குலதெய்வ கோவிலுக்கு செல்பவர்கள் கவனிக்க!

81 views
Skip to first unread message

sundar

unread,
Aug 24, 2011, 3:50:20 AM8/24/11
to கடவுள்
குலதெய்வம் கோவிலுக்கு போகவேண்டும் என்று முன்னோர்களில் கட்டளையின்
அடிப்படையில் தீர்மானிக்கும் ஜனங்களுக்கு, அந்த குல தெய்வங்கள்
என்பவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மண்ணினால் மனுஷனை படைக்கும் முன்னர், தேவனால் படைக்கபட்ட ஆவி ஜீவிகளாகிய
இவர்கள் உலகம் முழுவதும் மற்றும் வானத்திலும் பரவியிருந்தார்கள். இவர்களை
நம்முடய வேதாகமம் "தேவர்கள்" என்று சொல்கிறது.

I கொரிந்தியர் 8:5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள்
என்னப்படுகிறவர்கள் உண்டு;

இந்த தேவர்களே நம்முடய நாட்டில் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா
தேசங்களிலும் முந்த நாட்களில் குலதெய்வங்களாக இருந்தனர்.

II இராஜாக்கள் 17:31 ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும்
உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயீமின் தேவர்களாகிய
அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில்
தகனித்து வந்தார்கள்.


இப்படி, பாகால், தாகோன், தியானாள், அன்னமலேக்கு, வானராங்கி, போன்ற
அனேக தேவர்கள் மனுஷர்களால் வணங்கபட்டு வந்தார்கள் என்பதை நாம் வேத
புத்தகத்தின் மூலம் அறியமுடியும். அதேபோல் நமது நாட்டில் கருப்பசாமி, மாட
சாமி, முனியசாமி போன்ற பல்வேறு சாமிகளும் அம்மன்களும்
வணங்கப்படுகின்றனர்.

இவர்களில் சன்மார்க்கமாக நடந்து நல்ல காரியங்களை செய்யும் தெய்வங்களும்
உண்டு துன்மார்க்கமாக நடந்து துர் காரியங்களை செய்யும் தேவர்களும்
உண்டு. இந்த தேவர்கள் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு ஒரு யுகத்தில்
தேவனுக்கு பிடிக்காத துன்மார்க்க காரியங்களை செய்து தேவனால் தாள்ளபட்டு
போனவர்கள்

ரோமர் 1:27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல்,
ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை
நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள்
அடைந்தார்கள். (ஒரு ஆண் சாமி இன்னொரு ஆண்சாமியின்மேல் விரகதாபம் கொண்டு
அவலட்ச்சனமானதை நடப்பித்தது)

26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு
ஒப்புக்கொடுத்தார்;

29. அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும்,
துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு;
பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும்,
வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், 30. புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறு
பண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய்,
அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை
யோசித்துப்பிணைக்கிறவர்களுமாய் பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய்,
31. உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ
அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய்
இருக்கிறார்கள்.

பல புராணங்களை படித்து பார்த்தால் இவர்கள் செய்த இதுபோன்ற தேவனுக்கு
விரோத காரியங்களை அறிந்துகொள்ள முடியும். இந்த தேவர்களை பார்த்து நம்
கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு எச்சரிக்கிறார்:

சங்கீதம் 82:6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின்
மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7. ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச்
செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.


எனவே இவர்கள் விழுந்துபோனவர்கள்! இந்த தேவர்களை எல்லாம் பூர்வ
நாட்களிலேயே சாத்தான் தன்னுடய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து
விட்டான். இன்று அவர்கள் வணங்கும் கோவில்களில் இருப்பது உண்மையான
தேவர்களோ தெய்வங்களோ அல்ல! சாத்தானே அந்த தெய்வத்தின் பெயரில் அங்கு
இருந்துக் கொண்டு "நீ என் கோவிலுக்கு வருஷம் ஒருமுறை வந்து பொங்கல்
வைக்க வேண்டும், இல்லையேல் உன்னை தண்டிப்பேன்" என்று ஏமாற்றி மனுஷர்களை
பயம்காட்டிகொண்டு தேவனுக்கு பிடிக்காத விக்கிரக ஆராதனை நோக்கி ஜனங்களை
திருப்பி வருகிறான் என்பதை நாம் அறியவேண்டும்.

