள்.

அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -
முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.
ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமது
ஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறப
இது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.

இதுவே நாம் பிரபஞ்ச உற்பத்தியின் உண்மைகளை அறிவியல் பூர்வமாக
அறிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.
We are cetrtainly biased in favour our beloved Tamil saints and bent
on looking for scraps of
evidence in the big bang research to justfy that premise.
அதே வேளை இந்த கற்றையியல் அறிவியலாளர்களின் அறிவார்ந்த
கண்டுபிடிப்புக்களை
நாம் இதனால் மலிவு படுத்தி விடுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதனாலேயே
அறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியே பேசுவதே சிறந்தது என
நான் சொல்கிறேன்.

பரிணாம வளர்ச்சிகள் பற்றி கந்தரனுபூதி முதலான இலக்கியங்கள் சொல்லியவற்றை
நீங்கள் எடுத்துக் காட்டுகிறீர்கள். இதைப் பற்றி நாம் என்ன விவாதிக்க
முடியும்?
என்ன கருத்துச் சொல்ல முடியும்?

கற்றையியல் சொல்வதை எப்படி நம்மால் முழுக்கவும் புரிந்து கொள்ள
முடியவில்லையோ
அப்படித்தான் இதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கற்றையியல்
சொல்பவற்றிற்கு
ஒரு methodology இருக்கிறது. Corroborative research இருக்கிறது.
Academic validation இருக்கிறது.
ஆனால் இங்கு நீங்கள் மேற்கோள் காட்டும் பரிணாம வளர்ச்சியை ஆதாரப் படுத்த
என்ன
இருக்கிறது?

அமித் கோசுவாமி பற்றியுய்ம் எழுத ஆசைதான். சில கருத்துக்களும்
கேள்விகளும் உணடு.
பின்னால் எழுதுகிறேன்.

ரெ.கா.

On Oct 6, 9:17 pm, "annamalai sugumaran" <amirthami...@gmail.com>
wrote:
> பிக் பாங் பற்றிய சர்ச்சை விஞ்ஞானிகளின்
> பதிலை அதிகம் சார்த்து
>  மேலும் மேலும் சென்றதால் நான்
> தற்காலிகமாக ஓர் ஒய்வு கேட்டேன் .
> ஆனால் இன்னும் தேடல் ஒரு முடிவுக்கு வரவில்லை இன்னும்
> சொல்லப் போனால் நாம் ஆரமிக்கவே இல்லை .

Narayanan Kannan

unread,
Oct 7, 2008, 11:33:17 AM10/7/08
to minT...@googlegroups.com
ரெ.கா:


இதுவே நாம் பிரபஞ்ச உற்பத்தியின் உண்மைகளை அறிவியல் பூர்வமாக
அறிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.
We are cetrtainly biased in favour our beloved Tamil saints and bent
on looking for scraps of
evidence in the big bang research to justfy that premise.
அதே வேளை இந்த கற்றையியல் அறிவியலாளர்களின் அறிவார்ந்த
கண்டுபிடிப்புக்களை
நாம் இதனால் மலிவு படுத்தி விடுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதனாலேயே
அறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியே பேசுவதே சிறந்தது என
நான் சொல்கிறேன்.
 
இல்லை ரெ.கா நாம் பிடித்துக் கொண்டு கொண்டாடவில்லை! ஒற்றுமை இருக்கும் இடங்களைச சுட்டி மகிழ்கிறோம். வேதாந்தமும் முன்புனைவுகள் ஏதுமின்றியே இவ்வாராய்ச்சியில் நுழை என்றுதான் சொல்லுகின்றன. வைணவ காலாட்சேபம் கேட்கும் போது அவர்கள் கேட்காத கேள்வி இல்லை. எதையும் மடத்தனமாக ஏற்றுக்கொள் என்று நம் சமயங்கள் சொன்னதில்லை. பகுத்தறிவின் பயன் அறிவியல் என்றால், சமயமும் அதுவே!
 


பரிணாம வளர்ச்சிகள் பற்றி கந்தரனுபூதி முதலான இலக்கியங்கள் சொல்லியவற்றை
நீங்கள் எடுத்துக் காட்டுகிறீர்கள். இதைப் பற்றி நாம் என்ன விவாதிக்க
முடியும்?
என்ன கருத்துச் சொல்ல முடியும்?
 
உங்களுடன் ஒத்துப்போகும் அளவிலான ஓர் எண்ணமுண்டு. ஓர் வலைப்பதிவு இடுகிறேன். மனிதப்பரிணாமம் எனும் துறையில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் வாங்கியவன் (படிக்கின்ற காலத்தில்). இது மிகவும் சுவாரசியமான துறை.
 
க.>

வேந்தன் அரசு

unread,
Oct 7, 2008, 3:12:11 PM10/7/08
to minT...@googlegroups.com


2008/10/6 Narayanan Kannan nka...@gmail.com




 
இது பற்றி யோசிக்க வேண்டும்!

இந்த பூர்வஜென்ம "வாசனை" என்றால் என்ன?
 
போன ஜென்மத்தில் தாய்ப்பால் அருந்தியது, துணை புணர்ந்தது எல்லாம் :)
 
யாரும் கற்றுத்தராமலேயே நமக்கு இவை தெரிகின்றனவே!

Narayanan Kannan

unread,
Oct 7, 2008, 7:13:42 PM10/7/08
to minT...@googlegroups.com
2008/10/8 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> போன ஜென்மத்தில் தாய்ப்பால் அருந்தியது, துணை புணர்ந்தது எல்லாம் :)
>
> யாரும் கற்றுத்தராமலேயே நமக்கு இவை தெரிகின்றனவே!


உண்மைதான். பிறந்தவுடன் கன்றுக்கு தாய்மடி போக வேண்டுமென்று
எப்படித்தெரிகிறது? அறிவியல் சொல்லும் இவையெல்லாம் மரபுடன் இயைந்து வரும்
செயலென. டி.என்.ஏ எனப்படும் மரபு வேதிமம் இம்மாதிரி நினைவுகளை
மர்மக்குறியீடுகளாக தன்னுள் புதைத்து வைத்து, ஒரு தலைமுறையிலிருந்து
அடுத்த தலைமுறை என்று பரப்பிவருகிறது. இதனால்தான், விலங்குகள் (யானையும்
சேர்த்து) நீரில் நீந்தும் தன்மை பெறுகின்றன, எப்பயிற்சியும் இல்லாமல்.
ஏனெனில் நமது தோற்றம் நீரில் ஆரம்பிக்கிறது.

க.>

annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 2:35:49 AM10/8/08
to minT...@googlegroups.com

அன்புள்ள திரு ரெ.கா.அவர்களுக்கு ,
//அறிவியலாளர்கள் - இங்கு கற்றையியல் ஆய்வாளர்கள் எனக் கொள்க -


முன்முடிபுகள் ஏதுமின்றி பிரபஞ்சத் தோற்றத்தை ஆராய்கிறார்கள்.
ஆனால் இதைப்பற்றி வெளியிலிருந்து பேசிக்கொண்டுள்ள நாம் நமது
ஞானிகளும் சித்தர்களும் சொல்லியிருப்பதைப் பிடித்துக் கொண்டு அதற்கேறப

இது இருக்கிறதா என ஒப்பிடுவதிலேயே குறியாக இருக்கிறோம்.//

அப்படியில்லை திரு ரெ.கா,
  நமது மனித இனம் தோன்றி பல லக்ஷம் ஆண்டுகள் ஆகிவிட்டன .
ஆனால் சுமார் நானுறு  ஆண்டுகளாகத்தான்  நமது அறிவியலாளர்கள்
விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளை அடிப்படை தொடர்புகளுடன்
ஆய்து பதிவு செய்யத்தொடங்கி இருக்கின்றனர் .
அப்போது முன்னர் மனிதர்கள் அறிவின்றி ,   ஆராயும்  மன பக்குவம் இன்றி
இருந்தார்களா என்றால் இல்லை .
மனிதன் தோன்றியதில் இருந்து அவனை சுற்றி இருந்த
பல புதிர்களை அவன் ஆர்வத்துடன் பார்த்து ஆராய்துதான்
இருந்து இருக்கிறன் .
ஆனால் இப்போது நானுறு ஆண்டு களாக மனிதன்
பரிணாம வளர்ச்சியிலே அறிவின்  உச்சத்தில் இருக்கிறன் .
ஒலிம்பிக்கில் இருந்து இன்னும் பலவேறு , சொல்லப்போனால்
அனைத்து துறைகளும் மனிதன் தன் முந்தய சாதனை களை
முறியடித்து வருகிறான்  மனிதன் மாறிக்கொண்டே வருகிறான்
உருவிலும் , அறிவிலும் , குணதில்லும் விரிவடைத்து தான் வருகிறான்
இது எப்படிசாத்தியமாகும் அறிவின் தொடர்ச்சியும் முயற்சியின்
தொடர்ச்சியும்  இருந்தால் தான் .
இதையும் பரிணாம வளர்ச்சி என்றும் ,
பூர்வஜன்ம வாசனை என்றும் நம் முன்னோர் கூறினார்
இதற்க்கு கருவில்லேயே திருவுடயவரக  பலர் இருந்ததுண்டு
இன்னும் கூட பல குழந்தைகள் சிறுவயதிலேயே கணினிதிறமை
கவி படும் திறன் , தத்துவ அறிவு பெற்று விளங்குவதை
நாம் காணலாம் , ஞான சம்பந்தர்  பழமையானவர் என்பதால்
அவர் முன்று வயதில் கவி பாடியதை நாம் கணக்கில்
கொள்ளவேண்டாம் , ஆனால் இன்றும் இத்தகைய பல
இளம் நிபுணர்கள் பல நாடுகளிலும் நாம் பார்க்கிறோம் ..
 
குறிப்பாக நமது பாரதத்தில் , பிற கண்டங்களிலே
மனிதர்கள் தங்கள் வயற்று பாட்டையே பார்த்துக்கொண்டு
வனங்களில் வாழ்ந்த போது, நாம் அறிவியல் ஆராய்ச்சிக்கு
என தனியே ஒரு குழுவை வைத்திருந்தோம் , அவர்களுக்கு
பெயர் தான் வேறே இருந்தது , அதில் ஜாதி ,இன பாகுபாடு
முதலில் இல்லை  . யார் வேண்டும் ஆனாலும் இந்த சிந்தனை
செய்வதையே தவமாக கொண்ட குழுவில் சேரலாம் .
அவர்கள் ரிஷிகள் எனப்பட்டார்கள் , தமிழகத்தில் சித்தை அடக்கிதால்
சித்தர்கள் எனப்பட்டனர் ..
அவர்களின் சுக துக்கங்களை நமது சமுதாயம் பார்த்துக்கொண்டது .
அவர்கள் இறைவனை குறித்து சிந்தனையை ஆரமிக்கவில்லை
அவர்களை சுற்றி வாழும் மனிதர்கள் படும் துயரத்தின் காரணத்தையும் ,
ஏன் பிறந்தோம் , ஏன் சாகிறோம் ,எதற்க்காக வாழ்கிறோம் ,
வாழும் போது ஏன் சிலருக்கு துக்கம் ,சிலருக்கு வசந்தம்
சிலர் ஏன் சிவிகையில் போகிறார்கள் ,சிலர் ஏன் சிவிகையை தூக்குகிறார்கள்
ஏன் வியாதிகள் , சில ஏன் மருந்தால் குணமாகிறது ,சில ஏன் மருந்து கொடுத்ததும்
குனமவதில்லை , என நம்மை பற்றயுள்ள பல புதிர்களுக்கு விடைக்கான
முயன்றனர் .
பலரும் பல வழிகள் கண்டனர் , ஆனால் அனைத்துக்கும்  விடையளிக்க
அவர்களுக்கு கடவுளும் ,கர்ம விதியும் தான் தேவை பட்டது.
 அவர்கள் சிந்தித்து கண்ட பொருளை அவர்கள் அப்படியே
யாரையும் ஒப்புக்கொள்ள சொலவில்லை .
அப்போது தர்க்க சாஸ்திரம் என்ற பெயரிலே தற்போதைய
விஞான முறைகளை போல் வெகுவாக அறிஞர் பெருமக்கள்
குழுவினால் ஆராயப்பட்டது .
ஒவொரு கருத்துக்கும் சாஸ்திர பிரமாணம்
தேவைப்பட்டது .
ஆதி சங்கரரில் இருந்து , புத்தர் , ராமானுஜர் , அப்பர் என
மாதக் கணக்கில் வாதங்கள் பாரதத்தின் பல்வேறு
பகுதிகளுக்கும் சென்று அறிவை தேடினர் அதே சமயம்
பரப்பினர் .
அப்படி வாழையடி வாழையை வந்த அறிவியலாரின்
வழிவந்தவர்கள் தான் தற்க்கால விஞனிகளும்
அவர்கள் கண்டுப்பிடிப்பையோ , உழைப்பையோ
யாரும் குறைத்து மதிப்பிடவோ , குறைகூறவோ
இல்லவே  இல்லை
இன்னும் சொல்லப்போனால் மாறிக்கொண்டே வரும்
அறிவியலாளர்கள் கண்டுப்பிடிப்பை கண்முடித்தனமாக
நமது மக்கள் ஏற்று கொள்ளவதும் ,அதற்கு எந்த ஆதாரமும்
கேட்க்கததும் தான் பெரு வியப்பு .
உதாரணம் நமது நவீன விவசாய அறிவுரையால்
பாரம்பரிய விவசாயத்தை இன்று இழந்து
பல்வேறு வியாதி ,மன இறுக்கத்துடன்
நமது வாழ்க்கை அமைத்தது .
 நாம் பழம் பாடல்களில் சில விஞ்ஞான வார்த்தைகள் இருப்பதை சுட்டிகாண்பிப்பது
இதையும் உங்கள் ஆராச்சியில் சேருங்கள் , உண்மை இருந்தால்
உலகுக்கு கூறுங்கள் என்பதற்காகவே .
சில நேரம் நமது தற்போதைய விஞ்ஞான அறிவினால் சில
புரிந்து கொள்ளாமல் போகப்படலாம் .
வரும் காலங்களில் அது நிரூபிக்க படலாம்
பல லக்ஷம் ஆண்டுகள் பொறுத்திருந்தோம் , இன்னும் சில ஆண்டுகள்
பொறுப்போமே.
நமது முன்னோர் கூறியது பல விவாதங்களினால் நிரூபிக்க பட்ட
பல சாஸ்திர பிரமாணங்கள் கொண்ட , காலத்தால் எஞ்சி நிற்பவை
அது ஆபத்து இல்லாத தேய்த்த வழி பாதை .
 
