சென்னை சங்கமம் கலை விழாவை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
சென்னை சங்கமம் கலை விழாவின் தொடக்கமாக இங்கு நடத்தப்பட்ட ஞாயிறு போற்றுதும் கலை நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் பாரம்பரிய கலாசாரத்தை புதிய தலைமுறையினருக்கு அவர்களில் சிலரைக் கொண்டே பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அனைவரின் பாராட்டுக்கும் உரியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடக்க விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சித்தரிக்கும் விதத்தில் பல்வேறு வகை நிகழ்ச்சிகளை ஒரே நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கி இருப்பது சிறப்பாக அமைந்துள்ளது.
இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய இசையான தப்பாட்டம் இடம் பெற்றிருந்தாலும் ஆட்டம் சரியான ஆட்டமாகவே அமைந்திருந்தது.
நமது பண்பாடு, கலை, கலாசாரம், இலக்கியம், வரலாறு, இன எழுச்சி ஆகியவை இதன் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
எனக்கு யோகா கற்றுக் கொடுக்க வந்த தேசிகாச்சாரியார் "நாராயண நமஹ" என சொல்ல சொன்னார். வட மொழியில் அமைந்துள்ள அந்த வார்த்தைகளை உச்சரிப்பதற்கு பதிலாக "ஞாயிறு போற்றுதும்" என்ற வார்த்தைகளை உச்சரிக்கலாமா என்று கேட்டேன்.
அவரும் அதற்கு ஒப்புக்கொண்டார். பின்னர் ஒரு முறை வட மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு தேசிகாச்சாரியார் யோகா கற்றுக் கொடுக்கும் போது "நாராயண நமஹ" வார்த்தைக்கு பதிலாக "ஞாயிறு போற்றுதும்" வார்த்தைகளை பயன்படுத்தியதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இப்படியாவது சிலப்பதிகாரத்தின் புகழ் வெளி மாநிலங்களில் பரவுகிறதே என்ற மகிழ்ச்சி எனக்கு.
சென்னையில் 2-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழா இனி ஆண்டுதோறும் நடைபெற வேண்டும்.
தமிழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட புலவர்கள் ஆராய்ந்து தை மாத முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என கண்டுபிடித்துள்ளனர். இதை ஏற்று, தை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.
கலைஞர் யோகா கற்றுக் கொண்டார் என்றும், அப்போது "நாராயண நமஹ" என்று சொல்ல
வேண்டி வந்தது என்பதும் எனக்குப் புதிய சேதி!! ஞாயிறு போற்றுதும்
என்றாலும் அது நாரண வழிபாடே! ஸ்ரீராமாயணத்தில் ஸ்ரீராமருக்கு அகத்தியர்
சொன்னதாக வரும் 'ஆதித்யஹிருதயத்தில்' கதிரவனை 'சூர்யநாராயணன்' என்றுதான்
அகத்தியர் விழிக்கிறார். கருணாநிதி என்றாலே அது இராமனையே குறிக்கும்.
கலைஞர் முன்பொரு பேட்டியில் ஆழ்வார்களைப் பற்றிச் சொல்லும் போது
"ஆழ்வார்கள் எம் நெஞ்சை ஆள்பவர்களே!" என்று சொல்லியிருக்கிறார்.
கண்ணன்
> முதலமைச்சர் செய்வதால் யோகா,முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாகிவிடும்!
> அதிமுகவும் மற்ற கழங்களும்,ஒரு வேளை "தாய்.சீ"யை இறக்குமதி
> செய்யவேண்டியிருக்கும்!
> Yoghurt - Yoga + Heart - யோகர்ட் என்றாகித் தயிர்சாதம்,யோகிகளுக்கு
> பராசதமாகிவிடும் போலும்!
>
ஹா! ஹா!!
>
> ஒய்வில் நாம் பழந்தமிழில் தோய்வது என்றாலும்,வாழும் நாட்டின் வாழ்க்கைச்
> சூழல்களை நுண்ணிய தகவல்களோடு நூதனமாக வரைந்து காட்டும் முனைவர் நாராயணன் கண்ணன்
> அவர்களின் பார்வையும்,எழுத்தோவியமும் "உதிர் இலை கால"த்தில் பக்கந்தோறும்
> பளிச்சிடுகின்றன. இவ்வாறு தான், தமிழுக்குப் புது வரவு சேர்க்கமுடியும்.
மிக்க நன்றி. ஒரு காலத்தில் மாய்ந்து, மாய்ந்து எழுதியதுண்டு.
இலக்கியத்தில் தோய்ந்திருந்த என்னை சமூக சேவகனாக மாற்றிய புண்ணியம்
திருமிகு.சுபாஷிணியைச் சாரும் :-) இப்போது இலக்கியம் செய்யவே நேரமில்லை
:-(
கண்ணன்! உதிர் இலை காலம் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து
கொள்ளுங்களேன். அதை நான் என் வலைப்பதிவில் இட்டுவிடுகிறேன். நன்றி.
கண்ணன்
ஆராய்ந்து தை மாத முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என கண்டுபிடித்துள்ளனர். இதை ஏற்று, தை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.
ஆராய்ச்சிகளுக்கு பின் முடிவுக்கு வருவது ஒரு ரகம். முடிவை வைத்துக்
கொண்டு ஆதாரங்களைத் தேடி ஆய்வு நடத்தி அறிவிப்பது புது ரகம். :-)
இன்று பொதுவாகவே பின்னதுக்கே அதிக மவுசு இருக்கு ;-)
தமிழகத்திலேயே தலையாய பிரச்சினை இதுதானோ?
திவா
2008/1/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
> தை முதல்நாளை புத்தாண்டு பிறப்பாக வைப்பதில் யாருக்கு என்ன பிரச்சனை?
>
> உலகம் சுழல்வது சுலொ ஆகிடுமா?
--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
சித்திரையே இருந்துவிட்டால் யாருக்கு என்ன பிரச்சினை? உலகம் சுத்துவது
வேகமாகி விடுமா?
தமிழகத்திலேயே தலையாய பிரச்சினை இதுதானோ?
திவா
2008/1/11 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com >:
> தை முதல்நாளை புத்தாண்டு பிறப்பாக வைப்பதில் யாருக்கு என்ன பிரச்சனை?My blogs: http://nallaseithi.blogspot.com/
>
> உலகம் சுழல்வது சுலொ ஆகிடுமா?
--
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
விடை காணமே!
திவா
> 2008/1/11 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:
>
>
> > சித்திரையே இருந்துவிட்டால் யாருக்கு என்ன பிரச்சினை? உலகம் சுத்துவது
> > வேகமாகி விடுமா?
விடை காணமே!
திவா
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
01. | சித்திரை | Chiththirai | mid-April to mid-May | சுறவம் | Suravam | mid-January to mid-February |
02. | வைகாசி | Vaikaasi | mid-May to mid-June | கும்பம் | Kumbam | mid-February to mid-March |
03. | ஆனி | Aani | mid-June to mid-July | மீனம் | Meenam | mid-March to mid-April |
04. | ஆடி | Aadi | mid-July to mid-August | மேழம் | Mezham | mid-April to mid-May |
05. | ஆவணி | Aavani | mid-August to mid-September | விடை | Vidai | mid-May to mid-June |
06. | புரட்டாசி | Purattaasi | mid-September to mid-October | ஆடவை | Aadavai | mid-June to mid-July |
07. | ஐப்பசி | Aippasi | mid-October to mid-November | கடகம் | Kadakam | mid-July to mid-August |
08. | கார்த்திகை | Kaarththigai | mid-November to mid-December | மடஙகல் | Madangal | mid-August to mid-September |
09. | மார்கழி | Maarkazhi | mid-December to mid-January | கன்னி | Kanni | mid-September to mid-October |
10. | தை | Thai | mid-January to mid-February | துலை | Thulai | mid-October to mid-November |
11. | மாசி | Maasi | mid-February to mid-March | நளி | NaLi | mid-November to mid-December |
12. | பங்குனி | Panguni | mid-March to mid-April | சிலை | Silai | mid-December to mid-January |
ஆதாரம்?
//தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும்
உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு
வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது. //
இது அறிவியல் ரீதியாக தவறு.
வானியல் ரீதியாக கொள்வதானால் சித்திரை நக்ஷத்திரத்துக்கும்
வருடப்பிறப்பிற்கும் சம்பந்தம் உண்டு. விளக்கம் வேண்டினால் ஆங்கில
விக்கிபீடியா பார்க்கவும்.
