நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

17 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Mar 17, 2012, 11:16:04 AM3/17/12
to palsuvai


---------- Forwarded message ----------
From: Venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>
Date: 2012/3/17
Subject: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
To: mintamil <mint...@googlegroups.com>


    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

    வங்காள மாநிலம் கோடாலி என கிராமத்தில் ஜானகிநாத் போஸ் பிரபாவதி தம்பதியருக்கு 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் நாள் பிறந்த ஒன்பதாவது குழந்தைதான் சுபாஷ் சந்திர போஸ்.

          தந்தை வழக்கறிஞர். செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பம். தாயார் ஆழ்ந்த மத நம்பிக்கையும், தெய்வ பக்தியும் கொண்டவராக இருந்தார். பதினான்கு குழந்தைகளில் ஒருவரான சுபாஷ் பொதுவாகத் தனிமையை விரும்புபவனாக இருந்தான். மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவதில் ஆர்வமில்லாதவனாகத்தான் இருந்தான்.

          சுபாஷிற்கு ஒன்பது வயதானதும், கட்டாக்கில் உள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்ப்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டான். இது ஒரு கிறிஸ்தவப் பள்ளி. இங்கு ஆங்கிலம் தான் சொல்லிக் கொடுக்கப்பட்ட்து.. ஆங்கிலம் தான் பேசவேண்டும். பைபிள் கட்டாயப் பாடம்.

          வீட்டிலோ வங்காள மொழி, வழிபடுவது இந்து தெய்வங்களை. ஆங்கிலமும், பைபிளும் சிறுவயதிலேயே சுபாஷிற்கு எரிச்சலை ஊட்டின. ஏற்கனவே தாயாருடன் கோயிலுக்குச் சென்றுவந்த சுபாஷ், ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகாந்ந்தர் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, இன்னொரு விவேகானந்தர் ஆக முயற்சி செய்தான்.

          1913-ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறினாலும் நாட்டம் எல்லாம் ஆன்மீகத்தில் இருந்த்து.

          ஆன்மீகத் தேடலில் விவேகானந்தருக்குக் குருவாக இராமகிருஷ்ண் பரமஹம்சர் எப்படி அமைந்தாரோ அதே போல தனக்கும் ஒரு குரு தேவை என உணர்ந்து தனது 16-வது வயதில் குருவைத் தேடிப் பயணமானான். கட்டிய வேட்டி சட்டையோடு கிளம்பிய சுபாஷ், குடும்பத்தார் எங்கு தேடியும் பயன் எதுமின்றி சோர்ந்து போயினர்.

         சுபாஷோ, ஹரித்துவார், ரிஷிகேஷ், காசி, பிருந்தாவன் எனப் பல புண்ணியத் தலங்களுக்குச் சென்று தனக்கு ஏற்ற குருவைத் தேடினான். ஹரித்வாரிலும், கயாவிலும்  உள்ள மடங்களில் பிராம்மணர் அல்லாத போஸ் அவமானப் படுத்தப்பட்டான்.

          சமத்துவம் கற்றுத் தரவேண்டிய மடங்களில் ஜாதி பேத உணர்வைக் கண்டு பெரிதும் மனம் வருந்தினான். இந்தப் பகுதியில் காவியுடை தரித்த பலர் கடவுளைத் தேடுவதைவிட உணவைத் தேடுவதிலேயே ஆர்வம் அதிகம் உள்ளவர்களாக அறிந்தான்.

          தன் பயணத்தை இமையமலையை நோக்கி மாற்றி காடுகளிலும், மலைகளிலும் சுற்றி அலந்தான். கிடைத்த்தை உண்டான்; மரத்தடியில் உறங்கினான். கடவுளைக் கண்ட ஞானிகளையோ, தனக்கு ஏற்ற குருவையோ அவனால் காணமுடியாமல், களைத்துப் போய் வீடுவந்து சேர்ந்தான்.