மேலும் சில உள்ளது பின் , அதுபற்றி பேசுவோம்.
என்னை பொறுத்தவரை இன்னும் எதாவது இதன் மூலம்
கிடைகாதா என்றுதான் இவைகளை எழுதுகிறேன் .
அன்புடன்,
-ஏ.சுகுமாரன்


 



annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 3:27:05 AM10/8/08
to minT...@googlegroups.com

அன்பின் திரு கண்ணன்,
 இந்த  டி.என்.ஏ  ஆதியில் இருந்து ஓவொரு உயிர்வகைக்கும்
மாறவே இல்லையா ? அல்லது மாறுதலுக்கு உள்பட்டதா ?
மாறும் என்றால் எதனால் ?
தற்போதைய மாடுகள் சிக்னலை பார்த்து சாலையை
கடக்கிறதே அந்த அறிவு டி.என்.ஏ  மூலம் வந்ததா ?
எல்லாவற்றிக்கும் அடிப்படை குணம் உள்ளது
சிங்கம் சிங்கமகாதான் இருக்கும்
எப்படியும் மாறது .
மனிதனின் அடிப்படை குணம் என்ன ?
பசியும் ,இனவிருத்தியும் தானா ?
விலங்கிலிருந்து நாம் எந்தவழியில்
மாறுபடுகிறோம் ?
மனம் என்பது இருப்பதால் தானே மனிதன்
அந்த மனதை பற்றி நமது அடிப்படை
பாடத்தில் ஏன் இல்லை .?
விஞானம் கண்ணால் காணும் பூத
உடலை பற்றிதானே கூறுகிறது.
ஆனால் நாம் பல் ஆயிரம் ஆண்டுகளாக
மனதை பற்றியே ஆய்து வருகிறோம் .
ஒவொரு மனித மனமும்
அத்தனை பூர்வஜன்மத்தை தாங்கிய
நுண் பொருள் , அது இல்லாமல்
மனிதன் இயயங்க இயலாது .
 புலன்கள் மனதின் தொடர்பு இன்றி
வேலை செய்யாது .
பூர்வஜன்ம தொடர்பு மனதின் மூலம் வருகிறது
நமது விதி ஊழ் டி.என்.ஏ மூலம் வருகிறது என கொள்ளலாமா ?
அன்புடன்,
-ஏ.சுகுமாரன்

 



Tthamizth Tthenee

unread,
Oct 8, 2008, 3:29:30 AM10/8/08
to minT...@googlegroups.com
ப்ரபஞ்ச புதிர்கள் என்னும் இப்பகுதியை படித்துக் கொண்டு வருகிறேன்
இவற்றைப் படிக்கும் போது என் மனதில் எழுந்த சில வினாக்கள்,விடைகள்
அவற்றைப் பகிர்ந்து கொள்லலாம் என்று நினைக்கிறேன்
 
பல காலமாக சித்தர்களும் ,யோகிகளும்,முனிவர்களும்
அறிவு பூர்வமாகவும், பக்தி பூர்வமாகவும், ஆன்ம யோக வழிகளிலும்
ஆராய்ச்சி செய்தும் இன்னமும் புறிந்து கொள்ள முடியாத ப்ரபஞ்ச புதிர்கள் எண்ணிலடங்காதவை,
 
என்னதான் விஞ்ஞான பூர்வமாக ஜீன் தத்துவத்தை விஞ்ஞானிகள்
கூறினாலும்
 
சம்பந்தமே இல்லாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் புரிந்து கொண்டு குழந்தை பெற்றாலும்
ஒரு சிலரின் குழந்தைகளுக்கு பெண் வழிப் பாட்டனாரின் குணாதிசயங்கள்
அப்படியே வருகிறது , இன்னும் சிலரது குழந்தைகளுக்கு பில்லை வழிப் பாட்டனாரின் குனாதிசயங்கள் தானாகவே வருகிறது
இன்னாருக்கு இன்ன குணங்கள் என்று முடிவு செய்வது யார்,,?
 
என்னைப் பார்ப்பவர்கள் என்னை என்னுடைய தந்தை வழிப் பாட்டனாரைப் பார்ப்பது போலவே இருக்கிறது என்பர்
 
அது மட்டுமல்ல
சுமார் முப்பது வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி
 
அந்த நிகழ்ச்சியை அனுபவித்து அதற்கு
 
'நினைவுக்கும் மணமுண்டு என்று எழுதி வைத்தேன்
 
என்னுடைய நண்பன் ஒருவனுக்கு பெண் பார்க்க அந்த நண்பனின் தாயார்
என்னையும் அழைத்துக் கொண்டு கடலூருக்கு சென்றோம்
அப்போது பழைய கடலூர், புதிய கடலூர் என்றாக இரண்டாக இருந்தது
நாங்கள் கடலூருக்கு புகைவண்டி ப்ரயாணம் மேற்கொண்டு கடலூரை அடைந்தோம், அந்த கடலூர் புகைவண்டி நிலையத்திலிருந்து குதிரை வண்டியில் ஏரி பென் வீட்டை அடைந்தோம், குதிரை வண்டியை விட்டிறங்கியவுடன் அந்த சன்னதித் தெருவின் காட்சி விரிந்தது
அபவர்கள் வீட்டு வாசலில் நின்றோம், அழகான தெரு, கோயில்
கோயில் வாசலில் ஓரிடத்தில் நிலக்கடலை வறுத்துக் கொண்டிருந்தனர், இன்னொடு பக்கத்தில் ஒரு தண்னீர்ப்பந்தல் என்னும் உனவு விடுதி
நிலக்கடல்யின் வாசம், மற்றும் உனவு விடுதியின் வாசம், மற்றும் கோயிலின் வாசலில் விற்கும் பூவின் வாசம், அனைத்தும்  கலவையாக என் நாசியைத் தாக்கிற்று, அந்த கோயிலின் அழகு என்னை மயக்கியது, அந்தத் தெருவின்
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கோலம் போட்டிருந்தது
 
அந்த மொத்தக் காட்சியையும், அந்த மொத்த மணத்தையும் என் மூளையின்
ஒவ்வொரு செல்லும் க்ரகித்துக் கொண்டது, ஆனால் அது அப்போது எனக்கு தெரியவில்லை
 
ஆனால் இப்போது யதேச்சையாக கடலைவறுப்பதன் வாசமோ, பூக்களின் வாசமோ, உனவு விடுதியின் வாசமோ நான் முகர நேர்ந்தால்
என்னை அறியாமல் கடலூரின் அந்த கோயில் வாசலும் ,சன்னதி தெருவும்,
அத்துனை வீடுகளும் என் மனக்கண்னில் அப்படியே தெரிகிறது
 
அதனால்தான் சொன்னேன் நினைவுக்கும் மணமுண்டு
நம் மூளை விசித்திரமானது , அத்துணை காட்சிகளையும்,
ஒரு மணத்தின் மூலமாக மீண்டும் புதுப்பிக்கிறது
 
அப்படி இருக்க பூர்வ ஜென்ம வாசனை என்பது உன்மையோ
என்றுதான் எண்ணத் தோன்றுகிறது,
 
சில சமையங்களில் நான் ஏதோ யோசித்துக் கொண்டிருப்பேன்
என் அம்மா என்னையே பார்த்துக் கொண்டிருப்பார்கள்
என்னம்மா என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று நான் கேட்டதும்
இப்போ நீ நின்னுண்டு யோசிச்சிணடிருந்தியே அப்பொ உன்னைப் பார்க்கும் போது உங்க தாத்தாவைப் பார்ப்பது போலவே இருந்தது என்பார்கள்
 
நான் அடிக்கடி சொல்லுவது
 
மனம் இந்தப் ப்ரபஞ்சத்தில் அடங்குகிறது
இந்தப் ப்ரபஞ்சம் மனதுக்குள் அடங்குகிறது என்று
 
அண்டத்திலிலுள்ளது பிண்டத்தில் உள்ளது
பிண்டத்திலுள்ளது  அண்டத்திலுள்ளது
 
என்பர் பெரியோர்
 
பஞ்ச பூதங்களால் ஆன நம் பிறப்பு
நம்முடைய மறைவுக்குப் பின் மீண்டும்  பஞ்ச பூதங்களோடு  கலக்கிறது
 
அண்ட வெளியில் உறையும் பல அதிசியங்கள்
நம்முடைய மூலையின் அலைவரிசையோடு ஒத்துப் போகும் போது
நாம் எதையாவது கண்டு பிடிக்கிறோம்
ஆக அனைத்தும் எப்போதும் உள்ளது, நாம் எப்போது அந்த ஒலி ,ஒளி அலைவரிசையோடு ஒத்துப் போகிறோமோ அப்போது நமக்கும் ஞானம் பிறக்கிறது
 
அந்த அலைவரிசையோடு ஒத்துப்போகவே ஞானியர் ,முனிவர்கள், சித்தர்கள்
யோகம் , தியானம், தவம் போன்றவைகளை உபயோகித்தனரோ
 
அதனால்தான் சித்தர்கள் பஞ்ச பூதங்களையும் கட்டுப்படுத்தி
நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடத்துக்குப் போகவும்
இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் கட்டுப்படுத்தவும் சக்தி பெற்றனரோ..?
 
 
கூடுவிட்டு கூடு பாய்தல், இருக்கும் பொருளை இல்லாதது போலவும்
இல்லாத பொருளை இருப்பது போலவும் காட்ட முடிந்ததோ என்றும் யோசனை வருகிறது
 
 
இன்றும் பல சிறுவர்கள் சிரு வயதிலேயே அளவுக்கு அதிகமான ஞானம் பெற்ரு விளங்குவதைக் காண முடிகிறது
 
நம்முள்ளே இருந்து கொண்டு நம்மை அடிக்கடி எச்சரிக்கும் உள்ளுணர்வு
நம்முடைய ஆறாவது, ஏழாவது அறிவாக பயன்படுகிறது
நாம் அதை மதிக்கும் போது நாம் பலவிதங்களில் காப்பாற்றப் படுகிறோம்
 
அதை மதிக்காத போது அவதிப்படுகிறோம்
 
ப்ரபஞ்ச ரகசியங்கள் நம் மனதிலேயே இருக்கிறது
மனதை ஆராய்ந்தாலே, அல்லது மனதை ஆராயும் சக்தியை வளர்த்துக் கொண்டாலே ப்ரபஞ்ச ரகசியங்களின் புதிர் விடுபடும் என்று தோன்றுகிறது
 
 
மனோசக்தியை வளர்ப்போம்,மனதை வெல்வோம்
ப்ரபஞ்சம் வசமாகும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 


 
2008 அக்டோபர் 8 12:05 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:


அன்புள்ள

Narayanan Kannan

unread,
Oct 8, 2008, 4:33:29 AM10/8/08
to minT...@googlegroups.com
அன்பின் சுகுமாரன்:

மிக அற்புதமாக இவ்விழையைக் கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

வேதாந்தம் என்பது ஓர் methodology. தத்துவம் என்பதே கணிதம் போல்,
கூர்மையான வாதங்கள் கொண்டதுதான். அது அறிவியலுக்கு எவ்விதத்திலும்
சளைத்தது இல்லை. அதனால்தான் நான் உயிரியலில் முனைவர் பட்டம் வாங்கினாலும்
Doctor of Philosophy என்றுதான் பட்டமளிக்கப்படுகிறேன். இதன் பொருள்,
எனக்கு தர்க்கரீதியாக தரவுகளைக் கணிக்கவும், அதிலிருந்து சாரத்தைக்
காணவும் தெரிகிறது என்பதே. எனவே என்னால் அவ்வளவு எளிதாக இந்திய மெஞ்ஞானம்
வேறு, மேலைத்திய அறிவியல் வேறு என்று பிரித்து இனம் காண முடியவில்லை.
சரி, இது உங்கள் முன் இடுகைக்கான பதில்.

உங்கள் கேள்விகளுக்கு வருவோம்.