//சித்திரை என்பபது விக்கிரமாதித்தன் பிறந்த நாளைக் குறிக்கிறது.. அவனின்
பிறந்த நாளை, தமிழன் ஏன் குறிப்பிட, கொண்டாட வேண்டும்.?//
ஹாஹாஹா
ஆராய்ச்சியாளரே! விக்கிரம ஆண்டு கணக்கு சந்திரன் கதியை ஒட்டி வருவது.
சித்திரை முதல் மாதமாக கொண்ட புழக்கத்தில் இருக்கும் புத்தாண்டு சூரிய
கதியை அடிப்படையாக கொண்டது.
திவா
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60604141&format=html
திவா
"தூரத்தில் நெருப்பை வைத்து சாரத்தைத் தருகின்ற' சூரியக் கடவுளுக்கு புதுப்பானை வைத்து, மஞ்சளும், இஞ்சியும் சேர்த்து மங்கல நாணைக் கட்டி, பாலையும் பச்சரிசியையும் பக்குவமாய் கூட்டி, கரும்புத் தோரணத்தின் கீழ், சூரியக் கதிர் படும் இடத்தில் வெட்டவெளியில் உற்றார் உறவினர் புடைசூழ பொங்கலிட்டு மகிழும் நன்னாளே பொங்கல் திருநாள்.
தென்னாட்டில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் சூரியன், வடக்கு நோக்கி நகர்ந்து அங்கு குளிரில் வாடும் வடவர்களின் வாட்டத்தைப் போக்கத் தொடங்கும் (உத்தராயண) முதல் நாள்.
சூரியனுக்கும், சூரியனின் துணையோடு குலம் விளங்க அரிசி, காய்கறி, பழங்களைச் சாகுபடி செய்து தரும் தலைமகன்களாம் உழவர்களுக்கும், அந்த உழவுத்தொழிலுக்கு உற்ற துணையாக விளங்கும் ஆவினங்களுக்கும் ஒருங்கே நன்றி பாராட்டும் ஒப்பற்ற திருநாள்.
பொங்கலிடவும், அந்தப் பால் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று உற்சாகக் கூச்சலிடவும், பொங்கிய பொங்கலை உற்றார் -உறவினர், நண்பர்களுடன் பகிர்ந்து உண்ணவும் தமிழர்கள் ஒதுக்கிக் கொண்டுள்ள நன்னாள்.
புத்தாடை அணிந்து, புது நகைகள் பூட்டி, எந்தத் திசையில் திரும்பினாலும் உற்சாகமும் உயிர்த்துடிப்புமாய் தமிழ் இனம் மகிழும் நாள் பொங்கல்.
பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. சங்கமம் என்ற சிறப்புக்கலை நிகழ்ச்சிகள் அவற்றில் குறிப்பிடத்தக்கது. அத்துடன் பொங்கல் கவியரங்கம், பட்டிமன்றங்கள், சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்க நாட்டிய விழா, சிறப்பு இசை நிகழ்ச்சி என்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சமத்துவப் பொங்கல்: முதல்வர் அறிவித்தபடி அரசு அலுவலகங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் சமத்துவப் பொங்கல் தினம் வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது. கரும்பு, வாழை, மஞ்சள், இஞ்சி, பச்சரிசி, பால் என்று அதிகாரிகளும் வாங்கிவந்து பொங்கல் சமைத்து அனைவருடனும் பகிர்ந்துகொண்டிருப்பது உண்மையிலேயே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற மதப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மதத்தவரும், சாதிகளைச் சேர்ந்தவர்களும் தமிழர்கள் என்ற ஒரே இனமாய் திரண்டு கொண்டாடி மகிழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு இருவேறு முக்கியத்துவங்களும் இருக்கிறது. ஒன்று இனிப்பானது, மற்றொன்று (இன்றுவரை) கசப்பானது.
தை மாத முதல் நாளையே இனி திருவள்ளுவர் ஆண்டின் முதல் நாளாகக் கொள்ளலாம் என்ற முடிவு இனிப்பானது. அந்த முயற்சி தொடர்ந்து மக்களிடையே பழக்கத்துக்குவந்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டு: தமிழ் இனத்துக்கே தனிச் சொத்தான காளையை அடக்கும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது கசப்பான செய்தி. அத் தடையை நீக்க தமிழக அரசின் சார்பில் மனுச் செய்யப்பட்டிருக்கிறது. தமிழர்தம் மனம் குளிரும் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
வாழ்த்து அட்டைகள் மூலம் பொங்கல் வாழ்த்தை அனுப்பிய காலம் மாறி, வீதியில் வண்ணக் கோலம் மூலம் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பழக்கம் தமிழ்நாடு முழுக்க பரவியிருக்கிறது. இனி தமிழர்தம் வாழ்வில் ஒற்றுமையும் ஆக்கப்பூர்வ செயல்களும் அதிகரிக்க பொங்கல் திருநாள் வழிகோல வேண்டும்.
இங்குள்ள தமிழர்கள் மட்டும் அல்ல ஈழம், மலேசியா போன்ற வெளிநாட்டுத் தமிழர்களும் இனிதாக வாழும் வழி ஏற்படட்டும்.
நன்றி: தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080114111543&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல் அணுகுமுறையில் தமிழ்ச் சொற்கள் எவ்வாறு உருவாகின்றன, எந்தெந்த இடத்தில் எந்தெந்த வகையில் அவை அமைகின்றன என்ற பல்வேறு பொருள்களை இந்த நூல்கள் விவரிக்கும். ஆய்வாளர்கள், மொழியியல் வல்லுநர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவும்.
மேலும் இச்செய்தியைப் பார்க்க,நன்றி - தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNM20080114130520&Title=Chennai+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist =
இந்தச் 'சங்கமம்' நிகழ்ச்சி பற்றி புகைப்படங்களோ அல்லது வீடியோப் படங்களோ
(YouTube) இருந்தால் அனுப்பி வைக்கவும்!!
பொங்கலோ பொங்கல்!!
கண்ணன்
2008/1/11 Kannan Natarajan <thar...@gmail.com>:
> தை மாத முதல் நாளை தமிழ் புத்தாண்டாக விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர்
> கருணாநிதி தெரிவித்தார்.
>
> சென்னை சங்கமம் கலை விழாவை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
>
நாம் கிழக்கேதான் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது.
நெல் ஆசியப்பயிர். கன்னலும் ஆசியப் பயிராக இருக்க வாய்ப்புண்டு.
கண்ணன்
2008/1/15 Kannan Natarajan <thar...@gmail.com>:
> வணக்கம்,
>
> கரும்பு,இஞ்சி,மஞ்சள் இவை எந்த நாட்டில் முதலில் பயிராக விளைந்தன? அதியமான்
> மரபினர் கரும்புப் பயிரை வேறெங்கிருந்தோ கொண்டுவந்ததாக ஒளவையார் பாடியுள்ளாரே!
>
> அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - புறம் 99 & 392
>
கன்னல் திராவிடப் பயிர் இல்லை என்று சொல்கிறது கீழுள்ள கட்டுரை:
SUGARCANE : HISTORY : IN THE WORLD
Sweetness which came from Asia
The word from which the name sugar originated is, probably, "grain",
"sarkar", in Sanskrit.
In the eastern part of India, sugar was called "shekar", while the
Arab people knew it as "al zucar", which was transformed into the
Spanish "azucar", and from there, to "açúcar", in Portuguese.
In France, sugar is called "sucre" and, in Germany, "zucker", and from
there into English "sugar".
An extremely controversial subject is that of defining how long
sugarcane has been present in the world - between 12,000 years and
6,000 years. The place in which the plant germinated for the first
time is also unknown, due to the quantity of hybrid Gramíneas that
exist and the lack of documentation certifying its origin.
One line of researchers considers that sugarcane first grew in
Polynesia; some risk Papua New Guinea as the cradle of the Gramínea.
Scholars who admit that cane was known 6,000 years ago indicate
Indonesia, the Philippines and North Africa as natural expansions in
the 2000 years after the plant was first recorded.
The majority of historians, however, accept the theory that sugarcane
appeared between 10,000 and 12,000 years ago and set the date of 3000
B.C. for cane to have traveled from the Malaysian Peninsula and
Indochina to the Bay of Bengal.
But there is one fact about which all historians agree: sugarcane's
Asian origin.
It was introduced into China in about 800 B.C. and raw sugar was
already produced in 400 B.C. However, it was only from 700 A.D. that
it began to be traded. There are reports of its westward expansion,
reaching India and Persia, which date from 510 B.C., from the Persian
military expedition by Emperor Darius to India. The cane and its sweet
juice were kept secret, because the product from the plant was rare
and luxurious, principally for the people removed from the trade among
the Asians.