          1916-ஆம் ஆண்டு கல்கத்தா பிரஸிடென்சி கல்லூரியில் சேர்ந்தார் சுபாஷ்.  அந்தக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் ஓட்டன் என்ற ஆங்கிலேயர் இந்தியர்கள் அடிமையாக இருப்பதற்கே பிறந்தவர்கள். காட்டுமிராண்டிகள் என ஆணவத்தோடு கூறியதைக் கேட்டு வெகுண்டெழுந்தார் சுபாஷ்.

          கல்லூரி முடிந்த்தும் சுபாஷும், சக மாணவர்களும் சேர்ந்து கல்லூரி வளாகத்திற்குளேயே ஓட்டனை ஓட ஓட விரட்டியடித்தனர். இதனால் கல்லூரியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பின்னர் வேறுகல்லூரியில் சேர்ந்து 1917-இல் பி.ஏ, படிப்பில் முதலாவதாகத் தேறினார்.

          சுபாஷின் ஆன்மீக ஈடுபாட்டுடன் அரசியல் ஈடுபாடும் வளர்வதைக் கண்ட தந்தையார்ம லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஐ.ஸி.எஸ். படிக்க் வைத்தார்.

         ஜாலியன்வாலாபாக் படுகொலை மற்றும் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் தாக்கம் இவற்றால் தேச விடுதலை உணர்ச்சி, தீப்பிழம்பு போல் சுபாஷின் உள்ளத்தில் தகித்துக் கொண்டிருந்த்து.

          1920-இல் ஐ.ஸி.எஸ். தேர்வில் தேறியிருந்தாலும் பட்ட்த்தை ஏற்று ஆங்கிலேயனுக்கு அடிமையாகப் பணியாற்றுவது சுபாஷிற்கு சிறிதும் ஏற்புடையதாயில்லை. ஒருநாள் லண்டனில் தேம்ஸ் நதிக்கரை ஓரமாக உலவிக்கொண்டே சிந்தித்தார். தனது பயணம் குடும்பத்தின் நன்மைக்க்கவா? தேசத்தின் நலன்களுக்காகவா? என்று முடிவெடுத்தார். அறைக்குத் திரும்பி ஒரு கடிதம் எழுதினார்.

          1921 ஆம் ஆண்டு மே மாத்ம் இந்தியா மந்திரி மாண்டேகு பிரபுவின் அறைகுச் சென்று அவரிடம் அந்த கடித்த்தை நீட்டினார், சுபாஷின்.  கடித்த்தைப் படித்த மாண்டேகு அதிர்ச்சியடைந்தார்.. அதில், 30 கோடி மக்களை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேய அரசில்  சேவகம் செய்ய நான் விரும்பவில்லை. எனவே, ஐ.ஸி.எஸ். பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என எழுதியிருந்த்து.

          1921 ஜூலை-16-இல் மும்பை வந்து சேர்ந்தார். அப்போது சுதந்திரப் போராட்ட்த்தில் முன்னணியில் இருந்த இயக்கம் காங்கிரஸ். மும்பையில் தங்கியிருந்த ம்காத்மா காந்தியைச் சந்தித்துப்  பேசினார். தான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்த் தயாராக இருப்பதாகக் கூறினார். வங்காளத்திலுள்ள தேசபந்து சித்தரஞ்சன்தாஸைச் சந்திக்கும் படியும், அவருடைய வழிகாட்டுதல்படி நடந்துகொள்ளும்படியும் கூறி அனுப்பிவைத்தார் காந்தி.

          ஏற்கனவே தான் ஐ.சி.எஸ். பட்டத்தைத் துறப்பதற்கு முன்பாகவே சித்தரஞ்சநன்தாஸுக்கு கடிதம் எழுதியிருந்தார் சுபாஷ். தற்போது அவரையே சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். சித்தரஞ்சன் தாஸைச் சந்தித்து அவ்ருடைய அறிவுரையின்படி தேசியக் கல்லூரியின் பிரின்ஸிபாலாக ஆனார். 1921-இல் லண்டன் இளவரசர் வேல்ஸ்-ன் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் ஒத்துழஒயாமை இயக்கத்தைத் துவக்கியது காங்கிரஸ். இந்தப் போராட்டத்தின் கல்கத்தா நகரத்தின் தொண்டர்படை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் சுபாஷ்.. இந்தப் படையைச் சட்ட விரோதம் என அறிவித்து அரசு சுபாஷைக் கைது செய்து 6 மாத காலம் சிறைத்தண்டனையும் விதித்தது. நாடு முழுவதும் பல தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

