தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லித் தந்த புனிததாமஸ்: Must read!

13 views
Skip to first unread message

Jataayu

unread,
Aug 21, 2008, 7:30:00 AM8/21/08
to minT...@googlegroups.com
தமிழ் இணையத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் அவர்களின் இந்தக் கட்டுரையை மின் தமிழ் உறுப்பினர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் -  http://jeyamohan.in/?p=600 
 
தமிழ்ச்சூழலில் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய கலாசார அழிப்பு, வரலாற்றுத் திரிப்பு சதிவேலையைப் பற்றித் தெரியவந்து அதிர்ச்சியடைந்து, இதை எழுதியிருக்கிறார் ஜெயமோகன்.. 
 
அடியேன் இது பற்றி அவருக்கு எழுதிய கடிதமும்  அதே வலைத்தளத்தில் உள்ளது -  http://jeyamohan.in/?p=610
 
இது பற்றி வந்த மற்ற எதிர்வினைகளையும் பாருங்கள் - சுவாரஸ்யமாக இருக்கிறது -
 
இதற்கு நடுவில் குறளுக்கு மூலம் சாலமோன் என்று நடுவில் வந்த ஒரு ஜல்லி & அதற்குப்பதில் - http://jeyamohan.in/?p=612
 
அன்புடன்,
ஜடாயு
 

ஜடாயு

unread,
Aug 21, 2008, 8:47:18 AM8/21/08
to மின்தமிழ்
அந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கும் மாநாடு
நடந்து முடிந்து விட்டது போலிருக்கிறது....
அங்கு சில உண்மையான தமிழ்ப் பண்பாட்டு உணர்வார்கள் இருந்து
எதிர்க்குரலும் எழுப்பியுள்ளனர்.. சந்தோஷமாக இருக்கிறது

இது பற்றி தமிழ்ஹிந்து.காம் தளத்தில் இன்று வந்துள்ளது -

சென்னை தமிழர் விரோத மாநாடும், முறியடிக்கப்பட்ட சதியும்
http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/


Elangovan N

unread,
Aug 21, 2008, 10:09:48 AM8/21/08
to minT...@googlegroups.com
//செமோ எழுதியது:
தமிழர் ஆன்மவியலின் மிகச்சிறந்த நூல் சிவஞானபோதம் ஆகும். இது புனித தாமஸால் கொண்டுவரப்பட்ட ஆதி கிறித்தவ சிந்தனைகளின் சற்று குறைப்பட்ட வடிவம். இன்று இந்துக்கள் சொல்லப்படுகிறவர்கள் உண்மையில் ஆதி கிறித்தவர்களே. இந்து என்ற ஒரு மதம் இல்லை. அப்படி ஒருமதம் இருப்பதாக எந்த ஒரு அறிஞருமே சொன்னதில்லை. //
//
 
//. ஆகவே சைவம் வைணவம்  என்ற இரு மதங்களைச் சேர்ந்த இந்துக்களை ஆதிகிறித்தவர்கள் அல்லது தாமஸ்கிறிஸ்டியன்ஸ் என்றுதான் சொல்லவேண்டும். 
//
 
சமயப் பேத்தல்களால் வரலாற்றைத் திருத்தும் மடமைக்கு
அண்மைய எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டுமானால்
கடந்த பா.ச.க ஆட்சியில் முரளிமனோகர் சோசி செய்த
கூத்துக்கள் மிக சுவாரசியமானவை.
 
அந்த வைதீக வழியிலேயே பிறரும் வரலாற்றைத் திருத்த
முனைகிறார்கள்.
 
தனக்குக் கீதா முகூர்த்தம் நடந்துவிட்டதாகச் சொல்லிக்
கீதையில் புரளும் செயமோகன் சைவத்தையும் வைணவத்தையும்
அதனை வளர்த்த நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் அவர்கள்
ஆக்கிய பத்தி இலக்கியத்தையும் மிகக் கேவலமாக குரஙகு
பூமாலையைப் பிய்த்து எறிவதைப்போல் எறிந்தார்.  எறிந்து விட்டு
எல்லாத்தையும் அவிழ்த்துப் போட்டுட்டு சிரிக்கிறேன் என்று
உளறினார்.
 
