காதலியுடன் ஓடிய காதலன் கூறியது - நற்றினை 362

75 views
Skip to first unread message

வைரம்

unread,
Sep 30, 2008, 5:31:27 AM9/30/08
to மின்தமிழ்
362. பாலை

வினை அமை பாவையின் இயலி, நுந்தை

மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,

தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி

அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த

கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும்,

நீ விளையாடுக சிறிதே; யானே,

மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை

மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,

அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;

நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே!

உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.

-மதுரை மருதன் இள நாகனார்



You walked stiff as a puppet

as you left your father’s land.

Now, here on the expanse of the meadow

made lovely by the clouds pouring down their cool rain

in the first strom of the the season,

see the scarlet beetles,

pick them up,

play with them a bit.

I will go to the sandly place behind the great-trunked venkai tree
three

whose bark young elephants have rubbed smooth.

If men come to fight me,

I will not be afrais, I will turn them back.

But if your people come,

I will hide,dark one.

Poet : Maturai Marutan Ilannakanar

Translated by George L Hart

An interesting poem from Narrinai, here the Talaivan(hero) elopes with
Talaivi(heroine). Talaivi is unhappy leaving her fathers place but on
insistence of the Talaivan , she elopes with him. The Talaivan says
that if anyone tries to come and fight with him for the reason he has
eloped with Talaivi he would stand and fight with them and chase them
away. He also says he would prefer to hide rather than fight her
relatives who have now become his relatives. For Talaivan the eloping
is equivalent to the marriage, so he considers its a sin to fight off
his own relatives.



கரிய நிறம் கொண்ட என் காதலியே ,

உற்சாகம் சிறிதும் இன்றி ஒரு பொம்மையை போல்

உன் தந்தையின் நிலத்தை விட்டு

நான் கூறிய வார்த்தைக்காக கடந்து வந்தவள் நீ .

முதல் புயலின் காரணமாக மேகம் பொழியும்

குளிர்ச்சியான மழை இந்த பரந்த விரிந்துள்ள

காடுகளுக்கு அழகு சேர்கின்றது ,

இங்கே இருக்கும் முதையை நோக்கி

அவற்றை பிடித்து சிறிது நேரம் விளையாடு….

நான் சிறு யானைகள் உறுஞ்சிய

பருத்த அடியை உடைய வேங்கை மரத்தின்

மணற் பரப்பினையுடைய, அதன்

பெரிய பின்புறத்தில் மறைந்துகொள்கிறேன் …

கள்வர்கள் யாரும் போரிட வந்தால் அஞ்சாமல்

போரிட்டு அவர்களை துரத்தி அடிப்பேன் …..

உன் உறவினர் யாரும் உன்னை தேடி வந்தால்

நான் மரத்தின் பின் பகுதியில்

ஒளிந்துகொள்வேன் !

வைரம்
http://karkanirka.wordpress.com/

வேந்தன் அரசு

unread,
Sep 30, 2008, 8:12:35 AM9/30/08
to minT...@googlegroups.com
"வினை அமை பாவையின் இயலி"
 
சாவிகொடுத்த பொம்மைபோல் நு சொல்லலாமோ?

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

வைரம்

unread,
Sep 30, 2008, 9:05:41 AM9/30/08
to மின்தமிழ்
அக்காலத்தில் சாவி கொடுத்த பொம்மை இருந்திருக்குமா ?....
நான் இயந்திரம் என்று எழுதிவிடலாம் என்று இருந்தேன் ...ஆனால் காலத்துடன்
ஒட்டாமல் இருக்கும் என்று விடு விட்டேன் ....

வைரம்

Narayanan Kannan

unread,
Sep 30, 2008, 9:08:32 AM9/30/08
to minT...@googlegroups.com
2008/9/30 வைரம் <vai...@gmail.com>:

> அக்காலத்தில் சாவி கொடுத்த பொம்மை இருந்திருக்குமா ?....
> நான் இயந்திரம் என்று எழுதிவிடலாம் என்று இருந்தேன் ...ஆனால் காலத்துடன்
> ஒட்டாமல் இருக்கும் என்று விடு விட்டேன் ....
>

என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். அந்தக் காலத்து பொறிகள் பற்றி நம்
ஹரிகி நிறைய முன்பு எழுதியிருக்கிறாரே!