In 327 B.C., Alexander "The Great" had witnessed the consumption of
cane in India. His admiral, Nearchos, said that he had found " a cane
which made honey without bees", and scribes observed the Indians while
they chewed the Gramíneae. Theopharstus, in 287 B.C., described the
marvel as " Honey that is in a staff ".
நன்றி: http://www.unica.com.br/i_pages/cana_historia_mundo.asp
>கிழக்காசிய நாடுகளின் பெயர்களை சங்ககாலத்தினர் எப்படி
> வழங்கினர் என்று தெரியவில்லையே!
>
சங்காலத்திற்கு ஏன் போக வேண்டும். ஆழ்வார்கள் காலத்தில் எப்படி
வழங்கினர்? உலகின் ஆகப்பெரிய திருமால் கோயில் கம்போடியாவில்
அங்கோர்வாட்டில் இருக்கிறது. ஆழ்வார்கள் அதைப் பாடாமல்
இருந்திருப்பார்களா? அப்படியெனில் என்ன பெயர் சொல்லி அந்நாட்டை
அழைத்தனர்? "கம்போஜம்" "கம்போசம்" ? அப்படியொரு சொல்லாட்சி ஆழ்வார்
பாடல்களில் இருக்கிறதா?
சங்கத்தவர் ரோம, கிரேக்க நாடுகளை எப்படி அழைத்தனர்? "பட்டுப்பாதை"
பன்னெடுங்காலமாக இந்தியாவை கிழக்கு, மேற்கு என்று சேர்கிறது!
கண்ணன்
Silappathikaram also mentions only Yavanar
narasiah
2008/1/17 Kannan Natarajan <thar...@gmail.com>:
கண்ணன்
____________________________________________________________________________________
Never miss a thing. Make Yahoo your home page.
http://www.yahoo.com/r/hs
தமிழ் மாதத்தின் துவக்கம் "தை" யா?
நன்றி: தினமலர் www.dinamalar.com
வடக்கத்தியருக்கு மகிழ்வளிக்கும் வண்ணம் உத்திராயண சூரியன் வடக்கு நோக்கி
நகரும் அம்மாதம் தெக்கத்தியரான நமக்கு என்ன உவப்பைத் தரும்?
கன்னல் கரும்பு போல் கருத்த மேனியரான தமிழருக்கு சூரியன்
உச்சியிலிருக்கும் சித்திரைதான் அண்ணே உகந்த மாதம்!
ஆங்கிலேயே அடிவருடிகள் என்ற பட்டப் பெயர் இப்போ நமக்கெதற்கு? இல்லை,
கல்லக்குடியில் கல்லெறிந்துவிட்டு இப்போ அவர்கள் சார்பில் இருந்து கொண்டு
மகிழ்வது சாலுமோ!!
ஏதோ இன்னிக்கு போணி இவ்வளவுதான் :-)
கண்ணன்
2008/1/19 Kannan Natarajan <thar...@gmail.com>:
> ஆதிசங்கரர், இந்து மதத்தை வழிபாட்டு நோக்கில் சைவம், வைணவம், சாக்தம், சவுரம்,
> கவுமாரம், காணாபத்யம் என ஆறு வகையாக அமைத்து, அதற்குச் "சண்மதம்" என்றும் பெயர்
> கொடுத்தார்.
> சைவம் - சிவ வழிபாடு.
> வைணவம்- திருமால் வழிபாடு.
> சாக்தம் - சக்தி வழிபாடு
> சவுரம் - சூரிய வழிபாடு.
> கவுமாரம்- முருகன் வழிபாடு.
> காணாபத்யம் - கணபதி வழிபாடு.
அவர் அப்படியெல்லாம் அமைக்கவில்லை. அவர் ஒரு நம்பூதிரி பிராமணர். வைதீக
பிராமணர். பரம்பொருள் நாராயணன் என்பதை உணர்ந்த வைஷ்ணவர். அவர் தன் அத்வைத
கோட்பாட்டை மேற்கோள்களுடன் காட்ட அறுவகை சமயங்களை ஆமோதித்தார். சைவத்தில்
கபாலிகம், பாசுபதம் போன்ற பிரிவுகளைச் சாடினார். சிவனை ருத்ரனின் அம்சமாக
வேதம் சொல்வதால் ஏற்றுக் கொண்டார்.
வேடிக்கை என்னவெனில் அவருக்குப் பட்டையடித்து, அவருக்குப் பின்
பிராமணர்களிடம் "சைவம்" என்பது ஒரு பிரிவாகவே போய்விட்டது. எந்த வைதீக
பிராமணனுக்கும் நாரணனே பரம் பொருள். எனவேதான் இக்குழப்பத்திலும் சங்கர
மடத்தில் 'நாரண ஸ்மிருதி" என்று கையெழுத்துப் போடும் பழக்கம் மட்டும்
மாறவில்லை. (சிவ வழிபாடு ஏற்றுக்கொள்ளத்தக்க வைதீக மார்க்கம் என்பதே
சங்கரரின் பரிந்துரை)
வைணவம் காலம், காலமாக இருப்பது! சங்கரருக்கும், இராமானுஜருக்கும் முன்னாலேயே!
எப்படி வைஷ்ணவம் என்பதை இராமானுஜர் என்பவர் உருவாக்கினார் என்று சொல்வது
பிழையோ அதுபோல் சங்கரர் ஆறுமதங்களை உருவாக்கினார் (அமைத்தார்) என்பதும்
பிழையே!
மணிமேகலையில் 'சமயக் கணக்கர் தந்திறங்கேட்ட காதையில்'
"காதல் கொண்டு கடல்வண்ணன் புராண
மோதினான் நாரணன் காப்பென் றுரைத்தனன்"
என்று கூறுகிறார் கூலவாணிகன் சாத்தனார்.
பரிபாடல் முழுவதும் நாரண துதியே!
சங்கத்தைத் தோண்டினால் உள்ளே இருப்பது நாரணனே :-)
கண்ணன்
இக்கதைகள் ஒருபுறம் இருக்கட்டும். ஆதிசங்கரர் இந்தியாவின் மிகச்சிறந்த
தத்துவ ஞானி. மிகப்பெரிய பண்டிதர். இந்திராகாந்தியிடம் உங்களைக் கவர்ந்த
மனிதர் யார்? என்று கேட்டபோது ஆதிசங்கரைச் சுட்டுகிறார். அவர் சநாதானி
அல்ல, உலகமறியும். கூறக்காரணம் சங்கரரின் அசைக்கமுடியாத தர்க்கம்
(logic). இந்தத் தர்க்கவாதிதான் அவர் காலத்தில் புல் போல் மண்டிக்கிடந்த
மதங்களைக் களையறுத்து ஆறு மார்க்கங்களைக் காட்டுகிறார். அவை
வேதத்திற்குப் புறம்பானவை அல்ல என்று நிரூபிக்கிறார்.
அடிப்படையில் சங்கரர், இராமானுஜர், மாத்வர் ஆக மூன்று பெரும்
தத்துவாதிகளும் நாரணன் பரம் என்பதை ஏற்றுக் கொண்ட பின்தான் தங்கள்
வாதங்களையே முன்வைக்கின்றனர். விஷ்ணுவை வழிபடுபவனை வைஷ்ணவன் என்று
சொல்வது வழக்கம்.
கண்ணன்
2008/1/20 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> தாய்மொழி தமிழாகயிருந்தும், சங்கரர் ஒரு தமிழ் நூலையும் மேற்கோள் >காட்டவில்ல
சங்கரர் மலையாளி. அவருக்குத் தமிழ்ப் புலமை எவ்வளவு இருந்தது என்று
தெரியவில்லை. மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு "pan indian movement"
கொண்டுவர வேண்டிய தேவை இருந்தது. அவர் அப்படியொரு மாற்றத்தைக்
கொண்டுவரவில்லையெனில் வேதாந்தம் இந்தியாவில் மறுமலர்ச்சி கண்டிருக்காது.
இதை இப்படி ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழ் மருத்துவம் என்பதில் உங்களுக்கு
நம்பிக்கை இல்லை. தமிழராய் இருந்தும் ஆங்கிலம் கற்று ஆங்கில மருத்தும்
கற்று, இந்தியாவை விட்டு வெளிநாட்டில் பிரபலமான மருத்துவராக உள்ளீர்கள்.