          1924 இல் கல்கத்தா நகராட்சிக்கு நடந்த தேர்தலில் சித்தரஞ்சன்தாஸ் மேயராகத் தேர்ந்தெடுக்க்ப்பட்டார் நிர்வாக அதிகாரியாக சுபாஷை நியமித்தார் தாஸ். சுபாஷின் மிகத் திறமையான நிர்வாகத்தைக் கண்ட ஆங்கில அரசு  பொய்க் காரணம் காட்டி சுபாஷை மட்டும் கைது செய்து பர்மாவிலுள்ள மாண்டலே சிறையில் அடைத்தது.

          சுபாஷின் விடுதலைக்காக  காங்கிரஸ் தலலைவர்கள் பல போராட்டங்கள் நடத்தியும், ஆங்கில அரசு அதை உதாசீனப் படுத்தியது. கொடுமையான் மாண்டலே சிறையில் 3 ஆண்டுகள் வரையிருந்த சுபாஷ் அங்கேயே நோய்வாய்பட்டார். காச நோய் பற்றிக்கொண்டது.

          நாடு முழுவதும் நடந்த தொடர் போராட்டம் மூலம் 1927- மே 1-இல் சுபாஷ் விடுதலை செய்யப்பட்டார். இதே ண்டு டிசம்பர் மாதம் சென்னையில் கூட்ய கங்கிரஸ் மகாநாட்டில் காங்கிரஸின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவரக சுபாஷ் நியமிக்கப்பட்டார். 1930 ஜ்னவரி 30-இல் பூரண சுதந்திர தினம்  கொண்டாட காங்கிரஸால் திட்டமிடடப்பட்டது.  கல்கத்தாவில் அதற்கான ஏற்பாடுகளை சுபாஷ் கவனித்து வந்தார். அரசு நிர்வாகத்திலும் காங்கிரஸ்கட்சி நிர்வாகத்திலும் சிங்கம் போல் செயல் புரியும்   சுபாஷ் வெளியில் இருப்பது ஆபத்து என அஞ்சிய ஆங்கில அரசு பழையபடி வழக்கைக் காரணம் காட்டி கைது செய்து ஓராண்டு சிறையில் அடைத்தது.

          சுபாஷ் சிறையில் இருந்தபடியே அப்போது நடைபெற்ற கல்க்கத்தா மாநகராட்சித் தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். டிசம்பரில் விடுதலையானவுடன் மேயர் பதவியை ஏற்று திறம்படச் செயலாற்றினார். 1935-ஆம் ஆண்டில் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுபாஷ், இத்தாலி, ருமேனியா, செக்கோஸ்லோவேக்கியா போன்ற நாடுகளில் இந்திய சுதந்திரம் பற்றிய சொற்பொழிவுகள் பல நிகழ்த்தினார். இந்திய சுதந்திரப் போராட்டம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.

              1938 ஆம் ஆண்டு நட்ந்த காங்கிரஸ் மாநாட்டில்  சுபாஷ் சந்திர போஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் வரலாற்றிலேயே இளம் தலைவராக பொறுப்பேற்வர்களில் சுபாஷ்தான் கடைசியானவர். அப்போது அவருக்கு வயது 41 தான்.

          தொடர் போராட்டங்கள், தொடர் சுற்றுப் பயணம்,       தொடர் சிறை வாசம் என்றிருந்த்தால் பல நேரங்களில் உடல் சீர்கெட்டு, பேசக்கூட முடியாமல் போனதுண்டு.ஆனாலும் இயக்கத்தை ஓர் உயிர் துடிப்புள்ள அமைப்பாக் மாற்றிக் காட்டினார்.

          சுபாஷின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் காந்திஜி உட்பட பல தலைவர்கள் தடுமாறினர். இதன் காரணமாக 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுபாஷை தலைவராக ஏற்க காந்திஜி போன்றோர் சிறிதும் விரும்பவில்லை.

