அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ்

23 views
Skip to first unread message

Narayanan Kannan

unread,
Sep 13, 2008, 1:26:14 AM9/13/08
to மின்தமிழ்
அன்பர்களே:

சிஃபி டாட் காம் ஒரு அழகிய அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழைக் கொண்டு வந்துள்ளது.

http://tamil.sify.com/special/anna_centenary

நம்பவே முடியவில்லை, அண்ணா பிறந்து 100 ஆண்டுகள் ஓடிவிட்டன என்று.
நேற்றுப் போல் இருக்கிறது, திருப்புனம் கழுவேற்றும் பொட்டலில் அண்ணா
பேசியது. அப்போது பள்ளி மாணவன் நான். எங்கோ ஓரத்தில் நின்று
கேட்டுக்கொண்டிருந்தேன். பள்ளி முடிப்பதற்குள் அண்ணாவிற்கு இரங்கற்பா
பாடிவிட்டார் கலைஞர்! வெங்கட் சாமிநாதன் சொல்வது போல், அரசியல் கருத்து
வேறுபாடுகள், சமூக அணுகுமுறைகளில் அவருடன் முரண்பாடுகள் இருந்தாலும்
அண்ணாவின் தமிழால் ஈர்க்கப்பட்ட ஒரு தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.
அப்போது தோன்றிய மாணவர் அலை, நிச்சயமாக "தமிழ் அலை". அதில் எந்தச்
சந்தேகமும் இல்லை.

இவ்விதழின் அரிய, சிறப்பு சிஃபி வழங்கும் அண்ணாவின் பேச்சுக்
கிட்டங்கியாகும். பல மணிநேர பேச்சுக்கள் கேட்பதற்கு முதன்முறையாகக்
கிடைத்திருக்கிறது. இதற்கு அதன் பொறுப்பாசிரியர் அண்ணாகண்ணன் அவர்களைப்
பாராட்ட வேண்டும். இவை என்றும் நிரந்தரமாகக் கிடைக்கும் படி அவர் ஒரு
சேகரத்தில் இடவேண்டும். தமிழ் மரபு அறக்கட்டளையின் இட உதவி தேவையென்றால்
வழங்கத்தயாராக உள்ளோம்.

அண்ணாவின் ஆங்கிலப்பேச்சுக்கள் மிகச் சிறப்பாக உள்ளன. அண்ணா
ஆங்கிலக்கல்விக்கு தரும் முக்கியத்துவம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது:

"வெளிநாட்டுப் பயணத்திற்குப் பிறகு, முத்தமிழ் மன்றம் நடத்திய வரவேற்பு
விழாவில் 4.06.1968" (இந்த ஒலிநாடா கேட்கவும்).

அதில் அவர் மிகத்தெளிவாகச் சொல்கிறார் தரமான ஆங்கிலப்புலமை தமிழ் மண்ணில்
வளர்த்தெடுக்கப்பட வேண்டுமென்று. வெளிநாட்டில் உள்ள பல நண்பர்கள்
சொல்லுவார்கள், "இந்தியா ஆங்கிலம் அறிந்த நாடு. ஆங்கிலம் பேசும் நாடல்ல"
என்று. தமிழர்களுக்கு தரமான ஆங்கிலப் பேச்சுக்கல்வி தரப்பட வேண்டும். ஒரு
வட இந்தியனை விடத் தமிழனின் ஆங்கிலப்பேச்சு தேவலை என்றாலும்,
நிறையத்தவறுகளை நான் காண்கிறேன். ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளுக்குப்
போகும் போது தமிழர்கள் ஒரு crash course in conversational English
எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி இல்லாமல் தமிழகக் கல்வியில்
ஆங்கிலம் சிறப்பாகக் கற்பிக்கப்பட வேண்டுமென்று அண்ணா துணைவேந்தர்களிடம்
கேட்டுக் கொண்டதாக இப்பேச்சில் சொல்வது அவரது தொலை நோக்கைக் காட்டுகிறது.

சிஃபி டாட் காமிற்கு மின் தமிழின் வாழ்த்துக்கள்.