ஆங்கில அடிவருடத்துவம் இந்தியாவிற்கு நன்மையே செய்திருக்கிறது என்றும்
இங்கு சொல்லியுள்ளீர்கள். இவ்வளவு உயர்விற்கும் ஆங்கிலம் துணை
போயிருக்கிறது. ஏனெனில் நீங்கள் வாழும் காலத்தில் ஆங்கிலம் உலக மொழியாகி
அதில் பெரிய database இருக்கிறது என்பதே காரணம். சங்கரர் வாழ்ந்த
காலத்தில் இந்தியாவின் அனைத்துச் செல்வங்களும் சமிஸ்கிருதத்தில்
இருந்தது. அதுவே கல்விமான்களின் மொழியாக இருந்தது. கல்விமான்களின்
எண்ணப்போக்கை மாற்றிவிட்டால் சமூகத்தின் எண்ணப்போக்கை மாற்றிவிடலாம்.
இன்றைய தமிழ் மருத்துவத்தின் வளர்ச்சிக் குறைவிற்கு கல்விமான்களின்
ஆதரவின்மையே காரணம். அவர்களை convince செய்யும் வல்லமை
தமிழ்மருத்துவருக்கோ, தமிழ்ப்பண்டிதர்களுக்கோ இல்லை. இதே உளவியலைக்
கருத்தில் கொண்டால் ஏன் சங்கரர் மலையாளத்தில் அல்லது தமிழில் தன் வாதத்தை
வைக்காது சமிஸ்கிருதத்தில் வைத்தார் என்பது புரியும். நாளை ஆங்கிலத்தில்
தமிழ் மருத்துவம் பற்றிப் புத்தகங்களும் ஆய்வுகளும் வந்தால் கல்விமான்கள்
அதை நம்புவர்.
> இராமானுஜரும், தமிழில் திளைத்திருந்தும்,வடமொழிப் புலமையிலேயே
> வேதத்தொடர்களுக்கு விளக்கம் கூறினார்.
இராமானுசர் காலத்திலேயும் நிலமை அப்படியேதான் இருந்தது. சங்கருக்கு சவால்
கொடுக்க வேண்டுமெனில் அவர் தமிழில் சொல்லிப் பயனில்லை. இந்தியப்
பொதுமொழியான சமிஸ்கிருதத்தில்தான் சொல்ல வேண்டியிருந்திருக்கும். நீங்கள்
மேற்கோள் காட்டும் வள்ளலாரே மும்மொழித்திட்டத்தை முன்வைக்கிறார். தமிழ்,
சமிஸ்கிருதம், ஆங்கிலம் என்பவையே அம்மொழிகள்.
மேலும் இராமானுஜர் வளர்த்தெடுத்த ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்களின்
பாசுரங்களைக் குறை காண்பவர்களைத் தன் தாயின் கற்பில் குறை காண்பவனை
ஒக்கும் என்று சொல்லிப்போயினர். தேசிகர் தமிழ்ப் பிரபந்தங்களை முன்வைத்து
பல சமிஸ்கிருத நூல்கள் இயற்றியுள்ளார். இவர்கள் முயற்சியால் இந்திய
அளவில் தமிழ் மறைகள் "திராவிட உபநிஷத்து" என்ற நிலை பெற்றது.
>"வேதம் என்றால் பேதம்
> என்றதோடு,வேதாகமங்கள் சூதாகச் சொன்னவை," என்று வள்ளலார் பாடினார்.
>
வள்ளலார் பதிப்பித்த முதல் நூல் அத்வைத நூலாகும். வள்ளலார் தனது
கொள்கைகளை, சன்மார்க்க நெறியை மெல்ல, மெல்ல காலப்போக்கில்
வளர்த்தெடுத்தார். ஈழத்தவர்களைப் பொறுத்தவரை வள்ளலார் ஒரு அத்வைதியே!
> ஆயிரம் முயன்றாலும்,வடசொற்களைத் தமிழ் நலம் கருதி தவிர்க்க முயன்றால், சமயக்
> கருத்துக்கள் நொண்டும்! உயிர் என்ற சொல்லை விட்டுவிட்டு, ஆன்மா
> அகற்றமுடியாததாகி விட்டதே! இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது!
>
தென்னிந்திய சைவ சித்தாந்த பிதாமகர்கள் எல்லோருக்கும் சமிஸ்கிருதம்
அத்துபடி. அருணகியின் பாடல்களைக் கவனியுங்கள். அப்படியொரு
மணிப்பிரவாளத்தை நான் எங்கும் கண்டதில்லை. மேலும், பெயருக்கேற்றபடி
தென்னிந்திய சைவ சித்தாந்தம் ஒரு regional development மட்டுமே. அதுவொரு
Pan Indian Movement அல்ல. எனவே அவர்களுக்கு வேதத்தை மேற்கோள் காட்ட
வேண்டிய அவசியமில்லை. இது வேளாளர் சமூகம் மேன்மையுற்ற சோழர்கள் காலத்தில்
வீரியம் கொண்ட ஒரு போக்கு. இது தமிழ்நாடுவிட்டுத் தாண்டவில்லை (ஈழம்
தமிழ் மண் என்ற நோக்கில்). இப்படி இருந்தாலும் இன்றளவும் சைவசித்தாந்த
வேளாள மடங்கள் சமிஸ்கிருதத்தை உயர்வாகவே வைத்துள்ளன. சைவத்தின்
திருக்கோயிலான சிதம்பரத்தில் இன்றளவும் கோயில் மொழியாகவில்லை. ஆனால்
அரங்கன் எவ்விழாவும் இல்லாமல் சில மாதங்கள் திருவாய்மொழி கேட்பது ஒன்றே
ஆனந்தம் என்று திருவரங்கத்தில் உள்ளான். கோயிலில் சமிஸ்கிருதத்தில்தான்
பூஜை இருக்க வேண்டும் என்று வாதாடுவது சைவ மடங்களே.
> "மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
> போல் அறிவோம் என்று பொக்கங்களே பேசும்!" - திருவெம்பாவை
>
இது அவரவர் நோக்கு. சிவனில் பிரம்மத்தைக் காண்பவர்க்கு அவன் அப்படியே
காட்சி தருகின்றான். அது அவன் இயல்பு. மகாத்மா காந்தி பிரபலப்படுத்தி
புகழ் பெற்ற வைஷ்ணவ ஜனதோ பாடலை இயற்றிய நரசிம்ம மேத்தாவிற்கு சிவன்
ஆசையுடன் வைஷ்ணவ வழியைக் காட்டுகிறான்.
ஆழ்வார்கள் எந்த வேதமும் கற்காமல் தமிழில் வேதத்தை உருவாக்கினர்.
எனவேதான் அதனை 'அருளிச் செயல்' என்கிறோம்.
வேதத்தின் முன்செல்க; மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன்செல்க; குணங்கடந்த
போதக்கடல் எங்கள் தென்குருகூர்ப்புனிதன் கவியோர்
பாதத்தின் முன் செல்லுமே? தொல்லை மூலப்பரஞ்சுடரே!
கம்பன் என்ன சொல்கிறான்? அரங்கன் உலா வருகிறான். அவனைப் பின் தொடர்ந்து
வேதம் வருகிறது. ஆனால் அரங்கனோ தமிழைப் பின்தொடர்ந்து வருகிறான்.
சடகோபனின் திருவாய்மொழியின் ஒரு பாதம் (ஒரு சொற்றொடர்) முன் சென்றாலும்
தொல்லை மூலப் பரஞ்சுடர் அதன் வழி செல்கிறது என்கிறான்.
இதைப் இன்றளவும் பின்பற்றுவது வைணவ மார்க்கமே. சைவக் கோயில்களில் தேவாரம்
மண்டபத்தில் பாடப்பட வேண்டிய ஒரு மொழி. கர்பகிரஹத்தில் அல்ல.
நிலமை இப்படி இருக்கும் போது தமிழை யார் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்
என்று தமிழறிந்தோர் உணர்வர். வைணவத்தைப் பொறுத்தவரை சமிஸ்கிருதம் தமிழின்
எதிரியல்ல. சைவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். சிவ தாண்டவத்தில்
உடுக்கின் ஒரு தட்டில் தமிழும், மற்றொரு தட்டில் சமிஸ்கிருதமும்
பிறந்ததாகச் சொல்கிறார்கள்.
கண்ணன்
பிகு: நம் குழந்தைகள் இப்போது பஜ கோவிந்தம் சொல்வதில்லை. டுவிங்கிள்,
டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் குற்று
உயிரும் குலை உயிருமாக உள்ள சமிஸ்கிருதத்தை விடாமல் சாடி வருகிறோம். இதன்
உளவியல்தான் எனக்கு புரியவே இல்லை!!
