மந்திரங்கள் என்பன எவை?

24 views
Skip to first unread message

Ganapathy Elangovan

unread,
Apr 18, 2012, 10:47:10 AM4/18/12
to kasang...@googlegroups.com
மந்திரங்கள் என்பன எவை?
 
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.
(தொல்காப்பியம்> பொருளதிகாரம்>செய்யுளியல்>பாடல் எண் 480)
 
பொருள்:
நிறைவான மொழியினை உடையவர், தமது ஆணையால் சொல்லப்பட்ட
மறைமொழிதான் மந்திரம் எனப்படும்.
 
மறைமொழி என்பதற்கு ஞானத்தால் மொழிந்தது எனவும் இரகசியமாய் உபதேசிக்கப்பட்டது எனவும் பொருள் கொள்ளலாம்.
 
 இரகசியமாய் உபதேசிக்கப்படுவது ஏனெனில் அந்த மந்திரங்களை பொருளுணர்ந்து உயிர்கலந்து உச்சரிக்கும் பக்குவம் பெற்றவர்க்கு மட்டும் சென்று சேர்வதேயாம்.
 
தமிழ் மந்திரங்கள்/ ஞான நூல்கள் அனைத்தும் சாதி/குலம்/பிறப்பு கருதாமல் யாவர்க்கும்
கற்பிக்கலாம் என்ற நிலை எந்நாளும் உண்டு.
 
ஆனால் வடமொழி வேதங்கள் ஓதவும்/ ஓதுவிக்கவும் பிராமிணாராக பிறத்தல் அடிப்படை தகுதியாகும். மற்றவர்கள் வேதங்களை உச்சரிப்பதும் கேட்பதும்கூட தண்டனைக்குரிய குற்றமாக “மநு ஸ்மிருதி”-யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழை பொருத்தவரை ஆண் பெண் என்ற பாகுபாடுகூட பாவம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணம், ஔவ்வை பாட்டியின் “சாதி இரண்டொழிய...
 
கி.பி 2 ஆம் நூற்றாண்டிலிருந்து 5ஆம் நூற்றாண்டு வரை கிடப்பில் கிடந்த தமிழை, உயிர்த்தெழச்செய்து கி.பி 14 ஆம்  நூற்றாண்டு வரை  காப்பாற்றி அருளிய பெருமை சைவ சமய பக்தி இலக்கியங்களை சாரும்.
 
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், பட்டினத்தார், காரைக்கால் அம்மையார், சேக்கிழார் ஆகியோர் அருளியவை 12 திருமுறை பாடல்கள் ஆகும்.
 
மேற்சொன்ன பன்னிரு திருமுறைகளை அருளிய அடியார்களில் அனைத்து சாதி பிரிவுகளை சார்ந்தவர்களும் அடங்குவர்.
(சாதி பிரிவுகளை சுட்டுவது தவறுதான். ஆனால் ஒப்பீட்டுக்காக வேறு வழியின்றி செய்ய வேண்டியுள்ளது)
 
திருஞானசம்பந்தர் பிராமிணர் குடும்பதில் பிறந்தவ்ர்.
திருநாவுக்கரசரும் சேக்கிழாரும் வேளாளர் குடும்பதில் பிறந்தவ்ர்கள்.
 
திருக்குறள் ”கடவுள் வாழ்த்து”- ல் ஆரம்பித்து ”ஊடல் உவகை”-ல் முடிகிறது.
அறம்-பொருள்-இன்பம்-வீடு ஆகியன பற்றி ஆயிரம் ஆயிரம் பாடல்கள் இருந்தும் பொருள் புரியாத வேற்றுமொழி பாடல்களுக்கும்/ மந்திரங்களுக்கும் நாம் கொடுக்கும் அங்கீகாரம் காலத்தின் கோலம்தான்!
 
புரியாத மொழியில் கடவுளை வழிபடும் மக்கள் கூட்டம் உலகில் உண்டென்றால் அவர்கள் தமிழராகிய நாமாகத்தான் இருக்கமுடியும்.
 
சிந்திக்கவும்.
 
குறைந்த பட்சம் திருக்குறள், திருவாசகம் ஆகிய நூல்கள் இரண்டையும், நாம் படிக்காவிட்டாலும், நம் வீட்டு புத்தக அலமாரியிலாவது நித்திரை கொள்ளட்டும்.
 
ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள வலைத்தளங்களுக்குச் சென்று பார்க்கவும்.
 
 
 
 

அன்புடன்,
ஓ.வீ.க.இளங்கோவன்
 
 

கிராம இணைய குழு

unread,
Apr 18, 2012, 2:24:12 PM4/18/12
to kasang...@googlegroups.com
பகிர்ந்தளிப்பிர்க்கு நன்றி.
விளக்கம் தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.


கிராமத்தில் புழக்கத்தில் இருக்கும் தமிழ் மந்திரங்கள் / ஞான நூல்களின் ஊடுருவல் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

--
http://www.kasangadu.com
http://matrimony.musugundan.com - முசுகுந்த சமுதாய திருமண தளம்
 
இந்தியாவில் இருந்து இணைய தளத்திற்கு 24 மணி நேரமும் தகவல் தர அழைக்க வேண்டிய தொலைபேசி எண்: 9962545926
 
காசாங்காடு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தெரிந்தால் அவர்களை இந்த மின்னஞ்சல் பட்டியலில் சேர உதவி புரியுங்கள்.
 
பட்டியலில் சேர: http://groups.google.com/group/kasangaducom?hl=en
 
You received this message because you are subscribed to the Google
Groups "kasangadu.com" group.
To post to this group, send email to kasang...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
kasangaducom...@googlegroups.com

Reply all
Reply to author
Forward
0 new messages