What is Twitter in Tamil?

14 views
Skip to first unread message

N. Kannan

unread,
Jun 22, 2009, 10:27:44 PM6/22/09
to minT...@googlegroups.com
Twitter (http://twitter.com/)

என்பது மிகப்பிரபலமாகிவரும் ஒரு இணையப்போக்கு.
இதுவொரு குறுஞ்சேதியோடை. சின்னச் சின்ன தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் ஊடகம்.
சும்மா உட்கார்ந்து கதையளக்க முடியாது. 140 அட்சரம். அவ்வளவுதான்.
வள்ளுவருக்குப் பிடிக்கும்.
இதை 'நான் என்ன செய்கிறேன்?' எனும் கேள்விக்கு விடையாக அறிமுகப்படுத்தினாலும்,
இது சும்மா, 'நான் மதிய உணவிற்குப் போகிறேன்' 'குட்நைட்,
தூங்கப்போகிறேன்' என்று சொல்ல வந்ததல்ல என்று தோன்றுகிறது.
ஈரான் தேர்தல் விவரம் சுடச்சுட இவ்வோடையில் பரிமாறியிருக்கிறது.
இதை குறுவலைப்பூ என்று கருதுவோருமுண்டு. நான் அந்தப் பள்ளி.
என் நோக்கில் டிவிட்டர் என்பது சிறிய வலைப்பதிவு.
தினமொரு ஆக்கம் செய்ய உதவும் பொறி
குறிப்பிட்ட சின்ன வட்டத்திற்குள் உங்கள் ஆக்கத்திறனைக் காட்ட உதவும் பொறி.
இதில் நான் தினம் எழுதுவதை என் வலைப்பதிவில் கண்ணுறலாம்
(http://emadal.blogspot.com/)
ஆனால், உள்வட்டத்திற்குள் வர வேண்டுமெனில் டிவிட்டரில் பதிவு செய்ய வேண்டும்.

சரி இதைத் தமிழில் எப்படி அழைப்பது?

குறும்பூ (குட்டி வலைப்பூ)
சின்னச்சிட்டி (சிட்டி என்றால் கடிதம்)
ஹைப்பூ (ஹைக்கூ + வலைப்பூ)

சின்னதாக அழகாக டிவிட்டர் என்பதுடன் ஒத்திசைவாக (rhym with twitter) ஒரு
சொல் வேண்டும்!

க.>

Kannan Natarajan

unread,
Jun 22, 2009, 11:28:02 PM6/22/09
to minT...@googlegroups.com
> சின்னதாக அழகாக டிவிட்டர் என்பதுடன் ஒத்திசைவாக
> (rhym with twitter) ஒரு சொல் வேண்டும்!
 
Sorry for the English usage
 
OrraaLar
Orumaiyar
 
2 worded
 
Oru Sollar

தாரகை

unread,
Jun 22, 2009, 11:39:11 PM6/22/09
to மின்தமிழ்
Chettar - one worded - rhyming with twitter

Chettar - Chikkanam

Chettar - Chettiar

Hari Krishnan

unread,
Jun 22, 2009, 11:40:32 PM6/22/09
to minT...@googlegroups.com


2009/6/23 N. Kannan <navan...@gmail.com>

சரி இதைத் தமிழில் எப்படி அழைப்பது?

பறவையின் ஒலியைத்தானே ட்விட் என்கிறோம்?  ட்விட்டர் என்பது கீசுகீசென்று பேசும் பேச்சொலியைத்தானே குறிக்கிறது?  அல்லது அப்படி ஒலி எழுப்பும் பறவையைத்தானே குறிக்கிறது?  

கீச்சன். கிறீச்சன். க்றீச்சன்.  கரிச்சான். 

விச்சுளி என்பதுகூட ஒருவகையில் பொருத்தம்தான்.

--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Jun 22, 2009, 11:43:40 PM6/22/09
to minT...@googlegroups.com


2009/6/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

விச்சுளி என்பதுகூட ஒருவகையில் பொருத்தம்தான்.