//செமோ எழுதியது: மதநம்பிக்கையை பேண எவருக்கும் உரிமை உள்ளது. தன் மதநம்பிக்கையை பரப்புவது ஒருவரது பிறப்புரிமை.. அதிலும் இஸ்லாமிய கிறித்தவ மதங்களில் அது புனித கடமையும்கூட. மதச்சார்பின்மை இந்தியமண்ணில் அதன் வீச்சை ஒருபோதும் இழக்கலாகாது என்று விரும்புகிறேன்..ஆகவே மதமாற்றமும் ஒரு இந்தியனின் பிறப்புரிமையே. முன்பு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதமாற்றத்தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நான் விரிவாகவே இதைப்பேசியிருக்கிறேன்.மதமாற்ற தடைச்சட்டமும் ஜனநாயகமும்

ஆனால் வரலாற்றுத்திரிபுகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் மூலம் அதைச்செய்ய நினைப்பது மிக ஆபத்தான போக்கு. கிறிஸ்து மனிதனாக வந்த இறைகுமாரன் என்ற உறுதியான நம்பிக்கை இவர்களுக்கு இருக்கும்பட்சத்தில் அந்த ஒரேவரியை சொல்லியே இவர்கள் தங்கள் மதத்தை பரப்பலாமே?

//

அப்படிப்பட்ட செயமோகன் மதமாற்ற சட்டத்தை எதிர்த்துப் பேசினாலோ

அல்லது வரலாற்றுத் திரிப்புக்களை எதிர்த்தாலோ, ஏனோ பலருக்கு

இனிப்பாக இருக்கிறது. இதனையே தமிழ்ச் சிந்தனையாளர்களோ,

அல்லது திராவிட அரசியலோ எதிர்த்தால் பலருக்குக் கசக்கிறது.

வைணவமே வைதீகத்தின் சாரம் என்ற எண்ணத்தினை இங்கே அண்மையில் கண்டு வியப்புற்றேன். ஆகவே தமிழ் வைணவம் என்பதன்பால் இருந்த மதிப்பையும் வைணவ நண்பர்கள் தமிழர்களிடம்

இருந்து அகற்றி விடவே முயல்வதாகத் தெரிகிறது. ஆகவே

தமிழ்ச் சைவம் என்பது வைதீக(+வைணவ), சமண. புத்த, கிறித்துவ,

நாத்திக மற்றும் இன்ன பிற சமயங்களால்/கொள்கைகளால் நாசமாக்க்கப் படுகிறது.

திருக்குறளுக்குக்கும் சிவஞானபோதத்திற்கும் அடிப்படை தாமசு கொண்டு வந்த கிறித்துவ மூட்டை

என்று தேவகலா & கும்பனி சொல்வதும்,  தமிழ் பக்தி இலக்கியங்களை

இகழ்ந்துவிட்டு, சைவத்தை இகழ்ந்துவிட்டு, இந்தக் கும்பனிகளை

எதிர்ப்பது போல செயமோகன் போன்ற வைதீகக் கூலிப்படையினர்

ஆடும் ஆட்டத்திற்கும் எந்த வேறுபாட்டையும் நம்மால் காணவியலவில்லை.

தமிழர், தமிழ்நாட்டு நெறிகள் ஏனோ இப்படியான குரங்குகளின்

கைப்பூமாலையாய் ஆகிப் போகின்றன என்று எனக்கு ஆழ்ந்த கவலை உண்டு.

அன்புடன்

நாக.இளங்கோவன்

 

 

 

Narayanan Kannan

unread,
Aug 21, 2008, 10:55:25 PM8/21/08
to minT...@googlegroups.com
ஜடாயு:

இக்கட்டுரை தமிழ் இலக்கியம் பற்றிய தொன்மை பேசும் புத்தகங்களை
மின்னாக்கம் செய்து பரப்ப வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. மின்தமிழ்
செய்யும் பணியின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே படுகிறது.

கண்டவர் கைப்பொம்மையாகும் தமிழக வரலாறின் அவல நிலைக்குக் காரணம்
ஆதாரபூர்வமான நல்ல நூட்களுடன் தமிழனுக்கு பரிட்சயம் இல்லாமல் இருப்பதுவே.

மேலும் தமிழ் இலக்கிய ஆய்வு என்பது இன்னும் அகில உலகத் தரத்திற்கு வராமல்
வெறும் உள்வட்ட முதுகு சொறிதலாக இருப்பதும் முக்கிய காரணம். என்று தமிழ்
ஆய்வுக்களம் அரசியல் சித்தாங்களின் பிடியிலிருந்து மீள்கிறதோ அன்றுதான்
அதற்கு விடிவு காலம்.

ஆங்கில காலனித்துவ பிரித்துக் கொல்லும் சதி மனது மிக ஆழமாக தமிழ் மண்ணில்
ஊறிப்போய்விட்டதும் ஒரு காரணம்.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே! நம்மில்.
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!"