போன்ற பல்வேறு நாடுகளில் வசிக்கும் நகரத்தார் குடும்பத்துடன் வந்திருந்தனர். கண்ணாத்தாள் கோவில் வளாகம் களை கட்டியிருந்தது. வண்ணமயமாக காட்சியளித்தது.கோவில் திடலில் நீண்ட வரிசையில் முறைப்படுத்தி ஒதுக்கப்பட்ட இடத்தில் 866 பாரம்பரிய குடும்பத்தினரின் பானைகள் வைக்கப்பட்டன. மாலை 4.30 க்கு ஒரே நேரத்தில் அனைத்து அடுப்புகளும் பற்ற வைக்கப்பட்டன. பொங்கிய பொங்கல் பானையை அனைவரும் கோவில் வளாகத்திற்குள் வரிசையாக வைத்து வழிபாடு நடத்தினர். மற்றொரு புறம் வேறு சமூகத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
சட்டப் பேரவையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பர்னாலா உரையுடன் புதன்கிழமை (23/01/08) தொடங்கியது. ஆளுநர் உரையில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆளுநர் உரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
மறைமலை அடிகள் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட தமிழ் பெருமக்கள் 1921-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி, தமிழர்களுக்கென "தனி ஆண்டு" தேவை எனக் கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றைப் பின்பற்றுவதென்றும், "தமிழ் ஆண்டு" எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தார்கள்.
அதைக் கருத்தில் கொண்டு, 1971-ம் ஆண்டு தமிழக அரசு நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசிதழிலும் நடைமுறைப்படுத்த முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தார்.
திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
நன்றி: தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080123122658&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist =இக்கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. சித்திரையை முதல் மாதமாகக் கொள்ளும் காலக்கணக்கீடோ, அறுபது தமிழ் வருடப் பெயர்களாகக் குறிப்பிடப்படும் பிரபவாதி ஆண்டுகளின் பெயர்களோ தமிழ் மரபைச் சார்ந்தவையல்ல என்று முடிவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
சங்க இலக்கியங்களில் "தைந்நீராடல்" எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது என்பது உண்மையே. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்புபடுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது என்பது பற்றிய குறிப்போ சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தைந்நீராடலுக்கும் புத்தாண்டுப் பிறப்பிற்கும் தொடர்பில்லை என்பது வெளிப்படை.
அவ்வாறாயின், தை மாதப் பிறப்பினைத் தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழறிஞர்கள் சிலர் முடிவு செய்ததற்கு என்ன அடிப்படை இருக்கக்கூடும் என யோசித்தால், ஆங்கில வருடப் பிறப்புக் காலமாகிய ஜனவரி மாதத்தினையொட்டித் தை மாதம் வருவதாலும், விக்ரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் முதலியனவெல்லாம் காலாவதியாகிப் போய் ஐரோப்பிய சகாப்தம் - சொல்லப்போனால் கிறிஸ்துவ யுகம் - அகிலத்தையே ஆக்கிரமித்துவிட்டதாலும், அதற்கு ஒத்து வருகிற வகையில் நமது பழம் மரபுகளுக்குப் புதிய விளக்கமளிக்கிற ஓர் ஒத்திசைவே இதற்கு அடிப்படையாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.
இந்தச் சிந்தனைப் போக்கு, 16ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டதெனத் தெரிகிறது. தமிழில் வெளிவந்த முதல் அச்சு நூலான தம்பிரான் வணக்கத்தில், கிறிஸ்துவ அப்தம் 1578ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அன்று அச்சிடப்பட்டதாகப் போர்ச்சுக்கீசிய மொழியிலும், அற்பிகை மாதம் 20ஆம் தேதி அச்சிடப்பட்டதாகத் தமிழிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்டோபர் மாதத்துக்கு நேரான தமிழ் மாதம் அற்பிகை (ஐப்பசி) எனக் கருதப்பட்டுள்ளது.
கி.பி. 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமயப் பணிபுரிந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்கத் துறவியான வீரமாமுனிவர், தமது தேம்பாவணியில் (மகவருள் படலம், பா. 96) ஏசுநாதர் மார்கழி 25ஆம் தேதியன்று பிறந்தார் எனக் குறிப்பிடுகிறார். ஐரோப்பியக் காலண்டர் மாதங்களையும்,தமிழ் மாதங்களையும் ஒன்றுபடுத்திப் பார்க்கும் போக்கின் தொடர்ச்சியாகவும், தைத்திங்களில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குவதாகக் கருதும் மனப்போக்கின் ஆரம்பமாகவும் இதனைக் கருதலாம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் (Spring) எனப்படும் வசந்த காலத்தைத்தான் புத்தாண்டுத் தொடக்கமாகக் கருதினர். கிரேக்க ரோமானிய நாகரிகங்களில், மார்ச் மாதம் முதல் நாளன்று வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும் குறும்புகள் செய்தும் சிரித்து விளையாடியும் மகிழ்வர். மேலைநாடுகளில் உறைய வைக்கும் குளிர்காலம் முடிந்து வெயிற்காலம் தோன்றுவது மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது. வணிகர்களும் அரசாங்கமும் தமது வரவு செலவுக் கணக்கை அன்றுதான் தொடங்குவர். இம்மரபுகள்தாம், ஏப்ரல் மாதம் முதல் நாளுக்கு மாற்றப்பட்டுத் தற்போது உலகளவில் பின்பற்றப்படுகின்றன. இவ்வாறு மாற்றப்பட்டதற்குப் பல காரணங்கள் உள்ளன.
கிரேக்கக் காலக் கணக்கீட்டின்படி, செவ்வாய்க் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட "ஏரீஸ்" வீட்டில் சூரியன் இருக்கின்ற மாதமே மார்ச் மாதமாகும். ரோமானிய (லத்தீன்) காலக் கணக்கீட்டின்படி, ஏரீஸ் எனப்படும் முதல் மாதம், மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் நீடிக்கும். பிசஸ் எனப்படும் இறுதி மாதம், மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்.
இந்திய ஜோதிட அறிவியலில் பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மகத்துடன் முடிவடையும் மாசி மாதத்துக்குப் பின்னர் பங்குனி மாதம், மார்ச் 14 தேதியளவில் பிறக்கும். பாரசீக சமயமான ஜெராஸ்ட்ரிய சமய நூல்களில் மாசி மாதம் (பிர்தெளஸ்) என்பதே ஓர் ஆண்டின் இறுதி மாதமாகும். இவ்வாறு பங்குனி - சித்திரை ஆகிய மாதங்களுள் ஒன்றே, அவ்வப் பிரதேச வேறுபாடுகளுக்கேற்ப ஆண்டின் தொடக்க மாதமாகக் கருதப்பட்டுள்ளது. காலக்கணக்கீட்டில் மீன (பங்குனி) மாதமும், மேஷ (சித்திரை) மாதமுமே முதன்மை பெற்று வந்துள்ளன என்பது "மீன மேஷம் பார்த்தல்'' என்ற பேச்சு வழக்காலும் தெளிவாகும்.
இப்போது தை மாதத்தைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொள்வதற்குச் சங்க காலத் தமிழ் இலக்கியங்களில் மறைமுகமாகவாகிலும் ஏதேனும் குறிப்பு காணப்படுகிறதா?
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தொடங்கிய பக்தி இலக்கியக் காலகட்டத்தில் மார்கழி நீராடல் நோன்பாகப் பரிணமித்த தை மாதப் பாவை நோன்புக்கும், உழவர் திருநாளாகக் கருதிக் கொண்டாடப்படுகின்ற பொங்கல் திருநாளுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்று நாம் புரிந்துகொள்வது அவசியம்.
மார்கழி நீராடல் மரபு வைணவ சம்பிரதாயத்தில் கண்ணன் வழிபாட்டோடு தொடர்புபடுத்தி முதன்மைப்படுத்தப்படுகிறது. மார்கழி நீராடல் மரபில் கண்ணனுடைய அண்ணனாகிய பலராமனுக்கும் ஓர் இடம் உண்டு. பலராமன் சங்க இலக்கியங்களில் வாலியோன் (வெள்ளையன்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறான். அவனுடைய ஆயுதம் ஏர்க்கலப்பை ஆகும். ("நாஞ்சிற்பனைக் கொடியோன்'' - புறநானூறு 56:4) அதாவது அவனே சங்ககால விவசாயக் கடவுள் ஆவான்.