கம்ப இராமாயணம், சீவக சிந்தாமணி.....

கண்ணன்

வைரம்

unread,
Oct 2, 2008, 10:07:15 AM10/2/08
to மின்தமிழ்
என் அறியாமையை நீக்கியதற்கு மிக்க நன்றி ....
'சாவிகொடுத்த பொம்மைபோல்' என்று திருத்திக்கொண்டேன் ...
நன்றி
வைரம்

Hari Krishnan

unread,
Oct 2, 2008, 12:08:14 PM10/2/08
to minT...@googlegroups.com


2008/9/30 Narayanan Kannan <nka...@gmail.com>
அம்மாடியோவ்... நான் எழுதியது எனக்கே மறந்துவிட்டது.  ஏழு வருஷம் ஓடிப் போச்சு அதுக்குள்ள... தோராயமாக அடையாளம் பிடித்துத் தேடி எடுத்திருக்கிறேன், அந்தக் காலத்தில் நானும் கண்ணனும் அடித்த அரட்டையை--அகத்தியர் குழுமத்திலிருந்து.  (இந்த மடல் பரிமாற்றம் நடந்த சில மாதங்களுக்குள் சென்னையில் முதன்முறையாக நானும் கண்ணனும் சந்தித்தது ஏதோ இப்போது நடந்தைப் போல் இருக்கிறது.  கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர் கனவிலுங் கனவாகும் என்று பாரதி பேசுவதைப் போல், life is after all a dream within a dream....)
 
 
விஷயத்துக்கு வரலாம்.  எந்திரப் பாவைகளைப் பற்றிய குறிப்புகள் பழைய இலக்கியங்களில் நிறைய இருக்கின்றன.  Robots என்று இப்போதெல்லாம் குறிக்கப்படும் எந்திரப் பாவைகளைப் போன்ற (அதிகமாகச் சொன்னால் ரெகா அடிக்க வருவார் :D) கிட்டத்தட்ட அவையேதானோ என்று நினைக்க வைக்கும் அளவிலான வருணனைகளை கம்பராமாயணத்தில் பார்க்கலாம்.  மதில் காவலுக்கு வைக்கப்பட்டுள்ள எந்திரப் பாவைகளைப் பற்றிய குறிப்புகள் அவை.  இப்போது நவராத்திரி பூஜையில் அபிராமியும் மீனாட்சியுமே எல்லா நேரத்தையும் பிடுங்கிக் கொண்டுவிடுவதால், மற்றவற்றை அப்புறம் பேசலாம்.  இப்போதைக்குக் கொஞ்சம் பழைய சோறு:
 