அறிவியல் பார்வை என்பது பௌத்தம் போல் ஓர் இருத்தலியல் பார்வை. இரண்டிலும்
கடவுளைப் பற்றிய கேள்விக்கு "மௌனமே" பதில். இப்படித்தான் ரெ.காவும்
புரிந்து கொள்கிறார் என்று நம்புகிறேன்.

உலகின் வேறுபாடுகளை விளக்க நம்மவர் கொண்ட கொள்கை கன்மவினை, பூர்வ
ஜென்மம், வாசனை. இதனால் மிக அழகாக எதையும் விளக்க முடியும். ஆனால்
அறிவியல் போல் பரிசோதிக்க முடியாது. அதுதான் வேறுபாடு.

டி.என்.ஏ இன் தோற்றமே மிகவும் complex. அதுவொரு உயிர் முடிச்சு என்பதை
விட கணித முடிச்சு என்றே சொல்ல வேண்டும். Permutation/combination கொண்டு
இன்று உலகில் காணும் அத்தனை வேறுபாடுகளையும் இச்சிறு மூலக்கூறால் கொண்டு
வந்துவிடமுடியும்.

மேலும், இது பரிணானமமுறும் தன்மையது. அடிப்படையில் இம்மூலக்கூறு ஒரு செல்
உயிரிலிருந்து மில்லியன் செல் உயிரியான மனிதன் வரை ஒன்றாக இருக்கிறது.
ஆனால் mutation எனும் மாற்றத்தினால் சிறு, சிறு மாறுதல் அடையும் போது
குணங்கள் மாறுகின்றன.

மனிதனுள் ஓர் விலங்கு எப்போதும் உறங்கிக்கொண்டே இருக்கிறது. அது
தவிர்க்கவியலாதது. ஏனெனில் விலங்கிலிருந்தே நாம் பரிணாமமுற்றோம். நமது
அறிவு அவற்றின் அறிவிலிருந்து மேம்பட்டு இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது.
ஓரறிவு, ஈரறிவு என்று நாம் ஆறறிவுப்பிராணியாக உலவுகிறோம். இதுவொரு
வகைப்படுத்தலே தவிர மாடு எந்த வகையிலும் நமக்குக்குறைந்தது அல்ல.
அதற்குத்தேவையான சூழல் ஞானம் இயற்கையாக அமையப்பெற்றதே.

ஆயின் மனிதன் போன்ற மிகப்பெரிய மூளை (கொள்ளளவு) கொண்ட உயிர்களுக்கு
இயல்பாக கணிதம், இசை, தத்துவம் போன்றவை வந்து வாய்க்கின்றன. நமது மூளை
ஓர் சூப்பர் கம்யூட்டர் போல. அதனால் கோடிக்கணக்கான சேதிகளை நொடியில்
கையாண்டு விடை சொல்லமுடியும். மனம் என்பது மூளையின் செயல்பாட்டால்
வருகிறது என்று விஞ்ஞானம் நம்புகிறது.

ஆயினும் நினைவு என்பது எவ்வாறு, எங்கு சேமிக்கப்பட்டு பயனுக்கு வருகிறது
என்பது இன்னும் ஆயுபொருளாகவே உள்ளது.

பூர்வஜென்மம் என்று சொல்வதை நினைவுகள் கொண்டு விளக்கிவிடமுடியும்.
உண்மையில் யாரும் இறப்பதில்லை. உடல் மடிகிறது. ஆயின் நினைவுகள்
வாழ்கின்றன. இந்நினைவுகள் டி.என்.ஏயின் பராமரிப்பில் உயிர் விட்டு உயிர்
தாவுகிறது. அல்லது ஓர் உயிரை இன்னொரு உயிர் உண்ணும் போது வந்து படிகிறது.
மெத்தப்படித்த எலியின் மூளையை இன்னொரு எலிக்கு சாராகக் கொடுத்த போது
புதிய எலிக்கு படிக்காமலே திறமைகள் வந்துவிட்டன. எனவே நினைவு என்பது ஓர்
சுழற்சியில் இருந்து கொண்டே இருக்கிறது. மனித மூளை அதை பராமரித்து,
தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறது.

இது அறிவியல் தரும் விளக்கம்.

கண்ணன்


2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>:

annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 4:39:48 AM10/8/08
to minT...@googlegroups.com

நன்றி தேனியார் அவர்களே ,
 //சம்பந்தமே இல்லாத ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் புரிந்து கொண்டு குழந்தை பெற்றாலும்


ஒரு சிலரின் குழந்தைகளுக்கு பெண் வழிப் பாட்டனாரின் குணாதிசயங்கள்
அப்படியே வருகிறது , இன்னும் சிலரது குழந்தைகளுக்கு பில்லை வழிப் பாட்டனாரின் குனாதிசயங்கள் தானாகவே வருகிறது

இன்னாருக்கு இன்ன குணங்கள் என்று முடிவு செய்வது யார்,,?//

இது மட்டுமா
முன்னர் நமதிச்சையால் பிறந்தோம் இல்லை
இறுதியும் நம் வசமில்லை
இதுவரை விஞான கண்டுபிட்டிப்பு எதுவும் சாவுக்கு முடிவு
காண இயலவில்லை .
மன்னாதி மன்னரும் மாண்டுதான் போனார்கள்
நமது இச்சையால் வேண்டியபோது நம்மால்
குழந்தை பெறமுடியவில்லை .
அதன் குணங்களும் நமது விருப்பப்படி
உருவாக்க இயலவில்லை .
புத்தருக்கு முயன்று தோற்றதும்
இளங்கோ துறவி யானதும்
ராஜீவ் பிரதமர் ஆனதும் முயற்சியின்
தோல்வியால் தான்
இவை எல்லாம் விஞாணத்தை குறை கூற அல்ல .
நமது தேடுதல் இன்னும் முற்றுபெறவில்லை என்பதே .
இன்னும் விடை கிடைக்கும் வரை தோண்டி பார்ப்போம்
சான்றோர் பலர் இந்த குழுவில் இருப்பதால் .

--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY  INDIA
  MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com
www.puduvaitamilsonline.com

Narayanan Kannan

unread,
Oct 8, 2008, 5:12:23 AM10/8/08
to minT...@googlegroups.com
அன்பின் தேனீயாரே! சுகுமாரன்:

உங்கள் அலசலுக்கும் விஞ்ஞானப்பதில் உள்ளது (Now I play the game of a Scientist :-)

விஞ்ஞானம் என்பது மெல்ல, மெல்லப் புரிந்துகொள்ளும் தன்மையது. உதாரணமாக
கீழைச் சூரியன் வரும் போது மெல்ல, மெல்ல விடிந்து ஒவ்வொரு நாடாக
விழித்துக் கொள்வது போல். இன்று பல கேள்விகளுக்கு விடை தெரியாமல்
இருக்கலாம். ஆனால், நமக்கு இதுவரை தெரிந்துள்ள அறிவியல் கொண்டு மேலும்,
மேலும் ஆராயும் போது ஓர் நாள் புரியாத பல விஷயங்களுக்கு விடை கிடைக்கும்.
இதை மிக அழகாகச் சுட்டும் ஐன்ஸ்டைனின் வசனம்:

The most incomprehensible thing about the universe is that it is
comprehensible, Einstein


கண்ணன்

2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>:

Raja sankar

unread,
Oct 8, 2008, 5:39:53 AM10/8/08
to minT...@googlegroups.com
வேந்தன்,

இது ரொம்ப நாளைக்கி முன்னாடியே கேட்கப்பட்டது.

வெடிப்புக்கு முன் ஒளி/ஒலி கிடையாது. அத கேக்கறதுக்கு கண்/காதும் கிடையாது. அப்போ யார் பாக்கிறது/கேக்கிறது.

சாங்கியத்துல புருஷன் அப்படின்னு ஒரு உருவாக்கமே இந்த கேள்வியால தான்

ராஜசங்கர்



2008/9/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


2008/9/29 Narayanan Kannan <nka...@gmail.com>
2008/9/30 annamalai sugumaran <amirth...@gmail.com>:
 
மன்னிக்க. முதலில் நானும் வேந்தனை வழி மொழிந்து பெருவெடிப்பில் ஓசை
இருந்திருக்காது என்று எழுதினேன். அது தவறு என்று இப்போது அறிந்து
கொண்டேன்.
 
கண்ணன்.
 
 
ஊடகம் இல்லாமல் ஒலி எப்படி பரவும்?
 
ஊடகத்தில் ஏற்படும் அதிர்வுகள்தானே ஒலி.
 
பெரு வெடிப்புக்கு பின்னரே ஊடகம் தோன்றியது
 
அதனால் ஒலி இருக்க வாய்ப்பே இல்லை
 
.ஒரு குடுவையில் வெற்றிடத்தை உருவாக்கி அதனுள் ஒரு கொள்ளு பட்டாசை குடுவையின் சுவர்களுக்கு படாமல் மிதக்கவிட்டு பின் வெடிக்கசெய்து ஒலிவருதா என பாருங்கள்

annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 5:54:46 AM10/8/08
to minT...@googlegroups.com
என்னை பொறுத்தவரை மறுக்கமுடியாத உண்மைகள் எதையும்
கண்டவர்கள் பெயரும் சித்தர்கள் தான் என்பேன் .
இது குறிகிய மனப்பான்மையல்ல ! உண்மை என்றும் எதை பற்றியும்
  ஒன்றே ஒன்று தான் இருக்கமுடியும் .
அதை அறிந்தவர்கள் ரிஷிகள், சித்தர் , அறிவர் என அழைப்பது நமது மரபு .
பாரதியும்  தன்னை ஒரு சித்தன் என்று கூறிக்கொண்டார் .
அது  மெய் ஞானம்மோ , விஞானமோ, அது உண்மையை
தேடி ஒரே உண்மையை பெறுவதால் இரண்டும் ஒன்றுதான்
எது உண்மைகளை தேடுகிறதோ அதுவே ஞானம் .
விஞானம் தான் அறிவியல் , மெய் ஞானம் அறிவியல்
சாராதது   என்றால்  அந்த பொய்யை இப்போதே
சாராது  ஒதுக்கிவிடுவோம் .
எனவே மெய் ஞானம்மோ , விஞானமோ அதுவும்
ஞானமே ! ஒன்றே தான் .!
ஐன்ஸ்டைனும்  ஒரு ரிஷி தான் சித்தர்  தான் !
நமக்கு எல்லாம் முன்பே தெரியும் என்று நினைப்பது தான்
நம் முன்னேற்றத்திற்கு தடை .
நம்மிடம் என்ன இருக்கிறது என  நாம் தெரிந்து கொள்ளவது
 நம் முன்னேற்றத்திற்கு துணை புரியும்
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்


annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 8:04:55 AM10/8/08
to minT...@googlegroups.com

//இதுவே நாம் பிரபஞ்ச உற்பத்தியின் உண்மைகளை அறிவியல் பூர்வமாக


அறிந்து கொள்ள ஒரு தடையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.
We are cetrtainly biased in favour our beloved Tamil saints and bent
on looking for scraps of
evidence in the big bang research to justfy that premise.
அதே வேளை இந்த கற்றையியல் அறிவியலாளர்களின் அறிவார்ந்த
கண்டுபிடிப்புக்களை
நாம் இதனால் மலிவு படுத்தி விடுகிறோம் என்றும் தோன்றுகிறது. இதனாலேயே
அறிவியலையும் ஆன்மீகத்தையும் தனித்தனியே பேசுவதே சிறந்தது என

நான் சொல்கிறேன்.//


நமக்கு எல்லாம் முன்பே தெரியும் என்று நினைப்பது தான்
நம் முன்னேற்றத்திற்கு தடை .
நம்மிடம் என்ன இருக்கிறது என  நாம் தெரிந்து கொள்ளவது
 நம் முன்னேற்றத்திற்கு துணை புரியும்

நம்மிடம்  கண்முடித்தனமான நம்பிக்கை
தான் அதிகம் உள்ளது .
நம்மிடம் உள்ளதை ஆராச்சிக்கு உட்படுத்துவதால்
எந்த தவறும் இல்லை .


அன்புடன் ,
ஏ.சுகுமாரன்

 


ஒரு வினோதமான ஒற்றுமை பார்த்தீர்களா ?
நமது ரிஷிகளும் ,முனிவர்களும் ,சித்தர்களும்
நீண்ட முடியோ அல்லது தாடியோ அவசியம் வைத்திருப்பார்கள் .
 மிகப்பெரிய உண்மை அல்லது  தத்துவங்களை
கண்டறிந்த நமது நவீன விஞானிகளும்
தவறாமல் தாடியோ ,நீண்ட முடியுடன்
இருப்பார்கள் ஐன்ஸ்டைனும்  ,நியூட்டன் ,கலிலயோ ,
 மார்க்ஸ் இருந்து நமது கலாம் வரை நீண்ட முடிஉடையவர்கள் .
இந்த ஒற்றுமை தற்செயலா ?
 
(இது வெறும் தகவலுக்குதான் , இதனால் எதையும் நான்
நிறுவ எண்ணம் இல்லை )

//பரிணாம வளர்ச்சிகள் பற்றி கந்தரனுபூதி முதலான இலக்கியங்கள் சொல்லியவற்றை


நீங்கள் எடுத்துக் காட்டுகிறீர்கள். இதைப் பற்றி நாம் என்ன விவாதிக்க
முடியும்?