இந்து மதம் குறிப்பிடும் முப்பது முக்கோடி தேவர்களில் கிறிஸ்த்தவ
பெற்றோர்களுக்கு பிறக்காத ஒவ்வொரு மனுஷர்கள் மேலும் அல்லது ஒவ்வொரு இந்து
மனுஷ /மனுஷிகள்மேலும் ஒரு தேவரின் ஆவியோ அல்லது ஒரு தேவியின் ஆவியோ
குடிகொண்டுள்ளது. அதுவும் அவர்களுள்ளிருந்து இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர்
வழியே இரட்சிப்படயவேண்டிய கட்டாய நிலையில் இருப்பதால். அவைகளை
தெய்வங்களாக பாவித்து கோவிலில் சென்று கும்பிடுவதில் எந்த பயனும்
இல்லை!

மாறாக அவ்வாறு குலதெய்வ கோவிலுக்குபோய் விக்கிரகத்தை வழிபடுகிறவர்கள்.
"விக்கிரக ஆராதனை" என்ற மீறுதலுகுட்பட்டு தேவனின் ராஜ்யத்தில் பகுபெற
முடியாமல் போய், கடும் தண்டனை அடைய நேரிடலாம்!

வெளி 21:8 விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய
அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்

ஒருவேளை அப்படியே அந்த தேவர்கள் அந்த கோவிலில் இருந்தாலும், அங்கு
அவர்கள் சாத்தனை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களால் நன்மை
யாகிலும் தீமையாகிலும் செய்யமுடியாது! அதாவது இந்த தேவர்கள் எல்லோருமே
சாத்தானுக்கு கீழ்பட்டு போனவர்கள். அவர்கள் நல்லது செய்ய நினைத்தாலும்
அவர்களால் செய்துவிட முடியாது. சாத்தான் அவர்களை தன்னுடய அநாதி
திட்டமாகிய தேவனை விட்டு மனிதனை பிரிக்கும் செயலுக்கே பயன்படுத்தி
வருகிறான். இதை அறியாமல் ஜனங்கள் மோசம்போகிரார்கள்.

நாம் அறிந்துகொண்டு வழிபடும் தேவனாகிய கர்த்தர் எல்லா தேவர்களிலும்
உயர்ந்தவரும் வானத்தையும் பூமியையும் படைத்தவரும் ஆவார்

சங்கீதம் 86:8 ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய
கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

சங்கீதம் 95:3 கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும்
மகாராஜனுமாயிருக்கிறார்

சங்கீதம் 135:5 கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா
தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

நாளாகமம் 16:25 கர்த்தர் பெரியவரும் மிகவும்
துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர்
அவரே.

அத்தோடு எல்லா தேவர்களையும் நியாயம் விசாரிப்பவரும் நாம் தேவனாகிய
கர்த்தரே!

சங்கீதம் 82:1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின்
நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்

எனவே அவர் நம்மிடம் "நீங்கள் அந்நிய தேவர்களுக்கு பயப்படவேண்டாம்" என்று
திட்டமாக கூறுகிறார்!

II இராஜாக்கள் 17:37 அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த
திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும்,
கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து
அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்

II இராஜாக்கள் 17:38 நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள்
மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், (இருங்கள்)

எனவே அன்பானவர்களே! குலதெய்வம் என்று எதுவும் இநத உலகத்தில் இப்போது
இல்லை. அந்த குலதெய்வ கோவில்களில் குடிகொண்டு இருப்பதெல்லாம்
சாத்தான்களே. அவைகள் பயம்காட்டும் வார்த்தைகளுக்கு பயப்படாமல் எல்லா
தெய்வங்களுக்கும் மேலான நாம் தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி நடந்து
நம்முடய பாவங்களுக்கு பரிகார பலியான எல்லா நாமத்துக்கும் மேலான
நாமமாகிய இயேசுவின் நாமத்தை மாத்திரம் பயன்படுத்துங்கள்.