இதுதான் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. வெட்கம்!

கண்ணன்

On 8/21/08, Jataayu <jata...@gmail.com> wrote:

- http://jeyamohan.in/?p=600

Narayanan Kannan

unread,
Aug 22, 2008, 1:38:39 AM8/22/08
to minT...@googlegroups.com
ஜெயமோகனின் கட்டுரை பல சிந்தனைகளை எழுப்புகின்றன.

ஜோசப் கேம்பல் போன்ற உளவியல் தத்துவ நிபுணர்கள் இயேசு பிரானுக்கு
இந்தியப்பரிட்சயம் இருந்ததாந்தான் "அன்பு" எனும் கொள்கையை பாலை நிலத்தில்
பாய்ச்சுகிறார் என்றும், கிறிஸ்தவம் 'வைணவ நெறிகளையும், புத்த அகிம்சை
நெறிகளையும்' உள் வாங்கிக் கொண்டு வளர்ந்தது என்று சொல்லும் போது நம்
மண்ணின் மீது பற்று இருக்க வேண்டிய தமிழ்ப் பாதிரிகள் இப்படி எல்லாப்
புகழும் 'தாமசுக்கே' என்று ஒரு அரபு நாட்டுக்காரனுக்கு
தமிழ்ப்பாரம்பரியம் முழுவதையும் தாரை வார்ப்பதை காலத்தின் கோலம்
என்றுதானே சொல்ல வேண்டியுள்ளது.

கவனிக்க, தமிழனின் ஐந்திணைக் கோட்பாட்டில் பாலைத்தெய்வமாக கதிரவன் அல்லது
கொற்றவை வருகிறார்கள். அங்கு அன்பு பேசும் தெய்வங்களை வைக்கவில்லை.
'மாறுகால், மாறுகை' வாங்கும் தெய்வங்களை வைக்கின்றனர். அப்படி இருக்கும்
போது கொடும்பாலையில் ஓர் சோலையாக இயேசு அன்பு பற்றிப் பேசுகிறார். அது
நிலப்பண்புடன் பொருந்தாத ஒன்று. இதற்கு மாறாக மத மாற்றத்திற்காக கொலையும்
செய்யலாம் எனும் முகம்மதியக் கோட்பாடு அந்நிலப்பண்புடன் ஒத்துப் போகிறது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஜோசப் கேம்பல் சொல்வது
பொருத்தமாகவே உள்ளது. ஏசு பிறப்பிற்கு பல நூற்றாண்டு முன்பே புத்தன்
பிறந்து அன்பு எனும் தத்துவம் இந்தியாவெங்கும் பரவிவிடுகிறது. ஆசோகச்
சக்கிரவர்த்தி புத்தனின் போதனைகளை அன்றைய நாகரீக உலகிற்கு முறையாக
அனுப்புகிறான். அது நிச்சயம் ஜெருசலேம், ரோம், ஏதென்ஸ் போயிருக்கும்
என்பது கேம்பலின் வாதம். இதை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் பௌத்த
அழகியலில், புத்தரின் திருமுடி அலங்காரத்தில் உள்ளது. அந்தச் சுருட்டை
முடி அலங்காரம் கிரேக்க சிற்ப நுட்பம். கிரேக்க நாடு செல்லும் வழியிலுள்ள
பாக்டீரியா எனும் நகரில் பல புத்த அகழ்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நான் பயின்ற அமெரிக்கன் கல்லூரி இப்போது திருச்சபைக்கும் கல்லூரி
நிற்வாகத்திற்குமான ஒரு பலப்பரிட்சையில் மாட்டிக் கொண்டு முழிக்கிறது.
திருச்சபைத் தலைவர்கள் இறைத்தூது பற்றிய சேதிகள் மட்டும் பேசாமல்
மிகப்பெரிய அரசியலில் ஈடுபட்டு, அதிகார வேட்கையில் இருப்பதாக எங்கள்
கிறிஸ்தவக் கல்லூரிப் பெரியவர்கள் எழுதுகிறார்கள். இது குறித்த ஒரு
கடிதம் இங்கே:

http://saveamericancollege.blogspot.com/2008/08/letter-from-former-principal-of-st.html

ஏசுவைக் காட்டிக்கொடுத்த தாமசுவை முதன்மைப் படுத்தி 'எந்நன்றி
செய்தார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு' என்று
பேசும் வள்ளுவனுக்கு ஆசிரியனாகக் காட்டுவது எவ்வளவு பேதமை? வள்ளுவனின்
குறளும் எம்மதமும் சம்மதம் என்பது போல் பொதுப்படையாகப் பேசுவதால்
எல்லோரும் அதற்கு சொந்தம் கொண்டாடி, கடைசியில் ஆணிவேரையே கழட்டி
வள்ளுவத்தை அரேபியாவிற்குக் கொண்டு செல்லும் முயற்சியை எப்படி, வள்ளுவரை
முதன்மைப்படுத்தி வளர்ந்த கழக அரசு ஆதரிக்கிறது என்பது புரியாத புதிர்!