என்ன கருத்துச் சொல்ல முடியும்?//

 

மேலும் அந்த காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதி
வெளியிடுவது அதனை சாமான்ய காரியம் இல்லை
தற்போது நமது ஆராய்ச்சி மாணவர்கள் செய்வது போல்
பல நாட்டு பல்கலை கழகத்திற்கும் அனுப்பி அங்கிகாரம்
பெறுவது போல் அபோதும் முறை இருந்தது .
பல அறிஞர் ,மட்டுமல்ல தில்லை முவாயிரவர்  போல்
பல கற்றரிதோர் சபைகள் உண்டு
பல சபைகளிலும் ஒப்புதல் பெறவேண்டும்
பிறகு அதில் உள்ள தத்துவங்கள் பற்றி
வாதம் செய்யவேண்டும்
அதோடு போய்விடாது அனல் வாதம் ,
புனல் வாதம் போன்ற வாதங்கள்  வேறு உண்டு
கம்பர் தனது கம்ப ராமாயணத்தை அரங்கேற்ற
பட்ட பாடு ஒரு தனி காதை.
 இவ்வளவுக்கும் பிறகு அது மக்களால்
ஏற்றுக்கொள்ள பட்டால் தான் அது
நிலைத்து நிற்கும்
காலத்தை வென்று நிற்பவை
தகுதி உடையவை மட்டுமே
எனவே தான்
தர்க்க வாதத்தில் அவ்வாறு நிலைபெற்ற
நூல்களை பிரமாணமாக ( reference)  வைத்து
விவாதிப்பார்கள் ,புதிய கருத்துக்கள்
முந்தய நீருபனமான கருத்துடன்
ஒத்து போகவேண்டும்
எனவே தான் நான் கூறும்
சில கருத்துக்களுக்கு பிரமாணமாக
கூறுகிறேன் .
அதை வேறு நூலில் வேறுவிதமாக இருக்கிறது
என ஆரோக்கியமாக விவாதிக்கலாம் .
 பல்வேறு பிறப்புகளை பற்றி வள்ளுவர் கூறுகிறார்
வேறு பல நூல்களில் இன்னும் விரிவாக உள்ளது .
திருவாசகத்தில் கூறுகிறார் .
பல்வேறு பரிணாமங்களை பாமரரும்
புரிந்து கொள்ள தசாவதார  ( கமலின் தசாவதாரம இல்லை )
புராணம் ஏற்பட்டிருக்கலாம் .
நான் கூறுவது அவர்களும்
சிந்தித்து இருக்கிறார்கள் என்பதையும்
நவீன விஞ்ஞானத்தின் படி இன்னும்
நீருபிக்க சில காலம் பிடிக்கலாம் ..ஆகலாம்
என்பதும் தான்
நாம் இவ்வாறு அடிக்கடி நினைவு கூறாவிட்டால்
அந்த புத்தகங்கள் நூலக அலமாரிகளிலேயே இருந்து
வழக்கு ஒழிந்து போய்விடும்
அன்புடன்
ஏ.சுகுமாரன்


 



arumugam karthikeyan

unread,
Oct 8, 2008, 8:02:54 AM10/8/08
to minT...@googlegroups.com
Respected sirs,
 
     Based on present aspects,  universe(prabanjam) is from the vetridam  only.  Like energy from atomic collision.
 
    
     If we go in to deep, finally anything will become to zero that is nothing (sunium/vetridam).
Research (theory) with practical (karma)  may give solution for an issue.
 
Thanks and regards,
A. Karthikeyn,
Executive QC/R&D,
Bharat starch industries,
Pondicherry.


--- On Wed, 8/10/08, annamalai sugumaran <amirth...@gmail.com> wrote:

Add more friends to your messenger and enjoy! Invite them now.

Narayanan Kannan

unread,
Oct 8, 2008, 9:02:35 AM10/8/08
to minT...@googlegroups.com
இது பௌத்த வாதம். இதைத் தமிழ்ச் சமயங்கள் மறுதலித்துவிட்டன.

வெற்றிடமென்று ஏதுமில்லை. சூனியம் என்பதும் ஒன்றுமில்லாமல் போவதில்லை.
அளக்கமுடியாத அளவிற்கு நுண்ணிப்போகிறது என்று பொருள். அணுவிற்குள்,
அணுவென்று தோண்டி எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள் (subatomic
particles, matter-antimatter)

பூஜியத்திற்குள்ளே நின்று ராஜியத்தை ஆளுகின்றான்
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்

என்று கண்ணதாசன் இவ்வுண்மையைச் சொல்கிறார். ஒன்றிலிருந்துதான் ஒன்று
தோன்றமுடியும். ஒன்றுமே இல்லாததிலிருந்து ஒன்றுமே தோன்றமுடியாது என்பதே
உண்மை.

எனவேதான், தமிழ்ச் சமயங்களும், தற்போது அமித் கோசுவாமியும், இப்பரந்த
வெளி (அதில் கருங்குழிகளுண்டு, வெற்றிடமுண்டு) முதற்கொண்டு
அண்டப்பிரம்மாண்டங்களுக்கும் இருப்பிடமாக இறைவன் உள்ளான் என்று
சொல்கின்றன(ர்). நாம் உள்ளுக்குள் சென்றாலும் அப்பாலுக்கு அப்பால்
சென்றாலும் காண்பது ஒரே காட்சிதான். அது கடவுளின் காட்சியே. வெற்றிடம்
என்பதைச் சூட்சும சரீரம் எனப்புரிந்து கொண்டால் சரியாகிவிடும்.

இதைத்தான் "காற்று வெளியிடை" என்கிறான் பாரதி. காற்றே
கண்ணுக்குத்தெரிவதில்லை. ஆனால் காற்றின் இடைவெளியாகக் கண்ணன் உள்ளான்.

க.>

2008/10/8 arumugam karthikeyan <akarthi...@yahoo.co.in>:

Tthamizth Tthenee

unread,
Oct 8, 2008, 9:17:48 AM10/8/08
to minT...@googlegroups.com

ஒரு வினோதமான ஒற்றுமை பார்த்தீர்களா ?
நமது ரிஷிகளும் ,முனிவர்களும் ,சித்தர்களும்
நீண்ட முடியோ அல்லது தாடியோ அவசியம் வைத்திருப்பார்கள் .
 மிகப்பெரிய உண்மை அல்லது  தத்துவங்களை
கண்டறிந்த நமது நவீன விஞானிகளும்
தவறாமல் தாடியோ ,நீண்ட முடியுடன்
இருப்பார்கள் ஐன்ஸ்டைனும்  ,நியூட்டன் ,கலிலயோ ,
 மார்க்ஸ் இருந்து நமது கலாம் வரை நீண்ட முடிஉடையவர்கள் .
இந்த ஒற்றுமை தற்செயலா ?
 
 
பொதுவாக குடுமி வைத்திருப்பவர்களை கேலி செய்யும் காலம் இருந்தது
ஆனால் குடுமி வைத்திருப்பவர்களைக் கேட்டால் அவர்கள் என்ன சொல்கிரார்கள் என்று பார்த்தால் நம் தலையின் உச்சியில்தான் மூளையின் முக்கிய பகுதி இருக்கிறது ஆகவே அங்கு எப்போதும் குளிர் தாக்காமல் இருக்க வேண்டும், சீதளம் தாக்காமல் இருக்க வேண்டும்,அதுதான் மூளைக்கு நல்லது என்றுதான் நம் முன்னோர்கள் அங்கு மட்டும் முடி இருக்கும்படி விட்டுவிட்டு
மற்ற இடங்களில் மழித்தார்கள்,
 
முன்னோர்கள்,விஞ்ஞானிகள் நேரமின்மை காரணமாகவோ, அல்லது
 வேறு ஏதோ காரணத்துக்ககவோ முடி வளர்த்திருக்கலாம்
நம் முனிவர்கள் முடியை வளர்த்து அதை சில மூலிகைகள் போட்டு ஜடாமுடியாக வைத்திருந்தனர் ,அதுகூட சக்தி சேமிப்பாக இருக்கலாம்
 
ஏனென்றால் ஹெர்குலிஸ் என்னும்  ஒரு பலசாலிக்கு முடியில் தான் பலம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்,
 
இப்போது இளைஞ்ஞர்களுக்கு குடுமி வைப்பதே நாகரீகமாகிவிட்டது
 
பாடகர் ஹரிஹரனைப் பார்க்கும் போது எனக்கு தோன்றும்
அது நாகரீகத்துக்காகவா அல்லது பலமா என்று
 
ஆகவே குடுமி வைப்பதிலும், ஜடாமுடி தரிப்பதிலும் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன என்றே தோன்ருகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

 
2008 அக்டோபர் 8 18:32 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:

annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 10:53:55 AM10/8/08
to minT...@googlegroups.com
//ஏனென்றால் ஹெர்குலிஸ் என்னும்  ஒரு பலசாலிக்கு முடியில் தான் பலம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்//
 
மன்னிக்கவும் , அது ஹெர்குலிஸ் அல்ல !
சாம்சன் என்ற பழைய ஏற்பாட்டில் வரும் கதை .
சாம்சன் மற்றும் டிலைலா !
அவரின் பலம் அவரது முடியிலே .
ஆனால் அது ரகசியம் .
அன்புடன்
ஏ.சுகுமாரன்

 

Tthamizth Tthenee

unread,
Oct 8, 2008, 11:05:31 AM10/8/08
to minT...@googlegroups.com
ஆக மொத்தம் முடியிலே பலம் இருக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 அக்டோபர் 8 20:23 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:

வேந்தன் அரசு

unread,
Oct 8, 2008, 11:54:44 AM10/8/08
to minT...@googlegroups.com


2008/10/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ஆக மொத்தம் முடியிலே பலம் இருக்கிறது
 
முடினு சொல்லாதீங்க. மயிர் என சொல்லுங்கள்
 
முடியில் இருப்பதால் மயிர் முடி.  எதோ ஒரு ஆகுபெயர்.
 
முடி என்றால் உச்சி, கிரீடம் என பொருள்
 
மலைமுடி, மணிமுடி
 

annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 12:10:14 PM10/8/08
to minT...@googlegroups.com
அன்பின்  கண்ணன் அவர்களே ,
 தங்கள் வாழ்த்துக்கு நன்றி !
 
//.உலகின் வேறுபாடுகளை விளக்க நம்மவர் கொண்ட கொள்கை கன்மவினை, பூர்வ

ஜென்மம், வாசனை. இதனால் மிக அழகாக எதையும் விளக்க முடியும். ஆனால்
அறிவியல் போல் பரிசோதிக்க முடியாது. அதுதான் வேறுபாடு//
 
 
கர்மவினை , பூர்வஜென்மம் , வாசனை  இவைகளை கொண்டு
உலகின் எந்த செயலுக்கும் நாம் பொருத்தமான
பதில் தரமுடியும்
இதை ஒப்புகொள்ளவிட்டால் இறைவனை பாரபட்சமுள்ளவன் என்றுதான்
கூறவேண்டி வரும் .
பழியெல்லாம் கடவுளே ஏற்கவேண்டும்
இதில் மனித யத்தனதிற்கே வேலை இல்லாது
போய்விடும் ! எல்லா செயல்களும்
கடவுளே செய்தால் மனிதன் செய்வதற்கு  என்ன
இருக்கும் .!
நமது செயல்களின் விளைவுகளுக்கு ,
இதைவிட பொருத்தமான பதில் , தீர்வு
வேறுயாரும் இதுவரை கூறவில்லை
நமது வேதாந்த்தம் மட்டுமே கூறுகிறது
 
//பூர்வஜென்மம் என்று சொல்வதை நினைவுகள் கொண்டு விளக்கிவிடமுடியும்.

உண்மையில் யாரும் இறப்பதில்லை. உடல் மடிகிறது. ஆயின் நினைவுகள்
வாழ்கின்றன. இந்நினைவுகள் டி.என்.ஏயின் பராமரிப்பில் உயிர் விட்டு உயிர்
தாவுகிறது. அல்லது ஓர் உயிரை இன்னொரு உயிர் உண்ணும் போது வந்து படிகிறது.
மெத்தப்படித்த எலியின் மூளையை இன்னொரு எலிக்கு சாராகக் கொடுத்த போது
புதிய எலிக்கு படிக்காமலே திறமைகள் வந்துவிட்டன. எனவே நினைவு என்பது ஓர்
சுழற்சியில் இருந்து கொண்டே இருக்கிறது. மனித மூளை அதை பராமரித்து,
தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறது.

