[காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்] கிராமத்தில் உலாவரும் மக்கள் தொகை கணக்...

4 பார்வைகள்
படிக்கப்படாத முதல் மெசேஜுக்குச் செல்

?????????? ?????????

படிக்கப்படவில்லை,
3 ஜூலை, 2010, PM 1:14:323/7/10
பெறுநர் kasang...@googlegroups.com
உலகம் முழுவதும் 2010 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருகின்றது. கிராமத்தில் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து கொண்டிருகின்றது. அந்த படிவங்களின் சுட்டிகள்.

மக்கள் தொகை பதிவேடு படிவம்: 

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/NPR%20Tamil.pdf

வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு படிவம்:

http://www.censusindia.gov.in/2011-Schedule/Shedules/Houselist%20Tamil.pdf

தமிழில் படிவங்கள் வெளியுட்டுள்ளதை கண்டதும் மிக்க மகிழ்ச்சி.

அதில் தமிழில் விளங்காத வார்த்தைகள் பின் வருமாறு:

மக்கள் தொகை பதிவேடு படிவத்தில்:


தாலுகா:
வீட்டுப்பட்டியல் பிளாக் எண்:
வார்டு எண்:

வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு படிவத்தில்:



தாலுகா:
வீட்டுப்பட்டியல் பிளாக் எண்: 
வார்டு எண்:
சென்சஸ் வீட்டு எண்:
ஷே. வகுப்பு
ஷே. பழங்குடி: 
ரேடியோ / டிரான்சிஸ்டர்:
இன்டர்நெட்-இணைப்புடன்:
சைக்கிள்:
ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள்  / மொபெட்:
கார் / ஜீப் / வேன் :
சிமெண்ட்:
மொசைக் / தரை ஓடுகள்:
பிளாஸ்டிக் / பாலிதீன்:
கைபம்பு:

ஆங்கிலேயன் நம் நாட்டை தெளிவாக ஆண்டுள்ளான் என்பதற்கு இதுவே சாட்சிகள்.

கம்பன் கட்டுத்தறியும் கவிபாடும், உலக அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் போன்ற எண்ணற்ற தமிழ் புலவர்கள் பெருமை அடைய மொழியை நமது அரசாங்கம் தமிழ் மொழியின் தரத்தை இது போன்ற படிவங்கள் மூலம் குறைகின்றது.

முறையான மொழிபெயர்ப்பாளர்கள் அரசாங்கத்தில் இல்லையெனில், எங்கள் கிராமத்தில் இருந்து வேலையற்றோரை வேலைக்கு கொடுத்து  நியமியுங்கள். அரசாங்கத்தில் இது போன்ற மொழி கலவை தவறுகள் ஏற்படாமல் இருக்க உதவி புரிகின்றோம்.

அமெரிக்க அரசாங்கத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு படிவத்தில் எதாவது தமிழ் எழுதப்பட்ட ஆங்கில வார்த்தைகள் இருகின்றதா என்று தேடி பார்த்தோம்.


மற்ற நாடுகளில் தமிழ் மொழி நல்ல முறையில் தான் பயன்படுத்தபடுகின்றது. இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் தான், அதுவும் சங்கத்தமிழை மக்களுக்கு புகட்டும் அரசாங்கத்தில் பயன்படுத்தப்படும் படிவங்களில் தான் தமிழ் மொழியின் தரம் கீழே தள்ளபடுகின்றது.

இறைவன் தான் இது போன்ற மக்களை ஏமாற்றும் திட்டங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மக்கள் கேட்பதாக தெரியவில்லை. ஏனெனில் இங்கு அரசியல் செய்வதற்கே பயன்படுத்தபடுகின்றது மக்கள் நலனுக்காகவோ அல்லது மொழி வளர்சிக்க்காகவோ பயன்படுத்துவதற்காக தெரியவில்லை.

வாழ்க ஜனநாயகம் !