          சுபாஷ் ஆதரவு பெற்ற தேசபக்தி கொண்ட தலைவர்கள் எவ்வளவோ கேட்டுக்கொண்டும் கூட சுபாஷைத் தலைவராக்க காந்திஜி உடன்படவில்லை. இத்தனைக்கும் காந்திஜி காங்கிரஸ் உறுப்பினர் கூட இல்லை. காங்கிரஸ் தலைவர் ப்தவிக்குப் போட்டி உறுதியானது.

          சுபாஷ் சந்திர போஸிற்கு எதிராக பட்டாபி சீதாராமையா என்ற மிதவாதத் தலைவரை முன்னிறுத்தினர் காந்தியும் மற்றவர்களும். ஆனால், பட்டாபி சீதாராமையா 1337 ஓட்டுகளே பெற முடிந்த்து. சுபாஷ் சந்திர போஸ் 1580 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

          தமிழ்நாட்டில் சீதாராமையாவிற்கு ஆதரவாக ராஜாஜியும், அவரைவ்ச் சார்ந்தவர்களும் பங்களித்தனர். சுபாஷிற்கு ஆதரவாக முத்துராமலிங்கத் தேவர், ஜீவான்ந்தம், காமராஜ் ஆகியோர் வாக்களித்தனர்.

          முன்னணித் தலைவர்கள் என்று சொல்லகூடிய அகில இந்தியத் தலைவர்கள் எவருமே நேத்தாஜியை ஆதரிக்கவில்லை. தன்னந்தனி ஆளாக நினறு தனது அசாத்திய செயலாற்றலால் மாபெரும் வெற்றிபெற்றார்.

          பட்டாபியின்  தோல்வி எனது தோல்வி என்று காந்திஜி அறிவித்தார். நேதாஜியின் தீவிர கருத்துக்களில்- போராட்டங்களில்  மற்றவர்களுக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக சர்தார் வல்லபாய் பட்டேல் உட்பட 12 தலைவர்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்தனர்.

          காந்திஜியிடம் நேரில் பேசியும், பலமுறை கடித்த்தொடபு கொண்டும் சமரச உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. ஆங்க்லேயர்களை எதிர்த்து போராட்டம் ஒருபுறம், நம்மவர்களைச் சமாளிக்க காங்கிரஸ் அமைப்பினரின் ஒத்துழையாமைப் போராட்டமோ மறுபுறம்..

          சொந்தகௌரவம்- தேசத்தின் கௌரவம் இரண்டையும் சிந்தித்த்த நேதாஜி ஒரு முடிவுக்கு வந்தார். அது நாட்டு நலனே பெரிது என்பது.      1939-ஆம் ஆண்டு மே மாதம் கூடியகாங்கிரஸ் மகாசபைக் கூட்ட்த்தில்,’நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று அறிவித்தார்

          தலைவர்கள் மகிழ்ந்தார்கள். தொண்டர்கள் கண்ணீர் விட்டார்கள்.

    *******************************************************

    செய்திமூலம்: ஈரோடு சண்முகசுந்தரம்(பசுத்தாய்)

    *******************************************************

    வெ.சுப்பிரமணியன் ஓம்.

     


Venkatachalam Subramanian

unread,
Mar 19, 2012, 10:30:02 PM3/19/12
to palsuvai




 

கிட்டூர் ராணி சென்னம்மா

****************************

கர்நாடக மாநிலம் கிட்டூர் சிற்றரசு என்பது பெங்களூர் பூனா இடையே அமைந்துள்ள பகுதியாகும். சுமார் நானூறு கிராங்களைக் கொண்டதாக விளங்கியது கிட்டூர் சிற்ரரசு. கிட்டூரின் 12-வது அரசாகப் பதவியேற்றவர் மல்லசராஜா என்பவர்.

      மல்லசராஜா சிறந்த நிர்வாகியும், மாபெரும் வீரராகவும் இருந்ததால் அருகில் உள்ள எந்த சிற்றரசும் இவரை எதிர்க்கத் துணியவில்லை. இவரைப் போலவே இவருடைய மனைவி ருத்திரம்மாவும் வீராங்கனையாகவே விளங்கினார்.