இது அறிவியல் தரும் விளக்கம்.//

 
இறப்பதை பற்றி வள்ளுவர் மிகசரியாக
 "உறங்குவது போலும் சாக்காடு  உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு" என்கிறார்
எப்படி தினமும் உறங்கி விழிக்கும் போது
நமது நினைவுகள் நம்மிடம் உள்ளதோ
அவ்வாறே நாம் சாகாட்டுக்கு பின் மீண்டும்
பிறக்கும் போதும் உயிருடன் நமது நினைவுகளை
தாங்கிய மனமும் கூடவே வருகிறது .
அதில் உள்ள ராக் , துவேஷ் ( விருப்பு வெறுப்பு
நமது முந்தய ஜன்ம அனுபவங்களின் பதிவுகள்
வாசனையை தொடருகிறது .
அதுவே ஆசையாய் நம்மை ஆட்டிவைக்கிறது .
வாசனையை மீறி நம்மால் புதியதாக
ஏதும் செய்யய இயலாததால் நாமும்
இந்த பிறப்பு சக்கரத்திலேயே சுழல்கிறோம் .
நாம் படிக்கவேண்டிய பாடங்களை
சரியாக படித்தால் தான் அடுத்த  வகுப்புக்கு
போக முடியும் , அதுபோல் இந்த வாழ்க்கையின்
பாடத்தை நாம் உணராமல் அடுத்த பிறவியின்
உயர்வுக்கு போகமுடியாது .
இப்பிறவியின் ஆசை ,அபிலாஷை ,கடன் ,
பாபம் இவைகளை தீர்க்கவே அதற்கேற்ற சூழலில்
பிறந்து ஆசையைதீர்க்க ஆடியோடி
வேறுஒரு சுழலில் அதே பிறவி கிடைக்கிறது
அதே வகுப்பு ஆனால் வேறு செக்க்ஷன்
வேறு வாத்தியார் !
அன்புடன்
ஏ.சுகுமாரன்


On 10/8/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 12:17:02 PM10/8/08
to minT...@googlegroups.com

சரிதான் ! ஆனால் அது என்னவோ மயிர் என சொல்ல ஒரு
கூச்சம் ! அது எப்படி வந்தது என தெரியவில்லை .
வள்ளுவர்கூட
"மயிர் நீப்பின் வாழாக்க்  கவரிமா அன்னார் "
என்றுதான் கூறுகிறார் .

அன்புடன்
ஏ.சுகுமாரன்

வேந்தன் அரசு

unread,
Oct 8, 2008, 12:19:50 PM10/8/08
to minT...@googlegroups.com
மகிழ்ச்சியா இருக்கும் போது மயிர் நு சொல்லுங்க
கோவமா இருக்கும் போது மசுறு நு சொல்லுங்க


 
2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>

kra narasiah

unread,
Oct 8, 2008, 12:27:06 PM10/8/08
to minT...@googlegroups.com
Dear Dr Kannan,
I used to spend time with the dancer/choreographer late Chandralekha on several subjects. Once I raised a point about a premature born baby who lived for exactly four days in the neonatal centre of the Child care hospital,and enquired the philosophy behind it Chandra explained in such simple words, that I wrote a short story titled "Avasaram" (Hurry), the story revolving around a new born who was impatient to even wait for 10 months, and again was impatient to live for long! The reason I gave was that according to Hindu theory everyone has to live through certain number of Janmas to attain self realisation. Let us assume it takes 10 janmas to realise, and each Janma lasts for about 50 years (average) it would take 500 years.
Wasn't this girl child very smart that she finished one of her janmas in just  about six months plus four days? She would realise faster than others!
 
In 13th chapter of Gita Arjuna asks the difference between the Kshetra and the Kshetragna; Prakrti and Purusha, "Etat vethi tumichchami" - This is what I would like to know he says!
In 1962-64 I used to listen daily Swami Chinmayananda in Mumbai and this formed the basis for my second Muthiraikkathai in 1964, called "Athu Mudivall" (Death is not the end)
 
Yes you are right and as scientist you are able to see thru!
regds
narasiah
 


--- On Wed, 10/8/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
From: Narayanan Kannan <nka...@gmail.com>
Subject: [MinTamil] Re: பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்
To: minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Oct 8, 2008, 12:27:18 PM10/8/08
to minT...@googlegroups.com
கோவமா இருக்கும் போது மயிர்ன்னு சொல்றவங்க தான் அதிகம்
 
ஆனால் அந்த மயிர் மட்டும் இல்லையென்றால் மூளைக்கே ஆபத்து
அது மட்டுமல்ல முடி உதிர்ந்த வழுக்கைத் தலையர்களை
அறிவாளிகள் என்று ஒப்புக் கொள்கின்றனர்
காரணம் பல விஞ்ஞானிகள் மூளையை அதிகம் உபயோகிப்பதால்
வழுக்கை விழுகிறது என்றும் சொல்கிறார்கள்
 
வரவர ப்ரபஞ்சமே முடியில் அடங்கிவிடுகிறது
 
அடிமுடிகாணா பரம்பொருள் தன்னில் அத்தனையும் அடக்கம்
 
ஆதி அந்தம் இல்லாத ஜோதி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2008 அக்டோபர் 8 21:49 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:
2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>

annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 12:57:55 PM10/8/08
to minT...@googlegroups.com

//according to Hindu theory everyone has to live through certain number of Janmas to attain self realisation. Let us assume it takes 10 janmas to realise, and each Janma lasts for about 50 years (average) it would take 500 years.
Wasn't this girl child very smart that she finished one of her janmas in just  about six months plus four days? She would realise faster than others!//

 "கர்மத்தின் பம்பர சுழற்சி விசை இன்னும் உன்னிடம் தானே உள்ளது ?"
இது இந்த இழையின் ஆரம்பத்தில் நான் தொடுத்த வினா.
  இது இந்த குழத்தைக்கு எப்படி சாத்தியமாயிற்று ?
முடிவை தன் வயப்படுத்த ?
முடிவுக்கு மேல் ஒரு நொடி கூட வேண்டிநின்றாலும்
கிட்டாது . முடிவதற்கு ஒரு நொடி முன்னும்
போக முடியாது . அந்த விசை நம்மிடம்  இல்லை
ஒருவேளை தொட்டகுறை விட்ட குறை
இருந்ததால் , அந்த அம்மாவிடம் பெறவேண்டிய கடன்
இருந்ததால் இது நிழ்த்திருக்கலம் .
இதுமாதிரி கடன் வசூல் செய்ய பல பிறவி  உண்டு .
நமது அம்மா, அப்பா பூர்வஜென்மத்தில்
நம்மிடம் கடன் பட்டவர்கள் .
நமது மகன் /மகள் வசூல் செய்ய வந்தவர்கள்
நாம் சரிவர அவர்களுக்கு கடமையை செய்யாவிட்டால்
நமது கடன் அடையாது .
இம்மாதிரியும் பல கதைகள் உண்டு
ஆனால் இந்த கர்ம சுழற்சிக்கு விஞனாபூர்வ
சாட்சி கேட்டால் நாம் கீதையைத்தான்
நாடவேண்டும் !
ஒப்புகொள்ளவேண்டுமே !


அன்புடன்
ஏ.சுகுமாரன்

annamalai sugumaran

unread,
Oct 8, 2008, 1:12:35 PM10/8/08
to minT...@googlegroups.com
அப்படியே அண்ணா !
எனக்கு வயது  59  உங்களுக்கு    60 சரிதானே !
2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Oct 8, 2008, 1:21:41 PM10/8/08
to minT...@googlegroups.com


2008/10/8 annamalai sugumaran <amirth...@gmail.com>

அப்படியே அண்ணா !
எனக்கு வயது  59  உங்களுக்கு    60 சரிதானே !
 
ஆமாம்.

Tthamizth Tthenee

unread,
Oct 9, 2008, 12:28:04 AM10/9/08
to minT...@googlegroups.com
என்னுடைய மாமனார் 80 வயது
என்னுடைய தகப்பனார் போன்று என் மேல் பாசம் காட்டியவர்
நானும்அவரை என் தகப்பனாராகவே அன்பு காட்டி வந்தேன்
என்னுடன் சீட்டு விளையடுவார், முக்கியமான நேரங்களில் ஆலோசனைகள் சொல்வார்,
உலகத்தில் உள்ள எதைபற்றிய சந்தேகம் கேட்டாலும்
கொஞ்ச்ம் அவகாசம் கொடுங்கள் என்று கூறிவிட்டு எங்கிருந்தாவது தகவல்களை திரட்டித்தருவார்
கடந்த 23ம் தேதி திடீரென்று அவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே சொன்ன வார்த்தை
 
மாப்பிள்ளை என்னால் மூச்சு இழுக்க முடியவில்லை
 
மூச்சு விட முடியவில்லை என்று சொல்லவில்லை
அதன் பிறகு எவ்வளவோ வைத்தியம் செய்தும் அவரால் மூச்சு இழுக்க முடியவில்லை,
 
கண்கூடாகப் பார்த்தவன் என்னும் முறையில்
நாம் ஆயிரம் பேசினாலும் ,ஆராய்ச்சி செய்தாலும்
ஒரு கணமும் தவறாது பரபஞ்ச நடவடிக்கைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதே உண்மை
நம்மால் எதையும் நிறுத்த முடியவில்லை
 
என் தாயார் கூறுவார்கள் சுமங்கலிப் பெண்கள் அந்தக் காலத்தில்
அதிகம் பூ வைத்துக் கொள்ளக் கூடாது, அதிகமாக மஞ்சள் தேய்த்துக் கொல்லக் கூடாது என்று
அதன் விளக்கமாக என் தாயார் கூறியது
 
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது
அவரவர்  எவ்வளவு பேச வேண்டும் ,எவ்வளவு உண்ணவேண்டும்
எவ்வளவு ஒவ்வொரு பொருளளயும்  உபயோகிக்கவேண்டும்  என்று
அதை சீக்கிறம் உபயோகித்து விட்டால் ஆயுள் முடிந்து விடும்
அல்லது அதை பயன்படுத்த முடியாமல் போய்விடும் என்று
 
ஆகவேதான் பெரியவர்கள் அதிகம் பேசுதல் ஆயுளுக்கு கேடு என்பர்
 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்று சொல்லி இருக்கிறார்கள்
 
அதை விட அதிசியம் என் மாமனார் வைஷ்ணவர்
ஆனால் அவர் இறக்கும் முன் கூறிய கடைசீ வார்த்தை
 
முருகா
 
எவ்வளவு அர்த்தம் நிறைந்திருக்கிறது இதில்
ஆச்சரியமாக இருக்கிறது
 
நாத்திகர்களிடம் நாம் அடிக்கடி சொல்லுவோம் உன் பாட்டன் மூச்சு விட்டான் ,இழுத்தானா ...?முடிந்ததா என்று
அதே போல என்னால் மூச்சு இழுக்க முடியவில்லை என்று என் மாமனார் கூறியது என்னை மிகவும் யோசிக்க வைத்தது
 
அவர் கடைசியாக என்ன வார்த்தை கூற வேண்டுமோ
கடைசியாக என்ன உண்ண வேண்டுமோ
கடைசியாக எவ்வளவு காற்றை இழுக்க வேண்டுமோ
 
அத்தனையும் கொஞ்சமும் பிசகாத கணக்கு போட்டு ஏற்கெனவே எழுதி வைத்த இறைவன்
எத்துணை  ஆச்சரியம்
 
அவனை ,அவன் புதிர்களை நாம் விடுவிப்பதென்பது  அத்துணை எளிதான காரியமா,
 
முயல்வோம் ப்ரபஞ்ச புதிர் விடுவிக்க
முயன்றால் முடியாதது இல்லை உலகில்
நம்பிக்கை கொள்வோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 


 
2008 அக்டோபர் 8 22:51 அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

Narayanan Kannan

unread,
Oct 9, 2008, 12:55:32 AM10/9/08
to minT...@googlegroups.com
2008/10/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> அதை விட அதிசியம் என் மாமனார் வைஷ்ணவர்
> ஆனால் அவர் இறக்கும் முன் கூறிய கடைசீ வார்த்தை
>
> முருகா
>


எய்ப்பு என்னைவந்து நலியும்போது
அங்குஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே!

இக்கட்டுரை இங்கு பொறுத்தமாக உள்ளது. வாசிக்க....

http://emadal.blogspot.com/2006/11/blog-post_25.html

க.>

N. Swaminathan

unread,
Oct 9, 2008, 2:06:55 AM10/9/08
to minT...@googlegroups.com

உயிர்கள் வாழும் காலம் மரபணுவாலும் சூழலாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மனித செல்களில் உள்ள மரபணுவின் அமைப்பு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மற்ற உயினினங்களின் மரபணுவும் ஆயப்பட்டு வருகிறது.

உயிரினத்தின் வாழ்வுக்காலத்தை நிர்ணயிக்கும் மரணுக்கள் உண்டா என்று ஆய்ந்து
வருகிறார்கள்.

காட்டாக சில ஆய்வுகள்.

பழங்களை மொய்க்கும் ஈயின் வாழ்வுக் காலம் 35 நாள். ஒரு குறிப்பிட்ட
சூப்பராக்சைடு டிஸ்ம்யூடேஸ் என்ற புரதப்பொருளுக்குக் காரணமான மரபணு மாற்றப்பட்டால்
அவை 70 நாள் வாழ்கின்றன.
இரண்டு வாரமே வாழக்கூடிய ஸி எலிகன்ஸ் என்னும் வட்டப்புழு, மரபணு மாற்றத்துக்குப் பிறகு
சிலமாதங்கள் வாழ்கிறது. இந்த மாற்றத்தால் செல் அழியாமல் காக்கும் ஒரு புரதப்பொருளின்
அளவு அதிகமாகிறதாம்.
குரோமோசோம்களின் முனைகளில் டெலோமியர் என்னும் பொருள் உள்ளது. ஒவ்வொரு முறை
செல் புதுப்பிக்கப்படும்போது அது நீளம் குறைகிறது. அதற்கு டெலோமெரேஸ் என்ற என்சைமே
காரணம். இந்த என்சைம்மை செயலிழைக்க வைத்தால் செல்லின் வாழ்நாள் கூடுகிறது.