--------------------------------------------------------------------------
 
Re: [agathiyar] a question on sIvaga sinthAmaNi


அன்புள்ள சுரேஷ்குமார் மற்றும் நண்பர்களே,
சீவக சிந்தாமணியில் விவரிக்கப்படும் மயிற்பொறிக்கும் ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்திற்கும் மிக
முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. மயிற்பொறி, விசையைத் திருகியவுடன் இருந்த இடத்திலிருந்து அப்படியே -
ஹெலிகாப்டர் போல - மேலெழும்பக் கூடியது. 'இது என்ன பிரமாதம். பறவைகள் பறப்பதைப் பார்த்தான்.
அப்படியே எழுதிவைத்தான். மனிதனின் கற்பளைக்கு ஏது எல்லை. அதனாலே இத்தகைய விமானங்கள் அல்லது அது
பற்றிய அறிவு இருந்தது என்று சொல்லிவிட முடியாது' என்று ஒதுக்கி விடமுடியும்.
சீதையைக் காணாமல் ராம லக்ஷ்மணர்கள் திகைக்கின்றனர். பர்ணசாலையைக் காணவில்லை. அங்கே ஒரு தேரின் தடம்
தென்படுகிறது. 'அண்ணா தேர்த்தடம் தெரிகிறது. வெகுதூரம் செல்வதற்குள் தொடராலாம் வாருங்கள்' என்று லஷ்மணன்
சொல்கிறான். தொடர்ந்து செல்கிறார்கள். ஓர் இடத்தில் திடீரெனத் தேர்த்தடம் மறைகிறது.
மண்ணின்மேல் அவன்தேர் சென்ற சுவடெலாம் மாய்ந்து
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய்உற வெந்த
புண்ணினோடு உறுவேல் என மனம் மிகப் புழுங்கி
எண்ணி நாம் இனிச் செய்வது என் இளவலே என்றான்.
(ஆரணிய காண்டம் - சடாயு உயிர் நீத்த படலம்)
தேர்த்தடம் மறைந்துவிட்டது. தேர் வானிலே சென்றிருக்கிறது என்கிறான் ராமன். விமானம் வானில் ஏறுவதற்கு
முன் மண்ணில் கொஞ்ச தூரம் ஓடியே ஆகவேண்டும் (taxiing before take off) என்ற உண்மை எப்படித்
தெரிந்தது?
நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் என் நண்பனின் தந்தை ஹிந்துவில் உதவியாசிரியராக இருந்தார். புத்தக
விமர்சனப் பகுதி அவர் பொறுப்பில் இருந்தது. 'வைமானிக சாஸ்த்ரா' என்று ஒரு புத்தகம் விமர்சனத்திற்கு
வந்திருந்தது. யாரோ ஒரு ஜெர்மானியர் மைசூர் பல்கலைக்கழகத்தின் உதவியோடு பதிப்பித்த புத்தகம்.
பரத்வாஜர் இயற்றிய நூலை விளக்கத்தோடு பதிப்பித்திருந்தார். விமானம் லேசான உலோகத்தால் ஆக்கப்பட
வேண்டும் என்றும், உலோகத்தை லேசாக ஆக்குவதற்கான Metal treatment பற்றியெல்லாம் பரத்வாஜர்
சொல்லியிருப்பது அந்தப் புத்தகத்தில் இருந்தது. 18-19 வயதில் அத்தனை புரிந்துகொள்ள முடியவில்லை.
இப்போது புத்தகத்தை எழுதியவர் பெயரும் நினைவில்லை. (கண்ணன் போன்றவர்கள் முனைந்தால் கண்டு
பிடித்துவிடலாம்.) தமிழ்நாட்டில் கொங்கண சித்தர் பறக்கும் யந்திரங்களைப் பற்றி நூல் இயற்றியிருப்பதாகச்
சொல்கிறார்கள். விவரங்கள் தெரியவில்லை.
நமக்கெல்லாம் வெள்ளைத் தோல் ஆசாமிகள் சொன்னால்தான் உண்மையாகத் தோன்றும். Erich Van Daniken
எழுதிய Return to the Stars இதைப் பற்றியெல்லாம் குறிப்பு தருகிறது.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன். (முகொ)
 

----- Original Message -----
From: L. Suresh Kumar-LSK
To: Agathiyar YG
Cc: Tamil Ulagam YGroups
Sent: Wednesday, April 04, 2001 7:04 AM
Subject: [agathiyar] a question on sIvaga sinthAmaNi

friends

i kindly request eminent scholars like dr. JB to please give
more info on this.
thanks
suresh
 

[Non-text portions of this message have been removed]

----------------------------------------------------------------------------------------------------
Mail from Na Kannan (note the German remarks in his mail..he was then known as German Kannan)
 