      இந்க் காலத்தில்தான் திப்பு சுல்த்தான் தன் ஆட்சி அதிகாரத்தைப் பலமாக்குவதற்காக மற்ற பல சிற்ற்ரசுகள் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டார். கிட்டூரின் வளத்தையும், அதன் வலிமை மிக்க கோட்டை களையும் கைப்பற்றிக் கொள்ள தன் படையொன்றை அனுப்பி வைத்தான்.

      ஒரு சில நாட்களில் கிட்டூரை எளிதாகக் கைப்பற்றி விடலாம் என்ற எண்ணத்தில் தாக்குதலைத் துவக்கிய திப்பு சுல்த்தான் படைவீரர்களுக்கு கிட்டூர் வீரர்களின் அதிரடியான ஆவேசத் தாக்குதல்களால் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்ட.

      ராணி ருத்திரம்மா தலைமியிலான கிட்டூர் படை திப்புசுல்த்தானின் படைகளைத் துவம்சம் செய்தது. நூறுக்கணக்கான திப்புவின் வீரர்கள் கொல்லப்பட்டனர். மீதமிருந்தவர் தப்பியோடினர்.

      இந்துப் பெண் ஒருத்தி தன் படையைத் தோற்கடித்துவிட்ட அவமானத்தை திபு சுல்த்தானால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சில மாதங்கள் காத்திருந்து பெரும் படையைத் திரட்டி மீண்டும் கிட்டூரைக் கைப்பற் படை அனுப்பினான் சுல்த்தான்.

      இம்முறை மல்லசராஜாவே தாமே படைக்குத் தலைமை தாங்கிப் போரில் ஆவேசமாகப் போர்புரிந்தார். ஆனாலும் திப்பு சுல்த்தானின் பெரும்படைகளுக்கு முன் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் மன்னர் கைது செய்யப்பட்டு கபாலதுர்க்கா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

       கிட்டூரைத் திப்பு சுல்த்தான் கைப்பற்றியிருந்தாலும் தொடர்ந்து அந்தப் பகுதியை அவ்ர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. சத்ரபதி சிவாஜிக்குபின்னர் வந்த பேஷ்வாக்கள் சில மாதங்களில் கிட்டூர் மீது படையெடுத்து திப்புவின் படைகளைச் சிதரடித்து கிட்டூரைக்கைப்பற்றி ஆட்சி நடத்திவந்தனர்.

      சிறையில் அடைக்கப்பட்ட மல்லசராஜா சிறைக் காவலையும் மீறி சில மாதங்களுக்குப் பின் தப்பி தன் நாட்டிற்கு வந்த போது, நாடு பேஷ்வாக் களிடமிருந்த்து. ஒரு உடன்படிக்கையில் பேஷ்வாக்களுக்கு கப்பம் கட்ட  மல்லசராஜா ஒப்புக்கொள்ளவே மீண்டும் கிட்டூர் மன்னரானார்.

      இந்தக் காலக் கட்ட்த்தில் ஆங்கிலேயர்கள் நாட்டின் பலபகுதிகளைத் தனது சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் கைப்பற்றி ஆட்சி செய்துவந்தனர். பேஷ்வாக்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்துச் சென்றபோது கிட்டூரும் தாக்குதலுக்கு உள்ளானது..

      திப்புவைத் தோற்கடிக்க பேஷ்வாக்களின் படை தேவை என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள்  போரில் கைப்பற்றிய பகுதிகளை பேஷ்வாக்களிடமே மீண்டும் ஒப்படைத்தனர்.

      ஒருபுறம் திப்புவின் படைகள், மறுபுறம் ஆங்கிலேயர்களின் தாக்குதல் இவைகளை முறியடிக்க நாட்டின் பல சிற்றரசர்களின் ஆதரவையும் நாடினார் மல்லசராஜா.. அப்போது காகட்டி என்ற சிற்றரசன் ஆதரவு கிட்டியது மட்டுமல்ல, காகட்டி,  மன்னரின் மகள் சென்னம்மாவைத் தன்னுடைய இரண்டாவது மனைவியாக மண்ந்துகொண்டான்.

