[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] நடுத்தெரு மேலவீடு திரு. இரா. கலைச்செல...

2 views
Skip to first unread message

?????????? ?????????

unread,
Sep 14, 2010, 9:13:48 PM9/14/10
to kasang...@googlegroups.com


நமது கிராமத்தை சேர்ந்த திரு. இரா. கலைச்செல்வன், மேலவீடு, நடுத்தெரு அவர்கள் தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமிக்கபட்டுளார்.


தினகரனில் வெளிவந்த செய்தியின் பிரதி இங்கே.




தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டி.ஏ.கிருஷ்ணசாமி கவுண்டர் மற்றும் உறுப்பினர்கள், சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினர். அருகில், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, வெள்ளக்கோவில் சாமிநாதன்.

தகவல் மூலம்: தினகரன்
தகவல் உதவி:  திரு. அன்பழகன் வெங்கிடாசலம், கருப்பூர்


--
9/15/2010 06:43:00 AM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

sukumaran(kasangadu)

unread,
Sep 18, 2010, 5:53:38 AM9/18/10
to காசாங்காடு கிராமம்
நண்பர்களுக்கு வணக்கம்,

கடந்த 12/09/2010 அன்று தமிழக அரசு தென்னை விவசாயிகள் நலவாரியத்தை
அமைத்து உத்தரவிட்டிருக்கிறது. அதில் நம் ஊரைச்சேர்ந்த, தஞ்சை மாவட்ட
தென்னை சாகுபடியாளர்கள் சங்க தலைவராகிய திரு.இரா.கலைச்செல்வன் அவர்களை
மாநில தென்னை விவசாயிகள் நலவாரியத்தின் உறுப்பினராக நியமித்து கலைஞர்
அறிவித்துள்ள செய்தி நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது.

இந்த மகிழ்வான நேரத்தில் திரு.இரா.கலைச்செல்வன் அவர்களை காசாங்காடு
கிராமத்தின் சார்பில் பாராட்டி மகிழ்கிறோம். அவருக்கே வாரியத்தலைவர் பதவி
முக்கிய மத்திய அமைச்சரால் பரிந்துரை செய்யப்பட்ட போதும் சில தவிர்க்க
இயலாத காரணங்களினால் அது தவிர்க்கப்பட்டுள்ளது என நமக்குக் கிடைத்த
நம்பத்தகுந்த செய்தி கூறுகிறது.

எப்படியிருந்தாலும் கிடைக்கப்பெற்ற பதவியைக்கொண்டு தாம் சார்ந்த இந்த
விவசாய சமூகத்திற்கு நல்லபல திட்டங்களை அரசிடமிருந்து பெற்று சீரிய
பணியாற்றிட வேண்டும் என ஒட்டுமொத்த தென்னை விவசாய சமூகத்தின் சார்பில்
கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

என்றும் அன்புடன்...
சுகுமாரன்.அ

Kannaiyan Natesan

unread,
Sep 18, 2010, 3:58:06 PM9/18/10
to kasang...@googlegroups.com
இந்தியாவில் எந்த ஒரு சங்கமும், எந்த ஒரு அரசியல் வாதியும் ஒரு இந்திய குடிமகனின் முன்னேற்றத்திற்காக உழைத்தாக நான் வளர்ந்த சமூகத்தில் என் அனுபவத்தில் பார்த்ததில்லை. அனைத்து திட்டங்களும், சங்கங்களும், சுய இலாபத்திற்காக, சுய வேலை மற்றும் சுய பதவி பாதுகாப்பிற்காகவும் தான் செயல்படுவதை கண்டுள்ளேன். எடுத்துக்காட்டுக்கள் அவசியம் இல்லை என நினைகின்றேன்.

எனது அனுபவத்தில் அண்ணன் மிகுந்த நிர்வாக, மற்றும் பேச்சு திறமையுடைவர். எந்த விதத்தில் நன்மைகளை தென்னை விவசாய சமூகத்திற்கு கொண்டு வருவார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இந்த பதவியில் சிறப்புற வாழ்த்துக்கள்.

அன்புடன்,
கண்ணையன்

2010/9/18 sukumaran(kasangadu) <askmar...@yahoo.co.in>

--
http://www.kasangadu.com

இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926

காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.

பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en

You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com



--
+1-650-605-3290
The best things in life are free

Reply all
Reply to author
Forward
0 new messages