உயிரின் பதிரை ஒருநாள் விஞ்ஞானம் விடுவிக்கும் என்று தோன்றுகிறது.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

----- Original Message -----
From: "Narayanan Kannan" <nka...@gmail.com>
To: <minT...@googlegroups.com>
Sent: Wednesday, October 08, 2008 2:12 AM
Subject: [MinTamil] Re: பிரபஞ்ச புதிர் !! -ஏ.சுகுமாரன்

Narayanan Kannan

unread,
Oct 9, 2008, 2:14:58 AM10/9/08
to minT...@googlegroups.com
மிக்க நன்றி சுவாமி:

இந்த நினைவுகள் பற்றி நான் முன்பு சொன்னதை வாழும் காலத்து நினைவு
மாற்றங்கள் அல்லது தொடர்ச்சி என்று சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அது புனர்ஜென்மம் பற்றி அல்ல. அறிவியல் இருப்புலகை மட்டுமே கணக்கில்
கொண்டு இயங்குகிறது. எனவே டார்வீனியன் பரிணாமத்தில் தேவர்கள் என்றொரு
இனம் கிடையாது.

நினைவுகள் புரதப்பொருளில் அடக்கம் கொள்ளலாமென நம்புவதால் ஒரு விலங்கையோ,
ஒரு மனிதனையோ (குறிப்பாக மூளைக்கறி சாப்பிடும் போது) உண்ணும் போது அவனது
நினைவுகள் பரிமாறப்பட வாய்ப்புள்ளது. எனவேதான் 700 கோடி மக்கள்
இந்தியாவில் சாத்வீக உணவு உண்கின்றனர். (அதிகமாக சிக்கன் 65
சாப்பிடுபவர்கள் கவனத்தில் கொள்க ;-)

நினைவுகள் தொடர்ந்து பரிமாற்றமடைவதை நம்மவர் "வாசனை" என்று குறிக்கலாம்.
இன்னும் யோசிக்க வேண்டும்!

கண்ணன்

2008/10/9 N. Swaminathan <nswami...@socal.rr.com>:

annamalai sugumaran

unread,
Oct 9, 2008, 11:48:04 AM10/9/08
to minT...@googlegroups.com

//மாப்பிள்ளை என்னால் மூச்சு இழுக்க முடியவில்லை
 மூச்சு விட முடியவில்லை என்று சொல்லவில்லை//

விடும் மூச்சு , திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் தான் நாம்
மூச்சை விடுகிறோம் .
யார் மேல் நம்பிக்கை ?
கரையே இல்லாத கடல் கரை தாண்டாது
நம்பிக்கையில் தான் நியதிக்கு உட்பட்டு
 இருக்கும் என்று தான் கடற்கரையில்
சென்று அமருகிறோம் .
 

//அதை விட அதிசியம் என் மாமனார் வைஷ்ணவர்
ஆனால் அவர் இறக்கும் முன் கூறிய கடைசீ வார்த்தை
 
முருகா
 
எவ்வளவு அர்த்தம் நிறைந்திருக்கிறது இதில்
ஆச்சரியமாக இருக்கிறது//
 
 
 

இதில் முக்கியமான சங்கதி ஒன்று இருக்கிறது .
இறக்கும் போது இறுதியாக எண்ணும் எண்ணமே
அவனின் அடுத்த பிறவியின் பிரதானமான
குறிக்கோள் ஆக இருக்கும் , விட்ட இடத்தில் இருந்து
தான் பிறவியின்  இழை தொடரும் .
ஆனால் இறுதியான எண்ணம் நமது
எண்ணப்படி வருமா என்பது நாம் வாழ்த்த வாழ்கையின்
பழக்கத்தை , பொறுத்தது .
கீதையிலும் எவன் என்னை நினைத்து கொண்டு
உயிர் துறக்கிறானோ அவன் பரமகதி
பெறுகிறான்  என உறுதியாக கூறுகிறார் .
இதற்குத்தான் உஷாரான ஆழ்வார் ஒருவர்
திரு கண்ணன் சுட்டிக்காட்டியபடி

//அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே//
என்று என்ன உரிமையுடன்
சுவாதினமாக முன்பே சொல்லிவிட்டேன்
என்று துண்டு போட்டு வைக்கிறார் பாருங்கள் .
இதுதான் பக்தி ..
அன்புடன் ,-
ஏ.சுகுமாரன்

 



Tthamizth Tthenee

unread,
Oct 9, 2008, 12:28:48 PM10/9/08
to minT...@googlegroups.com
எல்லோருக்கும் பொழுது விடிந்தது அவருக்கு மட்டும்
ஏன் பொழுது முடிந்தது
எல்லோரும் மூச்சை இழுத்து விடுகிறார்கள்
ஆனால் அவரால் மட்டும் இழுக்க முடியவில்லை மூச்சை
அது எதனால்...?
இந்த இரண்டிற்கும் நடுவில்தான் ப்ரபஞ்ச ரகசியமே இருக்கிறது
 
கடலும் கரை தாண்டும் சுனாமி வடிவில்

ஆக இன்னும் நமக்கு  தெளிவாகவில்லை முருகனும்,அரங்கனும்,
சிவனும் விஷ்ணுவும், கணபதியும், கஜமுகாசுரனும்,
ப்ரகலாதனும் ஹிரண்யனும், நரசிம்மமும், ராவணனும் ராமனும்,கிருஷ்ணனும்
ந்ரகாசுரனும், எல்லோருமே ஒன்றுதான் என்று
 
கடைசியில் யார் பெயரை சொன்னாலென்ன
அதற்கும் அடுத்த பிறவிக்கும் என்ன சம்பந்தம்
எப்போது அவன் பெயரை சொல்கிறோமோ, அதற்கும் பிறகு எதற்கு ஜென்மம்
பிறப்பு,,?
 
"கீதையிலும் எவன் என்னை நினைத்து கொண்டு
உயிர் துறக்கிறானோ அவன் பரமகதி
பெறுகிறான்  என உறுதியாக கூறுகிறார் .
இதற்குத்தான் உஷாரான ஆழ்வார் ஒருவர்
திரு கண்ணன் சுட்டிக்காட்டியபடி

//அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே//'

என் மாமனாரும் இப்போதைக்கப்போதே சொல்லி வைத்திருக்கலாம்

அரங்கத்தரவணைப் பள்ளியானை

அது அல்ல விஷயம்

எது பக்தி என்பது இங்கு விஷயமல்ல

எது  ப்ரபஞ்ச ரகசியம் என்பதே விசாரம்

மீண்டும் சொல்கிறேன்,
 
 
எல்லோருக்கும் பொழுது விடிந்தது அவருக்கு மட்டும்
ஏன் பொழுது முடிந்தது
எல்லோரும் மூச்சை இழுத்து விடுகிறார்கள்
ஆனால் அவரால் மட்டும் இழுக்க முடியவில்லை மூச்சை
அது எதனால்...?
இந்த இரண்டிற்கும் நடுவில்தான் ப்ரபஞ்ச ரகசியமே இருக்கிறது
 
இன்னும் ஆராய்வோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 

 

 

 

 

2008 அக்டோபர் 9 21:18 அன்று, annamalai sugumaran <amirth...@gmail.com> எழுதியது:

annamalai sugumaran

unread,
Oct 9, 2008, 12:46:01 PM10/9/08
to minT...@googlegroups.com

அன்புள்ள திரு சுவாமிநாதன் அவர்களே ,
தங்கள் பதிலுக்கு நன்றி !
நவ ராத்திரிக்கு சில கோயில் போயிருந்தேன்
எனவே பதிலுக்கு தாமதம்
எனது எண்ணங்களை எழுதுகிறேன்
இதற்க்கு நான் ஒன்றும் சொந்தக்காரன் அல்ல .
ஆனால் என்ன உள்ளது என எழுதுகிறேன்
இதனால் நான் பழமை வாதியும்
ஆகிவிட மாட்டேன் .
ஒப்பிடுவதால் ஒன்றும்
குறைத்து விடமாட்டோம்

//உயிர்கள் வாழும் காலம் மரபணுவாலும் சூழலாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மனித செல்களில் உள்ள மரபணுவின் அமைப்பு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மற்ற உயினினங்களின் மரபணுவும் ஆயப்பட்டு வருகிறது.

உயிரினத்தின் வாழ்வுக்காலத்தை நிர்ணயிக்கும் மரணுக்கள் உண்டா என்று ஆய்ந்து
வருகிறார்கள்.

காட்டாக சில ஆய்வுகள்.

பழங்களை மொய்க்கும் ஈயின் வாழ்வுக் காலம் 35 நாள். ஒரு குறிப்பிட்ட
சூப்பராக்சைடு டிஸ்ம்யூடேஸ் என்ற புரதப்பொருளுக்குக் காரணமான மரபணு மாற்றப்பட்டால்

அவை 70 நாள் வாழ்கின்றன.//

இதில் உயிர்கள் வாழும் காலம் மரபணுவாலும் சூழலாலும் என்பது தான் சிந்தனையை  தூண்டுகிறது .
சூழலை நிர்ணயிப்பதில்லே தான் ந்மது
பிரரர்தம் , சஞ்சிதம் வேலைசெய்ய்கிறது .
பிரரர்தம் என்பது நமது பரம்பரை கர்மம் ,
பாவ புண்ணியங்களின் மொத்த கணக்கு
நம்மாலும் , நமது முன்னோர்  மூலமும்
வரும் சுமை .
இதில் பாவத்தால் வரும் துன்பத்தையும்
புண்ணியத்தால் வரும் இன்பத்தையும்
தனித்தனியே அனுபவித்துதான் ஆகவேண்டும்
ஒன்றை ஒன்றில் கழிக்க இயலாது .
சஞ்சிதம் என்பது மீதி உள்ள இப்போதே
கழிக்க வேண்டிய சுமை , அது
அடுத்த பிறவிக்கு தொடராது .
இவையெல்லாம் நமது கர்ம வினையை பற்றியும்
நமக்கு நடக்கும் நமது சக்திக்கு மீறி நடக்கும்
செயல் களுக்கு நமது முன்னோர் கண்டால்
விடை , விஞானம் விரைவில் இதையும்
சரிபார்க்கும் .
மற்றொரு வினா ?
இந்த மரபணு மாற்றம் எப்படி நடக்கும் .
இதில் பழங்களை மொய்க்கும் ஈயின்
பங்கு எதாவது உண்டா ?
இதில் பங்கு இல்லாத போது
அதன் வாழ்நாளை நீடிப்பது
நமது சுயனலனுக்கா ?
அல்லது அது அதற்க்கு வரமா ? சாபமா ?
இதில் என்ன இயற்கையுடன்
நமக்கு போராட்டம் ?
வேறு யாராவது வெளியில் இருந்து
மாற்ற வேண்டும் என்றால் அது யார் ?
சூப்பராக்சைடு டிஸ்ம்யூடேஸ் என்ற புரதம
போல் மனிதருக்கு வாழ்நாள் நீடிப்புக்கு
வேண்டிய புரத செறிவுக்கு தான்
அமுதம் என்று பெயரா ?
நம்  முன்னோர் இதிலும் பலவேறு சிறந்த
ஆய்வுகளை நடத்யுள்ளனர் .
மரணமில்லா பெருவாழ்வு என வள்ளல் பெருமான்
மிக பெரிய விளக்கங்கள் கூறி உள்ளார் .
மரணமில்லா பெருவாழ்வு யோக முறையில்
சாத்தியம் என நிறுவி உள்ளனர் .
மேலும் வாழும் போது என்றும் இளமையை
இன்பமுடன் வாழவும் பல முறைகளை
யோகத்திலும் , வேறு மூலிகை பிரயோகத்திலும்
கண்டு அதை பயன் படுத்தியும் ,
காயகல்ப முறைப்படி இளமையுடன்
இன்புற்று இருந்திருக்கின்றனர் .
அவர்கள் கூறிய புரதம் நிறைத்த
நெல்லிகாய், கடுக்காய் முதலியவற்றின்
உண்மைகள் இன்று விஞான முறைப்படியும்
ஒப்புக்கொள்ள பட்டுள்ளது .
//இந்த என்சைம்மை செயலிழைக்க வைத்தால் செல்லின் வாழ்நாள் கூடுகிறது.//

நெல்லிகாய், கடுக்காய் , அமுரி , கிழாநெல்லி ,
இன்னும் எத்தனையோ , இவைகளை
ஆராய்தால் அது ஒரு தனி படலமாகும்
கயகல்பமும் , மரணமில்லா பெருவாழ்வுயும்
நம் சித்தர்களின் சீரிய சிந்தனையில்
ஆயிரகணக்கான ஆண்டுகளாய்
ஆய்வு செய்யப்பட்டு , பிரயோகத்தில் இருந்தது .
திருமூலர்   3000    ஆண்டுகள் வாழ்த்தார்
போகர்     2000       ஆண்டுகள் வாழ்த்தார்
இன்னும் பெரிய பட்டியலே தரமுடியும்
ஆனால் ஒப்புகொள்ள இன்னும் பல காலம்
நாம் பொறுத்திருக்க வேண்டும் .
இன்னும் சற்று சிந்திப்போம் .
அன்புடன் ,
ஏ.சுகுமாரன்
     

 


 

 

அன்புடன் ,-
ஏ.சுகுமாரன்

 



On 10/9/08, N. Swaminathan <nswami...@socal.rr.com> wrote:


உயிர்கள் வாழும் காலம் மரபணுவாலும் சூழலாலும் நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மனித செல்களில் உள்ள மரபணுவின் அமைப்பு இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மற்ற உயினினங்களின் மரபணுவும் ஆயப்பட்டு வருகிறது.