என்றால் என்ன என்று யாராவது கேட்டுவைப்பதற்குள், வின்ஸ்லோ அகராதியிலிருந்து:

 விச்சுளி, (p. 939) [ viccuḷi, ] s. A swift-winged bird, Alcedo, அதிவேகப்பறவை. 2. [also விச்சுளியன்.] An ingenious, quick, clever person, commonly a mere youth who takes a short course and gets before others

N. Ganesan

unread,
Jun 23, 2009, 12:12:17 AM6/23/09
to மின்தமிழ்

On Jun 22, 10:40 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2009/6/23 N. Kannan <navannak...@gmail.com>


>
> > சரி இதைத் தமிழில் எப்படி அழைப்பது?
>
> பறவையின் ஒலியைத்தானே ட்விட் என்கிறோம்?  ட்விட்டர் என்பது கீசுகீசென்று பேசும்
> பேச்சொலியைத்தானே குறிக்கிறது?  அல்லது அப்படி ஒலி எழுப்பும் பறவையைத்தானே
> குறிக்கிறது?
> கீச்சன். கிறீச்சன். க்றீச்சன்.  கரிச்சான்.
>

பூஞ்சிட்டு = சிறுகுருவி, தேன்சிட்டு = humming bird (in America).
சிட்டு = சிறு பறவை. சிட்டுக்குருவி, ...

சிட்டி/சிட்டுரை = சிறுமடல்/சிறுகடிதம்.
சிட்டுக்குருவி அனுப்பும் சிட்டுமடல் “சிட்டி”.

twitter அனுப்பும் tweet தமிழில் ”சிட்டி” என்றாலே போதுமே.
twitter = சிட்டு மடல் ”சிட்டி” அனுப்புபவர் “சிட்டர்” .

நா. கணேசன்

சிட்டாய சிட்டற்கே (திருவாச. 10, 7).

பெரியமடலாக வலைப்பதிவில் தீட்டுவதைச்
சீட்டுரை/சீட்டுக்கவி எனச் சொல்லலாமா?

amachu

unread,
Jun 23, 2009, 12:16:24 AM6/23/09
to N. Ganesan, மின்தமிழ்
> twitter அனுப்பும் tweet தமிழில் ”சிட்டி” என்றாலே போதுமே.
> twitter = சிட்டு மடல் ”சிட்டி” அனுப்புபவர் “சிட்டர்” .

லோலலாயீ ;-)

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Jun 23, 2009, 12:24:18 AM6/23/09
to மின்தமிழ்

பிடித்திருப்பின் கணிஞர்களிடையே பிரபலப்படுத்துங்கள்!

twitter (one who sends tweet messages) = சிட்டு (அ) சிட்டர்
twitter "tweet" message = சிட்டி (அ) சிட்டுரை

-----------------

பூஞ்சிட்டு = சிறுகுருவி, தேன்சிட்டு = humming bird (in America).
சிட்டு = சிறு பறவை. சிட்டுக்குருவி, ...

சிட்டி/சிட்டுரை = சிறுமடல்/சிறுகடிதம்.

சிட்டுக்குருவி அனுப்பும் சிட்டுமடல் “சிட்டி”.

twitter அனுப்பும் tweet தமிழில் ”சிட்டி” என்றாலே போதுமே.
twitter = சிட்டு மடல் ”சிட்டி” அனுப்புபவர் “சிட்டர்” .

அன்புடன்,

N. Kannan

unread,
Jun 23, 2009, 12:26:38 AM6/23/09
to minT...@googlegroups.com
சரி, சிட்டி என்றே சொல்லலாம். சிட்டர் என்பது அழகாயுள்ளது.

நம்ம சிட்டியின் மருமான் என்ன சொல்கிறார்? :-)

சிட்டி என்பது இந்தி வார்த்தையென்று யாராவது ஊடுபாயமல் இருக்க வேண்டும்.

எனக்கு சட்டெனத்தோன்றியது இந்த 'சிட்டி'. என் வலைப்பதிவில்
'மின்மினிசிட்டி' என்றேன் (http://emadal.blogspot.com/). மின்சிட்டி
எனும் போது மின்னஞ்சல் என்பது பொருள். மினி என்ற ஆங்கிலப்பொருளில்
சின்னக்கடுதாசி என்று பொருள்.

நம்ம டாக்டர் சொல்கிற 'செட்டி' எனும் சொல்லும் சுவாரசியமாக உள்ளது. நான்
நுணுக்கி, நுணுக்கி எழுதுவதைப் பார்த்துவிட்டு என் கல்லூரிப் பேராசியர்
சரியான 'செட்டி' என்று திட்டுவார். ஆனால், அது ஒரு சமூகப்பெயராகிவிட்டதே!

