The Evils of Globalisation

3 views
Skip to first unread message

Sankaran Sivaramakrishnan

unread,
Jan 10, 2012, 3:50:34 AM1/10/12
to sanjay athreya, Arjun Shrivatsan, ashwath athreya, kbscons...@yahoogroups.com, kbscons...@googlegroups.com
இப்போ, அமெரிக்கா பயங்கர பொருளாதார நெருக்கடியில் இருப்பது உனக்குத் தெரியும்... அமெரிக்கா என்ன... ஆசிய நாடுகள் பலவற்றிலும் இதே நிலை தான்...

குளோபலைசேஷன் என்ற போர்வையில், பழைய காலனி ஆதிக்கத்தை திணிக்கின்றனர்... வெளிநாடுகளை அடிமைப்படுத்தி, காலனியாக முன்பு வைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு தவறு என்பதை, இவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
இனிமேல் அதே தவறை திரும்பச் செய்ய மாட்டார்கள்... அதற்கு மாற்று தான் குளோபலைசேஷன்...
இன்று, இந்தியாவிலும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் சுதேசி தொழிற்சாலைகள் பலவும் மூடப்பட்டு வருகின்றன... இந்தியாவில் பூட்டு தயாரிப்புக்கு பெயர் பெற்ற நகரம் அலிகார்... தோல் செருப்புகளுக்கு ஆக்ரா...
வெளிநாட்டு நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இந்த சிறு தொழில்கள் அழிந்து விட்டன... நீங்கள் - இந்தியர்கள் விழித்துக் கொள்ளாவிட்டால், பொருளாதார நிலைமை கவலைக்கிடமாகி விடும்.
ஒவ்வொரு வருடமும், நம் இழப்பு அதிகமாகி வருகிறது... 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், உங்களது பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள், ஆண்டுதோறும் சுருட்டிக் கொண்டு போகின்றன... இது, எதிர்காலத்தில் கூடுமே தவிர குறையாது... "அன்லஸ், அதர்வைஸ்' நீங்கள் விழித்துக் கொண்டாலன்றி...உங்கள் ஊரிலேயே தயாராகும் பொருட்களுக்கு, அவர்களது பிராண்டு பெயர் சூட்டி, கொள்ளையடிக்கின்றனர்... ஒரு பாட்டில் குளிர்பானம் தயாரிக்க, அதிகபட்சம், 70 பைசா செலவாகும்... இதையே உங்களிடம் ஒன்பது முதல், பத்து ரூபாய் விலையில் விற்று விடுகின்றனர். லாபத்தில் பெரும் பகுதியை, தம் தலைமை நிறுவனம் இருக்கும் வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகின்றனர்.
இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் செயல் இது. கொக்கோ கோலா, பெப்சி, ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்கள் குடித்தால் தான், உங்கள் தாகம் தீருமா? அதற்கு பதில் எலுமிச்சை ஜூஸ், அவ்வப்போது பிழிந்து தரப்படும் ப்ரஷ் ஜூஸ், லஸ்சி, மோர், இளநீர், ஜல்ஜீரா, பால் சாப்பிடுங்களேன்...
மல்டி நேஷன் நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல நான்... இந்தியப் பொருட்களையே வாங்குங்கள்... இல்லாவிட்டால், நம் ரூபாயின் மதிப்பு இன்னும் கீழே விழுந்து, இப்போது, 10 ரூபாய்க்கு வாங்கும், "கோக்'கை, 15 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை வரும்...
இன்று சபதம் எடுங்கள்... அடுத்த இரண்டு வருடத்திற்கு இந்தியப் பொருட்கள் மட்டுமே வாங்குவோம் என்று... முடிந்த வரையில் உங்கள் நண்பர், உறவினர்களிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்களையும், இந்தியப் பொருட்களை வாங்க வையுங்கள்... ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த உணர்வு வந்தால் தான், பொருளாதார சீரழிவிலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற முடியும்

--
Regards,
Sankaran
Senior Consultant
KBS consultants
Flat H, Kulothungan Apartments,
No 5, Dr. Natesan Road, Ashoknagar
Chennai, India . Pincode: 600083
Ph: +91-44-24895341 / 24853296
+91-44-23719622 
Email : sank...@kbsconsultants.com

If you have any issues relating to our services please feel free to send
an email to sank...@kbsconsultants.com   
   
Business Consultants http://www.indiabusinesssale.com/  
   
Business Outsourcing     http://www.gotachance.com/  
   
Management Consultants  http://www.kbsconsultants.com/  
   
Placement Consultants  http://www.jobsvista.com/  
   
Employment Agencies  http://www.jobsconsultants.in/


Reply all
Reply to author
Forward
0 new messages