உயிரினத்தின் வாழ்வுக்காலத்தை நிர்ணயிக்கும் மரணுக்கள் உண்டா என்று ஆய்ந்து
வருகிறார்கள்.

காட்டாக சில ஆய்வுகள்.

பழங்களை மொய்க்கும் ஈயின் வாழ்வுக் காலம் 35 நாள். ஒரு குறிப்பிட்ட
சூப்பராக்சைடு டிஸ்ம்யூடேஸ் என்ற புரதப்பொருளுக்குக் காரணமான மரபணு மாற்றப்பட்டால்
அவை 70 நாள் வாழ்கின்றன.
இரண்டு வாரமே வாழக்கூடிய ஸி எலிகன்ஸ் என்னும் வட்டப்புழு, மரபணு மாற்றத்துக்குப் பிறகு
சிலமாதங்கள் வாழ்கிறது. இந்த மாற்றத்தால் செல் அழியாமல் காக்கும் ஒரு புரதப்பொருளின்
அளவு அதிகமாகிறதாம்.
குரோமோசோம்களின் முனைகளில் டெலோமியர் என்னும் பொருள் உள்ளது. ஒவ்வொரு முறை
செல் புதுப்பிக்கப்படும்போது அது நீளம் குறைகிறது. அதற்கு டெலோமெரேஸ் என்ற என்சைமே
காரணம். இந்த என்சைம்மை செயலிழைக்க வைத்தால் செல்லின் வாழ்நாள் கூடுகிறது.

உயிரின் பதிரை ஒருநாள் விஞ்ஞானம் விடுவிக்கும் என்று தோன்றுகிறது.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்




Narayanan Kannan

unread,
Oct 9, 2008, 7:50:06 PM10/9/08
to minT...@googlegroups.com
சுகுமாரன்:

புத்துயிராக்கம் என்பது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஆய்வு. வருகின்ற 20
ஆண்டு ஆய்வுத்திட்டம் என்பதில் சாவை எப்படித்தள்ளிப்போடுவது என்பதே
முன்னிலையில் நிற்கிறது கொரியாவில்.

இது குறித்த என் வலைப்பதிவு
http://emadal.blogspot.com/2008/08/blog-post_10.html

நம்ம சித்த மருத்துவம் இதற்கு உதவினால் இந்தியா 10 வருடங்களில் முதல் உலக
நாடாகிவிடும். வருமானமுள்ள ஆய்வு ;-)

அதிக ஆயுளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பது அடுத்த கேள்வி!!

"கண்ணில் தெரியுது வானம் அது கைவசமாகாதோ?" இதுவே அறிவியல் உந்துதல்.

கண்ணன்


2008/10/10 annamalai sugumaran <amirth...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Oct 9, 2008, 7:57:38 PM10/9/08
to minT...@googlegroups.com
2008/10/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

>
> எல்லோருக்கும் பொழுது விடிந்தது அவருக்கு மட்டும்
> ஏன் பொழுது முடிந்தது
> எல்லோரும் மூச்சை இழுத்து விடுகிறார்கள்
> ஆனால் அவரால் மட்டும் இழுக்க முடியவில்லை மூச்சை
> அது எதனால்...?
> இந்த இரண்டிற்கும் நடுவில்தான் ப்ரபஞ்ச ரகசியமே இருக்கிறது


சாவு மிக அருகிலிருக்கும் போது எல்லோரும் ஞானியாகிவிடுகிறோம் ;-)

ஆனால், கிரேக்கியம் முடிவதற்குள் 'சம்சாரி' ஆகிவிடுகிறோம் ;-)

புனரபி ஜனனம், புனரபி மரணம் - ஆயினும் சாவு குறித்த நம் உண்மையான அக்கரை என்ன?

மனித உயிர் மட்டும்தான் இங்கு முக்கியமா? இந்தியாவில் இப்போது மொத்தமே
500 கானமயில்களே உள்ளதாக விக்கிபீடியா சொல்கிறது. மனிதனின் இந்த அதீத
நுகர்தலுக்கு ஏதேனும் கட்டுப்பாடு உண்டா? Habitat destruction மூலம்
ஆண்டிற்கு ஆயிரம் உயிரினங்கள் அழிகின்றன. முன்பெல்லாம் கண் விழித்து
வீட்டிற்கு வேளியே வந்தால் சிவன் கோயில் மதிற்சுவரில் மயில்கள் கூவும்.
அது இப்போது வெறும் நினைவு.

உங்கள் கேள்வி ஆழமான கேள்வி!

க.>

Tthamizth Tthenee

unread,
Oct 10, 2008, 12:54:37 AM10/10/08
to minT...@googlegroups.com
ப்ரசவ வைராக்கியம் , குழந்தை பிறக்கும் போது அது தந்த வலியால்
அந்த நேரத்தில் கணவனைப் பார்த்தால் அவனை வெட்டிப் போட வேண்டும்  என்று நினைப்பாளாம் பெண் ,சிறிது நேரத்துக்குள் மனம் மாறி
தன் குழந்தையை கணவன் வந்து பார்க்க மாட்டானா, கொஞ்ச மாட்டானா
என்று ஏங்குவாளாம்,
 
ராமாயண வைராக்கியம்
 
ராமாயணம், மஹாபாரதம், போன்றவைகளை பௌராணிகர்கள் சொல்லும் போது அடடா நாமும் இது போல் நல்லவனாக சத்திய சந்தனாக வாழவேண்டும் என்று நினைப்பார்களாம்,
அடுத்து சில நொடிகளிலேயே
அவற்றை மறந்து இயல்பு நிலைக்கு திரும்பி
பழைய வாழ்க்கையே வாழுவார்களாம்
 
சாவு மிக அருகிலிருக்கும் போது எல்லோரும் ஞானியாகிவிடுகிறோம் ;-)
ஆனால், கிரேக்கியம் முடிவதற்குள் 'சம்சாரி' ஆகிவிடுகிறோம் ;-)
 
ஒவ்வொரு இறப்பை காணும் போதும் அதைப்பற்றிய ஆராய்ச்சி செய்யவேண்டும்  என்னும் ஆர்வம் , அந்த பூத உடல் கண்ணிலிருந்து மறைந்தவுடன்  நம் ஆராய்ச்சியும் மறந்து போகிறது
நமக்கிருக்கும்  அன்றாட கடமைகளுக்கு நடுவே
 
ஒரு சமையம் பார்த்தால்  மறதி ஒரு வரப்ரசாதமாக தோன்றுகிறது
மறு சமையம் அதே மறதி நம்மை எதையும் செய்ய வொண்ணாமல் தடுக்கிறது
 
இரண்டிற்கும் நடுவே நாம் ஊடாடிக் கொண்டிருக்கிறோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008 அக்டோபர் 10 05:27 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:

Narayanan Kannan

unread,
Oct 10, 2008, 12:58:17 AM10/10/08
to minT...@googlegroups.com
மிக அழகாகச் சொன்னீர்கள் :-)

க.>

annamalai sugumaran

unread,
Oct 10, 2008, 2:09:24 AM10/10/08
to minT...@googlegroups.com

//எல்லோருக்கும் பொழுது விடிந்தது அவருக்கு மட்டும்


ஏன் பொழுது முடிந்தது
எல்லோரும் மூச்சை இழுத்து விடுகிறார்கள்
ஆனால் அவரால் மட்டும் இழுக்க முடியவில்லை மூச்சை
அது எதனால்...?

இந்த இரண்டிற்கும் நடுவில்தான் ப்ரபஞ்ச ரகசியமே இருக்கிறது//
 


நமது இச்சையால் நாம் பிறக்கவில்லை .
நமது இச்சையாலும்  நாம் சாகவில்லை
வரும் போதே ரிடேர்ன் டிக்கெட் உடன் தான்
வருகிறோம் .அதுவும் தேதி
கண்பிர்ம்  ( confirm) ஆன டிக்கெட்

ந்மது உடலில் உள்ள முக்கிய  organs  ஆன
இதயம் , நுரையிரல் ,இரைப்பை ,சுரப்பிகள் ,
குடல் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை .
நாம் நினைத்து அதை நிறுத்துவதோ ,சரியாக இயங்க செய்வதோ
நம்மால் முடியாது .
சாவது மட்டுமே உலகின்  மிக முக்கிய உண்மை
அனைவரும் இதுவரை செத்தே இருக்கிறார்கள்
இந்த உலகத்துக்கே உரிய  பெருமை என்ன தெரியுமா? நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பதுதான்.  என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்(து)இவ் வுலகு''
அவரே சாவில்லாது அப்போ வாழ வழிஇல்லையா ?
என்ற வினாவுக்கு
"கூற்ற்ம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு ".
என்று யோகத்தின் வலிமை தவத்தால் வரும்
அறிவை கூறுகிறார் .

//ஆக இன்னும் நமக்கு  தெளிவாகவில்லை முருகனும்,அரங்கனும்,


சிவனும் விஷ்ணுவும், கணபதியும், கஜமுகாசுரனும்,
ப்ரகலாதனும் ஹிரண்யனும், நரசிம்மமும், ராவணனும் ராமனும்,கிருஷ்ணனும்

ந்ரகாசுரனும், எல்லோருமே ஒன்றுதான் என்று//

"ஒன்றே குலம் ஒருவனே தேவன் "
என்று அன்றே கூறிவிட்டார்
திருமூலர்    3000    ஆண்டுகளுக்கு
முன்னேயே .
 
//எப்போது அவன் பெயரை சொல்கிறோமோ, அதற்கும் பிறகு எதற்கு ஜென்மம்
பிறப்பு,,?//
 //எது பக்தி என்பது இங்கு விஷயமல்ல
எது  ப்ரபஞ்ச ரகசியம் என்பதே விசாரம்//
உண்மைதான் இது பக்தி  அல்ல .
இறைவனை உணர்த்து இடைவிடாது
அவனின் நாமத்தை ஜபம் செய்யது
இறைவன் வயமாகவே மாறினவர்களால் தான்
சாகும் போது வரும் வலி வேதனை
சமயத்திலும் நாமம் வரும்
எவருமே சாகும் போது நாத்திகனாக
சாவதில்லை ,சாகும் தருணத்தில்
அவன் ஞானி யாக மாறி ஆத்திகன்
ஆகிவிடுகிறான் .
உணர்த்து ,தன் வயனாகி அவன் பெயரை
கூறுவது அதனை எளிதல்லை
உங்கள் மாமனார் நிச்சயம்
மிக பாக்கியசாலி .
வெறும் நாமத்தை கூறினால் முக்தி என்றால்
இதை விட எளிய வழி என்ன உள்ளது ?.
எவ்வளவு பாபம் செய்தாலும் ,ஞாபகமாக
அவன் பெயரை கூறி முதி அடையலாமே ?
 
நான் கூறியது அவனது மிக வலிமையான
கடைசி எண்ணத்தின் படியே அவன் அடுத்த பிறவே அமையும்
என்றுதான் .
என்னசெய்வது
"கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் "

நான் பக்தி என கூறியது அந்த பாடலை "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அராங்கத்தரவனைப்பல்லியனே" எழுதியவரை பற்றி தான் .

மரணத்துக்கு சமீபத்திய அனுபவம்
அனேகமாக பதிவு செய்தவரை ஒத்துதான் உள்ளது .

//எல்லோருக்கும் பொழுது விடிந்தது அவருக்கு மட்டும்


ஏன் பொழுது முடிந்தது
எல்லோரும் மூச்சை இழுத்து விடுகிறார்கள்
ஆனால் அவரால் மட்டும் இழுக்க முடியவில்லை மூச்சை

அது எதனால்...?//

அவர் வந்த வேலை முடிந்து விட்டது
எனவே புறப்பட்டு விட்டார்
அடுத்த வகுப்புக்கோ , செக்ஷனுக்கோ
மற்ற படுவார் , அவர் இப்பிறவியில்
கற்ற பாடத்தை பொறுத்து .
அன்புடன்,
ஏ.சுகுமாரன்



Narayanan Kannan

unread,
Oct 10, 2008, 2:22:26 AM10/10/08
to minT...@googlegroups.com
2008/10/10 annamalai sugumaran <amirth...@gmail.com>:

> நமது இச்சையால் நாம் பிறக்கவில்லை .
> நமது இச்சையாலும் நாம் சாகவில்லை
> வரும் போதே ரிடேர்ன் டிக்கெட் உடன் தான்
> வருகிறோம் .அதுவும் தேதி
> கண்பிர்ம் ( confirm) ஆன டிக்கெட்
>

இது எதிர்வினையல்ல. ஓர் மாற்றுச் சிந்தனைக்கு (still I play the game of
a scientist :-)

நீங்கள் சொல்வது ஓர் இந்தியப் பார்வை. இது பற்றி முன்பு நாடி ஜோஸ்யம்
பற்றி எழுதியபோது (தமிழ்.வலை) அலசியிருக்கிறோம். இதை அறிவியல்
நம்புவதில்லை. காரணம்?