எரே: 10:11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும்
இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச்
சொல்லுங்கள்.
BY
SUNDAR
http://lord.activeboard.com/t44544597/topic-44544597/

Ananda Ganesh

unread,
Aug 25, 2011, 11:33:56 PM8/25/11
to sundar...@gmail.com, கடவுள்


2011/8/24 sundar <sundar...@gmail.com>

குலதெய்வம் கோவிலுக்கு போகவேண்டும் என்று முன்னோர்களில் கட்டளையின்
அடிப்படையில் தீர்மானிக்கும் ஜனங்களுக்கு, அந்த குல தெய்வங்கள்
என்பவர்கள் யார் என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 
சுந்தர்,
 
உங்களது தெய்வத்தின் பெருமையைச் சொல்லுங்கள். ஆனால், தயை செய்து அடுத்த மதத்தினரையும், அவர்களது தெய்வங்களையும் இழிவாகப் பேசுவதை நிறுத்துங்கள்.
 
எங்கள் குலதெய்வங்களை துர்தேவதைகள் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?
 
எங்கள் குலதெய்வங்கள், உயிர்ப்போடு இன்றும் உலாவி வரும் ஆற்றல்கள். நல்ல குணங்களையும், ஒழுக்கத்தையும், நேர்மையையும் மனிதரிடம் உண்டாக்குகின்றனர். கேட்ட வரத்தை உடனடியாகத் தரும் இரக்கமும், கருணையும் கொண்டவர்கள்.
 
அதற்காக நாங்கள் எங்கள் குலதெய்வம் மட்டுமே உயர்ந்தது, மற்ற தெய்வங்கள் எல்லாம் துர்தேவதைகள் என்று சொல்கிறோமா ? ஏன் கிறுத்துவர்களான நீங்கள் இப்படி மதவெறுப்போடு இருக்கிறீர்கள் ?
 
எங்களைப் பார்த்து துர்தேவதைகளைக் கும்பிடுகிறீர்கள் என்கிறீர்களே. என்றாவது, உங்களைப் பார்த்துச் சிலுவையில் செத்துத் தொங்கும் பிணத்தைக் கும்பிடுகிறீர்கள் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோமா ?  இத்தனைக்கும் நாங்கள் சொல்வது உங்கள் மதக் கருத்துக்களின்படியே உண்மையும்கூட.
 
மதவெறியைப் பரப்பாதீர்கள் சகோதரரே. மனித உணர்வுகளை மதிக்கும் குணம் இந்துக்களுக்கு மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தை உங்களைப் போன்றவர்கள் நடத்தை ஏற்படுத்திவிடுகிறது.
 
 

sundar

unread,
Aug 26, 2011, 4:24:46 AM8/26/11
to கடவுள்
On Aug 26, 8:33 am, Ananda Ganesh <bliss...@gmail.com> wrote:

///சுந்தர்,


>
> உங்களது தெய்வத்தின் பெருமையைச் சொல்லுங்கள். ஆனால், தயை செய்து அடுத்த
> மதத்தினரையும், அவர்களது தெய்வங்களையும் இழிவாகப் பேசுவதை நிறுத்துங்கள்.
>
> எங்கள் குலதெய்வங்களை துர்தேவதைகள் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை

> இருக்கிறது ?////

சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! எந்த மதத்தையும் தாக்கி
எழுதவேண்டும் என்பது என்னுடய
நோக்கம் அல்ல. நான் எல்லோரையும் மதிக்ககூடியவன். என்னுடய எழுத்தால்
உங்கள் மனம் புண்பட்டிருந்தால்
தயவு செய்து மன்னிக்கவும்.

நான் தங்களின் எந்த ஒரு தெய்வத்தையும் தனிப்பட்ட முறையை குறைத்து
எழுதவில்லை என்று கருதுகிறேன்.
பொதுவாக இவ்வாறு எழுதியிருக்கிறேன்.

////இவர்களில் சன்மார்க்கமாக நடந்து நல்ல காரியங்களை செய்யும்


தெய்வங்களும் உண்டு
துன்மார்க்கமாக நடந்து துர் காரியங்களை செய்யும் தேவர்களும் உண்டு. இந்த
தேவர்கள்
சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு ஒரு யுகத்தில் தேவனுக்கு பிடிக்காத
துன்மார்க்க காரியங்களை

செய்து தேவனால் தாள்ளபட்டு போனவர்கள்///

தங்களுக்கு நல்லது செய்யும் தெய்வங்களை நல்ல தெய்வங்கள் பட்டியலில்
எடுத்து கொள்ளவும்.