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Sep 13, 2008, 3:18:34 AM9/13/08
to minT...@googlegroups.com
திரு அண்ணா கண்ணன் அவர்களின், அண்ணா நூற்றாண்டு சிறப்பிதழ்
மிக அருமை தொலை நோக்குப் பார்வை கொண்டவர் அண்ணாகண்ணன் அவர்கள்,
அறிஞர் அண்ணாதுரை அவர்களின் தமிழ்ப் பேச்சுக்களும்,ஆங்கிலப் பேச்சுக்களும் நானும் கேட்டிருக்கிறேன்
 
any word can not end in because,,, because    because      is a  conjection
 
என்னும் அவருடைய புகழ்வாய்ந்த சொற்றொடர் நினைவுக்கு வருகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2008 செப்டம்பர் 13 10:56 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:

Kannan Natarajan

unread,
Sep 13, 2008, 4:23:50 AM9/13/08
to minT...@googlegroups.com
"அண்ணாத்துரை எண்ணாத்துறை இல்லை."
 
 
>வட இந்தியனை விடத் தமிழனின் ஆங்கிலப்பேச்சு தேவலை என்றாலும்,
>நிறையத்தவறுகளை நான் காண்கிறேன். ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளுக்குப்
>போகும் போது தமிழர்கள் ஒரு crash course in conversational English
>எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்படி இல்லாமல் தமிழகக் கல்வியில்
>ஆங்கிலம் சிறப்பாகக் கற்பிக்கப்பட வேண்டுமென்று அண்ணா துணைவேந்தர்களிடம்
>கேட்டுக் கொண்டதாக இப்பேச்சில் சொல்வது அவரது தொலை நோக்கைக் காட்டுகிறது.
 
அண்மையில் தினமணியின் தலையங்க கட்டுரையில் (சொல்லத் தெரியாமலே) முனைவர்.நா.கண்ணன் கூறிய கருத்தை வலியுறுத்தி, தமிழக கல்வித்துறைக்கு தினமணி வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது. அக்கட்டுரையின் பொருட்சுருக்கம்.
 
இன்றைய தமிழக பட்டதாரி இளைஞர்களிடம் ஆங்கிலம் அல்லது தமிழில் 300 சொற்களில் எதைப் பற்றியாகிலும் எழுதும்படி சொன்னால், அவர்களால் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இல்லாமல் எழுதுவது இயலாத ஒன்று. இதற்குக் காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல. அதுதான் காரணம் என்றால், ஆங்கிலத்தையாவது தவறு இல்லாமல் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டுமே! மொழியறிவை வளர்த்துக்கொண்டு பேசவும், கருத்தை வெளிப்படுத்தவும் தனியாக எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற அவல நிலை இன்றைய பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே மொழிப்பாடம்தான் இப்போதும் உள்ளது. பெரிய மாற்றமில்லை. ஆனால் இன்றைய இளைஞனிடம் மட்டும் மொழியறிவு மறைந்தது ஏன் என்ற கேள்விக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவதாக, ஒரு குழந்தை வீட்டிலும் தெருவிளையாட்டிலும் பயன்படும் தமிழ் மொழியை இயல்பாகக் கையாளும் திறன் பெறுவதற்கு முன்பே இன்னொரு மொழியைத் திணிக்கிறோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலம் என்பது அரசுப் பள்ளிகளில் 3ம் வகுப்பில்தான் தொடங்கியது. அதாவது, எல்கேஜி, யுகேஜி பிரபலமாகாத அந்த நாளில், 8 வயதில்தான் ஆங்கில அரிச்சுவடியை மாணவர் படிக்கத் தொடங்குவார். அந்த 8 வயது குழந்தை தமிழில் சரளமாகப் பேசவும், வீட்டில் உள்ள தாத்தா,பாட்டிகளின் பேச்சுக்குப் புத்திசாலித்தனமாகப் பதில் அளிக்கவும், கேட்ட கதையை மீட்டுரைப்பதிலும் திறம்பெற்றிருக்கும். ஒரு மொழியின் இலாவகம் மனதிற்குப் பிடிபட்ட வயதில், அது இந்தி என்றாலும், ஆங்கிலம் என்றாலும் உள்வாங்குவது எளிதாக இருந்தது.