      34 ஆண்டுகள் கிட்டூரை ஆட்சிபுரிந்த மல்லசராஜா மரணமடையவே அவருடைய முதல் மனைவி ருத்ரம்மா ஆன்மீக ஈடுபாடு கொண்டு ஆசிரம்ம் ஒன்றை அமைத்து அங்கேயே வாழ்த்தொடங்கினார். இவருடைய மகனும் நோய்வாய்ப்பட்டு  சில ஆண்டுகளில் காலமாகிவிட்டார். நேரடியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்று நிவகிக்கத் தொடங்கினார் ராணி சென்னம்மா..

      தனக்குப் பின்னால் ஒரு வாரிசு தேவை என்பதால் சிவலிங்கப்பா என்ற சிறுவனைத் த்த்தெடுத்துக் கொண்டார் . அப்போது பரவலாக ஆங்கிலேய அரசு ஒரு சட்டம் இயற்றி இருந்த்து. எந்த மன்னருக்கு வாரிசு இல்லையோ அந்த மன்ன்சுக்குப் பின் அந்த நிலப் பரப்பு ஆங்கில அரசின்பகுதியாக ஆக்கப்படும்.

      ராணி சென்னம்மா சுவீகாரம் எடுத்துக் கொண்ட்தைக் கண்ட ஆங்கிலேயர் பெரும்படை ஒன்றை அனுப்பி கோட்டையை முற்றுகையிட்டு கோட்டையிலிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காவலுக்கு ஆங்கிலேயச் சிப்பாய்களை நிறுத்திவைத்திருந்தனர்.

      கிட்டூர் அந்நிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு விட்ட்தையும் கோட்டை முற்றுகை இடப்பட்டிருப்பதையும் சென்னம்மாவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியும் தாய் மண்ணை மீட்கவேண்டும் என உறுதி பூண்டாள்.

      படைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினாள். படைவீர்ர்களுகு நம்பிக்கை ஊட்டினாள். யுத்த்த்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் கோட்டைக்கு உள்ளேயே தயார்படுத்தினாள். உள்ளே ஏதோ நடக்கிறது என்ற சந்தேகம் காவலுக்கு நின்ற ஆங்க்கில சிப்பாய்களுக்கு ஏற்பட்ட்து. உடனடியாக கலெக்டர் தாக்ரேவிற்கு தகவல் சொல்லப்பட்ட்து.

      கணவனை இழந்த ஒரு விதவைப் பெண்ணிற்கு இவ்வளவு தீரமா என ஆத்திரப்பட்ட அவன் நான்கு பீரங்கிகளுடன் பெரும்படையுடன் கிட்டூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தான்.

      படையைப் பார்த்த்தும் பயந்தே சென்னம்மா சரணடைந்துவிடுவார் என மனப்பால் குடித்த கலெக்டர் குதிரைப் படையினர் நூறு பேரை அனுப்பி சென்னம்மாவைக் கைதுசெய்து கொண்டுவரும்படி உத்திரவிட்டான். . கோட்டைக் கதவுகள் ஏற்கானவே திறந்தே இருந்த்ன.. நூறு பேர் உள்ளே போனதும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கிட்டூர் வீர்ர்கள் ஆங்கிலப் படையை வெட்டிச் சாய்த்தனர். 98 பேர் கொல்லப்பட்டனர் இரண்டு ஆங்கில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

      இந்த அதிரடித் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத கலெக்டர் உயிர்பலியைத் தவிர்க்க சமாதானத் தூதனிப்பினான்.. பத்து கிராமங்களை விட்டுக் கொடுக்கிறோம். எஞ்சியதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என எழுதிக்கொடுத்து அனுப்பிய கடித்த்திற்குப் பதிலே இல்லை.