ஆகினும் உண்மைகள் சில நேரங்களில் அதிகமான கசப்பாகவே இருக்கும். நான்
மற்ற கிறிஸ்த்தவர்கள் போல்
எதுவும் அறியாமல் கண்மூடித்தனமாக எழுதவில்லை. எனக்கு தேவன் தெரிவித்த
உண்மைகளை நீங்கள்
ஏற்க்கவில்லை என்றாலும் வள்ளலார் அவர்களின் வெளிப்பாடுகளை முழுவதும்
படித்து பார்த்தாலே தாங்கள்
வணங்கும் தெய்வங்கள் யார் என்பது சரியாக புரிந்துவிடும்.

தேவன் ஒருவரே! அதை எல்லா மதமும் சொல்கிறது. அவரே "ஒருவரும் சேரக்கூடாத
ஒளியில்
வாசம் செய்யும் தேவன்" மற்ற எல்லா சாமிகளுமே எல்லா வரத்தையும் அள்ளி
கொடுத்தாலும் கூட அவர்கள்
எல்லோருமே அந்த ஒரே தேவனால் உண்டக்கபட்டவர்களே. உங்கள் மதத்தின்
தெய்வங்கள் பற்றிய உண்மைகளை
நீங்கள் அறியவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?

நான் இந்து தெய்வங்கள் யார் என்று அறிநதுள்ளதோடு, பல இந்து தெய்வங்கள்
மேல் நல்ல மதிப்பு கொண்டவன்
எனவே நான் யாரையும் தரம்கெட்ட முறையில் விமர்சிப்பது இல்லை! அவர்களால்
இரட்சிப்பு இல்லை என்பதே
என்னுடய கருத்து.

நான் செய்த ஒரு தவறினிமித்தம் ஆண்டவர் என்னை மனுஷர்கள் கையில்
தண்டனைக்கு ஒப்புகொடுதபோது,
எனக்கு பேய் விரட்ட வேண்டும் என்று ஒரு இந்து சாமி கோவிலுக்கு
கொண்டுசென்றனர். அந்த கோவிலில்
இடுப்பில் ஒரு சிறிய துண்டு துணியோடு இருந்த ஒரு இந்து தெய்வமே எனக்கு
சில காரியங்களை தெரிவித்தது!

அவர்கள் நல்லவர்கள்தான், கொடூர அரக்கர்களை அழித்தவர்கள்தான் வரம்
கேட்டாலும்கூட தரலாம் ஆனால்
அவர்களால் சாத்தானை மீறி ஒன்றும் செய்துவிடமுடியாது என்பது நான் அறிந்த
அடுத்த கருத்து!

உங்களுக்கு அந்த தெய்வங்கள் எல்லாம் கொடுத்திருக்கிறது என்று
திருப்தியடையாமல், இந்த உலகில் அன்றாடம்
ஆயிரம் வேதனைகளில் வாடி வதங்கி, செத்து பிழைக்கும் என்த்தையோ மக்களுக்காக
பெருமூச்சுவிட்டு அழுது
"அவர்கள் எல்லோருமே எல்லா நன்மைகளும் பெற்று நன்றாக இருக்கவேண்டும்"
என்று தொடர்ந்து வேண்டுதல்
செய்யுங்கள். அப்பொழுது ஆண்டவரே உங்களிடம் உண்மை என்னவென்பதை
சொல்லுவார்.

சில முக்கிய உண்மைகளை எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் நான்
இருக்கிறேன். நான் அறிந்த
இந்த காரியங்களை எல்லாம் எழுதிவைக்கவில்லை என்றால் நான் தேவனிடம் அதற்கான
பதில் சொல்லவேண்டும்
என்று பயந்திருக்கிறேன்!

எனவே இவ்வாறு எழுதுவதற்கு என்னை மன்னிக்க வேண்டும் சகோதரரே!
உங்களுக்கு தெரிந்த உண்மைகள்
எதுவும் இருக்குமானால் தாராளமாக எழுதலாம்.

அன்புடன்
சுந்தர்

Reply all
Reply to author
Forward
0 new messages