க.>

2009/6/23 N. Ganesan <naa.g...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Jun 23, 2009, 4:48:10 AM6/23/09
to minT...@googlegroups.com
பழங்காலக் கழைக்கூத்தாடிகளிடையே விச்சுளி வித்தை என்ற ஒன்று பிரபலமாய் இருந்தது எனச் சொல்லுவார்கள். இதை ஒரு நாளைக்கு ஒரு முறையே செய்யவேண்டும், எனவும் மறுமுறை செய்தால் செய்யும் கூத்தாடி உயிர் பிழைப்பது அரிது எனவும் கேள்விப் பட்டிருக்கேன். நன்றி, அரிய சொல்லுக்கு,

2009/6/23 Hari Krishnan <hari.har...@gmail.com>

N. Kannan

unread,
Jun 23, 2009, 5:22:41 AM6/23/09
to minT...@googlegroups.com
அன்பின் நா.க
 

டிவிட்டர் ஒரு தனி நிறுவனத்தின் பெயர். வலைபப்திவுகளை நாம் "ப்ளாக்கர்" என்று சொல்ல முடியாதல்லவா?

டிவிட்டர் தொடக்கம் லகோனிக்கா வரை வழங்கும் இச்சேவையின் பொதுப்பெயர் microblogging தான். எனவே குறும்பதிவு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்து

என்று மயூரன் என் பதிவில் சொல்லியிருக்கிறார். என்ன செய்யலாம்? எனக்கென்னவோ "சிட்டி" "சிட்டர்" ரொம்பப் பிடித்துப் போய்விட்டது ;-)

குறும்பதிவு என்றால் "குறும்பூ"  அல்லது "குறட்பூ" என்பது புழக்கத்திற்கு எளிது.

க.>

 



2009/6/23 N. Ganesan <naa.g...@gmail.com>


amachu

unread,
Jun 23, 2009, 7:08:08 AM6/23/09
to minT...@googlegroups.com
On Tue, 2009-06-23 at 18:22 +0900, N. Kannan wrote:
>
> அன்பின் நா.க டிவிட்டர் ஒரு தனி நிறுவனத்தின் பெயர். வலைபப்திவுகளை
> நாம் "ப்ளாக்கர்" என்று சொல்ல முடியாதல்லவா?

டிவிட்டருக்கு நிகரான கட்டற்ற முயற்சி ------> http://identi.ca/

--

ஆமாச்சு

N. Ganesan

unread,
Jun 23, 2009, 9:27:19 AM6/23/09
to மின்தமிழ்

On Jun 23, 4:22 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> அன்பின் நா.க
>
> டிவிட்டர் ஒரு தனி நிறுவனத்தின் பெயர். வலைபப்திவுகளை நாம் "ப்ளாக்கர்" என்று
> சொல்ல முடியாதல்லவா?
>
> டிவிட்டர் தொடக்கம் லகோனிக்கா வரை வழங்கும் இச்சேவையின் பொதுப்பெயர்
> microblogging தான். எனவே குறும்பதிவு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்து
>

மைக்ரோ = நுண்- என்று மொழிபயர்ப்பது வாடிக்கை.
மைக்ரோ-ப்லாக்கிங் = நுண்பதிவிடல்.

எழுத்தாளர் (“சிட்டி”)யில் இருந்து பாடகருக்கு வருவோம் :)
மைக்ரோப்லாக் = நுண்ணி/உண்ணி. (ஈரம் < நீர்-. அதுபோல் உண்ணி < நுண்ணி).

நா. கணேசன்


> என்று மயூரன் என் பதிவில் சொல்லியிருக்கிறார். என்ன செய்யலாம்? எனக்கென்னவோ
> "சிட்டி" "சிட்டர்" ரொம்பப் பிடித்துப் போய்விட்டது ;-)
>
> குறும்பதிவு என்றால் "குறும்பூ"  அல்லது "குறட்பூ" என்பது புழக்கத்திற்கு
> எளிது.
>
> க.>
>

> 2009/6/23 N. Ganesan <naa.gane...@gmail.com>

N. Ganesan

unread,
Jun 23, 2009, 9:47:52 AM6/23/09
to மின்தமிழ்

On Jun 23, 4:22 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> அன்பின் நா.க

> டிவிட்டர் ஒரு தனி நிறுவனத்தின் பெயர். வலைபப்திவுகளை நாம் "ப்ளாக்கர்" என்று
> சொல்ல முடியாதல்லவா?