இந்த ஆபத்து தமிழ் சமயங்களுக்கு நிகழ்ந்துவிடும் எனும் அபாயமறிந்தே,
ஆழ்வார்கள் "மறந்தும் புறம் தொழா" கற்பு நெறியை சமயப் பண்பாக வைத்தனர்.
அப்படியொரு கட்டுப்பாடு இருந்தால்தான் மரபு பாதுகாக்கப்படும் என்று அது
சுட்டுகிறது. முல்லைத்திணையின் அடிப்படைப் பண்பே கற்புதான். இதற்கு
நேர்மாறானாது தாமஸ் வாழ்ந்த காலத்து அரேபிய கலாச்சாரம். அவர் காலத்தில்
ஏன்? முகம்மது வாழ்ந்த காலத்திலேயே பெண்களைக் கடத்திப் போய் 'வைத்துக்
கொள்வதும்", ஒரே வயிற்றில் பிறந்த சகோதரிகளுடன் புணர்வதும்
இருந்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்க வந்ததுவே குரான் என்றும்,
அதிலும் பல சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றும்
பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியான ஒரு கலாச்சாரப்
பின்னணியில் வரும் ஒருவர் தமிழ் பண்பாட்டை நமக்களித்தார் என்று
சொல்வதையும், அதை நம்மவர் கேட்டு கைதட்டுவதற்கும் காரணம், நம்மவரிடையே
உறையேற்றப்பட்டுள்ள விஷக்கருத்துக்கள்.

ஜெயமோகன் கேட்கிறார்,

//ஆக்டா தோமா தான் தாமஸ் பற்றிய ஒரே ஆதாரம். அதில் தாமஸ் மிஸ்தாய்
நாட்டின் மன்னனின் மனைவி டெரிஷியாவையும் மகன் வாசனையும் மதம் மாற்றினார்.
மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். எப்போது இந்தக்கதை தாமஸ்
பிராமணனால் கொல்லப்பட்டார் என்று மாறியது? ஏன்? இன்று எல்லா இடத்திலும்
குடுமி வைத்த ஸ்மார்த்த பிராமணன் பிரார்த்தனை செய்யும் தாமஸை
பின்னாலிருந்து குத்திக்கொல்லும் சித்திரமாக வரைந்து
வைக்கப்பட்டுள்ளது!//

காரணம் மிக எளிது. ஏனெனில் இவர்கள்தான் இந்திய சாஸ்திரங்களின்
மெய்க்காப்பாளர்களாக காலம், காலமாக இருந்துள்ளனர். இவர்கள் இந்த மரபைப்
பேணவேண்டும் என்பதற்காகவே சங்கம் தொட்டு பாண்டிய மன்னர்கள் 'சதுர்வேதி
மங்களங்களை' உருவாக்கி இவர்களுக்கு தானம் வழங்கியுள்ளனர். இவர்களைக்
கொலைகாரர்களாகக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணின் அடிவேரை அசைத்துவிடலாம்
என்பது புதிய எழுச்சியின் நம்பிக்கை.

இந்தியாவிற்குள் வந்த வெள்ளையர் முதன் முதலில் செய்தது, இந்திய மரபுச்
செல்வங்கள் எந்த மொழியில் இருக்கின்றனோ அந்த மொழியைச் செல்லாக்காசாக
மற்றிவிடுவது என்பது. ஆங்கிலக் கல்வியின் மேலாண்மையினால் அவர்கள் எண்ணம்
அநேகமாக நிறைவேறிவிட்டது. சில கட்டுக்குடுமிகள்தான் சமிஸ்கிருதம்
படித்துவருகின்றன இப்போது.

அடுத்து, இந்தியச் செம்மொழிகளுக்குள் பேதமையை வளர்த்து இரண்டு
மொழிகளையும் அழித்துவிடுவது என்பது. இதுவும் நிறைவேறி வருகிறது. மொழிவெறி
வந்ததே தவிர மொழி வளம் பெறவில்லை.