அன்புள்ள ஹரி:
விட்டுப்போனாலும் இம்மாதிரிக் கடிதங்களைச் சேகரித்து வருகிறேன். உங்கள் கடிதங்கள்
சுவையானவை.
Hari Krishnan schrieb:
> அன்புள்ள சுரேஷ்குமார் மற்றும் நண்பர்களே,
>
> சீவக சிந்தாமணியில் விவரிக்கப்படும் மயிற்பொறிக்கும் ராமாயணத்தில் வரும் புஷ்பக விமானத்திற்கும் மிக
முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. மயிற்பொறி, விசையைத் திருகியவுடன் இருந்த இடத்திலிருந்து அப்படியே -
ஹெலிகாப்டர் போல - மேலெழும்பக் கூடியது. 'இது என்ன பிரமாதம். பறவைகள் பறப்பதைப் பார்த்தான்.
அப்படியே எழுதிவைத்தான். மனிதனின் கற்பளைக்கு ஏது எல்லை. அதனாலே இத்தகைய விமானங்கள் அல்லது அது
பற்றிய அறிவு இருந்தது என்று சொல்லிவிட முடியாது' என்று ஒதுக்கி விடமுடியும்.
>
> சீதையைக் காணாமல் ராம லக்ஷ்மணர்கள் திகைக்கின்றனர். பர்ணசாலையைக் காணவில்லை. அங்கே ஒரு தேரின்
தடம் தென்படுகிறது. 'அண்ணா தேர்த்தடம் தெரிகிறது. வெகுதூரம் செல்வதற்குள் தொடராலாம் வாருங்கள்' என்று
லஷ்மணன் சொல்கிறான். தொடர்ந்து செல்கிறார்கள். ஓர் இடத்தில் திடீரெனத் தேர்த்தடம் மறைகிறது.
>
> மண்ணின்மேல் அவன்தேர் சென்ற சுவடெலாம் மாய்ந்து
> விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய்உற வெந்த
> புண்ணினோடு உறுவேல் என மனம் மிகப் புழுங்கி
> எண்ணி நாம் இனிச் செய்வது என் இளவலே என்றான்.
>
> (ஆரணிய காண்டம் - சடாயு உயிர் நீத்த படலம்)
>
> தேர்த்தடம் மறைந்துவிட்டது. தேர் வானிலே சென்றிருக்கிறது என்கிறான் ராமன். விமானம் வானில் ஏறுவதற்கு
முன் மண்ணில் கொஞ்ச தூரம் ஓடியே ஆகவேண்டும் (taxiing before take off) என்ற உண்மை எப்படித்
தெரிந்தது?
>
>
இதிலும் கற்பனை இருக்க இடம் இருக்கிறது. நீர்ப் பறவைகள் கொஞ்சம் தூரம் ஓடிய பின்னேதான்
take off செய்கிறன. கம்பன் இதைவைத்து கற்பனை செய்திருக்கலாம்?!
இப்படிச் சொன்னாலும் இராம.கி சொல்லும் romantism செய்யாமல் இருக்க முடியவில்லை :-)
கோயம்புத்தூர் ஈசா கோயிலுக்கு (வெள்ளியங்கிரி) போகும் வாய்ப்புக் கிடைத்தது. அழகான,
ஆச்சரியமான கோயில். கிரேன் வைத்துக் கட்டிய கோயில். பண்டையக் கோயில்களை யட்சர்கள்
கட்டியதாக வாசுதேவ் சொல்கிறார் (அட, யார் இந்த யட்சர்கள்?). சமீபத்தில் துருக்கி போயிருந்தேன்.
அங்குள்ள கிரேக்க/ரோம கட்டிடக் கலையின் உன்னத வெளிப்பாடாக amphitheatre இருந்தது.
25,000 பேர்கள் நாடகம் பார்க்கும் அரங்கு. 300 பேர் உட்காரும் திரை அரங்கில் காது கிளிய
பேரிரைச்சல் போடுகிறார்கள். பள்ளத்தில் பேசும் பேச்சு மேலே போய் கடைசி வருசை 25,000க்குக்
கேட்கும் படி ஒரு அமைப்பு!! அந்தக் காலத்து தொழில்நுட்பம் உண்மையில் வளர்ச்சி பெற்று
இருந்ததா? மேற்கில் அந்தப் பாரம்பரியம் நவீன அறிவியலாக மலர்ந்திருக்க நம்ம ஆள் ஏன்
கோட்டை விட்டான்??????
 
