வேள்வி

3 views
Skip to first unread message

Thamizth Thenee

unread,
Jan 14, 2008, 6:46:19 AM1/14/08
to மின்தமிழ்
2. வேள்வி

உள்ளுக்குள்ளே எழுந்த கேள்வித் தீ,
தீயில் எழுந்த வேள்வித் தீ,என்னை உணர,
என் உள்ளே தொடங்கினேன்-ஒரு உட்ப்ரயாணம்,
அதன் ஆரம்பம் ப்ராணாயாமம்!!
உன்னதமான உணர்வின் உள் சுற்றுலா,
உணர்வுப் ப்ரயாணம்,
உணர உணர, உள்ளுக்குள்ளே ப்ரளயம்,

பூகம்பம், எரி மலை, உணர்வு வெள்ளம்,
உடைத்து வெளியேற இயலாத தடுப்புச் சுவர்,
உடைத்து சீறீப் படமெடுத்த பாம்பு ,
தொடங்கியது ப்ரயாணம் பரவசமாய்,

உள்ளுக்குள்ளே மோதி மோதி ,சீறீச் சீறீ,
படமெடுத்து, விஷம் கக்கி,அமுதம் கக்கி,
மாணிக்கம் கக்கி,
சுருண்டு எழுந்து, அமைதியுற்று , பின் மீண்டும்
சீறீ எழுந்து, அழிந்து, மீண்டும் இணைந்து,
முடிவில் ஒரு ப்ரயோஜனம் ,

மூலாதாரம்-ஸ்வாதிஷ்டானம்-மணிபூரகம்-
அனாஹதம்-விசுத்தி-ஆக்ஞா - பிர்ம ரந்திரம்-
அடைந்து, ஸஹஸ்ராரசக்கரம்-சுற்றி ,
மணிப்ரவாளமாய் மூலாதாரம் எழுந்தும் !!!!!!!!

உள்ளுக்குள்ளே எழுந்த கேள்வித் தீ,
தீயில் எழுந்த வேள்வித் தீ,
என்னைப் புடம் போட்டு எடுத்துப் பார்த்தேன்,
எடுக்க எடுக்க வெறும் சாம்பல்- திரு நீறா ,

எரிந்து போன என்னின் மிச்சமா?
என் உயிரின் எச்சமா?
எரிதழல் அணைந்தால் சாம்பல்தான் மிஞ்சுமா?
மீண்டும் உயிர்த்து என்னில் இணையுமா?
எரிந்ததும் நானே- எரித்ததும் நானே-
சாம்பலாய் உதிர்ந்ததும் நானே எனில்,
உணர்ந்தது என்ன? சூனியமா-
ஞான சூனியமா?- மீண்டும் கேள்வித் தீ,
வேள்வித் தீயில் புடம் போட்டு எடுத்த,
கேள்வித் தீ"! உள்ளுக்குள்ளே எழுந்த
கேள்வித் தீ, -தீயில் எழுந்த வேள்வித் தீ,

அன்புடன்
தமிழ்த்தேனீ
Reply all
Reply to author
Forward
0 new messages