பலராமனை "புஜங்கம புரஸ்ஸர போகி" எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே, போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே தவிர பரவலாகக் கருதப்படுவது போல இந்திரனுக்கு உரிய விழா அன்று. இந்திர விழா சித்திரை மாதப் பூர்ணிமையன்று நிகழ்ந்தது என்பது சிலப்பதிகாரத்தில் தெளிவுபடக் குறிப்பிடப்படுகிறது. எனவே, மார்கழித் திங்களின் இறுதி நாளன்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை விவசாயக் கடவுளான பலராமனுக்கு உரிய விழாவே.
சூரியன் தட்சிணாயனத்திலிருந்து உத்தராயனத்திற்குத் திரும்புகின்ற நாள் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தை மாதம் முதல் தேதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது பிற்காலச் சோழர் ஆட்சியில் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பது உண்மையே.
ஆட்டைவட்டம் எனப்படும் ஓர் ஆண்டின் சுழற்சியை - 360 பாகைகளை - 90 பாகைகள் கொண்ட நான்கு பிரிவுகளாகப் பிரித்து, சித்திரை விஷு, தக்ஷிண அயனம், ஐப்பசி விஷு, உத்தர அயனம் எனக் குறிப்பிடும் வழக்கம், கி.பி. 998ஆம் ஆண்டைச் சேர்ந்த தஞ்சை மாவட்டம் திருவலஞ்சுழி சேத்ரபால தேவர் கோயிற் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்நாள் புத்தாண்டுத் தொடக்கமாகவோ தமிழர்க்கு மட்டுமேயுரிய திருநாளாகவோ கருதப்படவில்லை.
சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாகச் சொல்லப்படும் சோழர்களின் ஆட்சியில் முதன்மையான நிர்வாகப் பதவியை வகித்த சேக்கிழார் நாக தெய்வத்தைத் தமது குல தெய்வமாகக் கொண்டவர் ஆவார். அப்படி இருக்க சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் ஓரிடத்தில்கூடத் தைப் பொங்கல் விழாவை முதன்மைப்படுத்தியோ, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் உழவர்கள் கொண்டாடிய முதன்மையான ஒரு விழாவாகவோ குறிப்பிடவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.
சோழ நாட்டு மள்ளர்களைக் (பள்ளர்களை) குறிப்பிடுகையில் "இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாற்று நடுவார் தொகுதியே பழுதில் காவிரி நாட்டின் பரப்பெல்லாம்'' என்றே சேக்கிழார் வருணிக்கிறார். (திருத்தொண்டர் புராணம், திருநாட்டுச் சிறப்பு, பா. 10, 12).
தமிழக வரலாற்றில் மருத நில உழவர்களான தேவேந்திர குல மள்ளர்களின் இடத்தையும், மழைக் கடவுளாகிய இந்திரனுக்குரிய இடத்தையும், நிர்ணயிக்க உதவும் பல குறிப்புகளுள் இதுவும் ஒன்றாகும். இங்கும் வேளாண்மை தொடர்பான விழாவாகத் தைப் பொங்கலோ, வேளாண்மைக்குரிய கடவுளாக பலதேவனோ முதன்மைப்படுத்தப்படவில்லை.
பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலத்தில்கூட இந்திர விழாவைவிட பலராமன் விழாவாகிய போகி - பொங்கல் விழா முதன்மை பெற்றுவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. பூம்புகாரில் சித்திரைத் திங்களில் இந்திர விழா கொண்டாடப்பட்டதைப் பற்றிய இலக்கியச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தாலும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனுக்கு ஆண்டின் தொடக்க காலத்தில் விழா எடுக்கின்ற மரபு நீண்ட நெடுங்காலமாகச் சோழ நாட்டில் தொடர்ந்து வந்திருக்கின்றது என்பதும் பலராமன் விழாவாகிய தைப்பொங்கலைவிட இந்திர விழா பழைமையானது என்பதும் புலனாகின்றன.
பருவங்களின் தலைவன் பிரஜாபதி என வேதங்கள் கூறுகின்றன. மகாபிரஜாபதி என இந்திரனைக் குறிப்பிடுவர். எனவேதான், பருவங்களின் தலைமைப் பருவம் தொடங்கும் சித்திரை மாதத்தில் இந்திரவிழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். மருத நிலத்தின் தெய்வமாக இந்திரனையும், அந்நிலத்துக்குரிய பெரும் பொழுதாக இளவேனில் பருவத்தையும் குறிப்பிடுவதே தமிழிலக்கிய மரபாகும்.
வரலாற்று உண்மைகளிலிருந்து நாம் சற்று கவனத்தைத் திருப்பிப் பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட இயற்கையின் காலக்கணக்கீட்டுக்கு வருவோம்.
"திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்'' என்பது சங்க இலக்கியமாகிய நெடுநல்வாடையில் இடம்பெறும் தொடராகும். (வரி 160 - 161) மேஷ ராசியே தலையான (முதல்) ராசி என்பது இதன் பொருள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கின்ற மாதத் தொடக்கமே புத்தாண்டின் தொடக்கமாகும். ரோமானிய நாகரிகத்தில் முதல் மாதமாகக் கருதப்பட்ட "ஏரீஸ்" என்பது ஆடு (மேஷம்) என்றே பொருள்படும்.
இக்ஷ்வாகு மன்னர்களின் கி.பி. 3 - 4ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கிம்ஹ (கிரீஷ்ம), வஸ்ஸ (வர்ஷ), சரத் என்ற மூன்று காலங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதாவது கோடை, மழை, பனிக் காலங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன. இந்த வரிசையே தமிழ் இலக்கண மரபிலும் இளவேனில் - முதுவேனில், கார் - கூதிர், முன்பனி - பின்பனி என்று சற்று விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே வானநூல் - ஜோதிட அடிப்படையிலும் கோடைக்காலமே ஆண்டின் தொடக்கமாகும்.
சீவக சிந்தாமணியில் முக்தியிலம்பகத்தில் (3070 - 72) சீவகன் ஓராண்டுக் காலம் தவம் செய்தது வர்ணிக்கப்படுகிறது. நந்நான்கு மாதங்கள் கொண்ட மூன்று பருவங்களாக, "தீயுமிழ் திங்கள் நான்கு, வானம் நீர்த்திரள் சொரிந்திடு திங்கள் நான்கு, பனிவரை உருவி வீசும் மங்குல் சூழ் வாடை நான்காய திங்கள்'' என ஓராண்டுக்காலம் குறிப்பிடப்படுகிறது. இங்கெல்லாம் கோடைக்காலமே முதலாவது பருவமாகக் குறிப்பிடப்படுவதைக் கவனிக்க வேண்டும்.
இனி, 60 ஆண்டுக் கணக்கீட்டினைப் பற்றி ஆராய்வோம். தமிழ் வருடப் பெயர்கள் எனக் குறிப்பிடப்படும் "பிரபவ'' தொடக்கமாக அமைகிற 60 பெயர்களும் தமிழ்ப் பெயர்கள் அல்ல என்பது உண்மையே. 60 ஆண்டுகள் கொண்ட பிரபவாதி சுழற்சிமுறை "வியாழ வட்டம்'' எனப்படும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற குருவும் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது பழைய இடத்துக்கு வருகிற சனியும், ஒரே நேரத்தில் தாம்தாமிருந்த பழைய இடங்களுக்கே வருவது 60 ஆண்டுக்கு ஒருமுறைதான் நிகழும். எனவேதான் 60 ஆண்டுச் சுழற்சி முறை முதன்மை பெறுகிறது. ஆயினும் இந்த வியாழ வட்டத்திற்கும் சித்திரை மாதத்தில் புத்தாண்டு பிறப்பதற்கும் அடிப்படையான தொடர்பு ஏதுமில்லை.
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. எனவே, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்த ஆண்டுக் கணக்கீடுதான் பூர்விகத் தமிழ் மரபாகவும் இருக்க முடியும்.
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க சமயக் கண்ணோட்டத்தில் ஏசுநாதர் பிறந்த கேப்ரிகார்ன் (மகர) மாதம் முதன்மைப்படுத்தப்பட்டு, ஜனவரியே கிறிஸ்து சகாப்தத்தின் முதல் மாதம் என்ற நிலை உருவாகிவிட்டது. 16ஆம் நூற்றாண்டுக்குப் பின் நிகழ்ந்த ஐரோப்பியக் காலனி ஆதிக்கம், "இனம் புரிந்த", இனம் புரியாத வகைகளிலெல்லாம் இந்தியச் சிந்தனையாளர் வர்க்கத்தை ஈர்த்து அடிமைப்படுத்திற்று. அதன் விளைவாக ஐரோப்பியர்கள் கைகாட்டுகிற திசையில் தமது தனித்த அடையாளத்தைத் தேடிக் காண்கிற முயற்சிகள் தொடங்கின.