இரண்டாவதாக, இப்போது பெரும்பாலான ஆசிரியர்கள் ஆங்கிலத்தைத் தமிழில் சொல்லி பாடம் நடத்துவதால், மாணவர்கள் மனதுக்குள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்யும் வழக்கம் ஏற்பட்டு, அதுவே இரு மொழிக்கும் பெரும் மனத்தடையாக ஆகிவிடுகிறது. ஆங்கில மொழிப்புலமை உள்ளவர்கள் அதே மொழியில் பேசி, குழந்தைகளைப் பேசவைத்து பாடம் நடத்தும்போது மனம், ஒரு மொழிபெயர்ப்பு இயந்திரமாகச் செயல்படாமல், ஒரு கண்ணாடியைப்போல பிரதிபலிக்கும் கருவியாக மாறுகிறது. வேலைக்காக வேறு மாநிலம் செல்லும் படிப்பறியா இளைஞர்கள் அம்மாநில மொழியில் பேசும் திறன் பெறும் முறையும் இதுதான்.

இந்த இரு காரணங்களுமே நியாயமான காரணங்கள்தான். இதை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் தமிழக கல்வித் துறை ஈடுபட வேண்டும்.

நன்றி: தினமணி.

அவரது நூற்றாண்டிலாவது அன்னாரின் தொலை நோக்கு அவரின் ஆங்கில கூற்று படி, "Determination ever, Deviation never," என எழுச்சி பெற்று பயன் விளையட்டும்.

"நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்! இனி

 நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்." - அறிஞர் அண்ணா

தமிழன்பகலா,

கண்ணன் நடராசன்

பி.கு: அண்ணாவின் ஒரு புனைபெயர் - முக்கண்ணன். மற்ற புனைபெயர்கள் இருந்தனவா.தெரிந்தவர்கள் சொன்னால் நலம்.

Narayanan Kannan

unread,
Sep 13, 2008, 4:53:31 AM9/13/08
to minT...@googlegroups.com
மீண்டும் நன்றி, கண்ணன்!

தாய்மொழிக் கல்வி என்பதுதான் உண்மையான நர்சரி. நாத்து வளர்ந்த பின் தான்
நிலத்தில் நடவேண்டும். நான் பள்ளியிறுதிவரை தமிழ்க்கல்வி கற்றவன். மழலை
முதல் தாய் மொழி தமிழில் பேசியவன். அது மிக அவசியம். எங்களுக்கு லட்டு,
மிக்சர் கொடுத்து ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் போது ஆரம்பப்பள்ளி
முடித்துவிட்டோம். ஆங்கிலப்புலமையில் இப்போது ஏதும் குறையில்லை.

இதை உணர்ந்துதான் டென்மார்க், நார்வே போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த
தமிழர்களுக்கு தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை முன்னிருத்தி தமிழ் கல்வி
வாய்ப்புகளை உருவாக்குகின்றனர். எக்குழந்தை தமிழில் நன்றாகப் பேசுகிறதோ
அது டேனிஷ், நார்வீஜியன் சுலபமாகப் பேசும். எப்போது சுவிஸ் போனாலும்
ஈழத்துச் சிறார்கள் சரளமாகத் தமிழ் பேசும் போது காது குளிரும்.

இன்றைய பட்டதாரிகளின் நிலைக்குக் காரணம் ஆங்கிலத்துடன் ஒரு வரட்டு கௌரவம்
இணைந்திருப்பதுதான். சும்மா மற்றத் தமிழரை impress பண்ண ஏதோ அரையும்
குறையுமான ஆங்கிலம் பேசினால் போதும் அல்லது இளம் பெண்களிடம் மதிப்பு
வாங்க கொஞ்சம் ஆங்கிலம் பேசினால் போதுமென்று நம்புகிறான். ஆங்கில
மொழியின் மீது உண்மையான மதிப்போ, பெருமிதமோ இல்லை.

அண்ணா அந்தப் பேச்சில் அவருக்கு முன்னுள்ள காலத்தை மேற்கோள் காட்டி
அலுத்துக் கொள்கிறார் எனில் ஆங்கிலக் கல்வி உண்மையில் பரிதாபமான நிலையில்
உள்ளது என்றே பொருள்.

க.>

2008/9/13 Kannan Natarajan <thar...@gmail.com>:

Annakannan

unread,
Sep 13, 2008, 7:30:02 AM9/13/08
to மின்தமிழ்
அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழ், உங்கள் கவனத்தை ஈர்த்திருப்பதில்
மகிழ்ச்சி.