> ந்மது உடலில் உள்ள முக்கிய organs ஆன
> இதயம் , நுரையிரல் ,இரைப்பை ,சுரப்பிகள் ,
> குடல் எதுவும் நமது கட்டுப்பாட்டில் இல்லை .
> நாம் நினைத்து அதை நிறுத்துவதோ ,சரியாக இயங்க செய்வதோ
> நம்மால் முடியாது .


அமெரிக்காவிலிருக்கும் என் நண்பனுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல்
இழந்த போது மாற்று வைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறான். இப்போது அவையும்
செயலிழந்துவிட்டன. இன்னொரு மாற்றுக்குக் காத்திருக்கிறான். மூளை தவிர
எல்லாவற்றையும் மாற்றிவிட முடிகிறது இப்போது (குழாய்க்குழந்தை பற்றி
கல்லூரியில் எழுதியது நினைவிற்கு வருகிறது!)

மீண்டும் ever flexible கன்மவினை, பிற வாதங்கள் கொண்டு இதற்கு
இந்தியமுறையில் விளக்கம் சொல்லமுடியும்.

அறிவியலில் ஒரு சோதனை உலகின் வேறெங்கு இருந்தாலும் செயல்பட வேண்டும்.
அப்போதுதான் ஏற்றுக்கொள்ளப்படும்.

நம் வாதங்கள் அனைத்தும் அடங்குவது சாஸ்திரப் பிரமாணம். கப்சிப் காராவடை ;-)

க.>

Tthamizth Tthenee

unread,
Oct 10, 2008, 4:13:34 AM10/10/08
to minT...@googlegroups.com
உடலுறுப்புகளுக்கு மாற்று ஏற்பாடு விஞ்ஞானத்தால்
செய்யமுடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்
 
உயிருக்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா
என்பதே நம் ஆராய்ச்சி
உயிர் போவதைக்கூட சற்று நேரம் தள்ளிப் போடுகின்றனர்,
பிறக்கும் நேரத்தையும் அருவை சிகிச்சையால் நேரம் மாற்றுகின்றனர்
 
 
ஆனால் நிரந்தரமாக உயிர் பிரிவதை தடுக்க முடியவில்லை
(Lichard)   பல்லியை ஆராய்ந்தால் உறுப்புகள் மீண்டும் வளர வகை செய்ய முடியும் என்று தோன்றுகிறது
எதை ஆராய்ந்தால் மீண்டும் உயிர்ப்பிப்பதை, அல்லது உயிர் போவதை தடுக்கும் வழியைக் கண்டு பிடிக்க முடியும்....?
 
உயிர் போவதைத் தள்ளிப் போட்டாலும்  மற்ற உறுப்புகள் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை, முழு இயக்கத்தையும் பழையமாதிரி இயங்கவைக்க முடியுமா என்பதே  புதிர்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
008 அக்டோபர் 10 11:52 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:

Narayanan Kannan

unread,
Oct 10, 2008, 4:21:57 AM10/10/08
to minT...@googlegroups.com
என்ன சார் இப்படி அவசரப்பட்டா எப்படி? ;-)

ஐன்ஸ்டைன் வாசகம் வாசித்தீர்கள்தானே!

இறைவன் எதையும் நம்மிடமிருந்து ஒளிப்பதில்லை. மெல்ல, மெல்ல அறிவோம்.

சித்தர்கள் செய்தது தனிமனித முயற்சி. அறிவியல் செய்வது பொது மனித வளர்ச்சி.

அறிவில் வெல்லும்! அதுவே இறைவனின் விருப்பமும்.

கண்ணன்

2008/10/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Oct 10, 2008, 4:30:11 AM10/10/08
to minT...@googlegroups.com
ஹஹஹஹ்யஹ்
 
எனக்கென்ன அவசரம்
மனிதன் ஓளித்து வைத்தாலே நம்மால் கண்டு பிடிக்க அவகாசம் தேவைப்படுகிறது
 
இறைவன் ஒளிர்ந்து வைத்த  ப்ரபஞ்ஞ புதிரை விடுவிக்க
அவசரப்பட முடியுமா
 
இறைவன் நம் மூளையில் எல்லாப் புதிரையும் விடுவிக்கும் அளவுக்கு
சக்தி அளித்திருக்கிறான்
 
நிச்சயம் கண்டு பிடிப்போம்
அதுதானே வாழ்வின் சுவை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008 அக்டோபர் 10 13:51 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:

Narayanan Kannan

unread,
Oct 10, 2008, 4:43:52 AM10/10/08
to minT...@googlegroups.com
மீண்டும் மிக அழகான பார்வை! விளக்கம்.

எங்கள் அம்மாவிற்கு 8 பிள்ளைகளாம். நான் எட்டாவது என்பதால் கண்ணன். 6தான்
தங்கினோம்.
எங்கள் சித்திக்கு 6 பிறந்து இரண்டுதான் தங்கியது.
60களில் கூட இந்திய life expectancy 50ஐத்தாண்டவில்லை. இப்போது 60க்கு
வந்திருக்கிறது. அமெரிக்காவில் பல ஆயிரம் நூற்றாண்டுக்கிழங்கள்!!
எம்.ஜி.ஆர் மதிய உணவுத்திட்டம் ஆரம்பித்த பிறகு தமிழக ஜனத்தொகை வளர்ச்சி
நின்று இருக்கிறது. படித்த குழந்தைகள் பெரிவளாகி, குடும்பக்கட்டுப்பாடு
செய்து கொண்டதால்!

இவையெல்லாம் எப்படிச் சாத்தியம்? அறிவியல்..அறிவியல்.

2020 மனித வயது 200 எட்டும் என்பது ஓர் கணக்கு (உங்களைப்பாத்தா யாராவது
60 வயசுன்னு சொல்லுவாங்களா?)

மனிதர் சாவின்றி வாழ்வான் என்பதொரு அறிவியல் ஹேஷ்யம்!! நம் தலைமுறையில்
கூட அது நடந்துவிடலாம்!!

என்னைப் பொறுத்தவரை ஒரே வேண்டுதல். அதை எம் முதல்தாய் சடகோபனே சொல்லட்டும்!

நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு
அதுவே வீடு வீடாமே!!

இதுவே அறிவியல் தரும் மரணமில்லாப் பெருவாழ்வின் வீடாக அமைய வேண்டும்!
அதுவன்றி, பிணியும், பீடையும், வறுமையும், வன்முறையும் உள்ள உலகில்
மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று என்ன பயன்?

கண்ணன்

>> peopleof...@gmail.com

--
"Be the change you wish to see in the world." -Gandhi

Hari Krishnan

unread,
Oct 10, 2008, 5:28:15 AM10/10/08
to minT...@googlegroups.com


2008/10/10 Narayanan Kannan nka...@gmail.com


மனிதர் சாவின்றி வாழ்வான் என்பதொரு அறிவியல் ஹேஷ்யம்!! நம் தலைமுறையில்
கூட அது நடந்துவிடலாம்!!
 
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது...
 
(போனால் போகட்டும் போடா...--கண்ணதாசன்)
 
சாவே இல்லாத வாழ்வு என்பதே பெரிய நரகம் கண்ணன் சார்!


--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Oct 10, 2008, 5:42:34 AM10/10/08
to minT...@googlegroups.com
2008/10/10 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> சாவே இல்லாத வாழ்வு என்பதே பெரிய நரகம் கண்ணன் சார்!
>

நானும் அவ்வாறே எண்ணுகிறேன். இது குறித்த ஓர் அறிவியல் நேர்காணலை நான்
முன்பு வாசித்ததுண்டு. பல அறிவியலார் மரணத்தை வரவேற்றே உள்ளனர். ஆனாலும்
பலர் முரண்டு பிடித்துக்கொண்டு உள்ளனர்.

மரணம் என்பது பார்வை சார்ந்தது.

உதாரணமாக, மரணம் தனிநபருக்கு ஏற்படுகிறது, ஆயின் உயிர்மை வாழ்கிறது.
தனிமனித நினைவுகள் அழிகின்றன, சமூக நினைவுகள் வாழ்கின்றன.

என்னைப்பொருத்தவரை மரணமில்லா வாழ்வு என்பது கூட ஓர் persepectiveதான்.

எல்லோரும் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளோம். என் பெண் பிறந்தவுடன்
எங்கள் அம்மா கனவில் வருவது நின்றுவிட்டது என்றாள் அக்கா. பொருள் அம்மா
மீண்டும் பிறந்துவிட்டாள் என்று பொருள். என் பெண் எனக்கு இப்போ அம்மா +
பெண். இது எவ்வளவு பெரிய வரம்!!

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Oct 10, 2008, 10:52:20 AM10/10/08
to minT...@googlegroups.com
எனக்குத்தெரிந்து பல பெரியவர்கள்
நிறைய சொத்துக்கள் இருந்தும், உறவினர்கள் இருந்தும்
மனதுக்கு நெருக்கமாக, ஆந்ரீகமாக, ஒருவர்கூட இல்லாத காரணத்தால், மேலும்  நோய்களின் காரணங்களாலும் , எதற்கு இந்த வாழ்வு ,இறந்து விடலாமே என்று தினமும் இறைவனை மனமாற வேண்டிக் கொண்டும்
ஆயுசு முடியாமையினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
 
அவர்கள் அனைவரும் ஏறிப்போக ஏணியா இருக்கிறது என்று சலித்துக் கொள்வதை கேட்டிருக்கிறேன்
ஆக இறப்பும் நம் கையில் இல்லை பிறப்பும் நம் கையில் இல்லை
பிறப்பு வரமோ இல்லையோ இறப்பு நிச்சயம் ஒரு வரம்தான்
 
சூரியனுக்கு ஒரு ஏணி அமைத்தேன்
ஓர் சுற்றுலா வரலாமென்று
ஒப்பற்ற ஏணி,உத்தமமான  ஏணி
உதவப் போகும் ஏணி, உயரமான ஏணி 
நினைத்தவுடன் ஏறிப்போக 
ஏணியா இரூக்கிறது
என்ற எத்தனையோ பேர்
ஏக்கத்துக்கு  வடிகாலாய்
அத்தனைபேரின் துயர் துடைக்க
முத்தான  வழி கண்டேன்
முடிவு செய்தேன் ஓர் ஏணி அமைக்க
தம்மையே நம்பாதவர்கள்கால் ஏணி ஏறினர்
அடுத்தவரை நம்பாதவர்கள் அரை ஏணி ஏறினர்
அரைமனதுக் காரர்கள்
முக்கால் ஏணி ஏறினர்
முழுவதும் ஏறியவர்கள் கெட்டிக்காரர்கள்
திரும்ப வந்து
பதில் சொல்லவில்லை
இப்போது என்ன செய்வது
ஏணியை எடுத்து விடலாமா ?
இருக்கட்டுமென்று விட்டுவிடலாமா?
அரைகுறை கண்டுபிடிப்பாளனா நான்
இல்லை இல்லை........
ஏணியிருந்தாலும் தோணியிருந்தாலும்
முறையாய் உபயோகிக்க 

தேவை ஞானத் தோணி
ஞான  ஏணி,
உணர்த்துவதற்கு ஒரு  ஞானி...........
                
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 
இயற்கை

 

 

ஒன்பது வழிகள் வைத்தான் உடல்விட்டு உயிர் போக

 

ஒரு வழியும் வைக்கவில்லை உயிர் வந்து உடல் சேர

 

இறைவனிடம் நான் கேட்டேன்  இது என்ன ஓர வஞ்ஞனை ?

 

அவனளித்தான் பல பதில்கள் அத்தனையும் புரியவில்லை

 

ஆனாலும் ஒரு பதில் ஓரளவு புரிந்ததெனக்கு

 

ரகசியமாய் முணுமுணுத்தான் என் காதில் மட்டுமதை

 

இயற்கையின் சாகசமே அதிலிடங்கும் அதிசயமே

இயற்கையை வெற்றி கொள்ள என்னாலும் முடியவில்லை

இயற்கைதான்  கடவுள்  ,நான் கூட அதன் பிடியில்

தவிக்கிறேன் மீளாமல்

சொன்னால் நம்ப மாட்டாய்

ஒரே ஒரு முறை விதைத்தேன் ப்ரபஞ்ஜம் வளர்ந்தது

 

பல முறை அழித்துப் பார்த்தேன்   உஹூம்  ஒன்றுமே

பலனில்லை இனி இப் ப்ரபஞ்ஜம் நானே நினைத்தாலும்  அழிக்க முடியாது ,இயற்கையை வெல்ல என்னாலும்   முடியவில்லை !!!!!!!  

நீ கேட்ட கேள்விக்கு விடை தெரியுமா  உனக்கு  ?

கேள்விகள் கேட்பது சுலபம்

உயிர் வந்து உடல் சேர ,இயற்கையை வெற்றி கொள்ள

வழி எதேனும் இருக்கிறதா ?

என்னைக் கேட்டான் இறைவன்

 

என்ன ப‌தில் நான் சொல்ல‌   ?

உங்க‌ளுக்கு தெரிந்தால் ரகசியமாய் என்னிட‌ம்

சொல்லுங்க‌ள்

அவனிடம்  சொல்லுகிறேன்  நான் .. .. ...!!!!!!!!

 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2008 அக்டோபர் 10 15:12 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:
தமிழ்த்தேனீ
Lader For sun.jpg
It is loading more messages.
0 new messages