இந்தியா "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற'' காலகட்டத்தில், "நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் "தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் "சுதந்திர"மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: "சித்திரையில்தான் புத்தாண்டு''.
நன்றி: தினமணி - http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20080123113656&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0&dName=No+Title&Dist =கலைஞர் சரித்திரத்தில் தங்கிவிட பல முயற்சிகள் எடுத்துள்ளார். இது அவரின்
சமீபத்திய முயற்சி. பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு சம்பிரதாயத்தை
மாற்றி புதிய சம்பிரதாயத்தை உருவாக்க முயல்கிறார். Conventions என்பவை
எப்படி உருவாகின்றன, எப்படி காலத்தை வென்று நிலைக்கின்றன என்பதே ஒரு
ஆய்வு பொருள்.
வள்ளுவ சகாப்தத்தை உருவாக்குகிறார் கலைஞர். வள்ளுவனுக்கொரு சகாப்தம்
இருப்பது சிறப்புத்தான். ஆனால் வள்ளுவர் எப்போது பிறந்தார் என்பதே
பிரச்சனைக்குரிய ஆய்வு பொருள். வையாபுரிப்பிள்ளை வள்ளுவரை கி.பி
என்கிறார். ஆனால் கலைஞர் ஏசுவை தி.பி என்கிறார். காலம்தான் இதற்கெல்லாம்
பதில் சொல்ல வேண்டும். மக்களாட்சி முறையுள்ள சமகால சூழலில்
சம்பிரதாயங்களை நிருவது மிகக்கடினம் (அறிவியற்துறை மட்டுமே தனக்கென சில
சம்பிரதாயங்களை வைத்துள்ளது, அதுவும் மாறக்கூடியது என்ற புரிதலுடன்).
இவர் செய்வது அனைத்தையும் அழித்துத் திருத்துவதற்கென்று ஒரு பெண்ணைப்
படைத்திருக்கிறான் இறைவன். காலம் என்ன சொல்லப் போகிறது என்று பார்ப்போம்.
<<பிரபவ, விபவ எனும் அந்த அறுபது ஆண்டுகளால் காலத்தை கணக்கிட முடியாது.
அந்தக்கால சராசரி வயது 25, 30, 40 என்று தான் இருக்கும். இப்போது நானே
84 வயதில் இருக்கிறேன்.
60 ஆண்டுகள் கணக்குபடி எனக்கு வயது இரண்டு தானா?
>>
இப்படியெல்லாம் பேசுவதில் இவர் சமர்த்தர். இவருக்கு முன்னால் 120 வயது
வாழ்ந்த பெரியவர்களெல்லாம் உண்டு தமிழகத்தில். அவர்கள் வயதை யாரும்
பிழையாகக் கணக்கிட்டதில்லை.
காலம் என்பது நேர்கோடு என்று ஆங்கில வழிப்பட்டு சொல்கிறார் கலைஞர். தனது
"Brief History of Time" எனும் நூலில் பிரபல ஆங்கில விஞ்ஞானி Professor
Stephen Hawking காலம் நேர்கோடு அல்ல என்று சொல்லிவிடுகிறார். காலம்
என்பது சார்புடைக் கருத்து. அது நேர்கோடாக இருக்க சாத்தியமில்லை என்று
உணர்ந்தே கிழக்கு சம்பிரதாயங்களில் காலத்தை சுழல் வடிவில் அமைத்தனர். சீன
சம்பிரதாயத்திலும், கொரிய, ஜப்பானிய சம்பிரதாயங்களிலும் அது நேர்கோடு
அல்ல. சீன ராசி மண்டலம் சுற்றிச் சுற்றிதான் வருகிறது. முயல் ராசியைச்
சேர்ந்த ஒருவர் 10 வயதாகவும் இருக்கலாம், 80 வயதானவராகவும் இருக்கலாம்.
சமயோஜிதமாகப் புரிந்து கொள்ள வேண்டும். சேர்மன் மாவோ மாற்றாத ஒரு
வழக்கத்தை கலைஞர் மாற்ற முயல்கிறார். பகுத்தறிவு எனும் போர்வையில்!
கண்ணன்
நன்றாக விளங்குகிறது!
இவர் செய்வது அனைத்தையும் அழித்துத் திருத்துவதற்கென்று ஒரு பெண்ணைப்
படைத்திருக்கிறான் இறைவன்.
ஓ .... ! அந்தப் பெண் செய்தது எல்லாம் ஆண்டவன் செய்தது, போலவா?
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
க
2008/1/31 இரவா <vasude...@gmail.com>:
உண்மை. இது பற்றி நான் முன்பே சொல்லியுள்ளேன்.
> வள்ளுவர் என்றைக்கு பிறந்தாலும் அந்த ஆண்டு கணக்கை வளுளுவர் பெயரால் சொல்லலாமே.
> அந்த பேரை விட சிறந்த பேர் தமிழில் உண்டா?
>
> கி.பி 2008 ஐ வள்ளுவர் ஆண்டு தொடக்கமாக 1 எனவும் வைக்கலாம்
>
நிச்சயமாகச் செய்யலாம்.
ஒரு முறைமையை உருவாக்க எதை வேண்டுமானாலும் அளவு கோலாகக் கொள்ளலாம்.
ஆனால் என் கேள்வி முறைமைகள் எப்படி உருவாகின்றன, எப்படி நிலைப்படுகின்றன
என்பதுதான்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின்
என்று சொன்ன வள்ளுவன், முதலில் தன் பெயரில் ஒரு சகாப்தம் உருவாக
வேண்டுமென்று எண்ணியிருப்பானா? ;-)
தமிழக வரலாற்றை நோக்கின் வள்ளுவனை ஒற்று மொத்தமாக எல்லா சமயங்களும்
ஏற்றுக் கொண்டுள்ளன. அவன் சான்றாண்மையை போற்றிப் புகழ்ந்தே உள்ளன. அப்படி
இருப்பினும் வள்ளுவ சகாப்தமென்று ஒன்று ஏன் உருவாகவில்லை. அவனொரு
ஒளிச்சுடராய் இருந்த போதும்?
மிகப்பெரிய பேரரசர்கள் இருந்திருந்திருக்கிறார்கள். ஏன் இராஜராஜ சோழன்
தன் பெயரில் ஒரு சகாப்தத்தை உருவாக்கவில்லை.? அவன் மெய்கீர்த்திக்கு
என்றும் ஆசை உடையவனே! நல்ல பல சான்றோர்களைப் பெற்ற தமிழ் மண்ணில்
வருடங்களுக்கு தமிழ்ப் பெயர் சூட்டல் கடினமான காரியமா? ஏன் இப்போதுள்ள
முறைமையை ஏற்றுக் கொண்டிருந்தனர்? அவர்களது தமிழ் உணர்வு இப்போது
நம்மிடம் இருந்ததைவிடக் குறைவா?
கடைசியாக, இந்தியா ஆங்கில (கிரிஸ்தவ) சகாப்தத்தை முழுமையாக ஏற்றுக்
கொண்டு விட்டது. அளவு முறைமையில் மெட்ரிக் முறையை ஏற்றுக் கொண்டுவிட்டது.
இப்போது நாம் உருவாக்கும் முறைமை காலப்போக்கிற்கு ஒத்துவருகிறதா? இல்லை
இதுவொரு அரசியல் பொழுது போக்கா? இது போன்ற கேள்விகளை இவ்விழை
தூண்டிவிடுகிறது.
கண்ணன்
தைத்திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது தமிழன் மானமும் தமிழின் உரிமையும் தங்குவதாகும்.