கடைசி மட்டை அடி, இந்த தாமஸ் கதையாடல். இதுவும் இங்கு விலைபோகும்!
ஏனெனில் தமிழனக்கே உள்ள ஒரு தாழ்வு மனப்பான்மையினால்தான் தமிழ்ப்
பாதிரிகள் நம் மரபை ஏலம் விடத்துணிகின்றனர். அந்தக் காலத்தில் ராணி
எலிசபெத்தின் Nighthood. இன்று ஹில்லேரி கிளிண்டனுடன் ஒரு ஒயின்
பார்ட்டி! அவ்வளவுதான் நம்மவர் எதிர்பார்ப்பது! நாய்களுக்குப் பிறகு வாலை
ஆட்டி வணங்குவதில் தமிழனுக்கு நிகர் தமிழனே!

நான் ஐரோப்பியக் குடிமகன். அவர்களுடன் நெருங்கிப்பழகியவன். கிறிஸ்தவ
தேசத்தவர் இந்தியாவை வணங்கி வழிபடுகின்றனர். உலகின் இதயம் இந்தியா
என்கின்றனர். ஆனால் நம்மவரோ, நம் கலாச்சாரமே வெள்ளையர் தந்தது (தாமஸ்
எந்த நிறம் என்று தெரியாவிடிலும், இது வெள்ளையர் உடன் போகும் திட்டம்
என்று தெரிகிறது) என்று சொல்லி வள்ளுவனை முதல் பலியாக்குகிறோம்!

நமக்குள் உள்ள பிரிவினைகள் நமது உண்மை காணலை
மழங்கடிக்கும்...."மெய்ப்பொருள் காண்பதறிவு" என்பது அரசு இலச்சினையாக
இருந்தாலும்!!

கண்ணன்

ஜடாயு

unread,
Aug 22, 2008, 3:35:04 AM8/22/08
to மின்தமிழ்
On Aug 21, 7:09 pm, "Elangovan N" <nelan...@gmail.com> wrote:

// தமிழ் பக்தி இலக்கியங்களை இகழ்ந்துவிட்டு, சைவத்தை இகழ்ந்துவிட்டு,
இந்தக் கும்பனிகளை
எதிர்ப்பது போல செயமோகன் போன்ற வைதீகக் கூலிப்படையினர் ஆடும்
ஆட்டத்திற்கும் எந்த வேறுபாட்டையும் நம்மால் காணவியலவில்லை. //

இளங்கோவன் ஐயா, கூல் டௌன் !

அது என்னமோ தெரியவில்லை, இந்த திராவிட இயக்க ஆசாமிகளுக்கு முத்திரை
குத்துதல் என்ற தன்மை ரத்தத்திலேயே ஊறிவந்திருக்கும் போலும்... எந்த ஒரு
கருத்தையும் முத்திரை குத்தாமல் சீர்தூக்கித் தங்களால் பார்க்கவே
முடியாதா?

ஜெய்மோகன் எங்கே, எந்த இடத்தில் "வைதிக' மதத்தைத் தூக்கிப்
பிடித்திருக்கிறார்? விஷ்ணுபுரம் நாவல் தொடங்கி, மிகக் காட்டமான
மொழியில், சில இடங்களில் "வெறூப்பியல்" என்றே சொல்லத் தக்க வகையில்
பிராமணர்களை சித்தரித்து வந்திருக்கிறார்.

கீதை பற்றிய கட்டுரைகளில் கூட இந்து மதநூலாக அல்ல, ஒரு தனி தத்துவ
நூலாகவே அதைப் படிக்கவேண்டும் என்று திரும்பத்திரும்ப எழுதி
வந்திருக்கிறார்.. இதை நான் விமர்சித்திருக்கிறேன் -
http://jataayu.blogspot.com/2008/05/blog-post.html

நம்மாழ்வார் பற்றி ஜெ.மோ எழுதிய சித்தரிப்பையும் கண்டித்திரூக்கிறேன் -
http://jeyamohan.in/?p=304

நீங்கள் இங்கே என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை - சைவம்,
வைணவம் பற்றியெல்லாம் அவர் தன் பதிவில் எழுதி வரும் "பகடிகளை"
சொல்கிறீர்களா? "நகைச்சுவை" என்று முதலில் போட்டுவிட்டுத் தானே அதில்
எழுதுகிறார்? சாங்கியம், யோகம், வேதாந்தம், மார்க்ச்ஸியம், கிறிஸ்தவம்,
இருத்தலியம் உட்பட எல்லா மேலை நாட்டுத் தத்துவங்களையும் கூட சேர்த்து
ஒன்றுவிடாமல் அவர் பகடி செய்திருக்கிறார்..இல்லையா?
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், இந்த அனைத்து தத்துவங்களையும்
அவர் உண்மையிலேயே ஆழ்ந்து படித்திருக்கிறார்... அவற்றின் வேர்கள் வரை
சென்றிருக்கிறார்.