> நான் படித்துக்கொண்டிருந்த காலத்தில் என் நண்பனின் தந்தை ஹிந்துவில் உதவியாசிரியராக இருந்தார். புத்தக
விமர்சனப் பகுதி அவர் பொறுப்பில் இருந்தது. 'வைமானிக சாஸ்த்ரா' என்று ஒரு புத்தகம் விமர்சனத்திற்கு
வந்திருந்தது. யாரோ ஒரு ஜெர்மானியர் மைசூர் பல்கலைக்கழகத்தின் உதவியோடு பதிப்பித்த புத்தகம்.
பரத்வாஜர் இயற்றிய நூலை விளக்கத்தோடு பதிப்பித்திருந்தார். விமானம் லேசான உலோகத்தால் ஆக்கப்பட
வேண்டும் என்றும், உலோகத்தை லேசாக ஆக்குவதற்கான Metal treatment பற்றியெல்லாம் பரத்வாஜர்
சொல்லியிருப்பது அந்தப் புத்தகத்தில் இருந்தது. 18-19 வயதில் அத்தனை புரிந்துகொள்ள முடியவில்லை.
இப்போது புத்தகத்தை எழுதியவர் பெயரும் நினைவில்லை. (கண்ணன் போன்றவர்கள் முனைந்தால் கண்டு
பிடித்துவிடலாம்.) தமிழ்நாட்டில் கொங்கண சித்தர் பறக்கும் யந்திரங்களைப் பற்றி நூல் இயற்றியிருப்பதாகச்
சொல்கிறார்கள். விவரங்கள் தெரியவில்லை.
>
> நமக்கெல்லாம் வெள்ளைத் தோல் ஆசாமிகள் சொன்னால்தான் உண்மையாகத் தோன்றும். Erich Van Daniken
எழுதிய Return to the Stars இதைப் பற்றியெல்லாம் குறிப்பு தருகிறது.
>
இங்கும் ஒரு Carl sagan, / decend of man போன்ற அற்஢வியல் சார்ந்த விளக்கப் புத்தகங்கள் தேவை.
காஞ்சி மடம் சார்ந்த பெரிய நூலகத்தில் "ச்ருஷ்டி, பிரளய ரகஸ்யம்" என்றொரு சுவடி. இவர்களுக்கு
பல விஷயங்கள் அன்றே தெரிந்துதான் இருக்கிறது. அது பொதுவில் வந்து "இந்திய அறிவியலாக"
இனிமேல்தான் மலர வேண்டும். சேது சமுத்திர அணில் நான். சமுத்திரம் பயமுறுத்துகிறது :-)
கண்ணன்
 
-------------------------------------------------
 
பழைய சோறும் மாவடுவும் முடிஞ்சு போச்சு.
 
 

--
அன்புடன்,
ஹரிகி.

வேந்தன் அரசு

unread,
Oct 2, 2008, 1:08:33 PM10/2/08
to minT...@googlegroups.com
<ஹெலிகாப்டர் போல - மேலெழும்பக் கூடியது
 
உலக்கை மேலும் கீழும் இயங்குவது
 
அதனால் ஹெலிகாப்டர் உலங்கு வானூர்தி எனலாம்
 
வெள்ளை தோலன் பொறியை கண்டு பிடிக்கிறான். நம்மால் அதுக்கு ஒரு தமிழ் சொல்லைக்கூட கண்டு பிடிக்க முடியலே
 
தன்னம்பிக்கை இல்லாத என்புதோல் போர்த்த உடம்பினர் ஆயிட்டோம்
 
அலங்கு = தலையாட்டம் போல் ஆடுவது
உலங்கு = மேலும் கீழும்
கலங்கு = நால் திசையும்
விலங்கு = குறுக்காக் ஓடுவது
நலங்கு  =மேலிருந்து கீழாக வருவது(நலங்கு இடுதல்)
குலுங்கு = எட்டு திசையும்
இலங்கு = கம்முனு இருக்கிறது. ஆடாமல் இருந்தால்தான் அது இலக்கம்

Narayanan Kannan

unread,
Oct 2, 2008, 8:13:18 PM10/2/08
to minT...@googlegroups.com
மிக்க நன்றி ஹரி:

மிகவும் மகிழ்வாக உள்ளது. அப்போது எல்லோருக்கும் ஒரே திண்ணைதான்
இருந்தது. இப்போது "செயற்படும் துறைகள் பல பலவாகி" நாம்
பிரிந்துவிட்டோம். அக்கால (7 ஆண்டுகளுக்கு முன்தான் சொல்கிறேன்) அடர்த்தி
இப்போது ஆச்சர்யப்படுத்துகிறது. வெறும் 7 ஆண்டுகளுக்குள்ளேயே எனில்
இராமாயண காலம் எப்போது?......

நீங்கள் பாரதியைச் சுட்டியவுடன் இன்னொரு விளக்கம் கூட வருகிறது...

ஏன் நம் வாழ்வு, கனவிற்குள் கனவு என இருத்தல் கூடாது? கனவில்தான் பறக்க
முடிகிறதே!! நாம் பேசும் பாவைப்பொறிகள், புஷ்பக விமானம் இவை
அப்பரிமாணத்தில் நடக்கக்கூடியவையே.