நமக்கு இதற்கு முன்பிருந்த ஆண்டுகளால் - நான் முதலிலே சொன்னதைப் போல, ஏன் நம்மைக் கவரமுடிய வில்லை. அது கணக்கிலே வரவில்லை. கணக்குக்கு ஒத்து வரவில்லை. என்னென்ன ஆண்டுகள் வட மொழிகளாக நமக்கு இருந்தன. பேராசிரியர் சொன்னார் - சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி என்ற பெயர்களைச் சொன்னார். ஓரளவிற்கு அவற்றைப் பார்க்கும்போது ஒன்றிரண்டு வடமொழிச் சொல்லாக இருந்தாலும் கூட பொதுவாக மேலெழுந்த வாரியாக தமிழ்ச் சொற்களாகவே நமக்குத் தென்படுகின்றன. அது நம்முடைய அடிப்பீடத்தை அசைக்கக் கூடிய அளவிற்கு வல்லமை பெற்றதாக இருக்காது என்ற நம்பிக்கையலே தான் அடிப்பீடத்தையே அடிக்கக் கூடிய அளவிற்கு ஆண்டுக் கணக்கு இருப்பதைப் பார்க்கிறோம். கணக்கு என்று எடுத்துக் கொண்டால் கூட என்னைப் பார்த்து உனக்கு என்ன வயது என்று கேட்டால், இப்போது 84 என்கிறேன். பேராசிரியரைக் கேட்டால் 85 என்கிறார். எந்த வருடம் பிறந்தீர்கள் என்று என்னைக் கோட்டால், நான் இந்தத் தொடர் ஆண்டைச் சொல்ல முடியாது. தொடர் ஆண்டைச் சொல்லாமல் சமஸ்கிருத ஆண்டைத்தான் சொல்ல வேண்டுமென்றால், என்னைப் பொறுத்த வரையில் நான் ரக்தாட்சி ஆண்டு பிறந்தேன் என்று சொல்ல வேண்டும். ரக்தாட்சி ஆண்டிலிருந்து கணக்கிட்டால், ரக்தாட்சி, குரோதன, அட்சய என்ற இந்த மூன்று ஆண்டுகள் போக, பிரபவ, விபவ, சுக்கில என்று ஆரம்பிக்கிற வடமொழி ஆண்டுகளைக் கணக்கிட்டால் இப்போதுள்ள ஆண்டு 30 ஆவது ஆண்டாக அல்லது 31 வது ஆண்டாக இருக்கும். நான் நம்முடைய பழைய வருஷக் கணக்குப்படி என்னுடைய வயது 30 அல்லது 31 என்றுதான் சொல்ல வேண்டும். வயது கணக்கு தவறும். வயது கணக்கு தடுமாறும். எனவேதான் தொடர்கணக்காக இருக்க வேண்டுமென்றுதான் திருவள்ளுவர் ஆண்டு தொடர் ஆண்டாகவும், திருவள்ளுவர் ஆண்டின் தை முதல் நாள் அந்த ஆண்டின் தொடக்க நாளாகவும் இருக்க வேண்டும். தமிழ்ப் பெயரில் இருக்க வேண்டுமென்று இன்றைக்கு அமைத்திருக்கிறோம். இல்லாவிட்டால் நமக்கென்று வரையறுத்துக் கொடுக்கப்பட்ட ஆண்டுகள் வடமொழியில் அறுபதாண்டுகள். அதுவும் சாதாரணமாக வந்த ஆண்டுகள் அல்ல. நாரதருக்கு திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டு மகாவிஷ்ணுவைப் பார்த்து பெண் உருவெடுத்து நான் உனக்குக் குழந்தைகளைப் பெறவேண்டுமென்று கேட்டு, விஷ்ணுவும் நாரதர் வேண்டுகோளைப் புறக்கணிக்க விரும்பாமல், நாரதர், நாரதியாகி விஷ்ணு அவளுடைய கணவராகி இருவருக்கும் பிறந்த குழந்தைகள் அறுபது. அந்த அறுபது குழந்தைகளும்தான் அறுபது ஆண்டுகள். அந்த ஆண்டுகள்தான் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோ பத்தி, ஆங்கிரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷூ, சித்ரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, ஸர்வஜித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துர்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுப கிருது, சோபகிருது, குரோதி, விசுவாவசு, பராபவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதிகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராக்க்ஷஸ, நள, பிங்கள, காளயுக்தி, சித் தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, தந்துபி, ருக்ரோத்காரி, ரக் தாக்ஷி, குரோதன, அக்ஷய என்று இப்படி அறுபதாண்டுகள் சொல்லும் போது வாயிலே நுழைவதில்லை. சொன்ன பிறகு காதிலும் நுழைவதில்லை. கருத்திலும் பதிவதில்லை. கருத்திலே பதிகின்ற ஒன்று இவைகள் எல்லாம் புராணக்கணக்கு. உண்மையான வயதுக்கணக்கைக் காட்டக் கூடியவைகள் அல்ல; வருடங்கள் அல்ல. அதனால் தான் தொடர் ஆண்டுக் கணக்கு வேண்டுமென்று யோசித்தோம். அந்தத் தொடர் ஆண்டுக் கணக்கு, திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கு என்று தொடங்கினால்தான் தை முதல் நாள் அந்த ஆண்டின் முதல் நாள் என்று குறிக்கப்பட்டால்தான் சரியான கணக்கும் கிடைக்கும், தமிழனுடைய மானமும் தங்கும். தமிழ் மொழியின் உரிமையும் காப் பாற்றப்படும்.
இதைப் பார்த்து சில பேருக்கு எரிச்சல் ஏற்படலாம். அந்த எரிச்சலுக்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. அங்கே எரிய எரிய இங்கே ஒளி கிடைக்கும். எங்கேயாவது எரிந்தால்தான் அந்த எரிச்சல் நம்முடைய வீட்டிற்கு ஒளியாக இருக்கும் என்பதைப் போல், அந்த ஒளியையும் நாம் பெறுவோம். நம்முடைய வீடு, நம்முடைய ஊர், நம்முடைய நாடு அனைத்திலும் தமிழ் மணம் கமழ வேண்டும். அந்தத் தமிழ் மணம் கமழ்வதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் என்றென்றும் உதவக்கூடிய, பயன்படக் கூடிய நிகழ்ச்சிகள் ஆகும்.
இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
வணக்கம்,கரும்பு என்பது சங்க காலத்திலேயே பயன்கொண்ட அரிய சொல்லாகத் திகழ்கிறது! "கரு" என்பது அரிய, விரும்பத்தக்க என்ற பொருளுடையதாக இருக்கலாம்! அயற்சொல் மருவிய வடிவெனக் கருதலாமா?(யவனர் போல)வடமொழியில் "இக் ஷு" என்று அழைக்கப்படுகிறது,அதை,தமிழில் இக்கு என்பர். அயல்மொழிகளில்,கரும்புக்கு என்ன பெயர் என்று காணவேண்டும். இந்தியாவின் வடபுலமோ,தென்கிழக்கு ஆசிய நாடோ,அதியமானின் முன்னோர் சென்ற அல்லது அறிந்த நாடாகயிருக்க வேண்டும். கி.மு 326ல் அலெக்சாண்டர் இந்தியாவின் வடமாநிலத்தில்;இந்த இனிப்பு முங்கிலைக் கண்டனராம்!( http://www.siu.edu/~ebl/leaflets/sugar.htm )கரும்பின் நிறம் இளஞ்செம்மை நிறமாதலால்,கரிய நிறத்தை காரணமாகச் சொல்ல முடியவில்லை.இஞ்சி - சீனவில் "ஜியாங்"(Jiang) எனத் தோன்றி,ஆங்கிலத்தில் Zingiber என ஆயிற்று. சுக்கு - உலர்ந்தது என்று பொருள்.(http://en.wikipedia.org/wiki/Ginger)மஞ்சளும் - தென்னாசியப் பயிர் தான். மங்கல் நிறமே மஞ்சள்,மங்கலம் என்று ஆகியிருக்க வேண்டும்.தெலுங்கில், "பசுப்பு" என்று பெயர்.பழம்பெரும் நடிகை கண்ணாம்பாவை - "பசுப்பு"லேடி என்று அழைத்தார்கள் என கேள்விப்பட்டுள்ளேன். ( http://en.wikipedia.org/wiki/Turmeric)ஆராய,ஆராய ஆழங்காண முடியவில்லை!
கேட்டால் 85 என்கிறார். எந்த வருடம் பிறந்தீர்கள் என்று என்னைக் கோட்டால், நான் இந்தத் தொடர் ஆண்டைச் சொல்ல முடியாது. தொடர் ஆண்டைச் சொல்லாமல் சமஸ்கிருத ஆண்டைத்தான் சொல்ல வேண்டுமென்றால், என்னைப் பொறுத்த வரையில் நான் ரக்தாட்சி ஆண்டு பிறந்தேன் என்று சொல்ல வேண்டும். ரக்தாட்சி ஆண்டிலிருந்து கணக்கிட்டால், ரக்தாட்சி, குரோதன, அட்சய என்ற இந்த மூன்று ஆண்டுகள் போக, பிரபவ, விபவ, சுக்கில என்று ஆரம்பிக்கிற வடமொழி ஆண்டுகளைக் கணக்கிட்டால் இப்போதுள்ள ஆண்டு 30 ஆவது ஆண்டாக அல்லது 31 வது ஆண்டாக இருக்கும்.