> டிவிட்டர் தொடக்கம் லகோனிக்கா வரை வழங்கும் இச்சேவையின் பொதுப்பெயர்
> microblogging தான். எனவே குறும்பதிவு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்து

மைக்ரோ = நுண்- என்று மொழிபயர்ப்பது வாடிக்கை.
மைக்ரோ-ப்லாக்கிங் = நுண்பதிவிடல்.

எழுத்தாளர் (“சிட்டி”)யில் இருந்து பாடகருக்கு வருவோம் :)

மைக்ரோப்லாக் நுண்மடல் = நுண்ணி/உண்ணி. (ஈரம் < நீர்-. அதுபோல் உண்ணி <
நுண்ணி).

நுணாக் காய் = சிறிய காய்வகையில் ஒன்று. இலந்தை வகை.
அப்பெயர் பெற்றது = திரு-நுணா - திரு-நணா. பவானி நதி காவிரியை
வவ்வும் வவ்வானியின் ஊர்ப்பெயர்.

மைக்ரோப்லாக் = நுண்பதிவு.
மைக்ரோபிலாக் நுண்மடல் = நுணா/நுணல்/உண்ணி என்றும் சுருங்கக் கூறலாம்.

யூனிகோட் நிறுவனம் தமிழில் ஒருங்குறி நிறுவனம் ஆவதுபோல்.
ட்விட்டர் கம்பனிச் சேவையைப் பயனிக்கும் சிட்டுகள்/சிட்டர் அனுப்பும்
நுண்மடல்கள் ”சிட்டிகள்”!

N. Ganesan

unread,
Jun 23, 2009, 9:33:47 AM6/23/09
to மின்தமிழ்

On Jun 23, 4:22 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> அன்பின் நா.க

> டிவிட்டர் ஒரு தனி நிறுவனத்தின் பெயர். வலைபப்திவுகளை நாம் "ப்ளாக்கர்" என்று
> சொல்ல முடியாதல்லவா?

> டிவிட்டர் தொடக்கம் லகோனிக்கா வரை வழங்கும் இச்சேவையின் பொதுப்பெயர்
> microblogging தான். எனவே குறும்பதிவு என்பதே பொருத்தம் என்பது எனது கருத்து

மைக்ரோ = நுண்- என்று மொழிபயர்ப்பது வாடிக்கை.
மைக்ரோ-ப்லாக்கிங் = நுண்பதிவிடல்.

எழுத்தாளர் (“சிட்டி”)யில் இருந்து பாடகருக்கு வருவோம் :)

நுண்மடல் (மைக்ரோப்லாக் மடல்) = நுண்ணி/உண்ணி. (ஈரம் < நீர்-. அதுபோல்


உண்ணி < நுண்ணி).

சிறிதாக இருக்கும் காய் = நுணாக் காய். ஒருவகை இலந்தைவகை.
நுணா என்ற ஊர், நணா (திருநணா - பதரிவனம்),
இன்றைய பவானி (வானி நதி காவிரியை வவ்வும் வவ்வானி).

மைக்ரோப்லாக்கிங் மின்மடலை நுணா/நுணல்/உண்ணி என்றும் சொல்லலாம்.

ட்விட்டர் = சிட்டு/சிட்டர் (யூனிகோட் தமிழில் ஒருங்குறி ஆவதுபோல்).
சிட்டர் ருவிற்றரில் அனுப்பும் நுண்மடல் “சிட்டி”.

Kannan Natarajan

unread,
Jun 23, 2009, 10:49:52 AM6/23/09
to minT...@googlegroups.com
'செட்டி' - ஆனால், அது ஒரு சமூகப்பெயராகிவிட்டதே!
Rather than the usage of Chetti, Chettar - means short
 
I guess,Chettar,Chittar seems to reflect the same meaning for twitter in Thamizh. This discussion reveals the untapped potential for the new word coinages. The contribution of the interested few in this tag instills confidence that the Thamizh language can evolve to the needs of the time & enrich the synonym list.
Reply all
Reply to author
Forward
0 new messages