Afterall, 4000 திவ்யப்பிரபந்தம் முழுவதும் 'கண்ணினுற் சிறுதாம்பு' எனும்
மதுரகவியின் பாசுரங்களை உச்சாடணம் செய்து நம்மாழ்வார் திருவாயால்
(விக்கிரகம் பேசியிருக்கிறது) பெறப்பட்டது என்று சொல்கிறார்கள். இதுவொரு
கனவு நிலை போல் தோன்றுகிறது. பாடல்கள் ஒவ்வொன்றாய் சொல்லச்சொல்ல
நாதமுனிகள் புகைப்பட நினைவுடன் (photographic memory) அவைகளைக் குறித்து
வைத்துக் கொண்டிருக்கிறார். கனவினுள் கனவு எப்படி வருகிறது என்றால்.
திருவாய்மொழியே "தான்" செய்தது இல்லை "செய்யப்பட்டது" என்கிறார்
நம்மாழ்வார். "கட்டுண்ணப்பண்ணுதல்" போல!!

கற்றை இயல்/ அத்வைத ரியலிசம் பேசும் அமித் கோசுவாமி 'ஆக்கம்' என்பதே
இப்படியானதொரு பரிபாஷை, ஒரு கற்றை நிகழ்வு என்கிறார்.

மனித வாழ்வே ஆச்சர்யமானது. இதில் நாம் ஆச்சர்யங்கள் பற்றி அதிசயத்துக்
கொண்டிருக்கிறோம்!!

க.>

2008/10/3 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Hari Krishnan

unread,
Oct 8, 2008, 2:38:07 AM10/8/08
to minT...@googlegroups.com


2008/10/2 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

<ஹெலிகாப்டர் போல - மேலெழும்பக் கூடியது
 
உலக்கை மேலும் கீழும் இயங்குவது
 
அதனால் ஹெலிகாப்டர் உலங்கு வானூர்தி எனலாம்
 
வெள்ளை தோலன் பொறியை கண்டு பிடிக்கிறான். நம்மால் அதுக்கு ஒரு தமிழ் சொல்லைக்கூட கண்டு பிடிக்க முடியலே
 
தன்னம்பிக்கை இல்லாத என்புதோல் போர்த்த உடம்பினர் ஆயிட்டோம்
 
அலங்கு = தலையாட்டம் போல் ஆடுவது
உலங்கு = மேலும் கீழும்
 
சில நாட்களாய் இணையத் தொடர்பு இல்லை.  நானும் பயணம் மேற்கொள்ள நேரிட்டது.  எனவே இந்தக் கடிதம் இப்போதுதான் கண்ணில் பட்டது. 
 
அலங்கு என்றால் அசைதல் என்று பொருள்.  Moving side to side, swaying.  அப்படி அசைகின்ற காரணத்தால் கழுத்தில் அணியும் பூமாலைக்கு அலங்கல் என்று பெயர்.  'அலங்கலில் தோன்றும் பொய்மை அரவென பூதமைந்தும் விலங்கிய விகாரப்பாட்டின் வேறுபாடுற்ற வீக்கம்' என்று சுந்தர காண்ட காப்புச் செய்யுளாகக் கம்பன் பாடும் அலங்கல் என்பது குறிப்பதையும், செயலாகு பெயராக வந்த 'அசைகின்ற'தான மாலையைத்தான் குறிக்கிறது.
 
உலங்கு?  கம்பனிடமே கேட்போம்.  என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம்.
 
அனுமன் இலங்கைக்குப் போய், பிராட்டியைச் சந்தித்து, பிறகு அசோக வனத்தை அழிக்கத் தொடங்குகிறார். ராவணனுடைய கிங்கரர்களைக் கொல்கிறார், சம்புமாலியை ராவணன் அனுப்புகிறான்.  அவனும் இறந்துபோகிறான்.  அந்தத் தருணத்தில் சினமடைந்த ராவணன் 'அந்தக் குரங்கைப் பிடிக்க நானே போகிறேன்' என்று கிளம்புகிறான்.  அப்போது அவனுடைய ஐந்து படைத் தலைவர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி, 'நீ எதற்குப் போகவேண்டும்!  நாங்கள் இல்லையா!' என்று கேட்கிறார்கள். 
 
