மின்தமிழ் அன்பர்களுக்கு, வணக்கம்.
தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் உலகப் பண்பாட்டிற்கு அளித்த கொடை என்னும் பொருண்மையில் எதிர்வரும் 2008 பிப்ரவரி திங்கள் இறுதிவாரத்தில் 3 நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கம் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கான நிதியுதவியினைத் தமிழ்ச் செம்மொழித்திட்டம் வழங்கவுள்ளது. இப் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரை வழங்க இசைவுள்ள உலகளாவியத் தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், இத்துறையில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தங்களின் இசைவினைக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஏவிசி கல்லூரி தமிழ் உயராய்வுத் துறை இணைப் பேராசிரியர்முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களிடம் மின்னஞ்சல் வழி(
tamil...@gmail.com) உடனே தெரிவிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வெளிநாட்டுப் பேராளர்களுக்கு ஒரு வழி விமானச் செலவும் விதிகளின்படி நாட்படியும் வழங்கப்படும். தங்குமிட வசதியும் செய்து தரப்படும். தங்களின் ஒருவழி விமானச் செலவை இந்திய ரூபாயில் அல்லது அமெரிக்க டாலரில் தெரிவிக்கவும். கருத்தரங்கம் முடிந்து ஒருநாள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்யப்படும்.
பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்பும் பேராளர்கள் தங்களின் இசைவினை மின்னஞ்சல் முகவரியுடன் தெரிவிக்கவும். பேராளர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்யும் மின்தமிழ் அன்பர்கள் மின்னஞ்சல் முகவரியையும் தந்துதவ அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் விவரங்கள் தேவைப்படின், தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் ஐயா நா.கண்ணன் அவர்களையும் துணைத்தலைவர் சுபாஷினி கனகசுந்தரம் அவர்களையும் நாடி தெரிந்துகொள்ளலாம். தமிழர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா போன்ற நாடுகளிலிருந்து அதிகமான பேராளர்களை எதிர்நோக்குகிறோம்.
என்றும் தமிழன்புடன்,
முனைவர் தி.நெடுஞ்செழியன், இணைப் பேராசிரியர்
கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்.
தமிழ் உயராய்வுத் துறை, ஏவிசி கல்லூரி (தன்னாட்சி)
மன்னம்பந்தல் - 609 305. மயிலாடுதுறை.
நாகப்பட்டினம் மாவட்டம். தமிழ்நாடு.
அலைபேசி : 94432 14142
மேலும் சில மின்னஞ்சல் முகவரிகள்:
tamil...@yahoo.co.intamil...@rediffmail.com
tamil...@hotmail.comin...@tamilthinai.com