தகவல் உதவி: திரு. கோ. வீரமணி, சென்னை


--
7/03/2010 10:44:00 PM அன்று காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள் இல் காசாங்காடு செய்திகள் ஆல் இடுகையிடப்பட்டது

Kannaiyan Natesan

படிக்கப்படவில்லை,
4 ஜூலை, 2010, AM 12:58:584/7/10
பெறுநர் kasang...@googlegroups.com
திரு. வீரமணி அவர்களின் மொழி பயன்படுத்துவதின் சம்பந்தமான பகிர்ந்துனர்வுக்கு நன்றி.

அரசியல் ஒருபுறமிருக்க, இந்த மக்கள் கணக்கெடுப்பு இந்தியாவிற்கு ஒரு பெரும் திருப்பத்தை கொண்டு வரும். எனவே கவனாமாக இதை கையாள வேண்டும்.

இதில் அளிக்கும் தகவல்களை கொண்டு பெரும் பொருளாதார மாற்றங்கள், வளர்ச்சி திட்டங்கள் வர போகின்றது. எனவே தகவல்களை வீட்டின் நபர்கள் கூறும் போது பெயர்களில் எழுத்து பிழைகள் இல்லாத அளவிற்கு பார்த்து கொள்ளவும்.

இதன் மூலம் எப்படி மாற்றங்கள் வரக்கூடும்?

தனி நபர் அடையாள எண் வழங்க அரசு திட்டமிட்டு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் கடந்த ஆண்டு நிறைவேற்றி உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு எண் வழங்கப்படும். அமெரிக்காவில் இது "சமூக பாதுகாப்பு எண்" (Social Security Number) என்று வழங்கபடுகிறது.

இதன் மூலம் ஒரு தனி நபரின் சொத்துக்கள், வாங்கிய கடன்கள், கடமை உணர்வோடு எப்படி அந்த கடன்களை திருப்பி கொடுத்துள்ளீர்கள், குற்றங்கள் (criminal offences), அரசாங்கம் இந்த நபருக்கு அளித்த சலுகைகள் (தனி நபரின் அரசாங்க செலவு, வரவு கணக்குகள்), வரி கணக்குகள், போக்குவரத்து குற்றங்கள் போன்ற எண்ணற்ற தொழில் ரீதியான சிக்கல்களை தவிர்க்க கூடும்.

முக்கியமாக வங்கிகளில் சென்று கடன் கேட்டால் ஜாமீன் யாரும் தேவை இல்லை. வங்கிகளுக்கு உங்கள் சொத்துக்கள் விபரங்கள் அனைத்தும் இந்த தனி நபர் எண் மூலம் நொடியில் கிடைக்கும். இன்னும் எண்ணற்ற வசதிகள்.

சமூகத்தில் போலி கடவுசீட்டு (Passport), குடும்ப அட்டைகள் போன்ற எண்ணற்ற போலி ஆவணங்கள் நீக்கப்படும்.

இதன் மூலம் பிரச்சனைகளும் அதிகம். அதன் சட்ட திட்டங்கள், மக்களின் பார்வையில் நம்பிக்கையற்ற நீதிமன்றங்கள், அரசாங்கம் எப்படி கையாள போகின்றது என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எடுத்துகாட்டாக உங்கள் எண்ணை திருடி உங்கள் பெயரில் மற்றவர் கடன் வாங்கினால் அதற்க்கு நீங்கள் பொறுப்பாவீர்கள். அமெரிக்காவில் நொடிக்கு இரண்டு நபர்களின் "சமூக பாதுகாப்பு எண்" மோசடி நடக்கின்றது, இவ்வளவு தொழில் நுட்ப வளர்ந்த நாடுகளுக்கே இந்த நிலை.

இது பற்றி மேலும் அதன் இணைய தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள். http://uidai.gov.in/

இவ்வளவு வசதிகளையும், பிரச்சனைகளையும் பெற இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் உங்கள் தகவல் தெளிவாக அமைவது அவசியம்.

தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன்,
கண்ணையன்

2010/7/3 ?????????? ????????? <ne...@kasangadu.com>
--
http://www.kasangadu.com
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com



--
+1-650-605-3290
The best things in life are free

எல்லோருக்கும் பதிலளி
எழுதியவருக்குப் பதிலளி
முன்னனுப்பு
0 புதிய மெசேஜ்கள்