இந்த வகை "பகடி" எழுத்துக்கும், பாமரத்தனமான திராவிட இயக்க வெறியர்கள்
செய்த/செய்துவரும் அப்பட்டமான, ஆதாரமற்ற இந்து எதிர்ப்பு, வடமொழி
வெறுப்பு, பிராமண அழிப்பு பிரசாரத்திற்கும் எள்ளுத் தான் குறைச்சல்!

ஜெயமோகனின் தெளிவான, அறிவுபூர்வமான ஆய்வுக் கட்டுரையை, தாமஸ் புரட்டோடு
ஒப்பிட்டு "எந்த வேறூபாடும் இல்லை" என்கிறீரே? எப்படி, எப்படி இவ்வளவு
கேவலமாக உங்களால் யோசிக்க முடிகிறது?

இன்றைய தமிழ்ச் சூழலில், தமிழக முதல்வரே தாமஸ் பற்றிய இந்த
அண்டப்புளுகு, கலாசார அழிப்பு திரைப்படத்தைத் துவங்கிவைத்து ஆசிர்வதித்து
விட்டு வந்திருக்கும் கேடுகெட்ட நிலை உள்ளது... இந்த நிலையில் தாமஸ்
புரட்டைப் பற்றீ இவ்வளவு தீர்க்கமாக, தெளிவாக, துணிவுடன் ஜெயமோகன்
எழுதியிருப்பது மிகவும் பாராட்டப் படவேண்டிய விஷயம்... தமிழ்க்
கலாசாரத்தின் மீது கொஞ்சமாவது பற்றுள்ள ஒவ்வொருவரும் ஜெயமோகனுக்கு நன்றி
செலுத்த வேண்டும், அவரது மற்ற பல கருத்துக்கள் மீது எவ்வளவு வேறுபாடு/
விமர்ச்னம் இருந்தாலும்.

தயது செய்து, மட்டரகமான முத்திரை குத்துதல் மூலம் இந்தக் கட்டுரை
மற்றும் இது எழுப்பும் பிரசினைகள் பற்றிய விவாதங்களை நீர்த்துப் போகச்
செய்யாதீர்கள்.

Elangovan N

unread,
Aug 22, 2008, 10:44:59 AM8/22/08
to minT...@googlegroups.com
On 8/22/08, ஜடாயு <jata...@gmail.com> wrote:
On Aug 21, 7:09 pm, "Elangovan N" <nelan...@gmail.com> wrote:

// தமிழ் பக்தி இலக்கியங்களை இகழ்ந்துவிட்டு, சைவத்தை இகழ்ந்துவிட்டு,
இந்தக் கும்பனிகளை
எதிர்ப்பது போல செயமோகன் போன்ற வைதீகக் கூலிப்படையினர் ஆடும்
ஆட்டத்திற்கும் எந்த வேறுபாட்டையும் நம்மால் காணவியலவில்லை. //

இளங்கோவன் ஐயா, கூல் டௌன் !
 
சடாயு அவர்களே, கவலை வேண்டாம் - உங்களைப் போலக்
கொதித்துக் கொண்டு நான் இருக்கவில்லை பெரும்பாலும்
உங்கள் எழுத்துக்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு
சிரிப்புதான் வரும் :-)
 
 
அது என்னமோ தெரியவில்லை, இந்த திராவிட இயக்க ஆசாமிகளுக்கு முத்திரை
குத்துதல் என்ற தன்மை ரத்தத்திலேயே ஊறிவந்திருக்கும் போலும்...  எந்த ஒரு
கருத்தையும் முத்திரை குத்தாமல் சீர்தூக்கித் தங்களால் பார்க்கவே
முடியாதா?