      நான்கு பீரங்கிகளில் இரண்டைக் கோட்டைக்கு மிக அருகில் நிறுத்தி வைத்தான். நாளை காலைக்குள் செனம்மா சரணடையாவிட்டால் கோட்டையைத் தகர்த்துவிடுமாறு உத்திரவிட்டான் கலெக்டர். மறுநாள் காலை அந்த இரண்டு பீரங்கிகளையும் காணவில்லை. கிட்டூர் வீர்ர்கள் தந்திரமாக்க் கோட்டைக்குள் கொண்டுசென்றுவிட்டனர்.

      எஞ்சியிருந்த இரண்டு பீரங்கிகளைக் கோட்டைக்கு முன் நிறுத்தி கோட்டையைத் தகர்க்க ஆணையிட்டான் கலெக்டர். ஆனால், சற்றும் எதிர்பாராத விதமாக கோட்டைக்குள் இருந்த் பீரங்கியிலிருந்து குண்டுகள் கோட்டைக் கதவைப் பிளந்துவிட்டு ஆங்கிலேயர்கள் மீது பாய்ந்த்து. கோட்டைக்கு மேலிருந்த வீர்ர்கள் அம்புகளால் ஆங்க்கிலேயர் உடல்களைத் துளைத்தனர்.

      ராணி சென்னம்மா கவசமணிந்த குதிரையில் கம்பீரமாக அமர்ந்து வீர்ர்களுக்கு உத்த்திரவிட்டுக் கொண்டிருந்தாள். ராணியைக் கொல்லத் தன் கைத்துப்பாக்கியால் குறிபார்த்த கலெக்டரை ராணியின் மெய்க்காப்பாளன்

பாலப்பா சுட்டுக் கொன்றான். தலைவன் இறந்த்தும் ஆங்கிலப் படைகள் சிதறி ஓடின.

      நவீனப் போர்கருவிகள் கொண்ட ஆங்கிலேயரைத் தனது வீரத்தாலும், தந்திரத்தாலும் தோற்கடித்த ராணி சென்னம்மாவின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவியது.

      தென்பகுதியில் உள்ள எல்லா சமஸ்த்தான்ங்களையும் ஒன்றிணைத்து ஆங்கிலேயரைத் தோற்கடிக்கவேண்டும் என்ற சென்னம்மாவின் முயற்சிக்குச் சிற்றரசர்கள் பலரும் ஒத்துழைக்கவில்லை.

      அவமானப்பட்ட வெள்ளையர்கள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆயிரக் கணக்கான படைவீர்ர்களையும் ஒருங்கிணைந்து மூன்று படைப் பிரிவுகளாகப் பிரிந்து கிட்டூர் கோட்டையை சாப்ளின் என்பவர் தலைமையில் முற்றுகையிட்டனர்.

      சென்னம்மா சரணடையாவிட்டால் கோட்டை தகர்க்கப்படும் எனச் செய்தி அனுப்ப்ப்பட்ட்து. சரணடைவதைவிட சாவதே மேல் எனக் கருதியசென்னம்மா யுத்த்த்தை எதிர்கொண்டார்.

      பலநாட்கள் நடந்த கடுமையான போரில் இரு தரப்பிலும் எண்னற்ற வீரஉயிர் இழப்புகள்.. பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் ஈடு கொடுக்க முடியாத கிட்டூர் வீர்ர்கள் கடைசிவரை போராடி மாண்டனர்.

கிட்டூர் கோட்டை தகர்க்கப்பட்ட்து. ராணி சென்னம்மாள் உயிருடன் பிடிக்கப்பட்டாள். வெள்ளையருக்குப் பணிந்திருந்தால் ஆட்சி அதிகாரம் கிடைத்திருக்கும். ஆனால் ,தன்மானத்திற்கும், தாய் மண்னிற்காகவும் போர்ராடியதற்குக் கிடைத்த பரிசு சிறைச்சாலை.. 5 ஆண்டுகள் தனிமைச் சிறையிலேயே இருந்து 1829 பிப்ரவரி 2-இல் மரணமடைந்தார்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

செய்திமூலம்:ஈரோடு சண்முகசுந்தரம்.(பசுத்தாய் மாத இதழ்)

வெ.சுப்பிரமணியன், ஓம்


Reply all
Reply to author
Forward
0 new messages