குறுகிய காலத் திட்டமிடலில் இந்தச் சிறப்பிதழ் உருவானது. இதற்கு மலர்
மன்னன், அண்ணா பேரவை, http://arignaranna.info தளத்தை நிர்வகித்து வரும்
செம்பியன் ஆகியோரின் ஒத்துழைப்பினை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

இந்தப் பக்கத்தில் இடம் பெற்றுள்ள அண்ணா உரைகளின் ஒலி வடிவம், வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்தது. அண்ணாவின் பேச்சைக் கேட்க முடியாத கடந்த
மூன்று தலைமுறைகளுக்கும் இனி வரும் தலைமுறைகளுக்கும் இவை பெரும் கருவூலம்
என்பதில் ஐயமில்லை.

http://tamil.sify.com/special/anna_centenary

- இந்தப் பக்கத்தில் இவை நிரந்தரமாக இருக்கும்.

இந்தச் சிறப்பிதழில் இடம் பெற்றுள்ள வீ.சு.இராமலிங்கத்தின் மகா அண்ணா
(ANNA THE GREAT) என்ற கட்டுரையில் அண்ணாவின் தனி ஆளுமையை முழுமையாகக்
காண முடியும்.

அண்ணாவுடன் பழகிய பாரதி மணி அவர்களுடன் அண்மையில் பேசிக்கொண்டிருக்கும்
போது, அண்ணா மட்டும் இன்னும் 20 ஆண்டுகளுக்கு உயிருடன் இருந்திருந்தால்
தமிழ்நாட்டின் Topography ஏ மாறியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

அதே போன்று அண்ணாவுடன் பழகிய மலர் மன்னன், தாம் தேர்தலில் வெற்றி பெற்ற
பிறகும் எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து அவர்களின் ஆதரவைக் கோரிய
அண்ணாவின் பெருந்தன்மையை உணர்ச்சிகரமாகப் பகிர்ந்துகொண்டார்.

தான் இருந்த போதே தனக்கு அடுத்த நிலையில் உள்ளவரைத் தலைவராக்கிய
பக்குவம், எளிமை, நேர்மை, எதிரணியினரையும் மதிக்கும் பண்பு, தன்
குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் கொடாமை..... என அவர் காட்டிய வழிகளை
அவரின் தம்பிகள் வசதியாக மறந்து விட்டார்கள்.

அண்ணா வளர்த்தெடுத்த தனிப் பண்புகள், இக்காலத்தில் மறைந்தொழிந்து விட்டதை
எண்ணித் துயரம் அடைகிறோம். இன்று அவரின் தொடர்ச்சியாக அரசியல் அரங்கில்
உள்ளவர்கள் ஓர் ஓரத்தில் அவரின் பெயரை மட்டுமே
வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவரின் கொள்கைகள் காலி பெருங்காய டப்பா
ஆகிவிட்டது தமிழகத்திற்குப் பேரிழப்பு.

அண்ணாவை எழுத்திலும் ஒலியிலும் ஒளியிலும் காணும் நம்மவர்கள் தாக்கம்
பெற்று எதிர்கால மாற்றத்திற்கு வலிமையாகப் பங்களிப்பார்கள் என்ற
உள்ளார்ந்த கனவும் இந்தச் சிறப்பிதழுக்குப் பின்னே உண்டு.



On Sep 13, 10:26 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> அன்பர்களே:
>
> சிஃபி டாட் காம் ஒரு அழகிய அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழைக் கொண்டு வந்துள்ளது.
>
> http://tamil.sify.com/special/anna_centenary

> இவ்விதழின் அரிய, சிறப்பு சிஃபி வழங்கும் அண்ணாவின் பேச்சுக்
> கிட்டங்கியாகும். பல மணிநேர பேச்சுக்கள் கேட்பதற்கு முதன்முறையாகக்
> கிடைத்திருக்கிறது. இதற்கு அதன் பொறுப்பாசிரியர் அண்ணாகண்ணன் அவர்களைப்
> பாராட்ட வேண்டும். இவை என்றும் நிரந்தரமாகக் கிடைக்கும் படி அவர் ஒரு
> சேகரத்தில் இடவேண்டும். தமிழ் மரபு அறக்கட்டளையின் இட உதவி தேவையென்றால்
> வழங்கத்தயாராக உள்ளோம்.
>
> அண்ணாவின் ஆங்கிலப்பேச்சுக்கள் மிகச் சிறப்பாக உள்ளன. அண்ணா
> ஆங்கிலக்கல்விக்கு தரும் முக்கியத்துவம் என்னை ஆச்சர்யப்பட வைத்தது:
>