//ஜெய்மோகன் எங்கே, எந்த இடத்தில் "வைதிக' மதத்தைத் தூக்கிப்

பிடித்திருக்கிறார்?  விஷ்ணுபுரம் நாவல் தொடங்கி,  மிகக் காட்டமான
மொழியில்,  சில இடங்களில் "வெறூப்பியல்"  என்றே சொல்லத் தக்க வகையில்
பிராமணர்களை சித்தரித்து வந்திருக்கிறார்.
//
 
இப்ப நான் எதாச்சும் விசுனுபுரத்தைப் பற்றிச் சொன்னேனா?
இல்லை பிராமனனைப் பற்றிப் பேசினேனா?
செயமோகனைப் பற்றி நான் எழுதினால் நீங்க ஏன் பிராமணனை
இழுத்துக் கொண்டு வருகிறீர்கள்?
 

 
 
// "நகைச்சுவை" என்று முதலில் போட்டுவிட்டுத் தானே அதில்

எழுதுகிறார்?
//
 
எது நகைச்சுவை?
திருமுறைபாடியவர்களை அசிங்கப் படுத்தி
எழுதுவது நகைச்சுவையா?
உங்களுக்குக் கிச்சுக் கிச்சுக் காட்டினால் ஊரில் இருப்பவன்
எல்லாம் சிரிக்கனுங்கறது இல்லையே!
 
 // சாங்கியம், யோகம், வேதாந்தம், மார்க்ச்ஸியம்,  கிறிஸ்தவம்,
இருத்தலியம் உட்பட எல்லா மேலை நாட்ஹுத் தத்துவங்களையும் கூட சேர்த்து

ஒன்றுவிடாமல் அவர் பகடி செய்திருக்கிறார்..இல்லையா?
எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், இந்த அனைத்து தத்துவங்களையும்
அவர் உண்மையிலேயே ஆழ்ந்து படித்திருக்கிறார்... அவற்றின் வேர்கள் வரை
சென்றிருக்கிறார்.
//
 
இதை அவருக்கே எழுதுங்கள். 'புண்ணியம்' கிடைக்கும்.
 
பாவாணர், அப்பாத்துரையார், மறைமலையடிகளார் போன்றோரின்
ஆராய்ச்சிக் கருத்துக்களின்பால் நீங்கள் என்ன மதிப்பு கொண்டிருக்கிறீர்கள் என்று நாமறிவோம். இவர்களைப் போன்ற பேரறிஞர்களை இழிவுபடுத்தக் கூடியவர்களுக்கு செயமோகன் போன்றவர்களின் எழுத்துக்கள் சிரங்குக்குச் சொறிந்து விடுவதைப் போலத்தான் இருக்கும் என்பதை அறியாதவன் இல்லை நான்.
 
 
//

இந்த வகை "பகடி" எழுத்துக்கும்,   பாமரத்தனமான திராவிட இயக்க வெறியர்கள்
செய்த/செய்துவரும் அப்பட்டமான, ஆதாரமற்ற இந்து எதிர்ப்பு,  வடமொழி
வெறுப்பு, பிராமண அழிப்பு பிரசாரத்திற்கும் எள்ளுத் தான் குறைச்சல்!
//
 
 
இதையே கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் நாளாயிற்று.
 

//ஜெயமோகனின் தெளிவான, அறிவுபூர்வமான ஆய்வுக் கட்டுரையை, தாமஸ் புரட்டோடு

ஒப்பிட்டு "எந்த வேறூபாடும் இல்லை" என்கிறீரே?  எப்படி, எப்படி இவ்வளவு
கேவலமாக உங்களால் யோசிக்க முடிகிறது?
//
 

//இன்றைய தமிழ்ச் சூழலில்,   தமிழக முதல்வரே  தாமஸ் பற்றிய இந்த

அண்டப்புளுகு, கலாசார அழிப்பு திரைப்படத்தைத் துவங்கிவைத்து ஆசிர்வதித்து
விட்டு வந்திருக்கும் கேடுகெட்ட நிலை உள்ளது...  
//
 
தமிழக முதல்வர் இந்தக் கலாச்சார அழிப்பிற்குத் துணை போகிறார்
என்னும்போது கொதிக்கிறீங்க சரி. எந்த அடிப்படையில்?
 
தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், முக்கியமாக சமயம் என்ற இந்த
நான்கு அடிப்படைகளில் நான் கருணாநிதியின் செயலைக் கண்டிக்கிறேன். ஆனால் உங்களால் முடியுமா?
 
நீங்க என்ன சொல்வீங்க? இந்தியப் பண்பாடு, வடமொழி, கலாச்சாரம்,
அப்புறம் இந்தியச் சமயம், அதோடு 'டமில் பாசை' என்ற ஊறுகாயையும் சேர்த்துச் சொல்லுவீர்கள்.
 