'இலங்கு வெஞ் சினத்து அம் சிறை எறுழ் வலிக் கலுழன்
உலங்கின்மேல் உருத்தென்ன
, நீ குரங்கின்மேல் உருக்கின்,
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து, அல்லும் தன் பகலும்
குலுங்கும் வன் துயர் நீங்குமால், வெள்ளியங் குன்றம்.
 
(சுந்தரகாண்டம், பஞ்சசேனாபதிகள் வதைப் படலம்)
 
'கொசுவோடு போர் தொடுக்க கருடன் புறப்படுவதைப் போல, போயும்போயும் குரங்கோடு போர் செய்ய ராவணன் வேணுமா' என்று கேட்கிறார்கள்.  வார்த்தையைப் பாருங்கள்.  உலங்கு. 
 
உலங்கு என்றால் கொசு.  இலங்கு என்பது பெயரடையாகg; (adjective) பயன்படும்போது ஒளிபொருந்திய என்றும்; பெயர்ச்சொல்லாகப் பயன்படும்போது  குளம் என்றும் பொருள் தரும்.  குலுங்கு என்பதற்கு நடுங்கு என்றுதான் எனக்குப் பொருள் தெரியும்.
 
தாங்கள் சொல்லியிருக்கும் சொற்களில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே மேற்படி கம்பன் பாடலில் பொருள் கிட்டுகின்றன.  ஒன்றுகூட தாங்கள் சொல்லும் பொருளோடு பொருந்தி வரவில்லை.  இந்தப் பொருளெல்லாம் எந்த அகராதியில் கிட்டுகின்றன?
 
 
 
கலங்கு = நால் திசையும்
விலங்கு = குறுக்காக் ஓடுவது
நலங்கு  =மேலிருந்து கீழாக வருவது(நலங்கு இடுதல்)
குலுங்கு = எட்டு திசையும்
இலங்கு = கம்முனு இருக்கிறது. ஆடாமல் இருந்தால்தான் அது இலக்கம்
 

--

Narayanan Kannan

unread,
Oct 8, 2008, 4:37:45 AM10/8/08
to minT...@googlegroups.com
2008/10/8 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> உலங்கு என்றால் கொசு.

இப்பயன்பாடு ஈழத்தமிழர்களிடம் உள்ளது என்று நினைக்கிறேன்.

ஹரியின் கம்பரசம் இன்பரசம். நன்றி.

க.>

வேந்தன் அரசு

unread,
Oct 8, 2008, 9:18:06 AM10/8/08
to minT...@googlegroups.com


2008/10/8 Narayanan Kannan <nka...@gmail.com>

2008/10/8 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> உலங்கு என்றால் கொசு.
 
உலக்கை மேலும் கீழும் இயங்குவது.

வேந்தன் அரசு

unread,
Oct 8, 2008, 9:28:57 AM10/8/08
to minT...@googlegroups.com
இலங்கு = இருப்பது
 
மை இலங்கு நல் கண்ணிப் பங்கனேவந்து என்னைப் பணிகொண்ட பின்மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்அரியை என்று உனைக் கருது கின்றேன்
மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய்மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீபோவதோ சொலாய் பொருத்தம் ஆவதே.

வேந்தன் அரசு

unread,
Oct 8, 2008, 9:31:46 AM10/8/08
to minT...@googlegroups.com

>அலங்கு = தலையாட்டம் போல் ஆடுவது

 
2008/10/8 Hari Krishnan hari.har...@gmail.com

 
 
 
அலங்கு என்றால் அசைதல் என்று பொருள்.  Moving side to side, swaying.  அப்படி அசைகின்ற காரணத்தால் கழுத்தில் அணியும் பூமாலைக்கு அலங்கல் என்று பெயர். 
 
அலங்கு உளை புரவி. உளை   Moving side to side தானே.
 
அலங்காம்ல் இரு என்று இன்றும் சொல்லுவார்கள்.

வேந்தன் அரசு

unread,
Oct 8, 2008, 9:33:47 AM10/8/08
to minT...@googlegroups.com
கலங்கு= காப்பி கலக்குவாங்க
குலுங்கு = உண்டியல் குலுக்குவாங்க
Reply all
Reply to author
Forward
0 new messages