Subashini Tremmel

unread,
Sep 14, 2008, 7:07:42 AM9/14/08
to minT...@googlegroups.com
அன்புள்ள திரு.அண்ணா கண்ணன்,
 
மிகச் சிறப்பான ஒரு தொகுப்பு இது. அண்ணாவின் உரையை  இதுவரை கேட்டிராத பலருக்கு இது நிச்சயம் பயன்தரும் சிறந்த படைப்பு.
 
வாழ்த்துக்கள்.
 
அன்புடன்
சுபா

2008/9/13 Annakannan <annak...@gmail.com>

Kannan Natarajan

unread,
Sep 15, 2008, 6:07:17 PM9/15/08
to minT...@googlegroups.com
இலட்சக்கணக்கான இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்த தலைவர் அண்ணா என்று குஜராத் மாநில முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கோகுலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

சென்னையில் திங்கள்கிழமை(15/9/2008) நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக "அண்ணா பொதுவாழ்வியல் மையம்" நடத்திய அண்ணா நூற்றாண்டு தொடக்க விழாவில் அவர் பேசியது:

இலட்சக்கணக்கான இளைஞர்களை தன்பால் ஈர்த்த தலைவர் அண்ணா. சென்னையில் அவர் எங்கு பேசினாலும் ஓடோடிச் சென்று கேட்ட மாணவர்களில் நானும் ஒருவன். அதில் எனக்கு எப்போதும் பெருமிதம் உண்டு.

"மறப்போம் மன்னிப்போம்" என்ற கொள்கையுடையவர் அண்ணா. இன்று இந்த குணம் பலருக்கும் இல்லை. அதனால்தான் பல பிரச்னைகள் உருவாகின்றன.

அண்ணா யாரையும் வெறுக்கவும் இல்லை. புறக்கணிக்கவும் இல்லை. அவர் யாரையும் இழக்கவும் விரும்பியதில்லை. அதனால் அவரால் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்ற பேச முடிந்தது.

உயர்ந்த இடத்தில் இருந்த தமிழை அதன் தரத்தை தாழ்த்தாமல் அடித்தட்டு மக்களுக்கு கொண்டுச் சேர்த்தவர் அவர். அண்ணா தமிழ் உணர்வை ஊட்டாமல் இருந்திருந்தால் இன்று தமிழ் செம்மொழியாகி இருக்காது.

பகுத்தறிவு என்றால் பழமையை வெறுப்பது அல்ல. வேண்டாத கருத்துகளை ஒதுக்கி நல்லவற்றை ஏற்றுக் கொள்பவன்தான் பகுத்தறிவாளன்.

கடவுள் பற்றி அண்ணா குறிப்பிடும்போது "நான் தேங்காயும் உடைப்பதில்லை. பிள்ளையாரையும் உடைப்பதில்லை" என்றார்.

தமிழர்களுக்கு இன உணர்வையும், மொழிப் பற்றையும் உண்டாக்கிய அண்ணாவை நாம் தெய்வத்துள் வைத்து போற்ற வேண்டும் என்றார் கோகுலகிருஷ்ணன்.

 
விழாவில் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் குழுவினரின் "அண்ணா ஒரு காவியம்" என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
சென்னை பல்கலைக்கழகம் அண்ணா வாழ்வியல் மையம் சார்பில் திங்கள்கிழமை(15/9/2008) நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகிறார் குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன். உடன் (இடமிருந்து) வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.இராமசந்திரன், மையத்தின் தலைவர் ரா.தாண்டவன், தாகூர் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் தி.ராஜாகோபாலன்.
 
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன், அண்ணா பொதுவாழ்வியல் மையத் தலைவர் இரா.தாண்டவன், பேராசிரியர் கோ. கிருஷ்ணமூர்த்தி, தி. இராஜகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
நன்றி: தினமணி

Reply all
Reply to author
Forward
0 new messages