 
தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களில் எல்லாம் தமிழ் இல்லையே -
அந்தக் கலாச்சார அழிப்பிற்கும் அதற்கான அண்டப் புளுகிற்கும்
என்ன சொல்லப் போகிறீர்கள்? அதை யார் கேட்பது?
 
கேட்பவர்களை என்ன சொல்வீர்கள்;
 
வழக்கம் போல வடமொழி வெறுப்பு, பார்ப்பன அழிப்பு,
திராவிட வெறி என்று சாணம் அடிப்பீர்கள்!  இதைவிட உங்களால்
என்ன முடியும்?
 
செயமோகனுக்கும் உங்களுக்கும் தாமசு+தெ.நா+தேவகலா & கும்பனி
திருக்குறளையும் சிவஞான போதத்தையும் கிறிததவ மூட்டை
என்பதால் ஆராய்ச்சிகள் பிறந்திருந்தால், தமிழ்,  தமிழ் நெறிகள், தமிழ்க் கலாச்சாரம் என்ற  அடிப்படையை முன்வைத்து இருந்திருந்தால் ஒருவேளை பாராட்டலாம்.
 
ஆனால் உங்களுக்கு வரும் ஆத்திரம் அவர்கள் இந்தியா கிறித்துவ நாடு என்று புளுகுவதால்; - என்னடா நம்ம வேதநாடு, வைதிய நாடு
என்று புளுகுவது மாதிரியே இவர்களும் புளுகுகிறார்களே என்ற எரிச்சலில் எகிறுகிறீர்கள்.
 
ஆகவே பாதிக்கப் பட்டுவரும் தமிழகத்திலே இந்தப் புளுகிற்கு அந்தப்
புளுகு எப்படி என்று நகைச்சுவையாகப் பார்க்க ஏலுகிறதே அல்லாமல்
வேறு ஒன்றும் தோன்றவில்லை.
 
அதே நேரத்தில் வைதீக மற்றும் நாத்திகப் பிடியில் சிக்கிச்
சீரழிந்து விட்ட தமிழ்ச் சமயங்கள், தமிழ்ப் பண்பாடுகள் மேலும்
பலரால் சீரழியப் போகின்றதோ என்ற நிலை இருக்கவே செய்கின்றது.
 
தமிழ் மண்ணின் சமயங்களின் சிறப்புகளைக் குன்றவைக்கும்
புதுக் கூலிப்படைகளை எதிர்த்து, ஏற்கனவே குன்றவைத்த பழைய
அடிப்படைகள் ஆர்ப்பரிப்பது அவலமாகவே காதில் விழுகிறது.
 
இங்கே ஒற்றுமை குத்திக் காண்பிக்கப் படுகிறது.
ஆனால் ஒற்றுமை என்பது ஒருவழிப் பாதை அல்ல
என்பது பலருக்கும் புரியமாட்டேன்கிறது.
 
எல்லோரும் ஒற்றுமையா இருந்து புதுச்சமய புளுகு மூட்டையை
எதிர்க்கனும்னு சொல்லும்போது "எதற்கு ஆதரவாய்" என்ற வினா
எழுகிறது. அதற்கு விடை செய்மோகனிடமும் இல்லை, உங்களிடமும் இல்லை - யாரிடமும் இல்லை. இருக்கும் விடை ஏற்புடையதாக் இல்லை.
 
 
//மட்டரகமான முத்திரை குத்துதல்
 
இந்த திராவிட இயக்க ஆசாமிகளுக்கு முத்திரை
குத்துதல் என்ற தன்மை ரத்தத்திலேயே ஊறிவந்திருக்கும் போலும்..
 
எப்படி, எப்படி இவ்வளவு
கேவலமாக உங்களால் யோசிக்க முடிகிறது?
 
//
 
அடுத்தவர்களின் சிந்தனையே/யோசனையே கேவலம் என்று எண்ணுவது உங்களுக்கு வெகுசாதாரனம் என்பதை நான் அறிவேன்.
அதேபோல அடுத்தவர்களின் இரத்தம் பற்றிப் பேசுவதையும் நாகரிகமாகக் கருதுபவர் என்றும் நானறிவேன். அதேபோல யாருக்கும்
நீங்கள் முத்திரை குத்தியதில்லை என்று சொன்னால் எத்தனை பேர்
சிரிப்பார்கள் என்றும் அறிவேன்.
 
அதனால் இவற்றை நான் பொருட்படுத்தவில்லை.
Reply all
Reply to author
Forward
0 new messages